ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆழ் கடலும் சோலையாகும்-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 10

ஹலோ சூர்யா... எந்திரி... சூர்யா எந்திரி...

நர்ஸ் இங்க வாங்க...

இவங்கள அந்த பெட்ல படுக்க வைங்க

Benzodiazepines மெடிசன் குடுங்க நான் வந்துடறேன்...

அந்த சீட்ல டெஸ்ட் லிஸ்ட் எழுதி வச்சிருக்கேன் எல்லா டெஸ்ட் எடுத்துடுங்க சிஸ்டர்...

எஸ் டாக்டர்...

வெளிய அங்கிள் இருப்பாங்க அவங்க உள்ள வர சொல்லுங்க...

இதோ வரச்சொல்றேன் டாக்டர்...

சார் உங்கள டாக்டர் வர சொன்னாங்க...

என் பொண்ணு எங்க பாபு...

உள்ள ரூம்ல டெஸ்ட் எடுக்க அனுப்பி இருக்கேன் அங்கிள்...

எனக்கு சூர்யா கொஞ்சம் அமைதியான பொண்ணு தான் தெரியும் இவ்வளவு பயந்த பொண்ணு கிடையாது அப்படி வேற எதுவும் இன்ஸ்டன்ட் நடந்துச்சா அங்கிள் அவ பயப்படற மாதிரி...

ரொம்ப டீடைல் எதுவும் எனக்கும் தெரியல பாபு காலேஜ்ல தான் ஃபர்ஸ்ட் டைம் வந்து எங்களுக்கு தெரிஞ்சது...

வீட்ல என்கிட்ட எல்லாம் நார்மலா இருந்ததால எங்களால இதை கண்டுபிடிக்க முடியாம போயிடுச்சு...

இப்ப சிவியர் ஆகவும்தா எங்களுக்கே தெரிஞ்சது...

குணப்படுத்திரலாம்ல பாபு...

சூர்யாவை அவ எதிர்காலத்தை நெனச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்கு பாபு...

பயப்பட அளவுக்கு எல்லாம் ஒன்னும் இல்ல அங்கிள்...

நான் கொடுக்கிற மெடிசின்ஸ் டூ மன்த் ஃபாலோ பண்ணா கண்டிப்பா குணம் ஆயிடும்...

டெஸ்ட் ரிப்போர்ட்லாம் வந்ததுக்கு அப்புறம் தான் என்னால என்னை ஏதுன்னு சொல்ல முடியும்...

நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே பாபு...

என்ன அங்கிள் கேளுங்க...

எதுக்கு வீட்ல ஹாட் ப்ராப்ளம் இருக்குற பொண்ணு தான் வேணும்னு கேட்ட...

அது ஒன்னுமில்லை அங்கிள் காலேஜ் டேஸ்ல எனக்கு ஒன் சைடு லவ் இருந்தது...

பொண்ணு பத்தி தெரியாம அப்பியரன்ஸ் பாத்து ஏமாந்துட்டேன்...

அதுல இருந்து யாரயும் நம்ப முடியல...

வீட்ல ரெம்ப நாளா கேக்குறாங்க மறுக்க முடியல...

என்ட வர ஹார்ட் பேஷன்ட் சில பேர் 40வயசாகியும் இப்படி ப்ரொப்லெம் இருக்கத்தால கல்யாணம் ஆகம இருக்காத சொல்லிடுக்கங்க...

அதான் ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்ட இருந்து யாரது ஒருத்தவங்க வாழ்கைய மத்தலாம்னுதான்...

டிரீட்மென்ட் பாக்குறப்பவே அவுங்க கேரக்டர் தெரிஞ்சுடும் எனக்கும் சரி னு தோணுச்சுனா கல்யாணம் பணிக்கலாம்னு நினைட்சி அம்மாட சொன்னேன்...

இப்படி ஒரே நாள்ல பொண்ணு பாப்பாங்கன்னு நான் நினைக்கல அங்கிள்...


நேரம் காலம் வந்த தான நடக்கும்...

இப்போவும் நான் சரினு சொல்லல அங்கிள்...
டிரீட்மென்ட் முடியட்டும்...

அப்பறம் கல்யாணம் செய்யலாமா வேணாமான்னு சொல்றேன் அது வர சூர்யாட ஏதும் சொல்ல வேண்டாம்...

ஹார்ட் கொஞ்சம் வீக் க இருக்கு...

டெய்லி மெடிட்டேஷன் பண்ண சொல்லுங்க...

ரிப்போர்ட் வர 2நாள் ஆகும் அதுனால 2நாள் அப்பறம் வாங்க...

அம்மாட சொல்லுங்க அவுங்க விட்ட நாளைக்கே கல்யாணம் பண்ற அவசரத்துல இருகாங்க...

சூர்யா ஹெல்த் ஓகே ஆகட்டும்...

