ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மை டியர் சண்டக்கோழி- கதை திரி

Status
Not open for further replies.

T21

Well-known member
Wonderland writer
அப்போகூட "நான் உண்மை தான் சொல்றேன்" என்று பொய் சொல்ல,
"நீ இதுக்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்ட, இதழை நெருங்க சிறு இடைவெளி தான்.
தாமரை வேகமா அனைத்தும் மடை திறந்த வெல்லம் போல.. "கல்யாணம் நிறுத்த அண்ணாட்ட பேச வந்தேன்",
க்ரிஷ்க்கு எங்கு இருந்து ஆத்திரம் வந்தது தெரில. தாடையை பிடித்து இருக்க கைகள் இருகியது.
"இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம் இன்னும் உனக்கு என் மேல லவ் வரலையாடி, நான் பைத்தியம் மாதிரி நீ யாரு என்ன உன் குணம் என்னனு தெரியாம பைத்தியம் மாதிரி இங்க நிக்கறேன் உனக்கு என்ன பிடிக்கல, சொல்லு வேற யாராவது லவ் செய்றயா இல்ல கண்ணனை பிடிச்சி போச்சா.
தாமரை பொறுமை எங்கோ பறந்தது, க்ரிஷ் கன்னத்தில் அடித்துவிட்டு அழுத்துகொண்டே ஓட பார்க்கும் அவளை நெருங்க,
கேட்டதுக்கு பதில் சொல்லுடி,
சொல்லமுடியாதுடா தாமரைக்கும் ஆத்திரம், அது என்ன பழக்கம் கண்ணன் வச்சி பேசறது இவன்ட எதுக்கு சொல்லணும்.
க்ரிஷ் மனமோ கேட்கும் ஒரு முறையும் இல்லனு அவ வாயில இருந்து வராதா என்று தான் பார்த்துட்டு இருப்பான், க்ரிஷ்க்கு முதல் முறையா கண் கலங்கிடுச்சி அதை மறைக்க கூட தோணாமல், சொல்லுடி என் பேர்ல அவன் வந்ததால உனக்கு அவனை பிடிச்சி இருக்கா,
தாமரை இழுத்து பிடித்து வந்த கோபத்தை மொத்தமா அவனை அடிக்க துவங்கினாள், நடந்ததை சுருக்கமாக சொன்னாள், போட்டோ மீது வந்து ஈர்ப்பு க்ரிஷ் பேரில் கண்ணனை பார்க்கும் போது சுத்தமா வரவில்லை, முதல் சந்திப்பில் கிருஷ்ணாவை கண்டு கொண்டாள் நேரில் பார்க்கும் போது சொல்லி முடிச்சி உட்கார்ந்துதாள்.
"என்ன பாத்தா எப்படி தெரியுது என் தங்கச்சி புருஷன பாக்கறவ போல தெரியுதா, எனக்கு ஆசை இருக்கும், ஜோடியா பேசணும் ஒன்னா துணி எடுக்கணும் உங்களுக்கு நான் எடுக்கணும் எனக்கு நீங்க எடுக்கணும், எல்லாம்.... இது போல சந்தேகம் பிடிச்சவன் கூட என்னால வாழ்க்கை முழுசும் அணு அணுவா சாக முடியாது, தாமரை முகத்தை மூடி அழுக துவங்க.
க்ரிஷ்க்கு ஏதோ போல ஆனது, தாமரை தோள் மீது கை வைக்க. இப்போ என்ன குடுத்து புரூவ் செய்யினுமா, பொண்ணுகிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியாது, கைய எடுடா" என்றாள்.
"ஹே சொல்றத கேளு டி,"
"என்ன கேக்கணும் கண்ணன் கூட சேர்த்து வைக்கிறதா, இல்ல மீண்டும் சொன்னான்னு ஹாப் சாரீல இருந்து சுடிக்கு மாறனும் அதுக்கும் அப்புறம் ஒரு குத்தம் கண்டு பிடிப்பது நீ," கிருஷ்ணாக்கு ஒரே சந்தோசம் நமக்காக ஒருத்தர் அவங்க இயல்பை மாத்திக்கிறது எல்லாம் அரிது..
"ஹே அப்படி இல்ல தாமரை நான் ரொம்ப லவ் செஞ்சேண்டி பைத்தியம் போல ஆயிட்டேன் டி, சாரி இனி இது போல நடக்காது,"
"லவ் என்ட சொல்லாம என்ன எதுக்குடா டச் செஞ்ச, உனக்கு பொண்ணுக பீலிங் என்னடா தெரியும், பாத்த அன்னைக்கு இடுப்ப பிடிக்கிற, உன் இஷ்டத்துக்கு நான் என்ன பொம்மையா".
"சாரி தாமரை, நான் உரிமைல அப்படி" க்ரிஷ் திக்கி திணறினான்.
"பாரா சார்க்கு சாரி எல்லாம் சொல்ல தோணுமா அதிசையமா."
"சாரி டி லூசு போல செஞ்சிட்டேன் எனக்கு தெரில பொண்ணுங்க கிட்ட எப்படி பேசணும்னு,
தாமரை கோபத்தில் "எனக்கு நீ வேண்டா நீயே கல்யாணத்தை நிறுத்திடு" என்றாள்.
"ஹே தாமரை என்ன தண்டனை வேணும் நாலும் கொடு, இது மட்டும் பண்ணாத ப்ளீஸ்" என்றான்.
தாமரை திரும்ப திரும்ப இதே சொல்ல, க்ரிஷ்க்கு கோபம் வந்துடுச்சு. அவள் வாயை அடக்க முத்தமிட துவங்கியவன், இருவரின் உடலிலும் மாற்றம் ஏற்பட்டது, தொடக்கத்தில் திமிறிய தாமரைவும் க்ரிஷ் முத்ததுக்கு அடங்கி மொத்தமாக எடுத்துக்க அனுமதி குடுக்க, இருவர் மனமும் ஏதோ பார்ப்பது உணர்வில் க்ரிஷ் அவளை விடுவித்து சுத்தி பார்த்தவன் பக்கம் இருந்த கையிற்று கட்டிலில் தாமரைய தள்ளிவிட்டு, க்ரிஷ் நெருங்க தாமரை திருமணம் ஆகாதது அது எல்லாம் கருத்தில் இல்ல, க்ரிஷ் ஆக்ரோசமாக நெருங்க, கைகள் அதன் வேலையை பார்க்க, தாம்பத்தியத்துக்கு பாதிக்கடல் தாண்டும் வேலையில், க்ரிஷ் சுயநினைவுக்கு வந்து வேகமாக எந்திரித்து திருப்பி அமர்ந்தான், தாமரை கலைந்து இருந்த ஆடையை சரி செய்துகொண்டு இருக்கும் வேலையிலே,
