ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கனவிலே மிதக்கும் விழிகள் - கதை திரி

Status
Not open for further replies.

Anjali

Well-known member
Wonderland writer
இங்கு கதிரின் வீட்டில்...மதுவை கதிரின் பெற்றோர்கள் நன்றாகவே பார்த்துக்கொண்டனர்.ஆனால் அவளால் தான் அவர்களோடு ஒட்ட முடியவில்லை. அவளுக்கு பிடித்து நடந்திருந்த திருமணம் என்றால் அப்படி உணர்ந்திருக்க மாட்டாள்,ஏனோ அவள் மட்டும் அந்நியப்பட்டு போனது போல் உணர்ந்தாள்.

இரவு உறங்கும் நேரத்தை தவிர மற்ற நேரத்தை நெட்டி தள்ள வேண்டியிருந்தது அவளுக்கு. யார் பேசினாலும் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதிலளித்து விட்டு அறைக்கு சென்றுவிட,ஒவ்வொரு நிமிடத்தையும் கடப்பது ஒரு யுகத்தை கடப்பது போல் இருந்தது.

இப்படியே இருந்தால் பைத்தியம் பிடிப்பது உறுதி,அதுவும் இல்லாமல் அறைக்குள்ளேயே மூச்சடைத்த போவது போல் இருக்க,இது அனைத்திலும் இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசிக்க தொடங்கியவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. இதற்கு இங்குள்ளவர்கள் என்ன சொல்வார்களோ என்ற குழப்பத்தில் இருந்தாள் மதுமிதா.

அப்போது அறை கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான் கதிர். மணி இரவு எட்டு மணியை கடந்திருக்க,வந்தவன் நேராக குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

சிறிது நேரத்தில் குளித்துவிட்டு எப்போதும் போல் ஒரு பூந்துவாலை மட்டும் அணிந்துகொண்டு அறைக்குள் நுழைய, அவளோ அவனிடம் பேசிவிடும் வேகத்தில் குளியலறை திறக்கும் நேரத்திற்காக காத்திருந்தாள்.

சட்டென்று அவனை அந்த கோலத்தில் பார்த்துவிட, "அய்யயோ" என்ற அலறலோடு அவனுக்கு முதுகுக்காட்டி நின்றுக்கொள்ள, அவனுமே அவள் அறைக்குள் இருப்பாள் என்பதை மறந்து தான் போனான்.

"சாரி நான் ஏதோ ஒரு நினைப்பில் அப்படியே" என்றவன் அவரமாக தன் உடையை எடுத்துக்கொண்டு மீண்டும் பாத்ரூம்க்குள் நுழைந்து மாற்றிவிட்டு வந்தான்.

அதன்பின் அவளும் அவள் சொல்ல வந்த விஷயத்தை சொல்லாமல் மௌனமாக இருக்க,அதனை களைக்கும் பொருட்டு அவனே பேச்சை தொடங்கினான்.

அவளிடம் ஒரு பேப்பரை நீட்ட,அதனை வாங்கி பார்த்தவள் அவனையே இமைக்காது பார்க்க தொடங்கினாள்.

"அதுவந்து உனக்கு டீச்சிங்ல ரொம்ப ஆர்வம்னு கேள்வி பட்டேன்.அதான் உனக்கு வீட்டில் இருக்க போர் அடிக்கும் என்றவன் அவசரமாக…. உன்னை படி இல்ல வேலைக்கு போனு சொல்லலை. உனக்கு பிடித்தால் மட்டும் தான்,உன்னை கட்டாயப்படுத்தலை" என்றான் எங்கே அவள் தன்னை தவறாக எடுத்து கொள்வாளோ என்று.

ஆனால் அவனின் நினைப்பிற்கு மாறாக,கொஞ்ச கொஞ்சமாக அவளின் மனதில் இடம் பிடித்து கொண்டிருக்கிறான் என்று அவளும் அறியவில்லை அவனுக்கும் புரியவில்லை.

இதை தான் அவளும் சொல்ல நினைத்திருந்தாள்,அதற்குள் அவன் முந்திக்கொண்டான். ஒருவேளை திருமணம் நடக்காது இருந்திருந்தால் இதை தான் படிக்க எண்ணியிருந்தாள்.அதை சொல்லாமலேயே நிறைவேற்றிய கதிரின் மேல் மரியாதை கூடியது அவள் மனதில்.

அவள் அமைதியை கண்டு ஒருவேளை பிடிக்கவில்லையோ என எண்ணியவன், அதற்கு மேல் அவளை கேட்டு கட்டாயப்படுத்த விரும்பாமல்... வா சாப்பிட போகலாம் மணி ஆகிடுச்சு" என்று முன்னே செல்ல…

"ஒரு நிமிஷம்".... என்ற அவளின் காந்த குரலை கேட்டு திரும்பி பார்த்தவனை கண்டு "ரொம்ப தேங்க்ஸ்" என்றாள் மது.

"எனக்கெதுக்கு தேங்க்ஸ், இது என் பொண்டாட்டிக்கு நான் செய்ய வேண்டிய கடமை.தேங்க்ஸ் சொல்லி என்னை வேற்று ஆளாய் மாற்றிடாதே" என வருத்தமாக சொல்ல.

"சாரி... இனிமேல் அப்படி சொல்லமாட்டேன்" என சொன்னவளை பார்த்து

"அந்த லிஸ்டில் சாரி என்ற வார்த்தையையும் சேர்த்துக்கோ"
என்றவன் அழகான ஒரு புன்னகையை சிந்திவிட்டு உணவருந்த சென்றான்.

அன்று கல்லூரிக்கு விடுமுறை என்பதால் அறையில்
படித்துக்கொண்டிருந்தாள் வர்ஷினி.அப்போது அறைக்கதவு தட்டபட,திறந்து பார்த்தவள் முன்பு நின்றுகொண்டிருந்தான் மதியின் தம்பி அதாவது அவனின் சித்தப்பா மகன் மதன்.

இத்தனை நாட்களில் அவன் இவளிடம் பேசியதே இல்லை. ஸ்கூல் படிக்கிறான் என்று மட்டுமே தெரியும்.

அவனுக்கும் வர்ஷினியை தெரியவில்லை... அவள் இந்த வீட்டில் இருந்து செல்லும் போது அவனுக்கு மூன்று வயது. இவளை விட மூன்று வயது சின்னவன், அப்போது நடந்த எதுவும் நினைவில்லை. அதனாலேயே அவனும் இவளிடம் பேச முயலவில்லை.

தன் முன் தயக்கத்துடன் நின்றிருந்த மதனை பார்த்து "என்ன?.." என கேட்க,

அவனும் "அது சின்ன உதவி அண்ணி" என்றான்.

அவன் அண்ணி என்று சொன்னதே மனதுக்கு அவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்தது. உறவு சொல்லி அழைக்க கூட யாரும் இல்லாமல் இருந்தவளுக்கு இந்த அழைப்பு பிடித்து போக,அவளும் புன்னகையுடன் பேசினாள்.

"சொல்லு மதன் என்ன பண்ணனும்' என கேட்க,

"அது நீங்க தான் நம்ம ஸ்கூல் ஃபர்ஸ்டுன்னு சொன்னாங்க...நான் இந்த வருஷம் டென்த் அதான் என்று இழுத்தவன்,எனக்கு மத்ஸ் மட்டும் சொல்லி தரிங்களா" என கேட்டான்.

"அதுக்கு எதுக்கு இவளோ தயக்கம். வா எனக்கும் தனியா படிக்க என்னவோ மாதிரி இருக்கு,
இனிமே இரண்டு பேரும் சேர்ந்தே படிக்கலாம்" என அவனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

அவள் படித்துக்கொண்டிருந்த மேஜையின் அருகில் இன்னொரு நாற்காலியை போட்டு அவனை அமரவைத்து அவனின் சந்தேகத்தை கேட்டறிந்து அதனை அவனுக்கு சொல்லி கொடுத்தாள்.

"அண்ணி நீங்க சூப்பரா சொல்லி தரீங்க,படிக்க ஈஸியாக இருக்கு" என்று அவனும் உற்சாகத்துடன் படிக்க தொடங்கினான்.அவள் கொடுத்த சில கணக்குகளை போட்டு பார்த்தவுடன் இன்னும் அது எளிமையானதாக தோன்றியது அவனுக்கு.

இருவரும் வெகுநேரம் படித்துக்கொண்டிருக்க,சற்று நேரம் கழித்து ஓய்வு என்ற பேரில் ஊர் கதைகளை பேச தொடங்கிவிட்டனர்.

அவனும் இயல்பாக அவளிடம் பள்ளியில் நடந்த நிகழ்வுகளை பற்றி சொல்ல,அவளும் கல்லூரியில் நடந்ததை சொன்னாள்.

சாதாரணமாக அவள் பழகும் அனைவரும் அவளை விட சிறியவர்களே...அவளின் நட்பு வட்டமும் வாண்டுகள் தான் அதனால் சிறிது நேரத்திலேயே அவனோடு வாயாட தொடங்கிவிட்டாள்.

இருவரின் பேச்சும் சிரிப்பு சத்தமும் வெளியே ஹால் வரை கேட்க,அப்போது வேலை முடிந்து உள்ளே நுழைந்த மதியின் செவிகளில் தன்னவளின் சிரிப்பொலியே வரவேற்றது.

இதுநாள் வரை அவள் இருப்பதே தெரியாது..அனாவசியமாக ஒரு வார்த்தை கூட அதிகமாக பேசாதவள் இன்று தன் கூட்டை விட்டு வெளியே வந்திருக்கிறாள். அதுவே அனைவருக்கும் நிம்மதியை தர,சீக்கிரம் பழையபடி தங்களையே சுற்றிவரும் மித்ராவாக மாறிவிடுவாள் என்ற நிம்மதியில் இருந்தனர்.

