ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மனைவியின்...காதலன்! - கதை திரி

Status
Not open for further replies.

Bindusara

Well-known member
Wonderland writer
16…காதலன்!

“என்னாச்சி சொல்லு ராதா”

“அது சின்ன ஆக்சிடன்ட்”

“அச்சோ… என்னாச்சி”

“அது சின்ன அடிதான் சோல்டர்… பேக்ல கொஞ்சம் அடி”

“ஏய் எதும் இல்லன்னு சொல்லிட்டு இருக்க, இப்போ பரவாயில்லையா?”

“பரவாயில்லை தாரகை”

“சரி ராதா, சாப்பிட்டியா நீ”

“ம்ம்ம்ம்… ஆச்சி நீ”

“உனக்கு டைம் கிடைக்கும் போது பேசுறயா தாரகை… பீலிங் லோன்லி”

“ஏன் ராதா இது நீ இல்லையே எப்போவும் சிரிச்சிட்டே இருப்ப எங்க அந்த ராதா”

“கொஞ்ச உடம்பு சரி இல்லாததால கொஞ்சம் டவுன் பீல் வேற ஒன்னுமில்லை”

“கண்டிப்பா எனக்கு டைம் கிடைக்கும் போது பேசுறேன், எனக்கு ஒரு பாலிசி இருக்கு, குட் டைம்ல இருக்கிறதை விட சோகமாக இருக்கும் போது இருக்க தான் நான் நினைப்பேன்”

தாரகையின் இந்த பேச்சி ஒரு இதத்தை கொடுத்தது ராதாக்கு.

ரோட் கிராஸ் செய்யும் போது ஒரு செகன்ட் கவனம் சிதறவும் ஒரு ஸ்கூட்டர் இடித்து இடது கையிலும் காலிலும் அடி பட்டு பெட் ரெஸ்டில் இருக்கா. மாமா கிருஷ்ணாவிடம் சொல்லவில்லை அவளுக்கு தனிமை தேவைப்பட்டது.

தன்னையும் வருத்தி அவர்களையும் வருத்த அவளுக்கு விருப்பமில்லை.

கண்ணன் தங்கையிடம் அடிக்கடி பேசுவாள்… கை கால் சிறிது சரி ஆனதும்.

“தாரகை உங்க ஊருக்கு வரும் பஸ் ரூட் சொல்லுறயா நான் கண்ணன் கிட்ட பேசனும்”

“இல்லை ராதா நான் அண்ணா கிட்ட கேட்டுட்டு சொல்லுறேன்”

என்றவள் மதியம் வரை ஒரு பதிலும் இல்லை என்னால் எதற்க்கு அவளுக்கு பிரச்சனை கேட்க வேண்டாம் சொல்லி மெசேஜ் போட சிறிது நேரத்தில் ஆன்லைனில் வந்தாள்.

“அண்ணா கிட்ட சொன்னேன் அவன் எதும் பேசலை”

“ம்ம்ம்ம்” என்றதோடு முடித்து கொண்டேன்.

‘இதான் கஷ்டத்தில் பக்கம் நிக்கிற நட்பா’ என்று தான் நினைக்க தோன்றியது.

சிறிது நேரத்தில் கண்ணனின் பிளாக் ரிலிஸ் ஆகி, மெசேஜ் வந்தது.

“என் தங்கச்சி சொன்னா... நீ பஸ் ரூட் கேட்டன்னு”

“நான் கொஞ்சம் பேசனும் டா போனில் பேச முடியலை அதான் நேரில் பேசலாம்ன்னு”

ராதா சொல்வது எதும் காதில் வாங்காமல்.

“அவட்ட உன்னை பிளாக் செய்ய சொல்லிட்டேன்”

“ஏன்டா பிரிச்சி பேசுற… எப்பவும் நானும் உன் பேமிலியில் ஒருத்தின்னு சொல்லுவியே இப்போ என்ன டா”

“இனி என்னையும் என் பேமிலியையும் காண்டாக்ட் செய்யாத ஐயம் கோயிங் டூ பிளாக் யூ”

“பிளீஸ் வேண்டாம் கண்ணா. பிரண்டாவாது என்ட பேசு... பிளீஸ்… என்னை கல்யாணம் செஞ்சிக்க சொல்லி கேட்க மாட்டேன்” கிட்டத்தட்ட யாசித்தாள்.

அகேயின் பிளாக்.

அவள் தங்கையை அறிமுகப் படுத்தி வைத்ததும் அவன் தான் இப்போது பிளாக் செய்ய சொன்னதும் அவன் தான்.

போனால் தான் முதல் சந்திப்பு தாரகை கூட ஒரு முறை தன்னை ஓவியமாக வரைய ஆசைக் கொண்ட அவளின் ஆசையை முழுவதும் தீர்த்து வைக்கா விட்டாலும் ஒரு அளவுக்கு தீர்த்து வைத்தவள் தாரகை தான்.

சுமாராக தன்னை வரைந்து அனுப்பினாள்,

யார் வரைந்தது என்று விசாரிக்க கண்ணன் தாரகை பெயர் சொல்ல போன் நம்பர் வாங்கி ராதா பேசத் துவங்கினாள்.

குறுகிய காலத்தில் அதிக பிணைப்பு ஏற்பட்டது தாரகை கூட ராதாக்கு.

அந்த உறவும் முறிந்து போனது.

இப்போதெல்லாம் அழுகையும் தனிமையும் மட்டும்தான் துணையாக போனது ராதாக்கு.

கல்லூரி முடிந்தும் வீட்டுக்கு போக பிடிக்காமல் இங்கவே நாட்களை கடத்தினாள்.

நார்மல் மெசேஜ் வேறு நம்பர் வாங்கி கால்… அதும் பிளாக்… பிரண்ட்ஸ் கிட்ட சொல்லி பேச சொல்ல அவங்களையும் பிளாக் செஞ்சிட்டான் முழுதாக உடைந்து போனாள்.

கடைசியாக அவனது டிபியில் இருந்தது அடிக்கடி நினைவுக்கு வரும்.

“யாருக்காகவும் உங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள்… பிறகு சாகும் வரை மற்றவர்களுக்கு அடிமையாக தான் இருக்க வேண்டுமா” ராதாவின் தன்னம்பிக்கை இங்கு தான் அடி வாங்கியது,

தன்னை பற்றி உயர்வான எண்ணம் உடையவளுக்கு அனைத்தும் தலை கீழாக தெரிந்தது.

அதை படித்ததும் அவனை அதன் பிறகு தொந்தரவு செய்யவில்லை.

கடைசி நம்பிக்கை அவளது தங்கை அதன் பிறகு அவளிடமும் சைலன்ட்.

“நான் அவ்வளவு கொடுமைகாரியா. நான் இத்தனை வருடம் அடிமையா வச்சி இருந்தனா? அவன் இனிக்க பேசியது அவனை வருத்தியா?” துடித்தாள், இப்படியே சில மாதம் கடந்தது.

“வீட்டுக்கு போய்யிட்டா…” வலியை மறைத்து மாமா கிருஷ்ணா கூட டைம் ஸ்பென்ட் செய்தாள்.

ஒரு தோழிக்கு கல்யாணம் அதுக்கு கண்ணன் வருவான் என்று பார்த்து பார்த்து தயாரானாள்.

கிளம்பும் போது தடுக்கி விழுந்து.. ஜன்னலை சேர்த்து உடைத்தவளின் கைகள் கிழித்து… அந்த ரத்தத்தை பார்க்கும் போது கோபம் வந்தது. ஆசையாக தயாராகியது இப்படி வீனா போச்சே கண்ணனை இன்று பார்க்க முடியாமல் போச்சி என அழுதாள்.

மாமாவின் கண்களிலும் கிருஷ்ணா கண்களிளும் அப்படி ஒரு பதற்றம்.

“பார்த்து வரலாமில்லை மா… ஐய்யோ என் புள்ளைக்கு இப்படி ஆகிடுச்சே”

மூன்று இடத்தில் கிழித்து எட்டு தையல் போட்டிருந்தது.

திருமண தம்பதிகளுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு யார் யார் வந்திருப்பதை விசாரிக்க.

கண்ணன் வந்திருப்பது தெரிந்தது.

கண்ணனின் நெருங்கிய நண்பனுக்கு போன் போட்டு எனக்கு தையல் போட்டு இருக்காங்க அடிப்பட்டுடுச்சி என தானாக முன் வந்து சொன்னேன்.

கண்ணனுக்கு இந்த விசயம் தெரிந்தது என்னை பார்க்க வருவான் என்ற ஆசை எனக்கு இருக்கத்தான் செய்தது, வாசலை பார்த்துக்கொண்டே அந்த நாளை கடத்தினேன்.

ஆனால் கடைசி வரை அவன் வரவில்லை.

கை சிறிது குணம் அடைந்ததும் ராதா அவளது மன அழுத்தத்தை குறைக்க நாளை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

ரகுவரன் மாமா ஒரு லாங் டிரிப் போனாதும்… அந்த ஊரிலிருந்த ஒரு பாருக்கு போனவள்.

“யோவ் போதை ஏறும் சரக்கை எடு” அந்த கடைக்காரன் அவளை விழி பிதுங்கி பார்த்தான்.

“டேய் நீ பெண்ணை பார்த்தில்லையா முன் பின்ன, சரக்கை எடுடா, ஒரு சிப் அடிச்சா உச்சி மண்டைக்கு ஏறனும் புரியுதா”

“சரி மா, இதை குடிங்க உச்சி மண்டைக்கு ஏறும்”

குடித்த ராதா இன்ஸ்டா லைவ் போட்டவள்…

“ஏய் கண்ணா இங்க பாரு சரக்கு குடிச்சிட்டேன், எப்புடி… இப்போ இந்த பார்க்கு, நீ வந்து என்னை கல்யாணம் செஞ்சிக்க ஒத்துக்கோ. உடனே நான் நல்ல பொண்ணா நடந்துப்பேன், இல்லை உன்னை கொண்ணுடுவேன்”

போதை ஏற ஏற கண்ணா… வந்திடு இனி குட் கேளா இனி இருப்பேன். புரியுதா வந்து சேரு, நீ இந்த லைவ் பாத்துட்டு தான் இருக்கறது எனக்கு தெரியும் புரியுதா.

ராதா போதை ஏற ஏற பிதற்றினாள்…

மேலே குடி இருக்கும் அனு தலை தெறிக்க ஓடி வந்தாள்.

