ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மனைவியின்...காதலன்! - கதை திரி

Status
Not open for further replies.

Bindusara

Well-known member
Wonderland writer
6… காதலன் !

பேசிக்கொண்டே கோட்டம் சுத்தி பார்த்தார்கள். முகப்பில் தங்க நிற சிலை மின்னியது… அதியமான் மரியாதையாக தட்டில் நெல்லிக்கனி வைத்து கொடுப்பது போல ஆளுயர சிலை இருந்தது.

அனு அந்த சிலையை சுத்தி சுத்தி பார்த்தவள்.

“ராதா எனக்கு ஒரு டவுட்டு”

“ஆஆ… சாகடிக்கரா டவுட் கேட்டு கேட்டு நீயும் இந்த ஊரில் தானே பிறந்த”

“அதான் ஸ்கூல் முடிஞ்சதும்… வெளியே போயிட்டேன். உனக்காவது மாமா சொன்னாங்க, எனக்கு எங்க இந்த ஹிட்லர் அப்பா சொல்லுச்சி. ஓரே அராஜகம் தான், சரி என் சோக கதையை விடு எதுக்கு தட்டை வச்சி கொடுத்தார்”

“நெல்லிக்கனியை கையில் இருந்து கொடுக்கும் போது.. யாசகம் கொடுப்பது போல ஆகிடும் அது ஔவைக்கு கொடுக்கும் மரியாதையில்லையே அதான் பிளேட்டில் வைத்து மரியாதையா கொடுத்தாங்க”

“பாரேன் எவ்வளவு ரெஸ்பெக்ட் கொடுத்து இருக்கார் அதியமான் கிரேட் தான்”

“ஆமா குறு நில மன்னனா இருந்தாலும் மரியாதை தெரிந்த மனுசன். என்ன கோட்டையை கல்லுவச்சி கட்டி இருந்தா நம் ஊரில் இன்னும் சுற்றிப்பார்க்க ஒரு பாரம்பரிய இடம் கிடைச்சி இருக்கும். அந்த மனுசர் மன்னில் கட்டி எல்லாம் சொதப்பிட்டார் அது இல்லை நா என்ன.. சில கோவில் இருக்கு அவரது பேரை சொல்லும் வகையில்”

“அப்படியா அந்த இடத்தை எல்லாம் பார்த்தே ஆகனும்” நால்வரும் சுவாரசியமாக பேசிக்கொண்டே வர.

கண்களில் எங்கும் போட்டி தேர்வுக்கு அமர்ந்து படிக்கும் மாணவர்கள் தான் நிறைந்து இருந்தார்கள். திருவிழா என்றால் சொல்லவா வேண்டும் சத்தம் காதை கிழித்தது. அதை எல்லாம் பொருட்படுத்தாமல் படிக்கும் வெவ்வேறு வயதில் இருக்கும் மாணவர்களை பார்த்து வியந்தார்கள்.

அங்கு சுற்றி முடித்ததும் கடைகள் போட்டிருக்கும் ஓவ்வொரு கடையாக பார்த்துக் கொண்டும் பிடித்த பொருட்களையும் அள்ளினார்கள் இரண்டு பெண்களும்.

“அடிப்பாவிகளே.. டெல்லியில் வாங்கியதை இன்னும் ஒன்னு கூட உபயோகிக்கலை. அதுக்குள்ள அடுத்த ரவுண்டா? நான் சம்பாரிச்சது எல்லாம் இங்கவே காலி ஆகிடும் போல”

“மாமா நைநை’ன்னு பேசாத… வளையல் செலக்ட் செஞ்சி கொடு”

“எனக்கு செலக்ட் செய்ய தெரியாது” கிருஷ்ணா அங்கிருந்து நகர பார்க்க.

“என் மாமா இருந்து இருந்தா ஒரு வளையல் கடையே வாங்கி கொடுத்து இருப்பார். அவர் ஒரு கொடைவள்ளல்…”

“போதும் இதோட நிறுத்திக்கலாம் வந்து தொலை”

வளையல் பாட்டி அருகில் உட்கார்ந்த கிருஷ்ணா.

“பாட்டி இந்த வளையல் உடைஞ்சா கையில் ரத்தம் கித்தம் வராதில்ல”

அனு சாதாரணமாக தான் நின்றிருந்தாள்.