அறைக்குள் நுழைந்தவன் கதவில் சாய்ந்தவாறு இருவரையும் பார்க்க,அவர்களோ இவனை கண்டுகொள்ளாமல் தங்கள் பேச்சை தொடர்ந்தனர்.

"அது சரி எல்லாரும் ஓகே... ஆனா உங்க அண்ணன் மட்டும் ஏன் இப்படி இருக்கார்.எப்போ பார்த்தாலும் முறைச்சிகிட்டே...வீட்ல கூட போலீஸ் மாதிரி,எதுவா இருந்தாலும் என்னை மிரட்டியே செய்ய வைத்துவிடுறான்" என அவனை திட்டி தீர்க்க,

"என்ன அண்ணி நீங்க எங்க அண்ணாவை பார்த்து அவன் இவன்னு சொல்றீங்க?..." மதனும் சண்டைக்கு வர

"அதெல்லாம் உங்க அண்ணனுக்கு அவ்ளோ சீன் போதும், நீயும் ஓவரா பில்டப் கொடுக்காதே...சரியான டம்மி போலீஸ்.
போலீஸ்ன்னா எப்படியிருக்கனும் தெரியுமா?... காக்க காக்க சூர்யா தெரியுமா அப்படி இருக்கணும். எங்க வீட்ல இருக்குற ஓல்டு லெடிக்கு தெரியாம திருட்டுத்தனமாக பார்த்த படம். அதுல சும்மா எல்லாரையும் போட்டு அடிச்சிட்டு, துப்பாக்கி எடுத்து வில்லன்களை எல்லாம் இப்படி சுட்டு தள்ளுவாரே"….என கையை துப்பாக்கி போல் வைத்துக்கொண்டு திரும்ப,

அங்கு ருத்ரமூர்த்தியாக அவளையே அழுத்தமாக பார்த்துகொண்டு நின்றிருந்தான் மதி.

அவனை அந்தநேரத்தில் சற்றும் எதிர்பாராத மித்ரா அதிர்ச்சியில் "அய்யோ" என வாயில் கைவைக்க,மதனும் தன் அண்ணனை பார்த்து திருதிருவென முழித்தான்.

அவனோ அமைதியாக உள்ளே நுழைய…"அண்ணி நான் நாளைக்கு வரேன்,ஹோம் ஒர்க் பண்ணனும்" என சொல்லிவிட்டு மதன் எஸ்கேப் ஆகிவிட,

'அடப்பாவி இப்படி தனியா இந்த நெட்டையன் கிட்ட மாட்டிவிட்டுட்டு போறியே' என மனதுக்குள் புலம்பியவள்,அவனை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்தாள்.

ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து அவளை நெருங்கியவன்,அவள் இடையை பிடித்து தன்னை நோக்கி இழுக்க,அவள் முகம் அவன் மார்பில் வந்து மோதியது.

தன்னை அடிக்க தான் போகிறான் என்ற பயத்தில் கண்மூடி கிடந்தவள்,அவனிடம் இருந்து எந்த அசைவும் இல்லாததால் மெல்ல ஒற்றை கண்ணை மட்டும் திறந்து,அவனை நிமிர்ந்து பார்க்க…

அதற்காகவே காத்திருந்தவன் போல்,வெகு அருகில் தெரிந்த அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன்…."சாகடிக்கிற டி ராட்சசி" என்றவன் அவள் என்ன நடந்தது என உணரும் முன்பே அவள் இதழை சிறைப்பிடித்திருந்தான். அந்த இதழணைப்பை முடிக்கும் எண்ணமே இல்லாதவனாக அதிலேயே முழ்கியவன்,சட்டென்று பிரித்து,

"இந்த வாய் தானே இப்படியெல்லாம் பேசுது...நானா டம்மி போலீஸ்" என சொல்ல சிறிது இடைவெளி விட்டவன், மீண்டும் பற்றி கொள்ள….அவனின் காதலை இதழ் வழி கடத்தி சென்று இதயம் சேர்க்கும் முயற்ச்சியில் அவன் இருக்க….அவளோ தன்னிடமிருந்து அவனை பிரித்து தள்ளினாள். அவனின் திடமான உடலை அவளை அசைக்க கூட முடியவில்லை.

இருவருக்குமான முதல் முத்தம்...அவனுக்காவது அவள் மேல் எல்லையற்ற காதல் இருக்க,அவளுக்கோ அப்படி எதுவும் இல்லை. அவளை பொறுத்தவரை அவன் தன் மாமா பையன் அவ்வளவு தான்.இதுவரை காதல் என்ற உணர்வை அவள் உணர்ந்ததுமில்லை உணரக்கூடிய வயதுமில்லை.

அப்படியிருக்க அவனின் இந்த செயல் அவளுக்கு அப்படி ஒரு ஆத்திரத்தை கொடுக்க,அவனை எதுவும் செய்யமுடியாத நிலை ஒருபுறம், மூச்செடுக்க முடியாமல் தவிக்கும் நிலை என இரண்டும் சேர்ந்து அழுகையாக கண்களில் இருந்து இறங்க…

அத்தனை நேரம் தன்னவள் இதழில் மூழ்கி இருந்தவனை கலைத்தது அவள் கண்ணீரின் உவர்ப்பு.

தன்னிலை அடைந்து பிரியும் போதே தான் செய்த காரியத்தின் வீரியத்தை உணர்ந்தவன்,தன் தலையிலேயே தட்டிக்கொண்டு….மன்னிப்பை வேண்டி பாவையவள் முகம் பார்க்க,முகத்தை கைகளால் மூடிக்கொண்டு அழுதுக்கொண்டிருந்தாள் மித்ரா.

"செல்லக்குட்டி சாரிடா...அத்தான் ஏதோ தெரியாம…"
என்ற வார்த்தையை முடிக்கும் முன்பே அவள் கரம் இடியென அவன் கன்னத்தில் பதிந்தது.

இத்தனை நாள் அவள் அடித்தது அனைத்தும் செல்ல அடியாக உணர்ந்தவனுக்கு இந்த அடியில் அவன் உணர்ந்த வலி பெண்ணவளின் ஒட்டுமொத்த கோபம் மற்றும் வலியின் வெளிப்பாடு என்று நன்றாகவே உணர்ந்துக்கொண்டான்.
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 17

அவளின் அடியில் ஒரு நொடி அவனுக்கும் கோபம் வந்தது தான் ஆனால் தன் மேல் தவறை வைத்துக்கொண்டு அவள் மேல் கோபப்பட்டு என்ன ஆகப் போகுது என்ற எண்ணத்தில் தனது கோபத்தை கட்டுப்படுத்தியவன்

"செல்லக்குட்டி சாரிடா" என மீண்டும் தொடங்க,

"நீ எந்த காரணமும் சொல்ல வேணாம்...முதல்ல இங்கிருந்து போ. உன்னை பார்க்கவே பிடிக்கலை" என கத்தியவள்,அழுகையில் குலுங்க,

அவளின் திட்டயும் அடியையும் தாங்கி நின்றவனால் அவளின் அழுகை கண் கொண்டு பார்க்க முடியவில்லை. இனி எந்த காரணம் கொண்டும் அவளை அழவிட கூடாது என்று நினைத்திருந்தான் ஆனால் இன்று அவளின் கண்ணீருக்கு அவனே காரணமாகி போனான்.

என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என தெரியாமல் முதல்முறை தடுமாறி நின்றான் மதியழகன்.

சிறிதுநேரம் அழுது ஓய்ந்தவள் ஒரு முடிவோடு அவனை நோக்கி திரும்பினாள்.

அவள் முகத்தை வைத்தே அவள் ஏதோ பெரிய வெடி குண்டை விச போகிறாள் என்பதை அறிந்தவன் தனது பதட்டத்தை மறைத்து கொண்டு அவள் முகம் பார்க்க,

"நான் இனிமே இங்க இருக்கமாட்டேன். நான் ஹாஸ்டல்ல தங்கி படிச்சுக்கிறேன்" என்க,

"உளறாத மித்துமா,அதெல்லாம் வேணாம்.இனிமேல் இதுமாதிரி நடக்காது அதுக்கு நான் உத்திரவாதம். அதுதான் அத்தான் சாரி கேட்டுட்டேனே,அடிக்க கூட செஞ்சியே. எல்லாத்தையும் மறந்துடுடா" என மென்மையாக எடுத்து சொல்ல,

"அதெல்லாம் முடியாது... இனிமேல் ஒரு நிமிஷம் கூட என்னால உன்னோடு இருக்க முடியாது" என்றவள் கோபத்தில் வார்த்தையை விட தொடங்கினாள் அது அவனை எப்படி தாக்கும் என்பதை அறியாமல்.

"பெரிய இவனாட்டம் நான் கேட்காமலேயே என்னோட எல்லா தேவைகளையும் ஆசையையும் நிறைவேற்றும் போதே நான் புரிஞ்சிருக்கனும். நான் தான் ஏதோ என்மேல உள்ள அக்கறையில் செய்றன்னு நினைச்சேன் இப்போ தானே தெரியுது" என்றவள் மேலும் அவனை மொத்தமாக உயிரோடு கொல்லும் விதமாக,

"இதுக்காக தானே என்னை இங்க உள்ள காலேஜ் தான் செலக்ட் பண்ணனும் இல்லனா படிக்க விடமாட்டேன்னு மிரட்டுன, சரியான பொறுக்கி.இதுவரைக்கும் சும்மா சொல்லிட்டு இருந்தேன் ஆனா இப்போ தான் தெரியுது நீ உண்மையிலேயே அப்படி தான்னு. போதும் இனிமே நீ இருக்குற இடத்துல கூட நான் இருக்கமாட்டேன்" என அவனை கத்தியின்றி ரத்தமின்றி வெறும் வார்த்தைகளால் குத்தி சாய்த்தவள்,தன் முடிவில் நிலையாய் நிற்க,

அவனோ அவளின் ஒவ்வொரு வார்த்தையில் உள்ளம் துடிக்க அதுவரை அவளை பேசவிட்டு கேட்டு கொண்டிருந்தவன் அதற்கு மேல் அவளின் குற்றச்சாட்டை அதுவும் அவனின் காதலையே அசிங்கப்படுத்தும் வார்த்தைகளை கேட்ட பின்பும் அந்த அமைதியை பின்பற்ற முடியவில்லை.

