ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் கொண்டேனடி கண்ணம்மா - கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் : 10

காலையில் விஷ்ணு வந்ததும் முதலில் பார்த்தது ஜானகி பாட்டியை தான்.

சோர்ந்த முகத்துடன் தோட்டத்தில் கிடந்த கல் பெஞ்சில் அமர்ந்து இருந்தார்.

“ஹாய் டார்லிங்… வாக்கிங் போகல?” என்று கேட்டுக் கொண்டே விஷ்ணுவும் அவர் அருகே அமர,

“மனசே சரி இல்லை பையா” என்றார் அவர் சோர்ந்த குரலில்.

“என்னாச்சி டார்லி… என்னான்ட சொல்லுங்க, எதுவா இருந்தாலும் தட்டி தூக்கிடலாம்” என்றவளை சலிப்பாக பார்த்தவர்,

“நீ என்ன பண்ணுவ?” என்று விரக்தியாக கேட்டார்.

“இன்னா வோனா பண்ணுவேன். உங்களுக்கு என்ன பண்ணனும் சொல்லுங்க அத சொல்லுங்க மொதல்ல” என்று அவருக்கு நம்பிக்கை கொடுக்க,

“உன்னால முடியுமா?” என்று தான் சந்தேகமாக பார்த்தார் அவர்.

“மேட்டர சொல்லாம முடியுமா? முடியாதானு கேட்டா எப்படி? மொதல்ல மேட்டர் இன்னான்னு சொல்லுங்க” என்று அவள் ஊக்கப்படுத்த, அவரும் சொன்னார்.

இரவு ஒரு முடிவோடு தான் தூங்கினான் போல சரண். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அனைவரையும் அழைத்து,

“எனக்கு இந்த கல்யாணம் வேணாம். நிறுத்திடுங்க” என்று பெரிய குண்டை தூக்கி போட்டவனை மொத்த குடும்பமும் அதிர்ந்து தான் பார்த்தது.

“ஏன் வேணாம்?” என்று அவன் தந்தை கேட்க,

“வேணாம்னா விடுங்களேன். ஏன் சும்மா கேள்வி கேட்கிறீங்க?” என்று எரிந்து விழுந்தவனை மொத்த குடும்பமும் சற்று விசித்திரமாக தான் பார்த்து வைத்தது.

அவர்கள் சொல்லி இதுவரை சரண் எந்த விஷயத்தையும் மறுத்தது கிடையாது. முதல்முறை மறுக்கிறான். காரணம் கேட்டால் கூட சொல்லாது மழுப்ப, பரிதவித்து தான் போனார்கள்.

“மண்டபத்துக்கு அட்வான்ஸ் கொடுத்தாச்சு. கல்யாண பத்திரிக்கை எல்லாம் பிரிண்ட் பண்ணி வந்தாச்சி இப்போ வந்து இப்படி சொல்ற?” என்று கலங்கிய அன்னையிடம்,

“எவ்வளவு செலவாச்சினு சொல்லுங்க நான் கொடுத்துடுறேன்” என்றதும்

“என்னங்க பேசுறான் இவன்?” என்று மனசுடைந்து போனவர் கணவர் உதவியை நாடினார்.

அவருக்கும் இன்று மகன் பேச்சி பிடிக்கவில்லை தான்.

ஆனாலும் அவன் மீது அதீத நம்பிக்கை கொண்டவராச்சே, காரணம் இல்லாமல் மறுக்க மாட்டான் என்று எண்ணியவர் அவனை ஆராயும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.

அவன் அருகே வந்த நட்சத்திரா அன்னை மேகலாவோ,

“ஏன் சரண்? எதுக்கு கல்யாணம் வேணாம் சொல்ற? நட்சத்திரா ஏதாவது தப்பு பண்ணிட்டாலா?” என்று கவலை தோய்ந்த குரலில் கேட்டார்.

“அப்படியெல்லாம் எதுவும் இல்ல அத்தை. நான் தான் அவளுக்கு தகுதி ஆனவன் இல்லைனு தோணுது” என்று மட்டும் சொன்னவன், அதற்குப் பிறகு அந்த இடத்தில் நிற்காது விறு விறுவென தன் அறைக்கு சென்றிருந்தான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஜானகி பாட்டியோ, அப்போதிருந்தே ‘என்னாச்சி இந்த பையனுக்கு?’ என்று அவனை பற்றிய சிந்தனையில் தான் உழன்று கொண்டிருக்கிறார்.

“இன்னும் ஒரு மாசத்துல இந்த வீட்ல கல்யாணம் நடக்க போகுதுனு நேத்து தானே உன்கிட்ட சொன்னேன். எந்த சண்டாளபாவி கண்ணு பட்டுச்சோ, சரண் கல்யாணம் வேணாம் நிறுத்துங்க சொல்லிட்டான்” என்று அவர் சோகமாக சொல்ல,

“அய்யயோ! என்னவாம் அவருக்கு?” என்று பதறியவள் கவலை எல்லாம், ஒரு மாதத்தில் இந்த நட்டு தொல்லை தீர்ந்து விடும் என்று நிம்மதி கொண்டாளே, கல்யாணம் நின்றால், அந்த நட்டு அவளை அல்லவா மரகழற செய்வாள் என்பது மட்டும் தான்.

“பாரு நேத்து வந்த உனக்கு கூட இந்த விஷயம் எவ்வளவு ஷாக்கிங்கா இருக்கு” என்று பாட்டி சொல்ல,

“ஆமா ஷாக் நியூஸ் தான். எதுக்கு அவருக்கு கல்யாணம் வோணாமாம்? நட்ட அவருக்கு பிடிக்கலையா?” என்று கேட்க,

“அதெல்லாம் அவ மேல கொள்ளை பாசம் வச்சி இருக்கான். ஆனா எதையோ மனசுல வச்சிட்டு வேணாம் சொல்றான். இப்போ சொல்லு உன்னால எனக்கு உதவி பண்ண முடியுமா? குறிச்ச நேரத்தில என் பேரன் சரணுக்கு கல்யாணம் நடக்கணும். உன்னால நடத்தி காட்ட முடியுமா?” என்று அவர் சவாலாக கேட்க,

“கொஞ்சம் கஷ்டமான வேலை தான்” என்று பின் வாங்கினாள் விஷ்ணு.

“உன்னாலலாம் முடியாது. அதுக்கெல்லாம் நிறைய ஹர்ட்ஸ் வேணும். என்ன இருந்தாலும் நீ ஒரு பொண்ணு தானே” என்று அவர் இளக்காரமாக சொல்ல,

தன்மான சிங்கமோ, “என்ன பொண்ணுன்னு எளக்காரமாக சொல்றீங்க? பொண்ணு, ஆணுன்னு என்ன இருக்கு. ஒரு ஆம்பளையால பண்ண முடியுற எல்லாம் என்னாலையும் பண்ண முடியும்” என்று சீறிக் கொண்டிருந்தவளை,

மேலும் உசுப்பி விட்டார் ஜானகி பாட்டி.

“நீ சும்மா இந்த வாய் சவிடாலுக்கு தான் ஆகும். வேலைக்கு ஆகமாட்ட” என்று மட்டம் தட்ட,

“என்னை ரொம்ப தான் இன்சல்ட் பண்ற டார்லி. உங்களுக்கு என்ன உங்க பேரன் கல்யாணம் நடக்கணும் அவ்வளவு தானே?” என்று வீராப்பாக கேட்டவள்,

எழுந்து நின்று,

“ஏய் ஜானகி… இந்த நாள், இந்த நேரம் உன் டையிரில குறிச்சி வச்சிக்க, இன்னும் ஒரு மாசத்துல, நீ குறிச்ச அதே நாள், அதே முகூர்த்தத்தில, உன் பேரன் கல்யாணத்தை நடத்தி காட்டுறேன். இது என்பது வயசுலயும், ஆடாம இருக்க உன் கொண்டை மேல சத்தியம்” என்று அவர் தலையில் கை வைக்க,

“அடிங்க… யார டி ஜானகினு பேர சொல்லி கூப்பிடுற?” என்று கேட்டுக் கொண்டே அவள் காதை பிடித்து திருக போக,

“கூப்பிட தானே டார்லி பேரு வச்சிருக்கு”

என்று சொல்லிக் கொண்டு அவர் கையில் சிக்காமல் ஓடிய விஷ்ணுவோ,

இரும்பு பாறை மேனியான் மீது தான் மோதி நின்றாள். வேறு யார் அவள் சரணாகதியாகும் சரண் தேவ் தான் எதிரில் நின்றிருந்தான்.

“வேலைக்கு வந்தா நேரா என்னை வந்து பார்க்காம, இங்க என்ன ஓடி பிடிச்சி விளையாடிட்டு இருக்க?” என்று சிடு சிடுத்த படி சரண் காரை நோக்கி போக,

“பாட்டி காலையில வாக்கிங் போகலனு சொல்லுச்சு, அதான் கொஞ்சம் எக்ஸ்சர்ஸைஸ்” என்றவளை தாண்டி அவன் பார்வை போக,

பின்னால் ஓட முடியாமல் ஓடி வந்தார் ஜானகி பாட்டி.

“பாட்டி மெதுவா வாங்க. ஏதாவது ஆகிட போகுது” என்று சரண் பதற,

“அந்த பொடி பயல பிடிச்சி வை டா” என்று கத்திக் கொண்டே மூச்சிரைக்க அவர்கள் அருகே வந்து சேர்ந்தார் ஜானகி பாட்டி.

“வயசான காலத்துல எதுக்கு இப்படி ஓடுறீங்க? பாருங்க மூச்சு வாங்குது?” என்று சரண் அவரை கடிந்து கொள்ள,

“எனக்கு ஒன்னும் அவ்வளவு வயசு ஆகல” என்ற ஜானகி பாட்டி பதிலில் விஷ்ணு வாயை மூடி சிரிக்க,

ஓர கண்ணால் அவளை முறைத்தவர், “எல்லாம் உன்னால தான். நீ கூப்பிடவா பேரு வச்சிருக்கு?” என்று கேட்டுக் கொண்டே எட்டி விஷ்ணு காதை பிடிக்க போக,

“பாஸ் என்னை காப்பாத்துங்க” என்று சரண் பின்னால் ஒளிந்து கொண்டவளை, பாட்டி கைகளை நீட்டி எட்டி பிடிக்க முயல, அவளோ அவர் கைகளுக்கு சிக்காது சரண் எனும் தூணுக்கு பின்னால் அங்கிட்டு இங்கிட்டு ஆட்டம் காட்ட,

இடையில் நின்றிருந்த சரண் இதழ்கள் கூட இவர்கள் செல்ல சண்டையில் புன்னகைத்து கொண்டது.

ஆனால் அந்த புன்னகை கூட மறைந்து போனது நட்சத்திரா வரவால்.

“ஐ! என்ன விளையாடுறீங்க? நானும் வரேன்” என்று உற்சாகமாக கேட்டுக் கொண்டே நட்சத்திரா ஓடி வர,

அவள் வந்ததும், சரண் அமைதியாக விலகி சென்றான்.

