ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கனவிலே மிதக்கும் விழிகள் - கதை திரி

Status
Not open for further replies.

Anjali

Well-known member
Wonderland writer
தளர்ந்த நடையில் அறையை விட்டு வெளியே செல்ல போனவனின் வழியில் ஒரு நாற்காலி தடுக்கி அவன் காலில் விழுந்தது. "பச்"...என சலித்தபடி அதை எடுக்க கீழே குனிந்தவனின் கண்ணுக்கு … மித்ராவை பிரகாஷ் கண்ணிற்கு காட்டிக்கொடுத்த அதே கண்ணாடியில் இப்போது பிரகாஷ் மதியின் கண்ணுக்கு தெரிந்தான். அதுவும் மித்ராவின் வாயை பொத்திக்கொண்டு இருப்பது தெரிந்தது.

இரத்தம் கொதிக்க... தன்னவள் முகத்தில் பார்த்த உயிர் பயத்தை காண காண அவனை கண்டம் துண்டமாக வெட்டும் வெறி வர...அவர்களை நோக்கி தன் நடையை எட்டிப் போட்டான்.

அவள் முகத்தில் சிறு கீற்றாய் புன்னகை மலர….பிரகாஷ் சுதாரிக்கும் முன் சட்டென்று நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைக்க, அதில் மித்ராவை பிடித்திருந்த பிடி தளர்ந்தது. அவன் விட்ட அடுத்த நொடி "மாமா" என்ற கூவலோடு அவனை அணைத்தவள் அப்படியே அவன் கரங்களில் மயங்கி சரிந்தாள்.

இத்தனை நேரமும் அவனுக்காக காத்திருந்தவள், அவனை பார்த்தவுடன் இனி அவன் பார்த்து கொள்ளவான் என்ற நம்பிக்கையில்...இவ்வளவு நேரம் போராடிய போராட்டத்தில் உடலும் மனமும் சோர்வடைய அவனில் மயங்கிவிட்டாள்.

ஒரு கரத்தில் அவளை தாங்கி தன்னோடு அணைத்தவனின் மறு கரத்தில் துப்பாக்கி இருக்க...மதியின் காலுக்கு அடியில் பிரகாஷ் இருந்தான். ஷூ காலில் அழுத்தம் கொடுக்க… அதற்கு அடியில் அவனின் கரம் நசுங்கியது. அதில் வலி தாங்க முடியாமல் அவனிடமிருந்து பெரும் அலறல் சத்தம் வர,

இவனின் சத்தத்தில் கதிர் மற்றும் சில போலீசார்களும் வந்துவிட... கதிரிடம் கண் காட்டியவன், "நான் வர வரைக்கும் அவன் இந்த இடத்தை விட்டு நகரவே கூடாது. அதேமாதிரி யாரும் அவன்மேல் கை வைக்க கூடாது. நானே தான் சாரை ராஜ மரியாதையோடு வழியனுப்பனும்" என்றவன்,

தன்னவளை குழந்தை போல் கைகளில் ஏந்திக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.

தன் மடியில் இருக்கும் முகத்தை பார்க்க பார்க்க அந்த பிரகாஷை துடித்துடிக்க கொள்ளும் வெறி வந்தது மதிக்கு. பின்னர் வண்டியை ஓட்டிக் கொண்டே வீட்டுக்கு தகவல் சொல்ல...அவளை மருத்துமனையில் சேர்த்த சில நிமிடங்களில் மொத்த குடும்பமும் அங்கு வந்து சேர்ந்தது.

வெளியே வந்த டாக்டர்...ஒன்னும் பிரச்சனையில்லை இன்னும் கொஞ்ச நேரத்தில் கண் முழிச்சிடுவாங்க. அதிகமான பயமும் அதிர்ச்சியும் தான் இப்படி ஆக காரணம் என்றுவிட்டு செல்ல அதன்பின்னரே மொத்த குடும்பமும் நிம்மதியடைந்தது.

அவள் கண்விழிக்கும் முன் செய்யவேண்டிய ஒரு கடமை இருக்க,குடும்பத்தினரிடம் மனைவியை ஒப்படைத்துவிட்டு ஹாஸ்பிட்டலை விட்டு வெளியே வந்தவன், கதிருக்கு அழைத்தான்.

"என்னடா நான் சொன்னது ரெடியா" என கேட்க, அவனும் எல்லாம் ரெடி என சொல்ல அவன் கைகளில் ஜீப் பறந்தது.

அதே அனாட்டமி ஆய்வகத்தில் கதிரின் அடியில் சுருண்டு கிடந்தான் பிரகாஷ்.

அவனை பார்த்தவுடன் கதிரின் சட்டையை பிடித்து "எதுக்குடா அடிச்ச,அவனை என் கையால கொல்லனும்னு சொன்னேன் தான" என கத்த,

"அவன் பேசுன பேச்சுக்கு நானே என் கையால கொல்லாம விட்டேன்னு சந்தோஷப்படு. என்கிட்டயே பேரம் பேசுறான் பொறுக்கி" என மீண்டும் ஒரு உதை விட்டான் கதிர்.

