ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உருகியதே என் உயிரே- கதை திரி

Status
Not open for further replies.

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 31


திருமண ரிசெப்ஷனிற்கு முதல் நாள் இரவு...​

இரவு மணி சுமார் ஏழு இருக்கும். வாடகை காரில் ஏறி அமர்ந்திருந்தாள் மதுஷிகா. ஓய்வுக்கு கெஞ்சிய உடலுக்கும் உள்ளத்துக்கும் போதுமான அளவு தூக்கத்தை பரிசளித்ததின் பலனாக ஆழ்ந்த நித்திரையில் இருந்தவளை அவளுடன் ஹாஸ்டல் அறையை பகிர்ந்துகொள்ளும் தோழியான சரண்யா வந்து எழுப்பிய பிறகே எழுந்திருந்தாள்.​

அவளை தொட்டு எழுப்பியதால் அவளுக்கு உடல் லேசாக சுடுவதை கூட சரண்யா சொல்லியே உணர்ந்தவள் கைப்பையில் ஆபத்து அவசரத்திற்கு பயன்படுமென தயார்நிலையில் வைத்திருந்த காய்ச்சல் மாத்திரைகளில் இரண்டை எடுத்து விழுங்கி விட்டு குளித்து ஆயுத்தமானவள் நண்பியிடம் விடை பெற்றுக்கொண்டு இதோ வீட்டிற்கு கிளம்புவதற்காக வாடகை காரில் அமர்ந்திருக்கிறாள்.​

இங்கே தனிமையில் தனக்கு கொஞ்சமும் மதிப்பளிக்காத ஆகாஷை நினைத்து உருகுவதை விட தன் மீது பாசத்தை கொட்டும் அக்காவையும் அவளது வீர் மாமாவையும் பார்த்தாலே உள்ளத்தின் சோர்வு தொலைந்து உற்சாகம் வந்து தொற்றிக்கொள்ளும் என்று நன்கறிந்தவள் தனது இல்லம் நோக்கி புறப்பட்டிருந்தாள்.​

போகும் வழியில் இருந்த வணிக வளாகத்தை கண்டவளுக்கு வைஷாலி மற்றும் தருணுக்கு திருமண பரிசு எதுவும் வாங்கி சென்றால் நன்றாக இருக்கும் என்று தோன்றவே "அண்ணா, அந்த மாலுக்கு(mall) போகணும். அங்க நிறுத்திடுங்க" என்க அந்த வாடகை கார் ஓட்டுனரும் அவளை அந்த வணிக வளாகத்தில் இறக்கி விட்டிருந்தார்.​

உள்ளே நுழைந்தவள் கடை கடையாக ஏறி இறங்கி அக்காவுக்கும் மாமாவுக்கும் என்ன வாங்குவது என்று அலசி ஆராய்ந்து சில மணி நேரங்களை அங்கே செலவிட்டவள் இறுதியாக இருவருக்குமாக சேர்த்து கப்பில் வாட்ச் என்கின்ற காதலர்கள் அல்லது தம்பதியர்கள் அணியக்கூடிய வகையில் வடிவமைக்க பட்டிருக்கும் ஜோடி கைக்கடிகாரங்களை தேர்ந்தெடுத்திருந்தாள்.​

அழகிய வடிவமைப்பும் தரமும் கொண்டிருந்த அந்த கைக்கடிகாரங்களில் திருப்தி அடைந்தவள் அதற்கு பணமும் செலுத்திவிட்டு வெளியில் வந்தாள்.​

அந்த வணிக வளாகத்திலிருந்து வெளியில் வந்தவள் தான் வீட்டிற்கு கிளம்பிவிட்டதை அக்காவிடம் சொல்வதற்காக வைஷாலிக்கு அழைப்பெடுத்து காதில் வைத்த நேரம் தான் அவள் தலையில் பேரிடி ஒன்று வந்து விழுந்தது.​

"ஆகாஷ்" என்று அவன் பெயரை அவள் உதடுகள் உச்சரிக்க அப்படியே தனக்கு முன்னால் சற்று தள்ளி சென்றவனை வெறித்துப்பார்த்தபடி அதிர்ந்து நின்றுவிட்டாள் மதுஷிகா.​

ஆம், அங்கே ஆகாஷ் ஒரு பெண்ணுடன் தனது காரை நோக்கி நடந்து செல்வதை கண்டிருந்தாள் பெண்ணவள். அதிலும் அந்த பெண் அணிந்திருந்த கிராப் டாப்பிற்கும்(crop top) ஜீன்ஸிற்கும் மத்தியில் வெளிரென்று தெரிந்த அவள் வெற்றிடையில் அவனது கரத்தை கொடுத்து தன்னுடன் சேர்த்தணைத்தவாறு சென்றுக்கொண்டிருந்தான்.​

மதுஷிகா தங்களுக்குள் நிகழ்ந்து கொண்டிருந்த ஊடலை தீர்த்துக்கொள்ள அவனை சந்திக்க கேட்டதற்கு தான் ஊரில் இல்லையென்று சொல்லியிருந்தவன் இப்பொழுது அவளின் கண் முன்னே வேறொரு பெண்ணுடன் நடந்து சென்றுகொண்டிருக்கிறான். அதிலும் அவளுடன் ஒட்டி உரசியபடி.​

தன்னவன் என்று நினைத்திருந்தவன் இன்னொருத்தியுடன் அவ்வளவு நெருக்கமாக செல்வதை பார்த்த காரிகையவளுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைவது போன்று இருக்க கண்கள் மெல்ல கலங்கின. விழிகளில் நீர் திரையிட கண்ட காட்சியின் உண்மையை ஜீரணித்துக்கொள்ளவே அவளின் மூளைக்கு சில நொடிகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களையே இமைக்காது பார்த்துக்கொண்டே நின்றிருந்தாள்.​

அதே சமயம் அவளின் அலைபேசியினூடு தானவீரனின் குரல் கேட்க அப்பொழுதுதான் அதிர்ச்சியிலிருந்து மீண்டிருந்தாள் மதுஷிகா. அவளின் விழிகள் ஆகாஷ் மற்றும் அந்த பெயர் தெரியா பெண்ணும் காரில் ஏறி அமர்வதையே பார்த்திருக்க என்ன நினைத்தாளோ தானவீரனுடன் பேசிக்கொண்டே சட்டென்று தனக்கு அருகே வந்த ஆட்டோவை கைகாட்டி நிறுத்தி ஏறிக்கொண்டாள்.​

ஆட்டோவில் அமர்ந்தவள் அலைபேசியை வைஷாலியிடம் கொடுக்க சொல்லி கேட்க வைஷாலி கைகளில் மருதாணி வைத்திருந்தமையால் அலைபேசியை ஸ்பீக்கரில் போட்டிருந்தான் தானவீரன்.​

இன்றே தான் வீட்டிற்கு வரப்போவதாக சொல்லி வைஷாலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்து அவளுக்கு அழைத்திருந்த மதுஷிகா அதை மாற்றி "சாரிக்கா, இங்க இன்னும் கொஞ்ச வேலை மிச்சம் இருக்கு. எல்லாத்தையும் முடிச்சிட்டு நாளைக்கு காலையில் கண்டிப்பா வந்துடுறேன் சரியா. முடிக்க வேண்டிய வேலையெல்லாம் பாதியில் விட்டு வந்தா பிறகு அதே யோசனையா இருக்கும். கல்யாணத்தை என்ஜாய் பண்ணவே முடியாது. நீ கவலையே படாத எல்லாத்தையும் முடிச்சிட்டு நாளைக்கு காலையில் கண்டிப்பா நான் வீட்டுல இருப்பேன். என் செல்லம்ல... கோவிச்சுகாதக்கா" என்று உள்ளத்தின் வலியை குரலில் காட்டாமல் தமக்கையை சமாதானப்படுத்தும் முயற்சியில் இருந்தாலும் அவளின் விழிகள் இன்னமும் ஆகாஷின் காரின் மீதே படிந்திருந்தன.​

ஆகாஷின் செய்கைக்கு அவன் விளக்கம் கொடுத்தே ஆக வேண்டுமென முடிவெடுத்தவள் அவனை கையும் களவுமாக பிடிப்பது என்று தீர்மானித்திருந்தாள். வைஷாலியுடன் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தவள் ஆகாஷின் கார் அந்த வணிக வளாகத்தில் இருந்து வெளியேறுவதை பார்த்ததும் "அண்ணா, அந்த காரை ஃபொல்லோவ் பண்ணுங்க" என்றாள்.​

அந்த ஆட்டோ ஓட்டுனரோ அவளை ஒரு மார்க்கமாக பார்த்தபடி அசையாமல் இருக்க அவரை கடுப்பாக பார்த்தவள் " மீட்டருக்கு மேல போட்டு கொடுக்குறேன் அண்ணா... கொஞ்சம் சீக்கிரமா போங்க" என்று குரலில் எட்டிப்பார்த்த எரிச்சலுடன் உந்தினாள் மதுஷிகா.​

பணம் என்றதும் மறு கேள்வி கேட்காமல் வண்டியை எடுத்த அந்த ஓட்டுனரும் ஆகாஷின் காரை வெகு இலாவகமாகவே பின்தொடர்ந்து சென்றார்.​

***​

அதே சமயம் இங்கே ஐந்து நட்சத்திர விடுதியில் நண்பர்கள் புடை சூழ பார் ஒன்றில் அமர்ந்திருந்தான் தருண். நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்களுக்கான ஒன்றுக்கூடல் அது.​

எல்லோரும் தத்தமது வேலை, வணிகம் என ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ள கூட நேரமின்றி சுற்றித் திரிந்துக்கொண்டிருந்த பரபரப்பிலிருந்து விடுபட்டு இன்று தங்களுக்கான நேரமாக தருணின் பேச்சுலர் பார்ட்டியை தேர்ந்தெடுத்திருந்தனர்.​

தருணும் கூட மனதிற்கு பிடித்த பெண்ணின் கரம் பிடிக்க போகின்ற உற்சாகமும் நிம்மதியும் உள்ளத்தை நிறைந்திருக்க வெகு இலகுவாகவே அவர்களுடன் சேர்ந்துக்கொண்டான். நண்பர்களுக்கே உண்டான கேலியும் கிண்டலுடன் புது மாப்பிளை தருணை வெட்கப்பட வைக்கும் ஜோக்குகளுமாக அந்த இடமே கலைக்கட்டிக்கொண்டிருந்தது.​

நண்பர்களுக்காக அவர்கள் விருப்பப்பட்ட உணவு வகைகளோடு பீர், பிராண்டி, லிக்கர் என்று அனைத்தையும் வாங்கி கொடுத்திருந்தான் தருண். அவனும் அவர்களுடன் சேர்ந்துக்கொண்டாலும் அவன் குடிப்பதில் ஒரு அளவிருந்தது. கொஞ்சமாக மது எடுத்துக்கொண்டவன் வெகு நிதானமாக தான் இருந்தான். அடுத்த நாள் மாலையில் ரிசெப்ஷன் வேறு இருக்க அவனது அளவு எது என்னும் எல்லை தெரிந்தே நடந்துக்கொண்டான்.​

நண்பர்களின் வற்புறுத்தல் இருந்தாலும் அதை எல்லாம் வெகு இயல்பாகவே சமளித்தவனுக்கு துணையாக ரவியும் இருக்க எல்லாமே அளவுடன் அமைதியாக தான் சென்றுகொண்டிருந்தது. நண்பர்களின் சிரிப்பும் ரகலைகளையும் தவிர.​

இங்கு எல்லாமே சிறப்பாக சென்று கொண்டிருந்த தருணத்தில் தான் தருண் மற்றும் மதுஷிகாவின் தலையெழுத்தை மாற்றியமைக்க நினைத்துவிட்ட விதியின் சதியால் ஆகாஷின் கார் தருண் இருந்த அதே ஐந்து நட்சத்திர விடுதிக்குள் நுழைந்திருந்தது.​