கோபத்தில் முகம் சிவக்க, "என்னடி சொன்ன உனக்காக நான் பண்ணது எல்லாத்துக்கும் காரணம் இந்த உடம்பு தானா… ஒரே நிமிஷத்தில் என் காதலை அசிங்கப்படுத்திட்டியே. என்னோட எந்த செயலிலும் என்னோட காதலை உணரவே இல்லை இல்ல".

உன்னை இங்கேயே படிக்க சொன்னதுக்கு காரணம்….நீ வந்ததுக்கு அப்பறம் தான் இந்த வீட்ல எல்லார் முகத்தில் சந்தோஷம் வந்திருக்கு. அதேமாதிரி நீயும் இந்த வீட்டைவிட்டு திரும்பவும் போய்ட கூடாதே என்ற காரணத்துக்காக மட்டும் தான்.மத்தபடி நீ சொன்ன கேவலமான காரணமில்லை" என்றவன்,

"உனக்கு இப்படியெல்லாம் பேச தெரியும் என்பதே எனக்கு தெரியாம போய்டுச்சு.உன்னை ரொம்ப சின்ன பொண்ணுன்னு நினைச்சேன் ஆனா அப்படியெல்லாம் இல்லைன்னு உன் வார்தையாலயே நிரூபிச்சிட்ட...

இப்போ என்ன உன் பிரச்சனை நான் இங்க இருக்கிறது தானே...இனிமேல் இருக்க மாட்டேன் போதுமா. இப்போவே கிளம்புறேன் நீ எங்கேயும் போகவேண்டாம்" என்றவன் கடகடவென குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வரவே முடியவில்லை.வெகுநேரம் கழித்து ரெஸ்ட் ரூமிலிருந்து வெளியே வந்தவன், உடையை மாற்றிக்கொண்டு வெளியே சென்றுவிட்டான்.

அதன்பின் வரவேயில்லை.இரவு பத்து மணிக்கு மேல் ஆகியிருக்க, இப்போது அனைவரும் அவளை பிடித்து கொண்டனர்.

"மித்ரா எங்க இந்த மதியை காணும்,உன்கிட்ட ஏதாவது சொல்லிட்டு போனானா" என கேட்க,இவள் என்ன பதில் சொல்வது என தடுமாறும் போதே தன்னவளுக்கு அந்த சிரமத்தை கூட கொடுக்க நினைக்காத மதி தன் தந்தையின் தொலைபேசிக்கு அழைத்துவிட்டான்.

மகனிடம் பேசிவிட்டு வைத்தவர் "ஏதோ முக்கியமான வேலையாம் நைட் வர மாட்டானாம்" என அனைவரிடமும் சொல்ல,இது எப்போதும் நடப்பது தான் என்று நினைத்துக்கொண்டு அனைவரும் தூங்க சென்றனர்.

மீனாட்சி தான் "தனியா தூங்கிடுவியாடா இல்ல அத்தை துணைக்கு வந்து படுத்துக்கட்டுமா" என மித்ராவிடம் கேட்க,

அவளோ "இல்ல நானே தூங்கிக்கிறேன்" என்றவள் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

மறுநாள் காலையில் அவள் சீக்கிரமே எழுந்து படித்துக்கொண்டிருக்க
அப்போது கதவு தட்டப்பட, படித்து முடித்தவள் அப்போது தான் எழுந்து கிளம்பலாம் என்று நினைக்கும் போதே கதவு தட்டப்பட்டது.

எழுந்து திறந்தவள் முன் கண்கள் இரண்டும் சிவந்து சோர்வுடன் நின்றிருந்தான் மதி. அவளை கடந்து உள்ளே சென்றவன்,குளித்துவிட்டு தனது யூனிஃபார்மை அணிந்து கொண்டு அடுத்த அரைமணி நேரத்தில் கிளம்பி ஹாலுக்கு சென்றுவிட்டான்.

அவளும் கல்லூரிக்கு தயாராகி வர,அவளுக்காக வண்டியோடு காத்திருந்தவனை கடந்து நடப்பவளை வழிமறித்து நின்றவன் "எங்கடா போற வா வண்டியில் கொண்டு விடுறேன்"
என்க,

"தேவையில்ல... இனிமேல் நான் பஸில் போய்கிறேன்" என்றவள் திரும்பி பார்க்க,அங்கு மதன் தன் ஸ்கூல் பேக்கை மாட்டிக்கொண்டு வந்தவன் "அண்ணி வாங்க போகலாம்" என்றான்.

"பாய் அண்ணா...உங்களுக்கு நிறைய வேலை இருக்குன்னு அண்ணி இனிமேல் பஸ்லயே வராங்களாம்" என அவன் கேட்காத கேள்விக்கும் சேர்த்து பதில் சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

அவனுக்கு இது மீண்டும் ஒரு பெரிய அடி. அவள் கல்லூரிக்கு சென்று வந்த இந்த ஒரு மாதத்தில் அவன் தான் காலை மாலை இருநேரமும் அவளை அழைத்து வருவது. அப்படியிருக்க இன்று அதுவும் இல்லை என்றாகி விட
ஏதோ அவள் தன்னைவிட்டு வெகுதூரம் சென்றது போல் உணர்ந்தான்.

இங்கு பேருந்து நிலையத்தில் காலைநேரம் அதுவும் வார நாட்கள் என்பதால் பள்ளி செல்லும் பிள்ளைகள் தொடக்கம் கல்லூரி,வேலைக்கு செல்பவர்கள் என ஒரு கூட்டமே இருக்க,

அங்கு மதுவும் நின்றிருந்தாள். அவள் கல்லூரியில் சேர்ந்து இருவாரங்கள் ஆகிவிட்டது.அதுவும் கதிர் அவளுடேனே சென்று அனைத்து பாமாலிட்டிசையும் முடித்து அவளை சேர்த்துவிட்டு வந்தது அவளுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

மதுவும் மித்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டாலும் பேசி கொள்ளவில்லை. மதன் தான் இருவரிடமும் பொதுவாக பேசினான். அந்நேரம் பேருந்து வந்துவிட,அனைவரும் அடித்துப் பிடித்துக்கொண்டு ஏறினர். ஜன்னல் வழியாக பைகளையும் லஞ்ச் பேக் என கையில் உள்ள அனைத்தையும் போட்டு இடம்பிடிக்க,இது எதுவும் பழக்கம் இல்லாத மித்ரா...மதனின் "அண்ணி வாங்க" என்ற வார்த்தையை காதில் வாங்காமல் அனைவருக்கும் வழிவிட்டு கடைசியாக ஏறினாள்.

பேருந்தே நிறைந்து இருக்க,இவளும் இடம் இல்லாமல் கம்பியை பிடித்து கொண்டு நிற்கும் நிலை. அப்போது அவள் கரத்தை பிடித்து யாரோ இழுப்பது போல் இருக்க,பயத்துடன் திரும்பி பார்த்தாள்,

அங்கு அவளின் கரத்தை பிடித்திருந்தது மது தான். அவள் தினமும் சென்று வருவதால் எளிதாக இடம்பிடித்து இருக்கையில் அமர்ந்திருக்க அருகில் இருந்த இருக்கையில் யாரும் அமராமல் பார்த்து கொண்டாள் மித்ரவிற்காக.

"இங்க வந்து உட்காரு" என தன் அருகில் உள்ள இடத்தை காட்டி சொல்ல,அவளும் தயக்கத்தோடு வந்து அமர்ந்தாள்.

"தேங்க்ஸ் அக்கா" என்று மெல்லிய குரலில் சொன்னவள்,அதற்கு மேல் இருவருமே தாங்கள் இறங்குமிடம் வரும்வரை பேசிக்கொள்ளவில்லை.

இதுவே தினமும் தொடர்ந்தது.இரவு வேலை என சொல்லிவிட்டு கிளம்பி செல்லும் மதி காலையில் வந்து திரும்பவும் கிளம்பி சென்றுவிடுவான் .

"என்ன தினமும் வேலை வேலைன்னு வீடு தங்க மாட்டிங்குற" என்று கேட்ட குடும்பத்தினருக்கு "முக்கியமான கேஸ், அது முடியும்வரை அப்படிதான்" என சொல்லிவிட்டான்.அதன்பின் அவர்களும் எந்த கேள்வியும் கேட்கவில்லை.

இங்கு பேருந்து பயணத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வார்த்தை முன்னேற...இப்போது மதுவும் மித்ராவும் ஓரளவுக்கு தங்கள் உள்ளம் திறந்து பேச தொடங்கியிருந்தனர். அவர்களுக்குள் தனிப்பட்ட எந்த பிரச்சனையும் இல்லை என்பதை விட மதுவும் கதிருடன் நடந்த திருமணத்தை மனதால் ஏற்றுகொள்ள தொடங்கியதால் மித்ரா மீது இருந்த கொஞ்சநஞ்ச கோபமும் காணாமல் போய்விட்டது.

அதனால் அக்கா தங்கை இருவரும் மனதளவில் நெருங்கிவிட்டனர்.

இங்கு கல்லூரியில் தினமும் அவளையே பின்தொடர்ந்து கொண்டிருந்தான் பிரகாஷ். அவளை பின்தொடர்ந்து வீடு வரைக்கும் சென்று வந்தவன்,அது அவளின் வீடு என்றே நினைத்தான்.இன்னும் அவளுக்கு கல்யாணம் ஆன விஷயம் அவனுக்கு தெரிந்திருக்கவில்லை.

