ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆழ் கடலும் சோலையாகும்-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 20

டாக்டர் ரூம் நம்பர் 108 இருக்க பேஷண்ட் ப்ரீத்திங்கு கஷ்டப்படுறாங்க சார்...

சிஸ்டர் ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்

இன்க்ரீஸ் பண்ணுங்க...

(Theophylline) தியபய்லின் மெடிசன் உடனே குடுங்க...

எஸ் டாக்டர்...

இந்த பேஷண்டோட அட்டெண்டர் வர சொல்லுங்க...

எல்லா டெஸ்ட்டும் எடுத்துட்டு ஆபரேஷன் ரெடி பண்ணுங்க... டாக்டர் எங்க அம்மாக்கு எப்படி இருக்கு.

இப்ப ஓகே...

பட் லேட் பண்ண முடியாது உடனே ஆபரேஷன் பண்ணனும்...

ஓகே டாக்டர்...

அவங்கள பார்க்கலாமா டாக்டர்...

ஒரு 30 மினிட்ஸ் கழிச்சு போய் பாருங்க...

இன்னைக்கு ஈவினிங் ஆப்ரேஷன் வச்சுக்கலாம்...

ஓகே டாக்டர்...

டாக்டர் அந்த பேஷன்ட் சூர்யா பாப்பாவா பாக்கணும் சொன்னாங்க நேத்துல இருந்து ...

நானே கூட்டிட்டு போறேன்...

சூர்யாவை என் ரூமுக்கு வர சொல்லுங்க...

சூர்யா...

என்ன சிஸ்டர்...

உங்கள டாக்டர் பாக்கணும் சொன்னாங்க...

வர சொல்லுங்க பார்க்க...

நீங்க டாக்டர் ரூமுக்கு போவீங்களாம்...

எதுக்கு...


வெளிய போனா இன்பெக்சன் ஆயிடும் அது இதுனு சொன்னாரு...

அவர பாக்க மட்டும் வழியா போலாமாக்கும்...

எல்லாத்துக்கும் கேள்வி கேட்டா நான் என்ன பண்ணுவேன்...

டாக்டர பாக்க தானே போறீங்க அவர்டயே கேட்டுக்கோங்க...

ஓகே சிஸ்டர்...

எக்ஸ்க்யூஸ் மீ...

உள்ளே வரலாமா...

வாங்க...

வரச் சொன்னதா சொன்னாங்க டாக்டர்...

எஸ், சிட்.

ரூம் நம்பர் ஒன் 108 பேஷன்ட் கூட அன்னைக்கு பேசினீங்கல்ல...

அவங்க ஹெல்த் இப்ப கொஞ்சம் கிரிட்டிக்கல் ஆ இருக்கு...

உன்கிட்ட பேசணும்னு சொன்னாங்க...

அதான்...

வா போய் பாத்துட்டு வரலாம்...

சாரி...

க்ரிட்டிக்கல்லா இருக்குன்னு சொல்றீங்க எனக்கு பயமா இருக்கு...

நீங்க பாத்துட்டு வாங்க...

அவங்க நல்லாகவும் நான் வந்து பாத்துக்குறேன்...

அவங்க நல்லா ஆகறதுக்கு உன்ன பாக்க கூப்பிடறேன் வா...

மனதில் ஒரு பயத்துடனே சூர்யா பாபுவை பின் தொடர்ந்தால்...

போய் பேசு நான் இங்க தான் இருக்கேன்...

என்னம்மா எப்படி இருக்கீங்க மா...

நல்லா இருக்கேன்டா பாப்பா...

உன்கிட்ட அன்னைக்கு பேசுனதுல இருந்து ஆப்ரேஷன் பண்றதுக்கு தைரியம் வந்துருச்சு...

ஆபரேஷன் முன்னாடி உன்கிட்ட பேசணும்னு ஆசைப்பட்டேன் டா...

ஆப்ரேஷன் பண்ணிட்டு வந்து என்கிட்ட பேசுங்கம்மா நீங்க நல்லாகவும்...

இப்ப எனர்ஜிக்காக உன்கிட்ட பேச ஆசைப்படுகிறேன்...

தைரியமா இருங்கம்மா...

சரிடா உன்ன பார்த்துட்டேன் நான் நல்லபடியா ஆப்ரேஷன் பண்ணிட்டு வந்து உன் கிட்ட பேசுறேன்...
ம்ம்...

சிஸ்டர் டெஸ்ட் எடுக்க கூட்டிட்டு போங்க... டெஸ்ட் எடுத்துட்டு அப்படி ஆப்ரேஷன் ரூம் கூட்டிட்டு போய்டுங்க... வீல்ச்சேரில் அழைத்துச் சென்றனர்

இவர்கள் பேச்சை எதுவும் சூர்யா காதில் விழவே இல்லை...

தன் தாய் உடம்பு சரியில்லாமல் இறந்து போன நினைவுக்கு சென்றாள்...

எந்த நினைவு அவளை பாதித்ததோ மீண்டும் அதே நினைவின் அருகே சென்றாள்...

உடலில் நடுக்கம் வேர்வை பயம்... சுற்றி இருக்கும் அனைத்து இடமும் இருளாக மாறியது... சூர்யா சூர்யா என்ற பாபு அழைத்தது கூட அவள் காதல் விழவில்லை...


மயங்கி விழப் போனவளே விழுவதற்கு முன் கையில் ஏந்தினான்...


சூர்யா சூர்யா எந்திரி சூர்யா...

அவன் மனதில் இதுவரை இல்லாத பதட்டம்...

சூர்யாவை பார்த்த நாளிலிருந்து மனதில் இருந்து அழுத்தம் குறைந்தது...

அவளது பயந்த விழிகளை பார்க்கும் போது அவனை அறியாமலே அவனுள் சிறு தாக்கம்...


சூர்யா இங்கு இருப்பதனால் வீட்டிற்கு செல்லும் நேரம் கூட குறைந்தது...

இவள் தான் திருமணம் செய்யப் போகிறோம் என்ற எண்ணத்தால் வந்த நேசம் எப்போது பெரிதானது என்று அவனுக்கே தெரியவில்லை...

அடிக்கடி வந்து பார்த்து செல்வான் அவள் தூங்கும் நேரத்தில்...

எப்படி இருந்த என்னை இப்படி மாத்திட்டான்னு புலம்புவான்...

அந்தக் கோபத்தை மறுநாள் அவகிட்டயே காட்டுவான்...
கடத்த ஒரு சில தினங்களாகத்தான் டாக்டர் நீங்க சிரிச்சு இப்பதான் ஃபர்ஸ்ட் பார்க்கிறோம் என்று சுற்றி இருப்பவர் சொல்லும் நிலைக்கு வந்தான்...

அவளை மயங்கி நிலையில் பார்க்கும்போது அவன் இதயம் வேகமாக துடித்தது...

அவளுக்கு எதுவும் ஆகி விடுமோ என்ற பயம்...

