ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மனைவியின்...காதலன்! - கதை திரி

Status
Not open for further replies.

Bindusara

Well-known member
Wonderland writer
11 காதலன்!

மட்டன் சூப் குடித்து முடித்ததும் தலை வலி முழுவதுமாக விட்டிருந்தது கிருஷ்ணாவுக்கு “மாமா இப்போ பரவாயில்லையா”

“பரவாயில்லை ராதா சிக்கன் நல்லா இருக்கு இன்னும் வாங்கிட்டு வரேன் இரு”

“கிருஷ்ணா போதும் எனக்கு வயிறு புல் ஆகிடுச்சி”

“சும்மா இரு இப்ப வேணாம்’ன்னு சொல்லுவ அப்புறம் வந்து என் உயிரை வாங்குவ வீட்டுக்கு போனதும். கிருஷ்ணா சிக்கன் வேணும் மட்டன் வேணும்’ன்னு கேட்ப இரு வாங்கிட்டு வரேன் வயிறு முட்ட சாப்பிடு, வெயிட் வேற குறஞ்சிட்டே போற”

அனுக்கு கிருஷ்ணா மேல் மதிப்பு கூடிக்கொண்டே போனது அதே சமயம் தன் தோழி ராதாவை வெறுத்தாள்.

‘இவ பெண்ணே இல்லை, பாஸ் எவ்வளவு அழகா பாத்துக்கிறார் இவ எதுக்கு தேவை இல்லாம பாஸையும் கஷ்டப்படுத்திட்டு மாதவனையும் கஷ்டப்படுத்திட்டு இருக்கா’ன்னு தெரியலை’ மனதில் இயல்பாக நினைத்த அவளால் தோழி செய்யும் தவறை தட்டிக் கேட்கும் அளவுக்கு தைரியமில்லை அவளை துன்புறுத்தும் விருப்பமும் இல்லை.

‘ஒரு மாசம் தானே பாத்துக்கலாம் இன்னொரு முறை இதை பத்தி எதாவது அவள் பேசட்டும் இருக்கு அவளுக்கு’

கிருஷ்ணா சிக்கன் இரண்டு பிளேட் வாங்கி வந்து இவர்கள் அருகில் நின்றவன்.

“அனு சூப் போதுமா? இல்லை இன்னும் வாங்கிட்டு வரட்டுமா”

“இன்னொன்னு வாங்கி தந்தா நல்லா தான் இருக்கும்”

“சேட்டை..“ அவளது தலையில் வைத்து ஒரு அமுக்கு அமுக்கி விட்டு.

“இரு வாங்கிட்டு வரேன்”

“பாஸ் நீங்க அமுக்கி அமுக்கியே நான் இன்னும் குள்ளையா ஆகிட்டேன்”

“இல்லைனா மட்டும் நீ ரொம்ப உசரம் பாரு, காமெடி பண்ணாத அனு”

“போங்க பாஸ் என் உசரம் வச்சி கிண்டல் செய்யாதிங்க எனக்கு பீலிங்கா இருக்கு”

“சரி சரி குட்டிமா விடு” கிருஷ்ணா இயல்பாக சொல்ல.

அவன் கூப்பிட்ட ‘குட்டி மா’ வில் மெய் மறந்தாள் அனு யாரும் இதற்க்கு முன் அவளை அப்படி கூப்பிட்டது இல்லை.

“பாஸ் நான் உங்களுக்கு குட்டிமா வா” சிறுபிள்ளை போல கண்களை சிமிட்டி கேட்டாள்.

“அடச்சி… பப்பி பேஸ் காட்டாதே சாரி அனு டங்க் சிலிப் ஆகிடுச்சி குண்டு மா சொல்வதுக்கு பதில் அப்படி சொல்லிட்டேன்” அனுவை கலாய்த்தும் விட்டு அவளுக்கு மாதவனுக்கும் இன்னும் இரண்டு கப் வாங்கி வந்தான்.

ஒன்று மாதவனிடமும் இன்னொன்னு கொடுத்து.

“இல்லை எனக்கு வேண்டாம் கிருஷ்ணா நீங்க சாப்பிடுங்க” மாதவன் கைக்கழுவ போக எந்திரித்தார்.

“நீங்க ரெண்டு கப் குடிப்பிங்கலே குடிங்க மாதவன் எங்ககிட்ட என்ன கூச்சம். 15 நாள் ஆச்சி இன்னும் ஏன் ஒதுங்கி ஒதுங்கி நிக்கறிங்க ரிலாக்ஸ்சா இருங்க”

“எப்படி தெரியும் உங்களுக்கு!”

“ராதா சொல்லி இருக்கா”

“ராதாவா? சொல்லி இருக்க மாட்டாலே அவளுக்கு சொசைட்டி கண்சர்ன் ஜாஸ்தியே”

“ஆமா, அவளா இருக்கும் போது சொல்லலை சாதாரணமான டைம்ல சொன்னதில்ல, சரக்க அடிச்சிட்டு உன்னை பத்தி தான் பேசுவா. அப்படி தெரிய வந்தது தான் இது எல்லாம்” கிருஷ்ணா முகத்திலும் சரி மனதிலும் சரி சாதாரணமாக தான் இருந்தான்.

‘எல்லாமே சொல்லி இருப்பாலா? அப்புறம் எப்படி ராதாவை கல்யாணம் செஞ்சிக்கிட்டான்’ மாதவனை நன்றாக குழம்பினான்.

அங்கிருந்து கிளம்பும் போது கிருஷ்ணாவுக்கு தலைவலி குறைந்திருந்தது. அனைவரும் சேர்ந்து பெய்ன்ட் செய்ய தேவையான பிரஸ், பெய்ன்ட், முதற்க்கொண்டு தேவையான அனைத்தும் வாங்கி வந்தார்கள்.

ஒரு வழியாக வீட்டுக்கு வரவும்.. சேர்ந்து ஹாலிலே ஆளுக்கு ஒரு மூலையில் படுத்தாச்சி.

அனு ஒரு சோப்பாவிலும், மாதவன் ஒரு சோபாவிளும் இடம் பிடித்துக்கொள்ள.

ராதா சுவரை ஒட்டி படுத்துட்டா.

‘ரொம்ப டயார்டா இருக்கா ஜூஸ் போட்டு எடுத்து வரலாமா?’ கிருஷ்ணா கையில் ஜூஸ் போட்டு எடுத்து வந்தான்.


“ராதா எந்திரி ஜூஸ் குடி டி”

“மாமா தூக்கம் வருது” எழுந்தவள் கிருஷ்ணா தோளில் படுத்துவிட்டாள்.

“இதை குடிச்சிட்டு தூங்கு நேரங்கெட்ட நேரத்தில் எழுந்து சாப்பாடு கேட்ப, என்னால நடு ராத்திரில எழுந்திரிக்க முடியாது தலை எல்லாம் வலிக்குது”

“ராதா இங்க பாரு கொஞ்சமா குடி” அடம் செய்யும் குழந்தையை சமாதானப் படுத்த குழந்தைக்கு குடிக்க வைப்பது போல குடிக்க வைத்தான்.

தலையணையும் வைத்து படுக்க வைத்தவன், கதவு ஜன்னல் தொடங்கி அனைத்து அறையில் லைட்டையும் ஆப் செய்தவன். ராதாவை கை தாங்கலாக அழைத்துக்கொண்டு அறைக்குள் புகுந்து கொண்டான்.

கலைப்பில் அனைவரும் படுத்துவிட்டார்கள்.

இன்னும் ஒரு வாரம் தானிருந்தது ராதா கேட்ட ஒரு மாதத்திற்க்கு.

‘எப்போடா இந்த ஒரு வாரம் போகும்’ன்னு’ அனுதான் காத்திருந்தாள்.

அவளுக்கு அவங்க பாஸ் வாழ்க்கை முக்கியம் கிருஷ்ணா முரட்டுத்தனமான ஆள் தான் இருந்தும் நிறைய பேரின் வாழ்க்கைக்கு ஒளி கொடுத்து இருக்கார். அனைத்தும் நேரடியாக இல்லை ராதா பெயரிலும் அவர் அப்பா ரகுவரன் பெயரிலும்தான் அனைத்து உதவியும் போகும்.


முதலில் அனு கிருஷ்ணாவின் உருவத்தை பார்த்ததில் மிரண்டவள், பல மாதம் பிடித்தது கிருஷ்ணாவின் நற்குணம் தெரிய.

வேலை நேரங்களில் சிரிப்பு என்றால் என்ன என்று கேட்கும் கிருஷ்ணா வீட்டில் ராதாவோடு இருக்கும் நேரங்களில் வடிவேலுக்கே டப் கொடுக்கும் உருவில் இருப்பான்.

ராதா செய்யும் சேட்டையை பார்த்து அனுவே சில நேரங்களில் கடுப்பாகி இருக்கிறாள். ஆனால் கிருஷ்ணா கடுப்பாக பேசினாலும் அவளுக்கு தேவையானதை செய்து கொடுத்துட்டுதான் அமைதியா ஆவான்.

சொ வெளியில் சொல்லா விட்டாளும் அவ்வளவு பாசம் கிருஷ்ணாக்கு ராதா மீது.

இருவருக்கும் அப்படி தான் கிருஷ்ணாவை டார்ச்சர் செய்யலைனா அவளுக்கு தூக்கமே வராது.

கிருஷ்ணா ஐந்து வருடம் ஊரில் இல்லாத போது கஷ்டப்பட்டாள். வாரத்துக்கு ஒரு நாள் பேசி பேசியே சலிப்பாள்.

கிருஷ்ணா நினைத்தது போல அனுவையும் ராதாவையும் பிரிச்சிட்டான்.. அனுவை கோயம்பத்தூரிலும் ராதாவை சேலத்தில் சேர்த்தாச்சி.

அங்கு தான் அவளுக்கு மாதவனின் பழக்கம் ஏற்பட்டது.

பார்த்த முதலிலே மாதவகண்ணனை பிடித்ததை விட அவனது பெயரை அவளுக்கு பிடித்தது.

ராதா கண்ணன்... தன்னையும் அறியாமல் இரு பேரையும் சேர்த்து பார்க்க ஆரம்பித்தாள்.

முரட்டு முகம் கூறிய மூக்கு வசிகரமான கடுமையான முகம். யாரிடமும் பேசமாட்டான் நண்பர்களிடம் மட்டும் சேட்டை செய்யும் குணம்.

கோபம், திமிர், முரட்டுத் தனம், என மொத்தமாக ஹிட்லர் போல என்று தோன்றும் அவனை பார்க்கும்போது பழைய நினைவுகளை ஒதுக்கி வைத்தவள், தனக்காகவும் கிருஷ்ணாக்கு தேவையான துணிகளை அடுக்கினாள்.

