ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் கொண்டேனடி கண்ணம்மா - கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
கண்ணம்மா : 17


விஷ்ணுவின் நினைவுகளில் இருந்து ஒதுங்கி இருக்க எண்ணியே சரண்தேவ் நட்சத்திராவை நாடியது.

ஆனால் அவள் செயல்களில் கூட அவன் பார்த்தது என்னவோ அவன் கோளாறு கோட்டானை தான்.

சொன்னது போலவே அவளை ஷாப்பிங் அழைத்து வந்தவன், நாட்டமில்லா மனதை இழுத்து பிடித்து கொண்டே அவளோடு சுற்றிக் கொண்டிருந்தான்.

ஏற்கனவே ‘சிக்கிச்சி மலமாடு’ என்ற கணக்கில் தான் அவன் பர்ஸ்க்கு வேட்டு வைத்துக் கொண்டிருந்தவள், இறுதியாக,

“மாமா இந்த பிளேவர் நல்லா இருக்கா சொல்லு” என்று கேட்டுக் கொண்டே பர்ஃயும் ஒன்றை எடுத்து வந்து அவனிடம் கொடுக்க,

‘வேண்டாம் என்றால் விடவா போறாள்?’ என்று எண்ணிக் கொண்டே சட்டையின் கை பகுதியில் அதை தேய்த்து, கையை மடக்கி நுகர்ந்து பார்த்தவன், “ஹ்ம்ம் நல்லா தான் இருக்கு” என்றான்.

“ஆமா ல்லா” என்று சொல்லி கொண்டே அவளும் அவன் கையை பிடித்து நாசி அருகே வைத்து கண்களை மூடிக் கொண்டே வாசம் எடுக்க, ஒரு நொடி விஷ்ணு தான் அவன் நினைவில் வந்து போனாள்.

அவளும் அன்று அவன் சட்டையை போட்டுக் கொண்டு இப்படி தானே செய்தாள்.

எங்கு போனாலும் குட்டி சாத்தானின் நினைவுகள் துரத்த, தன் கையை பிடித்துக் கொண்டிருந்த நட்சத்திராவிடம் இருந்து வெடுக்கென்று கையை உதறி எடுத்தவன், அதே வேகத்தில் கையில் இருந்த வாசனை திரவிய பாட்டிலையும் தூக்கி ஏரிந்திருந்தான்.

நொடியில் செய்து விட்டான். அது உடைந்த சத்தத்தில் அத்தனை பேரும் திரும்பி அவனை பார்த்த பிறகே செய்த செயல் அவன் புத்தியில் உரைத்தது.

கடை ஊழிய பெண்ணும் அவ்விடம் விரைந்து வந்திருக்க,

“ஐ பெய்ட் ஃபார் திஸ்” என்று சொல்லிக் கொண்டே நட்சத்திராவை திரும்பி பார்த்தான்.

அவளோ உதட்டை பித்துக்கி கொண்டு அழ தயாராக நின்றிருந்தாள்.

“நாம வேற வாங்கிக்கலாம்” என்று சொல்லிக் கொண்டே சரண் அவளை நெருங்க,

“இட்ஸ் சோ எக்ஸ்பென்சிவ். லாஸ்ட் ஒன் பீஸ் தான் இருந்துச்சு. அதையும் வேற ஒரு பொண்ணு எடுக்க முன்னாடி தூக்கிட்டு ஓடி வந்தேன். போ மாமா” என்று அவள் சிறு பிள்ளை போல சண்டை போட்டு செல்ல,

“சாரி டா. நாம ஆர்டர் போட்டு வேற வர சொல்லலாம்” என்று அவளை சமாதானம் செய்தபடியே ஷாப்பிங் பேக்களை தூக்கிக் கொண்டு அவள் பின்னால் சென்றான்.

கடைசியில் நாற்பது ரூபாய் ஐஸ்கிரீமில் தான் ஆள் சமாதானம் ஆனாள்.

இடது கையில் ஐஸ்கிரீமை பிடித்து கொண்டு வலது கையில் சரண் போனை தான் நோண்டிக் கொண்டிருந்தாள்.

“ஏன் இன்னும் என் இன்ஸ்டா ஐடிக்கு ஃபாலோ கொடுக்கமா வச்சிருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டே அவளே ஃபாலோ கொடுத்து,

அவள் போஸ்ட் எல்லாத்துக்கும் அவன் ஐடியில் இருந்து லைக் போட ஆரம்பித்து விட்டாள்.

“நான் போஸ்ட் போடும் போது மறக்காம லைக்ஸ் போட்டிருங்க” என்று சொல்லிக் கொண்டே,

போனில் கவனமாக இருந்தவள் ஐஸ்கிரீமை மறந்து போக, அதுவோ அவள் கையோடு தான் உருகி வழிந்து கொண்டிருந்தது.

“போன் அப்புறமா பாரு? முதல்ல சாப்பிடு” என்று சொல்லி கொண்டே டிஸு எடுத்து சரண் துடைத்து விட,

ஐஸ்கிரீமை அவன் கையிலேயே கொடுத்தவள் இரண்டு கைகளிலும் போனை பிடித்து கொண்டு அதில் ஐக்கியம் ஆகி விட்டாள்.

“என்ன வேணாமா? நான் ஐஸ்கிரீம் சாப்பிடுறது இல்ல. நீயே சாப்பிடு” என்று அவன் அவளிடமே திருப்பி நீட்டினான்.

“உங்களுக்கு யார் கொடுத்தது? ஆ” என்று ஊட்டி விடும்படி அவள் வாயை திறந்து காட்ட,

மென்மையாக சிரித்துக் கொண்டே அவளுக்கு ஊட்ட ஆரம்பித்திருந்தான்.

சாப்பிட்டு கொண்டே போனை பார்த்து கொண்டிருந்தவள் முகம் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி கொண்டே போக, இங்கே பதறி போனான் சரண்.

“நட்சு என்ன?” என்று அவன் கேட்டிட,

“எவ்வளவு கஷ்டபட்டு வீடியோ போடுறேன். நூறு லைக்ஸ் தாண்ட மாட்டேங்குது. மோசமா கமென்ட் பண்றாங்க” என்று சொல்லிக் கொண்டே அழுத பெண்ணை, ‘அதுக்கு தானா இந்த அழுகை’ என்று பெருமூச்சு ஒன்று விட்டுக் கொண்டே பார்த்தான் சரண்.

“இதுக்காகலாம் யாராவது அழுவாங்களா?” என்று மீண்டும் டிஸு எடுத்து அவள் கண்களை துடைத்து விட,

“வேற எதுக்காக அழனுமாம்?” என்று தான் கேட்டாள் நட்சத்திரா.

“இன்னும் சின்ன புள்ளையாவே இருக்க. இதெல்லாம் ஒரு விசயம்னு உட்கார்ந்து அழுதுட்டு இருக்க? முதல்ல அங்க இருக்கிறது யாரு உனக்கு? யாரோ ஏதோ சொல்லிட்டாங்கனு உட்கார்ந்து அழுதுட்டு இருக்க.