மருத்துவனாக இருந்துமே அவனது பயம் அவள் மேல் கொண்ட நேசத்தால்...

இப்போதுதான் அவனே அவன் மாற்றத்தை உணர்ந்தான்...

அவனது பதட்டத்தை சுற்றி இருப்பவர் முதன் முறையாக பார்த்தனர்...

அவனும் அவளை கையில் ஏந்தியப்படியே மருத்துவ அறைக்கு அழைத்து சென்றான்...

அவளுக்கான சிகிச்சை வேகமாக ஆரம்பிக்கப்பட்டது...


அவனது கை நடுங்குவதை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை...

தன்னுடைய அசிஸ்டன்ட்டை உதவிக்கு அழைத்தான்...



அவன் மேற்பார்வையில் அனைத்து சிகிச்சையும் நடைபெற்றது...

மகளின் உடல் நிலையை அறிந்த இந்தரும் வேகமாக சிகிச்சை நடக்கும் இடத்திற்கு வந்தார்...

பாபுவிடம் வந்து என்னாச்சு பாபு என்று விசாரித்தார்...

பாபு நடந்ததை கூறியதும்...

எப்ப சரியாகும் பாபு...

சூர்யாவிற்கும் உடல் பாதிப்பை விட மன பாதிப்பு தான் அதிகமாக இருக்கு...

இதுல இருந்து மீள எப்போதும் அவள் மீது அக்கறையாக கூடவே இருந்து கவனித்துக் கொள்ளும் உறவுகள் தேவை... அன்பு பாசம் அக்கறை நட்பு காதல் இவை அனைத்தும் மட்டும்தான் சூர்யாவை பழைய நிலைமைக்கு கொண்டு வரும்...

என்ன சொல்ற பாபு...

வீட்ல அம்மா கிட்ட பேசுங்க அங்கிள்...

அடுத்த வாரத்திலேயே நம்ம கல்யாணத்தை சிம்பிளா கோவில்ல வச்சுக்கலாம்...

எனக்கு சூர்யாவை கல்யாணம் பண்ணிக்கிறதுல மனப்பூர்வமா சம்மதம்...

நீங்களும் அவளும் தனியா இருக்கதே ரொம்ப மனசுல உள்ள பாதிப்பு ஏற்படும்...

அவளுக்கு எப்போதும் அவளோ சுத்தி சொந்தங்கள் உறவுகள் மகிழ்ச்சி அப்படின்னு இருந்தா மட்டும் தான் இதிலிருந்து மீள முடியும் அங்கிள்...

ஆன்ட்டி இறக்குவதற்கு முன்னாடி அவ எப்படி இருந்தாலோ அது மாதிரி இருக்கணும்...

கல்யாணம் முடிஞ்சிடுச்சா வீட்ல அம்மா அப்பா சொந்தம் பந்தம் எல்லாரும் கூட இருக்குறப்ப அவளோட தனிமை மற்றும் இந்த மோசமான நினைவுகள் எல்லாமே போயிடும்...

நான் கூடவே இருந்து பார்த்துக்கிறேன் அங்கிள்...

சூர்யாக்கு உடம்பு முடியம பார்க்கும்போது தான் என் மனசுல சூர்யா இருக்கான்னு தெரிஞ்சது...

இப்ப ட்ரீட்மென்ட் முடிஞ்சிடுச்சு...
சூர்யா நல்லா தான் இருக்காங்க அவங்க உடம்புல எந்த பாதிப்பும் இல்லை மனசளவு மட்டும் தான் பாதிப்பு...

ஒரு வாரம் சைக்காட்ரிஸ்ட்ட ட்ரீட்மெண்ட் எடுக்கட்டும்...

நான் சூர்யாவா பாத்துக்குறேன் அங்கிள்...

நீங்களும் அப்பாவும் கல்யாண வேலையை பாருங்க...

என் மகளுக்கு உடம்பு முடியலன்னு வருத்தப்படுறதா கல்யாணம் நடக்கப் போதுன்னு சந்தோசப்படுறதா தான் தெரியல மாப்ள...

எல்லாமே நல்லபடியா நடக்கும் அங்கிள்...

சாரி பாபு நான் வீட்டுக்கு போயிட்டு வரேன்...
அம்மாவை சூர்யாக்கு சாப்பாடு கொண்டு வர சொல்லுங்க அங்கிள்...
சரிப்பா...








செல்வம் இறுதியாக நரேனிடம் சொல்லாமல் தங்கையுடன் சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்று நினைத்து இருந்தான்...
எப்போதும் உடல் நிலை சரி இல்லை என்று படுத்து கொள்வதும் மாலை தனியாக வெளியே செல்வதை வழக்கமாக கொண்டிருந்தான்...
சுற்றி இருப்பவர்கள் வழியாக நரேன் காதிறகும் அவனது மாற்றம் சென்றது...
நரேனும் அவனுக்கு தெரியாமல் அவனை கண்காணித்து கொண்டிருந்தான்...
அவனும் வெண்ணிலாவிடம் பரிட்சை முடியும் வர பாக்க வர முடியாது என்றும் நாம சொந்த ஊர்க்கு போகலாம்னு இருக்கேன் அங்க தங்க இடம் வேலை எல்லாத்துக்கும் ரெடி பண்ணனும் அதுனால நீ படிப்புல கவனமா இரு...
நான் ஊருக்கு போறேன்னு சொல்லிவிட்டான்...
அவன் தங்கையை பார்க்க செல்லாததால் எந்த சந்தேகமும் வரவில்லை...
அவன் கூட எப்போவும் நெருக்கமாக இருக்கும் ராஜ்ஜிடம் செல்வதின் நடவடிக்கை பத்தி விசாரிக்கவும் பயந்து விட்டான்...
ஆரம்பத்துல ஏதும் சொல்லவில்லை ஆனால் அழுத்தமாக கேக்கவும் பயத்தில் உளறி விட்டான்...
அவன் இங்கிருந்து போக ஆசை படுவதாக...
நரேனும் எத்தனை நாள் என்ன பண்றான்னு பாக்கலாம்னு கண்டுக்காதது போல் இருந்து கொண்டான்...
செல்வதின் நிலை என்னவாகும்...
(உங்கள் கருத்திற்காக காத்திருக்கிறேன் )



 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 21



எப்போது கண் திறப்பாள் என்று சூர்யாவையே பார்த்துக் கொண்டிருந்தான் பாபு...



அருகில் இருந்த நர்ஸ் டாக்டர் நீங்க போங்க நான் அவுங்க முழிக்கவும் நான் உங்க கிட்ட சொல்றேன்...



இல்ல நானே கூட இருக்கேன்...



இது எனக்கு ஃப்ரீ டைம் தான்...



நீங்க அடுத்த ரூம் பேஷண்ட பாத்துக்கோங்க...



எஸ் டாக்டர்...



மெதுவாக கண்விழித்தால் சூர்யா...



அந்த அம்மாக்கு இப்ப எப்படி இருக்கு...