மதி ஒரு நாற்காலியை எடுத்து போட்டு அமர, அவனின் காலடியில் கிடந்த பிரகாஷின் தலைமுடியை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் "எவ்ளோ தைரியம் இருந்தா ஒரு போலீஸ் காரன் பொண்டாட்டி மேல கைவைக்க பார்ப்ப...எதுக்குடா இப்படி பண்ண... சொல்லுடா... சொல்லு" என முகத்திலேயே பளார் பளார் என்று அடிக்க…

அவனோ அப்போதும் அடங்காமல் "டேய்... எங்க அப்பாவை பத்தி தெரியாம பேசாத...அவர் முன்னாடி நீங்க எல்லாம் கைக்கட்டி தான் நிற்கணும். தமிழ்நாட்டில் நம்பர் ஒன் பணக்காரர் என பெருமை பேசியவன்,என் மேல கை வச்சது மட்டும் தெரிஞ்சிச்சு அப்பறம் உங்களுக்கு வேலையும் இருக்காது உயிரும் இருக்காது" என்றான் ஆணவமாக.

"அது உங்க அப்பாக்கு தெரிஞ்சா தானே தம்பி...நாளைக்கு உங்க அப்பாவே என்கிட்ட வந்து என் பையனை கண்டுபிடிச்சு தாங்கன்னு கேட்பார் பாரு என்றவன், சாரி சாரி அதை பார்க்க தான் நீ உயிரோடு இருக்க மாட்டியே" என உச்சுக்கொட்ட…"டேய் என்னடா சொல்ற?...வேணாம் என்னை விட்டுடு உனக்கு எவ்ளோ பணம் வேணாலும் தரேன்" என பேரம் பேச

"கவலைப்படாத நான் கொஞ்சமே கொஞ்சம் நல்லவன் தான். எனக்கு உன்னோட பணமெல்லாம் வேணாம், உன் உயிர் மட்டும் போதும்…அதுவுமில்லாம உனக்கு துணைக்கு உன்னோட மானங்கெட்ட இரண்டு ஃப்ரெண்ட்ஸையும் துணைக்கு அனுப்புறேன் என்றவன், துப்பாக்கியை எடுக்க...அவனோ அலறி அடித்துக்கொண்டு மதியின் காலில் விழுந்தான்.

"என்னடா அதுக்குள்ள காலில் விழுந்துட்ட….நீ பேசுனா பேச்சுக்கு இன்னும் கொஞ்ச நேரமாவது கெத்தா இருப்பேன்னு நினைச்சேன். ஆனா இப்படி பட்டுன்னு உயிர்பிச்சை கேட்குற" என நக்கலாக சிரித்தவன்,

" உன்னை இதுக்காக மட்டும் தான் கொல்ல போறன்னு மட்டும் நினைக்காத...இது நீ கற்பழிச்சி கொலை பண்ண அத்தனை பொண்ணுக்காகவும் தான்.இதெல்லாம் எப்படி தெரியும்னு பார்க்குறிய...அதான் உன் பிரென்ட் சந்திரன் இருக்கானே, அவனை கவனிக்கிற விதத்தில் கவனிச்சோம் தானா வந்து உண்மையை சொல்லிட்டான். அப்பவே உனக்கு ஸ்கெட்ச் போட்டுடேன் டா. ஆனா என்ன என்னை கொஞ்சம் ஓவர் டேக் பண்ணிட்ட" என்றவனை இன்னும் பயத்துடன் பார்க்க,

"சரி விடு ரொம்ப பயப்படுற... அதனால துப்பாக்கி வேணாம் என்றவன் சுற்றியும் பார்த்துவிட்டு, இதெல்லாம் என்ன" என கேட்க...அவனோ பயத்துடன் நடுங்கும் குரலில் இதுக்கு பேர் கெடாவர் (பதப்படுத்தப்பட்ட மனித உடல்) என்றான் .

"ஓ... செத்ததுக்கு அப்பறம் தான் இந்த கெமிக்கலில் போடுவாங்கலா" என்க அவனும் ஆம் என தலையாட்டினான்.

"அப்போ நாம ஏன் புதுசா யோசிக்க கூடாது" என தாடையில் கைவைத்து யோசித்தவனின் கண்ணசைவில் அதே போன்ற திரவம் நிறைந்த ஒரு கண்ணாடி பெட்டி கொண்டுவரப்பட...அதை கண்டு மிரண்டு தப்பிக்க முயன்றவனை ஒரே தள்ளில் அந்த பெட்டியில் படுக்க வைத்தவன் அதனை மூடினான்….கொஞ்ச நேரத்தில் மூச்சடைத்து துடிக்க துடிக்க தன் உயிரை விட்டிருந்தான் பிரகாஷ்.

