ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மனைவியின்...காதலன்! - கதை திரி

Status
Not open for further replies.

Bindusara

Well-known member
Wonderland writer
26

மருத்து போட்டு விட்டதும், சிறிது நேரம் இருவரும் நடந்தார்கள், அருகில் இருக்கும் கிணரை பார்த்த கிருஷ்ணா.

“நிறைய ஆழமா”

“இல்லை கொஞ்சம் கம்மி தான்”

இருவரும் கொஞ்ச நேரம் கிணற்றில் நீந்திக் கொண்டிருக்க கிருஷ்ணாவின் கண்கள் அவனின் இதயத்தின் அருகில் இருந்த ராதை பெயரை கோபமாக பார்ப்பதை மறக்கவில்லை.

மாதவன் மனமோ... 'தப்பு செஞ்சிட்டேன், உணர்ச்சி வசப்பட்டு ராதாகிட்ட அப்படி பேசி இருக்க கூடாது, என்னை கீழ் தரமா நினைத்து இருப்பா' மனதால் மாதவன் வருந்தினான்.

சில மணி நேரம் கழித்து இருவரும் மேல் எழுந்து வர.

அனுவை ராதா ஒரு ஓரமாக உட்கார வைத்து சமாதானப் படுத்தத் துவங்கினாள்.

"வேணா ராதா… என் பக்கத்தில் வராத, உன்னை பார்த்தா பத்திக்கிட்டு வருது எனக்கு" அனு தலையை சிலுப்பிக்கொண்டு போக.

"எல்லாம் முடிஞ்சிடுச்சி, நாளைக்கு தான் முடிய போவுது ஆனா இன்னைக்கே இந்த ஆட்டத்தை முடிச்சி வச்சிக்கிறோம். இன்னும் கொஞ்ச நேரத்தில் கிழம்ப போறோம், இப்போ ஓகே வா உனக்கு"

'பண்றது எல்லாம் செஞ்சிட்டு வந்துட்டா, கட்டி பிடிக்கறதுக்கு என்ன... செய்யாத சேட்டை இல்லை. பத்தாதுக்கு பாஸ் நல்லதுக்கு அவர் பக்கம் நின்னா, நான் லவ் செய்யறேன்னு வேற சென்ன இல்ல, இனி இவகிட்ட பேசவே கூடாது'

"புரியுது உன்னோட கோபம், நான் சில இடத்தில் கண்ணாவை பார்த்து ஸ்லிப் ஆனது உண்மை தான். நான் கிருஷ்ணாக்கு தூரோகம் செய்த கணக்கில் வராது. ஆனா நீ தான் என்னை காப்பாத்திட்டியே, இனி இது போல நடக்காது தங்கம் புரிஞ்சிக்கோ. இது எல்லாம் செஞ்சது எனக்காக இல்லை, எல்லாம் கண்ணாக்காக தான்..." ராதா தொடங்கி நடந்தது அனைத்தும் சொல்ல.

"என்னடி சொல்லுற! நான் கூட, உனக்காக தான் இது எல்லாம் செஞ்சிட்டு இருக்கன்னு நினைத்தேன், அவனுக்காகவா?"

"ஆமா... அவன் ஆசையா கேட்டது எதும் நான் ஒரு முறை கூட செய்யலை. எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் பாத்துக்கலாம்ன்னு... என் காதலை கூட சொல்லலை. என்னால முடியவே இல்லை, அதனால்தான் அனு எனக்கும் ஒரு கில்ட்டா இருந்தது. அதுவும் இல்லாமல் அவனோடது எதும் என் கிட்ட இருக்க கூடாதுன்னு தான் இப்படி செஞ்சிட்டேன். சாதாரணமாவே நமக்கு ஒருத்தர் எதாவது செஞ்சா திரும்ப செய்யும் குணம் உடையவள் நான். அவன் என் உயிரா ஒரு காலத்தில் இருந்தவன் அதனால்தான் இத்தனையும்"

"சரி நீ சொல்லுவது அனைத்தும் நான் ஏற்றுக்கொள்ள தயார். ஆனா அதுக்காக பாஸையும் என்னையும் சேர்த்து பேசிய உன்னை நான் சாகும் வரை மன்னிக்க மிட்டேன். உன் புருஷனை எப்படி டி இப்படி பிரண்ட் கூட போய்... ச்சி"

"அது உண்மை தானேடி, நான் பொய் சொல்லலையே”

"நீ திருந்த மாட்டடி, இனி என் மூஞ்சிலையே முழிக்காத புரியுதா" அனு மிரட்டி போக.

'என்டையே நடிக்கறியா தங்கம்... இப்போ பாரு'

"ஐ... ஒரு வழியா கிருஷ்... மாமா சட்டை கிடச்சிடுச்சி" இரட்டை ஜடையில் யாருக்கும் தெரியாமல் கிருஷ்ணாவின் சட்டையை திருடிக் கொண்டு போகும் அனுவின் வீடியோ தெளிவில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது.

அனு அதிர்ச்சியில் ராதாவை குற்ற உணர்ச்சியோடு பார்க்க.

"நான் உன் பிரண்ட் டி, உன்னை பத்தி எனக்கு தெரியாதா? நான் உன் பிரண்டா ஆகுறதுக்கு முன்னாடி இருந்து நீ கிருஷ்ணாவை லவ் செய்வது எனக்கு தெரியும்"

"அது ராதா... வந்து"

"பிரியா விடு... வா கிளம்பளாம் ஒன் சைட் லவ் எல்லாம் நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்"

"அது அப்போ தான் ராதா இப்போ அவர் வெறும் பாஸ் மட்டும் தான்... எல்லாம் மறந்துட்டேன்" குரல் நடுங்கியது அனுவுக்கு.


"அவரோட சட்டை திங்க்ஸ் ஈல்லாம் எடுத்து வந்து உங்கிட்ட கொடுத்துடுறேன்"

"சரி வீட்டுக்கு போனதும் எடுத்து வந்து கொடுத்திடு" ராதா சாதாரணமாக சொல்லிவிட்டு லக்கேஜை எடுக்க வீட்டுக்குள் போனாள்.

அனுக்கு ஆதரவாக இருந்ததே, கிருஷ்ணாவின் பொருட்கள் தான், ஆனா அதுவும் இனி இல்லையா என்று அனு மனம் சுருங்கியது. அவளது லக்கேஜோடு வந்தவள், அமைதியை தன்னுடைமயாக தத்து எடுத்துக்கொண்டாள்.

தாராகையும் அனுவும் வழக்கம் போல பேசி கொண்டிருக்க, ராதா அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

'இவங்க இரண்டு பேரும் எங்க போய்ட்டாங்க... எப்போடா இங்கு இருந்து போவேம்'ன்னு இருக்கு' ராதா மனதில் தவித்துக் கொண்டு இருந்தாள்.

"கிருஷ்ணா... கொஞ்சம் பேசலாமா?"

"தாராளமா மாதவன்"

"வாங்க இப்படி உட்காரலாம்" இருவரும் ஒரு கல் பார்த்து உட்கார்ந்தார்கள்.

மாதவன் அமையாக இருக்கவும், "சொல்லுங்க கண்ணா என்ன விஷயம்."

இன்று அவன் ராதையை காணாமல் போனா போது தவித்ததையும், அதன் பிறகு கண்டு பிடித்தபிறகு, பார்த்ததும் அவளிடம் நடந்து கொண்டதை பகிர்ந்து கொண்டான், சொல்லி முடித்த மாதவனுக்கு சங்கடம்தான் மிஞ்சியது.

கிருஷ்ணா மனதில் கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது, போகும் போது எதற்க்கு சண்டை என்று அமைதயாக இருந்தான் கிருஷ்ணா.

"இவ்வளவு பாசமும் ஆசையும் அவள் மேல் இருக்கும் போது... எதுக்கு உப்பு சப்பு இல்லாத காரணங்கள் சொல்லி அவளை விட்டுட்டு போனிங்க மாதவன்"

"அவ என் உயிர் இப்போ வரை... அவ என்னை விட்டுட்டு போக வேணும்னு தான் இப்படி செய்தேன்" கிருஷ்ணா புரியாமல் பார்க்க.

சில வருடங்களுக்கு முன் நடந்ததை சொல்ல துவங்கினான் மாதவ கண்ணன்.

"அவளை பார்த்த முதல் நொடியிலேயே, அவதான் என் வாழ்க்கை என்று முடிவு எடுத்துட்டேன்... காதல் சொல்லியும் அவள் ஏற்கவும் இல்லை மறுக்கவும் இல்லை, அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை காரணம், அவளின் கண்களில் பொங்கி வழியும் காதலை கண்டு கொண்டவன் நான், அவளாக சொல்லட்டும் என்று விட்டுவிட்டேன்.