இங்க யாரும் நீ கஷ்டப்படுவ, இப்படி உட்கார்ந்து அழுவனெல்லாம் உனக்காக யோசிக்க போறது இல்ல. ஈசிலி ஹர்ட்ஸ் டூ அதர்ஸ். அவங்களை மாத்த முடியாது. யூ சூஸ் தட் ஃபீல்டு. சோ யூ பேஸ் டூ ஆல். நீ தான் உன்னை ஸ்ட்ராங்கா வச்சுக்கணும்” என்று அவன் நீளமாக வசனம் பேசிட,

“என்னவோ போ மாமா மனுசுக்கே கஷ்டமா இருக்கு” என்று சொல்லி கொண்டே போனை கீழே வைத்து விட்டு, அவன் கையில் இருந்து ஐஸ்கிரீமை வாங்கி அவளே சாப்பிட ஆரம்பித்தாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த சரணுக்கு அவளை நினைத்து கவலையாக தான் இருந்தது.

இருபது வயதை கடந்து விட்டாள். ஆனாலும் இன்னமும் பக்குவப்படவில்லை என்ற கவலை அவனுக்கு.

இப்படியே இருந்தால் இந்த சமூகத்தை எப்படி எதிர்கொள்வாள் என்று எண்ணிக் கொண்டே,

“நட்சு… இருபத்தி ரெண்டு வயசு ஆகுது உனக்கு. இன்னமும் சின்ன குழந்தை மாதிரி பிகேவ் பண்ற. கொஞ்சம் மேட்சுர்ட்ஆ இருக்க முயற்சி பண்ணு. இப்படியே இருந்தா லைஃப்ல கஷ்டப்படுவ” என்று அவன் அக்கறையாக சொல்ல,

“நான் ஏன் கஷ்டப்படப்போறேன்? அதான் நீங்க எல்லாம் இருக்கீங்களே” என்றால் அவள் சற்று முன் அழுத பிள்ளை அவள் தானா என்று சந்தேகிக்கும் வகையில் ஐஸ்கிரீமை ரசித்து சுவைத்து கொண்டே.

“நாங்க எல்லாரும் உன்கூட எப்போதும் இருக்க முடியாது. ஒருவேளை நீ தனியா சர்வே பண்ண வேண்டிய சூழ்நிலை வந்தா?” என்று அவன் கேட்க,

“அது அப்போ பார்த்துக்கலாம் மாமா” என்றால் வாழ்க்கை பற்றிய புரிதல் சிறிதும் இல்லாமல்.

“கொஞ்சமாவது லைஃப்ஆ சீரியஸா பாரு நட்சு” என்ற சரணிடம்,

“சீரியஸா இருந்தா ஐ சி யு ல சேர்த்துடுவாங்க மாமா. நீங்க ஏன் எல்லா விஷயத்தையும் சீரியஸா பார்க்கிறீங்க? எப்பவும் புத்திசாலியா இருக்காதீங்க. கொஞ்சம் முட்டாளா இருங்க அப்போ தான் லைஃப் ஜாலியா இருக்கும்” என்று புதுமை தத்துவம் சொன்ன ஞானி தலை முடியை களைத்து விட்டு மென்மையாக சிரித்து கொண்டான் சரண்.

அவளோ ஐஸ்கிரீம் முடிய, கையை துடைத்து கொண்டே “போலாமா மாமா? அடுத்து எங்க போறோம்” என்று கேட்டுக் கொண்டே எழ,

அவளோடு சேர்ந்து சரணும் “போலாம்” என்று எழுந்து சென்றான்.

காரில் வரும் போதும் அவன் அருகே அமர்ந்து ரீல்ஸ் பார்த்து சிரித்து கொண்டே வந்தவளை சரண் விழிகளும் அடிக்கடி தயக்கமாக பார்த்துக் கொண்டே வந்தது.

‘அடுத்து என்ன ரீல்ஸ் போடலாம்?’ என்று ட்ரெண்டிங்காக போய் கொண்டிருக்கும் ரீல்ஸ்களை தேடிக் கொண்டிருந்தவளை,

“நட்சு” என்று அழைத்தான் சரண்.

“என்ன மாமா?” போன் திரையில் இருந்து விழியை அகற்றாது கேட்டால் அவள்.

“நிஜமாவே என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா?” இன்னமும் அவனால் அவள் வார்த்தைகளை நம்பவும் முடியவில்லை. தெளிவான முடிவு எடுக்கவும் முடியவில்லை.

நிச்சயமாக இவளோடு மனமும் உடலும் இணையாது என்று புரிந்து போனது அவனுக்கு.

அவனால் அவள் வாழ்க்கை இழந்து விட கூடாது என்ற அக்கறையும் வந்தது.

“அதான் அன்னைக்கே சொன்னேனே மாமா. எனக்குன்னு எந்த பிளானும் இல்ல. சோ உங்க பிளானுக்கு ஓகே சொல்றேன்” என்றவளை நொந்து போய் பார்த்தவன், காரை ஓரமாக நிறுத்தி விட்டு,

“கல்யாணம் பண்ணா நிறைய பொறுப்புகளை ஏற்க வேண்டி வரும். எக்ஸ்பேட்டேசன் இருக்கும். லைஃப் வேற மாதிரி மாறிடும்” என்று அவளுக்கு புரிய வைக்க முயன்றான்.

அருகே இருப்பவனின் தவிப்பு அவளுக்கு சுத்தமாக புரியவே இல்லை. அவள் விழிகள் இன்னமும் அலைபேசி திரையில் தான் நிலைத்து இருந்தது.

“என்ன மாற போகுது. இப்போ இருக்க போல தானே இருக்க போறேன்” என்று அவள் சொல்லவும் தான் அவள் மனநிலை அவனுக்கு புரிந்தது.

அவள் வாழ்வின் விதிமுறைகளையும், திருமண பந்த பொறுப்புகளையும் எப்போதும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

அன்னை தந்தை பாதுகாப்பில், அத்தை மாமா அன்பில், பாட்டியின் அரவணைப்பில் குழந்தையாகவே இருக்க நினைக்கிறாள்.

அதற்காக தான் அவர்கள் கேட்டதும் சரி என்று சொல்லி இருக்கிறாள்.

இடையில், இத்தனை நாள் வெறும் மாமன் மகனாக இருந்தவனை கணவனாக முறை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி அவள் கொஞ்சமும் சிந்திக்கவே இல்லையே.

‘அவள் சிந்திக்காமல் இருந்தால் என்ன? நான் புரிய வைக்கிறேன். அவளே கல்யாணம் வேணாம் சொல்லி நிறுத்தினா நல்லா இருக்கும்’ என்ற திட்டத்தில் அவளிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான்.

“நட்சு… கல்யாணத்துக்கு பிறகு எனக்கு தேவையானதெல்லாம் நீ தான் கவனிச்சிக்கணும் தெரியும் தானே” என்று கேட்க,

“அதான் வீட்ல அத்தனை வேலைகாரங்க இருக்காங்களே மாமா அவங்க பார்த்துப்பாங்க” என்றவளை தலையில் அடித்து கொண்டு பார்த்தவன்,

“முதல்ல அந்த போனை அங்க வச்சிட்டு என்னை பாரு” என்று அவளை பிடித்து தன்னை நோக்கி திருப்பி அமர வைத்தான்.