"சாரி தாமரை ஏதோ ஒரு வேகத்துல உரிமை இருக்குன்னு உன் வாயில இருந்து பிடிச்சி இருக்குன்னு சொன்னதும், நிதானம் இல்லாம ஏதோ செஞ்சிட்டேன், "சாரி" க்ரிஷ் திரும்பி கூட பார்க்காமல் க்ரிஷ் வெளியே சென்று நின்று கொண்டான்.
தாமரை ஆடையை சரி செய்து, அவளை முழுவதும் குடுக்க தயாராக தான் இருந்தாள், அவளோட உணர்வுக்குயிடம் குடுத்த முதல் எல்லையே இல்லாமல் க்ரிஷ் மீது காதல் போங்க, இருந்தாலும் இவனை அடலீஸ்ட் ஒரு வாரம் ஆச்சி வச்சி செய்னும் என்று முடிவு எடுத்த தாமரை விருவிருனு வீட்டை நோக்கி போய்ட்டா.
"க்ரிஷ் உனக்கு அறிவே இல்ல இப்படி பொண்ணை பலாத்காரம் செஞ்சிட்ட, உனக்கு பனிஷ்மென்ட் குடுத்தே சாவடிக்கணும்னு போறா" என்று க்ரிஷ் முடிவே செஞ்சி தாமரை பின்னாடியே போனான், அவள் நடைக்கும் முகத்துக்கும் சம்பந்தம் இல்லாதது போல கோவமான நடை முகத்தில் சிரிப்பு, வீட்டுக்கு போய் அவ ரூம்க்கு போய்ட்டா.
தாராக்கு மனசே கேக்கல. மீராக்குட்டி பக்கம் போனாலே அவள் முகம் திருப்ப அனைத்தும் கவின் அமைதியா பாத்துட்டு தான் இருந்தான், தாரா இரவு சரியா சாப்பிடல பேருக்கு நான்கு வாய் போட்டுவிட்டு குட்டி மீராவை ஏக்கமா பாத்துட்டு போய் ரூம்ல படுத்துட்டா.
கவின் சிறிது நேரம் கழித்து குட்டியை தூக்கிக்கொண்டு ரூம்க்கு வந்தான், படுத்து இருந்த தாரா மீராவை தூக்க கை வைக்க கவின் பக்கம் திரும்பிக் கொண்டாள். இவளுக்கு என்ன செய்வதுன்னு தெரில பாப்பாவை ஏக்கமாக பார்த்துக்கொண்டு இருக்க,
கவின் குட்டியிடம் "அம்மா அழுறாங்க பழம் விட்டுடலாமா" அழுந்த முகத்தோடு இருக்கும் தாராவை பார்த்து, அனைத்தும் மறந்து கட்டிக்கொள்ள.
குழந்தைங்க இருக்க வீடுனா இப்படிதான் இருக்கும் இனி இத வச்சி நம்ம ரெண்டு பேரும் சண்டை போடக்கூடாது. ஒருமானதாக இருவரும் முடிவு எடுத்து இருக்கும் சமயம் குட்டி மீரா முதல் முறையா பாட்டிட்ட போனும், என்று அடம் பிடிக்க. கவின் தாராக்கு தான் மண்டைய பிச்சிக்கலாம் போல இருந்தது.
இப்போ எந்த பாட்டிய கூப்பிடறான்னு தெரியலயே சாரா, ரித்திகா, ரூம் தட்ட. குட்டிமீரா திரும்ப பாட்டி வேணும் வேணும் என்று சொல்ல. ஒருவேளை மீரா அத்தைய சொல்லுவா போல போ அவங்க ரூம்க்கு சொல்லிடு சாரா, ரித்திகா தூங்க போக, குட்டி மீராவிடமும், இந்த பாட்டி இல்ல பாட்டி என்று அழிச்சாட்டியம் செய்து வீட்ல இருக்க எல்லோரையும் ஒரு வழி படுத்த. க்ரிஷ் கண்ணன் வந்து நிற்க. "எப்போ பாரு பூனை குட்டி போல அடங்கரதில்ல ரித்திகா அக்கா போல" ரித்தி க்ரிஷ்ஷ பார்த்து "உனக்கும் குட்டி வரும் அப்போ பாத்துக்கறேன் டா".
ஒரு பக்கம் மல்லி தாமரை வந்து இருக்க, ஒரு ஜோடி இதான் சான்ஸ் என்று நைசா நழுவி தோட்டது பக்கம் செல்ல. அதை பார்த்த க்ரிஷ் "செமயா வாழறாங்க நமக்குனு வந்து ஒன்னு வாச்சி இருக்கு பாரு தத்தி". என்று தாமரையை பார்த்து வாய் அசைக்க.
தாமரை கண்டுக்கவே இல்ல க்ரிஷ் மேல செம கோவத்துல சுத்திட்டு இருக்க.
என்ன ஒரே சாத்தமா இருக்கு மயிலு வெளிய வர, பாட்டி என்று காட்டிக்கொண்டு கை நீட்ட. மயிலுக்கு ஏதோ ஒரு உணர்வு,
கவின் மயிலிடம் குடுக்க மயிலு பாட்டி தான் வேணுமாம், இருக்க எல்லாரையும் படுத்தி எடுத்துட்டா,
என் தங்கம் புள்ள இந்த பாட்டிய தான் தேடுனீங்களா. சரி தம்பி நான் பாத்துக்கறேன் நீங்க எல்லாம் போய் தூங்குங்க மயிலு குட்டியை தூக்கி போய் கதை சொல்லி தூங்க வைக்க.
கவின் க்ரிஷ்ஷ பார்த்து கண்ணா எங்க, அவன் ரூம்ல இருக்கான்.
சரி நாங்க தூங்க போறோம் செம டையர்ட் தாராவை பார்த்துக்கொண்டே போக.
நல்ல வசதியா போச்சி உனக்கு தாரா சொல்ல எல்லாம் என் பொண்ணு போட்ட பிளான் ரொம்பத்தான். ஒரே இரவில் விட்டது அனைத்தும் பேச துவங்கியது..
க்ரிஷ் தாமரை ரூம்க்கு உள்ள போறதுக்கு முன்னாடி கை பிடித்து
தாமரை திரும்பாமல் "கைய விடுங்க என்ன வேணும் உங்களுக்கு".
"எனக்கு ஒன்னு வேணும் கிடைக்குமா".
"அது எல்லாம் ஒன்னும் கிடைக்காது".
"சரி சாரி கொஞ்சமாவது சிரிச்சாப் போல இரு இன்னும் ரெண்டு நாள் தான் கல்யாணத்துக்கு இருக்கு,
தாமரை "சரி" சொல்லிட்டு ரூம் போய்ட்டா. இவளை எப்படி சரி செய்வதுனு சத்தியமா க்ரிஷ்க்கு புரியல.
அடுத்த நாள் சத்தம் இல்லாமல் விடிந்தது, தூங்கி எழுந்த க்ரிஷ்க்கு மனசு படபடன்னு இருக்க, தயாராகி வெளியே வரும் சமயம் குடும்பத்தில் உள்ளவர்கள் பேசுவதை கேட்டு இதயம் நின்று விடும் போல ஆக, அங்கு தாமரை விழிகள் க்ரிஷை கடித்து குதற காத்துகொண்டு இருக்க,
சுத்தம் கல்யாணம் நடந்த மாதிரிதான்.
 