ஒருத்தர் மாத்தி ஒருத்தர் உயிரா இருந்ததை விட பைத்தியமாக தான் இருந்தோம். வீடியோ காலிலேயே ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருந்தோம். அவளை நினைத்துக்கொண்டு இருந்தால் போதும் எனக்கு, முதலில் இது எல்லாம் இளமையில் வரும் எண்ணம் என்று தான் நினைத்தேன். ஐந்து வருடம் முடிந்த போதும் எனக்கு அவள் மீது உள்ள காதல் அதிகரித்ததே தவிர குறையவே இல்லை.

ஒரு நாள் அவள் போன் போட்டும் எடுக்கலை, அவள் தனியா வேறு இருப்பது எனக்கு பயத்தை கிளப்ப. பிரண்டை அவளை பார்க்க அனுப்பிவிட்டு ரோட் கிராஸ் செய்யும் போது ஒரு சின்ன ஏக்சிடன்ட் ஆயிடுச்சி.

இடுப்பில் அடி பட்டது பெரிய அடி இல்லை என்பதால் ஹாஸ்பிட்டல் கூட போகலை. அப்போது மண்டையில் ஓடியது எல்லாம் அவளுக்கு என்னாச்சி என்று தான் ஓடியது.

அதன் பிறகு அந்த வலி கூட நான் மறந்துட்டேன், அந்த அடி சிறிது சிறிதாக பெரியதாக இரண்டு வருடம் கழித்து பூதாகரமாக வெளியே வந்தது.

வலி பொறுக்க முடியாமல் ஹாஸ்பிட்டலுக்கு போகும் போது நிறைய டெஸ்ட் எடுத்து பார்த்தாங்க, என்னால அவளுக்கு ஒரு குழந்தை கொடுக்க முடியாதுன்னு எப்போ தெரிந்ததோ மனதால் உடைஞ்சிட்டேன்.

என்னால் வெளியே சொல்லு ஆறுதலும் பட்டுக்க முடியலை, அழுகவும் முயலை.

முதலில் என்னை சமாதானப் படுத்த நினைத்த எனக்கு முடியலை, மனதாலும் உடலாலும் நான் உடைந்துட்டேன் கிருஷ்ணா.

இதை கியூர் செய்ய 90 பர்சன்ட் சரி செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க.

அந்த நேரத்தில் எனக்கு ஒரே வழிதான் இருந்தது ராதாவை என் வாழ்வில் இருந்து விளக்கி வைக்க அவளை அவாய்ட் செய்தேன். அதன் பிறகு நான் நினைத்ததை விட ராதா என் அமைதியால் பாதிப்பது தெரிந்தது.

என்னால் அந்த நிலையில் என்னை சமாதானப் படுத்துவதா, இல்லை அவளை சமாதானப் படுத்துவதா, இல்லை அவள் வாழ்க்கையில் இருந்து விலகுவதா இல்லை, உண்மையை சொல்லி அவளது அனுதாபம் பெறவும் எனக்கு விருப்பமில்லை, மொத்தத்தில் பைத்தியம் போல இருந்தேன்.

அவளது வாழ்க்கை எதற்கு என் கூட சேர்ந்து வீணாகனும் என்று விலக நினைத்தேன். ஆனா அது என்னால முடியலை அவளிடம் இயல்பாக பேசவும் முடியலை.

ஒரு பக்கம் உடல் நிலை என் கண்ட்ரோல்லையே இல்லை, வழியில் நண்பர்களின் குழந்தைகள் பார்க்கும் போது ஏக்கமா இருக்கும், என்னோட குழந்தை இந்த பூமிக்கு வரப்போவதில்லை என்று கலக்கம் ஒரு புறம்.

அப்படி தான் ஒரு நாள் ராதாவிடம் குழத்தையை பற்றி பேச்சி கொடுக்க, அவளிடம் வந்த பதிலை கேட்டு அதிர்ந்தேன் நான்.

"நான் தனியா இருக்கேனில்லை டசன் கணக்கில் குழந்தை வேணும், வீடு முழுவதும் குழந்தைகளா இருக்கனும்" என்று ஆரம்பித்து குழந்தையை எப்படி வளர்க்கனும் எப்படி டிரஸ் செய்யனும், ஆண் குழந்தைக்கு என்ன சொல்லிதந்து வளர்க்கனும் பெண் குழந்தையை எப்படி பார்த்துக்கனும் என்று பல மணி நேரம் பேசிக் கொண்டே போனாள்.

அன்று தான் முடிவு எடுத்தேன், அவளது ஆசையை குறைக்க நான் விரும்ப வில்லை, அதான் மனதை கல்லாக்கி என் தங்கத்தை நானே, என் வாயால சிஸ்டர் சொல்லி கட் செஞ்சிட்டேன். அவள் கதறியது நினைத்தால் இன்று கூட ஏன் உயிரோட இருக்கன்னு நினைக்க தோணுது.

ஆனா இந்த உயிர் அம்மா ஓடது அதனால நான் எடுக்க விரும்பவில்லை.

அனைத்து இடத்திலும் அவளுக்கு தடை போட்டுவிட்டேன். பாவம் அவள் எப்படி துடிச்சி இருப்பான்னு எனக்கு தெரியும் ஆனா அப்போ மனசு குழம்பி போச்சி.

நேரம் தான் எனக்கு மருந்து ஆனது, கொஞ்சம் கொஞ்சமா மனதை தேத்துவதற்க்குள், ஒன்றரை வருசம் ஆகிடுச்சி. அவளை வருத்தியது போதும்ன்னு ஒரு முடிவோடு, உங்க வீட்டுக்கு வரும் போது தான் தெரிந்தது, அன்று உனக்கும் ராதைக்கும் உங்களுக்கும் கல்யாணம் என்று.

பதறி அடித்து ஓடி வருவதற்க்குள் உங்க கல்யாணம் முடிச்சி கோவில் சுத்த போய்யிட்டிங்க.

இருவரையும் தூரம் இருந்து வாழ்த்திட்டு அங்கிருந்து கிளம்பிட்டேன். அப்புறம் பார்த்தா ஒரு வாரத்தில் நீங்க என்னை தேடி வந்துட்டிங்க. என்னால உங்க இரண்டு பேரையும் சேர்த்து பார்க்க முடியாமல் தான் ஓடி போனேன், ஆனா அவ என்னை கடத்தி தூக்கிட்டு வந்துட்டா.

அவள் சிந்திய ஒவ்வொரு கண்ணீருக்கும் நான் சாகும் வரை பதில் சொல்ல முடியாத நிலையில் அந்த கடவுள் என்னை தள்ளிவிட்டான்.

வலிக்குது கிருஷ்ணா… குழந்தை இல்லை என்றாலும் பரவாயில்லை அவளை பார்த்துட்டே வாழனும்னு நினைக்கும் போது அவள் இனி என்றைக்கும் எனக்கு சொந்தம் ஆகாதது போல ஆகிட்டா.

அவளை புழுவா துடிக்க வைத்ததுக்கு நான் செத்தால் கூட மன்னிப்பு கிடைக்காது. நான் அவளுக்கு நம்பிக்கை துரோகம் செஞ்சிட்டேன், மாதவன் அழுகையை கண்ட்ரோல் செய்துகொண்டு இருக்க.

“அழுதுடுங்க மாதவன், இப்போவாது உங்க மனதின் பாரம் இறங்கட்டும். இந்த சமூகம் ஆண்களை அழுக கூடாதுன்னு சொல்லி மனதால் பைத்தியமா இப்படி தான் சிலறை திரியவிட்டு இருக்கு.

கிருஷ்ணாவை அணைத்துக்கொண்டு கண்ணன் கதறினான்.

அவனை ஆசுவாசம் படுத்திய கிருஷ்ணா… சில மணி துளிகள் அமைதியாக அமர்ந்து இருந்தார்கள்.


"ஏன் ஒரு வருடம் கழித்து எதுக்கு தேடி வரணும், போனவங்க போனதாவே இருந்து இருக்கலாமில்ல, இப்போ என்ன உடம்பு சரியில்லையா ஆகிடுச்சா?"