அடுத்த நான்கு நாள்… வாங்கி வந்த பெயின்ட் போர்ட் வைத்து வரஞ்சி தள்ளினார்கள்.

கிருஷ்ணாக்கு ஒரு ரவுண்ட் போட கூட வரவில்லை ராதா தான் பொறுப்பா குட்டி குட்டி போர்ட்டை வரைய சொல்லி கொடுத்தாள்.

மாதவனுக்கும் பெரியதாக வரைய தெரியாவிட்டாலும் பொறுமையாக பெரிய போர்டில் ஒரு குட்டி ஆராட் வரைந்தான். அதன் பிறகு ஆபிஸ் வேலை பார்க்க.

ராதாவும் அனுவும் போட்டி போட்டு வரைந்தார்கள் அந்த வாரம்.

அடுத்த ரவுண்டில் கிளம்ப தயாரானார்கள்.

அனைவரும் கிளம்பி மாதவன் வீட்டுக்கு வர.

வரவேற்பு எல்லாம் பலமாக இருந்தது மாதவனுக்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆச்சி நேரம் கிடைக்கும் போது போனில் பேசுவான், மற்றபடி அளவான பேச்சு தான் குடும்பத்துடன்.

எங்கு இருக்கான் என்ன செய்யறான் என்ற ஒரு விவரமும் இல்லை.

எங்கோ இருக்கான் தனக்கான தேவையை வைத்துக்கொண்டு மீதியை வீட்டுக்கு அனுப்பி வச்சிடுவான்.

“இருபத்தி ஏழு வயசு ஆகிடுச்சி. கல்யாணம் செஞ்சுக்கோ... வயசு ஏறிட்டே போகுது. இந்த வருஷம் விட்டா இன்னும் ஒரு வருசத்துக்கு கல்யாணம் செய்ய கூடாது”

“இந்த பொண்ணுங்க சாவகாசமே வேண்டாம்’ன்னு ஒதுங்கி வந்தா இங்கையும் அதே வேலையா போச்சி.. ச்சே பொண்ணுங்க இல்லாம வாழ முடியாதா என்ன”

சொன்ன போது கோச்சிக்கிட்டு போனவன் தான் திரும்ப இப்போ தான் வந்து இருக்கான்.

போன மாதம் கூட, தங்கைக்கு திருமணம் வரன் பார்க்க அழைத்த போது கூட வரவில்லை.

“இன்று மனம் மாறி வந்து இருக்கான், சும்மா புள்ளையை திட்டிட்டு இருக்காதிங்க” மாதவனின் அம்மா அப்பா காதில் பாடம் எடுத்தார்.

தங்கைக்கு திருமணம் முடிக்கதான் வந்திருக்கான் என நினைத்தார்கள்.

அவர்கள் கேட்டதற்க்கு ஆமாம் என்று சொல்லி சமாளித்தான்.

“அத்தை பையனை பார்த்ததும் நாங்க கண்ணுக்கு தெரியலையா?” அனு கேட்க.

“இந்த பெண்ணை எங்கயோ பார்த்தது போல இருக்கே”

“அத்தை நான் அனு மறந்துட்டிங்களா”

“அடடே... அனுவா பாத்து எத்தனை வருஷம் ஆச்சி அதான் டா மூஞ்சி மறந்திடுச்சி”

“நீங்க வேஸ்ட் அத்தை உங்க பையன் கரெக்டா என்னை முதல் சந்திப்பில் கண்டு பிடிச்சிட்டார்”

முதல் சந்திப்பு கதையை பெரியதாக சொன்னாள் அனு.

ராதாவை பெரியதாக யாரும் கண்டுக்கலை, புல் போக்கஸ்சும் அனு மேல் தானிருந்தது.

கிருஷ்ணா கையை பிடித்துக் கொண்ட ராதா.

“மாமா தூக்கம் வருது”

“மாதவன்... ராதாக்கு தூக்கம் வருது, கொஞ்சம் ரூம் காட்டினா”

“வாங்க கிருஷ்ணன், அம்மா மட்டன் பிரியாணி செய்யுங்கமா” அம்மாக்கு லன்ச் என்ன செய்யனும்னு சொன்னவன் இவளை அழைத்து போனான் அவனது அறைக்கு.

மேல் மாடியில் ஒரே ஒரு அறை இருந்தது.

“நைஸ் பிளேஸ் உங்க ரூமா மாதவன் நல்லா இருக்கு”

“ஆமா கிருஷ்ணா ரெஸ்ட் எடுத்துக்கோங்க ராதா வரேன்” மாதவனின் கண்களில் இருந்த அந்த ஒளி கிருஷ்ணாவுக்கும் ராதாக்கும் சரி ஒரு வித கலக்கத்தை கொடுத்தது.

அவனது குரலில் ஒரு மாற்றம் தெரிந்தது.

“சரி கண்ணன்”

மாதவனின் விழிகள் விரிந்தது கிருஷ்ணாவின் முகம் கருத்தது.

இது எங்க போய் முடியப் போகுதோ.. பின் வந்த அனு ராதாவையும் மாதவனையும் விசித்திரமாக பார்த்தாள்.

அனுவை பார்த்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி மாதவன் வீட்டில் இருந்தவர்களுக்கு.

இவர்கள் இருவரும் ஒன்றாக பல வருடம் பழக்கம் போல இடையில் கொஞ்சம்

அவன் வீட்டில் உள்ளவர்கள் ராதாக்கு தெரியும் பெரியதாக பழக்கம் இல்லா விட்டாலும்‌இரண்டு முறை பார்த்து இருக்கிறாள்.

அவனுக்கு ஒரு குட்டி தங்கை இருக்கிறாள்.

இவனை விட அவள் தான் நெருக்கம் ஆனால் இன்று இல்லை அதெல்லாம் பழைய கதை.

அவன் தானாக பேச வரும் போது ராதா அவள் புறம் முகத்தை காட்ட கூட விருப்பம் இல்லாதது போல முகம் திருப்ப மாதவனின் தங்கை கார்த்திகாவின் முகம் கருத்தது.

ராதாக்கு ஒன்று தான் மனதில் ஓடியது சுய நலமான உலகம் இது.

ராதா பெரியதாக யாரிடமும் ஒன்றவில்லை.

ஆனால் அனுவை அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் செமையா கவனித்தார்கள்.

ராதா ஒதுங்கியே இருந்தாள்.

அவனது தங்கையும் ஒரு முறை பேச முயற்சி செய்தபிறகு ராதாவை ஒரு பொருட்டாகவே கண்டுக்கல.

அனுவும் மாதவனின் தங்கையும் நெருங்கி பழகினார்கள்.

ராதாக்கு ஏதோ போல இருந்தது.

“கிருஷ்ணா நம்ம போயிடலாம் எனக்கு இங்க இருக்க பிடிக்கலை நரகத்தில் இருப்பது போல இருக்கு”

“இன்னும் கொஞ்ச நாள் தானே அம்மு” கிருஷ்ணா அம்மு சொன்னதும்.

“மாமா பாக்குனும் அவர் எப்போ வருவார்”

“இரண்டு மாசம் வந்திடுவார்”

“சரி, எப்போ இந்த ஒரு வாரம் போகும்ன்னு இருக்கு”

மாதவனின் கனவு இன்று நிறைவேறியது ஆனால் மனைவியாக இல்லாமல் வேறு ஒருவன் மனைவியாக என் அறையில் மனம் வலித்தது.

பிடிக்காமல் விட்டு போய் இருந்து இருந்தாலும் இறுக்கமாக இருந்து மனதில் வலி புகுந்து கொண்டது.

“இல்லை மாதவா… அவள் வேற ஒருவனின் மனைவி பிரண்டு எல்லையை மீறாமல் பார்க்கனும்” மனதை கஷ்டப்பட்டு அடக்கியவனுக்கு தெரிய வாய்ப்பு இல்லை அடுத்த நாளே அனைத்தும் உடைந்துவிடும் என்று.
 
Last edited:

Bindusara

Well-known member
Wonderland writer
12 காதலன்!

அடுத்த நாள் அழகாக விடிந்தது… கிருஷ்ணாவின் முக்கியமான கிளையண்ட் இவனை பார்க்க சேலம் வருவதாக திடீர் செய்தி வர.

‘என்ன செய்யலாம், ராதாவையும் கூட்டிட்டு போலாமா’ கிருஷ்ணாவின் இன்னொரு மனம்.

‘அவ வந்து கிழிச்சிட்டு தான் மறு வேலை பார்ப்பா”

“டேய் கிருஷ்ணா கண்ணு கூசுது, லைட் ஆப் செய்யி நடுராத்திரியில் பேயிக்கா பேனு பார்க்கர”

‘தூக்கத்தில் கூட பாரு பக்கி பய புள்ள.. பேனு ஈருன்னு கடுப்பை கிளப்பிட்டு. எங்கு இவளை கூட்டிட்டு போகவும் முடியலை விட்டுட்டு போகவும் முடியலை. நானே குழம்பி போய் இருக்கேன், இந்த நேரத்தில் புலம்ப விட்டுட்டா’

“டேய் சொல்லிட்டே இருக்கேன் தூங்காம என்ன செஞ்சிட்டு இருக்க” எழுந்து உட்கார்ந்தாள் ராதா.

“எனக்கு மீட்டிங் இருக்கு வர சொல்லி இருக்காங்க”

“சரி பத்திரமா போயிட்டு வா போகும் போது அந்த லைட்டை அனைச்சிட்டு போ” அமர்ந்து இருந்தவள் மெத்தையில் சரிய.

“எனக்கு உன்னை தனியா விடுறது சரியா படலை”

“என்ன கிருஷ்ணா என் மேல நம்பிக்கை இல்லையா?”

“நம்பிக்கை இருக்கறதாலதான் விட முடியலை”

“லாஜிக்கே இல்லை டா, நீ சொல்லுவது”

“உன் மர மண்டைக்கு அந்த லாஜிக் தெரியாது”

‘உன்னை திரும்ப அவன் ஹர்ட் செஞ்சிட்டா நீ தாங்கிக்க மாட்ட டி இதை சொன்னா, கொடி பிடிச்சிட்டு வருவா… நான் வீரி சூரின்னு’

“டேய் மனசுல பேசுரதை விடுடா, எனக்கு மைன்ட் ரீடிங் தெரியாது”

“எனக்கு உன்னை பிரிந்து இருக்க முடியலை, அதால நீயும் என் கூட வந்திடு”

“கிருஷ்ணா இன்னும் கொஞ்ச நாள் தானே”

“சரி… தனியா உன்னை பாத்துப்ப இல்லை”

“ம்ம்ம்…”

“ராதா என்ன சோகமா ஆகிட்ட”

“நீ இல்லாம தனியா இருக்க பீல் வருமில்ல”

“அதான் உன் எக்ஸ் இருக்கான் இல்ல”

“உன்னை” கிருஷ்ணா கன்னம் நல்லா பழுத்தது.