அதே லேபிள் இவனும் ஒரு பிணமாக இருக்க...அவனின் நண்பர்கள் இருவருக்கும் கூட வேறு விதத்தில் தண்டனை தயாராக இருக்க அதனை கதிரிடம் கொடுத்துவிட்டு இவன் மனைவியை காண சென்றுவிட்டான்.

உள்ளே நுழைந்தவனை பார்த்ததும் கண்ணீர் பெருக...வேகமாக அவளை நெருங்கியவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள் பெண்ணவள்.
அவனும் அவளின் தலையில் தாடையை பதித்து அப்படியே தனக்குள் புதைத்துக் கொள்ள... இருவருக்கும் தனிமை கொடுத்து அனைவரும் விலகி சென்றனர்.

அவன் முகம் பற்றி கண் மூக்கு காது என முத்தத்தை வரைமுரையின்றி வாரி வழங்க அவனும் அதே அளவுக்கு தன் தவிப்பை வெளிப்படுத்தினான்.

அவனிடம் நடந்தது அனைத்தையும் சொல்ல...அவள் எப்படியெல்லாம் பயந்திருப்பாள் என எண்ணியவன் அவள் கரம் பற்றி "என்னை மன்னிச்சிடு டா என்னால தானே...நான் மட்டும் இன்னைக்கு வந்திருந்தா இப்படி நடந்திருக்காது" என்றவன் அவளின் கரம் கொண்டு தன் கன்னத்தில் அடிக்க…

"அய்யோ விடுங்க மாமா...எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருந்தது தெரியுமா?...உங்களை பார்த்ததும். நீங்க போகக்கூடாதுன்னு சாமிகிட்ட வேண்டிக்கிட்டேன்" என்க, "இனிமே என் உயிரே போனாலும் உன்னை விட்டு போகமாட்டேன்" என்றவன் வன்மையாக அணைக்க...அதற்குள் அறை கதவு தட்டப்பட்டது.

உள்ளே நுழைந்த சகுந்தலா தயங்கி நிற்க, மதி "யாரை கேட்டு உள்ள வந்தீங்க?..வெளிய போங்க" என விரட்டினான்.

மதியின் கையை பிடித்து தடுத்த மித்ரா வேண்டாம் என்பதாய் தலையாட்ட... மனையாளில் வார்த்தையில் கொஞ்சம் அமைதியானான்.

மித்ராவின் கையை பிடித்துக்கொண்டு "என்னை மன்னிச்சிடு டா ஏதோ கோபத்தில் புத்தி கெட்டு போய் இப்படி பண்ணிட்டேன் "என கண்ணீர் வடிக்க,அவளும் "விடுங்கம்மா… எனக்கு உங்க மேல எந்த கோபமும் இல்ல" என்றவள், மெலிதாக சிரிக்க...இவளை போயா தவறாக நினைத்தோம் என காலம் கடந்து வருந்தினார்.

அடுத்த இருநாட்கள் மருத்துவமனையில் கழிய..இன்று தான் வீட்டிற்கு வந்தாள் மித்ரா. அவளுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும் விதமாய் அவளின் அப்பா அம்மா தங்கை என அனைவரும் அவளோடு அதே வீட்டில் இருப்பதை பார்க்கும் போது கண்ட கனவு மொத்தமும் நிறைவடைந்த நிறைவு முகத்தில். அன்றைய நாள் சந்தோஷத்தில் கரைய,

இரவு தங்கள் அறையில் தன் மாமனின் மார்பில் முகம் புதைத்து பேசி கொண்டிருந்த மித்ராவை தன்னிலிருந்து பிரித்த மதி அவளின் முகம் பார்க்க...அவளோ "என்ன டா மாமா அப்படி பார்க்குற" என கேட்டாள்

"மித்துமா... மாமா ஒன்னு கேட்பேன், ஆனா நீ முடியாதுன்னு சொல்லாம தருவியா" என கேட்க,

"என்கிட்ட என்ன மாமா தயக்கம்...தைரியமா கேளு எதுவா இருந்தாலும் நான் தரேன்" என அவன் என்ன கேட்க போகிறான் என்பதை அறியாத குழந்தையாக வாக்கு கொடுத்தாள்.

அவனோ அவளின் கண்களை ஆழமாக பார்த்துக்கொண்டே...அவள் முகத்தை கரங்களில் ஏந்தி "நீ தான் வேணும்,அதுவும் முழுசா...எனக்கே எனக்குன்னு. உன்னை தொலைச்சிட்டு நான் பட்ட வலி இருக்கே அதை வார்த்தையால சொல்ல முடியாது. இன்னும் அந்த தவிப்பு அடங்கவே இல்லை,அதை உன்னால மட்டும் தான் தடுக்கமுடியும்" என்றவன்,

"ஐ லவ் யூ...அண்ட்….ஐ நீட் யூ பேட்லி" என்றவன் அவள் இதழை நெருங்கி,நிமிர்ந்து அவளின் விழி பார்க்க...அவனுக்கு சம்மதிக்கும் விதமாய் கண்மூடி கிடந்தாள்.