"இல்லை... இம்புருவ்மென்ட் இருக்கு 20% சான்ஸ் இருக்கு குழந்தை பிறக்க, மனது குழப்பம் நீங்கியது, அப்போ தான். எனக்கு குழந்தை வராதுன்னா என்ன எடுத்து வளர்க்க குழந்தைக்கா பஞ்சம் இந்த நாட்டில். அப்போ தான் புத்தி வந்தது என்ன செய்ய. பழையதை எல்லாம் நினைத்து என்ன ஆகப்போது, என் ராதையை... இல்லை உங்க மனைவியை நல்லா பாத்துக்கோங்க. அவ ஏஞ்சல், அவ இருக்க இடம் வெளிச்சமா தான் இருக்கும். தனிமையில் இருப்பவனை சகஜமா பழக வைத்தவளே அவள் தான் என் தேவதை அவள்"

"நீங்க சொல்வது சரி தான் அவ ஏஞ்சல்... எல்லோருக்கும் வெளிச்சம் கொடுத்து தனக்கு தனிமையில் போக்க பைத்தியம் போல திரிந்தவள் அவள்"

"புரியலையே கிருஷ்ணா"
 

Bindusara

Well-known member
Wonderland writer
27


தான் அவள் வாழ்க்கையில் இல்லை என்றால் அவள் சந்தோஷமாக இருக்கனும் என்று தானே பிரிந்து போனேன். எதையும் இயல்பாக எடுத்துக்கொள்வது போலவே இதையும் எடுத்துக் கொள்வாள் என்று தானே விட்டுட்டு போனேன். இன்று இருக்கும் மனநிலை அவனுக்கு அப்போது இருக்கவே இல்லை. பதறிய போது எடுத்த முடிவு இப்போது தவறாக முடிந்திருந்தது.

வாழ்க்கை முடிந்து போன நிலையில் தான் இருந்தான், அவனுக்கு குழந்தை என்றால் கொள்ளை பிரியம், அதும் தன்னை போல அமைதியான குழந்தை எல்லாம் பிடிக்காது ராதையை போல சேட்டை செய்யும் குழந்தைதான் பிடிக்கும் அவனுக்கு.

திருமணம் பற்றி எண்ணம் வரும்போது எல்லாம் "கடவுளே நீ என்ன செய்வியோ என்று தெரியாது. எனக்கு ராதை போல ஒரு குழந்தை கொடுத்துடு புரியுதா" என்று அவன் நினைக்காத நாளில்லை. பல வருடமாக வளர்த்து வந்த ஆசைகள் ஒரே நாளில் உடைந்ததை நினைத்து, அவனுக்கு தாங்கிக் கொள்ள முடியாத நிலை, அந்த நேரத்தில் அவசரமாக முடிவு எடுத்தான், தவறை இன்றுதான் உணர்ந்தான் மாதவன்.

அவள் கொடுத்த மோதிரத்தை அப்பவே கையில் அணிந்து கொண்டான், அவள் என் வாழ்வில் இல்லாவிட்டாலும் அவள் நினைவாக இறுதி மூச்சி வரை பார்த்துக்கொண்டு சாக நினைத்தான்.

அதனை ஆசையாக வருடி விட்டவனுக்கு மனம் முழுவதும் ரணம்தான் மிஞ்சி இருந்தது.

"மாதவன் என்ன ஆச்சி?"

"தப்பு செய்ததை காலம் கடந்து இன்று தான் புரிந்து கொண்டேன் கிருஷ்ணா"

"ம்ம்ம்ம்... நீங்க நினைப்பது போல அவள் ரொம்ப ஸ்போட்டிவ் ஆன பொண்ணு தான், ஆனால் அது உங்க விஷயத்தில் இல்லை மாதவன்"

"ம்ம்ம் இப்போ தான் புரிந்து கொண்டேன் கிருஷ்ணா, ஆனா இனி எனக்கு மன்னிப்பும் இல்லை. அவள் வாழ்வில் நண்பன் என்ற இடமும் இருக்க போவதில்லை என்று புரிந்தது"

"உங்க கிட்ட சொல்ல கூடாதுன்னு தான் சொன்னா, ஆனா என்னால இனியும் மறைக்க முடியலை மாதவன்"

"மென்டலி ரொம்ப டவன் ஆகிட்டா, நீங்க போயிட்ட அப்புறம்‍, அவ அவளாவே இல்லை, பார்க்க ரொம்ப சாதாரணமாகதான் இருந்தா நானும் அதை நம்பி வேலைக்கு போய்ட்டேன். பைத்தியம் பிடித்து போல மொட்டை மாடியில் வெயிலில் நிற்பது, ஜன்னலில் கையை குத்திப்பது என நிறைய செஞ்சிட்டு இருந்து இருப்பா போல, அவள் நடையும் கையில் இருந்த காயத்தை வைத்து ஏதோ செஞ்சி இருப்பான்னு யூகிக்கதான் என்னால முடிந்தது.

இரவு அவள் தூங்கிய அப்புறம் போய் காலை பார்த்ததும் தான் என் முட்டாள் தனம் புரிந்தது, அவளை நம்பி தனியா விட்டு இருக்க கூடாதுன்னு அப்போதான் புரிந்தது.

காலில் ஒரு இடம் கூட இல்லாமல் சூடு கொப்பிளங்கள், இந்த காலை வைத்து எத்தனை நாள் நல்லா நடந்து இருந்து இருப்பா என்று ஆச்சரியமாக இருந்தது காலுக்கு மறுந்து போட்டு விடும் போது ராதா எழுந்துட்டா.

"கிருஷ்ணா காலை விடு என்ன செஞ்சிட்டு இருக்க"

"நீ செஞ்சி வைத்த பைத்தியக்கார வேலைக்கு சேவை செஞ்சிட்டு இருக்கேன்" என்று அவள் மீது எரிந்து விழுந்தான்.

"கிருஷ்ணா சாரி"

"நீ பேசாதடி என்னென்ன இன்னும் செஞ்சி வச்சி இருக்க"

"வேற எதும் செய்யலை கிருஷ்ணா"

அவள் காலில் மருந்திட்டுக் கொண்டே அவளை முறைக்க.

ராதா தனது கையை திருப்பி அவன் புறம் நீட்ட, கிருஷ்ணா அதிர்ந்தான்.

"என்ன இது ராதா... எப்படி ஆச்சி"

"ஜன்னலில் குத்திகிட்டேன்" என்னால கோபத்தை கட்டுபடுத்தவே முடியலை.

"ஏன் டி இப்படி செய்யுற, இப்படி ரத்தம் சிந்ததான் நான் இப்படி பாடு பாடுபட்டு வளர்த்தோமா?"

"சரி... இத அந்த ரகுவரனுக்கு சொல்லுறேன், அப்போ தெரியும் பாசம் கொடுத்து எப்படி கொடுத்து வச்சி இருக்காங்கன்னு தெரியட்டும்" கிருஷ்ணா கைக்கு மருந்து போட்டுவிட்டு முடித்ததும் கையோடு ரகுவரனுக்கு போனை போட.

அவன் கையில் இருந்து பிடுங்கிய ராதா, வழக்கம் போல கிண்டல் கேலியோடு பேசி முடித்து கட் செய்து கிருஷ்ணாவிடம் போனை கொடுக்க.

"எதுக்கு டி போனை கட் செய்த உன்னை வச்சிட்டு நான் என்ன செய்யுறது"

"சாரி இனி செய்ய மாட்டேன்" அவளது வார்த்தை சிறிது திக்கியது.

"வாய்க்கு என்னா ஆச்சி" என்று கிருஷ்ணா கேட்டான்.

"இல்லையே ஒன்னுமில்லையே" வலியை பொறுத்துக் கொண்டு ராதா சாதாரணமாக பேச.

"வாயை திறடி" அவளது கன்னத்தை பிடித்து அழுத்த.

"ஆஆஆஆ...." ராதா அலறிவிட்டாள்.

"வாய்க்கு என்ன ஆச்சி முதல்ல திற"

ராதா அழுத்தமாக வாயை மூடிக்கொள்ள.

கிருஷ்ணா அவளது வாயை அழுத்தி பிடித்து வாயை பார்க்க.

வாய் முழுவதும் வெந்து போய் இருந்தது.

"ஆஆஆஆஆஆ... எரியுது" ராதா அலறி விட்டாள்.

"என்னாச்சி இது எப்படி, ஆச்சி" கிருஷ்ணா முதல் முறையாக கடுமையாக மிரட்டலோடு கேட்கவும் மிரண்டாள் பாவை.

"சூடு பஞ்சியை எண்ணையில் முக்கி வாயில் போட்டுட்டேன்" ராதா திருட்டு முழியோடு சொல்ல, கிருஷ்ணா விட்ட அறையில் உதடு கிழிந்து ரத்தம் பீறிட்டது.