விஷ்ணுவோ, “நட்டே…” என்று அவள் பின்னால் ஒளிந்து கொண்டாள்.

“நான் இருக்கும் போது, என் விஷு மேல யார் கையும் பட விட மாட்டேன்” என்று பாட்டியின் போலி அடிகளில் இருந்து அவளை காக்கிறேன் என்று அணைத்து கொண்டு நிற்க,

விலகி நின்று அதை பார்த்த சரண் இதயம் தான் கனத்து போனது.

அவள் வேண்டாம் என்று விலக தெரிந்த இதயத்துக்கு, ஏனோ விஷ்ணுவும், அவளும் ஒன்றாக கட்டி கொண்டு நிற்பதை காண முடியவில்லை.

யாராவது ஒருவருக்காக இந்த இதயம் துடித்தே ஆக வேண்டுமே.

இதயத்தை மாற்ற நினைத்தவனுக்கு, மாற்று ஆள் உள்ளே நுழையாது, யாரையும் விட்டு முழுதாக விலக முடியாது என்ற சங்கதி தெரியாமல் தான் போனதுவே.

விஷ்ணுவை பின் பக்கமாக கட்டி கொண்டிருந்த நட்சத்திரா கரங்கள் விஷ்ணு வயிற்றில் பதிந்து இருக்க,

சரண் விழிகள் இரண்டும் அந்த கரங்களை தான் உறுத்து விழித்தது.

“ஏய்… விளையாடியது போதும். டைம் ஆகுது வா” என்று கோபமாக விஷ்ணுவை அழைக்க,

அவளும் நட்சத்திரா கையை விலக்கி விட்டு கொண்டே காரை நோக்கி வந்தாள்.

“இப்போ தப்பிச்சிட்ட ராத்திரி மாட்டுவ. எவ்வளவு நேரம் ஆனாலும் உன் காதை திருகாம விட மாட்டேன்” என்று ஜானகி பாட்டி சவால் விட,

“பகல்லயே பசு மாடு தெரியலையாம். ராத்திரி எருமை மாடா தெரிய போகுது?” என்ற விஷ்ணுவின் நக்கல் பதிலில் நட்சத்திராவும், சரணும் பக்கென்று சிரித்து விட்டார்கள்.

“விஷு நானும் உனக்காக நைட் வெயிட் பண்ணுவேன்” என்று நட்சத்திராவும் குரல் கொடுக்க,

ஹாங் ஹாங் என்று தலையாட்டிய விஷ்ணுவை கொஞ்சம் பொறாமையாக தான் பார்த்துக் கொண்டிருந்தான் சரண்.

இங்கே பாட்டியோ, “அந்த பொடி பயலோட சேர்ந்து என்னையே கிண்டல் பண்றியா?” என்று கேட்டுக் கொண்டே நட்சத்திரா காதை பிடித்து திருக,

“ஐயோ பாட்டி வலிக்குது விடுங்க” என்று கதறிய நட்சத்திராவை, சைட் மிரர் வழியே அவர்களை பார்த்த விஷ்ணு இதழ்களிலும் புன்னகைக்கு பஞ்சமில்லை.

காரும் வீட்டிலிருந்து வெளியே செல்ல, அப்போதும் சரண் விழிகள் அவள் மீது தான் நிலைத்து இருந்தது.

முன் கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்து விஷ்ணு, கைகளால் தலையை கோதிக் கொள்ள,

அவள் மண்டையை பிடித்து ஆட்டி தலை முடியை கலைத்து விட்டிருந்தான் சரண்.

“அய்யோ! ஏன் பாஸ்” என்று சலித்து கொண்டே விஷ்ணு மீண்டும் தலை முடியை கைகளால் கோதி சரி செய்து கொண்டாள்.

மெல்லிய புன்னகையுடன் அவளை பார்த்தவன்,

“உன்கிட்ட ஏதோ மேஜிக் இருக்கு. எல்லாரையும் மயக்கிடுற” என்றான் உள்ளார்ந்த உணர்வு தழும்பல் குரலில்.

“அப்போ நீங்களும் மயங்கிட்டீங்களா பாஸ்?” என்று அவள் பட்டென்று கேட்டுவிட,

“லூசு…” என்று திட்டியவன் இதழ்களிலும் மெல்லிய புன்னகை தழும்பியது.

“மூஞ்சிக்கு நேர புகழாதீங்க பாஸ். ஒரே வெக்க வெக்கமா வருது” என்று நெழிந்தவளை பார்த்து தலையை ஆட்டி சிரித்து கொண்டான் சரண்.

“ஏசி ஆன் பண்ணிக்கவா?” நேற்றைய நிகழ்வுகளை நினைவில் வைத்து இன்று அனுமதி கேட்டாள்.

“எல்லாம் என்கிட்ட கேட்டுட்டு தான் செய்ற பாரு? உன் இஷ்டம் போல தானே எல்லாம் நடக்குது” என்றவன் இரட்டை அர்த்த பேச்சு அவளுக்கு புரியவில்லை என்றாலும் அவன் கோபப்படாது அவளோடு இயல்பாக பேசுவதே மட்டற்ற மகிழ்ச்சி.

“பாட்டு?” என்று மீண்டும் அவனிடம் அனுமதி கேட்க,

உன் இஷ்டம் என்பது போல் கையை அசைத்தவன் சாலையில் விழியை பதித்தான்.

பிளேயரில் பாடல் ஒன்றை ஓட விட்டவள்,

“டோஓஓங் டோடோ டோங்
டோ டோ டோங் டோடோ டோங்”

என்று அதனுடன் சேர்ந்து கணீர் குரலில் பாட துவங்கி விட்டாள்.

சாலையை வெறித்துக் கொண்டிருந்தவன் அவள் குரல் கேட்டு பீறிட்டு வந்த சிரிப்பை அடக்கி கொண்டே திரும்பி விஷ்ணுவை பார்க்க,

ஆள் சித்ரா தேவி பிரியா ரேஞ்சில் தன் குரல் வளமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.

“நா ரெடி தா வரவா
அண்ணன் நா இறங்கி வரவா”

மென்மை தொலைத்த வன்மை குரலின் கத்தலில், “போதும் நிறுத்து” என்று பொறுக்க முடியாது அவளை தடுத்தான் சரண்.

“ஏன் பாஸ் உங்களுக்கு போட்டியா வந்துடுவேன்னு பயமா?” என்று கேட்டவளை,

“இது வேறயா?” என்று ஒரு லுக் விட்டவன்,

“ஆமா கொஞ்சம் பயமா தான் இருக்கு” என்றான் நக்கல் தொனியில்.

“பயம் வர தானே செய்யும். நான்லாம் ஒன்னாவது படிக்கும் போதே பாட்டு போட்டியிலே பார்ஸ்ட் பிரைஸ் வாங்கின ஆளாக்கும்” என்று தற்பெருமை பேசும் சில்வண்டை வைத்து கொஞ்ச நேரம் நேரம் போக்கலாம் என்று எண்ணியவனோ,

“ஆஹான்” என்று சொல்ல,

“என்னை யாருனு நினைச்சீங்க?” என்று விஷ்ணு கேட்க,

“நான் எதுவும் நினைக்கல, நீயே சொல்லு” என்றான் இதழ்களுக்குள் அடக்கிய புன்னகையுடன்.

“கைட் பண்ண சரியான ஆள் இல்ல”

“இருந்திருந்தா அடுத்த ஏ.ஆர்.ரகுமான் ஆகியிருப்ப அப்படி தானே” என்று அவன் கலாய்க்க,

“யா… அப்கொர்ஸ்” என்று வாய் கூசாமல் அடித்து விடும் அவளை பார்த்து,

“சரி தான்” என்று மண்டையை ஆட்டிக் கொண்டான் சரண்.

“அப்படி என்ன பாட்டு படினீங்க?” என்று சரண் அவளை சீண்ட,

“உங்களுக்காக பாடியே காமிச்சிடுறேன்” என்றதும்,

“அப்போ நான் கொஞ்சம் ரெடி ஆகிக்கிறேன்” என்றவன் வலது கையால் இடது நெஞ்சை நீவி கொண்டான்.

அவன் செயல்கள் எதையும் கருத்தில் கொள்ளாதவளோ, குரலை செருமிக் கொண்டு,

“ரோசா பூ சின்ன ரோசா பூ…
உன் பேர சொல்லும் ரோசா பூ…” என்று பாட,

வாய் விட்டே சிரித்தான் சரண் தேவ்.

“நீங்க எதுக்கு சிரிக்கிறீங்கனு தெரியுது. ஏதோ உங்க குரல் என் குரலை விட கொஞ்சம் நல்லா இருக்குனு திமிர்” என்று முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டே சொன்னவள்,

அவனின் சிரித்த முகத்தை பார்த்துக் கொண்டே,

“பாஸ் உங்ககிட்ட ஒன்னு சொல்லவா” என்று கேட்க,

என்ன? என்று அவள் மீது விழி பதித்தான் சரண்.

“உங்களுக்கு செம வாய்ஸ். மெக்கானிக் செட்ல வேலை பார்க்கும் போது அலுப்பு தெரியாம இருக்க பாட்டு போட்டு விட்டுட்டே வேலை செய்வோம். அந்த பிளே லிஸ்ட்ல உங்க பாட்டு தான் பாதிக்கு பாதி இருக்கும்” என்று அவனை புகழ,

அவள் தன் பாட்டு பிடிக்கும் என்றதே அவன் இதயத்தில் இதமான உணர்வை துளிர செய்தது.

இதுவரை எத்தனையோ பேர் அவன் குரலை மெச்சி அவனை புகழ்ந்து இருக்கிறார்கள். அதையெல்லாம் விட இன்று இந்த நொடி இந்த பாராட்டு அவனை குளிர செய்தது.

“உனக்கு பாட்டுனா பிடிக்குமா?” என்று அவன் கேட்க,

“யாருக்கு தான் பாட்டு பிடிக்காது?” என்று எதிர் கேள்வி கேட்டாள் விஷ்ணு.

“நட்சுவுக்கு பிடிக்காது” என்ற சரண் குரல் குறைந்து ஒலிக்க,

“அவளுக்கு விசித்திரமா இருந்தா தான் பிடிக்கும். எங்கயோ ஏலியன் குட்டியா பொறக்க வேண்டியவ இங்க பூமியில வந்து பொறந்துட்டா” என்று தன் வீட்டு பெண்ணை கேலி செய்யும் விஷ்ணுவை முறைத்தான்.

அவன் அனல் பார்வையை புரிந்துக் கொண்டவளும்,

“ஹி… ஹி… சாரி பாஸ். உங்க வருங்கால மனைவில” என்று சமாளிப்பு புன்னகை புரிய,

வருங்கால மனைவி என்ற அடிக்கோட்டில் அடிப்பட்ட பார்வை அவளை பார்த்த சரணோ

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல” என்றான் இதம் தொலைந்த முகபாவனையில்.