எனக்கு அடுத்து ஒரு ஆபரேஷன்க்கு அப்பொய்ன்மெண்ட் இருக்கு...

வர 2ஹவர்ஸ் ஆகும்...

டெஸ்ட்லம் முடிக்கவும் நீங்க சூர்யாவ கூட்டிட்டுடு கிளம்புங்க...

எங்க ஸ்டே பண்ணிடுக்கீங்க அங்கிள்... இப்போ ஹோட்டல்ல தான் நாளைக்கு உங்க வீடு பக்கத்துல வீடு ரெடி பண்ணிடுக்காங்க அங்க வந்துடுவோம்...

ஓகே அங்கிள்... அடுத்து பாக்கலாம்...
சிறுது நேரத்தில் கண் விழித்தாள் சூர்யா...
எதிரில் நர்ஸ் மற்றும் அப்பாவை கண்டதும் நிம்மதி...
விழிகளை சூழல விட்டால்...
அப்பா நாம வீட்டுக்கு போகலாம்...
நாம வேற டாக்டர் பாத்துக்கலாம்...

இந்த டாக்டர் வேணாம்...
ஏன்டா...
இந்த டாக்டர் பாத்தா மட்டும் இல்லை நினைட்சாலே பயமா இருக்கு...
என்னருந்துதான் இந்த சிடுமூஞ்சி டாக்டர கண்டுபிடிச்சீங்களோ...

இவரட்ட டிரீட்மென்ட் பாத்தா கூட கொஞ்சம் தான் பயம் வருது அப்போ எப்படி சரியாகுறது...
அதுலாம் பாபு 2மாசத்துல சரியாயிடும்னு சொல்லிடுக்கான்மா...

நீ எதுக்கும் கவலை படாதடா...
இங்க வேணாம்பா...
பாபுவம் பாபு... கோபு னு வச்சிடுக்கலாம் கோபமாவே இருக்கார்... இப்படி கோபமா முறைச்ச எனக்கு எவ்வளவு பயமா இருந்துச்சி தெரியுமாபா...
பாத்தாதத்துல இருந்து என் இதயம் வேமா துடிக்குதுப்பா ரெம்ப பயமா இருக்குப்பா...
இது வர எத்தனை டாக்டர் பாத்துட்டுக்கோம் யார பாத்தும் இப்படி பயந்தது இல்லை... உங்கட போகணும் சொன்னதுக்கு என்னை அடிச்சிருப்பார்ப்பா...
இப்படிபட்டவர்ட்ட எல்லாரும் எப்படித்தான் டிரீட்மென்ட் பாக்குறாங்களோ...

பேசிட்டு இருக்கும் போதே நர்ஸ் இருப்பதை பார்த்தவள் அச்சோ நான் சொன்னதை டாக்டர்ட்ட சொலிடாதீங்க...
நர்ஸ் நாலாம் ஏதும் சொல்ல மாட்டேன் எனக்குனு இல்லை இங்க இருக்க எல்லாத்துக்கும் பயம்...
பாக்கத்தான் அப்படி இருப்பார்... அவர் டிரீட்மென்ட் இது வர தப்பானதே இல்லை...
உயிர் போற நிலைல அட்மிட் ஆனவங்கள கூட குணப்படுத்திருக்கார்...
முத தடவ அவர பாத்து பயத்துலயே என் உயிர் போக போது...
சூர்யா என்ன பேசுற...
பாத்து பேசு... சாரிப்பா...
வா நாம கிளம்பலாம்...
சார் ஒரு நிமிஷம் இந்த டேப்லெட்ஸ் மெடிசின் எல்லாம் வாங்கிட்டு போங்க...
தினமும் ஒரு மணி நேரம் மூச்சி பயிற்சி செய்யணும்... 2நாள்ல வாங்க...
ஓகே சிஸ்டர்...
நாங்க கிளம்புறோம்...
நடந்தது அனைத்தையும் போன் வழியாக நாராயணனோடு பகிர்ந்து கொண்டார்...
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 11
லஷ்மி இன்னைக்கு சூர்யாவ கூட்டிட்டு இந்தர் ஹாஸ்பிடல் போய்டுவந்திட்டான் இப்பதான் போன் பண்ணி சொன்னான் ...
உன் பையன் சூர்யாவை செக் பண்ணிட்டு குணமானதுக்கப்புறம் யோசிச்சு சொல்றேன்னு சொல்லி இருக்கான்...

அதெல்லாம் என் பையன் மேல எனக்கு நம்பிக்கை இருக்குங்க சரின்னு சொல்லிடுவான்...

சூர்யா நினைச்சா தான் கஷ்டமா இருக்கு லஷ்மி ...
ஏற்கனவே பயத்துல இருக்க புள்ள இவன கட்டிக்கிட்டு என்ன பாடு பட போறாளோ...

என்னங்க நம்ம பிள்ளையை நீங்களே இப்படி சொல்றீங்க...