இத்தனை நாள் இல்லாத வன்மை அவனின் முத்தத்தில்...அது அவளுக்கு வலித்தாலும் அவளுக்கும் அது தேவையாய் இருந்தது. இரு இதழ்களின் போராட்டம் முடியவே முடியாது என்பது போல் நீண்டுக்கொண்டே இருந்தது முத்த யுத்தம். அவள் மூச்சுக்காற்றுக்காக ஏங்கும் போது மட்டும் கொஞ்சம் இடைவெளி விட்டவன் மீண்டும் முத்தத்தை தொடர்ந்தான்.

முத்தம் கடந்து முதன்முறை அவனின் தொடுகை கணவனாய் முன்னேற… வெட்கமும் கூச்சமும் போட்டி போட...தடுக்க முயன்றும் முடியாத நிலையில் அவள்.கொஞ்சம் கொஞ்சமாக அவளை தன் ஆளுமையின் கீழ் கொண்டுவந்தவன்… புயலாய் அவளை ஆக்கிரமிக்க,அவனின் மென்மையை மட்டுமே உணர்ந்திருந்தவளுக்கு அவனின் வன்மையும் ரசிக்கவே செய்தது.

அவளை விடுவிக்க மனமின்றி மீண்டும் மீண்டும் அவளை நாட...அவனின் தவிப்பை உணர்ந்தவள் அவனுக்கு மொத்தமாய் தன்னையே விட்டுக்கொடுத்தாள். தன் இத்தனை வருட காதல் மொத்தத்தையும் ஒரே கூடலில் உணர்த்த துடித்தவன் அதை சாதித்துவிட்டே அவளைவிட்டு விலகினான்.

தன் மார்பில் கலைந்து களைத்து கிடக்கும் தன் தேவதையின் முகத்தில் படர்ந்த முடி கற்றையை காதோரம் ஒதுக்கி "செல்லக்குட்டி மாமா உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா" என கேட்க, அவன் கேள்வியில் மேலும் சிவந்தவள், அவன் மார்பில் செல்லமாக இரண்டு அடிகளை போட்டாள்.

அவளின் செல்ல சிணுங்கல் கூட அவனுள் போதை ஏற்ற..வெகு அருகில் தெரிந்த அவளின் இதழில் மீண்டும் ஒரு முத்தத்தை கொடுத்து அணைத்துக்கொண்டான் மதி.

நாட்கள் செல்ல செல்ல...இருவரின் காதலும் வளர்ந்துகொண்டே சென்றது. அதற்கு அச்சாரமாய் அடுத்த ஒரே ஆண்டில் அந்த வீட்டிற்கு ஒரு இளவரசியை மித்ரா ஈன்றெடுக்க...மொத்த குடும்பமும் அவளை தாங்கியது.

அதுவும் சண்முக சுந்தரத்திற்கு பேத்தி தான் உலகம் என்ற நிலை. ஆண் குழந்தை தான் குடும்பத்தின் வாரிசு என்று சொல்லி திரிந்த மரகதம் கூட தன் கொள்ளு பேத்தியை பார்த்தவுடன் மனம் மாறிவிட்டார்.
 

Anjali

Well-known member
Wonderland writer
எபிலாக்

நான்கு வருடங்களுக்கு பிறகு...அந்த பெரிய வீட்டு வாசலில் பந்தல் போட்டு,பாட்டு சத்தம் ஊரெங்கும் எதிரொலிக்க ...ஊரே திருவிழா போல் கொண்டாடும் அளவுக்கு சிறப்பாக நடைபெற இருக்கிறது மதனின் திருமணம்.

மதன் வெட்ஸ் திவ்யதர்ஷினி என்ற பெயர் பலகை கூட பார்ப்போர் கண்ணை கவர….வீட்டின் உள்ளே சொந்தங்கள் அனைத்தும் ஆளுக்கு ஒரு வேலையை இழுத்து போட்டுக்கொண்டு செய்து கொண்டிருந்தனர்.

குழந்தைகள் அனைத்தும் மரகத்த்திடம் இருக்க...மற்றவர்கள் மற்ற வேலையை பார்த்தனர்.

மணப்பெண் அறையில் அமர்ந்திருந்த சின்னகுட்டிக்கு தன் கையாலேயே அலங்காரம் செய்து கொண்டிருந்தாள் மித்ரா.