“நட்டு நல்ல பொண்ணு பாஸ். என்ன கொஞ்சம் மரகழண்ட போல நடந்துக்குவா, மத்தபடி பொக்கிஷம் பாஸ் அவ. மிஸ் பண்ணிடாதீங்க” என்றவளை வலி நிறைந்த விழிகளுடன் பார்த்தவன்,

“அதான் நீயே சொல்லிட்டியே ஏலியன் குட்டினு, உன்னை போல ஒரு ஏலியன் குட்டியவே கட்டிக்கட்டும்” என்று சொல்லிவிட்டு திரும்பி கொண்டான்.

“யார பார்த்து ஏலியன் குட்டி சொல்றீங்க?” என்று விஷ்ணு அவனோடு சண்டைக்கு தயாராக,

“அப்புறம் நீ என்ன மனுஷ பிறவியா?” என்று தான் அவளை கலாய்த்து விட்டிருந்தான்.

விஷ்ணுவை கிண்டல் செய்து கொண்டே ஸ்டுடியோவும் வந்து சேர்ந்தான்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் : 11


உற்சாகமாக ஸ்டுடியோ உள்ளே நுழைந்த சரண், நேற்று போல் சதி திட்டத்திற்கு நேரம் ஒதுக்காது தன் வேலையில் கவனம் செலுத்தி, அதில் வெற்றியும் கண்டான்.

காலையில் அவனை இறக்கி விட்டதோடு சரி, மதியம் வரை விஷ்ணுவை பற்றிய எண்ணமே இல்லை சரணுக்கு.

எல்லாரும் லஞ்ச் பிரேக் போக, சரணும் ரெகார்டிங் ரூமில் இருந்து தன் அலுவலக அறைக்கு வந்தவன், வழமை போல் வீட்டிலிருந்து சாப்பாடு வந்திருக்கும் என்ற நினைப்பில் உணவு மேஜையில் அமர்ந்து பியூனை அழைக்க,

அவரோ “இன்னைக்கு வீட்ல இருந்து சாப்பாடு வரல சார்” என்று தான் சொல்லி சென்றார்.

ஏன்? என்று காரணம் தெரியாமல் இருக்க அவன் ஒன்றும் சிறுவன் இல்லையே.

இன்று காலையில் அவன் சொன்ன செய்தி அத்தனை பேரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அதன் பிரதிபலிப்பு தான் இந்த உணவு மறுப்பு போராட்டம் போல என்று எண்ணிக் கொண்டவன்,

ஆழ்ந்த மூச்சு ஒன்றை எடுத்துக் கொண்டே எழுந்து காரை நோக்கி வந்தான்.

காரின் பின்னிருக்கையில் படுத்து ஜன்னலுக்கு வெளியே காலை நீட்டியபடி தூங்கிக் கொண்டிருந்தாள் விஷ்ணு. அவள் அருகே வந்த சரணோ,

“ஏய்” என்று வெளியே நீண்டு கொண்டிருந்த காலில் ஒரு அடி போட்டு எழுப்ப,

பதறியடித்து எழுந்தாள்.

நேற்று வேலை சொல்லி அவளை பிஸியாக வைத்திருந்தான். அவளும் பம்பரமாக சுற்றிக் கொண்டிருந்தாள்.

ஆனால் இன்று அவன் அவளை பற்றிய நினைவை ஒதுக்கி வைத்திருக்க, சும்மாவே இருந்ததில் ஆள் தூங்கியே விழுந்து விட்டாள்.

“தூங்குமூச்சி எழுந்திரு” என்று சொல்லிக் கொண்டே முன்னிருக்கையில் சரண் ஏறி கொள்ள,

விஷ்ணுவும், ஓடி வந்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தாள்.

“சொல்லுங்க பாஸ் எங்க போகணும்?” என்று கேட்டுக் கொண்டே பெரிய கொட்டாவி ஒன்றை விட,

“கவலையே இல்லல உனக்கு?” என்று வயித்தெரிச்சலில் கேட்டவன், ஹோட்டல் பெயர் ஒன்றை சொல்லி அங்கே போக சொல்ல,

“ஏன் பாஸ் வீட்ல இருந்து இன்னும் சாப்பாடு வரலையா? நேத்து வந்ததே. லேட் ஆச்சினா நான் வேணா போய் வாங்கினு வரவா?” என்று கேட்டாள்.

“நான் சொன்னத மட்டும் செய். என்னை கேள்வி கேட்காத” என்று சரண் முகத்தை காட்டிட,

அவளும் அமைதியாகி அவன் சொன்ன ஹோட்டலில் கொண்டு விட்டாள்.

காரை விட்டு இறங்கி சென்றவன், மீண்டும் திரும்பி வந்து, “நீயும் வா” என்று விஷ்ணுவையும் அழைக்க,

அவளோ, “சாப்பிடவா?” என்று தான் கண்கள் மின்ன கேட்டாள்.

“பின்ன ஷாப்பிங் பண்ணவா? கேள்வி கேட்காம வா” என்று சிடு சிடுத்துக் கொண்டே சரண் முன்னே சென்று விட,

“இந்தா வந்துட்டேன் பாஸ்” என்று சொல்லிக் கொண்டே காரை லாக் செய்து விட்டு இறங்கி ஓடியவள், மறக்காமல் தன் அன்னைக்கு போன் போட்டு, “இன்னைக்கு சாப்பாடு வேணாம்” என்று சொல்ல,

அன்னம்மாவோ, “ஏன் டி வேணாம்? எல்லாம் கட்டி வச்சிட்டேன். பசங்க யார்கிட்டயாவது குடுத்து உடுறேன்” என்றார்.

“அறுசுவை விருந்தா சமைச்சி வச்சிருக்க போற? நமத்து போன அந்த பருப்பு கொழம்பும், அப்பளமும் தன, அத நீயே தின்னு. நான் ஒருநாள் நல்ல சோறு திங்க போறேன் அதுவும் ஓசியில” என்ற மகளிடம்,

“அடியே என்ன லந்தா. தினம் வாய்க்கு ருசியா திங்குறல்ல இதுவும் சொல்லுவ இன்னமும் சொல்லுவ. ராத்திரி வா உன் வயித்த காயப்போடுறேன்” என்று திட்டிய அன்னை பேச்சு எதுவும் காதில் வாங்காமல் போனை அணைத்து பேண்ட் பாக்கெட்டில் போட்டவள், “பாஸ்” என்று ஒற்றை விரலை தூக்கி காட்டி விட்டு ரெஸ்ட்ரூம் பக்கம் போக, இங்கே சரண் போன் அடித்தது.

வேலவன் தான் அழைத்திருந்தான்.

“எங்க இருக்கீங்க சார்?” என்று அவன் கேட்க,

“நானும், விஷ்ணுவும் ஹோட்டலுக்கு சாப்பிட வந்தோம்” என்ற சரண் பதிலில் விழி பிதுங்கி நின்றான் வேலவன்.

“சார் பாவம் சின்ன பையன் சார். கோவத்துல சாப்பாட்டுல விஷம் ஏதும் வச்சிடாதீங்க” என்று அங்கே அவன் பதற,

‘நான் எதுக்கு டா விஷம் வைக்க போறேன்?’ என்று எண்ணிக் கொண்ட சரணோ, “போனை வை இல்ல வந்து உனக்கு தான் விஷம் வைப்பேன்” என்று திட்டினான்.

“சார் சார்… எந்த ஹோட்டல்னாவது சொல்லுங்க? வந்து பாடிய டிஸ்போஸ் பண்றேன்” என்ற வேலுவுக்கு பதில் சொல்லாது, போனிலேயே அவனை முறைத்து விட்டு அழைப்பை துண்டித்திருந்தான் சரண்.

கீங் கீங் என்று அழைப்பு துண்டிக்க பட்ட சத்தத்தில் காதில் இருந்து போனை எடுத்து பார்த்தவன், “ஐயோ வச்சிட்டாரே” என்று பரிதவிக்க,

இங்கே சரணோ, “என்னை சீரியல் வில்லன் ஆக்கிடுவான் போல” என்று வேலவனை தான் திட்டினான்.

கோபத்தில் முகம் சிவக்க அமர்ந்திருந்த சரணை யோசனையாக பார்த்துக் கொண்டே அவன் எதிரே வந்து அமர்ந்த விஷ்ணுவோ,

“என்னாச்சி பாஸ்? ஏன் மூஞ்சில அனல் காத்து வீசுது” என்று கேட்க,

அவளை பார்த்து முறைத்தவன், “ஹாங் நீ ரொம்ப ஹாட்டா இருக்கல்ல அதான்” என்று சொல்லிக் கொண்டே வெயிட்டரை அழைத்து சிக்கன் பிரியாணி ஒன்றை ஆர்டர் கொடுத்து விட்டு, “உனக்கு?” என்று விஷ்ணுவிடம் கேட்க,

“இங்க வாங்க” என்று கண்களால் அழைத்து கொண்டே அவனை நோக்கி முன்னால் சரிந்தவளை விழி சுருக்கி பார்த்துக் கொண்டே சரணும், அவள் முகத்திற்கு நேர் முகத்தை கொண்டு போக,

“வசதியா இருக்கீங்களா? இல்ல கஷ்டத்துல இருக்கீங்களா?” என்று பக்கத்தில் நின்றிருந்த வெயிட்டருக்கு கேட்காத அளவுக்கு கையை வாய் அருகில் மறைத்து ஹஸ்கி குரலில் கேட்க,

இன்னும் புரியா பார்வை தான் பார்த்தான் சரண்.

“இல்ல புரியல” என்று அவன் சொல்ல,

ப்ச் என்று சலித்து கொண்டவள், “வசதியா இருக்கீங்கனா நிறைய சாப்புடுவேன். இல்லைனா கொஞ்சம் குறைச்சி சாப்புடுவேன்” என்று அவள் சொல்லவும்,

நிமிர்ந்து அமர்ந்தவன்,

“உனக்கு என்ன வேணுமோ சாப்பிடு” என்றான்.

உடனே முகம் மலர நிமிர்ந்து அமர்ந்த விஷ்ணுவும், “மறுபடியும் நீங்க தெய்வம்னு புரூப் பண்ணிட்டீங்க பாஸ்” என்று சொல்லிக் கொண்டே,

மதிய லஞ்ச் மெனு எல்லாவற்றிலும் ஒவ்வொன்று ஆர்டர் கொடுத்து விட்டு ஆள் ஃபுல் கட்டு கட்ட, ஷர்ட் கையை முட்டி வரை மடித்து விட்டு கொண்டே தயாராக இருந்தாள்.

சாப்பாடும் வந்து சேர்ந்தது. தம்பி எக்ஸ்ட்ரா மைனஸ் எடுத்து வா என்று சர்வரிடம் சொன்னவளை,

மயோனீஸ் என்று திருத்தினான் சரண்.

அதான் போய் எடுத்துட்டு வா என்று பரபறத்தவள், கண்கள் மின்ன தன் முன் பரப்பி வைக்கப்பட்டிருந்த உணவை பார்த்தவள் நாவில் எச்சி ஊற, கீழுதட்டை நாவல் ஈரப்படுத்தி கொண்டே,

‘இன்னைக்கு உனக்கு தீவாளி தான்’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே சாப்பிட ஆரம்பிக்க,

சரணும் அவளை கவனித்து கொண்டே சாப்பிட ஆர்மபித்தான்.