அழகு நங்கை ஒருத்தியுடன் அந்த விடுதிக்குள் தனது காதலன் என்ற இடத்தில் இருப்பவன் நுழைவதை பார்த்ததும் மதுஷிகாவின் மனதில் ஆகாஷின் மீது இன்னமும் ஒட்டியிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் காற்றில் கரையும் கற்பூரமாக கரைய தொடங்கியிருந்தது.​

இதயத்துடிப்பு அதிகரிப்பதை உணர்ந்தாள். உள்ளங்கைகள் வியர்க்க அணிந்திருந்த ஜீன்ஸின் மீதே துடைத்துக்கொண்டாள்.​

அந்த விடுதியின் வளாகத்திற்கு வெளியிலேயே ஆட்டோவை நிறுத்தி சற்று நேரம் காத்திருந்த அந்த ஓட்டுனர் ஆகாஷ் காரிலிருந்து இறங்கி வேலேய்(valet) பார்க்கிங்கிற்காக தனது வண்டி சாவியை அதற்கென்று நியமிக்க பட்டிருந்த ஊழியரிடம் கொடுத்துவிட்டு அந்த பெண்ணுடன் உள்ளே நுழையவும் அவரும் ஆட்டோவை கொண்டு சென்று விடுதி வாசலில் நிறுத்தியிருந்தார்.​

அவருக்கு உரிய கட்டணத்திற்கு மேல் சில நூறுகளையும் சேர்த்து அவர் கையில் திணித்தபடி வண்டியிலிருந்து இறங்கி கொண்டாள் மதுஷிகா.​

உடன் இருந்த பெண்ணின் மீதே முழுக்கவனத்தையும் வைத்தபடி உல்லாசமாக சென்றுகொண்டிருந்த ஆகாஷ் மதுஷிகா அவனை பின்தொடர்வதை கூட கவனிக்கவில்லை.​

அந்த பெண்ணின் இடையை விடாது இறுக்கி பிடித்தபடியே அந்த விடுதிகுள் நுழைந்திருந்தான்.​

அவனை பின்தொடர்ந்து மதுஷிகாவும் உள்ளே நுழைந்த நேரம் தான் விடுதியின் உள்ளிருந்து ரவியும் வெளியில் வந்துக்கொண்டிருந்தான்.​

அவனை ஒரு கேஸ் விஷயமாக அவசரமாக வர சொல்லி காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்திருக்க கடமை தவறாத காவலனாக அவனும் கிளம்பிவிட்டான்.​

மதுஷிகா உள்ளே நுழைந்த சமயம் சரியாக அவனும் வெளியேறி சென்றது தருண் மற்றும் மதுஷிகாவின் வாழ்வில் விளையாட நினைத்த விதி செய்த அடுத்த சதியாக மாறியிருந்தது.​

ஆகாஷும் அந்த பெண்ணும் அதே பாருக்குள் நுழைந்திருக்க மதுஷிகாவும் அவர்களை பின்தொடர்ந்திருந்தாள்.​

அவர்கள் அங்கிருந்த ஒரு மேசையில் அமர்ந்து தங்களுக்கு தேவையானதை ஆர்டர் செய்துகொண்டிருக்க ஆகாஷின் பார்வையில் படாதவாறு சற்று தள்ளி பார் கவுண்டரில் போடப் பட்டிருந்த உயரமான நாற்காலியில் அமர்ந்துக்கொண்டாள் மதுஷிகா.​

அதே பாரில் தான் தருணும் இருந்தான். ஆனால், அவன் நண்பர்களுடன் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பிரைவேட் லவுஞ்ச் எனப்படும் தனியறையில் இருந்தமையால் மதுஷிகாவிற்கும் தருணுக்கும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் வாய்ப்பும் அமையாமலே போயிற்று.​

ஒருவேளை தருண் அவளை அங்கே பார்த்திருந்தாலாவது அடுத்து நிகழவிருக்கும் விபரீதத்திலிருந்து இருவரும் தப்பியிருக்கலாமோ என்னவோ. அவர்களை காப்பாற்றும் எண்ணம் விதிக்கு இம்மியளவும் இல்லை போலும்.​

பார் கவுண்டரில் அமர்ந்திருந்த மதுஷிகாவிடம் " யுவர் ஆர்டர் மேம்" என்றபடி வந்து நின்றான் அந்த பார் தெண்டர்.​

"நானே கூப்பிடுறேன்" என்றுவிட்டிருந்தவளின் விழிகள் ஆகாஷையும் அந்த பெண்ணையும் தான் பார்த்துக்கொண்டே இருந்தன.​

அவளின் பார்வை செல்லும் இடத்தை தானும் பார்த்த அந்த பார் தெண்டரும் "தெரிஞ்சவங்களா?" என்று கேட்டான்.​

அவன் கேள்வியில் அவனை கடைக்கண்ணால் மட்டும் பார்த்தவள் "உங்க வேலைய பாருங்க" என்றுவிட்டு ஆகாஷையே வேவு பார்த்துக்கொண்டிருந்தாள்.​

"அவங்களை ஸ்டாக்(stalk) பண்ணுறீங்களா?" என்று மீண்டும் கேட்டான்.​

"உங்க வேலைய மட்டும் பார்க்க சொன்னேன் மிஸ்டர்...?" என்று அவள் கடுப்பில் சொல்ல அவன் சட்டையில் குத்தியிருந்த பெயர் பட்டையை இழுத்துக்காட்டியவன் "சத்யா" என்று அவன் பெயரை அழுத்தி சொன்னான்.​

மதுஷிகா அவனை முறைக்க "இதுவும் என் வேலை தான் மேடம். எங்க கஸ்டமர் சேஃப்டி எங்களுக்கு முக்கியம்" என்று அவனே தொடர்ந்தான்.​

மதுஷிகா எதுவும் பேசாமல் மீண்டும் ஆகாஷின் மேசையை பார்க்க "அவங்க ரெண்டு பேருல யாரை வேவு பார்க்குறீங்க? ஆகாஷ் சாரையா இல்லை நேஹா மேடத்தையா?" என்று கேட்டான்.​

சட்டென்று அவனை திரும்பி பார்த்தவள் "உங்களுக்கு அவங்களை தெரியுமா? இங்க அடிக்கடி வருவாங்களோ?" அவன் அவர்களை பெயர் சொல்லி குறிப்பிட்டதிலேயே அவர்கள் இங்கே வருவது இது முதல் முறையில்லை என்பதை புரிந்துகொண்டாள்.​

அவளை பார்த்து மெதுவாக சிரித்தவன் "ஸ்மார்ட்" என்று சொல்லிக்கொண்டான்.​

"எவ்வளோ நாளா இங்க வராங்க?" என்று அவள் கேட்ட நேரம் இரு பெண்கள் வந்து அவளுக்கு அருகே இருந்த இருக்கையில் அமர்ந்துகொள்ள "வாட் யு லைக் டு ஹவ் மேம்?" என்ற சத்யாவின் கவனம் அவர்களிடம் சென்று விட்டது.​

மதுஷிகாவும் அவன் வேலையை தொந்தரவு செய்யாமல் அமைதியாக அவனுக்காக காத்திருந்தாள்.​

"எப்போதும் போல தான் சத்யா,வோட்கா ஷாட்ஸ் ப்ளீஸ்" என்று அந்த பெண்களில் ஒருத்தி அவனை பார்த்து ஜொள்ளு விட்டு கொண்டே ஆர்டர் கொடுத்திருக்க சத்யாவின் கரங்களும் அவர்கள் கேட்டதை தயார் செய்யும் பணியில் இறங்கிவிட்டிருந்தன.​

இப்பொழுது "சத்யா நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலையே" என்றாள் மதுஷிகா.​

வோட்கா பாட்டிலை கையில் எடுத்து அதை குட்டி குட்டி கண்ணாடி கிளாஸ்களில் ஊற்றிக்கொண்டே விழிகளை மட்டும் உயர்த்தி மதுஷிகாவை பார்த்தவன் "இங்க ஃப்ரீ ஆஹ் எதுவும் கிடைக்காது மேடம்" என்றான்.​

அவனை முறைத்து பார்த்தவளின் விழிகள் ஒருமுறை அவன் பெயர்பட்டையை தீண்டி மீள அதை அவனும் கவனித்தான்.​

ஒரு சின்ன சிரிப்புடன் "பெயருக்கு ஏத்த அளவுக்கு சத்தியம் மனசுல இருக்கு மேடம்" என்றபடி அவனின் விழிகள் ஆகாஷில் படிய மதுஷிகாவும் அங்கே தான் திரும்பி பார்த்தாள். ஆகாஷோ உள்ளே இறங்கியிருந்த மதுபானத்தின் ஆதிக்கத்தில் இருந்தவன் கிட்ட தட்ட அந்த பார் மேசையிலேயே அந்த பெண் நேஹாவுடன் சல்லாபிக்க தொடங்கிவிட்டான்.​

அவன் கரங்கள் அந்த பெண்ணின் மேனியில் அவன் இஷ்டத்திற்கு பயணம் சென்றுகொண்டிருக்க அவளும் அவனுக்கு ஈடுகொடுத்துக்கொண்டிருந்தாள்.​

அதே சமயம் சத்யா நிரப்பி வைத்திருந்த அந்த வோட்கா கிளாஸ்களின் மேற்பகுதியில் எலுமிச்சை துண்டுகளை சொருகி அலங்கரித்தவன் அவைகளை அந்த பெண்களிடம் நீட்டிய நேரம் "ச்சே" என்று அருவருப்புடன் ஆகாஷிடமிருந்து பார்வையை திருப்பிக்கொண்ட மதுஷிகா, சத்யாவின் கையில் இருந்த 'வோட்கா ஷாட்ஸில்' ஒன்றை எடுத்து ஒரே மடக்கில் வாய்க்குள் சரித்திருந்தாள்.​

சத்யாவே ஒரு நொடி அதிர்ந்து விழி விரித்து அவளை பார்க்க அந்த பெண்களோ "ஹேய் என்ன மேன் இது..." என்று ஆரம்பித்துவிட "சாரி மேடம். நான் உங்களுக்கு புதுசா ரெடி பண்ணி தரேன். ப்ளீஸ் எனக்காக" என்று அவனிடமிருந்த ஆக அழகிய புன்னகை ஒன்றை சிந்தி அங்கே எந்த கலாட்டாவும் ஏற்படாமல் சமாளித்தவன் வேகமாக அவர்கள் கேட்ட மது வகையை தயார் செய்து கொடுத்துவிட்டு மதுவிடம் வந்தான்.​

ஏற்கனவே இரண்டு ஷாட்ஸ்களை வாய்க்குள் சரித்துவிட்டு அவனை ஏறிட்டு பார்த்தவள் அவசரமாக கைப்பைக்குள் கையை விட்டு சில ருபாய் நோட்டுகளை எடுத்து அவனுக்கும் அவளுக்கும் இடையில் இருந்த மேசையின் மீது வைத்தாள்.​

அந்த பணத்தை பார்த்துவிட்டு மீண்டும் அவன் அவளை பார்க்க "இப்போ சொல்லுங்க சத்யா" என்றாள். அவள் கண்கள் கலங்கியிருந்தன. துரோகம் இழைக்க பட்டத்தின் வலி அது என்று அவள் சொல்லாமலே அவனுக்கு புரிந்தது தான்.​

