ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மை டியர் சண்டக்கோழி- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
14

அதற்கான வேலையை ஆகாஷ் தொடர்ந்தான்.

"சொல்லு ஆகாஷ் என்ன திடீர்னு கால் பண்ற" என்றான் ஆகாஷின் நண்பன்.

"நான் சொல்லி இருந்தேனேடா யோசிச்சி சொல்றேன்னு சொன்னியே" என்றான் ஆகாஷ்.

"எனக்கு ஓகே டா ஆனா அவன பத்திதான் தெரியும்ல சரியான அடாவடி பிடிச்சவன், எதுமே பிடிக்கொடுத்து பேசல".

"வீட்ல சொல்லிட்டியா கண்ணா?"

"அதுலாம் காலேஜ் படிக்கும் போதே ஸ்மெல் பன்னிட்டாங்க".

"என்னடா புதுசா இருக்கு இதெல்லாம் என்ட சொல்லவே இல்ல".

"ஏன்டா நீ வேற படிக்கற வயசுல மூடிட்டு இருன்னு, 3 குடும்பம் முன்னாடி நிக்க வச்சி அசிங்க படுத்திட்டாங்க டா".

ஆகாஷ் விழுந்து விழுந்து சிரிக்க "இதுக்கு தாண்டா உன்ட சொல்லல."

"சரிடா நான் அவனுக்கு கால் செஞ்சி கேட்டுப்பாக்குறேன்" சொல்லிட்டு ஆகாஷ் போன் கட் செஞ்சிட்டான். அவர்கள் ரெட்டை சகோதரர்கள். மல்லிக்கும் தாமரையும் பொருத்தமா பட அவங்க விருப்பம் கேட்க.

பெரியவன் தாமரை போல அமைதி ஆனா சின்னவன் இருக்கானே மல்லி விட மோசம் சரியான அடாவடி பிடிச்சவன். இப்போவும் அதான் செஞ்சிட்டு இருக்கான், கல்யாணத்துலாம் செஞ்சிக்க முடியாது லிவ் இன்க்கு பொண்ணு தேடறேன்னு சுத்திட்டு இருக்கான், அது தெரிஞ்ச ஆகாஷ், அவன்ட கேக்கலாம் இல்லாட்டி மெதுவா வேற மாப்பிள தேடலாம்னு யோசிச்சிட்டு. இன்னொருவனுக்கு கால் பண்ணா பிஸின்னு வந்தது.

ஆகாஷ் அப்புறம் பேசிக்கலாம்னு வச்சிட்டு ஹால்க்கு வரான்.

இப்போவும் அதே பஞ்சாயதுதான் வாணியும் மல்லியும் சண்டை போட, தாமரை ரெண்டு பேரையும் சமாதானம் படுத்த. ஆகாஷ் இவங்க போடற சண்டையை பாத்து காண்டாகி கண்டுக்காம போய் உட்காந்துட்டான். ஆகாஷ்க்கு பின்னாடி பைட் பண்ணிட்டு இருக்க.

பிஸி ஆனா நம்பனும் வீடியோ கால் செய்ய ஆகாஷ் எடுத்து ஹெட் செட் போட்டு , பேச "என்ன டா நான் சொன்னது யோசிச்சயா?".


"டேய்ய் பேமிலிலாம் செட் ஆகாதுடா எனக்கு, லிவ் இன் லைப் போலாம்னு பிளான்" அவன் சொல்லி வாய் மூடல.

"ஆகாஷ் கொஞ்சம் போன் தூக்கு" ஆகாஷும் தூக்க... அவன் தாமரையை கண் வாங்காமல் பார்க்க.

"டேய்ய் அந்த ரெட் டிரஸ் யாருடா..." ஆகாஷ் திரும்பி பார்க்க.

"டேய் அது என் பொண்டாட்டிடா ரெட் சாரீ" என்றான் ஆகாஷ் கடுப்பாக.

"சாரீ இல்லடா அது உன் பொண்டாட்டி எனக்கு தெரியும்,சுடி" என்றான் கண்கள் மின்ன.

"டேய்ய் அது என் தங்கச்சி தாமரை, "என்றான் ஆகாஷ் கடுப்பாக. நீ நினைக்கிற போல பொண்ணு இல்லடா அவ".

"மச்சான் கல்யாணம் எப்படா வச்சிக்கலாம்?" கிருஷ்ணா நக்கலாக பாத்து.

"டேய்ய் உன்னோட லீவ் இன் கனவு என்னடா ஆகுறது" என்று ஆகாஷ் மெல்லிய சிரிப்போடு கேக்க.

"டேய்ய் அதை விடு, அவகூடவே லீவ் இன்ல இருந்துக்குறேன் லைப் லாங்".

"சரி இன்னொரு தங்கச்சிய கண்ணனுக்கு பேசிடலாம்" என்றான் பொறுப்பாக தம்பி வாழ்க்கைக்காக பேசினான் கிருஷ்ணா.

கிருஷ்ணா தாமரையை பார்த்துக்கொண்டே பேச. "இருடா போன்லேயே என் தங்கச்சிய முழிங்கிராத போட்டோ அனுப்பி வைக்கிறேன் ஓகே வா".

ஆகாஷ் கண்ணனுக்கு கால் செஞ்சி... "அவன் தங்கச்சிய வீடியோ கால்ல பாத்து ஓகே சொல்லிட்டான் டா." என்றான் ஆகாஷ் சந்தோசமாக.

"டேய்ய் செட் தோசைல யாரடா, என் தேவதைய சொல்லிட்டானா? பிடிச்சி போச்சா" என்றான் பதட்டமாக.

"டேய்ய் இல்லடா மல்லி சேப்" என்றான் ஆகாஷ் சிரித்துக்கொண்டே.

கண்ணன் நிம்மதியாக.. "சரி அவ போட்டோ அனுப்பு, எவ்ளோ நாளைக்கு அந்த குட்டி பாவாடை சட்டை போட்டவளா நினைச்சிட்டு இருக்க" என்றான்.

ஆகாஷ் போன் வைத்ததும், கண்ணன் அவனது கல்லூரியில் சில நாட்களுக்கு லீவு வந்தது, ஆகாஷ் கூட வந்து நல்ல பழக்கம்.

அப்போவே மல்லிய இவனுக்கு பிடிச்சி போச்சி ஆகாஷ்ட லைட்டா அப்போவே சொல்லிட்டான். அவனும் புரிஞ்சிட்டு அவளுக்கு "மாப்பிள பாக்கும் போது, உனக்குத்தான்டா ஆனா அதுக்கு உன் அண்ணா ஒத்துக்கணும் தாமரைய கட்டிக்க", என்றான் ஆகாஷ் பெரிய இடியை இறக்கினான்.

"ஐயோ அவனுக்கு ஒரு பேட் ஹாபிட் எனக்கு பிடிக்கிறது தான் பிடிக்குது, என் மைனவா கொத்திட்டு போனா நான் என்ன செய்வேன்", என்று பதறினான் கண்ணன்.

அதனால தான் பதறிட்டான் மல்லிய பிடிச்சி போச்சினு.

வாணி வருகைக்காக இரவு காத்து இருந்தான் ஆகாஷ்.

அவள் வந்ததும் ஆகாஷ் நெருங்க "என்ன இப்போ உங்களுக்கு" என்று இடுப்பில் கையை குத்தி நின்றவளை, கிச்சி கிச்சி முட்டி சிரிக்க வைத்துக்கொண்டு இருந்தான்.

வாணி சிரித்துக்கொண்டே ஆகாஷின் கைகளை தடுக்க அது அடங்கினாதானே.

இருவரும் சிரித்து மூச்சி வாங்கி மெத்தையில் அமர, நைட் ஆயிடுச்சி

"டெய்லி ஆகும் நைட், அதுக்கு என்ன" என்றாள்.

"நீதான டி டே டைம்ல எதுமே வேண்ட்னு, சொன்ன".

"ஆமா சொன்னேன் அதுக்கு?"

"அதான் நைட் ஆயிடுச்சில".

"ஆமா அதுக்கு".

"ஹெய் புரிஞ்சிதா பேசுறாயா இல்லை, விளாடிட்டு இருக்கியா" அவளது மெல்லிடை இழுத்து அருகில் அமரவைத்தான்.

"அடிக்க தெரிஞ்சதுல இப்போ என்னவாம், பாசம்" வாணி முகத்தை திருப்ப.

