ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உருகியதே என் உயிரே- கதை திரி

Status
Not open for further replies.

Vilacini

Well-known member
Wonderland writer

"ஆகாஷ், அசிங்கமா..." என்று கோபமாக ஆரம்பித்தவள் சற்று நிறுத்தி தன்னை நிதானப்படுத்திக்கொண்டு “உன் கற்பனைக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. காதலிக்கும் போது என் முகத்தை பார்த்து தானே லவ் சொன்ன. இப்பவும் எந்த முடிவா இருந்தாலும் முகத்துக்கு நேராவே பேசிக்கலாம், வா" என்றாள்.​

கழுத்து வரை வந்துவிட்ட கோபத்தை எல்லாம் அடக்கிக்கொண்டு தான் பேசிக்கொண்டிருந்தாள் மதுஷிகா. அவளுக்கு தெரிந்த ஆகாஷ் இவன் அல்லவே. இதுநாள் வரை அவன் அவளிடம் இதுபோல் அநாகரிகமாக பேசியது கூட கிடையாது. இப்பொழுது எல்லையை மீறி பேசுகிறான் என்றால் அதற்கு அவள் மீதான பொசஸிவ்னெஸ் (possesiveness) தான் காரணமாக இருக்கும் என்று நம்பினாள். அந்த ஒரே காரணத்திற்காக தான் இன்னமும் அவனிடம் அமைதியாக பேச முயன்று கொண்டிருந்தாள்.​

"நான் ஊருல இல்ல, திரும்ப வந்ததும் பேசிக்கலாம்" என்றான்.​

"ஊருல இல்லையா? என்கிட்ட சொல்லவே இல்ல?" என்று கேட்டாள்.​

"சொல்ல தோணல" என்றான் விட்டேற்றியாக.​

"சரி, எங்க போயிருக்க?" என்று கேட்டாள்.​

"அது உனக்கு தேவையில்லாதது" என்றான்.​

"சரி ஆகாஷ். இதுக்கு மேல பேசுனா தேவை இல்லாமல் சண்டை தான் வரும். இன்னிக்கு உன்னை மீட் பண்ணிட்டு நாளைக்கு காலையில் வீட்டுக்கு கிளம்புலாமுன்னு நினைச்சேன். ஆனால், நீ ஊருல இல்லை தானே. சோ, நான் இன்னிக்கே வீட்டுக்கு கிளம்புறேன். நீ ஊருல இருந்து வந்ததும் சொல்லு. அக்கா கல்யாணம் முடிய மீட் பண்ணுவோம்" என்று சொல்லியபடி அழைப்பை துண்டித்திருந்தாள்.​

 

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 25

ஒருமுறை அந்த அறையை சுற்றி நோட்டம் விட்டாள் மதுஷிகா. ஒரு வழியாக அனைத்து பொருட்களையும் அடுக்கி முடித்திருந்தாள்.ஆடைகளையும் புத்தகங்களையும் அடுக்கி வைத்திருந்த பெட்டிகளை எடுத்து ஓரமாக வைத்தவள் அங்கே இருந்த அலமாரியையும் இழுப்பறையையும் மீண்டும் ஒருமுறை திறந்து பார்த்தாள்.​

அனைத்தும் துடைத்து வைத்தாற் போல் காலியாக இருந்தது. எதுவும் விட்டுப் போகவில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு மெதுவாக சென்று கட்டிலில் அமர்ந்தாள். கடந்த சில தினங்களாக தேர்வுகளும் அதற்காக கண் விழித்து படித்ததுமாக இருக்க அதுவே அவளுக்கு அசதியாக இருந்தது. அதோடு சேர்த்து ஆகாஷுடனான பிரச்சனையும் மன அழுத்தத்தை தந்திருக்க அவளது உடலுக்கும் உள்ளத்திற்கும் நிச்சயமாக ஓய்வு தேவை என்றே தோன்றியது.​

எப்படியும் இன்று ஆகாஷை சந்திக்க தேவையில்லாத காரணத்தால் இன்றே வீட்டிற்கு கிளம்பலாம் என்று தான் யோசித்திருந்தாள். ஆனால், இப்பொழுது அவள் வீட்டில் நிச்சயமாக உறவினர்கள் கூட்டமும் கல்யாண வேலைகளுமாக பரபரப்பாக இருக்கும் என்று அவளுக்கு நன்றாக தெரியும். ஓய்வெடுக்கக் கூடிய சூழ்நிலையும் அங்கே அமைந்திருக்காது என்பதையும் அறிந்தே இருந்தாள். அவர்களுடன் இணைந்துக்கொண்டு அந்த சூழலை அனுபவிக்க ஆசையாக இருந்தாலும் அவள் இருந்த மனநிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை.​

ஆகவே ,சற்று நேரம் ஹாஸ்டலிலேயே ஓய்வெடுத்த பின் வீட்டிற்கு இன்றே கிளம்பலாமா அல்லது ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி நாளை காலையில் கிளம்பலாமா என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டாள்.​

அலைபேசியை எடுத்து அதில் இயர் செட்டை பொருத்தி அதை காதில் மாட்டிக் கொண்டு அப்படியே தலையணையில் சுகமாக தலை சாய்த்தாள்.​

அலைபேசியில் ஒலிக்கவிட்டிருந்த தருணின் பாடல்கள் மென்மையாக அவள் செவிப்புக மெதுவாக கண்கள் மூடியவளுக்கு அவன் குரலே தாலாட்டாக மாறியிருக்க அது கொடுத்த ஆறுதலில் அப்படியே உறங்கிப் போயிருந்தாள்.​

***​

கிருஷ்ணகுமாரின் இல்லம் வண்ண பூக்களாலும் வாழை மர தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.​

அதோடு உறவினர்களின் பேச்சு குரலும் வந்திருந்த குழந்தைகளின் சிரிப்பொலியும் சுட்டித்தனமும் இணைந்து கொள்ள அந்த வீடு முழுமையாக கல்யாண வீடாக உருமாறி இருந்தது.​

அலங்கார ஏற்பாடுகளை எல்லாம் தானவீரனே முன்னிருந்து பார்த்துக் கொண்டிருக்க வந்திருந்த உறவுக்கார ஆண்கள் யாவரும் தோட்டத்தில் கிருஷ்ணகுமார் மற்றும் சேகருடன் ஊர் கதைகளை பற்றி அளவளாவிக் கொண்டிருந்தனர்.​