ஆனால், யார் மீது தவறு என்று அவனுக்கும் தெரியாதே. அதை தெரிந்துக்கொள்ளும் அவசியமும் அவனுக்கிருக்கவில்லை. அது அவளின் தனிப்பட்ட பிரச்சனை அதில் தலையிட அவனுக்கு விருப்பமில்லை. ஆனால், அவள் தெரிந்துகொள்ள வேண்டியவைகளை அவளுக்கு சொல்ல வேண்டியது அவசியம். அதில் அவனுக்கும் இலாபம் இருக்க அவளை பார்த்துக்கொண்டே அந்த பணத்தை எடுத்து பாண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டான்.​

"எப்போ இருந்து அவங்க இங்க வராங்க?" இது மதுஷிகா.​

"நான் இங்க ஒரு வருஷமா வேலை பார்க்குறேன். அவங்கள ஆறு மாசமா இங்க பார்க்குறேன்" என்று அவன் சொல்லியதும் உள்ளுக்குள் உடைந்திருந்த இதயம் இப்பொழுது சில்லு சில்லாய் சிதறியே விட்டது.​

 
  • Like
Reactions: Avj

Vilacini

Well-known member
Wonderland writer

அப்படியென்றால் இந்த விடயம் அன்று ஆகாஷ் அவளை தானவீரனுடன் பார்த்து பொறாமையில் சண்டை பிடிப்பதற்கு முன்பிலிருந்தே நடந்துகொண்டுதான் இருந்திருக்கின்றது. அதை கூட அறியாமல் அவன் கோபித்துக்கொண்டான் என்று அவனை சமாதான படுத்த அவள் கடும் பிரயத்தனம் எடுத்திருக்கின்றாள். உலகில் இருக்கும் அடி முட்டாளை போல் தன்னை உணர்ந்த தருணம் அதில் அவளின் ஒற்றை விழியில் இருந்து கண்ணீர் துளி உருண்டு விழ அருகே இருந்த திசு பாக்ஸை எடுத்து அவள் முன்னே வைத்தான் சத்யா.​

அதில் இரு திசுவை உருவி எடுத்து கண்ணை துடைத்துக்கொண்டவள் "எப்பவும் இதே பொண்ணு கூட தான் வருவானா?" என்று கேட்டாள்.​

ஆகாஷை ஒரு பார்வை பார்த்த சத்யா ஒரு பெருமூச்சுடனே "சொன்னா உங்களுக்கு வலிக்கும்" என்றான்.​

"பரவால்ல" அவளின் விழிகள் சத்யாவின் விழிகளிலேயே நிலைந்திருந்தன.​

"இல்லை. சில சமயம் வேற பொண்ணுங்க கூடவும் பார்த்திருக்கேன். பட், பெரும்பாலும் நேஹா மேடம் கூட தான்" என்று அவன் சொல்ல அவனின் பதில் தந்த வலியே அவள் மனதை ரணமாக்கியிருக்க அடுத்த கேள்வியை கேட்க கூட முடியாமல் அப்படியே அமர்ந்துவிட்டாள் பெண்ணவள்.​

அவளை ஆழ்ந்து பார்த்தவன் "வேற எதுவும் தெரியனுமா?" என்று கேட்டான்.​

"இம்ம்...இந்த பாரோடா முடிஞ்சிடுமா...இல்லை..." எப்படி அவனிடம் கேட்பது என்று தெரியாமல் அவள் தடுமாற அவளின் கேள்வி முடிவதற்கு முன்பே அவள் மனதில் உள்ளதை படித்தவன் போல் 'இல்லை' என்னும் தோரணையில் அழுந்த தலையாட்டியன் அவன் கரங்களை அந்த பார் கவுண்டரில் ஊன்றி நின்றபடி ஆகாஷை பார்த்துக்கொண்டே "இங்க அவருக்கு ரெகுலர் ரூம் இருக்கு..." என்று சொன்னது தான் தாமதம் அதற்குமேல் அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.​

"போதும் சத்யா. கொடுத்த பணத்துக்கு மேலையே சொல்லிட்டீங்க" என்று அவள் அழுகையை கட்டுப்படுத்திக்கொள்ள முயன்றுகொண்டிருந்தாள்.​

சரியாக அந்த நேரம் ஆகாஷ் நேஹாவை அழைத்துக்கொண்டு பாரில் இருந்து வெளியேற போக "அங்க தான் போறாங்க" என்றான் சத்யா.​

சட்டென்று திரும்பி அவர்களை பார்த்தவளின் விழிகள் கோபத்தில் சிவந்து போக அவளுக்கு முன்னே இருந்த ‘வோட்கா ஷாட்ஸில்’ ஒன்றை சட்டென்று எடுத்து வாய்க்குள் சரித்துக்கொண்டவள் அடுத்ததை எடுக்க அவள் கரம் பிடித்து தடுத்திருந்தான் சத்யா.​

"குடிச்சு பழக்கம் இருக்கா?" என்று கேட்டான்​

'இல்லை' என்று அவள் தலையாட்ட "அப்போ இது வேண்டாம்" என்று அவள் கையிலிருந்த கிளாஸை வாங்கி வைத்தவன் "உங்க கோபம் புரியுது..." என்று சொல்லும் போதே ஆகாஷ் அங்கில்லை என்பதை உணர்ந்த மதுஷிகா "ரூம் நம்பர் என்ன?" என்றாள்.​

"வேண்டாமே..." என்று அவன் சொல்ல அவள் அவனை ஆழ்ந்து பார்த்தாள். ஒரு பெருமூச்சுடனே "201" என்று முடித்துக்கொண்டான் அவன்.​

"தேங்க்ஸ் சத்தியா" என்றவள் அவசர அவசரமாக ஆகாஷை தேடி சென்றாள்.​

***​

அங்கே மதுஷிகா சத்யாவிடம் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் இங்கே தருணின் நண்பர்களான ஸ்ரீகாந்தும் அஷோக்கும் அவனுக்கு ஆப்பு ஒன்றை சீவிக்கொண்டிருந்தனர்.​

வெகு நேரமாக நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்த தருணுக்கு அமெரிக்காவில் இருந்து வியாபார விடயமாக முக்கிய அழைப்பு ஒன்று வந்திருக்க "எக்ஸ்கியூஸ் மீ" என்று சற்று தள்ளி சென்று பேச தொடங்கியிருந்தான் அவன்.​

அந்த சமயம் பார்த்து அவன் வைத்துவிட்டு போன அவனது மது கோப்பையில் போதை மாத்திரை ஒன்றை யாரும் அறியா வண்ணம் போட்டிருந்தான் ஸ்ரீகாந்த். அதை யாரும் கவனிக்கவில்லை என்று அவன் நினைத்திருக்க அவன் நினைப்பிற்கு மாறாக அதை கண்டுகொண்டிருந்தான் அஷோக்.​

ஸ்ரீகாந்தின் அருகே சென்றவன் "என்னத்த டா கலந்த?" என்று கேட்க சட்டென்று தனது இதழில் விரல் வைத்து "ஷ்ஷ்ஷ்ஷ்..." என்று செய்கை செய்தவன் அஷோக்கை தனது அருகே அமர்த்திக்கொண்டான்.​

"என்னடா பண்ணுற நீ?" என்று அஷோக்கும் ரகசியம் போல கேட்க "பதறாத டா...சும்மா ஒரு ஃபன்னுக்கு தான். வெறுமனே தண்ணி அடிச்சிட்டு ஜாலியா பேசிட்டிருந்தா போதுமா? பேச்சுலர் பார்டினா ஒரு கிக்கு வேண்டாமா?" என்றான் சாதாரணமாக.​

"அதுக்கு?" என்று அஷோக் கேட்க "சும்மா மூட் ஏத்தி விடுற மாத்திரை ஒன்ன அவன் ட்ரின்க்ஸ்ல போட்டு விட்டேன்" என்றான் ஸ்ரீகாந்த்.​

"டேய் எதுக்கு டா இப்படி பண்ண? மாத்திரை வேலை செஞ்சு அவன் ஏதும் பொண்ணு மேல பாஞ்சுட்டான்னா என்ன பண்ணுறது?" என்று அஷோக் அதிர்ந்து கேட்டான். அவனின் குரல் மெல்ல உயர தொடங்கியிருக்க சட்டென்று அவன் தோளை அழுந்த பற்றிய ஸ்ரீகாந்த் "ஷாக் ஆஹ் குறை... ஷாக் ஆஹ் குறை" என்றபடி சுற்றும் முற்றும் பார்க்க மற்ற நண்பர்கள் எல்லோரும் எதையோ பற்றி மும்முரமாக பேசி சிரித்துக்கொண்டிருந்தனர்.​

தங்களை யாரும் கவனிக்கவில்லை என்று உறுதி செய்துகொண்டவன் "எதுக்கு நீ பதறுற. சும்மா விளையாட்டுக்கு தான் டா. இந்த பிராங்க் எல்லாம் பண்ணுவாங்களே அந்த மாதிரி. யோசிச்சு பாரு கல்யாண மாப்பிள்ளை போதை தலைக்கேறி உளறிக்கொட்டுவான். கண்ட மேனிக்கு நடந்துக்குவான். பார்க்கவே செம்ம ஃபன் ஆஹ் இருக்கும்ல. அதையும் மீறி பெரிய பிஸ்னஸ் மேக்னெட் டா அவன். இதுவரைக்கும் எத்தனை பொண்ணுங்க மேல பாஞ்சிருப்பானோ. நீ என்னமோ அவனை ஸ்ரீ ராமன் ரேஞ்சுல நினைச்சு பேசிட்டிருக்க? ஏன் நீயே எந்த பொண்ணுகிட்டையும் போனதில்லைனு சத்தியம் பண்ணி சொல்லு பார்ப்போம்?" என்று கேட்டான்.​

அப்படி கேட்டவனுக்கு தெரியவில்லை அவன் சொன்னாலும் சொல்லா விட்டாலும் தருண் அந்த ஸ்ரீ ராமனை போல தான் என்று. இதுவரையில் எந்த பெண்ணின் மீதும் அவன் பார்வை தவறாக படிந்ததே இல்லை. முதல் முறை அவன் ஒரு பெண்ணின் மீது ஆசை கொண்டான் என்றால் அது வைஷாலி மட்டும் தான்.​

ஸ்ரீகாந்தின் கேள்வியில் அசடு வழிய சிரித்தபடி தலையை சொரிந்துகொண்ட அஷோக் "அதெல்லாம் சரிதான். ஆனால், எனக்கு பயமா இருக்கு டா. இதுல ஒன்னும் பிரச்சனை ஆகிடாதே. தருணுக்கு மட்டும் தெரிஞ்சா நம்மளை தொலைச்சிடுவான்" என்று பயத்தில் நடுங்கினான் அவன்.​

"பயந்து சாகாத டா. தொடை நடுங்கி பயலே. நான் அந்த மாத்திரையை மிக்ஸ் பண்ணதை யாரும் பார்க்கல. உனக்கும் எனக்கும் மட்டும் தானே தெரியும். நாம சொல்லாமல் அவனுக்கு ஒன்னும் தெரிய போறதில்ல. சும்மா பயந்து சாகாமல் நடக்க போறதை வேடிக்கை பார்த்து என்ஜாய் பண்ணு" என்றான் அவன்.​

"நிஜமாவே ஃபன்னுக்காக தான் பண்ணுறியா?" என்று அஷோக் கேட்க 'ஆமாம்' என்பது போல் தலையாட்டிய ஸ்ரீகாந்த் வன்மமாக சிரித்தும் கொண்டான்.​

ஆம், அவனுக்கு ஒன்றாக படிக்கும் காலத்திலிருந்தே தருணின் மீது பொறாமை அதிகம். படிப்பிலும் விளையாட்டிலும் தருணை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று போட்டியிட்டு கொண்டே இருப்பான். ஆனால், ஒவ்வொரு முறையும் தோல்வி தான்.​