அவங்க ரொம்ப நல்லா இருக்காங்க...



இன்னும் நாலு நாள்ல டிஸ்சார்ஜ் ஆகி போயிடுவாங்க...



ரெண்டு நாள்ல ரூமுக்கு மாத்திடுவோம் போய் பாரு...



ம்ம்...



உனக்கு எப்படி இருக்கு...



நான் நல்லா இருக்கேன்...



நல்லா ரெஸ்ட் எடு...



அடுத்த வாரம் நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம்...



சூர்யாவின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது...



இரண்டு நிமிடங்கள் அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை...



சூர்யா... சூர்யா... அவள் முகத்தின் முன் கைகளை ஆட்டி நிகழ்வுலகத்துக்கு கொண்டு வந்தான்...
எனக்கு சரியா காது கேட்கலைன்னு நினைக்கிறேன்...
அதெல்லாம் நல்லா தான் கேக்குது...
அப்ப கொஞ்ச நேரம் முன்னாடி கல்யாணம் சொன்னது உண்மையா...
கல்யாணம்னு யாராவது பொய் சொல்வாங்களா...
எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்ல...
ஏன்...
உங்கள பாத்தாலே பயம்தான் வருது...
காலம் ஃபுல்லா பயந்துட்டே உங்க கூட இருக்க முடியுமா...
எனக்கு பஸ்ட் கல்யாணம் பண்ணிக்கவே இஷ்டம் கிடையாது...
எப்ப என்ன ஆகும் என்ன செய்வோம் என்று தெரிய மாட்டேங்குது...
அடிக்கடி சூசைட் பண்ணிக்கலாமான்னு கூட மனசுல தோணுது...
ஐ நோ...
சைக்காட்ரிட்ஸ் கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் பண்ணி இருக்கேன்...
அதுக்காக தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன்...
ஃபர்ஸ்ட் இவ்வளவு ஸ்ட்ரெஸ் ஆகாத...
கல்யாணம் தான் பண்ணனும்னாலும் எதுக்கு உங்களை பண்ணனும்...
அப்படியே எனக்கு கல்யாணம் ஆகணும்னுனாலும் எனக்கும் சில ஆசைகள் இருக்கு அதுல ஒன்னு கூட உங்க கூட ஒத்து போகல...
என்ன பத்தி என்ன தெரியும் ஒத்துப்போகலைன்னு சொல்ற...
பார்த்தாலே தெரியுது எப்பவும் யாரும் அடிக்கிற மாதிரியே மூஞ்ச வச்சிக்கிட்டு இருக்கீங்க இவ்வளவு கோவமா...
எனக்கே நிறைய தடவை உன்கிட்ட பேசும் போது அடிவாங்கிடுவேன்னு பயமா இருக்கு...
அவள் பேசுவதைக் கேட்டு சிரித்தான்...
உங்களுக்கு சிரிக்க தெரியுமா...
நான் என்ன மிஷினா சிரிக்காம இருக்க...
சிரிக்கிறீங்கனு எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது...
அப்ப என்ன பண்ண கல்யாணம் பண்ணிக்கலாம்...
என் மனசுக்கு பிடிக்கணும்...
உன் மனசுக்கு எப்படி இருந்தால் பிடிக்கம்னு சொல்லு...
உனக்கு பிடிச்ச மாதிரி என்னை நான் மாத்திப்பேன்...
அவனுடைய மென்மையான பேச்சும் சிரிப்புமே அவளுக்கு வித்தியாசமாக தெரிந்தது...
அப்படி எல்லாம் ஒருத்தவங்களால சட்டுனு மாற முடியாது...
என்னம்மா நான் பிறந்ததிலிருந்து இப்படி இருக்கிற மாதிரி சொல்ற...
என்ன பத்தி நானே சொல்லிறேன்...
காலேஜ் படிக்கிறப்ப ஒன் சைடு லவ்...
குணம் எதுவும் தெரியாம அப்பியரன்ச பாத்து லவ் பண்ணிட்டேன்...
அதுக்கு அப்புறம் தான் குணத்தை தெரிஞ்சுக்கிட்டு விலகிட்டேன்...
இருந்தாலும் ஈசியா ஏமாந்துட்டேன்னு ஒரு விரத்தி...
எப்பவும் சிரிச்சு சந்தோசமா இருக்கனால தான் ஏமாறேனு நானே என்னை இறுக்கமானவனா வெளியே காட்டிக்கிட்டேன்...
எந்த பொண்ண பார்த்தாலும் பயமா இருந்துச்சு...
கல்யாணமே வேணாம்னு கூட யோசிச்சேன் ஆன எனக்கு கீழ தம்பிங்க இருக்காங்க இப்படியே ரெம்ப நாள் இருக்க முடியாது...
அதுக்கு நான் தான் கிடைச்சனா...
சின்ன பிள்ளை மாதிரி பேசாத...
உங்க அம்மா சின்ன வயதிலேயே ஆசைப்பட்டாங்கன்னு உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க தான் உங்க அப்பா கூட்டிட்டு வந்து இருக்காரு...
அவள் விழிகளில் அதிர்ச்சி...
நானும் கொஞ்ச நாள் கழிச்சு தான் கல்யாணம் பண்ணாலும் யோசிச்சேன்...
ஆனா நீ இப்ப இருக்க நிலமைக்கு உன்னை சுத்தி நிறைய ஆட்கள் இருந்தால் அவங்களோட அன்பு உனக்கு கிடைக்கிறப்ப நீ பூரணமா குணமாகிடுவ...
பரிதாபப்பட்டு ஒன்னு யாரும் என்னை கல்யாணம் பண்ணிக்க தேவையில்லை...
நான் பரிதாப படுறேனு எப்போ சொன்னேன்...
எனக்கு உன்ன பிடிச்சிருக்கு...
உங்களுக்கு மட்டும் புடிச்சா போதாது...
உனக்கும் பிடிக்கும்...
வாய்ப்பில்லை...
இப்பவே சொல்லாத...
அடுத்த வாரம் தான் கல்யாணம் அதுவரை உனக்கு டைம் இருக்கு...
நீ என்ன பிடிச்சிருக்கு தாலி கட்டுனு சொன்னா மட்டும் தான் நான் உன் கழுத்துல தாலி கட்டுவேன்...
எனக்கு உங்கள பிடிக்கல...
இப்ப சொல்லாத...
அடுத்த வாரம் சொல்லு...
ஒரு வாரத்துல என்ன மேஜிக்கா நடக்க போகுது...
ஒரு வாரத்தில் வருதோ ஒரு நாள்ல வருதோ எப்ப என்ன பிடிச்சிருக்கோ அப்ப சொல்லு...
சூர்யாவிற்கு பாபுவை பிடிக்குமா? உங்கள் கருத்து...

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 22



கல்லூரிக்கே கிரிஷ் சென்று விட்டான் 3நாட்கள் போனில் கூட பதில் வராததால்...



