ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆழ் கடலும் சோலையாகும்-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 5
லெட்சுமி இன்னும் ஏன்மா டென்சன இருக்க...

இல்லங்க பெரியவன் என்ன சொல்லுவானு யோசனையா இருக்குங்க...

சரினு சொன்ன பொன்னு எப்படி வேகமா பாக்க ஏதும் மேட்ரிமோனில பாக்கலாமா...

தெரிஞ்சவங்கட்ட சொல்லாம. ஆறு மாசத்துக்குள்ள முடிக்கனும்னா இப்பவே பாக்கனுங்க...

ஏங்க உங்க தூரத்து சொந்ததத்தில போன வருஷம் பாபுக்கு கேட்டங்களே அவுங்கட்ட கேக்கலாம.


அந்த பொன்னுக்கு கல்யாணம் 8 மாசம் முன்னாடியே முடிஞ்சு லெட்சுமி...

பொறுமையா இரு பாபு என்ன சொல்றானு முத கேட்டுப்போம்...
யாருக்கு யார்னு கடவுள் முடிவு பண்ணிடுப்பார்... நேரம் காலம் வந்த நாம தேடி போக வேண்டியது இல்லை நம்மல தேடி வீட்டுக்கே வருவாங்க...

ஆமா போங்கங்க நாம முயற்சி பண்ணாம எதும் நடக்காது....
தானா வருவாங்களாம் மந்திரம் போட்டு....

சொல்லும் நேரத்தில் மொபைல் போன் ஒழித்தது...
ஹலோ...
நாராயண எப்படி இருக்கட...
இந்தர் நல்லருக்கியடா....
நான் போன் பண்ணாத்தான் நல்லருக்கியனு கேப்பியடா...
என்ட பேசி எத்தனை நாள் ஆட்சி...
சாரி இந்தர் வேலை அது இதுன்னு நேரம் போய்டுதுடா...
தினமும் பேசுனாதான் ப்ரண்ட்ஸ்ஸ...
உன் பையனும் பொன்னும் எப்படி இருக்காங்கடா...
நல்லாருக்காங்க..உன் பசங்க எப்படி இருக்காங்கடா...
போன்லயே பேசு நேர்ல வராத...
அத சொல்ல தான் கால் பண்ணணேன்டா...
இரண்டு நாள்ள‌ உன் வீட்டுக்கு வாரேன்டா...


முக்கியமா பேசனும்..



சரி வாடா இப்ப தான் சந்தோசமா இருக்கு...



லெட்சுமி என் ப்ரண்ட் இந்தர் இரண்டு நாள்ள வாரான் விருந்து ரெடி பண்ணுமா...



10 வருசம் முன்னாடி பாத்ததுங்க அண்ணாவ...



அண்ணி இறந்தப்பரம் இந்த பக்கம் வரல...



சூரியா எப்படி இருக்க... 10வது பாஸ் ஆகிட்டேனு வந்து சொன்னப்ப பார்த்தது....



கூட்டிட்டு தான் வருவான் நேர்லயே பாத்துக்கோ...



மறுநாள் பாபு காலைல கிளம்பும் முன்னாடியே அம்மா அப்பா இரண்டு பேரும் வாங்க...



இதோ வாரோம்பா...



ஏங்க சம்மதம் சொல்லனும்னு வேண்டிக்கோங்க...



கடவுளே என் பையன் கல்யாணம் நல்லபடியா முடிஞ்ச 1000பேருக்கு அன்னதானம் செய்றேன்மானு வேண்டிக்கிட்டே வந்தாங்க...



அம்மா எனக்கு கல்யாணத்துக்கு சம்மதம்...



கடவுளே நன்றிபா...



அம்மா இருங்க முழுசா சொல்லுறேன்...



பொன்னு படிச்ச பொன்னா இருக்கனும்... அப்பறம் கல்யாணத்துக்கு அப்புறம் அவளுக்குனு ஒரு கேரியர் இருக்கனும் எல்லாத்துக்கும் என்ன டிபென்ட் பண்ணாம...



கடைசிய முக்கியமானது என் வோய்ப் ஆகுறதுக்கு முன்னாடி என் பேசன்டா இருக்கனும் ...



நான் ட்ரீட்மெண்ட் பாத்து சரியாகவும் எனக்கு சரினா கல்யாணம் பண்ணிக்குறேன்...



என்னடா கண்டிசன் இது...



முத சொன்னது ஓகே...



நான் என்ன ஹாஸ்பிடல் ஹாஸ்பிடல போய் ஹார்ட் பேசன்ட் இருக்க பொன்னா தேட முடியும்...



இதான் என் முடிவு...



பொன்னு கிடைச்சா ஹாஸ்பிடல் அனுப்புங்க...



திரும்ப இத பத்தி பேச வேணாம். நான் ஹாஸ்பிடல் கிளம்புறேன்...



என்னங்க இவன் இப்படி சொல்லிட்டு போறான்...