மதன் தான்…. திருமண பேச்சை வீட்டில் எடுத்தவுடன் தன் அண்ணனிடம் சொல்லிவிட்டான் சின்னகுட்டியை காதலிப்பதாக.
சின்னகுட்டியை பார்த்தவுடன் காதலில் விழுந்துவிட்டான் என்று சொல்ல முடியாது, ஆனால் பார்த்தவுடன் அவனின் மனதில் பதிந்துவிட்டாள் என்பது மட்டும் உண்மை.
அது காதல் என்று அவன் உணரும் நேரம் அவள் பள்ளி இறுதியாண்டில் இருந்தாள். எந்த நிலையில் அவளையும் அவள் படிப்பையும் பாதிக்க கூடாது என்ற எண்ணமே அவளை விட்டு தள்ளி நிறுத்த….. அவள் படித்து முடியும் வரை காத்திருந்து வீட்டில் சொல்ல...அனைவருக்கும் மகிழ்ச்சி.

ஆனால் சண்முக சுந்தரம் தான் "என் பொண்ணுக்கு பிடிச்சா மட்டும் தான் இந்த கல்யாணம்" என்றவர் மகளிடம் கேட்க, அவளோ "உங்களுக்கு பிடிச்சா போதும்ப்பா" என சொல்லிவிட...பெருமை தாங்கவில்லை அவருக்கு.

அடுத்தடுத்து அனைத்து சம்பிரதாயங்களும் முடிய...இன்று திருமணம்.

மதி... தம்பியின் திருமணத்தில் அனைத்தையும் முன்னின்று செய்தாலும் பார்வை மட்டும் தன் மனையாளை சுற்றியே….காலையிலிருந்து தன் கையில் சிக்காமல் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கும் மனைவியை பார்வையால் வருடிக் கொண்டிருந்தது அவனின் காந்தவிழிகள். அவளும் அதை உணர்ந்தாலும்,அவனை கண்டுகொள்ளாமல் ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தாள் அவனின் ராட்சசி.

பட்டுப்புடவையில் எளிமையான அலங்காரத்தில் முன்பை விட கொஞ்சம் சதைப்பற்றோடு... மேடிட்ட வயிறை ஒரு கையில் தாங்கி நிற்கும் மனைவியின் அழகில் எப்போதும் போல் இன்றும் மயங்கி நிற்க,

அவனை கலைத்தது அவனின் மற்றொரு குட்டி ராட்சசி….அம்மாவிற்கு தப்பாமல் பிறந்த மகள். அவளுக்கும் எல்லாத்துக்கும் அப்பா தான் வேண்டும். தன் கோபத்தை கூட தந்தையிடம் மட்டுமே காட்டுவாள் அவளின் அன்னையை பின்பற்றி. "அப்பா என்ன தூக்கு" என மனைவியின் புடவை மற்றும் அவனின் சட்டை கலர் இரண்டு கலந்த நிறத்திலுள்ள பட்டு பாவாடை சட்டையில் தேவதையாக நிற்க, அவளை தலைக்கு மேல் தூக்கி போட்டு பிடித்தான். அதில் தன் முத்து பற்கள் தெரிய சிரித்தவாறே தன் தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டாள் அவனின் செல்லமகள்.

அப்போது அங்கே வந்த...கதிரை பார்த்து "கதிரப்பா உங்க பாப்பா மாதிரி எங்க பாப்பாவும் இன்னும் கொஞ்ச நாள்ல வெளிய வந்துடுமே….அப்போ நம்ம வீட்ல இரண்டு பாப்பா ஆகிடும்" என சிரிக்க அவனும் "ஆமாண்டா செல்லம் வாங்க அப்பாகிட்ட" என அவளை தூக்கி கொண்டான். மித்ராவை போலவே அவள்தான் வீட்டில் அனைவருக்கும் செல்லம். கால்கள் தரையில் படாது, யாராவது ஒருவர் ஆள் மாற்றி ஆள் அவளை தூக்கிக்கொண்டே சுற்றுவார்கள்.

கதிருக்கு முதலில் ஒரு மகன் இரண்டாவது ஒரு மகள் சென்ற மாதம் தான் பிறந்திருந்தாள். மதியின் மகள் மிருதுளாவிற்கு அந்த குழந்தை கொஞ்சுவதே வேலையாகி போனது.

கதிர் மிருதுளாவை கொஞ்சிக்கொண்டிருக்க.... மதியோ தன் மனையாளை சைட் அடிக்கும் வேலையை சரியாய் செய்துகொண்டிருக்க….அங்கே வந்தார் மரகதம்.

தன் பாட்டியை பார்த்தவுடன் கதிரின் கையிலிருந்து மதியின் கையிற்கு தாவினால் சின்னவள். "அப்பா தூக்கு பாட்டி வருது" என ரகசியம் போல் தந்தையின் காதில் சொன்னவள், அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

ஏனென்றால் மரகதம் அவளிடம் கொஞ்சம் கண்டிப்போடே இருப்பார். "எல்லாரும் ஒரேடியா செல்லம் கொடுக்க கூடாது. ஒருத்தாருக்காவது பயப்படனும்" என்று சொல்லி அனைவர் வாயையும் அடைத்துவிடுவார். மற்றவர்களும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. அதற்கு காரணம் அவரின் மாற்றமே.