உறவுக்கார பெண்களில் சிலர் சமையலறையில் சரோஜினிக்கு உதவியாக நிற்க சிலர் முன்னறையில் ஈஸ்வரியுடன் அமர்ந்து பூ தொடுப்பதும் சரோஜினி வீட்டிலேயே செய்து கொடுத்த லட்டு, ஜிலேபி, பால்கோவா, போன்ற இனிப்பு வகைகளை திருமணத்திற்கு வரவிருக்கும் விருந்தினர்களுக்கு கொடுப்பதற்காக பேக் செய்வதுமாக இருந்தனர்.​

இவைகள் அனைத்தையும் கடையில் வாங்கி விட முடியும் தான். ஜெயலக்ஷ்மி கூட அதையே தான் சொன்னார். ஆனால், உறவினர்களோடு சேர்ந்து செய்வதில் கிடைக்கும் அலாதி இன்பம் கடையில் ஏற்கனவே தயார் செய்து வைத்திருப்பதை வாங்கி வருவதில் கிடைப்பதில்லை என்றிருந்தார் கிருஷ்ணகுமார்.​

ஆகவேதான், அது போன்ற இனிப்பு வகைகளை இப்பொழுது வீட்டிலேயே தயார் செய்து அதை பேக் செய்து கொண்டும் இருந்தனர். ஜெயலக்ஷ்மியும் கூட வெகு நாட்களுக்குப் பிறகு சொந்தங்களை பார்த்த ஆனந்தத்தில் தனக்கிருக்கும் மூட்டு வலியை கூட மறந்துவிட்டு அவர்களுடன் இணைந்து கொண்டார்.​

அவ்வாறாக கைகள் கொஞ்சம் வேலை செய்ய வாய்கள் நிறைய கதைகள் பேச என்று அவ்விடமே கலகலப்பிற்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது.​

இதற்கிடையில் திருமணத்திற்கு முன்பாக செய்ய வேண்டிய நலுங்கு போன்ற சடங்குகளுக்கும் ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார் சரோஜினி.​

தானவீரன் வீட்டினை அலங்கரிப்பதில் ஈடுபட்டிருந்தாலும் அவன் விழிகள் வைஷாலியையே தேடிக்கொண்டிருந்தன. அவளும் அறிவுமதி, இளமதி என்று அவள் வயதை ஒத்த பெண்களுடன் அறைக்குள் தான் இருந்தாள்.​

அவளின் செல்ல தங்கை மதுஷிகா அருகே இல்லாத குறையை அவர்கள் தான் நிவர்த்தி செய்துகொண்டிருந்தனர். மதியம் சாப்பாட்டிற்கு பின் அவளது அறைக்குள் நுழைந்தவர்கள் இன்னும் வெளியேறியபாடில்லை. திருமணத்திற்காக அவள் எடுத்து வைத்திருந்த ஆடை அணிகலன்களை பார்ப்பதும் அவளை கிண்டல் செய்து கன்னம் சிவக்க வைப்பதுமாக அவள் அறையில் கலகலத்துகொண்டிருந்தார்கள் அவர்கள்.​

அவன் விழிகளும் வீட்டை சுற்றி அவளை தேடியலைந்து தோற்றுப்போக ஒரு ஏமாற்ற பெருமூச்சுடன் செய்துகொண்டிருந்த வேலைகளை தொடர்ந்தான் அவன்.​

நாற்காலியின் மீது ஏறி நின்று பூக்களால் ஆன தோரணங்களை வீட்டின் நிலைவாசலில் கட்டி கொண்டிருந்தான் தானவீரன். அந்நேரம் அவனுக்கு அருகே "ம்....கூம்.." என்று குரலை செருமிக்கொண்டே வந்து நின்றாள் அறிவுமதி. அவள் குரலில் பக்கவாட்டாக திரும்பி பார்த்தான் அவன்.​

கையில் காபி டம்ளர்கள் நிறைந்த தட்டுடன் நின்றிருந்தாள் அவள்.​

மாலை சிற்றுண்டி தயாராகியிருக்க வைஷாலி மற்றும் அவள் அறையில் அட்டகாசம் செய்துகொண்டிருந்த இளசுகளை கீழே அழைத்திருந்தார் சரோஜினி. கீழே வந்தவர்களுக்கு மாலை சிற்றுண்டியை பரிமாறியவர் அறிவுமதியின் கையில் காபி தட்டை கொடுத்து அதை மற்றவர்களுக்கு கொடுத்து வரும்படி அனுப்பிவைத்தார்.​

எல்லாருக்கும் கொடுத்துவிட்டு கடைசியாக தான் தானவீரனிடம் வந்து நின்றாள் அறிவுமதி. அவன் அவளை கண்டுகொள்ளாமல் தனது வேலையில் கவனமாக இருக்க கடுப்பானவள் 'பார்த்தும் பார்க்காத மாதிரியா இருக்க? இப்போ பாரு' என்று இதழ்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டப்படி அவன் நின்றிருந்த நாற்காலியின் காலில் எட்டி உதைத்திருந்தாள். அவள் உதைத்தலில் நாற்காலி ஆட்டம் கண்டிருக்க அதன் மேல் நின்றிருந்த தானவீரனும் தடுமாறிவிட்டான்.​

கீழே விழுந்துவிடாமல் தன்னை காத்துக்கொள்ள நாற்காலியில் இருந்து பாய்ந்து இறங்கியவனின் கால்கள் இடறி விட சட்டென்று அருகே நின்ற அறிவுமதியின் தோளை பற்றி தன்னை நிலைப்படுத்திக்கொண்டான்.​

"ஹேய் லூசு" என்று அவளை திட்டியவன் கால்களை நிலையாக ஊன்றி தன்னை சமன் செய்தபடி நிமிர்ந்து பார்க்க அங்கே சுவற்றில் சாய்ந்து நின்று அவர்களை தான் பார்த்துக்கொண்டிருந்தாள் வைஷாலி.​

அவனை புருவமுயர்த்தி பார்த்தவள் "என்னதிது"? என்று அறிவுமதியின் தோள்பட்டையில் பதிந்திருந்த அவன் கரத்தை கண்களால் சுட்டி காட்டி கேட்டாள்.​

அவள் கண்கள் சென்ற திசையில் பார்த்த தானவீரன் 'ஆத்தி' என்று பதறியபடி அவள் தோளின் மீதிருந்த தனது கரத்தை எடுத்தவன்​

"அது..." என்று வைஷாலி அவனை தவறாக நினைத்துவிட கூடுதே என்கின்ற அவசரத்தில் பதில் சொல்ல வர "அது...மாமாவுக்கு என் மேல ஒரு கண்ணு வைஷுக்கா. அதை சொல்லுறதுக்கு வெக்க படுறாரு. அப்படி தானே மாமா?" என்று அவனை முந்திக்கொண்டு பதில் சொல்லியிருந்தாள் அறிவுமதி.​