"அறிவு இருக்கா இல்லையா டி என்ன செஞ்சி வச்சிருக்க முதல்ல வா டாகடர்கிட்ட போலாம்"

"இல்லை மருந்து இருக்கு டா"

"நீ என்ன பெரிய டாக்டரா... எழு டி" நாயை இழுத்து போவது போல இழுத்தான், வாசல் வரை வந்ததும்.

"டிரஸ் மாத்தனும் கிருஷ்ணா"

"சீக்கரம்" எரிந்து விழுந்தான் கிருஷ்ணா.

டாக்டரிடம் போய்விட்டு... கிளம்பி வழி முழுவதும் ராதா தலையில் கொட்டிக்கொண்டே வந்தான் அவனது ஆத்திரத்தை குறைக்க.

ராதாவை வீட்டுக்கு அழைத்து வந்தவன்... வாய்க்கு வந்த மிருகம் பொருட்கள் பெயரை உபயோகித்து, எவ்வளவு திட்ட முடியுமோ அவ்வளவு திட்டினான்.

ராதா வீட்டுக்கு வந்ததும் காலுக்கு மருந்து போட்டு படுக்க வைத்தான்.

"வாய்க்கு மருந்து போட்டுக்கோ" கிருஷ்ணா சொல்ல.

"கை வலிக்குது கிருஷ்ணா நீயே போட்டுவிடு" குறும்போடு கேட்டாள்.

"ச்சி உன் வாயில் எல்லாம் போட முடியாது எச்சை போடி"

"போட்டு தான் ஆகனும் நீ" ராதா பிடிவாதமாக படுத்திருக்க காலுக்கும் கைக்கும் மருந்து போட்டு விட்டவன் வாய்க்கு போட்டுவிட வந்தான்.

"சும்மா சொன்னேன் கிருஷ்ணா கொடு நானே போட்டுக்கிறேன்" என்றாள்.

"வேணா வாயை தான் நகம் வைத்து கீரிக்கிட்டா இன்னும் பிரச்சனை ஆகிடும்" கிருஷ்ணா வாயை திறந்து போட்டுவிட.

அவனது முகத்தில் ஒரு அறுவெறுப்பும் இல்லை.

"கிருஷ்ணா... ஆஆஆஆ"

'இப்போ எதுக்கு அபாய ஒளி ஒளிக்குது, ஒரு வேலை... காரமா எதாவது கேட்பாளோ? இன்னும் பத்து நாளைக்கு கஞ்சி மட்டும் கொடுத்து இவளை காயப்போட்டா தான் சரி வரும்' என்று நினைந்தவன்.

"சிக்கன் மட்டன் எதும் கிடைக்காது, தூங்கு கொஞ்ச நேரம் கழித்து கஞ்சி எடுத்து வரேன்"

"அது இல்லை... மாமா"

"வேற என்ன?" மருந்து எல்லாம் அதன் இடத்தில் வைத்துவிட்டான்.

"சரி ரெஸ்ட் எடு தூக்கம் வரும் ஊசி போட்டதால"

"கிருஷ்ணா தூங்கும் வரை பக்கத்திலேயே இரு"

"சரி நீ படுத்துக்கோ" இப்படியே ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

கிருஷ்ணாவின் பதற்றத்தை பார்த்தவர், அதற்க்கு அப்புறம் இது போல எந்த முட்டாள் தனமும் செய்யவில்லை.

கிருஷ்ணா ராதாவின் சோகமான நாட்களை கண்ணாவை பிரிந்து அவள் பட்ட கஷ்டத்தை சொல்லி முடித்து ஒரு பெரு மூச்சி விட்டான்.

"ஏன் மாதவா இந்த காதல் செய்பவர்கள் இப்படி முட்டாளா ஆகிடுறாங்க, அவங்க வீரம் எல்லாம் எங்கே ஒளிந்து கொள்கிறதோ தெரியவில்லை"

"அது உண்மைதான் கிருஷ்ணா வாங்க கிளம்பலாம்"

"நேரம் போனதே தெரியலை இன்னும் சில இடங்களுக்கு போக நினைத்தாள் அவள் ஆனா இப்படி ஆகிடுச்சி, சரி விடுங்க" என இருவரும் வீட்டை நோக்கி போக.

அங்கு கிளம்ப தயாராக இருந்தார்கள்.

மாதவனுக்கு ராதாவும் அனுவும் பெட்டியோடு இருப்பதை பார்த்து மனம் சுனங்கியது நாளை போக விருக்கும் வத்தல்மலை டிரிப்பும் போயிடுச்சி.

அனைவரும் நிதானமாக சாப்பிட்டு முடித்து.

"கிருஷ்ணா அன்னைக்கு வாங்கி வைத்த டிரஸ் போட்டுக்கலாமா, நாளைக்கு போட்டு போலாம் நினைத்தேன் அதான் முடியலையே"

நான்கு பேரும் ஒரே போல டிரஸ் போட்டுக் கொண்டு வர மாதவனின் அம்மா நால்வருக்கும் சுத்தி போட்டார்.

கடைசியாக நால் வரையும் நிற்க வைத்து தாரகை ஒரு போட்டோ எடுக்க… அதன் பிறகு செல்பியில் தூள் பறந்தது.

மூவரும் மாதவன் குடும்பத்தில் இருந்து விடைபெறும் போது.

"மாதவன் பாய்... தேங்க் யூ பார் யுவர் டைம்" அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் டாடா சொல்லிவட்டு காரில் மூவறும் ஏற வண்டி சிறிது தூரம் சொன்று திரும்பி வந்தது.

மாதவனுக்கு மனதில் அவ்வளவு சந்தோஷம், ராதை தன்னிடம் வர போகிறாள் என்று.

"கிருஷ்ணா... போகட்டா" முதலில் மறுப்பு தெரிவித்தவன்.

"போ..." என்றதும் தான் தனது பையை எடுத்துக்கொண்டு மாதவனை நோக்கி ஓடி வந்தாள்.

எல்லை இல்லாத மகிழ்ச்சயில் குதூகளித்தான் மாதவன்.

"இனி இவள் என் ராதை" என்று முணுமுணுத்தான்.
 

Bindusara

Well-known member
Wonderland writer
28

ராதா மாதவன் அருகில் வரும் வரை கூட பொறுக்க முடியாதவன், அவளை நோக்கி வேகமாக ஓடி வந்தான்.

"ராதை வந்துட்டியா, இப்போ தான், எனக்கு போன உயிர் திரும்ப வந்து இருக்கு"

'என்ன இவன் பைத்தியம் போல பேசிட்டு இருக்கான்'

மாதவனை ஒதுங்கி போன ராதா, தாரகை முன்நின்று கையில் ஒரு காகிதத்தை நீட்டினாள்.

"என்ன இது?"

"நீ எனக்கு முதலும் கடைசியுமாக கொடுத்தது" என்று அவளை வரைந்து தந்த பென்சில் ஸ்கெட்சை அவளிடமே கொடுத்தவள்.

"ரொம்ப நன்றி இனி இது என் கிட்ட இருக்கறதில் புரயோஜனம் இல்லை. ஹாப்பி மேரிட் லைப் தாரகை" என அவளை அணைத்துவிட்டு கிளம்பினாள்.

மாதவனின் மனம் பொசுங்கி... கருகியது, அவளது வார்த்தையை கேட்டு.

“தேங்க் யூ தாரகை என்னை யாருன்னு தெரியாமலேயே எனக்கு வரைஞ்சி தந்திருக்காங்க, பிரண்டா வச்சிக்கலாம் என்று நினைத்தேன், ஆனா நான் சாதாரண மனிசியாக கூட உனக்கு தெரியவில்லை என்று புரிந்துகொண்டதன் பிறகு இது எதுக்கு தேங்க் யூ”

"போறேன் மாதவன்" என்று அந்த இடத்தை விட்டு கிளம்பினாள்.

"ராதா ஒரு நிமிசம்"

"சொல்லுங்க மாதவன்"

"உனக்காக வாங்கியது" என்று ஒரு சிறு பெட்டியை கொடுத்தான்.

ராதா வாங்காமல் தயங்கி நிற்க.

"பிரண்டா வாங்கிக்கோ ராதா" இந்த வார்த்தை சொன்ன போது கூட தயங்கி நின்றாள்.

"சரி அப்போ நீ கொடுத்ததை நீயே வச்சிக்கோ" கையில் அணிந்திருந்த அந்த பெயர் பொறித்த பிளாட்டினம் ரிங்கை கழட்டி கொடுக்க போனான் மாதவன்.

