ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆழ் கடலும் சோலையாகும்-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 15
SSS மருத்துவமனை
மேம் அப்பொய்ன்ட்மெண்ட் இருக்கா...
நான் பாபு டாக்டர் அம்மா எனக்கும் அப்பொய்ன்மெண்ட் வேணுமா...
நான் டாக்டர்ட கேட்டு சொல்றேன் மேம்...
இன்டெர்காம் ல தகவல் சொல்லவும்...
மேம் டாக்டர் உங்கள ரூம் நம்பர் 105ல இருக்க சொன்னாங்க...
30மினிட்ஸ் ல வாரேன் சொல்லிடுக்காங்க...
பாபு தனது அறையில் அம்மாவோட அவுங்க எதுக்கு இப்போ கூட வந்தாங்க...
கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணட்டும் வேலைய முடிச்சிட்டு போகலாம்னு நினைத்துக் கொண்டான்...
105 அறையில் என்னப்பா ரூம் முழுக்க இவ்வளவு மெடிக்கல் எக்யூப்மென்ட் இருக்கு...
இதெல்லாம் பார்த்தா எனக்கு ஏதோ பெரிய நோய் இருக்கிற மாதிரி பயமா இருக்குப்பா எனக்கு ஏதாவது நார்மல் ரூம் தர சொல்லுங்கப்பா...
என்ன சூர்யா இப்படி சொல்ற...
பாபு எது செஞ்சாலும் கரெக்டா செய்வான்...
அத்தை நீங்க உங்க பையன எப்பவும் விட்டுக் கொடுக்க மாட்டீங்க எனக்கு தெரியும்...
என்ன மாதிரி தான் நீயும் இருக்கணும்னு ஆசைப்படுகிறேன் டா...
உங்க அளவுக்கு எல்லாம் எனக்கு பொறுமை இல்ல அத்தை...
பாருங்க பெத்த அம்மா வந்து இருக்கேன்னு சொல்லி இருக்கீங்க இன்னும் வந்து பார்க்கல...
ஹாஸ்பிடல்ல அவன் வேலை அப்படிமா...
அதான் சொன்னேன்ல நீங்க எப்ப விட்டுக் கொடுத்து இருக்கீங்க உங்க மகன...
பேசிக் கொண்டிருக்கும் போதே ரூம் வாசலில் நின்று பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான் பேச்சுக்கு சொந்தக்காரன்...
பேச்சி முடிச்சாச்சா நான் உள்ள வரலாமா...
வாப்பா பாபு ஏன் இவ்வளவு நேரம்...
நான் வரத இருக்கட்டும். நீங்க எதுக்கு இப்ப கூட வந்தீங்க...
நம்ம சூர்யாக்காக தான் பா...
அவ பாவம் பயந்த பிள்ளைல அதான் துணைக்கு துணையாக வந்தேன்... பயந்த பிள்ளைன்னு சொல்லிக்கிட்டு
கூடவே நாலு பேர் சுத்திக்கிட்டு இருந்தா எப்ப பயம் போகிறது...
ஹாஸ்பிடல் வந்துருக்கீங்களா பிக்னிக் வந்துருக்கீங்களா...
இன்னைக்கு வந்த தான் கடைசியா இருக்கணும் எப்பவும் யாராவது கூடவே இருக்க கூடாது...
அங்கிள் உங்களுக்கும் தான்...
இங்க இருக்க பத்து நாளும் முழுக்க முழுக்க என் கண்காணிப்புல தான் இருக்கணும்...
உங்களுக்கு வேணா விசிட்டர்ஸ் கெஸ்ட் ஹோம் அரேஞ்ச் பண்றேன் அங்க இருந்துக்கோங்க தேவையான மட்டும் வந்து பார்த்தா போதும்...
சூர்யா நீங்க இப்படி கோபப்பட்டா ஹாஸ்பிடல்ல தாங்க மாட்டேன்னு சொன்னா தம்பி...
கொஞ்சம் கோபப்படாம பேசினா அவளுக்கு நல்லா இருக்கும்னு பீல் பண்ற...
நான் எப்படி பேசணும் என்னன்னு அவதான் சொல்லனுமா...
அச்சோ அப்படி இல்ல தம்பி...
கொஞ்சம் கோவம் இல்லாம...
இப்ப நான் என்ன கோவமா பேசுனேனா...
நார்மலா தான பேசிட்டு இருக்கேன்...
ஆமா பாபு நார்மலா தான் பேசுற...
அப்புறம் என்ன கிளம்புங்க...
இல்ல பாபு சூர்யாக்கு சாப்பிட...
அதெல்லாம் அந்த ஹாஸ்பிட்டல் பேஷண்ட்க்கு டயடிஸ்ட் இருக்காங்க அவங்க கொடுக்கிற தான் சாப்பிடணும்...
உங்க அக்கறை எல்லாம் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் வச்சுக்கோங்க...
டெய்லி சூர்யாவை பார்க்கவாது வரலாமா...
என்ன காட்டுலையா விட்டு இருக்கீங்க...
அதெல்லாம் நல்லா தான் இருப்பா...
24 ஹவர்ஸ் நர்ஸ் கூடாவே இருப்பாங்க...
எந்த கவலையும் பட வேண்டியதில்லை நீங்க...
அங்கிள் உங்களுக்கும் தான் விசிட்டட் ஹவர்ஸ் டெய்லி பாக்க வரலாம்...
சரி பாபு...
என்னப்பா நீங்களும் எது சொன்னாலும் சரி சரின்னு சொல்றீங்க...
அதெல்லாம் முடியாது எங்க அப்பா என்கூட தான் இருப்பாரு சம்மதம்னா சொல்லுங்க ட்ரீட்மெண்ட் பார்க்கலாம் இல்ல நான் வீட்டுக்கு கிளம்புறேன்...
நான் டாக்டரா நீ டாக்டரா ரூல்ஸ் போட...
அப்பா வாங்க கிளம்புவோம்...
இரு சூர்யா...
எதுக்கு எடுத்தாலும் அவசரப்படாதே...
பாபு எது செஞ்சாலும் அது உன் நல்லதுக்கு தான்...
அப்பா வீட்ல என்ன சொன்னீங்க...
உனக்கு சரியாகனும்ல அப்பா பேச்ச கேளு பத்து நாள் அப்பா சொல்ற மாதிரி இங்கதான் இருக்கணும்...
அப்பா...
இந்த சிடு மூஞ்சி வைத்தியம் பார்த்து தான் நான் குணமாகணும்னு அவசியமில்லை வாங்க போலாம்...
சூர்யா என்ன பேசுற மரியாதையா பேசு,..
நான் என்ன பொய்யா சொல்றேன்... இந்த சிடுமூஞ்சி சிரிச்சு பாத்திருக்கீங்களா...
நான் இங்கதான் இருக்கேன் பார்த்து பேசு...
பார்த்து தான் பேசுறேன் எங்க அப்பா இருக்கறப்ப எனக்கு பயம் இல்லை...
அங்கிள் எங்க அம்மாவ கூட்டிட்டு கிளம்புங்க...
அப்பா போகாதீங்க...
சரி பாபு நான் கிளம்புறேன் சூர்யாவை பாத்துக்கோ...
வா லட்சுமி நம்ம போலாம் இங்க இருந்தா ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டே கிடக்கும்...
பாபு கொஞ்சம் கோவம் இல்லாம நடந்துக்கோடா...
அம்மா இப்ப கிளம்புங்க...
சரிப்பா போய்டுறேன்...
வாரேன்...
மருமகளே கவனமா...
பாபு முறைத்த முறையில் இருவரும் கிளம்பினர்...
இப்ப சொல்லு என்ன சொன்ன...
நான் ஒன்னும் சொல்லலையே...
மெடிசன் பாலோ பண்ணியா...
ம்ம்...
சாப்பிட்டியா..
.
.
கேட்டா கேட்டதுக்கு பதில் வரணும்
ம்...
பிரீத்திங் எக்சர்சைஸ் ஃபாலோ பண்றியா...
ம்...
ரெஸ்ட் எடு மத்தியானம் டெஸ்ட் கூட்டிட்டு போவாங்க...
டெஸ்ட் ரிப்போர்ட் வரவும் மெடிசின் கண்டினியூ பண்ணலாம்...
ம்...
எல்லாரும் இருந்தப்ப வாயகிழியா பேசினா இப்ப என்னவோ 'ம் 'மட்டும் வருது...
அவள் விழிகள் மட்டும் தான் பயந்து பேசியது வார்த்தை பேசவில்லை...
என்ன நினைத்தானோ கிளம்பி விட்டான்...