கிருஷ் ...
கிருஷ்...
கிருஷ்ஷு...
எங்கடா இருக்க
ஏன்மா எத்தனை தடவை சொல்றேன் எப்ப பார்த்தாலும் என் பேர ஏலம் விடுறீங்க...

உன் அண்ணன் கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டான்டா...

நல்ல விசயம் தானம... ஏன் ரூட்ல ஒன்னு கிளியர் ஆய்டுச்சி...

நான் என் ஜுனியர சிக்கிரம் கூட்டு வந்துட்டலாம்...
இத என் ஸ்டார் கிட்ட சொல்லனும்...
நீ வேறட எப்ப பார்த்தாலும் ஜுனியர் ஜூனியர்னு...

அவன் கண்டிசன் சொல்லிட்டு போறான்டா...
படிச்ச வேலைக்கு போக ஆச படுற பொன்னு கிடைச்சிடும்டா...

அப்பறம் என்னமா... அவனுக்கு ஹார்ட் ப்ராப்ளம் இருக்க பொன்னு வேணுமாம்டா...

ஏதும் ஆராய்ச்சி எதும் பண்ண போறான.. எதுக்கு இப்படி சொல்லிட்டு போறான்...

பேசாம பத்திரிகைல விளம்பரம் குடுங்க...
படித்த இதய குறைபாடு உள்ள மருமகள் தேவை உங்கள் குறைபாடு சரி செய்து திருமணம் செய்ய என் மகன் காத்திருக்கான்னு...


விளையாடதடா...

அவன் எதிர்பார்த்த அனைத்து குணங்களுடன் மருமகள் சூரியா நாளை வரப்போவது அறியாமல் குழப்பத்தில் அனைவரும்...
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 6
லெட்சுமி விருந்துக்கு எல்லாம் ரெடி பண்ணிட்டியா...

நான் ஏதும் உதவி செய்யனுமா...

அதலாம் வேணாங்க...

எல்லாம் முடிஞ்சது.
எப்ப வாராங்கங்க...

இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துடுவாங்க லெட்சுமி...

சரிங்க இவ்வளவு நேரம் அடுப்புகிட்ட இருந்து ஒரு மாதிரி இருக்கு நான் லேசா குளிச்சுட்டு வாரேன்...

நீங்க இங்க இருக்கதுலாம் டேபிள்ல அடுக்கி வச்சிட்டு இந்தர் அண்ணாக்கு பிடிச்ச ஐஸ்கிரீம் மட்டும் வாங்கிட்டு வந்துடுங்க...

இத்தனை வருஷம் ஆனாலும் நீ எதுவுமே மறக்காம இருக்க லெட்சுமி நான் கூட என் ப்ரண்ட் சாப்ட்டதும் ஐஸ்கிரீம் சாப்டுறது பிடிக்கும்னு மறந்துட்டேன்...
எப்படிங்க மறப்பேன் அண்ணா அண்ணி கூட இரண்டு வருசம் பக்கத்துலயே இருந்துடுக்கேன்ல...

விடு கிருஷ்க்கு போன்ல சொன்னா வரப்ப ஐஸ்கிரீம் வாங்கிட்டு வந்துடுவான்...

பாபுவும் நவீனும் வீட்ல இருந்தா நல்லாருந்துடுக்கும்...‌

காலிங் பெல் அடிக்கவும் இந்தர் வந்துட்டான் வேகமா வா லெட்சுமி...
வா இந்தர் இப்பதான் வழி தெரிஞ்சதா என்னடா பிள்ளைகள கூட்டிட்டு வரலையாட...

ராகவ் மும்பை இருக்க கம்பேனிய பாத்துக்குறான்....
சூர்யா வெளியேதான் கார் பார்க்கிங் பண்ணிட்டு இருக்காடா வந்துடுவா...

நீங்க உள்ள வந்து உங்க ப்ரண்ட் கூட பேசுங்க...
நான் சூர்யாவ உள்ள கூட்டு வாரேன்...

வாமா மருமகளே...
அத்தைய மறந்துட்டியா...

அப்படிலாம் இல்ல அத்தை...
நீங்கதான் எங்கள மறந்துட்டீங்க எங்கள பாக்க ஒரு தடவை கூட மும்பை வரல...

நான் என்ன பண்ண மருமகளே உங்க மாமா தமிழ் நாட்ட தாண்டி எங்கயும் என்ன கூட்டு போனதே இல்லை...

பரவல அத்தை எப்படி இருக்கீங்க...

நல்லாருக்கேன்டாமா...
உன் மாமா நல்ல படியா பாத்துக்கிறார்...

வாங்க அண்ணா சாப்டுட்டு பேசலாம்...

உங்களுக்கு பிடிச்சதுலாம் செஞ்சுடுக்கேன்....

உன் கையால சாப்டு ரெம்ப நாள் ஆகிடுச்சிமா...
வா சூர்யா இங்க என் பக்கத்துல இருந்து சாப்டுமா...