அந்த பொறாமை எல்லாம் படித்து முடித்து அவரவர் தத்தமது வேலைகளில் மூழ்கிய பின் மறைந்து போயிருக்க இப்பொழுது மீண்டும் தருணை சந்தித்ததிலிருந்து அவனுக்குள் புதைந்திருந்த வன்மம் மெல்ல தலை தூக்க தொடங்கியிருந்தது. அதிலும் அவனின் நண்பர்கள் யாவரும் வணிக உலகில் தருணின் திறமையை புகழ்ந்து பேசுவதும் அவனின் வருங்கால துணையாகவிருக்கும் வைஷாலியின் அழகை பாராட்டுவதுமாக இருக்க அவனுக்குள் பொறாமை தீ மெல்ல கொழுந்துவிட்டு எரிய தொடங்கியிருந்தது.​

அதன் விளைவாக அங்கிருந்த பணியாள் ஒருவனிடம் பணம் கொடுத்து அவனுக்கு தேவையான போதை வஸ்துவை பெற்றுக்கொண்டவன் அதை இப்பொழுது தருணின் மது கோப்பையில் கலந்திருந்தான். போதையில் தன்னிலை இழந்து தருண் கோமாளித் தனம் செய்வதை பார்ப்பதில் ஒரு அற்ப சந்தோசம் அவனுக்கு.​

தருணை உயர்வாக பார்த்த நண்பர்களின் கண் முன்னே அவனை அவமான படுத்திவிடும் எண்ணம் ஸ்ரீகாந்திற்கு. காவல் அதிகாரியான ரவி அங்கிருக்கும் வரை அவனால் அவன் எண்ணத்தை செயல்படுத்த முடியாமல் இருந்தது. அதிலும் ரவி காவல் அதிகாரி என்பதாலும் எப்போது வேண்டுமானாலும் கடமை அழைக்கும் வாய்ப்பிருப்பதாலும் அவன் மதுவை தொட்டு கூட பார்க்கவில்லை. அப்படி இருக்க ஸ்ரீகாந்தும் கையாலாகாதவானாக தான் அமர்ந்திருந்தான்.​

அவசர அழைப்பின் காரணமாக ரவியும் கிளம்பியிருக்க கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் பற்றிக்கொண்டான் ஸ்ரீகாந்த். கழிப்பறை செல்வதாக சொல்லி நண்பர்கள் கூட்டத்திலிருந்து நழுவி சென்றவன் ஏதாவது போதை வஸ்து கிடைக்குமா என்று தான் அந்த பணியாளிடம் பணம் கொடுத்திருந்தான். அந்த பணியாளும் அவசரத்திற்கு வசமிருந்த ஒன்றை கொண்டு வந்து கொடுத்துவிட்டான்.​

தருணின் துரதிஷ்டத்திற்கு அது பாலியல் உணர்வுகளை தூண்டிவிடக்கூடிய மாத்திரையாகி போயிருந்தது.​

அலைபேசியில் உரையாடிவிட்டு மீண்டும் நண்பர்களுடன் இணைந்துகொண்டான் தருண். ஏற்கனவே கணக்கு வழக்கில்லாமல் மது அருந்திக்கொண்டிருந்த நண்பர்கள் கூட்டமும் போதையில் மிதக்க தொடங்கிய தருணமது.​

அவர்களின் நிலையை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்த தருணும் "எல்லாருக்கும் ரொம்ப ஓவர் ஆகிடுச்சு டா. நான் உங்களுக்கு எல்லாம் இங்கயே ரூம் ஏற்பாடு பண்ண சொல்லியிருக்கேன். இங்கயே ஸ்டே பண்ணிட்டு மோர்னிங் கிளம்புங்க. குடிச்சிட்டு டிரைவ் பண்ணுறது சேஃப் இல்ல" என்றான்.​

அவன் அப்படி சொல்லியதும் நண்பர்களில் ஒருவன் எழுந்து "இது... இது தான் டா நம்ம மச்சான் தருண். எல்லாமே பெர்பெஃக்ட் டா பண்ணுவான். அவனுக்காக ஒரு டாஸ் பண்ணுவோம் வாங்க" என்றபடி காலியாகியிருந்த அவனது கோப்பையில் மீண்டும் மதுவை ஊற்றிக்கொண்டவன் "செ சியர்ஸ் டு (say cheers to) மச்சான்" என்று அவனது கோப்பையை உயர்த்தி காட்டி ஒரே மடக்கில் மொத்தமாக அவன் வாய்க்குள் சரித்துக்கொள்ள மற்றவர்களும் அவனை போலவே தத்தமது கோப்பைகளை உயர்த்தி காட்டி கோப்பையில் இருந்த மதுவை மொத்தமாக காலி செய்திருந்தனர்.​

தருணோ மெல்லிய சிரிப்புடன் அவர்களை பார்த்து கொண்டிருக்க அவனது திட்டம் எங்கே பாழாகிவிடப்போகிறதோ என்ற எண்ணத்தில் "மச்சான், உனக்காக தான் டா டாஸ் பண்ணுறாங்க. நீயும் குடிக்குறது தானே டேபிள் மெனேர்ஸ்" என்று தருணின் முன்னே இருந்த மதுக்கோப்பையை ஸ்ரீகாந்த் சுட்டிக் காட்ட சிறு தலையசைப்புடன் அதை கையில் எடுத்துக்கொண்ட தருணும் " தேங்க் யூ ஃபிரெண்ட்ஸ்" என்றபடி தனது கோப்பையில் இருந்த மதுவை குடித்து முடித்திருந்தான்.​

நினைத்தது நிறைவேறிய உற்சாகத்தில் ஸ்ரீகாந்த் அமர்ந்திருக்க மற்ற நண்பர்களும் மதுவின் பிடியில் சிக்கிக்கொள்ள பேச்சுலர் பார்ட்டி மேலும் கலைக்கட்டியது. அதே சமயம் தருணுக்கும் அவன் எடுத்துக்கொண்ட போதை பொருள் மெல்ல மெல்ல வேலையை காட்ட அவனுக்கு உடம்பெல்லாம் என்னவோ செய்வது போல உணர்ந்தான்.​

கண் முன்னே ஏதேதோ பிம்பங்கள் தோன்றி மறைந்தன. அங்கே அவர்களுக்கு உதவி கொண்டிருந்த வெய்ட்டர்களில் இருந்த பெண்ணின் மீது அவன் பார்வை படிந்து மீண்டது. ஏதேதோ சிந்தனைகள் தலைக்குள் புகுந்து ஆட்டுவிக்க தொடங்கியிருந்தது. கட்டு படுத்திக்கொள்ள முயன்றான். விரல்களை மடக்கி கண்களை மூடி தன்னை சமன் செய்துகொள்ள போராடிக்கொண்டிருந்தான்.​

அதை பார்த்த அஷோக் ஸ்ரீகாந்தின் காதருகே குனிந்து "உன் பிளான் வேலைக்காகாது போலவே. அவனை பாரு எப்படி கண்ட்ரோல் பண்ணிக்குறான்னு" என்று சிரித்தான்.​

அவனை திரும்பி முறைத்த ஸ்ரீகாந்த் வேகமாக எழுந்து எங்கோ சென்றவன் ஐந்து நிமிடங்களில் மீண்டும் வந்து தனது இருக்கையில் அமர்ந்துகொண்டான். அஷோக் அவனை கேள்வியாக பார்க்க "இப்போ பாரு வேடிக்கையை. உங்க பெர்பெஃக்ட் சிகாமணி எப்படி கண்ட்ரோல் ஆஹ் இருக்க போறாருன்னு" என்று ஏளன சிரிப்புடன் சொன்னான்.​

அஷோக் அவனை புரியாமல் பார்த்த நேரம் அவர்களின் அறைக்குள் நுழைந்திருந்தாள் அங்கே வேலை செய்யும் பணிப்பெண் ஒருத்தி.​

இதற்கு முன் அங்கிருந்த பெண்ணை இப்பொழுது காணவில்லை அவளுக்கு பதில் இவள் வந்திருந்தாள்.​

அவர்களுக்கு தேவையானதை கேட்டு கேட்டு செய்வது போல நடந்துகொண்டவள் மெல்ல மெல்ல தருணின் அருகே சென்று அவன் அமர்ந்திருந்த சோபாவில் அவனை உரசியபடி அமர்ந்துக்கொண்டாள். விழிகள் மூடி அமர்ந்திருந்த தருணிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லாமல் இருக்க மெல்ல திரும்பி ஸ்ரீகாந்த்தை பார்த்தாள்.​

அவனும் 'ம்ம்' என்று கண்களால் ஜாடை காட்ட இன்னும் அவனை நெருங்கி அமர்ந்து அவனது திறந்திருந்த ஷர்ட் பட்டனூடே தெரிந்த அவனது வெற்று மார்பில் அவள் கைவைத்தது தான் தாமதம் சட்டென்று விழிகளை திறந்தவன் அவளை கீழே தள்ளிவிட்டபடி எழுந்து நின்றிருந்தான்.​

அவளை அனல் தெறிக்க பார்த்தவன் "பிச்சுருவேன்" என்று விரல் நீட்டி எச்சரித்திருந்தான்.​

கண்களை மூடி கரங்களை கேசத்தில் நுழைத்து கலைந்திருந்த முடியை விரல்களால் பின்னுக்கு கோதி விட்டுக்கொண்டவன் சுற்றி அமர்ந்திருந்த நண்பர்கள் கூட்டத்தை ஒரு பார்வை பார்த்தான்.​

அனைவருமே அவன் செய்கையில் ஒரு நொடி அதிர்ந்து நிற்க "சாரி கய்ஸ், எனக்கு கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு. நான் என் ரூமுக்கு போறேன். நீங்க என்ஜாய் பண்ணுங்க" என்றுவிட்டு விறுவிறுவென அங்கிருந்து வெளியேறியிருந்தான்.​

ஸ்ரீகாந்த் எதையோ ஏதிர்பார்த்து செய்திருக்க தருணின் மனோதிடம் அவன் திட்டத்தை மொத்தமாக தவிடுபொடியாக்கிவிட்டிருந்தது. இப்பொழுதும் கூட தருண் அவனுக்கு தோல்வியை தானே கொடுத்து சென்றிருக்கிறான். அந்தக் கடுப்பில் வேறேதும் செய்ய இயலாமல் இன்னும் இரண்டு கிளாஸ் லிக்கரை உள்ளிறக்கியபடி கருவிக்கொண்டே அமர்ந்துவிட்டான் ஸ்ரீகாந்த்.​

வெறும் மது அருந்தியது மட்டுமே அவனின் மாற்றத்திற்கு காரணமாக இருக்க கூடும் என்று தருணுக்கு தோன்றவில்லை. இருந்தாலும் எதையும் யோசிக்கும் நிலையிலும் அவன் இல்லை. தற்போதைக்கு யாரையும் பார்க்காமல், முக்கியமாக எந்த பெண்ணையும் பார்க்காமல் தன்னை தனிமை படுத்திக்கொள்வது தான் சரி என்று தோன்ற நிலைமை கை மீறி செல்வதற்குள் தனது அறையை நோக்கி நடந்தான் அவன்.​

பேச்சுலர் பார்ட்டி என்று அவன் முடிவு செய்து வந்த போதே எல்லாம் முடிய அங்கேயே தங்கிவிட்டு மறுநாள் காலையில் வீட்டிற்கு செல்வது என தான் அவன் முடிவெடுத்திருந்தான். அதற்கான ஏற்பாடுகளை அவனது காரியதரிசி சோனா செய்துகொடுத்திருக்க அவன் தங்குவதற்கு அறையும் கூட அந்த விடுதியிலேயே தயார் நிலையிலிருந்தது.​