T21

Well-known member
Wonderland writer
24

தாமரை கோபமாக கிருஷ்ணாவை முறைக்க, அங்கு சுற்றி இருப்பவர்களுக்கு என்ன சொல்றதுன்னு தெரில,

தாமரையின் கோபமான முகத்தை அனைவரும் பார்த்து ஏதோ அதிசயத்தை பார்ப்பது போல பார்க்கிரார்கள் ஆகாஷ், மயிலு, மற்றும் ஆகாஷ் அப்பா.

அர்ஜுன் ஆதி மட்டும், "எதுக்கு இப்படி பாக்கறீங்க".

"எங்க பொண்ணு இத்தன வருஷம் கழிச்சி முதல் முறையா கோபப் படுறா."

ரித்தியும் சாராவும், "என்னது முதல் முறையா",

"ஆமா அவ ரொம்ப அமைதி, சத்தமா கூட பேசமாட்டா",

ரித்தி சாரா ஒன்று சேர்ந்து, "ஐயோ அப்போ கடைசியா உங்க அமைதியான பொண்ண பாத்துக்கோங்க?"

மயிலு, தாமரை அப்பா, புரியாமல் முழிக்க, க்ரிஷ் சேட்டைகளை ஒன்று விடாமல் பேச ஆரம்பிக்க.

இவனை மட்டும்தான் வீட்ல இருக்கவங்க எல்லோரும் குழந்தைல இருந்து பாத்துக்குட்டோம், எங்க வீட்ல அடுத்து அடுத்து 5 குழந்தைங்க, நாங்க 3 ஜோடியும் இவன் பின்னாடி மட்டும்தான் சுத்திட்டு இருப்போம்.

அதும் கவின் அப்பா அம்மா சும்மாக்கூட பக்கம் உட்காறக் கூடாது,

கவின் மாமா ஆய் வருதுன்னு, எல்லாத்தையும் கழட்டி போட்டுட்டு நின்னுடுவான், சாரா நிறுத்தவும், ரித்திகா துவங்கினாள், "இது என்ன பிராமதம், அர்ஜுன் ஒரு ஆறு மாசம் டான்ஸ் ஏதோ கத்துக்க போனான், ஆசையா வந்த உடனே சாராவ தள்ளிட்டு போய்ட்டான் ரூம்க்கு, அப்போ இவன் ஒன்னு பண்ணான் பாருங்க, சாராக்கு இவனை என்ன செய்றதுன்னு தெரில, நடு வீட்ல நின்னுட்டு, அப்பாக்கு என் மேல பாசமே இல்ல, ஆசையா அப்பா பாக்க வந்த எனக்கு ஒரு ஹாய் கூட சொல்லலன்னு யூனிபார்ம்ம கழட்டி போட்டுட்டு ஜட்டியோட, நான் ஊர விட்டு போறேன், எங்காவது எனக்கு அப்பா பாசம் கிடைக்கும்ன்னு ஓடிட்டான், அவனை தேடி அலைஞ்சி அர்ஜுன் ஒரு மாசம் சாரா பக்கம் கூட போகாம வச்சி செஞ்சான்,"

சாரா சிரிச்சிட்டே அவனுக்கு பிடிவாதம் அடம் ஜாஸ்தி இப்போவரா தொடருது, அத என்ன செய்றதுன்னுதான் புரில, தாமரையையும் அப்படி மாத்தாம இருந்தா சரி,

"என்னது மாப்பிள்ள தாமரையும் மாத்திடுவானா."

"ஆமா சம்பந்தி என்று ஆதி ஆரம்பிக்க, எனக்கும் ரித்திக்கும் கொஞ்சம் சண்டை, அவன் அப்போ காலேஜ் படிச்சிட்டு இருந்தான், கொஞ்சம் டிஸ்டன்ஸ்ல இருந்தோம் அவளும் நானும் அப்போ ஒரு காரியம் பண்ண டிவோர்ஸ் வர கொண்டு போக வச்சிட்டேன், நல்லவேளை அர்ஜுன் வந்து நடுல களச்சி விட்டுட்டான், இல்லனா நான் தனியா இருந்து இருப்பேன்".

"அப்படி என்ன செஞ்சாரு," மயிலு கேட்க.

இத நான் சொல்றேன்னு கண்ணன் பேச ஆரம்பிக்க, "ஆதி அப்பா கோவமா இருந்தார், க்ரிஷ் பக்கம் போய் உட்கார்ந்து, ஆதி டாடி தான் மகனுக்கு பிரண்ட்ன்னு இல்ல உங்களுக்கும் நான் பிரண்டுதான் என்ன மேட்டர் சொல்லு நான் தீத்து வைக்கிறேன்னு" கேட்க,

ஆதியும் இருக்குற கடுப்புல, ஒரு டைம் தப்பு பண்ணிட்டேன்டா இப்போவர சொல்லி காட்ட, இன்னைக்கு தான் புதுசா நடந்தது போல, என் பொண்ணுக்கே கல்யாணம் ஆகிடுச்சு நான் என்ன செய்ய ஒரு ஒரு டைமும் நான் அவ கால்ல விழணும்ன்னு எதிர் பார்க்காத,

"அப்பா நீயும் உன் கெத்த காட்டு, அப்போ தெரியும் ரித்திமா ஓட ஆட்டம்,"

"அவளை என்னால ஒன்னும் பண்ண முடியாது டா, அவ மூஞ்சிய பாத்தாவே நான் கெஞ்ச ஆரம்பிச்சிடுவேன்".

"இத முதல்ல மாத்துங்க நீங்க, அதனாலதான் இப்படி உங்களை வச்சி செய்றாங்க,"

"என்ன செய்றது நீயே சொல்லு டா."

"சரி இந்த விசயத்துல நான் தான் குரு சரியா, ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சிக்கோங்க முன்வைச்ச காலை பின்னாடி எடுக்கவே கூடாது",

"சரிடா முதல்ல என்ன செய்ய, எதாவது அவள இப்போ நான் செஞ்சே ஆகணும்",

"நேரா உள்ள போங்க, போய் இவ்ளோ நாள் விட்ட அதிகாரம் எல்லாம் சேத்து வச்சி பண்ணுங்க".

"டேய் கொஞ்சம் தெளிவா சொல்லுடா"

"சரியான மக்கு பா நீ"

"டேய்ய் சலிச்சிக்காதடா, சொல்லு."

"அதிகாரமா ரித்திகா அம்மாட்ட போய் சாப்பாடு போடுங்க, நடுல டி அப்படி சொல்லணும் புரியுதா?"