டேஸ்ட்டா இருக்கு அத்தை...
அம்மா கைல சாப்ட மாதிரி இருக்கு...
அண்ணி நானும் எப்போதும் சேந்து சமைப்போம்...
அவங்க இல்லைனு இன்னும் நம்ப முடியல... அதுக்குள்ள 10வருசம் ஓடிருச்சி..
.
சூர்யா அழுக ஆரம்பிக்கவும்...
நான் வேற பிள்ளைய அழ வச்சிட்டேன்...
நீ சாப்டுமா...
என்ன இந்தர் நீ எதுவும் பேசல...
சாப்டு பேசுவோம் லெட்சுமி என்ன வேணும்னு கேட்டு கவனி...
பசங்கள எங்க நாரயணா...
பெரியவன் ஹாஸ்பிடல் போய்டுக்கான்டா... கார்டியாலஜி ஸ்பெஷலிஸ்ட்ட SSS ஹாஸ்பிடல்ல இருக்கான்
நவீன் போலிஸ் ட்ரைனிங்ல இருக்கான்... இன்னும் கொஞ்ச நாள்ள வந்துடுவான்...

கிருஷ் உங்களுக்கு ஐஸ்கிரீம் வாங்க போய்டுக்கான் இப்ப வந்துடுவான்...

கிருஷ்ம் நம்ம சூர்யாவும் ஒரே நேரம் 10படிச்சாங்க...
என்ன இன்னும் படிப்புல பின்னாடிதான் இருக்கான்.
ஆனா பிஸ்னஸ்ல முன்னாடி வந்துடுவேன் சொல்றான் பாக்கலாம்...
அவர்கள் பேசிட்டு இருக்கும் போதே கிருஷ் ஐஸ்கிரீமுடன் வந்தவன் பேய் மாஸ்க் அணிந்து பே.... னு சூர்யா முன் கத்தவும்

சூர்யா மயங்கி விழுந்ததால்
அனைவரும் பதறி அவளை அறையில் படுக்க வைத்து நீர் தெளித்து எழுப்பினர். கிருஷ் நாராயணனிடம் வழக்கம் போல திட்டு வந்ததும் வாராததும் பிள்ளைய பயமுருத்திட்டனு....
இல்லைப்பா சின்ன வயசுல இப்படிதான் விளையாடுவோம் அதான் சர்ப்ரைஸ் பண்ணலாம்னு...

ஆனால் இன்னும் சூர்யா நடுக்கத்தில் இருந்ததால் அவ ரெஸ்ட் எடுக்கட்டும் நாம வெளிய பேசலாம்னு அனைவரும் வெளியேறினர்...

என்னாச்சு இந்தர் இந்த சின்ன விஷயத்துக்கு சூர்யா மயங்கிட்டா...

கிருஷ் உன்னால இல்ல சூர்யாக்கு ஒரு சின்ன பிரச்சனை அத‌பத்தி பேசலாம்னுதான் இங்க வந்தேன்...

என்ன பிரச்சினை இந்தர்
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 7



சூர்யாக்கு என பிரச்சனைடா...



ரதி இறந்ததும் இங்க இருக்க முடியாமதான் மும்பை போனோமம்டா...



ஆரம்பத்துல எல்லாரும் சோகத்துல இருந்ததுனால அடுத்தவங்களுக்கு என்ன ஏதுன்னு கவனிக்க கூட நேரம் இல்லை...



கொஞ்சம் கொஞ்சமாக தான் இழப்பிலிருந்து நாங்க மீண்டு வந்தோம்...



ராகவா நானும் வெளியே பிசினஸ் போனதுனால கொஞ்சம் எங்களோட மைண்ட் வந்து மாறுச்சு...



ஆனால் சூர்யா எங்களை மாதிரி இல்லாம வீட்டுக்குள்ளே இருந்ததுனால யார்கிட்டயும் பேசாம ரொம்ப தனிமைக்கு ஆளாகிட்டால்...



அது எங்களுக்கு தெரியறதுக்கு நிறைய வருஷம் ஆயிடுச்சு....



ஃபர்ஸ்ட் கொஞ்சம் கொஞ்சமா படிப்புல ஆர்வம் குறைந்தது...



அவளோட அவளோட ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள் குறைத்துட்டா...



எல்லாத்துக்கும் பயப்பட ஆரம்பிச்சிருக்கா...



ரதி மேல இருந்த அட்டாச்மெண்ட் யார் மேலயும் காட்ட முடியாம இந்த பயம் எல்லாம் அவளுக்கு தானாகவே வந்துருச்சு....



எங்களோட தப்பா இருக்கு நாங்களும் சூர்யாவை கொஞ்சம் கவனிக்காம விட்டுட்டோம்...



காலேஜ் ல மயங்கிட்டான்னு தகவல் வந்ததற்கு அப்புறம் தான் இத பத்தி எங்களுக்கு தெரிஞ்சது...



ஒரு சின்ன அதிர்ச்சி வந்தாலும் அவ மயக்கம் ஆகிடுறா...