அவளது நண்பர்களை சந்தித்து நட்சத்ரா இருக்கும் இடத்தை கேட்டு நேரில் பார்க்க வந்து விட்டான்...



ஸ்டார் என்னாட்சி ஏதும் பிரச்சனையா கால் பண்ண எடுக்கல...



அவனை பார்த்ததும் இவ்வளவு நேரம் அடக்கி வைத்த அழுகை வந்து விட்டது...



என்னாச்சி ஸ்டார் ஏதும் பிரச்சனையா... எதுக்கு அழுற...



அழாத முதல ரிலாக்ஸ் ஆகு தண்ணி குடி...



ஸ்டார் அழாத...



நீ எதுக்கு இங்க வந்த கிருஷ்...



ஏன் நான் உன்ன பாக்க வர கூடாதா...



2நாள நீ என் கிட்ட பேசல...



நானே என்ன எதுன்னு தெரியாம 2நாளா தூகுங்கல...



ஏதும் பிரச்சனையா ஸ்டார்...



உடம்பு ஏதும் சரியில்லையா...



அதெல்லாம் ஒன்னும் இல்ல கிருஷ்...



அப்புறம் ஏன் மொபைல் சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிருக்க...



அப்பா என்னை... என்னை...



அப்பா என்ன சொன்னாரு ஸ்டார்...



மாஸ்டர்ஸ் படிக்க டெல்லிக்கு போக சொல்றாங்க... இதுக்கு போய் அழுகுற...



படிக்கத்தான அனுப்புறாங்க போக வேண்டியது தானே...



அச்சோ முழுசா கேளு கிருஷ்...



எனக்கு டெல்லியில் மாப்பிள்ளை பார்த்து இருக்காங்களாம்...



நான் ஒரு மாசத்துல என்ன பொண்ணு பாக்க வராங்களாம்...



நான் இப்பவே அந்த காலேஜுக்கு அப்ளை பண்றதுக்கு அப்ளிகேஷன்னும் அப்பா கொடுத்திருக்காங்க...



கல்யாணத்தை முடிச்சிட்டு நான் மாஸ்டர் டிகிரி அங்க போய் பண்ணணுமாம்...



அவர் ஃப்ரெண்டோட பையனாம்...



எனக்கு பயமா இருக்கு கிருஷ்...



நீ வேற என்ன உங்க அண்ணன்களுக்கு கல்யாணம் முடியல அப்புறம் எப்படி வீட்ல பேசுவ...

அப்படியே நீ வீட்ல வந்து பேசினாலும் எப்படி ஒத்துக்குவாங்க...

எங்க அப்பா அவர மாதிரி ஒரு மிலிட்டரி ஆபிசர் தான் மாப்பிள்ளை வரணும்னு எதிர்பார்க்கிறார்...

ரெண்டு நாளா என்ன பண்ணனு தெரியாம குழம்பிட்டு இருக்கேன் கிருஷ் அதான் போன் ஆப் பண்ணிட்டேன்...

உன்னையும் கஷ்டப்படுத்த வேண்டாம்னுதான்...

நீ ரெண்டு நாளா பேசாம இருந்த தான் எனக்கு பயங்கர கஷ்டமா இருந்துச்சு...


ஒரு மாசம் டைம் இருக்குல்ல சரி பண்ணிடலாம்...

நீ எல்லாதையும் விளையாட்டாவே எடுக்காத கிருஷ்...

நான் எவ்வளவு பயத்துல இருக்கேன் நீ எவ்வளவு கூலா சொல்ற...

பயந்தா எதுவுமே யோசிக்க முடியாது...


பொறுமையா யோசிப்போம் கண்டிப்பா வழி கிடைக்கும்...

என் அண்ணனுக்கு நெக்ஸ்ட் வீக் மேரேஜ் ஸ்டார்...

அதான் உன்கிட்ட ஷேர் பண்றதுக்கு போன் பண்ணலாம்னு நினைச்ச ஆப் பண்ணி வச்சிட்ட...

கல்யாணமே வேண்டாம் சொன்னவன் இப்ப அடுத்த வாரமே எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க அவனே சொல்றான்...

எதுனால எப்பனாலும் நடக்கும் ஸ்டார் அதை நினைச்சி கவலைப்படாதே...

நமக்கு ஒரு மாசம் டைம் இருக்கு...


கண்டிப்பா அது சரி பண்றதுக்கு வழி கிடைக்கும்...

நீ சொல்றது நல்லா தான் இருக்கு கிருஷ் பார்க்கலாம்...

ஒரு வாரத்துல உங்க அண்ணா கல்யாணங்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு கிருஷ்...

எனக்கே நம்ப முடியல ஸ்டார்...


ஃபர்ஸ்ட் எங்க அண்ணன் கல்யாணம் தான் முடிக்கிறோம்...

நவீனும் வந்துட்டான் அவனும் நெக்ஸ்ட் வீக் டூட்டில ஜாயின் பண்றான் அவன்டயும் ஹெல்ப் கேப்போம்...

கல்யாணம் வேணாம்னு சொன்ன உடனே கல்யாணம் பண்ண போறான்...

நவீன் சொல்லவே வேண்டாம் எப்ப எந்த பொண்ணு கிடைக்கும் காலேஜ் காலேஜா சுத்துவான்...

என்ன லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணுவேன்னு வெயிட் பண்றான்...


அவனுக்கு பிடித்த மாதிரி பொண்ணு இன்னும் கிடைக்க மாட்டேங்குதாம்...

ஊர்ல இருந்து வந்த அன்னைக்கே என்னை கூட்டிட்டு பைக்ல காலேஜ் காலேஜ்ஆ சுத்துறான்...

என்னன்னு கேட்டா டூட்டில சேர்ந்துட்டா இந்த மாதிரி சுத்த முடியாதாம்...


ஏதாவது ஒரு காலேஜ்ல உனக்கு அண்ணி கிடைக்குமனு பார்க்கிறேன் கிடைக்க மாட்டேங்குது அப்படின்னு என்கிட்டே சொல்றான்...

பாபு கல்யாண நெஸ்ட் வீக் கோயில் தான் நடக்குது...

நீ கல்யாணத்துக்கு வந்துட்டு நவீன்ட்ட என்ன ஏது பண்ணலாம்னு பேசி நாம முடிவு பண்ணலாம்...

கிருஷ் என்ன விட்டுட மாட்டேல...

என்ன ஸ்டார் என்கிட்ட இப்படி கேக்குற...

நீ இல்லைனா நானும் இல்ல ஸ்டார்...

நீ எதுக்கும் பயப்படாத ரிலாக்ஸ இரு நம்ம பாத்துக்கலாம்...

ஓகே கிருஷ்...

உன்கிட்ட பேசுறதுக்கு முன்னாடி இருந்த பயம் இப்ப குறைஞ்சிருக்கு...

இது ரெண்டு நாள் முன்னாடியே என்கிட்ட சொல்லி இருக்கலாம்...

எதனாலும் என்கிட்ட சொல்லு ஸ்டார் இப்படி போன் ஆஃப் பண்ணி வைக்காத...

