ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆழ் கடலும் சோலையாகும்-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 25
என்னடா செல்வா பத்தி ஃபுல்லா டீடைல் கிடைச்சாச்சா...
கிடைக்கல நரேன் அண்ணா...
அவன பத்தி ஒரு விவரமும் தெரியலனா...
டெய்லி பீச்சுக்கு போறான்...
சாப்பிடுறான்...
கடலையே பாத்துட்டு இருக்கான்...
அப்புறம் இங்க வந்துடுறான்...
ஆனா ஆள் சரியில்லை அண்ணா...
எப்பவும் ஏதோ யோசித்துக்கொண்டே இருக்கான்...
இங்கே இருக்க ஒரு சில பேர்ட்ட விசாரிச்சு இருக்கான் இங்க இருந்து போறதுக்கு வழி இருக்கான்னு...
எனக்கு தெரிஞ்சு அவனுக்கு இங்க இருக்க பிடிக்கலைன்னா...
தப்பிச்சு போக பிளான் பண்றான்...
ஏதாவது ஒரு பொண்ண லவ் பண்ணிட்டுப்பானோ...
அந்தப் பொண்ணு இங்க இருந்து வந்தா தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லி இருப்பா என்று நினைக்கிறேன் அண்ணா.... ஏன்ன காரணம் இல்லாம ஒருத்தன் வெளிய போகணும் நினைக்க மாட்டான்...
அவன்கிட்ட எதுவும் சரியில்லன்னா....
இங்க பத்து வருஷம் வேஸ்டா தான் இருக்கான்...
அடுத்த பலியாடா ஆக்கிடலாமா அண்ணா...
நானும் அதைதான் யோசிச்சிட்டு இருக்கேன்...
நமக்கு யூஸ் இல்லாத ஒன்னு நம்ம கூட இருக்கலாமா... அதற்கான வெளியே சந்தோசமா விட்டுற மாட்டேன்...
என்னனு கேஸ் இருக்கு... எந்த கேஸ்க்கு இவன் சரிப்பட்டு வருவான் என்று தேடி வை...
ரெண்டு நாள்ல மாமியார் வீட்டுக்கு அனுப்பி விடலாம்...
எந்த வேலைக்கு வரமாட்டான் இவனை எப்படிண்ணா மாட்டி விடறது...
நாமெல்லாம் வேலை கொடுப்போம்... நீ நம்ம ஸ்டேஷன்ல பேசி வை...
உள்ள போனா வெளிய வரக்கூடாது...
ஈஸியா செத்துடவும் கூடாது...
ஆனா அவன் பாக்க நல்லவனா தான் தெரியுறான்...
இங்க வந்து பத்து வருஷத்துல எந்த பிரச்சினைக்குமே முன்னாடி வந்தது இல்லை அண்ணா...
கூட்டத்தோடு கூட்டமா பின்னாடியே இருந்து அப்படியே எஸ்கேப் ஆகி ஓடி வந்துடுவான்...
கூப்பிட்டா கூட தலை வலிக்குது கால் வலிக்குதுன்னு ஏதாவது ரீசன் சொல்லிடுவான்...
இத்தனை நாள் இவன இங்க வச்சிருந்ததே பெருசு...
இவனை கூப்பிட்டு ஒருவேளை சொல்லுங்க என்ன சொல்றானு மட்டும் பாருங்க...
டேய் செல்வா வர சொல்லுடா...