 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 16
என்னம்மா அதுக்குள்ள வந்துட்டீங்க...
அதை ஏன்டா கேட்கிற...
நீ சொன்ன மாதிரியே உன் அண்ணன் திட்டி அனுப்பிட்டான்டா...
ஹா ஹா ஹா ...
ஒரு பெரிய மனுஷன் சொன்னா கேட்கணும்...
அடிவாங்கிறாத இருக்க கோவத்துல உன்ன தான் அடிக்க போறேன்...
அவன பத்தி தெரிஞ்சு போனது உங்க தப்பு...
சூர்யாவ நினைச்சா தான் பாவமா இருக்குடா...
நானும் அதே தான் நினைக்கிறேன்...
சரிமா நான் வெளிய கிளம்புறேன்...
நவீனுக்கு போன் பண்ணி பேசணும் என்னதான் செய்றான்னு தெரியல...
ஹலோ நவீன்
அப்பாடா இந்த தடவை தான் உடனே உன் கிட்ட பேச முடிஞ்சிருக்கு...
எப்படி இருக்கீங்கஅம்மா...
எல்லாரும் நல்லா இருக்கீங்களா...
நாங்களாம் நல்லா தான்டா இருக்கோம்...
நீ பக்கத்துல இல்லை என்கிற குறை தான் டா எனக்கு...
உங்க குறை கூடிய சீக்கிரம் போகப்போது...
இங்க வேகமாவே கிளாசஸ் முடிஞ்சிடுச்சு...
நெஸ்ட் வீக் நிறைவு விழா சொல்லி இருக்காங்க...
அடுத்த வாரம் உங்க கூட இருப்பேன்...
நெஜமாவா உண்மைக்கே எனக்கு சந்தோசமா இருக்குடா...
இந்த சந்தோஷத்தோட இருங்க அடுத்த வாரம் நம்ம நேர்ல பாத்துரலாம்...
சரிடா...
வந்து ஒரு வாரம்தான் ரெஸ்ட் அடுத்து டூட்டில ஜாயின் பண்ணனும்...
சரிடா...
அப்பாட்ட சொன்னா சந்தோஷப்படுவாரு...
யார்ட்டையும் சொல்லாதீங்க அம்மா சர்ப்ரைஸா வரேன்...
உங்கிட்டயும் சொல்லாம சர்ப்ரைஸா வரலாம் என்று நினைத்தேன் போன் பண்ணதனால சொல்லிட்டேன்...
என்கிட்ட ரகசியம் சொல்லாமல் இருக்க முடியுமான்னு தெரியலையே டா... முடிஞ்சவரை சொல்லாமல் இருக்க ட்ரை பண்றேன்...
என் செல்ல அம்மா யார்ட்டையும் சொல்லாம இருப்பாங்களாம்...
சரிடா...
கண்டிப்பா சொல்லல போதுமா...
ஓகே மா...
சரி நான் வைக்கிறேன் நெக்ஸ்ட் வீக் பார்க்கலாம்...
ம்.
க்ரிஷ் வரிசையாக நட்சத்திராவிற்கு மெசேஜ் அனுப்பினான்...
ஸ்டார் நீ இப்ப வரலைன்னா நான் உங்க வீட்டுக்கு வருவேன்...
ஏன் கிரிஷ் இப்படி பண்ற...
நான் தான் சொல்றேன்ல அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்...
வாரம் ஒரு நாள் கூட உன்னை பார்க்க முடியலையே...
அதுக்குன்னு வீட்டு வாசலுக்கு வந்துருவியா...
எங்க அப்பா மட்டும் பார்த்தாரு நம்ம பாக்குறது கடைசி அன்னிக்கு நாள் தான்...
இப்படியே பயமுறுத்தாத ஸ்டார்...
நான் இப்ப உங்க வீட்டுக்கு வாரேன் உங்க அப்பா என்ன செய்றாருனு நான் பாக்குறேன்...
சொன்னா கேளு கிரிஷ்...
இப்ப வர முடியுமா வர முடியாதா ப்ளீஸ் ஸ்டார் உன்ன பாக்கணும்...
எப்பவும் போல ஐஸ்கிரீம் கடையில வெயிட் பண்ணு 5 மினிட்ஸ்ல வரேன்...
அதான் என் ஸ்டார் வேகமா வந்துடு...
சரி இப்ப நீ கிளம்பு...
நீ வாசல்ல நிக்கிறது எனக்கு பயமா இருக்கு...
அவன் கிளம்புவதற்குள் வாசலில்...
ஏய் தம்பி இங்க வா...
அச்சோ அப்பா உன்னை கூப்பிடுறாரு...
மாட்டிக்கிட்டடா...
அனுப்பிய மெசேஜ் எல்லாம் அழித்துவிட்டு ஓடி சென்று ரூமில் ஒளிந்து கொண்டால் நட்சத்திரா...
கவனிக்காதது போல் கிரிஷ் திரும்பிக் கொண்டான்
ஏ தம்பி உன்ன தான் இங்க வா...
நானா அங்கிள்...
நீதான் இங்க வா...
ரொம்ப நேரமா இந்த தெருவை சுத்தி வரியே என்ன வேணும்...
கைல போன் வேற...
ஃபோனுக்குள்ள மண்டை விட்டுட்டே
நடந்து வர எதுக்கு வண்டி வந்தா என்ன பண்ணுவ...
என் பிரண்டு இந்த தெருவில் இருக்கிறதா லொகேஷன் அனுப்புனான் தேடிட்டு வர அங்கிள்...
எத்தனை சுத்து சுத்துனாலும் இந்த தெருவை தான் சுத்தி வருது என் பிரண்டு வீட காணோம்...
உன் பார்வையே சரியில்லையே...
பிரண்டை தான் தேடுறியா இல்ல யாரும் பொண்ணு கிடைப்பாலனு சுத்தி வாரியா...
நான் அப்படியெல்லாம் இல்லை அங்கிள் நான் ரொம்ப நல்ல பையன்...
15 வருஷமா மிலிட்ரில இருக்கேன் பார்வை வச்சே நான் கண்டுபிடிச்சிடுவேன் டா...
இப்ப இந்த தெருவை எத்தனை தடவை சுத்தி இருக்க...
நான் எண்ணலையே அங்கிள்...
20 தடவை சுத்தி இருக்கே...
சூப்பர் அங்கிள் நான் சுத்துனத நீங்க எண்ணி இருக்கீங்க...
பத்து நாளுக்கு முன்னாடி இந்த தெருவுல உன்னை பார்த்தேனே...
பத்து நாளாவா உன் பிரண்டு வீட்டில் தேடிக்கிட்டு இருக்க...
நீங்க ரொம்ப ஷார்ப்பா இருக்கீங்க அங்கிள்...
பத்து நாளைக்கு முன்னாடி வந்தேன் தான் அங்கிள்...
அவன் ஊருக்கு போயிருக்கதா ஏதாவது சொல்லிட்டு பத்து நாள் கழிச்சு வர சொல்லிட்டான் அங்கிள்...
ஊருக்கு வந்துட்டான் இன்னும் என்னைய வந்து கூட்டிட்டு போக மாட்டேங்கிறான்...
என்ன சுத்தலையே விடுறான்...
பாருங்க இப்ப உங்ககிட்ட தான் மாட்டிக்கிட்டேன்...
அவன் என் கையில மாட்ட மாட்டேங்குறான்...
சரி உன் ஃப்ரெண்ட் பேர் சொல்லு எந்த வீடு நான் சொல்றேன்...
அது அங்கிள் அவன் பேரு அவன் பேரு...
உன் பிரண்ட் பெயர் கூடவா தெரியல...
அவன நான் மங்கி னு செல்ல பேர் வச்சு தான் கூப்பிடுவேன் உண்மையான பெயரை மறந்து போச்சு அங்கிள்
மருது
மருது என்கிற பெயர்ல இந்த தெருவில் யாரும் இல்லை...
இன்னொரு தடவை உன்ன இந்த தெருவுல பார்த்தேன் நடக்குறதே வேற...
என்ன நடக்கும் அங்கிள்...
துப்பாக்கிய வச்சு சுட்டுடுவேன்...
அங்கிள் நான் பாவம்...
சரி அங்கிள் இந்த பக்கமே நான் வரமாட்டேன்...
கிளம்புடா...
சரி அங்கிள் பை..
தப்பிதோம் பிழைத்தோம் என்று கிளம்பிட்டான்...
எப்படி ஸ்டார் இந்த மிலிட்டரிய சமாளிக்குற...
மருத்துவமனையில்
நர்ஸ் எப்படி தான் இந்த டாக்டர சமாளிக்கிறீங்க...
அதை ஏன் கேக்குறீங்க மேம் ரொம்ப கஷ்டம் தான்...
டாக்டர் உங்க சொந்தக்காரரா?
டாக்டரோட அம்மாவே உங்களை சேர்த்து விடுவதற்கு இங்க வந்தாங்க
அதான் கேட்டேன்...
ஆமா சிஸ்டர்...
சின்ன வயசுல இருந்தே அவங்க அப்பாவும் எங்க அப்பாவும் பிரண்ட்ஸ்...
எங்க அத்தை எவ்வளவு ஸ்வீட் தெரியுமா...
அவங்கபையன் ஏண்டா இப்படி இருக்காரோ...
ஒருவேளை அத்தை ஹாஸ்பிடல பையன மாத்திட்டு வந்து இருப்பாங்களோ...
இந்த டவுட் ரொம்ப நாளா இருக்கு யாருட்ட கேக்கன்னு தெரியல...
நீங்க ரொம்ப ஸ்வீட்டா பேசுறீங்க மேம்...
மேம் னு சொல்லாதீங்க சூரியன்னு கூப்பிடுங்க நான் சின்ன பொண்ணு தான் உங்கள விட...
நாம பேசறது நமக்குள்ள இருக்கணும்...
டாக்டருக்க காதுக்கு போயிடாம...
பத்து நாள் எப்படி இருக்க போறேன்னு தெரியல சிஸ்டர்...
பாபுவிற்கு முதல் இருந்த அழுத்தம் இப்போது இருப்பதில்லை...
கண் மூடினால் சூர்யாவின் மருண்ட விழிதான் நினைவில் வருது...