தனது பாக்கெட்டில் இருந்த அறைக்கான திறப்பு அட்டையை எடுத்து பார்த்தான். 203 என்ற எண் அதில் இருக்க வைஷாலிக்கும் அவனுக்குமான உறவை மொத்தமாக காவுகொடுக்க போகும் அறை அது தான் என்று தெரியாமலே அந்த அறையை நோக்கி மெல்ல அடி எடுத்து வைத்தான் தருண்.​


 

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 32

உட்கொண்ட போதை மருந்தும் மதுபாணமும் உடலுக்குள் ஒன்று சேர்ந்து ஏதேதோ விபரீத மாற்றங்களை உண்டு செய்துகொண்டிருக்க தருணின் கம்பீர நடை சற்றே தளர்ந்திருந்தது. கண்கள் சொருக தொடங்க அவனின் சிந்தனைகளும் பூத உடலின் உணர்வுகளும் வேறொரு ராஜ போதையை நாடின. இரத்தம் சூடேற கடந்து சென்ற பெண்களின் மீது அவன் விரும்பாமலே அவனது விழிகள் அத்து மீற தொடங்கியிருந்தன.​

கண்கள் காணும் பெண்களை எல்லாம் புசிக்க சொல்லி மூளைக்குள் சாத்தான் ஒன்று அமர்ந்து ஓதி கொண்டே இருந்தது. தலையை உலுக்கி, உலுக்கி தன்னை சமன் செய்ய முயன்றவாரே தனது அறையை நோக்கி நடந்தான். தளர்ந்திருந்த நடையில் வேகம் அதிகரித்திருந்தது. தன்னை சுற்றி பின்ன பட்டிருந்த வலையில் விழாமல் தப்பித்துவிடும் வேகம் அது.​

தன்னால் யாருக்கும், எந்த பெண்ணுக்கும் அசம்பாவிதம் எதுவும் நடந்து விட கூடாதே என்கின்ற கவனமும் உடன் சேர நடையின் வேகமும் கூடிப்போயிற்று. தெளிவாக சிந்திக்க விடாமல் உள்ளிருந்த போதை வஸ்து சதி செய்தாலும் அவனது மனோதிடம் இன்னமும் அவனை காத்துக்கொண்டிருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.​

தருண் மிகவும் மென்மையானவன். இலகுவாக பழக கூடிய இனிமையானவன். ஆனால், மனதில் ஒன்றை நினைத்துவிட்டால் அதில் நின்று சாதிக்கும் பிடிவாதக்காரன் அவன். அந்த மனவலிமை தான் இப்போது வரை அவனுக்கு கவசமாக உதவி கொண்டிருந்தது.​

ஒருவழியாக மின்தூக்கியில் ஏறி அவன் செல்ல வேண்டிய தளத்தின் எண்ணை அழுத்தியிருந்தான். அவனின் நல்ல நேரத்திற்கு மின்தூக்கியில் வேறு யாரும் இருக்கவில்லை. அதுவே அவனுக்கு கொஞ்சமே கொஞ்சம் நிம்மதியை கொடுக்க ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டு மின்தூக்கி சுவற்றில் சாய்ந்து நின்றுகொண்டான்.​

இதே சமயம் இங்கே ஆகாஷின் பின்னோடு வந்திருந்தாள் மதுஷிகா.​

காலம் தாமதிக்காமல் அவனை துரத்திக்கொண்டு வந்ததில் அவன் அறைக்குள் நுழைவதற்குள் அறை வாசலிலேயே அவனை பிடித்து நிறுத்தியிருந்தாள் பெண்ணவள்.​

அறை கதவை திறக்க சென்ற நேரம் "ஆகாஷ்" என்று ஆக்ரோஷமாக கேட்ட மதுஷிகாவின் குரலில் அதிர்ந்து நின்றவனின் முன்னே வந்து நின்றிருந்தாள்.​

அவன் முன்னே அழக்கூடாது என்று முடிவு செய்தவளின் கண்களில் நீர் கொஞ்சமும் இல்லை. அனல் கக்கும் ரௌத்திரம் மட்டுமே நிறைந்திருந்தது. அவனை அடித்து நொறுக்கி விடும் ஆத்திரமும் உள்ளே கொதித்துக்கொண்டிருந்தது.​

ஒரு நொடி அவளை அதிர்ந்து பார்த்தவனின் சட்டையை கொத்தாக பற்றியவள் அவன் கன்னம் பழுக்கும் அளவிற்கு ஓங்கி அறைந்திருந்தாள்.​

அவள் அறைந்ததில் அவன் முகம் வலது புறமாக திரும்பியிருக்க சட்டென மீண்டும் அவளை நோக்கி திரும்பியவன் "ஹேய்" என்றபடி அவளை அடிப்பதற்காக கையை ஓங்கியிருக்க ஓங்கிய அவன் கரத்தை அந்தரத்திலேயே பிடித்து நிறுத்தியிருந்தாள் மதுஷிகா.​

"என் மேல கையை வச்ச, வச்ச கையை உடைச்சிடுவேன்" என்றபடி அவன் கையை உதறிவிட்டாள்.​

"இப்ப உனக்கு என்னடி வேணும்?" என்று அவன் அவளை முறைத்து பார்த்த நேரம் அவன் அருகே இருந்த நேஹாவும் "யாரு டி நீ..." என்று ஆரம்பிக்க அவளை மதுஷிகா பார்த்த பார்வையில் "நீ...நீங்க" என்று மரியாதையற்ற ஒருமை விழிப்பு மரியாதையுடன் நிறைவு பெற்றிருந்தது.​

இதழ்களில் ஒற்றை விரலை வைத்து "ஷ்ஷ்ஷ்... நான் பேசி முடியுற வரை சத்தம் வரக் கூடாது" என்று சொல்ல அந்த பெண்ணும் 'ம்ம்ம்' என்று அமைதியாக நின்றுகொண்டாள். மதுஷிகாவின் விழிகளில் கனன்ற கனலே அவளை அடக்கி வைக்க போதுமானதாக இருந்திருக்க வேண்டும்.​

மீண்டும் ஆகாஷை பார்த்தவள் "எதுக்கு இப்படி பண்ணு?" என்று கேட்டாள்.​

"உன்னை காதலிச்ச எவனா இருந்தாலும் இப்படி தான் பண்ணியிருப்பான்" என்று துரோகம் செய்துவிட்ட குற்ற உணர்வே இன்றி திமிராக வந்து விழுந்தது அவனது வார்த்தைகள்.​

"நான் வீர் மாமா கூட ஷாப்பிங் போனதுக்காக இப்படி பண்ணிட்டேன்னு தயவு செஞ்சு சொல்லிடாத...உன்னோட இந்த கேவலமான வேலை அதுக்கு முன்ன இருந்து நடந்துட்டிருக்குன்னு தெரிஞ்சு தான் வந்திருக்கேன்" என்று அவள் சொல்ல,​

"ஓ...தெரிஞ்சிருச்சா... ரொம்ப சந்தோஷம். நீ எவன் கூட வேணும்னாலும் சுத்தி தொலை எனக்கு அதெல்லாம் தேவையே இல்லாத ஆணி. ஆனால், எனக்கு கொடுக்க வேண்டியதை ஒழுங்கா கொடுத்திருந்தா நானும் ஒழுங்கா இருந்திருப்பேன்ல.​

“இல்ல எனக்கு புரியல…” என்று அவனைக் கேள்வியாக பார்த்தாள் மதுஷிகா.​

“உனக்கு மட்டும் புரிஞ்சிருந்தா இந்நேரம் இவளுக்கு பதிலா நீ இங்க இருந்திருப்ப” என்று நேஹாவை கண்களால் காட்டி நக்கலாக சிரித்தான் ஆகாஷ்.​

“என்ன பேசுற ஆகாஷ்?” மதுஷிகாவின் வார்த்தைகள் அதட்டலாக வந்து விழுந்தன.​

“ஏய், அவனவன் இன்னிக்கு லவ் சொல்லிட்டு நாளைக்கு ரூம் போட்டுட்டு போறான். ஆனால், நான் மட்டும் வருஷ கணக்கா லவ் பண்ணிட்டு ஒரு கிஸ்ஸுக்கு கூட நாய் மாதிரி கெஞ்ச வேண்டியதா இருக்கு. இதுல மேடம் என் கூட தனியா வெளிய வரத்துக்கு நூறு முறை யோசிப்பீங்க. ஆனால், அந்த வீர் கூட மணி கணக்கா ஊர் சுத்திட்டு வருவீங்க. நான் மட்டும் இத எல்லாத்தையும் பாத்துட்டு உன் மேல எனக்கு தெய்வீக காதல்னு சொல்லிட்டு தேவுடு காக்கணுமா?” என்று கொச்சையாக பேசினான்.​

“ஆகாஷ் எல்லா கண்டிஷன்ஸும் சொல்லிட்டு தானே உன்ன லவ் பண்ணேன். நீயும் எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்ட தானே” அவள் குரலில் ஆதங்கம் தொனித்தலும் நலிந்தே ஒலித்தது.​

மாத்திரை போட்டுக்கொண்டதில் குறைந்திருந்த காய்ச்சல் மெல்ல அதிகரிப்பது போல் உணர்ந்தாள் அவள். கூடவே தலைவலியும் பிடித்துக்கொள்ள ஒற்றை கரத்தால் நெற்றியை அவ்வப்போது நீவிக்கொண்டுதான் அவனிடம் பேசிக்கொண்டிருந்தாள்.​

“ஆமா ஒத்துக்கிட்டேன் தான். நீயும் ஒரு பொண்ணாச்சே, காதலிச்ச பிறகு போக போக எல்லாம் மாறிடும்னு நினைச்சேன். அதனால ஒத்துக்கிட்டேன். ஆனால், நீ இப்படி ஒரு மரக்கட்டையா இருப்பேன்னு எனக்கென்ன தெரியும். அதெப்படி டி காதலிக்குறவன் பக்கத்துல வரும்போது கூட உனக்கெல்லாம் மூடே வர மாட்டேங்குது” என்று அவன் பேச்சின் தரம் குறைந்து கொண்டே போனது.​

தலையை உலுக்கி உடலில் மிச்சமிருந்த சக்தி எல்லாம் திரட்டி “நீ பண்ண தப்பை மறைக்கிறதுக்கு பழியை தூக்கி என் மேல போட பார்க்காத ஆகாஷ். நீ என்னை காதலிச்சது எல்லாமே பொய். இந்த காதல் கத்தரிக்காயின்னு சொல்லி என் பின்னாடி சுத்தினது எல்லாம் என்னோட உடம்புக்காக மட்டும் தான் அப்படித்தானே?” என்று ஆக்ரோஷமாக கத்தினாள்.​

வேறு தருணமாக இருந்திருந்தால் அவன் கன்னம் பழுக்கும் வண்ணம் அவனுக்கு அறைந்ததே போதுமென்று அங்கிருந்து அகன்றிருப்பாள். அந்த அருவருப்பு மிக்க ஜந்துவின் முன்னே நின்றிருக்க கூட யோசித்திருக்க மாட்டாள்.​

ஆனால், உடல் கொதிக்கும் காய்ச்சலுடன் அவள் அருந்திய வோட்கவுமாக சேர்ந்து அவளின் நிதானத்தை இழக்க செய்திருந்தன. அதிலும் குடித்து பழக்கமில்லாமல் எடுத்த எடுப்பிலேயே மடக் மடக்கென்று மதுவை உள்ளே இறக்கியதன் விளைவாக உண்டான போதை அவளின் புத்தியை மெல்ல மெல்ல தன் வசப்படுத்திக் கொண்டிருந்தது.​