சிறிது நேரத்தில் செல்வா அங்குவந்தான்...
செல்வா...
நீ தான் செல்வா வா...
ஆமாங்க... இங்க எத்தனை வருஷமா இருக்க...
பத்து வருஷம் ஆகுதுங்க...
இதுவரை எந்த ஒரு வேலையிலும் உன்னை முன்னாடி பாக்கலையே...
எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வரலங்க...
வந்ததுல இருந்து இங்க இருந்து போகலாம் எனக்கு இது பிடிக்கல அப்படித்தான் நெனச்சேன்...
உங்கள பாத்து பயம்...
உள்ள வந்த அப்புறம் யாரும் வெளியே போகக்கூடாது என்று சொல்லிட்டீங்க...
எனக்கு இந்த மாதிரி ஃபுல் ஃபோர்சா வேலை பார்க்க முடியாதுங்க...
நான் கிராமத்துல வளர்ந்தவன்...
அம்மா அப்பா இறந்துட்டாங்கன்னு வலி இல்லாம இங்க வந்தேன்...
வந்த இடத்துல ஆதரவு தந்தீங்க...
ஆதரவு தந்த உங்களை விட்டுப் போகவும் மனசு வரல...
நீங்க சொல்ற வேலைய செய்யவும் மனசு வரல...
அதான் எந்த வேலைக்கும் முன்னாடி வர்றதில்லைங்க...
எனக்கும் மத்தவங்க மாதிரி வாழனும்னு ஆசை இருக்கு...
இப்படியே வாழ்க்கை போயிடும்னு பயமா இருக்கு...
உங்ககிட்ட வந்து நானே பேசணும் நெனச்சேன்...


பேச வரக்கூட பயம்...
இன்னைக்கு நீங்களா கூப்பிடவும் சொல்லிட்டேன்...
இப்படி வேலைக்கு ஆகாம ஒருத்தன வச்சுக்கிறது எனக்குமே சரியா படல...
என்ன பண்ணலாம்...
உன்ன சும்மா அனுப்பவும் மனசு வரல...
இங்கிருந்து போகணும் ஆசைப்படுறியா...
ம்...
ஆமாவா இல்லையா சொல்லு...
ஆமாங்க போகணும்னு ஆசைப்பட்டேன்...
இப்பவும் ஆசைப்படுறேன்...


சரி ஆசைப்பட்டுட்ட நிறைவேற்றலாம்...



உண்மையாவே போகலாமா...



எனக்கு சந்தோசமா இருக்கு...



நீங்க போ சொல்லுவீங்கன்னு நினைச்சு கூட பாக்கல...



ஆனா இதுவரை எதுவும் செஞ்சதில்லை கடைசியா போறதுக்கு முன்னாடி எனக்குன்னு ஒரு வேலை செஞ்சுட்டு போ...



ஒருத்தனை முடிக்க வேண்டி இருக்கு முடிக்கிறியா...



வேணாங்க...



எந்த வேலையும் செய்யல...



போகாம இங்கேயே கூட இருக்கேன்...



இந்த மாதிரி வேலை எல்லாம் என்னால செய்ய முடியாது...



சரி ஒருத்தன் கையை எடுக்கணும் எடுத்துட்டு ஒரேதா கிளம்பிடுரியா...



அதுவும் முடியாதுங்க...



அப்ப எதுக்குடா உனக்கு நான் இத்தனை வருஷம் சோறு போட்டு வளர்த்தேன்...



சரி...



இப்ப கிளம்பு...



நான் டென்ஷன்ல இருக்கேன் ஏதாவது தப்பா முடிவெடுத்துருவேன்...



நாளைக்கு பேசிக்கலாம்...



என்ன அண்ணா இப்படி அவனை சும்மா அனுப்புறீங்க...



இவன் நமக்கு சரிப்பட்டு வர மாட்டான்டா...



அப்பா இங்க இருந்து அனுப்பிடப் போறீங்களா...



நாளைக்கு ஒரேதா ஜெயிலுக்கு அனுப்பிடலாம்...



என்ன அண்ணா சொல்றீங்க...



நம்ம கிட்ட இருக்க ட்ரக்ஸ கார்ல போட்டு கார சர்வீஸ்க்கு கொண்டு போய் விட்டுட்டு வர சொல்லு...



போலீஸ்ட்ட கம்ப்ளைன்ட் பண்ணிடு...



ட்ரக்ஸ் கேஸ் அவ்வளவு ஈஸியா வெளியே வர முடியாது...



அவன் வெளியே வர்றதுக்கான எல்லா ஓட்டையும் அடைச்சிடலாம்...



காலத்துக்காக உள்ளே கிடக்கட்டும்...



லட்சுமி இல்லம் :



நவீன் வேலை எப்படி இருந்தது ஃபர்ஸ்ட் டே...