"சூப்பர் புரிஞ்சிச்சி, இன்னைக்கு இருக்கு அவளுக்கு" ஆதி வீரமா போன மறு நொடி,

அப்புறம் என்னாச்சி, ஆகாஷ் அப்பா அம்மா ஆர்வமாக கேட்க,

"சாப்பாடு போடுடி," டி சவுண்ட் வெளிய வரத்துக்குள்ள குக்கர் விசில் நெத்தில பட்டு ஒரே ரத்தம், ஆதி சோகமா சொல்ல,

மயிலு, தாமரைய நினச்சா இன்னும் பயமா இருக்கு, என்று சொல்ல குடும்பமே சிரித்தது,

அதுக்கு அப்புறம் அர்ஜுன் தான் ரெண்டு பேரையும் சமாதானப் படுத்தி வச்சான், இல்லனா அவ என்ன கொலை செஞ்சி இருப்பா",

வாணி இது எல்லாம் கேட்டுட்டே ஆகாஷ் கையை சண்டை மறந்து பிடிக்க, ஆகாஷ் முறைத்தான், அந்த முறைப்புல வாணி கண்கள் கலங்கிடுச்சி...

கவின் அப்பா அம்மா தாராவை கூட்டிட்டு வயல சுத்தி பார்க்க போனவங்க திரும்ப வர,

"என்ன இங்க ஒரே சத்தமா இருக்கு",

"என்ன க்ரிஷ் செஞ்ச சேட்டையை பத்தி பேசிட்டு இருந்தோம்"

"அந்த தெய்வத்த தயவு செஞ்சி தனிக்குடுத்தனம் வச்சிடுங்க, இல்லனா நானும் என் பொண்டாட்டியும் தனியா போய்டுறோம்" கவின் அப்பா சொல்ல ஒரே சிரிப்பு, க்ரிஷ் எல்லோரையும் ஓட ஓட விரட்டினான்.

ஒரு நாள் தான் இருக்கு கல்யாணத்துக்கு, எல்லா வேலையும் முடிஞ்சதுன்னு ஒரு மேனேஜர் வந்து சொல்ல, தோரணம் பூ வச்சி வீடு கொஞ்சம் அலங்காரம் செய்யனும்னு சொல்லி ஆளுக்கு ஒரு வேளை இழுத்துப்போடு செய்து கொண்டு இருந்தார்கள்.

தாமரை கோவமா கட்டில்ல உட்கார்ந்து இருக்க, க்ரிஷ் ஏற்கனவே அவளை எப்படி சமாதானம் படுத்தறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கான், இப்போ இது வேறையான்னு.

தாமரை"

"முதல்ல வெளிய போடா",

"சாரி டா".

"உன்ன வெளிய போக சொன்னேன்",

"சாரி அது ஏதோ விளாட்டுக்கு பேசுனது"

"எது லிவ் இன்ல இருக்கறது உனக்கு விளாட்டா?, என்னையும் அப்படி நினைச்சிட்டியா",

"இல்லடா உன்ன பாத்ததும்தான், அது வேண்டான்னு விட்டுட்டேன்".

"என்ன சோகம் தெரியுது, உனக்கு கலர் கலர்ரா டிசைன் டிசைனா வேணுமா சொல்லுடா நாயே."

"அப்படிலாம் இல்ல டி, மனசுக்கு புரிஞ்சி பிடிச்சி கல்யாணம் செஞ்சிக்கணும்னு ஆசை அதன்",

"அப்போ வேற எவளாவது கிடைப்பா, என்ன டென்ஷன் செய்யாம வெளிய போ" தாமரை இங்க கத்திட்டு இருப்பது ஹால்ல பேசிட்டு இருந்த எல்லோருக்கும் கேட்க,

"நான் தான் முதல்லயே சொன்னேன்ல க்ரிஷ் அவளையும் மாத்திடுவானு" எல்லோரும் சிரிக்க அன்றைய நாள் இவர்களுக்கு பொழுது போக்காகவும் க்ரிஷ்க்கு சண்டையோ சண்டை, தாமரை முகம் கோவத்தில் கோவைப்பழம் போல சிவந்து இருந்தது.

க்ரிஷ் சிறிது பேசிட்டு இருந்தாலும், தாமரையை பார்க்கும் போது அமைதியா ஆகிடுவா.

இரு பெண்களையும் நலங்கு வைக்க உட்காற வைக்க, எதுக்கு தனியா உட்காற வச்சிட்டு சேத்து உட்காற வச்சிடலாம் சொல்லி ஜோடியாக உட்காற வைத்து சடங்கை ஆரம்பிக்க, க்ரிஷ் ஒரு ஆயிரம் முறை சாரி சொல்லி இருப்பான், அது எல்லாம் தாமரை காதுக்கு கேட்டா தான.

"நீ மட்டும் இப்போ வாயை மூடிட்டு உட்காரல, நான் இங்க இருந்து எந்திருச்சி போய்டுவேன்" நம்ம தாமரையா இது என்று சுத்தி இருப்பவர்கள் மிரட்சியாக பார்க்க, க்ரிஷ் குடும்பத்தினர், "அனுபவி ராஜா உன்ன வச்சி நாங்க என்ன பாடு பட்டு இருப்போம்".

"குடும்பமே வச்சி செய்ரிங்கல இருக்கட்டும், முதல்ல இவளை சமாதானப் படுத்திக்கிறேன் அப்பறம் உங்கள வசிக்கிறேன்".

அடுத்த நாள் கல்யாணம், எல்லோரோட மனசுலயும் அவ்ளோ நிறைவு, நல்ல பையன் அது மட்டும் இல்லாம ஆகாஷ் அம்மா அப்பாக்கு ஒரே குடும்பத்துல போறது இன்னும் சந்தோசம், அது மட்டும் இல்லாம ஒரு பொண்ணு இங்கவே பக்கத்துல இருக்க போறாங்க, அத நினைக்க இன்னும் சந்தோசம்,

கவின் சிஸ்டர்ஸ் டான்ஸ் கிளாஸ் பாத்துக்க போறதாகவும், க்ரிஷ் இப்போ இங்க ஷிபிட் ஆகிட்டான் இன்னும் கொஞ்ச மாசத்துல கண்ணன் வந்துடுவான், அப்புறம் என்ன டான்ஸ் கிளாஸ் அப்போ அப்போ போய் பாத்துக்கறது கண்காணிப்பு கேமரா எல்லாம் பிக்ஸ் செஞ்சி இங்க இருந்தே பொறுப்பா பாத்துக்கலாம்ன்னு முடிவு செஞ்சிட்டாங்க, இங்கும் அங்கும் போய்ட்டு வரத்துக்கு வசதியா ஒரு குட்டி வேன் வாங்கிட்டாங்க, பஸ்ல போய்ட்டு வந்தா டிக்கெட் செலவுக்கு வேன் பரவால்ல, குடும்பம் ரொம்ப பெருசா ஆகிடுச்சு, இது எல்லாம் சொல்லிட்டு இருக்கும் சமையம் க்ரிஷ் தாமரையை பார்க்க,

தாமரை அவனை ஒரு மனுசனா கூட பாக்கல, குட்டி மீராவை வைச்சி விளாட்டு கட்டிட்டு இருந்தான், தாமரை அம்மா அவளை கூப்பிடவும் மல்லிகிட்ட பாப்பாவை குடுத்துட்டு உள்ள போய்ட்டா,

இந்த கண்ணன் மல்லி தனியா இருக்கவும், கொஞ்சம் பேசணும் பின்னாடி வா",

"இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்ப போறோம், எதுக்கு இந்த ஆட்டம் போடறீங்க",

"இந்த இடம் மிஸ் பண்ணுவேன்டி, வா ஒரு ரவுண்டு போய்ட்டு வரலாம்".