மாதவனோ.. ’ப்பா… இது அல்லவா குடும்பம், எவ்வளவு ஒரு பாசம் மனைவி மீது’ என்று நினைத்து முடிக்கலை,

“வர வாய்ப்பு இருக்கு அப்பூ. புதுசில கொஞ்சம் சூதானமா இருக்கனும், போக போக சரியா போயிடும்”

“அப்போ இத அள்ளி இந்த பிசாசு கையில் போட்டு விடுங்க என் ரத்தத்தை குடிச்சிட்டிருக்கா. அவளோட ரத்தத்தை இந்த வளையல் குடிக்கட்டும்”

அவன் பேசுவதை கேட்ட ராதா… புகை வண்டி போல புஸ் புஸ் என்று காற்றை விட்டாள்.

அருகில் நின்றிருந்த ராதா நங்கென்று கொட்டு வைத்தாள்.

சற்று முன் மெச்சிய மாதவன்… கிருஷ்ணா பதில் கேட்டு கோபம் தான் வந்தது, ‘பொண்டாட்டிக்கிட்ட எப்படி பேசனும் எப்படி நடந்துக்கனும்’ன்னு, ராதை எதுக்கு இவனை செலக்ட் செஞ்சா?’

“என்ன மாதவா.. மனதில் என்ன ஓடிட்டு இருக்கு”

“ஒன்னுமில்ல அனு”

“இவங்க இப்படித்தான் அடிச்சிப்பாங்க. அடுத்த நிமிசம் சேர்ந்துப்பாங்க” அனு சொல்வதை காதில் கேட்டாலும்.

மாதவனின் பார்வை இருவரையும் தான் ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தான். அனு சற்று முன் சொன்னது உன்மை என்பது போல்தான் இருவரும் நடந்து கொண்டார்கள்.

என்னதான் வேண்டா வெறுப்பாக அவளுக்கு வாங்கித் தந்தாளும் பொறுப்பாக அருகிலிருந்து நாலு அடி வாங்கிக்கொண்டே அவளுக்கு கருப்பு கலரில் கண்ணாடி வளையலை செலக்ட் செய்து கொடுத்தான்.

அந்த பாட்டி கடவுளை மனதில் நினைத்துவிட்டு ராதாவின் கையை பிடித்து அளவு பார்த்தவர். அவளுக்கு அடுக்கி வைத்திருந்த வளையல்களை பக்குவமாக எடுத்து கீழே வைத்துக்கொண்டு.

அந்த நடுவயது பெண்மணி..

“பாப்பாக்கு எந்த ஊரு”

“இந்த ஊரு தான் பாட்டி..”

“அம்மா அப்பா பேர் என்ன”

“அம்மா மதி, அப்பா சரவணன்… ஆனா வளர்த்தது எல்லாம் மாமா தான்”

“எந்த கிழமை தங்கம் பிறந்த..”

“ஞாயிறு பிறந்தேன்.. வயசுக்கு வந்தது முதல் நடந்த எல்லா நல்ல காரியமும் ஞாயிறு தான் நடந்தது”

பல நாள் பழகியது போல இருவரும் பேசினார்கள்.

“உனக்கு என்ன பிடிக்கும் மா”

“எனக்கு கதை எழுதுறது.. பெய்ன்ட்டிங் என்றால் ரொம்ப பிடிக்கும்” ராதா தான் வரைந்து வைத்திருந்த ஒரு ஓவியத்தையும் எடுத்து காட்டினாள்.

ஒரு பாடல் பாடிக்கொண்டே வளையலை போட்டுவிடத் தொடங்கும் அறிகுறி தெரிய. ராதா பிறந்த இடம் தாய் தந்தை பெயர் மாமனின் பெயர் தொடங்கி.. அவளது வாழ்க்கை பயணத்தை கேட்டுவிட்டு. அந்த வளையல்கார அம்மா இரண்டு வளையல்களை எடுத்து வானத்தை நோக்கி ஏதோ வேண்டினார்.

மாதவன் அழகாக படம் பிடிக்க தயாராக இருந்தான்.

ராதா முகத்தில் அவ்வளவு ஆர்வம்.. இதுவே முதல் முறை கண்ணாடி வளையல் அணிவது.

பாட்டி குரலை சரி செய்தார். ராகமாக பாட துவங்கினார்கள். ராதாவின் கைகளை பதமாக பிடித்தவர்.

