ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கனவிலே மிதக்கும் விழிகள் - கதை திரி

Status
Not open for further replies.

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 23

குழந்தையோடு வீடு வந்து சேர எடுத்துக்கொண்ட ஒரு வாரமும் ஒருமுறை கூட மரகதம் மருமகளையோ பேத்தியையோ பார்க்க கூட செல்லவில்லை.

சாந்தி நேராக அவரின் தாய் வீட்டிற்கு சென்றுவிட, தினமும் சண்முகம் மட்டும் மனைவி குழந்தைகளை சென்று பார்த்து வருவார்.அன்றும் இருவரையும் பார்த்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்த மகனை தடுத்த மரகதம் "அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்கப்பா" என கேட்க,அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியாமல் "என்னம்மா கேட்கிறீங்க புரியலை" என சொல்ல,

"ஏண்டா... இப்படியே இளிச்சவாயனா இருந்தா அவ்ளோ தான்.நான் எதை பத்தி பேசுறன்னு கூட தெரியாம இருக்குறியே,உன் பொண்டாட்டி பிள்ளைங்க பத்தி தான் கேட்கிறேன்" என சொன்னவரை பார்த்து,


"அவங்களை பத்தி என்ன சொல்லனும்.மூணு பேரும் நல்லா இருக்காங்க...நீங்க என்னவோ சொல்லவரீங்கன்னு நல்லா தெரியுது. எதுவா இருந்தாலும் புரியும்படி சொல்லுங்க?..இந்த சுத்தி வலைக்கிற வேலையெல்லாம் வேண்டாம்" என நேரடியாக விஷயத்திற்கு வந்தவர் தாயின் முகத்தையே பார்க்க,

ஒரு பெருமூச்சை வெளியிட்ட மரகதம் "இங்க பாருடா நமக்கு நம்மளோட குடும்பம் தான் முக்கியம். அதுதான் அந்த டாக்டர் திரும்பவும் குழந்தை பெத்துக்கவே முடியாதுன்னு சொல்லிட்டாங்களே, அதை பத்தி கேட்டேன்" என தயக்கமாக குரலில் சொல்ல,

"அதுக்கு என்னம்மா பண்ண முடியும். கடவுள் கொடுத்தது இதுதான்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்.முதல்ல எனக்கு கூட கொஞ்சம் வருத்தம் இருந்தது தான் இல்லைன்னு சொல்லல...ஆனா குழந்தை முகத்தை பார்த்ததும் எல்லாமே ஓடி போய்டுச்சு.ஆனா நீங்க இன்னும் குழந்தையை கூட பார்க்கலையே" என வருத்தமாக சொல்ல,

"நான் எதை பத்தி சொல்றேன்,நீ எதை சொல்ற,இந்த வீட்டுக்கு உனக்கு அடுத்து ஒரு மகன் வேணாமா?...பேசாம நான் சொல்றதை கேளு நம்ம சொந்ததிலேயே ஒரு பொண்ணு இருக்கு இரண்டா தாரமா கட்டிக்கோ.பொண்ணு வீட்டுல கூட பேசிட்டேன்.அவங்களுக்கும் சம்மதம் தான்" என்ற தாயை அதிர்ந்து பார்த்தார் சண்முக சுந்தரம்.

"அம்மா….ஆ.. என்ன பேசுறீங்க?...உங்களால எப்படி இப்படியெல்லாம் பேச முடியுது. நான் போய் இன்னொரு கல்யாணம்.என்னால அதை நினைச்சு கூட பார்க்க முடியலை. வேண்டாம் இதோடு இந்த பேச்சை நிறுத்திக்கோங்க. நீங்க தலைகீழா நின்னாலும் இது நடக்கவே நடக்காது" என்றவர் கோபத்தோடு சென்றுவிட,

இவன்கிட்ட பேசி ஒன்னும் ஆகப்போறது இல்ல,நான் யாருகிட்ட பேசனுமோ அவங்ககிட்ட பேசிக்கிறேன் என தனக்குள் சொல்லிக்கொண்டவர், மறுநாள் மகன் வேலைக்கு சென்றவுடன் சாந்தியை காண வந்துவிட்டார்.

இத்தனை நாட்கள் கழித்து வரும் மாமியாரை பார்த்தவுடன் அப்பாடா இப்போதாவது கோபம் குறைந்து வந்துவிட்டார் என சந்தோஷப் பட, மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றாள். அவரை தொடர்ந்து கணவன் வழி சொந்தங்கள் அனைத்தும் வந்திருக்க அனைவரையும் வரவேற்றனர்.

"வாங்க அத்தை...வாங்க" என அனைவரையும் அழைத்து, குழந்தையை பார்க்கத்தான் தான் வந்திருக்கிறார்கள் என்று எண்ணி நேராக அறையில் தூங்கிக்கொண்டிருக்கும் மகளை தூங்கிவர அறைக்கு செல்ல முயல,

அவரோ "நாங்க யாரையும் பார்க்க வரலை.உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேச தான் வந்தேன், அதனால இங்கனயே பேசலாம்" என நடுகூடத்திலேயே அனைவர் முன்பும் பேச்சை தொடங்கினார்.

அனைவரும் கேள்வியாக மரகதத்தின் முகத்தையே பார்க்க,அடுத்து அவர் சொன்ன வார்த்தையில் சாந்தியின் மொத்த குடும்பமே அதிர்ந்தது.

"நான் நேரடியாக விஷயத்துக்கு வரேன்...எனக்கு என் குடும்பம் விருத்தியடையனும்,உன்னால முடியாதுன்னு தெரியும் அதனால எப்படியாவது நீதான் என் பையனை இரண்டாவது கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கணும்" என்றார்.

அத்தனை பேர் முன்பும் இப்படி பேசியது கூனிகுறுக செய்ய...விழிகள் கலங்க தன் மாமியாரையே பார்த்துக்கொண்டிருக்க,உள்ளே மகள் அழுகும் குரல் கேட்டது.

சட்டென்று உள்ளே சென்று மகளை தூக்கி வந்த சாந்தி 'இந்த பிஞ்சு குழந்தையின் முகத்தை பார்த்தாவது மனம் மாறிவிட மாட்டாரா' என நற்ப்பாசையில் "அத்தை இவளை பாருங்க இவளும் உங்க பேத்தி தானே...அப்பறம் ஏன் அத்தை இந்த மாதிரி" என அங்கே தன் வாழ்க்கையே பறிபோய் விடுமோ என்று கண்ணீர் வடிக்க,

சுற்றி நின்ற குடும்பத்தினரும் முதலில் பொறுமையாக எடுத்து சொல்ல,அதை கேட்கும் நிலையில் அவர் இல்லை என்று தெரிந்தவுடன் "உங்களுக்கு எல்லாம் மன சாட்சியே இல்லையா நீங்களும் ஒரு பொண்ணு தானே" என கேட்க,

"ஏன் சொல்ல மாட்டீங்க, என் குடும்ப விளக்கை ஏற்ற வந்த மகாலட்சுமின்னு நினைச்சு தான் நானும் பெண் எடுத்தேன். கடைசியில என்னாச்சு... விளக்கு அனஞ்சு போனது தான் மிச்சம்.போதும் உங்க பொண்ணோட என் மகன் வாழ்ந்த வாழ்க்கை.இத்தோடு எல்லாத்தையும் முடிச்சிக்களாம்.என்னோட முடிவு இதுதான் இரண்டு பேருக்கும் வெட்டிவிட்டுட்டு என் சொந்தத்தில் ஒரு பொண்ணு இருக்கு அவளை தான் என் மகனுக்கு கட்டி வைக்க போறேன்" என்றவர்,

"என் மகனும் கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டான்" என ஒரு பெரிய அணுகுண்டை தூக்கி போட, எல்லாரும் அதிர்ந்தாலும்
சாந்தி முகத்தில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. "இல்ல நீங்க சொன்னதை நான் நம்ப மாட்டேன். அவரு கண்டிப்பா அப்படி சொல்லியிருக்க மாட்டார்" என சொன்ன சாந்தி இப்போது தைரியமா மாமியாரை எதிர்கொண்டார் தன் கணவர் மேல் கொண்டுள்ள நம்பிக்கையில்.

மரகதம் அதன் பின்னரும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க,ஒரு கட்டத்தில் பொறுமை பறக்க சாந்தியின் இரண்டு அண்ணங்களும் "இங்க பாருங்கமா வயசுல பெரியவங்களாச்சேன்னு அமைதியா இருக்கேன். இல்லனா நடக்கிறதே வேற...முதல்ல இங்கிருந்து கிளம்புங்க" என கோபத்தில் கத்த,

அதுவரை பொறுமையாக இருந்த ஊர்க்காரர்கள் "ஓ… அப்படியா,உனக்கு மட்டும் தான் கோபம் வருமா ஏன் எங்களுக்கு எல்லாம் வராதா" என சண்டைக்கு தயாராக...வாய் சண்டை திடீரென்று அடிதடிக்கு மாறிவிட்டது.

அப்போது மகளையும் மனைவியையும் காண வந்த சண்முக சுந்தரத்தை பார்த்தவுடன், மரகதம் இதுதான் சமயம் என்று ஒண்ணுக்கு இரண்டாய் கண்ணீரோடு போட்டு கொடுக்க,அவரின் சொந்தங்களும் எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல் இல்லாதது பொல்லாதது என்று இட்டுக்கட்டி சொல்ல,

அவரும் கோபத்தில் தன் மச்சான்களை முறைத்தவர், "இதுதான் நீங்க எங்களுக்கு கொடுக்குற மரியாதையா?...ஏதோ பெரியவங்க தெரியாம பேசினால் அதுக்காக அவங்களை இப்படி தான் மரியாதை இல்லாமல் நடத்துவீங்க இல்ல" என கோபத்தில் பேசியவர் மீண்டும் பிரச்சனையை பெரிதாக்காமல் அனைவரையும் கிளப்ப,

அவர்களோ "அது எப்படி அடிவாங்கிட்டு பேசாம போக நாங்க என்ன மான ரோஷம் இல்லாதவங்களா...முதல்ல உங்க மச்சான் இரண்டு பேரையும் எங்ககிட்ட மன்னிப்பை கேட்க சொல்லுங்க" என கத்த,

சாந்தி குடும்பம் அதற்கு எதிர்ப்பை தெரிவிக்க...சண்முக சுந்தரத்திற்கு மனைவியின் சொந்தங்களை விட தங்கள் சொந்தமே முதன்மையாக இருக்க "இப்போ நீங்க மன்னிப்பு கேட்க்கலைன்னா... அப்பறம் கடைசிவரை உங்க தங்கச்சி உங்க வீட்லயே இருக்க வேண்டியது தான். இதுவரைக்கும் உங்க தங்கச்சியை விட்டுட்டு வேறு பொண்ணை கல்யாணம் பண்ணும் எண்ணம் எனகில்லை ஆனா அதை வர வச்சீடாதீங்க" என்று அத்தனை பேர் முன்பும் மனைவியை முன்னிறுத்தி கேட்க,

சாந்தி விழிகளில் வழியும் கண்ணீரோடு கணவனையே பார்த்தவர்,திரும்பி தன் அண்ணன்கள் முகத்தை பார்க்க, தங்கைக்காக எதற்கும் துணிந்தவர்கள் அதற்கும் ஒத்துக்கொண்டு மன்னிப்பை வேண்ட வர….கூட்டத்தில் நின்ற மேகலா இதுதான் நேரம் என்று எல்லார் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்கனும்" என்றார்.

