ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மனைவியின்...காதலன்! - கதை திரி

Status
Not open for further replies.

Bindusara

Well-known member
Wonderland writer
21 காதன்!

இதனை ஏற்றுக்கொள்ள முடியாத கிருஷ்ணா கண்களை மூடி உட்கார்ந்தான்.

அவனது ருத்ர தோற்றம் கண்டு அந்த புரோக்கர் பயந்து நின்றவர்.

'கடுவுளே என்னை எப்படியாவது இன்னைக்கு காப்பாத்தி விட்டுடு திருப்பதிக்கு நடந்தே வரேன்' அவன் வேண்டிய கடவுள் தூரம் இருந்ததால் காது கேட்கவில்லை போல, அந்த புரோக்கர் பக்கத்து தெரு புள்ளையாரை ஒழுங்கா வேண்டி இருக்கலாம் லட்டுக்கு அசைப்பட்டு சுண்டல் போச்சா.

உள்ளே இங்கு நடக்கும் கலவரம் தெரியாமல்.

ராதா கையில் ஒரு பையோடு அமர்ந்து இருந்தாள்.

அதில் அடங்கிய பொருள் அனைத்தும் இரண்டு வருடம் முன் கண்ணன் கொடுத்தது.

ஒரு நோக்கியா போன், சிம்மின் நெம்பரின் கடைசி நெம்பர், அவளது பிறந்த தேதி, மாதம் வருடம் மற்றும் பிறந்த மணியில் முடிந்திருக்கும்.

***2602958, அவளிடம் மட்டுமில்லை அவனிடத்திலும் இதே போல ஒரு சிம் உண்டு முன் நெம்பர் மட்டும் மாற்றி இருக்கும்.

பழைய நினைவுகளுக்கு பயணம் செய்யத் துவங்கினாள்.

அவளது பிறந்த நாளுக்கு ஒரு பெரிய பார்சல் வந்தது.

ஆசையாக பிரிக்கும் போது மாதவன் அழைத்தான்.

"என்ன பார்சல் வந்திடுச்சா?"

"இல்லையே... என்ன பார்சல்"

"ஏய் நடிக்காதடி உன் குரலின் வேறுபாட்டை என்னால் கண்டுபிடிக்க முடியும்"

"சரி சரி அறிவாளின்னு ஒத்துக்குறேன்" என்றவள், கிப்டை பிரிக்கத் துவங்க.

"ஏய் ராதை பிரிக்காத"

"ஏன்டா கையில் இவ்வளவு பெருசா கொடுத்துட்டு பிரிக்காதன்னு சொல்லிட்டு இருக்க"

"இன்னைக்கு நான் மட்டும்தான் பேசுவேன், பாப்பா அமைதியா இருக்குமாம்"

"சரிங்க சார்"

"முதல்ல விடியோ கால் வா"

"ஐயோ வீடியோ கால் ஆ!"

"என்ன சாக்கு அதிகமா இருக்கு"

"அது வந்து... இன்னும் ரெடியே ஆகலை, இப்போதான் தூங்கி எழுந்தேன்"

"சரி... நான் தானே பரவாயில்ல விடியோ கால் வா"

வீடியோ காலுக்கு வந்தவள் முகத்தை காட்டவில்லை.

"ஓ... மியோவ்"

"என்ன"

"உங்க திருமுகத்தை ஒரு முறை காட்டுங்கோ... அத்தானுக்கு காட்டுங்கோ"

"டேய் என்ன நீ உன்னை எங்கயோ இமேஜின் செஞ்சி வச்சி இருந்தேன். நீ என்னான்னா வடிவேலு கணக்கா பேசிட்டிருக்க"

"முகத்தை காட்டு"

"மூஞ்சி கூட கழுவலையே"

"அட முகத்தை காட்டி என் ராதையில்ல"

மெதுவாக ராதா ஸ்கிரினில் வர.

"ஏய் பொய்தானே சொன்ன"

"என்னான்னு?"

"அதான் ரெடி ஆகலைன்னு"

"என்ன சார் கலாய்க்கிறிங்களா?"

"இல்லையே முகம் பாரு பளிச்சின்னு இருக்கு ரசகுல்லா போல சாப்டான கன்னங்கள்... சோன்பப்டி போல முடி.. கோழி கண்ணு"

"போதும் வர்ணிச்சது இப்போ பிரிக்கட்டா" பெட்டியை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டு இருந்தாள் ராதா.

"இரு அதுக்கு முன்னாடி என்னை பத்தி ஏதோ தவறா புரிந்துஞ்சிக்கிட்டேன்னு சொன்னியே அது என்ன அது சொல்லிட்டு தாராலமாக, உன் கிப்ட் பிரிக்கலாம்"


"அதுவா முதல்ல கேட் கிட்டதான் பார்த்தேன், உன்னை பார்த்ததும் உன் மூக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிடுச்சி"

கண்ணா தன் மூக்கை தொட்டு பார்க்க.

"உன் மூக்கை கிள்ளனும்'ன்னு தோணுச்சி"

"அப்புறம்..." கண்ணா கன்னத்தில் கை வைத்து அவளிடம் கேட்டான்.

"அதுக்கு அப்புறம்... பார்க்கவே டெரரா இருந்திங்க, வாய்ஸ் வேற கரகரன்னு இருந்ததா டெரர் பீஸ்ன்னு நினச்சிக்கிட்டேன்"

"அப்புறம்"

"என்ன கதையா சொல்லிட்டிருக்கேன்... பிளாஸ் பேக் ஓவர்"

"சரி இப்போ பிரி"

"அதென்ன டைமிங்"

"நீ பிறந்த டைம்.. 8 மணி 5 நிமிடம் 7 நொடி"

"உனக்கு எப்படி தெரியும்"

"உன் பிரண்ட் கிட்ட உசார் செஞ்சேன்"

"பிராடு பையா..."

கிப்டை பிரித்தவள் கைக்கு ஒரு செல் போன் கிடைத்தது.

"என்னாடா மஞ்ச கலர் நோக்கியா..." கையில் எடுத்தும் ரிங் வந்தது.

"ஏதோ கால் வருது எடுத்து பேச"

"ஏய் மியோவ்"

"வீடியோ காலில் இருந்தவனிடம் டேய் நீ ஒரு நிமிசம் இரு... எவனோ பொறுக்கி போன் பன்றான்"

"என்னா பொசுக்குன்னு பொறுக்கி என்று சொல்லிட்ட அது நான் தான்"

"இது உன் நம்பர் இல்லையே?"

"ஆமா புதுசு, அந்த நம்பர் பாத்து எதும் தோணலையா?"

"என்ன ஒன்னும் தோனலையே அடியே மக்கு பாப்பா... உன் டூப்லிக்கேட் பர்த்து டே"

"அட ஆமா இல்ல.."

"ஆமா... அறிவு எப்படி நம்பர் கிடச்சது"

"கொஞ்சம் அலச்சலில்தான் கிடைச்சது"

"நீ இவ்வளவு பாசம் வச்சி இருக்குறது எனக்கு பயமா இருக்கு" கண்கலங்க ராதா சொல்ல.

"தங்கக்குட்டிக்கு என்ன பயம்"

"என் கூட, இருப்பல்ல... பாதியில் போக மாட்டியே, நீ தான் என் பெஸ்ட் பிரண்ட், என் பிரண்ட் எனக்கு என்கூட எப்பவும் இருக்கனும்"

"பிரண்டா இல்ல புருஷனா கூட இருக்கலாம்"

"விளையாடாத கண்ணா" ராதா அடுத்த பொருளை எடுத்து பார்த்தாள் ஒரு கருப்பு வெள்ளை கலந்த டாப்ஸ் இருந்தது"

"இது என்ன வரிக்குதிரை போல" டாப்சை எடுத்து தன் மேல் வைத்து காட்டினாள்.

அந்த பக்கம் அவனும் ஒரு வரிக்குதிரை போல சட்டையை வைத்து காட்ட.

"டேய் ரசிகன்டா..." அவனது செக்சனை மெச்சினாள்.

"கருப்பு தான் தேடினேன் கிடைக்கல, அதான் இது நெக்ஸ்ட் டைம் பிளாக் வாங்கிக்கலாம்"

"சரி... ஒன்னா போய் வாங்கலாம் இண்ணா"

"சரி டா" சிறு சிறு பொம்மைகள் பொருட்கள் என குவிந்து இருந்தது அந்த பெட்டியில்.

பழைய நினைவை மீட்டு முடித்தவள் சத்தம் கேட்டு வெளியே வந்தாள்.

"சொல்லு ஊரில் என்ன பேசிங்கறாங்க" கிருஷ்ணா கனிரென கேட்க.

"நீங்க யூஸ் செஞ்சிட்டு வேற இழிச்ச வாயன் தலையில கட்ட பாக்குறிங்கன்னு, கடைசியா பொண்ணு பாத்துட்டு போன அந்த அம்மா ஊர் பூரா சொல்லிடுச்சி"

"சரி வெளி ஊரில் மாப்பிள்ளை பாருங்க""


"சரிங்க சார்" விட்டால் போதும் என்று அந்த புரோக்கர் ஓடிவிட்டான்.

"கிருஷ்ணா...

"ராதா ஒன்னுமில்லை. நீ உள்ள போ" ராதாவை சமாதானப் படுத்தும் நிலையில் அவன் இல்லை.

அவனுக்கே ஒரு ஆறுதலுக்கு தோள் தேவைப்பட்டது.

ஒரு முடிவு எடுத்த ராதா... வெளியே போய் வரேன் என்று கிளம்ப, வழி முழுவதும் காதலர்கள்.. புதுமனை தம்பதிகள்... குழந்தையோடு செல்லும் கணவன் மனைவி, வயதான தம்பதியர்கள் என வழி எங்கும் நிறைந்திருக்க.