“கல்யாணம் முடிஞ்சி பர்ஸ்ட் நைட்டுனு ஒன்னு இருக்கு. அது பத்தி தெரியுமா உனக்கு?” என்று கேட்க,

அவளும் “ஹ்ம்ம் தெரியுமே” என்று தான் கூலாக தோளை குலுக்கினாள்.

‘தெரியுமா?’ என்று அரண்டது என்னவோ சரண் தான்.

“என்கூட உனக்கு ஓகே வா” என்று இருவரையும் கைக்காட்டி கேட்டிட,

“அதுல என்ன இருக்கு?” என்று தான் பதில் சொன்னாள் நட்சத்திரா.

‘அதுல என்ன இருக்கா? இவ தெரிஞ்சி பேசுறாளா? தெரியாம பேசுறாளா?’ என்று எண்ணி கொண்டே,

“அதுல என்னெல்லாம் பண்ணுவாங்கனு தெரியுமா?” என்று கேட்க,

இல்லை என்று அவள் இட வலமாக தலை ஆட்டிய பிறகே சரணுக்கு மூச்சே வந்தது.

‘தெரியல. அதான் பயம் இல்லை. இரு உனக்குள்ள முதல்ல அந்த பயத்தை புகுத்துறேன்’ என்று வில்லத்தனமான எண்ணிக் கொண்டே,

“நான் சொல்லித்தரேன்” என்று சொல்லி அவளை நெருங்கி அமர,

அவளோ விழி சுருக்கி அவனை தான் விசித்திரமாக பார்த்து வைத்தாள்.

அவளுடன் இதுமாதிரி பேச்சு வார்த்தைகள் அவனுக்கும் சற்று சங்கடமாக தான் இருந்தது. சங்கடத்தை பார்த்தால் கடைசியில் சங்கு தான் என்று எண்ணிக் கொண்டே,

அவள் கன்னங்களை கைகளில் ஏந்திக் கொள்ள,

அவள் உடல் சிலிர்த்ததோ என்னவோ? இவனுக்கு பயத்தில் உடல் நடுங்கியது.

காரின் முன்னிருக்கையில் தான் இருவரும் அமர்ந்து இருந்தார்கள்.

ஏதோ வெட்ட வெளியில் காட்சி பொருளாக இருப்பது போன்ற உணர்வு.

“இங்க நல்லா இல்ல, நாம பின்னாடி போலாம்” என்று சொல்ல,

“ஹ்ம்ம் ஓகே” என்று அதற்கும் சர்வ சாதாரணமாக ஒப்புக்கொண்டு, இறங்கி பின்னிருக்கைக்கு சென்றவளை அதிர்ந்து பார்த்தவன்,

‘இவ என்ன எல்லாத்துக்கும் தயாரா இருக்கா? எனக்கு தான் நெஞ்சு பட படன்னு அடிச்சுக்குது. சரண் வெட்ககேடு. உன்னால நட்சுவ கிஸ் பண்ண முடிஞ்சா அவளை கல்யாணம் பண்ணிக்க, இல்ல கஷ்டம் தான். சாமியாரா போயிடு” என்று எண்ணிக் கொண்டே தன்னை திடப்படுத்தி கொண்டு அவனும் பின்னால் வந்து அமர்ந்தான்.

அவளோ கோவிலில் புளியோதரை வாங்க தயாராக இருப்பது போல் அவனை பார்த்துக் கொண்டிருக்க,

எச்சில் கூட்டி விழுங்கி கொண்டே அவளை நெருங்கி அமர்ந்த சரண், தன் பயத்தை மறைக்க கஷ்டப்பட்டு சிரித்தும் கொண்டான்.

நட்சத்திரா முகத்தில் எந்த உணர்வுகளும் இல்லை. சரண் என்றால் எப்போதும் அவள் உணரும் பாதுகாப்பு இப்போதும் இருந்தது. அதனாலோ என்னவோ அவளும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. எப்போதும் அவனை பார்க்கும் அதே பார்வை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வலுக்கட்டாயமாக கரத்தை உயர்த்தி அவள் கன்னங்களில் பதித்து கொண்டவன், அவள் விழிகளில் இருந்து சிரமப்பட்டே அவள் இதழ் நோக்கி தன் விழிகளை நகர்த்தி கொண்டே, அவள் இதழ் நோக்கி தன் இதழ்களையும் கொண்டு சென்று விட்டான்.

தவறு செய்யும் உணர்வில் இதய படபடவென அடித்துக் கொள்ள, நூலளவு இடைவெளியில் இதழ்கள் தீண்டாது நிறுத்தியவன், விழிகளை உயர்த்தி மூடியிருந்த அவள் விழிகளை பார்த்துக் கொண்டே,

“இஸ் தட் ஓகே டூ யு” என்று தான் கேட்டான் ஏக தடுமாற்றத்தில்.

மெதுவாக விழிகளை திறந்தவள், “ஹ்ம்ம்” என்று தலையசைக்க,

தோல்வியை ஒப்புக் கொண்டு அவளை விட்டு விலகி அமர்ந்தவன்,

“பட் ஐ அம் நாட் ஓகே” என்றான் இருக்கையில் தலையை சாய்ந்து கொண்டே.

கள்ளச்சிரிப்புடன் அவன் மார்பில் வந்து சாய்ந்து கொண்ட நட்சத்திராவோ,

“உனக்கு ரொமான்ஸ் பண்ணவே தெரியல மாமா. டைரக்ட்ஆ கிஸ் பண்ண நினைக்கிற, அதான் உன்னால முடியல. நிறைய கொரியன் ட்ராமா சைனீஸ் ட்ராமா பார்த்து ரொமான்ஸ் பண்ண கத்துக்க” என்றவளை விழிகளை தாழ்த்தி பார்த்தவன்,

“நேரம் தான் டி” என்று தான் சலிப்பாக சொன்னான்.

அவனை பார்த்து என்ன சொல்லி விட்டால் வெட்க கேடு. அதற்காக ரோசம் கொண்டு அவளை ஆளும் எண்ணமும் வரவில்லை. பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டே, அவளை தன்னில் இருந்து விலக்கி அமரவைத்தவன், இறங்கி முன்னால் வந்து அமர்ந்தான்.

நட்சத்திராவும் பின்னால் இருந்து கொண்டே முன்னால் இருந்த போனை மட்டும் எட்டி எடுத்தவள், தன் போனோடு குடும்பம் நடத்த ஆரம்பித்து விட்டாள்.

இங்கே காரை ஓட்டி கொண்டு வந்த சரண் மனமோ, ‘அந்த கோட்டானை நினைச்ச என்னென்னமோ தோணுது. இவகிட்ட எதுவும் முடிய மாட்டேங்குது. பிள்ளை பூச்சியெல்லாம் உனக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு ஆகிடிச்சி. என்ன சரண்தேவ் உன் நிலைமை இவ்வளவு மோசமா போச்சி’ என்று பயணம் முழுவதும் அரற்றி கொண்டே வந்தது.