“பாஸ்… பாஸ் “

“ஆஆஆஆ… உனக்கும் அவளுக்கும் மெதுவா பேசுற பழக்கமே இல்லையா”

“பாஸ் அந்த ஆராய்ச்சி ரொம்ப முக்கியமா”

தண்ணியில் தலையை நுழைத்தவாறே.

“சரி வந்த விஷயத்தை சொல்லிட்டு போ”

“சார் ராதா ஏதோ ஒரு லைவ் போட்டு இருக்கா” அனு பதட்டமாக சொல்ல.

“இது என்ன புதுசா எப்போவும் இதே வேலைதான் அவளுக்கு”

“பாஸ் இந்த முறை சீரியஸ் பப்ல லைவ் போட்டு இருக்கா”

“பப்பா… இவ எதுக்கு அங்கே போய் இருக்கா”

“போனது மட்டும் இல்லை பாஸ் சரக்கு அடிச்சிட்டு கண்ணா வா, கண்ணா வான்னு பிதற்றிட்டு இருக்கா”

“கண்ணாவா அது யாரு”

“பாஸ் அது…” அனு தயங்க.

“என்ன அனு காதல் கீதல்ன்னு எதாவதா?”

“ஆமா பாஸ்…”

“இவளை... இன்னைக்கு இருக்கு கச்சேரி லைவில் லொக்கேசன் பாரு”

சிறிது நேரத்தில் இருவரும் அந்த இடத்துக்கு போக.

“கிருஷ்ணா நான் உன்னை வர சொல்லலையே நீ எதுக்கு வந்த, கண்ணா வருவான் நீ போ”

“ராதா கடுப்பு கிளப்பாத… வா என் கூட”

“நான் வரமாட்டேன்” தரையில் உட்கார்ந்தவள் கையை இறுக கட்டிக்கொண்டாள்.

“ஏய் அனு என்ன வேடிக்கை பாக்குற ஒரு கைப்பிடி”

“பாஸ் இவளை பார்த்தா பயமா இருக்கு”

“இவளை… எல்லாம் தொல்லைதான் எனக்குன்னு வந்து வாய்க்குதுங்க”

“பாஸ் இப்போ நான் என்ன செய்யனும் சொல்லுங்க”

“ஒன்னும் செய்யாதே போய் கதவை திறந்துவை போ”

“சரி பாஸ்”

ராதாக்கு ஒரு அரை விட்டவன்… கதற கதற இழுத்து வந்தான்.

வழி முழுவதும், “கண்ணா என்னை தேடி வருவான், கிருஷ்ணா உன்னால நான் கண்ணாவை பார்க்க முடியாம போயிடுச்சி. இனி என் எதிரி டா நீ… நீ ஒரு பிச்சக்காரன் என்னை விடுடா” கார் கதவை திறக்க முயன்றாள்.

“அமைதியா உட்காரு டி மென்டல், கதவு லாக் ஆகிடுச்சி புரியுதா, அமைதியா உட்கார்”

“மாமா எனக்கு அத்தான் வேணும் வாங்கித்தா கண்ணா என்ட பேசனும் இப்போவே, வா பார்க்கு போலாம் என்னை தேடி அவன் வந்து இருப்பான். ஆறு மாசம் மேல ஆச்சி என் மேல உள்ள கோபம் போய் இருக்கும் அவனுக்கு”

வழி முழுவதும் அனுவையும் கிருஷ்ணாவையும் ஒரு வழி செஞ்சிட்டா.

காரிலிருந்து இறக்கியதும், “என்னை விடு கண்ணா அங்கு இருப்பான் நான் அவனை பார்க்க போறேன்”

“இந்த முறை கிருஷ்ணாக்கு கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஒரே அரை தான் சுருண்டு விழுந்தாள்.

“பாஸ்… இந்த நிலையில் எதுக்கு அடிக்கிறிங்க”

அனு கைத்தாங்கலாக ராதாவை அழைத்துச் சென்று தலைக்கு குளிக்க வைத்தாள்.

ராதா இரவு முழுவதும் கண்ணன் கண்ணா என பிதற்றினாள்… தொடக்கம் முதல் இறுதி வரை கிருஷ்ணாவின் கையை பிடித்துக்கொண்டு சொல்லி முடித்தாள்.

கிருஷ்ணாக்கு கண்ணனை கொலை செய்யும் ஆத்திரம் வந்தது.

‘திருமணத்தில் முடிக்கும் விருப்பம் இல்லாதவன் எதுக்கு ராதா மனதில் ஆசையை வளர்த்து விட வேண்டும்’

இப்போது மட்டும் கண்ணா முன் இருந்தால் அடித்து துவைத்துவிடுவேன்.

கிருஷ்ணா கோபத்தில் சுவற்றில் கையை குத்தி ஆத்திரத்தை அடக்க நினைத்தவனுக்கு ரத்தம் பீரிட்டது, ஆனால் கோபம் விட்ட பாடில்லை.

அந்த இரவு அப்படியே நகர்ந்தது அவள் பிதற்றுவதும் இவன் கேட்பதுமாக.
 

Bindusara

Well-known member
Wonderland writer
17காதலன்!

அடுத்த நாள் தலைவலியோடு எழுந்தாள் ராதா, கிருஷ்ணா இரவு முழுவதும் தூங்காமல் அவளை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“டேய் இங்கே என்ன நான் தூங்கரதை சைட் அடிச்சிட்டு இருக்க, என் மேல ஆசை எல்லாம் வளர்த்துக்காத புரியுதா”

‘திமிரை பாறேன்… நானே இவளை வீட்டை விட்டு துரத்த பாடுபட்டால் இவ குடும்ப மானத்தை வாங்கிட்டு இருக்கா இதுல இந்த எகத்தால பேச்சு வேற’

அவ சரக்கு அடிச்சிட்டு புலம்பியதால் ஒன்னும் அவன் முழித்து இருக்க வில்லை.

ராதாவின் இன்ஸ்டா லைவை பார்த்து பிஸ்னஸ் பார்ட்னர் தொடங்கி சொந்தக்காரங்க வரை, ஏன் வீட்டு வேலை செய்யும் அனைவரும் ஏதோ துக்கம் விசாரிப்பது போல.

“என்ன தம்பி இப்படி ஆகிடுச்சி, இனி எப்படி அவளுக்கு கல்யாணம் நடக்கும்”

“அது பிராங்க் சோக்கு நடிச்சது” கிருஷ்ணாக்கு சொல்லி சொல்லி வாய் தான் வலித்தது, ஆனால் அவன் சொல்வதை நம்பத்தான் யாருமில்லை.

தூங்க கண் அசர அசர… போன் மெசேஜ் என்று வந்து ஒரு வழிபடுத்தி விட்டார்கள் அவனது சுற்றமும் நட்பும்.

“நைட்டு முழுக்க, இவ செய்த குளறுபடியில் தூங்காம தவிச்சிடுட்டு இருந்தான், எழுந்ததும் இந்த ரதிதேவியை சைட் அடிச்சி கிழிப்பாங்க”

“ஹா… ஹா சம்பவம் பெருசு போல”

“ஆமா… யாரு சொல்லு நான் அவன் கிட்ட பேசுறேன்”

ராதா முகம் மாறியது.

“கிருஷ்ணா வேண்டாம்டா இட்ஸ் ஓவர்”

“என்னாச்சி சொல்லு நான் பாத்துக்கிறேன் நான் போய் அவன்ட பேசுறேன்”

“இல்லை அவன் என்னை வேண்டா சொல்லி போயிட்டான், எனக்கும் அவன் வேணா”

“சரி பையன் பாக்கட்டா கல்யாணம் செஞ்சிக்கிறியா?” சிறிது நேரம் யோசித்தவள்,

“கிருஷ்ணா எனக்கு ஒன் இயர் டைம் வேணும்”

“சரி.. மாமா மேல பிராமிஸ் செய் தண்ணி இனி அடிக்க மாட்டேன்னு”

“கிருஷ்ணா... ஆஆஆஆ”

“இந்த கொஞ்சல் எல்லாம் வேண்டாம், கேட்டதுக்கு பதில் சொல்லு டி”

“எனக்கு மனசு கஷ்டமா இருக்கும் போது மட்டும்”

“இரு ரகுவரன் கிட்ட சொல்லுறேன்”

“மாமா புரிஞ்சிக்கோ… அதிகம் இல்ல எப்போதாவது கஷ்டமா இருந்தா தான்”

“முடியாது, இதுவரை உன்னை தருதலையா வளர்த்தது போதும், இனி உன் இஷ்டத்துக்கு விடுறதா இல்லை”

“மாமா பிளீஸ் உன் ராதா பாவமில்ல”

“வாயை மூடு, என் ராதாவே லவ் செய்யும் போது தெரியலை பிரேக் அப் ஆகும் போது கூட இந்த கிருஷ்ணா தெரியலை, இப்போ என்ன உன் குடும்பத்து ஆளுங்களா இருந்து இருந்தா, ஒரு வார்த்தை எங்கிட்ட சொல்லி இருப்ப இல்ல”

“கிருஷ்ணா சாரி… சொல்ல கூடாதுன்னு இல்லை டா, அவன் கிட்ட பேசும் போது உலகத்தையே மறந்துட்டேன், வயசு கோளாறு”

“சரி விடு, முடிஞ்சதை சரக்கு அடிக்க கூடாது, அப்புறம் ஒரு வருசத்துல கல்யாணம் புரியுதா. என் கூட ஆபிஸ் வரனும்” வாய் வரை வந்து விழுங்கியவன்.

“ஆபிஸ் பக்கமே வரக்கூடாது” என்று முடித்தான்.

“டேய் கிருஷ்ணா அனுவையும் என்னையும் சேர விட கூடாதுன்னு தானே இப்படி செய்யர. சரி உன் இஷ்டம் ஆனா கஷ்டமா இருக்கும் போது மட்டும் சரக்கு அடிக்கனும்”

“முடியவே முடியாது…” கிருஷ்ணா உறுதியாக சொல்ல.

ஃபோனை எடுத்தவள், “மாமா கிருஷ்ணா நான் எது சொன்னாலும் கேட்க மாட்டங்கிரான்”

ரகுவரன் மாமாக்கு மெசேஜ் தட்டிவிட… அடுத்த செகன்ட் ரகுவரன் கிருஷ்ணாக்கு ஃபோன் போட்டு.