சரி கிருஷ் சாரி இனி இந்த மாதிரி செய்ய மாட்டேன்...



ஓகே கிளாசுக்கு போ எனக்கு கல்யாண வேலை நிறைய இருக்கு...

ம்ம்... எது ஹெல்ப் வேணும்னா என்கிட்ட கேளு...

கண்டிப்பா ஸ்டார்...

நான் கிளம்புறேன் நீ பாத்துக்கோ...



ஸ்ஸ்ஸ் மருத்துவமனை


சூர்யா நார்மல் ரூம்ல இருந்து தனி சிறப்பு ரூம்க்கு மாற்றி விட்டான் பாபு...

எதுக்கு சிஸ்டர் இவ்ளோ லக்சரி ரூம் எனக்கு...

பாபு டாக்டர் தான் மாத்த சொன்னாங்க மேம்...

எதுக்கு...
அந்த ரூம்னா பேஷண்ட எப்பவாவது தான் விசிட்டர்ஸ் பார்க்க முடியும்...

உங்க கூட எப்பவும் வீட்டுல யார் இருந்தாலும் வந்து பார்க்கிறதுக்கு வசதியா இருக்கட்டும்னு டாக்டர் மாத்த சொன்னாங்க...


டெய்லி நீங்க ஹாஸ்பிடல் சாப்பாடு எல்லாம் சாப்பிட வேண்டாம்...

டாக்டர் வீட்ல இருந்தே உங்களுக்கு சாப்பாடு கொண்டு வந்துருவாங்களாம் டெய்லி...


நீங்க டாக்டர்தான் கல்யாணம் பண்ணிக்க போறீங்கனு என்கிட்ட சொல்லவே இல்ல போங்க மேம்...

நான் எல்லாம் அந்த சிடுமூஞ்ச கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்...
என்ன மேம் இப்படி சொல்றீங்க...
நெஸ்ட் வீக் உங்களுக்கும் டாக்டருக்கும் மேரேஜ் டாக்டர் சொன்னாரு...
அந்த ரீசன் சொல்லி தான் உங்களுக்கு இந்த ஸ்பெஷல் ரூம் டாக்டர் அரேஞ்ச் பண்ணி கொடுத்தாங்க...
எனக்கு இந்த ஸ்பெஷல் ரூம் வேண்டாம் அந்த ரோபோ அந்த டாக்டரும் வேணாம்...
சிடு மூஞ்சி ரோபோ கொஞ்ச நேரத்துல எவ்வளவு பட்டப்பெயர் வைக்கிறீங்க எங்க டாக்டர்க்கு...
நாங்கல்லாம் அவர பார்த்தாலே பயப்படுவோம்...
நீங்க எவ்ளோ தைரியமா பேசுறதிலேயே தெரியுது அவர் உங்களுக்கு ஸ்பெஷல்னு...
ஆனா ஒன்னு மேம்...
நாங்க இப்பதான் டாக்டர் நல்லா சிரிச்சு பேசறது எல்லாம் பாக்குறோம்...
நீங்க வரதுக்கு முன்னாடி டாக்டர் இப்படியெல்லாம் கிடையாது...
சரிங்க மேம் நான் நெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்...
உங்களுக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பாடு கொண்டு வந்துருவாங்க வெயிட் பண்ணுங்க மேம்...
கொஞ்ச நேரத்தில் மொத்த குடும்பமும் சூர்யா முன்...
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 23
சூர்யா எப்படி இருக்கடா...
நல்லா இருக்கேன் அத்தை...
டெய்லி உன்ன பாக்க வந்துருவோமா சாப்பாடு எடுத்துட்டு வந்துறோம்...
நவீன் வந்திருக்கான் அவன நீ பாக்கலல அதான் அவனையும் கூட்டிட்டு வந்தோம்...
எப்படி இருக்க சூர்யா ஞாபகம் இருக்கா என்னலாம்...
அதெல்லாம் நான் யாரையும் மறக்க மாட்டேன்...
என்ன மேஜிக் பண்ண சூர்யா...
அடுத்த வாரமே கல்யாணம் வைக்கணும்னு ஒத்த கால்ல நிக்கிறான்...
உண்மைக்கே அடுத்த வாரம் கல்யாணமா...
நான் சும்மா விளையாட்டுக்கு தான் கல்யாணம்னு சொன்னார்னு நினைச்சேன்...
எதுக்கு இவ்வளவு அவசரமா பண்றீங்க... ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிக்க வேணாமா...
எங்க 2பேருக்கும் சரியா வரும்னு எனக்கு தோணல...
என்னமா கல்யாணம்னு சூர்யாவுக்கு கூட தெரியாதா...
நீ வேற சும்மா இருடா...
அப்படிலாம் சொல்லாதடா சூர்யா...
பாபு உன்ன நல்லா பாத்துப்பான்மா... எப்படி இப்போ மாறி மொறச்சி பாத்துப்பாரா... விளையாடதமா...
வீட்ல அவர தவிர எல்லாரும் நல்லா பாத்துக்குறீங்க...
எனக்கு கல்யாணமே வேணாம்னு தோணுது அத்தை...
அதுவும் இந்த கோபக்கார கோபு தான் மாப்பிளைனா இந்த ஜென்மத்துக்கும் கல்யாணமே வேணாம்...
சூர்யா...
என்ன பேசுற...
இல்லப்பா எனக்கு பயமா இருக்கு...
அம்மா ஆசை உனக்கு நிறைவேத்தணும்னு ஆசை இல்லையா...
உண்மைக்கேடா அம்மா கடைசியா ஆசை பட்டது இதுதான்... இப்படியே இருக்காம நாம சொந்தமா மாறானுங்கனு அடிக்கடி என்ட சொல்லுவாடா...
அதுக்கு தான் இங்க வந்தேன்டா...
உனக்கு சரியாகவும் உன்கிட்ட சொல்லலாம் நினைச்சேன் டா...
வந்தனுக்கே பாபு கிட்ட சொல்லிட்டேன்டா...
நான் இப்போ உன்கிட்ட கேக்குறேன் டா...
இதுக்கு மேல உன்ன வற்புறுத்த விரும்பல டா...
நீ உன் இஷ்டப்படி இரு...
என்னப்பா இப்படி சொல்றீங்க...
என் அம்மா ஆசைக்காக நான் எதுனாலும் செய்வேன்ப்பா...
என் அம்மா தான் என் கூட இல்லை அவங்க ஆசை எப்படியும் நிறைவேறனும் அப்பா...
ஏற்பாடு பண்ணுங்கப்பா எனக்கு சம்மதம்...
அத்தை எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு... நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னது எனக்கு சந்தோசம் டா...
என்ன கண்டிஷன்...
உங்க பையன் கல்யாணத்துக்கு அப்புறமும் சிடுமூஞ்சிய இருந்தார்னா அவர நீங்க எல்லாரும் வீட்டுக்கு வர கூடாது ஹாஸ்பிடல்லயே தங்கிக்கோனு சொல்லிடனும்...
அடிப்பாவி...
நீ குடும்பத்தோட சந்தோசமா இருக்கணும் பாத்தா...
என்னையே குடும்பத்தை விட்டு தள்ளி வைக்க சொல்லிட்டு இருக்க...
பாருங்க அத்தை பாருங்க உங்க முன்னாடியே எப்படி பேசுறார்னு...
பாபு கொஞ்ச நேரம் அமைதியா இரு...
இப்பதான் பிள்ளை சரின்னு சொல்லுச்சு ஏதும் பேசாம அமைதியா இருப்பா...
கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாரும் அவளுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க...
கல்யாணம் ஆச்சுன்னா அவ சொன்ன மாறி என்னை வீட்ட விட்டு அனுப்பிடுவீங்க போலவே...
நீ சூர்யா கிட்ட நல்லபடியா நடந்துக்கலனா அதுவும் நடக்கும்...
அம்மா இது சரி இல்லை...
இப்போ என்ன சொல்ற அவ கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டா அடுத்த வாரம் கல்யாணம் பண்ணலாமா இல்லை அடுத்த வருஷம் தேதி பக்கவா...
அடுத்த வாரமே பாருங்க...
அப்ப மூஞ்சி சிடு சிடுன்னு வைக்காம எப்பயும் சிரிச்ச மாதிரி என் மருமக ஆசைப்பட்ட மாதிரி...
ஈ ஈ ஈ...
இவ்வளவு சிரிச்சா போதுமாம்மா...
இப்போதைக்கு போதும்...
எதனால் அத்தைக்கு போன் பண்ணுடா...
சரிங்க அத்தை...
ஒரு வாரம் தான் கல்யாணத்துக்கு இருக்கு...
நல்லா நீ சாப்பிட்டு சாப்பிட்டு ரெஸ்ட் எடுடா...
வேலை எல்லாத்தையும் நாங்க பாத்துருவோம் நவீனம் கிரிஷ்மே எல்லா வேலையும் பாத்துருவாங்க...
பாபு நீ மருமகள பாத்துக்குறது மட்டும் தான் உன் வேலை...
உன் மருமகள் ஒருத்தவங்கள பாத்துக்க மட்டும் நான் டாக்டரா இல்லை...
எல்லாரும் எப்படி பாப்பேனோ அப்படித்தான் பார்ப்பேன்...
சரி சூர்யா நாம அடுத்த வருஷம் கல்யாணம் வச்சுக்கலாம்...
அம்மா...
உங்க மருமகள நல்லா பாத்துக்கிறேன் போதுமா...
ம்ம்...
நாளைக்கு கல்யாணத்துக்கு தேவையான டிரெஸ் எல்லாம் எடுக்க போறோம்....
சூர்யா நீயும் வாரியா?
வாரேன் அத்தை...
என்ன என்கிட்ட கேக்க முடிவு பண்ணிட்டு இருக்கீங்க...
ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்கட்டும்...
எங்கேயும் அலைய வேண்டாம்... அத்தை ஹாஸ்பிடலயே இருக்க ஒரு மாதிரி இருக்குது அத்தை...
நானும் வரேன்...
நீ வாடா உன்னை நான் கூட்டிட்டு போறேன்...
என் பேச்சை யாரும் கேட்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டீங்க அவ்வளவுதானே...
அவங்க இஷ்டப்படி எல்லாம் நடத்துங்க...
நல்லா போயிட்டு வாம்மா...
நீங்க போக வேணாம்னு சொன்னாலும் போவேன்...
அதான் போக சொல்லிட்டேன்ல இன்னும் என் பஞ்சாயத்து...
அத்தை கோவிலிலேயே சும்மா சிம்பிளா கல்யாணம் வச்சுக்கலாம் அத்தை...
சரி மா...
நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடுடா நாங்க போய் கல்யாணத்துக்கான வேலை எல்லாம் பார்க்கிறோம்...
நைட்டு உன் கூட தங்குரத்துக்கு நான் வந்துடறேன் டா...
சரிங்க அத்தை...
அண்ணா இப்ப நீங்க கூட இருங்க நான் நைட் வந்து உங்களை மாத்தி விடுறேன்...
சரிம்மா எல்லாம் கிளம்புங்க...