நான் ஆசைப்பட்ட மாதிரி எஸ் ஐ ஆனதே ரொம்ப ஹாப்பி மா...ஐ லவ் மை ஜாப் லைக் யூ மா...
அண்ணா எங்க சூர்யா காணோம்... 2பேரும் ரெஸ்ட் எடுக்குறாங்க...
2பேரையும் சாப்பிட வர சொல்லிட்டு நீ ரெப்பிரேஷ் ஆகிட்டு வா...
சேந்து சாப்பிடலாம்...
இந்த கிரிஷ் எங்க போனானு தெரியல வேலை இருக்கு வேலை இருக்குனு வெளியே தான் சுத்துறான்...
அவன பத்தி தான் பேசணும் நெனச்சேன் அம்மா...
அவன் லவ் பண்ற பொண்ணுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்றாங்களாம்... என்ன பண்ணலாம்னு கேட்கிறான்...
அந்தப் பொண்ணு வீட்ல பாக்குற பையன கல்யாணம் பண்ணிக்க சொல்லு...
இன்னும் 3வருஷமாவது ஆகட்டும்...
அதுக்குள்ள அவசரமா அவனுக்கு எப்போவும் விளையாட்டுதான் ...
அம்மா அவன் விளையாடுக்கு பேசல ஒன் மந்த்ல அந்த பொண்ணுக்கு கல்யாணம் பேசிட்டுக்காங்கலாம்...
அதுக்குன்னு இவனுக்கு அவசரமா கல்யாணம பண்ணி வைக்க முடியும்... லவ் பண்ணாலும் 3வருஷம் அப்பறம் அத பாத்துக்கலாம் அப்பவும் லவ் பண்ணாங்கன்னா கல்யாணம் பண்ணி வைக்கலாம்...
நம்ம வீட்ல காதலுக்கு யாரும் எதிரி இல்லை... ஆன அதுக்குன்னு ஒரு காலம் இருக்கு... அவன் அடிக்கடி கல்யாணம் பண்ணிவைனு சொல்றப்பவே தெரியும் வரட்டும் பேசிக்கலாம்...
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 26 :
சூர்யா சாப்பிட வாடாமா...
நவீன் நீ ரெப்ரஷ் ஆகிட்டு வரப்ப பாபுவையும் சாப்பிட கூட்டு வா ...
எல்லாரும் சேர்ந்து சாப்பிடுறதே சந்தோஷம்...
இந்தர் அண்ணா நீங்களும் வாங்க சாப்பிடலாம்...
சரிம்மா...
லக்ஷ்மி இன்னைக்கு என்ன சாப்பாடு...
கொஞ்சம் பொங்கல் கேசரி சாம்பார், ரசம் அப்பளம் காய்கறிகள்...
பெரிய விருந்து தயார் செஞ்சிருக்க...
ஆமாம் என் மருமகள் ரெம்ப நாள் அப்பறம் வீட்டுக்கு வந்துடுக்கா இத்தன நாள் ஹாஸ்பிடல் டென்ஷன் அது இதுனு கஷ்டப்பட்டுட்டா...
நீ எல்லாம் இந்த வீட்ல சூர்யாக்கு பிடிச்சது மட்டும் தான் சமைப்பேன்... அப்ப இனி எங்களுக்கு பிடிச்சதெல்லாம் சமைக்க மாட்டீங்களா...
இத்தனை வருஷம் உங்களுக்கு பிடிச்சா தானே சமைச்சேன்...
டேய் இந்தர் நீ அந்த வீட்டை காலி பண்ணிடுடா...
இங்கே இருந்துக்கலாம்...
நானும் அதே தான் சொல்லுவோம்னு நினைச்சேன் டா...
நான் நாளைக்கு மும்பை போறேண்டா...
என்னப்பா கல்யாணம் இன்னிக்கு தான் முடிஞ்சிருக்கு நாளைக்கே போகிறேன் என்று சொல்கிறீங்க...
இங்கே இருங்கப்பா...
நான் இங்க தாண்டா இருக்க போறேன் ஒரு வாரத்துக்கு தாண்ட போறேன்...
உன் அண்ணன் உன்ன பாக்கணும்னு ஆசைபடுறான்டா...
ஆசைப்பட்ட அவனை இங்க வர சொல்லுங்க..
ஆமா இந்தர் வர சொல்லு...
இல்லடா...
ராகவ் அங்க தனியா எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டு கஷ்டப்படுறான்...
ஒரு வாரத்துல அவசரமா கல்யாணம் வச்சதால அவனால அங்க எல்லாத்தையும் செடுல் பண்ணிட்டு இங்க வர முடியல...
என்ன அங்க வரச் சொல்கிறான் அவன் வந்து அவன் தங்கச்சியை பார்க்கணுமாம்...