தன் உணவில் கவனமாக இருந்தாலும் ஒரு கண் சரண் தட்டிலும் இருந்தது.

தன் தட்டில் இருந்த சிக்கன் பீஸை எடுத்து கடிக்க போனவள், அவன் சிக்கன் துண்டுகளை தனியாக எடுத்து வைத்திருப்பத்தை பார்த்து,

“சிக்கன் வேணுமா பாஸ்?” என்று கேட்க,

சரணோ அதிகப்படியாக தான் கேட்கிறாள் என்று நினைத்து, “இல்ல வேணாம்” என்று சொன்ன அடுத்த நொடி, அவன் தட்டில் இருந்த சிக்கன் துண்டுகள் மொத்தமும் அவள் தட்டுக்கு இடம் பெயர்ந்து இருந்தது.

தன் தட்டில் கை போட்டு எல்லாவற்றையும் எடுத்து பதுக்கி கொண்டவளை அசந்து அவன் பார்க்க,

அவளோ “நீங்க சாப்பிடலைனா நான் சாப்பிடுறேன்” என்று வாய் நிறைய பிரியாணியை அள்ளி வைத்து கொண்டே சொல்ல,

‘நான் எப்போ வேணாம் சொன்னேன்?’ என்று தான் பார்த்தான் சரண்.

‘அப்போ எக்ஸ்டிரா அவன் ஆர்டர் போட்டது வேணுமானு கேட்கல, என்கிட்ட இருந்து உருவ தான் கேட்டு இருக்கான்‘ என்று அனுமானித்து கொண்டவன்,

“முட்டை வேணுமா?” அவளை போல் அவள் தட்டில் இருந்து பறிக்க எண்ணி தான் கேட்டான்.

ஆனால் சாமர்த்தியகாரி, “ஆமா வேணும்” என்று அவன் முட்டையையும் எடுத்து ஒரே வாயில் தள்ள,

இட வலமாக தலையை ஆட்டிக் கொண்டே இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன்,

“இதையும் சேர்த்து தின்னு” என்று தன் தட்டை தள்ளி விட,

“அப்புறம் நீங்க என்ன சாப்புடுவீங்க?”என்று அக்கறை எல்லாம் வார்த்தையில் மட்டும் தான் இருந்தது, அவன் பிரியாணியில் மீதியும் அவள் தட்டுக்கு தாவி இருந்தது.

“நான் இன்னைக்கு விரதம்” என்று சொல்லிக் கொண்டே ஜுஸ் ஒன்றை ஆர்டர் செய்தவன் திரும்பி இருந்தே குடித்து கொண்டான்.

“ஆமா இவ்வளவு சாப்பாடு வாங்கி தந்து இருக்கீங்க ட்ரீட்டா?” என்று விஷ்ணு அடுத்த முட்டையை வாய்க்குள் தள்ளி விட்டு கொண்டே கேட்க,

“ஆமா… கல்யாணம் கேன்சல் ஆனதுக்கு” என்றவன் பதிலில் வாயில் அடைத்த முட்டை போல் தன் முட்ட கண்ணை விரித்து பார்த்தவள் மனமோ,

‘அய்யயோ பாட்டிக்கு இந்த விசயம் தெரிஞ்சா, கல்யாணம் நின்னதுக்கு அவன் ட்ரீட் வச்சா நீ எப்படி சாப்பிடலாம் கேட்டு தின்ன சோத்த எல்லாம் வெளிய எடுக்குமே’ என்று அரற்ற,

‘அதுக்கு தெரியாம பார்த்துப்போம்’ என்று மனதை சரி கட்டியவள், நமக்கு சோறு தான் முக்கியம் ரேஞ்சில் வெளுத்து கட்ட ஆரம்பித்து விட்டாள்.

சாப்பிட்டு முடித்து பில் வர, நூறு ரூபா மட்டும் எடுத்து வைத்த சரண், பில் புக்கை விஷ்ணு புறம் தள்ளி விட,

பல்லிடுக்கில் மாட்டிக் கொண்டிருந்த சிக்கனை டூத் ஸ்டிக் வைத்து குத்திக் கொண்டிருந்தவள், அதிர்ந்து அவனை பார்த்தாள்.

‘என்னாண்ட ஏன் தள்ளுறார்?’' என்று எண்ணிக் கொண்டே திறந்து பார்த்தவள் மேலும் அதிர்ந்து கண்களை விரித்து கொண்டாள்.

ஓசி சோறு என்று கணக்கு பார்க்காமல் வயிற்றுக்குள் தள்ளியதெல்லாம், இப்போது மூக்கு வழியே வெளியே சாடி விடும் போல தான் இருந்தது அவள் சாப்பிட்ட கணக்கு.

“என்ன பாஸ்?” என்று உள்ளே சென்று விட்ட குரலில் மெதுவாக கேட்க,

“நான் சப்பிட்டதுக்கு பில் எடுத்து வச்சிட்டேன் வித் டிப்ஸ்ஸோட. நீ சாப்பிட்டதுக்கு கொடு” என்று அவன் அசால்டாக சொல்ல,

இங்கே விழி பிதுங்கி அமர்ந்திருந்தாள் விஷ்ணு.

‘எதேய்? காசு கொடுக்கணுமா?’ என்று கண்களை உருட்டியவள்,

அவனை நோக்கி சரிந்து “வெளையாடாதீங்க பாஸ். என்னான்ட சுத்தமா காசு இல்ல” என்று சொல்ல,

“அது என் பிராப்ளம் இல்ல” என்று தான் பொசுக்கென்று அவளை எட்ட நிறுத்தினான் சரண்.

“உங்களாண்டா கேட்டுனு தன ஆர்டர் போட்டேன்” என்று பாவமாக முகத்தை வைத்து நியாயம் கேட்கும் கோளாறு கோட்டானை ரசித்து கொண்டே,

“நான் காசு கொடுப்பேனு சொல்லவே இல்லையே” என்று சரண் கையை விரித்திட,

“உங்களை தெய்வம்னு சொன்னேன்” என்று உதட்டை பிதுக்கினாள்.

எதற்கும் அசராதவன், “அதான் கண்ணுல மட்டும் காட்டிட்டு எல்லாத்தையும் நீயே தின்னியா?” என்று கேலி செய்த விஷமம் பிடிச்சவனை விஷ்ணு பாவமாக பார்த்துக் கொண்டே,

“என் சம்பளத்தில பிடிச்சிகொங்க” என்றாள்.

“பிடிக்க அளவுக்கு எல்லாம் உனக்கு சாலரி இல்ல” என்றதும், சம்பளம் எவ்வளவு? ஏது? என்று கூட கேட்காது வேலைக்கு வந்த தன் மடதனத்தை நொந்து கொண்டே,

சண்டைகாரனை விடுத்து சர்வரை சமாளிக்க முயன்றாள்.

“பாத்ரம் வெளக்கி கொடுக்கவா” என்று கேட்க,

அவனோ “அதுக்கெல்லாம் ஆள் இருக்கு. ஒழுங்கா சாப்பிட்டதுக்கு காசு கொடுங்க” என்றான் கறாராக.

“என்னாண்ட காசு இல்ல. எங்க போவேன்?” என்று சோர்வாக இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவளை நக்கலாக பார்த்துக் கொண்டே, சரண் தன் கார்டை எடுத்து வைத்தான்.

“இதுல பே பண்ணிக்கோங்க” என்று சொல்லிக் கொண்டே வாலட்டை பேண்ட் பாக்கெட்டில் சொருகி கொண்டே எழுந்து கொள்ள,

“ரொம்ப தாங்க்ஸ் பாஸ். இனி ஓசில மங்கலம் பாட மாட்டேன்” என்று சொல்லிக் கொண்டே தலைக்கு மேல் கையை தூக்கி பெரிய கும்பிடு ஒன்றை போட்டவள், சரண் செல்ல,

‘எப்பா காசு கொடுக்க எவ்ளோ அலுப்பு பண்றார்? தின்ன சோத்த எல்லாம் வெளிய எடுத்துடுவார் போல?’ என்று முனங்கி கொண்டே பின்னால் ஓடி வந்தாள்.

கார்டை வாங்கி கொண்டு சரண் காருக்கு வர,

விஷ்ணுவும் வேகமாக வந்து காரை திறந்து விட்டாள்.

“நோஞ்சான் மாதிரி இருந்துட்டு எவ்வளவு சாப்பிடுற நீ?” என்று சரண் அவளை பார்த்து சொல்லிக் கொண்டே காருக்குள் ஏறிட,

“அதான் நோவடிச்சிடீங்களே” என்று முகத்தை தொங்க போட்டுக் கொண்டே அவன் அருகே அமர்ந்தாள்.

“சும்மா ஃபன் தானே டா” என்று சொல்லிக் கொண்டே சரண் விஷ்ணு தலையில் கை வைத்து ஆட்டி விட,

“ஃபன் பண்ணீங்களா? என்ன பஞ்சர் ஆக்குனீங்க” என்று நொந்து கொண்டே விஷ்ணு காரை ஸ்டார்ட் செய்ய,

அவள் முக பாவனையில் வெடித்து சிரித்தவன்,

“கோச்சிட்டியா?” என்று கேட்டுக் கொண்டே நேராக அமர்ந்திருந்தவன், கையை மட்டும் நீட்டி அவள் இடுப்பை கிள்ளி கிச்சு கிச்சு மூட்டிட,

ஆஃஹ் என்று துள்ளியவள் “பாஸ் என்ன பண்றீங்க?” என்று நெளிய,

சரணுக்கு அவன் கோளாறு கோட்டானின் இந்த கூச்சம் ஆர்வத்தை தூண்டியது.

“அட கூச்சமெல்லாம் இருக்கு” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் விஷ்ணு இடுப்பில் விரலால் நண்டு பிடிக்க,

ஆஃஹ் என்று அவஸ்தையாக நெளிந்தவள், “இடுப்புல கை வைச்சா எல்லா மனுஷனுக்கு கூச்சம் இருக்கும் பாஸ்” என்றாள் சிரித்துக் கொண்டே.

“அப்படியா?” என்று ஆச்சரியமாக கேட்டவன் “அது மனுஷங்களுக்கு. நீ தான் ஏலியன் குட்டுயாச்சே” என்று கலாய்க்க,

ஹாங் என்று அவனை விழி சுருக்கி முறைத்தவள்,

“ஆமா நான் ஏலியன் குட்டி தான். நீங்க மனுஷன் தானே” என்று கேட்டுக் கொண்டே இருக்கையில் இருந்து தாவி சரண் இடையை அவள் கிள்ளிட,

எதிர்பாரா தீண்டலில் ஹே என்று அலறியவனை விட்டாளில்லை.

“அட நீங்க கூட கூச்சப்படுறீங்க” என்று சொல்லிக் கொண்டே மேலும் இரண்டு கைகளாலும் கிச்சு கிச்சு மூட்டி சிரிப்பவள் தீண்டல்களை விட அவள் நெருக்கமும், மூச்சு காற்றும் தான் அவனை நெழிய வைத்தது.