விடியற் காலையில் ராதாவிடம் சொல்லிவிட்டு கிளம்பிட்டான். கடைசி நாள் கூட்டி போக வருவதாக சொல்லி சென்றான். வானத்தை பார்த்து நின்றாள்… நட்சத்திரங்கள் வானத்தில் மின்னியது. அவளை பார்த்து கண் அடிப்பது போலவும் இருந்தது. பழையதை நினைத்தாள், நினைக்கும் போதே கண்களில் கண்ணீர் கசிந்தது.

ரகுவரன் வீட்டுக்கு மூத்தவன்.. அவரின் தங்கை மதி, இருவரும் மிகவும் நெருக்கம்.. அடுத்த பாசமலர் என்று சொல்லும் அளவுக்கு இருக்கும் இவர்கள் செயல்.

திருமணம் முடிந்து பக்கத்து ஊரில் உள்ள சரவணாவுக்கு கட்டி வைத்தார்.

சிறப்பாக வாழ்ந்தார்கள் ஆனால் அந்த வாழ்க்கைக்கு ஆயுசு இரண்டு வருடம் தான். ராதா பிறந்த மூன்று மாதத்தில் மதிக்கு உடல் நிலை சரியில்லை. அண்ணன் குடும்பத்தை வரவைத்தார் சரவணன் குழந்தையை பார்த்துக் கொள்ளவதற்க்கு.

ரகுவரன் அவரது மனைவி ரத்தினம் அன்பான குடும்ப தலைவி, ரகுவரன் அவரை செல்லமாக ராதா என்று கூப்பிடுவார். இப்போ தெரியுதா ரகுவரனும் கிருஷ்ணாவும் ராதா முன் அடக்கி வாசிப்பதர்க்கு அந்த பெயர் தான் காரணம்.

அவர்களின் மகன் கிருஷ்ணா.

“ரகுவரன் பாப்பாவை பாத்துக்கோங்க. நான் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போயிட்டு வந்திடுறேன்” சரவணன் சொல்ல.

“ஏங்க புள்ளைய பத்திரமா பாத்துக்கோங்க, நானும் கூட போயிட்டு வந்திடுறேன்” ரத்னம் ரகுவரனிடம் சொல்ல,

“சரி ராதா… முதல்ல பாப்பாக்கு என்ன பெயர் வைப்பது”

கிருஷ்ணா குட்டி குழந்தை கை பிடித்து விளையாடினான். அவனுக்கு அப்போது ஐந்து வயது விவரம் தெரியும் வயது தான்.

“முதல்ல பாப்பாக்கு பெயர் வைக்கனும்” ரகுவரன் குழந்தையை பார்த்து சொல்ல.

தொட்டிலில் இருந்த குழந்தையை தூக்கிய மதி அண்ணன் கையில் கொடுத்து.

“அண்ணா உனக்கு பிடிச்ச பேர் வை” ரகுவரன் நெகிழ்ந்து தான் போனார் தங்கையின் பாசத்தை பார்த்து.

“எனக்கு ராதா பேர் தான் பிடிக்கும்‍, அதும் உன் அண்ணிக்கு வச்சிட்டேன்”

“வேற நல்ல பேர் வை அண்ணா”

“அதுனால என்ன ஒரு வீட்டில் இரண்டு ராதா இருக்க கூடாதா. அவ பெரிய ராதா இவ குட்டி ராதா” மூன்று முறை குட்டி ராதா... என பெயர் வைத்தாச்சி.

“அண்ணா! அண்ணி மேல எம்புட்டு லவ்வு. சரி பாப்பா பத்திரம் நாங்க ஒரு மணி நேரத்தில் வந்துடுவோம்”

போகும் இவர் மூவருக்கும் தெரியவில்லை, இது தான் கடைசி முறை, அவர்கள் மூச்சோடு இவர்களை பார்ப்பது என்று.

குட்டி ராதா பெயர் வைத்த போது அப்படி ஒரு வெக்கம் ரத்னாவுக்கு. கடையாக ரத்தினத்தை ரகுவரன் பார்த்த நினைவு இப்போ பசுமையாக மனதில் தங்கி இருந்தது.

விபத்தில் மூன்று உயிரும் இந்த உலகை விட்டு பிரிந்த பின்.

ரகுவரனது குணம் மாறி போனது, கடுமையாக மாறிவிட்டார். கையில் தங்கையின் கைக்குழந்தை கால் அடியில் விவரம் வரும் வயதில் தான் பெற்ற மகன்.

ஐந்து வயது மகனோடு தன் வீட்டில் நுழைந்த ரகுவரன் முற்றிலும் வேறு ஒருவனாக வலம் வந்தார்.

ரகுவரனின் கடுமை கிருஷ்ணாவிடம் மட்டும் தான் ராதாவை பார்த்தாள் அனைத்தும் பஞ்சாக பறந்துவிடும். நாட்கள் போக போக ரகுவரனின் மூச்சே குட்டி ராதாவாக போனாள்.

“ராதா குட்டி ராதா… எங்கே இருக்க”

“மா….” மாமா முழுதாக சொல்ல வாய் வலி அவளுக்கு மா.. என்றுதான் பெரும்பாலும் அழைப்பது.

தங்கை சாயலில் இருப்பவளை கொஞ்சி தீர்ப்பார்.

அதற்காக கிருஷ்ணா மீது பாசம் இல்லை என்று சொல்ல முடியாது, இருவரையும் கண்ணாக பார்த்துக் கொண்டார்.

தங்கையின் முகமும் மனைவியின் செல்லப்பேர் கொண்ட ராதா மீது கோபமே வந்தாலும் அவளது சிரிப்பு ரகுவரனும் சரி கிருஷ்ணாவும் சரி அடித்து சாய்த்து விடும்.

ரகுவரனுக்கு பயந்து எல்லாம் கிருஷ்ணா அவளுக்கு சேவை செய்யவில்லை.

தன் அம்மாவின் முகத்தை பல முறை பார்த்து இருக்கிறான். அவளிடம்… சிரித்த முகம் தன் அன்னை போல, அவன் அடங்கி போவதற்க்கு இதுதான் காரணம்.

தாய் பாசத்துக்கு ஏங்கும் குழந்தை தான் அவளும், ஆனால் தன் தவிப்பை அடக்கி இருவருக்கும் செல்ல தாயாக பாசத்தை அள்ளி அள்ளி கொடுத்தான்.

இயற்க்கையில் ராதா அமைதியான பெண்தான் வீட்டை கலகலப்பாக வைத்து கொள்ள கொஞ்சமில்ல நிறைய வேலை செய்வாள். அவள் தனிமையாக உணர்ந்தாலும் இருவரையும் தனிமையில் விட்டதில்லை.

ஆனால் கிருஷ்ணாவை டம்மி செய்துதான் ரகுவரனை சிரிக்க வைப்பாள். அது இருவருக்கும் தெரியாம தெரிந்தும் தெரியாதது போல ராதாவை சிரிக்க வைப்பதற்க்கு நிறைய முறை நடித்து இருக்கிறார்கள். இப்படிதான் இவர்களின் இருபது வருடம் கடந்தது.

அனுவும் ராதாவும் நெருங்கிய தோழிகள்.

கிருஷ்ணா தான் பிடிவாதமாக அனுவையும் ராதாவையும் வேறு வேறு கல்லூரியில் சேர்த்தான்.

கல்லூரியில் சேர்த்தவனுக்கு தெரியவில்லை. சிறகில்லா தேவதையின் சிறகை உடைக்க போவது இங்கு தான் என்று.

பெண்கள் பள்ளியில் படித்தவளுக்கு இருபாலர்கள் சேர்ந்து படிப்பது என்று கேள்விப்பட்ட அப்போதே பிடிக்கவில்லை.

“மாமா நான் வுமன்ஸ் காலேஜிலேயே சேர்ந்துக்கிறேன்” ஒரு ஒப்பாரி.

“அப்பா பாத்திங்களா... புள்ளையை பொத்தி வைக்கறேன்னு லூசு போல வளர்த்து வச்சிருக்கிங்க”

கிருஷ்ணா சொன்னதும் சரியாக தான் பட்டது‍ இந்த உலகம் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை தான் இருந்தாலும் சமூகத்தில் பெண்கள் மட்டும் இல்லையே. ஆண்கள் பத்தியும் சிலது தெரிந்தால் தானே வாழ முடியும் ரகுவரன் அமைதியாக இருந்தார்.

“மாமா....ஆஆஆ”

“கிருஷ்ணா சொல்லுறது கேளுமா” ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார் ரகுவரன்.

உள்ளுக்குள் பயமாக இருந்தாலும் தன்னை தையிரியமாக காட்டிக் கொண்டு கல்லூரி வாசலில் காலை எடுத்து வைக்க, முதலில் பார்த்தது மாதவ கண்ணனின் முகம் தான்.

தன்னையும் மீறி அவளது கண்கள் அவனை பின் தொடர்ந்தது.

பார்க்க கிட்டத்தட்ட மொரட்டு பீஸ், அவனது கூர்மையான மூக்கை பார்த்து.

‘என்ன இவருக்கு மூக்கு இவ்வளவு கூராக இருக்கு நமக்கு மட்டும் சப்பையா இருக்கு’ தனது மூக்கை தொட்டு பார்த்தவளின் மனதில்.

மாதவ கண்ணன் என்று அவனது தோழர்கள் அவனை அழைக்க.

“இதோ வந்துட்டேன்”

‘கண்ணா…’ அவளது உதடுகள் தானாக முனுமுனுத்தது‍ மூக்கை தொட்டு பார்க்கும் ஆசை வந்தது என்னவோ உண்மைதான்.

கண்ணனும் போனை கையில் நோண்டிக் கொண்டே அவனது நண்பர்கள் அருகில் போய் உட்கார்ந்து விட்டான்.

அவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும்.

தன் மனதை அடக்கியவள்... நடந்து போகும் போது ஒரு கூட்டம் இவளை அழைக்க.

‘ஒருவேலை ரேகிங்கோ! ராதா பயப்படாத பொறுமை தைரியமா காட்டிக்கோ, முதல் நாளே டம்மி பீஸ்ன்னு தெரியக்கூடாது’

தைரியமாக நிமிர்ந்த நடையோடு நடந்து வந்தவள், அந்த குரங்கு சீனியர் கூட்டத்துக்கு முன் நின்றாள்.