அவளுக்கும் ஆசை வந்தது தனக்கும் ஒரு குடும்பம் வேணும் பாசமாக பார்த்துக்க கொள்ள கணவன் வேண்டும். ஆசையாக வளர்க்க சிறு குழந்தை வேண்டும், அதே சமயத்தில் கிருஷ்ணாக்கும் ரகுவரன் மாமாக்கும் பாரமாக இருக்கக் கூடாது.

மக்கிபோன காதலை நினைத்து ஒரு புரயோஜனமும் இல்லை. தன்னையும் தன் நிலைமையும் புரிந்து கொண்டு திருமணம் செய்ய முன் வருபவனை கட்டிக்கொள்ள... மனதலவில் தயாராக இல்லாவிட்டாலும், மனதை தேற்றும் முயற்சியில் ஈடுபட்டாள்.

வீட்டுக்கு வந்தவள்... கிருஷ்ணா கையில் இருந்த புகைப்படத்தை பார்த்து.

"என்ன இது" கிருஷ்ணாவிடம் கேட்டாள்

"மாப்பிள்ளை போட்டோ"

"ம்ம்ம்"

"வர சொல்லட்டா இல்லை கொஞ்ச நாள் போகட்டுமா?"

"உன் இஷ்டம் மாமா" என்றவள் கையிலிருந்த பிரேஸ் லெட்டை கழட்டினாள், அவன் வாங்கித்தந்த தோடு, டாப்ஸ் அனைத்தையும் ஒரு பையில் நிரப்பியவள். கப்போர்டில் கடைசி அறையில் உள்ளே வைத்துவிட்டு.

"உன்னுடைய எந்த நினைவுகளும் எனக்கு வேண்டாம் கண்ணா உனக்கு அழாக உன்னை போலவே நிதானமா இருக்க பொண்ணு கிடைப்பா. நீ எதிர் பார்த்த எதும் இல்லை, அதானே விட்டுட்ட. உனக்கு வேணும்ற போது கூடவே வச்சிக்கிட்ட, வேண்டாம் என்றதும் தூக்கி போட்டு உடச்சிட்ட. என்னுடைய கண்ணீர் உன்னை சுடவில்லையா? என்னுடைய கதரல்கள் கேட்கவில்லையா. உன் முன் தானே காயம் எற்படுத்திக்கொண்டு ரத்தம் வடிப்பதை கண்டு ஒரு பரிதாபம் கூட வரவில்லையா. அவ்ளவு இழிவானவளா நான்?" கடைசி துளி கண்ணீரை துடைத்து காற்றில் சுண்டிவிட்டவள்.

இரு தினங்களில் ஒருவன் வந்தான், மாப்பிள்ளைக்கு முன்னதாகவே ஒரு அளவுக்கு சொல்லிவிட்டுதான் வரவைக்கபட்டான்.

ராதா எளிமையான ஒரு புடவை கட்டி இருந்தாள்.

சாதாரணமாக பேச துவங்கியவன் பேசி வக்கிரமாக மாறியது.

"அப்புறம் ராதா எத்தனை வருடம் லவ்"

"ஆறு வருடம்.. பிரேக்கப் ஒரு வருசம் முன்னாடி ஆகிட்டு"

"ஓ... கால்குலேட் செஞ்சி பார்த்து... முதல் வருசத்தில் இருந்தேவா"

"ஆமா" கிருஷ்ணாக்கு தான் சங்கடமாக போனது, முடிந்து போன அத்தியாயத்தை எதர்க்கு கேட்கவேண்டும், முன்னவே சொல்லிட்டோமில்ல.

ராதாவின் தெளிந்த முகம் சிறிது சிறிதாக மாறியது.

"ராதா நான் இப்படி கேட்குறேன்னு தப்பா நினச்சிக்காதிங்க எனக்கு ஒளிவு மறைவு இல்லாமல் இருக்கனும்"

"ம்ம்ம்"

"எந்த வகையான காதல் உங்களோடது"

"புரியலை" ராதா கோபத்தை அடக்கிவைத்துக் கொண்டு கேட்டாள்.

"பார்க்காத காதல்... பார்க்கும் காதல்... அது போல"


"பார்க்காத காதல் தான்"

"நம்ப முடியலையே" ராதா அவனை முறைக்க.



"சரி... எப்படி அவரை தெரியும் உங்களுக்கு?"

"என்னோட சீனியர்"

"அப்போ ஒருவருசம் பாத்துட்டு தான் இருந்திருப்பிங்க ரைட்"


"சரி கம்யூனிக்கேசன் எப்படி"

"போனில்"

"நார்மல் காலா வீடியோ காலா?"

"இரண்டும்"

"எதனால பிரேக் அப் ஆகிடுசாசி"

"சரியான ரீசன் சொல்லலை அவங்க"

"சரியான ரீசன் சொல்லைனா பரவாயில்ல அவங்க சொன்ன ரீசன் சொல்லுங்க"

"என்னோட பிடிவாதம் பிடிக்கலையாம், என் அழுகை நான் அடிமையா அவங்களை வச்சி இருந்ததா பீல் செய்யறதா சொன்னாங்க"



"சரி.. கிப்ட் எக்ஸ் சேஞ் எதாவது"

"ம்ம்ம்ம்"

"எனக்கு உங்களை கல்யாணம் செய்துக்கறதில் எந்த பிரச்சனையும் இல்லை, பட் சில கண்டிசன் இருக்கு"

"என்ன கண்டிசன்ஸ்"

"நீங்க அவன் வாங்கி தந்த திங்க்ஸ் எரிச்சிரனும், லைப்பில் எப்போதும் அவனை காண்டாக்ட் செய்ய கூடாது. அப்புறம் எனக்கு அடங்கி போய் பழக்கமில்ல... எனக்கு அடங்கி வீட்டிலேயே இருக்கனும். அப்படின்னா எனக்கு உங்க வீட்டு பெண்ணை பிடிச்சிருக்கு கிருஷ்ணா"

'இவனுக்கு இவளை கட்டி வைப்பதற்க்கு கிணத்தில் தள்ளி சாகடிக்கலாம்'

"அப்புறம் ஒரு விஷயம் கேட்க மறந்துட்டேன்"

'இன்னுமா முடியலை' ராதா கடுப்போடு அமர்ந்திருக்க.

"ஆர் யூ விர்ஜின்"

ராதா அதிர்ச்சியில் கண்களை விரிக்க.

கிருஷ்ணா விட்ட குத்தில் அவனது இரண்டு பல் சிதறி விழுந்தது
 

Bindusara

Well-known member
Wonderland writer
22

"அவ் டேர் யூ என் மேலையே கையை வைப்ப"

ரத்தம் வடிய அவன் கத்த.

"ஏன்டா பொறுக்கி பயலே அதான் விவரமா சொன்னேனில்ல, இப்படி இப்படி ஆகிடுச்சின்னு. பிடிக்காதவன் மூடிட்டு உன் வீட்டில் இருந்திருக்கனும். மாட்டை வாங்க போரவன் போல கேட்ட சரி, எங்க வீட்டு பெண் பேரில் தப்பு இருக்கு கேள்வி எழத்தான் செய்யும்ன்னு விட்டுட்டேன். ஏன்டா ஒரு பொண்ணு கிட்ட எப்படி பேசனும்னு தெரியலை"

"ஆறு வருசம் லவ் பன்றவ தப்பு செஞ்சி இருக்க மாட்டான்னு என்ன நிச்சயம்"

"டேய்..." கிருஷ்ணா அழைத்த அழைப்புக்கு நாலு செக்கியூரிட்டி உள்ளே வர.

"இவனை துவச்சி காயப்போடுங்கடா"

அடி வெளுத்துவிட்டார்கள் பெண் பார்க்க வந்தவனை.

ராதா சிலைபோல அமர்ந்து இருந்தாள்.

"ராதா... இனி வேண்டாம் நீ இங்கவே இருந்திடு தங்கம், வேணா இந்த கல்யாணமே வேண்டாம்"

"கிருஷ்ணா நான் எதும் தப்பு பண்ணலை டா, நேரில் கூட ஒரே நாள் தான் பேசி இருக்கேன்" இதையே திரும்ப திரும்ப சொன்னால்.

"என் தப்புதான் பொண்ணா அடங்கி இருந்தா அவனுக்கு என்னை பிடிச்சி இருக்குமில்ல. நோ சொல்லிட்டு என் வேலை பார்த்து இருக்கனும். கண்டவன் எல்லாம் என்னை விர்ஜின்னான்னு கேட்கரான்" பைத்தியம் பிடித்தவள் போல உளறினாள்.

"எனக்கும் ஆசை இருக்குமில்ல எதுக்கு அது எல்லாம் சிதைந்தது. எதுக்கு காதல் மயக்கத்தில் வச்சி இருக்கனும். என் கேரக்டர் முதலிலே தெரியுமில்ல அப்பவே விட்டு போயிருக்கலாமில்ல. எனக்கு முன்னவே தெரியும் இவன் போயிடுவான்னு, தெரிந்தும் அவன் ஆசை வார்த்தைக்கு மயங்கியது என் தப்புதான்" தேம்பி அழுதவள்.