அதனால நாளைக்கு மும்பை போலாம்னு இருக்கேன்...
நான் போனதும் ராகவ் இங்கே வருவான் வந்து ஒரு வாரம் தங்கிட்டு போவான்... அவன் வரவும் அடுத்து நான் வாரேன். என் மக வீட்டுக்கு நான் வராம இருப்பேனா...
போங்கப்பா நான் கோவமா இருக்கேன்...
ஒரு வாரத்துல நான் வரலைனா கோவப்படுடா என் பட்டுல...
நீங்க வந்தப்பறம் உங்ககிட்ட பேசுறேன் அது வர சண்டை...
அதான் மாமா ஒரு வாரத்துல வரேன் சொல்றர்ல அவர்கூட சண்டை பிடிக்குற...
நான் என் அப்பாட பேசுறேன் நீங்க இடைல வராதீங்க...
இன்னைக்கு காலையில இருந்து என்னோட ஒன் அண்ட் ஒன்லி மாமனார் ஆகிட்டார் நான் தலையிட முழு உரிமையும் இருக்கு...
இருக்கும் இருக்கும்... நீங்களே உங்க மாமனார்ட்ட பேசிக்கோங்க என்ன சண்டை போடாதீங்கனு நீங்க எப்படி சொல்லலாம் நீங்க சொன்னதுக்காகவே ஒரு வாரம் உங்க கூட சண்டைப்பா...
எதுனாலும் உங்க மாப்பிள்ளை கிட்ட பேசிக்கோங்க...
ஏன்டா சூர்யா பாவம் அண்ணா வருத்தப்பட போறார்...
நான் ஒரு வாரத்துல வரேன்னு சொல்றாருல...
வரலைன்னா உன் கூட சேர்ந்து நானுமே சண்டை போடறேன்...
நீ இப்படி சண்டை போட்டு அனுப்பின அங்க போய் அவரால நிம்மதியா வேலை பார்க்க முடியுமா...
அத்தை நான் சொன்னது உண்மை நீங்களும் நம்பிட்டீங்களா...
என் அப்பா கூட பேசாம நான் ஒரு நாள் கூட இருந்ததில்லை...
சும்மா சொன்னேன் அத்தை... விளையாட்டு பிள்ளையாவே இருக்கடா...
என்னடா க்ரிஷ் அமைதியாக இருக்க...
நவீன் சொல்லவலையாம்மா...
நான் சொல்லிட்டேன்...
நீயே திரும்ப சொல்லு...
எல்லாரும் இருக்கீங்க சொல்லியிடுறேன்...
நானும் என் ஜூனியர் ஒரு பொண்ணும் ரெண்டு வருஷமா லவ் பண்றோம்...
இப்ப அந்த பொண்ணு வீட்ல கல்யாணம் ஏற்பாடு பண்றாங்க...
எனக்காக அவங்க வீட்டில போய் பேசுங்க...
என்னடா பேசுற...
உண்மைக்கு தான் பா சொல்றேன்...
ஏன் டா முதல் லைஃப்ல செட்டில் ஆகுடா... அதுக்குள்ள என்ன அவசரம்
இப்பதான் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணி இருக்க உன்ன பத்தி என்ன நல்லது சொல்லி நாங்க பொண்ணு கேட்க...
ஒரு நல்ல பொசிஷனுக்கு வா...
நாங்க போய் பேசுறோம்...
நாங்க லவ் பண்ணது தப்புன்னு சொல்லல...
நான் நவீன் இருக்கான் அவனுக்கு முடிச்சுக்கலாம்...
அதுக்குள்ள நீயும் நல்லா நிலைமைக்கு வந்துருவ...
ஒரு ரெண்டு வருஷம் வெயிட் பண்ண சொல்லு...
அவங்க அப்பா அவ்வளவு டைம் எல்லாம் குடுக்கல ஒரு மாசத்துல அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணி இருக்காங்க...
வீட்ல பேச சொல்லு...
ரெண்டு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்றேன்னு...
அவங்க அப்பா யார் சொன்னாலும் கேட்க மாட்டார்...
அவ அவங்க அப்பாக்கு ரொம்ப பயப்படுறா...
எனக்காக நீங்க பேச மாட்டீங்களா...
என்னான்னு பேச சொல்ற...
எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் தான் பேச சொல்றேன்...
ஒரு அப்பாவா எப்படிடா நாங்க இப்படி பேசுறது...
அப்ப எனக்காக பேச வர மாட்டீங்க...