அவள் சொல்லிய பதிலில் அதிர்ந்து சட்டென்று அவன் வைஷாலியை பார்க்க வைஷாலியோ அவனிடம் "ம்ம்ம்?" என்று அறிவுமதி சொல்லியதை உறுதி படுத்திக்கொள்ள நினைத்தவளாக கேட்டாள்.​

"ஐயோ இல்லை" என்று தலையை இடவலமாக வேக வேகமாக ஆட்டிய தானவீரன் மீண்டும் அறிவுமதியை திரும்பி பார்க்க அவளோ தரையை பார்த்துக்கொண்டே கை பெருவிரலின் நகத்தை கடித்தபடி காலின் பெருவிரலால் அந்த பளிங்கு தரையில் கோலம் வேறு போட்டுக்கொண்டிருந்தாள்.​

அவளை ஒரு மார்க்கமாக பார்த்த தானவீரன் "என்ன பண்ணுற?" என்று கேட்டான்.​

"வெட்கப்படுறேன் மாமா" என்றாள் அவள். கண்கள் வேறு பாட்டம்பூச்சு சிறுகுகளாய் படபடத்துக்கொண்டன.​

அவனும் வைஷாலியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள வைஷாலிக்கோ அவள் அடிக்கும் லூட்டியில் சிரிப்பை அடக்க முடியவில்லை. இதழ்களை மடித்து கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கி கொண்டே தானவீரனை பார்த்தாள்.​

"கண்டராவி, அடிச்சு பல்லை பேத்துருவேன் பார்த்துக்கோ..." என்று அவன் சீற அதில் கடுப்பான அறிவுமதி " எதுக்கு மாமா வெட்கப்படுற. இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் மறைச்சு வைக்க கூடாது. உண்மையை உடைச்சு சொல்லிடனும்" என்று வேண்டுமென்றே சொல்லியபடி தானவீரனை பார்த்து கண்களை சிமிட்ட தானவீரனுக்கு தான் எங்கே சென்று முட்டிக்கொள்வது என்றும் தெரியவில்லை.​

பொதுவாக அவனை பார்க்கும் நேரங்களில் எல்லாம் முறை பெண் என்ற முறையில் அவள் இப்படி விளையாட்டாக வம்பு வளர்ப்பது எல்லாம் சகஜமாக நடப்பது தான். அவனும் அதை அப்பொழுதெல்லாம் சாதாரணமாக கடந்துவிடுபவன் தான். ஆனால், ஏனோ இப்பொழுது வைஷாலியின் முன்னே அவள் இப்படி பேசுவது அவனுக்கு அவ்வளவு உவப்பாகயில்லை.​

அவர்களின் அழிச்சாட்டியதை பார்த்துக்கொண்டிருந்த வைஷாலியும் பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி "ஓஹோ, அப்படியா சங்கதி. நடக்கட்டும் நடக்கட்டும்..." என்று கேலியாக சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து செல்ல "வைஷு, இந்த லூசு சொல்லுறதை எல்லாம் நம்பாத... " என்று அவன் உரக்க சொன்னான்.​

"சரி.. சரி நம்ப மாட்டேன்" என்று அவளும் கிண்டலாக சிரித்தபடியே சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.​

தானவீரனும் வைஷாலியை பார்த்துக்கொண்டே நிற்க அவன் முன்னே தனது வளைக்கரத்தால் சொடக்கிட்டு "அக்காவை பார்த்தது போதும் அவளுக்கு நாளன்னைக்கு கல்யாணம். வேணும்னா என்னை பார்த்துக்கோங்க. நான் ஃப்ரீயா தான் இருக்கேன்" என்றாள்.​

அவன் இருந்த மனநிலையில் அவள் பேச்சு அவனுக்கு கடுப்பை கிளப்ப இதழ் குவித்து ஊதிக்கொண்டே இருவிரல்களால் நெற்றியை நீவியபடி அவளை ஏறிட்டு பார்த்தவன் "உன்னை எல்லாம் உங்க வீட்டுல அடிச்சு வளக்கலையா?" என்றுதான் கேட்டான்.​

"ஏன் அடிக்காமல்...அதெல்லாம் அசால்ட் ஆஹ் வாங்கிட்டுப் போவோம்ல" என்றாள் அவள் பெருமையாக.​

"இதெல்லாம் ஒரு பெருமையா...உனக்கெல்லாம் அடி பத்தல..." என்று அவன் சொல்ல "ஏன் நீங்க வேணும்னா என்னை கட்டிக்கிட்டு போதும் போதுங்குற அளவுக்கு அடிக்கவேண்டியது தானே...கிஸ்ஸு... கிஸ்ஸு" என்றபடி ஒற்றை கண்ணை சிமிட்டினாள் அவள்.​

"அடங்க மாட்டியா நீ...உன்னை கொல்ல போறேன் பாரு..." என்று கையில் வைத்திருந்த பூ தோரணத்தை அவள் கழுத்தில் சுற்றி நெறிக்க "ஐயோ கொலை… கொலை" என்று கத்தி கூப்பாடு போட்டுவிட்டாள் அறிவுமதி.​

அவள் கத்தியதில் பதறியடித்துக்கொண்டு அவள் கழுத்தில் சுற்றியிருந்த தோரணத்திலிருந்து கையை எடுத்தவன் “ஆத்தாடி… நான் இல்லை” என்று ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான்.​

அவன் சேஷ்டையை பார்த்து வாய் விட்டு சத்தமாகவே சிரித்த அறிவுமதியின் சிரிப்பொலி அவன் காதில் விழுந்தாலும் அவளிடமிருந்து தப்பினால் போதும் என்று திரும்பியும் பார்க்காமல் சென்றுவிட்டான்.​

அறிவுமதியிடமிருந்து தப்பித்து ஓடிவந்த தானவீரன் நேரே அவனது அறைக்குள் நுழைந்திருந்தான்.​

"பிள்ளையை பெத்துவிட சொன்னா பேயை பெத்து விட்டிருக்காங்க" என்று அறிவுமதியுடன் சேர்த்து அவளின் பெற்றோர்களையும் திட்டி கொண்டே அறைக்குள் நுழைந்தவனுக்கு வீட்டை அலங்காரம் பண்ணுகிறேன் என்று ஓடி ஆடி வேலை செய்ததில் ஒரே கச கச என்று இருக்க குளித்தால் நன்றாக இருக்கும் போல இருந்தது.​

குளிர்ந்த நீரில் நீராடிவிட்டு வந்தவன் இடையில் இருந்த பூந்தூவலையுடன் அப்படியே மெத்தை மீது வீழ்ந்துவிட்டான்.​