"எனக்கும் நிறைய டிரீம்ஸ் இருந்தது மாமா, காலேஜ் போய் நல்லா சைட் அடிக்கனும்னு. எந்த நேரத்தில் அவனை பார்த்தேனோ அப்பவே நான் வேற யாரையும் சும்மா கூட பார்க்கலை. நான் அவனை பார்த்தே இருக்க கூடாது மாமா, என் தப்பு தான்"

"நான் கெட்ட பெண்ணா போகலை மாமா"

"இல்லை தங்கம் நீ எங்க வீட்டு தங்கம் டா"

"இல்லை மாமா... பிரேக் அப் அப்போ கஷ்டப்பட்டாலும், இரண்டு நாள் முன்னாடிதான் என்னை மாத்திக்க துவங்கி.. வேறு வாழ்க்கைக்கு தயாரானேன், மாமா இப்போ பாருங்க எனக்கு எவ்வளவு அசிங்கம் எனக்கு இனி கல்யாணமே வேண்டா உங்க கூடவே இருந்துக்கிறேன், இல்லை... உங்க வாழ்க்கையும் பாலா போயிடும் நான் தனியா போய்டுறேன்" பைத்தியம் போல எழுந்து வேகமாக போனவள்.

பையை எடுத்து... துணிகளை நிரப்ப துவங்கினாள்.

அவளது கையை பிடித்து தடுத்தவன், "ராதா என்ன செஞ்சிட்டு இருக்க"

"இல்லை என் ஆசை மண்ணா போச்சி என்னை லவ் பண்ற ஹஸ்பன்ட் வந்து... எனக்குனு கணவன் குடும்பம்'ன்னு இருக்கனும்னு நினைத்தேன், ஆனா எதுமே இல்லை. என்னை யாருக்கும் பிடிக்காதில்ல கனவில் கூட நடக்காதில்லை அது எல்லாம்"

"நடக்கும்டா கவலை படாத நல்ல பையனா பார்க்கலாம்"

"நல்ல பையன் பார்க்க நான் நல்ல பொண்ணு இல்லையே மாமா" தரையில் சரிந்து அமர்ந்தவள் நெஞ்சத்தில் வலி அதிகமாக இருந்தது.

"ராதா என்னாச்சி எந்திரி"

"மன்னிச்சிடு மாமா... உங்க இரண்டு பேருக்கும் கெட்ட பெயர் வாங்கி கொடுத்துட்டேன்"

"தங்கம் அப்படி எல்லாம் இல்லைடா" கிருஷ்ணாவும் அவள் அருகில் உட்கார.

தன்னைத் தானே அறைந்து கொண்டாள்.

"டேய் அது எல்லாம் ஒன்னுமில்ல ஊரு ஆயிரம் பேசும் அதை எல்லாம் நினைச்சிட்டு இருக்காத தங்கம்"

"எனக்கு ஒழுக்கமில்லை'ன்னு தானே எல்லோரும் பேசிப்பாங்க"

"ஏவன் பேசுவான் யாருக்கு தைரியம் இருக்கு உன்னை பத்தி பேச எல்லோரையும் அடிச்சி துவச்சிட மாட்டேன்"

"எவ்வளவு பேரை மாமா அடிப்ப?.. பத்துபேர்... நூறு... ஆயிரம்... ஒரு ஊரே என்னை பத்தி பேசினா அடிப்பியா"

"எனக்கு என்ன சொல்வதுன்னே தெரியலை ராதா, நீ எங்க கிட்ட முன்னவே சொல்லி இருந்தா எதாவது தடுத்து இருக்க முடியும்"

"கல்யாணம் செய்ய தோணும் போது சொல்லலாம்ன்னு நினைத்தோம், ஆனா அந்த எண்ணம் வருவதற்க்குள், அனைத்தும் முடிஞ்சிடுச்சி"

"சரி முடிஞ்சதை விடு அடுத்து என்ன செய்யப் போற"

"இல்லை மாமா எனக்கு எதும் தோணலை.. நான் தனியாவே இருந்துக்கிறேன்"

"இல்லை அப்படி எல்லாம் உன்னை விட முடியாது"

"உனக்கானவன் கண்டிப்பா பிறந்து இருப்பான் மா"

ராதா பலமாக ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தாள்.

"இல்லை... எனக்காக பிறந்தவன் என்று நினைத்தவனே போயிட்டான் இதுக்கு மேல... இனி ஒருத்தன், போங்க கிருஷ்ணா வேறு எதாவது வேலை இருந்தா பாருங்க"

"ராதா... நம்ம கல்யாணம் செஞ்சிக்கலாமா"

"ஹாஹா..." கண்ணீல் கண்ணீரோடு ஒரு சிரிப்பு சிரித்தாள் அதனின் வலி கிருஷ்ணா மனதில் ஒரு அதிர்வு ஏற்பட்டது.

"ராதா இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்"

"ஹா...ஹா ஏன் கிருஷ்ணா இத்தனை வருஷம் உன்னை அடிமையா வச்சி இருந்ததுக்கே இன்னும் எனக்கு குற்ற உணர்ச்சி போல, அதுக்குள்ள அடுத்து ஒரு உறவை ஏற்படுத்த பார்க்குற"

"யார் சொன்னா நான் உனக்கு அடிமையா இருந்தேன்னு"

"என்னை சீக்கரம் கல்யாணம் செய்து துரத்திட்டு உன் லைப் வாழத்தானே நீ பிளான் போட்டு இருக்க"

"ராதா... அது காமெடிக்கு சொன்னது, நீ பேச்சை மாத்தாத நான் கேட்டதுக்கு பதில் சொல்லு, கல்யாணம் செஞ்சிக்கலாம். உனக்கு பிடிச்சா சேர்ந்து வாழலாம் இல்லாட்டி இப்படியே இருக்கலாம். உன்னை எந்த விதத்திலும் நான் கட்டாயப்படுத்த மாட்டேன்"

"இதுக்கு ஒரு நாளும் நான் சம்மதிக்க மாட்டேன்"

"ராதா இது தான் என் கடைசி முடிவு, இதுக்கு நீ சரி சொல்லுரவரை நான் சாப்பிட மாட்டேன்" கிருஷ்ணா அப்படியே தரையில் படுத்துவிட்டான்.

"டேய் நீ சொன்னா நான் பயந்திடுவேனா?"

"நான் உன்னை பயம்படுத்த சொல்லலை என் முடிவை சொன்னேன்"

"உன் இஷ்டம், நான் பிரியாணி ஆர்டர் செய்யப் போறேன் வரியா சாப்பிட"

"நீ ஓக்கே சொல்லும் வரை நான் பச்சை தண்ணி கூட குடிக்க மாட்டேன்"

"அதையும் பார்க்கலாம் பிரியாணி ஸ்மெல்லும் பெப்பர் சிக்கன் வாசமும் வந்தது. இந்த வீர வசனம் எங்கே போகப்போவுது பார்ப்போம்"

கிருஷ்ணாக்கு காது கேட்கும் படி... வேலைக்கார அண்ணாவை அழைத்து, பெட் ரூமில் ஒரு பார்வை வைத்துக் கொண்டே, "அண்ணா... இரண்டு புல் மட்டன் பிரியாணி பாய் கடையில் வாங்கிட்டு அப்படியே, பெப்ர் சிக்கன் நல்ல கடையில் வாங்கிக்கோங்க. அப்புறம் உங்க குடும்பத்துக்கு சேர்த்து வாங்கிக்கோங்க.

"சரி மா"

மனதில் உள்ள வலி என்னும் குரல் அழுதுகொண்டே இருந்தாலும் ராதா அதனை அடக்கிக்கொண்டு கிருஷ்ணாவை சாப்பிட வைக்க பாடுபட்டாள்.

"அப்பாடா எப்போ பிரியாணி வரும்ன்னு இருக்கு..." கிருஷ்ணாக்கு காது கேட்கனும் என்றே கத்தி சொன்னாள்.

'என்ன இவன் கண்டுக்கவே மாட்டங்குறான், பக்கம் போய் வெறுப்பேத்துவோம்' என்று எழுந்தவள். பக்கத்து அறையில் இருந்து அவனது பேவரைட் டி சர்ட்டை எடுத்து வந்தாள்.

"டேய் இங்கே பாரு உன் டீ சர்ட், இப்போ மட்டும் இந்த மவுன விரதத்தை விடலை இதை நான் போட்டுப்பேன். இல்லை தெரு நாய்க்கு போட்டு விட்டுவேன்"

கிருஷ்ணாவிடம் இருந்து பதிலே வரவில்லை.

"அம்மா சாப்பாடு வாங்கிட்டு வந்துட்டேன்"

ராதாக்கு கிருஷ்ணாவை எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை. அவன் வாழ்க்கையையும் பாலாகாமல் காக்க நினைத்தாள்.

"சரி அண்ணா... நீங்க போய் சாப்பிடுங்க"

"மாமா எந்திரி சாப்பிடலாம்" அவன் அருகில் உட்கார்ந்தவள் உழுக்கினாள் அவனை.

"வேண்டாம், விடு"

"மாமா பிளீஸ் சாப்பிடு"

"சொன்னது சொன்னது தான்" கிருஷ்ணா தரையில் கவிழ்ந்து அடித்து படுத்துக்கொள்ள.

ராதாவும் அவனை எவ்வளவோ சாப்பாட்டை காண்பித்து வெறுப்பேற்றியும் அசரவில்லை. ஆனால் மனதில், ' ஐயோ... மட்டன் பிரியாணி, பெப்பர் சிக்கன் வாசம் இழுக்குதே' வாயில் எச்சை ஊறுவதைதான் அடக்க முடியாமல் கிருஷ்ணா தவித்தான்.

'இவளை... சரியான இம்சை டி, ஆனா இந்த முறை உன்னை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்'

அவனை வெறுப்பேற்ற துவங்கயவளால்... சிறிது உணவு கூட சாப்பிட முடியவில்லை தட்டை எடுத்து ஓரம் வைத்தவள்.

"சாரி கிருஷ்ணா... கொஞ்சமா சாப்பிடுடா"

"சொன்னா புரிஞ்சிக்கோ ராதா எனக்கு வேண்டாம்"

"உனக்கு மட்டும் தான் கோபம் வருமா எனக்கும் வரும் நீ சாப்பிடும் வரை நானும் சாப்பிட மாட்டேன்" அவள் ஒரு ஓரம் படுத்துக்கொண்டு அவன் முதுகில் காலை வைத்து உதைத்துக் கொண்டு இருந்தாள்.