அனைவரும் "ஆமா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கனும் இல்லனா உங்க பொண்ணு வாழாவெட்டி தான்.உங்களுக்கு வேற வழியில்லை" என சொல்ல,ஆனால் இதற்கு சாந்தியே "அதெல்லாம் முடியாது.அவங்க எந்த தப்பும் பண்ணமா எனக்காக யாரு காலில் விழ மாட்டாங்க" என்க,

மரகதத்திற்கு இதுவே போதுமானதாக இருந்தது. எப்படியும் மகனின் கோபத்தை அதிகப்படுத்தி அப்படியே இவளையும் தலை முழ்கிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஏத்திவிட…."அப்போ நாங்க கிளம்புறோம் உங்களுக்கும் உங்க பொண்ணு மேல அக்கறையில்லை...அவளுக்கும் என்னோட வாழ ஆசையில்லை. அப்பறம் நான் மட்டும் எதுக்கு கவலைப்படனும்" என்றவர் அனைவரோடும் கிளம்ப,

வாசல்வரை வாசலை தாண்டும் போது மித்ரா தந்தையின் காலை பிடித்துக்கொண்டு தூக்க சொல்லி அடம்பிடிக்க,கோபத்தில் மனைவியை வேண்டாம் என சொல்ல முடிந்தவரால் மகளை சொல்ல முடியவில்லை.

திரும்பி மனைவியின் அருகில் வந்தவர் "உனக்கு ஒரே ஒரு வாய்ப்பு தரேன்...உனக்கு நான் வேணுமா இல்ல உன் குடும்பமான்னு நீயே முடிவு பண்ணிக்கோ….நான் தான் வேணும்னா இனிமேல் உனக்கு பிறந்த வீடுண்ணு ஒன்னு இருக்கிறதை இன்னையோடு தலை முழ்கிட்டு வா... எனக்கு பொண்டாட்டியா மட்டும்" என்க,

என்னதான் பெற்றவர்கள் முக்கியம் என்றாலும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என சொல்லும் வர்க்கத்தில் இருந்தவளுக்கு கணவனே முக்கியமாக தெரிய மனதை கல்லாக்கி கொண்டு அவரோடு சென்றார்.

அவ்வளவு தான் அதன் பின் பிறந்த வீடு சொந்தம் மொத்தமும் விட்டு போக,கணவனுக்கு தெரியாமல் அவர்களோடு பேசுவதில் உடன்பாடு இல்லாததால் வீட்டுக்குள்ளேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். முன்பு போல் கணவரும் சரியாக பேசாததால் அவர்கள் இடையே இருந்த மெல்லிய விரிசலை மேலும் அதிகரிக்கும் விதமாக தாயும் தங்கையும் சேர்ந்து தினமும் ஒரு பிரச்சனையை கிளப்ப...சுத்தமாக மனைவியை தவிர்த்துவிட்டார். அந்த விரிசல் தொடர்ந்து மகள்களிடமும் ஆரம்பிக்க...வீட்டில் பேசுவதையே குறைத்துக்கொண்டார்.

தன் அத்தையை காண வந்த மதியையும் திட்டி விரட்டிவிட்ட மரகதம், அந்த வீட்டின் மகாராணி போலவும் சாந்தி மற்றும் அவளின் பிள்ளைகளையும் மகன் கண்களுக்கு தெரியாமல் ஒரு அடிமை போலவே நடத்த தொடங்கிவிட்டார்.

அதுவரை சுதந்திரமாக இருந்த மித்ராவிற்கு அங்கு இருக்கவே பிடிக்காமல் தன் மாமா வீட்டுக்கு ஓடிவிடுபவள் மதியோடு சுற்ற...அது எப்படியோ மரகத்தின் காதில் விழுந்துவிட,குழந்தை என்றும் பாராமல் அடி வெளுத்துவிட்டார்.

ஆனால் அதற்கும் அடங்காமல் திரும்ப திரும்ப அதையே செய்ய…. மதியின் கண் முன்பே அவள் வாங்கிய அடியை பார்த்து மதியே அவளிடமிருந்து கொஞ்ச கொஞ்சமாக ஒத்துங்கிவிட்டான். மீண்டும் மீண்டும் அவனை சுற்றியே வரும் மித்ராவை பார்த்து பாவமாக இருந்தாலும் எங்கே தான் பேசினால் அவள் அடிவாங்கி விடுவாளோ என்றே அவள் அழுகை அனைத்தையும் பொறுத்துக்கொண்டு கடந்து செல்லுபவன் வீட்டில் உள்ளவர்களிடம் பேச கூடாது என கண்டிப்பாக சொல்லிவிட்டான்.

அப்படி ஒரு நாளில் தான் மித்ரா... "மதியிடம் என்கிட்ட நீ பேச மாட்டியா?..நான் வேனா இனிமேல் உன்னை மாமான்னு கூப்பிடுறேன்.வாடா போடா எல்லாம் சொல்ல மாட்டேன்" என அவனின் பலநாள் ஆசையை சொல்ல...அவனோ உனக்கு ஒரு தடவை சொன்ன புரியாதா,எனக்கு தான் உன்னை பார்க்கவே பிடிக்கலைன்னு சொல்றேன் இல்ல போ" என விரட்டினான் தூரத்தில் தன் மாமா வருவதை பார்த்துவிட்டு.

அவளோ அழுதுகொண்டே "அப்போ உனக்கு மித்து பாப்பா உண்மையிலேயே வேணாமா" என்க,அவனும் "வேணாம் வேணாம்" என கத்தினான்.

அப்போது அங்கு அவளின் தந்தை வந்துவிட, அவளும் சலுகையாய் "அப்பா..ஆ... மதி என் கூட" என சொல்ல வரும் முன்பே பளார் என்று குழந்தையை அறைய...அப்படியே கீழே சுருண்டு விழுந்துவிட்டாள்.

ஆல்ரெடி தன் அத்தையை பார்க்கவிடாமல் செய்ததில் அவர் மேல் கோபத்தில் இருந்தவனுக்கு இதுவும் கோபத்தை கிளப்ப ...கொஞ்சமும் யோசிக்காமல் அத்தனை பேர் முன்பும் அவர் சட்டையை பிடித்துவிட்டான் மதி.

"உங்களால தான் அன்னைக்கு என் அத்தை அழுதாங்க...இப்போ இவ,இன்னொரு வாட்டி இரண்டு பேர் மேலயும் கைவச்சீங்க அப்பறம் அவ்ளோதான். ஊர்ல இருக்கிறவன் எல்லாரும் உங்களுக்கு பயப்படலாம் ஆனா எனக்கு அப்படியெல்லாம் கிடையாது" என சொன்னவன் சட்டையை விட்டுவிட்டு கீழே விழுந்தவளை பார்த்தும் பார்க்காமல் சென்றுவிட்டான்.

நாட்கள் செல்ல அவளுக்கு அனைத்தும் புரிய ஆரம்பித்த வயதில் அவனிடம் பேச சொல்லி கெஞ்சுவதை நிறுத்திவிட்டு…'இனி நீயே வந்து பேசினாலும் நான் பேச மாட்டேன்' என்ற வைராக்கியத்துடன் அவள் தன் வேலையை பார்க்க தொடங்கிவிட்டாள்.

அனைத்தையும் சொல்லி முடித்தவன் அவள் முகம் பார்க்க,அவளோ அழ தயாராக இருந்தாள். எட்டி அவளை அணைத்தவன் "அதெல்லாம் முடிஞ்சு போன விஷயம் டா… அதுதான் என் மித்து குட்டியை கட்டம் கட்டி தூக்கிட்டு வந்திட்டேனே" என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் "அப்போ எனக்காக தான் நீங்க எல்லாரும் என்கிட்ட பேசாம விலகி விலகி போனீங்களா?...இது தெரியாம எல்லாரையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்" என வருந்தியவள்,அவன் முகம் பற்றி தன் காதலை முத்தத்தில் உணர்த்த,அவனும் பதிலுக்கு பதில் அவள் கொடுத்ததை அவளுக்கே திருப்பி கொடுத்தான்.

மறுநாள் என்றுமில்லாமல் தாத்தா,பாட்டி அத்தை மாமா என அனைவரிடமும் இயல்பாக உரிமையுடன் பேசியவள் இத்தனை நாள் அவர்களிடம் பேசாமல் இருந்ததிற்கு மன்னிப்பும் கேட்டுவிட...இழந்த சொர்கம் மீண்டுவிட்ட சந்தோஷத்தில் அனைவரும் புன்னகையோடு வலம் வந்தனர்....மீனா "முதல்ல வீட்டில உள்ள எல்லாரையும் உட்கார வச்சு சுத்தி போடு. என் கண்ணே பட்டுடும் போல" என்றார் பாட்டி.

மித்ரா கல்லூரிக்கு கிளம்ப... எப்போதும் பேசிக்கொண்டே வரும் மது இன்று அமைதியாக இருக்க…"அக்கா என்ன?..ஒரே ஆழ்ந்த யோசனையில் இருக்கீங்க போல,என்ன மாமாவோட சண்டையா?..."என சரியாக கேட்க,

உனக்கு எப்படி தெரியும் என திருதிருத்தவளை பார்த்து "ரொம்ப யோசிக்காதீங்க,அதுதான் உங்க மூஞ்சியில் எழுதி ஒட்டியிருக்கே…" என சிரித்தவளை பார்த்து,

"என் முகத்துல தெரியரது இருக்கட்டும்...என்ன இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க,நேத்து வேற மேடம் காலேஜ் லீவ்,என்ன மேட்டர்" என்றவளை பார்க்க முடியாமல் அழகாக வெட்கப்பட, "ஓ... மேடம்க்கு வெட்கமெல்லாம் பட தெரியுமா?...இது தெரியாம போச்சே" என கலாய்க்க, இருவருமே சிரித்துக்கொண்டே கல்லூரிக்கு சென்றனர்.

இங்கு பிரகாஷ் கோபத்தின் உச்சியில் இருந்தான். என்ன முயற்சி செய்தும் நண்பனை விடுவிக்க முடியாத கோபம் மொத்தமும் வெறியாக மதியின் மேல் திரும்பியது. அவனை ரொம்ப சாதாரணமா நினைச்சிட்டேன்.அதான் இப்படி ஆகிடுச்சு, ஆனா திரும்பவும் அவன்கிட்ட தோற்க மாட்டேன் என கத்தியவன், மதியை வீழ்த்த திட்டங்களை தீட்ட தொடங்கினான்.