"பாப்பாவ யார் பாத்துப்பா நான் வரமாட்டேன்".

"இங்க இவ்ளோ பேர் இருக்காங்க, விட்டுட்டு வா."

குடும்பமே ஒன்னாதான் இருந்தது, மல்லியும் விட்டுட்டு பின்னாடி போய்ட்டா, குட்டி மீரா, விளாடிக் கொண்டு இருந்தவளின் கண்ணில் தூரமாக கட்டி இருக்கும் காளை கண்ணில் பட, அதன் அழகில் ஈர்க்கப்பட்டு , பாப்பா ஒரே ஓட்டமா ஓடிட்டா,

அப்போதான் வெளிய வந்த தாமரை பாப்பாவ காணம், தேடியவள், ஒரு நிமிஷம் பயந்துட்டா மல்லிகிட்ட இருப்பாளோ பின்னாடி போய் பாத்தா கண்ணன் மல்லி தனியா நின்னு பேசிட்டு இருந்தாங்க,

பாப்பாவ காணோம்னு தாமரை சொல்ல, க்ரிஷ் கோவமா "உன்ன தான பாத்துக்க சொன்னாங்க, குழந்தைய கூட பாத்துக்க தெரியாதா" தாமரையை திட்டிட்டு குழந்தையை எல்லோரும் தேட இங்கு சத்தமா இருக்கு கண்ணனும் மல்லியும் வந்துட்டாங்க.

தாமரை கண்ணீல்தான் பாப்பா முதலில் பட்டால், அங்கு காங்கேயம் சீறிக்கொண்டு தலையை ஆட்ட, வீட்ல இருக்க பெரியவங்களே பயந்துட்டாங்க, கவின் தாரா துடிச்சிட்டாங்க,

கவின் கத்திக்கொண்டே ஓடினான், "பாப்பா அப்பாகிட்ட வா தண்ணி பாக்க போலாம், அப்பா நிறைய பிளார்ஸ் தரேன் இங்க வா",

பாப்பா அந்த காளை தலையை ஆசைச்து வா என்று கூப்பிட்டது போல இருக்கு, இவர்கள் அருகில் போவதற்குள் காளை அருகில் ஒரே ஓட்டமா ஓடிட்டா,

குட்டி மீராக்கு என்னாச்சு?
 

T21

Well-known member
Wonderland writer
25 mds

க்ரிஷ் அனைவரையும் ஒதுக்கிவிட்டு முன்னே செல்ல, ஆகாஷ் கண்ணன் பின்னாடியே ஓடிச் சென்றார்கள், இவர்கள் வேகத்தை விட மீரா இரண்டு மடங்காக ஓடினாள். கண் சிமிட்டும் முன்பு அந்த கருப்புக் காளை மிரட்டும் கண்களோடு நிற்க, ரித்திகா ஒரு புறம் மயங்கி சரிய, கவின் அவளைப்பிடித்து, சாரா கையிலே மயங்கியவளை குடுத்துவிட்டு, இவன் மாட்டின் பக்கம் ஓடினான்.

"மீரா குட்டி அங்கு போகக் கூடாது, இங்க வா நான் வேற மாட்டுக்கிட்ட கூட்டிட்டு போறேன்" கவின் பேசிக்கொண்டு இருக்கும் போதே குரல் உடைந்து அழுதுவிட்டான்.

எல்லோரும் பயப்படுவதற்க்கு ஒரு காரணம் உண்டு, ஆகாஷ் மட்டும்தான் அந்த காளையை பார்த்துப்பாங்க. மத்தவங்க யாரும் தூரத்தில் இருந்துகூட அந்த கருப்பன் கண்ணில் படக்கூடாது, பட்டுவிட்டால் அவன் ஆடும் ஆட்டம் மிரள வைக்கும்.

கருப்பன் மீரா குட்டி அருகில் வருவதை பார்த்து அவனின் கூரிய இரு கொம்புகளை வைத்து முட்ட நினைக்கும் அந்த நொடியிலே, அங்கு இருக்கும் அனைவர் உயிரும் பாதி பிரிந்தது படபடப்பில்,

க்ரிஷ் கண்ணன் ஒரு புறம், "இங்க மாமா கிட்டவா என் செல்லத்தை தூக்கிப் போட்டு பிடிக்கிறேன்" என்று எது சொல்லியும் வேலைக்கு ஆகல, மீரா என்ன நினைத்தாளோ ஓடிச் சென்று குணியும் கருப்பன் கொம்பைப் பிடித்து ஆட்டத் துவங்க.

இங்கு அனைவரும் பதற, சிறிது நேரத்தில் கொம்பை விட்டுவிட்டு காளையின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள், அவள் கட்டிக் கொண்டதும் கருப்பன், தலையை உயர்த்துவதும் மீண்டும் அவளை தரையிலே விடுவதும் அந்தரத்தில் தூக்குவதும் என்று விளையாட்டு காட்டிக்கொண்டு இருந்தான்.

இப்போதுதான் போன உசுரு எல்லோருக்கும் வந்தது, ஆகாஷ் அங்கு நடப்பதைப் பார்த்து, "நம்ம கருப்பனா இது," ஒரே ஆச்சரியம், மீராவை ஆகாஷ் மெதுவாபோய் தூக்க,

ஆஆஆஆ னு ஒரு சத்தம் போட்டா பாரு அவ்ளோதான், ஆகாஷ் விட்டுட்டான் குட்டி மீரா கை வலிக்க கருப்பன் கழுத்தை விட்டுவிட்டு, இடுப்பில் கை வைத்து அண்ணாந்து பார்க்க, அவள் நின்ற தோரணை ராஜா போல தோன்றியது, அவ்ளோ கம்பீரம். கண்டிப்பா இவள மிலிட்டரில சேத்து விட்டுடலாம் என்று கூட எண்ணினான் கவின். இவ்ளோ ஆளுமை இதற்கு முன்பு பார்க்க வில்லை, ஆனால் அடுத்த நொடி, அவள் கண் அசைவில் கருப்பன் அமர்ந்தான், கருப்பன் முகத்தைப் பிடித்து கட்டிக்கொண்டு முத்தமிட துவங்கி, அவனுடன் ஒரு மணி நேரம் விளாடி விட்டு பொறுமையா, இவ்ளோ நேரம் கத்திக்கொண்டு இருந்தவர்கள் பக்கம் வந்து.

