ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மை டியர் சண்டக்கோழி- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
காதல் ரிதம் part 2 விரைவில்
 
T21

Well-known member
Wonderland writer
1
புகழ் பெற்ற ஸ்கூல், ஒழுக்கம், அமைதி, கல்வினு எல்லா விதத்திலும் பெஸ்ட் ஸ்கூல் என்று, போன வருஷம்ன்தா பேர் வாங்கிச்சி. அதைக் கெடுக்க ஒருசில அடங்காத பசங்க இருப்பாங்கனு நம்ம கேள்விப் பட்டு இருக்கோம். ஒன்னு இல்ல ரெண்டு அடங்காத ராட்சசிங்க இருக்காங்க. பசங்களே தோத்து போய்டுவாங்க அவளோ அட்டகாசம், இதுங்க ரெண்டும் ஒன்னா சேந்தா தான் ராகலேயே. தனியா இருந்தா ஸ்கூலே அமைதியா இருக்கும்.

தாமரை.... அழகான வட்ட முகம், அவளது அமைதியைக் கண்டு வியக்காதவர்கள் யாருமே இல்ல, சுண்டி இழுக்கும் நிறம் அப்படியே அவளது அம்மாவைப் போல. இவளுக்கு நேரெதிராக இவளது ரெட்டை சகோதரி அட்டகாசம், அராத்து, கொஞ்சம் இவளை விட நிறம் குறைவு. கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, ஹெல்த் ப்ரோப்லேம், இயல்பா கொஞ்சம் கேர் இவ மேல ஜாஸ்தி.. அதனால் வந்த பிடிவாதம் இவளுக்கு நிறைய, ஆனால் அது குடும்பத்தில் மட்டும்.

பத்தாம் வகுப்பு படிக்கும் தாமரை, பன்னிரண்டாம் வகுப்பு நோக்கி வேகமாக ஓடி வரா..

"மிஸ் ஆகாஷ் அண்ணன் எங்க" என்றாள் பதட்டமாக மூச்சு வாங்கிக் கொண்டு.

"ஆகாஷ் உன் தங்கச்சி வந்து இருக்கா பாரு" மிஸ் கொடுத்த கணக்கை ஆர்வமாகப் போட்டு இருந்தவன் திரும்பிப் பார்த்தான் அவனது தங்கச்சியை.

"என்னாச்சி, தாமரை இப்படி ஓடி வந்து இருக்க".

"அண்ணா வாணியும் மல்லியும் திரும்பச் சண்டை போட்டுவிட்டு இருகாங்க".

"எங்க" என்றான் ஆகாஷ்.

"கிரௌண்ட்ல" என்றாள்.

"இவளுக்கு இதே வேலையா போச்சி ஒன்னு இவளுங்க ஸ்கூல மாத்தனும் இல்லனா நா ஸ்கூல் மாத்திட்டு போனும், சரியான இம்சைங்க" ஆகாஷ் வேகமா நடந்துட்டே ரெண்டு அறிவாளியையும் திட்டிட்டே போறான்.

"யார் பாத்துடி கருப்பினு சொன்ன, மவளே உன்ன அடிக்கிற அடியில் யாரு கருப்பா ஆவராங்க பாரு" என்று வாய் சண்டை கை சண்டையாய் ஆகும் நேரத்தில் ஆகாஷ் வந்து நின்றான் ரெண்டு பேருக்கு நடுல .

"மல்லி என்னாச்சி" என்றான் மல்லியிடம்.

"அண்ணா அவ என்ன கருப்புனு சொல்றா நா" என்று ஆகாஷிடம் வாணியை மாட்டிவிட்டாள்.

"என்ன வாணி இதுலாம்" என்றான் ஆகாஷ் கடுமையாக அவளைப் பார்த்து.

"மாமா அவதான சும்மா சீண்டிட்டே இருந்தா, எனக்குக் கோபம் வந்துடுச்சி சொன்னேன்" என்றாள் ஆகாஷிடம்.

"வாணி அடி பின்னிடுவேன், அவள வெறுப்பேத்னா நீயும் வெறுப்பேத்து அத விட்டுட்டு கலர் பத்திலாம் எதுக்கு பேசற, அதும் இல்லாம என் தங்கச்சி உன்ன விடக் கொஞ்சம் தா கலர் கம்மி, இது கருப்பு இல்ல புரியுதா" என்று ஆகாஷ் வாணியை மிரட்டினான்.

ரொம்ப கலர்ல கம்மி இல்லங்க குடும்பத்திலேயே, எல்லாம் உறிச்சிவெச்ச கோழி இவ மட்டும், கோதுமை கலர், அதுக்கு இவ்ளோ அலப்பறை இங்க நடக்குது. மல்லிக்கு கொஞ்சம் வருத்தம் தான் இவ மட்டும் குடும்பத்தில் கொஞ்சுண்டு கலர் குறைவென்று.

"வாணி அமைதியா, சாரி மல்லி" என்றாள் அகஷை பார்த்துக்கொண்டே.

மல்லி வாணியைப் பார்த்து வெற்றி புன்னகை சிரித்துக்கொண்டு இருந்தாள்.

"என்ன பாத்து இல்ல அவளை பாத்து சொல்லி" என்றான்.
வாணிக்கு ஆகாஷ் நா உயிரு, ஆனால் ஆகாஷ் எப்போப்பாரு மல்லிக்குத் தான் சப்போர்ட் பண்ணுவான்.
எப்போ பாரு மல்லியே ஜெயிக்கறா, "ஆகாஷ் அமைதியா போறான் ஒரு நாள் உனக்கு இருக்குடி" னு மனதில் வாணி ஆழமா பதிஞ்சிடுச்சி.