எப்பவும் நார்மலா இருக்கிறவ சின்ன அதிர்ச்சியோ பயமா வந்துட்டா மயங்கி விழுந்து விடுகிறாள்....



ஹாஸ்பிடல்ல செக் பண்ணதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது (panic attack )



என்ன அண்ணா சொல்றீங்க ஒன்னும் புரியல...



எங்களுக்கும் அப்படித்தான்மா கொஞ்ச நாள் என்ன ஏதுன்னு புரியவே நாளாச்சு...



வைத்தியம் ஏதும் பாக்கலையா அண்ணா இதுக்கு...



கொஞ்சம் லேட்டா கண்டுபிடிச்சதனால இன்னும் எங்களால சரி படுத்த நேரம் ஆகுதுமா...



கொஞ்சம் முன்னாடியே பார்த்தா இப்ப சரி பண்ணி இருந்திருக்கலாம்...



டாக்டர் என்ன என்ன சொன்னாங்க சரி பண்ண முடியுமா முடியாதா அண்ணா....



இந்த டிசிஸ் ஒரு தீவிரமான பயத்தின் உணர்வு, இதயம் வேகமா துடிக்கும்...



விரைவான சுவாசம் மற்றும் வியர்வை போன்ற உடல் அறிகுறிகளை ஏற்படுத்தும்...



ஒரு வகையான கவலைக் கோளாறுகளை உருவாக்கும்...



இந்த நோய்களுக்கு சிகிச்சையளிக்க முடியும்னு சொன்னாங்க...



ஆரம்பத்துல நிறைய கவுன்சிலிங் கொடுத்து மனச சரி பண்ணுனோம்...



இப்பதான் மனசளவு இதுல இருந்து கொஞ்சம் சூர்யா சரியாகியிருக்கா...



இது ஆரோக்கியத்தை குறைக்கும் மத்தபடி எந்த திங்கும் விளைவிக்காது தான் டாக்டர் சொன்னாங்க...



ஏன்டா இந்தர் இத்தன வருஷம் புள்ளய பாக்காம என்னடா பண்ண பிசினஸ் பிசினஸ்னு...
அதாண்டா இப்ப பிசினஸ்சே பாக்குறது இல்ல சூர்யாவா மட்டும் தான் பார்க்கிறேன்...
அம்மா இருந்த வருத்தத்துல அப்படி இருக்கா நெனச்சு பிள்ளையாக கவனிக்காமல் விட்டுவிட்டேன் டா...
இன்னைக்கு லேசா தான் வந்திருக்கு...
ஒரு சில நாள் அப்படியே பயங்கரமா நெஞ்சு வலி வந்து



மூச்சு விட கூட சிரமப்படுவாடா...



கவுன்சிலிங் எல்லாம் கொடுத்ததினால் மனசு ஓரளவுக்கு சரியாயிடுச்சுடா...



ஆனா அடிக்கடி பயந்து பயந்து நெஞ்சு வலி வந்ததுனால கொஞ்சம் இதயம் பலவீனமா இருக்கு அதை சரி பண்றது தாண்டா இங்க வந்து இருக்கோம்...



பாபு ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் டாக்டரா தான் இருக்கானா என்ன ஏதும் நம்மளே பாத்துக்கலாம் விடுங்க அண்ணா...



முன்னாடியே வந்து இருந்தா என்னால சரி பண்ணி இருந்திருக்கலாம் அண்ணா... ஏன் அண்ணா இவ்வளவு நாள் லேட் ஆக்குனீங்க...



அதான் சொன்னேன் முன்னாடியே கவனிக்காம விட்டுட்டேன் என்னோட தப்பு தாம்மா...



இப்ப எதுக்குமா சோகமா இருக்கீங்க உங்களுக்கு பேப்பர்ல விளம்பரம் கொடுக்க வேண்டிய செலவு மிச்சம் மற்றும் சந்தோஷப்படாம...



என்னடா சொல்ற கிருஷ் எப்பவுமே புரியிற மாதிரி பேச மாட்டியா...



உங்க பையன் சொன்ன கண்டிஷன்ல பொண்ணு கிடைச்சுட்டான்னு சந்தோஷப்பட வேண்டியது தானே...



ஏண்டா எந்த நேரத்துல என்னடா பேசுற...



நான் சரியா தான் பேசுறேன் நீங்க யோசிச்சு பாருங்க உங்களுக்கும் சரியா தான் இருக்கும்...



என்னம்மா சொல்றான்...



ஒன்னும் இல்ல அண்ணா பாபு கல்யாணத்துக்கு சமாதிக்கவே இல்ல இப்பதான் சமாதித்தான்...



ஆனா இதே நோய் உள்ள பொண்ணு தான் வேணும் வேற யாரும் வேண்டாம் நான் தான் குணமாக்கி அப்புறம் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்றான் அண்ணா...



அதான் இப்ப சூர்யாவை பார்த்த உடனே கிருஷ் இப்படி சொல்றான்...