“இந்த… தகடூர் மன்னன் கால் பதித்த ஊர்ல… மகராசிபோல… லோலோ.

சரவணன் உயிரில்… மதியின் மடியில் உருவான முதல் காதல் இவளே… தங்கரதம் இவளே… ஓஓஓய்

மருத்துவமனை வேண்டாம் மரத்தின் நிழலில் பிறக்கும் வரம் பெற்ற மகள்.. பூக்களின் அரவணைப்பில் பிறந்த பூமகள் இவளே… ஓஓஓய்

தந்தையின் பெயரை உசத்த வந்த தவப்புதல்வி இவளே… ஓஓஓய்

ஞாயிரில் பிறந்து.. அதே கிழமையில் பெரியவளான, தங்கத்தாரகை இவளே… ஓஓஓய்

கலைமகளின் கைகளோடு பிறந்தவள் கை பட்ட இடம் வண்ணங்களால் நிறைத்தவள் இவளே… ஓஓஓய்

சுற்றி இருப்பவர்களும் அடாவடி பாசத்தால் கட்டி இழுக்கும், இம்சை அரசி இவளே… ஓஓஓய்

பிடித்த மனாளன் வருவான்.. வந்து இவளது விழி அசைவில் இவளுக்கு சேவைப்புரிய… வருவான் ராசகுமாரன்.

"அருள் புரிய வேண்டும்… இயற்க்கை தாயே…”

அந்த பாட்டியின் கணிர் குரலிலும் ராகத்திலும் மெய் மறந்து தான் போனார்கள் அனைவரும். அந்த கணிர் குரலுக்கு ரசிகர்களாக ஆனார்கள்.

கைநிறைய வளையலை போட்டுக் கொண்டவள், தன் கையை ஆசையாக பார்த்தாள்.

அதனின் அழகில் மெய்மறந்து புதிதாக இவ்வளவு வளையல் அணிந்தவள்.. கைகளை காதுக்கு நேராக வைத்து குழுக்கி சிரித்தவளின் சிரிப்பு ஒளியையும் வளையளின் சத்தத்தையும் பிரித்து காண முடியாத அளவுக்கு கலகலவென சிரித்தாள் ராதா.

“நான் கூட உன் கைக்கு கண்ணாடி வளையல் நல்லா இருக்காதுன்னு நினைத்தேன் பரவாயில்ல சுமாரா இருக்கு” கிருஷ்ணன் அவளது கையில் உள்ள வளையல்களை வருடிவிட்டான்.

மாதவன் அவளது கரங்களை ரசித்தான், சிறு பரிசம் தீண்டிவிடமாட்டேமா என்று சலனம் கொண்டது அவனது மனம்.

“டேய் ஓவரா பேசாத புரியுதா. மாமா…” ராதா துவங்கும் முன்பே கைகளை கூப்பி நின்றான் கிருஷ்ணா.

“தெய்வமே என்னை விடு நான் பாவம்.. போதும் அந்த டயலாக்கை விட்டுடு பழைய நினைவுகள் வந்து அலைக்கழிக்குது”

“சரி போ.. போய் ஐஸ் வாங்கிட்டு வா, பசிக்குது”

“அதானே பார்த்தேன் சண்டையை அமைதியா அடக்கிட்டா’ன்னு வா மாதவா வாங்கிட்டு வரலாம்”

“அவ்வளவு சீக்கரமா உன்னை விட மாட்டேன்” சுற்றி எதாவது அடிக்க கிடைக்குதா என்று பார்த்தவள் கண்களுக்கு அங்கு குச்சோடு வந்து கொண்டிருந்த திருநங்கை கூட்டம் கண்ணில் பட.

ராதா அருகில் அவர்கள் வரும் போது,

“அக்கா ஐஸ் சாப்பிடுறிங்களா?” திரும்பி பார்த்தவர்கள்.

“சாப்பிடலாமே தங்கச்சி” அவர்களும் சிரித்த முகமாக சொல்ல.

“ஏனுங்க மாமா… எங்க அக்காங்களுக்கு ஐஸ் வாங்கி வாங்க”

“எதுக்கு மாமாவ தொந்தரவு செஞ்சிட்டு நாங்களே போய் வாங்கிக்கிறோம்”

“சரிங்க கா…” போனவர்கள் சும்மா இல்லாமல் இருவரையும் உரசி வெறுப்பேற்ற. இருவரும் நெளிந்து கொண்டிருப்பதை லைவில் போட்டாள் ராதா.