"பிரகாஷ் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராத… இன்னும் உன் படிப்பு முடியலை அது நினைவில் இருக்கா?...முதல்ல படிப்பை முடிச்சிட்டு உன்னோட மேற்படிப்பை லண்டன்ல உள்ள பெரிய யுனிவர்சிட்டியில் படிக்க சீட் ரெடியா இருக்கு.நீ இங்கேயே இருந்தா...இன்னைக்கு இல்லனாலும் ஒருநாள் உன் பிரென்ட் உங்க எல்லார் பேரையும் சொல்லிட்டா உன் எதிர்காலமே வீனா போயிடும். அதனால இந்த விஷயத்திலாவது எங்க பேச்சை கேளு" என அவனின் தந்தையும் தாயும் எடுத்து சொல்ல,

"எப்படிப்பா அவனை சும்மா விட்டுட்டு போக சொல்றீங்க?..முடியாது போகிறதுக்கு முன்னாடி அவனை ஒருவழி பண்ணிட்டு தான் போவேன்" என ஆத்திரத்தில் கத்தும் மகனை சமாதானப்படுத்தும் விதமாக…

"அதைதான் நாங்களும் சொல்றோம்.கோபத்தில் எடுக்கும் முடிவு ஆபத்தில் தான் முடியும். கொஞ்சம் இந்த விஷயத்தை ஆறப் போடுவோம்.அதுக்குள்ள நீ உன் படிப்பை முடிச்சிடலாம் அப்பறம் நானே உனக்கு எல்லாவிதத்திலும் ஹெல்ப் பண்றேன்" என எந்த தந்தையும் செய்யாத... மகனின் கேவலமான எண்ணத்திற்கு ஆதரவு தெரிவித்தார் பிரகாஷின் தந்தை. அவனின் தந்தையே இவ்வளவு கேவலமானவனாக இருக்கும் போது அவரின் மகன் பிரகாஷ் மட்டும் எப்படி இருப்பான்.

கல்லூரிக்கு வந்த பிரகாஷ்...தன் நண்பர்களிடம் தந்தை சொன்னதை சொல்ல,அவர்களும் அதையே சொல்ல...பின்னர் அவனும் அதனை ஏற்றுக்கொண்டான். "எல்லாம் சரிடா ஆனா இவளை விட்டுட்டு எப்படிடா போறது.எனக்கு எது இல்லாமல் போனாலும் பரவாயில்லை, ஆனா எந்த காரணத்திற்காகவும் இவளை மட்டும் என்னால் விட்டு கொடுக்க முடியாது….அது என்னவோ தெரியலை அவ மேல அப்படி ஒரு வெறி,அவளை முழுசா அடையிற வரை அது அடங்கவே அடங்காது" என மித்ராவையே மோக பார்வை பார்த்துக்கொண்டே சொல்ல,

"மச்சான் இப்போ தான் ஃபர்ஸ்ட் இயர் முடிக்க போறா...இன்னும் முழுசா நாலு வருஷம் இருக்கு.அதுக்குள்ள நீயும் திரும்ப வந்திடலாம். அப்பறம் என்ன அவளுக்கும் பிடிச்சா கட்டிக்கோ... இல்லையா வச்சுக்கோ அவ்ளோ தான் மேட்டர்.இதுக்கா இவளோ ஃபீல் பண்ற. அவளை பார்த்தா யாரையும் காதலிக்கிற மாதிரி தெரியலை,அப்படியே அது மாதிரி ஏதாவதுன்னா நமக்கா தெரியாது என்ன பண்ணனும்னு. ஜஸ்ட் ஃபீல் ஃப்ரீ டா.நாங்க இருக்கோம்" என்ற நண்பர்களின் வார்த்தை அவனையும் வெளிநாடு செல்ல சம்மதிக்க வைத்தது.
 

Anjali

Well-known member
Wonderland writer
அன்று வழக்கம் போல் தன் வேலையில் மூழ்கியிருந்த மதியின் அறைக்குள் நுழைந்த கதிர் "உன்னை பார்க்க ஒருத்தர் வந்திருக்காங்க டா" என்க,அவனோ கேள்வியாக நண்பனின் முகத்தை பார்த்தான்.

"யாரு?...என்ன விஷயம்" என கேட்டவன் நண்பன் சொன்ன பதிலில் விழிகள் ஆச்சிரியத்தில் விரிய,ஒருவேளை தப்பா காதுல விழுந்துடுச்சோ என்ற எண்ணத்தில் "என்னடா சொல்ற" என மீண்டும் கேட்க,

"டேய்...சரியா தான்டா கேட்குது.உன் மாமனார் தான் வந்திருக்கார். ஏண்டா எல்லாரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு மாமியார் வீட்டுக்கு போவாங்க... நீ என்னடான்னா அங்க போகாமலே உன் மாமனாரை மாமியார் வீட்டுக்கு வர வர வெச்சுட்ட...செம்ம டா" என கலாய்க்க,

"டேய் அடங்குடா.. அவங்க தங்கச்சி பையனை உள்ள வெச்சதுக்கு நியாயம் கேட்க வந்திருக்க போறார்... உள்ள அனுப்பு" என சொல்லிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.

தன்னை பார்த்தவுடன் முறைக்கும் மாமனார் இன்று அமைதியாக வருவதை பார்த்து வியந்தாலும் முகத்தில் எதையும் காட்டாமல் எப்போதும் பேசும் துடுக்குத்தனமான மதி வெளியே வர,

"அப்பறம் வாங்க மாமா...மருமகனை பார்க்காம இருக்க முடியலையோ,தேடிட்டு ஸ்டேஷன் வரைக்கும் வந்திருக்கீங்க" என கேட்க,

அவன் நக்கலை ரசித்தவர், "உங்களுக்கு நன்றி சொல்ல தான் வந்தேன் என்றவர், ரொம்ப நன்றி நீங்க பண்ண எல்லாத்துக்கும்" என சொல்லிவிட்டு எழ அவரை தடுத்தது அவனின் அடுத்த கேள்வி.

"உங்களுக்கு என்மேல் கோபம் இல்லையா?..உங்க மாப்பிள்ளையை கைது பண்ணதுக்கு. என்னை திட்ட தான் வந்தீங்கன்னு நினைச்சேன்" என சொல்லிவிட்டு அவரின் பதிலுக்காக காத்திருக்க,

அவரோ புன்னகையோடு "அவனை மாதிரி பொறுக்கியை அரஸ்ட் பண்ணலனா தான் கோபம் வந்திருக்கும் மாப்பிள்ளை" என்று அந்த மாப்பிள்ளையில் அழுத்தம் கொடுத்து சொன்னவர் வாசலை கடக்கும் நொடி திரும்பி "என் பொண்ணுகிட்ட நான் மன்னிப்பு கேட்டதா மட்டும் சொல்லிடுங்க. அப்போ நான் கிளம்புறேன் என் சின்ன பொண்ணுக்கு ஸ்கூல் முடியிற நேரம்... அவளை அழைக்க போகணும்" என்று அவன் கேட்காத தகவலையும் சொல்லிவிட்டு சென்றுவிட…

மதி அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் போட்டி போட அசையாமல் அமர்ந்திருந்தான் அவரின் இந்த பரிணாமத்தில். மொபைல் சத்தத்தில் கலைந்தவன் அதனை ஏற்க, எதிரில் அவனின் மனையாள் தான்... காலேஜில் இருந்து அழைத்து செல்ல வருமாறு அழைத்திருந்தாள். அவனும் கணவன் கடமை அழைத்தவுடன் பார்த்திருந்த காவலன் கடமையை அப்படியே போட்டுவிட்டு கிளம்பிவிட்டான் தன்னவளை பிக் அப் பண்ண.
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 24

நாட்கள் செல்ல...முதல் வருட தேர்வை வெற்றிகரமாக எழுதி முடித்துவிட்டாள் மித்ரா.பிரகாஷ் தன் படிப்பிற்காக வெளிநாடு சென்றுவிட...மதுவும் இரண்டாம் ஆண்டில் காலெடுத்து வைத்துவிட்டாள்.

இன்னும் கதிர் மது இருவருக்கும் உள்ள பிரச்சனை அப்படியே இருந்தது. முதலிலாவது நண்பர்கள் போல் இருவரும் பேசிக்கொண்டு இருக்க, இப்பொழுது இவரின் பார்வை கூட மற்றவர்களை தீண்டாமல் விலகி செல்லும் அளவுக்கு சென்றுவிட்டது. தன் தவறை உணர்ந்து மது மன்னிப்பு கேட்டும் அவனால் அவளிடம் இயல்பாக பேச முடியவில்லை.அவன்தான் விலகி விலகி செல்கிறான்.

அவனிடம் பேசிக்கொண்டிருந்த போது தோன்றாத ஏதோ ஒன்று அவன் தன்னை தவிற்கும் போது உணர்ந்தாள் மது. அது மஞ்சள் கயிரின் மாயமோ இல்லை காதல் செய்யும் மாயமோ அதை அவளால் பிரித்தறிய தெரியவில்லை.

இவர்களுக்கு அப்படியே எதிராக...மதியும் மித்ராவும் தினமும் ஒரு தடவையாவது சண்டை போட்டுவிட்டு அவளை சமாதானப்படுத்தி ஒரு முத்தமாவது வாங்காமல் விடமாட்டான் மதி.

அன்றும் வழக்கம் போல் காலையிலேயே சண்டை தொடங்கியது. "டேய் லூசு மாமா உன்னை என்ன சொன்னேன் நீ என்ன பண்ணி வச்சிருக்க?...ஒழுங்கா ஒரு ரெக்கார்டு நோட் கூட வரைய தெரியலை,நீயெல்லாம் என்னதான் போலீஸ். பாரு வரைஞ்சது நல்லாவே இல்ல" என கல்லூரிக்கு கிளம்பும் அவசரத்தில் கத்த,

"ஏண்டி நேத்தே எனக்கு இந்த வரையிற வேலையெல்லாம் தெரியாதுன்னு சொன்னதுக்கு அதெல்லாம் பரவாயில்லை சுமாரா வரைஞ்சா போதும்னு சொல்லிட்டு இப்போ இந்த கத்து கத்துற….எனக்கு தேவைதான். பாவம் குழந்தை ரொம்ப கஷ்டப்படுறாளேன்னு ஹெல்ப் பண்ணுறேன் இல்ல, எனக்கு இது தேவை தான். இனிமே அத்தான் மாமான்னு ஐஸ் வை உனக்கு இருக்கு" என பதிலுக்கு இவனும் கத்த…

இருவரின் சத்தமும் ஹாலில் அமர்ந்திருந்த அனைவருக்கும் கேட்டது. யாரும் அதை கண்டுகொள்ளாமல் தங்களுக்குள் சிரித்துவிட்டு அவரவர் வேலையை பார்த்து கொண்டிருந்தனர். அதற்கு காரணம் இது தினமும் நடப்பது தான் என்றாலும் அதை விட பெரிய இன்னொரு காரணமும் இருந்தது. இருவரின் சண்டையில் யாராவது தலையிட்டாள் அவர்கள் அவ்வளவு தான். அதுவரை எதிர் எதிர் அணியில் இருக்கும் இருவரும் ஒன்று கூடி இது புருஷனுக்கும் பொண்டாட்டிக்கு உள்ள பிரச்சனை இதில் உங்களுக்கு என்ன வேலை என்று வந்தவர்களை ஜோக்கர் ஆக்கி தான் விடுவிப்பார்கள். அதனால் தான் இந்த அமைதி அனைவரிடமும்.

சண்டை நிற்காமல் தொடர்ந்து கொண்டே இருக்க,ஒருநிலைக்கு மேல் பொறுக்காமல் கதவை தட்டினார் பாட்டி.
சட்டென்று இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு இன்னைக்கு எந்த ஆடு தலையை கொடுக்குது என்ற குதூகலத்தில் கதவை திறக்க,அங்கே இடுப்பில் கைவைத்து இருவரையும் முறைத்துக் கொண்டிருந்தார் அவர்.