நான் ஒன்னும் தப்பா சொல்லலை லட்சுமி...
உன் மகன் ஒரு பார்வை பார்த்தால் நமக்கே பதறுது...

என் மகன் என் மகன் சொல்லாதீங்க என் மகன் என்னை வானத்துல இருந்தா குதிச்சான் உங்களுக்கும் மகன் தானே...

அதெல்லாம் கல்யாணம் ஆனா மாறிடுவாங்க...
உங்க பையன் முறைப்பு எங்க இருந்து வந்துச்சுன்னு நினைக்கிறீங்க உங்க கிட்ட இருந்து தான்...

நானே கல்யாணம் ஆனா புதுசுல உங்கள பாத்து பயந்து இருக்கேன் இப்ப என்ன அப்படியா இருக்கோம் அது மாதிரி அவங்களும் நல்ல வாழுவாங்க...
வாழ்ந்த ரொம்ப சந்தோசம் தான் லட்சுமி...
நவீன் இந்த வாரம் போன் பேசுறப்ப தான் சொல்லணும் இந்த விஷயத்தை பத்தி கேட்டா சந்தோஷப்படுவான்...
எப்படி இன்னும் ஒரு மாசத்துல இங்க வந்துருவேன்னு சொன்னாங்க...
வரவும் சீக்கிரம் அவனுக்கும் பாக்கணும்...
அவசரப்படாத லட்சுமி ஒண்ணுன்னா பொறுமையா பண்ணுவோம்...

க்ரிஷ் எங்க...
என்டாயே கேர்ள் பிரண்ட்ட பாக்க போறேன் வர லேட் ஆகும்னு சொல்லிட்டு வெளிய போனங்க...
அண்ணாக்கு வீடு சாவி வாங்கி குடுத்துட்டு முக்கியமான யாரையோ பாக்க போறேனு போயிடுக்கான்...
அவன் நடவடிக்கை தாங்க எனக்கு பயமா இருக்கு...
மூத்தவங்க ரெண்டு பேருக்கும் முன்னாடி இவன்தான் கல்யாணம் பண்ணிடுவான் என்று நினைக்கிறேன்.
எப்ப பாத்தாலும் எனக்கு கல்யாணம் பண்ணிவை ஜூனியர் ரெடியா இருக்கா ஜூனியர் ரெடியா இருக்கான்னு மிரட்டுறான்ங்க
யார்ட்டயோ போன் பேசிக்கிட்டே இருக்கான்...
வீட்ல இருக்கிற நேரத்தோட வெளியே இருக்க நேரம் தான் அதிகமா இருக்கு...
சரி பண்ணிடலாம் லட்சுமி...
சின்ன பிள்ளைங்க இல்ல வளந்துட்டாங்க...
அவனே தனியா பிஸ்னஸ் பண்ற அளவு வந்துடுக்கான்...
சரி எது தப்பு எதுனு தெரியும்...
நாம என்ன புலம்புனாலும் நடக்குறதுதான் நடக்கும்...
நடக்குறது நல்லதுக்குன்னு எடுத்துக்கோ...
டென்ஷன் ஆகி உடம்ப கெடுத்துக்காத...
அது இல்லங்க அவன் சரியான வாலு பையன்...
எத பத்தியும் யோசிக்க மாட்டான் கடைசி பையன்னு செல்லமா வளந்துட்டான்... 25வயசுதான் ஆகுது அதுக்குள்ள கல்யாணம் பண்ணிட்டு வந்த என்ன பண்றது...
என்ன லஷ்மி இவ்வளவு சொல்லியும் சின்ன பிள்ளை மாதிரி பேசுற...
நமக்கு கல்யாணம் ஆகுறப்ப எனக்கு 23வயசுதான்...
ஒரு சில வீட்ல எங்க போரேன்னு கூட சொல்லாம பசங்க சுத்துறாங்க...
உன் மகன் உன்ட உண்மைய சொல்லிட்டு போறான்னு சந்தோச படு...
அவன் கேர்ள் பிரண்ட்ட பாக்க போறேன்னு சொல்லிட்டுதான போறான்...
ம்ம் அவனுக்கும் சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சுட்டுங்க...
என் லெட்சுமி பெத்த பிள்ளைக்கு நான் சப்போர்ட் பண்ணாம யார் பண்ணுவ...
இவர்கள் பேசுக்கு காரணமானவன் அவன் காதலி நட்சத்திராவுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டு இருந்தான்...
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 12

நட்சத்திரா கிருஷ் படிக்கும் கல்லூரியில் நான்காண்டு அவனுக்கு ஜூனியர்...

அரியர் எழுதப் போகும்போது ஏற்பட்ட பழக்கம்...

எல்லா செமஸ்டர் எழுத வரீங்களே பாஸ் ஆக மாட்டீங்களா அப்படின்னு கேள்வி கேட்டு ஆரம்பிச்ச நட்பு...