பெரியவர்கள் எல்லாரும் கல்யாண வேளையில் பிஸியாகிவிட்டார்கள்.

“விஷ்ணு ஏன் டா இப்போலாம் வேலைக்கு வர்றது இல்ல” என்று கேட்ட ஜானகி பாட்டியிடம்,

“வேலைய விட்டு நின்னுட்டான்” என்று மட்டுமே சொன்னான்.

அவனும் அவளை திருப்பி அழைக்கும் எண்ணத்தில் இல்லை. ‘இப்போதே இந்த நிலை, கோட்டான் மட்டும் கூட இருந்துச்சி பச்சையா மாட்டிப்ப சரண். அவன் விலகி இருக்கதே நல்லது தான்’ என்று எண்ணிக் கொண்டாலும், நாளுக்கு நாள் விஷ்ணுவின் பிரிவு துயர் வாட்டியதே தவிர அவனால் அவளை கடந்து செல்லவே முடியவில்லை.

இன்றோடு விஷ்ணு வேலையை விட்டு சென்று ஒருவாரம் கடந்து விட்டது..

இந்த ஒரு வாரமும் அவனே சுயமாக காரை ஓட்டி செல்கிறான். சில நேரங்களில் ஷூட்டிங்க்காக வெளியூர் செல்ல வேண்டி வரும் என்பதால் தான் அவன் டிரைவர் போட்டுக் கொண்டது. அதுமட்டுமல்ல எப்போதும் ஏதாவது மண்டையில் ஓடிக் கொண்டே இருக்கும், சாலையில் கவனம் செலுத்த முடியாது என்பதாலும் நிரந்தரமாக ஓட்டுனரை பணியமர்த்தி கொண்டான்.

சப்ஸ்டிடுட் டிரைவராக வந்தவள், பாதியில் விட்டு சென்ற பிறகும் அவன் வேறு ஆள் போடவில்லை. போடவும் தோணவில்லை.

இந்த ஐந்து நாளில் ஆள் பல சுயபரிச்சை செய்து, விஷ்ணு நினைவுகளையும், அவளால் தூண்டப்படும் உணர்வுகளையும் அடக்கும் வழியறியாது, இறுதியில் வந்து நின்றது என்னவோ நரம்பியல் மருத்துவரிடம் தான்.











 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் : 18

“டாக்டர் நான் இப்போ சொல்லப் போற விசயம் ரொம்ப ரொம்ப சீக்ரெட்டா இருக்கணும். இது மட்டும் மீடியாவுக்கு லீக் ஆச்சினா என் கெரியர் மொத்தமும் ஸ்பாயில் ஆகிடும். நீங்க எனக்கு நம்பிக்கையா இருப்பீங்கனு தான் உங்களை தேடி வந்துருக்கேன்” என்ற சரணின் பூடகமான பேச்சில்,

எதிரே இருந்த மருத்துவர் தீவிரமாகி, “சொல்லுங்க சரண். கண்டிப்பா நான் உங்க நம்பிக்கையை காப்பாத்துவேன். என்ன உங்க பிரச்சனை?” என்று உறுதியளித்த பின்னே தன் பிரச்சனையை கூறலானான்.

“எனக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆகியிருக்கு டாக்டர்” என்று அவன் ஆரம்பிக்க,

“அப்பா எனக்கும் இன்வைட் பண்ணியிருக்காங்க. காங்கிரஸ் சரண்” என்று அவர் வாழ்த்து வேற சொல்ல,

“இப்போ அந்த கல்யாணம் தான் என் பிரச்சனையா இருக்கு. எனக்கு வேற ஒருத்தரை பிடிச்சு இருக்கு” என்றதும் மென்மையாக சிரித்து கொண்டே இருக்கையில் சாய்ந்து அமர்ந்த மருத்துவரோ,

“இது ஒன்னும் பெரிய பிரச்சனை இல்ல. சில பேருக்கு கல்யாணம் ஆன பிறகும் கூட வேற ஒரு பொண்ணை பிடிக்கிறது இல்லையா? அதை விட இது மோசமில்லை” என்றார் அவர் சாதாரணமாக.

“ஆனா எனக்கு பொண்ணு மேல இல்லை ஒரு பையன் மேல தான் ஃபீலிங் வருது” என்று சரண் சொன்னதும் ரிலாக்ஸாக சாய்ந்து அமர்ந்திருந்த மனுஷன் “வாட்?” என்று அதிர்ந்து கேட்டுக் கொண்டே முன்னோக்கி வந்தார்.

“எஸ் டாக்டர். எனக்கு ஒரு பையனை ரொம்ப பிடிக்குது. முன்னெல்லாம் அவன் பெயரை கேட்டா கூட அவ்வளவு கோபம் வரும். இப்போலாம் அவனை மட்டும் தான் கண்கள் தேடுது. அவனை பத்தி தான் யோசிக்க தோணுது. நட்சு மேல கூட வராத எண்ணங்கள் எல்லாம் அவன் மேல வருது” என்று சரண் சொல்லிக் கொண்டே போக,

“எல்லா பசங்க மேலயும் ஃபீலிங் வருதா?” என்று அவனை மார்க்கமாக பார்த்துக் கொண்டே, தான் அணிந்திருந்த வெண்ணிற கோட்டை அவர் நன்றாக இழுத்து மூடி தன்னை மறைத்து கொண்டே கேட்க,

அவர் செயல் சரணுக்கே கொஞ்சம் கடுப்பாகி விட்டது. ஏதோ அவர் மேல விழுந்து பாய்றது போல பதுங்குறார்.

“எல்லா பசங்க மேலயும் இல்லை. அவன் மேல மட்டும் தான்” என்று அவரை முறைத்து கொண்டே சொன்ன சரணோ,

“டாக்டர், நான் நார்மலா இருக்க நினைக்கிறேன். இந்த பாய் லவ் எல்லாம் எனக்கு செட் ஆகாது. நிறைய பிராப்ளம் பேஸ் பண்ண வேண்டி வரும். நான் அதுக்கு தயாரா இல்லை. ஏதாவது ஊசி போட்டு அவன் மேல வர்ற ஃபிலிங்க தடுத்து விடுங்க”

என்றவனை பார்த்து அழுவதா? சிரிப்பதா? என்று அவருக்கே தெரியவில்லை.

காதல் மருத்துவத்தில் கையாளும் உணர்வா என்ன? ஊசி போட்டு உணர்வுகளை கட்டுப்படுத்துவதற்கு.

“மருத்துவத்துல இதுவரை அப்படியெல்லாம் எந்த மருந்தும் கண்டுபிடிக்கல சரண்” என்றார் அவர் அமைதியான குரலில்.

“முதல்ல செக்ஸ்சுவாலிடினா என்னனு புரிஞ்சுகோங்க. ஜென்டர் இஸ் நாட் எ செக்ஸ்சுவாலிடி.

உங்களோட பர்த் மார்க் வச்சி நீங்க ஆணா இல்ல பெண்ணானு அறியபடுறது ஜெண்டர்.

ஜெண்டர் சேஞ்சிங் கூட இதுல அக்செப்ட் பண்ணிகிட்டாங்க.