"வாங்க வாங்க என்னடா இன்னும் யாருமே வரலைன்னு நினைச்சேன், வந்துட்டீங்க. ஆமா இரண்டு பேரும் ஒரு மணி நேரமா சண்டை போடுறோமே...யாருக்காவது தடுக்க தோனுதா. இது தான் நீங்க எங்க மேல வச்ச பாசமா?... என தங்கள் சண்டையை மறந்து பாட்டியை சண்டைக்கு அழைக்க,

அவனும் "அதுதானே நீங்க யாராவது வறீங்களா இல்லையான்னு செக் பண்ண தான் நாங்க இன்னைக்கு சண்டையே போட்டோம்" என அவனும் பொண்டாட்டிக்கு வக்காலத்து வாங்க,

"அடப்பாவிகளா... இப்படி எந்த பக்கம் போனாலும் முட்டுனா நாங்க என்னடா பண்றது. யப்பா சாமி...இனிமே உங்க சண்டைக்கு நடுவே வரவே மாட்டேன், ஆளை விடுங்க" என்றவர்,புலம்பிக்கொண்டே செல்ல…

மதியின் புறம் திரும்பியவள் "நீ வா மாமா நம்ம கிளம்பலாம் யாராவது எதையாவது கத்திட்டு இருக்கட்டும்" என்றவள் அவனோடு வெளியே செல்ல…. "அப்பப்பா இரண்டு பேரும் வீட்டைவிட்டு போற வரைக்கும் புயல் அடிச்சு ஓய்ந்த மாதிரி இருக்கு, என்ன வாய்" என வெளியே திட்டுவது போல் பேசினாலும் உள்ளே இவங்க இதே மாதிரி என்னைக்கும் சந்தோஷமா இருக்கணும் என வேண்டிக்கொண்டனர்.

சண்முக சுந்தரம் என்னதான் மனம் மாறினாலும்...சாந்தியின் தாய் வீட்டு உறவை புதுப்பிக்க வில்லை. அதற்கு காரணம் அவரின் குற்றவுணர்ச்சி யே….என் தங்கையை கண்கலங்காமல் பார்த்துக்கோ என தன்னிடம் ஒப்படைக்க பட்டவளின் கண்களில் கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு இப்போது கண்களில் கண்ணீருக்கே பஞ்சம் வந்த நிலையில் இருக்கும் மனைவியோடு அங்கு செல்ல தைரியமில்லை.

ஆனால் முன்பு போல் அவர்களை தடுக்கவில்லை… இப்போதெல்லாம் அடிக்கடி தர்ஷினி தன் அக்காவை பார்க்க சென்றுவிடுவாள் அதுவும் தந்தையின் அனுமதியோடு. ஆனால் சாந்தி தான் கணவன் இன்றி தனியாக பெற்றோர்களிடம் பேசி உறவை புதுப்பிக்க விருப்பமில்லாமல் முன்பு போலவே இருந்துகொண்டார்.

அன்று கல்லூரிக்கு விடுமுறை என்பதால் அறையை சுத்தம் செய்துகொண்டு இருந்த மது...செல்ஃபில் இருக்கும் அனைத்து புத்தகத்தையும் தூசு தட்டி அடுக்கி வைத்து கொண்டிருக்க, ஒரு புக்கில் இருந்து நிறைய கடிதம் கிரீட்டிங் கார்ட் என கீழே விழுந்துவிட….அதை எடுக்க குனிந்தவள் அதில் எழுதியிருந்த வாக்கியத்தை பார்த்து அப்படியே தரையில் அமர்ந்து விட்டாள்.

அது மொத்தமும் லவ் கார்ட்,காதல் கடிதங்கள்….அதில் ஒரு பெண்ணை பார்த்தது தொடங்கி அவளின் ஒவ்வொரு செயல்களையும் அழகான காதல் வரிகளாக எழுதிருக்க…

அதில் ஒன்றில்

பெண்ணே!...இன்று தான் உன்னை முதல்முறை சேலையில் பார்த்தேன்.
கார்குழல் அசைந்தாட,
மெல்லிடை வலைந்தாட
நீ நின்ற கோலம்
என் உயிர் தீண்டும் முன்
உன் திருமண செய்தி
என் செவி தீண்டி...உயிர் கொன்றது ஏனோ!

என கண்ணீர் சிந்திய பக்கங்கள் சொல்லியது அவனின் வலியை. அனைத்திலும் கவிதை, கடிதம் என இருந்ததே ஒழிய அந்த பெண்ணின் பெயரில்லை.

முதன்முறை இதயம் பிளக்கும் வலியை உணர்ந்தாள் மது. மதியின் திருமணம் கூட அவளை இந்த அளவு பாதிக்கவில்லை. உண்மையை சொல்ல போனால் தன்னிடம் முன்பே சொல்லியிருக்கலாம் என்ற கோபம் மட்டுமே அவளுக்கு இருந்தது.ஒருமுறை கூட மதியை இழந்த சோகம் எள்ளளவும் இருந்தது இல்லை.

ஆனால் இன்று கதிரின் மனதில் தனக்கு முன்பே வேறு ஒருத்தி இருந்திருக்கிறாள் என்ற எண்ணமே உயிரை வதைக்க 'அதனால் தான் என்னை மன்னிக்க கூட இல்லையோ...எனக்கு அவர் மேல் தோன்றியது போல் அவருக்கும் தன் மேல் காதல் எல்லாம் வரவில்லையோ' என ஏதேதோ எண்ணி குழம்பியவள் அசையாமல் அங்கேயே அமர்ந்திருக்க,

உள்ளே நுழைந்த கதிர் அவள் இருந்த நிலையையும் அருகில் இருந்த அவனின் காதல் சின்னங்களையும் பார்த்து அதிர்ந்தவன், கோபமாக "யாரை கேட்டு இதையெல்லாம் எடுத்த" என கத்தியவன் சிதறி விழுந்து கிடந்த அனைத்தையும் சேகரிக்க தொடங்கினான். அவனை பொறுத்தவரை அவள் தானாக தன் மேல் காதல் கொள்ள வேண்டும் என்ற விஷயத்தில் உறுதியாக இருந்தான்.அதனால் தான் இத்தனை நாளும் தன் காதலை மறைத்தான்.ஆனால் இதுபோல் நடக்கும் என நினைக்கவில்லை.

தன்னை கண்டுகொள்ளாமல் அவன் பாட்டிற்கு விழுந்த காகிதங்களை எடுப்பதை கண்டு கோபம் வர பெற்றவள், அவன் கையில் இருந்த காகிதத்தை தூக்கி எரிந்தாள்.

"ஏய்…." என அவளை அடிக்க கரத்தை ஓங்கியவனை பார்த்து "ஓ... அடிக்கிற அளவுக்கு நான் தேவையில்லாதவளா ஆகிட்டேனா?..முதல்ல நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லிட்டு இது மேல கைவைங்க என்றவள், யாரு அவ?.." என்க,

"யாரை கேட்கிற" என்றவனை முறைத்தவள், "அது தான் உங்க முன்னால் காதலி… இப்படி உருகி உருகி காதல் வசனம் எழுதியிருக்கீங்களே அவளை பத்தி தான்" என்றாள்,

அவளின் கோபம் அவளின் காதலை வெளிப்படுத்த, அதில் கொஞ்சம் உற்சாகமானவன் "அது தெரிஞ்சி நீ என்ன பண்ண போற?..அது என்னோட பெர்சனல் உன்கிட்ட எல்லாம் சொல்ல முடியாது" என்க,

எட்டி அவன் சட்டையை பிடித்தவள் "என்னது பெர்சனல் லா... கட்டின பொண்டாட்டி எனக்கு தெரியாம அப்படி என்ன பெர்சனல். இப்போ நீயா சொல்றியா இல்ல சொல்ல வைக்கட்டா" என ரவுடி போல் கைகளை மடக்கி மிரட்ட,அவளின் இந்த அவதாரம் கூட அவனுக்கு ரொம்ப பிடித்திருந்தது.

'இது என்னடா போலீஸ்காரனுக்கு வந்த சோதனை. வெளிய அத்தனை பேரும் என்னை பார்த்து பயப்படும் போது இவ என்னடான்னா என்னையே மிரட்டுறா' என மனதுக்குள் மனைவியை ரசித்தவன்,

"இங்க பாரு கல்யாணத்துக்கு முன்னாடி நான் ஒரு பொண்ணை காதலிச்சேன் போதுமா...அவளை என்னால மறக்க முடியாது.இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் அவளை தவிர யாருக்கும் என் மனசில் இடமில்லை" என்றவன், தன் பனியனில் இருந்து அவள் கையை எடுத்துவிட்டு நகர்ந்து செல்ல…

அவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இதயத்தை வாள் கொண்டு அறுக்க,உயிரை கையில் பிடித்து கொண்டு "அப்போ நான் உங்களுக்கு யாரு?.. சொல்லுங்க யாரு?..அவ தான் முக்கியம்ன்னா அப்பறம் எதுக்கு எனக்கு தாலி கட்டுனீங்க?... பதில் சொல்லுங்க" என தன் காதல் மொட்டிலேயே உதிர்ந்ததை எண்ணி கண்ணீரோடு கேட்க,

"உனக்கும் தான் என்னை பிடிக்காது… இதுவரைக்கும் நான் உன்னை இதுமாதிரி கேட்டு இருக்கேனா...இல்லையே, அப்பறம் என்ன இப்போ மட்டும் புதுசா. நாம வேறும் பிரெண்டா தானே இருந்தோம்.அதனால இப்போ உனக்கு என்ன பிரச்சனை" என்றவனை ஒரு வெற்று பார்வை பார்த்தவள்,

"யாரு சொன்னது எனக்கு காதல் இல்லைன்னு. உங்களுக்கு தான் என்னை பிடிக்கலை,அதான் என் கூட பேசாமல் என்னை தவிர்க்குறீங்க. ஆனா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். எஸ்... ஐ லவ் யூ. ஆனா எனக்கே இப்போதான் என் காதல் புரிந்தது" என சொல்லிவிட்டு முகத்தை மூடி அழ,

ஒரே எட்டில் அவளை அடைந்தவன்,அவளை தன்னோடு அணைத்து கொண்டான். அவளின் ஐ லவ் யூ என்ற வார்த்தைக்காக எத்தனை நாட்கள் தவித்திருப்பான். அது கிடைத்ததும் அதற்கு மேல் அவளை காயப்படுத்த விரும்பாமல் அணைக்க, அவளோ அவனை தன்னிடமிருந்து பிரிக்க முயல,அவனின் பலத்திற்கு முன்பு இவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

தன் அணைப்பை விளக்காமல் "இப்போ உனக்கு என்ன தெரியணும்.நான் எதுக்கு உன்னை கட்டிக்கிட்டேன்னு தெரியனுமா?... ஏன்னா என் காதலி பெயர் கூட மது தான் அதான் உன்னையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்" என்றான்.