மிருதுளாவை தன் கண் பார்வையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க மாட்டார். ஆனால் சின்னவளால் ஒரே இடத்தில் இருக்கவே முடியாது. பறவை போல் எப்போதும் பறந்துக்கொண்டே இருப்பவளுக்கு அந்த கண்டிப்பு சில நேரம் பிடிக்காமல் போய்விட….அப்போதெல்லாம் அவரை ஏமாற்றிவிட்டு ஓடி வந்துவிடுவாள். இன்று இது தொடர…. தன் கொள்ளு பேத்தியை தேடிக்கொண்டு வந்துவிட்டார் மரகதம்.

"ஏண்டி... ஒரு இடமா இருக்குறீயா, உன்னை தேடுறதே எனக்கு வேலையா போச்சு. எப்பவும் அங்கிடும் இங்கிடும் ஓடிகிட்டே... வாடி இங்க" என அவளை வாங்க கைகளை நீட்ட,

"வேணா…. வேணா நான் எங்க அப்பாகிட்ட இருக்கேன்" என சொன்னவள் தந்தையை இன்னும் கட்டிக்கொண்டாள்.

"ஆமா உங்க அப்பன் அப்படியே உன்னை பார்த்துக்கிட்டு தான் மறுவேலை பார்ப்பான். என்னமோ நேத்துதான் புதுசா கல்யாணம் ஆனவன் மாதிரி உங்க அம்மாவை வெச்ச கண்ணு வாங்க பார்க்கவே அவனுக்கு நேரம் சரியாய் இருக்கும், இதுல நீ வேற. வாடி வாயாடி அப்படியே உங்க அம்மா மாதிரி எது சொன்னாலும் பதிலுக்கு பதில் பேசிக்கிட்டு" என அவள் சிணுங்களை கண்டுகொள்ளாமல் பிடிவாதமாக தூக்கிக்கொண்டவர்,

"ஏண்டா…..அதுதான் கட்டம்கட்டி என் பேத்தி கல்யாணத்தை நிறுத்தி தூக்கிட்டு வந்து பொண்டாட்டி ஆக்கிட்டியே, திரும்பவும் எதுக்கு இப்படி முழுங்குற மாதிரி பார்க்குற. அவ எங்கையும் தொலைஞ்சு போய்ட மாட்டா. போ….போய் பந்தியில் நில்லு, அங்க ஆள் குறைவா இருக்கு" என அவனை விரட்ட….

'இந்த கிழவி அடங்கவே அடங்காது போல ' என சிரித்துக் கொண்டவன், "என்ன பண்றது பாட்டி….உன் பேத்தி அப்போ இருந்ததை விட இன்னும் அழகாகிட்டே போறாளே….என்ன பண்றது. பேசாம உன் பேத்தியை எங்கேயாவது கடத்திட்டு போய்டவா" என மரகதத்தை பார்த்து கண்ணடிக்க,

"ரொம்ப ஏத்தம் தான்டா உனக்கு… கடத்திட்டு போவானாம்ல, இதையே என் மோவன் இருக்கும் போது சொல்லி பாரு, அப்போ தெரியும் உனக்கு" என அவனோடு சண்டையை இழுக்க…

"ஏன் உங்க பையன் என்ன அவ்ளோ பெரிய ஆளா…. எங்க வர சொல்லுங்க பார்ப்போம். நானும் என்னோட மாமனாரை கூப்பிடுறேன்" என அவனும் வம்பிழுக்க….அங்கே ஆஜர் ஆனார் சண்முகசுந்தரம்.

"உங்க இரண்டுபேருக்கும் நேரங்காலமே இல்லையா சண்டை போட. அதுதான் தினமும் வீட்ல போடுறீங்களே….அது போதாதா. ஏம்மா அவன்தான் வம்புக்கு வருவான்னு தெரியும்ல அப்பறம் நீயும் எதுக்கு குழந்தை மாதிரி சண்டை போடுற. போய் ஒரு இடத்துல உட்காரு சும்மா ஓடிக்கிட்டே" என சண்முகம் சொல்ல….தன்னை சொன்ன அதே வார்த்தையை இப்போது சங்குமுகம் மரகத்தை பார்த்து சொல்லவும், மரகதம் இடையில் அமர்ந்திருந்த மிருதுளா சத்தமாக சிரித்தாள்.