அந்த வருடம் முடிந்ததும் பின்னாடி... ஆகாஷ் விவசாய கல்லுாரியில் சேர்ந்துகொண்டான். இப்போது மல்லியையும் வாணியையும் சண்டை போடும்போது பிரிக்கத் தாமரை தான் பாடாத பாடு பட்டுட்டா ரெண்டு வருஷம்.

அப்புறம் கல்லூரி போயாவது நிம்மதியா இருக்கலாம்னு பாத்தா. இவங்க குடும்பத்தில் இருக்க வங்க மூணு பேரையும் ஒரே காலேஜ் அதும் ஒரே துறையில் செத்துவிட்டுட்டாங்க இவங்க ரகளை அங்கேயும் போய் ஆரமிச்சிடுச்சி.

ஆகாஷ் வீட்டில் இருக்கும் போது எப்போ பாரு, வாணி மாமா மாமானு அவன் பின்னாடியே சுத்திட்டு இருக்கிறது. அத பார்த்தா மல்லிக்கு செம கடுப்பா ஆய்டும், மல்லி சண்டைக்கே நிப்பா. "எதுக்கு டி என் அண்ணா பின்னாடி சுத்திட்டு இருக்கனு" .

மத்த சண்டையை மல்லிக்கூட சண்டை போடா தெரிஞ்ச வாணிக்கு, ஆகாஷ் னு வந்தது அவளுக்குச் சண்டை போடா கூட விருப்பம் இல்லாமல்.. நேரா ஆகாஷ் முன்னாடி போகி நினைத்து.

இவர்கள் கல்லூரி பிரஸ்ட் இயர் முடிச்சது, அவன் கல்லூரி முடிச்சிட்டு வந்து இருந்தான்.

" மாமா என்ன பிடிக்குமா " னு ஆகாஷ் முன்னாடி அழுகையைத் துடைத்துக்கொண்டே போய் நினைத்து வாணி.

"என்ன கேள்வி இது திடீர் னு " ஆகாஷ் குழம்பிப் போய் வாணியைப் பாக்க,

ஆகாஷ்யும் வாணி இஷ்டம் விளையாட நினைத்த, அவன் ஏதோ சாதாரணமாகத்தான் மல்லியிடம் சேர்ந்து விளையாடினான்.

அவளைப் பின்தொடர்ந்து வந்த மல்லி அகஷின் தோளில் சாய்ந்து கொண்டு " அண்ணா என்ன மட்டும் தான் பிடிக்கும் இவளைப் பிடிக்காது னு அவட்ட சொல்லு " என்றாள் மல்லி ஆகாஷைஐ உளுகிய்க்கொண்டு இருந்தாள்.

"எனக்கு ரெண்டு பேரும் பிடிக்கும், போய் சண்டை போடாமல் முதல போய் படிங்க " என்று இருவரையும் வீரட்டினான் ஆகாஷ் .

"அதுலாம் முடியாது எனக்கு இப்பொவே தெரியணும்,நானா இல்ல அவளை னு சொல்ல " என்றாள் மல்லி அக்ரோசமாக.

"உன்னதான் பிடிக்கும் போதுமா போ" என்று மல்லியிடம் சொல்லிவிட்டு வாணியைப் பார்க்க.

"என்ன பிடிக்காதா மாமா " என்று ஏக்கமாகக் கேட்டு விட்டு ஓடியவள் தான்அதுக்கு அப்புறம். ஆகாஷ் வழியில் வந்தால் கூட வண்டிச் சத்தத்தை வைத்து, வாணி விலகி வேறு வாழியே போய்டுவா. இரு குடும்பமும் அதுக்கு அப்புறம், சற்று நெருக்கம் குறைந்து பொன்னது . எதாவது போது நிகழ்ச்சியில் மட்டும் கலந்துக்குவாங்க, பொதுவான நலம் விசாரிப்பு மட்டும்.

வாணி அதன் பிறகு மல்லியிடம் சண்டை போடுவதை விட்டுவிட்டாள், எப்போவது தாமரைட மட்டும் பேசுவா, அதும் ரொம்ப லாம் இல்ல, கேக்கற கேள்விக்குப் பதில்.

ஆகாஷ் வாணிக்கு எவளோ புரியவைக்க, அவளைத் தேடி பொன்னாலும் அவன் பேசுவதற்குத் தயாரா இல்ல முழுசா மூன்றுவருஷம் வருஷம் ஆச்சி. காலேஜ் முடித்து, அவ படிச்சா ஸ்கூல்க்கு சொல்லிக் கொடுக்க போய்ட்டாங்க மூனுப்பெரும்.

அங்கேயே சிறு சிறு சண்டை வரும், வாணி அந்த இடத்தை விட்டு எந்திரிச்சி போய்வா. தாமரை தான் இவளுங்கள என்ன செய்றது னு தெரியாமை விழி பிதுங்கி நின்னுட்டு இருப்பா.

மல்லி தாமரை வருவதைப் பார்த்து, " தாமரை அண்ணாக்கு பாத்த பொண்ணு போட்டோ வந்துடுச்சி " னு தாமரையை நோக்கி ஓடி வந்தாள்.

மல்லி அங்கு இருந்த கல் தடுக்கி, தடுமாறினாள் கைல, இருந்த போட்டோ பறந்து போய் வாணி காலடிலே விழுந்தது.

அதை எடுத்துப் பார்த்தவள், அழகா அடக்கமா ஒரு பொண்ணு சிரித்த மூகத்தோடு நின்னு இருந்ததா பாத்துட்டு, கேள்வியாக இருவரையும் பார்க்க.