"இல்லை வாங்கிக்கிறேன்" என ராதா வாங்கிக் கொண்டு.

"மாதவன் உன் கிட்ட ஒன்னு சொல்லனும்ன்னு நினைத்தேன், அதுக்கு நேரமே கிடைக்கவே இல்லை இப்போ சொல்லட்டா"

"ம்ம்ம்ம்..." மாதவன் தயக்கத்தோடு அவளது விழிகளை பார்த்தான்.

மாதவனுக்கு குற்ற உணர்ச்சி நிறையவே இருந்தது, அவளது விழிகளை பார்க்கும் தைரியம் அவனுக்கு இருக்கவே இல்லை.

தலையை கவிழ்ந்து கொண்டு நின்றிருக்க.

"மாதவன் என் கண்ணை பாருங்க" அவனும் தயங்கிக்கொண்டே பார்க்க.

"நான் உன் கிட்ட நிறைய உரிமை எடுத்ததுக்கு காரணம் என்னன்னு தெரியுமா?"

இல்லை என்பது போல தலையை ஆட்டினான்.

"உன்னோட பேச்சு, பாசம் எல்லாத்திலும் என் அம்மாவை பார்த்தேன், கண்டிப்பிலும் எனக்கு பிடித்ததை செய்யும்போது என் அப்பாவை பார்த்து இருக்கேன்"

மாதவனின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்துகொண்டது, 'தன்னை இவ்வளவு உயரத்தில் வைத்து இருக்கும் இவளையா கஷ்டப்பட்டு விளக்கி வைத்தேன்' மனதால் ஏற்கனவே இறந்தவன், மீண்டும் அந்த நொடியில் மறுமுறை இறந்தான்.


"நான் கொஞ்ச நேரம் இல்லாதது போல பதறினாய் நினைவு இருக்கா? அப்போ என் அப்பாவையும் அம்மாவையும் சேர்த்து பார்த்தேன்… உன் பதற்றத்தில்" கண்கள் கலங்கி சொன்னாள் ராதா. " என் சந்தோஷத்துக்கு ரகுவரன் மாமாவும் சரி, கிருஷ்ணாவும் சரி தங்கம் போல தான் என்னை பார்த்துக் கொண்டார்கள். இருந்தும் அம்மா ஏக்கம் எனக்குள்ள இருக்கும் தூங்கும் போது அம்மா மடியில் படுக்கனும்னு நினைப்பு இருக்கும். அம்மா மடியில் படுத்து, அவங்க முகத்தை பார்த்துட்டே தூங்கனும்னு அவ்வளவு ஆசை எனக்கு ஆனா அது நடக்கவே இல்லை. தூங்கும் போது உன் முகத்தை பார்த்து படுக்கும் போது ஒரு சுகமா இருக்கும். உன் சரிப்புல என் அம்மா தெரிவாங்க" ராதா திரும்பி நின்று தன் கண்களை துடைத்துக் கொண்டவள்.

மீண்டும் திரும்பி நின்றாள்.

"மாதவன்... எனக்கு தெரியும் நான் உன்னை டார்சர் செஞ்சி இருக்கேன். சத்தியமா நான் வேணும்னு செய்யலை டா, எனக்கு உன் கிட்ட அளவுக்கு அதிகமான ஆசை... சொல்வதைவிட இத்தனை வருடங்கள் கிடைக்காத மொத்தத்தையும் உன்ட இருந்து எடுத்துக்க நினைத்தேன். பேசுவதில் தொடங்கி சண்டை வரை, ஆனா அது உன்னை டாமினென்ட் செய்வது போல் ஆகும்ன்னு கொஞ்சம் கூட நினைத்து பார்க்கலை டா தங்கம்... சாரி தங்கம் இல்லை மாதவன்" அழுகையை புறங்கையால் குழந்தை போல துடைத்துக் கொண்டே.

"எனக்கு முன்னவே தெரியலை... உன் மனசில் என்ன இருக்கும்னு. உன்னை அடிமை போல வைக்கனும்னு நினைக்கலை, முன்னவே தெரிந்து இருந்தா நான் கொஞ்சம் பார்த்து நடந்து இருப்பேன், உன் மேலையும் தப்பு இருக்கு. நீ நீயா இல்லாம எனக்கு ஏத்தது போல எதுக்கு மாறின சொல்லு, உனக்கும் நான் இப்படி இருக்கறதுதான் பிடிச்சி இருக்குன்னு ஒரு பிம்பம் உருவாகிடுச்சி டா" அவனது சட்டையை பிடித்து உழுக்கினாள்.

"எதுக்கு டா ஆசையை மனசு முழுக்க நிறைச்சி விட்டுட்டு பாதியில் போன, எனக்கு முன்னவே தெரியும், இது எல்லாம் நடக்கும்ன்னு, அதான் பிரண்டாவே இருந்துக்கலாம்ன்னு சொன்னேன் நீ கேட்டியா" மாதவ கண்ணனை சரமாரியாக அடித்தாள்.

அவள் ஆக்ரோசமாக அடித்ததில் அவளது நகம் பட்டு அவனது கன்னத்தில் ரத்தம் வடிந்தது.

"அச்சோ ரத்தம்..." தன் சாலால் துடைத்து விட்டவள்.

"கடைசியா ஒன்னே ஒன்னு நீ நிறுபிச்சிட்ட அம்மா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது'ன்னு நிறுபிச்சிட்ட உன்னை நம்பினேன்... எனக்கு அம்மாக்கு அம்மாவா அப்பாக்கு அப்பாவா இருப்பன்னு என்னை ஏமாத்திட்ட என் உயிரா நினைத்த என்னை குப்பையில் போட்டுட்ட" இரண்டு அடி நடந்து திரும்பி வந்தவள்.

"தெரிந்தோ தெரியாமலேயோ உன் வாழ்க்கையில் நடந்த அனைத்து கெட்டதுக்கும் நான் காரணமா ஆகிட்டேன், மன்னிச்சிடு குட் பாய், நான் சாகுற வரை உன்னையும் உன்னை சேர்ந்தவங்களையும் பார்க்க கூடாதுன்னு நினைக்கிறேன், குட் பாய்"

"ராதை..." அவளின் இரண்டு அடி பிரிவை கூட தாங்க முடியாமல் மாதவன் துடித்தான்.

"இனி... என்னை அப்படி கூப்பிடாதிங்க மாதவன், இனி நீங்க என்னை அப்படி கூப்பிடும் தகுதியை இழந்து ஒரு வருஷம் மேல ஆச்சி" என்று விறுவிறுவென காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

மாதவன் கண்ணீரோடு அவள் போகும் காரை ஒருவித தவிப்போடும் ஏக்கம் கலந்தும் பார்த்தான்.

அவசரத்தில் புத்தி மழுங்கி தான் எடுத்த ஒரு தவறான முடிவால் என் தேவதை எவள் ஒருவளின் கண்களில் இருந்து கண்ணீர் சிந்தவிட கூடாது என்று நினைத்தானோ, அவளது கண்ணீருக்கு காரணமாகி போனான். இனி அவள் வாழ்க்கை கிருஷ்ணாவோடு அருமையாக தொடங்கும் என்று தூரம் இருந்து வாழ்த்தியவன், கையோடு தங்கையின் திருமணம் முடித்தே கிளம்பினான். அவன் வாழ்க்கை ராதாவின் நினைவோடு வட இந்தியா நோக்கி போனான்.

மூவரும் காருக்குள் அமைதியாக வரவும்.

கையில் இருந்த பெட்டியை திறந்து பார்க்கலாமா, வேண்டாவா என்று ஆராய்ச்சியில் இருந்தாள் ராதா.

"ராதா என்னாச்சி, ஏதோ யோசனையில் வர”

“எதும் இல்லை மாமா, மனசு ஏதோ பாரம் ஏறியது போல இருக்கு என்னாச்சின்னு தெரியலை" கிருஷ்ணாவின் தோளில் சாய்ந்து கொண்டாள் ராதா.

பின் அமர்ந்திருந்த அனு வெளியே வலிக்காதது போல நடித்தாலும் உள்ளே வலித்தது. தன் காதலன் தோளில், மனைவியாக சாய்ந்து வரும் தோழியை ஒருவித ஏக்கத்தோடு பார்த்தாள்.

'முதலில் இங்கிருந்து எங்காவது போயிடனும்' கண்கள் மூடி படுத்தவளின் கடை கண்களில் கண்ணீர் கரை புரண்டு ஓடியது.

அதனை மறைக்க தனது சாலின் நுனியை எடுத்து தன் மூகத்தில் போர்த்திக் கொண்டவள்... சத்தம் வராமல் கதறினாள்.