கழுத்தில் செயினில் தாலியை கோர்த்திருக்க, நேற்றி வகுட்டிலும் மெலிதாக தீட்டிய குங்குமம் மட்டுமே...அதையும் உற்று பார்த்தாள் மட்டுமே தெரியும்.

அப்படியிருக்க அவள் அழகையே ரசித்தவனின் கண்ணிற்கு இந்த மாற்றங்கள் எதுவும் தெரியவில்லை.அதனால் அவளையே சுற்றி கொண்டிருந்தான்.

பெண்கள் விஷயத்தில் அவன் அவ்வளவு மோசமானவன்,அது அவனின் பெற்றோருக்கும் தெரியும்.அதுவே அவனை இன்னும் இன்னும் தப்பு செய்ய தூண்டியது என்று கூட சொல்லலாம். ஒற்றை மகன் அவன் சந்தோஷம் மட்டுமே முக்கியம் என்று நினைக்கும் பெற்றோர்கள் அவன் செய்யும் அனைத்து தப்பிற்கும் கண்டிக்காமல் கண்டுகொள்ளாமல் துணைபுரிய…. தவறின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருந்தது.

ஆசைப்பட்ட அனைத்தையும் வாங்கி தருவது தவறில்லை தான் ஆனால் அது கேட்கும் பொருளை பொருத்தது அல்லவா!. அவன் பார்வையில் விழும் பெண்கள் அடுத்த நொடி அவனுக்கு கிடைக்கவேண்டும் என நினைக்கும் மிருகம்...இதுவரை எத்தனையோ பெண்களை நாசம் செய்திருக்கிறான்.ஆனால் எதற்கும் சாட்சி என்பது இல்லை.

சிலர் தங்கள் மானம் பறிபோகும் என்று பயந்தே ஒதுங்கிக்கொள்ள, அதையும் மீறி அவனை எதிர்க்கும் பெண்களை இல்லாமலே ஆக்கிவிடும் அளவுக்கு அரக்கன். அதை ஊருக்கு தெரியாமல் காசை கொட்டி மறைப்பதையே வேலையாக செய்ய அவனின் பெற்றோர்கள்.

ஆனால் கேட்டதிலும் ஒரு நல்லதாக மற்றைய பெண்களிடம் தோன்றும் இச்சை இவளிடம் தோன்றவில்லை என்பது தான் அதிசயம். இதுவே இவளை தவிர வேறு ஒரு பெண்ணாக இருந்திருந்தால் இந்நேரம் தன் ஆசையை நிறைவேற்றி முடித்திருப்பான்.ஆனால் இவளை பார்த்தவுடன் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு கனவு கண்டுவிட்டான்.

இன்னும் அவன் தன் காதலை கூட அவளிடம் சொல்லவில்லை.இப்போதே சொன்னால் மிரண்டு கல்லூரியை விட்டு நின்றுவிட வாய்ப்பு இருப்பதால் பொறுமை காத்தான். அதற்கு காரணம் அவனை மீறி என்ன நடந்துவிட போகிறது என்ற தலைகணம்.

அதனால் விட்டுப்பிடிக்கலாம் என்று நினைத்து கொண்டான்.
வெளிநாடு சென்று மேற்படிப்பை தொடர நினைத்தவன், இவளுக்காக இதே கல்லூரியில் படிக்க முடிவெடுத்தான்.அந்தளவுக்கு அவள்மேல் ஆசையில் இருந்தான்.இல்லையில்லை வெறியில் இருந்தான் என்று தான் சொல்லவேண்டும்.

தன்னை ஒருவன் இப்படி பின் தொடர்வதை அறியாமல் அவள் இருக்க… ஆனால் பெரும்பாலான மாணவர்களுக்கு இந்த விஷயம் தெரிந்திருந்தது.ஆனால் யாரும் அதனை வெளியே சொல்லவில்லை.சொன்னால் என்ன நடக்கும் என்பதை அனைவரும் அறிந்தே இருந்தனர்.

பவித்ராவுக்கு தெரிந்திருந்தால் கண்டிப்பாக தோழியிடம் சொல்லி இருப்பாள் ஆனால் பாவம் அவளுக்கும் இது எதுவும் தெரியாமல் போனது விதியின் செயல் தான் போல.

அவன் அவளை அடைய எந்த எல்லையும் செல்லும் நிலையில் இருந்தான். இவனால் கல்லூரியில் எந்த மாணவர்களும் அவளை பார்ப்பதில்லை என்றாலும் அவள் செல்லும் பேருந்தில் வேறு கல்லூரி மாணவன் ஒருவன் அவளையே பார்ப்பதும் பேச முயற்சிப்பதுமாக இருக்க,இது எப்படியோ பிரகாஷின் காதிற்கு சென்றுவிட்டது.

ஒருநாள் அவளிடம் பேசவேண்டும் என்ற ஆர்வத்தில் அவளை நெருங்கி டைம் என்ன என்று தான் கேட்டான். அவ்வளவு தான் அவன் பஸிலிருந்து இறங்கும் நிறுத்தத்தில் பிரகாஷ் தன் காரில் சாய்ந்து நின்றிருந்தான்.

அவனை கடந்து செல்ல முயன்றவனின் கரத்தை பிடித்தவன் "ஏண்டா உனக்கு டைம் கேட்க வேற ஆளே கிடைக்கலையா?...எவ்ளோ தைரியம் இருந்தா அவ பக்கத்துல நின்னுருப்ப உன்னை" என்றவன் பிடித்திருந்த கையை திருப்ப….அவனோ உயிர் போகும் வலியில் துடித்தான்.

அவன் கதறலை சிரிப்போடு பார்த்துக்கொண்டே இன்னும் திருப்ப, எழும்பு முறியும் சத்தம் வெளியே கேட்டது இருவருக்கும். அவன் கரத்தை விடுவித்த பிரகாஷ் "இது வெறும் சாம்பிள் தான் இன்னொரு வாட்டி அவளை பார்த்தால் கூட அடுத்தது உன் இரண்டு கண்ணையும் நோண்டிடுவேன் ஜாக்கிரதை" என்ற மிரட்டலோடு சென்றுவிட்டான்.

இப்படிப்பட்ட ராட்சசனிடமிருந்து எப்படி தப்பிக்க போகிறாளோ மித்ரா!.. அனைத்தும் அந்த மதுரையை ஆளும் மீனாட்சிக்கே வெளிச்சம்.

அப்படியே நாட்கள் செல்ல... மதியிடம் பேசி இன்றோடு ஒரு மாதம் ஆகியிருந்தது. அவனோ தனக்குள்ளேயே இறுகிதான் போனான் தன்னவளின் புறக்கணிப்பில். அவர்கள் இடையே முற்றிலுமாக பேச்சு வார்த்தை காணாமல் போயிருக்க,

அன்று கல்லூரியில் முக்கியமான பிராக்டிகல் கிளாஸ் நடந்துகொண்டிருக்க….அவளால் சரியான நேரத்திற்கு பேருந்தை பிடிக்க முடியவில்லை. மதன் மது இருவரும் ஒருவேளை அடுத்த பஸில் வருவாள் என்று நினைத்தபடி வீடு வந்துவிட,நேரம் கடந்ததே தவிர அவள் வரும் வழியை காணும்.

வீட்டில் உள்ள அனைவருக்கும் பயம் பிடித்துக்கொள்ள உடனடியாக மதிக்கு ஃபோன் போட்டு சொல்லிவிட்டனர்.

அவன் பதட்டத்தோடு அவளை தேடி கல்லூரிக்கு செல்ல...அப்போதுதான் அவளும் காலேஜில் இருந்து வெளியே வந்துக்கொண்டிருந்தாள். அவளை பார்த்தவுடன் தான் மனதில் நிம்மதி பிறந்தது.

அவள் முன் வண்டியை நிறுத்த,அவளோ அவனை பார்த்து முறைத்துவிட்டு பஸ் ஸ்டான்ட் நோக்கி சென்றாள்.

இவ்வளவு நேரம் அவளை காணாத பதட்டம் மொத்தமும் கோபமாக மாறி, எல்லையை கடந்து சென்றுக்கொண்டிருக்க...அவளின் பிடிவாதம் ஆத்திரத்தை வர வைத்தது.
 

Anjali

Well-known member
Wonderland writer
அவனை திரும்பியும் பார்க்காமல் வந்த பேருந்தில் ஏறி அவளும் சென்றுவிட்டாள்.
மறுநாள் காலை அவள் எழும் போதே...மெத்தைக்கு அருகிள்ள மேஜையில் ஒரு பாக்ஸ் இருக்க...எடுத்து பிரித்து பார்க்க, அங்கு அழகான புது மாடல் மொபைல் இருந்தது.

புரியாமல் பார்த்தவள் அது யாரின் வேலை என புரிந்த நொடி அவளுக்கும் கோபம் அதிகரித்து.

நேற்றைக்கு நடந்தது போல் ஆகாமல் இருக்கவும்,தாமதமானால் தகவல் சொல்ல, ஃபோன் மிகவும் அவசியம் என்று அவன் வாங்கி வந்திருக்க,

இந்த மரமண்டைக்கு அது புரியாமல் மீண்டும் இதுபோல் வாங்கி கொடுத்து தன்னிடம் தவறாக நடந்துகொள்வானோ என்ற எண்ணமே அதனை வெறுக்க வைத்தது.