இப்படி சொல்றத நான் கூட யோசிச்சு பார்க்கணுமா...



நானும் இந்த நோய் எப்ப சரியாக எப்ப கல்யாணம் பண்ணலாம்னு தான் யோசிச்சுகிட்டே இருக்கேன்...



கிருஷ் சொன்ன மாதிரி இது கூட சரியா தான் இருக்கு...
உங்களுக்கு இது சம்மதம் தானா அண்ணா...

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 8
என்ன லஷ்மிம்மா சம்பந்தமான கேட்டுட்ட இது சம்பந்தமா பேசதான் நான் இங்க வந்தது...


ரதி இருக்கும் போதே நம்ம இந்த நட்பு சொந்தமா மாறனும்னு ஆசைப்பட்டா...
ரொம்ப சின்ன பிள்ளைங்க இதை பத்தி பேசுறது இப்ப முக்கியமானு
விட்டுட்டோம்...


இப்ப கொஞ்சம் பிள்ளைகள் வளந்துட்டாங்க ரதி ஆசைப்பட்டதை நிறைவேற்றனும் எனக்கு ஆசை...


ஆனா சூர்யாவை சரி பண்ணாம இத பத்தி பேச கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு...


இங்க வந்தததே நம்ம சூர்யாவை குணப்படுத்தி நம்ம பாபுக்கு சூர்யாவை கேட்கலாம் என்ற எண்ணத்தோடு தான் வந்தேன்...
குணம் ஆகுறதுக்கு முன்னாடி இதை பத்தி பேசினா தப்பாகும் தான் ஏதும் கேட்காம இருந்தேன்...
ஃபர்ஸ்ட் சூர்யாவ குணப்படுத்திட்டு இத பத்தி நானே பேசி இருப்பேன் லட்சுமி அம்மா...
நீங்க சொல்றது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா...


நாங்களும் ரெண்டு வருஷமா பாபுவ கல்யாணத்துக்கு சமாதிக்க வைக்க போராடிட்டு இருக்கோம்...



இப்பதான் மனசு மாதிரி சம்மதித்தான் சந்தோஷப்பட்டா அதுக்குள்ள எனக்கு வைஃபா அறிமுகமாவதற்கு முன்னாடி பேஷண்டா அறிமுகமாகனும் கண்டிஷன் போடுறான்...



கடவுள் இவங்களுக்கு இவங்க தான் எழுதி வைத்திருப்பார் போல...



அதான் சரியான நேரத்துல சூர்யாவ இங்க கூட்டிட்டு வந்து இருக்கீங்க...



பாபு க்கும் இன்னும் ஆறு மாசத்துக்குள்ள கல்யாணம் முடிக்கணும் இல்லனா ஆறு வருஷம் ஆகும் ஜோசியர் சொல்லி இருக்காங்க அண்ணா...



ஆனால் லக்ஷ்மி இத பத்தி ஃபர்ஸ்ட் இப்பதைக்கு சூர்யாவுக்கு ஏதும் சொல்ல வேண்டாம்...



அவ குணமாகவும் சொல்லிக்கலாம்...



சரிங்க அண்ணா சொல்லாமலே பாபு கிட்ட மட்டும் சொல்லுவோம்...



பாபு நம்ம சூர்யாவை நல்லபடியா குணப்படுத்திருவான்...



எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு லக்ஷ்மிம்மா...



நாராயண உங்க வீட்டு கிட்டே ஒரு வீடு பாருடா...



ஏன் அண்ணா வீடு பார்க்க சொல்றீங்க இங்கேயே தங்கலாம்ல...



கல்யாணத்துக்கு முன்னாடி ஒரே வீட்ல தங்குவது நல்லா இருக்காதுமா...



சூர்யா குணமாகி கல்யாணத்தை முடிச்சிட்டு தான் நா இங்க இருந்து கிளம்புவேன் ...



அதுவும் சரிதான் அண்ணா...



பாபு முந்தி மாதிரி எல்லாம் இல்ல நான் கொஞ்சம் இறுக்கமா இருக்கான்...



அவன் கிட்ட பேச நாங்களே பயந்து பயந்து பேசுறோம் அண்ணா...



ஏற்கனவே பயத்துல இருக்க சூர்யா எப்படி அவனை சமாளிக்க போறானு தெரியலைண்ணா...



நாராயணா நாங்க ஹோட்டல்ல தான் தங்கி இருக்கோம் வேகமா வீடு பார்த்தேன்னா நாங்க வீட்டுக்கு மாறிக்குவோம்...



சரிடா இந்தர் இந்த ஒரு வாரத்துக்குள்ள உனக்கு வீடு ரெடி பண்ணிடுவேன்...



ஒரு வாரம்லாம் வேணாம் மாமா என் ஃப்ரெண்ட் வீட்டு இங்க பக்கத்துல தான் இருக்கு அவன் பாரின்ல தான் இருக்கேன் வர ஒரு வருஷம் ஆகும் நீங்க அந்த வீட்டில் தங்குவதற்கு நான் ஏற்பாடு பண்றேன்...