அப்படியே சிறிது நேரம் கண்களை மூடி படுத்திருந்தவனின் எண்ணம் முழுக்க வைஷாலியே நிறைந்திருந்தாள். அவளுடனான நினைவுகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக அவன் சிந்தையில் நிழலாடின. சட்டென்று கண்களை விரித்தவன் எழுந்து கண்ணாடி முன்னே நின்றான்.​

அவனது ஈர சிகையை இருகைகளாலும் பின்னால் கோதி விட்டபடி "வீரா, பி ஸ்ட்ரோங்" என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவன் வெள்ளை நிற ஷர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து ஆயத்தமாகி வெளியில் சென்றான்.​

அங்கே கூடி பேசிக்கொண்டிருந்த ஆண்கள் கூட்டத்தோடு அவனும் இணைந்து கொண்டான். அவர்களின் பேச்சு திருமணம் தொடங்கி எதை எதையோ நோக்கி சென்றுகொண்டிருக்க அவனும் அசுவாரஸ்யமாக கேட்டுக்கொண்டே நின்றிருந்தான்.​

அந்நேரம் பார்த்து மாடியிலிருந்து சிதறிய சில்லறை போன்று பெண்களின் சிரிப்பொலி கேட்க அத்திசையை நோக்கி நிமிர்ந்து பார்த்தான் தானவீரன்.​

அங்கே இளஞ்சிவப்பு நிற லெஹெங்காவில் இளைஞிகள் புடைசூழ அழகு சிலையென மாடிப்படியில் இறங்கி வந்துகொண்டிருந்தாள் வைஷாலி.​

அவளை பார்த்தவனின் கண்கள் இரண்டும் அவள் மீதே பசை போட்டது போன்று ஒட்டிக்கொண்டன. விழிகளை அவளை விட்டு அகற்றவே முடியவில்லை. அவன் அவளையே இமைக்காமல் பார்த்துக்கொண்டே நிற்க படியிலிருந்து கீழே இறங்கி வந்துவிட்டவள் அவனை கடந்து சென்று அங்கே பிரத்தியேகமாக அலங்கரிக்க பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்துக்கொண்டாள்.​

புகைப்பட கலைஞர்கள் மற்றும் திருமண பெண்ணிற்கு மருதாணியிட மெஹெந்தி கலைஞரும் வந்துவிட அந்த இடமே கலை கட்ட தொடங்கியிருந்தது.​

மெஹெந்தியிட வந்த பெண்ணும் வைஷாலியின் கரங்களுக்கு மருதாணியிட ஆரம்பித்துவிட புகைப்பட கலைஞர்களும் அந்த நிகழ்வை வளைத்து வளைத்து புகைப்படும் எடுத்துக்கொண்டிருந்தனர்.​

முகத்தில் பூரிப்பும் இதழ்களில் புன்னகையுமாக அவள் கரங்களில் மருதாணி இட்டுக்கொள்ளும் அழகை கண்ணார பார்த்து ரசித்துக்கொண்டே நின்றான் தானவீரன்.​

அதே சமயம் அவன் அருகே சிறுமி ஒருத்தி அழுதுக்கொண்டே வந்து நின்றாள். அவளை குனிந்து பார்த்தவன் அவள் அருகே மண்டியிட்டு அமர்ந்து "ஏன்மா அழுற?" என்று கேட்டான்.​

"எனக்கும் அக்கா மாதிரி மருதாணி போட்டுக்கணும் மாமா" என்றாள் அந்த குட்டி பெண்.​

"அப்போ போட்டுக்க வேண்டியது தானே...இதுக்கு ஏன் அழற?"என்று கேட்டான்.​

"அம்மா கிட்ட கேட்டேன். அதெல்லாம் ஒன்னும் வேண்டாமுன்னு சொல்லிட்டாங்க" என்று இதழ் பிதுக்கி அழுதாள்.​

"ஹ்ம்ம்...இப்போ என்ன, மருதாணி போடணும் அவளோ தானே. வா நானே போட்டு விடுறேன்" என்றான்.​

அவனை எற இறங்க பார்த்த அந்த சிறுமியோ "உங்களுக்கு அதெல்லாம் தெரியுமா?" என்று சந்தேகமாக கேட்டாள்.​

"ஆஹ்...அது என்ன பெரிய கம்பசூத்திரமா? அது எல்லாம் மாமா அசால்ட்டா போடுவேன். அங்க உட்காத்திருக்காளே கல்யாண பொண்ணு அவளுக்கே நான் மருதாணி போட்டு விட்டிருக்கேன் தெரியுமா?" என்றான் முகத்தை படு சீரியசாக வைத்துக்கொண்டு.​

"நிஜமாவா?" என்று அந்த சிறுமி மீண்டும் கேட்க "அட வா…ங்குறேன். மாமா எப்படி போட்டு விடுறேன்னு மட்டும் பாரு" என்று அச்சிறுமியின் மென்கரத்தை பிடித்து கொண்டே அந்த மெஹெந்தி கலைஞரின் அருகே சென்றான்.​

"அக்கா, நான் ஒரு கோன் எடுத்துக்குறேன்" என்று அந்த பெண் அருகே வைத்திருந்த டப்பாவில் இருந்து ஒரு மெஹெந்தி கோனை எடுத்துக்கொண்டே தோட்டத்து பக்கம் சென்றான்.​

அங்கே இருந்த ஊஞ்சலில் அச்சிறுமியை தூக்கி அமர வைத்தவன் அவள் கையில் மெஹெந்தி கோனால் வரைய போக "மாமா, ஒரு நிமிஷம்" என்று சட்டென்று அவன் பிடித்திருந்த அவள் கரத்தை இழுத்துக்கொண்டாள்.​

அவளை நிமிர்ந்து பார்த்து "என்ன?" என்று அவன் கேட்க "டிசைன் பார்க்க வேண்டாமா?" என்றது அந்த வாண்டு.​

 

Vilacini

Well-known member
Wonderland writer

"ஹ்ம்ம்....சரி தான்..." என்று சலித்துக்கொண்டாலும் பாக்கெட்டில் இருந்து அவன் அலைபேசியை எடுத்து கூகுளின் துணையோடு அவளிடம் சில டிசைன்களை காட்டி அதில் அச்சிறுமிக்கு பிடித்ததாய் ஒன்றை தேர்ந்தெடுத்து அதை அழகாக அவள் கைகளில் வரைந்துவிட்டான்.​

"ஐ...செம்மையா இருக்கு மாமா" என்று ஆனந்தத்தில் ஆர்பரித்தவளோ “நான் போய் எல்லார்கிட்டயும் கட்டிட்டு வரேன்” என்று ஒரே குதியாக குதித்து ஊஞ்சலில் இருந்து இறங்கியவள் சிட்டென வீட்டிற்குள் ஓடினாள்.​