அப்போது அறைக்குள் நுழைந்தவனை பார்த்து படபட பட்டாசு போல் வெடிக்க தொடங்கிவிட்டாள். "இது என்ன?.. என அந்த ஃபோனை காட்டி கேட்க,

"ஏன் பார்த்தா தெரியலையா?..உனக்கு தான்,இனிமேல் லேட் ஆகுற மாதிரி இருந்தால் வீட்டில் ஃபோன் பண்ணி சொல்லிடு. எல்லாரையும் பயமுறுத்தாதே"என கோபமாக சொல்ல,

"எனக்கு இது வேணாம்.நான் முன்னாடியே சொன்னது தான் நீங்க வாங்கித்தர எதுவும் எனக்கு வேண்டாம்" என்றவள்,அவன் கொடுத்த ஃபோனை அவனிடமே கொடுத்துவிட்டு நகர முற்பட,

அதற்கு முடியாமல் அவள் கரத்தை இறுக்கி பிடித்த்திருந்தான் மதி. "உனக்கு என்னடி அவ்வளவு திமிர்...அதுதான் நீ சொன்ன மாதிரி வீட்டுக்கு கூட வராமல் தான இருக்கேன்.இன்னும் என்ன செய்யனும்" என்க,

"நீங்க எதையும் செய்ய வேண்டாம்னு தான் சொல்றேன். இப்போ நான் உங்ககிட்ட இதெல்லாம் வாங்கி தர சொல்லி கேட்டேனா….இல்ல இதெல்லாம் வாங்கி தந்தால் நான் அப்படியே மயங்கி,உங்க விருப்படி நடந்துப்பேன் என்கிற எண்ணமா" என கேட்க…

பொறுமை காற்றில் பறக்க,பளார் என்று கன்னத்திலேயே அறைந்திருந்தான். "ச்சீ உனக்கு இப்படியெல்லாம் பேச தெரியும்னு கூட எனக்கு தெரியாது டி ....என்னால நம்பமுடியலை இது என்னோட மித்ரா தானாண்ணு" என புலம்பியவன்,

"அய்யோ…. போதும் சாமி போதும் ... இதுவரைக்கும் நீ பேசியது வரை போதும் என்றவன்,என்னோட ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு" என நிறுத்த,

அவளும் என்னவென்று வலித்த கன்னத்தை பிடித்தபடி அவனை முறைத்து பார்த்தாள்.

"உனக்கு என்னை கொஞ்சமாவது பிடிக்குமா மித்ரா" என மொத்த காதலையும் விழிகளில் தேக்கி கேட்க,

அவளோ அவன் மீது கொண்ட கோபத்தில் சட்டென்று "பிடிக்கலை பிடிக்கலை உங்களை எனக்கு சுத்தமா பிடிக்கலை போதுமா!.." என்க,

அவளை பார்த்து விரக்தியாக சிரித்தவன் "இந்த பதில் ஒன்னு போதும் எனக்கு" என்றவன் கிளம்பிவிட்டான்.

அதன்பின் முழுதாக ஒருவாரம் வீட்டு பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை மதி. அவளும் அவன்மேல் உள்ள கோபத்தில் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

ஒருவாரம் கழிந்து வந்தவன்,அறைக்குள் இருக்கும் அவளை கண்டுகொள்ளாமல் ஒரு பெட்டியில் அவனது துணிகள் மற்றும் உடமைகள் அனைத்தையும் எடுத்து வைத்தவிட்டு,அவளை நிமிர்ந்து பாராது வெளியே வந்தான்.

வீட்டினர் அனைவரும் கூடியிருக்க,அவன் ஆரம்பிக்கும் முன்பே "உன் மனசுல என்னடா நினைச்சிட்டு இருக்க,ஒரு மாசமா வீட்லயே தங்கிறது இல்லை,இப்போ முழுசா ஒரு வாரம் வீட்டு பக்கம் எட்டிகூட பார்க்கலை" என அவனின் அன்னை கடிந்து கொள்ள…

"அம்மா பிளீஸ்... நான் முன்னமே சொன்னேனே முக்கியமான கேஸ்.இப்பவும் அது விஷயமா தான் சென்னைக்கு போறேன்.திரும்பி எப்போ வருவேன்னு தெரியாது.எனக்கு என் வேலை தான் முக்கியம்" என்றவன்,அங்கு நின்றால் கேள்வி கேட்டே கொன்றுவிடுவார்கள் என்று ஓடிவிட்டான்.

அவளிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.அது அவளுக்கு ஒரு மாதிரி மனதை வருத்த,அதுக்கும் அவன் மேலேயே கோபம் கொண்டாள். 'போயேன் எனக்கு என்ன வந்தது' என அவனை திட்டிக்கொண்டே இருந்தாள் அன்று முழுவதும்.

அதற்கு அவள் தான் காரணம் என்பதை வசதியாக மறந்து போனாள் பெண்ணவள்.

ஆனால் மதி தினமும் வீட்டில் உள்ள அனைவரிடமும் தொலைபேசியில் பேச...இவள் மட்டுமே அவனிடம் பேசவில்லை.

ஒருநாள் எதர்ச்சியாக அவனின் அழைப்பை இவள் ஏற்க, எதிர்ப்புறம் இவளின் குரலை கேட்டவுடன் இணைப்பை துண்டித்திருந்தான் மதி.

"அய்யோ ரொம்பதான் யாரும் இங்க உன்கிட்ட பேச காத்திருக்கலை" என நொடித்துக்கொண்டு படிக்க சென்றாள்.

இப்பொழுதெல்லாம் தியாவிற்கு கூட வர்ஷினியை பிடித்திருந்தது. அதுவும் மதனும் இவளும் பேசி சிரிப்பதை பார்த்து,தன்னை மட்டும் இருவரும் சேர்த்து கொள்ளவில்லை என்ற கோபத்தோடு அவர்களை நோக்கி சென்றாள்.

அவளை பார்த்தவுடன் இருவரும் பேச்சை நிறுத்த, "எனக்கு யாரு சொல்லி தருவா ஹோம் ஒர்க் எல்லாம். நீ என்கூட தான படிச்ச,இப்போ இவங்க வந்ததும் என்னை விட்டுட்ட" என அழுவது போல் மதனை பார்த்து சொல்ல,

"அய்யய்யோ செல்லக்குட்டி சாரிடா, சித்தப்பாவை மன்னிச்சிடு" என்று அவளை தூக்க கையை நீட்ட, அவனை முந்திக்கொண்டு அவளை தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டாள் வர்ஷினி.

"நான் சொல்லி தரவா?.."என சொல்லியபடி அவள் கன்னத்தில் முத்தமிட,

முதலில் அவளிடமிருந்து திமிறியவாறு "ஒன்னும் வேணா போ" என பிகு பண்ணியவள்,சற்று நேரத்தில் அமைதியாகி விட,அதுவே அவளின் மனதை சொன்னது.

அதன்பின் அவளே அவளின் கைபிடித்து ஹோம் ஒர்க் செய்ய உதவியவள்,அவளுக்கு கதையெல்லாம் சொல்ல மொத்தமாக அவளோடு ஐக்கியமாகி விட்டாள்.

அவள் மடியில் அமர்ந்து,தோளில் சாய்ந்தபடி அவள் முகம் பார்த்து கதை கேட்டவள்,அப்படியே அவள் மடியில் தூங்கி போனாள்.

இப்படி அந்த வீட்டில் அனைவரும் அவள் மேல் பாசத்தை பொழிய,இது அனைத்திற்கும் காரணமானவனோ அவளை விட்டு வெகுதூரத்தில் அவள் நினைவில் தவித்துக்கொண்டிருந்தான்.
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 18

அன்று கல்லூரியில் இருந்து வரும் போதே உம் என்று முகத்தை வைத்துக்கொண்டு வந்த வர்ஷினி ஆழ்ந்த சிந்தனையில் இருக்க,அவளை கலைத்தது தியா மற்றும் மதனின் வருகை.

"என்ன அண்ணி ஒருமாதிரி இருக்கீங்க?.." என மதன் கேட்க,

"அது ஒன்னுமில்ல, இன்னைக்கு ஒரு அசைன்மண்ட் கொடுத்தாங்க அதுக்கு நிறைய தகவல் நெட்டில் தான் இருக்குமாம். நம்ம ஊரில் எங்க நெட் சென்டர் இருக்கு, டவுனுக்கு தான் போகணும்,அதான் என்ன பண்றதுன்னு தெரியலை" என சொல்ல,

"இதுக்கா இப்படி இருக்கீங்க,இருங்க ஒரு நிமிஷம்" என்றவன் எழுந்து மதியின் அலமாரியை திறந்து கையில் லேப்டாப் பேக் ஒன்றை எடுத்து வந்தான்.

"கையிலேயே வெண்ணெயை வெச்சுக்கிட்டு நெய்க்கு அலைர மாதிரி வீட்லயே நெட் இருக்க,அதுக்கு எங்க போறதுன்னு கேட்கிறீங்க?.." என்றவன் அதனை ஓபன் செய்தான்.இது அண்ணா லேப்டாப் தான்" என திறக்க,

"இல்ல இல்ல அதை திறக்காத பரவாயில்லை விடு நான் அப்பறமா எழுதிக்கிறேன்" என அவள் சொல்வதை காதில் வாங்காமல் "சும்மா வாங்க அண்ணி, அண்ணனோடது எல்லாமே உங்களோடது தான்" என சொன்னவன்,

"அண்ணி கண்ணை மூடுங்க உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இதுல இருக்கு" என்க,

அவளோ புரியாமல் விழித்தாள், இதில் எனக்கு என்ன சர்ப்ரைஸ் என்ற யோசனையோடு பார்க்க...அவன் சொன்னதன் அர்த்தம் அந்த திரையை பார்த்தவுடன் தெரிந்துவிட்டது.

பட்டுபாவடை சட்டையில் இரட்டை ஜடையோடு சிரித்துக்கொண்டு இருக்கும் அவளின் குழந்தை புகைப்படம் தான் அதிலிருந்து.