“ஏன்டா கிறுக்கு பயலே, என் தங்கத்தை கொடுமையா படுத்துற. ஒழுங்கா அவ சொல்லுற பேச்சை கேளு” கிருஷ்ணா சொல்ல வருவது காதில் கூட கேட்காமல் கட் செய்துவிட்டார்.

“இந்த அப்பாவை”

“என்ன கிருஷ்ணா திட்டு போதுமா இல்லை இன்னும் ஏத்தி விடட்டா”

“சரி செஞ்சி தொலையுறேன், என்னை குப்பை தொட்டியில் இருந்து எடுத்து வந்து இருப்பாங்க போல. ஒருத்தறாவது மதிக்கறாங்களா ஆனா ஒரு கண்டிசன்”

“என்ன…?”

“மாசத்துக்கு ஒரு முறை தண்ணி, அதுமட்டுமில்லாம வீட்டில் தண்ணி புரியுதா”

“ஒரு நாள் தானா! முடியாது” என்றாள்.

“அப்போ போ ஒரு நாளும் இல்லை”

“சரி சரி விடு… ஒரு நாள் தானே போனா போகுதுன்னு அக்சப்ட் செஞ்சிக்கிறேன்”

“எல்லாம் தலை எழுத்து”

“சரி பத்திரமாக இரு எதாவது வேணும்னா சொல்லு நான் வரும் போது வாங்கிட்டு வரேன். சாப்பாடு சமைத்து இருக்கு சாப்பிட்டு பத்திரமா இரு”

“பாஸ்…”

‘அடுத்த இம்சை வந்திடுச்சி டா’

“கிருஷ்ணா நானும் வரட்டா…”

“ஐஐஐ... ராதாவும் வராலா பாஸ்”

“எதே அவளுமா… அடி பிச்சிடுவேன், அனு கார் கிட்ட வெயிட் செய்"

ராதா புரம் திரும்பி, “பத்திரமாக இரு… நான் வீட்டை பூட்டிட்டு போறேன் உன்னை நம்ப முடியாது. பார் கீருன்னு சுத்த ஆரம்பித்து, கொஞ்ச நஞ்சம் மரியாதையையும் கப்பல் ஏத்திடாத தெய்வமே”

“ஹா ஹா குட் கேர்ள் மாமா… நீ நிம்மதியா போய்ட்டு வா”

“சரி வரேன்… பிரிட்ஜில் ஐஸ் கீரிம் இருக்கு சாப்பிடு ஒரு பாக்ஸ்தான் புரியுதா”

“ஈஈஈஈ… கிருஷ்ணா செல்லக் குட்டி” அவனின் கன்னத்தில் கை வைக்கப் போக.

“ச்சி போடி“ முகத்தை விளக்கிக் கொண்டவன் கையோடு வீட்டை பூட்டிச் சென்றான்.

“ஆமா பெரிய பூட்டு தப்பிக்க முடியாது பாரு… பசிக்குது என்ன சமைச்சி வச்சி இருக்கான்” பாத்திரத்தில் தலையை விட்டு வாசம் பிடித்தாள்.

“ஐ… பூரி மசாலா ஜாலி” சாப்பிட்டவள் தலைவலி மருந்து போட்டு படுத்துவிட்டாள்.

காரில் போகும் அனு, கிருஷ்ணாவை பார்த்து.

“சார் இது எல்லாம் டு மச், எதுக்கு பூட்டிட்டு வரிங்க ராதா பாவம்”

“எனக்கே கஷ்டமாதான் இருக்கு அனு, நேத்து பார்த்த இல்லை என்னால அவளை திரும்ப அந்த நிலையில் பார்க்க முடியாது அது மட்டுமல்லாமல், ரகுவரன் என்ன வளர்த்தான்னு தான் பேசுவாங்க அந்த பெயர் வர நான் இனி விட போவதில்லை”

“சரி சார்… நீங்க சொல்வது சரி தான்”

வேலை எல்லாம் முடித்து கிருஷ்ணாவும் அனுவும் வீட்டுக்கு வர, அனு அவளது போர்சனில் புகுந்து கொண்டாள்.

வீட்டை திறந்தவன்… கைநிறைய அவளுக்கு பிடித்த இனிப்பை கையில் வைத்துக்கொண்டு கூவினான்.

“ராதா உனக்கு பிடிச்ச ஸ்வீட்ஸ் வாங்கி வந்திருக்கேன், வந்து சாப்பிடு” குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே வந்தான்.

கவரில் இருந்த இனிப்புகள் அடங்கிய டப்பாவை எடுத்து டேபிலில் வைத்தவன், பிரிட்ஜில் அடுக்கினான்.

“ராதா… இக்கட ரா… ரா…” என்ற ஸ்வீட் சொன்னதும், நாய் குட்டி போல துள்ளி குதித்து வந்திருப்பாளே எங்கே போயிட்டா ராட்சசி”

அவளது அறையில் எட்டி பார்க்க, படுக்கையை மடித்து வைக்காமல் இருந்தது.

“எருமை மாடு பொண்ணுன்னு ஒரு நினைப்பு கூட இல்லை பைத்தியம், இவளை கட்டி குடுக்கறதுக்குள்ள நானும் ரகுவரனும் என்னென்ன பாடுப்படப் போறோமோ, அந்த இறைவனுக்குர்தான் தெரியும்” படுக்கையை மடித்து வைத்தவன்.

நடக்கும் போது, கிளிப் மேல் கால் வைத்து கிருஷ்ணா காலை அது நன்கு பதம் பார்த்தது.

“ஆஆஆ… பிசாசு ஒழுங்கா வைக்க வேண்டிய இடத்தில் ஒன்னும் வைக்கறது இல்லை. பிசாசு” சிதறிக்கிடந்த அனைத்தையும் அடுக்கத் துவங்கினான்.

“இப்போ தான் ரூம் போல இருக்கு, எங்கே இவளோட சத்தத்தையே காணோம்”

வீடு முழுக்க தேடி விட்டான் ஆளையே காணவில்லை.

“ச்சே…” தரையில் காலை வேகமாக மிதித்தவன்.

அவளது போனுக்கு கால் போட நான் இங்கே தான் இருக்கேன் என்று சோப்பாவில் இருந்து கத்தியது.

“போனைக் கூட எடுக்காம எங்கே போய் தொலைந்தாள், வீடு நல்லா பூட்டிட்டு தானே போனோம்”

கிருஷ்ணா… வண்டியை எடுத்தவன் ஒரு ரோடு கூட விடாமல் தேடினான். அவள் வழக்கமாக போகும் இடம் அனைத்தையும் அலசி தேடியவனுங்கு ராதா கிடைக்கவில்லை.

அனுக்கு தெரிந்த போலிஸ் நண்பனுக்கு விஷயம் சொல்லி தேட சொல்லிட்டு.

“இப்போ வீட்டுக்கு வந்து இருக்கனும் கடவுளே” வேகமாக வந்தவன் ராதா ஹாலில் உட்கார்ந்து கிருஷ்ணா வாங்கி வைத்த இனிப்பை பதம் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“ப்பா.. ரசகுல்லா ரசகுல்லாதான்” சரியாக அவள் வாயில் போடும் போது.

வேகமாக வந்த கிருஷ்ணா… ஒரே அறை தான் ரசகுல்லா எங்கு சென்று விழுந்தது என்றே தெரியவில்லை.

“கிருஷ்ணா எதுக்கு அடிச்ச… இரு மாமாக்கு போன் போடுறேன்” ராதா தனது போனை எடுக்க, கிருஷ்ணா பிடுங்கி சுவற்றில் விட்டெறிந்தான்.

“இனி மாமா கீமான்னு எதாவது வாயில் இருந்து வந்தது மகளை புதைச்சிடுவேன், எங்கே டி போன”

“இங்கே தானே இருந்தேன் வீட்டை பூட்டிட்டு போயிட்டு பேசுறான் லூசு போல”

“தேடின நான் லூசா…”

“ஆமா டா நீ லூசுதான் நான் தோட்டத்தில் இருந்தேன்”

“தோட்டத்துக்கு எப்படி போன நான் தான் பூட்டிட்டு போனேனே”

“லூசு முன் வாசலை தானே பூட்டின, பின் வாசல் திறந்து தான் இருந்தது”

“சாரி டா ராதா”

“எவ்வளவு தைரியம் இருந்தா என்ன அடிச்சி இருப்ப” கிருஷ்ணாவை தள்ளி விட்டவள்.

அவனது தலை முடியை பிடித்து.

“ஏன்டா உனக்கு எவ்வளவு தைரியம், என்னை அடிச்சது கூட மன்னிச்சிடுவேன், என் செல்லக் குட்டியை தட்டி விட்டதை நான் ஏத்துக்கவே மாட்டேன் டா”

“எதே செல்ல குட்டியா?”

“நீ அடிக்கும் போது என் ரசகுல்லாவை தட்டி விட்டுட்ட, பாவம் அது என் வாயில் போய் மோச்சம் பெற இருந்ததை கெடுத்துட்ட, இனிப்பு விக்கிற விலைக்கு வேஸ்டா செய்யற டுபுக்கு பையா”

“அடியே ஒரு ரசகுல்லா தானே விடு என் முடி போச்சி, பிச்சி சொட்டையா ஆக்கிடாத எவன் பொண்ணு கொடுப்பான் எனக்கு”

“இந்த ஜன்மத்தில் உனக்கு கல்யாணம் நடக்க விடமாட்டா டா இந்த ராதா. ஒரு அப்பாவி பெண் வாழ்க்கையை நான் கெடுக்க விடமாட்டேன்”

கிருஷ்ணாவுடன் பேசிக்கொண்டே ராதா எதையோ தேடினாள்.

“ராதா வேண்டா கட்டையை எல்லாம் எடுத்து அடிக்கக்கூடாது”

“ச்சே சே… கிருஷ்ணா உன்னை போய் நான் அடிப்பேனா”

‘ஐயோ எதோ பிளான் போட்டுட்டா கிருஷ்ணா எஸ்கேப் ஆகிடு’ அவளது கையை விளக்கி விட முயற்சி செய்ய.

“அவ்வளவு சீக்கிரம் விட மாட்டேன் டா” கீழே விழுந்த ரசக்குல்லாவை தேடி எடுத்தவள்.