வரமாட்டோம் எங்கடா சொன்னோம்...
நீ நல்ல நிலமைக்கு வரவும் பேசலாம்...
ரெண்டு வருஷம் லவ் பண்ணவங்க இன்னும் ஒரு வருஷம் வெயிட் பண்ண முடியாதா...
அவங்க அப்பா ரொம்ப தீவிரமா இருக்காங்க...
ஒரு மிலிட்டரிக்கு தான் கல்யாணம் பண்ணி கொடுப்பாங்கலாம்...
இப்ப கூட மிலிட்டரி மாப்பிள்ளை தான் பார்த்து இருக்காங்க...
இப்படி சொல்றவங்க கிட்ட எப்படிடா நாங்க வந்து பேசுறது...
உன்னக்கு அந்த பொண்ணு தான் வேணும்னா நீ மிலிட்டரி ஜாயின் பண்ணு...
மிலிட்டரில ஜாயின் பண்றது ஒன்னும் அவ்வளவு சுலபம் கிடையாது...
எனக்கு மிலிட்டரி எல்லாம் ஒத்து வராதுப்பா...
அப்ப நாங்க என்ன செய்யறது...
எப்படியாவது நடக்க இருக்க கல்யாணத்த மட்டும் தடுத்து நிறுத்துங்க...
ஒரு ஒரு வருஷம் டைம் குடுத்தா போதும் நான் கண்டிப்பா நல்ல நிலைமைக்கு வந்துருவேன்... உங்க வீட்ல பேசி ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்லுங்கப்பா...
நடக்கிறத பேசுடா...
யார்கிட்டயும் போய் அவமானப் படுற நிலைமைல இல்லை...
நீயே சரி பண்ணு...
என்னால முடிஞ்சா எதுக்கு உன்கிட்ட உதவி கேட்கிறேன்...
உடனே சூர்யா, நீ கவலைப்படாத கிரிஷ் உங்க பாபு அண்ணாவ கூட்டிட்டு போயி பேச சொல்லு...
பேசிய சம்மதம் வாங்கி கொடுத்திடுவார்....
யாரு நானா...
ஆமா...
என்னால எல்லாம் முடியாது...
நீ வேணா நவீன கூட்டு போய் பேசு...
ஏண்டா நான் நல்லா இருக்கறது உனக்கு பிடிக்கலையா...
நானே இப்பதான் டூட்டி ல ஜாயின் பண்ணி இருக்கேன்...
என்னால லீவு எல்லாம் எடுக்க முடியாது...
நிறைய வேலை இருக்கு...
அப்ப யாரும் வர மாட்டீங்க எனக்காக...
நீங்க ரெண்டு பேரும் தான லவ் பண்ணீங்க பிரச்சனைய சமாளிங்க... நீ பேசினாலும் சரி அந்த பொண்ணு பேசினாலும் சரி... உன்னோட கேரியர் செட்டில் ஆகணும் நவீன் கல்யாணம் முடியனும் இது 2ம் சரினா எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை... நீங்க யார விரும்புரியோ அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க எங்களுக்கு முழு சம்மதம்...
என்னமோ பண்ணுங்க நானே பாத்துக்குறேன் உங்க உதவி இல்லாம பாதியில் எழுந்து சென்று விட்டான்...
கிரிஷ்....
கிரிஷ்...
அனைவரும் கூப்பிட்டது காற்றில் கரைந்தது...
சூர்யா நீ சாப்பிடு...
அவன் அப்படித்தான் சரியாயிடுவான்...
சாப்பிட்டு ரூம் க்கு போங்க...
எப்போவும் எலியும் பூனையுமா இல்லாம் அப்பப்போ புருஷன் பொண்டாட்டிய இருங்க...
சரிங்க அத்தை...
அது உங்க பிள்ளை நடந்துக்குறதுல தான் இருக்கு...
நாலாம் நல்லாத்தான் நடந்துக்குறேன்...
உங்க மருமகட்ட சொல்லிடுங்க சாப்டு வீட்ல வெட்டியா இல்லாம அவளுக்குனு ஒரு அடையாளத்தை உருவாக்க சொல்லுங்க படிச்ச படிப்ப வீண்ணாக்க வேணாம்னு...
நான் அதுலாம் வேலைக்கு போயிடுவேன் அத்தை...
என்னோடத நான் பாத்துப்பேன்...
இப்போதான் சொன்னேன் எலியும் பூனையுமா இருக்காதிங்கனு...
சரிங்க அத்தை...
எல்லாரும் போய் தூங்குங்க நாளைக்கு பேசிக்கலாம்...