"இது நீங்க தானே...அண்ணா இந்த லேப்டாப் வாங்கியதில் இருந்தே உங்க ஃபோட்டோ தான் இருக்கு. நான் கூட கேட்டிருக்கேன் ஏன் இந்த ஃபோட்டோ வைத்திருக்கன்னு. ஆனா அண்ணன் எனக்கு உங்க எல்லாரையும் விட இவளை தான் பிடிக்கும் அதான் வெச்சிருக்கேன் அப்படின்னு சொல்லும். அப்போ அதுக்கு அர்த்தம் தெரியலை ஆனா உங்களை கல்யாணம் பண்ணி வீட்டுக்கு அழைச்சிட்டு வந்ததுக்கு அப்பறம் தான் தெரியும் நீங்க தான் இந்த ஃபோட்டோவில் இருக்கும் பொண்ணுன்னு" என சந்தோஷமாக சொல்ல,

அதை கேட்டு கொண்டிருந்தவள் எப்படி உணர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. அவள் போட்டோவை பார்த்தவுடன் உறைந்து போனவள் தான் அந்த நிலையில் இருந்து மீண்டுவரவே முடியவில்லை அவளால்.

அவளால் அவளையே மன்னிக்க முடியவில்லை. "என்ன வார்த்தை அவனை பார்த்து சொல்லிவிட்டேன்,தன்னை இந்தளவுக்கு நேசித்தவனின் காதலை அல்லவா கேவலமாக பேசிவிட்டேன்" என என்னும் போதே கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

அதற்கு மேல் அவளால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை "எனக்கு கொஞ்சம் தலை வலிக்குது நான் தூங்குறேன், இன்னைக்கு நீங்க இரண்டு பேரும் படிங்க" என்றவள்,மெத்தையில் படுத்து கொண்டு கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.

விழிகளில் இருந்து நிற்காமல் கண்ணீர் வழிந்துகொண்டே இருக்க, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினாள். சற்று நேரம் சென்றிருக்க,மீண்டும் அந்த லேப்டாப்பை எடுத்து ஆராய அதில் முக்கால்வாசி இவளின் புகைப்படம். அதுவும் கல்யாணத்திற்கு முன்பு அவள் கடைசியாக கோவிலில் வைத்து அவனை பார்த்தபோது எடுத்த புகைப்படம் வரை அதில் இருந்தது.

அனைவரும் தன்னை மறந்துவிட்டனர் என்று அவள் நினைத்திருக்க,இவனோ அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் புகைப்படமாக சேமித்து வைத்திருக்க அது அவளுக்கு சந்தோஷத்தையும் அழுகையையும் ஒன்றாய் கொடுத்தது. அவன்மேல் இருந்த அன்பு இன்னும் அளவுக்கு அதிகமாக பெருகுவதை உணர்ந்தாள்.

அவனை பிடிக்கவில்லை என்றதெல்லாம் அவன் மேலுள்ள கோபத்தில் தானே தவிர,உண்மையில் அவனை தான் அவளுக்கு மிகவும் பிடிக்கும், அதுதான் அவன்மேல் கோபமாக மாறியிருந்தது.

அவன்மேல் கொண்ட அன்புக்கு பெயர் தான் காதல் என்பது அவளுக்கு புரியாமல் போனது தான் தவறாகி போனது இங்கே. அவனிடம் அவள் எடுத்துக்கொள்ளும் உரிமையும் அவனுக்கு அவள் கொடுக்கும் உரிமையும் வேறு யாருக்கும் அவளால் கொடுக்க முடியாது என்பதை விட அவனிடத்தில் வேறு யாரையும் நினைக்க கூட அவள் மனம் விரும்பவில்லை.

புடவை கட்டிவிடும் அளவுக்கு அவனுக்கு இடம் கொடுத்திருக்க,அவனின் ஒற்றை முத்ததிற்காக கோபப்பட்டு காயப்படுத்தியதை எண்ணி இப்போது வருந்தினாள்.

அவளுக்கு இப்போதே அவனை பார்க்க வேண்டும் என்று தோன்றியது.ஏனோ இத்தனை நாட்களாய் அவன் முகத்தையாவது தினமும் பார்த்துவிடுவதால் தெரியவில்லையோ என்னவோ….அவன் வெகுதூரம் சென்றதும் மனம் அவனை பார்க்க ஏங்கியது.

அதுவும் அவனின் மித்துமா,ராட்சசி, செல்லகுட்டி, குட்டி சாத்தான் என்ற அழைபிற்காக வெகுவாக ஏங்கியது என்று தான் சொல்லவேண்டும்.

தனக்காக தன் தந்தை கூட எதையும் செய்யாத நிலையில் இவன் அனைத்தையும் பார்த்து பார்த்து செய்ய,அவனை போய் சந்தேகித்து விட்டோமே என கண்ணீரில் கறைந்தாள்.

மறுநாளில் இருந்து அவனின் அழைபிற்காக காத்திருந்து அதனை முதலில் எடுத்து பேச,அவனோ அவளிடம் பேச விரும்பாமல் அணைத்துவிட்டான்.
'அய்யோ! இவன் வேற... நானே இப்போதான் கோபத்தை விட்டுட்டு பேச நினைத்தால் இப்போ இவரு முறுக்கிக்குறாரு' என வருந்தியவள் அவன் வரும் நாளுக்காக காத்திருந்தாள்.

ஆனால் அவனோ வருவதாக தெரியவில்லை.நாட்கள் ஓடிக்கொண்டே இருக்க அவனின் அருகாமைக்காக ஏங்கி தவித்தாள்.இருவரும் ஒரே நிலையில் தான் இருந்தனர் அவளுக்கு தன்னை பிடிக்கவில்லை என்று அவன் தவிக்க, இத்தனை நாளும் தன்னவன் காட்டிய காதலை புரிந்துகொள்ளாமல் அவனை காயப்படுத்தி விட்டோமே என்று இங்கு இவள் தவித்து கொண்டிருந்தாள்.

காதலில் எவ்வளவுக்கு எவ்வளவு பிரிவு வலியை தருமோ அதே அளவு பிரிவு என்பது மிகவும் அழகானது கூட...ஒருவர் மேல் ஒருவர் எந்தளவு அன்பு வைத்திருக்கிறோம் என்பதையே உணர்த்தும் அற்புதமான நிலை. வலி கூட காதலில் அழகே.

அவனை பிடிக்கவில்லை என்று சொன்னவள்,இதுவரை காதல் என்றால் என்ன என்று இனம் காணமுடியாமல் இருந்தவளுக்கு இந்த பிரிவு அவள் மனதில் உள்ள காதலை வெளியே கொண்டுவர வெகுவாக உதவியது.

அவன் மேல் இருந்தது மாமன் மகன் என்ற அன்பு மட்டும் தான் என்றால் அவளுக்கு இவன் மட்டும் மாமன் மகன் இல்லையே...மனோகர் மதன் என இன்னும் தந்தை வழி சொந்தமும் இருக்க, அவர்களும் இவனும் ஒன்றா என்ற எண்ணமே இப்போது தான் அவள் மூளைக்கு விளங்கியது.

கண்டிப்பாக இல்லையே…. மதி எப்போதும் அவளுக்கு ஸ்பெஷல் தான். அது அவன் கணவன் என்றதால் இல்லை சிறுவயதில் இருந்தே அவனை மட்டுமே சுற்றிக்கொண்டு இருப்பாள். அனைவருக்கும் மரியாதை கொடுத்து முறை சொல்லி அழைப்பவள் இவன் எவ்வளவு கெஞ்சியும் அவனை மட்டும் மதி என பெயர் சொல்லியே அழைப்பாள்.

என்னதான் பள்ளிபாடத்தில் முதல் மதிப்பெண் எடுத்திருந்தாலும் மனதின் உணர்வுகளை படிக்கும் வித்தையை அறியாத முட்டாளாய் இருந்ததை எண்ணி இப்போது வருந்தி என்ன பயன்.

'இப்போதும் அவன் ஒரு வார்த்தையாவது பேச மாட்டானா' என தவிக்கவிட்டதை எண்ணி மீண்டும் அவன்மேல் தான் கோபம் வந்தது.

'பொறுக்கி... பொறுக்கி... நான் தான் சின்ன பொண்ணு ஏதோ தெரியாம பேசிட்டேன் அதுக்காக யாராவது வீட்டைவிட்டு போவாங்களா...இவனை எல்லாம் யாரு போலீஸ் வேலையில் சேர்த்தாங்க" என அவனை சரமாரியாக திட்டியபடி அவனுக்காக காத்திருந்தாள்.

அங்கு சென்னையில் ஒரு முக்கியமான ஒரு கேஸ் சமந்தமாக அலைந்து கொண்டிருந்தான் மதி. கிட்டத்தட்ட வந்த வேலை முடியும் தருவாயில் இருக்க,எப்படியும் இன்னும் இரண்டு நாட்களில் அனைத்தையும் முடித்து கொடுத்துவிட்டு ஊருக்கு செல்லும் நிலையில் இருந்தான்.

ஒரு மனம் தன்னவளை பார்க்க துடிக்க,மற்றொரு மனமோ எப்படி அவளை தவிர்ப்பது,சென்னையிலேயே இருந்துவிடலாமா என சிந்தித்துக் கொண்டிருந்தது.

அவள் கேட்காமலேயே அவளுக்காக அனைத்தையும் செய்தவன் அவன்….அப்படியிருக்க தன்னவள் முதல்முறை ஆசைப்பட்ட விஷயத்தை செய்யாமல் இருப்பானா என்ன?. அது பிரிவே என்றாலும், வலிக்க செய்தாலும் அவளுக்காக அதையும் செய்ய தயாராக இருந்தான் அந்த காவ(த)லன்.