“அழகா இதை சாப்பிடு நான் உன்னை விட்டுடறேன்”

“எனக்கு இது புடிக்காது டி”

“அதுக்கு தான் சாப்பிட சொல்லுறேன்”

கிருஷ்ணா வாயில் போட்டு அடைத்தாள் தினற தினற அவன் விழுங்கியதும்தான் விட்டாள்.

மனதில் ஆயிரம் வலி இருந்தாலும் ராதா அதை மறைத்து இப்படியே அடிதடியாக இந்த ஒரு வருடம் சென்றது.

அவளது வலியை கண்டு கொண்டாலும் கிருஷ்ணா தூண்டி துருவி அவளிடம் எதும் கேட்கவில்லை



இங்கே உங்கள் கருத்தை சொல்லுங்க நன்றி


threads/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.829/
 
Last edited:

Bindusara

Well-known member
Wonderland writer
18 காதலன்!

பழையதை நினைத்தவளுக்கு ஒன்றுதான் உறுத்தியது.

எல்லோரையும் நான் பாரமாகவும் அடிமையாவும் தான் வச்சி இருக்கேன், இனி அப்படி இருக்கக் கூடாது.

வானத்தை பார்த்துக்கொண்டு நின்றிருந்த ராதா பழைய நினைவுகளை மீட்டவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

கண்ணீரை துடைத்துக் கொண்டவள்.

வானத்தை அன்னாந்து பார்த்தாள்.

அவளது கண்ணீருக்கு போட்டி போடும் வகையாக மழை நீர் அவளது கன்னத்தை நனைத்தது.

"ஏய் செல்லம்... நீயும் எனக்கு போட்டி போடும் வகையில் வந்துட்டியா, லவ் யூ தங்கம்"

வானத்தில் அன்னாந்து கையை வான் நோக்கி உயர்த்த மழை கொட்டோ கொட்டோன்னு கொட்ட, அதில் நன்கு ஆட்டம் போட்டாள், அனுவும் சேர்ந்து ஆட்டம் போட ராதா அருகில் நின்று இருந்தவளை அனு இழுத்து ஆட.

சிறிது சிறிதாக விளகியவள்... அங்கிருந்த அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

உள்ளே மறைவாக அமர்ந்தவள். முகத்தை இரு காலுக்கு இடையில் புதைத்துக் கொண்டாள்.

"ஏன் கடவுளே என்னை கொல்லுற, எதுக்கு என்னை ஒழுங்கா படைக்கலை, எதுக்கு என் குடும்பத்தை என் கூட இருந்து பிரிச்ச. எனக்கு அம்மா அத்தை இருந்திருந்தா, என் தவறை சுட்டிக்காட்டி என்னை நல்லா வளர்த்து இருப்பாங்க இல்ல. எதுக்கு என் குடும்பத்தை எடுத்துக்கிட்ட, கண்ணா கூட இப்படி எல்லாம் இருக்க ஆசைப்பட்டேன். அது உனக்கு பிடிக்கலையா, உனக்கு என்ன நான் ஆசைப்பட்டது எனக்கு தேவையானதை எல்லாம் பிரிக்கனும் அது தானே உனக்கு. கிருஷ்ணாக்கு வேற நான் பாரமாக இருக்கேன் "

மாதவன் ராதாவை பின் தொடர்ந்து வந்தவன் அவள் அழுவது பொறுக்காமல் அருகில் அமர்ந்தான்.

"ராதா" கண்ணின் குரல் கேட்டதும்.

தாய் கண்ட சேய் போல தாவி அவனது கையை பிடித்தவள் விம்மி அழுதாள்.

"கண்ணா… கண்ணா..." ராதா மந்திரத்தை ஜபிப்பது போல தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தாள்.

அவளை பிடிக்கவும் முடியாமல் அவளை விளக்கவும் முடியாமல் கண்ணன்தான் தவித்தான்.

அவளது அழுகை விசும்பலாக மாறியது மூச்சிவிட சிரமப்படுவது போல தெரியவும்.

"ராதா... பொறுமையா இரு ஒன்னுமில்லை எதுக்கு அழுகுற, பிளீஸ் அழுகாத மா முதலில் எந்திரி செல்லம்மா"

அவனது செல்லம்மா என்ற அழைப்பில் மந்திரத்தில் கட்டுப்படுத்தப் பட்டவள் போல எழுந்து நின்றாள்.

'எங்க... ராதாவை காணோம்"' சுற்றி முற்றி பார்த்தவள், மாதவனும் அருகில் இல்லாததை பார்த்த அவளது மனம் பதட்டமாக அவளை தேடி வந்தாள்.

எழுந்து நின்ற ராதா மாதவனின் கையை பிடிந்து கொண்டாள். கையை கோர்த்து கொண்டு, நிற்பதை பார்த்த அனுவுக்கு ஆத்திரம் பொங்கியது.

"ராதா..." அனுவின் குரல் கேட்டதும் மாதவன் தீயை தொட்டது போல தள்ளி விட.

ராதா அடிப்பட்ட பார்வை பார்த்தாள் அவனை.

அனுக்கு ராதாவின் செயல் சுத்தமா பிடிக்கவில்லை, அவளை இழுத்து அறைந்து விட்டாள்.

"ச்சி… எப்படி என் பாஸ்க்கு துரோகம் செய்ய மனசு வந்தது"

"அனு அது தப்பா...இல்லே" வார்த்தைகள் தந்தி அடிக்க.

"பேசாத ராதா உன் மேல காண்டில் இருக்கேன்"

"அனு சாரி இனி இப்படி நடக்காது"

"இனி, என் கூட தான் இருக்க மகளே தனியா எதாவது வேலை பார்க்க நினைத்த சும்மா விட மாட்டேன்"

ராதாக்கு முகமே வாடிப் போனது. "சாரி... பிரண்டா தான் கை பிடித்தேன்" தயங்கி நின்றாள். அதன் பிறகு மூவரும் பேசிக்கொள்ளவில்லை.

மாதவனின் வீட்டில் செம உபசரிப்பு, அனுவுக்கு அனைத்தும் ஸ்பெஷலாக ராதாவை பெரியதாக கண்டுகொள்ளவில்லை அங்கு யாரும்.

மாதவனின் தங்கை தாரகையும் அனுவும் ஒட்டிக்கொண்டே திரிந்தார்கள்.

காலை உணவை முடித்துக்கொண்டு தோட்டத்தை சுத்திக்காட்ட கூட்டி போனான் மாதவன்.

மாதவனும் சரி, ராதாவும் சரி ஒருவர் மாற்றி ஒருவர் முகத்தை கூட பார்க்கவில்லை.

ராதா மனமே கேட்கவில்லை. கிருஷ்ணாவுக்கு போன் போட்டவள், "சாரி கிருஷ்ணா..."

"எதுக்கு இப்போ சாரி சொல்லுற?"

"அது நான் தப்பு செஞ்சிட்டேன்"

"என்ன செஞ்சிவச்ச... உன்னை தனியாவிட்டு வந்தது என் தபபு தான்"

"இல்லை... பழைய நினைவுகள் வந்து கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகிட்டேன். பிரண்ட்லியா மாதவன் கையை பிடிச்சிட்டேன்"

"உனக்கு நிறைய இடம் கொடுத்துட்டேன்னு நினைக்கறேன் ராதா"

"தப்பா இல்லை கிருஷ்ணா. நீ தப்பா நினைக்கலனாலும் பார்க்கறவங்களுக்கு தப்பா தான் தெரியும் ராதா"

"சாரி இனி அப்படி செய்ய மாட்டேன்"

"சரி இனி இப்படி திரும்ப நடந்தா மனுசனாவே இருக்க மாட்டேன்"

"சாரி..." போனை வைத்தவளுக்கு மனதில் குற்ற உணர்ச்சி மீஞ்சி இருந்தது.

பசுமையான கிராமம் அங்கு இருக்கும் கரும்பு தோட்டத்தில் கரும்பு உடைத்து சாப்பிட்டுக்கொண்டே, அந்த ஊர் எல்லைக்கு வந்தார்கள், சுற்றிலும் பசுமை நிறைந்த காடுகள்.

"மாதவன் அந்த காட்டுக்கு போலாமா"

"போலாம், ஆனா! வழி மாறி பிரிஞ்சி போயிட்டா கொஞ்சம் கஷ்டம்"

"அது எல்லாம் தொலைஞ்சி போகமாட்டோம், எப்போ போலாம் அங்கே."

"நாளைக்கு விடியலில் போலாம்" என்றான் மாதவன்.

மதிய உணவுக்கு வீட்டுக்கு வரும் போது வழியில் சில வயதான கணவன் மனைவி அமர்ந்து சாப்பிட்டுட்டு இருக்க.

அதில் ஒரு பழுத்த கணவன் மனைவி சிரித்து சிரித்து பேசிக்கொண்டும்… மாறி மாறி ஊட்டி விட்டுக் கொண்டு இருக்க.

அதை பார்த்த ராதா இருவரையும் பார்த்தவாறு நின்று கொண்டாள்.

அனுவும் தாரகையும் முன்னே போக.

மாதவன் ராதாவை திரும்பி பார்க்க.

'என்ன பார்த்துட்டு இருக்க?' அவள் பின் வந்து நின்றான்.

ராதா ரசித்ததை அவனும் ரசித்தான்.

'ராதை... இதுபோல தானே அன்பான எளிமையான வாழ்க்கை வாழ நினைத்தேன், எல்லாம் கனவா தானே போச்சி' மனதில் வருந்தியவன்.

"ராதா கிளம்பலாமா"

அருகில் கேட்ட அவனது குரலில் அதிர்ந்தவள் சேற்றில் விழுந்தாள்.

அவளை பிடிக்க மாதவன் கையை நீட்ட கையை பிடித்து இருவரும் நேராக நிற்பதற்க்குள் இருவரும் தடுக்கி சேற்றில் விழ.

"என்ன இந்த இரண்டு பேரும் காணோம்" தாரகையும் அனுவும் இருவரை தேடி வர, இருவரும் விழுந்து கிடக்கவும் சரியாக இருந்தது.

'இவளை... என்ன செய்ய முதலில் பாஸை இங்கே வர சொல்லனும்' அனு மனதில் நினைத்துக்கொண்டு வந்து இருவரையும் தூக்க உதவி செய்ய.

அங்கு நாத்து நட்டுக்கொண்டு இருந்த பெண்கள், விழுந்தது தான் விழுந்திங்க, வந்து ஒரு வரிசை நாத்து நட்டுட்டு போங்க.