எலி குட்டி சைசில் இருக்கும் அந்த பொடியனின் செயல்கள் பிடித்து போனது.

யாரையும் இந்த அளவுக்கு அவன் உரிமை கொடுத்து தன்னை நெருங்க விட்டது இல்லை.

இவன் நெருக்கம் முதல்முறை இதயத்தில் பட்டாம்பூச்சியை பறக்கவிட்ட உணர்வு.

சிறு பிள்ளையாக இந்த கோளாறு கோட்டானுடன் இனிமையான நிமிடங்களை கழிக்க ஆசை கொண்டான்.

“டேய்… போதும் விடு” என்று சொல்லி கொண்டே சரண், விஷ்ணு கையை பிடிக்க முயல,

“நான் சொன்னப்ப நீங்க கேட்டீங்களா?” என்று தர்க்கம் செய்து கொண்டே அவன் கைகளுக்குள் தன் கைகள் சிக்காமல் ஆட்டம் காட்டி விளையாடியவள், இருவரின் தள்ளி முள்ளில் அவன் மேலேயே மென் அங்கம் உரச பொத்தென்று விழுந்தாள்.

விழுந்த வேகத்தில் சட்டென்று எழுந்து கொண்டவள் தன் இருக்கையில் அமர்ந்து முன்னால் பார்க்கிங்கில் நின்றிருந்த வண்டிகள் மீது விழியை பதித்து இருந்தாலும், இதயத்திலோ மெல்லிய பட படப்பு.

இதே நிலை தான் சரணுக்கும்.

நட்சத்திரா விரும்பும் பையன் என்ற கண்ணோட்டத்தில் தான் இத்தனை நாட்கள் விஷ்ணுவை பார்க்கிறான்.

அதனாலோ என்னவோ சந்தேகத்திற்கு இடமின்றி அவளை ஆண் வர்க்கத்தில் சேர்த்து வைத்திருந்தான்.

தன் வீட்டு பெண் வழி தவறி கயவன் கையில் சிக்கி விட கூடாது என்று தான் முதல் நாள் காரை வைத்து இடிக்க பார்த்தது.

ஆனால் அவனோடு பழகும் சந்தர்ப்பம் ஏற்பட்டு விட,

‘கொஞ்சம் நல்ல பையன் தான்’ என்று சான்றிதழ் கொடுத்தவனுக்கு இந்த கோளாறு கோட்டான், பொடி பையனை பிடித்து போகவே உரிமை கொடுத்து அருகே சேர்த்தும் கொண்டான்.

பெண் வாசம் அறியா உடல், அவள் ஸ்பரிசத்தில் சிலிர்த்து போக,

மென் அங்கங்களை உணர்ந்த வன்மைகாரன் மெனியோ புதுவித மோகத்தில் சித்தம் இழந்து கிறங்கி தான் போனது.

தலையை திருப்பி அவன் இதயத்தை குடையும் சில்வண்டை பார்த்தான்.

அவளும் பதட்டமாக தான் இருக்கிறாள் என்பதை நெற்றி ஓரத்தில் பூத்திருந்த வியர்வை துளிகள் பறை சாற்றிட,

“கிளம்பலாம்” என்று மட்டும் சொன்னவன் முன்னால் திரும்பி கொண்டான்.

“ச… சரி பாஸ்” என்று திணறியவள் விரல்கள் நடுங்க காரை ஸ்டார்ட் செய்து, தன்னை இயல்பாக்க முயன்ற படியே ஓட்டிட,

“இங்கே முன் கண்ணாடி வழியே படபடக்கும் பொடியன் விழிகளை தன்னையறியாது ரசித்து கொண்டு வந்தவன் மனமோ,

“என்ன ஒரு ஆம்பள தொட்டா கூட மனசு அலைபாயுது. அந்த அளவுக்கா காஞ்சிப் போய் இருக்கேன்?” என்று தான் தன்னை தானே திட்டிக் கொண்டான்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
வணக்கம் நட்புக்களே !

ரொம்பவே கம்மியான வாசகர்கள் தான் கண்ணம்மாவுக்கு இருக்கீங்க . கதை வாசிக்கிறவங்க , கதை எப்படி போகுதுனு சொன்னா , கொஞ்சம் ஹாப்பி யா நானும் அத்தியாயம் போடுவேன் . உங்க கருத்துக்களை கருத்து திரியில மறக்காம பதிவு பண்ணுங்க . நிறைய திட்ட தோணுனா கூட கூச்சப்படமா திட்டுங்க . ..


 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் : 12


விஷ்ணுவின் விழிகள் இரண்டும் சாலையில் கவனமாக இருக்க, அவள் அருகே அமர்ந்திருந்தவன் விழிகளோ இஞ்ச் பை இஞ்ச்சாக அவளை தான் ஆராய்ந்து கொண்டே வந்தது.


முன் நெற்றியில் புரண்ட சிகையை அடிக்கடி கைகளால் கோதிக் கொண்டே ஒற்றை கையால் கார் ஓட்டும் அழகே தனி தான்.


நல்ல சிவந்த நிறம், குட்டி நெற்றி அதில் மெல்லிய கீற்று போல் சந்தனப் பொட்டு, அடர்த்தியாக வளர்ந்திருந்த புருவங்கள், துறு துறுவென அலைபாயும் விழிகள், குட்டி மூக்கு, சிவந்த அதரங்கள்


‘எந்த கேட்ட பழக்கமும் இல்ல போல, பிங்க் கலர்ல நல்லா தான் மெயின்டெய்ன் பண்றான்’ என்று அவள் செவ்விதழ்களுக்கு கமண்டரி கொடுத்து கொண்டது சரண் மனம்.


இரண்டு காதுகளிலும் வெள்ளை கல் பதித்த குட்டி கடுக்கன். சூரிய ஒளியில் அது ஒளிரும் போது தான் காதில் கிடப்பதே தெரிகிறது.


ஸ்டியரிங்கை பிடித்திருக்கும் இடது கையில் கருப்பு நிற கயிறு. அதில் ஒரு பக்கம் பிள்ளையார், மறுபக்கம் முருகர் என ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தது டாலர் ஒன்று.


மஞ்சள் நிறத்தில் செக்ட் ஷர்ட். மேல் பட்டன் மட்டும் திறந்து விட்டிருக்க, சற்று முன் அவன் உணர்ந்த மென் அங்கங்கள் நோக்கி விழிகள் கீழிறங்கிய சமயம்,


அவன் பார்வையை உணர்ந்தாளோ என்னவோ!


அவன் பக்கம் திரும்பிய விஷ்ணுவோ “என்ன பாஸ்?” என்று அமைதியாக தான் கேட்டாள்.


ஆனால் ஸ்ருதிஹாசனையும், பிக்பாஸ் ஆயிஷாவையும் மிக்ஸ் பண்ணியது போல இருந்த அவள் குரலில் மென்மையும் இல்லை, இனிமையும் இல்லை. கனீரென ஒலித்த அந்த குரலிலேயே திடுகிட்டு போனவன், பித்து நிலையில் அலைப்பாய்ந்த விழிகளை திருப்பிக் கொண்டு, ‘ஒண்ணுமில்ல’ என்று தலையை ஆட்டி நேராக அமர்ந்து கொண்டான்.


அவனை புருவம் சுருக்கி பார்த்து கொண்டே விஷ்ணுவும் தன் பணியில் கவனமாக இருக்க,


மீண்டும் சரண் விழிகள் அவளை தான் குழப்பமாக பார்த்தது.


‘க்ளீன் சேவ் செய்திருந்தா கூட மீசை, தாடி ரோமங்களின் தடையமாவது இருக்கும். அப்படி கூட எதுவும் அவன் முகத்தில இல்லையே! ஏன் மீசை முளைக்கல?’ என்ற கேள்வி அவனுக்குள் எழ,


அந்த குழப்பத்திலேயே ஸ்டூடியோ வந்து சேர்ந்தான்.


நேரடியாக விஷ்ணுவிடம் கேட்க சற்று தடுமாற்றம் தான் அவனுக்கு.


எதாவது ஹார்மோன் குறைபாடோ? மாற்றமோ இருந்து. இதை கேட்டு அவனை சங்கடப்படுத்தி விடக் கூடாது என்று தான் அமைதியாக வந்தானே தவிர,


இப்போது கூட அவளை பெண்ணாக அவன் மனம் அனுமானிக்கவில்லை.


‘நட்சத்திரா காதலிக்கும் பையன்’ என்று ஆழ் மனதில் பதிந்து போனது. நட்சத்திரா பையனை அல்ல ஒரு பெண்ணை காதலனாக வைத்து சுற்றுவாள் என்று அவன் என்ன கனவா கண்டான்?


சரண் ஸ்டுடியோ வந்ததும் அவனுக்காகாவே வாசலில் காத்துக் கிடந்த வேலவன், ஓடி வந்தான்.


“வாங்க சார்” என்று பேருக்கு சரணை வரவேற்றாலும், பார்வை எல்லாம் விஷ்ணு மீது தான் இருந்தது.


சரண் உள்ளே சென்று விட,


விஷ்ணுவிடம் ஓடி வந்தவன்,


“தம்பி தலை சுத்துதா?” என்று சம்மந்தம் இல்லாது கேட்க,


வேலவனை புரியா பார்வை பார்த்து வைத்த விஷ்ணுவோ “இல்ல’ என்று தலையாட்டினாள்.


“மயக்கம் வர்ற மாதிரி? வாந்தி வர்ற மாதிரி ஏதாவது இருக்கா?” என்று மீண்டும் அவன் கேட்க,


“இன்னாத்துக்கு இதெல்லாம் கேட்டுனு இருக்கீங்க?” என்று தான் அவனிடம் பதில் கேள்வி கேட்டாள்.


“எல்லாம் ஒரு காரணமா தான். இன்கேஸ் உனக்கு அந்த மாதிரி ஏதாவது ஃபீல் ஆச்சீனா உடனே என்கிட்ட சொல்லணும். என்கிட்ட மட்டும் தான் சொல்லணும்” என்று சொல்லிக் கொண்டே, யோசனையாக அவளை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே வேலவன் செல்ல,


“இந்த மனுஷன் எதுக்கு லூசு போல பினாத்திட்டு போறாரு?” என்று முணுமுணுத்து கொண்டே,


“இன்னா எங்மேன் சாப்பிட்டீங்களா?”என்று கேட்டில் நின்றிருந்த செக்யூரிட்டியிடம் வம்பளக்க போய் விட்டாள்.


இங்கே உள்ளே வந்த வேலவன் அடுத்ததாக தேடி வந்தது சரணை தான்.


“சார்… ஸ்லோ பாய்சன் ஏதாவது கலந்து கொடுத்துடீங்களா? ஒண்ணுமே ஆகல சொல்றான்” என்று தன் சந்தேகத்தை சரணிடமே கேட்டு விட,


புருவம் சுருக்கி அவனை முறைத்த சரண்,


“உனக்கு தான் பாய்சன் வைக்க போறேன். போய் வேலைய பாருடா” என்று விரட்ட,


இதுவும் என் வேலை தானே. உங்களை எந்த பிரச்சனையும் நெருங்க நான் அனுமதிக்க மாட்டேன் என்று உங்கள் விசுவாசி நான் என்ற ரேஞ்சில் படம் ஓட்டிக்கு கொண்டிருந்தவனை கடுப்பாக பார்த்த சரண்,


“அன்னைக்கு இருந்த மைண்ட் செட்ல லைட்டா இடிச்சிட்டேன். அதையே பிடிச்சு தொங்காத” என்றான்.