பிடிக்காத படிப்புல சேர்த்து விட்டு பிடிக்காத எக்ஸாம்எழுதின எப்படி பாஸ் ஆவேன்...

இப்படி பிடிக்காததுன்னு சொல்லி காலம் ஃபுல்லா எழுத வந்துட்டே இருக்க போறீங்களா...
உங்களுக்கு பிடிச்சதுல சாதிக்காலமே...

பிடிக்காதத்துல காலத்தை கடத்தமா...
நம்ம பக்கம் இருக்க குறைய பாக்கமா அடுத்தவங்க குறைய பாக்குறது...

பிடிக்காததுனு அடுத்தவங்க மேல பழி சொல்லாம...

உங்களுக்கு பிடிச்சதுல முன்னேருற வழிய பாருங்க...

இந்த கோணத்தில் இது வரை அவன் யோசிக்கவில்லை...

புதிதாக யோசிச்சு கற்று கொடுத்தால்...

அன்றில் இருந்து நட்சத்திரா அவனின் ஸ்டார் ஆனால்...

யூ ஆர் மை ஏஞ்சல் ஸ்டார் என்று நட்பு தொடங்கியது...



அன்று ஆரம்பித்த முயற்சி இன்று பல அடிகள் எடுத்து வைத்து பிஸ்னஸ் ஆரம்பிக்கும் இடத்திற்கு வந்துள்ளான்...

இயல்பாகவே அனைவரிடம் நட்பாக பழகும் கிருஷ் நட்சத்திராவுடன் பழக ஆரம்பித்தான்...

நட்சத்திராவின் அப்பா ரிட்டயர் மிலிட்டரி மேன்...

தந்தையின் கண்டிப்பில் வளர்ந்தவள்...

வீட்டில் தந்தையின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அமைதியாக இருக்கும் நட்சத்திர வெளியில் அதற்கு எதிர் மாறாக நடப்பாள்... நண்பர்களுடன் அரட்டை, கேலி, விளையாட்டு இது அனைத்தும் தந்தைக்குத் தெரியாமல்...

வீட்டில் அடங்கி இருப்பவள் கிருஷின் எப்போதும் கலக்கப்பாக பேசும் பேச்சால் கவரபட்டு கடந்த இரண்டு ஆண்டு நட்பாக பழகி இப்போ காதலாக மாறியது...

தந்தைக்கு தெரிந்தால் என்ன ஆகும்னு பயம் இருந்தும் காதலிக்கிறேன் என்று சொல்லி விட்டாள்...

அவனுக்கும் நட்பை தாண்டி ஈர்ப்பு இருந்ததால் சம்மதித்து விடடான்...

அடிக்கடி காதலிக்குறது தெரியுறதுக்கு முன்னாடியே எங்க வீட்ல வந்து பொண்ணு கேட்டிரு கிரிஷ் என்று சொல்லி இருந்தாள்...

2அண்ணன்கள் இருகாங்க அவனுகளுக்கு முடியவும் அம்மாவ கூட்டுட்டு வந்து பேசிடலாம் ஸ்டார் எங்க வீட்ல ப்ரோப்லேம் இல்லை என்று சொல்லிடுந்தான்...


இன்று அண்ணன் கல்யாணம் சம்மதம் சொன்ன சந்தோசத்தை கொண்டாட ஐஸ் கிரீம் கடையில் இந்த சந்திப்பு...

எப்படியும் 6மாசத்துக்குள்ள கல்யாணம் முடிஞ்சிடும் ஸ்டார் அடுத்து நவீன் மட்டும் தான்...

2பேருக்கும் முடியுறதுக்குள்ள நானும் பிஸ்னஸ்ல அடுத்த ஸ்டேப் முன்னாறீடுவேன் நீயும் மாஸ்டர்ஸ் முடிச்சுடுவ அம்மாட சொல்லி கூப்டு வந்து பேசிடுவேன் ஸ்டார்...

நீ சொல்றப்பா நல்லாருக்கு வீட்ல அப்பாவ பாக்குறப்ப பயம் வந்துடுது...

நீ சொல்ற மாதிரி நடந்தா ரெம்ப சந்தோசமா இருப்பேன் கிரிஷ்...


பேசும் போதே போன் வந்தது கிரிஷ் சத்தம் போடாத அப்பா கூப்பிடுறாங்க...


அப்பா சொல்லுங்க அப்பா...

கோவில்க்கு போறேனு கிளம்பி 1 மணி நேரம்ஆயிடுச்சு மணி 12ஆக போது கோவில் நடை சாத்துற நேரம் ஆட்சி இன்னும் வராம என்ன பண்ற...

அப்பா கோவில்ல இருந்து கிளம்பிட்டேன் பைவ் மினிட்ஸ்ல வீட்ல இருப்பேன்...

சரி கிருஷ் நான் கிளம்புறேன். நேர்ல பாக்குறத குறைச்சிக்கலாம் போன் பண்றேன்...

