ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

12 கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ கதைக்கான விமர்சனங்கள்

T21

Well-known member
Wonderland writer
12 கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ கதைக்கான விமர்சனங்கள்
 
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ.....


கதை எண் : 12


கதைக்கான விமர்சனம்:


கல்யாண மேடையில் கதையின் நாயகியான அஸ்வினியின் கழுத்தில் கௌதம் மூன்று முடிச்சை இடவிருந்த வேளையில், எங்கிருந்தோ வருகிறான் தீரன். வந்தவன் அஸ்வினியின் கழுத்தில் மங்கள நாணை கட்டியபடி, கௌதமை துப்பாக்கியால் சுட்டவன் அவளை அங்கிருந்து தூக்கிக்கொண்டு செல்ல, கனவிலிருந்து பட்டென்று கண்விழுத்து எழுகிறாள் ராதிகா.


கௌதமின் அன்னையான அவள், தான் கண்ட கனவின் விளைவாக பதறிக்கொண்டு, நடுசாமத்தில் ஒரு இடத்தை நோக்கி விரைந்து செல்கிறாள். அங்கு மரத்தின் இடுக்கில் மறைந்திருக்கும் மர்மபெண்மணி விருஷாலியுடம் தனது கனவை பற்றி கூற, அதிலிருந்து வெளிவருவதற்கான வழியை கூறுகிறாள் விருஷாலி. அதன்படி, தன் மருமகளான அஸ்வினி கழுத்திலிருந்த தாலியை கழற்றி மீண்டும் தன் மகன் கௌதமிற்கு திருமணம் செய்து வைக்க பார்க்கிறாள்.


கல்யாண மேடையில், கனவில் வந்ததுபோல நிஜத்திலும் தீரன் வர, அவனோ கௌதமின் கால்களில் சுட்டுவிட்டு, அஸ்வினியை கடத்தி செல்கிறான். யார் அவன்? ஏன் அவ்வாறு செய்கிறான்? யாரிந்த கௌதம்? யாரிந்த ராதிகா, யாரிந்த மர்மசாமியார் விருஷாலி? தீரனுக்கு பக்கபலமாக நிற்கும் பரமாத்மா என்பவன் யார்? என்று பல்வேறு கேள்விகளுக்கு பதில் மீதி கதையில்?????❤️


தீரன்....? இவன் வரும் இடங்கள் அனைத்திலும் ஆளுமை நிறைந்திருக்கும். புரியாத புதிரான இவனின் முற்பாதி இருக்க, பிற்பாதி தெரிந்தபின் மனதில் பச்சகென்று ஒட்டிக் கொள்கிறான். அஸ்வினையை கடத்திவைத்து தேஜூ என்று உருகுவதாகட்டும், அவளது சுடும் சொல் கேட்டு அவன் மனம் ரணம் கொள்வதாகட்டும், அவன் வலியை நம்மாலும் உணர முடியும்.❤️ ( தீரா.... தீரா.... நீ வாழ்வீசும் கரிகாலா....?)


பரமாத்மா - இவன் வேற லெவல். இவனோட நட்பு புல்லரிக்க வைக்கும்.... பரமாத்மா இல்லையெனில் தீரனே இல்லை. கிருஷ்ணனுக்கு குசேலனைப் போல், நம் தீரனுக்கு அவன் பரமா.....? ( நட்புனா என்னென்னு தெரியுமா? நண்பேன்டா)


அஷ்வினி - எதற்கு கடத்தம்பட்டோம் என்று தெரியாமல் அவள் தவிப்பதாகட்டும், என்ன தான் நடக்குது என்று புரியாமல் முழிப்பது ஆகட்டும். கதை படிக்கும் நம் நிலையிலிருந்து பயணிக்கும் கதாபாத்திரம் அவள். அவள் செய்த ஒரு செயல்.... அதனால் தீரனுக்கு நேரும் விளைவு கதையில்...... (தெரியாமால் மாட்டிகிட்டேன்.... என்ன நடக்க போகுதோ.... எங்கு முடிய போகுதோ...)