“என்ன திமீரா நிக்கர சோல்டரை இறக்கு”

“முடியாது அண்ணா”

“ஏதே அண்ணாவா அடி பிச்சிடுவேன்” ஒருத்தன் எகிரிக்கொண்டு வர.

“ஆஆ... காது வலிக்குது” மனதில் பயம் இருந்தாலும் திமிராக நின்றாள் ராதா.
 

Bindusara

Well-known member
Wonderland writer
13 காதலன்!

ராதா இவ்வளவு நேரம் வெளியே பேசினாலும் வெளி ஆட்களிடம் பேசுவதில் ஒரு நடுக்கம் இருக்கத்தான் செய்தது.

அதும் அவனுங்களை பார்த்தால் தடி தடியாக இருந்தார்கள், “அது எல்லாம் சொல்ல முடியாது வழியை விடுங்க”

“பாருடா… மேடம் நிம்மதியா இந்த காலேஜில் படிக்க கூடாதுன்னு நினைக்கிறிங்க போலவே” ஒருவன் சொல்ல.

இன்னொருவன், “டேய் என்ன பேச்சி வார்த்தை நடத்திட்டு இருக்க நாங்க சொல்லுவது செய்யலைன்னா…உனக்கு தான் பிரச்சனை”

“என்ன பிரச்சனை நான் ஸ்டாப் கிட்ட சொல்லிடுவேண்”

“அது எல்லாம் இங்கே செல்லாது இன்னைக்கு செஞ்சிட்டா உன்னை விட்டுடுவோம் இல்லைன்னா இந்த வருஷம் முடியும் வரை டெய்லி ரேகிங் தான்”

‘எது, டெய்லியுமா? இவனுங்க என்ன பொசுக்குன்னு அவர் கிட்ட போய் அத்தான் பெத்தான்னு சொல்ல சொல்லுறாங்க ஐயோ, முதல் நாளே அமோகமா இருக்கே என்ன செய்ய நான்’

“என்ன மா ஏதோ யோசனையில் இருக்க” ஒருவன் சொல்ல,

“என்ன நீ தான் தைரியமான ஆளாச்சே அத்தான் லவ் யூ சொல்லிட்டு வா” இன்னொருவன்.

“முன் அத்தான் மட்டும் தானே கூப்பிட சொன்னிங்க இப்போது என்ன, ஐ லவ் யூ சொல்ல சொல்றிங்க, இது சரி இல்லை பின் விளைவு பெருசா இருக்கும்”

“சரி சரி… அந்த பின் விளைவை சந்திக்க நாங்க தயார் அப்படிதானங்கடா”

“ஆமா தலை” மற்றவர்கள் சொன்னவனுக்கு பின் கோசம் போட.

“சொன்ன உடனே போய் இருந்தா, அத்தான் மட்டும் சொல்லிட்டு நீ பாட்டுக்கு போய் இருக்கலாம், நீ லேட் செஞ்சதால இப்போ ஐ லவ் யூ சொல்ல சொல்றோம். இன்னும் லேட் செஞ்சா கல்யாணம் செஞ்சிக்க சொல்லி கேட்க சொல்லுவோம், என்ன சொல்லுற? இப்போவே போறியா இல்லை இன்னும் எதாவது எதிர் பார்க்கிறியா”

“ஐயோ! கல்யாணமா! ஆளை விடுங்க நா கிளாஸ்க்கு போறேன்”

“கிளாஸ்க்கு போய்டுவியா நீ போய் பாரு அப்போ தெரியும் சீனியர்ஸ் பவர்”

“அண்ணா வேற எதாவது சொல்லுங்க செய்யுறேன், இது என்னால் முடியாது”

“அதான் வரும் போது மாதவ கண்ணனை சைட் அடிச்சிட்டு தானே வந்த போய் சொல்லுமா”

“ஐயோ! கண்டு பிடிச்சிட்டிங்களா”

“எங்க கண்ணுல மாட்டாம இருக்குமா… சரி சரி கிளம்பு போய் சொல்லிட்டு கிளாஸ்க்கு போ”

“நான் எப்படி… சொல்லுறது சும்மா பார்த்தது குற்றமா” ராதா அதிர்ந்து நிற்க.

“சாக் ஆனது போதும் கிளம்பு”

‘இவனுங்க விட மாட்டாங்க போல’ ராதா தயங்கிக் கொண்டே போனாள்.

“ஏம்மா வேகமா போ நீ போய் சேரதுக்குள்ள அவன் குடிக்குற டீ தயிரா மாறிடும்”

ராதா திரும்பி அனைவரையும் முறைத்து பார்க்க, “அதான் போறேனில்ல எதுக்கு இந்த ரன்னிங் கமென்டரி கொடுக்கிறத நிறுத்துங்க”

அங்கு இருப்பவனை பார்த்து, ‘காலையில சைட் அடிச்சது குற்றமா? இப்படி செய்யறாங்க ச்சே…’

தத்தி தத்தி நடந்து வந்த ராதா, அவன் முன் நின்றாள் ராதா.

‘என்ன ஏதோ நிழல் ஆடுது?’

காப்பியை உறிஞ்சிக் கொண்டே பார்வையை மட்டும் உயர்த்தி பார்த்தான் மாதவக் கண்ணன்.

‘ப்பா... என்ன பார்வைடா... ஆஆஆவ் அழகன்டா, அழகா இருக்கான்டா, இப்படியே கைபிடித்து இழுத்துட்டு போய் கல்யாணம் செஞ்சிக்கனும்’ ராதா தன் மனம் போன திசையை பார்த்து அதிர்ச்சியில் இருக்க.

‘என்ன இந்த பொண்ணு வச்ச கண்ணு வாங்காம பார்க்குது? ஒருவேலை சொந்தக்கார பெண்ணா இருக்குமா? ஆனா இந்த முகரகட்டையை பார்த்தா போல நியாபகம் இல்லையே. ஆனா அழகா இருக்கா குறும்பு மின்னும் கண்கள், அதற்க்கு அழகு சேர்க்கும் விதமாக தீட்டிய மை… ப்பா என்னா கண்ணுடா கட்டி போட்டு இழுக்குது’ தன் தலையை உழுக்கியவன்.

“யாருமா நீ, காலேஜ்க்கு புதுசா”

ஆமா இவ்லை என்று எல்லா புறமும் தலையை ஆட்டினாள்.

‘என்ன தலையை நாலு பக்கமும் ஆட்டிட்டு இருக்கா, சரியில்லையே’

“கிளாஸ் ரூம் தெரியலையா மா”

அதற்க்கும் அனைத்து புறமும் தலையை ஆட்டி வைத்தாள்.

‘நல்லா தலையாட்டி பொம்மை போல’

“என்ன மா உன்னோட தொல்லையாக போச்சி என்ன வேணும்னு சொல்லு மா”

“அது அங்க...” சீனியர் நின்ற இடத்தை பார்த்து திரும்ப.

“ஓ... ரேகிங்கா? என்ன சொல்ல சொன்னாங்க சொல்லிட்டு போ மா” தயங்கிய அவள் பயந்து கொண்டே கண்ணனின் கண்களை பார்க்க.

இருவர் கண்களும் எதிர் திசையில் இருக்கும் காந்தம் போல ஒட்டிக் கொண்டது.

“என்னா டா நடக்குது இங்க… அந்த புள்ளை சொல்லிட்டு போக சொன்னா அங்கயே நின்னுட்டு இருக்கு”

“வாங்கடா பக்கம் போய் பார்ப்போம்” அங்கு நின்றிருந்த படை இங்கு வந்தது.

அதற்க்குள் சீனியர்ஸ் இவர்களை சுற்றி நிற்க கண்ணன் ராதாவை பார்த்துக் கொண்டே காபி ஒரு சிப் குடுத்தான்.

மந்திரத்துக்கு கட்டுப்பட்டவள் போல ராதா மாதவ கண்ணனின் அருகில் உட்கார்ந்தாள்.

“அத்தான்… நம்ம கல்யாணம் செய்துக்கலாமா?” வாயில் இருந்த காப்பியை துப்பி விட்டான் கண்ணன்.

ஒரு கையால் வாயை துடைத்துக் கொண்டு ராதாவை பார்த்த கண்ணனின் கண்கள் விரிந்து கொண்டது.

ராதா கண்களை சிமிட்டாமல் அவனது முக பாவனைகளை ரசித்தாள்.

“நான் கிளம்புட்டுமா கண்ணா அத்தான்” ராதா குறும்போடு சொல்ல இந்த முறை அனைத்து புறம் தலை ஆட்டுவது கண்ணனின் முறை ஆனது.

நண்பர்களே அதிர்ந்துதான் நின்றார்கள்.

“என்ன இந்த பொண்ணு லவ் யூ சொல்ல சொன்னா கல்யாணம் செஞ்சிக்கிறயா’ன்னு கேட்டுட்டு போது” ஒருவன் சாக்காகி நிற்க.

மற்றொருவன், “அது சரி, இவன் எதுக்கு பேய் அறைஞ்சது போல இருக்கான்”

“பேய் அறைஞ்சது பேய் இல்லை… கண்ணின் ராதா”

“ஹாஹா... மிரண்டுட்டான் போல” அனைவரும் கலாய்க்க.

அதிர்ச்சியில் இருந்து வெளி வந்த கண்ணன்.

“டேய் இனி இது போல எல்லாம் செய்யாதிங்க” என்றவன் கோபமாக சொல்லி வகுப்பறைக்கு போய்யிட்டான்.

அன்று மாலையே அந்த மரத்தடியில் கண்ணன் காத்திருந்தான் ராதாவை பார்க்க.

இதுவே வழக்கமாகி போனது இருவருக்கும்.

அவன் மரத்தடியில் நிற்பதும் ராதா அவனை விழுங்குவது போல பார்வை பரிமாறிக் கொள்வதும் வழக்கமாகி போனது.

இருவர் பார்வையும் சந்திக்கும் அந்த வேளையில் சுற்றி இருக்கும் அனைத்து சத்தமும் மியூட் ஆகிவிடும், சுலோமேசனில் நடப்பது போல இருக்கும்.

நாட்கள் இப்படியே நகர்ந்தது இருவருக்கும்.

அந்த வருடம் முதல் செமஸ்டர் வந்தது கடைசி தேர்வு அன்று இருவரின் பார்வையும் ஏக்கமாக பரிமாறிக்கொண்டது.