"தெய்வமே உங்க பிரச்சனைக்கு இனி நான் வரல, தெய்வங்களே, விடுங்க" னு ஆகாஷ் ஆரம்பித்து காலைல நடந்ததை சொல்ல.

வாணி சிரிச்சிட்ட, "என்ன மல்லி பத்தி தெரியும், அவ கேட்டு பென்சில் குடுக்காம வேற ஒரு பொண்ணுக்கு கொடுத்துட்டேன்னு அப்படியே டெவெலப் ஆகி இங்க வந்து நிக்குது" என்று வாணி ஆர்வமா சொல்ல.

"அட ச்சை இதுக்காக அடிச்சிக்கறீங்க" என்றான் ஆகாஷ்.

"அதுல செஞ்ச சண்டை, மாமா" என்றாள் வாணி .

இப்போ வா நம்ம சண்டை போடலாம் என்றவன், வாணியை மெத்தையில் சரித்து அவளை ஆட்சி புரிய ஆரம்பித்தான் ஆகாஷ்.


நல்லவேளைனு இப்போதான் நிம்மதியா, அடுத்த பிலைட்க்கு கிளம்பி இந்தியா வர நினைத்த கிருஷ்ணனுக்கு பெருத்த ஆப்பு, வேலை கட்டாயமாக கிருஷ்ணன் செல்லும் நிலைமை, வேறு வழி இல்லாமல் கண்ணனை அனுப்பி வைத்தான் கிருஷ்ணன் வேண்டா வெறுப்பாக வந்து இறங்கினான். கடைசி நேரத்தில், ஒரு தினம் முன்பு கிருஷ்ணன் ஆசையோடு நடந்த நிகழ்வுகலெல்லாம் நினைத்தான்.

ஆகாஷ் வெளி ஊர் போக இருந்ததால்,

ஆகாஷிடம் கிருஷ்ணா வருவதாக போன் செய்து ஆகாஷ்க்கு சொல்ல.

"டேய்ய் நான் வீட்ல இருக்க மாட்டேன்டா கொஞ்ச ட்ரைனிங்க்கு வெளியே போறேன்".

"மச்சான் நான் உன்ன பாக்க வரல, சோ நீ இருந்தா என்ன இல்லனா என்ன என்று கண்ணன் சிரிக்க".

"நடத்து மச்சான், பாவம் தாமரை கொஞ்சம் இல்லை நிறைய பயந்த சுபாவம், பாத்து நடந்துக்கோ"

"சரிங்க பாசமலரே, நான் வந்து பாத்துட்டு போறேன், உங்க ஊரு திருவிழா அப்போ எங்க மூணு குடும்பத்தையும் கூட்டிட்டு வரேன் அப்போவே கல்யாணம் வச்சிக்கலாம்., இங்க வீட்ல ஒரே போர்டா எங்க ஊருக்கே வந்து செட்டில் ஆகலாம்னு இருக்கேன்" என்று சொன்ன கிருஷ்ணன். ஆகாஷ்க்கு சந்தோசம் தாங்கல, தங்கச்சிங்க தூரம் போறது கஷ்டமா இருந்தது, இருந்தாலும் நண்பர்களின் தங்கமான குணம் தெரியுது, எதுக்கு விடணும் ஆகுறது ஆகாட்டும்னு முடிவு செஞ்சிட்டு வீட்லயும், கண்ணன், மயிலு அவன் விருப்பபடி தங்கச்சிங்களுக்கு கல்யாணம் செஞ்சிவைனு சொல்லிட்டாங்க.


போகும்போது தாமரைக்கு போட்டோ அனுப்பிவைத்துவிட்டு, "இவன் கிருஷ்ணா இப்போ வருவான், இவனைத்தா உனக்கு பாத்து இருக்கேன் நான் முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமா வர பாக்குறேன் வேலை முடிச்சிட்டுன்னு" சொல்லிட்டு... கிளம்பிடறான்.

சுத்திமுத்தி பார்த்துட்டு, வாணியை தள்ளிக்கொண்டு அவர்கள் அறைக்குள் நுழைய.

"நான்தான் நேத்து சொன்னேன்ல இப்படி செய்ய கூடாதுனு" என்று வாணி முறைக்க.

"ஹெய் ஒரு வாரம் டி எப்படி இருக்க போறேன், உன்ன பிரிஞ்சி," சொல்லி கொண்டே வாணியை கட்டி பிடிக்க .

ஆகாஷின் செயல் வாணி கலவரப்படுத்த, "ப்ளீஸ் டி ஒரு டைம், ஒரு முத்தம் கன்னத்துல" என்று வாணியை சீண்ட.

"லூசு மாமா பட்டபகல்ல பேச்சை பாரு" ஆகாஷ் வாயிலேயே ஒன்னு போட்டாள்.

ஆகாஷும் அவள் வாயில ஒன்னு போட்டான். அப்படி ஆரம்பித்து, எங்கேங்கோ செல்ல.. வாணிக்கு ஒரு கட்டத்தில் முடியாமல் போக.

"மாமா போதும் டைம் ஆச்சி ட்ரெயின்க்கு" ஆகாஷ் மனசே இல்லாமல் வாணியை கட்டிப்பிடித்து திரும்ப சரிய.

ஆகாஷை ரெடி செஞ்சி அனுப்பறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சி வாணிக்கு.

"ரொம்ப இம்ச பண்ற மாமா" என்றாள் வாணி ஆகாஷின் பல்தடத்தை வருடிவிட்டு கொண்டு, ஒரு அடி போட்டு.

"ஒருவாரத்துக்கு தாங்கணும் இல்லை" என்றான் ஆகாஷ் .

"சரி நைட் 10 மணிக்கு வேலை முடிச்சிட்டு ரூம்க்கு வந்துடுவேன், போன் கைலயே வச்சி இரு".

"அதுலாம் முடியாது நைட் நான் பிஸியா இருப்பேன்" என்றாள் வாணி ஆகாஷை வெறுப்பேற்ற.

"அடி பின்னிடுவேன், திரும்பி வரும் போது" என்றான் ஆகாஷ் கோவமாக .

மூக்குக்கு மேல கோபம் வருது, என்று செல்லமாக ஆகாஷ் மூக்கை பிடித்து நான்கு கிள்ளி வைத்தாள்.

"என்ன திடீர்னு போன் யூஸ் பண்ணவே விடமாட்டா, எப்போ பாரு என்ட வா, என்ட பேசுனு கொலை பண்ணுவ, இதென்ன புதுசா இருக்கு" என்று சொல்லி வாணி சிதறி கிடந்த ஆடைகளை எடுத்து போர்வையால் மறைத்துக்கொண்டே அணிந்து கொண்டு இருந்தாள்.

"அதுல அப்படித்தான் நைட் வீடியோ கால் பேசலாம் ஜாலியா" என்று ஆகாஷ் கண்களை சிமிட்ட.

"பேசலாமே..." என்று வாணி சொல்ல.

ஆகாஷ் அவளை பின்னிருந்து, கட்டிக்கொண்டு, "என் செல்ல பொண்டாட்டி" என்று பின்னிருந்து வாணிக்கு முத்தம் மொத்தமாக கொடுக்க.

"கண்ணா கிளம்பு இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு ட்ரெயின்க்கு" நிறைய கொஞ்சி கெஞ்சி மிரட்டி அனுப்பி வைத்தாள் ஆகாஷையை.

இயற்கை வேளாண்மை, சிறப்பாக செய்ய ஒரு ஐந்து நாள் ஒர்க் ஷாப்க்கு கிளம்பி இருந்தான் ஆகாஷ்.

அவனை வழி அனுப்பி உள்ளே வர, தாமரை அந்த போட்டோவை பேய்ய் அரைஞ்சது போல பாத்துக்கொண்டு இருக்க. 'என்னாச்சி இவளுக்கு இப்படி உட்காந்து இருக்கா' யோசிச்சிட்டே வந்த வாணி போனை பிடிங்கி பார்க்க.

உறிதுவைத்த கோழி போல ஒருவன் இருந்தான், ஆனால் முகம் பார்க்க கிராமிய மனம் விசியது, அந்த போட்டோவை பார்த்த வாணி "பையன் உரிச்ச கோழி மாதிரி சூப்பரா இருக்கான், யாரு இது" என்று வாணி தாமரை இடம் கேட்க.

"அண்ணா அனுப்பிவச்சாங்க, அவங்க பிரிண்ட்டாம் பிடிச்சி இருந்தா கல்யாணம் செஞ்சி வைக்கிறங்களாம்".