"சூப்பர் தாத்தா….சூப்பர்" என பாட்டியை பார்த்து ஒழுங்கு காட்ட

"அட என் செல்லம் இங்கதான் இருக்கீங்களா….வாங்க வாங்க தாத்தா கிட்ட" என தனது பேத்தியை தாயிடமிருந்து வாங்கிகொண்டவர், "போங்க எல்லாரும் போய் அவங்கவங்க வேலையை பாருங்க" என்றவர் அப்படியே ஒரு நாற்காலியில் பேத்தியுடன் அமர்ந்துவிட்டார்.

நடக்க போவது தனது மகள் திருமணம் என்றாலும் அவருக்கு பார்ப்பதற்கு ஒரு வேலையும் இல்லை. அனைத்தையும் மதியே பார்த்துக்கொண்டான். மருமகனிலிருந்து எப்போதோ அவருக்கு மகனாக மாறி விட்டிருந்தான்.

அவருக்கு இருக்கும் ஒரே வேலை தன் பேத்தியோடு இருப்பது மட்டும் தான். தன் மகள்களுக்கு செய்யாமல் விட்ட அனைத்தையும் தன் பேத்திக்கு செய்துக் கொண்டிருந்தார் நிறைந்த மனதோடு.

மித்ராவே பார்த்து நடுங்கும் தந்தையான சண்முகசுந்தரத்தை மிரட்டி ஆட்டிவைக்கும் வல்லமை மிருதுளா ஒருத்திக்கு மட்டுமே இருந்தது அந்த குடும்பத்தில். அவள் சொல்வதை தட்டாமல் செய்து முடிப்பார் அது ஏதுவாக இருந்தாலும்.

இப்படி வீட்டில் பழைய கசடுகள் எதுவுமின்றி சந்தோஷம் மட்டுமே நிறைந்திருக்க...அனைவரின் நல்லாசியோடு மதன் தர்ஷினி யின் திருமணம் நல்லபடியாக முடிந்தது. புகுந்த வீடு செல்லும் போது வரும் கண்ணீருக்கு இங்கே வேலையில்லாமல் போக...சிரித்த முகமாக மகளை விட்டுவிட்டு அவளின் பெற்றோர்கள் செல்ல...அவளும் துணைக்கு தன் அக்கா இருக்கும் தைரியத்தில் சிரித்தபடி வழியனுப்பி வைத்தாள்.

இரவு தங்கையை அலங்கரித்து மதனின் அறையில் விட்டுவிட்டு தங்கள் அறைக்குள் நுழைந்தாள் மித்ரா.

இங்கு தர்ஷினி தயங்கி தயங்கி உள்ளே நுழைய...அவளை வாஞ்சையோடு பார்த்திருந்தான் மதன்.

இதே வீட்டில் அவள் முதல்முறை கண்களில் மிரட்சியோடு நுழைந்தது அவனுக்கு நினைவு வர தனக்குள் புன்னகைத்து கொண்டான். அப்போது அந்த சின்ன பெண்ணின் பாவனையை ரசிக்க மட்டுமே தோன்றியது அவனுக்கு. நாட்கள் செல்ல செல்ல அவளின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்க தொடங்கியிருந்தான் மதன். அதுவே காதலாக மாற, இதோ இப்போது அவனின் மனைவியாக அவனின் திவிகுட்டி.

அதே மிரட்சி பார்வையோடு அருகில் வர...அவளை இழுத்து தன் அருகில் அமர்த்திக்கொண்டவனின் கரம் அவளின் கரம் பிடித்து மென்மையாக வருடியது. அதில் கொஞ்சம் பயம் தணிந்தவளின் முகம் நிமிர்த்தி "என்னை பிடிச்சிருக்கா?.." என்க,அவளோ தலையை குனிந்து கொண்டே தலையை மட்டும் ஆட்ட…"என்னை பார்த்து சொல்லேன்" என அவன் சொல்ல அவளோ மாட்டேன் என்று தலையாட்டினாள்.

"அப்போ சொல்ல மாட்ட…" என அவன் கோபமாய் திரும்பிக்கொள்ள...அவனை சமாதானப்படுத்த அவள் எடுத்த முயற்சியில் மகிழ்ந்தவன்….இனிமையாய் தன் இல்லறத்தின் முதல் படியை அவளின் இதழ் முத்தத்தால் எடுத்து வைத்தான்.

மதியின் அறையில் தந்தையும் மகளும் அறையை ஒரு வழி ஆக்கியிருந்தனர். "அப்பா என்ன கண்டுபிடி…. கண்டுபிடி" என அவன் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே ஒளிந்துகொள்ள….அவனும் அவள் இருக்குமிடத்தை விட்டுவிட்டு எங்கெங்கோ தேடி தேடியே மகளிடம் தோற்றுப் போனான்.

மித்ரா களைப்போடு உள்ளே வர… இருவரின் விளையாட்டை பார்த்து தன் சோர்வையும் மீறி உதட்டில் புன்னகை வர….எங்கே தான் சிரித்தால் அதையே சாக்காய் வைத்துக்கொண்டு இன்னும் அடம் பண்ணுவார்கள் என்பதை உணர்ந்து முகத்தை கோபமாக வைத்துக் கொண்டாள்.