"கிருஷ்ணா பசிக்குது"

'இந்த நேரத்துக்கு எந்திரிச்சி ஊட்டி விட்டு இருக்கனுமே'

இப்படியே சில மணி நேரம் ஆனது ராதா நல்லா தூங்கிவிட்டாள்.

கிருஷ்ணா எழுந்திரிக்க... சட்டை சற்று மேவலேரி பெண் என்பதை மறந்து பப்பரப்பேவென படுத்திருந்தவள் மேல் போர்வையை எடுத்து போர்த்த போகும் போது.

"கிருஷ்ணா பசிக்குது" காது கேட்காதவன் போல பெட்சீட்டை தூக்கி போட்டுவிட்டு போயிட்டான் கிருஷ்ணா
 

Bindusara

Well-known member
Wonderland writer
23 காதலன்!

ச்சே எப்படி... இவனை சமாளிப்பது, வயிறு வேற கத்துது.

அந்த பிரியாணியையும் சிக்கனையும் வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டு இருந்தாள்.

சாப்பாட்டை விட கிருஷ்ணாவை சமாதானப் படுத்துவதுதான் முக்கியம், என்று அமைதியாக பிரியாணியை வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டு இருந்தாள்.



கிருஷ்ணா... அருகில் வந்தவன்.

“சாப்பிடுறது என்றால் இப்பவே சாப்பிட்டுக்கோ”

“எனக்கு தேவையில்லை, உனக்கு வேணும்னா நீ சாப்பிட்டுக்கோ”

“சரி நாய்க்கு போட்டுடறேன்”

பிரியாணியையும் சிக்கனையும் எடுத்துக்கொண்டு சமையல் அறைக்குள் போனான்.

“பாவி பையன் எடுத்துட்டு போய்ட்டான், வடப் போச்சே, பசிக்குதே இப்போ என்ன செய்யலாம்” கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்.

சிறிது நேரத்தில் வெளியே வந்தவன், “ராதா எந்திரி”

“எனக்கு பசி மயக்கம் எழ முடியலை” காலை ஆட்டிக்கொண்டே படுத்து இருந்தாள்.

“எழு டா” அவளை கைபிடித்து எழுப்பி விட்டவன் கையில் தட்டோடு தரிசனம் தந்தான், அதை பார்த்தவுடன் ராதாவின் கண்கள் மின்னியது.

“இந்தா சாப்பிடு”

‘ராதா உன் வீராப்பை விட்டுடாத, இவன் உன்னை எப்படி கடுப்பு கிளப்பினான், இவனை விடக்கூடாது’

“உனக்கு வேணுமா வேண்டாமா?”

“ஒன்னும் வேண்டாம்”

“சரி நான் சாப்பிட்டுக்கிறேன்” சூடு செய்து வந்து பிரியாணியையும் பெப்பர் சிக்கனையும் ரசித்து ருசித்து சாப்பிட்டான்.

‘கடவுளே நான் என்ன பாவம் செஞ்சேன், என் சிக்கன்... என் ஆட்டு பிரியாணி, அச்சோ போச்சே... போச்சே. காட்டுப் பன்னி போல சாப்பிட்டுட்டு இருக்கான். ஒரு பொட்டலம் காலி, அடுத்ததை பிரிக்கிறானே, என் பிஞ்சி மனசு வெடிச்சிடுச்சே’ வாயில் எச்சை ஊர அவனை பார்த்தாள்.

“வேணுமா”

வேணும் வேணா எல்லா பக்கமும் தலையை ஆட்டினாள் ராதா.

‘இங்க இவன் சாப்பிடுவதை பார்த்தால் இதையம் வெடிச்சிடும்’ ராதா எழுந்து போக பார்க்க.

கைபிடித்து தடுத்தவனை முறைத்து பார்த்தாள், “கையை விடு இப்போ என்ன வேணும் உனக்கு”

“சாப்பிட்டுட்டு போ”

‘ரோசம் முக்கியமா, சாப்பாடு முக்கியமா? சாப்பாடு தான்’ ஒரு முடிவுக்கு வந்தவள்.

அவன் அருகில் அமர்நத அவளுக்கு ஊட்டி விட ஆரம்பித்தான்.

இருவருக்கும் இடையில் அமைதி மட்டுமே, பேசாமல் இருந்தாலும், பாசமாக ஊட்டி விட்டுக்கொண்டு இருந்தான்.

தட்டு காலியாகும் வரை தொடர்ந்தது இவர்களின் அமைதி.

“போதுமா”

“இன்னும் வேணும்”

“வெளியே போலாமா சாப்பிட”

“சரி” என்று எழுந்தாள்.

“இப்படி இல்லை”

“வேற எப்படி சுடிதானே போட்டு இருக்கேன்”

“இனி இப்படி இல்லை, காலேஜ்க்கும்... ஊர் சுத்த போகும் போது எப்படி போவியோ அப்படி தான் வீட்டிலையும் இருக்கனும்”

“கடைக்கு போறதுக்கு எதுக்கு ரெடி ஆகனும் வா போலாம் உன்ட நிறைய பேசனும்”

“நீ ரெடி ஆகிட்டு வா”

“சரி” பாத்ருமிற்க்குள் நுழைந்தவள், மனம் முழுவதும் இருந்த பாரத்தை இறக்கி வைத்தாள்.

சுடு தண்ணீரில் குளித்தவள்... பழைய ரதியாக வெளியே வந்தாள்.

கண்ணா இல்லை என்றால் என்ன, அவன் வாங்கித்தந்த ஜீப்ரா டாப்சை போட்டவள்... கொண்டையிளிருந்த முடியை கழட்டி விட்டவள், கண்ணுக்கு மை பூசி லைட்டாக லிப்ஸ்டிக்.

அவள் முகத்தை பார்க்க அவளுக்கே ஒரு காண்பிடன்ட் வந்தது.

“இன்று எந்த பக்கி என்னை நல்லா இல்லைன்னு சொல்லும், அழகிடி ராதா நீ. அதும் கன்னத்தில் இருக்கும் மச்சம், ப்பா, ழகு அள்ளுது” தனக்குத்தானே உற்ச்சாகப் படுத்தியவள் கிருஷ்ணா கூட வெளியே வந்தாள்.

“கிருஷ்ணா எங்கே போறோம்?”

“அது சீக்கரேட்” ஹெல்மெட் ஒன்றை தூக்கி ராதா புறம் விச.

சரியாக கேட்ச் பிடித்தவள், “கிருஷ்ணா நம்ம லாங் ட்ரைவ் போகப்போறோம் சரியா”

“அதே தான் செல்லம், சீக்கரம் வா”

“டேய் ஸ்னேக்ஸ் எடுத்துக்கலையே”

“எடுத்தாச்சே” கிருஷ்ணா படியில் இருந்த பையை சுட்டிக்காட்டினான்.

“கிருஷ்ணா கிருஷ்ணா தான், லவ் யூ டா மாமா பையா”

“என்ன பேசிட்டே இருக்க போறியா இல்லை... வரதா ஐடியா இருக்கா”

“இதோ வந்துட்டேன்”

இருவரும் கூலர்ஸ் போட்டுக்கொண்டு ஊர் சுற்ற கிளம்ப.

அந்த நாள் ராதா அனைத்தும் மறந்து, இளகிய தனது மனதை பழையபடி இறுக்கமாக மாற்றியது.

‘ஒருத்தனுக்கு நம்மளை பிடிக்கலைனா என்ன, ஏன் ஆயிரம் பேருக்கு நம்மலை பிடிக்கலனா கூட பரவாயில்லை நம்மை பிடித்த இரண்டு பேர் கூடவா இருக்க மாட்டாங்க அவங்களுக்காக நம்ம சந்தோஷமா இருக்கனும், அவ்வளவு தான் வாழ்க்கை. அந்த இரண்டு பேர் சிரிப்பதற்க்காக... என்ன வேணும்னாலும் செய்யலாம். ராதா வாழ்க்கையில் இந்த இரண்டு பேர் ரகுவரனும் கிருஷ்ணாவும்தான்.

சின்ன டிரிப் முடித்ததும் வீட்டை நோக்கி இருவரும் வர.

இறங்கும் போது ராதா கிருஷ்ணாவிடம் திரும்பி நின்று மாமா... “கல்யாணம் செஞ்சிக்கலாம்” என்றவள் தன் அறைக்குள் நுழைந்து கொள்ள.

கிருஷ்ணா அடுத்த நாளே கல்யாணம் வைக்க முடிவு எடுத்தான், நாட்கள் கடத்தினாள் மனது மாறிட்டா அவளை
திரும்ப மாற வைப்பது ரொம்ப கஷ்டம்.

ரகுவரனுக்கு செய்தி அனுப்பிவிட்டு சிம்பிலாக கோவிலில் கல்யாணம் நடத்த இருவரும் கிளம்பினார்கள்.

“ராதா அழகா இருக்க”

“தேங்க் யூ கிருஷ்ணா” சிறிது நேர பயணத்துக்கு அப்புறம் கோவில் வந்தது.

இருவரும் ஜோடியாக நடந்து சென்றார்கள்.

மணமேடையில் உட்கார்ந்து புகை சூழ மந்திர முழக்கங்களோடு கிருஷ்ணா கையில் தாலி எடுத்து கொடுக்க... கிருஷ்ணா ராதா கழுத்தில் தாலி கட்ட நெருங்கும் போது.


“ராதா... ராதா”

யோசனையில் ராதா... தோட்டத்தில் இயற்க்கையை ரசித்துக்கொண்டு சுற்றித் திரிந்தவளை, உசுப்பியது ஒரு குரல்.