“நம்ப முடியலையே” என்று வேலவன் அவனை நம்பிக்கையில்லா பார்வை பார்க்க,


“அதுக்கு நான் எதுவும் பண்ண முடியாது” என்று சொன்ன சரண்,


ரெக்கார்டிங் ரூம் நீக்கி சென்றவன், அறை வாசலில் நின்று கொண்டே யோசனையாக வேலவனை பார்த்தான்.


வேலவனோ ‘மயங்கி விழுந்தா அவனை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணலாமா? இல்ல ஸ்டுடியோகுள்ளேயே குழி தோண்டி புதைச்சிடுவோமா?’ என்று திட்டமிட்டு கொண்டிருந்த சமயம்,


“வேலு…” என்று அவனை அழைத்தான் சரண்.


“சார்” என்று கேட்டுக் கொண்டே அவன் அருகே வேலவனும் ஓடி வர,


குறு குறுவென அவனையே சரண் பார்த்து வைக்க,


“என்னாச்சி சார்? ஏன் என்னை அப்படி பார்க்கிறீங்க?” என்று கேட்டுக் கொண்டே, ‘டிரஸ் ஏதும் சரியா இல்லையா?’ என்று சந்தேகமாக தன்னை ஒருமுறை குனிந்து பார்த்து கொண்டிருந்தவனிடம்,


“என்னை ஹக் பண்ணு” என்று சரண் சொல்ல,


“எதெய்” என்று தூக்கிவாரி போட்டது வேலவனுக்கு.


“என்ன சார் சொன்னீங்க?” என்று அவன் கேட்க,


“கட்டிப்பிடி டா” என்று தமிழில் சொன்னேன்.


“நீங்க இங்கிலீஷ்ல சொன்னதே புரியுது. ஆனா இப்போ எதுக்கு திடீர்னு” என்று வினோதமாக அவனை பார்த்துக் கொண்டே வேலவன் கேட்டிட,


“கட்டிப்பிடினா ஓவரா கேள்வி கேட்கிற” என்று சொன்ன சரணே அவன் கையை பிடித்து இழுத்து அணைத்து கொள்ள, வேலவன் தான் கூச்சத்தில் நெளிந்தான்.


“ஐயோ சார். எனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை வேற இருக்கு. நான் அந்த மாதிரி பையன் இல்ல” என்று அலறியவனை இருக்கைகளுக்குள் அடக்கி இறுக்கியவன்,


“டேய்… அசையாம நில்லு” என்று சொல்லி கொண்டே கண்களை மூடி வேலவன் அணைப்பையும், விஷ்ணுவின் ஸ்பரிசத்தையும் ஒப்பிட்டு பார்த்தான்.


ஒரு ஆணின் திடம் உணர முடிந்தது.


‘இவன்கிட்ட அந்த பீல் வரல, ஆனா அந்த கோட்டான் மேல வந்து விழுந்த போது வேற மாதிரி இருந்துச்சே’ என்று எண்ணிக் கொண்டே வேலவனை விடுவித்தான்.


வேலவனும், “என்னாச்சி சார் நேத்து நைட்டு வசூல் ராஜா படம் ஏதும் பார்த்தீங்களா? கட்டிப்பிடி வைத்தியம் பண்றீங்க” என்று சந்தேகமாக அவனை பார்க்க,


அமைதியாக மூச்சை வெளியிட்டுக் கொண்ட சரண், அவன் தோளில் கை போட்டுக் கொண்டே, ஜன்னல் வழியே வெளியே செக்கியூரிடியிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்த விஷ்ணுவை பார்த்தான்.


“வேலு… இந்த விஷ்ணுவுக்கு ஏன் மீசை மொளைக்கல?” என்று கேட்க,


சரண் விழி திசையை நோக்கி அவன் விழிகளும் அவள் புறம் திரும்பியது.


“சேவ் பண்ணியிருப்பான் சார்” என்றான் இது ஒரு விஷயமா என்ற தொனியில்.


“கிளீன் சேவ் பண்ணாலும், அந்த இடம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் டா” என்றவன் சந்தேக விழியை ஆராய்ந்த வேலவனோ,


“ எதுக்கு அவனை ஆராய்ச்சி பண்றீங்க?” என்று கேட்டவனை சரண் திரும்பி முறைக்க,


“சரி சரி… எனக்கு தெரிஞ்சி அவன் கொரியன் ட்ராமா ஃபேன் ஆஹ் இருப்பானு தோணுது” என்றவனை சரண் அதுக்கும் இதுக்கும் என்ன டா சம்பந்தம் என்பது போல் பார்த்தது வைக்க,


“இல்ல சார். இப்போ உள்ள பொண்ணுங்க மட்டுமல்ல, பசங்கள்லையும் சில கோளாறுகள் கொரியன் மோகத்துல ஆம்பளையா? பொம்பளையானு சந்தேகப்படுற அளவுக்கு தான் சுத்துது. ஒரு மேன்லினஸ்சே இல்லை” என்று சொன்னவனை சரண் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது போல் பார்த்து வைக்க,


“என்ன நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டுக் கொண்டே,


“விஷ்ணு…” என்று கத்தி அழைத்தான்.


“இன்னா சார்?” என்று வெளியே இருந்தே கத்தி குரல் கொடுத்தவள், ஜன்னல் அருகே ஓடி வந்தாள்.


“நீ இந்த கொரியன் சீரியல்லாம் பார்ப்பியா?” என்று வேலவன் கேட்டிட,


“ஓ பாப்பேனே. நீங்களும் பாப்பீங்களா? இந்த வாரம் வீக் எண்ட் ஒரு சீரிஸ் எடுத்து வச்சிருக்கேன். வாரீங்களா சேர்ந்து பாக்கலாம்” என்றாள் அவள் குஷியாக.


“நான் சொல்லல” என்று சரணிடம் மெதுவாக சொன்ன வேலவன்,


“இந்த வாரம் நான் பிசி அடுத்த வாரம் பார்க்கலாம்” என்றவன், ஜன்னல் அருகே வந்து நின்று,


“இப்போ வாந்தி, மயக்கம் வருதா?” என்று சரணுக்கு கேட்காத அளவுக்கு மெதுவாக கேட்க,


“நான் என்ன புள்ளத்தாச்சியா வாந்தி மயக்கம் வர்ற?” என்று எதிர் கேள்வி கேட்டுக் கொண்டே சென்றவளை இருவரும் இருவேறு உணர்வில் தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


வேலவன், “செத்தா இவனை எங்க புதைக்கலாம்?” என்ற யோசனையில் பார்த்துக் கொண்டிருக்க,


சரணோ “இவன் ஏதோ வித்தியாசமா இருக்க போல எனக்கு ஏன் தோணுது?” என்று தான் விஷ்ணுவை ஆராய்ந்து கொண்டிருந்தான்.


விஷ்ணுவை பார்த்துக் கொண்டே திரும்பிய வேலவன், சரண் இன்னமும் விஷ்ணுவையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து,


‘ஐயோ இவர் ஏன் இன்னமும் நின்னு அவனை பார்த்துட்டு இருக்காரா? இது சரியில்லையே அடுத்த பிளான் ஏதும் பண்ண ஆரம்பிச்சிட்டாரா?” என்று பதறிய படியே அவன் அருகே ஓடி வந்தான்.


“சார் அவனையே ஏன் பார்த்துட்டு இருக்கீங்க? வாங்க உள்ள போகலாம்” என்று சரணை தள்ளிக் கொண்டே ரெக்கார்டிங் ரூம் உள்ளே நுழைந்திருந்தான் வேலவன்.


அன்றைய நாள் அப்படியே கழிய, இரவு காரில் சரணும், விஷ்ணுவும் தான் எப்போதும் போல் தனியாக வந்து கொண்டிருந்தார்கள்.


ஒரு இடத்தில் வண்டியை நிறுத்த சொன்ன சரண்,


எதிரே இருந்த கடையை காட்டி, “போய் சரக்கு வாங்கிட்டு வா” என்று விஷ்ணுவிடம் சொல்ல,


“ஏதேய் நானா?” என்று தான் பதறினாள் அவள்.


“பின்ன நானா? என்னை யாராவது இங்க பார்த்தா, அடுத்த நாள் ஹெட் நியூஸ் நான் தான். போய் வாங்கிட்டு வா. **** பிராண்ட் விஸ்கி வாங்கிட்டு வா” என்று பணமும் கொடுத்து விட,


“பாஸ் எனக்கு இதெல்லாம் வாங்கி பழக்கம் இல்லையே” என்று நெளிந்தவளை நம்பாத பார்வை பார்த்தவன்,


“அய்யோ உத்தமரு… நடிக்காம போ டா உனக்கும் ஏதாவது வாங்கிக்க, காசு கேட்க மாட்டேன்” என்று சொன்னவனை பார்த்து தலையில் அடித்து கொண்டே இறங்கி சென்றாள் விஷ்ணு.



“ரொம்ப தான் அலட்டிகிறான்” என்று முணு முணுத்துக் கொண்ட சரணும் செல்லும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.[/ispoiler]
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 13



“இந்தாங்க பிடிங்க” என்று அவன் சொன்னது போலவே வாங்கி வந்து அவன் கையில் கொடுக்க,


“சோடா எங்க டா?” என்று தான் கேட்டான் சரண்.


“நீங்க அது சொல்லவே இல்லையே” என்ற சில்வண்டை சலிப்பாக பார்த்தவன்,


“அது கூட சொல்லனுமா உனக்கு? நீ வேணும்னு தான் வாங்காம வந்து இருப்ப. ராவா குடிச்சு நான் செத்துட்டா நீ நட்சுவோட சந்தோசமா இருக்கலாம்னு நினைச்சு இருப்ப” என்றவனை புரியா பார்வை பார்த்து வைத்தவள்,


“நான் எதுக்கு அப்படி நினைக்க போறேன்? இருங்க போய் வாங்கிட்டு வரேன்” என்று இறங்கி சென்றாள்.


“சினாக்ஸ்ம் சேர்த்து வாங்கிட்டு வா” என்று சரண் கத்த,


“என்ன வாங்கணும்” என்று கேட்டாள்.


“உனக்கு பிடிச்சது வாங்கிக்கோ” என்றதும்,


அவளும், ஆ… ஆ… என்று கையசைத்து கொண்டே சென்றவள் சில நிமிடத்தில் அதையும் வாங்கி வந்து கொடுத்தாள்.


“ஏன் இவ்வளவு நேரம்? தனியா குடிச்சியா? சேர்ந்து குடிக்கலாம் சொன்னேன்ல” என்றவனை முறைத்தவள்,


“கூட்டமா இருக்கு பாஸ்” என்றாள்.