அன்று வழக்கம் போல் மித்ராவை பார்த்துக்கொண்டே லைப்ரரியில் அவளை பார்க்கும் தொலைவில் அமர்த்திருந்தான் பிரகாஷ். அவன் அருகில் இருந்த அவனின் நண்பர்கள் "டேய் எப்போ அந்த பொண்ணை நீ பார்த்தியோ அப்போதிருந்து நாங்க எல்லாம் உன் கண்ணுக்கு கூட தெரிய மாற்றோம்.அவ மட்டும் தான் எல்லாமுன்னு சுத்திட்டு இருக்க இதெல்லாம் சரியில்ல டா" என ஆதங்கமாக தங்கள் பிடித்தமின்மையை தெரிவிக்க,

"இப்போ நான் அவளை பார்க்கிறதுனால என்ன ஆகிடுச்சு,எப்பவும் போல தானே இருக்கேன்" என அவளை கண்களால் துகிலுறித்து கொண்டே சொல்ல...

"ஏண்டா... எவ்ளோ ஜாலியா ஒரு பிகரை பார்த்தோமா, பிக் அப் பண்ணோமா மேட்டரை முடிச்சோமா அப்படின்னு இருந்தோம். ஆனா இந்த கொஞ்ச மாசமா ஒரு ஃபிகரை கூட கண்ணுல பார்க்க முடியலை. எனக்கு ஒரு டவுட் மச்சான்... ஒருவேளை அந்த பொண்ணை பார்த்துட்டு திருந்தி நல்லவன் ஆகிட்டியோ" என நக்கலாக சொல்ல…

சத்தமாக வாய்விட்டு சிரித்த பிரகாஷ்…"என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்குறியே டா, எனக்கு இவ வேணும் தான் ஆனால் மத்த பொண்ணுங்க மாதிரி ஒரு நாள் மட்டுமில்ல வாழ்க்கை பூரா. அதுக்காக இவளை பார்த்ததும் திருந்தி வாழ்ற அளவுக்கு நான் நல்லவன் எல்லாம் இல்ல... வீட்டு சாப்பாடு முக்கியம் தான் அதுக்காக இவ்வளவு நாள் சாப்பிட்ட ஹோட்டல் சாப்பாட்டை மறந்திட முடியாதே,என்ன இருந்தாலும் அதோட டேஸ்டே தனிடா" என்றவன்,

"இப்போ என்ன?... உங்களுக்கு எப்பவும் போல ஒரு பொண்ணு வேணும் அவ்ளோ தானே.கவலையை விடுங்க, நாளைக்கு உங்க எல்லாருக்கும் செம்ம டிரீட்" என கண்ணடித்தவன் தன் மொபைலை எடுத்து ஒருவனிடம் பேசிவிட்டு வைத்தவன், தன் நண்பர்களிடம் கட்டை விரலை உயர்த்தி காட்டினான். அவர்களும் நாளைய தினத்தை எண்ணி இப்போதே கனவு காண தொடங்கிவிட்டனர்.

சென்னையில் வந்த
வேலையை முடித்துவிட்தான் மதி. அனைத்து ஆவணங்களையும் தன் மேல் அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு வெளியே வந்த மதியின் மொபைல் தன் இருப்பை தெரிவிக்க வேண்டி ஒலி எழுப்ப,அதனை ஏற்று காதில் வைத்தவனின் செவிகளில் விழுந்த செய்தியில் அதிர்ந்தான்.

மதுரையில் கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு இளம்பெண் காணாமல் போயிருக்க, அந்த பெண்ணுக்கு என்ன ஆனது என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
அப்படியிருக்க அதேபோல் மீண்டும் ஒரு பெண் இப்போது காணவில்லை என்ற செய்தி அனைவரிடமும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆல்ரெடி பழைய வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் அந்த பெண்ணை கண்டுபிடிக்கப்படாததால் பொது மக்களுக்கு கூட போலீஸ் மேல் இருந்த மரியாதை குறைந்திருந்தது.

இது நடந்து சில மாதங்கள் கழித்து தான் மதி இங்கு காவல்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டது. அவனும் வந்தவுடன் அந்த கேஸ் பற்றி விசாரித்து பார்த்தான் ஆனால் எந்த சாட்சியும் கிடைக்கவில்லை. இப்போது மீண்டும் ஒரு பெண்ணை காணவில்லை என்ற செய்தி அவனுக்கு ஏனோ சரியாக படவில்லை.

எதிர்முனையில் பேசிக்கொண்டிருந்த கதிரிடம் சில ஆணைகளை பிறபித்தவன் , இன்றே மதுரைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து,அங்குள்ள அனைத்து வேலையையும் துரிதமாக முடித்துவிட்டு அன்று மாலையே மதுரைக்கு கிளம்பிவிட்டான்.

ஒருமணி நேர விமான பயணத்தில் மதுரை வந்து இறங்கியவன் வீட்டிற்க்கு கூட செல்லாமல் நேரடியாக போலீஸ் ஸ்டேஷன் வந்து சேர்ந்தான்.

கடத்தப்பட்ட பெண்ணை பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்தவன் அடுத்து எந்த இடத்திலிருந்து விசாரணையை தொடங்குவது என்று யோசிக்க தொடங்கினான்.

அந்த பெண் சவிதா என்ஜினீயரிங் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி,கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் தான் காணாமல் போய் இருக்கிறாள் என்பது வரை மட்டுமே தெரிய,இந்த வழக்கிலும் எந்த சாட்சியும் இன்னும் கிடைக்கவில்லை.

அவளின் கல்லூரி,ஃப்ரெண்ட்ஸ், குடும்பத்தினர் என்று அவளுக்கு சமந்தப்பட்ட விதத்தில் விசாரணையை தொடங்க,ஆனால் யாரும் யூகிக்க முடியாத ஒருவன் இதில் சம்பந்தப்பட்டு இருப்பான் என யாரும் நினைக்கவில்லை.

"டேய் நேத்து நைட்டிலிருந்து எல்லா இடத்திலும் தேடியாச்சு, ஆனா இந்த கேஸிலும் நமக்கு சாதகமாக ஒன்னுமே கிடைக்கலையே…
எனக்கென்னவோ நம்ம இந்த பொண்ணையும் காப்பாத்த முடியாம போய்டுமோன்னு பயமா இருக்குடா" என கதிர் புலம்ப…

"முதல இப்படி புலம்புரதை நிறுத்துடா...கண்டிப்பா ஏதாவது க்ளு கிடைக்கும்" என நம்பிக்கையை கைவிடாமல் மதி சொல்ல,

"எப்படிடா...அந்த பொண்ணு காணாமல் போய் கிட்டத்தட்ட ஒருநாள் முழுசா இருபத்தி நாலு மணிநேரம் ஆகுது,இவ்வளவு நேரத்தில் அந்த பொண்ணுக்கு என்னவெல்லாம் ஆகியிருக்குமோ!.." என்க,

அவன் சொல்வதில் இருக்கும் நிதர்சனம் புரிந்தாலும் ஏனோ மனதுக்குள் ஒரு நம்பிக்கை அந்த பொண்ணுக்கு எதுவும் ஆகியிருக்காது என்று அவனின் உள்மனம் ஆழமாக நம்பியது.

இப்போது மணி சரியாக மாலை ஐந்து என கடிகாரம் காட்ட… "கதிர் என் கூட வா" என்ற மதி அவனை அழைத்துக்கொண்டு வண்டியில் கிளம்பினான்.போகும் வழியில் "இப்போ எங்கடா போறோம்" என கதிர் கேட்க,

"ஏண்டா போன கேசிலும் இதே வழியில் தான் விசாரிச்சிருக்காங்க ஆனா ஒன்னும் வேலைக்கு ஆகலையே. இப்போ அதே தப்பை நாமளும் பண்ணனுமா" என்றவன்,

"ஒரு பொண்ணு காணும்னா பொதுவாக எல்லாரும் அவங்க ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸ் இப்படி தான் விசாரணை பண்ணுவாங்க...அது ஏன் அந்த பொண்ணுக்கோ இல்ல அவங்க குடும்பத்துக்கோ சம்பந்தம் இல்லாத நம்ம கொஞ்சமும் சந்தேகப்படாத ஒருத்தனா இருக்க கூடாது.

எல்லா கடத்தலுக்கும் பெர்சனல் மொட்டிவ் இருக்கணும்னு அவசியமில்லையே… சில வெறி பிடிச்ச நாய்ங்களுக்கு பொண்ணுன்னு எழுதி இருந்தாலே போதுமே..அதை கூட உரசிட்டு போகும் ஜென்மங்கள் இருக்க தானே செய்து.அப்படி யாராவது இந்த கடத்தலை பண்ணியிருந்தா" என கேட்க ,

"நீ சொல்றது சரி தான்டா ஆனா, ஒரு க்ளூவும் இல்லாம இப்போ என்ன பண்றது" என்றவனை பார்த்து…

"ஏண்டா நாம பாட்டுக்கு போலீஸ் ஸ்டேஷன் உள்ளேயே உட்கார்ந்து இருந்தா எவிடன்ஸ் தானா வந்து கையில் உட்காருமா...நாம தான் தேடனும்" என்றவன் அந்த பெண் படிக்கும் கல்லூரிக்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் நிறுத்தினான்.

"பொதுவா கல்லூரி முடிந்து ஐந்தரை இல்ல ஆறு மணிக்குள் வீட்டுக்கு வந்திடுவா என்று தானே அவங்க வீட்டில் சொன்னாங்க...அப்படி பார்த்த இப்போ இந்த நேரத்தில் வர பேருந்தில் சென்றால் தான் சரியாக இருக்கும்.
அப்போ இன்னைக்கு நாமளும் அதே பஸில் போகலாம்" என அப்போது வந்து நின்ற பேருந்தில் இருவரும் ஏறினர்.