“இங்கே என்ன செய்யற ராதா” மாதவக் கண்ணன் கேட்க.

“மாடு பார்க்க வந்தேன், அப்படியே இந்த பக்கம் வந்துட்டேன்”

“சரி வா வீட்டுக்கு போலாம், அம்மா உன்ட சரியாவே பேச முடியலைன்னு சொன்னாங்க”

“ஆன் வரேன்...”

“அம்மா உனக்கு பிடிச்ச தக்காளி சாதம் செய்து வச்சி இருக்காங்க”

“சரி...” ராதா சாதாரணமாக சொன்னாள்.

‘என்ன எக்சைட்மென்ட் ஆவன்னு பார்த்தா இப்படி சப்புன்னு பேசுறா. நிறைய மாறிட்டா... இல்லை என் வார்த்தைகளும் என் அமைதியும் உன்னை மாத்திடுச்சி. சாரி ராதை, இனியாவது நீ சந்தோஷமா இருக்கனும், கிருஷ்ணா கூட சந்தோஷமா வாழுவ. அதை ஏதோ ஒரு மூலையில் இருந்து நான் பார்த்துட்டு தான் இருப்பேன் ராதா. நான் உன்னை விட்டு எப்பவும் பிரிய மிட்டேன் டா. உன்னை அடிக்கடி பார்த்துட்டு, தூரம் இருந்தாலும், இந்த காத்துகிட்ட நான் கேட்டுட்டு இருப்பேன், நீ எப்படி இருக்கன்னு’

“ராதா வா மா... காலையில்தான் மாதவன் சொன்னான், உனக்கு தக்காளி சாதம் பிடிக்கும்’ன்னு, இப்போ போடட்டா சாப்பிடுறியா”

“சரி அத்த...” அத்தை என்று வாய் வரை வந்ததை மாற்றினாள்.

“சரி அம்மா”

உள்ளே போய் சாப்பாடு போட்டு வந்தவர்,
“சரியாவே பேச முடியலை மா உன்கிட்ட, எதும் தப்பா நினைச்சிக்காத”

“தப்பா நினைக்க என்ன இருக்கு மா நான் சாப்பிட்டுக்கிறேன், நீங்க உங்க வேலை பாருங்க”

ராதா சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது, மாதவக் கண்ணன் அவளை பார்த்தவாறு உட்கார்ந்து இருந்தான்.

தாரகையும் அனுவும் ஓரமாக உட்கார்ந்து தாயம் விளையாடிட்டு இருந்தாங்க.

கண்களில் இருந்த கண்ணீர் வெளி வராமல் அடக்கிக்கொண்டு சாப்பிட்டாள் ராதா.

அவளது கண்ணீர் துடைக்க கை பரபரத்தாலும் அடக்கிக்கொண்டு அமர்ந்து இருந்தான்.

வேறு சிந்தனையில் சாப்பிட்டுக் கொண்டு இருந்த ராதாக்கு தலையில் ஏறிக்கொண்டது. இரும்பியவளின் தலையை தட்டி விட்டவன், தன் கையாலையே தண்ணீரை குடிக்க வைத்தான்.

அனு கோபமாக ராதாவை முறைக்க, தாராகை சோகமாக ராதாவை பார்த்தாள்.

“ஏன் அனு ராதாவை முறைச்சிட்டே சுத்துற”

“இப்போ எல்லாம் எனக்கு அவளை பிடிக்கறதே இல்லை” அனு சொல்ல.

“ஓ....” தாராகை அமைதியாக ஆகிவிட.

“தாரகை, உன்ட ஏன் அவள் பேசுவதில்லை?”

“அவளுக்கு தேவையான போது நான் எந்த ஹெல்ப்பும் செய்யலை” என்று நடந்ததை சொல்ல.

“ஓ... அவளுக்கு நடந்தது ஏத்துக்க முடியாத கஷ்டம் தான் ஆனா எனக்கு இது எல்லாம் எங்கே முடியப் போகுதோ என்று தான் பயமா இருக்கு, எங்க பாஸ் வாழ்க்கையை அந்தரத்தில் விட்டுடுவாங்களோன்னு பயமா இருக்கு”


“அப்படி எதும் நடக்காது அனு, உனக்கு ஏன் பாஸ் மேலே அவ்வளவு அக்கறை அவரை பிடிக்குமா?”

“ம்ம்ம்...”

‘என்ன ஆளு ஆளுக்கு கிருஷ்ணா பாஸை பிடிக்குமா பிடிக்காதான்னு கேட்டுட்டு இருக்காங்க’

நாளைக்கு காட்டுக்கு போரதாக முடிவு ஆனது, அனு பேசவே இல்லை.

அனு காத்திருந்தாள், இன்னும் இரண்டு நாள் எப்படிடா முடியும் என்று தவித்தாள்.

இரவு தூங்கும் முன் கிருஷ்ணாக்கு போன் போட்ட அனு, “சார் எப்போ வரிங்க?”

“என்ன அனு ராதா வச்சி செய்யுறாலா உன்னை”

“அது எல்லாம் ஒன்னும் இல்லை சார், நீங்க இல்லாம எனக்கு போர் அடிக்குது வாங்க”

“ஆல்மோஸ்ட் முடிந்தது, நாளைக்கு சாய்ந்திரம் வந்திடுவேன்... இன்னும் இரண்டு நாளில் எல்லாம் முடிஞ்சிடும்”

“நானும் அதுக்கு தான் காத்துட்டு இருக்கேன்”

“சரி பாஸ் சீக்கிரம் வாங்க”

போன் வைத்துவிட்டு தூங்க போய்ட்டாங்க.

ராதா வானத்தில் நட்சத்திரத்தை பார்த்துக் கொண்டே தூங்கிட்டா.

காட்டை சுற்றிப் பார்க்க நினைத்து கிளம்பும் நேரம் பார்த்து பக்கத்து வீட்டு பாட்டி வந்து.

“எங்க எல்லாம் கிளம்பிட்டிங்க” என்று கேட்டவாரு வாசல் படிக்கட்டில் உட்கார.

“காட்டு பக்கம் போய்ட்டு வரோம் அப்பத்தா” என்றான் மாதவன்.

“அம்மாவாசையும் அதுமாவா... நாளைக்கு போலாமில்ல”

“இல்ல அப்பத்தா, நாளைக்கு மறுநாள் ஊருக்கு போராங்க அதான்”

“காத்து கருப்பு ரொம்ப நடமாட்டம் இருக்குமே பார்த்து போங்க”

“சரி பாட்டி என்று ஆறு மணிக்கு இவர்கள் பயணத்தை தொடர்ந்தார்கள்.
 

Bindusara

Well-known member
Wonderland writer

24...காதலன்!

ஆளுக்கொரு பேக் பேக் தண்ணி மதிய உணவு ஸ்னேக்ஸ் என்று எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். வரப்போர ஆபத்து தெரியாமல், மூவரும் உற்ச்சாகமாக கிளம்பினார்கள்.

தாரகை நிறைய முறை போய் வந்ததால் நீங்களே போய்ட்டு வாங்க என்று சொல்லிவிட.

மூவரும் கிளம்பினார்கள்.

ராதா தனியாக நடந்து வர... அனு மாதவனிடம் கதை அளந்துகொண்டே வந்தாள்.

ராதா சுற்றி இருக்கும் பசுமை சூழலையும்... வித விதமான பறவைகளையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்தாள்.

'இன்னும் ஒரு நாள் தான் இருக்குமாதவன், அதுக்கு அப்புறம் நிம்மதியா மீண்டும் உன் வாழ்க்கையை வாழ போய்டலாம். இந்த அனு தொல்லை தான் தாங்க முடியலை, இதுல மேடம் கோச்சிக்கிட்டு சுத்திட்டு இருக்காங்க முடியலை இவங்க தொல்லை. கிருஷ்ணா ஐ மிஸ் யூ... சீக்கரம் வாடா' மனதில் நினைத்தவள்.. அந்த காட்டின் எல்லைக்கு போக... அங்கு ஒரு சிறு ஓடை ஓடிக்கொண்டு இருந்தது, ராதா தண்ணீயை பார்த்ததும்... இறங்கி ஆட்டம் போட.

அனுவும் மாதவனும் இன்னும் தங்களது பேச்சை முடிக்கவில்லை.

என்னதான் ராதா விளையாடிக் கொண்டு இருந்தாலும்... அவளது பார்வை முழுவதும் மாதவன்மீது தான் இருந்தது.

'கண்ணா... நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேண் எப்படி உனக்கு என்னை பிரிஞ்சி இருக்க முடியுது. உன்னை நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்காம விட மாட்டேன்டா'

அங்கிருந்து அனைவரும் கிளம்பி வரும் போது, வழக்கம் போல மாதவனும் அனுவும் பேசிக்கொண்டே முன் செல்ல, ராதா அங்கு இருக்கும் இயற்க்கை செல்வங்களை நிழல் படம் பிடித்துக்கொண்டு வந்தாள்.
முக்கால் வாசி தூரத்தை கடந்ததும்...

இரண்டு கருப்பு உருவம் ராதாவை கடத்திக் கொண்டு காட்டின் எல்லைக்கு போனது.

அனுவுடன் பேசிக் கொண்டு வந்தாலும் மாதவன் மனதில், 'ஏன் ராதா திரும்ப வந்து என் மனசில் ஆசை வளர்த்துவிட்டுட்ட, இன்னும் ஒரு நாள் தான் கண்ணா கஷ்டப்பட்டு அடக்கனும், தப்பித்தவறி கூட எதும் காட்டக் கூடாது' மனதை கஷ்டப்பட்டு அடக்கி வந்தான்.