“நம்பலாமா? எங்க ஊதி காட்டு?” என்று செக்கிங் இன்ஸ்பெக்டர் போல் அவன் சோதனை நடத்த,


‘அய்யோ தண்ணி போட முன்னாடியே இப்படி அலும்பு பண்றாரே! சீக்கிரம் வீட்ல விட்டு போயிடனும்’ என்று எண்ணிக் கொண்டே,


அவன் முகத்திற்கு நேராக இதழ்களை குவித்து ஊதிட,


நெற்றி மோதிய அவள் உஷ்ண மூச்சு காற்று அவன் மேனியை சூடேற்ற, இமைகள் மூடி அதை உள்வாங்கி கொண்டவன் சற்று தடுமாறி தான் போனான்.


மூடிய அவன் இமைகளுக்குள்ளும் குவிந்த இதழ்கள் மனக்கண்ணில் வந்து போக, சட்டென்று அவளை பிடித்து தள்ளி விட்டவன்,


“சரி சரி வண்டிய எடு” என்றான் அவசரமாக.


அவன் தள்ளியதில் ஜன்னல் கண்ணாடியில் பின்தலை இடிக்க விழுந்தவள், மண்டையை தடவிக் கொண்டே காரை ஸ்டார்ட் செய்தாள்.


“வீட்டுக்கு தன பாஸ்?” என்று உறுதிபடுத்த அவள் கேட்க,


“ஏன் இப்போ கோபமா இருக்கிறவங்க, பாட்டிலும், கையுமா என்னை பார்த்து மொத்தமா வெறுக்கவா?” என்று தான் கேட்டான்.


“அப்போ நீங்க தண்ணி அடிக்கிறது வீட்ல யாருக்கும் தெரியாதா?” என்று விஷ்ணு கேட்க,


இல்லை என்று தலையை மட்டும் ஆட்டினான்.


“அப்புறம் ஏன் இதை குடிக்கிறீங்க?”


“நான் ஒன்னும் மொடா குடிகாரன் இல்ல. எப்பவாவது மனசு கஷ்டமா இருந்தா குடிக்கிறது தான்”


“இப்போ என்ன கஷ்டம் உங்களுக்கு?”


“உன்னால தான்” என்று அவனும் பட்டென்று சொல்லி விட,


“நான் என்ன பண்ணேன்?” என்று தான் அதிர்ந்து கேட்டாள் விஷ்ணு.


“இப்போ எதுவும் சொல்ற நிலைமையில நான் இல்ல” என்றவன் போகும் இடத்திற்கு வழி சொல்ல,


“பாஸ் அந்த ரூட்ல போன கடல்ல தான் போய் முட்டனும்” என்று சொன்னவள் பேச்சுக்கு பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்து கொண்டான் சரண்.


கடுப்பாக அவனை ஒருமுறை திரும்பி பார்த்தவள், ‘அங்கேயே போய் முட்டுங்க’ என்று முணுமுணுத்து கொண்டே கடற்கரையில் வந்து காரை நிறுத்தினாள்.


சில்லென்ற காற்று தேகத்தின் அனலை மட்டுமல்ல மனதின் வெம்மையையும் சற்று தனித்திட,


காரிலிருந்து இறங்கி நின்ற சரணோ, “நீயும் வா” என்று அவளை அழைக்க,


விஷ்ணுவும் வேண்டா வெறுப்பாக வாங்கி வந்த கருமத்தையும் தூக்கி கொண்டு இறங்கினாள்.


“என்ன பார்க்கிற ஹ்ம்ம்…” என்று அவன் கண்ணை காட்டிட,


“ச்சீ ச்சீ என்னாலலாம் முடியாது” என்று காரின் பெனெண்டில் அவற்றை வைத்து விட்டு ஒதுங்கி நின்று கொண்டாள்.


“எவ்வளவு நேரத்துக்கு நல்லவனா நடிக்கிறனு நானும் பார்க்கிறேன்?” என்றவன் அவளுக்கும் ஒரு கிளாஸ் ஊற்றி வைத்து விட்டு, “வா… தனியா குடிச்சா வயிறு வலிக்கும்.” என்று மீண்டும் அழைக்க,


“இத குடிச்சா என் வயிறு அவிஞ்சி போகும்” என்று கடல் அலைகளுடன் விளையாட சென்று விட்டாள்.


“வேலு இருந்தா நல்லா கம்பெனி கொடுத்து இருப்பான். நீ ஒன்னுக்கும் உதவ மாட்ட” என்று அவன் கத்தியது காதில் கேட்டாலும்,


வில்லாங்கத்தை விலை கொடுத்து வாங்க விருப்பம் இல்லை.


பாதி பாட்டில் காலி செய்த பிறகே சினாக்ஸ் என்று அவள் வாங்கி வந்ததை பிரித்தான்.


பிரித்த அடுத்த நொடி,


“டேய்… என்ன டா வாங்கிட்டு வந்திருக்க?” என்று கத்த,


“அய்யய்ய ரோதனை பண்றார்” என்று புலம்பிக் கொண்டே ஓடி வந்தாள்.


“என்ன பாஸ்?” என்று சலிப்பாக வந்து கேட்டவளை முறைத்தவன்,


“என்னது இது?” என்று விரித்து வைத்திருந்த திண் பண்டங்களை காட்டி கேட்க,


“மிச்சரும், பூந்தியும்” என்று பதில் சொன்னவளை, கொலைகாண்டில் அவன் முறைக்கவும்,


“நீங்க தான எனக்கு பிடிச்சது வாங்கிக்க சொன்னீங்க. இது ரெண்டையும் மிக்ஸ் பண்ணி சாப்பிடுங்க செமையா இருக்கும்” என்றாள்.


“நல்லா வந்து சேர்ந்துருக்கு பாரு” என்று அவளை திட்டியவன் “நீயே தின்னு” என்று விட்டு பாட்டிலை காலி செய்ய ஆரம்பித்து விட்டான்.


‘டாபர் நாய்க்கு தெரியுமா தட்டு சோறு அருமை’ என்று அவள் முணுமுணுத்து கொண்டது அவன் காதிலும் விழுந்து தொலைக்க,


“இப்போ என்ன சொன்ன?” என்று தான் விழிகளை சுருக்கி கேட்டான் சரண்.


“ஹி ஹி ஒண்ணுமில்ல பாஸ். நீங்க ஒரு சிறந்த குடிமகன்னு சொன்னேன்” என்று சமாளித்தவள், மிச்சர், பூந்தி இரண்டையும் மிக்ஸ் செய்ய ஆரம்பித்து விட்டாள்.


“உங்கூட கொஞ்சம் ஜோவியல பழகுறதால என்னை ஜீப்பா நினைச்சிட்டல்ல நீ” என்று அவன் பாதி போதையில் பிதற்ற,


“அப்படி எல்லாம் இல்ல பாஸ்” என்றாள் ஒரே கவரில் மிச்சரையும், பூந்தியையும் குலுக்கி மிக்ஸ் செய்து கொண்டே.


இத்தனை வருடம் நேசம் வைத்த பெண்ணுக்கு தன் மீது விருப்பம் இல்லை. தன்னை நேசித்த உறவை இன்று அவன் உதாசீன படுத்தி விட்டு வந்திருந்தான். எல்லாம் யாரால்?


எதிரே கார் மேல் ஏறி அமர்ந்து எந்த கவலையும் இல்லாமல் மிக்ஸர் சாப்பிட்டு கொண்டிருக்கும் கோளாறு கோட்டானால்.


அவனை பார்க்க பார்க்க மனம் உலையாக கொதிக்க ஆரம்பிக்க, உள்ளே சென்ற பானமோ அவன் கொதிநிலையை தணிக்காது அதிகமாக்க தான் செய்தது.


“எந்த கவலையும் இல்லல உனக்கு” என்று வயித்தெரிச்சலில் சரண் குளறலாக கேட்க,


‘என்ன வாய்ஸ் டோன் மாறுது’ என்று தின்பதில் கவனமாக இருந்தவள் அப்போது தான் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.


கையில் இருந்த பாட்டில் முற்றிலும் காலி.


ஆள், கண்கள் சிவந்து உடல் வியர்த்து நின்றிருந்தான்.


‘ஊரே ஏசி போட்ட போல இருக்கும் போது, பனி காத்துல இவர் மட்டும் ஏன் வியர்த்து போய் நிற்கிறார்?’ என்று எண்ணிக் கொண்டே,


“எதுக்கு கவலை படனும்?” என்று தான் கேட்டாள் விஷ்ணு.


“அதானே! உனக்கு என்ன கவலை? உன்னால என் நிம்மதி தான் போச்சு. நான் தான் கவலை படனும்” என்று விரக்தியில் உளறியவனை விழி சுருக்கி புரியா பார்வை பார்த்து வைத்தாள் விஷ்ணு.


“நான் என்ன பண்ணேன்?” என்று கேட்டவள் சட்டை காலரை எட்டி பிடித்து கீழே இழுத்தவன்,


“அப்படி என்கிட்ட இல்லாதது என்ன உன்கிட்ட இருக்குனு நட்சு உன் பின்னால சுத்துறா?” என்று கோபமாக கேட்டு விட,


தலையை சொரிந்து கொண்டே குழப்பமாக தான் அவனை பார்த்தாள்.


அவளை தோளோடு அணைத்து பிடித்தவன் இருவரின் உயரத்தையும் ஒப்பிட்டு,


“என்னை விட எவ்வளவு குள்ளமா இருக்க, உன்னை லவ் பண்றா என்னை ஏன் பண்ணல?” என்று கேட்டுக் கொண்டே அவள் கையை பிடித்து இழுத்து தன் கரம் அருகே வைத்து,


“பாரு உன்ன விட நான் தான் கலரா இருக்கேன். உன்ன விட நல்ல பொசிசன்ல இருக்கேன். நிறைய சம்பாதிக்கிறேன். பேர் புகழ்னு நல்லா தானே இருக்கேன். இத விட ஒரு பொண்ணுக்கு என்ன டா வேணும்? அவ ஏன் டா என்னை விட்டு உன் பின்னாடி வர்றா? என்று இயலாமையில் பிதற்றியவனை விழியாகற்றாது பார்த்துக் கொண்டிருந்தாள் பாவையவள்.


“உன்மேல அவ்வளவு கோபம் இருக்கு. அன்னைக்கு கார் ஏத்தி மொத்தமா தூக்கிடலாம்னு தான் நினைச்சேன். ஆனா மனசு கேட்கல. உன் காதலுக்காக இன்னைக்கு என் குடும்பத்துக்கு முன்னாடி நான் கெட்டவனா நிற்கிறேன். என் வீட்ல எல்லாரும் என்மேல எவ்வளவு பாசமா இருப்பாங்க தெரியுமா? இன்னைக்கு சாப்பாடு கூட அனுப்பல. எல்லாம் யாராலா? உன்னால. எனக்கு வர்ற கோபத்துக்கு இப்பவே உன்ன கடல்ல முக்கி சாகடிக்க தோணுது” என்று சொன்னதோடு நில்லாமல்,


அவள் அவதானிக்கும் முன்னமே அவளை தோளில் தூக்கி போட்டவன், கடலை நோக்கி செல்ல,


“அய்யோ! பாஸ் என்ன பண்றீங்க? என்னை விடுங்க” என்று நிமிர்ந்து நின்று துள்ளியவளை பாலன்ஸ் பண்ண முடியாது அவளோடு மணலில் விழுந்தான் சரண்.