மெதுவா போ ஸ்டார்...

இந்த மிலிட்டரி ஒரு நிமிஷம் இரண்டு நிமிஷம் எல்லாம் கணக்கு பார்க்கிறாரே பின்னாடி நான் ரொம்ப மாட்னேனோ...




இந்தர்க்கு தொலைபேசியில் அழைத்து சூர்யா ரிப்போர்ட் பத்தி பேசணும் நீங்க மட்டும் ஹாஸ்பிடல் வாங்க அங்கிள்...
சூர்யாவ உங்க வீட்ல விட்டுட்டு வரேன் பாபு...

சூர்யாவின் ரிப்போர்டை ஆராய்ந்து கொண்டு அங்கிள் சூர்யாக்கு இருக்கது இஸ்கிமிக் இதய நோய் சொல்ற நோய்...
அப்படினா என்ன பாபு...
ரெம்ப சீரியஸ்லாம் இல்ல அங்கிள்...
இதய தசைக்கு போற இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனின் அளவு குறையுறதால வருது அதாது இதயத்துக்கு போற தமனி குறுகளா இருக்காதால இது வருது...
ரத்தம் ஆக்சிஜன் குறையுறப்ப ஆட்டோமேட்டிக்க மயக்கம் வரும்...

அதுனால இதயம்


பலவீனமாகுது...
இதன் விளைவாக இதய தசை பலவீனமடைகிறது...



தூக்கத்தில் மூச்சுத்திணறல். தூக்கத்தின் போது சரியாக சுவாசிக்க இயலாமை இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவைக் குறைக்குது மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு இது தான் இதோட சிம்பிட்டோம்ஸ்...



இத சரி பண்ணிடலாம்ல பாபு...
கண்டிப்பா அங்கிள்...



ஆரோக்கியமான உணவு சாப்பிடணும்

தினசரி வழக்கத்தில் உடற்பயிற்சி செய்யணும்..
மன அழுத்தத்தை முடிந்தவரை குறைக்கனும்
தூக்கத்தை அதிகரிக்கவனும்...

மெடிசின்லயே சரி பண்ணிடலாம் அங்கிள்...

இதயத்துக்கு ஆக்சிஜன் மட்டும் கம்மியா போறதுனால டெய்லி கண்டிப்பா ஒரு மணி நேரமாவது மூச்சு பயிற்சி செய்யணும்...
ஒரு 10 டேஸ் இங்க ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ண கொஞ்சம் வேகமாக க்யூர் ஆயிடலாம்...
எப்ப அட்மிட் பண்ணலாம்னு சொல்லு நான் சூர்யாவை கூட்டிட்டு வரேன்...
கால் பண்ணி சொல்றேன் அங்கிள்...
அது வர நான் குடுக்குற மெடிசின் பொல்லொவ் பண்ணுங்க... 2மாசத்துல சரியாகலனா சின்ன ஆபரேஷன் பண்ணிக்கலாம்...
ஆபரேஷன் பண்ற நிலைமை வராது சாப்பாடும் மருந்தும் சரியா இருக்கபட்சத்தில்...
சரி பாபு நான் கிளம்புறேன்...
உன் மேல நம்பிக்கை இருக்கு சரி பண்ணிடுவனு...


கண்டிப்பா அங்கிள்...