 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 27



என்னடா பிளான் ஓகேவா...



சொல்லிட்டேன் அண்ணா...



நேத்து எல்லாம் ரெடி பண்ணிட்டாங்க...



ஸ்டேஷன்ல இன்பார்ம் பண்ணிட்டேன்...



அங்க யாரோ புதுசா எஸ்ஐ வந்து இருக்காப்லயாம்...



SIவச்சு இதை முடிச்சிடுறேன்னு இன்ஸ்பெக்டர் சொன்னார்...



மதியம் ரெண்டு மணிக்கு பிளான் பண்ணி இருக்கு...



நீங்க ஒரு மணிக்கு செல்வாக்கு வேலையை கொடுத்து அனுப்பினால் சரியா இருக்கும்...



நாம சொன்னா அலாட் ஆகிடுவாண்டா...



அவன் தோஸ்த் இருக்கான்ல அவனை பிடி...



வண்டியில் எல்லாத்தையும் லோட் பண்ணிடுங்க டா...



உனக்கு தெரிஞ்ச பையன் காலேஜ்ல படிக்கிறான்ல...



அவன சரியா 1.30 க்கு கம்ப்ளைன்ட் கொடுக்க ஸ்டேஷன் அனுப்பிடு...



சரிங்க அண்ணா...



பிளான் பக்காவா இருக்கணும்...



அவன் வெளியே வரக்கூடாது...



அதெல்லாம் கரெக்டா நடந்திடும் அண்ணா...



செல்வாவின் பிரண்ட் கதிர் அவனிடம் வந்து செல்வா ஃப்ரீயா இருக்கியாடா...



என்ன சொல்லுடா...



இல்ல அண்ணா எனக்கு வேலை தந்தாரு...



எனக்கு வயிறு சரியில்ல...



நேத்து என்ன சாப்பிட்டேனு தெரியல வைறு அப்சட்டா இருக்கு...



எனக்காக ஹெல்ப் பண்றியா...



என்னன்னு சொல்லுடா...



நம்ம வண்டியில ஒன்னு ரிப்பேர இருக்கு அதை சத்யா காலேஜ் கிட்ட இருக்குற சர்வீஸ் சென்டர்ல விடனும்...



உடனே சரியாகும்னா நின்னு வாங்கிட்டு வா இல்லன்னா நாளைக்கு போய் எடுத்துக்கலாம்...



சரிடா போய்ட்டு வரேன் இது கூட செய்ய மாட்டேனா...



