Jeyalakshmiraju
New member
Very good story. Congrats
Thank you so much dearT22~விதையில் இருந்து விருட்சம் வரை
பொம்மு நாவல்ஸ் குறுநாவல் போட்டி
கதைஇல~19 மை ஹிட்லர் (MY HITLER)
ஷாயினி ரிவ்யூ~ 3
அறையொன்றில் பெண்ணவள் கடத்தப்பட்டிருக்க, பெண்ணவள் கடத்தப்பட்டிருந்த கதிரையைச் சுற்றி மூட்டைப்பூச்சி, அதைனை பார்த்து பெண்ணவள் அலறித்துடிக்க, அதற்கு காரணமானவனோ அதை பார்த்து மகிழ என்று கதைக்களம் ஆரம்பிக்க, அங்கு தான் ஆரம்ப டுவிஸ்ட்டுடன் கதையை சுவாரஸ்யத்துடன் அழகாக மேலும் தனது கைவண்ணத்தில் அமைத்திருக்கிறார் ஆசிரிய தோழி!
ஆசிரியரின் கைவண்ணத்தில் இது கன்னி முயற்சியாக இருந்தாலும் கதையை படிப்போர்க்கு அடுத்து என்ன நடக்கும் , நடப்பவற்கு என்ன காரணம் என்ற சுவாரஸ்யத்தை எந்தவொரு இடத்திலும் கொடுக்க முயற்சித்து அதைப் பூர்த்தி செய்தமைக்கு எனது மனமார்ந்த பாரட்டுக்களும், எளிய மொழி நடையில் கதையை நிறைவுற தந்தமைக்கு வாழ்த்துக்களும் உரித்தாக ..!
இனி கதையின் மாந்தர்களை பற்றி சில வார்த்தைகள்..!
உதய்மாறன் : ஹிட்லரின் மறுவுருவம், தொழிலில் கைதேர்ந்த நியாயவாதி , பொறுமை சிகரம், ஆனாலும் தன் குடும்பத்தினருக்கு ஒன்றென்றால் பின்விளைவுகள் பற்றி யோசிக்காமல் முடிவுகளை எடுப்பவன்..ஆனால் பின்விளைவு அறியும் போது இவன் நிலை
பைரவி இவளும் தனது நட்புக்கும் குடும்பத்திற்கும் ஒன்றென்றால் மாறனுக்கு சளைத்தவளில்லை. சுயநலத்தின் எதிர்துருவம் அப்பாவி பெண்ணவள் தன்னை சாராதவரிற்கு எதெனும் ஒன்றென்றால் கூட இவள் துடிக்கும் துடிப்பு
ஆதேஷ் நல்ல சகோதரன், நல்ல ஆண்மகன் என்பற்கு சிறந்த உதாரணம். அதற்கு எந்தவிதத்திலும் இவன் சளைத்தவனில்லை. உண்மையான காதலன் ஆண்மகன்
சஞ்சனா பெண்ணவள் போன்ற நட்பு கிடைப்பது அதிஷ்டம்..
போட்டியில் வெற்றி பெற கதையின் ஆசிரியர்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..
●●●●●●●●●●●●●●●●●●●
மை ஹிட்லர் கதை திரி
●●●●●●●●●●●●●●●●●●●●
மை ஹிட்லர் கருத்து திரி
●●●●●●●●●●●●●●●●●●●●
மை ஹிட்லர் விமர்சன திரி
19. மை ஹிட்லர் (My Hitler)- நாவலுக்கான விமர்சனங்கள்
19. மை ஹிட்லர் (My Hitler)- நாவலுக்கான விமர்சனங்கள்www.pommutamilnovels.com