மல்லி வாணி கையிலே இருந்த புகைப்படத்தைப் பிடுங்கி வாணியை வழக்கு போல வெறுப்பேற்றத் தொடங்கினாள் " என்னோட அண்ணி உன்னைவிட அண்ணாக்கு பொருத்தமா இருப்பாங்க " என்று வாணியை வெறுப்பேற்றினாள்.

வாணி கோபமாக இருந்தாலும், வாணி மனதில் ஆகாஷ் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருந்தான்.

" மாமா என்ன மறுபடியும் ஏமாற்றிட ல " என்று மனம் உடைந்த வாணி வீட்டுக்குப் போய் அத்திரமாக, அவளின் அப்பாவின் முன்னாடி போய் நின்னு எனக்கு இப்போவே கல்யாணம் பண்ணி வையுங்கள். ஆகாஷ் மாமாக்கு நடக்கிறதுக்கு முன்னாடி எனக்கு நடக்கவேண்டும்" என்று கோபமாகச் சொல்லிவிட்டு அறையிலே நுழைந்தவள் ஒரு வாரம் ஆத்திரம் அடங்கும் வரை அழுது தீர்த்தாள்.
 
T 24

Well-known member
Staff member
Wonderland writer
2

பொண்ணு கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடானு வாணி அப்பா, ஏற்கனவே வாணியை பொண்ணு கேட்டு இருந்த இடம் எல்லாம் விசாரிச்சு வீட்டில் இருக்கவங்கள பிடிக்குதா கேட்டுட்டு, அவங்க பக்கத்து ஊர்ல ஆகாஷ் ஓட சித்தி பையன பிக்ஸ் பன்றாங்க.

ரெண்டு பேமிலிக்கும் பிடித்து போயிடுச்சி ரெண்டு மாசத்தில் கல்யாணம்னு சொல்ராங்க.

இத கேள்விப்பட்ட ஆகாஷ் வாணியை தேடிட்டு வரான், ஆனால் அவ பேச ரெடியா இல்ல.

ஒரு வாரமா ஆகாஷ்க்கு டிமிக்கி குடுத்துட்டு ஒளிஞ்சி ஒளிஞ்சி போய்ட்டு இருக்கா, இவன்டலாம் நா எதுக்கு பேசணும்னு அவ்வளவோ ஆத்திரம் அவளுக்கு. ஆகாஷ் க்கு பொண்ணு பாத்துட்டாங்க னு கேள்விப்பட்டதும்.

ஒருநாள் அப்படித்தான் மாவு அரைச்சிட்டு வர மில்லுக்கு போய்ட்டு வந்த வாணி, அவனோடு வண்டியில் வாரமா வேற வண்டில வந்து அவளுக்கு முன்னாடி வேகமா வந்து வண்டியை பிரேக் போட்டு நிறுத்தரான் .

அவன் வண்டி சவுண்ட் வச்சே மேடம் தான் எஸ்கேப் ஆகிடற அதனால், வேற வண்டியில் வந்தான் ஆகாஷ், அதும் சரியா வேலைசெய்தது வாணியும் அதை எதிர் பார்க்கல .

அவன பார்த்ததும் கையில் வச்சி இருந்த மாவு டப்பாவா போட்டுவிட்டு அந்த சைடு இருந்த வயலுக்கு உள்ள ஓடிடற.

ரொம்ப நாள் கழித்து வசமா சிக்கி இருக்க வாணி, ஆகாஷ் விடுவானா அவளை தொரத்திட்டு ஓட்றான்.

" இவன் எதுக்கு என்ன தொரத்திட்டு வாரான், அதான் அவனுக்கு பொண்ணுப்பாத்துட்டாங்கல, அவ கூட ஓடி பிடித்து விளையாடறது " அவனை திட்டிட்டே கிணற்றுக்கு பக்கத்தில் இருக்க மோட்டர் அறைக்குப் பின்னாடி மறைய.

இவ ஓடிவரத பாத்த மல்லி, "இவள என்ன நாய் எதாவது தூரத்திட்டு வருதா? இப்படி ஓடிவாரா விவஸ்தை கெட்டவ, கிணறு வேற ஆழம், இந்த கழுதைக்கு நீச்சல் வேற தெரியாது, அதும் இவ்ளோ தைரியம் திடீர் னு எங்க இருந்து வந்துச்சி இவளுக்குக் கிணறு பக்கம் போகமாட்டாளே. என்னாச்சி இவளுக்கு " மல்லி அப்பாக்கு சாப்பாடு கொடுத்துட்டு வாணி ஓடரா பக்கம் போறா.

ஆகாஷ் தொரத்திட்டு வரவும், "என்னாச்சி இவங்க ரெண்டு பேரும், புதுசா ஓடி பிடிச்சிட்டு விளடிட்டு வராங்க " மல்லி சந்தேகம் பட்டது சரியா போச்சி.

"ஆகாஷ் அண்ணா இவள மனசுல வச்சிட்டு தான் கல்யாணம் வேணானு சொல்லுச்சு போல, சரி எதாவது செஞ்சி, சேத்து வச்சிடலாம் " னு யோசித்த மல்லி கொஞ்ச தூரமா மரத்துக்குப் பின்னாடி நின்று பாத்துட்டு இருக்க.

ஒளிஞ்சிக்க தெரிந்த வாணிக்கு, முந்தனையா பிடிக்காமல் விட்டுவிடா அது காத்துல பறந்து, ஆகாஷ் நான் இங்கதான் இருக்கேன்னு கட்டிக்கொடுக்க .

ஆகாஷ் அங்க பக்கத்தில் போய் நின்னு பேச ஆரம்பிக்கறான்.