வாணி ஆர்வமாக "உனக்கு பிடிச்சி இருக்கா?" என்று கேட்க .

தாமரை தலையை ஆட்டிவிட்டு சென்றாள். வாணி ஆகாஷ்க்கு தாமரை பதிலை சொல்ல அவனும், சந்தோசமாக வகுப்பை சொல்லிகொடுக்க தொடங்கினான். இந்த விசயம் எதுமே மல்லிக்கு தெரியாது.

அன்று மதியம் போல வந்து தரை இறங்கி, கார்ல வந்துட்டு இருந்தான், கண்ணன்.... ஊருக்குள்ள கார் போக முடியாது, மழைக்கலாம்னு ஊருக்கு வெளியவே விட்டு செல்ல.

கண்ணன் கை இல்லா பனியனோடு, பெரிய பையை மாட்டிக்கொண்டு, வெல்லைக்கார துரையை போல வந்து இறங்கினான்.

ஆனால் வந்தது கிருஷ்ணா என்றே சொல்லிக்கொண்டு இருந்தான், காரணம் ஏமாத்தி வந்து இருக்கான் கண்ணன் சோ இந்த கண்ணாமூச்சி ஆட்டம்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
15

இங்கு காதல் குடும்பம்,

தாராவின் சுட்டித்தனம் கல்லூரி முடிந்த பின்பும் அடங்கவில்லை, தந்தை ஆதியின் சேட்டைகள், ரித்துமாவின் அறிவு என பார்க்கும் அனைவர்க்கும் தேவதையாக தெரிந்தாள், படிப்பு விஷயத்தில் மட்டும் மிகவும் கண்டிப்பானவளாக இருந்தாள்.

கண்ணனுக்கும், கிருஷ்ணனுக்கும் படிப்பில் பெரியதாக விருப்பம் இல்லை இருந்தாலும் தாராவிற்காக நன்கு படித்தார்கள், அதுவும் பள்ளி வரை மட்டும்தான் என்று ஒருமனதாக தாராவிடம் ஒப்பந்தம் வேறு... விளையாட்டு பசங்க.

தாரா தான் மாலை ஒரு ஐந்து மணிநேரம் வச்சி செய்வாள், காவியா சின்ன புள்ள பிடிச்சா படிக்கலாம் இல்லனா, போய் தாரா மடில படுத்து தூங்க ஆரமிச்சிடுவா.

காவியா, கவிதா மீது கொல்லை பிரியம் தாராக்கு ஆனால் அந்த வளந்து கெட்ட கவினை பார்த்தாள் மட்டும் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாள் தாரா.

படிப்பதற்காக ஒரு பெரிய அறையை கட்டிகுடுத்து விட்டார்கள், ஆதி, அர்ஜுன், மற்றும் ஆனந்தன்.

ஆனந்தன், செல்வி ஐந்து வருட பிரிவு, எந்நேரமும் சிறு சிறு வேலையில் கூட ஒருவர் மாற்றி ஒருவர், சிறப்பாக காதலை இன்னும் இன்னும் ரசித்து வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். இவர்களுக்கு காவியா என்று ஒரு பெண்குழந்தையும்... கவின், கவிதா அக்கா மகன், அக்கா மகள் என்று பாராமல் சிறப்பாக சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள், வேறுபாடு காட்டாமல். காவியன், கவிதாக்கு சிறுவயதிலே இருந்து இந்த விஷயம் தெரியும், ஆனந்தன் சொல்லித்தான் வளர்த்தான், அவர்கள் பெத்தவங்கள நினைக்க முழு உரிமை இருக்கு, எந்த காரணத்துக்கும் நம்ம மறக்க விட கூடாது என்று ஆனந்தன் சொல்லும் போது.

செல்வி அதை ஏற்றுக்கொள்ளவில்லை முதலில், ஆனந்தன் சொல்லி புரியவைத்த பிறகுதான் செல்வி அடங்கினாள்.

ஆனந்தன் சொன்னதுமட்டும் இல்லாம, காவியா, கவிதா அப்பா அம்மா பர்த்டே, வெட்டிங்டேனு ஒரு ஒரு நல்ல நாள் கொண்டாட வைத்தார்கள், காவியா இவர்கள் மூவர் மனதிலும் ரெண்டு அப்பா அம்மா என்று ஆனந்தன் சிறப்பாக பதிய வைத்தான்.

ஆனந்தனின் எண்ணத்தை, அவனது பக்குவத்தை நினைத்து செல்விக்கு இன்னும் காதல் பெருகியது.

“யாராவது இங்க ஆனந்தன்னு ஒருத்தர் இருந்தாங்க பாத்திங்களா” என்று செல்வி ஆனந்தனை கலாய்க்க.

“ஆமா பொறுப்பா இருப்பாருப்பா செல்வினு ஒருத்தி என்ன இப்படி பலமா மாத்திட்டா” என்று ஆனந்தன் சலித்து கொள்ள, செல்வியிடம் நான்கு கொட்டு வாங்கிக்கொண்டு உட்காந்து இருந்தான்.

செல்விக்கு எப்போதும் கவின்தான், ஒட்டி உறவாடினான்... எப்போ பாரு அம்மா பிள்ள, மேல இருந்து குதிக்க சொன்னா கூட குதிப்பான், செல்வி மீது எல்லை இல்லாத பாசம், அவன் இங்கு வரும்போது ஓரளவுக்கு விவரம் தெரிந்த வயது, அப்போதே புரிந்து கொள்ளும் பக்குவமும் கவினுக்கு இருந்தது.

கவிதா, காவியா ஆனந்தன் செல்லம் எப்போ பாரு அவனது தோளில் ஊஞ்சல் ஆடிக்கொண்டே திரிவார்கள். செல்வி சொல்லி சொல்லி சலித்து விட்டாள், “எருமைங்களா இரங்குங்கடி என் புருசனுக்கு வலிக்கும்” என்று செல்வி பார்க்கும் போது எல்லாம் திட்ட.

“3 குழந்தைகளும், அப்பா அம்மாக்கு ஓவர் லவ்வு என்று ஒரு சேர கத்த,”.

“இதுங்கள பெத்ததுக்கு நான் சும்மா இருந்து இருக்கலாம்” என்று செல்வி அழுத்துக்கொள்ள .

“நாங்க கிளம்பிட்டோம் பா ஜோடி புறாவை பிரிக்க விரும்பல, பிரிச்சாலும் பாவம் எங்களுக்கு எதுக்கு” என்று சொல்லிவிட்டு கவின் தங்கை இருவரையும் இழுத்துக்கொண்டு கிளம்ப.

“செல்வி, கவின் எவ்ளோ பொறுப்பா இருக்கான்ல” என்று ஆனந்தன் மெச்சலோடு பார்க்க.

“அப்படி என்னதான் கிழிச்சான் அவன் என்று” செல்வி கேட்க .
“அம்மா அப்பாக்கு இடைஞ்சலா இருக்க கூடாதுனு தங்கச்சிங்களாம் பொறுப்பா கூட்டிட்டு போறான் பாரு” என்று போற கவினை பார்த்து சொல்ல.

“குழந்தை இல்லாத இடத்துல, கிழவன் துள்ளி......” என்று மண்டைல நாலு கொட்டு விட்டு சமைக்க கிளம்பினாள் செல்வி.

கவின், தீவீரமாக போலீஸ்க்கு படிச்சி முடிச்சிட்டு, நாளை அவனுக்கு ஜாயிண்ட் செய்ய லெட்டர் வந்து விட்டது.

தாராக்கு எப்போதும் கவின் மேல இருக்கனும்... சட்டம் படித்து விட்டு, புகழ் பெற்ற ஒரு லாயரிடம் அசிஸ்டன்டா இருக்கா.

செல்வி ஆனந்தனுக்கு கவின் மீது பெருமை ஒரு விஷயத்தை தவிர.

தாராவிற்கும் இவனுக்கும் ஒரு பொருத்தம் கூட இல்லை, அப்படி இருக்க அப்போ இரு குடும்பத்துக்கும் இவர்கள் இருவரும் இணைய சிறுவயதில் இருந்து ஆசை, அதை ஒருமுறை பேச்சிவாக்கில் அவர்கள் இருவரும் காலேஜ் முடிக்கும் போது வீட்ல இருக்கவங்க சொல்ல...

இருவரும் சண்டை பிடிக்க ஆரம்பிச்சி ஒரு நாள் முழுவதும் சண்டை... கவின் இப்படி பேசுவான் என்று ஆனந்தன், செல்விக்கும் மிகுந்த அதிர்ச்சி.. தாராவை கண்டபடி திட்டிட்டான். அவ மட்டும் சும்மாவா, பதிலுக்கு பதில் பேசி வீடு போர்க்களம் ஆனது.