இரவு உணவு உண்ண கிருஷ்ணா வண்டியை நிறுத்த.

"அனு சாப்பிட வா" கிருஷ்ணா அழைக்க.

"இல்ல நீங்க போயிட்டு வாங்க எனக்கு பசிக்கலை" என்றவள் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்.

"ராதா நீ இங்கவே இரு நான் பார்சல் வாங்கிட்டு வரேன்" என்று அனுக்கு துணையாக விட்டு போனான் ராதாவை.

'என்ன நடக்குது இங்க... இந்த கிருஷ்ணா பண்றது கொஞ்சம் கூட சரி இல்லையே' இருவரையும் ஒரு பார்வை பார்த்தவள், பின் சீட்டில் தஞ்சம் புகுந்தாள்.

அனுக்கு எடக்கு முடக்காக படுத்து வந்தது என்னவோ போல இருக்க... வெளி காற்றை வாங்க சிறிது தூரம் தள்ளி நின்றிருந்தாள்.

சாப்பாடு வாங்கி வந்த கிருஷ்ணாவிடம் ராதா ஏதோ ஒன்று கேட்க அதிர்ச்சியில் அவனது கண்கள் விரிந்தது.

அனு அருகில் வரவும் பேச்சு தடை பட்டது.


அனுவையும் வற்புறுத்தி சாப்பிட வைத்தார்கள்.

"அனு நீ முன்னாடி உட்கார்ந்துக்கோ, எனக்கு தூக்கம் வருது பின்னாடி படுத்துக்கிறேன்"

"சரி" என்றவள் கிருஷ்ணா அருகில் உட்கார்ந்து தலையை பிடித்துக் கண்டு அமர்ந்திருக்க.

"என்ன அனு மேடம் ரொம்ப அமைதியா வருவது போல தெரியுது"


"தலை வலிக்குது பாஸ்" என்றாள்.

வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு.

தைலத்தை எடுத்து தன் கையாலையே போட வந்தான்.

"பாஸ் கொடுங்க நானே போட்டுக்கிறேன்"

"உனக்கு தைலத்தை எங்கு போடனும்னு கூட தெரியாது இரு நானே போட்டு விடுறேன். நீ தலையை சாச்சிக்கோ" ராதாவை ஒரு பார்வை பார்த்தாள்.

அதை புரிந்துகொண்ட கிருஷ்ணா, "அந்த லூசு எதும் சொல்லமாட்டா" என்று கிருஷ்ணா பூசிவிட்டு, இதமாக மசாஜ் செய்து விடவும், அனு சிறிது நேரத்தில் வலி மறந்து தூங்கி போனாள்.

இவர்கள் மூவரும் வீட்டிற்கு போக.

கிருஷ்ணா தோளில் சுகமாக படுத்துக் கொண்டு தூங்கி வந்தவள், வண்டி நின்ற அதிர்வில் கண் முழித்து பார்க்க. கிருஷ்ணாவை அணைத்தது போல படுத்து இருப்பதை பார்த்து தூக்கி போட்டது.

"சாரி பாஸ்" என்று அனு வேகமாக எழுந்து கீழே போக.

"ராதா வீடு வந்திடுச்சி எந்திரி" அவளையும் எழுப்பி தானும் இறங்கினான் கிருஷ்ணா.

வீடே கோலாகலமாக இருந்தது, ரகுவரனும் மாமாவும் அனுவின் பெற்றோரும் வீட்டில் இவர்களுக்காக காத்து இருந்தார்கள்.

"அடே பொண்ணு மாப்பிள்ளை வந்தாச்சி" ரகுவரன் மகனையும் மருமகளையும் அழைத்துக் கொண்டு உள்ளே போக.

அனு சுற்றி இருந்த அலங்காரத்தை பார்த்து.

"என்ன அலங்காரம் எல்லாம் பலமா இருக்கு" என்று கேட்டாள்.

"அதுவா மா என் மகன் கல்யாணத்தை நாங்க பார்க்கலையில்ல அதான் திரும்ப கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சி இருக்கோம்" ரகுவரன் சொன்னதை கேட்ட அனுவின் சிறு இதயம் வெடித்து சிதறியது போல உணர்ந்தாள்.

எதை தன் கண்ணால் பார்க்கக் கூடாது என்று ஓடி ஒழிந்தாளோ, அது இன்னும் சிறிது நேரத்தில் நடக்க இருப்பதன் அதிர்வு அனு முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
 

Bindusara

Well-known member
Wonderland writer
29

உள்ளே வந்ததும் ராதாக்கும் அனுவுக்கும் ரகுவரன் வாங்கி வைத்திருந்த புடவை நகைகளை கொடுக்க, இருவரும் ஒரே அறையில் புகுந்து கொண்டார்கள்.

அனு முகத்தில் இருந்த சோகத்தை பார்த்த ராதா.

‘இப்போவாது உண்மை சொல்லுறாளா பாரு கல் நெஞ்சக்காரி’

"சாரி அனு எனக்கு முன்னவே தெரிந்து இருந்தா கிருஷ்ணாவை கல்யாணமே செஞ்சி இருக்க மாட்டேன்"

"ஏய் விடு முடிஞ்சதை பத்தி பேசிட்டு, எல்லோரும் என்ன பிடிச்சவங்களையா கல்யாணம் செஞ்சிக்கிறாங்க சொல்லு, அதை விடு நான் உன்னை ரெடி செஞ்சி விடுறேன்"

அனு தன் கையாலேயே ராதாக்கு பார்த்து பார்த்து தயார் செய்தாள்.

திருமண அலங்காரத்தில் ராதா தேவதையாக ஜொலித்தாள்.

"கல்யாண பொண்ணு ரெடி" அனு தானும் தயாராக துவங்க.

"அனு ஒன்னு கேட்கட்டா?"

"என்ன மேடம் புதுசா பர்மிசன் எல்லாம் கேட்குறிங்க, கேளுடி கழுதை”

"அது வந்து எப்போ இருந்து அவரை லவ் செய்யுற"

"அது எதுக்கு தேவையில்லாத குப்பை, நீ போ மேடைக்கு நேரம் ஆகிடுச்சி"

"இல்லை நீ தயாராகும் வரை நானும் இருக்கேன், நீ சொல்லு"

"சொல்ல மாட்டேன்னு சொன்னா விடவா போற அது பப்பி லவ் டி, முதலில் பார்க்கும் போதே பிடிக்கும். அதான் அப்போ இருந்து அண்ணான்னு கூட சொல்லலை, உங்க இரண்டு பேரோட பாசத்தை பார்த்துதான் எனக்கு அவரை பிடிச்சிடுச்சி. சின்னதுல தெரியாது இது தான் லவ்ன்னு, வளரவளர அவரை பார்க்காம எனக்கு தூக்கமே வராது. அவர் காலேஜ் போகும் போது, என்னை அறியாம கண்ணீர் வந்தது. அப்போ தான் தெரிந்தது இது தான் லவ்ன்னு. அவர் விருப்பம் கேட்டுட்டு உன்கிட்ட சொல்லாம்ன்னு தான் உன்கிட்ட சொல்லலை. காலேஜ் போய் சொல்லலாம்ன்னு பார்த்தா‍ கிருஷ்ணா பாஸ் செய்த சதியால் ஆளுக்கு ஒரு மூலையில் போய் படிக்க ஆரம்பிச்சிட்டோம்"

"அதுக்கு அப்புறம் ஒன்னா தானே வேலை செஞ்சிங்க அப்போ ஒரு முறை கூட சொல்லலையா?"

"அப்பா கிருஷ்ணா ஆபிஸ்ல தான் சேர்த்து விடுவதாக சொன்னார், எப்படியாவது சொல்லிடலாம், அதுக்கு அப்புறம் வேலையே செய்ய கூடாதுன்னு முடிவோடு போய் பார்த்து பயந்துட்டேன்"

"எது பயந்துட்டியா?" ராதா ஆச்சரியமாக கேட்டாள்.

"ஆமா பயில்வான் போல இருந்தா நான் என்ன செய்யுறது சொல்லு, என பிளான் மொத்தமா சொதப்பிடுச்சி"

‘இன்னும் வராம என்ன செய்யுறா… கிருஷ்ணா தயாராகி ராதா அறைக்கு வர, அனு பேசியது முழுவதும் கேட்டுவிட்டுதான் மணமேடைக்கு போனான்’

"ஹா... ஹா அதும் சரி தான்" அனுவும் மனதில் கஷ்டத்தை சுமந்தாலும் சிரித்த முகமாக ராதாவை அழைத்துக்கொண்டு மணமேடைக்கு போக.