வந்திருந்தவர்கள் எல்லோரும் வீட்டிற்குள் இருக்க தோட்டத்தில் அவன் மட்டுமே தனிமையில் அமர்ந்திருந்தான். என்னதான் எல்லோரோடும் ஒன்றி இந்த திருமணத்தில் பங்குக்கொள்ள நினைத்தாலும் ஒரு சில வேளைகளில் அவன் மனம் தடுமாறிவிடுகின்றது.​

அவன் விழிகளும் அவன் சொல் பேச்சு கேட்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கின்றன. மீண்டும் மீண்டும் அவள் புறமே அலைபாய்கின்றன. அதை தவிர்க்கும் விதமாக தான் அச்சிறுமியை அழைத்துக்கொண்டு வீட்டு தோட்டத்தில் வந்தமர்ந்தான். இப்பொழுது அந்த வாண்டும் தனது காரியத்தை முடித்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்துவிட அவனுக்கு தேவைப்பட்ட தனிமையும் கிடைத்திருந்தது.​

மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு அந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்தவன் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்தபடி தலையை பின்னுக்கு சாய்த்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முயன்றான்.​

அவன் தலையை சாய்த்து அமர்ந்து ஒரு நொடி ஆகவில்லை அதற்குள் "மாமா" என்று ஒரு குரல்.​


 

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 26

அவனுக்கு கேட்ட குரலில் சட்டென்று விழிகளை திறந்தவன் முன்னே பச்சை வண்ண பாவாடை ரவிக்கைக்கு ஆரஞ்சு நிற தாவணி அணிந்து அம்சமாய் நின்றிருந்தாள் அறிவுமதி. அவள் பக்கத்தில் அவன் மருதாணி வைத்துவிட்ட வாண்டும் வாயெல்லாம் புன்னகையாக நின்றுகொண்டிருந்தாள்.​

'இம்சை' என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி அவளை பார்த்தவன் "என்ன டி" என்று கேட்க "இந்த வீட்டுல அநியாயம் நடக்குது" என்றாள் அவள்.​

அவளை புரியாமல் பார்த்தவன் "என்ன உளறுற?" என்று கேட்டான்.​

இவளுக்கு மருதாணி வச்சு விட்டிங்களாமே?" என்று கேட்டாள் அவள். "ஆமா, அதுக்கென்ன இப்போ?" என்று அவன் கேட்க "இவளுக்கு மட்டும் வச்சு விட்டா அப்போ எங்களுக்கெல்லாம் யாரு வச்சு விடுறது?" என்றாள் அவள்.​

"அவள் சின்ன பொண்ணு வச்சு விட்டேன். உனக்கெல்லாம் வச்சு விட முடியாது போடி" என்றான்.​

அவனை முறைத்து பார்த்தவள் "இப்போ வச்சு விட முடியுமா முடியாதா?" என்று கேட்டாள்.​

"முடியாது முடியாது" என்று அவன் சொல்ல 'ஓஹோ, இப்போ எப்படி உன்னை வழிக்கு கொண்டுவரேன்னு பாரு' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டவள் திடீரென்று "ஐயோ என்ன மாமா இது. என் கிட்ட இப்படி எல்லாம் சொல்லுறீங்க. இதெல்லாம் தப்பு..." என்றாள் அதிர்ச்சி கலந்த குரலில்.​

அவளை புருவம் சுருக்கி பார்த்தவன் "நான் என்ன சொன்னேன்?" என்று கேட்டான் சற்று பதட்டமாக.​

"அதான் இப்போ சொன்னிங்களே..." என்று அவள் மீண்டும் சொல்ல​

"நான் என்னடி சொன்னேன்?" என்று அவன் ஊஞ்சலில் இருந்து எழுந்தபடி கேட்க "ஐ லவ் யூ சொன்னிங்களே மாமா" என்றாள் முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு.​

"ஹேய் நான் எப்போ அப்படி சொன்னேன்" என்று அவன் கேட்க "இப்போ தானே சொன்னிங்க... ஹேய் உனக்கும் கேட்டுச்சுல" என்று அந்த சிறுமியிடம் கேட்டபடி அவள் கையில் சாக்லெட்டை திணித்திருக்க அந்த குட்டி பெண்ணும் சாக்லேட் கிடைத்த சந்தோஷத்தில் "ஆமா கேட்டுச்சு கேட்டுச்சு..." என்று சொல்லியபடி சாக்லெட்டை எடுத்துக்கொண்டு ஒரே ஓட்டமாக வீட்டிற்குள் ஓடிவிட்டாள்.​

"அடப்பாவி உனக்கு மருதாணி வச்சு விட்டது ஒரு குத்தமா...குழந்தை உருவில் ஒரு குட்டி சாத்தன்" என்று அவன் சத்தமாகவே புலம்பிக்கொள்ள வாய்விட்டு சிரித்த அறிவுமதி "இப்போ எனக்கு மட்டும் நீங்க மருதாணி வச்சு விடல. என்னை தனியா கூட்டி வந்து ஐ லவ் யூ சொன்னிங்கன்னு உள்ள போயி எல்லார்கிட்டயும் சொல்லிடுவேன் பார்த்துக்கோங்க. சாட்சி கூட இருக்கு" என்றாள்.​

"ஏன்டி… இல்லை ஏங்குறேன்" என்று அவளை இயலாமையுடன் பார்க்க அவளோ அந்த ஊஞ்சலில் சாவகாசமாக அமர்ந்தாள் .​

அவன் முன்னே இருகைகளையும் நீட்டி ஒரு கரத்தின் உள்ளங்கையை காட்டியபடி மறுக்கரத்தில் வைத்திருந்த மெஹெந்தி கோனை அவனிடம் நீட்டினாள்.​

அவளை முறைத்து பார்த்துக்கொண்டே மெஹந்தி கோனை கையில் வாங்கியபடி அவனும் ஊஞ்சலில் அமர்ந்த நேரம் "எங்களுக்கும் போட்டுவிடுங்க" என்று மேலும் சில இளைஞிகள் கோரஸாக சொல்லியபடி அவன் முன்னே கரத்தை நீட்டிக்கொண்டு நின்றனர்.​

அவர்கள் அனைவரையும் நிமிர்ந்து பார்த்தவன் "போங்கடி போண்டா கோழிகளா" என்று சொல்லிக்கொண்டே வேகமாக ஊஞ்சலில் இருந்து எழுந்து ஆளை விட்டால் போதுமென்று வீட்டிற்குள் நுழைய போக "ஹேய் வீரா, இன்னிக்கு என் கையில மருதாணி போடாமல் உன்னை விட மாட்டேன்" என்று சொல்லிக்கொண்டே அவன் பின்னாடியே அறிவுமதி செல்ல அவளுடன் சேர்ந்து மற்ற பெண்களும் அவனை துரத்திக்கொண்டே சென்றனர்.​