கௌதம் - யார்ரா இவன்? இவனுக்கு என்ன தான் வேணும்னு நம்மளை டென்ஷன்லயே கொண்டு போக செய்யும் மனிதன் இவன். அல்லி கௌதம் இருவருக்கும் இடையில் இருக்கும் ரகசியம் கதையில் ?. (அல்லி மலர்கொடி அங்கதமே...)


கதையில் நடுவில் வரும் முக்கியமான கதாபாத்திரம் மோகினி, கார்த்திக், தேவகி. குறைந்த இடம் வந்தாலும் மனதை மகிழ்வூட்டும் கதாபாத்திரங்கள் அவர்கள். அதுலயும் இந்த மோகினி புள்ளை கனவுல நம்ம தீரன் தான் வரான். மோகினி செய்யும் குழப்பம் பெரிய அளவுல ஒரு பாதிப்பை ஏற்படுத்தது. அது என்ன என்பதும் கதையில்.....


தேவராஜ் மற்றும் ராதிகா என்ன மனுசங்க நீங்க எல்லாம்... அவங்க பண்ண ராஜதந்திரங்கள் கதையில்.....?


மரகதம் இவங்க பண்ற பெரிய நன்மை தான் விதையிலிருந்து மரமாக முளைத்து, அவருக்கே நன்மை செய்தது. செல்வி ரத்னவேல் தம்பதிகள்.... இவங்க பண்ண விசயங்கள் ஒவ்வொன்றும் பாராட்டுக்குரியது..... அவங்க உன்னதமான அன்பும் மெய் சிலிர்க்க வைக்குது❤️❤️ இவங்க யாரென்பதும் கதையில்.....


அசத்தலான கதை... ஆரம்பத்திலிருந்து ட்விஸ்டை கையாண்ட விதமும் அருமை.... ஒவ்வொரு அத்தியாயங்களிலுமே எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய ஆசிரியருக்கு என் பாராட்டுக்கள்.... கெட்டது பண்ண என்ன நடக்கும்னு அழகா சொல்லிட்டீங்க. மூடநம்பிக்கையின் விளைவை ரொம்ப நேர்த்தியா கதை மூலமாக சொன்னதும் அருமை.


* யாரு சாமி இந்த விருசாலி?


* விருஷாலி பேச்சைக் கேட்டு ராதிகா ஏன் ஆடுற?


* தீரன் யார்? அவன் ஏன் அஸ்வினையை கடத்தணும்?


*கௌதம் யாரு? கௌதமுக்கு தீரனுக்கு இருக்க தொடர்பு என்ன?


*கொய்யும் கண்கள் மெய்யும் பேசியதா ? என்பதை தெரிந்துக்கொள்ள மறக்காமல் படிங்க "கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ...!"


இறுதி அத்தியாயம் மோகினி சொல்ற கதை பெயர் செம அசத்தல்.... நான் மிகவும் ரசித்து படித்தேன். ஆத்மாக்கு ஏத்த மோகினி அவ தான்❤️❤️❤️❤️❤️
செம விறுவிறுப்பான கதையை அளித்த ஆசிரியைக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.❤️❤️❤️❤️❤️


Thread 'கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ- கதை திரி' https://pommutamilnovels.com/index.php?threads/கொய்யும்-கண்கள்-மெய்யும்-பேசுமோ-கதை-திரி.549/
 
கதை எண் 12

கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ

கெளதம் திருமணம் செய்ய இருக்கும் பெண்ணை தீரன் கடத்தி கொண்டு செல்ல கௌதம் திருமணம் நடந்ததா?? தீரன் கடத்தி செல்ல காரணம் என்ன??
ராதிகா தன்னுடைய உறவையே கொல்ல நினைக்க அதற்கு துணை போகும் இவரின் கணவர் இவர்கள் கொல்ல நினைப்பது யாரை?? எதற்கு??