அவளோ தன் பலம் மொத்தத்தையும் திரட்டி அவனை தள்ளியவள், "ஏன் உங்களுக்கு இதே பேரோட வேற யாரும் கிடைக்கலையா?.. அதுக்கு நான் தான் கிடைச்சேனா" என தேம்பி கொண்டே கேட்க,

"பெயர் மட்டுமில்ல அவளும் ஆச்சு அசல் உன்னை மாதிரியே தான் இருப்பாள்" என்று சொல்லியவாறே தன்னிடமுள்ள அவளின் புகைப்படத்தை அவளிடமே காட்டி…"நல்லா பாத்துக்கோ இதுதான் என் மது,அப்படியே உன்னை மாதிரியே இருக்கா இல்ல"என காட்ட,

என்னால பார்க்க முடியாது என முகத்தை திருப்பியவள்,திருட்டு தனமாக சைட் கண்ணால் பார்க்க,அதில் தெரிந்த உருவத்தை பார்த்துவிட்டு வெடுக்கென்று அவனிடமிருந்து புகைப்படத்தையும் வாங்கி பார்க்க, அதில் அவளின் முகம் தெரிந்தது.

ஒருவேளை உலகத்தில் ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்களே..அதுமாதிரி இருக்குமோ என யோசித்தவள்,அப்போது தான் கழுத்திலுள்ள செயினை பார்க்க, அதுவே சொன்னது அது அவள் தான் என்று.

திரும்பி அவனை முறைத்தவள், "இது என்னோட ஃபோட்டோ. யாரை ஏமார்த்த பாக்குறீங்க?.." என கேட்க, "அப்படியா?...அய்யயோ எனக்கு தெரியாம போச்சே…இதுதான் என் காதலி ஃபோட்டோன்னு
என்னால நிரூபிக்க முடியும் உன்னால இது உன்னுடையதுன்னு நிரூபிக்க முடியுமா" என்க,

"ஓ... என்னாலயும் முடியும் என சொன்னவளை, இழுத்துக்கொண்டு கண்ணாடி முன் நிறுத்தி "நல்லா பாரு... இந்த போட்டோல இருக்குற மாதிரி கன்னத்துல மச்சம்,கழுத்துல செயின், கோலி குண்டு கண்ணு" என அவளிடமே காட்ட…"லூசா நீங்க என்னை போய்" என்றவளின்
வார்த்தை காற்றில் தேய,கண்கள் நான்கும் சந்திக்க,அவனிடம் பார்வையிலேயே நானா என கேட்க,

அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன் "நான் காதலிச்ச பொண்ணை தான் கட்டிக்கிட்டேன்.அவளும் என்னை மாதிரி தானா காதலை உணரணும்னு தான் இத்தனை நாள் வெயிட் பண்ணேன் என்றவன், ஐ லவ் யூ மது...ஐ லவ் யூ சோ மச்...நாலு வருஷமா உன்னை காதலிக்கிறேன்" என்றவனை காற்று கூட நுழைய முடியாத நெருக்கத்தில் அணைத்துக்கொண்டாள்.

"ஏன் என்கிட்ட சொல்லலை" என்ற அவளின் இதழ் அவனின் மார்போடு உரச...குரலோ காற்றில் தேய்ந்தது.

"அதுதான் சொன்னேனே என் காதலை நீயா உணரணும்னு" என்றவன் தன் அணைப்பை இறுக்கினான்.

இருவரும் தங்கள் காதலை தங்கள் அணைப்பின் மூலம் வெளிப்படுத்த,அவனோ அதற்கும் ஒருபடி மேலே சென்று அவள் இதழை தன் இதழால் சிறைப்பிடித்தான்.

இருவருக்குமான முதல் முத்தம் ஆழ்ந்து அனுபவிக்க,மூச்சு வாங்க பிரிந்தவளின் முகம் குங்குமம் போல் சிவக்க,அதனை மறைக்க அவன் மார்பிலேயே முகம் புதைத்துக் கொண்டாள்.

கட்டிலில் சாய்ந்து மொபைலில் எதையோ நொண்டி கொண்டிருந்தான் மதி.மித்ரா படித்துக் கொண்டிருந்தவள் வேண்டுமென்றே தீடீரென்று கொஞ்சம் சத்தமாக படிக்க, ஃபோனை பார்த்து கொண்டிருந்தவன் அதை அணைத்துவிட்டு அவள் புறம் திரும்பினான்.

அவளோ ஓர கண்ணால் அவனை பார்த்துக்கொண்டே லவ் ஹார்மோனை பற்றி படித்துக் கொண்டிருக்க…"ஓய் ராட்சசி மெதுவா படிடி "என சொல்ல,அவளோ இன்னும் சத்தத்தை ஏற்றினாள்.

" என்கிட்ட அடி வாங்க போற" என்றவனை பார்த்து,

"டேய் மாமா நாளைக்கு ஹாஸ்பிடல் போகலாம்...உனக்கு ஒரு டெஸ்ட் பண்ணனும்"என்க,
அவனோ "எனகென்னடி டெஸ்ட் எடுக்கணும்" என்றவனை பார்த்து பக்கென்று சிரித்தவள்,

"அதுவா இந்த லவ் ஹார்மோன் எல்லாம் ஒழுங்கா வேலை செய்தானு தெரிஞ்சிக்க தான். இங்க பாரு என புக்கை காட்டியவள் இது எல்லாம் சரியா இருந்தா லவ் ஃபீலிங் பயங்கரமா இருக்குமாம். ஆனா உனக்கு அதெல்லாம் இருக்குற மாதிரியே இல்லையே...எப்பவும் என்கிட்ட சண்டை போட்டுகிட்டே இருக்க,உனக்கு சுத்தமா லவ் பண்ணவே தெரியலை" என குற்றம் சுமத்த,

கையில் இருந்த புத்தகத்தை பிடுங்கி ஓரமாக வைத்தவன்,அவளை அப்படியே படுக்கையில் தள்ள, மூச்சு காற்று முகத்தில் மோத…"என் ஹார்மோன் எப்படி வேலை செய்துன்னு பார்க்கலாமா" என்றவனின் பார்வை மாற, இரு உடல்களும் உரசியும் உரசாமலும் இருக்கும் நிலை அவஸ்தையை கொடுத்தது.

அவனை பார்த்து பயத்தில் வேண்டாம் என தலையாட்ட… "ஏதோ சின்ன பொண்ணு படிச்சு முடிக்கும் வரைக்கும் ஒதுங்கியிருந்தா....நானே எப்படி தள்ளி இருப்பேன்னு தெரியாம உள்ளுக்குள்ள தவிச்சிட்டு இருக்கேன் இதில் நீ வேற என்னை டெம்ட் பண்ற" என்றவன் அவள் இதழில் ஒரு அழுத்தமான முத்ததை பதித்துவிட்டே விலகினான். இது என்னை டெம்ட் பண்ணதுக்கு தண்டனை என சொல்லிவிட்டு விலகியவன், "என் ஹார்மோனை எல்லாம் தாறுமாறா இருக்கு தேவையில்லாம என்ன சீண்டி பார்க்காத டி...அப்பறம் அய்யோ அம்மா சொன்னாலும் என்கிட்ட இருந்து உன்னை காப்பாத்த முடியாது" என்றவன் தலை அழுத்தமாக கோதியவன் தன்னிலையடைய பெரும்பாடு பட்டு போனான்.

அவனை சும்மா சீண்ட நினைத்தவள்,அது தனக்கே திரும்பி வரும் என்று நினைக்கவில்லை. அதன்பின்னர் அவனிடம் இதுபோல் கிறுக்கு தனமாக பேசுவதை நிறுத்திவிட்டாள்.

இரு ஜோடிகளும் சந்தோஷத்தில் இருக்க...நாட்களும் விரைந்தது. மதுவிற்கு மூன்றாண்டு கல்வி மட்டுமே...இப்போது அவள் இறுதி ஆண்டில் இருக்க, அன்று அவளுக்கு பிறந்தநாள்.

எப்போதும் போல் கோவில், அப்படியே தாய் வீட்டிற்க்கு சென்று அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு அன்றைய நாள் முழுவதும் ஜோடியாக திரிய,
அன்றைய இரவு என்றுமில்லாமல் இருவருக்குமே ஒரு தயக்கம்.

தங்கள் காதலை உணர்ந்து வருடங்கள் கடந்தாலும்..இருவருமே கணவன் மனைவி என்ற பந்ததிற்குள் அடியெடுத்து வைக்காமல் காதலர்களாக ஒவ்வொரு நிமிடத்தையும் ஆழ்ந்து அனுபவித்தனர். அவள் படிப்பிற்காக அவன் காத்திருக்க…சின்ன சின்ன சீண்டல்களும் முத்தங்களும் தீண்டல்களும் அவர்களின் வாழ்வை அழகாய் நகர்த்திக் கொண்டிருந்தது.
இன்னும் இரு மாதங்களில் மதுவின் படிப்பு முடியும் நிலையில், அவளின் பிறந்தநாள்…. அதுவே இருவருக்குள்ளும் ஒரு படபடப்பை இயல்பாய் எழ செய்தது,

அதுவும் காலையில் இருந்தே கதிரின் கண்களில் தோன்றிய ஏதோ ஒன்று அவளை பயங்கரமாக தாக்க...அவனை எதிர்கொள்ள முடியாமல் தவித்தாள். இது என்ன பார்வை ஆளையே முழுங்குவது போல் என மனதோடு அவனிடம் சண்டைபோட…. ஏன் பார்த்தால் தான் என்ன? என அவளின் மனமே அவனுக்கு சார்பாய் வாதாடியது.

அவனும் அதே நிலையில் தான் இருந்தான், அதை தாண்டி முன்னேற முடியாமல் ஏதோ ஒன்று தடுத்தது. எப்போதும் போல் தனித்தனியாக படுக்க...தூக்கம் வெகு தூரம் சென்றுவிட, இதற்கு மேல் முடியாது என்ற நிலையில் மெல்ல அவளை நெருங்கியவன் அவள் கூந்தலின் மனத்தை ஆழ்ந்து சுவாசிக்க, அவனின் மூச்சு காற்று கூட அவளை சிலிர்க்க வைத்தது.


"மது... தூக்கமே வரலை டி" என்றவனின் கரங்கள் அவளின் மேனியில் தடம் பதிக்க, முதலில் அதிர்ந்தவள்,பின்னர் அவனின் தொடுகையில் கரைந்து போனாள். அவளின் அமைதியே அவனை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்ற... அழகாய் ஒரு தாம்பத்தியம் அங்கே நடந்தேறியது.

காலையில் முதலில் கண்விழித்த கதிருக்கு தன்னவளின் சோர்ந்த முகமே கண்ணில் பட்டது. ரொம்ப படுத்திட்டேனோ என்று வருந்தியவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து எழுப்ப அவளோ அவனோடு இன்னும் ஒன்றிக்கொண்டாள்.
 

Anjali

Well-known member
Wonderland writer
அப்படியே நாட்கள் வருடங்களாக….மதி மித்ரா இருவரின் சந்தோஷத்தை கெடுப்பதற்காக லண்டனில் இருந்து வந்து இறங்கினான் பிரகாஷ். ஒருவரின் மீது பழிவாங்கும் வெறி...ஒருவர் மீது ஆசை வெறி.