“ஏனுங்க மாமா… இரண்டு ஐஸ் வாங்கி தரது” அவர்கள் இருவரையும் தொட்டு தொட்டு பேசினார்கள்.

அனுவும் ராதாவும்.. அக்காவிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் இருவரை பார்த்து வயிறு வலிக்க சிரித்து முடித்தவர்கள்.

அவர்களுக்கு ஐஸ் வாங்கி கொடுத்து தூரம் வருவதற்க்குள் ஒரு வழியாக ஆகினார்கள்.

அவர்கள் கிளம்பும் போது, “தங்கச்சிங்களா… உங்க மாமா கூட சேர்ந்து நூறு வருசம் வாழனும்’ன்னு வாழ்த்திட்டு போனார்கள்”

“நன்றி அக்கா….” ராதா அனு தலையில் கைவைத்து ஆசிர்வாதம் செய்து போனார்கள்.

அனுவும் ராதாவும் லைவ்வை ஆப் செய்தவர்கள் ஒன்றும் அறியாத சிறு குழந்தையாக நின்றிருக்க.

“இவளுங்க பார்வையே சரியில்லையே” கிருஷ்ணா இருவரையும் ஆராய்ச்சி பார்வை பார்க்க.

“கிருஷ்ணா அப்படி எல்லாம் இல்லை அக்காங்க கிட்ட மாட்டிவிட்டதுக்கு இப்படி மூஞ்சை வச்சி இருக்காங்க”

அடுத்து தோடு கடைகள் இருக்கும் பக்கம் போனார்கள்.

ராதா ரசிப்பதோடு நின்று கொண்டாள் அனு பிடித்ததை எல்லாம் பாரபட்சம் பார்க்காமல் வாங்கி குவிக்க.

மாதவன் ராதாவை விசித்திரமாக பார்த்தான். ‘இந்த நேரத்துக்கு கடை காலியாகி இருக்குமே? என்ன இவ அமைதியா நிக்கிரா’

“அனு இது உனக்கு செட் ஆகும்”

“ராதா உன் செலக்சனே தனி தான். சூப்பரா இருக்கு”

“ஹா ஹா ஐஸ் வைக்காத டி பக்கி” எதர்ச்சையாக மாதவனை பார்க்க.

“என்ன மாதவன் புதுசா பார்க்கறது போல பார்க்கறிங்க”

“நீ எதும் வாங்களையா?”

“இல்லை மாதவன்… இந்த ரிங்க் தவிர எதும் போடுறது இல்லை, ஏற்கனவே வாங்கி வைத்ததே வீட்டில் தூங்குது”

‘ஏன் ராதை இப்படி மாறிட்ட பிடிச்சதை எல்லாம் எதுக்கு விட்டுட்ட’ அங்கிருந்த ஹார்ட் பிள்ளோவை பார்த்த ராதா… அதனை நோக்கி ஓடினாள் கிருஷ்ணா கையை பிடித்து இழுத்துக் கொண்டு.

ஹார்ட் பிள்ளோவை கையில் எடுத்தவள்.. கிருஷ்ணாவை அருகில் அழைத்தாள்.

“இரண்டு பிள்ளோ வேண்டும்”

“எடுத்துக்கோ… வேண்டாம்’ன்னு சொன்னா விடவா போற”

கிருஷ்ணாவும் அதற்கான பணத்தை கொடுத்தவன்.

“மாதவன்... இது உங்களுக்கு”

“இல்லை வேண்டாம்” அவன் தயங்கி நின்றான்.

“இல்லை, தப்பான எண்ணத்தில் இல்லை. இதை வச்சி பிளாக் மெயில் எல்லாம் செய்ய மாட்டேன் பிரண்ட்லி கிப்ட் சரியா”

“சரி…” என்றவன் வாங்கிக் கொண்டான்.

கிருஷ்ணன் தான் இருவரையும் முறைத்து பார்த்தான். இங்கு வெட்டவெளியில் ராதாவிடம் சண்டைப்போடவும் எண்ணமில்லை அவனுக்கு.

அடுத்த கடைக்கு நடந்து போக.