யார் வீட சொல்ற கிருஷ்...



என் பிரண்டு கதிர் இருக்கேன்லம்மா அவன் வீடுமா ஃபாரின் போய் ஒரு வருஷம் ஆச்சு இன்னும் ஒரு வருஷம் கழிச்சு தான் திரும்பி வருவான்...



நான் அவன் கிட்ட பேசி வீட்டுக்கு ரெடி பண்ணுறேன்மா...



நீங்க பாபு கிட்ட பேசரத யோசிங்க...



நாராயணா இங்க வரும்போது ரொம்ப கவலையோட வந்த ரொம்ப சந்தோசமா இருக்கேன்...
எங்களுக்கும் சந்தோசமாதான் இருக்குடா...
அடுத்தடுத்து நடக்குறத பாக்கணும் டா..
நாளைக்கு சூர்யா ரிப்போர்ட்லாம் எடுத்துட்டு sss ஹாஸ்பிடல் போடா...
நாங்க பாபுகிட்ட இன்னைக்கு பேசிடுறோம்...
இன்னைக்கு பாபுவ பாத்துட்டு போவோம்னு நினைச்சன் ஆன இன்னைக்கு பாத்தா சூர்யாக்கு விஷயம் தெரிஞ்சுடும்...
நாளைக்கு ஹாஸ்பிடலயே பாத்துக்கிறேன்டா...
சூர்யா நார்மல் ஆகிட்டாலனு பாக்குறேன்டா... ஓகேனா நாங்க கிளம்புறோம்...

வீடு ரெடி ஆகவும் சொல்லுடா ஹோட்டல இருந்து வந்துடுறோம்...

ம்ம் சரிடா நான் பாபுட்ட பேசிட்டு உனக்கு சொல்லுறேன்டா...
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 9



ஏங்க பாபு கிட்ட நீங்களே பேசுறீங்களா...

அன்னைக்கு மாதிரியே ரெண்டு பேரும் சேர்ந்து பேசுவோம் லெட்சுமி...

நாளைக்கு காலையிலேயே பேசுவோம்ங்க...

அன்னைக்கே நைட் பேசினதுக்கு திட்டினான்...

அதுவும் சரிதான் லட்சுமி...

வேகமா வந்தா நைட் பேசுவோம் இல்லன்னா காலையில அவன் கிளம்புவதற்கு முன்னாடி பேசறது நல்லது...

"ம்ம் " சரிங்க...

வழக்கம்போல் இரவு லேட் ஆக வந்ததால் இரவு பேச முடியவில்லை...

காலையில் பாபு கிளம்புவதற்கும் முன் இருவரும் ஹாலில் காலையில் அமர்ந்திருந்தனர்...

பாபு...

என்னங்க அம்மா...

கொஞ்சம் பேசணும் பா...

நேராச்சுமா ரொம்ப அவசரமா எதுவும் பேசணுமா...

இல்ல கொஞ்சம் அவசரம் தான் பா...
என்னம்மா சொல்லுங்க...

உனக்கு லேட் ஆச்சுன்னா கிளம்புப்பா சாயங்காலம் பேசிக்கலாம்...

சரி நான் சாப்பிட்டுட்டு இருக்கேன் நீங்க பேசிட்டே இருங்க...

ஏங்க நீங்களே சொல்லுங்க...

இன்னைக்குமா ரெண்டு பேர்ல யாராவது ஒரு ஆள் சொல்லுங்க லேட் ஆகுது...

அது இல்ல பாபு நீ அன்னைக்கு சொன்ன மாதிரி உனக்கு பொண்ணு பாத்து இருக்கோம்...

ரெண்டு நாளிலேயே வா...

நம்புற மாதிரி இல்லையே...

உண்மைதான்பா பார்த்திருக்கோம்...

யாருன்னு சொல்லுங்க. ஃபர்ஸ்ட் நான் செக் பண்ணிட்டு நம்பினால் தான்...

இன்னைக்கு ரெண்டு மணிக்கு உன்னை பார்க்க ஹாஸ்பிடல்ல வருவாங்க...

சரி நான் செக் பண்ணி பார்த்துட்டு அப்புறம் உங்களுக்கு சொல்றேன்...

யாரு என்ன ஏதுன்னு கேட்கல பா...

சரி யாருன்னு சொல்லுங்க...

இந்தர் அங்கிள் உனக்கு ஞாபகம் இருக்கா...

நம்ம பக்கத்து வீட்ல இருந்தவங்க தான அம்மா...

ரதி ஆன்டி இறக்கவும் மும்பைக்கு போனாங்களே அவுங்களா...

சரியா கண்டுபிடிச்சிட்ட பாபு...

இந்திர் அங்களோட பொண்ணு சூர்யா தான்

ராகவ ஞாபகம் இருக்கு நம்ம நவீன் செட்டு...

அவங்க பொண்ணு மறந்துடுச்சே...