கண்ணன் க்ரிஷ்ஷ பார்த்து "மாமா தூக்கு" அவள் சொன்ன மறு நொடி க்ரிஷ் கண்ணன் சிலிர்த்து இடைவேளை விட்டு நின்று கொண்டு மீராவை தூக்கி போட்டு விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.

வீட்டுக்கு உள்ளே கூட போக முடியாமல் அங்கவே ஆளுக்கு ஒரு இடம் பிடித்து உட்கார்ந்தார்கள்.

சாரா மீது மயங்கி இருக்கும் தாராவை கவின் பிடித்து இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டு, அவளது கன்னம் தட்டி எழுப்பினான், மாமாவிடம் விளாடியாது போர் அடிக்க, மீரா... பாட்டி தாத்தாவிடம் ஓடி பிடித்து விளாடிக்கொண்டு இருக்க.

தாராவை தட்டி தட்டி பார்த்தும் இன்னும் எழாமல் இருப்பவளை தூக்கிட்டு ஹால்க்கு போய் அவளை மெதுவா படுக்க வைத்தவன், கிட்சன்க்கு சென்று தண்ணீர் தெளிக்க, தாரா "மாமா பாப்பா எங்க என்னாச்சி."

"ஒன்னும் இல்ல அவ விளாடிட்டு இருக்கா, நடந்த அதிசயத்தை சொல்ல,

"எவ்ளோ அறிவு பாத்திங்களா, என் பொண்ணு என்னப் போல",

"உன்னப் போல இல்ல என்னப் போல, போலீஸ் காரன் பொண்ணு டி அவ",

"ஹலோ லாயர் ஒன்னும் போலீஸ விட குறைச்சல் இல்ல" இங்கு இவர்கள் செல்ல சண்டை போட்டுக்கொண்டு இருக்க.

வெளியே தாமரை அமைதியா ஒரு ஓரத்தில் உட்கார்ந்து இருந்தாள், க்ரிஷ் மீராவிடம் விளாடிக் கொண்டு இருந்தாலும், தாமரையைத் திருட்டுத் தனமாக பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்த கண்ணா.

"சாரி டா நான் தான் மல்லிய கூட்டிட்டு போய்ட்டேன், என் தப்பு தான் மன்னிச்சுடு, இனி செய்ய மாட்டேன் இப்படி"

"டேய்ய்!! அதான் நம்ம குட்டித் தங்கம் பவர் இவ்ளோ நாள் தெரியாம இருந்தோம், இப்போதான் தெரிஞ்சி இருக்கு விடு" மல்லியும், "மாமா தாமரை என்டதான் விட்டுட்டு போனா, நான்தான் சரியா பாத்துக்கல, அவ ஏதோ போல இருக்கா, பேசுங்க போய்".

"சரி மல்லி" தாமரையை நோக்கி வரும் க்ரிஷ்ஷை பார்த்ததும் தாமரை வீட்டுக்குள் போய் தாரா பக்கம் உட்கார்ந்துட்டா, க்ரிஷ்ஷால பேச முடில,

ஒவ்வொருவராக கிளம்பி வரவேற்பு அறையில் வந்து நின்றார்கள், வேனும் வந்துவிட்டது, பொட்டி படுக்கையை கட்டிக்கொண்டு ஊரைப் பார்க்கப் போக, க்ரிஷ் தாமரையை அவர்களுக்கு வாங்கி வைத்த வீட்டில் விட்டுவிட்டு, காதல் குடும்பம் கிளம்பியது. மீராதான் கருப்பனை கட்டி பிடித்துக்கொண்டு நான் வரமாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்துகொண்டு இருந்தாள்.

கவின் உடனே "இன்னும் கொஞ்ச வருசத்துல இங்கவே வந்து செட்டில் ஆகிடலாம்டா தங்கம்" சமாதானப் படுத்தி கூட்டிட்டுப் போக, கவின் தங்கைகள் டான்ஸ் கிளாஸை வெளிநாட்டில் அவள் நண்பர்களோடு சேர்ந்து விரிவு செய்யத் துவங்க, கண்ணன் மல்லி தேன்நிலவை சிறப்பாக கொண்டாட கிளம்பிட்டாங்க...

ஆகாஷ் வாணி ஒரு புறம் முகத்தை திருப்பிக்கொண்டும்,

தாமரை கிருஷ்ணாட்ட ஒரு வார்த்தை கூட பேசவில்லை, அவனும் டிசைன் டிசைனா மன்னிப்பு கேட்டுட்டான், சரி வேலைக்கு ஆவாது என்று கிளம்பிட்டான். அவன் கண்டு பிடித்த பாதிப்பு இல்லாத கெமிக்கல்ஸ்ஸை சோதித்து அதில் பல ரிசல்ட்டும் வந்து இருந்தது,

ஒரு விடுமுறை தினத்தில் பக்கத்து ஊரில் கடை துவங்கி, ஒரு பிரான்ச் ஆரம்பித்த வாசு வனிதா அங்கவே கொஞ்ச நாள் தங்கிட்டாங்க. இப்போதான் சொந்த ஊருக்கு வந்தார்கள், வந்ததும் வாணி ஆகாஷை பாக்கணும்ன்னு களைப்பை பார்க்காமல் வந்தாள் முழுமாத கர்பிணியாக.

ஆகாஷ் தோட்டத்துக்கு செல்லும்போது வந்து இரங்கினர் இருவரும், வாணிக்கு வனிதாவ பாத்து ஒரே சந்தோசம், "ஹேய் சூப்பர் பாப்பா வர போது இல்ல, இனி ஜாலில உனக்கு, ஜாலியா விளையாடலாம்ல" என்னதான் சந்தோஷத்தில் சொன்னாலும் அவளையும் மீறி ஏக்கம் ஒரு பக்கம் எட்டிப் பார்க்க, ஆகாஷை வாணி பார்த்த அந்த சமையம், ஆகாஷ் அவளைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.

சிரித்து சிரித்து பேசிவிட்டு கிளம்பும் சமையம், "நீ எப்போ குட் நியூஸ் சொல்லப் போற?" என்று வாணியை கேட்க,

"சீக்கிரமா சொல்றோம்" ஆகாஷை பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் உள்ளே போக, ஆகாஷ் தோட்டதுக்கு போனவன், மனசே கேக்கல, ஏன் இப்படி ஆகுது என் வாழ்க்கையில் மட்டும்னு யோசித்து படுத்து இருந்தவன் பக்கம் வந்து யாரோ உட்காற,

"என்னாச்சிடா முகம் வாடிப் போய் இருக்கு?"

"உனக்குத்தான் தெரியும்ல அவளுக்கு லவ்வே இல்லடா என்மேல, எவ்ளோ உதாசீனம், வலிக்குதுடா", ஆகாஷ் புலம்ப,

"அந்த வாணி எவ்ளோவோ பரவா இல்ல, உன் தங்கச்சி என்ன எவ்ளோ கொடும படுத்தற தெரியுமா, நான் சமாதானம்ன்னு லேசா ஆரம்பித்தா போதும், லிவ் இன்னு ஆரம்பிப்பா பாரு நான் உடனே வாயை முடிப்பேன்டா என் நிலைமையை பாத்தியா".