அங்கிருந்த பொம்மையை பார்த்து ராதா மட்டுமல்ல மாதவனும் அதிர்ந்து நான்றான்.

டாம் அன் ஜெர்ரியில் வரும் கூண்டில் இருக்கும் பறவை அது.




கதை பற்றி உங்கள் கருத்து❤️

 
Last edited:

Bindusara

Well-known member
Wonderland writer
7… காதலன்

முதலில் ராதா அந்த பொம்மையை வருடிக் கொடுத்தாலும் பல நினைவுகளால் ஏற்பட்ட வலியின் காரணமாக‌ தீப்பட்ட கை போல வெடுக்கென்று தன் புறம் இழுத்து கொண்டாள்.

“என்னாச்சி ராதா” அவளது மாற்றத்தை முதலில் கண்டு கொண்டவன் அவன் தான்.

அனு மனதில், ‘இருவரும் சரியான ஜாடிக்கு ஏத்த மூடி. பார்ப்பவர்களுக்கு பொருந்தாதது போல இருந்தாலும், மனது முழுக்கவும் இவ்வளவு பாசம்’ தன் தோழியையும் பாஸையும் மெச்சினாள்.

‘இந்த மாதவன் தான் அன் லக்கி. கையில் கிடைத்த மாணிக்கத்தை தொலைத்துவிட்டான்’

“ஒன்னுமில்ல மாமா… தலைவலிக்குது”

“இரு வண்டில போய் தைலம் எடுத்துட்டு வரேன்”

“இல்ல மாமா..” வாய் கிருஷ்ணாவிடம் பேசிட்டு இருந்தாலும் அவளது கண்கள் அந்த பொம்மையை ரசித்தது.

வருட துடித்த கைகளை அடக்கினாள்.

அந்த பொம்மையை பார்த்த இருவரின் முகத்திலும் அப்படி ஒரு அதிர்ச்சி.

சரியாக இருவரும் பழக துவங்கிய நாட்களில் இருவருக்கும் ஒரே பொழுதுபோக்கு, டாம் அண்ட் ஜெர்ரி பார்ப்பது.

அதில் வரும் கூண்டில் இருக்கும் கிளி என்றாள் ராதாக்கு கொள்ளை இஷ்டம். அந்த பொம்மையை வாங்க நினைத்தார்கள். ஆனா, தெருத்தெருவா அலைந்தும் கிடைக்கவில்லை. ஏன் சேலம் பெங்களுர் என்று ஆள் வைத்து கூட தேடி ஆச்சி. அந்த பொம்மையை தவிர மற்ற அனைத்து பொம்மையும் கிடைத்தது.

தேடிய போது கிடைக்காத அந்த பொருள் தேவையில்லாத போது கிடைத்து என்ன பலன். கிட்டத்தட்ட இவர்களின் காதல் சின்னம் போல அது.

இன்று அந்த பொம்மையை பார்த்தவர்கள் அதிர்ச்சியில் பழைய நினைவுகளோடு சுழன்றார்கள், முதலில் சுதாரித்தது ராதா தான்.

“நீங்க எதாவது வாங்கிட்டு வாங்க, நான் கார்கிட்ட போறேன்”

கிருஷ்ணா கையை பிடித்து நிறுத்தியவன், “இந்த கருமத்துக்கு தான் இது எல்லாம் வேண்டாம்’ன்னு சொன்னேன். கசந்த இறந்த காலத்தை மீட்டெடுப்பது எவ்வளவு தவறு தெரியுமா. அதுதான் நீ செஞ்சிட்டு இருக்க இன்னும் 29 நாள் எப்படி இருக்க போற. இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை மாதவனை அனுப்பிடலாம்”

“இல்லை கிருஷ்ணா இந்த முப்பது நாள் எனக்கு வேணும் பிளீஸ் என்னை புரிஞ்சிங்கோ”

“உன்னை புரிஞ்சி கிட்டதால தான் சொல்லுறேன். மனதால் நீ புளு போல துடிப்பதை பார்க்கும் சக்தி எனக்கில்லை”

“பிளீஸ் மாமா புரிஞ்சிக்கோ”

“என்னை புரிஞ்சிக்கோ என் நிலைமையையும் புரிஞ்சிக்கோ”

“நீ கவலை படாத நான் உனக்கு தான்”

“ஆஆஆ… மண்டை வலிக்குது ராதா. உன்னை எப்படி தான் என் அப்பா சமாளிச்சாறோ”

ராதா முகத்தில் புன்னகை ஏற்பட்டது, மாமாவை பற்றி பேசியதும்.