“அதுல என்ன சந்தேகம் உனக்கு. நீ ஒரு மொக்க பீசா இருந்திருந்தா நீ போட்ட கண்டிஷனுக்கும் பண்ணின பில்டப்புக்கும் சரிதான் போடின்னு எப்போவோ கழட்டி விட்டிருப்பேன். நீ வேற செம பீசா இருக்கியா கொஞ்சம் லேட்டானாலும் பரவால்ல, மொத்தமா அனுபவிக்க நினைச்சு தான் காத்திருந்தேன்.ஆனால், இப்போ நீ பொண்ணுதானானே எனக்கு சந்தேகமா இருக்கு” என்றான்.​

அவன் அப்படி சொல்லியதும் அருகே இருந்த நேஹாவும் கூட அவளை பார்த்து கேவலமாக சிரித்து வைக்க அது மதுஷிகாவின் ஆத்திரத்தை இன்னமும் கிளறியிருந்தது. அவமானமாக உணர்ந்தாள்.​

தன்னவன், தன் சுக துக்கம், மான அவமானங்களில் உடனிருந்து பங்குக்கொள்ள போகிறவன் என்றெல்லாம் அவனை நினைத்திருந்தாளே அது எல்லாம் இந்த நொடி பொய்த்து போயிருந்தது. அவன் அல்லவா அவளை அவமானப்படுத்தி கொண்டு நிற்கின்றான். ஏற்கனவே எரிந்துக்கொண்டிருந்த நெருப்பில் எண்ணையை ஊற்றியது போல் நேஹாவும் சிரித்து வைக்க அவளுக்கு இன்னமும் ஆத்திரம் பீறிட்டு கிளம்பியது.​

அதே சமயம் தருணை சுமந்து வந்த மின்தூக்கியும் அவர்கள் இருந்த தளத்தை அடைந்திருக்க மெல்ல வெளியேறிக்கொண்டான். அவனது அறையை நோக்கி நடந்தவனின் விழிகள் அவர்கள் மூவரின் மீது ஒரு நொடி படிந்து மீண்டன. நொடிக்கு அதிகமாக அவனது பார்வை அங்கே நிலைக்கவில்லை. அவனது அறைக்குள் சென்று அடைந்துகொள்வதையே குறிக்கோளாக கொண்டவன் அவர்களை சட்டை செய்யாமல் நடந்தான்.​

ஆகாஷின் அறைக்கு அடுத்த அறை தான் அவனுடையது. இதுவரை வரும் வழிகளில் இருந்த கண்டங்களை எல்லாம் வெற்றிகரமாக கடந்து வந்தவன் அறைக்குள் நுழைந்துவிட்டான் என்றால் தப்பிவிடுவான். மற்றவைகளை விடிந்து பார்த்துக்கொள்ளலாம் என்று தான் அவனுடைய தற்போதைய மனநிலை இருக்க அவனது நடையில் வேகம் அதிகரித்திருந்தது.​

இங்கே ஆகாஷுடைய அநாகரிகமான பேச்சில் கடுப்பான மதுஷிகாவும் அவனது ஷர்ட்டை எட்டிப் பிடித்தவள் “இப்படி பேச உனக்கே கேவலமா இல்ல?”​

என்று சீறினாள்.​

"உடம்புல எந்த உணர்ச்சியும் இல்லாமல் காதலிக்குறேன்னு என்னை ஏமாத்திட்டு திரிஞ்ச உனக்கே வெட்கமில்லாதப்போ எனக்கு எதுக்குடி இருக்கணும். என் ஆசையை தீர்த்து வைக்க கூட துப்பில்லாத பொண்ணு நீ, உனக்கெல்லாம் லவ் ஒன்னு தான் கேடு. முதல்ல நீ பொண்ணுதானேன்னு டாக்டர் கிட்ட போயி கன்ஃபர்ம் பண்ணிக்கோ. டாக்டர் கிட்ட போக கூச்சமா இருந்தா இதோ இப்போ கூட ஒன்னும் கெட்டு போகல ரூமுக்குள்ள வா நானே வேணும்னாலும் கன்ஃபர்ம் பண்ணிடுறேன்" என்று அசிங்கமாக பேசினான்.​

சரியாக தருணும் அதே நேரம் அவர்களை கடந்து சென்று அவனின் அறையை திறப்பு அட்டையை வைத்து திறந்துகொண்டிருந்தான்.​

"ச்சீ" என்றபடி ஆகாஷின் சட்டையை விட்டவளுக்கு யாரோ ஒருவன் அவர்களை சில நொடிகளுக்கு முன் கடந்து சென்றது நினைவுக்கு வர சட்டென்று நேஹாவின் கையில் வைத்திருந்த மது பாட்டிலை பறித்தெடுத்தவள் அதில் கொஞ்சத்தை வாய்க்குள் சரித்துவிட்டு மீதியை பாட்டிலோடு கீழே போட்டிருந்தாள்.​

ஆகாஷ் அவளை புருவம் இடுங்க கேள்வியாக பார்க்க அவனை எரித்துவிடுவது போல பார்த்துக்கொண்டே பின்னால் திரும்பி அடுத்த அறைக்குள் நுழைய சென்ற தருணை இரண்டே எட்டுக்களில் அடைந்தவள் அவன் ஷர்ட்டை பற்றி இழுத்து அவன் இதழ்களில் இதழ் பதித்திருந்தாள். ஆழ்ந்த முத்தமெல்லாம் இல்லை. அழுத்தமாக அவன் இதழ் தீண்டி விலகியிருந்தாள் அவ்வளவு தான்.​

"பொண்ணு தான், போதுமா" என்று ஆகாஷை அவள் முறைத்து பார்க்க இன்றாவது அவளை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்ற வெறியில் கடைசி ஆயுதமாக வேண்டுமென்றே அவளது சினத்தை தூண்டி விட்டு அவளை தன் வசமாக்கிக்கொள்ள நினைத்து பேசிக்கொண்டிருந்த ஆகாஷிற்கு அவனது திட்டம் படு தோல்வி கண்டத்தில் சப்பென்றாகிவிட்டது.​

முகம் கன்ற "ச்சே பி****" என்று அவளை ஆங்கில கெட்ட வார்த்தையில் திட்டிக்கொண்டே "வா போகலாம்" என்று நேஹாவின் கரத்தை பற்றி தர தரவென்று அழைத்துக்கொண்டு வெளியில் சென்றான்.​

"பேபி...ரூம் அங்கிருக்கு" என்று நேஹா ஆரம்பிக்க "ரொம்ப முக்கியம். என் மூடையே கெடுத்துட்டா...பேசாம வா" என்று நேஹாவிடம் கத்திகொண்டே அவன் சென்றது மதுஷிகாவின் செவிகளிலும் விழுந்தது. ஆகாஷ் அங்கிருந்து செல்லும் வரை பார்த்திருந்தவள் கண்களை அழுந்த மூடி திறந்த படி அங்கிருந்து நகர முயல அவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.​

அவள் இடையை சுற்றி பிடித்திருந்தன அவளின் முன்னால் நின்றிருந்த ஆடவனின் கரங்கள். ஆம்,அவள் இழுத்த இழுப்பில் தடுமாறிய தருணின் கரங்கள் அவளது இடையை அழுந்த பற்றிக்கொண்டன. அவள் முத்தமிட்டு விலகிவிட்ட பிறகும் அவன் விலகாமல் நின்றிருந்தான்.​

போதை அவன் சித்தத்தை கலங்கடித்திருக்க உடலில் அதிகப்படி உணர்ச்சிமிக்க பாகங்களில் ஒன்றான உதடுகளில் அவள் முத்தமிட்டிருந்தது டோபமைன், செரோடோனின்,ஆக்ஸிடோசின், என்டோர்பின்ஸ் என்று 'ஃபீல்-குட் ஹார்மோன்ஸ்' என்று அழைக்கப்படும் ஹார்மோன்களின் தொகுப்பை அவன் இரத்தத்தில் இன்னமும் அதிகப்படியாக சுரக்க செய்து அவன் உணர்வுகளை தூண்டி விட்டிருந்தன.​

அதிலும் அவள் மேனியில் பரவிக்கிடந்த வாசனை அவனுக்கு வைஷாலியை நினைவுபடுத்தியது. அக்காவும் தங்கையும் ஒரே வகையான வாசனை திரவியத்தை பயன்படுத்த கூடிய பழக்கமுள்ளவர்கள் என்று அவன் எங்கனம் அறிவான். அதோடு வைஷாலியை போன்றே அமைந்திருக்க கூடிய அவள் தோற்றமும் அவனது மனவுறுதியை மொத்தமாக உடைத்திருந்தது.​

அவன் கரங்களை விலக்க முயன்றபடி நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் பெண்ணவள். உயிர்போகும் தலைவலியும் தலைக்கேறும் போதையுமாக அவனை பார்த்தாள். கண்களை சுருக்கி அவன் முகத்தை உற்று பார்த்தவளின் இதழ்கள் தாமாக "டாம்" என்று முணுமுணுத்துக்கொண்டன.​

அவன் யாரென்றும் தெரியாமல் அவன் முகத்தை கூட பாராமல் தான் அவனுக்கு முத்தமிட்டிருந்தாள். ஆகாஷின் மீதிருந்த கோபத்தில் கொஞ்சமும் யோசிக்காமல் அந்த விபரீதத்தை செய்திருந்தாள் பெண்ணவள்.​

இப்போது நிமிர்ந்து பார்த்ததும் தான் அவன் அடையாளத்தையே கண்டுகொண்டாள் அவள்.​

அவன் கண்களை அழுந்த மூடி திறந்து தன்னை நிதான படுத்த முயன்று கொண்டே அவளை ஆழ்ந்து பார்த்தான். ஆனால், அவனின் பிடி தளரவே இல்லை.​

இன்னும் இறுகியது. அவளை தன்னுடன் சேர்த்து நெருக்கி கொண்டான்.​

விலக சொல்லி மனம் சொல்கின்றது. ஆனால், மூளைக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் ரசாய னமாற்றங்கள் மனதை வென்றுகொண்டிருக்க "சாரி, தெரியாம..." என்று ஏதோ சொல்வதற்காக விரிந்த அவள் செவ்விதழ்களை பார்த்துக்கொண்டே ஒற்றை கரத்தால் அவள் பின்னங்கழுத்தை பற்றியவன் தன்னை நோக்கி இழுத்து அவள் அதரங்களை ஆக்ரோஷமாக சிறை செய்திருந்தான்.​

 

Vilacini

Well-known member
Wonderland writer

அவனிடமிருந்து விலகிக்கொள்ள நினைத்து அவனை தள்ள முயன்றாள். ஆனால், ஆணின் பலமும் போதை வஸ்துவின் தாக்கமும் ஒருங்கே சேர்ந்திருந்த ஆணவனை அவளால் அசைக்க கூட முடியவில்லை. அவளின் போதாத காலத்திற்கு சற்று முன்னர் நேஹாவிடமிருந்து பறித்தெடுத்து பருகிய மதுபாணமும் அதன் வேலையை சரியாக செய்ய துவங்க ஒரு கட்டத்தில் அவனை விலக்குவதையும் விட்டுவிட்டாள்.​

அவனின் ஆழ்ந்த முத்தமும் அவள் மேனியை ஸ்பரிசிக்க துடித்த அவனின் வன்கரங்களின் தீண்டல்களும் அவளின் ஹார்மோன்களையும் எக்கு தப்பாக தூண்டியிருக்க அவன் ஷர்ட்டை அழுந்த பற்றிக்கொண்டாள். அவனோடு ஒட்டிக்கொண்டாள்.​

அவனின் வேகம் மெல்ல அதிகரிக்க அவளை தள்ளிக்கொண்டு சுவற்றில் சாய்த்திருக்க அவள் சாய்ந்தது அவன் அறையின் காதவாகி போனது. கொஞ்சமாக திறந்திருந்த கதவு அவள் சாய்ந்ததில் மொத்தமாக திறந்துக்கொள்ள இருவரும் அறைக்குள் நுழைந்துவிட்டிருந்தனர்.​