அந்த பாப்பா அப்ப ஸ்கூல் போய்கிட்டு இருந்தாலே...

என்னமா ஸ்கூல் படிக்கிற பொண்ண போய் பார்த்து இருக்கீங்க...

அப்ப தாண்டா ஸ்கூல் படிச்சுக்கிட்டு இருந்தா இப்ப 10 வருஷம் ஆச்சு...

காலேஜ் எல்லாம் முடிச்சு அவளுக்கு 25 வயசு ஆகிடுச்சிபா...

ஆமா க்ரிஷ் செட்டா...

நான் எந்த பொண்ணுனாலும் பார்க்கணும் சொல்லலையே மா...

ஹார்ட் பேஷண்டா இருக்கணும்னு சொன்னேனே...

அவளுக்கும் ஹாட் ல சின்ன பிராப்ளம் இருக்குபா...

என்னால உங்க பேச்சை நம்ப முடியல ஹாஸ்பிடல்ல செக் பண்ணிட்டு நான் என்னன்னு அடுத்து உங்களுக்கு சொல்றேன்...

சரிப்பா...

மதியம் ரெண்டு மணிக்கு அவங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் சொல்லிடுங்க நீங்களே...

சரி நான் சாப்பிட்டேன் எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன் மா...

ஏங்க அண்ணாக்கு தகவல் சொல்லிடுங்க...

சரி லட்சுமி...

SSS மருத்துவ வளாகம்

டாக்டர் பாபு ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் பார்க்கணும் மேம்...

சார் அப்பாயிண்ட்மெண்ட் இருக்கா...

ரெண்டு மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் தந்து இருக்காங்க...

ஆமா சார்...

டாக்டர் ஏற்கனவே சொல்லி இருக்காங்க...

வெயிட்டிங் ரூம்ல நீங்க வெயிட் பண்ணுங்க சார்...
ஃபர்ஸ்ட் நான் டாக்டர பாக்கணும் பார்த்ததற்கு அப்புறம் தான் பேஷண்ட் கூட்டிட்டு போகணும்...

ஓகே சார் நான் டாக்டரட்ட இன்பார்ம் பண்ணிடுறேன்...

சார் டாக்டர் உங்கள வர சொல்லிட்டாங்க போங்க... சூர்யா நீ இங்க இருடா நா ரிப்போர்ட் எல்லாம் டாக்டர்ட்ட காட்டிட்டு டீடைல்ஸ் சொன்னதுக்கு அப்புறம் உன்னை கூப்பிட்டு போறேன்...

ஓகே பா சீக்கிரம் வந்துருங்க எனக்கு தனியா இருக்கு கொஞ்சம் பயமா இருக்கு...

நர்ஸ் என் பொண்ணு கூட கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க நான் டாக்டர் பார்த்துட்டு வர வரைக்கும்...

அவங்க வெளி இடத்துல தனியாக இருக்கிறதுக்கு கொஞ்சம் பயப்படுவாங்க கூடவே இருங்க சிஸ்டர்...

நான் டாக்டர் பாக்க போய்ட்டு வரேன்...

ஹாய் டாக்டர் பாபு ...

வாங்க அங்கிள்...

பாபுனே கூப்பிடுங்க...

எப்படி இருக்கீங்க அங்கிள்...

நல்லா இருக்கேன் பா...

நேத்து வீட்டுக்கு வந்து இருந்தோம் உன்ன பாக்க முடியல பாபு...

ஆமாங்கிள் ஹாஸ்பிடல்ல கொஞ்சம் பிசி...

சூர்யா பத்தி அம்மா சொன்னாங்களா?

ம்ம்...

ஆன மெடிக்கல் ஹிஸ்டரி கேட்டுக்கல...

நானே செக் பணிக்குறன்னு சொல்லிடேன்...

அப்புறம் கல்யாணம் பத்தி பேசினதும் சூர்யாக்கு தெரியாது அதை பற்றியும் பேச வேண்டாம்...

அவ குணமானதுக்கப்புறம் அவ சம்மதிச்சா அதுக்கப்புறம் கல்யாணத்தை பத்தி பேசிக்கலாம் இப்பததைக்கு சூர்யா குணப்படுத்த மட்டும்தான் நாங்க இங்க வந்து இருக்கோம்...

நானும் அதைத்தான் சொல்ல நெனச்சேன் அங்கிள்...

ஃபர்ஸ்ட் சூர்யாவுக்கு கியூர் பண்ணிக்கிறேன் அப்புறம் இத பத்தி பேசக்கலாம்...

நம்ம ரெண்டு குடும்பமும் ஒண்ணா இருக்கணும்னு ஆசைப்பட்டது ரதிதான்...
முடிஞ்ச வரைக்கும் குணமானதுக்கப்புறம் நோ சொல்லிடாத பாபு...

இதுல சூர்யா ரிப்போர்ட் இருக்கு பாபு...

நான் சூர்யாவ கூட்டிட்டு வரவா...