தாராவை பற்றி தெரியும், பிடிக்கலயா.. பிடிக்கல… பிடிச்சி இருந்தா உயிரையும் கொடுப்பா... ஒரு சண்டையும் இல்ல எதுக்கு இந்த ரெண்டு சண்டை கோழியும் சிலிப்பிட்டு திரியுதுனு ஒன்னும் புரியல நம்ம பெரியவங்களுக்கு.

கீழ் வீட்டில் இருக்கும் அர்ஜுன், சாரா ஒரு பக்கம். அர்ஜுன் சாராவை சரோஜா சரோஜானு வார்த்தைக்கு வார்த்தை கூப்பிட கடுப்பான சாரா.

“அர்ஜுன் அடி வேணுமா?” என்று சரோஜா அதாங்க சாரா கத்திக்கொண்டு இருந்தாள்.

“சரோஜா கூப்பிடாதன்னு எத்தனை முறை சொல்றது” என்று சாரா ஆக்ரோசமாக சுட்டுக்கொண்டு இருக்கும் தோசை கரண்டியை அர்ஜுனை அடிக்க நீட்ட, அதை தடுத்து, கைகளில் நல்ல வாங்கி கட்டிக்கொண்டான். அந்த தோசை கரண்டி பாரபட்சம் பார்க்காமல் நன்கு பதம் பார்த்தது அர்ஜுன் கையை.

சாரா கத்தி ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு இருக்க, “மாமா சாரி, மாமா வலிக்குதா” என்று சாராவை சமாதான படுத்த அர்ஜுன் பெரும்பாடு பட்டுவிட்டான்., இதும் பாத்தாதுன்னு...

ரித்திகா, ஆதி பதறிக்கொண்டு வர மூவரும் சேர்ந்து, பாசமழை... ஒருத்தியவே சமாதானம் படுத்த முடில. ஆதி ரித்திகாவை அதட்டிவிட்டு, சாராவை முறைத்துக்கொண்டு இருந்தான் அர்ஜுன்.

‘இவள இப்படியே விட்டா சரி பட்டு வரமாட்டா', அறைக்கு கூட்டிட்டு போனான். கொஞ்சி கெஞ்சி சமாதானம் படுத்தி, ஒரு ஒரு செயலையும் அர்ஜுன் சாராவும் மொத்த லவ்வும் இன்னும் இன்னும் ஒருவர் மாத்தி ஒருவர் குடுத்துக்கொண்டு இருந்தார்கள்.

ரித்தி, ஆதி அடிதடிதான் இன்னைக்கும் ஆனா ஒரு வித்யாசம் நாலு சுவருக்குள் அடங்கிடும் அந்த அடிதடி எல்லாம். தாரா மட்டும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் சிறு பிள்ளை தனமாக அர்ஜுன் ஆதியை சிறப்பாக வச்சி செய்வாள்.... அவளது முதல் உயிர் உள்ள பொம்மையாக விளையாடியது, எப்படி மறப்பாள்.

அவளுக்கு தனி அரை ஒதுக்கி குடுத்தாலும், ஆதி அர்ஜுன், எந்த ரூம்க்கு உள்ள போக முடியுதோ அங்கு சென்று ஜோடிகளுக்கு இடையிலே படுத்து விடுவாள்.

தண்ணீக்குடிக்க வெளியே தாரா வரவும் அர்ஜுனை பார்க்கவும் சரியாக இருக்க, அர்ஜுனிடம் பேசிக்கொண்டே அர்ஜுன் சாரா இடையிலே படுக்க.

அர்ஜுன் சாராவை பார்த்து தலையை சொரிய, சாரா அர்ஜுனை நக்கலாக பார்த்து கேலி செய்ய.... “லாயர் அம்மாக்கு சுத்தியும் கண்ணு..” என்று அர்ஜுன் சொல்ல.

“அப்பா நான் வேணும்னா கிளம்ப வா” என்று இருவரையும் பார்த்து சிரிக்க,

“நல்லாதான் வேலை செய்து கண்ணு லாயர் அம்மாக்கு” என்று துடங்கி அர்ஜுன் சாராவிடம் மாத்தி மாத்தி பேசி கொண்டே. அர்ஜுன் மார்பின் மீது படுத்துக்கொண்டு... துடிப்பின் ரிதம் கேட்டுக்கொண்டே, தூங்கி போனாள். சாரா அவள் தலையை தடவி விட்டு...

“நம்ம தாரா எவ்ளோ பெரியவளா ஆயிட்டாளங்க... கல்யாண வயசு வந்துடுச்சி அதுக்குள்ள”.

“ஹ்ம்ம், நேத்துதான் பொறந்தா, என் கைல வாங்கினது போல இருக்கு”.

இப்போதும் தாராதான் அர்ஜுன் சாராக்கு முதல் குழந்தை, கண்ணன் கிருஷ்ணன் எப்போ பாரு...

“தாரா நீ ஏதோ ராணி மாதிரி இந்த வீட்டை ஆட்டி வைக்கற, இரு மாமா வந்து உன்ன அடக்குவார்” மாமா என்று இருவர் சொன்னதை கேட்டு தாராவிற்கு திடீர் என்று அவன் நினைவு வர... தாரா ஒரு நொடி பதறி விட்டாள். ‘நான் எதுக்கு அவன அங்க வச்சி பாக்குறேன்’ என்று யோசித்துக்கொண்டே தாரா படுத்து விட்டாள் .

கவின் இப்போதுதான் அவனது போலீஸ் ட்ரைனிங் முடித்துவிட்டு, தலைமை காவல் இடத்தில் நியமித்தார்கள்.

அவனை வரவேற்க வீடே திருவிழா ஆனது.

மீரா ஜாலியா கோவிலுக்கு குளம்னு சுத்திட்டு இன்னும் ஒரு வாரத்துல வராங்க... வரும்போதே பெரிய ஷாக்கிங் நியூஸ் ஓட வராங்க மீரா.
 

T21

Well-known member
Wonderland writer
16

மறுநாள் காலை வீடே ஒரே பரபரப்பாக இருந்தது... அந்த குடும்பத்தில் அனைவரும், ராணி போலத்தான் மீரா, அவர் ரெண்டு மாசம் கழிச்சி வராங்கனா சும்மா வா.



ரெண்டு மாசம் ட்ரிப் போயிட்டு ஜாலியா வரும்னு பாத்தா மீரா ஆம்புலன்ஸ்ல வந்து இறங்க.



வீட்ல இருக்கவங்க பதறிட்டாங்க... மீரா, கவின் இருவரையும் வரவேற்க... தடப்புடலா விருந்து தோரணம் கட்டி ஏதோ திருவிழா போல இருந்தது வீடு.



மீராவை மெதுவாக அழைத்து வந்து ஹால்ல உட்கார வைத்து, மீரா பேசிய முதல் வார்த்தை, கவின் தாராவ வர சொல்லுங்க. இருவருக்கும் மீரா பற்றி சொல்லி சீக்கரம் வீட்டுக்கு வாங்க சொல்லிட்டு, அனைவரும் மீராவை வெறிக்க வெறிக்க பார்த்து கொண்டு இருக்க,



"எனக்கு லைட்டா பசிக்குது" என்று சொன்ன மறு நொடி அவருக்கு பிடித்த அல்வா கொஞ்சூண்டு கொண்டு வந்து சாரா தரா, அத்தை பார்த்த மீரா 'ஐயோ என்ன கொஞ்சமா தறாங்க, சரி ட்ராமா முடிச்சிட்டு மொத்தமா சாப்பிடுக்கலாம்ன்னு" மனச தேதிட்டு சாப்டுட்டு இருவர் வருகைக்காக மீரா காத்துக்கொண்டு இருக்க.



சில நிமிடம் கழித்து கவின், யூனிபார்ம் ஓட மிடுக்காக உள்ளே நுழைய...



கவின் பதறித்தான் வந்தான், எப்போடா மீட்டிங் முடியும்னு 20 நிமிஷம் ஒரு நாள் போல முடிந்தது, வண்டி கூட ஒழுங்கா ஓட்ட முடில அவ்ளோ பதற்றம் அவனுக்கு, "மீராமா என்னாச்சி, கோவிலுக்கு போறேன்னு விழுந்து வாறிட்டு வந்து இருக்கியா" என்று கவின் கேட்க.