"விடமாட்டாளுங்க போலயே" என்று வேக நடையுடன் வீட்டிற்குள் நுழைந்தவன் பின்னால் பார்த்துக்கொண்டே நடக்க நேராக வைஷாலி அமர்ந்திருந்த நாற்காலியின் மீது மோதிவிட்டான்.​

அவனை நிமிர்ந்து பார்த்த வைஷாலியோ அவன் முகத்தில் தெரிந்த களேபரத்தை பார்த்து "என்னாச்சு மாமா?" என்று கேட்டாள்.​

சட்டென்று மண்டியிட்டு அவள் உயரத்துக்கு அமர்ந்துகொண்டவன் "என்னை காப்பாத்துடி" என்றான் தனக்கு பின்னால் திரும்பி பார்த்துக்கொண்டே.​

அவன் பார்வை சென்ற திசையில் வைஷாலியும் அவனை தாண்டி எட்டி பார்க்க அங்கே அறிவுமதி தான் இளைஞிகள் கூட்டத்திற்கு தலைமை தாங்கியபடி அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.​

"ப்ளீஸ், ப்ளீஸ்...எதாவது பண்ணுடி. டார்ச்சர் பண்ணுறா" என்றான்.​

அவனை பார்க்க வைஷாலிக்கு சிரிப்பாக இருந்தது. ஜெயலக்ஷ்மி அடிக்கடி அவனை வீட்டின் செல்ல கண்ணன் என்று சொல்வது அவள் நினைவுக்கு வந்து போனது. அவன் நிஜமாகவே கோபியர் கொஞ்சும் ரமணன் தான் போலும். பெண்களை சுலபமாக கவர்ந்துவிடுகின்றான் அல்லவா.​

அவனை பார்த்து அவள் இதழ்களுக்குள் சிரித்துக்கொள்ள "என் செல்லம்ல...பழிவாங்கிடாதடி ப்ளீஸ் காப்பாத்து" என்றான்.​

எப்பொழுதும் அவளிடம் கெத்து காட்டுபவன் இப்பொழுது அவளிடம் கெஞ்சுகின்றான். அவளுக்கும் அது சுவாரசியத்தை கூட்ட "சரி… ஆனால், நான் சொல்லுறதை செய்யணும்" என்றாள்.​

"நீயுமா... சரி சொல்லு செய்யுறேன். அந்த பிசாசுகிட்டேருந்து என்னை காப்பாத்து போதும்" என்றான்.​

"அக்கா" என்று அந்த மெஹெந்தி கலைஞரை அழைத்தவள் அவர் கையில் வைத்திருந்த மெஹெந்தி கோனை கேட்டாள்.​

அவரும் அதை அவளிடம் கொடுத்திருக்க அதை தானவீரனிடம் கொடுத்து "போட்டு விடுங்க" என்றாள்.​

"உனக்கா? அதுதான் போட்டாச்சே" என்று மருதாணி டிசைன்களால் நிறைந்திருந்த அவள் கரங்களை பார்த்தபடி அவன் கேட்க "கையில் இல்லை... " என்று சொல்லியபடி ஒற்றை காலை எடுத்து அவன் முன்னே இருந்த தலையணை மீது வைத்தாள்.​

அவள் கண்களால் அவள் தாமரை பாதத்தை சுட்டி காட்ட "காலுக்கா?" என்றான்.​

அவளோ "என் காலுக்கா.. இல்லை அவள் கையிக்கா. சாய்ஸ் இஸ் யோர்ஸ்" என்று சொல்லி அவள் கண்களை சிமிட்ட அந்த நேரத்திற்கெல்லாம் "மாமா" என்று சொல்லிக்கொண்டே அவன் அருகே வந்து நின்றுவிட்டாள் அறிவுமதி.​

ஒருமுறை கண்களை மூடித்திறந்தவன் "எனக்கு வேற வேலை இருக்கு போடி" என்று அறிவுமதியிடம் சொல்லிவிட்டு சட்டென்று கீழே அமர்ந்துவிட்டான்.​

ஒற்றை கரத்தை நீட்டியபடி அவன் வைஷாலியை நிமிர்த்து பார்க்க அது வைஷாலிக்கே அதிர்ச்சி தான். அவள் விளையாட்டுக்காக தான் சொன்னாள். அவன் மறுத்துவிடுவான் என்கின்ற எண்ணத்தில் அவனை சீண்டி பார்க்க நினைத்தாள். ஆனால், அவன் நிஜமாக செய்வான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.​

அறிவுமதியுடன் ஏனைய பெண்களும் அங்கேயே நின்றிருக்க அவளுக்கு மறுக்கவும் முடியாமல் போக அவள் செந்தாமரை பாதத்தை எடுத்து அவன் நீட்டியிருந்த உள்ளங்கையில் வைத்தாள்.​

அவள் மெல்லிய பாதத்தின் ஸ்பரிசம் அவனது உள்ளங்கையை தீண்டியதும் ஓருவகை சிலிர்ப்பு அவனுக்குள். தேவையற்ற உணர்வுகளை தடுக்க நினைக்கின்றான் முடியவில்லை. கண்களை அழுந்த மூடி திறந்தான்.​

அவள் காலில் அவன் மெஹெந்தி கோனால் வரைய தொடங்கிவிட "வைஷுக்கா, இது அநியாயம். மாமா உங்களுக்கு வரைஞ்சு விட்டா பிறகு எங்களுக்கெல்லாம் யாரு போட்டு விடுவாங்களாம்" என்று அறிவுமதி சிணுங்க அவளை மென்புன்னகையுடன் பார்த்த வைஷாலி "அக்கா, நீங்க அவங்களுக்கெல்லாம் மருதாணி போட்டு விட்டுடுங்க" என்று அந்த மெஹெந்தி கலைஞரிடம் சொன்னாள.​

அவர் வேலையை தானவீரன் எடுத்துக்கொண்ட பட்சத்தில் அவரும் மறுப்பேதும் சொல்லாமல் ஏனைய பெண்களுக்கு மருதாணி போட தொடங்கி விட்டார்.​

வைஷாலி மணபெண்ணிற்கென்று பிரத்தியேகமாக அலங்கரிக்க பட்டிருந்த நாற்காலியில் மெழுகு பொம்மையென அமர்ந்திருக்க அவளுக்கு வலது பக்க தரையில் அமர்ந்து தானவீரன் அவள் பாதங்களுக்கு மருதாணியிட்டுக்கொண்டிருக்க மற்ற பெண்களும் அவர்களை சுற்றி அமைந்துக்கொள்ள அந்த மெஹெந்தி கலைஞரோ மற்ற பெண்களுக்கு மருதாணியிட்டுக்கொண்டிருந்தார்.​

