அத்தியாயம் 2
வீட்டிற்கு வந்ததும் நாராயணன் என்ன லெட்சுமி வழக்கம் போல உன் மகன் வம்பு பண்ணிட்டு நான் வரவும் ஓடிட்டானா?
பூஜைலாம் நல்ல படியா முடிஞ்சதா
ம்ம் ஆமாங்க வழக்கம் போல நீங்க பூஜை அப்ப வீட்ல இருக்கது இல்ல...
உங்க மேல கோவமா இருக்கேன்.
உங்க எல்லாரோட நல்லதுக்கு தான் பூஜை சாமி எல்லாம் ஆனா யாரும் கூட இருக்குறது இல்லை.
அப்படி இல்ல லெட்சுமி அக்கம் பக்கம் இருக்கவங்க வராங்க. இது முழுக்க முழுக்க பெண்களுக்கான பூஜை இடைல நான் இருந்தா பூஜைக்கு வாரவங்களுக்கு சங்கடம் இருக்க கூடாதுனுதான்.
நான் எங்க போய்ட்டு வந்தேனு தெரிஞ்ச சந்தோசபடுவ...
பெரியவன் ஜாதகத்துக்கு பொருத்தமான வரன் பாக்க ஜோசியர பாக்க போனேன்...
என்னையும் கூட்டிட்டு போய்டுகலாம்லங்க...
சரி என்ன சொன்னாங்க சொல்லுங்க.
உன் பையனுக்கு இன்னும் 6மாசத்துல கல்யாணம் பண்ண சொன்னாங்க
இல்லனா... 6வருசம் பிறகுதான் கல்யாண யோகம் வரும்னு சொன்னாங்க...
என்னங்க 6மாசத்துலய அவன் பிடி குடுத்தே பேச மாட்டேங்கிறான் எப்படிங்க 6மாசத்துல முடிக்க.
இன்னைக்கு வேலை விட்டு வரவும் பேசலாம்...
நீங்களே பேசுங்க நான் பேசுனா காதுலயே வாங்க மாட்டேங்கிறான்...
எல்லாத்தையும் கேட்டுட்டு ஒரு பார்வை தான் அதோட நான் சைலண்ட் ஆகிடுவேங்க...
பார்வைலயே மிரட்டிறான்..
எப்படி தான் இப்படி டெரர்ர மாறுனானு தெரியலங்க...
காலேஜ் படிக்குற வர நல்லாதான் இருந்தான்...
இப்படியே சொல்லிட்டு இருந்தா என்ன இன்னைக்கு பேசிட்டு முடிவு பண்ணுவோம்...
S S S மருந்துவமனை
மிகவும் பிரபலமான மருத்துவமனை அதில் ஒரு பிரிவான
இதய நோய் சிகிச்சை பிரிவு
Dr.Babu.,MBBS, MS, FRCS பெயர் பலகை கொண்ட அறையின் முன் காத்திருப்போர் பகுதியில் 20க்கு மேற்பட்டோர் காத்திருந்தனர்.
டாக்டர் எப்ப பாக்க முடியும் சிஸ்டர் என்று அங்கே வேலையில் இருக்க நர்ஸிடம் விசாரிக்க டாக்டர் ஆப்ரேஷன் பண்ணிட்டு இருக்காங்க வர இன்னும் 30நிமிசமாது ஆகும்.
டாக்டர் வரும் போது சத்தமில்லாம இருங்க. டாக்டர்க்கு சத்தமா இருந்தா பிடிக்காது.
அடுத்த 20நிமிடத்தில் அழுத்தமான காலடி சத்தத்துடன் முகத்தில் கோபமா அழுத்தமா தெரியாத ஒரு இறுக்கத்துடன் வேகமாக அறையில் நுழைந்தார்.
நோயாளிகள் ஒன்றன் பின் ஒன்றாக சென்றனர்.
முகத்தில் சிரிப்பு இல்லை என்றாலும் நோயாளியை முழுமையாக ஆராய்ந்து அவர்கள் உடலை பூரண குணம் ஆக்குவதில் அந்த மருத்துவமனையின் கைராசியான மருத்துவர் என்ற பெயர் டாக்டர் பாபுவிற்கு.
ஆனாலும் யாரிடமும் எளிதில் பழகுவதோ சிரித்து பேசுவதோ கிடையாது.
இதய டாக்டர்க்கு இதயம் இருக்கானு தெரியலையே அன்பான பேச்சு பேசி நான் பார்த்தது இல்லைனு தான் எல்லாரும் டாக்டர் இல்லாத நேரம் பேசிப்பாங்க.
டாக்டர் இருக்கப்ப குண்டூசி விழும் சத்தம் கேட்கும் அளவு அமைதியா இருக்கும்.
டாக்டர் ஏன் இப்படி இருக்கார்னு எனக்கு தெரியும் நான் நியூமராலஜி பிரிவுல வேலை பாத்தப்ப நம்ம பாபு டாக்டர் படிச்ச நேரத்துல தான் டாக்டர் ஷாம் படிச்சிருக்கார். பாபு டாக்டர் பத்தி பேசுரப்ப தற்செயலா சொன்னார்.
டாக்டர் 5து வருசம் படிக்குறப்ப 2து வருசம் படிச்ச ஒரு பொன்ன லவ் பண்ணிடுக்கார்.கிட்டதட்ட ஆறு மாசம் பழகீடுக்காங்க. நல்ல பொன்னுனு நினைச்சி ஏமாந்துட்டார்... ஒரே நேரத்தில 4பேர் கூட பழகீட்டு இருந்துடுக்க பார்ட்டி பப் னு நேரத்துக்கு ஒரு ஆள் கூட பழகிடுக்கா. அது தெரிஞ்சு டாக்டர் கோவமா கேட்டப்ப அந்த பொன்னு சின்ன வயதிலிருந்தே வெளிநாட்டு கலாச்சாரத்துல வளர்ந்த பொன்னு. அந்த பொன்னுக்கு கல்யாண வாழ்க்கைல இன்ட்ரஸ்ட் இல்லை. பிடிக்குற வர ல்வ்விங் டு கெதர் பிடிக்கலையா ஆளை மாத்தீட்டு போற வாழ்க்கைதான் பிடிக்கும் சொல்லிட்டு போய்ட்டா போல. டாக்டர் லவ் பண்ணி ஏமாந்துட்டார். அதுல இருந்து அவர் இப்படி டெரர் ஆகிட்டாராம். யாரும் பேச கூட பயப்படுற அளவு பார்வைலயே தள்ளி வைச்சிடுவார்.
ஓ! அதான் டாக்டர் டெரர்ர இருக்காரா.