"சுத்தி பாத்துட்டு இருந்தோம் கிளம்பி வரும்போது நெஞ்சி ஏதோ ஒரு போல ஆகி அடைச்சுகிச்சி, செத்துடுவேன்னு நினச்சேன் கவின், உன்னையும் தாராவையும் நினைச்சி உயிர பிடிச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்" என்று மீரா சொல்ல .



இவ்ளோ நேரம் பதறிட்டு இருந்த அர்ஜுன் ஆதி, சாரா ரித்திக்கு புரிஞ்சிடுச்சி.... 'மம்மி ஏதோ பெரிய பிளான் வச்சி இருக்கு' னு நாளு பேரும் மாத்தி மாத்தி பார்த்துக்க ...



கவின், மீராவிடம் பாசமாக ஏதேதோ பேசிக்கொண்டு இருக்க...." சாரி கவின் என்னால இந்த செலிப்ரேஷன் கெட்டு போச்சில்ல" மீரா வருத்தமாக சொல்ல...



"அதெல்லாம் ஒன்னும் இல்ல மீராமா, உங்களவிட எனக்கு எதுமே பெருசு இல்ல".



"நிஜமாவா கவின், எனக்காக எதுமே செய்வாயா?" என்று மீரா கவினை தழுவிக்கொள்ள, இரு சொட்டு கண்ணீர் வரவும். தாரா இங்கு வரவும் சரியாக இருக்க.



"டேய்ய் ஏன்டா அழ வைக்கிற" என்று மீரா அருகில் உட்காந்து இருந்த கவினை தல்லிவிட்டு தாரா உட்கார.



சரிதான் போடி என்று எந்திரித்து வேறுயிடம் உட்கார்ந்தான் கவின்.



"ஹே மீரா இனி வீட்ட விட்டு ட்ரிப் போறேன் அது போறேன்னு கிளம்பு, நானே உன் காலை உடைச்சி ஹாஸ்பிடல்க்கு அனுப்பிடுறேன்" என்று தாரா கோவாமா பாட... அர்ஜுன் முன்னாடியே போன் போட்டு சொல்லிட்டான் மீரா உடல்நிலை பற்றி.



மீரா திட்டு வாங்கிக்கொண்டு சோகமாக உட்காந்து இருக்க.


கவிதா காவியா... கிருஷ்ணா கண்ணன் எல்லோரும் அடிச்சிகிட்டு விளாடிட்டு இருக்கிறத பார்த்த மீரா பெருமையாக தன்னோட குடும்பத்தை மெர்சலாக பார்க்க.



இவர்கள் நால்வரோடு, கவினும் தாராவும் இணைத்து கொள்ள.. சிறிது சிறிது வயிரை பிடித்து கொண்டார் மீரா.



'மீரா இதான் சரியான தருணம்' என்று யோசித்து நாடகத்தை நடத்த.



"தாரா...." என்று கூப்பிட்டு சோர்வாக சரியா. அதை பார்த்த அனைவரும்.. அந்த நாளு பேர தவிர,.... சின்னவர்கள் பதறிட்டாங்க.



கிருஷ்ணா, கண்ணா, காவியா, கவிதா அழுதுவிட்டார்கள். தாரா, கவின் அழுகையை கட்டு படுத்திக்கொண்டு பதற்றதோடு பார்த்தனர்.



மீரா அரை மயக்கத்தில் "என் ஒரு பேரன் பேத்தி கல்யாணத்த கூட பாக்காம சாக போறேன்னு வருத்தமா இருக்குன்னு" தாராவை பார்க்க .



"மீரா என்ன இது அமைதியா இரு, உனக்கு எதுமே ஆகாது நாங்க விடமாட்டோம்" என்று தாரா வெடித்து அழுக ஆரம்பிக்க. கவின் பதறிட்டான், தாரா தோல்ல கை வைத்து,



தாரா நீ அழுதா யார் சமாதானம் படுத்துறது, அழுகையை நிறுத்து" என்று கொஞ்சம் கடுமையாக சொல்ல.



தாரா கவினை அணைத்துக்கொண்டு குலுங்கி குலுங்கி அழுவ "கவின் தான் மீராமாவை பார்க்கவா இவள பாக்க வான்னு" புரியாம முழித்தான்.



எல்லோரும் தாராவை விசித்திரமாக பார்க்க, இதுங்க ஓவரா சண்டை போட்டுட்டு இருந்தாங்களே, தாராக்கும் கவினுக்கும் இடையிலே கிருஷ்ணா இருந்தான், அவனையும் தாண்டி தாராக்கு கவின் ஓட அனைப்புதான் ஆறுதலாகப்பட்டது.



கிருஷ்ணா "அட பாவிகளா, இப்படி ஒன்னு ஓடிட்டு இருக்கா இவங்களுக்குள்ள" என்று கிருஷ்ணா வாய்விட்டே சொல்லிட்டு, மீரா முறைக்க கிருஷ்ணா வாயை மூடிக்கிட்டான்.



இங்கு இரு கலவரம் நடக்க, ரித்திகா அழகாக வீடியோ எடுக்க, சாரா என்ன சும்மாவா இந்த ஹக் சீன் போட்டோ எடுத்தே ஆகணும்னு எடுத்து தல்லிக்கொண்டு இருக்க.



'ஐயோ என்ன பாக்க சொன்னா இதுங்க, கட்டிப்பிடிச்சி காரியத்தை கெடுக்குதுங்க, மீரா ஆக்ட்டிங் பத்தலை' என்று நடிப்பை இன்னும் பலமாக தொடங்க.



"தாரா ஏதோ போல இருக்கு, கவின் நான் இனி உங்க கூட இருக்க முடியாது, உங்க ரெண்டு பேர் கல்யாணம் பாக்காம நான் எப்படி சாகுறது" என்று வராத கண்ணீரை துடைக்க.



பாட்டி ஒன்னும் இல்ல நா சீக்கிரமா பொண்ணு பாத்து கட்டிக்கிறேன் என் குழந்தையை நீங்கதான் வளக்கணும்" என்று கவின் மீராக்கு ஆறுதல் சொல்ல.



அதை கேட்ட தாரா அதிர்ச்சில கவினை பார்க்க, 'என்ன நா வேண்டவா அப்போ இவனுக்கு' என்று தாரா மனம் சுணங்க.



'இவன் என்ன வேண்டாம்னு சொல்றது, என் பின்னாடி சுத்திட்டு இருந்த அந்த ராகேஷ்க்கு போன் செஞ்சி ஓகே சொல்றேன் இப்போ' என்று தாரா மனதில் சபதம் போட்டுவிட்டு.



"பாட்டி நான் ராகேஷ இப்போவே கட்டிக்கறேன்" என்று தாரா பெரிய குண்டை போட. மீராக்கு நிஜமா ஹார்ட் அட்டாக் வருவது போல ஆனது. தாரா சொன்னது மட்டும் இல்லாமல்... ராகேஷ்க்கு கால் செய்ய, அவன் தாரா ரிஜெக்ட் செஞ்ச துக்கத்தில், அவனது அத்தை பொண்ணை இவன் ரிஜெக்ட் செய்தது நினைவில் வர, அவளுக்கு இப்படித்தான வலிச்சி இருக்கும் என்று காதல் அத்தை மகள் மீது பொங்க, ஊரை பார்க்க ஓடிட்டான்.



ராகேஷ் தாராவை கேஸ் விஷயமா, இன்றுதான் பார்த்தான், பார்த்ததும் பிடித்து காதல் சொல்ல, தாரா நோ சொல்லிவிட்டு வந்துவிட்டாள், மீராக்காக அவசரமாக சொல்ல.



ராகேஷ் போன் எடுக்கல "என்று தாரா சொல்ல. மீராக்கும் கவின்கும் இப்போதான் உயிர் வந்தது. கவின்க்கு இடி இறங்கியது மனதில், 'இவ யார கட்டிக்கிட்டா உனக்கு என்ன கவின், அப்போ நான் இவள லவ் செய்ரனா!!!' தாரா, கவின் மனதில் இதுதான் ஓடிக்கொண்டு இருந்தது.



மீரா இவர்களுக்கு சிறிது யோசிக்க டைம் கொடுத்து திரும்ப... எனக்கு என் தாரா, கவின் கல்யாணம் பாக்கணும் என்று அடம் பிடிக்க...