மூடிய அறையும், குளிர்ந்த சூழலும், போதையின் ஆதிக்கமும் இருவரையும் அதற்குமேல் வேறெதையும் சிந்திக்க விடவில்லை. அவன் கரங்கள் அவளில் ஆடை மூடாத பாகங்களை தீண்டி ரசித்து சலித்த பின் ஆடை மறைத்த பாகங்களையும் தீண்டி விடும் வேட்கை கொள்ள அவள் ஆடைகளுக்கு விடுதலையளித்தான் தருண். அவனையே ஆடையாக போர்த்தி அவனுடனேயே மஞ்சத்தில் தஞ்சம் புகுந்திருந்தாள் மதுஷிகா.​

காதல் இன்றி மனம் இணையாமல் வெறும் காமம் மட்டுமே மைய புள்ளியாக அமைந்த கூடல் அது.​

நொடி நேர சினத்தை கட்டு படுத்த தவறிய மதுஷிகாவின் அந்த ஒரு செயல் தான் இன்று வைஷாலி, மது, தருண், வீர் என்று அவர்கள் நால்வரின் வாழ்வையும் ஒட்டு மொத்தமாக திருப்பி போட்டிருந்தது.​

இப்படி தான் கோபம், மகிழ்ச்சி,துக்கம், இயலாமை போன்ற உணர்வுகளின் பிடியில் சிக்கி ஒரு வேகத்தில் நாம் செய்துவிடும் காரியங்கள் நம்மை மட்டும் இன்றி நம்மை சார்ந்தவர்களின் வாழ்க்கையையும் தடம் புரட்டி விடுகின்றன.​

தெரிந்து இழைக்க படும் தவறுகள் இல்லையானாலும் அதன் விளைவுகள் நாம் நினைத்தும் பார்க்க முடியாத, தாங்கி கொள்ளவே முடியாத தண்டனைகளாகத் தானே மாறிவிடுகின்றன.​

இங்கே நிகழ்ந்திருப்பதும் அப்படியான தவறுதான். தெரிந்தே செய்யப்படவில்லையென்றாலும் அவர்களை துரோகிகள் என்ற பட்டத்தை சுமக்க வேண்டிய கட்டாயத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது விதி.​


 

Vilacini

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 33

மறுநாள் காலையும் புலர்ந்திருந்தது. கண்களை மெல்ல திறந்து பார்த்தாள் மதுஷிகா. கனமான திரைசீலையின் உபாயத்தால் அந்த அறை இன்னமும் இருளாக இருந்தாலும் அதையும் மீறிக்கொண்டு உள்ளே ஊடுருவியிருந்த சூர்ய கதிர்கள் மெல்லிய வெளிச்சத்தை அறை முழுவதும் பரப்பிக்கொண்டிருந்தது.​

தலை விண்ணென்று தெறிக்க தலையை பிடித்துக்கொண்டே எழுந்தமர்ந்தாள்.​

மெத்தையில் எழுந்தமர்ந்து தலையை ஒற்றை கையால் தாங்கியபடி விழிகளை மெல்ல உயர்த்தி பார்த்தாள். தான் எங்கிருக்கிறோம் என்ன நடந்தது என்பதை கிரகித்துக்கொள்ளவே அவளுக்கு சில நொடிகள் தேவைப்பட்டன. சிகையை அழுந்த கோதிவிட்டபடி பக்கவாட்டாக திரும்பியவளின் விழிகள் நிலைக்கண்ணாடியில் படிய அதிர்ந்துவிட்டாள் பெண்ணவள்.​

மேலாடையின்றி வெற்றுடலுடன் அவள் விம்பத்தை பிரதிபலித்துக்கொண்டிருந்தது அந்தக் கண்ணாடி.​

சட்டென்று அவள் இடையோடு போர்த்தியிருந்த கனமான போர்வையை பற்றியிழுத்தவள் அதை மார்போடு அணைத்து பிடித்து தன்னை மறைத்துக்கொண்டாள்.​

முதல் நாள் இரவு நிகழ்ந்தவை மெல்ல நினைவு வருவதுபோல் இருக்க, விழிகளில் நீர் திரையிட மெல்ல இடப்புறமாக திரும்பி பார்த்தாள்.​

வெற்றுடலுடன் கால் சட்டை மட்டும் அணிந்து குப்புற படுத்திருந்தான் தருண்.​

ஆடையற்ற நிலையில் யாரோ ஒரு ஆணுடன் மூடிய அறைக்குள் ஒரே கட்டிலில் இருகின்றாள்.​

நினைக்கவே அருவருப்பாக இருக்க குமட்டி கொண்டு வந்தது அவளுக்கு. இருகைகளாலும் வாயை பொத்திக்கொண்டாள். அவள் இருக்கும் நிலையில் அவன் எழுந்துவிட்டால் அவளுக்கு இன்னமும் அவமானமாகி போகும். அவன் விழிப்பதற்குள் அவள் தயாராக வேண்டும்.​

எச்சிலை கூட்டி விழுங்கி கொண்டவள் விழிகளை அறையை சுற்றி சுழல விட்டாள். அவள் ஆடைகள் எல்லாம் கட்டிலுக்கு தூரமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக தரையில் சிதறி கிடந்தன.​

"ம்பச்" என்று அதனை கடுப்பாக பார்த்துக்கொண்டே பார்வையை நகர்த்த அருகே இருந்த நாற்காலியில் கிடந்த பூந்துவாலை கண்ணில் பட்டது.​

சட்டென்று அதை எட்டி எடுத்தவள் அதனால் தன்னை ஒன்றும் பாதியுமாக சுற்றி கொண்டே கீழே கிடந்த அவள் ஆடைகளை பொருக்கி எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்துக்கொண்டாள்.​

உள்ளே நுழைந்தவள் ஆடைகளை அங்கிருந்த கம்பியில் மாட்டிவிட்டு கண்களை மூடி அப்படியே சுவற்றில் சாய்ந்து நின்றுகொண்டாள்.​

முன்தினம் நடந்தவைகளை நினைவு படுத்திக்கொள்ள முயன்றாள்.​

நிகழ்ந்தவை அனைத்தும் அவள் நினைவுகளில் படமாக ஓடின.​

அவனின் கரங்கள் அவள் மேனியில் மேய்ந்ததும், அதற்கு அவள் மயங்கி தவித்ததும், அவன் இதழ் ஒற்றல்களும், அவளின் பதில் முத்தங்களும், மேனியெங்கும் உரசிய அவனின் தாடி மீசையின் குறுகுறுப்பும் அதில் உருகி துடித்த அவள் உணர்வுகளுமாக அத்தனையும் அவளுக்கு அறையும் குறையுமாக நினைவுக்கு வந்து போயின.​

மூடிய விழிகளில் வழிந்த நீருடன் பட்டென விழிகளை திறந்தவளுக்கு தான் செய்த செயலை ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. தன்னை நினைத்தே அருவருப்பாக இருந்தது.​

என்ன காரியம் செய்து விட்டாள் அவள். அதை நினைக்க நினைக்க கண்ணீர் நிற்கவில்லை. அங்கேயே சில நிமிடங்கள் அழுது கரைந்தாள். நேரம் கடக்க அவளின் அழுகையும் மட்டுப்பட்டிருக்க நிமிர்ந்து அவள் முன்னே இருந்த கண்ணாடியை பார்த்தாள்.​

இங்கேயே எவ்வளவு நேரம் தான் அழுது கொண்டிருப்பது. வெள்ளம் அணையை கடந்தாகிவிட்டது. இனி நிகழ்ந்தவை எதையும் மாற்ற இயலாது. நிகழ போகின்றவற்றை அவள் கவனித்தாக வேண்டும்.​

அவளுக்காக காத்திருக்கும் அக்காவுக்காகவும் குடும்பத்திற்காகவும் அவள் நேரத்திற்கே வீடு சென்று சேர்ந்தாக வேண்டும். யாருக்காகவும் உலகம் சுழல்வதை நிறுத்தப்போவதில்லை. அடுத்து நடக்க வேண்டியதை பார்ப்பதே உசிதம் என்ற நிதர்சனம் நெற்றி பொட்டில் அறைய இருகைகளாலும் கன்னத்தில் வடிந்த நீரை அழுந்த துடைத்துக்கொண்டாள்.​

கை, கால், முகம், கழுவி உடை மாற்றி வெளியில் வந்தாள்.​

அவளின் விழிகள் கட்டிலில் படுத்திருந்த தருணில் படிந்தது.​

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் அவன்.​

அவளை பொறுத்தவரை அவளுக்கு தருணை ஒரு யூடியூபராக மட்டுமே தெரியும். அவனை நேரில் சந்தித்தது கூட கிடையாது. அவன் பாட்டு பிடிக்கும். அவனை ஒரு பாடகனாக பிடிக்கும் அவ்வளவுதான்.​

அதை தாண்டிய எதுவும் அவள் யோசித்தது கிடையாது. ஆனால் இன்று அவனுடன் கட்டிலை பகிர்ந்திருக்கின்றாள். முன் பின் தெரியாத ஒருவனுடன் காதலின்றி திருமண இணைப்பின்றி இணைத்திருக்கின்றாள்.​

காதலனோடு கூட அவள் மீறி விடாமல் கடைபிடித்து வந்த ஒழுக்க நெறிகளை இவனுடன் மீறி இருக்கின்றாள். நினைக்கவே உள்ளம் வெடித்து சிதறிவிடும் போன்று இருந்தது அவளுக்கு. அவனை பார்க்க பார்க்க மீண்டும் மீண்டும் அதே நினைவுகள் தான்.​

ஏன் அவளுக்கு இப்படி நடக்க வேண்டும்? அவள் தான் போதையில் முட்டாள் தனம் செய்துவிட்டாள். இவனாவது அதை தடுத்திருக்கலாமே அல்லது தன்னிலை இழந்திருக்கும் பெண்ணிடம் சாகசம் புரிய கூடிய கேடு கெட்டவனா இவன் என்று என்னென்னவோ யோசித்தாள்.​

ஆனால், அப்படி யோசிக்கும் போதே முதல் நாள் அவனை முத்தமிட்ட நேரம் அவன் மீதும் மது வாடை வீசியது நினைவுக்கு வந்து போனது.​

தன்னை போல அவனும் போதையில் தவறிழைத்திருப்பானோ என்றும் யோசித்தாள். அதற்கு தான் வாய்ப்பு அதிகமாக இருக்கவேண்டும் என்று தோன்றியது. அவன் ஒன்றும் அவள் கையை பிடித்து இழுக்கவில்லையே. அவள் தானே அவனுக்கு முதலில் முத்தமிட்டது. அவளாக அவன் மீது சென்று விழுந்திருக்க முழு பொறுப்பையும் அவன் தலையில் ஏற்றுவது எப்படி.​

நடந்த அசம்பாவிதத்திற்கு இருவருமே பொறுப்பாக இருந்தால் கூட அதிகப்படி பங்கு அவளினுடையது ஆயிற்றே. அவன் எழுந்துகொண்டால் அவனை எப்படி எதிர்கொள்வது என்றும் அவளுக்கு தெரியவில்லை.​

தனக்கு மிகவும் பிடித்த தருண் தாமஸை இப்படியான சந்தர்ப்பத்திலா சந்திக்க வேண்டும். அவளை அவன் என்னவென்று நினைத்திருப்பான். இனி அவன் பார்வைக்கு அவள் ஒரு மோசமான பெண்ணாக அல்லவா தெரியக்கூடும்.​