ஒரு வாரம் போன வேகமே தெரியல...
மாறி மாறி கல்யாண வேலை மாறி மாறி ஹாஸ்பிடல்...
விடிஞ்சா கல்யாணம்...
சூர்யா மனதில் இன்னும் பயம்...
ஆனால் மனதில் ஒரு நிம்மதி நம்பிக்கை...
இந்த ஒரு வாரம் பாபு அவளிடம் கோபமாக பேசவில்லை அமைதியா அக்கறையா அன்பா கவனிச்சுக்கிட்டான்...
அதுல சூரிய மனசும் கொஞ்சம் மாறிடுச்சு...
இந்த வாழ்க்கை சரியா வரும்னு மனசளவுல நம்ப ஆரம்பிச்சுட்டா...
ஹாஸ்பிடல இருந்து போக வேண்டாம்னு முதல் நாளே டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு வந்தாச்சு...
ஒரே வீட்டில் இருந்தே எல்லாரும் சேர்ந்தே கோவிலுக்கு சென்றனர்...
கிருஷ் மனதில் சந்தோசம்... ஸ்டார் கோவிலுக்கு வருவா வரவும் நவீன்ட பேசி என்ன பண்றதுனு யோசிக்கணும்...
நவீன் முதல் நாள் வேலைல ஜயின் பண்ணனும் கோவில் போய்ட்டு அப்படியே வேலைக்கு போகணும்னு அம்மா அப்பாட்ட சொன்னான்...
லட்சுமி நீ ஆசை பட்ட மாதிரி எல்லாம் நடுக்குதா...
நீங்களே கண்ணு வச்சிடாதீங்க வாங்க கோயிலுக்கு போவோம்...
நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் கடவுள் சன்னதியில் சூர்யா கழுத்தில் மூன்று முடிச்சிட்டு திருமதி பாபுவாக மாற்றிக் கொண்டான்...
சூர்யாவும் பாபவும் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர்...
ஏங்க கல்யாணம் பண்றது ரொம்ப கஷ்டம்னு சொல்லுவாங்க...
நாம ஒரே வாரத்துல பண்ணிட்டோம்... என்ன க்ராண்டா பண்ணனும்னு ஆசைப்பட்டேன்...
நவீன் கிரிஷ் கல்யாணத்த கிராண்டா பண்ணிடலாம் லட்சுமி...
சரிங்க...