“ஏய்… உன்ன விட மாட்டேன் டா. வலிக்குது டா. நான் இங்க ஸ்டிரகில்ல இருக்கும் போது நீ மட்டும் சந்தோசமா இருக்க?” என்று கீழே மணலில் கிடந்து புலம்பிக் கொண்டிருந்தவன், மேலே விழுந்து கிடந்தவள் கோபம் எல்லாம் நட்சத்திரா மீது தான்.


‘அந்த லூசால நல்லா இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே. என்னை என்ன லெசிப்பியான்னு நினைச்சிட்டாரா? அவளை போய் லவ் பண்றேன் சொல்றார். எல்லாம் அந்த மரகழண்ட நட்டால வந்தது’ என்று நட்சத்திராவை திட்டியவள்,


எழுந்து அவனையும் தூக்கி அமர வைத்தாள்.


“பாஸ் நீங்க தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க. நானும் நட்டுவும் லவ்வெல்லாம் பண்ணல” என்றவள் வார்த்தைகளை கேட்க அவன் தயாராக இல்லை.


“இன்னும் என்னை ஏமாத்த நினைக்கிற? உன் திட்டம் எனக்கு நல்லா தெரியும் டா” என்றவனை,


“இன்னா திட்டம் எனக்கே தெரியாம” என்று தான் கேட்டாள் விஷ்ணு.


“கல்யாண மேடையில அத்தனை பேர் முன்னாடி என்னை உட்கார வச்சிட்டு, ரெண்டுப் பேரும் ஓடி போக தானே பிளான் பண்றீங்க. உங்க திட்டம் பலிக்காது டி” என்று எதோ சிதம்பர ரகசியத்தை கண்டுபிடித்த டோனில் அவன் சொல்ல,


“அய்யே… அவளை இழுத்துனு போய் நான் இன்னா பண்றது? அதெல்லாம் ஒரு பிளானும் இல்ல” என்றாள் விஷ்ணு முகத்தை சுழித்துக் கொண்டே.


“பொய் சொல்ற, அப்புறம் எதுக்கு டா என்கிட்ட வந்து வேலைக்கு சேர்ந்த?” என்று குறுக்கு விசாரணை நடத்தியவனை தலையில் அடித்துக் கொண்டு பார்த்தவள்,


“வீட்ல அம்மா தொல்ல தாங்கல, எனக்கு பணமும் வேணும் அதான் உங்களான்ட வேலைக்கு வந்தேன். என் அம்மாவ விட இப்போ உங்க தொல்லை தான் அதிகமா இருக்கு” என்று புலம்பியவளை,


விழிகளை சுருக்கி அவள் முகத்தை உத்து பார்த்துக் கொண்டே, “நான் நம்ப மாட்டேன். ஏமாறவும் மாட்டேன்” என்றவனை சலிப்பாக தான் பார்த்தாள் அவள்.


“நீங்க நம்பினாலும் இல்லைனாலும் இதான் உண்மை. ஒன்னே ஒன்னு மட்டும் சொல்றேன் நல்லா தெளிவா மண்டையில ஏத்திக்கங்க. எனக்கு பொண்ணுங்களை இல்ல பசங்கல தான் பிடிக்கும்” என்றவளை விழி விரித்து அதிர்ந்து பார்த்தவன்,


“என்னது பசங்களை பிடிக்குமா? அதான் என்னை மயக்க பார்க்கிறியா தள்ளி போ டா கருமம் பிடிச்சவனே” என்று அவளை பிடித்து தள்ளி விட,


அவளும் மணலில் வந்து விழுந்தவள்,


“இது வேறயா?” என்று எண்ணிக் கொண்டே,


“எனக்கு என் லிமிட் என்னனு நல்லா தெரியும் பாஸ். உங்களுக்கும், அந்த நட்டுவுக்கும் நடுவுல நான் எப்பவும் வர மாட்டேன். சந்தோசமா போய் கல்யாணம் பண்ணிகங்க. இப்போ எழுந்து வாங்க வீட்டுக்கு போகலாம்” என்று அவனை பிடித்து தூக்க,


“நீ அவ்வளவு நல்லவனா?” என்று தலையை சரித்து ஓர கண்ணால் கேட்டான் சரண்.


“ஆமா ஆமா” என்று சொல்லிக் கொண்டே அவனை கார் பின்னிருக்கையில் தள்ளி விட,


“அய்யோ! இப்போ தானே நல்லவன்னு சொன்னேன் அதுக்குள்ள என்னை மலை மேல இருந்து தள்ளி சாகடிக்க பார்க்கான்” என்று அலறிக் கொண்டே, அவள் கையை பலமாக பிடித்து கொண்டவன், அவளோடு சேர்ந்தே இருக்கையில் விழுந்தான்.


“பாஆஆஆஸ்…” என்று எரிச்சலாக கத்தி கொண்டே அவன் மேல் இருந்து விஷ்ணு எழ முயல,


“செத்தா சேர்ந்து சாகலாம். நான் செத்து உன்னை வாழ விடமாட்டேன் டா” என்று வில்லன் ரேஞ்சில் பேசியவனை பார்த்து சிரிப்பு தான் வந்தது விஷ்ணுவுக்கு.


‘ஆக மனுஷன் கல்யாணம் வேணாம்னு ஓடுறதுக்கு நான் தான் காரணமா?’ என்று எண்ணிக் கொண்டவள், ‘அப்போ நான் தான் ஏதாவது பண்ணியாகணும் என்று சொல்லிக் கொண்டே அவன் மேல் இருந்து எழுந்து முன்னிருக்கையில் வந்து அமர்ந்து, காரை ஸ்டார்ட் செய்ய,


“வீட்டுக்கு போகாதா. இந்த நிலைமையில யாரும் என்னை பார்க்க வேணாம். இங்கயே இருக்கலாம்” என்று தான் குளறலாக சொன்னேன்.


“அவ்வளவு பயம்?” என்று விஷ்ணு நக்கலாக கேட்க,



“மரியாதை டா கோட்டான்” என்று திட்டினான் சரண் கண்களை மூடி கொண்டே.


“இந்நேரத்துல இங்க இருந்தா போலீஸ் பிடிக்கும் பாஸ்” என்றவளிடம்,


“இது ரெஸ்ட்ரிக்டாட் ஏரியா யாரும் வர மாட்டாங்க. போலீஸ் கூட” என்றவனை அல்லலுடன் திரும்பி பார்த்து கொண்டே அந்த இடத்தை சுற்றி பார்வையை சுழல விட்டாள் விஷ்ணு துர்கா.


அவன் சொன்னது போல் ஒரு ஈ காக்கா இல்லை தான். சுற்றி எங்கிலும் கும்மிருட்டு. காரில் அத்தனை லைட்டையும் போட்டு வைத்து விட்டு அவள் காரை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து செல்ல நினைக்க,


“ஏய்… நான் தான் போக வேணாம் சொல்றேன்ல” என்று சொல்லிக் கொண்டே எழுந்து காரை ஆப் செய்து சாவியை காருக்குள் தூக்கி வீசி விட்டு படுத்து கொண்டவனை,


“பாஆஆஆஸ்” என்று உச்சகட்ட கடுப்பில் பார்த்தவள், தன் போனில் டார்ச் ஆன் செய்து காருக்குள் சாவியை தேடிட,


அவள் ஆன் செய்து சாவி தேட குனிந்த அடுத்த நொடி, தன் உயிரை மாய்த்திருந்தது அந்த மொபைல் போன்.


“சார்ஜ் போச்சா. சும்மா இருந்து கேம் விளையாண்டது தப்பா போச்சி. நேரம் பார்த்து போன் கூட காலை வாரி விடுது” என்று சிணுங்கி கொண்டே காருக்குள் இருட்டில் அமர்ந்திருந்தாள்.


பின்னால் கிடந்த சரணோ, ஏய்… விஷ்ணு… என்று அழைக்க,


ஹாஆங் என்று குரல் கொடுத்தாள்.


“ஹக் மீ… ஐ லைக் தட் ஃபீல்” என்று பிதற்றிக் கொண்டு கிடக்க,


“ஏதெய்! கம்முனு இரு யா. நானே கதி கலங்கி போய் உட்கார்ந்து இருக்கேன் ஹக் வேணுமாம்” என்று அரற்றி கொண்டே விட்டால் அழுது விடும் தொனியில் முகமெல்லாம் பயரேகை ஓட அரண்டு போய் அமர்ந்து இருந்தாள்.


“எஸ் ஐ வாண்ட் ஹக். ஒன்லி ஹக். டோண்ட் ஹிஸ் மீ” என்றவனை பல்லை கடித்து கொண்டு திரும்பி பார்த்தவள்,


“பாஸ் எனக்கு இங்க இருக்கவே பயமா இருக்கு. வாங்க போகலாம்” என்று அவன் கையை பிடித்து இழுத்தாள்.


ஹ்ம்ம்… என்று முணங்கள் மட்டும் வந்ததே தவிர, அவன் எழுந்த பாடில்லை.


“குடிகார பயலே போனையாவது குடு டா. யாரையாவது வர சொல்லி வீட்டுக்கு போறேன்” என்று அவள் அழுது கொண்டே கேட்க,


“பேண்ட் பாக்கெட்ல” என்றான்.


“பேண்ட் பாக்கெட்லயா?” என்று தயங்கியவள், இருட்டில் அவனை நோக்கி நீட்டிய கையை பட்டென்று தன் பக்கம் இழுத்து கொண்டு “எடுத்து குடுங்க” என்று கேட்க,


“டிஸ்டர்ப் பண்ணாத நீயே எடுத்துக்க” என்றவன் சீட்டில் கவுந்து படுத்து கொண்டான்.


“எனக்கு இன்னைக்கு நாளே சரி இல்லை போல” என்று புலம்பிய விஷ்ணு, சீட்டில் சாய்ந்து அமர்ந்த நேரம்,


சற்று தொலைவில் ஆள் அரவம் கேட்டது.


“யாரும் வர மாட்டாங்கனு சொன்னீங்க?” என்று தனியாக புலம்பிக் கொண்டே, விழிகளை கூர்மையாக்கி உற்று நோக்கினாள்.


சற்று தொலைவில் டார்ச் லைட் உதவியில் மான்ஸ்டர் உருவில் நாலைந்து தடியன்கள் தள்ளாடிக் கொண்டே வர,


இங்கே மூச்சே நின்று விட்டது துர்காவுக்கு.


“யோவ்… எந்திரியா? எவனோ வரான் யா? எனக்கு பயமா இருக்கு எந்திரி” என்று சரணை போட்டு உழுப்ப,


ஆள் மட்டையாகி பல நாழி ஆகுதே.

 
Status
Not open for further replies.
Top