ஆண், பெண் அண்ட் டிரான்ஜெண்டர்ஸ்.

செக்ஸ்சுவாலிடி ஓர் செக்ஸுவல் ஓரியண்டஷன் அப்படினா, எமோஷனலி பிசிகலி உங்களுக்கு யார் மேல அட்ராக்சன் வருது அப்படிங்கிறது.

நீங்க ஆணா இருந்தா பெண் மேல தான் ஈர்ப்பு வரணும்னு இல்ல. யார் மேல வேணா வரலாம். ஏன் உங்களுக்கு உங்க பாடி மேல கூட அட்ராக்ஷன் வரலாம். அப்படி நீங்க யார் மேல அதிகமா அட்ராக்ட் ஆகுறீங்க அப்படிங்கிறதா பொறுத்து உங்களோட செக்சுவல் டைப் தீர்மானிக்கபடுது.

இந்த செக்ஸ்சுவாலிடி டைப்ஸ் கடலளவு இருக்கு. இந்தியாவுல மட்டும் 25 டைப்ஸ் ஆப் செக்ஸ்சுவல் ஓரியண்டேஷன் இருக்கிறதா கண்டுப்பிடிச்சுருக்காங்க.

மோஸ்ட்லி நமக்கு தெரிஞ்சது 4 தான்.

ஆப்போசிட் அட்ராக்ஷன், ஹோமோ செக்ஸ்வல் அட்ராக்ஷன், பை செக்ஸுவல் அண்ட் எ செக்ஸ்சுவாலிட்டி.

ஹெதெரோ செக்ஸ்சுவாலிடி - அட்ராக்ட் டூ ஆப்போசிட் ஜெண்டர். நீங்க பையனா இருந்தா பொண்ணு மேல ஈர்ப்பு வர்றது. பொண்ணா இருந்தா பையன் மேல ஈர்ப்பு வர்றது. இது தான் சரினு மோஸ்ட் ஆப் கன்ட்ரீஸ் சொல்லுது.

ஹோமோ செக்ஸ்சுவாலிடி - அட்ராக்ட் டூ ஓன் ஜெண்டர். கே அண்ட் லேசிபியன்ஸ். ஆணா இருந்தா ஆண் மேல ஈர்ப்பு வர்றது. பெண்ணா இருந்தா பெண் மேல ஈர்ப்பு வர்றது.

நெக்ஸ்ட் பை செக்ஸ்சுவாலிடி - அவங்களுக்கு ஆண், பெண் ரெண்டு பாலினத்தவர்கள் மேலயும் ஈர்ப்பு வரும்.

நெக்ஸ்ட் ஒன் பென்செக்ஸ்சுவாலிடி - இந்த மாதிரி பெர்சன்ஸ் எல்லார் மேலயும் அட்ராக்ட் ஆவாங்க. நாட் ஒன்லி மேல், ஃபீமேல். ஈவன் ட்ரான்ஜெண்டர், கே, லேஸிபியன்ஸ் மேல கூட அட்ராக்ட் ஆவங்க.

ஏசெக்ஸ்சுவாலிடி - இது கொஞ்சம் இன்டர்ஸ்டிங் ஆனது. இந்த மாதிரி டைப் ஆஃப் பெர்சன்ஸ்க்கு யார் மேலயும் இன்டர்ஸ்ட் இருக்காது.

கிரே ஏசெக்ஸ்சுவாலிடி - ஏசெக்ஸ்சுவாலிடி போல தான். ஆனா எப்போவாது அவங்க அட்ராக்ட் ஆக வாய்ப்பு இருக்கு.

டெமி செக்ஸ்சுவாலிடி - மோஸ்ட் ஆப் தி பெர்சன்ஸ் டெமி செக்சுவலா இருக்க வாய்ப்பு இருக்கு. அவங்களுக்கு ஒரு ஸ்ட்ராங் ஆனா கனெக்சன் இருந்தா மட்டுமே அவங்க பாட்னர் கூட லைஃப் ரன் பண்ண முடியும். அதிகமா அவங்க மேல அன்பு வைப்பாங்க, இவங்க தான் நம்ம சோல்மேட் அப்படினு நம்புவாங்க. அந்த மாதிரி அவங்க அட்ராக்ட் ஆகுற ஆள் கூட மட்டும் தான் அவங்களால கனெக்ட் ஆக முடியும்.

பொலிசெக்ஸ்சுவாலிடி - லைக் தட் பை செக்ஸ்சுவாலிடி. ரெண்டு இல்ல ரெண்டுக்கு மேல அட்ராக் ஆவாங்க.

அன்றோ செக்ஸ்சுவாலிடி - இவங்களுக்கு நல்ல பாடி பில்டர்ஸ் போல மஸ்குலர் மசில்ஸ் இருக்கிற பசங்களை மட்டும் தான் பிடிக்கும். அது பெண்ணுக்கு தான் பிடிக்கும்னு இல்ல. ஆணா இருந்து, அந்த மாதிரி நல்ல சிக்ஸ் பேக் வச்சி, ஹல்க் மாதிரி இருக்கிற ஆணா அவங்களுக்கு பிடிக்கும்.

ஹைனோ செக்ஸ்சுவாலிடி - ரொம்ப நளினமா, பெண்களுக்கான இலக்கணத்தோட இருக்கிற பொண்ணுங்களை தான் இவங்களுக்கு பிடிக்கும்.

ஆட்டோ செக்ஸ்சுவாலிடி - அவங்களுக்கு அவங்களை மட்டும் தான் பிடிக்கும். அவங்களை அவங்களே ரொம்ப அதிகமா ரசிப்பாங்க.

இதுல நீங்க எந்த கேட்டகிரில வருவீங்கனு நீங்களே கண்டுபிடிங்க.

ஒருவேளை நீங்க ஆணா பிறந்து உங்களுக்கு பெண்ணோட குணாதிசயங்கள் இருந்து, பொண்ணா மாறணும்னு நினைச்சாலோ, இல்லை பொண்ணா பிறந்து ஆணா மாற நினைச்சாலோ அதுக்கு டிரீட்மென்ட் இருக்கு. இவங்க மேல தான் காதல் வரணும், இவங்க மேல தான் உணர்வுகள் ஆர்பரிக்கணும்னு யாரையும் கட்டுப்படுத்த முடியாது. அதுக்கான டிரீட்மென்ட்டும் இல்லை.

ஆஸ்ய டாக்டரா சொல்லனும்னா, மனச அடக்க நினைச்சா அது இன்னும் அதிகமா அலைப்பாயும். பேசாம அது போக்குல விட்டுருங்க. அப்போவாது ஏதாவது மாற்றம் வருதா பாருங்க.

ஆனா, உங்க பாமிலி பிரண்ட்ஆ சொல்லனும்னா நீங்க அந்த பையனை மறக்கிறது தான் உங்களுக்கும் நல்லது, உங்க குடும்பத்துக்கும் நல்லது.