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 24:
நவீன் அடுத்து உனக்கு பொண்ணு பாக்குறேன்டா. உன் கல்யாணத்தயும் கையோட முடிச்சுடலாம்...
அம்மா ஏற்க்கனமே சொல்லிடேன் ஒரு பொண்ண ஒரு வருஷமாது லவ் பண்ணி பழகி எனக்கு பிடிச்ச மட்டும் தான் கல்யாணம்...
பாருங்க எப்படி சொல்றானு நம்ம கிட்டயே லவ் பண்ணுவேனு ...
டே இப்படிலாம் என் தலைல கல்லை தூக்கி போடாதடா... அம்மா அப்பா கிளம்படும் உன்ட முக்கியமான விஷயம் பேசணும்...
ஆமா நீ என்ன முக்கியமா பேச போற வேமா கல்யாணம் பண்ணு இல்லை என் ஜூனியர கூட்டு வந்துடுவேனு. எப்போவும் ஓரே டயலாக் போடா...
நீங்க பொண்ணு மாப்பிளைய கூட்டிட்டு வீட்டுக்கு போங்க...
நான் கிருஷ ட்ராப் பண்ண சொல்லி ஸ்டேஷன் போய்ட்டு ஈவினிங் வீட்டுக்கு வாரேன்...
பாத்து போய்ட்டு வாப்பா...
நவீன்...
நவீன்..
என்னடா என் பெயரை ஏலம் விட்டுட்டு இருக்க...
உன்கிட்ட முக்கியமா பேசணும் டா...
என்னடா சொல்லுடா டூட்டிக்கு போகணும் நேரம் ஆச்சு...
முதல் நாள் லேட்டா போன நல்லாவா இருக்கும்...
அண்ணன் கல்யாணம்னு சொல்லுடா...
சரி என்ன விஷயம் சொல்லு...
ஒரு நிமிஷம் இரு...
ஸ்டார் இங்க வா ஸ்டார்...
யார்டா இந்த பொண்ணு...
அம்மா சொன்னாங்கல்ல...
என் ஜூனியர்...
அந்த பொண்ணு தான்...
அம்மாக்கு தெரியுமாடா...
ஜூனியர்னு தெரியும் இந்த பொண்ணு தான் தெரியாது...
நாங்க ரெண்டு வருஷமா லவ் பண்றோம் டா...
ரெண்டு வருஷமா வா...
ஆமாடா...
இப்ப என்னடா சொல்லுடா...
இந்தப் பொண்ணுக்கு அவங்க அப்பா மாப்பிள்ளை பார்க்கிறாங்க...
நீ போய் பேச வேண்டியதுதான்டா...
உன் கல்யாணம் முடியாம எப்படிடா அம்மா எனக்கு பண்ணி வைப்பாங்க...
அதனால...
நீ என்ன பண்ற வேகமாக கல்யாணம் பண்ணிக்கோ...
என்ன விளையாடுறியா?
உனக்கு தேவையா அம்மா கிட்ட பேசு கல்யாணத்த பண்ணு...
உனக்காக எல்லாம் நான் கல்யாணம் பண்ண முடியாது...
என்னடா இப்படி சொல்ற...
போய் பேச முடியாது டா...
ஏன்டா?
அவங்க அப்பா மிலிட்டரி மேனுக்கு தான் கல்யாணம் பண்ணி கொடுப்பாராம்...
ஏன்னா அவர் மிலிட்டரில வேலை பார்த்து ரிட்டேர் ஆனவர்...
இப்ப டெல்லியில் மாப்பிள்ளை பார்த்து இருக்காரு அந்த பையனும் மிலிட்டரிமேன்...
அடுத்த மாசமே பொண்ணு பார்த்து டெல்லியில கல்யாணம் சொல்லி இருக்காங்க டா...
என்னால ஸ்டார் இல்லாம இருக்க முடியாதுடா...
தைரியமா லவ் பண்ணல போய் உங்க அப்பாகிட்ட பேசுமா...
பேசினாலும் அப்பா கேட்க மாட்டாரு...
அப்பா கிருஷ மறந்திட வேண்டியது தான்...
என்னடா இப்படி சொல்ற...
ஆமாடா ஒன்னும் அந்த பொண்ணு பேசணும் இல்ல நீ போய் பேசணும்...
ரெண்டு பேரும் முடியாதுன்னா மறக்க வேண்டியதுதான்...
அப்படி எல்லாம் சொல்லாத அண்ணா...
என்னடா அண்ணா சொல்ற...
ஆமாடா நீ தான் எனக்காக ஏதாவது பேசி முடிவு பண்ணனும் டா...
சரி நான் பேசுறேன் அம்மாவ கூட்டி போய் கூட பேசுவோம் முடியாதுன்னு சொல்லிட்டா என்ன பண்ணுவ...
ரெண்டு பேரும் வேணான்னு விலகிருவீங்களா...
அதெல்லாம் முடியாது டா...
பேசி சம்மதம் வாங்கி தரணும் நீங்க தான்...
நீயே சொல்லிட்ட அவர் மிலிட்டரி மேனுக்கு தான் கல்யாணம் பண்ணி கொடுப்பார்னு...
சாயங்காலம் அம்மாட்ட பேசி எல்லாரும் முடிவு பண்ணலாம்...
டேய் உன்ன தாண்டா நம்பி இருக்கேன்...
எப்படியாவது எங்க கல்யாணத்தை நடத்தி வச்சுட்டு டா...
உறுதி எல்லாம் சொல்ல முடியாது பேசி பார்க்கிறோம்...
அப்புறம் கடவுள் விட்ட வழிதான்...
சரிமா நீ வீட்டுக்கு போமா சாயங்காலம் இல்லனா நாளைக்கு உங்க வீட்ல வந்து பேசுறோம்...
எனக்கு பயமா இருக்கே...
எதுவும் ஈசியா கிடைச்சிடாது மா...
ஒன்னு வேணும்னா நீங்க தான் போராடனும்...
இப்படி பயந்தா ஒண்ணுத்துக்கும் ஆகாது...
சரி நான் கிளம்புறேன் கிருஷ்...
நீயா போயிடுவியாமா...
ம்...
வாடா என்ன ஸ்டேஷன்ல இறக்கி விடுடா...
சரி ஸ்டார், நீ வீட்டுக்கு போ அப்பறம் நான் உனக்கு போன் பண்றேன்...
ஏன்டா கிரிஷ்...
நீ விளையாட்டுக்கு பேசுறனு நினைக்கிறோம்... இப்படி உண்மைக்கே கூட்டிட்டு வந்து நினைக்கிற...
நான் விளையாட்டுக்கு எல்லாம் சொல்லல டா...
உண்மையா தான் சொல்றேன்...
பேர் என்னடா ஸ்டாரா... அது நான் செல்லமா கூப்பிடுறது டா...
அப்ப பேர் என்ன?
நட்சத்திரா...
எப்படிடா இப்படி பிடிக்கிறீங்க சூர்யா நட்சத்திரான்னு பேர்...
சரி ஈவினிங் நானே வீட்டுக்கு வந்துடறேன்...
அம்மா கிட்ட பேசிட்டு முடிவு பண்ணலாம்...
சரிடா...

