#கௌரிவிமர்சனம்
#VideoEditing
#மை_ஹிட்லர்
மாறன் - வெளியில் எவளோ இறுக்கமா இருக்கானோ, அவன் குடும்பத்து மேல அவளோ அன்பு அவனுக்கு, பாசக்கார பயபுள்ள
. சின்ன வயசில் இருந்து சுமந்த சுமை, அழகான சுமைனாலும், அந்த இறுக்கம் மட்டும் அவன் கூடவே ஒட்டிக்கிச்சி
…
அவளை பழிவாங்கரேன்னு, நீ செஞ்ச பாரு
, அப்ப அவளை பார்க்க பாவமா இருந்தாலும் செம்ம கேடி அவ, உனக்கே டஃப் குடுக்கரா பார்த்தியா
…
என்ன தான் நீ டெரர் பீஸ்ஸா இருந்தாலும், காதல் வந்ததும் கண்ணலா எல்லாம் பேசற பார்த்தியா, சோ கியூட்
அதுவும் அந்த ரணகளத்திலும் இவர் சின்ன தலை அசைப்புளையே சாரி நல்ல இருக்கா இல்லையானு சொல்ல, அவளும் அதை புரிஞ்சிக்கிட்டு செலக்ட் பண்ணினது எல்லாம்
பைரவி - செம்ம கேரக்டர், மாறனுக்கு டஃப் குடுத்து, நல்ல வெச்சி செய்யர
, இவங்க ரெண்டு பேரும் வர சீன் எல்லாம்
.
சஞ்சு மேல இவ வெச்சி இருக்கற பாசம்
குட்டி & அவ அம்மா ரெண்டு பேரும் செம்ம கேரக்டர்ஸ், ரொம்ப எதார்த்தமாக இருந்தது
.
அவளை அறியாம அவ சின்ன தப்பு செய்து இருந்தாலும், ரொம்ப போல்டா மாறன் மேல இருக்கற தப்பையும் சுட்டி காமிச்சது சூப்பர்
அவ காதலை அழகா காப்பாத்திகிட்டா, அவனை நம்பினா அவளோ தான்னு புரிஞ்சி இருக்கு
ஆது - பாவம் இவன் சின்ன வயசில் இருந்தே, அவன் வீட்டில் உள்ளவங்கலே சரியா புரிஞ்சுக்கலா, அப்ப இருந்தே தனிமை துணை கொண்டே வாழ்ந்து இருந்தவனா போய் இப்படி செய்ய ரைட்டர்க்கு எப்படி தான் மனசு வந்துச்சோ
அகல்யா - ரொம்ப சீக்கிரம் அவளோட சைடு கிளியர் ஆகிட்டா
, இவளையும் சிங்கிளாவே விட்டுடுடாங்க ரைட்டர் ஜீ
தைரியலக்ஷ்மி - ஆன்லைன்லா விக்கற எந்த ஒரு மருந்து பொருளையும், ஆன்னு வாங்கி வாயில் போட கூடாது அப்படிக்கரதுக்கு நல்ல உதாரணம் இவங்க…..
நல்லவங்க தான், ஆன லைட்டா ஆது விசயத்தில் பிடிக்கல, அவனை சின்ன வயதில் அப்படி தனியா விட்டு இருக்க கூடாது & அவனோட மனசு உங்களுக்கு கூட புரியவே இல்ல, ம்ச் பாவம் இல்ல அவன்
சஞ்சு - நல்ல ப்ரெண்ட் பைரவிக்கு, பைரவி அளவானு கேட்டா இல்லை தான்….
கதை எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது, எங்களை சுத்தல்ல விட்டது கூட
ஆன டக்குனு முடிஞ்ச ஃபீல்
, இதுல நிறைய பேரை சிங்குளாவே விட்டுடுடிங்க ஜீ, இது எல்லாம் பெரிய பாவம்
ஆதுக்கு பார்ட் 2 எழுதிட்டு வாங்க, வெயிட்டிங்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