எல்லாரும் அவங்க அவங்க ஜெண்டர் செக்ஸ்சுவல் ஓரியண்டேஷன்ல தான் லைப் ரன் பண்றாங்களானு கேட்டா, கண்டிப்பா இல்லை. மேக்சிமம் ஆண்களுக்கு அவங்க தேவையை தீர்த்துக்க ஒரு ஆள் இருந்தா போதும். அதுனால தான் இங்க நிறைய ஃபீமேல் செக்ஸ் ஒர்கர்ஸ் உருவாக்க படுறாங்க. வயசு வித்தியாசம் இல்லாம ரேப் கூட நடக்குது.

நட்சத்திரா கூட வாழ்க்கையை ஷேர் பண்ணிக்க கொஞ்சம் முயற்சி பண்ணுங்க. மேபீ பாசிபில் ஆகலாம்” என்றவரை இயலாமையாக பார்த்தவன்,

“அது தான் முடியலையே டாகடர். எல்லாம் முயற்சி பண்ணிட்டேன். நான் கல்யாண வாழ்க்கைக்கே தகுதி இல்லாதவன்” என்று புலம்பியவனை, விழிகளை கூர்மையாக்கி சந்தேகமாக பார்த்தவர்,

“அப்படி என்ன முயற்சி பண்ணினீங்க?” என்று தான் கேட்டார் அவர்.

சங்கடமாக அவரை பார்த்தவன்,

“ஐ டிரை டூ இன்டிமெட் நட்சு. பட் என்னால அவளை கிஸ் கூட பண்ண முடியல.” என்று அவன் சொல்லிட,

“ஓகே” என்று அமைதியான குரலில் சொன்னவர், அவனை ஆழ்ந்து பார்க்க,

திருட்டு முழியுடன் அவரை பார்த்தவன் சொன்ன செய்தியில் அவர் விழிகள் இரண்டு பிதுங்கி வெளிவரும் அளவுக்கு அதிர்ந்து தான் போனார்.

சங்கடமாக அவரை அவன் பார்த்த பார்வையில், அதிர்ந்தவர் விழிகள் மெது மெதுவாக புன்னகையில் சுருங்க, சிரிப்பை அடக்கியபடி மருத்துவராக அவனை கையாண்டார்.

“ஆல் ரைட்… சோ உங்களால முடியுதா இல்லையானு செக் பண்ண மேல் செக்ஸ் ஒர்கர்ஸ் வரை தேடி போய் இருக்கீங்க. யாரையும் கண்ண தாண்டி பார்க்க முடியாம கடைசில என்கிட்ட வந்துருக்கீங்க. அப்படி தானே?” என்று கேட்டவரை,

வெட்ககேடாக பார்த்துக் கொண்டே “எஸ் டாக்டர்” என்று தலையை ஆட்டினான்.

“அப்போ ஒரே ஒருவழி தான் இருக்கு. பேசாம அந்த பையனை எங்கேயாவது கடத்திட்டு போய்டுங்க” என்ற மருத்துவரை வெடுக்கென்று அவன் நிமிர்ந்து பார்க்க,

“எமோசன்ஸ் கூட விளையாடதீங்க சரண். அது உங்களை பைத்தியமாக்கிடும்” என்றவரை ஆமோதிப்பாக பார்த்தவன்,

“இப்பவே நிம்மதியை இழக்க வச்சிட்டான். வேற வழி இல்லையா டாக்டர்?” என்று பரிதாபமாக கேட்க,

“இது தான் சொலுஷன் தெரிஞ்சும் வேற ஆப்ஷன் தேடுறீங்கல்ல. சரி நான் சில ஹார்மோன்ஸ் டேப்லெட் அண்ட் ஸ்லீப்பிங் பில்ஸ் எழுதி தரேன். எடுத்து பாருங்க” என்றவர் மாத்திரை எழுதி சீட்டை அவன் கையில் கொடுத்தார்.

“தாங்க்ஸ் டாக்டர்” என்று சொல்லி கொண்டே அதை வாங்கி கொண்டவன்,

“இந்த விசயம்…” என்று தயக்கமாக இழுக்க,

“கண்டிப்பா யாருக்கும் சொல்ல மாட்டேன் சரண்” என்றார் அவர் நம்பிக்கை குரலில்.

அன்று இரவிலிருந்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டான். தூக்கம் தான் வந்ததே தவிர, கனவில் வந்து இம்சிக்கும் அவன் கோட்டானால் ஆசைகள் அடங்கவில்லை.

“டேய் கோட்டான் நீ மட்டும் பொண்ணா இருந்திருந்தா யாரை பத்தியும், எதை பத்தியும் கவலைப்பட்டிருக்க மாட்டேன். உன்னை தூக்கிட்டு வந்து தாலி கட்டியிருப்பேன். பையனா போய்ட்டியே!” என்று போனில் விஷ்ணுவின் புகைப்படத்தை பார்த்து புலம்பிய படியே அவன் இரவுகள் கழிந்தது.

நட்சுவின் இன்ஸ்ட்டாவில் இருந்து தான் விஷ்ணுவின் போட்டோவை எடுத்திருந்தான்.

இருவரும் இணைந்து இருப்பதை கூட அவனால் பார்க்க முடியவில்லை. பொஸசிவ் ஆனான். ‘அவன் எனக்கு மட்டும் தான்’ என்று பிடிவாதம் தலைதூக்கியது.

இதற்கு மேல் முடியாது என்ற நிலையில் நேராக விஷ்ணு வீட்டுக்கே தேடி போய் விட்டான். விதி அவனை மேலும் வாட்டியது என்று தான் சொல்ல வேண்டும். ஆள் வீட்டில் இல்லை.

பலமுறை போன் போட்டு விரல் தேய்ந்ததே தவிர அவன் அழைப்பை அவள் ஏற்கவே இல்லை.

மாரியிடம் விசாரித்தான். சமயபுரம் கோவிலுக்கு அம்மா கூட போனதாக சொன்னான்.

நாட்கள் கடந்தது. இன்னும் அவள் அவன் கண்ணில் சிக்கவில்லை. சும்மா சும்மா மாரியிடம் கேட்கவும் தயக்கமாக இருக்க அவனிடமும் கேட்கவில்லை.

இப்படியான ஒரு நாளில் விடுமுறை தினத்தன்று வீட்டு தோட்டத்தில் காதில் பெரிய ஹெட்செட் ஒன்றை மாட்டிக் கொண்டு, கிட்டாரில் டியூன் செட் செய்துக் கொண்டிருந்தவன் செவியில் இன்னிசையாக வந்து ஒலித்தது அந்த பெயர்.

“விஷு…” என்ற நட்சத்திரா குரலில் வெடுக்கென்று திரும்பி பார்த்தவன் ஏமாந்து தான் போனான்.

அவளோ போனில் தான் பேசிக் கொண்டிருந்தாள்.

விஷ்ணுவோடு தான் பேசுகிறாள் என்று யூகித்து கொண்டவன்,

“இவ கூட பேசுறான். நான் போன் பண்ணா மட்டும் அவாய்ட் பண்றான். கையில சிக்கட்டும் தோலை உரிக்கிறேன்” என்று கருவிக் கொண்டே, காதில் மாட்டியிருந்த ஹெட்செட்டை கழட்டி விட்டு அவள் பேசுவதை கூர்மையாக கவனித்தான்.