 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 17
செல்வா தன் நண்பனிடம் எங்கேயாவது வெளிய போலாமா டா ராஜ்...
எங்கடா போக...
நரேன் அண்ணா வர்ற நேரம்டா...
வெளியே போறப்ப எதுக்க பார்த்தா எங்க போற ஏன் போறன்னு கேக்க போறாரு...
நீ டெய்லி சாயங்காலம் அஞ்சுல இருந்து ஏழு மணி வரை எங்க போறன்னு ஏற்கனவே அண்ணன் அடிக்கடி என்கிட்ட விசாரிக்கிறார்...
ஆம் செல்வா ஒரு நாள் மட்டும் தங்கை பார்க்க போனால் மாட்டிக் கொள்வோம் என்று தினமும் 5 மணி முதல் 7 மணி வரை கடற்கரைக்கு தனியாக சென்று வருவான்...
வந்ததிலிருந்து இது பழக்கமாக வைத்ததால் யாரும் எதுவும் கேட்பதில்லை...
வந்த புதிதில் மனது ஒரு மாதிரியாக இருக்கிறது கொஞ்ச நேரம் வெளியே போயிட்டு வருகிறேன் என்று சொல்லி வருவான்...
நரேனும் இவன் டெய்லி செல்கிறான் எங்கு செல்கிறான் என்று ஆள் வைத்து அறிந்து வர சொன்னான்...
தனியாக கடற்கரை மண்ணில் அமர்ந்து இருந்து விட்டு வருவதாக தினமும் வந்து சொன்னார்கள்...
அதன்பின் தான் இதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை...
அவனும் வாரத்தில் உள்ள அனைத்து நாட்களும் கடற்கரையிலும் ஒரு நாள் தங்கையை பார்த்துக் கொள்வதும் என கவனமாக இருந்தான்...
நானும் உன்கிட்ட கேட்க நினைச்சேன் என்னடா பத்து வருஷமா டெய்லி போயிட்டு வர எதுக்குடா போற...
சின்ன வயசுல இருந்து பழகிடுச்சுடா டெய்லி கடற்கரையில் உட்கார்ந்து வந்தா தான் மனச அமைதியா இருக்கு...
நான் கூட ஏதோ லவ் ஏதாவது இருக்கும்னு நினைச்சேன் டா...
நாம இருக்க நிலையில லவ்வு தான் குறைச்சல்...
எனக்கு இந்த அடி தடி எதுவும் பிடிக்கலைடா இப்பலாம் அமைதியான வாழ்க்கை வாழனும்னு ஆசையா இருக்கு...
நரேன் அண்ணாட்ட கேட்டா விடுவாராடா...
என்னடா இங்கே இத்தனை வருஷம் இருந்துட்டு அண்ணனை பத்தி தெரியாம இருக்க...
போன வருஷம் நம்ம கதிர் போறேன்னு சொன்னதுக்கு அண்ணா என்ன செஞ்சாருன்னு பார்த்தேல...
ஆமா டா அஞ்சு கொலை பண்ணுன கேஸ் அவன் மேல போட்டு உள்ள தள்ளிட்டார்டா...
ஆயுள் தண்டனை கொடுத்துட்டாங்க கோர்ட்லயும்...
நீயும் அது மாதிரி ஜெயிலுக்கு போக ஆசைபடுறியாடா...
இல்லடா...
நீ இங்கிருந்து போகணும்னு ஆசைப்பட்டதில்லையாடா...
ஆசைதான் என்ன பண்றது எப்படியோ தெரியாம உள்ள வந்து மாட்டிக்கிட்டாச்சு...
அண்ணா நல்லா தான் பாத்துக்குறாரு...
ஆனாலும் மனசுல நிம்மதி இல்லடா...
பேசிக் கொண்டிருக்கும் போதே வண்டியில் இருந்து வேகமாக இறங்கி அழுத்தமான காலடியுடன் நரேன் உள்ளே வந்தான்...
டேய் எல்லாரும் இங்க வாங்கடா...