முகத்தில் விழும் முடியை சரி செய்தவள்… காதை தொடும் போது, “அச்சோ என் பேவரைட் தோடு”

தோழிகளிடம், “நீங்க கிளம்புங்க என் தோடு கானோம் நான் தேடிட்டு வரேன்”

ராதா அவள் அன்று சென்ற இடங்களுக்கெல்லாம் சென்று தேடி பார்த்தால் தோடு தான் கிடைத்த பாடில்லை.

“ராதை என்ன செஞ்சிட்டு இருக்க இந்த நேரத்தில்”

“அது… அத்தான்” நாக்கை கடித்தவள்.

“அது தோடு கானோம்”

“அத்தான்னு கூப்பிடு நான் கோச்சிக்க மாட்டேன்”

“சரி… கொஞ்சம் ஹெல்ப் செய்றிங்களா தோடு தேடி தர”

“கண்டிப்பா.. இவ்வளவு அழகான ஒரு பொண்ணு கேட்டா செய்ய மாட்டேனா என்ன”

அமைதியாக இருவரும் தேடிக்கொண்டே போக ஒரு மணி நேரம் ஆகியும் கிடைக்கவில்லை.

அதுதான் கண்ணன் பேக்கெட்டில் இருக்கே எப்படி கிடைக்கும் திருட்டுப்பையன் கிடைத்ததும் பேக்கட்டில் பதுக்கிட்டான்.

“ராதை டைம் ஆச்சி வா கிளம்பலாம்”

“சரி கண்ணா வாங்க போலாம்” இருவரும் கேட்டை தாண்டவும்.

“தோடு இல்லாம உன் காது ஏதோ போல இருக்கு வா என் கூட” ஒரு நகை கடைக்கு கூட்டி போனான்.

“இங்க எதுக்கு எதாவது பேன்சிக்கே போலாமே”

“நான் வாங்கி கொடுத்தா வாங்கிக்க மாட்டியா ராதை”

“வாங்கிப்பேன்… ஆனா அதிகம் இது யூஸ் செய்ய மாட்டேன் அதான்”

“ஏன்… எனக்கு டிசைன் டிசைனா தோடு போட்டா தான் பிடிக்கும்”

“ஓ… கடைக்கு வந்துட்டோமே எதாவது வாங்கிக்கோ” கண்ணன் கோல்ட் செக்சனுக்கு போக.

“இங்கே வேண்டாம் வெள்ளில எதாவது வாங்கிக்கலாமா?”

“ஏன் தங்கம் பிடிக்காதா?”

“இல்லை விலை ஜாஸ்தி வெள்ளி விளை குறைவு அதான்”

“நல்ல சிக்கனம்”

“சிக்கனம் எல்லாம் இல்லை… மெதுவா வாங்கிக்கிறேன்”

“சரி… என்ன வாங்கலாம்? ரிங் வாங்கிக்கிறியா?”

“அதுக்குள்ள ஆசையை பாரு” ராதா முணுமுணுப்பது கண்ணாக்கு கேட்டாலும் கேட்காதது போல நின்றிருந்தான்.

“இது வாங்கிக்கட்டா…” இரு பட்டாம் பூச்சி இணைந்தது போல இருந்த பிரேஸ்லட்டை காட்ட.

“சரி வாங்கிக்கலாம்” மாதவன் எடுத்து ராதா கையில் வைத்து பார்க்க

“அழகா இருக்கு” பில் போட்டு வெளியே இருவரும் வர.

ரோட்டுக்கடையில் அடுக்கிவைத்திருந்த ஒரு பெரிய தோடை எடுத்து மாட்டிவிட்டவன்.

“அழகா இருக்குடா”

“தேங்க் யூ”

“ஊருக்கு போனும் கிளம்பட்டா?”

“சரி” என்று ராதா கிளம்ப இருவருக்கும் நினைவு வரலை போன் நெம்பர் வாங்கனும் என்று.

இப்படியே அந்த வருடம் சென்றது.

இருவரின் பார்வைகள் பரிமாற்றம் மட்டும் தவறாமல் நடந்தது.

‘என் ராதை’ என்ற அவனும்.

‘செல்ல கண்ணா’ என பார்க்கும் போது மனதில் மாறி மாறி கூப்பிடுவதோடு சரி. தனிமையில் அவளுடைய ஒற்றை தோடை வைத்து பேசுவதும்.

ராதா கையிலிருந்த பிரேஸ்லெட்டை வருடுவதும் என்று சொல்லாமலேயே காதல் வளர்த்தார்கள்.

எப்படி இண்டாவது நாள் பேசும் போது உரிமையாக நகை வாங்கி தரும் அளவுக்கு உரிமையாக அழைத்து சென்றதை நினைத்து வியந்தான்.

பார்வையால் மட்டும் இருவரும் பேசிக்கொண்டே இருந்தார்கள்.

அந்த வருடமும் முடிந்து கண்ணன் காலேஜ் விட்டு போனான்.

ராதா முகம் தான் வாடி போனது.

அவன் டி. சி வாங்க வரும் போது நம்பர் வாங்கனும் என்று நினைத்த அவளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

அவன் நண்பர்களுடனே ஒட்டிக்கொண்டு இருந்தான், அந்த கூட்டத்தில் எப்படி போய் நம்பர் கேட்பது என்ற தயக்கத்தில் விட்டு விட்டாள்.

கண்களில் கண்ணீர் கசிந்தது, துடைத்து கொண்டு தற்போது தங்கி இருக்கும் ரூமிர்க்கு போக.

ரகுவரன் சமைக்க மட்டும் ஆள் வைத்திருந்தார், கிருஷ்ணாவும் நேரம் கிடைக்கும் போது வந்து பார்ப்பான்.

வீட்டுக்கு வந்தவள் சோர்வாக உட்கார்ந்தாள்.

“ச்சே... போச்சி எல்லாம் போச்சி இனி எப்படி அவனை பார்ப்பது”

சோர்வாக படுத்திருந்த அவளுக்கு ஒரு மெசேஜ் வந்தது.

“ச்சே இந்த போன் வேற சும்மா நைநைன்னு”

அதன் பிறகு இரண்டு நாள் போனை எடுக்கலை கண்ணனின் நினைவாகவே சுத்திட்டு இருந்தா.

எங்கு பார்த்தாலும் கண்ணா முகமே வந்து போனது, சோர்வாகவே சுத்திட்டு இருந்த அவளுக்கு ஒரு ஒரு நாளும் வருடம் போல மெதுவாக போனது.

காலேஜில் கட் அடித்தவள் தனியாக ஊர் சுற்ற போனாள்.

அங்கும் கண்ணன் போலவே நிறைய உருவம் தெரிந்தது.

சுற்றி முடித்து மாலை வந்து உட்கார ஃபோன் அடித்தது எடுத்து பேச.

குரலை கேட்டு அதிர்ந்தாள்.

“ராதை...” டக்குன்னு கண்ணனின் குரல் கேட்டகவும் பதற்றத்தில் ஃபோனை கட் செஞ்சிட்டா.

“என்னாச்சி... கட் ஆகிடுச்சா கட் செஞ்சிட்டாளா?” அந்த பக்கம் கண்ணன் குழம்பிப் போய் இருக்க.

ராதாவோ, “என்ன இவர் கால் செஞ்சி இருக்கார் என் நெம்பர் எப்படி ஐயோ அவசரத்தில் கட் செஞ்சிட்டோமே”

கீழே போட்ட ஃபோனை எடுத்து கடைசியாக வந்த நம்பருங்கு மீண்டும் டயல் செய்தாள்.

‘ஐஐஐ போன் பண்ணிட்டா’ ஆசையாக எடுத்தான்.

கண்ணன் அமைதியாக இருந்தான் இந்த முறை அவள் பேசட்டும் என்று.

‘என்ன பேசாம இருக்கார்’ ராதா தயக்கத் தோடு, “ஹலோ கண்ணா தானே”

“இல்லை... உன்னோட அத்தான்”

“ஈஈஈஈஈ”

“அழகா சிரிக்கிற”

“போங்க கிண்டல் செய்யாதீங்க”

“எப்படி இருக்க”

“ம்ம்ம்”

“என்ன ம்ம்ம்ம்… வாய் பேச வராதா”

“வருமே… புதுசா இருக்கு”

“சரி..”

“என் நெம்பர் எப்படி... உங்ககிட்ட
 

Bindusara

Well-known member
Wonderland writer
14 காதலன்!

இப்படியே தொடர்ந்தது இந்த தொலைபேசி பயணம்…சொல்லாமலேயே காதல் வளர்த்தார்கள்.

அவனுக்கு நேரம் கிடைக்கும்போது எல்லாம் கால் பேசி பேசி கிட்டத்தட்ட அவளை அவன் குரலுக்கு அடிமை ஆக்கினான்.

நாளுக்கு நாள் இவர்களின் போனில் பேசும் பேச்சுகள் அதிகரித்துக் கொண்டே தான் போனது, இரவுகளில் வரும் நிலாக்கு போட்டியாக இருவரும் காய்ந்தார்கள்.

ஆரம்பத்தில் சாதாரணமாக தொடர்ந்தாலும் ராதா சிறு தயக்கத்தோடுதான் பேசினாள்.

இருவருமே குடும்பத்தை பற்றி பேசிக்கொள்ளவில்லை.

கல்லூரி முடித்து ராதா வரும் போது ஒரு ஓவியத்தை பார்த்து நின்றாள்.

“ச்சே நம்மை எல்லாம் எந்த பையனும் வரைந்து தரமாட்டான் போலவே” அந்த யோசனையில் வந்தவள்…

ஃபோன் அடிப்பது கூட தெரியாமல்… அந்த ஓவியத்தை நினைத்தவள் தோட்டத்தில் உலாத்திக் கொண்டு இருந்தாள்.

சூரியன் மறைந்ததும்தான் வீட்டுக்குள் வந்தாள், “முப்பதுக்கு மேல் மிஸ்டு கால் இருந்தது” அதை பார்த்ததும் ராதாக்கு இனம் புரியாத மகிழ்ச்சி.

அவளுக்கு தெரிய வாய்ப்பு இல்லை, இதை எல்லாம் ஸ்பீட் வட்டி போட்டு அவன் வாங்கிவிடுவான் என்று.

அவசரமாக அவனுக்கு கால் போட்டாள்.

“என்னாச்சி எதுக்கு இவ்வளவு மிஸ்டு கால்” பதட்டமாக ராதா வினவ.

அதே பதட்டம் குறையாமல் கண்ணா திட்டத் துவங்கி விட்டான்.

“கண்ணா போதும்… நிறுத்து” மூச்சிவாங்க நிறுத்தினான்.