தேங்க்ஸ் டா...



இதுக்குலாமாடா...



சாரிடா...



எதுக்குடா சாரி...



கேட்க தோணுச்சு...



சரிடா நான் வண்டிய விட்டுட்டு வரேன்...



செல்வாவுக்கு சத்யா காலேஜ் என்றதும் தங்கச்சியை பார்த்துட்டு அப்படியே சர்வீஸ் பண்ணிட்டு வந்துருவோம்னு நினைப்பு...



குட்டிய பார்த்து ரொம்ப நாளாச்சு...



வண்டியில் ஏறியவன் வெண்ணிலாவுக்கு போன் எடுத்தான்...



குட்டி எங்கடா இருக்க...



லஞ்ச் டைம் அதான் நீங்க கால் பண்ணதும் எடுத்தேன்...



அதிசயமா இருக்கு அண்ணா...



இன்னொரு அதிசயம் உனக்காக...



இன்னும் பத்து நிமிஷத்துல நீ காலேஜுக்கு வாசலுக்கு வா அண்ணா உன்னை பார்க்க வரேன்...



உண்மையாவா நம்பவே முடியலண்ணா...



உண்மைக்கேதாண்டா...



சரிங்கண்ணா வந்துடறேன்...



உடனே வெண்ணிலா தன்னை நண்பர்களை அழைத்துக் கொண்டு வாசலுக்கு கிளம்பினாள்...



இத்தனை நாள் எங்க அண்ணாவ காட்டலனு என்ன கிண்டல் பண்ணீங்கலல்ல வாங்க இன்னைக்கு எங்க அண்ணாவ காட்டுறேன்...



அதே நேரம் போலீஸ் ஸ்டேஷனில்...



சார் நான் உங்கட்ட ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கணும் சார்...



ரைட்டர்ட்ட கம்ப்ளைன்ட் கொடுப்பா...



என்ன சார் ரொம்ப அர்ஜென்ட்...



என்னன்னு சொல்லுப்பா...



நான் இங்க பக்கத்துல காலேஜ்ல படிக்கிறேன் சார்...



எங்க காலேஜ் பக்கத்துல டெய்லி ஒரு கார்ல ட்ரக்ஸ் கொண்டு வந்து ஸ்டுடென்ட்ஸ்க்கு விக்கிறாங்க...



இன்னைக்கு அந்த கார் எங்க காலேஜ் கிட்ட பார்த்தேன்...



என் பிரண்ட்ஸ் சில பேரு இதுல அடிமையாகுறாங்க இத தடுக்கணும்னு தோணுச்சு அதான் கம்ப்ளைன்ட் கொடுக்க வந்தேன் சார்...



கேஸ் பெரிசா இருக்கே...



அந்த டேபிளில் இருக்கார் இல்ல அவர்தான் எஸ் ஐ...



அவர் கிட்ட சொல்லு...



நேரே நவீனிடம் சென்று தகவல் சொல்லவும்...



உன் காலேஜ் ஐடி காட்டு என்று சொல்லவும் ஐடி கார்டு காட்டவும் உண்மையாவே ஸ்டுடென்ட் தான் தகவல் உண்மையா இருக்கும்னு... அவனுடன் இரு காவலர்களை அழைத்து கொண்டு கல்லூரிக்கு சென்றான்...



அண்ணா எப்படி இருக்க...



என்ன பாக்க வந்து 2வாரமாட்சி...



இன்னும் 15days தான் இருக்கு எக்ஸம்க்கு...



எக்ஸாம் முடிஞ்ச அன்னைக்கு நாம நம்ம ஊர்ல நம்ம வீட்டுக்கு போய்டலாம்...



இதான் என் பிரண்ட்ஸ் அண்ணா...



இது பிரபா, இது சுருதி, இது ஹரிஷ்மா 4 பேரும் என் கிளோஸ் பிரண்ட்ஸ்...



ஹாய் அண்ணா நல்லா இருக்கீங்களா... என்ன ஹரி அண்ணா கூப்டுற எனக்குலாம் நீங்க அண்ணா இல்லை என்று சுருதி கிண்டல் செய்ய...