லண்டனில் இருந்து வந்த அதே நாளிலேயே அவளை காண கல்லூரிக்கு வந்துவிட்டான். இன்று எப்படியும் தன் காதலை அவளிடம் சொல்லிவிட்டு அவளுக்காக லண்டனில் இருந்து ஸ்பெஷலாக ஆர்டர் கொடுத்து செய்த வைர நெக்லசோடு அவளுக்காக காத்திருந்தான்.

இத்தனை நாளும் அவளை விட்டு விலகியிருந்த மனித மிருகம் தன்னை நெருங்க போவதை அறியாமல் நண்பர்களோடு கலகலத்து கொண்டே நடந்தவளை அழைத்த அவளின் கிளாஸ் மேட் மித்ரா உன்னை புரோபசர் கூப்பிடுறார் என சொல்ல...அவளும் ஸ்டாப் ரூமை நோக்கி சென்றாள்.

அறைக்குள் நுழைந்தவள் கண்டது வெறுமையான அறையையே….ஒருவேளை வேற எங்கையாவது போயிருப்பாரோ என நினைத்து காத்திருக்க, அவளை நெருங்கிய பிரகாஷ் "சார் இப்போதான்" கிளம்பினார் என சொல்ல,
அவளும் "அப்படியா சரி" என சொல்லிவிட்டு திரும்பி செல்ல…

"ஒரு நிமிஷம் மித்ரா...உன்கிட்ட கொஞ்சம் பேசனும். நான் தான் உன்னை இங்க பொய் சொல்லி வர வச்சேன்" என்றவனை புரியாமல் பார்த்தவள்,அறையை விட்டு வெளியே செல்ல முயல,அவனோ கதவை இழுத்து மூடினான்.

அவனின் செயலில் பயம் அதிகரிக்க "உங்களுக்கு என்ன வேணும்?...எதுக்கு இப்படி பண்ணுறீங்க?..பிளீஸ் கதவை திறங்க" என கெஞ்ச,

அவனோ "என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு உன்னை விடுறேன்" என்க, "என்ன உளறல் இது…முதல்ல என்ன விடுங்க" என அவனை கடந்து செல்ல முயல,

அவனோ ஒரு கையில் அவளை இழுத்து "எனக்கு ஒரு பதில் சொல்லிட்டு போ என்றவன், நான் உன்ன காதலிக்கிறேன். அதுவும் நீ முதல் நாள் காலேஜ் வந்ததில் இருந்தே...அதுதான் இந்த வருஷத்தோடு படிப்பு முடியுதே,அப்பறம் என்ன கல்யாணம் தான...நீ ஓகே சொன்னா நாளைக்கே உன் வீட்டுக்கு பெண் கேட்டு வரேன்.இல்லன்னா தூக்கிட்டு போய் தான் தாலி காட்டுவேன் எப்படி வசதி" என மிரட்ட...

"லூசா நீங்க...எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு.இது மட்டும் அவருக்கு தெரிஞ்சிது அப்பறம் உங்களை உயிரோடவே விடமாட்டார்" என மதியை நினைத்தவுடன் தோன்றிய தைரியத்தில் பேச…

அவள் சொல்வதை நம்பாத பார்வை பார்த்த பிரகாஷ் "யாருகிட்ட உன் கதையை விடுற...நீ இந்த காலேஜில் அடியெடுத்து வைத்த அந்த நொடியில் இருந்து உன்னோட ஒவ்வொரு அசைவையும் கண்காணிச்சிட்டு இருக்கேன் என் காதுலயே பூ சுத்த நினைக்கிறியா" என சிரிக்க,

அவளோ தலையிலேயே அடித்துக்கொண்டாள். "என் கல்யாணம் முடிஞ்சு தான் காலேஜிலயே சேர்ந்தேன்… இது கூட தெரியாம லவ் பண்றேன் அது பண்றேன்னு உயிரை வாங்க வேண்டியது" என திட்டியவள்,கதவை திறக்க, மீண்டும் அவளை உள்ளே தள்ளியவன் கண்களில் இப்போது முதலில் இருந்த பாவனை போய் கோபம் இருக்க,
"நீ சொல்றது உண்மையா" என்றான் நிதானமாக.

அதேநேரம் அவளின் மொபைல் ரிங் டோன் கேட்டது. மதி தான் அழைத்திருந்தான், அவளிடமிருந்து ஃபோனை பறித்தவன்,திரையில் தோன்றிய மதியின் போட்டோவை பார்க்க மேலே மதி அத்தான் என்ற பெயரை பார்த்ததும் அதிர்ந்து,அவளிடம் யார் என்று கேட்க,

"அது தான் என் புருஷன்...அவரு ஒரு போலீஸ் தேவையில்லாம என்கிட்ட வம்பு பண்ணி மாட்டிக்காத" என சொல்லும் போதே அவளின் கழுத்தில் கை வைத்து நெறுக்கியவன்...ஒரு கரத்தில் அந்த மொபைலை ஆன் செய்து காதில் வைத்தான்.

"செல்லக்குட்டி...எனக்கு இன்னைக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு டா. சி எம் மதுரைக்கு ஒரு கட்சி மீட்டிங்க்காக வந்திருக்கார்,அது முடியிற வரைக்கும் என்னால இந்த இடத்தை விட்டு அசைய கூட முடியாது. இன்னைக்கு ஒரு நாள் என் மித்துக்குட்டி பஸ்ல போவீங்களாம் என் செல்லமில்ல...பாய் டா வீட்டுக்கு போய்ட்டு மெசேஜ் பண்ணு" என அவள் பதிலை எதிர்பாராமல் வைத்துவிட்டான்.அவனுக்கு இருந்த வேலையில் அவனும் அதை பெரிதாய் தெரியவில்லை.

"இவன் தான் உன் புருஷனா...இவனை எப்படி பழிவாங்கலாம்னு நினைச்சிட்டு இருந்தேன். இப்போ சூப்பர் சான்ஸ் கிடைச்சிருக்கு இதை விடமாட்டேன்" என சத்தமாக சிரித்தவன்,

"ஒரே கல்லுல இரண்டு மாங்கா. இப்போ உன்னை தொட்டா….என் ஆசையும் நிறைவேறும் அப்படியே அவனையும் பழிவாங்கின மாதிரியும் இருக்கும். உலகத்திலேயே பெரிய தண்டனை என்ன தெரியுமா?..இதுதான்" என வெறியோடு சொன்னவன்,

"உன் புருஷனுக்கு இதைவிட சிறப்பான தண்டனை என்னால கொடுக்கவே முடியாது. இனிமே உன்னை பார்க்கும்போது எல்லாம் என் நியாபகம் தான் வரணும். நான் சாப்பிட்ட எச்சிலை பார்க்கிற நினைவு தான் வரும்.வர வைப்பேன்" என்றவன் அவளை நெருங்க….அவளோ பயத்தில் பின்னால் சென்று சுவற்றில் மோதி நின்றாள்.

"என்னை பார்த்து பயப்பட வேண்டாம்...எனக்கு இதுல பல வருஷம் எக்ஸ்பீரியன்ஸ், உன் புருஷனை விட மென்மையாக நடந்துக்குறேன் நீ ஒத்துழைச்சா….இல்ல நான் அடம்பிடிப்பேன்னு சொன்னா சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை என்றவன், கல்யாணம் பண்ணி தினமும் உன்னை அனுபவிக்க நினைச்சேன்… ஆனா எப்போ நீ அவனோட பொண்டாட்டின்னு தெரிஞ்சதோ அப்பவே முடிவு பண்ணிட்டேன். இன்னைக்கு ஒருநாள் மட்டும் எனக்கு பொண்டாட்டியா இரு... அப்பறம் நான் உன்னை டிஸ்டர்ப்பே பண்ணமாட்டேன், உன் புருஷனோடு
சந்தோஷமா இருக்கலாம் நான் தடுக்க மாட்டேன்" என்றான்.

அவனின் ஒவ்வொரு வார்த்தையும் அருவெறுப்பை கொடுக்க, ச்சீ என முகம் சுழித்தவள், அவன் அசந்த நேரம் தள்ளிவிட்டு வெளியே ஒட….கல்லூரி முடிந்து வெகுநேரம் ஆனதினால் யாருமே இல்லாமல் வெறுமையாக இருந்தது கட்டிடம். இவள் இருந்தது ஆய்வக கூடங்கள் இருக்கும் பிளாக் என்பதால் இங்கிருந்து வாசலை அடையவே கால் மணி நேரத்திற்கு மேல் ஆகும்.

படிகளில் தடதடவென ஓடி வந்தவள், தரை தளத்திற்கு வந்தடைய... பில்டிங்கின் நுழைவு கதவு வெளிப்பக்கமாக மூடியிருந்தது. பல லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் உள்ளே இருப்பதால் எப்போதும் கல்லூரி முடிந்தவுடன் ஆய்வக கதவு அடைக்கப்படும்.இது எப்போதும் நடப்பது தான் என்றாலும் இன்று பதட்டத்தில் அது எதுவும் நினைவிற்கு வரவில்லை.

அவ்வளவு தான் மொத்த தைரியமும் போக செய்வதறியாமல் நின்றாள் மித்ரா. அங்கு கட்சி மீட்டிங் பாதுகாப்பு பணியில் இருந்தவனுக்கு எதுவோ சரியில்லாத உணர்வு.
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 25

மதியின் மனம் படபடக்க...ஏதோ தவறாக நடக்க போகிறது போல் ஒரு எண்ணம்.ஆனால் அது என்ன?.. யாருக்கு?.. என்பதெல்லாம் புரியாமல் இருந்தவனுக்கு வேலையில் கவனம் செல்லாமல் மனம் அதையே நினைக்க, ஒரு ஃபோனாவது செய்து அறிந்து கொள்ளலாம் என முதலில் தன் மனைவிக்கு தான் அழைத்தான் பத்திரமாக வீட்டிற்கு சென்றுவிட்டாளா என அறிய….அதுவோ பிரகாஷின் கையிலிருந்து விழுந்து எப்போதோ தன் உயிரை இழந்திருந்தது.

தொடர்ந்து ஸ்விட்ச் ஆஃப் என்றே பதில் வர,அடுத்து தன் தந்தைக்கு அழைத்தான் அவர்களிடமிருந்தும் எந்த பதிலும் இல்லாமல் போக...வீட்டு எண்ணிற்கு அழைக்க, வெகுநேரம் கழித்து சகுந்தலா தான் ஃபோனை எடுத்தார்.

"அத்த நான் மதி பேசுறேன்...எல்லாரும் வீட்ல தான இருக்கீங்க?..ரொம்ப நேரமா ஃபோன் பண்றேன் யாருமே எடுக்க மாட்டேங்குறீங்க" என கேட்க, அவரோ "யாரும் வீட்ல இல்ல...எல்லாரும் கோவிலுக்கு போயிருக்காங்க...ஏதோ வேண்டுதலை நிறைவேற்ற" என சொல்லிவிட்டு ஃபோனை அணைத்தார்.

மித்ரா வந்துவிட்டாளா என கேட்கும் முன் ஃபோனை வைத்துவிட...திரும்பவும் ஃபோன் பண்ண நினைத்தவனுக்கு தன் மேலதிகாரியிடம் இருந்து அழைப்பு வர,அதனை பார்க்க சென்றுவிட்டான்.