“என்னாச்சி கண்ணா உனக்கு எதுக்கு இந்த கோபம்”

“பயந்துட்டேன் எப்போதும் ஒரே ரிங்கில் எடுத்துடுவ இத்தனை கால் செய்தும் எங்கே காணமேன்னு பதறிட்டேன்”

“நான் தோட்டத்தில் இருந்தேன் போன் சார்ஜில் இருந்தது அதனால தான் சரியா”

“ம்ம்ம்ம்…” காலிங்பெல் தொடர்ந்து அடிக்கவும் கதவை திறந்து அதிர்ந்து நின்றாள் ராதா.

“இரு நான் யாருன்னு பார்த்துட்டு கூப்பிடுறேன்”

“அண்ணா நீங்க எப்படி இங்க?”

“இல்ல மா கண்ணா தான் உன்னை வீட்டில் இருக்கியான்னு பாத்துட்டு வர சொன்னான்”

“ஹாஹா… உள்ள வாங்க அண்ணா போன் சார்ஜரில் இருந்தது கவனிக்கலை, அதுக்கு இப்படி அமர்கலம் செஞ்சிட்டார்”

“காபியா டீயா அண்ணா”

“டீ கொடு மா”

“அப்புறம் அண்ணா என்ன ஜாப் செய்யுரிங்க, பெங்களூரில் ஒரு சாதாரண கம்பெனியில் தான் மா”

“இங்க எப்படி இதுக்காக வந்திங்களா?”

“இல்லை மா… வீட்டுக்கு வந்தேன் வீக் எண்ட் அதையும் கெடுத்துட்டான் அந்த மகராசன்”

“ஹா ஹா… நீங்க சென்னையில் தானே செலக்ட் ஆகி இருந்திங்க”

“தூரம் மா வீட்டை விட்டுட்டு போக மனசு வரலை நினைச்சா வந்து போலாம்”

“அதுவும் சரி தான் அண்ணா”

“சரி மா நான் கிளம்பரேன்”

“அண்ணா இருங்க சாப்பிட்டுட்டுதான் போகனும்”

“இல்ல மா நேரமாகும் நான் கிளம்பறேன்”

“இருங்க அண்ணா ஒரு அரை மணி நேரம் இருக்க மாட்டிங்களா எனக்காக”

“சரிம்மா” டீவியை ஆன் செய்து மாதவன் நண்பன் உட்கார்ந்து இருக்க.

“அண்ணா இதை கட் செய்யுங்க” வெங்காயம் மற்றும் தக்காளி கொண்டு வந்து கொடுக்க.

“அதானே பார்த்தேன் என்னாடா பாசம் பொங்குதேன்னு”

“அண்ணா ஜோக் செய்யாம கட் பண்ணுங்க”

ராதா காலையில் செய்த சப்பாத்தியை நீள நீளமாக கட் செய்தாள்.

“என்னாம்மா செய்யுற?”

“புது டிஸ்” இருவரும் வெட்டி முடித்த பத்தாவது நிமிடத்தில் சுடச்சுட இருவரும் சாப்பிட.

“ராதா பாப்பா என்ன இது புதுசா இருக்கு”

“அண்ணா புதுசு தான் சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க”

“இது பெயர் என்ன மா”

“அண்ணா நானே இன்னும் பெயர் வைக்கலை”

“ராதா உன்னை நம்பி சாப்பிடலாமா?”

“அட சாப்பிடுங்க அண்ணா”

முதல் வாய் வைத்ததும் ஆகா ஓகோ என பாராட்ட துவங்கிவிட்டார்.

“அண்ண எப்படி இருக்கு”

“அருமையா இருக்கு பாப்பா”

“இதுக்கு பெயர் ஒன்னு வச்சி இருக்கேன் சொல்லவா?”

“சொல்லுமா”

“சப்பாத்தி நூடுல்ஸ்”

“சூப்பர் பெயர்”

சாப்பிட்டு முடித்ததும், “சரி மா கிளம்பட்டா”

“சரி அண்ணா… ஒரு நிமிசம் இருங்க” டப்பாவில் போட்டு கொடுத்து அனுப்பினாள்.

“சரி மா பத்திரம் வீட்டில் யாரும் இல்லையா”

“ஒரு பாட்டி சமைக்க வைத்து இருந்தாங்க அவங்களுக்கு உடல் நிலை சரியில்லை அதனால வரதில்லை”

“சரி மா பத்திரம்”

“சரி அண்ணா” அவனை வழி அனுப்பி வைத்துவிட்டு கண்ணாக்கு அழைக்க.

“டேய்.. எதுக்கு டா அண்ணாட்ட எல்லாம் சொல்லி இப்படி சங்கடம் செய்யற”

“யாரு நானா… நீ போன் எடுத்து இருந்தா நான் எதுக்கு இப்படி செய்ய போறேன்”

“சரி என்ன அவனுக்கு ஏதோ புது டிஸ் செய்து தந்தியாம் எனக்கு எங்க டி”

“அது எல்லாம் நேரம் வரும் போது செய்து கொடுப்பேன்”

“வெயிட்டிங் பேபிமா”

“என்ன புதுசா இருக்கு பேபிமா எல்லாம்”

“அது எல்லாம் அப்படி தான் கண்டுக்காத” என்றான் இருவரிடத்திலும் அமைதி இந்த கால் இருவருக்கும் மறக்க முடியாத ஒரு நினைவாக மாறிப் போனது.

“சரி பேச்சை மாத்தாத… எதுக்கு போன் எடுக்கலை முதலில் சொல்லு”


“அது வழியில் ஒரு டிராயிங் பார்த்தேனா அதே யோசனையில் இருந்துட்டேன்”

“ஓ… பிடிக்குமா?”

“ஆமா ரொம்ப பிடிக்கும்”

“சரி அப்புறம் என்ன என்ன பிடிக்கும் உனக்கு, பேச்சி நீண்டு கொண்டு போனது நிறைய நேரம் பேசிட்டேன்.

“சரி உனக்கு என்ன பிடிக்கும்? அதை சொல்லு” ராதா கண்ணனிடம் கேட்க.

“என் ஆசை நிறைய இருக்கு மெதுவா சொல்லுறேன்”

“இப்போவே சொல்லு”

“எனக்கு… முதல்ல உன் கையால சப்பாத்தி நூடுல்ஸ் சாப்பிடனும்”

“அடுத்து?”

“அடுத்து… ஒரு சாப்பிங் போகனும் ஒரு நாள் நீ பிரண்ட் கூட போறேன்னு சொன்னே இல்லை, அப்போ நானும் வரனும்னு ஆசைப்பட்டேன்”

“சரி போலாம் அப்புறம்”

“எங்க வீட்டுக்கு உன்னை கூட்டிட்டு போகனும்… எங்க வயல் ஊர் எல்லாம் சுத்திக் காட்டனும்”

“அப்புறம்” என்றால் ஆர்வமாக.

“எங்க ஊர்ல ஒரு பெரிய காடு இருக்கு அங்க உன்னை கூட்டிட்டு போகனும்”

“ம்ம்ம்… அடுத்து”

“வத்தல் மலைக்கு போய்…”

“போய்…”

“பாரைமேல் நின்னு…”

“நின்னு… அடச்சி இழுக்காத விஷயத்தை சொல்லு”

“உனக்கு பிரப்போஸ் செய்யனும்”

“ஹா ஹா…”

“ஏய் எதுக்கு சிரிக்கற”

“நடக்காததை ஓவரா இமேஜின் செய்யாதே”

“ஏன் நடக்காது அதான் உனக்கு என்னை பிடிக்கும் இல்லை”

“பிடிக்கும்… ஆனா கல்யாணம் வரை நான் யோசிக்கலை” ராதா வெக்கத்தை அடக்கிக்கொண்டு சீரியஸ் ஆக பேச.

“சரி சரி பார்ப்போம்… அதையும்” கண்ணா மயக்கும் புன்னகை வீசி சொல்ல.

ராதா மனதில் நினைத்துக் கொண்டாள், ‘இந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன்' என்று இப்படியே பல கனவுகளோடு தொடங்கும் இவர்களது அந்த நாள்.

காலை துடங்கியது முதல் முடியும் வரை நடந்த அனைத்தையும் ஒப்பிப்பதே வழக்கமாக போனது.

அவன் பெரியதாக எதைப் பற்றியும் சொல்ல மாட்டான் சில நேரங்களில் மனது சுனங்கும், அவனது ஒட்டா தன்மை.

அவளது குரல் கேட்பதே வரம் போல அவள் பேசுவதை ரசிப்பான் இப்படியே இரண்டு வருடங்கள் கடந்தது. வீட்டில் கல்யாணம் முடிவு செய்தார்கள் மேலே படிப்பதாக சொல்லி தவிர்த்து வந்தாள் அடுத்த மூன்று வருடம் சென்றது படிப்பு என்று.

அளவுக்கு அதிகமாக நெருக்கமும் உரிமையும் ஒரு நாள் ஆபத்து ஏற்படுத்தும் என்று தெரியாமல் நாளுக்கு நாள் நெருங்கிய இவர்களின் உறவு.

“கண்ணா வயிறு வலிக்குது... கொஞ்ச நேரம் பேசேன் துணி துவைக்கனும் கொஞ்ச நேரம் என்கிட்ட பேசுடா கண்ணா” அவனை வேலை கூட செய்ய விடாமல் படுத்தி எடுப்பாள். கண்ணா தான் மூச்சு பேச்சு என அவளது வாழ்க்கை பழக்கம் மாறியது.

“கண்ணா... நீ ரொம்ப டெரர் பீஸ்’ன்னு நினைத்தேன் அப்படி இல்ல கண்ணா செம சாப்ட், கேரிங்”

அவனிடமிருந்து வித்யாசமாக ஒரு சிரிப்பு தான் வந்தது.

மூன்று வருடம் வரை அப்படி ஒரு நெருக்கம் ஒரு முறை கூட நேரில் பார்க்க வில்லை. கால், மெசேஜ், விடியோ கால்தான் அழகாக சென்றதாக ராதா நினைத்தாள்.

அனைத்தும் தவறு என்பது போல, ஒரு நாள் நடந்த சண்டையில், சிறுக சிறுக வளர்த்த காதல் உடைந்து மண்ணோடு மண்ணாக போனது.

“கண்ணா எனக்கு தூக்கமே வரலை எதாவது கதை சொல்லேன்”

“ராதா எனக்கு தூக்கம் வருது... இன்னொரு நாள் சொல்லட்டா”

“ம்ம்ம்ம்” சிறிது நேரத்தில் தூங்க போய்ட்டான்.