சும்மா இருங்கடி இப்படிலாம் பேசுவீங்கனுதான் என் அண்ணா இவ்வளவு நாள் பயந்து நீங்க இருக்கப்ப பாக்க வரல...



என்ன அண்ணா திடிர்னு இந்த பக்கம்...



அது ஒன்னும் இல்லைடா குட்டி இந்த கார சர்வீஸ்க்கு விட ப்ரண்ட் சொன்னான்... நீ படிக்குற காலேஜ் கிட்ட இருக்கு அப்படியே உன்ன பாத்துட்டு சர்வீஸ் குடுத்துடலாம்னு அவன்ட இருந்து வாங்கிட்டு வந்தேன்டா... இந்த உனக்கு பிடிச்சதுலாம் வாங்கிட்டு வந்துடுக்கேன்...



எக்ஸாம் முடியவும் உன்ன கூப்பிட வரேன்...



ம்ம் சரிங்க அண்ணா...
சரிடா பாப்பா ப்ரண்ட்ஸ் கூட கிளம்பு நான் பக்கத்துல சர்வீஸ் பண்ண குடுத்துட்டு கிளம்புறேன்...
வெண்ணிலா உள்ளே சென்ற அடுத்த நிமிடம் போலீஸ் ஜீப் கார் முன்னே நின்றது...
இந்த ஜீப் தான் சார் கூப்டு வரவும்...
கார் முழுவதும் சோதனை நடத்தியத்தில் அதிக அளவிலான போதை பொருள் கிடைத்தது...
எனக்கும் இதுக்கும் சம்மதம் இல்லை சார்...
இந்த வண்டிய சர்வீஸ்க்கு குடுக்க வந்தேன்...
மாட்டின உடனே எல்லாரும் சொல்றது தான் நீ சொல்ற...
அரெஸ்ட் ஹிம் என்று சொன்னதும் போலீஸ் கைது செய்தனர்...
உள்ளே பாதி வழி சென்றுஇருந்த வெண்ணிலா வெளிய ட்ரக்ஸ் விக்குறவங்கள போலீஸ் நாம போய் பாக்கலாம்னு அழைத்து வர அவள் கண்ட காட்சியில் ஆசையாமல் நின்றாள்...
அவள் அண்ணன் கையில் விளங்குடன் வண்டி பாதி தூரம் சென்றது...
அண்ணா என்று அவள் அழைத்தது கேக்காத தூரம் சென்றது போலீஸ் வாகனம்...
அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தாள்...
உனக்கு தெரிஞ்சவங்களாமா...
ட்ரக்ஸ் செல்லிங் கேஸ் ல பிடிச்சுட்டு போறாங்கமா...
நேத்துல இருந்தே பிளான் பன்றாங்க...
யாரையோ மாட்டி விட பிளான் பண்ணாங்கமா...
உண்மையா விக்குறவங்கள பிடிச்சது இல்லை...
ஆன இது மாறி பொய்யா யாரையாது பிடிக்குறதுக்கு மட்டும் பிளான் பன்றாங்க...
அச்சோ என் அண்ணாவ எப்படி காப்பாதுவேன்...
புதுசா வந்துருக்க போலீஸ் தான் அர்ரெஸ்ட் பண்ணி கூப்டு போறாங்க...
போய் பேசி பாருமா...
அவள் நண்பர்கள் ஆறுதல்படுத்தியும் நிக்காமல் அழுகை....
வேற யாரோ வர வேண்டியது தன்ன பாக்குறதுக்காக வந்து அண்ணாக்கு இப்படி ஆனதற்க்கு...
நாம ஸ்டேஷன் போய் பேசுவோம் நிலா நீ அழாத...
பிளான் பண்ணி செஞ்சுடுக்காங்க எதுக்காகனு கண்டு பிடிப்போம் அப்போதான் மிட்க முடியும்...
அழுத ஏதும் செய்ய முடியாது...
வா போய் பாக்கலாம்னு அவள் நண்பர்கள் ஆட்டோவில் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர்...
 
Status
Not open for further replies.
Top