இங்கு மித்ராவை தொடர்ந்து வந்தவன்,தரை தளத்தை வந்தடைய...அங்கு யாரையும் காணவில்லை. கதவு வெளியே பூட்டியிருக்க,அவள் எப்படியும் இந்த கட்டிடத்தை விட்டு வெளியே செல்ல வாய்ப்பில்லை என்பதை அறிந்தவன், "நீ எங்க ஓடி ஒளிஞ்சாலும் என்கிட்டே இருந்து உன்னால தப்பிக்கவே முடியாது" என கத்தியவன் ஒவ்வொரு அறையாக அவளை தேடி சென்றான்.

மித்ரா அவனிடமிருந்து தப்பிக்கும் எண்ணத்தில் ஒரு அறைக்குள் நுழைய...அங்கு ஒரு லேண்ட் லைன் ஃபோன் கண்ணில் பட...முகம் மலர அதை எடுத்து மதிக்கு அழைத்தாள். ஆனால் அதுவோ தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக சொல்ல மீண்டும் மீண்டும் அழைத்து ஓய்ந்து போனவள்,தனக்கு நினைவில் நின்ற வீட்டு எண்ணிற்கு அழைத்தாள்.

இப்போதும் விதி சகுந்தலாவை எடுக்க வைக்க….தன் பெரிய அன்னையின் குரலை கேட்டவுடன் அப்படி ஒரு நிம்மதி. "அம்மா….அம்மா நான் மித்ரா….நான் ஆபத்துல இருக்கேன்,என்னை ஓ.. ஒருத்தன் என பயத்தில் சொல்ல முடியாமல் தடுமாறி... எப்படியாவது மதி மாமா கிட்ட சொல்லிடுங்க. நான் இப்போ" என இடத்தை சொல்ல வரும் முன் "யாருக்கு யாரு அம்மா.முதல்ல ஃபோனை வை" என அணைத்தவர் மீண்டும் வந்தாலும் வரும் என்ற எண்ணத்தில் ரிசீவரை எடுத்து வெளியே வைத்தவர் தன் கோபத்தை இந்த நேரத்தில் வெளிப்படுத்தி விட்டு சென்றுவிட்டார்.

அவளோ அழுகையோடு மீண்டும் அழைக்க.. அப்போதுதான் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினர் குடும்பத்தினர் அனைவரும். நேராக பூஜையறை விளக்கேற்றி விட்டு ஹாலுக்கு வர...மதன் தான் ஃபோனை பார்த்துவிட்டு அதை எடுத்து சரியாக வைத்தான்.

அதேநேரம் மித்ரா அங்கே எண்ணை அழுத்த,கடைசி எண்ணை அழுத்தும் போது அந்த அறையின் கதவு திறக்கப்பட்டது. சட்டென்று பயத்தில் ஃபோனை வைத்துவிட்டு மறைந்து கொள்ள...உள்ளே வந்த பிரகாஷின் கண்கள் அவளையே தேடியது.

அவள் இருந்த அறை அனாடாமி லேப் (உடற்கூறியல் ஆய்வகம்) பதப்படுத்தப்பட்ட மனித உடல்களும் அதன் உறுப்புகளும் பாட்டில்களில் அடைந்து கிடக்க, சில உடல்கள் கொடூரமான நிலையில் டேபிள் மேல் இருந்தது. பயிற்சிக்காக அதனை கிழித்து இருப்பார்கள் போல...அதற்கு மிக அருகில் மறைந்திருந்தாள் மித்ரா.

பகலில் அதனை பார்க்கும் போதோ... கையாளும் போதோ வராத பயம் அந்த இருளில் அதுவும் முகத்திற்கு அருகில் இருக்கும் போது உயிரே உறையும் நிலையில் இருந்தாள். தனியாக இருளில் இருக்கவே பயப்படும் அவள் இன்று இருளில் பல பிரேதங்களோடு தன் மானம் காக்க போராடிக் கொண்டிருந்தாள்.

அவள் டேபிளுக்கு அருகில் அவனும் வந்துவிட...எங்கே தன் மூச்சுவிடும் சத்தம் கூட கேட்டுவிடுமோ என்ற பயத்தில் மூச்சடக்கி நின்றாள்.

அப்போது அவனின் மொபைல் அழைக்க...எதிரில் சொன்ன செய்தியில் சந்தோஷத்தில் சிரித்தவன், "சூப்பர் டா...சூப்பர்... நீ அவனை பின் தொடர்ந்துட்டே இரு...அவன் அந்த கூட்டத்தில் இருந்து வெளிய வரவே கூடாது. அதையும் மீறி வந்தாலும் அவ இருக்குற இடம் அவனுக்கு தெரிய கூடாது. அவ ஃபோனை வச்சு கண்டுபிடிச்சாலும் பிடிப்பான் போலீஸ்கார மூளையில்ல…
அதனால் அவ ஃபோனை அவன் கண்டுபிடிக்காத மாதிரி பண்ணிடு...அவளோட சிக்னல் இந்த மதுரையை விட்டு வெளிய இருக்கணும். பொண்டாட்டியை தேடி ஊர் ஊரா அலையட்டும் அந்த நாய்" என சொன்னவன்,அதை அணைத்து விட்டு அவளை தேடினான்.

அந்த அறையில் அவள் இல்லை என்று நினைத்து வெளியே செல்ல நினைத்தவன் அங்கிருந்த ஃபோன் அருகே சென்று...அதை அப்படியே போட்டு உடைத்தான்.ஒருவேளை இந்த ரூமிற்கு அவள் வந்தாலும் யாருடனும் தொடர்பு கொள்ள கூடாது என்ற எண்ணத்தில்.

இருந்த ஒரு வழியையும் அழித்துவிட்டு அவன் சென்றுவிட….அப்படியே மடிந்து அழுதாள்,அப்போதும் வெளியே கேட்டுவிடாமல் வாயை மூடிக்கொண்டே தான் அழுதாள்.

'தன்னை கண்டுபிடிக்க எந்த வழியுமில்லை….இனிமேல் யாரும் தன்னை காப்பாற்ற வர மாட்டார்கள் என்ற நிலைக்கு வந்தவள் என்ன ஆனாலும் சரி ...என் உயிரே போற நிலைமைக்கு வந்தாலும் எந்த காரணம் கொண்டும் அவனை நெருங்க மட்டும் விட கூடாது' என்ற முடிவில் அதே இடத்தில் அசையாமல் அமர்ந்திருந்தாள்.

வீட்டில் அப்போது தான் தன் பாக்கெட்டில் இருந்து மொபைலை எடுத்து பார்த்த மதியின் தந்தை 'என்ன மதி இத்தனை தடவை போன் பண்ணி இருக்கான் என்ற சிந்தனையோடு அவனுக்கு அழைக்க…

அதனை ஏற்றவன் முதலில் கேட்டது 'மித்ரா வீட்டுக்கு வந்துட்டாளா' என்று தான். "மித்ராவா இன்னும் வரலையே...உன் கூட இருப்பான்னு தான் நாங்க இருந்தோம்" என சொல்ல,

"என்னப்பா சொல்றீங்க?...அவ சாய்ந்திரமே காலேஜில் இருந்து கிளம்பியிருப்பாளே….ஆனா ஏன் இன்னும் வீட்டுக்கு வரலை" என்றவனின் குரலில் பதட்டத்தை உணர்ந்து "டேய் அதெல்லாம் பயப்படாத அவளுக்கு ஒன்னும் ஆகாது நாங்க என்னன்னு பார்க்கிறோம்" என்றுவிட்டு ஃபோனை வைத்தவர் விஷயத்தை சொல்ல...அனைவருக்கும் அதிர்ச்சி.

இதுக்கு மேல விளக்கி சொல்ல நேரமில்லை என்றவர்கள் ஆளாளுக்கு ஒரு வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்ப...மதுரை முழுவதும் தங்கள் ஆட்களை கொண்டு தேட சொல்ல,

இங்கு மதி, அதற்குமேல் ஒரு நொடி கூட தாமதிக்காமல் அங்கிருந்து கிளம்பினான். "டேய் இப்போ நீ எங்க போனாலும் அது பெரிய பிரச்சனை ஆகும்" என்ற கதிரை பார்த்து "என் வேலையே போனாலும் அதை பத்தி எனக்கு கவலையில்லை என்றவன்,நடந்ததை சுருக்கமாக சொல்லியவன் எனக்கு அவ தான் முக்கியம்" என கிளம்பிவிட….கதிரும் அவனுடன் இணைந்து கொண்டான்.

வரும் வழியிலேயே அவள் மொபைல் எண்ணை ட்ராக் பண்ண சொல்லி ஆணையிட….அவளின் எண்ணோ மதுரையை கடந்து திண்டுக்கல் மாவட்டத்தை காட்ட...சட்டென்று ஜீப்பை நிறுத்தியவனுக்கு அடுத்து எங்கே செல்வது என்ற குழப்பம்.

அவனின் மனம் அவள் இந்த ஊரைவிட்டு சென்றிருக்க மாட்டாள் என்று உறுதியாக நம்ப,அதேநேரம் இந்த தகவலையும் அலட்சியப்படுத்த விரும்பவில்லை. அதே மாவட்டத்தில் உள்ள அவனின் நண்பனுக்கு அழைத்து அந்த நம்பர் இருக்கும் இடத்தை நோக்கி செல்ல சொன்னவன் மதுரையை விட்டு நகரவில்லை.

வெகுநேரம் தேடியும் எந்த தகவலும் கிடைத்ததால் ஆத்திரத்தில் ஜீப்பின் ஸ்டைரிங்கில் ஓங்கி அடித்தான். "தப்பு பண்ணிட்டேன் டா...பெரிய தப்பு பண்ணிட்டேன். அவளை நான் தனியா அனுப்பியிருக்க கூடாது. இன்னைக்கு நான் போயிருந்தா கண்டிப்பா இப்படி நடந்திருக்காது" என புலம்பி தள்ளினான்.

இந்த செய்தி எப்படியோ சண்முகசுந்தரத்தின் காதில் விழுந்ததுவிட...அவரும் தேடலை தொடர்ந்தார். வீட்டிலுள்ள சாந்தியும் தர்ஷினியும் தங்கள் அழுகை தொடங்க..மொத்த குடும்பமும் அவளுக்காக வேண்டிக்கொண்டிருந்தது.

மணி இரவு ஒன்பது என காட்ட….வீட்டிலுள்ள பெண்கள் அனைவரும் அழுகையில் கரைய, முதலில் சாதாரணமாக கடந்து சென்ற சகுந்தலாவிற்கு நேரம் செல்ல செல்ல மனதில் பயம் பிடித்து கொண்டது. கொஞ்சநேரம் கிடைத்து விடுவாள் என்ற நம்பிக்கையில் இருந்தவருக்கு இதற்கு மேலும் மறைத்தாள் அவள் உயிருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் அறையிலிருந்து வெளியே வர…

தேடி களைத்து பெரியவர்கள் அனைவரும் வீட்டுக்கு வர...அவர்களின் முகமே அவள் இன்னும் கிடைக்கவில்லை என்பதை சொல்ல,பெண்களும் கவலையில் ஆழ்ந்தனர்.