"வாணி உன்ன எனக்குப் பிடிக்கும் டி, எதற்குக் கல்யாணத்துக்குச் சரி சொன்ன, ஒழுங்கா போய் உன் அப்பாவை நிறுத்த சொல்லு இல்ல உனக்குத் தேதி குறிச்ச நாளுக்கு நான் தான் தாலிக்கட்டுவேன் " னு வசனம் பேசும்போது வாணி கேக்கற நிலமைல இல்ல.

கொஞ்சம் மிஸ் ஆனால் இந்த பக்கம் கிணறு, தள்ளி போலாம்னு ஒரு அடி எடுத்து வைக்கும் போது ஒரு பெரிய பாம்பு புஸ் னு சவுண்ட் போட்டுவிட்டு மெதுவா போய்ட்டு இருக்கு. வாணி கான்சென்டிரேஷன் புல்லா.... பாம்பு எப்போது போகும் நம்ம எப்போ அடுத்த பக்கம் போவோம்னு பயத்துல நடுங்கிட்டு நின்னு இருக்கா பயத்துல. ஆகாஷ் சொன்னது எதுமே காது கேக்கல. பாம்பு போய்ட்ட அப்புறம் ரிலாக்ஸா அந்த ரூம் செவுத்துல சஞ்ஜி நிற்கும் போது தான் வாணிக்கு, ஆகாஷ் பேசினது காது கேட்டுச்சு.

"இப்போது என்ன பண்ற நீ போய் கல்யாணத்த நிறுத்தர " னு ஆகாஷ் மிரட்டவும்.

' இவன் என்ன பெரிய இவன, நான் இவன நினைச்சிட்டே வாழனும் ஆனா துறை சொகுசா கல்யாணம் செஞ்சிட்டு ஜாலியா வாழ்க்கை வாழுவார்' மனசில் திட்டி முடிச்சிட்டு அவன திட்ட அரமிச்சிட்டா.

வாணிக்கு கோவம் டக் னு ஏறிடுது . " நான் எதுக்கு டா கல்யாணத்த நிறுத்தம், எனக்கு என் மாமனா பிடிச்சி இருக்கு கட்டிக்கறேன் " என்று வாணி கோவமா கத்திவிட்டுச் சென்றாள்.

ஆகாஷ்க்கு முகம் மாறிடுச்சு... வாணி பேசிட்டு விருவிரு னு போய்டுற, அண்ணா முகம் மாறவும் மல்லி பக்கத்துல வரா, ஆப்போ வாணி பேசினது எல்லாம் கேட்டு செம கோவம் வந்துடுத்து, "என் அண்ணாவையே வேணானு சொல்றயா இவளுக்கு எவ்ளோ திமிரு இருக்கும்".

ஆகாஷ் மூகத்தை இப்போதான் பாக்கிறா மல்லி வேதனையில் சுருங்கி போயிடுது. அண்ணா என்னாச்சி அவ கேட்க கேக்க ஆகாஷ் அந்த இடத்தை விட்டுவிட்டு போய்டுறான்... ஒரு ரெண்டு நாலு ஆகாஷ் எங்க போனானு கூட தெரில.

பிரிண்டா பாக்க போகிறேன் வீட்டில் சொல்லிவிட்டு, மல்லிக்கும் தாமரைக்கும் மட்டும் மெசேஜ் செஞ்சிட்டு போய்ட்டு, சாவகாசமா ஒரு வாரம் கழித்து வந்தான்.

மருந்துக்குக் கூட புன்னகை இல்லை, எப்போதும் மறைந்து மறைந்து செல்லும் வாணி, எப்போ பாரு அவன் வரும் நேரம் முன்னாடி வந்து சந்தோசமா சுற்றித் திரிந்தாள்.

ஆகாஷ் கண்டுக்காம போனாலும், காதல் கொண்ட நெஞ்சம் சுருக்கென்று வலித்தது அகஷிற்கு.

மல்லி தாமரையைக் கோவிலுக்கு கூட்டிவிட்டுப் போகும்போது ஒரு நாள்.

வீட்டில் உள்ளவர்கள், கல்யாணம் கடிக்கப் போகும் வாசுவைக் கோவிலுக்கு ரெண்டு பேரையும் வற்புறுத்தி கோவிலுக்கு அனுப்பி வச்சாங்க. அப்போனு பாத்துதான் ஆகாஷ் ரெண்டு தங்கச்சி ஓட வந்தான்...

கல்யாணம் செஞ்சிக்கா போறவன் தான் ஆனால் வாணி ரெண்டு அடி பின்னாடி தான் வந்தாள்.

ஆகாஷ் வருவதைப் பார்த்த வாணி, வேணும்னே வாசு கையை பிடிச்சிகிட்டா.. சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் அவ பாட்டுக்கு திடீர் னு பேசிட்டு வந்தால்.

ஆகாஷ்க்கு மனதில் ஊசிக்குத்தின வலி இருந்தாலும்.. வாசு என்னதான் இருந்தாலும் அவனது தம்பி ஆய்டுச்சே. அவன்ட பேசிட்டு இருக்கும் போது..

வாசு வாணி கையை பிரிக்க நினைத்தான், வாணி விட்டால் தான . ஆகாஷ் சந்தேகமாகப் பார்த்தான்.

அப்புறம் பாக்கலாம்னு சொல்லிவிட்டு எல்லோரும் போய்ட்டாங்க. ஆகாஷ் தலை மறைந்த உடனே வாசுவிடம் இருந்த கையை வேகமா பிரித்துக் கொண்டாள்.

மல்லிக்குத் தான் மனம் பொறுக்கவில்லை... " தாமரை இந்த வாணி வேணும் னே பண்றா" என்று கோபமாகத் தாமரையிடம் சொல்ல.