‘நான் போர் அடிச்சிட்டனா? இல்லை என்னை அவனுக்கு பிடிக்காம போய்டுச்சா?’ தூக்கம் வராமல் தவித்தாள் ராதா.

அதற்க்கு அடுத்து வந்த நாட்களில் ராதா தனிமையாக உணர்ந்தாள்.

மாமா கிருஷ்ணாவிடம் பேசிய போது கூட அந்த தனிமை உணர்வு மாறவில்லை.

இந்த தனிமை வலித்தது அவளுக்கு, எந்தனையோ முறை கண்ணன் ஆசையாக கேட்டது நினைவுக்கு வர. ஒருவேலை அதற்க்கு தான் என்னை தவிர்க்கிறானா

என்று எல்லாம் எண்ணம் வலம் வந்தது.

கண்ணன் பல முறை தன் காதலை வெளிபடுத்தியும் ராதா அதை ஏற்க்கவும் இல்லை மறுக்கவும் இல்லை.

பேச்சை மாற்றி விடுவாள், “எங்க வீட்டில் வந்து பேசு அவங்க ஓகே சொன்னா ஏத்துக்கிறேன், இல்லை என்றால் விட்டுடனும் நீ எனக்கு பிரண்டா கடைசி வரை வேண்டும் டா”

அவளது பேச்சு மனதை வருத்தினாலும் பெரியதாக ரீயாக்ட் செய்ய மாட்டான், அவனிடமிருந்து ஒரே பதில் தான் வரும்.


”இந்த ராதை இந்த கண்ணனுக்குதான்”

“அது எப்படி நாளை நடப்பது உனக்கு தெரியும் யாருக்கு யார் என்று முடிச்சி போட்டிருக்கோ அங்கே தான் சேர்வார்கள்”

“எனக்கு தெரியும்... யூ ஆர் மைன், மை ஏஞ்சல்”

“கிருஷ்ணா இது எல்லாம் ஒரு வித பயத்தை கொடுக்குது எனக்கு”

“சரி விடு இதை பத்தி எதும் இனி பேசமாட்டேன், ஆனா நீ என்னவள், அது என்றும் மாறாது”

இந்த வார்த்தை இந்த உறுதி ராதாவை அசைத்து பார்த்தது என்னவோ உண்மை தான்.

தன் காதலை கண்ணாவிடம் சொல்லவில்லை என்றாலும் மனதால் தன் செயலால் அவனை கணவனாக பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

எதற்க்கெடுத்தாலும் ரகுவரன் மாமாவை நச்சரிக்கும் ராதா.

இப்போது எல்லாம் கிருஷ்ணா சாப்பிங் போறேன், படத்துக்கு போறேன், வத்தல் மலை பிரண்ஸ் கூட போறேன், சேலம் டிரஸ் எடுக்க போறேன் என்று அவன் சம்பாதியத்தில் கை வைத்தாள்.

கடைசி வருட படிப்புக்கு கூட அவன் தான் மொத்த செலவும் பார்த்தான். ஒரு லட்சம் மேல் செலவு செய்திருப்பாள் கணக்கு பார்த்ததில்லை அவனும் சரி அவளும் சரி.

இரவுகளில் வெவ்வேறு இடத்தில் இருந்தாலும் மொட்டை மாடியில் படுத்து நட்சத்திரத்தை ரசிப்பதிலிருந்து சாப்பிடுவது என தூரத்தில் இருந்து காதலித்தார்கள்.

அவனது இந்த திடீர் அமைதி இவளை மொத்தமாக உடைய செய்ததுதான் என்ன செய்கிறோம் என்ன பேசுகிறோம் என்று கூட சிந்திக்கும் நிலையில் அவள் இல்லை.

இங்கு ஆரம்பித்தது அந்த முட்டாள் தனத்தின் உச்சம் இதுவே இவர்களின் பிரிவுக்கு காரணமாகும் என்று தெரிந்து இருந்தால் ராதா மௌனமாகவே கண்ணீரின் பிடியிலையே இருந்து இருப்பாள்.

இப்போது எல்லாம் கண்ணன் போன் போடுவது குறைந்தது.

எப்போதும் அவன் தான் போடுவான் அனைத்தும் தலை கீழாக மாறியது.

“கண்ணா...” அவள் ஆரம்பிக்கும் போதே.

“ராதா நான் கொஞ்சம் பிசியா இருக்கேன் கூப்பிடுறேன்” என்று வைத்து விடுவான் சில நேரங்களில் கட் செய்துவிடுவான்.

ஆரம்பத்தில் பொறுமையாக இருந்தவளுக்கு போக போக பைத்தியம் பிடித்தது.

“கண்ணா பேச மாட்டியா...”

“ராதா... கொஞ்சம் வேலை என்ன விஷயத்தை சொல்லு” அவனது பதில் அவளுக்கு எரிச்சலை கிளப்பியது.

‘இது என்ன ஆப்பிஸ் ஸ்டாப்பா... என்ன’ன்னு சொல்லிட்டு ஃபோன் வச்சிடனுமாம்’ எரிச்சல் வந்தது.

“ஏன் கண்ணா எதாவது பிடிக்கலையா”

“ராதா எனக்கு உன் கூட சண்டை போடும் தெம்பு இல்லை... அடுத்து உன்னை சமாதானப் படுத்தவும் மூட் இல்லை”

“நான் உன்னிடம் எப்போ கண்ணா சண்டை போட்டேன்”

“என்னை பேச வைக்காத ராதா”

“சொல்லு கண்ணா, என்ன பிடிக்கலை சொன்னா தானே தெரியும்”

“சொல்லுங்க கண்ணன்”
 
Last edited:

Bindusara

Well-known member
Wonderland writer
15 காதலன்!

“என் பெருமையை சோதிக்காதே ராதா”

“ஓ… ராதை இப்போ ராதாவா மாறிடுச்சி இல்ல”

“ராதா நான் முன்னவே சொல்லிட்டேன், உன் கூட சண்டை போட எனக்கு விருப்பமில்லை”

“ஓ… பேச விருப்பம் இல்லையா?”

“உனக்கு என்ன செவுடா? நான் எங்கே உன் கூட பேச விருப்பமில்லைன்னு சொன்னேன். சண்டை போடதான் விருப்பமில்லை சொன்னேன்” கிட்டத்தட்ட கத்தினான் மாதவக் கண்ணன்.

அவனது இந்த சத்தம் ராதாவை அதிரவைத்தது.

தேம்பிக்கொண்டே, “நீங்க எதுக்கு கத்துரிங்க… எனக்கு உடம்பு நடுங்குது”

“நடுங்கட்டும்… ஒரு ஒரு நிமிசமும் என்னை நடுங்கதானே வச்சிட்டு இருக்க”

“நான் என்ன செஞ்சேன்?”

“நீ என்ன செய்யலை, நான் நானாவே இல்லை. அது உனக்கு தெரியுமா, என்னை மொத்தமாக மாத்தியது மட்டுமில்லாமல் என் உயிரை வாங்கிட்டிருக்க”

“நா… நான் என்ன செஞ்சென்”

“வாயை மூடுடி... ச்சி என் நிம்மதி போச்சி ஒரு ஒரு வார்த்தையும் உன்கிட்ட பாத்து பாத்து பேசனும், ஆனா நீ என்ன பேசினாலும் தவறில்லை”

“நான் எப்போ அப்படி சொன்னேன்”

“நீ இதை வெளிப்படையா சொன்னதில்லை ராதா, ஆனா என் மண்டைக்குள்ள வச்சி ஆட்டிட்டு இருக்க, நான் உன்னை பத்தி தானே நினைச்சிட்டு இருக்கனும், எனக்கு என் வேலை முக்கியமில்லை, என் தூக்கம் முக்கியமில்லை, உனக்கு எல்லா வேலையும் செய்து கொடுக்க வேண்டும், உன்னை பத்தி மட்டும் யோசிக்கிற. என்னை பத்தி என்னைக்காவது யோசித்து இருக்கியா நீ, செல்ஃபிஸ்.”

“நானா?” ராதா அதிர்ந்து நின்றாள்.

“எனக்கு உடம்பு சரியில்லை’ன்னு சொன்னா கூட காதில் நுழைந்த பூச்சி போல குடஞ்சிட்டு போனவ”

“…..” ராதாவிடம் இருந்து அமைதி, ‘நான் கொடுமை படுத்தினேனா! அவன்தான் என்னிடம் பேசினால் உடல் நிலை கூட மறந்திடுறேன்னு சொன்னானே அதனால் தானே பேசினேன். விடிய விடிய பேசினோமே பர்த் டே அப்ப அது எல்லாம் அவனை வறுத்திட்டுதான் செஞ்சானா?”

“அப்போ பர்த்டே அன்று இரவு பேசியது எல்லாம்”

“உன்னை சந்தோஷப்படுத்ததான் பேசினேன், ஆனா தூக்கத்தில் சொக்கி சொக்கி விழுந்தது, எனக்கு தானே தெரியும்”

இந்த வார்த்தைகளை கேட்டு ராதா உடைந்தாள். அவனுடன் செலவழித்த, ஒவ்வொரு நொடியும் ரசித்து இருக்கிறாள். ஆனால் அவன் அதை ரசிக்கவில்லை என்றதும் வலித்தது.

“கண்ணா என்னை கஷ்டப்படுத்துற”

“இன்னும் நான் பேசி முடிக்கலை ராதா”

“சாரி… எனக்கு தெரியலை, தெரிஞ்சிருந்தா”

“தெரிஞ்சி இருந்தாலும் சண்டைக்கு வந்திருப்ப, ஐ நோ வாட்ஸ் யூவர் ரியாக்சன்”

“ஏன் இப்படி பேசுறிங்க”

“அப்படி சொல்லி இருந்தா சண்டைக்கு வந்திருப்ப கோச்சிட்டு போன் கட் செஞ்சிடுவ, உன்னை சமாதானப் படுத்த நான் மாச கணக்கா நாய் போல, உன் பின்னாடி சுத்தி இருக்கனும். இது எல்லாம் விடு எத்தனை முறை லவ் சொல்லி இருப்பேன். பதில் ஒழுங்கா சொல்லி இருப்பியா லவ் இல்லையாம் பிரண்டா கடைசி வரை இருந்துக்கலாம்’ன்னு டயலாக் பேசுவ அதை கேட்கும் போது செவுல்லையே அப்பனும்ன்னு தோனும்”

“முதல்ல கோபப்பட்டாலும் நீ சொன்னா கேட்டு இருப்பேன்”

“நீ பேசாதே டி, திமிரு பிடித்தவள்”

“நானா?”