“நான் உன்ன ரொம்ப மிஸ் பண்றேன். நீ இல்லாம இங்க நல்லாவே இல்ல. கல்யாணம் வரை கூட இருக்கேன் சொன்ன தானே” என்று நட்சத்திரா போனில் காதலி போல் நியாயம் கேட்டுக் கொண்டிருக்க,

அந்த பக்கம் என்ன சொன்னாளோ, “இதெல்லாம் நியாயமே இல்ல. போ
டா” என்று சிணுங்கி கொண்டே போனை அணைத்தவள் பின்னால் வந்து நின்றிருந்தான் சரண்தேவ்.

“யார் கிட்ட பேசிட்டு இருந்தா? விஷ்ணு கிட்டயா?” என்று அவன் எதுவும் தெரியாதது போல் கேட்க,

“ஆமா, பிராடு என்னை நல்லா ஏமாத்திட்டான்” என்று அவள் சொல்லவும் கண்களை சுருக்கி அவளை பார்த்தவன்,

‘இவ மூலமா அந்த கோட்டானை கண்டு பிடிச்சிடலாம்’ என்று எண்ணிக் கொண்டே,

“இப்போ எங்க இருக்கான்?” என்று தான் கேட்டான் சரண்.

“ஐயோ அத கேட்க மறந்துட்டேனே” என்றவளை எரிச்சலாக பார்த்தவன்,

“இப்போ போன் போட்டு எங்க இருக்கான்னு கேளு” என்றான் கோபமாக.

“நீங்க எதுக்கு விஷுவ தேடுறீங்க?” என்று அவள் சந்தேகமாக கேட்க,

“எங்க ரெண்டு பேருக்குள்ள தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்னு இருக்கு” என்றான் எங்கோ வெறித்துக் கொண்டு.

“அப்போ விஷுவ பார்க்க போனா என்னையும் கூட கூட்டிட்டு போவீங்களா?” என்று தான் நட்சத்திரா கண்கள் மின்ன கேட்டாள்.

“உன்னை எதுக்கு கூட்டிட்டு போகணும்?” என்றவன் பொறாமையில் கொஞ்சம் கொதிக்க வேறு செய்தான்.

“நீங்க கூட்டிட்டு போவீங்கன்னு சொன்னா தான் நான் கால் பண்ணுவேன்” என்று மிரட்டிய அத்தை மகளை விழி சுருக்கி முறைத்தவன், ‘இப்போதைக்கு இவளை விட்டால் வேறு வழியில்லை’ என்று சரி என்றிருந்தான்.

அவன் சரி என்றதும் நட்சத்திராவும் துள்ளலாக விஷ்ணு எண்ணிற்கு அழைத்து கேட்டாள்.

அவளையே சரண் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க,

“எதோ பெட் கேர் சென்டர்ல இருக்கிறதா சொல்றான்” என்றதும், சரண் முகம் மலர,

அடுத்த நொடியே மின்னல் வேகத்தில் காருக்குள் ஏறி அமைந்திருந்தவன் அருகே நட்சத்திராவும் ஓடி வந்து ஏறி கொள்ள,

அவளை தான் கண்டிப்பு பார்வை திரும்பி பார்த்தான் சரண்.

“நானும் வருவேன் சொன்னேன்ல” என்று அவள் அடமாக அமர்ந்திருக்க,

வேறு வழியில்லாது அவளையும் ஏற்றுக் கொண்டே சென்றிருந்தான்.

வரும் வழியில் நட்சத்திரா காரை நிறுத்தி சிறிது சாக்லேட்களை வாங்கி கொண்டு மீண்டும் காரில் ஏற,

“இது எதுக்கு?” என்று தான் கேட்டான் சரண்.

“விஷுவ தாஜா பண்றதுக்கு” என்றவளை பொறாமையாக பார்த்தவன்,

“இது தான் 90’ஸ் கிட்ஸ்க்கும், 2கே கிட்ஸ்க்கும் உள்ள வித்தியாசம் போல, எப்படியெல்லாம் ஐஸ் வைக்கிறா?” என்று அவளை திட்டிக் கொண்டே அவனும் இறங்கி சென்று கேரி பேக் நிறைய சாக்லேட்கள் மட்டுமே வாங்கி வந்தான்.

“நீங்க எதுக்கு மாமா இவ்வளவு வாங்கி இருக்கீங்க” என்று கேட்டவளிடம்,

“ஹ்ம்ம் எனக்கும் தேவைப்படுது” என்று முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு சொன்னவன் பயணம் தொடர்ந்தது தன் உயிரானவளை நோக்கி.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
இங்கே அகிலனின் பண்ணையில் அகிலனோடு சேர்ந்து நாய்களை குளிப்பாட்டி கொண்டிருந்தாள் விஷ்ணு துர்கா.

“இப்போலாம் அடிக்கடி இங்க வர்ற, வேலைக்கு போகலையா?” என்று கேட்டவனிடம்,

“வேலைய விட்டேன் டாக்ட்ரே” என்றாள் சோகமாக.

“பைக் நல்லாக்க தான் வேலைக்கே போனது. ஆனா வேலியில போற ஓணானே என் வேட்டிக்குள்ள வந்து ஏறானேனு வம்ப விலைகுடுத்து வாங்கின போல ஆச்சி அந்த வேலை” என்றவளை அவன் புரியாது பார்த்து வைக்க,

“அந்த சிங்கருக்கும் அவன் அத்த மவளுக்கும் கல்யாணம். அந்த புள்ள என்னோட பழகுறத பார்த்துட்டு இந்த மனுஷன் எனக்கும், அதுக்கும் ஏதோ கனெக்ஷன் இருக்கதா நினைச்சி கல்யாணம் வேணாம் சொல்றார். நம்மால எதுக்கு பிரச்சனைன்னு தான் சொல்லாம கொள்ளாம வேலையை விட்டு நின்னுட்டேன்” என்றவளை இயல்பாக பார்த்துக் கொண்டே,

ஓ என்று கதை கேட்ட அகிலனோ, “வேற வேலை தேடலாம்ல?” என்று கேட்க,

“எனக்காக எல்லாவனும் கம்பெனி தொறந்து வச்சி வா வானு வெத்தல பாக்கு வச்சி அழைக்கிறான் பாருங்க, எங்க போனாலும் அரியர் கூட முடிக்கலைனு விரட்டி விடுறான். பைக் மட்டும் நல்லா இருந்துச்சு, பைக் டாக்ஸி சர்விஸ் பண்ணியாவது பொழச்சிப்பேன். இப்போ அதுக்கும் வழியில்லாம போச்சி” என்று விஷ்ணு கவலையாக சொல்ல,

“ஏன் அதுக்கு என்னாச்சி?” என்று தான் கேட்டான் அகிலன்.

“ரேஸ்ல ஜெயிச்சிடேனு விளங்காத நாரப்பய ஒருத்தன் அடிச்சி நொறுக்கிட்டான்.”