"அவ கடிக்கப் போகிறவன் கைய பிடிச்ச உனக்கு என்ன " என்று தாமரை திட்ட... அது எல்லாம் காதில் மல்லிக்கு விழுந்தாள் தான.

" நேரம் கிடைக்கும் போது இவளை வச்சி செய்கிறேன் பாரு " என்று வஞ்சத்தை விதைத்தால் மல்லி.
 
T 24

Well-known member
Staff member
Wonderland writer
3

ஆகாஷ் வாணிய மறக்க எவ்ளோ முயற்சி செஞ்சும் மறக்க முடில.

இவன் சோகம் கண்டு கொண்டது மல்லி மட்டும்தான். தாமரைட சொன்னாலும் நம்பமாட்டானு அவ எதுமே அவட்ட சொல்லலை.

ஆகாஷ் வெளியே போய்ட்டு சோர்வா வந்து உட்காந்து இருந்தான்.

அம்மா வந்து "என்னப்பா ஆச்சி ஒரு மாதிரி இருக்க ".

"அதுலாம் ஒன்னும் இல்ல மா " னு சொல்லி அம்மா மடில தலைவச்சி கண்ணாமூடி படுத்துகிட்டான் .

கொஞ்சநேரம் கழிச்சி யாரோ ஆகாஷ் கால் பிடிச்சி விடவும் , ஆகாஷ் சோர்வா யாருடா இது னு பாத்தா அப்பா .

" அப்பா என்ன பண்றிங்க விடுங்க ,"னு கால் எடுத்துக்க பாத்தான். அவர் பலம் தான் ஊருக்கே தெரியுமே, 50 வயசுலயும் 35 போலத்தான் தெரியும் அவரது தோற்றம், ஆகாஷ்க்கு ஒரு அண்ணா இருந்தா இப்படி தான் இருப்பார் அப்படி இருப்பார் கம்பிரமா.

" என் மகன் நாளு புல்ல கஷ்ட பட்டு வேலை செஞ்சிட்டு வரான், நான் பிடிச்சி விடுறேன் அதை கேக்க நீ யாருடா" என்றார் அவர் செல்ல கோபத்தோடு.

ஆகாஷ் சிரிச்சிட்டே அமைதியா ஆயிட்டான். " உங்களை மாதிரி அப்பா ஊருல இல்ல, இந்த உலகத்துலயே இல்ல பா " என்றான் ஆகாஷ். பொண்ணுங்கலுக்கு கடைசிவரை பெத்தவங்கலுக்கு அவங்க கை குழந்தை ஆனா, பசங்களுக்கு ஒரு வயசுவரை தான் பெத்தவங்க பாசம் கிடைக்கும்,அது பசங்களுக்கு கொஞ்சம் வளர வரைக்கும் தான் இந்த வயசுல கிடைக்கிறதுலாம் வரம் ஆகாஷ் பொறுத்த வரை.

அம்மா மடில படுத்து, அவங்க கை தலையை வருடிவிட , அப்பா கால்பிடிச்சி விட இதமா கண்களை மூடினான் .' எப்படியும் இந்த அப்பா நம்ம சொல்றத கேக்கமாட்டாரு ' னு விட்டுட்டான் ஆகாஷ்.

இதை பாத்துட்டே உள்ள வந்த ரெண்டு இளவரசியும். அப்பா எனக்கும் பிடிச்சி விடுங்க ஒரே வேலைனு மல்லி அப்பாக்கு காலு அடில போய் உட்கார, அப்பாட்ட கையை கொடுக்க, பிடிச்சி விட. ஆகாஷ்க்கு பிடித்து விடுவதை விட்டுவிட்டு, மல்லி கைகளை பிடித்து விட்டார் கண்ணன்.

"என்ன டி அப்படி நாள் முழுக்க கிழிச்ச, மதியம் அப்பாக்கு சாப்பாடு கொடுத்து வர அனுப்பி வச்ச ரெண்டு பேரும் ஊரு சுத்தி வம்பு இழுத்துட்டு வரது. அப்பாவே வேலைய முடிச்சி சாயந்தரம் வீட்டுக்கு வந்துட்டார், இப்போதான் நீங்க வரீங்க " னு எப்பவும் போல புலம்ப.

"வேற வீட்டுக்கு போக போற புள்ளைங்க இங்க இருக்க வர, ராணிமாதிரி நான் பாத்துக்கிறேன் உனக்கென்ன டி " னு மயிலை திட்டினார் கண்ணன் .

"இப்படியே செல்லம் கொடுத்து கேடுத்து வச்சி இருக்கீங்க, அங்க போய் என் உயிர வாங்கின மாதிரி மாமியார் உயிரையும் வாங்குவா " வர போற மாமியாருக்கு வருத்த பட்டார் மயிலு.

இங்கு இந்த பேச்சி தர்பார், ஆகாஷ்யும், தாமரையும் ரசிச்சிட்டு இருந்தாங்க.

"இங்க பாரு மயிலு , வீட்டோட மாப்பிள கட்டி உன்ன காலம் புல் ஆ சாவடிக்கிறேன் பாரு " என்று சாபம் விட்டாள் மல்லி அம்மாட்ட.

"தாமரை நான் சொல்றது சரிதானா ". என்று கேட்க.

"எங்க போனாலும் நம்ம ஒன்ன இருந்தா சரி, இங்கனாலும் பரவால்ல, வெளிலனாலும் பரவால்ல " என்றாள் தாமரை.

இத கேட்ட ஆகாஷ்க்கு ஒன்னு தோணுது, பாப்போம் இது செட் ஆகுதானு யோசிச்சிட்டு இருக்கான்.

மல்லிக்கு கண்ணு கலங்கிடுச்சி, " என்னைவிட்டு லோட்டஸ் இருக்க முடியாதாம் பா கேட்டீங்க லா " என்றாள் கண்கள் மின்ன.