என்னங்கண்ணா...
நம்ம மினிஸ்டர் சதாசிவம் ஐயாக்கு எதிராக போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க...
நீங்க எல்லாரும் என்ன பண்றிங்க கூட்டத்தோட கூட்டமா கலந்து போராட்டத்தை கலைச்சு கலவரமா மாத்தி போராட்டத்தை திசை திருப்பிட்டு வந்துடுங்கடா ...
வாங்கடா எல்லாரும் போவோம்...
செல்வா வா நாமலும் போலாம்...
அப்புறம் பேசலாம்...
செல்வம் மனதில் ஆயிரம் குழப்பம் எப்படி இங்கிருந்து தப்பிப்பது என்று...
வெண்ணிலா படித்து முடித்து வருவதற்குள்...
நரேனிடம் நேரடியாக பேசவும் பயம்...
பேசி ஒரு வேளை ஜெயிலுக்கு அனுப்பி விட்டால் தங்கை நிலைமை நினைத்து பயம்...
அவனைத் தவிர அவளுக்கும் யாரும் இல்லை அல்லவா...
இந்த கவனமாக கையாள நினைத்தான்...
சிறுவயதில் அறியாமல் வந்து மாட்டிக்கொண்டதை நினைத்து இப்பொழுதும் நொந்து கொள்கிறான்...

SSS மருத்துவமனை
சூர்யா அறையில் நிற்பது ஒரு மாதிரி இருக்க வெளியே வராண்டாவில் மெதுவாக நடந்துட்டு வரவா ...
நர்ஸ் வெளியே போக வேண்டாம் என்று சொல்லியும் கேட்கவில்லை...
ஒரே இடத்தில் அடைந்து இருக்கிறது ஜெயில்ல இருக்கிற மாதிரி இருக்கு...
மெதுவா கொஞ்சம் தூரம் நடந்துட்டு வருகிறேன்...
டாக்டர் ஏதாவது சொன்னா என்ன செய்யறது...
சொன்னா பாத்துக்கலாம்...
என்னால ரூமுக்குள்ள இருக்க முடியாது...
அப்படியே நடந்தே எங்க அப்பாவ பார்த்துட்டு வந்துடறேன்...
எதுக்கு நீங்க அவ்வளவு தூரம் அலையறீங்க அப்பாக்கு போன் போடுங்க அப்பா வந்து பாத்துட்டு போவாங்க...