அங்கே அவர்களின் பேச்சும் சிரிப்பும் வேறு சேர்ந்துக்கொள்ள அந்த காட்சியே பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தது. அதை தவறவிடாமல் புகைப்பட கலைஞர்களும் தங்களின் புகைப்பட கருவியில் பதிவு செய்துகொண்டனர்.​

தானவீரன் மும்முரமாக அவள் காலுக்கு மருதாணி போட்டுக்கொண்டிருக்க நாற்காலியில் அமர்ந்தபடியே அவன் காதோரமாக குனிந்த வைஷாலி "மாமா, நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். நீங்க போய் இத்தனை பேருக்கு முன்னாடி என் காலை பிடிச்சு மருதாணி போடுறது ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு. போதும் விடுங்க" என்றாள்.​

அவளை நிமிர்ந்து பார்த்தவன் "உன் காலை பிடிச்சு மருதாணி போடுறதுல நான் ஒன்னும் குறைஞ்சிட மாட்டேன்" என்றான் ஒரு மென்னகையுடன்.​

அவனை வியப்பாக பார்த்தவள் "உங்க ஈகோ என்னத்துக்காகும்?" என்று கேட்டாள்.​

"உன்கிட்ட எனக்கு என்னடி ஈகோ" என்றான்.​

"உண்மையிலேயே உங்களுக்கு என்னவோ ஆச்சு மாமா" என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவளின் அலைபேசி அலறியது. அவளுக்கு அருகே இருந்த அலைபேசியை திரும்பி பார்த்தாள் வைஷாலி.​

அதில் தருணின் பெயர்தான் மிளிர்ந்தது. தானவீரனின் கண்களும் அந்த அலைபேசியில் ஒரு நொடி நிலைத்து பின் அவள் விழிகளை அடைந்திருக்க தனது மருதாணியிட்ட கரங்கள் இரண்டையும் தூக்கி காட்டியவள் "ப்ளீஸ்..."என்று விழிகளை சுருக்கி உதட்டை சுளித்து கெஞ்சலாய் கேட்க அவளை ஆழ்ந்து பார்த்தவனின் மனம் 'கொல்லாதடி' என்று அடித்துக்கொண்டாலும் அவளின் குறிப்புணர்ந்து அவளின் அலைபேசியை எடுத்தவன் அழைப்பை ஏற்று அதை வைஷாலியின் காதுக்கு கொடுத்தான்.​

"ஹாய் வைஷு" என்றான் தருண்.​

"ஹலோ" என்று அவள் சொல்ல "அங்க என்ன நிலவரம்?" என்று கேட்டான்.​

"மெஹெந்தி போட்டுட்டிருக்கேன்" என்று அவள் சொல்ல "போட்டு முடிஞ்சதும் ஃபோட்டோ எடுத்து அனுப்பு. எனக்கு பார்க்கணும்" என்றான்.​

"இம்ம்... "என்று அவள் மெதுவாக பதில் சொல்ல அவள் அலைபேசியில் பேசுவதை கவனித்த அறிவுமதி அருகே இருந்த தனது தங்கை இளமதியிடம் "இளா பார்த்தியாடி, வைஷுக்கா மாமாகிட்ட தான் பேசுறாங்களாட்டம் இருக்கு" என்று ஆரம்பித்தாள்.​

"உனக்கு எப்படி தெரியும்?" என்று இளமதி அப்பாவியாய் கேட்க "இது என்ன பெரிய ராணுவ ரகசியமா? வைஷுக்கா கன்னத்தை பாரு கையில் இருக்குற மருதாணியை தோற்கடிச்சிடும் போல" என்று கிண்டல் செய்ய சுற்றி இருந்த பெண்களும் சேர்ந்துக்கொண்டு ஆளுக்கொன்றாக சொல்லி அவளை இன்னும் இன்னும் கேலி செய்ய அது அலைபேசியினூடு தருணின் காதலிலும் விழுந்தது.​

அவன் அவர்களின் கிண்டல் பேச்சை கேட்டு வாய் விட்டே சிரித்து விட "நீங்களுமா?" என்று செல்ல கோபம் கொண்டவள் "அப்போ நான் வைக்கட்டுமா" என்று கேட்டாள்.​

"ரொம்ப கிண்டல் பண்ணுறாங்களா?" என்று அவன் கேட்க "ம்ம்ம்" என்றாள் அவள்.​

அவனும் மென்மையாக சிரித்துக்கொள்ள பேச்சை மற்றும் விதமாக "உங்க பேச்சுலர் பார்ட்டி என்னாச்சு?" என்று கேட்டாள்.​

"இம்ம்… அங்க தான் இருக்கேன். இப்போ தான் ஆரம்பிச்சிருக்கானுங்க. எத்தனை மணிக்கு முடியுமோ தெரியல" என்று சலித்துக்கொண்டான் தருண்.​

"எதுக்கு சலிச்சுக்கிறிங்க...ஜஸ்ட் என்ஜாய் யுவர் டே" என்றாள்.​

"சரி" என்றவன் சிறிது நேரம் அவளுடன் பேசி விட்டு அழைப்பை துண்டித்திருக்க அவள் காதிலிருந்து அலைபேசியை எடுத்த தானவீரனோ "கொடுத்து வச்ச மகராசன். பேச்சுலர் பார்ட்டிக்கெல்லாம் பெர்மிஷன் கிடைக்குதே" என்று சொல்லிக்கொண்டே மீண்டும் மருதாணியிடும் வேலையை தொடங்கி விட "அதுக்கு தான் என்னை கட்டிக்கோங்கன்னு சொன்னேன். பேச்சுலர் பார்ட்டிக்கு பெர்மிஷன் என்ன, கம்பனியே கொடுக்கிறேன்" என்று அவன் காதை கடித்தாள் அறிவுமதி.​

"இவ ஒருத்தி..இம்சை" என்று தானவீரன் சத்தமாகவே திட்டிவிட அங்கிருந்த மற்ற பெண்களும் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.​

இதையெல்லாம் அருகே இருந்த சோபாவில் அமர்ந்திருந்தபடி பார்த்துக்கொண்டிருந்த சரோஜினியின் மனதில் ஏதோ ஒன்று ஓடிக்கொண்டிருக்க அவருக்கு அருகே அமர்ந்திருந்த கிருஷ்ணகுமாரை திரும்பி பார்த்தார்.​