இருவருமே காக்கி சட்டையில் இருக்க,இரு போலீஸார் பஸில் ஏறியவுடன் பேருந்தில் உள்ள அனைவரிடமும் சற்றுநேரம் சிறிய சலசலப்பு ஏற்பட்டு உடனடியாக மறந்தது.ஏதோ காரணத்திற்காக தான் இருவரும் வந்திருக்கிறார்கள் என்பதை ஓரளவுக்கு அனைவரும் அறிந்திருந்தால் இயல்பான படபடப்பு மட்டுமே அனைவரிடமும்.

வண்டியில் ஏறிய இருவரும் அமைதியாக டிக்கெட் வாங்கிவிட்டு கம்பியை பிடித்துக்கொண்டு நிற்க,எழுந்து அமர இடம் தர முயன்ற பலரிடமும் வேண்டாம் என சொல்லிவிட்டு இருவருமே நின்றுக்கொண்டு இருந்தனர்.

சாதாரனமாக இருந்தாலும் இருவரின் பார்வையும் அங்குள்ள அனைவரையும் பார்வையால் அளந்துக்கொண்டு இருந்தது.
அனைவரிடமும் போலீஸ் அருகில் நிற்பதால் இருக்கும் பயம் தவிர வேறெதுவும் இல்லாமல் இருந்தது ஒரு பெண்ணை தவிர.

மதியின் பார்வை தீவிரமாக அந்த பெண்ணையே நோட்டம் விட...பயத்தில் வியர்த்து வழிய,கை கால்கள் எல்லாம் பயத்தில் நடுங்க,பதட்டத்தில் கையில் வைத்திருந்த மொபைலை கூட இருமுறை கீழே போட்டுவிட்டு எடுத்து கொள்ள,அவளின் மேல் எழுந்த சந்தேகம் அதிகரித்துக்கொண்டே போனது.

ஒன்று இந்த கடத்தலில் இவளுக்கு சம்பந்தம் இருக்கணும் இல்லையென்றால் அது சமந்தமான தகவல் ஏதோ அவளுக்கு தெரிந்திருக்கனும் என யூகித்தவன், கதிரிடம் கண் காட்ட அவனும் அப்போது தான் அவளை பார்த்தான்.

அந்த பெண்ணின் தடுமாற்றமே அவளுக்கு என்னவோ தெரிந்திருக்கிறது என்பது தெள்ள தெளிவாக புரிந்து விட, அதற்குள் அந்த பெண் இறங்க வேண்டிய இடமும் வந்துவிட,பயத்தில் இவர்கள் இருவரும் இருக்கும் பக்கத்தை தவிர்த்து எதிர்புறத்தில் அனைத்து கூட்டத்தையும் இடித்துவிட்டு கீழே இறங்கினாள்.

அவளுக்கு முன்பு இருவரும் அவளுக்கு எதிரில் கைகட்டி நிற்க,அவளோ அதிர்ச்சியில் உறைந்துவிட்டாள்.
 

Anjali

Well-known member
Wonderland writer
முயன்று தன்னிலையடைந்தவள், அவர்களை கடந்து செல்ல முயல "ஒரு நிமிஷம் பிரியா" என அவள் பெயரை சொல்லி மதி அழைக்க,

அதில் இன்னும் அதிர்ந்தவள்,அதுக்குள்ள எப்படி என்னோட பெயர் தெரியும் என யோசித்தபடியே "சா...சார்ர்….ர்" என திக்கி திணற,

சாலையின் நடுவில் நிற்பதை உணர்ந்து அருகிலுள்ள ஒரு குளிர்பான கடையை காட்டி "இப்படி நடு ரோட்டில் நிற்காமல் அப்படி உட்கார்ந்து பேசலாமா" என்க,

அவளோ பயத்தில் "இல்ல இல்ல... எங்க அப்பா அம்மா தேடுவாங்க வீட்டுக்கு போகணும்" என சொல்லி தப்பிக்க முயல,

"ஓ...அப்படியா நல்லதா போச்சு. வா, உங்க அப்பா முன்னாடியே பேசிக்கலாம்" என உடன் நானும் வருவேன் என்பதை சொல்லாமல் சொல்ல,இவளோ திரு திருவென முழித்தாள்.

வேறுவழி இல்லாமல் அவர்களோடு கடைக்குள் சென்றவள்,ஓரிடத்தில் அமர்ந்து
"என்ன சார் கேட்கனும் எதுவா இருந்தாலும் சீக்கிரம் கேளுங்க வீட்டுக்கு போகணும்" என கிளி பிள்ளை போல் சொன்னதையே சொல்லி கொண்டு இருந்தாள் பிரியா.

தனது தொலைபேசியில் உள்ள கடத்தப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை அவள் முன் காட்ட, ஒரு நொடி அதிர்ந்தாலும் முகத்தில் தோன்றிய உணர்வை மறைத்து கொண்டு "இல்ல இவங்க யாருன்னு தெரியாது,நான் கிளம்புறேன்" என்க

"உனக்கு தெரியும்னு எனக்கு நல்லாவே தெரியும். தயவு செஞ்சு சொல்லுமா... உனக்கு எந்த பிரச்சனையும் வராமல் நாங்க பார்த்துக்கிறோம். அந்த பொண்ணுக்கும் உன் வயசு தான் இருக்கும், ஒருவேளை உன் அக்காவோ தங்கச்சியோ இதே நிலைமையில் இருந்தாலும் இப்படி தான் சொல்லுவியா" என நிதானமாக கேட்க,அதற்கு மேல் எதையும் மறைக்க மனமின்றி சொல்ல தொடங்கினாள்.

"இந்த பொண்ணு யாருன்னு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா தினமும் நான் போகுற பஸ்ல தான் வருவாங்க.இதுவரைக்கும் பேசியது கூட இல்லை. எப்பவும் காலேஜ் போகும் போதும் வரும் போதும் பார்ப்பதோடு சரி" என்றவள்,

"நேத்து நானும் அந்த பஸில் போகலை,அது...து" என வார்த்தைகள் வராமல் தவிக்க,

"எதுவா இருந்தாலும் எங்களை நம்பி சொல்லலாம்" என்ற மதியின் வார்த்தையில் நம்பிக்கை வர பெற்றவள்…"அது நேத்து என் பாய் ஃப்ரெண்ட்க்கு பர்த்டே அதான் இரண்டு பெறும் தியேட்டர் போய் படம் பார்துட்டு வரும் போது,யாருக்கும் தெரிய கூடாது என்பதற்காக மெயின் ரோடு வழியா போகாம குறுக்கு வழியில் போனோம். அப்போதான் அவங்களை பார்த்தேன்" என்க

"எங்க?.. எப்படி?..யாரு கூட இருந்தா?.." என இருவருமே ஒருவித பரபரப்பில் கேட்க,
அவளும் இடத்தை சொன்னவள்,ஆனா அந்த பொண்ணு கார் ஜன்னல் மயங்கி இருந்தது. வேற யாரும் இல்ல,ஒரே ஒரு டிரைவர் மட்டும் தான் காரில் இருந்தான்" என பார்த்த அனைத்தையும் சொல்லி முடித்தவள்,

"நிஜமா எனக்கு அப்போ எந்த சந்தேகமும் வரலை ஒருவேளை வீட்டில் உள்ளவங்களோடு வந்திருப்பா, அப்படின்னு தான் நினைச்சேன்,அந்த பொண்ணு மயக்கத்தில் இருந்தது கூட தூங்கிட்டு இருந்ததா தான் நினைச்சேன்.எனக்கே காலையில் நியூஸ் பார்த்து தான் தெரிஞ்சிது அந்த பொண்ணு கடத்தப்பட்டது.ஆனா வெளியில் சொல்ல பயந்து தான் சொல்லலை" என்றாள்.

"சரிமா….உனக்கு அந்த வண்டியோட நம்பர் இல்ல அந்த டிரைவரை அடையாளம் தெரியுமா" என்க,

"இல்ல சார்,அந்த ரோடு கொஞ்சம் மேடும் பள்ளமுமா இருந்ததால் ஃபக் கொஞ்சம் ஸ்லோவா போச்சு அதனால் தான் அந்த பொண்ணையே பார்க்கவே முடிஞ்சுது. கார் நம்பர் எல்லாம் தெரியாது,டிரைவர் முகமும் அவ்வளவா நியாபகமில்லை.ஆனா திரும்பவும் ஒருமுறை பார்த்தா கரெக்டாக சொல்லுவேன்" என சொல்ல,

அவர்களும் இந்த வழியில் முயற்சிக்கலாம் என்ற எண்ணத்தோடு அந்த பெண்ணோடு காவல் நிலையம் நோக்கி சென்றனர்.அவளின் பயத்தை உணர்ந்து மதியே அவளின் பெற்றோர்களிடம் பேச…. முதலில் போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் அனுப்ப முடியாது என்றவர்கள்,பின்னர் மதியின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து மகளுக்கு துண்ணையாய் அந்த பெண்ணின் தந்தையும் காவல் நிலையம் வந்தார்.

ஆல்ரெடி தங்களிடம் உள்ள குற்றவாளிகள் புகைப்படம் அனைத்தையும் அந்த பெண்ணிடம் கொடுக்க,அவளும் ஒவ்வொன்றையும் பார்க்க தொடங்கினாள்.

ஒரு அரைமணி நேரம் சென்றிருக்க,இதுவரை பார்த்த அனைத்து

ஃபோட்டோகளையும் இல்லை இல்லை என சொல்லி ஒதுக்கி வைத்தவள்,ஒரு புகைப்படத்தை பார்த்தவுடன் அப்படியே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தவள் முகம் பதட்டத்தை ஏந்திகொள்ள "இவன்தான் சார் அந்த காரில் இருந்தவன்" என அதனை மதியிடம் காட்ட,அவனோ அதிர்ந்து இவனா என்பது போல் பார்க்க, மதியிடமிருந்து அந்த ஃபோட்டோவை பறித்து கதிர் பார்க்க அவனுக்கும் அதே அதிர்ச்சி தான்.
 
Status
Not open for further replies.
Top