 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 13
கல்லூரி வாசலில் தன் அண்ணனுக்கு விடாமல் அழைப்பு விடுத்து கொண்டிருந்தாள் வெண்ணிலா...
டேய் அண்ணா போன் அட்டென்ட் பண்ணுடானு திட்டிகொனண்டே...
ஒரு வாராமது வேமா பாக்க வரானா...
எல்லார் முன்னாடியும் அசிங்க பட வைக்கிறான் வரட்டும் இன்னைக்கு இருக்கு அவனுக்கு...
வழக்கம் போல உங்க அண்ணன் இன்னைக்கும் வரல... ஒவ்வொரு வாரமும் என் அண்ணாவ காட்டுறேன் ஆட்டு குட்டிய காட்டுரேன்னு சொல்லுற... 3 வருசமாட்சி இன்னும் காட்டல...
படிப்பு முடியுறதுக்குள்ள காட்டுறியான்னு பாக்குறோம். உங்க அண்ணா வந்தா பாத்துட்டு நீ ஹாஸ்டல்க்கு போ நாங்க வீட்டுக்கு கிளம்புறோம்... அவள் நண்பர்கள் கூட்டம் கலைந்து செல்லவும் வந்தான் அவள் செல்ல அண்ணன் செல்வா...
கூட்டம் எப்போ காலியாகும்னு காத்திருந்து பாத்துட்டு அனைவரும் கிளம்பவும் வந்தான்...
கோவத்தில் அவனிடம் பேசாம முகத்தை திருப்பி கொண்டாள்...
என் செல்லத்துக்கு பிடிச்ச எல்லாமே வாங்கிட்டு வர லேட்டாச்சு...
சாரிடா குட்டி...
போ அண்ணா எல்லா வாரமும் என்ன பாக்க வரப்ப இப்படிதான் செய்ற...
என் பிரண்ட்ஸ் கிட்ட உன்ன காட்டணும்னு ஆசை பட்ட காட்ட முடியல. நான் கோவமா இருக்கேன் அடுத்த வாரம் வேமா வரல நான் உன்ன பாக்க வெளிய காத்திருக்காகமா ஹாஸ்டல் உள்ள போய்டுவேன்...
10வருஷமா நான் ஹாஸ்டல நீ வாரம் ஒரு தடவ பாக்க வர...
எங்கயும் கூட்டிட்டு போக மாட்ற...
எங்க போகணும்னு ஆசை பட்டாலும் ஹாஸ்டல்ல பிரண்ட்ஸ் கூட போக பெர்மிஸ்ஸின் வாங்கி தார...
நான் உன் தங்கச்சினு ஊர்ல யாருக்காது தெரியுமா... என்னதான் பண்ற என்ன ஏதுனு சொல்ல மாட்ற...
இன்னும் 1மாசம் தான் படிப்பு முடிஞ்சது நெஸ்ட் படிக்கலாம் இல்லை உன் கூட வீட்ல தான் இருப்பேன்... 30நாள் இருக்குல்ல அதுக்குள்ள சரியாயிடும்டா...
இவ்ளோ நாள் நாம தனியா இருந்தது போதும்...
நீ நல்லா படிடா குட்டி அதுக்காகதான் அண்ணன் இவளோ கஷ்ட படுறேன்...
இப்படி சொல்லியே என்ன சமாதானம் ஆக்கிடுற...
அப்போ என் செல்லகுட்டி சமாதானம் ஆகிடுச்சா...
அப்பறம் எனக்காக என் அண்ணா எல்லாமா இருக்கறப்ப உண்மைய கோவம் வருமா...
இந்த 10 வருஷம் அப்பாவும் அம்மாவும் இல்லாம என்ன எவ்வளவு நல்லா பாத்துகிற...
போதும்டா இதுக்கு மேல பேசுனா நீயும் அழுது என்னையும் வருத்த பட வைச்சுடுவ...
வா உனக்கு பிடிச்சது எல்லாம் வாங்கிட்டுக்கேன் சேந்து சாப்பிடலாம்...
அண்ணா இன்னைக்கு எங்காவது வெளிய ரவுண்டுஸ் போலாமா...
இல்லடா குட்டி எனக்கு வேல இருக்குமா...
எப்போதும் உனக்கு வேலை தான் எப்ப கேட்டாலும் இதே சொல்லு...
இன்னும் ஒரு மாசம்தான்டா நீ படிப்பு முடிஞ்சி வரப்ப நான் வேலைனு சுத்தமா உன்ன மட்டும் கூட்டிட்டு ஊர் சுத்தலாம்...
இப்போ வேணாம்டா குட்டி...
சரி அண்ணா...
சரிடா அண்ணன் கிளம்புறேன் நல்லபடியா இருடா...
எதுனாலும் போன் பண்ணு...
செல்லும் வழியில் செல்வாவிற்கு எப்படி அனைத்தையும் ஒரு மாதத்தில் சரி செய்வேன் என்ற எண்ணம்... செல்வாவிற்கு வெண்ணிலாவுக்கும் ஏழு வயது வித்தியாசம்.
வெண்ணிலா ஐந்தாவது படிக்கும் போது தாய் தகப்பனார் செல்லும் வண்டி விபத்தில் அடிபட்டு
இறந்து விட்டனர்...
செல்வாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை...
அவர்கள் வீடு நிலம் அனைத்தையும் ஒத்திக்கு வைத்து வந்த பணத்தை வங்கியில் செலுத்தி மாதம் மாதம் கிடைக்குமாறு வழி பண்ணினான்.
வெண்ணிலாவே பள்ளியில் சேர்த்து ஹாஸ்டலில் தங்க வைத்தான்...
பள்ளிப் படிப்பை முடித்தும் கல்லூரிக்கு செல்ல மனம் வரவில்லை தந்தை இல்லாத காரணத்தினால்...
வேலை தேடி ஊர் ஊராக சுற்றினாலும் வாரம் ஒரு நாள் வெண்ணிலா பாக்க வந்துவிடுவான்... ஆண்கள் தங்கும் விடுதியில் தங்கி வேலை தேடியவன் இறுதியில் சேர்ந்தது பெரிய அரசியல்வாதியின் பின்னால் கேங் லீடர் ஆக இருக்கும் நரேன் கீழ்...
விடுதியில் தங்கி பழகிய நட்பால் சேர்ந்தான்...
ரவுடி கூட்டத்தில் தனியாக இருந்தும் 10வருடத்தில் இன்று வரை வெளிவர இயலவில்லை...