"பண்றது கேடித்தனம் இதுல என் அண்ணாட்ட என்ன குறை சொல்றயா," தாமரை வேர்க்க விருவிருக்க இருவருக்கும் சாப்பாடு கொண்டு வந்துட்டா,

ஆகாஷ்க்கும் க்ரிஷ்க்கும் சாப்பாடு போட்டுக்கொண்டே தாமரை கிருஷ்ணாவை திட்டிக்கொண்டு இருந்தாள்.

"தாமரை என்ன பழக்கம் சாப்பிடும் போது திட்டுறது" தாமரை முகம் சுருங்குவதை பார்த்த க்ரிஷ்.

"தாமரை நான் சீக்கிரமா சாப்பிட்டு முடிச்சிடறேன், அப்போ திட்டுடி என் தங்கமே", தாமரை கிருஷ்ணாவை முறைத்துவிட்டு சாப்பிட்ட தட்டைக் கழுவ தொட்டி பக்கம் போக, க்ரிஷ் பின்னாடியே நூல் பிடித்து போகும் சமையம்,

ஆகாஷ்க்கு வாணி ஞாபகம், இப்படியே எவ்ளோ நாளைக்கு போக முடியும், வீட்டில் இப்போது எல்லாம் அம்மா அப்பா தங்குவதே இல்லை ஆதி, அர்ஜுன் சாரா ரித்திகா மீரா இவங்க ஒரு குரூப் சேந்து ஊரு சுற்ற கிளம்புவது....

கண்ணன் தினமும் க்ரிஷ்க்கு கால் போட்டு மல்லியையும் தாமரையையும் பேச வைத்து விடுவான், இன்னும் சில மாதத்தில் அவனும் இங்கு வருவது என்று முடிவும் ஆனது, தாமரைக்கும் மல்லிக்கும் அவ்ளோ சந்தோசம், முதல் முதலில் பிரிந்தது இருவராலும் சுத்தமா தங்கிக்கொள்ளவே முடியவில்லை.

ஆகாஷ் வேலை செய்து கொண்டு இருக்கும் வாணி பக்கம் போய் நின்ற மறு நொடி, ரெண்டு மாதம் மேல் ஆனது அவனை இவ்ளோ அருகில் பார்த்து, அவன் வந்து நின்ற மறு நொடி ஆகாஷ் மாமா என்று ஆரம்பித்தவள், அன்று அவன் பேசிய போது ஒரு பக்கம் பாம்பு ஒரு பக்கம் கிணறு, நீங்க என்ன பேசுனீங்கன்னு தெரியாது, நீங்க காதல் இல்லாம பேசுனது போல தெரிந்தது என்று அவனை கட்டிப் பிடித்து அழுது கொண்டு இருந்தாள்.

ஆகாஷ்க்கு அவன் முட்டாள்தனம் புரிந்தது, அவ அன்னைக்கு சொல்ல வருவது கேட்டு இருந்தாள் இந்த பிரிவு வந்தே இருக்காது, பேசி தீர்த்து இருக்கலாம் என்று ஆகாஷ் கண் கலங்க அதை பார்த்த வாணி,

"லூசு மாமா எதுக்கு கண் கலங்குது" அவனது கண்ணைத் துடைத்துவிட்டு இவள் கண்களில் நீர் வழிந்தது. இந்த முறை ஆனந்தத்தில், ஆகாஷ் ஏதோ பேச வாய் துறக்க, உங்க வாய் சொல்லறதுக்கு முன்னாடி உங்க கண்ணு சொல்லிடுச்சி", என்று அணைத்துக் கொண்டாள் .

இருவரும் கொஞ்சம் சமாதானமாகி, அவனுக்கு சாப்பாடு எடுத்து வைக்க, "நான் இப்போதான் சாப்பிட்டேன் நீ சாப்பிடு," சொன்னது மட்டும் இல்லாமல் ஆகாஷ் வாணிக்கு ஊட்டியும் விட்டான். கொஞ்ச நேரம் வயல்வெளியிலே சுற்றித் திரிந்து மாலைப் பொழுதில் வீட்டுக்கு வந்தார்கள், வாணி புதுப்பெண் போல வெட்கப் பட, அந்த முக சிவப்பு ஆகாஷை அசைத்து பார்த்தது,

"வாணி அழகி டி"

"இவ்ளோ நாள் தெரியலயா அறிவாளி மாமா",

"தெரிஞ்சதே, தூங்கும்போது இடுப்பு,

"சி" என்று வாணி ஆகாஷ் சட்டைக்குள் முகம் புதைய. அங்கு ஆகாஷ் வாணியை இருக்க கட்டிக்கொண்டு, பேசாத கதைகள் எல்லாம் பேசி முடித்து, கிறங்கி மயங்கி கொஞ்சலில் ஆரம்பித்து மிஞ்சலில் முடிந்தது, இங்க ஒரு ஜோடி சமாதானக் கொடி பிடிக்க,

க்ரிஷ் தாமரை பின்னால் போய் அடி வாங்கினான் வைத்து இருக்கும் பாத்திரத்தில், இவ்ளோ நாள் பொறுமையா இருந்த க்ரிஷ்க்கு திடீர் கோபம்.

"பிடிக்கலைன்னா போடி, ஏன் உன் பின்னாடி மாசக்கணக்கா கெஞ்சிட்டு இருக்கனும், தெரியாம அடிச்சிட்டேன் அதுக்கு வா என்னை அடி" தாமரை கையை பிடித்து வேகமா அவளை அடித்துக் கொண்டாள், தாமரை மிரண்டுட்டா, க்ரிஷ் அவளது மிரண்ட விழி ஏதோ செய்ய, சாரி சொல்லிட்டு வீட்டுக்கு போய்ட்டான். க்ரிஷ் கோபத்தை கட்டுப் படுத்த முடியாம தூங்கிட்டான். சில மணி நேரம் கழித்து மனம் கொஞ்சம் அமைதியாக தாமரையை தேடிப் போனான் க்ரிஷ், அவள் இன்னும் வீட்டுக்கு வந்த எந்த அடையாளமும் இல்ல,

தாமரை அந்த தண்ணித் தொட்டியில் கால் விட்டு அவளது கண்ணீரை தொட்டி தண்ணிரில் கலந்து கொண்டு இருந்தாள்,

அவளை தூரம் இருந்து பார்த்த க்ரிஷ் மனம் பிசைந்தது, இன்னைக்கு ஒரு முடிவு கட்டனும், க்ரிஷ் தாமரை அருகில் வந்து உட்கார்ந்து,
தாமரை தொட்டில நான் குளிச்சது இல்ல குளிக்கலாமா, ஆழம் அதிகமா இருக்குமா, தொட்டியை பற்றி விசாரித்துக்கொண்டு இருந்தான்.