கண்களில் கண்ணீர் எந்த நொடியும் கீழ் விழ தயாராக இருந்தது.

கெட்டிமேள சத்தம் கேட்டதும், ராதாவின் சிரித்த முகமாக கிருஷ்ணா தாலியை கட்ட நெருங்க, அனு கண்களை மூடி தன் கண்ணீருக்கு விடுதலை கொடுக்கும் போது, அவள் கழுத்தில் கனமான ஒரு கை விழுந்தது.

அனு லேசாக கண்களை திறந்து பார்க்க, கிருஷ்ணாவின் கையால் பொன் தாலியை அனு கழுத்தில் கட்டும் காட்சியை பார்த்து கண்களும் வாயும் அதிர்ச்சியில் விரிந்து கொண்டது.

"ஏய் அனு லவ் யூ, நானும் சின்னதில் இருந்து லவ் செஞ்சேன் அதுக்குள்ள ஏதேதோ ஆகிடுச்சி, நீயும் என்னை லவ் செய்வன்னு இன்னைக்கு தான் தெரிந்தது"

"அதுக்கு இரண்டாம் தாரமா கல்யாணம் செய்விங்களா? எவ்வளவு திமிரு" அனு தோழிக்காக சங்கடப்பட்டு கிருஷ்ணா கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட.

அர்ச்சதை போட்டுக் கொண்டிருந்த கைகள் அனுவின் அறையும் சத்தத்தில் அந்தரத்தில் நிற்க.

"எங்களுக்கு கல்யாணம் ஆகலை"

"பொய் சொல்லாத தாலி எல்லாம் போட்டு இருக்க"

"ஐயோ இது வெறும் செயின் கண்ணாவை வச்சி செய்ய செஞ்சது"

"பொய் சொல்லுரிங்க, கல்யாணத்துக்கு ரெடி ஆகி கோவில் வரை போனிங்க நான் பார்த்தேன்"

"நீ தான் ஹாஸ்பிட்டலில் பிரண்ட் அப்பா சீரியஸ்ன்னு சொன்ன எப்போ பார்த்த"

"அது எல்லாம் எனக்கு தெரியும்" ராதா அவளை சங்கடப் படுத்தாமல்.

அன்று நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.

கல்யாணம் செய்துகொள்ள காரில் போகும் போது.

"கிருஷ்ணா இந்த கல்யாணம் அவசியமா?"

"ஆமா... நீ கேட்ட, ஒரு வருடம் மேல ஆச்சி, உன்னை தேடி அந்த கண்ணன் எப்படியும் வந்துடுவான்னு சொல்லிட்டு இருந்த அவனை காணோம் பாரு. சோ நீ என்னை கல்யாணம் செய்துக்கதான் வேணும்"

'கண்ணா என் கண்ணிலாவது பட்டுடுடா... உன்னை தவிற வேறு யாரிடமும் என்னால இருக்க முடியாது கண்ணா வந்துடு' மனமுருகி மனதில் கண்ணாவை அழைத்துகொண்டு இருந்தாள்.

சோகமாக கோவில் படிக்கட்டில் ஏறி வர.

"கிருஷ்ணா அங்கே பாரு அவன் கண்ணன் தானே" உத்து பார்த்தவள், “அவனே தான்" என உற்ச்சாகமாக குதூகளித்தாள்.

"அவனை எனக்கு எப்படி தெரியும், அவன் வரட்டும் மூஞ்சி முகரையை பேத்து எடுக்கறேன். எவ்வளவு தைரியம் இருந்தா என் தங்கத்தை விட்டு போய் இருப்பான்" கிருஷ்ணா அவனை அடிக்க போக.

"இவனுக்கு அடி எல்லா விட்டா பத்தாது, வேற செய்யனும்" என்று கிருஷ்ணா கழுத்தில் தனது அம்மாவின் தாலி செயினை சென்டிமென்டாக போட்டு இருப்பான். உடனே ஐடியா பண்ணியவள் அதனை கழற்றி தன் கழுத்தில் போட்டுக் கொண்டவள்.

“ராதா என்ன செய்யுற அந்த செயின் முதலில் கொடு”

“மாமா எனக்கு அவன் விட்டு போனதுக்கு உண்மையான காரணம் தெரியனும், அதுக்கு இந்த தாலி செயின் எனக்கு வேணும்”

‘எதோ பெருசா பிளான் போட்டுட்டா ராட்சசி, என்னை பெத்த தகப்பா இவளுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வச்சி இருக்க’
ராதா கழுத்தில் இருந்து கிருஷ்ணா அந்த செயினை கழட்ட வருவது தூரத்தில் இருந்து பார்த்த கண்ணாவுக்கு… கிருஷ்ணா ராதை கழுத்தில் தாலி கட்டுவது போல தெரிந்தது.

கண்ணன் இருவரின் திருமண கோலத்தை பார்த்து கண்கலங்கி வெளியே சென்றதை பார்த்து.

"அவன் தான் இவனா, இருந்துட்டு போகட்டும் அவன் கடக்கறான் வா கல்யாணம் செஞ்சிக்கலாம்"

"இப்போ தானே கல்யாணம் ஆகிடுச்சி"

"ஏய் லூசா நீ... வா முதல்ல"

"மாமா நீ சொன்னதை மறந்துட்டியா?"

"நான் என்ன சொன்னேன்"

"அவன் என்னை பார்க்க வந்தா நீ சொல்லுறதை நான் கேட்க தேவையில்லை"

"இவளை வச்சிட்டு என்ன செய்யுறது?"

"இனி பிளான் என்னோடது" ஒருவாரம் அமைதயாக இருந்தவள், கண்ணன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க பயன்படுத்தி கொண்டாள்.

அனுவிடம் திருமணம் ஆகவில்லை என்று சொன்னால் இந்த டிராமாவில் குழப்பம் நடக்கும் என்று ராதாவுக்கு தெரியும் அதனால் அனுவிடம் இந்த விஷயத்தை மறைத்தாள் ராதா
என்று தொடங்கி இத்தனையும் செய்து முடித்திருந்தாள்.

அனுக்கு இப்போது தான் மூச்சே வந்தது, "அனு இப்போவாது மூனாவது முடிச்சி போடவா"அனுவின் சம்மதத்தை கேட்டான் கிருஷ்ணா.

"அடேய் பாஸ் இன்னும் கட்டலையா?" சிரிப்போடு அந்த திருமணத்தை இரு குடும்ப தலைமையில் சிறப்பாக முடிய.

கையோடு இருவரையும் தேன் நிலவுக்கு பேக் அப் செய்து விட்டார்கள் குடும்பத்தானர்.

காரில் போகும் போது கிருஷ்ணா தோளில் உரிமையாக சாய்ந்து கொண்டவள்.

“ஏன் என்கிட்ட முன்னவே சொல்லலை?”

“அது நீ சரியா நடிக்கமாட்ட அதுதான்” கிருஷ்ணா அவள் நெற்றியில் ஒரு முத்தமிட்டு சொல்ல.

“ராதாவை கல்யாணம் செய்ய தயாராக தானே இருந்திங்க, அப்புறம் எப்படி?”

நடந்ததை சொன்னான், அதான் மாதவனும் புரிஞ்சிகிட்டாங்க இல்லை. இரண்டு பேரையும் சேர்த்து வச்சிடலாமே.

“இரண்டு பேருக்கும் கொஞ்சம் தனிமை வேண்டும், மாதவனுக்கும் சரி ராதாவின் வலிக்கும் சரி, நேரம் வரும்போது இருவரையும் சேர்த்துவச்சிடலாம்”

“நீங்க இரண்டு பேரும் ரொம்ப குளோஸ் இல்ல”

“ஆமா… பார்க்கறவங்க எல்லாம் நாங்க இரண்டு பேரும்தான் கல்யாணம் செஞ்சிப்போம்ன்னு சொல்லுவாங்க”

“அப்போ ஏன் அவளை விட்டுட்டு என்ன காதலிச்சிங்க”

“அவ எனக்கு அம்மா போல, இந்த வயசு மத்தவங்க கண்ணுக்கு தவறாதான் தெரியும் ஒரு ஒருத்தர்கிட்டையும் விளக்கமா கொடுக்க முடியும்”

“அப்போ எப்படி கல்யாணம் வரை போனிங்க”

“வேற ஆப்சனே இல்லை எனக்கு அப்போ அவள் வாழ்க்கையை சரி செய்ய என் காதலை மறச்சிட்டேன்”

“ம்ம்ம்…” அனு அதன் பிறகு அமைதியா ஆகிட்டா.