தீரன் வாவ் என்ன ஒரு ஆளுமை அதிரடி ?? அதுவும் இவனை வேரோடு சாய்க்க ஒரு கூட்டமே இருக்க அதில் இருந்து எவ்வாறு தற்காத்து கொள்கிறான் என்பது அவ்வளவு சுவாரசியம் ? இவனின் பாசமும், நட்பும், இவனின் காதல் செம ?? எப்ப என்ன செய்வான் என்றே யூகிக்க முடியாத அதிரடி ஆட்டக்காரன் ??

பரமாத்மா ??எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் இவன் தான் ??இவனின் அந்த பொறாமை அவ்வளவு அழகு ☺️☺️ இவனின் நட்பும் காவலும் அவனுக்கு ஒன்று என்றால் வந்து துணை நிற்பதும் அவனை யாரும் நெருங்கினால் மனதுக்குள் புகைவதும் ?? எதையும் செய்ய துணியும் இவனின் வீரமும் துணிவும் நவீன அனுமான் தான் இவன்

ராதிகா இது எல்லாம் என்ன ஜென்மம் என்றே தெரியல ???அதுவும் இவரின் கணவர் ?‍♀️?‍♀️?‍♀️ நம்பிக்கை இருக்கலாம் இந்த அளவுக்கு தரம் கெட்டு யாரையும் கண் மூடி தனமாக நம்ப கூடாது ??

கௌதம் இவன் என்ன பண்றான் என்று புரியவே நாக்கு தள்ளும் போல இருக்கு என்ன தான் சொன்னாலும் இவன் செய்தது எல்லாமே மிக மிக தவறு சுயநலத்தின் மொத்த உருவம் ஒருவன் எதை வேண்டுமானாலும் விட்டு கொடுக்கலாம் ஆனால்??

அஸ்வினி இது ஒரு வளர்ந்து கெட்ட லூசு எதை நம்பணும் யாரை நம்ப கூடாது என்று எதையும் புரிந்து கொள்ளாமல் சொல்ல வருவதையும் கேட்காமல் ??

மரகதம் அம்மா இவர் தான் எல்லாவற்றிற்கும் ஆரம்பம் செய்தது எல்லாம் சரி தான் ஆனால் ஒரு இடத்தில் அமைதியாக இருந்தது ரொம்ப தவறு ?

அல்லி இந்த பக்கமும் போக முடியாமல் அந்த பக்கமும் போக முடியாமல் யோசிக்காமல் எல்லாம் செய்து விட்டு அப்புறம் குத்துதே குடையுதே என்று புலம்பி ?‍♀️?‍♀️

இதற்கு எல்லாம் இடையே கார்த்திக் தேவகி தம்பதியர் என்டேர்டைன்மெண்ட் காதல் ??அதுவும் மோகினிக்கு வரும் கனவும் அதை தொடர்ந்து அவள் செய்யும் ஒரு செயல் எல்லாவற்றையும் மாற்றி புரட்டி போட்டு விடுகிறது அதை சரி செய்வாளா???

விருஷாலி இவர் பற்றிய ரகசியங்கள் ??

ஒவ்வொரு அத்தியாயமும் திக் திக் அடுத்து அடுத்து என்ன நடக்கும் எப்படி எடுத்து செல்வீர்கள் என்று கொஞ்சம் கூட யூகிக்க விடாமல் மண்டை காய வைத்து விட்டீர்கள் ??? எதிர்பாராத பல திருப்பங்கள் சுவாரசியமான எழுத்து நடையில் ??? ட்விஸ்ட் என்பதற்கு சரியான பொருத்தமான கதைகளம் ??

நட்பு, காதல், துரோகம், வஞ்சம், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகள் என்று ஒரு படம் பார்க்கும் உணர்வில் வைத்து முடித்து விட்டீர்கள் ???

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ????

லிங்க் ???

 
?கதை எண் 12?

?️கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ?️

?அருமையான கதை கடைசி வரைக்கும் டிவிஸ்டை கண்டுபிடிக்க முடியாம பண்ணிட்டாங்க நம்ப ரைட்டர் ?