ராதாவுக்கு மாதவன் சொல்லிக் கொடுக்க சமத்தாக செய்தாள்.

இருவரின் பார்வைகள் அடிக்கடி சந்தித்தாலும் நடுவதை முடித்தவர்கள்... பம்பு செட்டில் சேற்றை கழுவிக்கொண்டு வெளியே வர.

ராதாவின் ஆடை நன்றாக உடலோடு ஒட்டி இருப்பதை பார்த்த மாதவன் தனது சட்டையை கொடுத்தான்.

"இல்லை வேண்டா மாதவன்"

"பிரண்டா கொடுத்தா கூட வாங்கிக்க மாட்டியா"

ராதா மறுக்காமல் வாங்கி போட்டுக்கொண்டாள்.

அனு தான் இருவரையும் முறைத்துக்கொண்டே வந்தாள். தாரகை சில முறை ராதாவிடம் பேச முயற்சி செய்தால் ஆனால் ராதா கண்டுகொள்ளாமல் போயிட்டா.

அதன் பிறகு தாரகைக்கே ஒரு போல இருக்க ஒதுங்கி இருக்க ஆரம்பித்தவள் இயல்பாக அனுவுடன் ஒட்டிக்கொண்டாள்.

வீட்டுக்கு வந்ததும் ராதாவின் உடை உளர்ந்திருந்தது, வீட்டை நெருங்க சிறு தூரம் இருக்கும் போதே.

ராதா மாதவனின் சட்டையை கழற்றி கொடுத்துவிட்டாள்.

'என்னோட சட்டை ஒன்னு வேணும் என்று பல முறை கேட்டிருக்கிறாள். கொடுக்கும் சந்தர்ப்பம் அவனுக்கும் அமையவில்லை, வாங்க அவளும் மறந்திருந்தாள்... பழைய நினைவுகள் இருவரின் மனதிலும் ஆர்பரித்தது.

'எல்லாம் முடிந்தது... என்றும் இணைய முடியாத பாலம் இது, ஒதுங்கி போறது தான்சரி' என்று நினைத்தவன் தன் சட்டையை தோளில் போட்டுக்கொண்டு, வீட்டை நெருங்க.

அனுவும் ராதாவும் மேலே இருக்கும் அறைக்கு போக.

ராதாவை அமர வைத்து அனு பேச துவங்கினாள்.

"ராதா நீ செய்யுறது எதும் சரி இல்லை, என் பாஸ்க்கு துரோகம் செய்யாதே"

"எதே உன் பாஸா!"

"ஆமா என் பாஸ் தான், உன் உடமையை என் பாஸ்ன்னு சொல்லும் போதே, உனக்கு வலிக்குது இல்ல. இந்த விஷயம் பாஸ்க்கு தெரிந்தா என்ன ஆகுரது, இன்னொரு முறை அவரது மனதை உடைக்க நீ நினைத்தால் நான் சும்மா உட்கார்ந்து வேடிக்கை பார்க்க மாட்டேன் புரியுதா"

"உனக்கென்ன என் மாமா மேல அவ்வளவு அக்கரை"

"ஏய் நான் பேசிட்டு இருந்தா நீ எதுக்கு நான் சிங்கா பேசிட்டு இருக்க" அனு ராதாவை திட்ட.

"நான் கேட்டதுக்கு பதில் சொல்லு அனு எனக்கு தெரிஞ்சிக்கனும்"

"பிகாஸ் அவர் என் பாஸ் நீ என் பிரண்ட், உன்னை வழி மாறி போக நான் விடமாட்டேன்"

"அப்படி போனா என்ன செய்யுவ" ராதா திமிராக சொல்ல.

"ராதா என்னை கோபப் படுத்தாத, அந்த நல்ல மனுசனுக்கு விஷயம் தெரிய கூடாது. அதனால் அவர் உடைந்து உட்கார கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் நான் பொறுமையா இருக்கேன்"

"போதும் ராதா உன்னால சார் ஒரு முறை தலை குனிந்ததே என்னால தாங்க முடியல. நீ செய்த ஒரு நாள் கூத்துக்கு அவர் வாங்கின பேச்சு என்னன்னு தெரியுமா? சிங்கம் டி அவரு. அவர் முன் நின்று பேசவே அவன் அவனுக்கு காலு நடுங்கும். ஆனா ஒரே நாளில் அவரை தலை குனிய வச்சிட்ட, அந்த பாஸ்க்கும் அறிவு இல்லை. நீ சொல்லுற பேச்சு எல்லாம் கேட்டுட்டு ஆடுறாரு. நான் மட்டும் அவர் இடத்தில் இருந்தா இன்னேரம்..." அனு நீண்ட கோப வசனம் பேசிவிட்டு நிற்க.

'ச்சே தொண்டை தண்ணி வந்துடுச்சி இவளோடு மல்லுக்கட்டி' அருகிலிருந்த செம்பை காலி செய்தவள் ராதாவை முறைக்க.

"தண்ணி குடிச்சிட்டியா இப்போ சொல்லு கிருஷ்ணா இடத்தில் நீ இருந்தா என்ன செஞ்சி இருப்ப"

"மாதவன் கூட டைம் ஸ்பென்ட் செய்யனும்னு சொன்ன போதே, தூக்கிப்போட்டு மிதிச்சி இருப்பேன். கேட்ட அந்த வாயை கிழித்து சுனாம்பு வச்சி இருப்பேன்..."

"அப்புறம் இன்னும் சொல்லு அனு"

"அவன் கையை பிடித்து கையை வண்டில வச்சி ஏத்தி இருப்பேன்... கட்டிப்பிடித்து இருந்ததை பார்த்த அப்போ அடிச்சி இழுத்துட்டு போய் இருப்பேன்"

"சேற்றில் விழுந்து பிரன்டப்போது... மூச்சை சேற்றில் வைத்து அழுத்தி இப்போ விட்டுட்டு இருக்கும் மூச்சை அப்பவே நிறுத்தி இருப்பேன்"

அனு கோபமாக வெளியே போக பார்த்தவளின் கையை பிடித்து இழுத்த ராதா.

"உனக்கு என்ன கிருஷ்ணா மேல அவ்வளவு அக்கறை"

"ஏன்னா அவர் நல்லவர் அவர் வாழ்க்கை பாலாக போக நான் விட மாட்டேன்"

"புரியலை" ராதா சந்தேக பார்வை பார்க்க.

"புரியும் படி சொல்லட்டா, உன்னை டிவோஸ் செஞ்சிட்டு நல்ல பெண் பார்த்து அவருக்கு கட்டி வைக்கனும் அவருக்கு"

"ஓ… சரி எனக்கு டிவோஸ் வாங்கி கொடுத்துட்டு, நீ செகன்ட் ஹான்டா கட்டிக்கோ"

"செகன்ட் ஹான்ட் சொல்லாத அவரு பத்தாவது ஹான்டா இருந்தாலும் அவர் ஒர்த் குறையாது"

"ஓ... உன் பாஸை லவ் செய்யறயா அனு"

"எதே லவ் வா... அறைஞ்சேனா வையி, அவர் எனக்கு குரு போல"

ராதா கிருஷ்ணாவிடமும், அனுவிடமும் நன்றாக வாங்க போறா
 

Bindusara

Well-known member
Wonderland writer
19… காதலன்!

"உன்கிட்ட எல்லாம் மனுசன் பேசுவானா? எங்க இரண்டு பேரையும் சேர்த்து வச்சி பேசி டிவோஸ் வாங்கி மாதவனை பிக் அப் செய்யலாம்'ன்னு தானே பார்க்கற... உன் புத்தி ஏன் இப்படி போது ராதா, முன்ன எல்லாம் நீ இப்படி இல்லையே?" அனு கொந்தலித்தாள்.

"பாருடா கரெக்டா கண்டு பிடிச்சிட்ட"

"ச்சி உன்கிட்ட மனுசன் பேசுவானா இனி என்கிட்ட பேசுற வேலையை வச்சிக்காத"

"சந்தோஷம்... இன்னும் கொஞ்ச நாளுக்கு அமைதியா இரு, எங்க இரண்டு பேர்க்கு நடுவில் வராத"

"ச்சி, நீ எல்லாம் பொண்ணே இல்லை"

"பாருடா, இப்போ தான் தெரியுதா, நான் பொண்ணு இல்லைன்னு"

"உன்னை ரகுவரன் அங்குளும் பாஸும் கெடுத்து வச்சி இருக்காங்க, அவங்களை சொல்லனும்"

"போதும் உங்கள் சொற்ப்பொழிவு… இடத்தை காலி பண்ணு"

"ச்சி... போ உன் வழியில் கூட இனி நான் வரக்கூடாது"

"சந்தோஷம்"

"போடி" அனு ஆத்திரமாக மாடிப் படியை இறங்கிப் போகும் போது.

"அனு அப்படியே கண்ணாவை வரச்சொல்லு"

"முடியாது போடி"

"திமிரு பிடிச்சவளே... இவளை எல்லாம் திருத்தவே முடியாது"

"அனு என்னாச்சி திட்டிட்டே வர, யாரை இப்படி வதக்கிட்டு வர" தோட்டத்தில் இருந்து வந்து கொண்டிருந்த மாதவன் காதில் சரியாக பட.

'இவ எதுக்கு நம்மை கூப்பிட்டு விடுறா?'

"உன்னை சத்தியமா அவ கூப்பிடலை உங்க அம்மா தான் கோழியும் காடையும் அறுக்க கூப்பிட்டாங்க" அனு மாதவன் கையைப்பிடித்து இழுத்து போக.

மேல் இருந்து ராதா அனுவையும் மாதவன் கை கோர்த்து நடந்து போவதையும் அவன் அம்மாவுடன் அனு சிரித்து பேசுவது, தாரகையுடன் விளையாடுவதையும் மாறி மாறி பார்த்தவள்.

இப்படி எல்லாம் இருவரும் நினைத்தது நடந்தது, ஆனால் அது அனுவுடன்.

மாதவன் வீட்டில் இருப்பவர்கள் அனுவை தூக்கி வைத்து கொண்டாடுவதை பார்த்து ராதாக்கு மனம் வருந்தியது.

நான் இருக்கனும்னு நினைத்த இடத்தில் அனு இன்று பட்டாம்பூச்சியா சிறகடிப்பதை பார்த்து, மனதில் ஒரு ஓரத்தில் ஏக்கமாகதான் இருந்தது ராதாவுக்கு.