மனதில் ஏதோ ஒரு நெருடல் மாதவனுக்கு, ராதாவை திரும்பி பார்க்க சொல்ல, ஆனால் மாதவன் தன் மனதை பெரும் பாடுபட்டு அடக்கினான் திரும்பி பார்க்கவில்லை. அந்த நேரத்தில்தான் அந்த இரண்டு உருவம் தூக்கிக் கொண்டு போனது ராதாவை.

"டேய் தடிமாடுகளா... எதுக்கு டா என்னை கடத்தி வச்சி இருக்கிங்க"

"உன்னை டார்சர் செய்ய தான்"

"என்னை எதுக்குடா டார்சர் செய்யனும்"

"இன்னுமா எங்களை யாருன்னு தெரியலை"

"டேய்... அந்த குரங்கு முக மூடியை எடுங்கடா, லூசு கடத்தல் காரங்களா"

இருவரும் திறந்து காட்ட,

"அடேய்... ஓனான் மூஞ்சி, நீ என்ன செய்யுற இங்கே, டேய் பாரின் மாப்பிள்ளை நீ இங்க என்ன செய்யுறிங்க"

"பார்த்தா தெரியலை ரிவெஞ் வாங்க கடத்தி இருக்கோம்"

"எதே ரிவெஞ்ஜா?"

"டேய் நான் என்ன டா செஞ்சேன்... ரிவேஜ் வாங்குற அளவுக்கு"

"உன்னால எங்க இரண்டு பேருக்கும் வேலை இல்லை அது தெரியுமா"

"வேலை இல்லையா?"

"ஆமா... அந்த வேலை மட்டுமில்லை, இனி எந்த வேலைக்கும் போக முடியாத அளவுக்கு பண்ணிட்டான்"

"டேய் அது சாதாரணமா கேட்டு இருந்தாவே நான் வழி செஞ்சி இருப்பேன், இந்த கிருஷ்ணாவை வச்சிட்டு என்ன செய்ய... இந்த காமெடி பீஸ்களை எல்லாம் வில்லன் ரேஞ்சிக்கு மாத்தி விட்டுட்டான்"

"நாங்க பட்ட அவமானம் என்ன தெரியுமா, பணம் இருக்க திமிரு இல்ல உங்களுக்கு, அதை எப்படி அடக்குறோம் பாரு"

"எது எங்களுக்கு பணத் திமிரா, நீங்க பேசியதை கொஞ்சம் நினைத்துப் பார்த்தா தெரியும்"

"நீ செய்யாதது ஒன்னும் நாங்கள் சொல்லலை, என்ன நீ என்ன உத்தமியா டி. ஒருத்தனை லவ் செஞ்சிட்டு இழிச்ச வாயனை தானே தேடிட்டு இருந்தீங்க இரண்டு பேரும்"

"ஓ... நல்லா இருக்கே, பசங்க லவ் செஞ்சிட்டு பிரேக் அப் அப்புறம் நீங்க பெண் பார்த்து கட்டிக்கலாம், நீங்க செஞ்சா அது பேரு மூவ் ஆன், அதே பெண் செய்தால் அதற்க்கு பெயர் ஒழுக்கம் இல்லாதவள், அடங்காதவள்... அதை எல்லாம் மீறி அசிங்கமா பெயர் வைப்பிங்க அப்படி தானே"

இருவரிடமும் அமைதி மட்டும் தான்.

இவர்கள் மட்டுமல்ல... விஞ்ஞானம் தொழில் நுட்பம் எவ்வளவு வளர்ந்து இருந்தாலும் இந்த சமூகத்தில் இருப்பர்களின் கண்ணோட்டம் இதுதான்.

ஒரு ஆண்மகனுக்கு பிரேக் அப் நடந்தால்... அதை விட்டுட்டு அடுத்த பெண்ணையே வாழ்க்கை துணையாக தேடிட்டு போவது சரி.. அதை அந்த சமூகம் ஏற்க்கும்.

அதுவே அந்த இடத்தில் ஒரு பெண் இருந்தால்... அவளுக்கு எவ்வளவு இழிவான பெயர் சூட்டுகிறது இந்த சமுகம்.

ஏன் ஒரு காதல் அப்புறம் அவளுக்கு வாழ தகுதி இல்லையா? ஆண்களை ஏற்க்கும் இந்த சமூகம் பெண்களின் இந்த நிலையை ஏன் ஏற்க்க மறுக்கிறது.

மனம் எல்லோருக்கும் இருப்பது ஒன்று தானே.

எத்தனை பேர் சொன்னாலும், இந்த மனப்பான்மை மாறப்போவது இல்லை.

"என் கையை கழட்டி விடுங்க, நீங்க பேசியதுக்கு கிருஷ்ணா உயிரோடு விட்டதே பெருசு"

"என்ன டி ஓவரா பேசுற எனக்கு வேலை போனது கூட மன்னிச்சிடுவேன்... என் பல் இரண்டு போச்சி. எனக்கு எவ்வளவு கோபம் வந்தது தெரியுமா" ராதா முகத்தில் பலார் என்று பாரின் மாப்பிள்ளை அடிவிட.

ராதா உதடு கிளிந்து ரத்தம் வடிந்தது.

"டேய் உங்களுக்கு பட்டது பத்தலை, கிருஷ்ணா வாது இறக்க குணம் கொண்டவன், இப்போ வரப்போறவன்... எமன்டா"

"ஏன்டி ஓவரா போற" அந்த ஓனான் மாப்பிள்ளை அறைய... ராதா பாதி மயக்கத்துக்கு போய்ட்டா.

"டேய் நீங்க தப்பு பண்றிங்கடா"

"இல்லை சரியா தான் செய்யுறோம்... உன்னாலை நாங்க கொஞ்ச நஞ்சமா கஷ்டப்பட்டோம்" எவ்வளவு திமிரு இரண்டு பேரும் சேர்ந்து எங்க வாழ்ககையை கெடுத்துட்டிங்க. இப்போ அந்த கிருஷ்ணா வந்து எங்க காலில் விழுந்து மன்னிப்பு கேட்கனும் அதுவரை விட மாட்டோம்"

இருவரும் ஒரு முடிவுவோடதான் வந்து இருந்தார்கள்.

எவ்வளவு மனதை கஷ்டப்பட்டு அடக்கினாலும், மாதவனால முடியாமல் திரும்பி பார்க்க... அங்கு ராதா காணோம்.

"அனு ராதாவை காணோம்"

"இவளை, எங்க போனா... கையில் கேமிரா இருந்தா போதும், எங்காவது திரிய வேண்டியது"

சிறிது தூரம் தேடியவர்களுக்கு ராதா கிடைப்பது போல தெரியவில்லை.

"அனு... கிருஷ்ணாக்கு போன் போடு வந்துட்டாரான்னு"

போனை போட்டு கேட்க...

"பாஸ் எங்க இருக்கிங்க"

"ஊரு பக்கம் வந்துட்டேன்" என்றான் கிருஷ்ணா.

அனு கையில் இருந்த போனை வாங்கி.

"கிருஷ்ணா பதட்டப் படாம நான் சொல்வது கேளுங்க"

"என்னாச்சி மாதவன்... விஷயத்தை சொல்லு ராதா கிட்ட போனை கொடு முதலில்"

"அவளை காணோம்... நாங்க தேடிட்டு இருக்கோம்"

"ச்சை... ஒழுங்கா பாத்துக்க கூட தெரியாதா, என்னை சொல்லனும் உன்னை நம்பி விட்டுட்டு போனேனே, என்னை சொல்லனும்"

கண்ணன் அமைதியாக இருக்கவும்.

"சரி மாதவன்... கொஞ்சம் நிதானமாக தேடு... எதாவது மரத்தை பார்த்துட்டு நின்னு இருப்பா"

"சரி... கிருஷ்ணா நீங்க வாங்க, அதுக்குள்ள ராதா என்கிட்ட இருப்பா"

போனை வச்சிட்டு, "அனு இந்த வழியில் போனா ஊரு வந்திடும், அதுக்கு அப்புறம் வழி கேட்டு போயிடு"

வந்த வழியில் மாதவன் ராதாவை தேடி போக.

அந்த இரு ராட்சச மிருகஙகள்... ராதாக்கு மயக்கம் தெளிய தெளிய... அவளை அடித்து அடித்து மயங்க வைத்துக் கண்டு இருதார்கள்.

'கண்ணா... கிருஷ்ணா சீக்கரம் வாங்க, கன்னம் வலிக்குது' மயக்கத்தில் ராதா பிதற்றினாள்.

'ராதா....ராதா" அந்த காடே அதிரும் படி கத்திக்கொண்டே போனான்.

"கடவுளே என் ராதையை என்டயே கொடுத்துடு, நான் சாகும் வரை அவளை கண்கலங்காம வச்சிக்கிறேன். இனி நான் விட மாட்டேன், இனி எந்த எதிர்ப்பு வந்தாலும் நான் அவ கூட தான் இருப்பேன்" முதல் முறையாக கண்களில் தண்ணீர் நிக்காமல் வந்து கொண்டு இருந்தது.

ராதா... ராதா... என் ராதை எங்க டி இருக்க... கிட்டத்தட்ட சிங்கம் போல கர்ஜித்து அநத காட்டில் வெறி பிடித்தவன் போல அழைந்து திரிந்து காட்டின் எல்லைக்கே வந்து சேர்ந்தான்.

ஓடையின் பக்கம் உடைந்து இருந்த அவளது கண்ணாடி வளையலும்... கையில் அவன் அணிவித்த பிரேஸ்லெட்டும் அனாதையாக இருந்தது.