சார் இன்ஸ்பெக்டர் பாக்கணும்...
வந்ததும் இன்ஸ்பெக்டர் தான் பாக்கணுமா... என்ன கேஸ்...
ஏட்டு, கன்னின்ஸ்டாப்பிட்டலாம் பேச மாடிங்களா...
என்னனு சொல்லுங்க அப்பறம் இன்ஸ்பெக்டர் பாக்க முடியுமா முடியதான்னு சொல்றேன்...
அதும் இப்போ இல்லை உனக்கு முன்னாடி எத்தனை பேர் நிக்குறாங்க பாரு ஓரமா போய் நில்லு...
ஏன் சார் முன்னாடி போய் நிக்குறீங்க இந்த ஸ்டேஷன் ஹெட் கான்ஸ்டப்பில 10 வருசமா இருக்காரு... எப்படியாது ப்ரோமோஷன்ல இந்த வருஷம் SI ஆகிடலாம்னு பாத்தாரு...
ஆன டைரக்ட் SIஅப்பொய்ன்மெண்ட்ல இன்னைக்கு நியூ SI வரார் அந்த டென்ஷன்ல காலையில இருந்து எல்லாரையும் கத்திட்டு இருக்காரு...
பாக்க கல்யாண வீட்ல இருந்து வர மாறி இருக்கு பொண்ணு ஓடி போச்சினு கம்பளைண்ட் பண்ண வந்தீங்களானு ரைட்டர் கேக்கவும்... நான் வெயிட் பண்றேன் எல்லாரும் பாக்கவுமே நான் போய் பாக்குறேனு காத்திருக்கும் இருக்கையில் அமர்ந்தான்...
சார் கொஞ்சம் பொறுமையா பேசுங்க...
எப்படியா பொறுமையா இருக்கது...
இன்ஸ்பெக்டர் உள்ள ரெஸ்ட் எடுக்குறார்...
புதுசா SI வரதா சொன்னாங்க இன்னும் வரல...
டூட்டில ஜாயின் பண்றதுக்கே வர முடியல...
படிச்சி சின்ன வயசுல பெரிய பொறுப்பு கிடைச்ச இப்படி தான்...
என்ன மாறி கான்ஸ்டப்லா 5 வருஷம் ஹெட் கான்ஸ்டப்பிலா 10 வருஷம் 15 வருஷம் அனுபவம் இருக்க என்ன SI அ ப்ரோமோஷன் குடுக்காம 2எக்ஸாம் எழுதி பாஸ் ஆகி சின்ன வயசுலயே பெரிய பொறுப்ப குடுத்த இப்படி தான் இருக்கும்... இந்த நேரம் வந்துடுந்தா நானே சாலூட் அடிச்சி வரவேற்த்துடுப்பேன்...
நவீன் இந்த நேரம் இல்லை ஒரு மணி நேரம் முன்னாடியே வந்துட்டேன் உங்க வரவேற்புல மெய் மறந்து போய்ட்டேன்னு சொல்லவும் அங்க இருந்த அனைவருக்கும் அதிர்ச்சி...
சார் உள்ள போங்க சார் இன்ஸ்பெக்டர் உள்ள இருக்கார்...
யூனிபோர்ம்ல வராததால தெரியல சாரி சார் அங்கேருந்த அனைத்து காவலர்களும் சொன்னாலும் ஹெட் கான்ஸ்டப்பில் ராமர் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை...
நவீன் அதை பெருசா எடுத்துக்கவில்லை... ஜாயினிங் ஆர்டர் குடுத்து விட்டு தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்...
முதல் நாள் என்பதால் அங்கிருந்த கோப்புகளை பார்த்தான்...

லட்சுமி இல்லத்தில் பூஜை அறையில் சூர்யா விளக்கேற்றினால்...
பாபுவிடம் எதுவும் பேசவில்லை...
அத்தையை விட்டு நகருவும் இல்ல அத்தை இது எப்படி அத்தை இப்படி என்று அத்தையிடம் மட்டுமே பேசிக் கொண்டே இருந்தாள்...
பாபு தன்னிடம் ஏதாவது பேச மாட்டாளா என்று ஏங்கிக் கொண்டிருந்தான்...
எங்க போக போற காலமெல்லாம் என்கூட தான் இருக்கணும்...
அப்ப பாத்துக்குறேன்...
இப்பவே சொல்லிட்டேன் அத்தை எப்பவும் கோபமாவே இருந்தாருனா நான் உங்க ரூமுக்கு வந்துடுவேன்...
இன்னைக்கு லைப் ஸ்டார்ட் பண்ணும் சம்பிரதாயம் அதெல்லாம் சொல்ல கூடாது...
ஃபர்ஸ்ட் அவர் பிரண்டா எனக்கு பிடிக்கட்டும் அப்புறம் அதெல்லாம் பாத்துக்கலாம்...
இப்போதைக்கு எனக்கு இந்த வீட்ல பிடிக்காத ஒருத்தர்னா அவர்தான் கல்யாணம் ஆயிடுச்சுனு ஓவர் அட்வான்டேஜ் எடுக்க கூடாதுன்னு சொல்லி வையுங்க...
அதெல்லாம் பாபுக்கு தெரியுமா அவனை நல்லா பாத்துப்பான்...
நீங்கதான் உங்க பிள்ளை மெச்சிக்கணும் பாருங்க திருத்திருன்னு முழிக்கிறத...
நான் இவ்ளோ பேசுறேனே ஒரு வார்த்தை சிரிச்சு பேசுறாரா...
என்கிட்ட பேசாதவங்க கிட்ட பேசறதுக்கு நான் என்ன லூசா...
கல்யாணம் முடிஞ்சு நாலு மணி நேரம் ஆச்சு...
என்கிட்ட ஒரு வார்த்தை பேசினேன் சொல்லு...
பாருங்கஅத்தை இப்பவே சண்டை போடுறாரு...
நான் வாய தொறக்கல சாமி என்னமோ பண்ணுங்க நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன்...
ஏன்டா...
முந்தி மாதிரி இல்லடா இப்ப பாபு நிறையவே மாறிட்டான்டா...
நீயும் கொஞ்சம் அவனுக்காக மாறி போடா...
உனக்காகதாண்டா இவ்வளவு மாறி இருக்கான்...
ஒரு மாசம் முன்னாடி அவன்கிட்ட பேசுறது கூட நான் பயந்து இருக்கேன்டா...
அப்படி ஒரு டெரர் பீஸ எனக்கு இப்ப கல்யாணம் பண்ணி இருக்கீங்க...
இப்பவும் சொல்லிட்டேன் அத்தை உங்களோட முழு சப்போர்ட் எனக்கு தான் உங்க பையனுக்கு இல்லை...
சரிடா...
எப்பவும் இப்படி சந்தோசமா இருந்த போதும் டா...
நீயும் போய் ரெஸ்ட் எடுடா... சாப்பாடு ரெடி ஆகவும் கூப்பிடுறேன் சாப்பிட வாடா...
சரிங்க அத்தை...
 
Status
Not open for further replies.
Top