ஆகாசும் தாமரையும், ஒன்ன சேர்ந்து. " பாருடா மல்லிக்கு அழுகைல கூட வருது நம்ம வீட்டு சண்டைக்கோழிக்கு ". என்றார் இருவரும் மல்லியை கலாய்க்க.

"அதுலாம் இல்லையே, டஸ்ட் விழுந்துடுச்சி, அதான் கண்ணு வேத்துடுச்சி" என்று மல்லி சமாளிக்க. மூவரும் செல்ல சண்டை போடா.

பெற்றவர்களுக்கு, அவ்ளோ மன நிறைவு, நம்ம புள்ளைங்க அவ்ளோ ஒத்துமையா இருக்குனு, மயிலு சாமிட்டா வேண்டுதல் வைக்க " காலம் முழுசும், இப்படியே இவங்க இருக்கனும் ஆண்டவா " னு மயிலு வேண்டினார் .

கண்ணன் மல்லியை பார்த்து " ஒரே
வீட்ல மாப்பிள பாத்துடலாம் மல்லி கவலை படாத " என்றார் அப்பா .

"அப்பா மல்லி இல்ல ஜாஸ்மின் என் பேரு இனி புரியுதா, நான் ஜாஸ்மின் அவ லோட்டஸ், பேரு கூட வைக்க தெரில மல்லி கொல்லி னு " என்று அப்பாடா சொல்ல.

"ஓ இங்கிலிஷ்ல மாத்திகிட்டிங்களா " என்றார்.

"ஆமப்பா ஒரே போர் அந்த பேரு ..."என்றாள் மல்லி இல்ல இல்ல ஜாஸ்மின்.

"ஜாஸ்மின் ஓவர் பெருசா இருக்குல பா ஜாஸ் னு வச்சிக்கறேன் பா ...இனி ஜாஸ்னு தான் எல்லாம் கூப்பிடணும் "என்று மயிலை பார்த்து .

"அது என்னாடி ஜாஸ்ஸ் புஸ்ஸ்ஸ்னு போடி நான் பெரியவ சின்னவ னு கூப்பிடுக்கறேன்" என்றார் மயிலு.

"பா ஊரு நல்லா படிச்சா புள்ளய கல்யாணம் பண்ணிக்கிறது தான, எப்படி மானத்தை வாங்குது பாரு " என்று புலம்பினாள் ஜாஸ்.

"காதலுக்கு கண்ணில புள்ள என்ன செய்ய", என்று சொல்லி மயிலை பார்த்து கண்ணன் கண்ணாடிக்க.

"அண்ணா அப்பா பண்றதா பத்திய" என்றாள் மல்லி.

"ஆமா மல்லி நீ சொன்னது சரிதான் "என்றான் அம்மாவையும் அப்பவையும் பார்த்து சிறிது கொண்டே.

"என்ன உங்களுக்கு இப்போ" னு மயில் இருவரையும் மிரட்ட.

"அதுவா மா அப்போ ஊரு ரோமியோ னு சொன்னேன் அது சரியா போச்சி இப்போ" என்றாள்.

"அது என்ன மாமா ரோமியோ" என்று மயிலு கண்ணன்னிடம் சந்தேகம் கேட்க.

"அம்மா அதுவா அப்பா அந்த காலத்துலயே காதல் மன்னன்னு சொல்ரா மல்லி" என்று தாமரையை மாட்டிவிட.

ஆகாஷ், மல்லியை துரத்திக்கொண்டு சென்றார் மயிலு.

இப்படியா குதூகலமாக சென்றது இவர்களின் நாட்கள்.

ஆகாஷ் தனிமையிலே தவித்தது என்னவோ உண்மைதான். மல்லி அவனை தனியே விடாம அண்ணா அண்ணானு வழக்கத்தை விட அதிகமா பின்னாடியே சுத்திகொண்டு இருந்தாள்.

"மல்லி அதுலாம் ஒன்னு இல்ல நான் தனியா இருந்துப்பேன், எதுக்கு இப்படி பின்னாடி சுத்திட்டு இருக்க " என்று ஒருநாள் மல்லி செய்வதை பொருக்க முடியாம கோபமாக ஆகாஷ் கேட்க.

"அண்ணா அது " சொல்லமுடியாமல் மல்லி தவித்தாள்.

"உன் அண்ணன் அவ்ளோ ஒன்னும் கோழை இல்ல தற்கொலை செஞ்சிக்கிற அளவுக்கு "னு சொல்லி திட்டவும் தான் மல்லி ஆகாஷை விட்டாள் .

இன்விடேஷன் வைக்க வாணி அப்பா அம்மா வந்து இருந்தாங்க. மயிலுக்கும் கண்ணனுக்கும் ஆசைதான் ஆகாஷ்க்கு வாணியை கட்டி வைக்க ஆனா அந்த புள்ள கேட்டதுக்கு வேணான்னு சொன்ன அப்புறம் இவங்களும் விட்டுட்டாங்க .

ஆகாஷ் அப்போ தான் உள்ள வரான். ' வாங்க மாமா,அத்தை, சாப்பிட்டீங்கலானு நலம் விசாரித்து அவனோட ரூம்க்கு போய் அடஞ்சிகிட்டான் .

வாணி அப்பா அம்மாக்கும் ஆகாஷ்க்கு கட்டிவைக்க தான் ஆசை என்ன செய்ய அவ எப்பயோ சின்னப்புள்ளல நடந்த சண்டைக்கு இப்போவரை திணிப்போடு இவ்ளோ நல்லா புள்ளையை விட்டுட்டு அப்போ அப்போ தனிமைல இவங்க புலம்பாத நாளே இல்லனு தான் சொல்லணும்.

