ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

19. மை ஹிட்லர் (My Hitler)- நாவலுக்கான விமர்சனங்கள்

#priyareviews

கதை எண் 19

மை ஹிட்லர்

பைரவி நல்ல தைரியமான பெண் தான் எந்த விதமான பிரச்சனையும் அசால்ட்டாக சமாளிக்கிறாள் சமாளிக்க முடியாத பிரச்சனை வரும் போது??

ஆதேஷ் இவனை என்னவோ ஆரம்பம் முதலே பிடிக்கவே இல்ல இவனின் முடிவுகள் உறுதியாக இல்லாதது கூட காரணமாக இருக்கலாம் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

தைரியலக்ஷ்மி இவங்க நடந்து கொள்வது சில இடங்களில் கடுப்பை ஏற்படுத்தியது 🤧🤧🤧

அகல்யா 🙄🙄🙄 என்ன சொல்றதுனே தெரியல 🙃🙃🙃

மாறன் கொஞ்சம் வளர்ந்த லூசா இருப்பானோ 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ தேவை இல்லாமல் கோபம் கொண்டு என்ன என்னவோ செய்யுறான் ஒரு விஷயம் தனக்கு தேவை என்று தெரியும் போது ஏன் அதற்கு போராடாமல் அமைதியா இருக்க வேண்டிய அவசியம் என்ன?

சஞ்சனா நல்ல ஜாடிக்கு ஏற்ற மூடி அவளுக்கு ஏற்ற மாதிரியே இருக்கா எல்லாம் இடத்திலும் 🤩🤩🤩

பைரவி கேரக்டர் ரொம்ப பிடித்து இருந்தது அவள் செய்யும் எல்லாமே அதுவும் முடிவில் செம யா ஸ்கோர் பண்றா 👌👌👌🤗🤗🤗

கொடுத்த கன்டென்ட் அழகா மாற்றி இருந்திங்க ஆரம்பத்தில் சூப்பர் ☺️☺️☺️

எனக்கு ரைட்டர் கிட்ட ரெண்டு விஷயம் சொல்லணும்

1. நிறைய இடத்தில் கதை தொடர்ச்சி இல்லாமல் எங்கு எங்கோ பயணிப்பது போல் ஒரு பீல் 🤔🤔

2. இப்படி ஒரு முடிவு ஆதேஷ் விஷயத்தில் தேவை இல்லை என்று தோணுது வேற மாதிரி மாற்றி அமைத்து இருக்கலாம் இது ஏற்று கொள்ளும் படி இல்ல 😒😒

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐

லிங்க் 👇👇👇

 
விமர்சனம்
கதை : மை ஹிட்லர். (போட்டி கதை விருட்சம் 19)
ஹீரோ : உதய் மாறன்
ஹீரோயின் : பைரவி
கதையின் போக்கு ரொம்ப அழகாகவே போகுது.


பைரவி துணிச்சல் நிறைந்த பெண் ஒற்றை ஆளாக இருந்து குடும்பத்தை வழி நடத்தும் பெண் இவள் துணிச்சல் ரொம்ப பிடிச்சு இருக்கு. சில சமயம் இவ பண்ற அலப்பறை செமையா இருக்கு.😁😜 எல்லா விஷயத்தையும் நேருக்கு நேரா எதிர் கொண்டு சமாளிக்குற விதம் சூப்பர். ஆனா காதல் வந்ததை கொஞ்சம் சீக்கிரமே உணர்ந்து இருக்கலாம்.


உதய் மாறன் இவனோட ஆளுமை விதம் ரொம்பவே அற்புதம். குடும்பத்துக்காகவே யோசிச்சு இவன் வாழ்ற விதமும் செம👍 இவன் பைரவியை படுத்துற பாட்டுக்கு உண்மையாவே இவனுக்கு ஹிட்லர் என்ற பேர் கரெக்டா தான் இருக்கு. யப்பாடி என்ன ஒரு வில்லதனம். ஆனாலும் பாவம் அந்த புள்ள இந்த அளவு அதிகம் தான். குடும்பத்துக்காக எதையும் செய்பவன் எதையும் இழக்கும் அளவிற்கு செல்பவன் ஆனால் நாயகின் கண்களுக்கு மட்டும் வில்லனாக தெரிகிறான். காதலில் மட்டுமே இவனுக்கு சிறு தடுமாற்றம் ஏனோ?😆😜 மொத்ததில் மாறன் மனதை கவரும் கள்வனே.


ஆதேஷ் இவனின் கதாபாத்திரம் அருமைதான் ஆனாலும் இவனுக்கு எதுவுமே சரியாக அமையவில்லையோ என்றே தோன்றுகிறது. வாழ்க்கையில் சூழ்நிலை காரணமாக பிரிவை சந்திப்பவன் கடைசியில் தனிமையிலே வாட தெரிந்தே துணிந்து விட்டான். பிடித்த பெண்ணிற்காக இன்னமும் கொஞ்சம் சிரமபட்டு இருக்கலாம். இவனின் அமைதி பல இடங்களில் நம்மை சலிப்படைய வைக்கிறது. இவனின் கதாபாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்திருக்கலாமே😒 ஆனால் வந்தவரை மனதில் பதிந்துவிட்டான் இவனின் தியாகத்தால் அருமை😊👍


சஞ்சனா பைரவியின் உயிர் தோழி. ஆனால் நட்பிற்காக தானாக வந்து மாட்டிக் கொண்டு இவள் அனுபவிப்பது வேதனை தான் என்றாலும் சிரிப்பாகவே இருந்தது.


மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் படியும் படியாகவே இருந்தது. மொத்தத்தில் அருமையான கதைக்களம். எந்த தொய்வும் இன்றி சொல்ல வருவதை சிறப்பாக சொன்ன விதம் சிறப்பு.
எழுத்தாளரின் இந்த முயற்ச்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.😊👏 போட்டியில் வெற்றி பெறவும் என் சார்பாக வாழ்த்துக்கள்.😊👍💐💐💐 All the Best.👍👍😊


லிங்க் 👇👇👇 https://pommutamilnovels.com/index.php?threads/மை_ஹிட்லர்-my_hitler-கதை-திரி.945/post-22201
 
Top