"ஆமா டா ஆழம் அதிகமா இருக்கும், போய் அளந்துட்டு வா" க்ரிஷ் எதிர் பார்க்காத சமையம் அவனை தள்ளிவிட, தொடக்கத்தில் தினரியவன், அப்புறம் சுதாரித்து மேலே வர தாமரை காலை பிடித்து இழுத்து அவளையும் உள்ளே இழுத்துக்கொண்டான்,

மாலை வெயில் வெளிச்சம் தண்ணிர் கண்ணாடி போல மின்ன, தாமரை தேகம் இன்னும் கிறக்கம் கொடுக்க, திருமணத்துக்கு பிறகு முதல் முத்தம், ஒரு மாதம் கழித்து இருவருக்கும் அழகிய அரங்கேற்றம், தாமரை எந்த எதிர்ப்பும் கொடுக்கல அது க்ரிஷ்க்கு இன்னும் வசதியா போக, சிறிது நேரம் மூச்சிகாக இருவரும் வெளியே வர, தாமரை முகம் ரோஜாவை போல வண்ணம் பூசிக்கொண்டது.

"தாமரை சாரி",

"ஹ்ம்ம்" என்றாள் பாவை, அப்போ கோபம் போச்சா, அப்போ இனி எல்லாம் நடக்குமா?"

"என்ன நடக்கும்",

"அதாண்டி இன்னும் பர்ஸ்ட் நைட் கொண்டாடவே இல்லையே",

"ஆசைதான் போ" தாமரை நைசா நழுவி, அங்கு இருந்த அவர்கள் வீட்டுக்கு உள்ளே போய் கதவு அடைக்கும் சமையம், உள்ளே புகுந்து அனைத்தும் வட்டியும் முதலும் வாங்கிக் கொண்டு இனிய இரவை இன்னும் அழகாக்கிக் கொண்டு இருந்தார்கள்,

க்ரிஷ் தூங்கிக் கொண்டு இருக்க, "டேய்ய் பசிக்குது எதாவது செஞ்சி தா",

"அதான் சமாதானம் ஆகிட்டோம்ல இன்னும் என்ன என்ன வேலை செய்ய சொல்ற, அதிகம் வேலை செஞ்சேன்ல டையார்ட்டா இருக்கு தூங்கு".

"ஒஹ்ஹஹ் அப்போ இனி எனக்கு சமையல் செஞ்சி தர மாட்டீங்க, அப்போ நான் டெய்லி சண்டை போட ஆரமிச்சிடுவேன், பெட்டர் நீங்களே சமைச்சி தந்துடுங்க",

"நல்லா பிளாக் மெயில் செய்ற , கொஞ்ச நேரம் தூங்கிக்கலாம் அப்புறம் செஞ்சி தரேன்" சொல்லி க்ரிஷ் தாமரையை அணைத்து படுத்து விட்டான்,

இரு ஜோடிகளுக்கும் பொழுது நன்றாக விடிந்தது, ஆகாஷ் வாணிக்கு சமைக்க உதவி செய்ய, இங்கு க்ரிஷ் ஒத்தைலே சமைச்சி கொண்டு வந்து தாமரைக்கு ஊட்டி விடும் சமையம், ஒரு வெள்ளைக்கார பொண்ணு அரைகுறை ஆடையோடு ஒரு பெரிய பையை மாட்டிக்கொண்டு, க்ரிஷ் க்ரிஷ்ன்னு கூவிக்கொண்டே உள்ளே வர,

வாணியை மேலும் கீழும் பார்த்துக் கொண்டு, "க்ரிஷ் உன் வைப் சொல்லிக்கற அளவுக்கு அழகு இல்ல, இப்படி விழுந்துட்டியே" அவ்ளோ அழகா தமிழ் பேசினாலும் எல்லாம் க்ரிஷ் ட்ரைனிங்,

"லிவ் இன்க்கு எனக்கு ஓகே சொல்லிட்டு என்ன ஏன் ஏமாத்திட்ட" என்று அவள் கிருஷ்ணாவை கட்டி பிடிக்க, தாமரை கொஞ்சம் கொஞ்சமாக சந்திரமுகி ஆக மாறிக் கொண்டு இருப்பது தெரியாத க்ரிஷ், தன்னை தேடி அவனது உயிர்த் தோழி வந்த மகிழ்ச்சியில் சிரித்து சிரித்து பேசிக் கொண்டு இருக்க, 'எங்க நம்ம ஆளு சத்தத்தை காணோம்' திரும்பி பார்க்க தாமரை ஒரு பெரிய மத்தோடு நின்று இருக்க,

"க்ரிஷ் எஸ்கேப் சொல்லிட்டே ஓடினான்" அவளது தோழி கையை பிடித்துக் கொண்டு, அதை பார்த்து இன்னும் ஆத்திரம் வந்தது, ஒரு அடி மத்து அவன் தலையில் விழ, தோழி கையை விட்டுட்டு தலை தெறிக்க ஓடினான், இங்கு இருவரும் ஓடி பிடித்து விளாடிக் கொண்டு இருப்பதை பார்த்த அந்த ஜூலி ரசித்துக் கொண்டு இருந்தாள்,

"அடியே ஜூலி என்ன அடிவாங்கி வைக்கத்தான் இவ்ளோ செலவு செஞ்சி வந்தியா?"

"ஆமா மாமா" என்றாள். தாமரை சொல்லவா வேணும் கொதித்து எழுந்துட்டா,

"தாமரை அவ பொய் சொல்றா, சரியான பொய் புளுகு அவளை நம்பாத"

"வெள்ளையா இருக்குற புள்ள பொய் சொல்ல மாட்டான்னு நீதான டா சொன்ன", வீட்டில் ஓடி பிடித்து விளாடியது பத்தாது என்று தெருவில் ஓடிக் கொண்டு இருந்தான் க்ரிஷ். ஒரு வழியா ஆகாஷ் வீட்டுக்கு வந்து உள்ளே நுழையும் முன்பு தாமரை அங்கு இருந்தாள்.

"நீ எப்படி இங்க, பின்னாடி தான வந்துட்டு இருந்த".

"ஆஹா, இது என் ஊரு எல்லா வழியும் அத்துப்படி எப்படி சீக்கிரமா வரனும்னு தெரியும்" க்ரிஷ்க்கு நான்கு ஐந்து அடி விழுந்த பின்பு அந்த ஜூலி வந்து சும்மா சொன்னேன்னு சொல்ல, சாந்தி ஆன தாமரை, அப்பாடா விட்டா என்று நினைத்த மறு நொடி,

"ஆனா இவன் லின் இன்க்கு ஓகே சொன்னான்," மறுபடி துரத்த ஆரம்பிக்க ஆகாஷ் வாணி ஜூலி இவர்கள் சேட்டையை ரசித்துக் கொண்டு இருந்தார்கள்....

இந்த மகிழ்ச்சியோடு நான் உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் பிந்து சாரா...
 
Status
Not open for further replies.
Top