யாருக்கு யார்னு எழுதி வச்சி இருக்கோ அவங்க கூட தான் செருவாங்கனு மனச பெரியவங்க சமாதானம் செஞ்சிகிட்டாங்க.

வாணிக்கு அவசரத்துல முடிவு எடுத்துட்டோமோனு யோசிக்க அரமிச்சிட்டா. கல்யாணத்துக்கு இன்னும் 20 நாள் தான் இருக்கு எதாவது செஞ்சி நிறுத்திடலாமானு கூட யோடிச்சிட்டா.

கட்டிக்கப்போற பையன போன் செஞ்சி வர சொல்லிட்டா... " நான் உங்கட தனியா பேசணும், " னு சொல்லவும் கோவிலுக்கு கூட்டிட்டு போற வழில ஆகாஷ்யை பாக்க.

அவன் வண்டி சத்தம் கேட்டதும், அந்த மாப்பிள shoulderகை வச்சிக்கிற வாணி. ஏதேதோ பேசி சம்பந்தம் இல்லாத சிரிக்கிறா, ஆகாஷ் நான் சந்தோசமா இருக்கிறத பாத்து வயிறு எரியவைக்கணும்னு. வாணி இப்படி செய்றா.

ஆனா ஆகாஷ் கண்டுக்காம, அவன் தம்பிய பாத்து ஒரு தலை அசைத்து போய்டுறன்.
 
4
'என்ன இவன் கண்டுக்காம போறான்' , னு திரும்பி பாக்க.

ஆகாஷ் அவளை அந்த சமயம் திரும்பி பார்த்து கண்ணாடித்து சென்றான்.

வாணிக்கு தூக்கி வாரி போட்டுடுச்சி 'என்ன இவன் என்ன பாத்து கண்ணாடிக்கறான்.'

கோலம்பிக்கொண்டே கோவிலுக்கு போறா வாசு வாண்டில.

இதுக்கு மேல மறச்சி எந்த பிரயோஜனமும் இல்ல னு யோசிச்ச வாணி நேரடியா விஷயத்துக்கு வந்துட்டா. " வாசு, எனக்கு உங்க அண்ணன் ஆகாஷ் தான் பிடிச்சி இருக்கு உங்களை பிடிக்கல என்ன கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க" என்று வாணி பட்டுனு சொல்லவும்.

"இத முன்னாடியே சொல்லி இருக்கனும் வாணி, இன்னும் பத்து நாளுல கல்யாணத்த வச்சிக்கிட்டு இது என்ன விளையாட்டு" என்றான் வாசு கோபமாக.

"என்னால ஆகாஷ் இல்லாம கூட வாழ முடியும், ஆனா அவர மனசுல வச்சிட்டு இன்னோருத்தர் கூட வாழ முடியாது " வாணி சொல்லிட்டே அழுக ஆரம்பிச்சிட்டா.

வாசுக்கு கோவம் வந்துடுச்சி, தன்ன கட்டிக்க போறவ திடிர்னு வந்து சொல்லவும் வாசுக்கு ஏதோ போல ஆக , " எதுக்கு அழுது என்ன டென்ஷன் அக்காத வாணி, இந்த உலகத்துல எல்லோரும் பிடிச்சவங்களத கல்யாணம் செஞ்சிக்கறாங்க வாணி, மறந்துட்டு என்னோட வாழ அரமிச்சிடுவ, கொஞ்ச மாசத்துல, கல்யாணம் ஆனதும்" என்று கோவமா கோவில்ல விட்டு வெளியே வந்து நின்னுட்டான் வாசு.

வாணிக்கு எல்லாம் கை மீறி போயிடுச்சி இப்போ என்ன செய்றதுனு தெரில. ' என்னால முடியாது நான் சாக போறேன் செத்துடுவேன் னு பிளான் போட்டுட்டா, நீ என் கழுத்துல தலிக்கட்டும் போது நான் உயிரோட இருக்கமாட்டேன் ' என்று நினைச்சிட்டே வீட்டுக்கு போறா வாணி.

வாசு அத்தை மாமானு ரொம்ப நெருங்கிட்டான். துனி எடுக்கிறத பத்தி பேசிட்டு இருக்காங்க.

ரெண்டு நாளைக்கு அப்புறம் போலாம் அத்தை, நான் பெரியப்பா குடும்பத்தையும் வர சொல்லிட்டேன் அத்தைனு வாசு, வாணிக்கு பெரிய குண்டா தூக்கி போட்டுட்டான். ' இந்த வாசு வேணும்னே செய்றான்னு' யோசித்தாள் வாணி.

எப்படியும் ஆகாஷ் வரமாட்டான்னு நினச்சா வாணி. ஆனா துணி எடுக்க மொதல்ல தயாரானதே ஆகாஷ் தான், எல்லா வேலையும் இழுத்து போட்டுட்டு செஞ்சிட்டு இருந்தான் ஆகாஷ். அதை எல்லாம் பாத்த வாணிக்கு அகஷாயை கொல்லும் வெறி வந்தது.

ஆகாஷ்யும் வாசுவும் சிரிச்சி சிரிச்சி வழி புல்ல பேசிட்டு வந்தாங்க, வாணிக்கு பத்திட்டு வந்தது. இது பத்ததும்னு மல்லி தாமரைட்ட. ஆகாஷ் அண்ணாக்கு இவங்க பொருத்தமா இருப்பாங்க இவங்க பொருத்தமா இருப்பாங்கனு புரோக்கர் அனுப்பின எல்லா போட்டோவையும் பாத்து டிஸ்கஸ் செஞ்சிட்டு வந்தாங்க.'