அவன் நினைத்து போலவே அவளின் மொபைல் சிக்னல் அவனை திசைதிருப்ப செய்த செயல் என்பது உறுதியாகிவிட..அவள் கல்லூரி ஃப்ரெண்ட்ஸ் என அனைவரிடமும் கேட்க...அனைவரும் கடைசியாக கல்லூரியில் பார்த்தது தான் என்க, கல்லூரி முழுவதும் தேடியாகிவிட்டது.

கண்ணை கட்டி காட்டில் விட்ட கதையாய் அடுத்து என்ன என்று தெரியாமல் மதி வீட்டுக்கு வந்தான். அப்போது சண்முகசுந்தரம் மனைவி மற்றும் மகளின் கண்ணீரை கண்டு பொறுக்காமல் தன் வெட்டி வீராப்பை ஓரம் கட்டிவிட்டு மாமனார் வீட்டுக்குள் நுழைந்தார்.

இத்தனை வருடங்கள் கழித்து பார்க்கும் குடும்பத்தை எண்ணி மகிழ்ச்சி கொள்ள முடியாமல் மகளை நினைத்தபடி தாயின் மடியில் அடைக்கலமனார் சாந்தி. சின்னக்குட்டி வேறு தேம்பி தேம்பி அழ,தன் பேத்தியின் கண்ணீரை பார்க்க முடியாமல் விஸ்வநாதனும் துவண்டு போனார்.

சண்முகசுந்தரம் மதியை நோக்கி செல்ல...மீண்டும் இதனால் ஒரு சண்டை ஏற்ப்பட போகுதோ என அனைவரும் நினைக்க,அதற்கு மாறாய் மதியின் தோளில் கைபோட்டு "நீ மனசை தளர விடாத மாப்பிள்ள, உனக்காகவாவது என் பொண்ணு கண்டிப்பா வந்துடுவா.எனக்கு உன்மேல் நம்பிக்கை இருக்கு" என்க, அவரின் வார்த்தை அவனுக்கு அப்படி ஒரு சக்தியை கொடுக்க,அவரை அணைத்து கொண்டான்.

அனைவரின் பார்வையும் ஆச்சிரியமாக அவர்மேல் பதிய,அவரோ அனைவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டார். சட்டென்று அவரின் கரத்தை கீழிறக்கிய சாந்தியின் அண்ணன்கள் "விடுங்க மாப்பிள்ளை நடந்தை எல்லாம் ஒரு கெட்ட கனவாய் நினைச்சு மறந்துடுங்க. நாங்களும் மறந்துட்டோம். முதல்ல நம்ம பொண்ணு எங்க இருக்கான்னு தேடலாம்" என சொல்ல பிரிந்திருந்த இரு குடும்பமும் ஒன்றாய் இணைந்தது. இது அனைத்திற்கும் காரணமானவள் அங்கு உயிரை கையில் பிடித்து கொண்டு தன்னவன் வந்து தன்னை காக்க மாட்டானா என்று தவித்து கொண்டிருந்தாள்.

தலையில் கைவைத்து அமர்ந்த மதி சட்டென்று நிமிர்ந்தவன் "உங்க யாருக்காவது ஈவ்னிங்ல இருந்து ஏதாவது தெரியாத நம்பர்ல இருந்தோ... இல்ல மித்ரா போன்ல இருந்தோ கால் வந்துச்சா… கண்டிப்பா அவளுக்கு எதாவது ஆபத்துன்னா நம்ம யாருக்காவது சொல்ல டிரை பண்ணியிருப்பா. நான் மீட்டிங்ல இருக்கும் போது என்னோட மொபைல்ல சிக்னல் சரியா இல்லாம இருந்தது.அதனால் எனக்கு கிடைக்கலையோ என்னவோ" என கேட்க,

இப்போதாவது சொல்லி விடலாமா என எண்ணிய சங்குந்தலாவிற்கு பயத்தை மீறி வார்த்தை வராமல் போக...பயத்துடன் சுவற்றில் சாய்ந்து கொள்ள,

"எங்க யாருக்கும் எந்த அழைப்பும் வரவில்லை" என அனைவரும் சொல்ல…."அப்போ வீட்டு ஃபோன்க்கு" என அத்தையை பார்க்க...அவரோ தடுமாற்றத்தில் கையில் வைத்திருந்த கைப்பேசியை தவற விட, அது கீழே விழுந்து சிதறியது.

அதற்குள் மதன் "இல்ல அண்ணா நாங்க வரும் போது ஃபோன் ரிசீவர் கீழ இருந்தது.நான் தான் எடுத்து வச்சேன்" என்க,

"இல்லையே நான் வீட்டுக்கு போன் பண்ணும் போது அத்தை வந்து பேசினாங்களே...அவங்க வச்சிட்டு போனதுக்கு அப்புறமும் நான் ஃபோன் போடும் போதும் ரிங் போச்சே" என சொல்லியபடி தன் அத்தையை பார்க்க…

அவரோ அவனின் முகம் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்து கொள்ள...அவரின் செயலை கண்டு அவரை நெருங்கியவன் "சொல்லுங்க அத்த...நீங்க எதையோ மறைக்கிறீங்கன்னு நல்லாவே தெரியுது தயவு செஞ்சி சொல்லுங்க" என சொல்ல,

அவரும் இதற்கு மேல் சொல்லவில்லை என்றால் நான் மனிஷியே இல்லை என விழி மூடி திறந்தவர் மித்ரா அழைத்து பேசியதை சொல்ல….மொத்த குடும்பமும் அதிர்ந்தது. என்னதான் அவள் மீது மனஸ்தாபம் இருந்தாலும் ஒரு ஆபத்து என்று சொன்னவளுக்கு நியாயம் செய்யவில்லையே என அவருக்கும் சற்று உருத்தலாய் இருந்தது தங்கையின் கண்ணீரை பார்த்தவுடன்.

மதியோ கோபத்தில் பற்களை கடித்தான். "உங்களுக்கு மனசாட்சியே இல்லையா… இவளோ நேரம் பைத்தியக்காரன் மாதிரி ஆளாளுக்கு அலைஞ்சோமே அப்பயாவது சொல்லியிருக்கலாமே... எந்த நிலைமையில் இருந்து ஃபோன் பண்ணாலோ அதை கூட கேட்காம….இப்போ சொல்றேன் நல்ல கேட்டுக்கோங்க அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு அப்பறம் உங்க உயிருக்கு நான் தான் எமன். அத்தைன்னு எல்லாம் பார்க்க மாட்டேன், அவளுக்கு அப்பறம் நீங்க யாரா இருந்தாலும்" என வீடே அதிரும்படி கத்தியவன், தனது ஃபோனை எடுத்து அவள் ஃபோன் செய்த எண்ணின் முகவரியை வாங்க... அவளின் கல்லூரி முகவரி தான் அதில் இருந்தது.

அடுத்த நொடி ஜீப்பில் இருந்தான்.அவனின் வேகத்தை பார்த்து எதிர் வருபவர்கள் பயத்தில் விலக...ஜீப் நின்ற மறுநொடி கல்லூரியை நோக்கி ஓடினான்.

அந்த இண்டர்காம் எண் எந்த பிளாக் மற்றும் எந்த அறையுடையது என்பதை கேட்டறிந்து அந்த கட்டிடத்தை நோக்கி செல்ல...அந்த ஐந்து மாடி கட்டிடம் வௌிப்பக்கமாக பூட்டியிருக்க...அதை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.

அனைத்து போலிசார்களும் ஐந்து பிரிவாக பிரித்து அனைத்து தளத்தையும் நோக்கி செல்ல...முதல் தளத்தில் உள்ள ஒரு அறைக்குள் நுழைந்தான் மதி.

பிரகாஷ் அவளை தேடி தேடியே களைத்தவன் மீண்டும் அனாட்டாமி லேபிற்குள் செல்ல,
அவனின் பார்வை ஓரிடத்தில் கூர்மையடைந்தது.

அவனுக்கு எதிரில் உள்ள கண்ணாடியில் எதிரொலித்த பிம்பத்தில் ஏதோ அசைவை உணர அது யார் என்று சரியாக கண்டுப்பிடித்தவன்… ஒரு வெற்றி புன்னகையோடு அவளை நோக்கி சென்றான்.

அவனின் காலடி சத்தம் அவளை நெருங்கி கொண்டே இருக்க,இவளோ மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டு இருக்க...அந்த நேரம் தான் மதி தன் படைகளோடு உள்ளே அந்த கட்டிடத்தில் நுழைந்தான்.

வெளியே கேட்ட சத்ததிலும் ஆட்கள் நடமாட்டமும் மதி வந்துவிட்டதை உணர்த்த, துரிதமாக செயல்ப்பட்டவன்,அவளை நெருங்கிவிட….அதிர்ந்து கத்த வாய்த்திறந்தவளின் வாயை தன் கரம் கொண்டு அடைத்தவன் அவளோடு சேர்ந்து,அதே இடத்தில் மறைந்து கொண்டான்.

அவள் எவ்வளவு முயன்றும் அவளால் அசைய கூட முடியவில்லை...அந்த சிறிய இடத்தில் அவள் இருக்க,இப்போது இவனும் சேர்ந்துவிட,உடலை அசைக்க கூட இடமில்லை அங்கே. அவனின் ஒரு கரம் அவளின் தலைவழியாக சென்று அவள் வாயை அடைத்திருந்தது.

அவள் இருந்த அறையை திறந்த மதி சுற்றியும் பார்க்க யாரும் இல்லாததால் திரும்பி செல்ல முயல...அவளோ சத்தம் போட முடியாமல் "போகாதா மாமா போகாதா" என தலையாட்டி மனதுக்குள் அனத்த தொடங்கினாள். அது அவன் செவிகளில் விழுந்ததோ என்னவோ சட்டென்று திரும்பி பார்த்தான்.

'அவளின் குரல் கேட்டது போல் ஒரு பிரம்மை...அவளையே நினைத்து கொண்டு இருப்பதால் இப்படி தோன்றுகிறதோ' என எண்ணி மீண்டும் வாசலை நோக்கி செல்ல அவனின் சட்டை அங்குள்ள கதவின் கம்பியில் மாட்டி கிழிந்தது.

அதற்கு மேல் அந்த அறையைவிட்டு வெளியே செல்ல மனம் வராமல் உள்ளே நுழைந்தான். நிறைய மேஜைகளும் நாற்காலிகள் இருக்க,சத்தம் வராமல் மெல்ல தன் அடியை எடுத்துவைத்து உள்ளே செல்ல...சரியாக அவள் இருக்கும் இடத்தில் அவன்.

மாமா இங்க தான் இருக்கேன் என்ற அவளின் மௌனமொழி அவன் செவிகளில் விழாமல் போக…..முகத்தில் அப்பட்டமான ஏமாற்றம் கவிழ திரும்பி நடந்தான் மதி.

அவன் கண்களின் கண்ட அலைபுறுதலும்,இமைக்காமல் பார்வையை சுழற்றி தன்னவளை தேடிக்கொண்டிருந்த அந்த முகத்தில் கவிழ்ந்திருந்த வேதனையும் அவனின் காதலின் ஆழத்தை பறைசாற்ற, மித்ராவின் கண்களில் கண்ணீர் பெருகிக்கொண்டே சென்றது. எங்கே தன் மாமனை இழந்துவி்டுவோமோ என்ற பயம் அதிகரித்து.
 
Status
Not open for further replies.
Top