நான் ரிப்போர்ட்ஸ் எல்லாம் கொஞ்சம் செக் பண்ணிக்கிறேன் அங்கிள் ஒரு 15 மினிட்ஸ் அப்புறம்

சூர்யாவ மட்டும் உள்ள அனுப்புங்க நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க நான் செக் பண்ணவும் வாங்க...

சரி பாபு...

சூர்யா பாபு உள்ள வர சொன்னான்மா நீ உள்ள போ...

செக் பண்ணவும் நான் வரேன்...

அப்பா எனக்கு தனியா போக பயமா இருக்குப்பா நீங்களும் வாங்க...

தெரியாதவங்கனாதான் பயப்புடனும் நம்ம லட்சுமி பையன்தானேமா...

தெரியாத டாக்டர்னா கூட எனக்கு இவ்வளவு பயம் இருக்காதுபா...

நான் சின்ன வயசுலயே க்ரிஷ் கூட மட்டும்தான் பேசுவேன் பா...

மத்தவங்க ரெண்டு பேரும் எப்பவாது தான் பாப்பேன்..

பாக்கறப்பவும் என்னை முறைச்சுக்கிட்டே இருக்க மாதிரியிருக்கும் எனக்கு அவங்க ரெண்டு பேர பார்த்தா முந்தி இருந்தே பயம்பா... எப்பவும் சிரிச்சிட்டே இருக்க லட்சுமி ஆன்ட்டிக்கு எப்படி இப்படி பசங்கன்னு அப்பவே நினைப்பேன்...

ப்ளீஸ் பா என்கூட வாங்கப்பா...

தனியா அனுப்புங்க செக் பண்ணனும் சொன்னதுக்கு அப்புறம் கூட வந்தா நல்லா இருக்காதுமா போய்ட்டு வாடா மா...

சரிப்பா பயமா இருக்கு வாசலிலையே வெயிட் பண்ணுங்கப்பா...

சரிடா உள்ள போ...
"ஹ.. ஹ...லோ டா.. டாக்..டர்.."

எஸ் கம் இன்...

இங்க உக்காருங்க...

"அ...ப்பா...வ உ..ள்..ள கூப்..பிடு..ங்..க..ளேன்"...

"என...க்.. கு.. ப... ய.. மா ரு.. க் கு"

எதுக்கு இவ்வளவு திக்குற ஜஸ்ட் ரிலாக்ஸ்...

கண்ண மூடு...

ஆழமா மூச்சு எடுத்து மெதுவா விடு...

பயம் போகவும் கண்ண திற...

உன் பேர் என்ன...

ம் ம்..

பேர் என்னன்னு கேட்டேன்...

சூ.. சூ..ர்யா

சூசூர்யா வ...

இல்லை சூர்யா...

ஓகே சூர்யா சாப்டியா...

இல்ல..

இப்போ ரிலாக்ஸ இருக்கியா பயம் இல்லாம...

ம் இல்லை...
உங்கள பாத்த பயமா இருக்கு...

சரி அப்ப என்னை பாக்காம பேசு...

சூர்யானு ஏல்லாரையும் சுட்டு இருக்கிற சூர்யன் பேர வைச்சிட்டு இப்படி பயந்து சாகுற...

அழுதுகிட்டே நான் அப்பாட்ட போறேன்னு அழுகவும்...

நான் என்ன கடிச்ச வைக்குறேன் அழுற...

பக்கத்துல வந்து ஹார்ட் பீட் செக் பண்ண ஆரம்பிக்கவும்...

என்ன உன் ஹார்ட் ரேஸ் ல ஓடுதா இவளோ வேமா துடிக்குது...

முதல் ரிலாக்ஸ இரு அப்போதான் செக் பண்ண முடியும்...

ஆமை தெரியுமா அது நிமிஷதுக்கு 4டைம்ஸ் தான் மூச்சி விடும்...
அதுதான் அது 600வருஷம் வாழுது...

நாம அவளோ வருஷம் வாழலநாலும் இருக்க வர ஹெல்த்தியா இருக்க டீப் பிரேத் ரெம்ப இம்போர்ட்டண்ட்...

டீப் அண்ட் ஸ்லொவ் பிரீத் அதாது அழுந்த மெதுவான மூச்சி நுரையீரல் வேலை பாக்குறத துரிதபடுத்தும்...

நீ என்ன பண்றன 2நாள் பிரீத்திங் பயிற்சி செஞ்சிட்டு வர நான் அப்பறம் தான் டெஸ்ட்லாம் எழுதி தரேன்...

சரியா...

நான் அப்பாட்ட போகவனு திரும்ப அழுகவும்...

நான் இவ்வள நேரம் சொல்றேன் இன்னும் சொன்னதையே சொல்லுறனு சொல்லிக்கினடே கோபமா டேபிள்ள தட்டவும் சூர்யா நடுக்கத்துடன் பயத்தில் மயங்கினால்...
 
Status
Not open for further replies.
Top