கையில் எடுத்தவன், "ஐயோ ஆசை ஆசையா போட்ட கண்ணாடி வளையல் இப்படி சிதறி கிடக்கே, தங்கம் எங்க டி இருக்க இனி நான் உன்னை விட்டுட்டு போக மாட்டேன், வந்துடுடி"

கண்ணாவின் குரல் கேட்ட ராதை, "என் கண்ணா வந்துட்டான்டா, இனி உங்களை அடிச்சி துவைக்க போறான்" பாதி மயக்கத்திலும், மாதவனின் குரல் கண்டு சொல்ல.

வரும் மாதவக் கண்ணனின் உருவத்தை பார்த்து அதிர்ந்தது என்னவோ உண்மை தான்.

ஆனால் அவன் குரல் தூரம் கேட்கவும், இருவரும் ஊசாராகி ஒரு புதருக்கு இழுத்துச் சென்றார்கள்.

அவளை அங்கு கட்டிப் போட்டு விட்டு இருவரும் வந்தார்கள், மாதவன் இடம் நோக்கி இருவரும் நடந்து வர.

சுற்றி யாராவது வந்தாலும்... அவரிடம் கேட்கலாம், ஆனால் ஒருத்தரும் இல்லையே. நான் என்ன செய்வேன், ராதை, ராதை வந்துடுடி கோபத்துல எதும் செஞ்சிக்கிட்டையா... இனி உன்னை விட்டு போக மாட்டேன். கிருஷ்ணாகிட்ட பேசி... நானே உன்னை கல்யாணம் செஞ்சிக்கிறேன் ராதை ராதை...

இருவர் முன் வந்து நிர்க்கவும்... மாதவனுக்கு தெய்வமே முன் நிற்ப்பது போல இருந்தது.

"சார் இங்க பிங்க் டிரஸ் போட்ட பெண் பார்த்திங்களா? அவ பிளாக் பேக் வச்சி இருந்தா... கண்ணாடி போட்டு இருப்பா.. சாட் ஹேர், கொஞ்சம் நியாபகப் படுத்தி சொல்லுங்க சார்" கண்ணா இடைவிடாது கேள்வி மேல் கேள்வி கேட்க.

"நாங்க தான் கடத்தினோம்"

"என்னா?"

"டேய்... எங்கடா அவ" சுத்தி தேட.

"இந்த காடு முழுக்க தேடினாலும் கிடைக்க மாட்டா"

"டேய் என் பொறுமையை சோதிக்காதிங்க, ஒழுங்கா எங்கன்னு சொல்லிடுங்க, முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க"

கிருஷ்ணாக்கு மெசேஜ் தட்டி விட்டு அடி வெழுக்கத் துவங்கினான் மாதவன்.

இருவரும் அடி வாங்கினாளும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
 

Bindusara

Well-known member
Wonderland writer
25

ஆரம்பத்தில் மாதவன் நன்றாக தான் இருவரையும் புரட்டி போட்டான்.

பின் இருந்து மரத்தால் மாதவனை அந்த பாரின் மாப்பிள்ளை அடி விட, அதோடு விடாமல், பக்கத்தில் இருந்த முள் செடியை எடுத்து பலமாக அடித்துவிட்டான்.

மாதவனால் தாக்கு பிடிக்க முடியவில்லை கீழே தள்ளி விட்டதில், ஏற்க்கனவே முதுகில் முள் குத்தி இருந்தது. அது வேறு இன்னும் ஆழம் பதிந்தது, வலியும் எரிச்சலையும் கொடுத்தது, முள்ளை எடுத்தால் கொஞ்சம் பரவாயில்லையாக இருக்கும் என்று நினைத்தான்.

மாதவன் முள்ளை எடுக்க முயற்சி செய்யும் போது, இருவரும் மாதவனை அடிக்கத் துவங்கினார்கள்.

அதற்குள் அங்கு கிருஷ்ணா வந்து அடித்துக் கொண்டு இருப்பவர்களை பிரித்து எடுத்து மாதவன் முதுகில் குத்தி இருந்த முள்ளை எடுத்து விட.

இருவரும் கோபமாக எழுந்து இருவரையும் புரட்டி எடுத்தோம்.

அந்த இரு டுபாக்கூர் மாப்பிள்ளைக்கு தெரிந்து விட்டது, இவர்கள் இருவர் முன்னால் தங்கள் பருப்பு வேகாது என்று.

இருவரும் அடி வாங்கினாலும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

"எங்கடா ராதா சொல்லுறிங்களா இல்லை அடி இன்னும் வெழுக்கட்டுமா?"

"சார் சார் விட்டுடுங்க சொல்லிடுறோம்" ஓனான் மாப்பிள்ளை ஒத்துக்கொள்ள.

பாரின் மாப்பிள்ளை, "அடச்சி வாயை மூடுடா, உன்னை நம்பி கூட்டிட்டு வந்ததுக்கு கழுத்தை அறுத்துட்ட இல்லை"

"நீ என்னடா ஜிம் பாடி தாங்குவ, நான்ல ஒரு அடி ஓங்கி அடிச்சா செத்துடுவேன், எனக்கு உயிர் முக்கியம்”

கிருஷ்ணா அவனை பக்கம் இருந்த கொடியில் கட்டி விடும் போது.

மாதவன் இன்னொருவனை அடித்து வெழுத்தான் "ராதை எங்கே சொல்லு" கோபத்தில் அவனது நரம்பு எல்லாம் புடைத்து நிற்க.

"சொல்ல முடியாது டா" அவன் அடி வாங்கினாலும் திமிராக சொல்ல.

"மாதவன் இவனை எங்க தட்டுனா எங்க வருவான்னு எனக்கு தெரியும், நீ நகரு" மாதவனை விளக்கிய கிருஷ்ணா சட்டையை பிடிக்க,

கிருஷ்ணா அவன் கையில் போட்டிருந்த வாச்சை கழட்டி பேக்கட்டில் போட்டவன். அந்த பாரின் மாப்பிள்ளை கையை பின்னிருந்து பிடித்துக் கொள்ள.

"மாதவா ஒரே குத்து, அவன் வாயில் இருக்க பல் எல்லாம் கொட்டிடனும்"

"டேய் முகத்தில் மட்டும் கை வைக்காதிங்க, அப்புறம் நான் மனுசனாவே இருக்க மாட்டேன்"

"மாதவா... ரெடியா"

"ரெடி கிருஷ்ணா" மாதவன் காப்பை கைக்கு கொண்டு வந்து குத்த கையை முகத்துக்கு இடையில் முன் பின் என்று அவனுக்கும் அளவு எடுத்துக் கொண்டிருக்க.

அந்த பாரின் மாப்பிள்ளை தான் அலறினான்.

"பார்க்க பாவமா இருக்கு கிருஷ்ணா"

"இவனை பாவம் பார்த்தா ராதா கிடைக்க மாட்டாள், பரவாயில்லையா மாதவன்"

மாதவன் வெறி வந்தவன் போல, அவன் பங்குக்கு சில குத்துகள் விட்டான்.

"ஆஆஆ... அடிச்சிடாத, புளிய மரத்துக்கு பக்கத்தில் இருக்கும் புதரில் கட்டி வச்சி இருக்கோம்"

"அங்கேயா...!" மாதவன் அதிர்ந்தாலும்... அவனது நான்கு பல்லை ஒரே குத்தில் சிதற விட்டுதான் ஓடினான்.

"கிருஷ்ணா இவனை கட்டி போட்டுட்டு வாங்க, அங்கே நிறைய பாம்பு நடமாட்டம் இருக்குன்னு பேசிப்பாங்க, நான் என்னன்னு பார்த்துட்டு வரேன்"

"ஏன்டா உனக்கு எவ்வளவு திமிர், இரண்டு பல்லை தட்டி விட்டும் திமிரு அடங்கலையா உனக்கு" கிருஷ்ணா ஆத்திரம் தீர குத்தி விட்டு தான் நகர்ந்தான்.

அதற்குள் விஷயம் அனு மூலம் வீட்டுக்கு தெரியப்படுத்தவும், ஊர் மக்கள் வந்து இருவரையும் போலிஸ்சிடம் சொல்ல.

கிருஷ்ணா தான் வேணாம் விட்டுடுங்க என்று சொல்லி இந்த இடத்தை விட்டு, மாதவனை போன இடத்தை நோக்கி ஓட.

"கடவுளே என் ராதையை கொடுத்துடு என்கிட்ட, இனி ஒரு நிமிடம் கூட அவளை பிரிந்து இருக்க மாட்டேன்" என்று மாதவன் மாற்றான் மனைவி என்பது தெரிந்தும், அவள் வேண்டும் என்று மனதில் ஒரு உறுதியோடு நடந்து போக.


"கிருஷ்ணா... கண்ணா" கடவுளை அழைத்தாளா, இல்லை இவர்கள் இருவரையும் அழைத்தாளா என்று அவளுக்கு மட்டும்தான் தெரியும்.

பக்கத்தில் ஏதோ சலசலப்பு சத்தம் கேட்டது, அது என்ன என்று கண்களை பிரித்து கூட பார்க்க முடியாத அளவுக்கு கண்களில் ஒரு மயக்கம். கொஞ்சம் பலமாகதான் அறைந்துவிட்டார்கள் போல.

ராதா காதுக்கு அருகில் யாரோ பலமாக மூச்சி விடுவது போல தெரிய.

“புலியா இருக்குமா இல்லை, எதாவது விளங்கா இருக்குமே” முணுமுணுக்க.

ராதா கண்களை மிகவும் சிரமப்பட்டு இமையை பிரித்து பார்க்க.

ஒரு கரு நாகம் தனது முழு முகத்தை காட்டிக் கொண்டு இருந்தது, அதிர்ச்சியில் விழி விரித்து இருந்த அவளின், நிலையை பார்த்த மாதவன். அமைதியாக பக்கம் இருந்த கல்லை எடுத்து பாம்பின் தலைக்கு ஒரு அடி விட அது சிறிது தூரம் தூக்கி எறியப்பட்டது.