அர்ஜுன் இதுக்கு மேல விட்டா மீரா மாட்டிக் கொள்வார் என்று நினைத்து,



"செல்வி, ஆனந்தன்... இத நாங்க முறைப்படி கேக்க கூடாது பையன் வீட்ல தான் பொண்ணு கேப்பாங்க. இங்க நிலைமை சரி இல்ல அதனால உங்க பையன் கவின் எங்க பொண்ணு தாராக்கு கட்டி கொடுங்க" என்று அர்ஜுன் தயங்கி தயங்கி கேட்க.



தாரா கவினை முறைக்க, கவின் தாராவை முறைக்க.



'எவ்ளோ திமிர் இவளுக்கு ராகேஷாம் ராகேஷ், கடைசில என்கூடத்தான்டி உனக்கு வாழ்கை, வச்சி செய்றேன் இரு' கவின் நினைக்க, அவனுக்கு நேர் எதிராக தாரா 'வேற பொண்ணுதான பாக்கறேன்னு சொன்னான், இப்போ என்ன மட்டும் கட்டிக்க ஓகே சொல்லட்டும் , கட்டிக்கிரேன்' என்று தாரா கவினை அர்ச்சனை செய்து கொண்டு இருக்க.



செல்வி வாயை திறக்கும் முன்பு ஆனந்தன் இடைல வந்து, அர்ஜுன் நீங்க கேக்கறது சுத்தமா சரி இல்லை, செல்வி ஆனந்தனை பாவமாக பார்த்து ஏதோ பேச வர ஆனந்தன் பேச விட்டாள் தானே செல்வியை.



 

T21

Well-known member
Wonderland writer
17 அடுத்த சண்டை


கட்டிக்கொடு டான்னு உரிமையா கேக்கறத விட்டுட்டு தயங்கி கேட்கற, “நானாடா அவன வளத்தேன் மொத்த குழந்தைகளும், எங்ககூட இருந்ததா, மாமா அத்தைனு இந்த வீட்லதானேடா வளந்தாங்க. தூங்க கூட மேல வரது இல்ல, இப்படி இருக்க நீ இப்படி கேட்டது சரியா” என்று ஆனந்தன் கோபமாக பேச.

காவியா, கவிதா, கிருஷ்ணா கண்ணன்... ஆளுக்கு ஒரு பிலேட் ஸ்னாக்ஸ் ஜூஸ் கொண்டு வந்து ஆனந்தன் முன்னாடி நீட்ட.

“என்ன உங்க நாளு பேருக்கும், திமிரா” என்று ஆனந்தன் முறைக்க.

“மொத முறையா மூச்சி விடாமல் எங்க கூட பேசி இருக்கீங்க அதுக்கு” என்று நாளு குட்டி வாண்டுகள் கலாய்க்க, குடும்பமே சிரித்தது.

அர்ஜுன் உடனே “என்ன மாமா உனக்கு வசதிதான செஞ்சி கொடுத்து இருக்கோம், ஆமாதான செல்வி என்று சீண்ட செல்வி வேகத்தில் ஆனந்தன் பின்னாடி ஒளிஞ்சிகிட்டா. சிறிது நேரம் கழித்து, கவினுக்கு செல்வி விருப்பம் ரொம்ப முக்கியம்.

செல்வி தயக்கமா கவினை பார்க்க, கவின் கண்களை சிமிட்டி சம்மதம் சொல்ல. இந்த அம்மா பையனின் மௌன பாஷை மெய்சிலிர்க்க வைத்தது.

அர்ஜுன் கவினை பார்த்து “உனக்கு பிடிச்சா மட்டும் சொல்லு கவின் இது வாழ்கை வற்புறுத்தி வர கூடாது”.

“எனக்கு ஓகே தான் மாமா தாராக்கு ஓகேவானு கேளுங்க“.

தாரா மீராவை பார்த்துக்கொண்டே ஓகே சொல்ல.

ஒரு மாதத்தில் கல்யாணம் என்று பேசி முடிக்க. வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் பம்பரமாக சுழன்று வேலை செய்துகொண்டு இருந்தார்கள்.

4 குட்டிஸ்கும் செம ஹாப்பி. கிருஷ்ணா கண்ணன் கவிதா காவியா... கல்யாணத்துக்கு என்ன என்ன செயினும்னு லிஸ்ட் போட்டு கொண்டு இருந்தார்கள்.

தாரா, கவின் மனதில் சிறு குழப்பம் இருந்துகொண்டே இருந்தது.

திருமணத்த முடிந்த அளவுக்கு எளிமையாக செய்ய திட்டமிட்டார்கள். முடிந்தால் தானே இந்த நான்கு வண்டுகளும் சேர்த்து வச்சி செய்துவிட்டார்கள், அதுபடி நடக்கனும், இதுபடி நடக்கனும்னு எல்லா படியும் சிறப்பா செஞ்சிவிட்டார்கள்.

திருமணத்திற்கு முன்பு சுத்திக்கொண்டு இருந்த கவின் தாரா... திருமண கலாட்டாவில் குடும்பத்தோடு என்ஜாய் செய்துகொண்டு இருந்தார்கள்.

திருமணம் அமளி துமிலியாக நடந்தது... தீர்மானதுக்கு முன்னாடி நாள்.

ரித்திகா ஆதி, அர்ஜுன் தாரா, செல்வி ஆனந்தன்.... சிறப்பாக தனியே நடனம் ஆட, பார்ப்பவர்கள் யாரும் நம்பவில்லை இவ்ளோ வயசாச்சா இவர்களுக்கு என்று.

மூன்று ஜோடிகளும் நடன துறையை சிறப்பாக நடத்தி வருகிறார்கள்... முன்பை விட, யோகா கிளாஸ் போறதை விட்டுவிட்டு, டான்ஸ் மூலமாக வெயிட் குறைக்க, ஸ்ட்ரெஸ் போக என்று முன்னேறி விட்டது இவர்களது அகாடமி.

மூன்று ஆண்களும் தலைமை பொறுப்பில்... மூன்று துணைவியும் மேற்பார்வை என்று, தோளில் குடும்பம் என்று வளர்ந்து விட்டார்கள். என்னதான் வளர்ந்தாலும் குழந்தைகளுக்கு பணத்தை விட உறவு தான் பெருசு என்று சொல்லி சொல்லி வளத்தார்கள்.

இவர்கள் 3 ஜோடி பெண்கள் சேர்ந்து நடனம் அட... டோலரே சோங் போட்டு ஆட...

கிருஷ் கண்ணா யூ டூப் பேஸ் புக் அப்லோட் செய்து ட்ரெண்டிங்ல போய்க்கொண்டு இருந்தது... ஆனால் பார்த்த மூன்று தேவிகளும் கிருஷ்ணன போட்டு அடித்து துவைத்து எடுத்துவிட்டார்கள். ஆண்ட்டி என்று போட்டு விட்டான். சும்மா இருப்பார்களா பெண்கள்.

கிருஷ் மட்டும் வேறு விதமாக யோசிப்பது, கண்ணன் சாதாரணமாக யோசிப்பாங்க ஆனால் அறிவில் இருவரும் சாலித்தவர் இல்லை. அங்கு இருவருக்கும் கிடைத்த உயிர் நண்பன் ஆகாஷ். அவனும் திருமணத்திருக்கு வந்து இருந்தான்...

காவியா கவிதா ஆகாஷிடம் அண்ணா அண்ணா என்று ஒட்டிக்கொண்டார்கள்.

இவர்கள் டான்ஸ் ப்ரோக்ராம் முடிந்தது, சிறுவர் கலத்தில் இறங்கினர்... அவர்கள் சும்மா அடி தூள் பர்பாமன்ஸ் கொடுத்து, அங்கு இருக்கும் பெண்களை கிருஷ் கவர் செய்து விட்டான்.

பைனல் டச் ஆக லைட்ஸ் ஆப், தாராவையும் கவினையும் மேடையில் இழுத்து விட்டுவிட்டு, மெலிதாக ஒரு இசை ஓடவிட்டு.... அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்க.

என்னதான் முறைப்படி நடனம் கவின் கற்கவில்லை என்றாலும், கவின் பலமுறை அர்ஜுன், ஆதி கூட சேந்து ரிலாக்ஸ்க்கு ஆடி இருக்கான், சில சமயம் அத்தை அம்மா கூடவும் சேர்ந்து ஒரு குத்து பாட்டுக்கு ஆடி என்ஜாய் செய்வான், வீட்டில் தங்கை கிருஷ் கண்ணன் கூடவும் ஆடி இருக்கான் தாராவை தவிர அனைவரிடமும் ஜாலியா ஆடி இருக்கான், தாரா எதிர் பார்க்காத சமயம், நளினமாக தாராவை சுழற்றி துவங்கிய கவின், தாராக்கு ஆச்சரியம் இவனுக்கு ஆட தெரியுமா, முதலில் தடுமாறிய தாரா, அவன் வேகத்துக்கு எடுத்துக்கொடுக்க ஆரம்பித்தாள்.