ப்ளீஸ் சிஸ்டர்...

என்னால காலையில இருந்து ஒரே இடத்துல இருக்க முடியல...
டாக்டர் கேட்டா வாக்கிங் போறேன்னு சொல்லி இருங்கள் சிஸ்டர் ப்ளீஸ்...
சரி போய்ட்டு வாங்க...
டாக்டர் 30 மினிட்ஸ்ல ரவுண்ட்ஸ் வருவாங்க அதுக்குள்ள வந்துருங்க...

கண்டிப்பா சிஸ்டர்...
தேங்க்யூ...
கொஞ்ச தூரம் நடந்திருப்பாள் 2அறை தள்ளி வயதான அம்மா தனது அறையில் எழுந்து குடிக்க நீர் எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தார் எட்டவில்லை...
இதை பார்த்த சூர்யா அந்த அறைக்குள் சென்று தண்ணீர் எடுத்து கொடுத்து குடிக்க உதவி செய்தாள்...
ரெம்ப நன்றி டா பாப்பா...
கூட யாரும் இல்லையாமா...
நர்ஸ் மெடிசின் எடுக்க போடுக்காங்க டா...
பெசென்ட் ரூம் ல எல்லாரும் இருக்க கூடாதுலமா...
நீ எதுக்கு இங்க வந்துடுக்கடா...
ஒன்னுமில்லைமா சின்ன ப்ரோப்லேம் வீட்லயே சரி பண்ணிடுக்கலாம் இந்த டாக்டர் இப்படி இங்க ஜெயில்ல வச்ச மாறி அட்மிட் பண்ணிடார்...
குணமாக இருக்கது உனக்கு ஜெயில்ல நல்ல பொண்ணுமா...
உங்களுக்கு என்ன மா...
நல்லாதான் இருந்தேன் திடீருனு நெஞ்சு வலி வந்து மாயன்கிட்டேன்...
பிள்ளைக இங்க கொண்டு வந்து சேத்துட்டாங்க... ஹார்ட் பக்கத்து அடைப்பு இருக்கு...
ஆபரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டாங்க...
70வயசு ஆச்சு நிம்மதியா சந்தோசமா வாழ்ந்தாச்சு, பேரன் பேத்திலாம் பாத்தாச்சி...
நிம்மதியா போற காலம் வந்துடுச்சி...
அப்டியே இருக்கலாம்னு பத்தா பிள்ளைகள் இங்க கொண்டு வந்து சேத்துட்டாங்க...
இங்க ஆபரேஷன் பண்றதுக்கு முதல் உடம்பு ஹெல்த்தியா இருக்கனும்னு 10நாள் அப்புறம் ஆபரேஷன் சொல்லிட்டாங்க...
பேரன் பேத்திக கூட சந்தோசமா இருந்துட்டு இப்படி ஹாஸ்பிடல்ல அடைஞ்சி இருக்க கஷ்டமா இருக்கு...
இதுக்கு அப்பறம் வாழ என்ன இருக்கு சொல்லு...
என்னம்மா இப்படி பேசுறேங்க...
பேரன் பேத்திக கூட இன்னும் கொஞ்ச நாள் சந்தோசமா இருக்க ஆசை இல்லயா...
இருக்குதான்...
ஆன உடம்பு நல்லாருந்து அவுங்கல பாத்துக்குறதுக்கும் உடம்பு முடியாம அவுங்களுக்கு பாரம நாம இருக்கதுக்கும் வித்யாசம் இருக்குல்லடா...
நீங்க ஏன் அப்படி நினைக்குறீங்க...
இத்தன நாள் நீங்க அவுங்கள பாத்துக்கிட்டதுக்கு இப்போ உங்கள பாத்துக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்குதுனு அவுங்க நினைக்கலாம்ல...
ஆபரேஷன் முடிஞ்சு நல்லாகவும் பேரன் பேத்திகளோட கூட கொஞ்ச நாள் சந்தோசம இருக்க கடவுள் நினைச்சிடுக்கலாம்ல...
உன்ட பேசவும் மனசுக்கு நல்லா இருக்குடா பாப்பா ...
நீங்க வேணும்னா பாருங்க உங்க பேரன் பேத்திகளுக்கு கல்யாணம் முடிஞ்சு கொள்ளு பேரன் பேத்திகள கொஞ்சும் போது இந்த சூர்யாவ நினைத்து பாக்கணும் அந்த பாப்பா சொன்ன மாறி கொள்ளு பேரனோட விளையாடுறோம்னு...
அதலம் 100வருஷம் நல்லாருப்பீங்க...
பேசி கொண்டிருக்கும் போதே பாபு வாசலில்...
நர்ஸ்ஸ்ஸ்...
எஸ் டாக்டர்...
என்ன பண்ணிட்டு இருக்கீங்க...
ஒரு பேஷண்ட் ரூமில் இன்னொரு பேஷண்ட்...
இன்ஃபெக்சன் ஆனா என்ன பண்ணுவீங்க...
சாரி டாக்டர்...
தம்பி திட்டாத பா...
தண்ணி குடிக்க கஷ்டப்பட்டு இருந்தேன்...
இந்த பாப்பா தான் வந்து ஹெல்ப் பண்ணா...
ஹெல்ப்புக்கு இங்க இருந்த நர்ஸ் எங்க...
சார் அவங்க தூங்கிட்டு இருந்தாங்க மெடிசன் காலி ஆயிடுச்சு போய் எடுக்க போயிருந்தேன்...
சாரி டாக்டர்...
அகைன் இந்த மிஸ்டேக் நடக்க கூடாது...
கண்டிப்பாக டாக்டர்... சாரி டாக்டர்...
மிஸ் சூர்யா நீங்க உங்க ரூமுக்கு போங்க...
நீங்க எதுக்கு இப்ப வெளியே வந்தீங்க...
உள்ள இருக்க ஒரு மாதிரி இருந்துச்சு...
அதான் சுத்தி பாக்கலாம்னு...
கொஞ்சமாதான் அறிவு இருக்கா உனக்கு இது சுத்தி பாக்குற இடமா...
எதுக்கு என்ன திட்டிகிட்டே இருக்கீங்க...
எனக்கு உங்கள பாக்கவே பிடிக்கல...
இனி ரூம் வீட்டு வெளிய வரல போதுமா...
நர்ஸ் டூட்டி டைம் முடியவும் என்ன வந்து மீட் பண்ணுங்க...
அவுங்கள ஏதும் சொல்லாதீங்க நானா தான் அவுங்க பேச்ச கேக்காம போனேன்...
ஒரு முறைப்புடன் வெளியேறினான்...