“நீ தான் மெக்கானிக் செட்ல வேலைப்பார்த்துட்டு இருந்தியே” என்று அவன் அடுத்த கேள்வி கேட்க,

“ஒருத்தனுக்கு கெரகம் சரியில்லைன்னா கால் வைக்கிற இடமெல்லாம் காலரா வந்து நிற்கும். மெக்கானிக் செட் அண்ணாச்சி வாங்கின கடனை கட்ட முடியலன்னு ராத்தியோட ராத்திரியா மொத்தமா எல்லாம் தூக்கிட்டு ஊர விட்டே ஓடிட்டார்” என்றவளை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் அகிலன்.

“என்ன சிரிக்கிறீங்க? என் கஷ்டம் உங்களுக்கு சிரிப்பா இருக்கா?” என்று அவள் கேட்ட தொனியில் இன்னும் சத்தமாக சிரித்தான் அகிலன்.

“சாரி. நான் வேணா காசு கொடுக்கவா?” என்று அவன் கேட்க,

“ஐயோ! வேணாம் டாக்ட்ரே. உன்னாண்ட என்னால காசு வாங்க முடியாது.”

“ஏன் முடியாது. நீ தான் இங்க வந்து எனக்காக வேலை பார்த்து கொடுக்கிறியே அதுக்கான கூலியா வாங்கிக்க”

“மத்தவங்ககிட்ட காச கூலி வாங்கலாம். உங்கிட்ட அன்ப மட்டும் தான் கூலியா வாங்கணும்” என்றவளை விழி சுருக்கி அவன் முறைக்க,

“ஹி… ஹி… ரொம்ப நெஞ்சை நக்குறேனா? புரிஞ்சிக்க டாக்ட்ரே. உன்கிட்ட காசு வாங்கினா என் மனசாட்சி கேட்காது. நீ இதுங்களை பார்த்துக்கவே எவ்வளவு கஷ்டப்படுறானு எனக்கு தெரியும்.”

“என்னை பத்தி என்ன நினைச்சிட்டு இருக்க நீ? ஊருக்குள்ள கிளினிக் வச்சிருக்கேன். நல்லா தான் சம்பாதிக்கிறேன்” என்றான் அகிலன் அவள் அவன் உதவியை மறுப்பது பிடிக்காது.

“அப்போ இன்னும் நிறைய நல்லது பண்ணு. வீணா கடல்ல காச போடாத” என்றவளை அவன் கடுப்பாக பார்க்க,

“கோச்சிக்காதீங்க. உங்களாண்ட காசு வாங்கினா அம்மா திட்டும்” என்றதும் அவனும் அதற்கு மேல் அவளை வற்புறுத்தவில்லை.

சரணின் கார் அந்த பண்ணைக்குள் நுழைய, ஆரம்பத்தில் இயற்க்கை விருந்தாக வண்ண மலர்கள் பூத்து குலுங்கிய மரங்களை வாவ் என்று வாயை பிளந்து பார்த்துக் கொண்டே வந்த நட்சத்திராவோ,

“இந்த இடத்தில ரீல்ஸ் ஷூட் பண்ணா செமையா இருக்கும்” என்று தான் சொல்லிக் கொண்டாள்.

சரண் கொஞ்சம் கூட அவளை கவனிக்கவில்லை. அவன் மனமோ விஷ்ணுவை காண போகும் ஆவலில் களித்து கொண்டிருந்தது.

அகிலன் வீட்டு வாசலில் காரை நிறுத்தி விட்டு வேகமாக காரை விட்டு இறங்கியவன், அந்த இடத்தில் விஷ்ணுவை தேடி தோற்று போனவன் விழிகள் சோர்ந்து போன நேரம் அவள் குரல் கேட்டே இதயம் பட படத்தது.

“டேய்… அடாவடி பண்ணாத? என்னையும் நனைச்சி விடுற கேடி பயலே” என்றவள் குரல் கேட்ட திசையில் வேகமெடுத்தது சரணின் கால்கள்.

கை இடுக்கில் நாய் ஒன்றை பிடித்து கொண்டு ஷாம்பூ போட்டு விட்டுக் கொண்டிருந்தவளை பார்த்ததும், வேகமாக வந்த கால்கள் தளர்ந்து தான் போனது.

அவளை கண்ட நொடி இதயத்தில் லட்சம் மின்னல் ஊடுருவி சென்ற உணர்வு.

எத்தனை நாட்கள் தவிப்பு. என்னெவெல்லாம் படுத்தி எடுத்துவிட்டாள். எகிறி வெளியே குதித்து துடித்து கொண்டிருந்த இதயத்தின் ஓசையோடு, கண்களில் காதல் மட்டுமே பெருகி வழிய, தளர்ந்த நடையுடன் அவன் கால்கள் அவளை நோக்கி அடியெடுத்து வைத்தது.

காதல் பித்தம் கொண்டு கனவில் அவளோடு பல கதைகள் பேசி இருக்கிறான். கனவு கலைய ‘என்னை இப்படி மாத்திட்டல்ல உன்னை விட மாட்டேன் கோட்டான்’ என்று விழித்து கிடந்து திட்டியிருக்கிறான். ஆனால் அவளை பார்த்த பிறகு தொண்டை குழி தாண்டி வார்த்தை வரவில்லை.

லட்சம் பல லட்சம் வார்த்தைகள் தமிழில் இருந்தாலும், ஒற்றை வார்த்தை சிக்கவில்லை கவி பாடகனுக்கு.

இந்த நொடி அவளை பார்த்த பிறகு பெரும் நிம்மதி பிறந்தது. உடலை விட்டு சென்ற உயிர் மீண்டும் உயிர் கூட்டில் வந்து ஒட்டிக் கொண்ட ஆனந்தம்.

சரண் கால்கள் மெதுவாக அவளை நோக்கி நகர, சுற்றி எதுவும் அவன் கண்களுக்கு தெரியவில்லை, மாயவள் மதிமுகம் மட்டுமே குருடனுக்கு கிட்டிய வெளிச்சம் போல விழி திரையில் நிறைந்து இருந்தது.

ஏதோ உள்ளுணர்வில் விஷ்ணுவும் தலை நிமிர்ந்து பார்த்தவள் அவனை பார்த்ததும் அரண்டு தான் போனது. நாயை கீழே விட்டு அவள் எழுந்து நிற்க,

சரண் அவளை அடையும் முன் தாவி வந்து அவளை அணைத்திருந்தாள் நட்சத்திரா.

அவள் வேகம் தாங்காது, விஷ்ணு நிலத்தில் சரிந்து விழ, அவள் மேலே விழுந்து கிடந்த நட்சத்திராவும் முகம் மலர சிரித்துக் கொண்டே அவள் கன்னத்தில் இதழ் பதிக்க,

இங்கே இதயமே நின்று விட்டது சரணுக்கு.

கருமணிகள் இரண்டும் தெறித்து விடும் அளவிற்கு கண்களை அதிர்ந்து விழித்தபடி சரண் நின்றிருக்க, அதே அதிர்ச்சி தான் அவனுக்கு எதிர் திசையில் துடைக்க டவல் எடுத்து வந்துக் கொண்டிருந்த அகிலனுக்கும்.
 
Status
Not open for further replies.
Top