சிறிதுநேரம் போட்டோஷூட் முடித்துவிட்டு அடுத்த நாள் கல்யாண வைபோகத்துக்கு காத்து இருந்தார்கள்... தாராக்கு தெரியாம கவினும்... கவினுக்கு தெரியாம தாராவும் ஆவளாக இருந்தார்கள்.

மறு நாள் தாலி கட்டும் போது தாரா கவின் இருவரும் முதல் முறையாக சேர்ந்து எடுத்த முடிவு ஆனால் தனித்தனியே எடுத்தார்கள்.

‘எப்போது அவன் காதலை சொல்றானோ அப்போதான், நானும் சொல்வேன்.’ இருவரும் இதை நினைத்துக்கொண்டு திருமண பந்தத்தில் இணைந்தார்கள். இருவர் மனதிலும் சிறு கோபம் இருக்கத்தான் செய்தது பேசி இருந்தாள் முடிந்து இருக்கும், ஆனால் இருவரும் பேசத்தயாராக இல்லை.

மீரா நன்றாக எழுந்து நடமாட, கவி தாரா இருவரும் தினமும் மீரா அருகில் உட்கார்ந்து, அன்று நடந்ததை பேசுவார்கள்.. கவின் எத்தனை பேரை அடிச்சி எழும்பை எண்ணினான் என்று சொல்லுவான், தாரா பேசியே எதிர் கட்சிக்காரனை ஓடவிட்டது பத்தி பேசுவாள். ரூம்ல தனிமையிலே இருவரும் பேசி கொள்வது ஒன்று தான்,

“இவன சாகற வரை வெளியே வராதது போல உள்ள போடணும், அதுக்கு என்ன என்ன எவிடன்ஸ் வேணும்” என்று கவி தாராவிடம் கேட்க அவளும் தெளிவாக ஸ்கெட்ச் போட்டு கொடுப்பாள். சரியான பிராடு கப்புல்ஸ், மன்னிக்க முடியாத தப்பு செய்றவங்கள எப்படியாவது கலி திங்க வைக்கணும், இப்படியே நான்கு வருஷம் போனது, காலேஜ் முடிந்சது திருமணம் செய்ததால் அவர்கள் கனவுகளுக்கு சிலவருடம் என்று வீட்டில இருக்கவங்க யாரும் குழந்தை பற்றி பெரிதாக கேட்டுக்கொள்ள வில்லை .

இருவரும் ஒரு அளவுக்கு முன்னேறிவிட்டார்கள். இந்த இரண்டு வருடத்தில்.

மீரா பேசிக்கொண்டு இருக்கும் போது குழந்தை பற்றி இருவரையும் கேக்க. இருவரிடமும் பதில் இல்லை .

கவின்தான் “இன்னும் யோசிக்கல பாட்டி, நாங்க பேசிட்டு சொல்றோம் கொஞ்சம் டைம் கொடுங்க” என்று சொல்ல.

‘யோசிச்சி சொல்றானாமே, நாய் பண்ணி இப்படியா பேசுவ’ மனதில் அர்ச்சனை செய்துகொண்டு இருந்தாள்.

தாரா பெரியதாக இத்தனை நாள் யோசிக்கல, ஆனா இருவர் மனதிலும் காதல் சொல்லாமல் உள்ளே நுழைந்து, அசைக்க முடியாத விருட்சமாக வளந்து கொண்டு இருந்தது... சொல்லாத காதலும் சுகம் தான் என்று, சிறு சிறு பார்வை எதிர் பார்த்த தேடல்கள், என்று அழகான நினைவு பொக்கிஷத்தை சேர்த்துக்கொண்டு இருந்தார்கள் இருவரும்.

கிருஷ், கண்ணன் திருமணம் முடித்துவிட்டு வெளிநாடு பறந்தார்கள் படித்ததற்கு ஒரு ரெண்டு வருடம் வேலை செய்துவிட்டு, டான்ஸ் கிளாஸ் சிட்டீல ஓப்பன் செய்ய பிளான்... அது ஒரு பக்கம் போக, இருவருக்கும் விவசாயம் பார்க்க அலாதி பிரியம், வெளியே சென்று இயற்கை பற்றி, இயற்கை விவசாயம் பற்றி தெரிந்து கொண்டு, கிராமத்து வாழ்க்கை வாழ ஆசை. ஆனால் சூழ்நிலை அமையவில்லை.

அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று வந்து கொண்டு இருந்தார்கள் இருவரும்.

இதர்கிடையிலே காவியா கவிதா கல்லூரி முடித்துவிட்டு, நண்பர்களுடன் சேர்ந்து ஆட் டிசைனிங் கம்பெனி ஒன்று ஆரம்பித்து சிறிய அளவில் சிறப்பாக சென்று கொண்டு இருந்தது .

மீராவிற்கு நிறையவே அசை நிறைய கொள்ளு பேரன்களை பார்க்க அதான் இன்று கேட்டே விட்டார்.

தாரா ஒரு முடிவோடு அறைக்கு சென்றாள், கவின் போகாமல் இந்த அர்ஜுன் ஆதிட்ட பேசிட்டு சாரா ரித்தி செல்வி கூட சமையல் கட்டில் நின்று கொண்டு ஒரு கதை பேசிக்கொண்டு இருக்க.

மேலே அறையிலே பொறுத்து பொறுத்து காத்து இருந்தவள் இன்னும் கவின் வராமல் போக ஆத்திரமாக கீழே வர, கவின் சாராவின் தோலை பிடித்துக்கொண்டு,

“அத்தை செமையா மனக்குது, இந்த கலையை என் பொண்டாட்டிக்கும் கொஞ்சம் சொல்லி தர்றது” என்று கவின் பொண்ணுக்கு சமையல் கூட சொல்லி தரல என்று குற்றம் சுமத்த.

“அத்தை நீ சமைக்கரையே, என் பொண்ணு எதுக்கு சமைக்கணும், வீட்டுக்கு ஒருத்தர் சமைச்சா போதும்” என்று சாரா சொல்ல.

“தாரா உங்களை போலத்தான் அத்தை ரித்தி, அத்தை செயல்ல மட்டும் தான் பேச்சி குறும்புத்தனம் எல்லாம், ஆனா என்ன என்னை பாத்தா மட்டும் விரப்பா சுத்துரா, உங்க பொண்ண எப்படி கரெக்ட் செய்றது” கடைசியா எப்படி கரெக்ட் செய்றதுன்னு மட்டும் சாராவின் காதில் கேட்க, பின்னாடி நின்று இருக்கும் தாராக்கு கேட்க வாய்ப்பில்லை, அவன் சத்தமாக சொல்லிமல் இருந்தால் இன்று நடக்க விருக்கும் கலவரம் சற்று குறைந்து இருக்கும்.

“அப்போ நான் அடங்காதவன்னு என் அம்மாட்டயே வந்து சொல்றயா” என்று தாரா கவின் சட்டையை பிடித்து இழுத்துக்கொண்டு மேல செல்ல, வீட்டில் இருப்பவர்களுக்கு புரியாமலா போகும்.

இருவர் மனமும் புரிந்தது, சிரித்துக்கொண்டு இரவு உணவு சமைக்க செல்ல.

அது அறையை சாற்றி கொண்டு தாரா கிடைத்ததை தூக்கி எரிந்து கொண்டு இருந்தா, “என்ன பாத்தா உனக்கு ராட்சசி போல இருக்காடா” என்று வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டு இருந்தவள் கோவத்தில் ஒரு வார்த்தை விட. கவினுக்கு பத்திக்கொண்டு வந்தது.

 

T21

Well-known member
Wonderland writer
18


கவின் சலனமே இல்லாமல் தாராவை பார்த்துக்கொண்டு இருக்க,



"என்னடா நான் இவ்ளோ காத்துறேன், கொஞ்சம் கூட பாசம் இல்லல" என்று அவனுக்கு பிடித்த கண்ணாடி பேனாவை எடுத்து சுவற்றில் அடித்து சிதரடித்தாள் .



பொறுமை இழந்த கவின் "இப்போ என்னத்துக்கு இவ்ளோ கோவம் வருது" என்று பொறுமையாக கேட்க.