 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 18

என்ன லக்ஷ்மி உன் வீட்டுக்குள்ள வாசம் நல்லா பலமா இருக்கு...

அதிரசம், அச்சு முறுக்கு, லட்டு

ஒரே இனிப்பா இருக்கே...

தீபாவளி கூட இன்னும் வரலையே...

தீபாவளி வந்தா தான் ஸ்வீட் சாப்பிடணுமாங்க...

அப்படிலாம் இல்ல...

நிறைய இனிப்பு ஐட்டம் செய்யவும் ஏதோ ஃபங்ஷன் பூஜை எதுவும் நடக்க போதா?

அது எல்லாம் இல்லைங்க...

அப்புறம்...

நவீனுக்கு ஸ்வீட் ரொம்ப பிடிக்கும்...

பிடிக்கும் ஆனா அவன் தான் இங்க இல்லையே...

அடுத்த மாசம் தானே வாரான்...

ஏதாவது கேட்டுகிட்டே இருக்காம இந்த லட்ட உருட்டுங்க...

அதெல்லாம் ஈஸியா உருட்டிடலாம் காரணம் கேட்டேன்...

எனக்கு சாப்பிடனும் போல இருந்துச்சு செஞ்சேன்...

இவ்வளவா...

உன் பையன் பாபுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் இவ்வளவு ஸ்வீட்டை சாப்பிடுரன்ன என்ன ஹாஸ்பிடல டெஸ்ட் எடுக்கலாம் வாங்கன்னு அட்மிட் பண்ணிடுவான்...

அச்சோ என்னால என்ன சொல்லனு தெரியலையே...

கிரிஷுக்காக செஞ்சேன்...

என்கிட்டே பொய் சொல்றியா...

எனக்கு என்ன பத்தி தெரியுதா இல்லையோ உங்க நாலு பேர பத்தி தெரியும்...

என்ன தெரியும்...

உனக்கு பொய் சொல்ல வராது என்று தெரியும்...

கிரிஷ் ஸ்வீட் சாப்பிட மாட்டான் தெரியும்...

நவீன் ஒருத்தன் தான் நம்ம வீட்டுல ஸ்வீட் சாப்பிடுற ஒரு ஆள்...

பாபு சாப்பாட்டுல ஹெல்தி இருக்குன்னு தான் நினைப்பான்...

இப்ப பொய் சொல்லாம சொல்லுவியா என்னன்னு...

நவீன் யார்கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சொல்லி இருக்கானே...
என்ன சொல்ல கூடாதுன்னு சொல்லி இருக்கான்...

என்னால ரகசியத்தை காப்பாத்த முடியல...
நவீன் இன்னும் ரெண்டு நாள்ல இங்க வராங்க...
உங்க எல்லாருக்கும் சர்ப்ரைஸா இருக்கட்டும் தெரிய வேணாம்னு சொன்னான்...
உங்க கிட்ட உண்மையா என்னால மறக்க முடியுமா...
மோப்பம் புடிச்சு கண்டுபிடிச்சுருவிங்க...
ஹா ஹா ஹா...
நெனச்சேன்...

நம்ம லட்சுமி இவ்வளவு ஸ்வீட் எதுக்கு செய்றானு...

அந்த வாலு எங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்குதாக்கும்...

நீ என்கிட்ட சொல்லலனே சொல்லிக்கோ நாங்களும் சர்ப்ரைஸ் ஆயிட்டோம்னு சர்ப்ரைஸ் ஆயிடுறோம்...

போங்கங்க...

போகவா லட்டு பிடிக்கவா...

லட்டவே உருட்டுங்க...
அவனுக்கு குலோப் ஜாமுன் பிடிக்கும் அது செய்யலையா லட்சுமி...

அது வர்றன்னைக்கு செஞ்சிக்கலாங்க முன்னாடியே செஞ்சா நல்லா இருக்காது...

கிரிஷ் எங்க லக்ஷ்மி?

பிசினஸ் விஷயமா தான் ஏதோ ஃபார்ம் பார்க்க போறேன்னு சொல்லிட்டு போனாங்க...

அவன் பிசினசும் நல்லா வந்தா நல்லா இருக்கும் லட்சுமி...

அதெல்லாம் எல்லா பிள்ளைகளும் உங்களை மாதிரிதாங்க முயற்சி செஞ்சு முன்னுக்கு வந்துடுவாங்க...

ம் ...



நட்சத்திரா...

என்னங்கப்பா...

எப்ப உனக்கு எக்ஸாம்ஸ் முடியுது...

ஒன் மன்த்ல முடிந்திருப்பா...

நெக்ஸ்ட் என்ன பிளான் பண்ணி இருக்க...

மாஸ்டர் டிகிரி இதே காலேஜ்ல படிக்கலாம்னு இருக்கேன் பா...

அதெல்லாம் வேணாம்...
எக்ஸாம் முடியவும் நல்ல நாள் பார்த்து உன்ன பொண்ணு பாக்க வரச்சொல்லிருக்கேன்..

இல்லப்பா நான் படிக்கணும் பா...

படிக்க வேணாம்னு நான் சொல்லவே இல்லையே...

டெல்லி டெக்னாலஜிகல் யுனிவர்சிட்டில மாஸ்டர்ஸ் பண்ணு...

அப்ளிகேஷன் டேபிளில் இருக்கு ஃபில் பண்ணி எனக்கு அடுத்த வாரம் கொடு...