“என்னாச்சி என் மேல கோபமா?”

“இல்லை பெருமையா இருக்கு, உங்க மனசு ரொம்ப உயரம் அத்தை மகளுக்காக தன் காதலையே விட நினைத்த நீங்க, உங்க மனைவியை எப்படி பார்த்துப்பிங்க லவ் யூ. உங்க மேல இருக்க காதல் அதிகமாகிட்டே போகுது” இருவரும் பிளைட்டில் ஏறி அவர்களின் வாழ்க்கையை துவங்க செல்ல.

வீட்டில்…

"சரி நாங்களும் கிளம்பறோம், வீட்டை பூட்ட கூட இல்லை அப்படியே வந்துட்டோம்" என்று அனு பெற்றோர்கள் மன நிறைவோடு அடுத்த கோவில் ட்ரிப்புக்கு ரகுவரனுடன் பேசிவிட்டு போனார்கள்.

"இது எல்லாம் உங்களுக்கே ஓவரா இல்லையா? இப்போ தானே வீட்டுக்கு வந்திங்க அதுக்குள்ள என்ன ட்ரிப்" ராதா ரகுவரனை முறைக்க.

"வருசத்துக்கு ஒரு முறைதான் போவேன் சரியா"

"சரி... வாங்க உள்ள போலாம்"

ஒரு வழியா இந்த இரண்டு காதல் ஜாடியை சேர்த்து வச்சாச்சி, மனசு இப்போதான் லேசா இருக்கு.

நம்ம காதலால் சேராது போனாலும், பிறர் காதலை சேர்த்து வைப்பதில் எவ்வளவு ஒரு நிம்மதி இருக்கு.

சரியான லூசுங்க இரண்டும், அனு இன்னமும் பயந்தாங்கோலி தான் ஒரே ஆபிஸ்ல இருந்துட்டு ஒரு முறை கூட லவ் சொல்லலை. அந்த கிருஷ்ணா உருவம் அப்படி, ஆனா எப்படி அவனை லவ் பண்ணா. அடியே அசடு லவ் என்ன உருவத்தை பார்த்தா வருது அது எல்லாம் எத பார்த்து வருதுன்னே தெரியாது.

இருவரையும் ஹனி மூனுக்கு அனுப்பிவிட்டு ரகுவரனும் அருகில் வந்து உட்கார்ந்தாள் ராதா.

"மாமா... என்மேல கோபமா?"

"இல்லையே" வாய் இல்லை என்று சொன்னாலும் அவள் செய்து வைத்ததை கிருஷ்ணா அ முதல் ஃ வரை ஒன்று விடாமல் சொல்லிவிட்டு தான் சென்றான்.

"தெரியாம நான் செய்தது தப்புதான் எனக்கு தெரியும், ஆனா என்னால ஒருத்தனை நினைச்சிட்டு கிருஷ்ணாவை கல்யாணம் செய்துக்க முடியலை. கண்ணா கூட நான் காதலித்த நாட்களில் அவன்தான் என் கணவன்னு ஆழமாக பதிஞ்சிடுச்சி. அதுமட்டும் இல்லாமல், கிருஷ்ணா மனசிலும் அனு இருப்பது முன்னவே தெரியும். என்னால எப்படி மாமா ஒரு காதலை பிரிக்க முடியும், பிரிந்து நான் அனுபவிப்பது பத்தாதா. என் வாழ்க்கையை யோசித்த கிருஷ்ணா அவன் வாழ்க்கையை யோசிக்க மறத்துட்டான். அவன் மறந்தா என்ன அவன் வாழ்க்கையில் பிடித்ததை கொண்டு வருவது என் கடமை. அவங்க ரெண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர். சந்தோஷமா வாழுவாங்க மாமா" ரகுவரன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“உன்னை போல ஒரு பெண்ணை வளர்த்ததுக்கு பெருமைப்படுறோம் ராதா, நாங்க இரண்டு பேரும் அதிர்ஷ்டம் செய்தவர்கள்”

“நீங்க இல்லை, நான் தான் ரொம்ப அதிர்ஷ்ட்டசாலி, இரண்டு பேரும் உங்க வாழ்க்கையை பத்தி நினைக்காம என்னை பத்தி யோசிச்சிட்டு இருக்கிங்களே… இப்போ சொல்லுங்க யாரு அதிர்ஷ்டசாலி”

“நம்ம எல்லோரும் அதிர்ஷ்டசாலி தான் சரியா”

“ம்ம்ம்… மாமா”

"மத்தவங்களை பற்றி நினைத்தது போதும், உன்னை பத்தியும் அடுத்து என்ன செய்யுறதா இருக்க"

"அதான் நம்ம பிஸ்னஸ் இருக்குல... அதை டெவலப் செய்ய போறேன்"

"அதை பத்தி நான் கேட்கலை, உன் கல்யாணத்தை பத்தி கேட்கிறேன்"

"எனக்கு பிடித்தவனை திரும்ப பார்க்கும் போது கையை பிடித்து இழுத்துவந்து சொல்லுறேன்... சரியா"

"நான் எதாவது மாப்பிள்ளை பார்க்கட்டா"

"கிருஷ்ணா சொன்னது மறந்துட்டிங்களா மாமா, இனி ஒருத்தன் வந்து என்னை எதும் சொல்லுவதை என்னால ஏத்துக்க முடியாது, எனக்கு நீங்க இருக்கிங்க அது போதும் பா"

அவளது பா... என்ற அழைப்பில் நெகிழ்ந்து ரகுவரன்.

"சரி, என் பொண்ணு சரியா தான் நினைப்பா, ஆனா சீக்கரமா நீ கல்யாணம் செஞ்சிக்கனும் அதான் என் ஆசை"

"எனக்கு பிடிந்தவனை பார்க்கும் போது அடுத்த நொடியே கல்யாணம் சரியா"

"சரி பிஸ்னசில் என்ன செய்ய போற?"

"லெதர் தானே எக்ஸபோர்ட் செய்யுறோம், அதுல திங்க்ஸ் பிரோடக்சன் செய்யலாம்ன்னு இருக்கேன். டிசைன் செய்யும் வேலை நான் பார்த்துக்கிறேன், பிரோடக்சன் நீங்க பாத்துக்கோங்க, மார்கட்டிங் கிருஷ்ணா பாத்துக்கட்டும் சரியா"

"சரிடா தங்கம் ரொம்ப வேலை பார்த்துட்ட, போய் டிரஸ் மாத்திட்டு தூங்கு"

"சரி மாமா" வழக்கமாக ரகுவரன் கன்னத்தில் எச்சை செய்து விட்டு போனாள் ராதா.

"ஐயோ எச்சை... இன்னும் மாறலை?"

"நான் எப்பவும் மாறமாட்டேன் மாமா" என்று அவளது அறையில் புகுந்து கொண்டாள்.

'சாதாரண விஷயத்தையே மாத்திக்க முடியாத நீ எப்படி வாழ்க்கையா நினைத்தவனை மறந்து வேற வாழ்க்கை அமைத்துப்ப. கடவுளே என் மருமகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுங்க' என ரகுவரனால் மனதால் வேண்ட மட்டும்தான் முடிந்தது.

கலைப்பு தீர குளித்தவள்‍ கண்ணா முதல் முதலாக வாங்கி கொடுத்த கருப்பு வெள்ளை டாப்சை அணிந்து, தன்னை கண்ணாடியில் பார்த்தவள்.

"இனி இது தான் எனக்கு துணை" என அவனை அணைப்பது போல அணைத்து கண்களை மூடினாள்.

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா
என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்ம
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா.. ஆ
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல்தான் என் உடையல்லவா
பாற்கடலில் ஆடிய பின்னும் உன் வண்ணம் மாறவில்லை இன்னும்


என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க்க
உதடுகள் ஈரமாய் வாழ்க
கலந்திட வா...


அவனின் நினைவுகளோடு, பாட்டை கேட்டுக்கொண்டே தூங்கினாள்.

இனி இவளது வாழ்க்கை தனிமையில் அவளது காதல் நினைவுகளோடு...

இந்த ராதைக்கு ஏற்ற கண்ணன் யார்? மாதவனா இல்லே வேறு ஒருவனா? எங்கு இருக்கிறானோ?

விரைவில் வருவான்… “இவள் என் ராதை” என்று உரிமை கொண்டாட.

மீண்டும் சந்திப்போம் அடுத்த பாகத்தில்.
 
Status
Not open for further replies.
Top