பாம்புக்கு இங்கு இருப்பது ஆபத்து என்று தெரிந்து, அது வேறு திசையில் சரசரவென போய்விட.

ராதா உதட்டில் காயம் பட்டு ரத்தம் பார்த்தவன், ரத்தத்தை துடைத்து விட்டு அவளது கைகளின் கட்டை கழட்டி விட.

"ராதை சாரி, நான் உன் கிட்ட விளக்கமா சொல்லி இருக்கனும், என் பிரச்னையை, நான் உன் வாழ்க்கையில் இருந்தா, உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும் என்று தான் உன்னை வலுகட்டாயமா பிரிஞ்சி போயிட்டேன், என்னை மன்னிச்சிடு. நம்ம கல்யாணம் செஞ்சிக்கலாம் கிருஷ்ணா கிட்ட நான் பேசுறேன்" ராதாக்கு அவன் பேசுவது அறுவெறுப்பைக் கொடுத்தது.

"இந்த எண்ணத்தோட என் பக்கம் வராதிங்க மாதவன்" ராதை தீயை தொட்டது போல விலகி இருந்தாள்.

"ராதை இப்படி விலகாதே, இங்க வலிக்குது டி" மாதவன் தன் இதயத்தை தொட்டு காண்பிக்க.

"எனக்கும் இப்படி தான் டா வலித்தது, காரணம் தெரியாம விட்டு போகும் போது, நமக்கு பிடித்த நண்பர்கள் ஒருநாள் பேசாமல் போனால் எப்படி வலிக்கும் தெரியுமா. உன்னை உயிரா நினைச்சதுக்கு, எனக்கு வலி மட்டும் தானேடா நீ கொடுத்த, உன் கூட லவ் மட்டும் பண்ணிட்டு சுத்தலை நான். உனக்கு பொண்டாட்டி என்று நினைத்து தான் வாழ்ந்தேன், என் நம்பிக்கையை கெடுத்துட்ட டா நீ"

"ராதை நான் சொல்வதை கேளுடி"

"ஆஆஆ... ராதை கூப்பிடாத, நரகமா இருக்கு" காதை பொத்திக் கொண்டாள் ராதா.

"பிளீஸ் ராதா என்னை வேண்டா சொல்லிடாத, ஒரு டைம் முட்டாள் தனம் செஞ்சிட்டேன், இன்னொரு முறை அந்த தப்பு செய்ய மாட்டேன்"


"வேணாம் மாதவன்... என்னை பேச வைக்காத கிருஷ்ணாக்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால், உன்னை சும்மா விட மாட்டார்"

"நான் பேசுறேன் ராதை, உன்னை விட்டு இனி என்னால் பிரிஞ்சி இருக்க முடியாது டா" ராதை முகத்தை பிடித்து இதழை சிறைபிடிக்க.

ராதா முதலில் அதிர்ந்தாலும், அவனை விலக்கி கன்னத்தில் அறைந்தவள்.

"அறிவு இல்லை, வேணான்னு விட்டுட்டு போய்யிட்டு இப்போ என்ன, என் வாழ்க்கையை கெடுக்க பார்க்கறியா. என் புருஷனை விட்டு வந்திடுவேன்னு நினைச்சிட்டியா, உன் புத்தி ஏன் இப்படி போகுது"

"ராதை பிளீஸ் நீ இல்லாம உன்னால் முடியாது டி"

"டி சொன்னா பல்லு எல்லாம் பேத்துடுவேண்"

"சரி டா... டி சொல்லலை, அப்போ எதுக்கு என்னை திரும்ப பார்க்க வந்த ஆசை இல்லாம தானா"

"இது என் ஆசை இல்லை உன் அசை... இன்னும் நிறைய பிளானில் இருந்தது, ஆனா எனக்கு டைம் இல்லை. உனக்கு பிடிச்சது தான் காமிச்சேன், திருவிழா தொடங்கி, நான் பிறந்த மரம். ஒரே போல டிரஸ் வாங்குவது, உனக்கு பிடித்த பெயன்டிங் ஒன்ன வரைந்தது. இப்போ உன் வீட்டில் பழைய கதை பேச அப்புறம் இந்த காடு, இங்க வச்சி தானே எனக்கு காதல் செய்வதை சொல்ல நினைத்துதான்"

"ஆசையாக நடக்க நினைத்து அனைத்தும் வருத்தமாக தான் நடந்தது. அது ஒன்னு தான் குறை ஒரு நண்பனின் ஆசையை நிறைவேற்றி வைத்தேன் அவ்வளவு தான். என் நட்புக்கு நான் கொடுக்கும் மரியாதை, இது நீ இப்படி அசிங்கமா நினைப்பன்னு நினைக்கலை"

"புரியுது ராதை, எனக்கு இருக்க பிரச்சனையை கொஞ்சம் கேளு உனக்கே புரியும்"

"என்ன உன்னால குழந்தை தர முடியாது அவ்வளவு தானே"

"ராதா..." மாதவன் தலை குணிந்து நின்றான்.

"முன்ன கூட பிடிக்காம போயிட்ட என்று தான் நினைத்தேன். ஆனா என் மேல இருக்கும் நம்பிக்கையை உடச்சிட்டு போனேன்னு நேத்துதான் தெரிந்தது கண்ணா... இல்லை நீ என் கண்ணா இல்லை நீ மாதவன். ஒரு குழந்தைக்காக உன்னை விட்டுட்டு போவேண்ணு நினைச்சிட்ட இல்ல நீ, என்னை அந்த இடத்தில் கொண்ணுட்டா"

"ராதா..."

"மாமா கணக்கு தீந்துடுச்சி போலாமா"

"சரி டா வா" கிருஷ்ணாவை வேகமாக சென்று அணைத்துக் கொண்டாள்.

"போதுமா ராதா உனக்கு... இல்லை இன்னும் ஒரு மாசம் இங்கே இருக்கலாமா"

"போதும் மாமா எல்லாம் முடிஞ்சிடுச்சி, இனி அவங்க பிரண்ட் என்ற இடத்தில் கூட இல்லை, வலிக்குது மாமா இங்க இருக்க பிடிக்கலை நம்ம கிளம்பலாம்"

"சரி மா போலாம்... எனக்கு தெரியும் நீ கிளம்ப சொல்லுவன்னு, அதான் அனுகிட்ட உன் திங்க்ஸ் பேக் செய்ய சொல்லிட்டு வந்தேன்"

"மாமா மாமாதான்... பாருடா பொண்டாட்டி பத்தி அவ்வளவு புரிந்து வச்சி இருக்க"

"அதான் குழந்தையில் இருந்து பார்க்கிறேனே. உன் எண்ணம் எனக்கு தெரியாதா" கிருஷ்ணா ராதையை அழைத்து செல்ல.

"மாமா ஒன்னு கொடுக்க மறந்துட்டேன்" கிருஷ்ணா ராதாவை முறைத்தான்.

"மாமா... ஆஆஆஆ"

"சரி போய் தொலை, ரகுவரனும் அனு அப்பா அம்மா நாளைக்கு வரப்போராங்களாம்"

"அனு வேற என் மேல கோபமா இருக்கா"

"அவளுக்கா பயப்படுற, சரியான காமெடி பீஸ்"

"சரி... இருங்க அவர்களுக்கு செந்தமானதை கொடுத்துட்டு வரேன்"

"மாதவன்... இதை உன் கண் பார்த்து போட்டு விட நினைத்தேன், ஆனா விதி வேற நினச்சிடுச்சி. இதுவும் நீ ஆசை பட்டது தான்" கையில் ஒரு சிறு பெட்டியை கொடுத்து.

"இது வாங்கி ஒரு மூணு வருடம் இருக்கும், நேரில் கொடுக்க நேரம் கிடைக்கலை, இனியும் இது என்கிட்ட இருக்கறதில் புரயோஜனம் இல்லை. வச்சிக்கோங்க இதை" அவன் கையில் தினித்துவிட்டு போனாள். மாதவன் கைகள் நடுங்க அதனை எடுத்து பார்த்தான். அவன் பெயர் பொறித்த ஒரு மோதிரம் இருந்தது.

கிருஷ்ணா ராதை பேசிக்கொண்டே முன் போக மாதவன் கண்ணன் ராதாவை ஏக்கமாக பார்த்தான்.

"ஏய் ராதா என்ன சொன்ன அந்த மாதவன் பேய் அடிச்ச போல வரான்"

"உண்மையை சொன்னேன்"

"சரி ஊர் வந்திடுச்சி... சீக்கரம் போ, நானும் அவனை நாலு வார்த்தை கேட்டுட்டு வரேன்"

"நம்ம சீக்ரேட் சொன்ன மகனே பிச்சிடுவேன்"

"சரி சரி... நான் போய் அனுவை சமாதானப் படுத்துறேன்"

"மாதவன்..."

"சொல்லுங்க கிருஷ்ணா"

"வாங்க அப்படியே நடந்துட்டு வருவோம், அதுக்கு முன்னாடி அடி பட்டதுக்கு மருந்து போடலாம்"

"மருந்து எல்லாம் வேண்டாம் கிருஷ்ணா... இந்த இலையை கசக்கி விடுங்க" கிருஷ்ணா கையில் இலையை எடுத்து கொடுத்து விட்டு சட்டையை கழற்றினான்.

மாதவன் இதயத்தில் ராதை என்று டேட்டூ போட்டு இருப்பது நன்றாக தெரிந்தது.

அதை பற்றி எதும் கேட்காமல்... அவனது காயத்துக்கு அந்த இலையை கசக்கி பிளிந்து விட்டான்
 
Status
Not open for further replies.
Top