என் பிரண்டு டெல்லியில் இருக்கான் அவன் மகனும் மிலிட்டரி ல தான் இருக்கான்...

இந்த டைம் லீவுல இங்க வரும்போது பொண்ணு பாத்து சிம்பிளா கல்யாணத்தை முடிச்சிடலாம்...

அப்பா...

ப்ளீஸ்பா...

இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு படிச்சுட்டு கல்யாணம் பண்ணிக்கிறேன்...

இல்ல நட்சத்திர அது சரி வராது...
இப்பவே 21 வயசாட்ச்சு...

படிப்பு வேலை எதுவும் கல்யாணத்துல தடையாகாது...

உன்ன கண்டிப்பா மேல படிக்க வைப்பாங்க...

உனக்கு வேலைக்கு போகவும் அனுமதி இருக்கு அவங்க வீட்ல

எனக்கு உங்களை எல்லாம் விட்டுட்டு இருக்க முடியாது பா...
இங்கேயே இருக்கிறேன் பா...

நீ மேரேஜ் ஆகி செட்டில் ஆயிட்டேனா நானும் அம்மாவும் டெல்லிக்கு வந்துடுவோம்...

என்ன ராதா நம்ம டெல்லியில் செட்டில் ஆயிடலாம்ல...

ம்ம் சரிங்க...

உங்க அம்மா கிட்ட இருந்து கத்துக்கோ...

என்னைக்காவது நான் சொல்லி மறுத்து பேசி இருக்களா...
என்ன சொன்னாலும் சரிங்கறதுக்கு அடுத்த வார்த்தை வராது...

அதுதான் அடக்கத்துக்கு அழகு...

நீ இன்னொரு வீட்டுக்கு போற பொண்ணு எப்படி எதிர்த்து பேசி பழகாத...

போற வீட்ல இதே மாதிரி அம்மா எப்படி இருக்காங்களோ அதே மாதிரி அமைதியா இருந்து பழகணும்...

அதுதான் அம்மாவுக்கு எனக்கும் உன்னால கிடைக்குற செய்ற பெருமை...

பொண்ணு நல்லா வளர்த்திருக்காங்கன்னு பேர் வாங்கணும்...

எக்ஸாம் முடிஞ்சு பத்து நாள்ல பொண்ணு பாக்க வருவாங்க ரெடியா இரு...

அப்ளிகேஷனை ஃபில் பண்ணி எனக்கு ஒரு வாரத்துல தா...

சரியா...
திரும்ப இத பத்தி பேச வைக்க கூடாது கரெக்டா அந்தந்த டயத்துக்கு கரெக்ட்டா நடக்கணும்....
சரியான கேட்டேன்..
ம்ம் சரிங்கப்பா...







 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 19
நட்சத்திர மனதில் ஆயிரம் குழப்பங்கள்...
அம்மாவிடம் பேசலாம் என்று நினைத்தால் அம்மா அப்பா சொல்லுக்கு மறு பேச்சு எப்போதும் பேசியதில்லை இதுவரை...
ஒரு மாதம் மட்டுமே இருக்கிறது குறைந்த இடைவெளி...
என்ன செய்யலாம் என்ன செய்யலாம் என்ற யோசனையில்
அழுதது மட்டும்தான் மிச்சம்...
கிரிஷ் இப்போது தான் பிஸ்னஸை தொடங்கி இருக்கிறான்...


அப்பாவிடம் பேச சொல்லலாம் என்று நினைத்தால் அவனுடைய இரு அண்ணன்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை...



பிறந்ததிலிருந்து சட்ட திட்டம் நேரம் ஒழுங்கு என்று வளர்ந்தவளால் திரும்பவும் அதே மாதிரி சூழலில் வாழும் விருப்பம் துளியும் இல்லை...



அப்பாவை மீறி பேசும் தைரியமும் இல்லை...



அம்மாவின் உதவியும் இல்லை...



என்ன செய்வது என்று தெரியாத நிலை....



முதலில் என்ன செய்யலாம் என்று யோசிப்போம் அதன்பின் கிருஷிடம் முடிவு சொல்வோம் என்று யோசித்துக் கொண்டே இருந்தாள்...



கிரிஷ் மீதான தன் அளவு கடந்த காதல்...



அவன் இல்லாமல் வேறு வாழ்வை யோசிக்கவும் முடியவில்லை...



இரு நாட்களாக கிருஷிடம் பேசவில்லை...



அவனும் என்னை ஏது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தான்...



வீட்டுக்கு போகலாம் என்று நினைத்தால் ஏற்கனவே அன்று வாங்கிய திட்டு மனதில் வந்தது...



என் ஸ்டார் என் போன் எடுக்க மாட்ற என்ன பிரச்சனை என்ன இதுன்னு தெரியலையே அவனும் ஒரு நிலையில் இல்லை...



வழக்கமாக இருக்கும் அவனது கேலி கிண்டல் வீட்டில் குறைந்தது...



என்ன கிருஷ் ஏதும் பிரச்சனையாடா



இல்லம்மா...



எப்பயும் உன் முகத்தில் இருக்க சந்தோசத்தை கானோம் டா...



இல்லம்மா லைட்டா தலை வலிக்குது...



பிசினஸ் ல ஏதும் பிராப்ளமா அப்பாட்ட சொல்லி பணம் ஏது ஏற்பாடு பண்ணவா...



அதெல்லாம் இல்லமா பிசினஸ் சூப்பரா போகுது...



அப்புறம் ஏன்டா இப்படி இருக்க...



அது ஒன்னும் இல்லம்மா...



ரெண்டு நாளா என் பிரண்டு போன் எடுக்க மாட்றாங்க...



நேரில் போய் பார்க்க வேண்டியது தான்டா...



அப்பா திட்டுவாறே...



நீ என்னைக்கு உங்க அப்பா திட்டத்துக்கு எல்லாம் கவலைப்பட்ட...



என் அப்பா இல்லம்மா...



பிரண்டோட அப்பா...



அப்ப உன் பிரண்ட் இங்க வர சொல்லு பேசலாம் நாலாம் திட்ட மாட்டேன்...



உண்மைக்கா அப்ப கூட்டு வரவா...



அடிக்கடி ஜூனியர் கூப்ட்டு வரேன்னு சொன்னது வேணாம் சொல்லுவிங்க...