கௌதம் அஸ்வினி திருமணத்தின் அன்று மணமேடையில் இருந்த தீரன் அஸ்வினியை கடத்திச் செல்கிறான்.. அஸ்வினிக்கு தீரன் யார் எதற்காக தன்னை கடத்தி வந்திருக்கிறான் என்று தெரியாமல் முடிக்கிறாள்.... ஆனால் இந்த இடத்தில் அஸ்வினி சிறிது யோசித்து இருக்கலாம்...
தீரன் அழகு கம்பீரம் ஆளுமை பாசம் அனைத்தும் சூப்பர் .. இவன் வரும் அனைத்து இடமும் சும்மா அதிரடியாக இருக்கும் ???
கௌதம் இவன் என்ன கேரக்டர்னே எனக்கு தெரியல, ரைட்டர் தான் இவனை கடைசிவரை நல்லவன் நல்லவன் சொன்னாங்க, ஆனா இவன் தான் சுமைய அடுத்தவங்க மேல திணிக்கிற பயந்தாங்கோலி ? இவனை எனக்கு பிடிக்கல ? சுயநலவாதி.....
அஸ்வினி கொஞ்சம் தைரியமா எல்லாத்தையும் பேஸ் பண்ணி இருக்கலாம்,பாவம் என்ன நடக்குதுன்னே தெரியாம கடைசிவரை நம்மகூட டிராவல் பண்ற ஒரு ஜீவன் ?
பரமாத்மா நீ என் செல்லம் நீ வேற லெவல் டா, உன்னோட பொறாமை வேற லெவல் ?? அதுவும் கோவிலில் பண்ற லூட்டி செம ?
அல்லி தான் காதலுக்காக போராடுவது செம..
மரகத அம்மாள் அருமையான நபர் கதையின் திருப்பத்திற்கு முக்கியமான காரணம் ?
செல்வி,ரத்தினவேல் இவர்களைப் போல் ஒரு சிலர் மட்டுமே பார்க்க முடியும், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பாசம் வைத்த ஜீவன்கள்?.

?தேவராஜ் ராதிகா இவங்களை பற்றி சொல்லனும்னா, இவங்க ரெண்டு பேரு எப்படிப்பட்ட ஜென்மம்னு எனக்கு தெரியல, எதுக்காக இவங்க ரெண்டு பேரும் உயிர் வாழ்ந்ததற்கான ஒரு அர்த்தமும் இல்லை கூட பிறந்த பிறப்புக்கு உண்மையா இல்ல, பெற்ற குழந்தைகளுக்கு உண்மையா இல்ல மூடநம்பிக்கையை தூக்கிகிட்டு சுத்துனதுதான் மிச்சம். யாரு என்ன சொன்னாலும் கேட்க கூடாது.நம்ப உணர்வுக்கு மரியாதை கொடுக்கணும்கறதுக்கு இவங்கதான் உதாரணம். ?
??விருஷாலி இந்த அள பத்தி என்ன சொல்றதுன்னே எனக்கு தெரியல ??

கார்த்திக் தேவகி இவங்கள வெச்சுக் நகர்ந்த இடம் ரொம்ப சுவாரசியமா இருந்தது....
இதுல எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் மோகினி அவள் கனவில் வர கேரக்டர நேர்ல பார்க்கிறா, அதனால வர்ற பிரச்சனைகள் நிறைய....
( மோகினிக்கு கடைசியாக ஜோடி சேர மாதிரி காட்டினது செம எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ?)

?? மோகினி யோட கதைக்கு இந்த பெயர் தான் 100% பொருந்தும் ? பொருத்தமான கதை தலைப்பு ?

ஆனா நீங்க வெச்ச கடைசி டிவிஸ்ட் நான் எதிர்பார்க்கல ஒரு சின்ன இடத்தில கூட அதை அப்படி இருக்குமோன்னு யோசிக்கவே முடியல.. செம ட்விஸ்ட்? ?????

அருமையான ட்விஸ்ட் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ??
 
  • Love
Reactions: T21
Top