இவ்வாரெல்லாம் மனதில் கண்டதையும் போட்டு குழப்பிக்கொண்டே மெல்ல அடி எடுத்து வைத்து அவனை நோக்கி நடந்தாள்.​

அவன் முன்னே சென்று நின்றவளுக்கு அவனிடம் சொல்லிக்கொண்டு சொல்வதா இல்லை சொல்லாமல் கிளம்புவதா என்றும் தெரியவில்லை.​

அவனை எழுப்பி அவனை எதிர்கொள்ளும் அளவிற்கும் அவளுக்கு தைரியமும் இருக்கவில்லை.​

கடிகாரத்தை பார்த்தாள் நேரமாகிக்கொண்டே இருந்தது. காலையிலேயே வந்துவிடுவதாக அக்காவிடமும் சொல்லியிருந்தாள். தாமதித்தால் வீட்டில் அவளை தேட ஆரம்பித்துவிடுவார்கள். இந்த விடயம் வெளிவரவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் வைஷாலியின் திருமணத்தில் குழப்பம் வரவும் வாய்ப்பிருக்கிறது. இதை இப்போதைக்கு வீட்டிற்கு தெரியாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்தோடு தெளிவாக சிந்திக்கும் மனநிலையும் இல்லாமல் இருக்க அக்காவின் திருமணம் முடிய அவனை எப்படியாவது சந்தித்து இதற்கு ஒரு முடிவை எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தவள் அவனிடம் சொல்லாமலே கிளம்புவது என்ற முடிவிற்கு வந்திருந்தாள்.​

சத்தமின்றி அறையை விட்டு வெளியேறியவள் ஒரு வாடகை காரையும் பிடித்துக்கொண்டு வீட்டையும் சென்று அடைந்திருந்தாள்.​

****​

இங்கே அறையில் விழிப்பு தட்டி எழுந்திருந்தான் தருண். மெதுவாக எழுந்து கடிகாரத்தை பார்க்க அது மதியத்தை தொட்டிருந்தது.​

தலைவலியும் இருக்க மெல்ல எழுந்து கட்டிலில் சாய்ந்தமர்ந்தான்.​

முதல் நாள் நிகழ்ந்தவை அனைத்தும் நினைவில் இருந்தது. தன்னை சுற்றி இயங்கிய உலகம் நின்றுவிட்ட உணர்வு தான் அவனுக்கு. இருகைகளாலும் தலையை தாங்கி பிடித்துக்கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டான்.​

இதுவரை அவன் உருவாக்கி வைத்திருந்த நிறைவான வாழ்க்கையில் யாரோ கல் எரிந்தது போல அவனது பூரண வாழ்வு சுக்கு நூறாக உடைந்து விட்டிருந்தது. அனைத்தும் ஒரே இரவில் நிகழ்ந்து முடிந்திருந்தது.​

சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தவன் சிதறிக்கிடந்த தன் சக்திகளை எல்லாம் சேர்த்தெடுத்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தான். இரவு நேர யுத்தத்தில் எங்கோ விழுந்திருந்த அவனது அலைபேசியை தேடி எடுத்தான்.​

அதில் ஒரு எண்ணை அழுத்தி காதில் வைத்தான். மறுபுறம் அழைப்பு ஏற்கப்பட்டதும் "ரவி...எங்கருக்க?" என்று கேட்டான்.​

"ஸ்டேஷன்ல தான் டா" என்று சொல்ல​

"உடனே என் வீட்டுக்கு கிளம்பி வா. முக்கியமான விஷயம் பேசணும்" என்று சொல்லி விட்டு வைத்தவன் உடை மாற்றி வீட்டிற்கு சென்றும் சேர்ந்திருந்தான்.​

அவன் வீடே திருமண அலங்காரத்துடன் கோலாகலமாக ஜொலித்துக்கொண்டிருந்தது. அதை பார்த்ததும் அவன் மனதில் ஊடுருவிய வேதனையை அவனே அறிவான்.​

ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைய போனவனை "பார்ட்டி எல்லாம் எப்படி போச்சு ப்பா" என்று வாசலில் நின்ற அவன் தாய் கேட்டதற்கு கூட பதில் சொல்லாமல் தனது அறைக்குள் நுழைந்துகொண்டான்.​

அதே சமயம் ரவியும் அவன் வீட்டிற்குள் நுழைந்திருக்க அவனை பார்த்த தாரா "வாங்கண்ணா" என்று அவனை வரவேற்க "தருண் எங்கம்மா?" என்று கேட்டான்.​

"அண்ணா இப்போ தான் குளிச்சுட்டு தோட்டத்து பக்கம் போனாங்க" என்றாள்.​

"சரிம்மா நான் பார்த்துக்குறேன்" என்றவன் தோட்டத்து பக்கம் செல்ல​

எங்கோ வெறித்தபடி அவனுக்கு முதுகு காட்டி நின்றிருந்தான் தருண்.​

அவன் பின்னே சென்று நின்ற ரவி "என்ன டா வர சொன்ன?" என்று கேட்டான்.​

தருண் பதில் பேசும் முன்னவே தொடர்ந்தவன் "ஆஹ் சொல்ல மறந்துட்டேன். இன்னிக்கு உன் ரிசெப்ஷனுக்கு வர முடியாது டா. மினிஸ்டர் ப்ரோக்ரம் ஒண்ணுக்கு பந்தோபஸ்துக்கு போகுற வேலை இருக்கு. நாளைக்கு உன் கல்யாணத்துக்கு வந்திடுறேன்" என்றான்.​

"ரிசெப்ஷனே, நடக்குமான்னு தெர்ல. இதுல நீ கல்யாணத்தை பத்தி பேசுற" என்றபடி அவனை திரும்பி பார்த்த தருணின் முகத்தில் உணர்ச்சிகள் துடைக்கப்பட்டிருந்தது.​

எப்பொழுதுமே இதழ்களில் மெல்லிய புன்னகையுடன் இருப்பவன் தான் தருண். ஆனால், இன்று அவனின் இதழ்களில் புன்னகைகளின் முகவரியே இல்லாமல் இருந்தது.​

முதல் நாள் இரவு அவனை அந்த நட்சத்திர விடுதியில் விட்டு சென்ற போதும் அவன் இதழ்களில் பிரியாமல் இருந்த சிரிப்பு இன்று பிரியாவிடை கொடுத்திருந்தது.​

அவனை ஆராய்ச்சியாக பார்த்த ரவி "என்னடா ஆச்சு?" என்று கேட்டான்.​

ரவி அவனை விட்டு சென்றதிலிருந்து இன்று அவன் விழித்து எழுந்தது வரை நடந்த அனைத்தையும் சொல்லி முடித்த தருண் "நீ எனக்கு ஒரு உதவி பண்ணனும் டா" என்றான்.​

அவன் சொன்னதை கேட்டு அதிர்ந்த ரவி "என்ன டா? இப்படி ஆச்சு. சரி சொல்லு என்ன பண்ணனும்?" என்று கேட்டான்.​

"எனக்கு கண்டிப்பா தெரியும் இது வெறும் தண்ணி அடிச்சதால வந்த போதை இல்லை. இதுக்கு பின்னாடி வேறு என்னவோ இருக்கு. இது யாரோட வேலைன்னு எனக்கு தெரியணும்" என்றான்.​

"டன். அதெல்லாம் மேட்டரே இல்லை கண்டு பிடிச்சிடலாம்" என்று ரவி சொல்லிக்கொண்டிருக்கும் போதே "இன்னொன்னும் தெரியணும்" என்றான்.​

"சொல்லுடா" என்றான் ரவி.​

"நேத்து நைட் என் கூட இருந்த அந்த பொண்ணு யாருன்னு எனக்கு தெரியணும்" என்றான்.​

"தருண், உனக்கு கொஞ்சம் கூட அந்த பொண்ணு யாருன்னு ஐடியா இல்லையா?" என்று ரவி கேட்க​

"இல்லை" என்று தலையை இட வலமாக ஆட்டியவனின் மனமோ அவள் மீதிருந்து வந்த வாசனை மீண்டும் மீண்டும் வைஷாலியை நினைவு படுத்துவதை நினைத்துக்கொண்டது.​

அவன் மனம் மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தை அவனுக்குள் சொல்லிக்கொண்டே இருக்க அது அப்படி மட்டும் இருந்து விடவே கூடாது என்று நினைத்துக்கொண்டான் தருண்.​

"சரி டா, நான் என்னனு பார்த்து சொல்லுறேன். அதுக்காக நீ ரிசெப்ஷன் நடக்காது அது இதுன்னு சொல்லிட்டிருக்காத புரியுதா? இது ஒரு எக்சிடெண்ட் அவ்ளோதான்" என்றான் ரவி.​

"பார்க்கலாம். நீ நான் கேட்டதை விசாரிச்சு சொல்லு. முடிஞ்சா ரிசெப்ஷனுக்குள்ள எனக்கு தெரியணும்" என்ற தருணின் குரலில் ஒரு அழுத்தம்.​

தருணின் மனதில் என்ன இருக்கின்றது என்று புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் நண்பன் கேட்டதை செய்வதற்காக ரவியும் வெளிவெறியிருந்தான்.​

இதே சமயம் மதுவும் தளம்பலான மனநிலையில் இருந்தாலும் யாரிடமும் எதையும் காட்டிக்கொள்ளாமல் அக்காவின் திருமண வைபவத்தில் கலந்துக்கொள்ள பெரும்பாடு பட்டுக்கொண்டிருக்க அங்கே தருணோ திருமணத்தை தொடர்வதா நிறுத்துவதா என்று இருதலை கொள்ளி எறும்பாக தவித்துக்கொண்டிருந்தான்.​

கைக்கு எட்டிய வாழ்க்கையை நொடி பொழுதில் உதறி தள்ளவும் அவன் மனம் இடம் கொடுக்கவில்லை அதே சமயம் வைஷாலிக்கு துரோகம் நினைக்கவும் அவனால் முடியவில்லை.​

தன்னவளை அன்றி இன்னொருத்தியை அவன் தொட்டிருக்கின்றான் என்று நினைக்கும் போதே அவன் உடலெல்லாம் கூசியது. அப்படி ஒரு தவறை அவன் எப்படி செய்யலாம் என்று மீண்டும் மீண்டும் அவனது மனசாட்சியே கேள்வி கேட்டு காரி உமிழ்ந்தது.​

இதற்கெல்லாம் காரணமானவர்களின் மீது உண்டான அதே கொலைவெறி ஆத்திரம் கொஞ்சமும் குறையாமல் தன் மீதும் இருந்தது அவனுக்கு. போதையை காரணம் காட்டி அதன் பின்னே ஒளிந்துக்கொள்ள விரும்பவில்லை போலும் அவன்.​

அடுத்து என்னவென்று யோசித்தபடி தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்தவனிடம் வந்து நின்றார் ஆர்த்தி.​

"தருண் நாங்க எல்லாரும் ரெடிப்பா. நீயும் ஓகேனா மண்டபத்துக்கு கிளம்பிடலாம்" என்றார்.​

"இன்னும் டைம் இருக்கு தானேம்மா" என்று சுரத்தையே இல்லாமல் கேட்டவனிடம் "அங்க போய் ஏற்பாடெல்லாம் பார்க்கணும். எல்லாரும் ரெடியாகணும். நீயும் ரெடி ஆகணுமில்ல. இதுக்குள்ள டிராபிக் வேற இருக்கும். இப்போ போனா தான் சரியா இருக்கும்" என்றார் அவர்.​

அதற்குமேல் எதுவும் பேசாமல் "போகலாம்" என்று விட்டான்.​

அவன் மனமோ ரவியின் விசாரணை முடிவுக்காக காத்துக்கொண்டிருந்தது.​


 
Status
Not open for further replies.
Top