பாய் ஃப்ரெண்ட் இல்லையாடா...



எனக்கு எந்த காலத்திலும் பாய் ஃப்ரெண்ட் இருக்காங்க...



அடி வெளுக்க போறேன் ஓடுடா...



இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது நவீன் வாசலில் அம்மா என்று அழைத்தான்...



நவீன் வாடா...



எவ்வளவு நாள் உன்னை பார்த்து ஏன்டா இப்படி மெலிந்து போயிட்ட...



எப்படி போன வரும்போது ஏன்டா இப்படி வந்து இருக்க...



நான் ஜிம்முக்கு போய் கஷ்டப்பட்டு உடம்ப சிக்ஸ் பேக்லாம் கொண்டு வந்தா என்ன போய் மெலிந்திருக்கேனு சொல்லிட்டீங்களேம்மா...



எப்படி டா இருக்க கிருஷ் என்று தம்பியை அணைத்துக் கொண்டான்...



நான் எல்லாம் நல்லா இருக்கேன் டா...


என் ஆளு நல்ல மாஸா இருக்கடா...

பொறாமை...

அப்படியா பொறாமை பட்டாலும் உன்னை பார்த்து...



வந்ததும் ரெண்டு பேரு ஆரம்பிக்காதீங்க...



போய் ஃப்ரஷ் ஆயிட்டு வாடா...



அப்பா எங்க அம்மா...



குளிச்சிட்டு இருக்கார் நீயும் போய் பிரஷ் ஆகிவிட்டு வா சேந்து சாப்பிடலாம்...

சரி மா...

டேய் எல்லாத்தையும் என் ரூமுக்கு தூக்கிட்டு வாடா...



ஏன் சார் தூக்க மாட்டீங்களா...

ஒரு அண்ணனுக்காக இந்த உதவி கூட செய்ய மாட்டியா...

தூக்கிட்டு வந்து தொலைக்குறேன் போ...

தட்ஸ் மை பாய் இன்று கன்னத்தில் தட்டி மாடி ஏறிவிட்டான்...

பாருங்கமா எல்லாருக்கும் நான் தான் வேலை பார்க்க வேண்டி இருக்கு எனக்கு யாராவது வேலை பாக்குறீங்களா...

ஆமா பெரிய வேலை பாத்துட்டே போடா...

இத்தனை நாள் உங்க ரெண்டு பேர் சண்டை இல்லாம கொஞ்சம் நிம்மதியா இருந்தேன் திரும்ப ஆரம்பிச்சிட்டீங்க இல்ல...

அண்ணன் தம்பி னா அப்பத்தான் இருப்போம் அப்புறம் உங்க மூத்த பையன் மாதிரியே எதிர்பார்த்தாலும்

உர் உர் ர் னு இருக்கது...

ஆமா சூர்யா எப்படி இருக்க போய் பாத்தீங்களா...

எப்ப கல்யாணம் வைக்க போறீங்க அவனுக்கு...

சூர்யா மொத சரியாகி வரட்டும் டா...

வரவும் வேமா வச்சிடலாம்...

உன் அண்ணன் மனசு மாறுறதுக்குள்ள வேகமா கல்யாணத்தை முடிச்சுடனும்...


அடிக்கடி இப்ப நான் அவன வீட்ல பார்க்கிறதே இல்லையே வீட்டில் இருக்கானா இல்லையா...

எப்பயாவது வர்றான் நைட்டு எல்லாரும் தூங்குனதுக்கு அப்புறம் வரான் காலையில வேகமா கிளம்பி போறான்... சூர்யா பத்தி கேட்கலாம் நினைச்சா கண்ணலையே சிக்க மாட்றான்...

பார்க்க தான் ஆளு அப்படி மா செம கேடி...

எங்க பாத்தா நீங்க எதாவது கேப்பீங்க நம்ம பதில் சொல்ல வேண்டியது வரும்னு பயந்து ஓடறான்மா சரியான பயம்தான்கோழி...

அவன் இருக்கும்போது அவன் முன்னாடி இதை சொல்லு பார்க்கலாம்...

ஏம்மா ஏன்...

நானும் போய் பிரஷ் ஆயிட்டு வரேன் எனக்கும் பசிக்குது உங்களோட பேசி பேசி...

நவீன் பேக்கை தூக்கிட்டு போடா...



கரெக்டா இருப்பீங்களே வேலைல எல்லாம்...

தூக்குறேன் தூக்குறேன் போதுமா..

ம்ம்...
அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்...

லட்சுமி ரொம்ப நாளுக்கு அப்புறம் ரொம்ப சந்தோசமா சாப்பிடற மாதிரி இருக்கு...
ஆமாங்க..

பாபும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டால் இன்னும் சந்தோஷமா இருந்திருப்பேன்...

நாளைக்கு காலைல சாப்பிடலாம்ங்க...

ரொம்ப நாளாச்சு லட்சுமி...

நவீன் ட்ரெய்னிங் எல்லாம் நல்லபடியா முடிஞ்சாடாமா...


முடிஞ்சுபா...

உங்கள ரொம்ப மிஸ் பண்ணேன்பா...
எங்க டூட்டி போட்டு இருக்காங்க டா...
இங்க பக்கத்துல தான் பா டெய்லி போயிட்டு வந்துரலாம் ஒன்னும் பிரச்சனை இருக்காது...
சந்தோசம் டா...
டேய் கிரிஷ் பைக் எடுத்துட்டு வாடா நம்ம ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் வெளியே போய்டும் ரவுண்டு அடிச்சுட்டு வரலாம்...
உன் கூடயா...
எப்பவுமே உன் சேர்ந்து போனா எல்லாரும் உன்னை தான் பார்ப்பாங்க இப்போ பெரிய போலீஸ் வேற...
யாராவது என்னை பார்ப்பாங்களா...
நீ தனியாவே போடா...
உனக்கும் எனக்கும் ஒரே பைக்ல போறது செட்டாகாது...
கதையெல்லாம் பேசாம வாடா...
சரி சரி வாரேன்...
அம்மா நாங்க வெளிய போயிட்டு வரோம்...
சாப்பிட வந்துடுடா...
சரிங்கம்மா..







 
Status
Not open for further replies.
Top