“நீயே தான்…”

“எனக்கு பயமா இருந்தது கண்ணா, நீயும் மத்த காதலர்கள் போல பரிஞ்சிட்டா, என்னால தாங்க முடியாது. எனக்கு கடைசி வரை நீ வேணும் டா... ஐ லைக் யூ”

“இப்போ கூட பாரு வாயில் ஐ லவ் யூ வரலை, குட் பாய்” கண்ணன் போனை வைத்து விட்டான்.

“என் தவறுதான் அவனுக்கு ஓகே சொல்லாதது, அவன் கேட்டது எதுவும் செய்யவில்லை. அதுமட்டுமல்லாமல், அவனை கொடுமை படுத்தி இருக்கேன். அதிக உரிமையியல் அவனை அடிமையா வச்சி இருந்தது என் தவறுதான்” கண்ணீரை கட்டுப்படுத்த வழிதான் தெரியாமல் அழுதாள்.

இந்த தன்மையை போக்க

அவன் அனுப்பிய ஒரு சாட் பிளிம் எடுத்து பார்த்தாள். அதிர்ச்சியில் அழுதாள், அந்த படத்தில் காதலி காதலனுக்கு ரூல்ஸ் மேல் ரூல்ஸ் போடுவாள். காதல் என்ற பெயரில்… கடைசியில் அந்த காதலன் உன் கூட வாழறத்துக்கு நான் சும்மா இருந்துப்பேன் என்று பிரிந்து செல்வது போல படம் முடிந்திருந்தது. ‘அப்போ இது போலதான் உன்னை அடிமை படுத்திட்டேனா? அதுக்கு தான் இதை அனுப்பி வச்சியா? அது கூட தெரியாத முட்டாளா நான்” ஒரு வாரம் அமைதியாக சென்றது.

இருவரும் பேசிக்கொள்ளவில்லை, அடிக்கடி அவனது லாஸ்ட் சீன் பார்த்துக் கொண்டே இருந்தாள் ராதா.

“நான் காதல் சொல்லிட்டா பேசுவானா? இல்லை அந்த படத்தில் வந்தது போல நீயும் வேண்டாம் என்று போயிடுவானா” ஃபோன் அடித்துக் கொண்டிருக்க, கடைசி ரிங்கில் போனை எடுத்தவன்.

சலிப்பாக, “என்ன சொல்லு என்றான்”

“என்ட பேச எதும் இல்லையா கண்ணா, இப்படி சொல்லு’ன்னு கேட்கற”

“விஷயத்தை சொல்லு எனக்கு வேலை இருக்கு” என்றவன் அதன் பிறகு ஒரு வார்த்தையும் பேசவில்லை.

“ஒன்னுமில்ல சும்மா தான் கால் செய்தேன்”

கண்ணன் முகத்தில் அடித்தார் போல போனை வைத்து விட்டான்.

ராதா துடிதுடித்து போனாள்… அவள் செய்தது அனைத்தும் அவன் திரும்ப வட்டி முதலும் சேர்த்து கொடுத்தான்.

எத்தனையோ முறை கோபத்தில் ஃபோனை வைத்தது மட்டுமில்லாமல் சிவிச் ஆப் செய்து வைத்திருக்கிறாள்.

அவன் மெசேஜிக்கு ரிப்லை கூட செய்ததில்லை, அந்த நேரங்களில் அவள் ஆரம்பித்ததை இவன் தொடர்ந்தான்.

“சாரி இனி இப்படி செய்ய மாட்டேன்”

அதற்க்கு அவனிடம் இருந்து பதில் கூட வராது.

காதலை சொல்லி விடலாம் என ஃபோன் போட்டு சொல்ல அவனிடமிருந்து ஒரு உணர்ச்சியும் காட்டவில்லை. அமைதி மட்டுமேதான் செய்த தவறை சரி செய்ய ஏதேதோ செய்தாள்.

அவனிடம் இருந்தது அமைதி மட்டுமே, அவனது அமைதி அவளை கொன்றது.

அவளை ரசித்த கண்கள் முகத்தை பார்க்க கூட தவிர்த்தான்.

வீடியோ கால் போட்டால் நார்மல் காலிலேயே சொல்லு என்பான்.

ஃபோன் போட்டால் மெசேஜில் சொல்லு என்பான்.

கடைசியாக, ஆரம்பித்த புள்ளியில் வந்து நின்றாள்.

“என்னை கல்யாணம் செய்துக்கிறயா?”

“யோசிச்சி சொல்லுறேன்” என்று ஃபோனை வச்சிட்டான்.

ராதா அசிங்கமாக உணர்ந்தாள், இப்படி ஒரு நாள் வரும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை, வாழ்க்கைக்கு யாசகம் கேட்கும் நிலையில் இருக்கும் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை.

அவனது பதில்காக காத்து இருக்க முடியாதவள் மனதில் அவனை தவிர வேறு ஒருவரை திருமணம் செய்து, வாழ்நாள் முழுவதும் பொய்யான வாழ்க்கை வாழ விரும்பாதவள், அவன் நோ சொல்ல தான் நிறைய வாய்ப்பு இருக்கு என நினைத்தவள்.

பயத்தில் மூலை குழம்பி… அவனுக்கு மெசேஜ் தட்டி விட்டாள்.

“பிளீஸ் நோ சொல்லிடாத என்னால் நீ இல்லாம இருக்க முடியாது பிளீஸ் என்னை கல்யாணம் செஞ்சிக்கோ போதும், நான் உன்ட எதும் எதிர் பார்க்க மாட்டேன். சத்தியாமா பிசிகல் நீட் கூட வேண்டாம், நீ என் கணவனா இருந்தா போதும், ஒரு பிரண்ட்க்கு ஹெல்ப் போல இதை செய்”

பல மணி நேரம் அவன் ஆன்லைனில் வரலை வந்ததும் பார்த்தவன்.

“நான் ஜஸ்ட் பிரண்டாவாவது இருக்கலாம்ன்னு நினைச்சேன், எப்போ இப்படி சொன்னியோ இட்ஸ் ஓவர்”

அவனது மெசேஜ் பார்த்தது ராதாக்கு படபடத்தது நிறைய உணர்ச்சிவசபட்டாள். உடல் விறைத்து படபடத்தது என்னை வேண்டாம் சொல்லிட்டானே. இனி என் வாழ்க்கை இவனை தவிர யாரையும் அவன் இடத்தில் பார்க்க முடியாது.

“பிளீஸ் என்னை புரிஞ்சிக்கோ கண்ணா நான் செய்தது தவறு தான் இனி இது போல நடந்துக்க மாட்டேன். எனக்கு ஒரே ஒரு லாஸ்ட் சான்ஸ் கொடு பிளீஸ்”

“நீங்க என்னை புரிஞ்சிக்கோங்க ஒருத்தர் வாழ்க்கையை காப்பாத்த கல்யாணம் பண்ற அளவுக்கு நான் பெரிய தியாகி இல்லை”

“பீளீஸ்… கண்ணா”

மெசேஜ் படித்துவிட்டான் பதில் இல்லை அவனிடத்தில்.

“ப்ளீஸ் கண்ணா… ப்ளீஸ் விட்டு போகாதே… நீயும்”

“இதை சொல்லி சொல்லித்தான் நடந்துட்டு இருக்கு, எப்போ பாரு நெகட்டிவ் வே டிரிட் செஞ்சிட்டு இருக்க”

“நீங்களும் என்னை புரிஞ்சிக்கோங்க சிஸ்டர்”

“பிளீஸ் சிஸ்டர் சொல்லாத வலிக்குது”

“ஒவ்வொரு ரக்சா பந்தன் அன்னைக்கும் எனக்கு விஸ் செய்யும் போது எனக்கும் இப்படிதான் வலித்தது”

“அது விளையாட்டுக்கு சொன்னேன்”

“நான் நிஜமா சொல்லுறேன்” வாட்ஸ் அப் பிளாக்.

அவன் ஆப் லைன் போயிட்டான் என்று பல மணி நேரம் தொடர்ந்து மெசேஜ் அனுப்பி சலித்தவன் டிபியை பார்க்க அது இல்லை.

“என்னை பிளாக் செஞ்சிட்டியா கண்ணா” உயிர் போவது போல வலி, கண்களை அழுத்தி துடைத்தவள் அவனுக்கு போன் போட்டாள் எடுக்கவில்லை.

சில அழைப்புக்கு பின் எடுத்தவன்.

“பேச வேண்டியது முடிஞ்சிடுச்சின்னு நினைக்கிறேன், இனி போன் பண்ணாத” அவள் பேச வருவதை காது கொடுத்து கூட கேட்காமல் வைத்துவிட்டான்.

திரும்ப அழைக்க பிளாக்கில் இருந்தது மீண்டும் மீண்டும் அழுதவள் மனதில் வெறுமை மட்டுமே.

கடைசி பரிச்சை தேர்வுக்கு இன்னும் ஒரு நாள் தானிருந்தது, படிப்பில் மனம் நிலைக்கவில்லை. ஒவ்வொரு தேர்வுக்கும் அவன் தான் சொல்லிக் கொடுப்பான் இந்த தேர்வுக்கு யார் சொல்லி தருவா… அழுதாள் கரைந்தாள்… தவித்தாள்… அவள் வருந்தினால் கூட அவன் வரும் நிலையில் இல்லை.

கஷ்டப்பட்டு அந்த பரிச்சையை முடித்தவள், அவனது தங்கைக்கு மெசேஜ் போட்டாள்… உன் அண்ணாவை எனக்கு கால் செய்ய சொல்லுறியா நாங்க பேசிக்கறதில்லை.

“ராதா நம்புவது போல சொல்லுங்க, நீங்க இரண்டு பேரும் தான் கிளோஸ் ஆச்சே” தாரா சொல்ல.

“அது அப்போ டா, இப்போ இல்லை”

“சரி நான் டைம் கிடைக்கும் போது கேட்கிறேன்”

“இல்லை டா வேண்டாம் எதாவது நினைச்சிக்க போறாங்க”

“சரி கேட்கலை… கேட்கும் போது உன்ட சொல்லுறேன்”

பேச்சி லைப் பக்கம் போனது.

“லைப் கொஞ்சம் சரி இல்லை டா தாரகை”

“என்னாச்சி மா “

“ஒன்னுமில்ல டா உன் லைப் எப்படி போது மாதவன், அப்பா அம்மா எல்லாம் எப்படி இருக்காங்க”

“இங்கே எல்லாம் நல்லா இருக்காங்க அங்கே என்னாச்சி சொல்லு”

“ஒரு சின்ன ஆக்சிடன்ட் தான் பெருசா ஒன்னுமில்லை”
 
Status
Not open for further replies.
Top