காரணம் நரேன் கூட்டத்தில் இருந்து யாரும் பாதியில் வெளியேற அனுமதி இல்ல...
உடல் நல பாதிப்பு தவிர எதற்க்காகவும் வெளியேற அனுமதி இல்லை...
ஒன்னு கூட்டத்தில் இருஙக்கணும் இல்லை என்றால் எதாவது குற்றத்தை ஏற்று கொண்டு சிறையில் இருக்க வேண்டும்...
வெண்ணிலா படித்து வருவதற்குள் அனைத்தையும் சரி செய்து அல்லது தப்பிதாவது சொந்த ஊருக்கு செல்லும் எண்ணம்...
தனக்கு தங்கை இருப்பது இது வரை யாருக்கும் தெரிய விடாது பார்த்துக் கொண்டான்... தன் வேலையால் தங்கைக்கு எந்த பாதிப்பும் வர கூடாது என்பதற்காக...
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 14

சூர்யா இப்ப எப்படி இருக்குடா...

நல்லா இருக்குப்பா கொஞ்சம் எனக்கு அடிக்கடி வேர்க்கறது இல்ல...

ஹாட் ஸ்பீடா துடிக்கிறது கொஞ்சம் குறைஞ்சி இருக்கு பா...

நாளைல இருந்து பத்து நாளைக்கு ஹாஸ்பிடல் தான் இருக்கணும் டா...

பாபு இப்பதான் இன்பார்ம் பண்ணான்...

மருந்து சாப்பிடறதும் ப்ரீத்திங் எக்சர்சைஸ் பண்றதும் நல்லா இருக்குப்பா எதுக்குப்பா ஹாஸ்பிடலுக்கு நம்ம இங்கே இருக்கலாம்...

அன்னைக்கு மாதிரி நீங்களே அடிக்கடி போய் மருந்து மட்டும் வாங்கிட்டு வந்து கொடுங்கப்பா...

அந்த கோபு டாக்டர் பார்த்தாலே எனக்கு பயம் வருது...

கோபு இல்ல மா பாபு...

உங்களுக்கான பாபுவா இருக்கலாம் என்ன எப்பவும் கோவமா பாத்துட்டு இருக்க எனக்கு அவரு கோபு தான்...

ஒரு ஆள் பயப்படக்கூடாதுன்னு போன பார்வையிலே பயன்முடுத்தினால் எப்படி அங்கு போய் எனக்கு பயம் குறையும்...



அதனால நான் அந்த கோபுவ பாக்க வரல...



இப்பதான் ரெண்டு நாளா நான் நிம்மதியா இருக்கேன்...

அங்க போய் அதை இழக்க சொல்றீங்களா...

அப்படி எல்லாம் பேசாதடா...
சரியா ஆகணும்லடா...
என்ன பாத்தா சிரிச்சு பேசணும் சொல்லுங்க அப்படின்னா வரேன் இல்லன்னா நான் வரமாட்டேன்...
ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி மாதிரி தான் இருக்கிறதுனா நீங்க மட்டும் போய் எனக்கு மருந்து வாங்கிட்டு வாங்க...

சரி நான் பாபு கிட்ட பேசுறேன் மா உன்ன பாத்தா கோபப்படாமல் சிரிச்சு பேசணும்னு...
ஆனா என்ன நாளும் நீ நாளைல இருந்து பத்து நாள் ஹாஸ்பிட்டல் தான்...
நானும் லட்சுமியத்தையும் உன்ன மாத்தி மாத்தி வந்து பார்த்துக்கொள்வோம்...

உன் கூட 24 ஹவர்ஸ் இருக்கிறதுக்கு நர்ஸ் ஏற்பாடு பண்ணி இருக்காரு...

பத்து நாளும் மெடிசனா நீ பாலோ பண்ணிட்டட ஆபரேஷன் இல்லாம உனக்கு சரியாயிடும் டா...

நீ நல்லா இருந்தா தானே அப்பா சந்தோசமா இருக்க முடியும்...

அப்பாக்காகடா ஒரு பத்து நாள் ஹாஸ்பிடல்ல பாத்துக்கலாம் டா...

ஓகே உங்களுக்காக அந்த கோபு கிட்ட வைத்தியம் பாக்க நானும் சாமதிக்குறேன்...
எனக்கு அங்க இருக்க பிடிக்கலைன்னா நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடனும்ப்பா...
சரிடா...
ஃபர்ஸ்ட் போறத பாக்கலம் அப்பறம் வர்ரதா பாக்கலாம்...
பத்து நாளைக்கு தேவையான திங்ஸ் எடுத்து வச்சிக்கோ நாளைக்கு காலையில நாராயணன் வீட்டுக்கு போய் சொல்லிட்டு ஹாஸ்பிடல் போகலாம்...
சரிப்பா...