அங்கு இருந்து அவர்களை வேடிக்கை பார்க்க பார்க்க மனதால் பலவீனமாக உணர்ந்ததை தடுக்க அறைக்குள் புகுந்து கொண்டாள்.

அங்கிருந்த புத்தகங்களை எடுத்து பார்த்தவள் எதாவது உருப்படியாக படிக்க கிடைக்குமா, என்று தேடியவள் கண்ணில் சுவாரசியமாக.

"என்ன பெட்டி இது" அவள் எடுத்து பார்க்கவும் அதிர்ந்து நின்றாள்.

"இதை எல்லாம் எரிச்சிட்டென்னு சொன்னானே இன்னும் எதுக்கு வச்சி இருக்கான்"

மாதவன்... மனதில் ஏதோ தப்பா பட, வேகமாக கோழியை அறுத்து முடித்து மேலே வர.

'இவன் எதுக்கு ராதா இருக்க இடத்துக்கு போறான் சரி இல்லையே' அனு பின் தொடர்ந்து போனாள்.

மாதவன் அம்மா தங்கை சமைப்பதில் பிசியாக இருந்தார்கள்.

வேகமாக வந்த மாதவன் அவளது கையில் இருந்த பொருட்களை பிடுங்கியவன்.

"எதுக்கு என் பொருளை எடுத்த"

"ஓ... இது உன்னோடதா கண்ணா, மீன் கண்ணன்"

"இதை பத்தி பேச எதும் இல்லை விடு ராதா"

"இல்லை நான் பேசியே ஆகனும்"

"அதான் எதும் இல்லன்னு சொல்லுறேனில்ல"

"இது உனதா... இந்த கொழுசு நீ போட்டுப்பியா... இந்த தோடு உனக்கு எப்படி கிடைச்சது"

'எல்லாம் பாத்துட்டாளா... ச்சே, வேற ரூம் கொடுத்து இருக்கனும் மறந்துட்டேன்'

வெளியே இருந்த அனு இவர்களை மறைந்து நின்று பார்த்தாள்.

"கண்ணா நம்ம சேர்ந்து வாழலாம் என்னை விட்டுடாத"

"அப்போ கிருஷ்ணாவின் நிலை"

"அவனை டிவோர்ஸ் செஞ்சிடுறேன், உன்னை பிரிந்து என்னால் ஒரு நொடி கூட இருக்க முடியாது"

ராதா கண்ணாவை அணைத்துக் கொண்டாள்.

பட் என ஒரு சத்தம் அனு சுற்றி முற்றி பார்த்தவள்... " ச்சி கனவா நான் கூட பயந்துட்டேன், ஏதோ ஏடா கூடமாக மாறுதுன்னு எங்க பாஸ் வாழ்க்கை வீனா போயிடுமோ என்று"

"என்ன மிஸ்டர் மாதவன், இந்த ரூம் கொடுத்தது தப்புன்னு நினைக்கிறயா"

"நீ கீழப்போ... ராதா"

"முடியாது மாதவன். நீ பிரேக் அப் செஞ்சதுக்கு உண்மையான காரணம் எனக்கு தெரியனும்"

"அதான் சொன்னனே. உன்னை போல ஒரு டாமினன்ட் கேரக்டர் கூட என்னால வாழ முடியாது"

"சரி நீ சொன்னது எல்லாம் சரி தான், அப்போ என் திங்க்ஸ் இங்க ஒளித்து வைக்க என்ன காரணம்"

"மறைத்து வைக்க எந்த காரணமும் இல்லை உன்னை பிரேக் அப் செஞ்ச அப்புறம், இங்க வரலை’ ன்னு அர்த்தம். இப்போ என்ன இது என் கிட்ட இருக்க கூடாது அவ்வளவு தானே, சரி இனி ஒரு செகன்ட் கூட இருக்காது" அந்த பெட்டியை எடுத்து வேகமாக ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு திசையில் தூக்கி எரிந்தான்.

"இப்போ சந்தோஷமா. வா சாப்பிட போலாம்" என்றவன் சாந்தமாக நடந்தான்.

"ச்சே... இவன் கிட்ட எல்லாம் மனுசன் பேசுவானா"

கோபமாக உள்ளே வந்த அனு.

"ராதா நீ முடிஞ்சி போனதை கிளராதே"

"அப்படிதான் பண்ணுவேன் உனக்கு என்ன" ராதா கடுப்பில் பதில் சொல்ல.

"நீ பெண்ணெ இல்லைடி" அனு திட்டினாள்.

"ஆமா நான் பெண் இல்லை போதுமா ராட்சசி, அடங்கா பிடாறி. இன்னும் இன்னும் இது போல தானே எனக்கு பெயர் வச்சிட்டு இருங்கிங்க, அது எல்லாம் நான் தான், அதுக்கு இப்போ என்ன"

கோபமாக அங்கு இருந்து, ராதா கீழே சாப்பிட போனாள்.

"வா மா… சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா" மாதவன் அம்மா கேட்க.

"சரி அத்தை... என வாய் வரை வந்ததை மாற்றி அம்மா" என்றாள் ராதா.

"அன்று அப்படியே நகர்ந்தது" ராதா ஒதுங்கியேதான் இருந்தாள், அனுவும் முகத்தை திருப்பிக் கொண்டு திரிந்தாள்.

ராதாக்கு இவர்களோடு இருப்பது சுத்தமாக பிடிக்கவில்லை.

வாசலுக்கு வந்தவள், அங்கிருந்த மாடுகளை பார்த்து நடந்து கொண்டு இருந்தாள்.

'ஒரு வருசம் எப்படி போயிடுச்சி இல்லை, கிருஷ்ணாதான் பாவம் என்னை வச்சி எப்படி சமாளித்தானோ. ரகுவரனை கூட வீட்டுப் பக்கம் வர விடவில்லை, வெளிநாட்டில் உள்ள அனைத்து வேலைகளுக்கும் துரத்தி துரத்தி, அவரையும் சேர்த்து ஒரு வழி செஞ்சிட்டேன்' அந்த ஒரு வருடத்தை மனதில் நினைந்தவளுக்கு பிரம்மிப்பாகவும் நிறைய சிறுப்பிள்ளையாக நடந்துக் கொண்டது அவளுக்கே அசிங்கமாக இருந்தது.

முன்பு போல மனதில் ஒன்று வெளியே ஒன்று நடிக்க முடியவில்லை, மனதில் நினைத்தது எல்லாம் செயலில் செய்தாள்.

கோபம் வரும் போது சுவற்றில் குத்திப்பது ஆத்திரத்தை அடக்க முடியாத அளவுக்கு கோபம் வரும் போது, நிறைய பையித்தியக்காரத்தனம் செய்து இருக்கிறாள்.

ஒவ்வொரு முறையும் கிருஷ்ணாதான் தினறிப் போனான்.

கடைசியாக ஒருவருடம் அமைதியாக இருந்தவன்.

ஒருவருடம் முடிந்த அன்று பட்டுப்புடவை நகை தொடங்கி பெண்பார்ப்பதற்க்கு தேவையான அனைத்தையும் வாங்கி வந்தான்.

தலை கீழாக சோபாவில் படுத்து இருந்த ராதாவை முறைத்துக்கொண்டே வந்தான்.

"கிருஷ்ணா வந்துட்டியா எங்கே என் ரசகுல்லா"

'திங்கரதிலேயே இரு' முணுமுணுத்தான்.

"டேய் சத்தமா பேசு காது கேட்கலை"

"எப்படி உட்காந்து இருக்க எழு முதலில்"

"யோகா செஞ்சிட்டு இருக்கேன் போ டிஸ்டப் செய்யாதே" தலைகீழாக படுத்து கொண்டு டாம் அண்ட் ஜெர்ரி பார்க்க துவங்கினாள்.

"கரூமம் இது யோகாவா? எழுடி முதலில்"

"ஆப்பிஸ்லையே இருந்திடு இந்த பக்கம் வராதே எப்போ பாரு நைநைன்னு டார்ச்சர் செஞ்சிட்டு அந்த அனுகிட்ட சொல்லி உன்னை வச்சி செய்யனும்"

"நானே ஒரு வாரம் அவ இல்லாம, ஜாலியா இருக்கேன் நீ வேறு ஏன்டி"

"அது எல்லாம் என் டிரைனிங் எப்படி"

"அதானே பார்த்தேன், அமைதியான பொண்ணை கெடுத்து வச்சி இருக்க"

"ஈஈஈஈ... அதை விடு தங்கம், எங்கே ஸ்வீட்ஸ்" அவன் கையில் இருந்த பையை பிடுங்கியவள்.

"என்னாடா புது டிரஸ்சா, ஸ்வீட் எங்கே"

"ஸ்வீட் எல்லாம் இல்லை, இந்த புடவை பிடிச்சி இருக்கா பாரு"

"இது எதுக்கு"

"நாளைக்கு உன்னை பொண்ணு பார்க்க வராங்க அதுக்கு"

கையில் இருந்த புடவையை தூக்கி எரிந்த அவள்.

"கொஞ்சம் கூட அறிவே இல்லையா, எனக்கு கல்யாணம் செஞ்சி வைன்னு கேட்டேனா உன்னை"

"ஒரு வருசம் டைம் கேட்ட இல்லை அது முடிஞ்சது"

"கிருஷ்ணா என்னை கோபப் படுத்தாதே"

"ராதா… நீ தான் என்னை கோபம் படுத்திட்டு இருக்க நீ கேட்ட டைம் முடிஞ்சது, நான் சொல்லுவது கேட்கலை என்றால், இங்கே நடக்கறதே வேற"

"என்னடா உன்னால பண்ண முடியும், என் விருப்பம் இல்லாமல்"

"நாங்க இரண்டு பேரும் உன் குடும்பம்ன்னு நினைத்தா, இதுக்கு நீ ஓகே தான் சொல்லனும்"

கிருஷ்ணா ராதா அடங்கும் இடத்தை தாக்கினான்.

ராதாவால் பதில் சொல்ல முடியாத நிலை.

