S.Sivagnanalakshmi
New member
விருட்சம் ஹிட்லர் கதை அருமை.கதையில் காதல் மோதல் பாசம் நட்பு சஸ்பென்ஸ் தவறான மருந்து விற்பதை பற்றியும் கூறியிருப்பது செம அனைத்தும் கலந்த அருமையான காதல் கதை.உதய் ஹீரோ அப்பா இறந்தவுடன் சிறுவயதிலே பொறுப்பை சுமப்பவன் குடும்பத்தை மிகவும் நேசிப்பவன் வெளியில் ஹிட்லராக இருப்பவன் குடும்பத்தில் அன்பானவன்.அம்மா உடம்பு சரியில்லாமல் போகவும் ஆஸ்பத்திரியில் சேர்கிறான் . பைரவி அப்பா இறந்து விட அவளின் குடும்ப பொறுப்பை பார்க்கிறாள் அம்மா தம்பியுடன் வசிக்கிறாள் மாடலிங் செய்கிறாள் . நல்லவள் யாரும் உதவி செய்கிறவள் அவளதுதோழி சஞ்சனா .உதய் அம்மாவை ஆஸ்பத்திரியில் படுக்க வைத்தவங்களை தண்டனை கொடுப்பதற்காக பைரவி கூட்டிட்டு தண்டனை கொடுக்கிறான் பைரவி தண்டனை அடைந்ததும் பின்னர் தட்டி கேட்கிறாள் நீ அம்மா மருந்து சாப்பிடறாங்க பார்க்க மாட்டாயா?.அவனும் தண்டனை கொடுத்து கொள்வது சூப்பர்.இதனிடையே உதய் தம்பி ஆதேஷ் கல்யாணம் மறுத்து காதலிக்கும் பெண்ணை கல்யாணம் பண்ணுவேன் என்கிறான்.பத்துநாள் டைம் கொடுக்கிறான் .உதய் அம்மா பைரவியை ஆதேஷ் மணமுடிக்க நினைக்க தேதியும் குறிக்கிறார்கள் . அதன் பிறகு பிரச்சினை ஆரம்பமாகுகிறது பைரவி உதய் இருவருக்குமே காதல் வந்துவிடுகிறது அவர்கள் இருவரும் கல்யாணம் நடந்ததா? இல்லை ஆதேஷ் நடந்ததா?ஆதேஷ் காதலித்த பெண் யாரு?.என்பதை சுவாரஸ்யமாக கொண்டு போய் இருப்பது செம.வாழ்த்துகள் . வாழ்கவளமுடன்.சகி