"நீ ஏன் என்ன அடங்காதவன்னு சொன்ன, சமைக்க தெரிலன்னு சொன்ன" என்று தாரா கேட்க. 'இதுமட்டும் காதுல விழும், எப்படி கரெக்ட் செய்றதுனு கேட்டத்துலாம் இவளுக்கு காதுல விழாது', என்று அழுத்துக்கொண்டன் கவின்.



"உனக்கு தெரியாததை தெரிலதான் சொல்லுவாங்க, இத நான் உன் முன்னாடியே நிறைய டைம் சொல்லி இருக்கேனே, இன்னைக்கு என்ன புதுசா கோபம் வருது" என்று கவின் கேட்க.



'ஆமால அவன் ரூம்க்கு வரலனுதான் கோபம், இத சமாளிக்க ஏதேதோ செய்றேன்' என்று தாரா நினைத்து திருட்டு முழி முழிக்க, விரல் படவே உருகும் அவனது உள்ளம், காதல் கொண்ட நெஞ்சை மறைக்க நினைக்கும் அவனது தேவதையை பார்த்து ஒரு நொடியிலே விழுந்துவிட்டான். இருந்தாலும் அவள் வாயில் வார்த்தை வாங்க காத்துக்கொண்டு இருந்தான்.



தாராக்கும் எண்ணம் அதுவாகத்தான் இருந்தது, 'என்ன பிடிக்கும், வேணும்னா எதாவது சொல்லுடா கருவாப்பயலே' என்று சொல்லிக்கொண்டு இருக்க.



கவின் "சொல்லு நான் ரூம்க்கு வரலன்னு தான இவ்ளோ கோபம், பாட்டி சொன்னதை பேச தான காத்துட்டு இருந்த" என்று அவள் மனதில் இருந்ததை படித்தவன், சொல்லியும் விட்டான்.



'இன்டைரக்ட்டா வச்சி சொன்னானே, நம்மல பிடிச்சி இருக்கு சொல்லிடலாம்' என்று தாரா நினைக்கும் வேலையிலே. தாரா கண்களை பார்த்துக்கொண்டே கவின் நெருங்கி வர, தாரா அவனது பார்வையின் தாக்கம் தாங்காமல், இவளோ காதலை ஒட்டுமொத்தமாக கவின் கண்களில் பார்த்த மறு நொடி போதும் தாரா லவ் யூ சொல்ல ...



தாரா படபடத்தும் இதயத்தை அடக்கி கண்களை மூடி மூச்சை இழுத்து விட்டு, மெதுவாக கண்களை திறக்கும் வேலையிலே கவின் கைக்கு எட்டும் தூரத்தில் நின்று இருந்தான்... மத்தவர் சொல்ல கத்தி இருந்த இருவரும், இப்போது நான்தான் பர்ஸ்ட் சொல்லணும்னு நினைக்க, இதே தான் கவின் மனதிலும் நம்ம சொல்லிடலாம் முதலில் என்று இருவரும் ஒரே சமயத்தில் கண்களை பார்த்து கொண்டே "I love you" என்று சொன்ன மறு நொடி தாராவை கவின் இழுத்து அணைத்து இரண்டு வருஷம் 24 மாசம் அடக்கி வைத்த காதலை ஒரே அணைப்பில் தெரிவிக்க நினைத்தான், மொத்த காதலையும் ஒரே முத்தத்தில் சொல்ல நினைக்க. தாராதான் தினரி போனாள்.



சிரித்துக்கொண்டே சிறிது நேரத்தில் இருவரும் விலக.



தாரா மெதுவாக "எப்போ இருந்து இந்த லவ்?" என்று கேட்க.



"வீட்ல பர்ஸ்ட் டைம் சொல்லும் போது அடிச்சிகிட்டோமே அன்னைக்கு நைட் இருந்து, மேடம்க்கு எப்போ இருந்து?" அவன் சொன்ன பதிலை கேட்டு தாரா கண்கள் விரிய, கவின் புரிந்து கொண்டான் அவளுக்கும் அப்போ இருந்தே என்று.



"உனக்கு அப்போ இருந்து தானா",



"இல்லை சின்னவயதுல இருந்து, நீதான் நோ சொல்லிட்ட ப்ரொபோஸ் செய்யும் போது" என்று அப்போ நடந்ததுக்கு இப்போ கோபித்துக்கொண்டாள் தாரா.



"ஸ்கூல் படிக்கும்போது எதுக்கு இதுன்னு நினச்சேன் டி"



"நல்ல நினச்ச போ" என்று தாரா கோபித்து அடுத்த சண்டைக்கு தயாரானாள்.



"அப்போ வேற பொண்ணு மீராக்காக கட்டிக்கிறேன்னு சொன்ன"



"மீராமா கேக்கும்போது புரிஞ்சது அவங்க மனசு நம்ம ரெண்டு பேர் தான் நினைச்சி சொல்ராங்க ஆனா, உனக்கு பிடிக்காம உன்ன கட்டிக்க கூடாதுனு பாத்தேன், நான் நினைச்சது போல நீ ரமேஷ் ராகேஷ கட்டிக்கிறனு சொன்ன செம வலி தெரியுமா இங்க என்று இதயத்தை சுட்டி காட்ட.



"நீ வேற பொண்ணு சொன்னதும் எனக்கு கோபம் அதான், நான் அப்படி சொன்னேன்" என்றாள் தாரா.



"சரியா போச்சி போ, டைம் ரொம்ப வேஸ்ட் செஞ்சிட்டோம்ல" என்று கவின் குறும்பு மின்ன பார்க்க.



"இல்லை, அப்போதான் இனி வேஸ்ட் ஆகாது என்று சொல்ல" கவின் தாராவை பார்த்து சிரிக்க.



"மீரா சொன்னது என்ன நினைக்கிற கவின்" தடலாடியாக தாரா கேட்க.



"மேடம்க்கு ஓகே, குட்டி இளவரசி சீக்கிரமா இங்க வருவா" என்று தாரா வயிற்றை தடவ.



"என்ன கவின் இவ்ளோ மோசமா பேசுற, எப்போ இருந்து பேட் பாய் ஆன" என்று தாரா சினுங்க.



"உன் லவ் பன்ன அப்போ இருந்து என்று தாராவை நெருங்க, எல்லை இல்லா காதலை சுமந்த இரு உள்ளங்களும் இணைந்து, உலகத்து உறவுகள் அனைத்தும் மறந்து தனக்கென ஒரு தனி உலகத்துக்கு வாழ முதலடி எடுத்து வைத்தார்கள், இருவரும்.



மன நிறைவாக ஆரம்பித்தது இவர்களின் வாழ்க்கை. அடுத்து வந்த நாட்களில், மீராவிடம் எப்போ பாரு தொழிலை பற்றி பேசும் இவர்கள் வீட்டை பற்றியும், சாதாரண வாழ்க்கையின் நிகழ்வு பற்றியும் பேச ஆரம்பித்து வீட்டில் இல்லாதவர்கள், இப்போது மன நிறைவு இவர்களின் ஒற்றுமையை பார்த்து. சண்டை பிடித்து வீட்டில் கோச்சிக்கொண்டு வந்தாள்.



பின்னாடி சாரா, ரித்தி அத்தை ஆதி அர்ஜுன் மாமா என்று பாசம் பொங்க வந்து இருப்பான் கவின்.



போலீஸ் வேலையும், லாயர் வேலையும் சிறப்பாக இருவரும் செய்து நீங்காத இடம் பெற்றார்கள் மக்கள் மனதில்...



இவர்கள் திருமண வாழ்க்கை சிறப்பாக வாழ்ந்தர்கள்.



தாராக்கு நாட்கள் தள்ளி போக.



இரண்டு அம்மாக்கள், ஒரு அத்தையுடன் டெஸ்ட்க்கு உள்ளே போய் பாசிட்டிவ் ரிசல்ட் வர சந்தோசமாக வெளியே வரா, அங்கு கவின் ஒரு பெண் போலீஸ் தோளில் ஒய்யாரமாக கை போட்டு கொண்டு நின்று இருப்பதை பார்த்த தாரா, மொத்த சந்தோஷமும் வடித்து, அழுதுகொண்டு ஓடும் தாராவை பின் தொடர்ந்து மூவரும் ஓட, இவர்கள் ஓடுவதை பார்த்த கவின் திருட்டு முழி முழித்தான்...


 
Status
Not open for further replies.
Top