"கிருஷ்ணா… ஆஆஆ"

"போதும் டி, பேசாத இது தான் என் முடிவு"

"மாமா வரட்டுமே"

"எதுக்கு அந்த மனுசன் வந்து காரியத்தை கெடுக்கவா நாளைக்கு ஒன்பது மணிக்கு தயாரா இரு"

"ம்ம்ம்"

ராதாக்கு உடல் விறைத்தது, 'எப்படி வேறு ஒருவொருடன் வாழ்வது' அந்த இரவு தூங்கா இரவானது ராதாக்கு.

வேண்டா வெறுப்பாக எழுந்தவள், கஷ்டப்பட்டு கண்ணீரை அடக்கினாள்.

தன் அப்பா அம்மா அத்தை புகைப்படத்துக்கு முன் நின்றவள்.

"எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் முடியலை, வேறு ஒருத்தர்கிட்ட எப்படி வாழ்வது. மனதில் ஒருவனை வச்சிட்டு, வேறு ஒருவனையும் ஏமாற்றி இந்த நரக வாழ்க்கை வேணுமா" அழுது கொண்டே இருப்பதை பார்த்த கிருஷ்ணன்.

"ராதா கண்ணை துடச்சிட்டு முதலில் போய் ரெடி ஆகு"

"ம்ம்ம்" ராதா ஒரு வார்த்தையும் பேசலை.

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து முகத்தை கண்ணாடியில் பார்க்கிறாள்.

அவளது தோற்றத்தை பார்த்து அதிர்ந்துதான் போனாள்.

உடலில் தோள் மட்டும் தான் இருந்தது, இளஞ்சிவப்பு கலரில் இருந்தவள் கருத்து காணப்பட்டாள்.

'இந்த மூஞ்சை யாருக்கும் பிடிக்காது ராதா கவலை படாதே' கான்பிடன்டா போய் வந்தவர்கள் முன் நின்றாள்.

"ராதா ஆசிர்வாதம் வாங்கிக்கோ"

"எல்லாம் பிக்ஸ் ஆகட்டும் மாமா அப்போ பாத்துக்கலாம், சும்மா வரவங்க போறவங்க காலில் விழுவதற்க்கு நான் என்ன லூசா"

"இது என் அத்தை பொண்ணு இரண்டு டிகிரி படிச்சி இருக்கா, கொஞ்சம் விளையாட்டு பொண்ணு, இருக்குற சொத்துல பாதி இவளுக்கு தான். சீர் பத்தி கவலை படாதிங்க" கிருஷ்ணன் விளக்கமாக சொல்ல.

வந்து இருந்த ஒரு பெண்மணி குரலை சரி செய்து கொண்டு, "ஏம்பா நீயே கல்யாணம் செஞ்சிக்கிறது வெளியே எதுக்கு மாப்பிள்ளை கேக்குறிங்க?"

"சொந்தத்தில் கல்யாணம் செய்யற அப்பாக்கும் சரி எனக்கும் சரி விருப்பம் இல்லைங்க"

"ஓ..." அந்த பொம்பிளை இளக்காரமாக கிருஷ்ணாவை பார்த்து வைத்தாள்.

"மாமா இவங்களை எழுந்து போக சொல்லு என்னால முடியலை கண்ட படி பேசிட போறேன்" கிருஷ்ணா காதை கடித்தாள்.

"ராதா அமைதியா இரு. மானத்தை வாங்கிடாதே" கிருஷ்ணா ராதாவை அடக்கினான்
 

Bindusara

Well-known member
Wonderland writer
20…காதலன்!


“இந்த கிருஷ்ணாக்கு அறிவே இல்லை, கண்ட கண்ட நாய் வந்து என்னென்ன கேக்குதுங்க. சிங்கம் மாதிரி நிற்க்காம, பிசாசு அவங்க கேட்குறதுக்கு பதில் சொல்லிட்டு இருக்கான்” மெல்லிய குரலில் கிருஷ்ணாவை திட்டிட்டு இருந்தாள்.

கூட்டத்தில் ஒருவர்,

“டாய் அந்த பெண்ணை பிடிச்சி இருக்கா?”

அந்த மாப்பிள்ளையும் மேலும் கீழும் பார்த்தவன்.

“பொண்ணு சுமாராதான் இருக்கு, அட்ஜஸ்ட் செஞ்சிக்கலாம், என்ன கலர்தான் கொஞ்சம் கம்மியா, இதுல கண்ணாடி வேற போட்டு இருக்கு” ராதாக்கு கோபம் வந்தாலும் சபை முன் கூனி குறுகி நின்றாள்.

ஏதேதோ எண்ணங்கள் ஓடியது ராதாக்கு, ‘ஒரு வேலை கண்ணாக்கு என் அப்பியரன்ஸ் பிடிக்கலையா? ஆமா... இல்லை‘ தனக்கு தானே பைத்தியம் போல நினைத்துக் கொண்டு இருந்தாள்.

கண்ணனுடன் பழக தொடங்கும் போது கண்ணாடி போடவில்லை கலரும் அதிகமா இருந்தது. ஒரு வேலை அதால என்னை விட்டுட்டு போயிட்டானா... மனம் எனும் சாத்தான் அவளை ஆட்டிப் படைத்தது.

அவளது மனம் ஒரு பக்கம் பயணம் செய்து கொண்டு இருக்க.

கிருஷ்ணாவின் பீப்பியை ஏத்தி கொண்டு இருந்தனர் வந்திருந்த குடும்பத்தினர்.

“பொண்ணு மூஞ்சி ஏன் வாடி போய் இருக்கு, எதாவது லவ் மேட்டர்னா முன்னாடியே சொல்லிடு மா, நாங்க கவுரவமான குடும்பம். சபையில் வந்து எதாவது நடந்ததுனா, நாங்க சும்மா இருக்க மாட்டோம்” மாப்பிள்ளையின் அம்மா.

“நீங்க வளர்த்த பொண்ணு’ன்னு சாதாரணமா எல்லாம் கல்யாணம் நடத்த கூடாது... சீர் எல்லாம் பிரமாண்டமா செய்யனும்” அதிகாரமாக சொன்னார் மாப்பிள்ளையின் அப்பா.

‘என்ன இவனுங்க கல்யாணம் ஏதோ நிச்சியம் செய்த அளவுக்கு பேசுராங்க’ கிருஷ்ணா அனைவரையும் ஒரு பார்வை பார்த்து வைத்தான்.

“சரிங்க நாங்க அப்பாகிட்ட சொல்லி சேதி அனுப்புறோம்” அவர்களை வெளியே அனுப்புவதிலேயே கிருஷ்ணா குறியாக இருந்தான், அவர்கள் பேச்சி அவனுக்கு சுத்தமா பிடிக்கவில்லை.

“அப்புறம் இன்னொரு விஷயம்... மாப்பிள்ளை துவங்கும் போதே கிருஷ்ணா.

“சரிங்க கிளம்புங்க... நாங்க சொல்லி அனுப்பறோம்” விட்டா பேசிட்டே இருப்பானுங்க போல மனதில் வைத்துக்கொண்டு கிருஷ்ணா சிரித்த முகமாக சொல்ல.

“என்ன வெளியே அனும்புவதில் குறியாக இருக்கிங்க? மரியாதை தெரியாத குடும்பம் போல” கூட்டத்தில் ஒரு தலை சொல்ல.

அடக்கி வைத்திருந்த கிருஷ்ணா பொங்கி எழுந்தான்.

“அதான் தெரியுமில்ல முன்னவே குடும்பத்துக்கு மரியாதை தெரியாதுன்னு, அப்போ எதுக்கு இப்படி தயாராகி வாசப் படி ஏறி வந்திங்க”

பக்கம் இருந்த பிரோக்கரை கிருஷ்ணா முறைக்க.

அவரோ, “அம்மா அமைதியா இருங்க எதுக்கு தேவை இல்லாதது பேசிட்டு இருக்கிங்க”

“எதுங்க தேவை இல்லாதது, மரியாதை தெரியாத குடும்பத்தில் மாட்ட வச்சிட்டு நீ போயிடுவ, என் பையன் வாழ்க்கை பாலாகி இருக்கும் நல்ல வேலை தப்பிச்சோம்” மாப்பிள்ளை அம்மா சிலாகிக்க.

“ஓனான் மாதிரி பையனை பெத்துட்டு தங்க புள்ளையாம்ல… தங்க புள்ளையா, திமிரு பிடிச்ச குடும்பம். காசுனா வாயை பிளந்துகிட்டு வந்துட்டு, அதிகாரம் வேற வெளியே போங்கடா கேடி பசங்களா”

“யாரை பாத்து ஓனான் சொல்லுற” இந்த முறை மாப்பிள்ளை எகிறிக் கொண்டு வந்தவன் கிருஷ்ணா சட்டையை பிடிக்க.

“யாரு வீட்டுக்கு வந்து யார் சட்டையை பிடிக்கிற” ஓங்கி ஒரு அறை விட்டவன்.

அந்த கிறுக்கு ஓனான் கீழே விழுந்தான்.

“ஏய் பிரோக்கர் இவன் எங்கே வேலை செய்யறான்னு சொன்ன?”

“***** கம்பெனியில் மேனேஜர்” என்று புரோக்கர் சொல்ல.

“ஏன்டா பரதேசி நாயே மேனேஜர் வேலையில் இருக்க உனக்கு இவ்வளவு திமிரா, என் கீழ நூறுக்கணக்கான மேனேஜர் இருக்காங்க. என் முன்னாடி நிக்க கூட உனக்கு தகுதி இல்லை சட்டைய பிடிக்கிறியா, எங்க வீட்டு பெண்ணை குறை சொல்ல உனக்கு எவ்வளவு திமிர் இருக்கு பரதேசி பயலே”

கோபமாக யாருக்கோ போன் போட்டு, “மச்சான்... ஒருத்தன உன் கம்பனியில் இருந்து தூக்கனும்”

அந்த புறம், “நீ பேரை சொல்லுடா”

“டேய் உன் பெயர் என்ன”

“சார் அப்படி எதும் செஞ்சிடாதிங்க அந்த வேலையை நம்பிதான் நான் இருக்கேன்” அந்த ஓனான் மாப்பிள்ளை கிருஷ்ணா காலில் விழ.

“டேய் உன் பேரை சொல்லு”

“சார்…“ தயங்கிக் கொண்டே கோபி என்றான்.

“கோபியாம் மச்சான்”

“சார் விட்டுடுங்க சார்” கிருஷ்ணா காலில் சரண்டர் ஆனான் அந்த ஓனான் மாப்பிள்ளை.