"இங்க என்ன நடக்குது...மணி என்ன தெரியுமா?...தூங்குற எண்ணம் இருக்கா இல்லையா?..மிருது….து" என சத்தமாக மகளை அழைக்க,

அவளோ முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்.

"இப்போ எதுக்கு அவளை கத்துற….கொஞ்ச நேரம் விளையாடிட்டு போற விடு" என்றவன் மகளை மடியில் ஏந்திக்கொள்ள அவளும் தாயை முறைத்துக்கொண்டே தந்தையோடு ஒட்டிக்கொண்டாள்.

அப்படியே மகளை தட்டிக்கொடுக்க...காலையில் இருந்து ஓடி ஆடி விளையாடிய களைப்பில் அடுத்த பத்து நிமிடத்தில் தூங்கியும் போனாள் சின்னவள்.

கரங்கள் மகளை தட்டிக்கொண்டிருந்தாலும் பார்வை என்னவோ மனைவியையே கொள்ளை அடித்துக் கொண்டிருந்தது. மித்ரா கண்ணாடி அலமாரி எதிரே நின்றபடி போட்டிருந்த நகைகளை கழட்டி பத்திரப்படுத்தியவள்….தன் கூந்ததையும் தளர்த்திவிட்டு
"ரொம்ப டயர்டா இருக்கு மாமா" என சொல்லியபடி புடவையை கூட மாற்றாமல் படுத்துவிட… அதுவரை கணவனாய் அவளையே ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வை சட்டென்று தாயாய் மாற,

"செல்லக்குட்டி பட்டுப்புடவை உடம்பை உறுத்தும் டா...என்றவன் மகளை மெத்தையில் கிடத்திவிட்டு... குளியலறை சென்று ஹீட்ட்டரை ஆன் செய்து வந்தவன் கெஞ்சி கொஞ்சி அவளை குளிக்க அனுப்பினான். ஒரு மெல்லிய காட்டன் நைட்டியை கொடுத்து போட சொன்னவன், அவளை தன் மார்பில் சாய்த்து கொண்டு தட்டி கொடுக்க, உடல் அசதியில் அவளும் நன்றாக தூங்கிவிட்டாள்.

ஒருபக்கம் மகள் ஒருபக்கம் மனைவி…. தேடினாலும் கிடைக்காத சொர்கம் இரண்டையும் தன் கைவளைவுக்குள் வைத்தபடி…. உறங்க தொடங்கியவனின் கண்களில் அத்தனை நிம்மதி….மகிழ்ச்சி. அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையில் அவன்.

நடு இரவில் அவன் தூக்கம் களைத்தவள் "சாரி மாமா எனக்கு ரொம்ப டயர்டா இருந்துச்சு அதான் தூங்கிட்டேன்" என சொல்ல…"அதுக்கு எதுக்குடா குட்டிமா சாரி" என்றவன் அவளை அணைத்துக் கொண்டு தூங்க முயல,அவளோ மாட்டேன் என தலையாட்ட…

"அடங்க மாட்ரடி…. உன்னை என்ன பண்றேன் பாரு" என கோபமாய் அவள் மீது பாய்ந்தவன், மென்மையை கையாள...அதில் மெழுகாய் கரைந்து போனாள் பெண்ணவள்.

அடுத்த நாள் காலையில் அவளுக்கு முன்பே எழுந்தவன், வெளியே வர...அனைவரும் குல தெய்வ கோவிலுக்கு பொங்கல் வைக்க தயார் ஆகிக்கொண்டிருக்க...அவனோ "நீங்க முன்னாடி போங்க. அவ தூங்குறா பூஜை தொடங்குறது குள்ள அவளை கூட்டிட்டு வரேன்" என்றவன் அவர்களை அனுப்பிவிட்டு சமையலறை நோக்கி சென்றான். பாலை அடுப்பில் வைத்துவிட்டு தன்னவளை எழுப்பி தயாராக சொன்னவன்,

அவள் வந்தவுடன் கையில் பாலை கொடுத்து குடிக்க சொன்னவன்...பூஜை முடிந்து சாப்பிட நேரம் ஆகிடும் என்று அவளை சாப்பிட வைத்தே அழைத்து சென்றான்.

கோவிலில் குடும்பமாக சாமி சன்னதியில் கண்மூடி நின்ற மித்ராவிற்கு இப்போது கண்களில் கனவுகள் இல்லை….ஏனென்றால் அவளின் கனவு அனைத்தையும் நிறைவேற்றியிருந்தான் அவளின் கணவன் மதி.

கனவுகளில் மட்டுமே மிதந்திருந்த அவளை கரை சேர்த்திருந்தது அவளின் காதல்.

முற்றும்.


 
Status
Not open for further replies.
Top