மனைவியின் பார்வையிலேயே குறிப்புணர்ந்து கொண்டவர் "என்னமோ சொல்ல நினைக்குற போல... சொல்லும்மா" என்றார்.​

வழக்கம் போல தன்னை தானாக புரிந்துகொள்ளும் கணவனின் அன்பை கண்டு வியப்புடன் ஒரு மென்புன்னகை சிந்திய சரோஜினி "நம்ம அறிவுமதி நல்லா துருதுருன்னு இருக்கால்ல" என்று கேட்டார்.​

கிருஷ்ணகுமார் "ம்ம்ம்" என்று மட்டும் சொல்லியபடி மனைவி மேலே பேசுவதற்காக காத்திருக்க "நானும் வந்ததுல இருந்து பார்க்குறேன் துருதுருன்னு எதையாவது பண்ணிட்டே இருக்கா. அவ இருக்குற இடமே கலகலன்னு இருக்கு. நம்ம மது போலவே ரொம்பச் சுட்டி. ஆனால், பெரியவங்க கிட்ட மரியாதையா நடந்துக்குறா. பார்க்கவும் அழகா இருக்கா. அவளை நம்ம வீருக்கு பார்க்கலாமா? முறை தானே" என்றார்.​

கிருஷ்ணகுமாருக்கும் "இம்ம், நல்லா யோசனை தான். வைஷு கல்யாணம் முடியட்டும். பிறகு சேகரிட்ட இதை பத்தி பேசி பார்ப்போம்" என்றார்.​

கணவரின் பேச்சுக்கு ஆமோதிப்பாக தலையாட்டிக்கொண்ட சரோஜினி, வைஷாலியின் திருமணம் முடிய சேகர் மற்றும் ஈஸ்வரியிடம் இதை பற்றி பேசிப்பார்க்க வேண்டுமென்று மனதில் குறித்துவைத்துக்கொண்டார்.​

சரோஜினிக்கு ஈஸ்வரி பேசியத்திலிருந்தே குற்றவுணர்வு ஒன்று நெஞ்சை அரித்துக்கொண்டிருக்க தானவீரனுக்கு ஏற்ற பெண்ணாக ஒருத்தியை விரைவில் பார்த்து கட்டிவைத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார்.​

இதற்கிடையில் வைஷாலியின் காலில் மருதாணியை போட்டு முடித்த தானவீரன் "எப்படி இருக்கு?" என்று கேட்டு கொண்டே அவளை நிமிர்ந்து பார்த்தான்.​

அமர்ந்திருந்த நிலையிலேயே சற்று எட்டி தனது கால்களை பார்த்த வைஷாலி "சூப்பரா இருக்கு மாமா, தேங்க்ஸ்" என்றபடி புன்னகைத்தாள்.​

அவள் புன்னகையையே அவன் இமைக்காமல் பார்த்திருக்க அதை கண்டுகொண்டவள் "என்ன மாமா?" என்று கேட்டாள்.​

"சந்தோஷமா இருக்கியா வைஷு?" என்று தான் கேட்டான்.​

அவனை விசித்திரமாக பார்த்தவள் "என்னாச்சு மாமா? ஏன் இப்படி எல்லாம் கேட்குறீங்க?" என்று அவள் பதில் கேள்வி கேட்க "சும்மா கேட்கணும்னு தோணுச்சு...சொல்லேன்..." என்றான்.​

"ம்ம்ம் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்" என்றாள் அவள். அவளின் சந்தோசம் தருண் தான் என்று தெளிவாக புரிந்துகொண்டான். அவளின் பிரிவு அவனை பாதித்தது போல அவன் அவளை பாதிக்கவில்லை என்று உணர்ந்த நொடி அவன் விழிகள் மெல்ல கலங்க சட்டென்று புன்னகையால் அதை மறைத்தவன் "எப்பவும் இதே போல சந்தோஷமா இருக்கனும்" என்றான்.​

ஒரு நொடி இருவரின் விழிகளும் ஒன்றாக கலந்திருக்க இருவரினிடையே சிறு மௌனம் ஒன்று நிலவியது. சரியாக அந்நேரம் வைஷாலியின் அலைபேசி அலற இப்பொழுதும் தானவீரன் தான் அழைப்பை ஏற்றான்.​

"சொல்லு மது..." என்று அவன் ஆரம்பிக்க​

"மாமா, அக்கா எங்க? நீ ஏன் போன் எடுக்குற" என்று கேட்டாள்.​

“அவள் கையெல்லாம் மருதாணி வச்சிட்டு உட்கார்ந்திருக்கா... இரு ஸ்பீக்கர்ல போடுறேன் என்றபடி அவன் ஸ்பீக்கரை ஆன் செய்து வைஷாலியிடம் நீட்ட "ஹாய் கல்யாண பொண்ணு" என்றாள் மது.​

"போடி, என்கிட்ட பேசாத. எக்ஸாம் தான் காலையிலேயே முடிஞ்சிருச்சு தானே. கிளம்பி வரத்துக்கு என்ன?" என்று வைஷாலி கோபித்துக்கொண்டாள்.​

 

Vilacini

Well-known member
Wonderland writer

"சாரிக்கா, இங்க இன்னும் கொஞ்ச வேலை மிச்சம் இருக்கு. எல்லாத்தையும் முடிச்சிட்டு நாளைக்கு காலையில் கண்டிப்பா வந்துடுறேன் சரியா. முடிக்க வேண்டிய வேலையெல்லாம் பாதியில் விட்டு வந்தா பிறகு அதே யோசனையா இருக்கும். கல்யாணத்தை என்ஜாய் பண்ணவே முடியாது. நீ கவலையே படாத எல்லாத்தையும் முடிச்சிட்டு நாளைக்கு காலையில் கண்டிப்பா நான் வீட்டுல இருப்பேன். என் செல்லம்ல...கோவிச்சுகாதக்கா" என்று தங்கை கெஞ்சி கொஞ்ச அதற்குமேல் கோபத்தை இழுத்து பிடிக்க முடியாமல் "நாளைக்கு காலையில் மட்டும் நீ வீட்டுக்கு வரல...அப்புறம் இருக்கு உனக்கு" என்று மிரட்டி கொண்டிருந்தாள் வைஷாலி.​

அவர்களின் பேச்சில் இடைப் புகுந்த தானவீரன் "அப்படி என்ன வேலை உனக்கு... சரி வேலை முடிய சொல்லு நான் வேணும்னா வந்து பிக் அப் பண்ணிக்குறேன்" என்றான்.​

"இல்லை மாமா, வேண்டாம். உனக்கு அங்க நிறைய வேலை இருக்கும். நானே வந்திடுறேன்" என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்திருந்தாள் மதுஷிகா.​


 
Status
Not open for further replies.
Top