'என்னால எதுமே முடில, எல்லோரும் என்ன சாவடிக்கைதான் இப்படி பன்றாங்க ' என்று வாணி வழி புல் ல ஆகாஷ் க்கு பாத்த பொண்ண மல்லி தாமரை டா கொடுத்து வாணிக்கு காட்ட வைத்தாள், வயிறு எறிஞ்சிடேய் வந்தது.

இதுலாம் பாத்ததும்னு மல்லி வேணும்னே சண்டைக்கு வந்த , சண்டை போடவும் முடில வாணியால போடாம இருக்கலாம் முடில, வண்டிய விட்டு இறங்கும் போது தலைவலியோட தான் கடைக்கு உள்ள போனா வாணி.

ஆகாஷ் முன்னாடி போக, வாசு மல்லி கையை பிடிச்சிட்டே பின்னாடி வந்தான். மல்லி வாணிய இடிச்சி வாசுபக்கம் தள்ளிட்டு, ஆகாஷ் கைய பிடிச்சிட்டே டிரஸ் எடுக்க பெரிய கடைக்கு உள்ள போய்ட்டாங்க.

பெரியவங்க எல்லோரும் புடவை பாக்க போய்ட்டாங்க சின்னவங்க அஞ்சி பேரும், " முதல்ல மாப்பிளைக்கும் அண்ணாக்கும் எடுத்தீடலாம், சீக்ரம் வேல முடியும்னு " மல்லி எல்லோரையும் இழுத்துட்டு ஜென்ஸ் சைடு போனாங்க.

கலர் சட்டையை எடுத்து வாணி கைல வச்சிட்டு இருக்கும்போது, வாசு வந்து " ஏய்ய்ய் சட்டை சூப்பர் வாணி, செம, நம்ம கல்யாணத்துக்கு போட்டுக்கிறேன் னு " பில் போடா கொடுத்துட்டாங்க.

வாணிக்கு செம கோபம், "ஆகாஷ் கலர்க்கு சூப்பரா இருக்கும்" என்று எடுத்து பாத்துட்டு இருந்தா, இந்த கொரங்கு பிடுங்கிக்கும்னு அவ கனவா கண்டா.

வாசுவை மொறச்சிட்டே நின்னுட்டு இருந்தா, மல்லி, தாமரை ஆகாஷ்க்கு எந்த சட்டை செரியா இருக்கும் னு வச்சி வச்சி பாத்துட்டு இருந்தாங்க. ஆகாஷ் சந்தன கலர் செலக்ட் செஞ்சி பில் போட குடுத்துட்டான்.

கிராண்ட் ரெண்டு சாரீ எடுக்க ஆகாஷ் கூட்டிட்டு போறான். ரெண்டு தங்கச்சிங்களுக்கும் வேற வேற கலர்ல ஒரே டிசைன்ல பக்ரான். மல்லிக்கு லைட் கிறீன் கலர் சாரீ, தாமரைக்கு அதவிட கொஞ்ச டார்க் கலர் எடுக்கிறன். மல்லிக்கு லைட் கலர் பிடிக்கும் தாமரைக்கு டார்க் கலர் பிடிக்கும், தங்கச்சி டேஸ்ட் தெரிஞ்சி பாத்து பாத்து வாங்கினான்.

லைட் அ வாணிக்கு பொறாமை, என்ன கண்டுக்காரான பாரு, ஒரு பென்சில் ஆச்சி வாங்கித்தந்து இருப்பானா எனக்கு, ஆகாசை வாணி முறைத்துக்கொண்டு நின்று இருந்தாள்.

வாசு ஒரு புடவையை எடுத்து வாணிட்ட குடுக்கிறான் இது உனக்குனு.

" எனக்கு இது பிடிக்கல " னு சொல்லிட்டு வேற சாரீ பாக்கறா வாணி.

அப்போ ஆகாஷ் கைல ஒரு சாரீ எடுத்து பாத்துட்டு வச்சிடறான். அவன் அந்த பக்கம் போனதும் " எனக்கு இதுதான் வேணும் '' நல்லா நீலகலர்ல இருந்தது அந்த சாரீ.

"கலர்யே நல்லா இல்லை" என்றான் வாசு.

"நீயா கட்டிக்கிற நான் தான் கட்டிக்க போறேன், பில் போடு '' என்று வாணி வாசு கைல குடுக்கிறா.

வாசு அதை பில் போட்டுட்டு, " முடிஞ்சா அளவுக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே பாத்துக்கோ வாணி, அதுக்கு அப்புறம் உன்ன இப்படி அவன பாக்க விடமாட்டேன்னு " வில்லத்தனமா வாசு சிரிச்சிட்டு போறான்.

வாணிக்கு பத்திட்டு வந்துடுச்சி, வாசு சொல்றது கேட்டதும்.

ஒரு வழிய புடவையும் எடுத்துட்டு வீட்டுக்கு போய்ட்டாங்க, இன்னும் ரெண்டு நாள் தான் கல்யாணம்னு வாணி யோசிச்சிட்டு பூச்சி மருந்து எடுத்து அவ ட்ரெஸ்க்கு அடில ஒழிவச்சிடரா. கல்யாணத்துக்கு முன்னாடி இல்ல குடிச்சிட்டு போய் செத்துடணும்னு.

கல்யாணம் நாளும் வந்தது. அது இருக்கானு வாணி செக் பண்றா. யாரோ வரது போல சத்தம் கேட்கவும், வாணி அதை ஒழியவைக்கறா வேற இடத்துல. அப்புறம் ஒன்னும் தெரியாதது போல ரெடி ஆக கிளம்பிட்டா.
 
Status
Not open for further replies.
Top