“சரி மச்சான் அவன் காலுல விழுந்துட்டான், விட்டுடு ஆனா ஒரு ஹெல்ப்”

“சொல்லுடா… டி பிரமோட் செஞ்சிடு அவனை”

“சரி டா... இப்போவே மாத்திட்டேன் அவன் வேலையை”

“தேங்க் யூ டா”

“பாய் டா, நான் கூப்பிடுறேன்”

கிருஷ்ணாவின் ஆளுமையை பார்த்த அனைவரும் அதிர்ந்து இருந்தது உண்மைதான்.

அந்த ஓனானின் அம்மா மனதில் தோன்றும் கெட்ட வார்த்தைகள் எல்லாம் ராதாவை பார்த்து திட்டிக் கொண்டு இருந்தார்.

அவர் மனதில் திட்டுவது அனைத்தும் ராதா காதுக்கு அசிங்கமாக கேட்பது போல ஒரு உணர்வு ஏற்ப்பட்டது.

ஓனான் மாப்பிள்ளையின் கால்கள் அதிர்ந்தது.

‘ஐயோ... எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த போஸ்டிங்க்கு வந்தேன் எல்லாம் போச்சி’ மனதில் வெதும்பினான்.

“என்ன இப்படி எல்லாம் செஞ்சா நாங்க பயந்திடுவோமா, இந்த வேலை இல்லைனா இன்னொரு வேலை. என் பையன் திறமைக்கு பெரிய பெரிய கம்பெனியில் இருந்து எல்லாம் வேலை கிடைக்கும்” அவனது அம்மா ஆரம்பிக்க.

“அம்மா வாயை மூடு இருக்க வேலையும் போய்ட போகுது” தன் அன்னையை அடக்கியவன்.

“சார் அவங்க சொன்னதை எதும் மனசில் நினச்சிக்காதிங்க” பம்பியவன்.

“சார் ரொம்ப கஷ்டப்பட்டு அந்த வேலைக்கு பிரமோசன் இப்போ தான் கிடைச்சது, என் பியூச்சர் இதில் தான் இருக்கு, கொஞ்சம் எங்க பாஸ்கிட்ட சொல்லுங்க சார்”

“சரி பார்க்கலாம்... அதுக்கு முன்னாடி ஏதோ எங்க ராதா பத்தி சொன்னிங்களே அது என்ன?”

“சார் சாரி சார், மாப்பிள்ளை கெத்தை காட்ட சொன்னேன், அவங்க அழகாதான் இருக்காங்க சார்”

“அது இன்னொரு முறை எதாவது பெண்ணை அவளது உருவத்தை பத்தி பேசியது தெரிந்தது மகனே, பைத்தியமா தெருத்தெருவா சுத்த விட்டுடுவேண்”

“சரிங்க சார்”

கூட்டத்தில் ஒரு கல்லூரி படிக்கும் மாப்பிள்ளை அம்மாவிடம் ஒரு வீடியோவை காட்ட.

“ஏன்டா பெருசா பேசிட்டு இருக்க... இந்த வீடியோவை பாரு, ஏவனையோ லவ் செஞ்சி சீரழிஞ்சவளை ஏமாத்தி கட்ட பார்த்துட்டு திமிரை பாரு, ச்சி எல்லோரும் வாங்க போலாம். இந்த வீட்டில் ஒரு நிமிசம் இருந்தாலும் இவங்க புத்தி நமக்கு ஒட்டிக்கும்”

“அம்மா வாயை வச்சி அமைதியா இரு, உயிரை வாங்கிட்டு திரும்ப வேலை கிடைக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா”

“டேய் வேலை இல்லைனா பரவாயில்லை, இருக்குற சொத்தை வித்து தின்னு வாடா பெரிய வேலையாம் வேலை”

கிருஷ்ணா ஆத்திரத்தில் நண்பனுக்கு அழைத்து, “அந்த பரதேசி பையன்... இனி எந்த வேலைக்கும் போக முடியாத அளவுக்கு செஞ்சி விடு”

“சரி டா”

அங்கு மாப்பிள்ளை வீட்டாரை அழைத்து வந்த புரோக்கரை கிருஷ்ணா லெப்ட் அன்ட் ரைட் வாங்கினான்.

“ஏன்டா உனக்கு நல்ல குடும்பமே கிடைக்கலையா, போய் நல்ல குடும்பமா நல்லா விசாரித்து இன்னும் ஒரு நாள்ல எனக்கு லிஸ்ட் வேணும்”

“சரிங்க சார்”

ராதா இங்கு நடக்கும் வியாபாரத்தையும், அதனால் ஏற்ப்பட்ட அசிங்கத்தையும் பார்த்தவள். அமைதியாக கண்ணாடி முன் உட்கார்ந்து தன் முகத்தை உத்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.

‘நான் நல்லா இல்லையா? என் கண்ணில் பிரச்சனை வந்தா கண்ணாடி தானே போடனும் அதுக்கு எதுக்கு எதுக்கு பெருசா பேசுறாங்க. கலர் தான் முக்கியமா, பஞ்சத்துக்கு அடிபட்டது போல தான் இருக்கேனா, நல்லா தானே சாப்பிடுறேன். வெயிட் எப்படி குறைந்தது’ மனதில் ஆயிரம் கேள்விகள் அங்கு நடந்தது அனைத்தும் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது ராதாவுக்கு.

‘என்ன வாழ்க்கை இது... நான் முதலிலேயே சொன்னேன் காதல் வேண்டாம் நண்பர்களாக இருந்து இருக்கலாம், நான் சந்தோஷமா இருந்து இருப்பேன். எனக்கு தேவைப்படுவது எனக்கு எப்போதும் கிடைக்க கூடாதுன்னு என் தலையில் எழுதி வச்சிட்டானே அந்த கடவுள்’

இடிந்து அமர்ந்திருக்கு ராதாவின் அருகில் வந்து நின்றான்.

“சொல்ல குட்டி...”

“கிருஷ்ணா... நான் அழகா இல்லையா, கருப்பா இருக்கனா? என்னை எல்லாம் யாருக்கும் பிடிக்காதா”

“உனக்கு என்னடா தங்கம், இவன் இல்லைனா என்ன உனக்கு ராஜகுமாரன் வருவான்”

“மாமா பார்க்கனும்”

“இரு வர சொல்லுறேன்” போன் போட அவரே... “இன்னும் ஆறு மாசம் நகர முடியாது டா சீக்கிரம் வந்துடுறேன்”

“சரி பா... ராதா கிட்ட பேசுங்க அவ உங்களை மிஸ் செய்யுறா?”

“அவகிட்ட கொடு”

“மாமாட்ட பேசு… உன் சோகம் எல்லாம் பறந்து போய்டும்”

“மாமா எப்போ வருவ உன்னை பார்க்கனும்” அழுகையோடு சொல்ல.

“இப்பவே பார்க்கலாம் தங்கம், வீடியோ கால் வா”

“போ நேர்ல வா மாமா”

“இரண்டு பேரும் என்னை துரத்தி விட்டுட்டு இப்போ நான் நல்லா மாட்டிக்கிட்டேன், எப்படி வரது சொல்லு”

“அது எல்லாம் எனக்கு தெரியாது நீ வா” ராதா ஒப்பாரி வைக்க.

“வீடியோ கால் வாடா தங்கம்”

“சொல்லுங்க...” தன் முகத்தை காட்டாமல் சொல்ல.

நடந்த அனைத்தையும் சொல்ல வாய் எடுக்கும் போது.

“ராதா வேண்டாம் அப்பா ஃபீல் செய்வாங்க” மெல்லிய குரலில் சொல்ல.

“சரி கிருஷ்ணா”

“என்ன பண்றிங்க அமைதியா இருக்கிங்க”

“அது எல்லாம் ஒன்னுமில்லை மாமா, மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்தாங்க, இந்த கிருஷ்ணாவை என்னான்னு கேளுங்க”

‘அதானே பார்த்தேன், என்ன இன்னும் வேலையை காட்டலைன்னு’

“அப்பா 25 வயசு ஆகுது, இன்னும் வீட்டுலை வச்சிட்டு இருக்க முடியாது”

“சரி பா நல்ல பையனா பாத்து முடிச்சிடு”

“சரி பா”

"நான் சொல்லுறது எல்லாம் ஒருத்தரும் கேட்கும் நிலையில் இல்லையில்ல”


“இனி கேட்கமாட்டோம் நாங்க சொல்லுறது கேளு” கிருஷ்ணாவும் ரகுவரன் மாமாவும் ஒரு போல சொல்ல.

“என்னவோ செஞ்சி தொலைங்க” இருவரும் சிரித்துக்கொணாடே போனை வைத்துவிட.

ராதா கண்ணாடியில் தன் முகத்தை பார்த்துக் கொண்டு இருக்க.

“ராதா அவன் சொன்ன போல எல்லாம் இல்லைடா, வீட்டில் இருந்தா எல்லா பொண்ணும் இப்படி தான் பியூட்டி கேர் செய்ய மாட்டாங்க”

“பொய் செல்லாத மாமா அந்த பையன் சொன்னது உண்மை தான்”

“இரு அடுத்து நல்ல மாப்பிள்ளை பார்த்து அவன் வாயால உன்னை ஏஞ்சல்ன்னு சொல்ல வைக்கிறேன்”

“சொன்னா தானே” ராதா அடிக்கடி கண்ணாடியை பார்ப்பதை விடுவதாக இல்லை, கிருஷ்ணாவும் தீவிரமாக மாப்பிள்ளை பார்க்க.

பார்த்து விட்டு போவார்கள் பதில் ஏதும் வராது.. இப்படியே கணக்கில்லாமல் மாப்பிள்ளை இந்த சில மாதத்தில் வந்து போனார்கள்.

ராதாவும் சளித்துக்கொண்டு வந்து நிர்ப்பாள்.

“ஏய் புரோக்கறே என்ன ஒருத்தன் கூட திரும்ப வர மாட்டங்குறாங்க என்ன விஷயம்”

“அது வந்து தம்பி...” அவர் தயங்கி நிற்க.

“நேரா சொல்லுங்க என்னான்னு அந்த வீடியோ மேட்டரா பிரச்சனை”

“அது இல்லை தம்பி உங்களையும் நம்ம பாப்பாவையும் வச்சி சேர்த்து” கிருஷ்ணா கண்கள் ரத்த சிவப்பாக மாறியது.
 
Status
Not open for further replies.
Top