லட்சுமி இல்லம்
லட்சுமி நான் இன்னைக்கு ஆபீஸ் வேகமா போகணும் இந்தரும் சூர்யாவும் வரேன் சொல்லிடுக்காங்க. நீயும் கூட போய் சூர்யாவ அட்மிட் பண்ண கூட போய்ட்டு வா...



இதல்லாம் நீங்க சொல்லனுமா நான் கிளம்பி தான் இருக்கேன் வரவும் போய்ட்டு வரேன்...

உம்பெரிய மகன்ட்ட சொல்லு அந்த பிள்ளைட்ட கொஞ்சம் சிரிச்ச மாறி பேச சொல்லு பயந்துட்டு ஹாஸ்பிடல் வர மாடன்னு பிடிவாதம் பிடிச்சிருக்கா...

இந்தர் தான் சமாதானம் பண்ணி கூட்டு வரான்...

சரிங்க சொல்லி பாக்குறேன்... மதியம் அங்கேயே சாப்பிடுக்குறேன் நீ ஹாஸ்பிடல்ல கூட ஒத்தாஸைய இரு...
சரிங்க...

உன் சின்ன மகன் எழுந்து வாரான் கூட வந்தா அவனையும் கூட்டிட்டு போ... நான் கிளம்புறேன் லட்சுமி...

சரிங்க...
கிருஷ் ஏன்டா தினமும் இவ்வளோ லேட்டா எந்திரிக்குற...

வேமா எந்திரிச்சி பழகு...

டெய்லி ஒரேதா சொல்லாதீங்க எனக்கு போர் அடிக்குதுல...

டெய்லி சொல்ற மாதிரி வைக்காம வேமா எந்திரிச்சா என்னடா...

அதான் சொல்றேன் கல்யாணம் செஞ்சு வைங்க பொண்ணு ரெடியா இருக்கு...

பொண்டாட்டி வந்துட்ட காலைல என்ன வேமா எழுப்பி விடுவாள நீங்க தான் கேக்க மாட்றீங்க...

காலைலயே ஆரம்பிச்சுட்டியா...

போய் குளிச்சு ரெடி ஆகிட்டு வா... இந்தர் அண்ணா வரவும் சூர்யாவா ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டு வரலாம்...

நான் வரல தாயே நீங்களே போய்ட்டு வாங்க...

ஏன்டா...

எதுக்கு உங்க மகன் ஹாஸ்பிடல் வந்தீங்களா பிக்னிக் வந்தீங்களா இத்தன பேர் வந்துடுக்கேங்கனு கேக்கவா...



அவனே எதுல சிக்குவோம் திட்டலாம்னு காத்துட்டு இருக்க மாதிரி இருப்பான்...



என்ன போய் கோர்த்து விடுறீங்களா...



நான் ஆர்கானிக் பார்ம் ஹவுஸ் போறேன் எனக்கு வேலை இருக்கு நான் வரலம்மா...



சரிடா... அப்போ நான் போய்டு வாரேன் நீ எண்ணமும் பண்ணு...



லட்சுமி கிளம்பிட்டியமா போலாமா...



ரெடியா தான் இருக்கேன் அண்ணா...

சூர்யா எப்படிடா இருக்கு?

நல்லாருக்கு அத்தை...

கிருஷ் இன்னைக்கு பயமுறுத்திடாதடா என்ன மருமகள...

எனக்கு வேற வேலை இல்லை பாருங்க இவள பயமுறுத்துறத விட...

சின்ன வயசுல விளையாடுன ஆசைல செஞ்சேன் அதையே சொல்லி எத்தனை நாளைக்கு திட்ட போறீங்க...


சாரி கிரிஷ் இனி பயப்புடாம இருக்க ட்ரை பண்ணறேன்...

என்ட பேச மாட்டியா...

அப்படிலாம் இல்லை சூரி எனக்கு தெரியாது சாரி...

இட்ஸ் ஓகே கிரிஷ்...

என் கூட நீயும் வாரியா கிருஷ்...

உன் அண்ணன பாத்தாலே பயமா இருக்கு...

இப்போவே இப்படின்னா இன்னும் காலம் இருக்கே...

நானா சிங்கத்தோட குகைல தலையிட இஷ்டம் இல்லை...

நீங்க போய் என்ஜோய் பண்ணுங்க...

பாருங்கப்பா அவனே வர மாட்றான் என்ன போய் அந்த சிங்கத்துட்ட கோர்த்து விடுறீங்க...

கிருஷ் நீ வேற அவளே போக பயந்துட்டு இருக்கா நீ வேற...

நான் ஒன்னும் சொல்லல தாயே... அன்பின் சிகரத்தை நீங்களே போய் பாருங்க...
டாடா... கிளம்புங்க...
நீ வாடா அவன் கிடைக்கான்...
நாம போகலாம்...
 
Status
Not open for further replies.
Top