“இதைவிட பெரிய பெரிய சோதனைகள் வரும். அப்போ என்ன செய்வ”

இழுத்து மூச்சி எடுத்து விட்டவள்,

“சரி நான் காருக்கு போகலை இன்னும் ஒரு முறை அவனை போக சொல்லவா’ன்னு என்கிட்ட பேசாத அப்புறம் மாமா…”

“சரி சரி, இதை பத்தி நான் எதும் பேசலை. ஆனா அது நீ உடையாத வரையில் தான் நியாபகம் வச்சிக்கோ. அடுத்த நொடி நீ சொன்னாலும் எதும் கேட்க மாட்டேன்” என்ற கிருஷ்ணா.

வேகமாக முன் நடந்தான் அவனது காலடி அழுத்தம் சொன்னது எவ்வளவு கோபமாக இருக்கிறான் என்று

இருவரும் சண்டை போடுவதை பார்த்த மாதவன், அவனுக்கு தான் சங்கடமாக போனது.

ஆளுக்கு ஒரு திசையில் நடந்தார்கள்.

‘ராதா இனி கவனமா இருக்கனும். கிருஷ்ணா இவ்வளவு தூரம் தனக்காக நின்றது பெரிய விஷயம். இனி ஒன்லி எஞ்சாய் மோட் தான் சோகம் அழுகாச்சிக்கு இடம் இல்லை’

மனதை உறுதியாக வைத்தவள் ஒரு முடிவோடு, துள்ளல் நடையோடு வந்தாள்.

“வாங்க… நம்ம ரங்கராட்டினம் சுத்தலாம்”

“எது இந்த குட்டிலையா நான் வரவலை இடம் பத்தாது”

வரிசையாக சிறுவர்களுக்கான, கையில் சுற்றி விடும் ரங்கதராட்டினத்தை சுட்டிக்காட்டி சொல்ல.

“ஹாலோ பாஸ் அது குழந்தைகளுக்கு இது நமக்கு” கிருஷ்ணாவை எதிர் புறத்தில் திருப்பிய ராதா சுட்டிக்காட்ட.

“அடியே அது ரங்கராட்டினமா? ஜயன்ட் வீல் டி, எவ்வளவு பெருசா இருக்கு பாரு பாத்தாவே பயமா இருக்கு”

“உடம்பு மட்டும் இவ்வளவு இருக்கு தைரியமில்லையா”

“எது தைரியம் இல்லையா… சண்டைக்கு யார் வந்தாலும் மூஞ்சி கிழிஞ்சிடும்”

“டேய் அடங்குடா… வாய் பேசாம போய் டிக்கட் வாங்கிட்டு வா”

“ஆமா நானும் இதுல போயே ஆகனும்” அனு ராதாவின் கை கோர்த்து சொல்ல.

“இல்லை நான் வரலை” கிருஷ்ணாவும் மாதவனும் ஒரே போல மறுப்பு தெரிவித்தார்கள்.

அனு இருவரையும் பார்த்து, ”பொண்ணுங்க நாங்களே பயமில்லாம போறோம். உங்களுக்கென்ன எருமை மாடு போலத்தானே வளர்ந்து நிக்கறீங்க”

குட்டியாக இருக்கும் அனு இருவரையும் அன்னாந்து சொல்ல ராதாக்கு தான் சிரிப்பாக வந்தது.

‘இந்த புள்ளை என்ன இவ்வளவு குள்ளையா இருக்கு’ மனதில் நினைத்தாலும் சிரிப்பு பீரிட்டது.

சிரிப்பை அடக்கியவளால் முடியாமல் சிரித்துவிட்டாள்.

‘இவ எதுக்கு சம்பந்தம் இல்லாம சிரிக்கரா’ என்ன என்பது போல சைகையில் கேட்க.

“இல்ல உன்னை பார்த்தா சுட்டி டிவி பார்க்கும் பெண் போல தோனுது”

“ஓய் என்ன கிண்டலா, நமக்காக தானே பேசிட்டு இருக்கேன்”

“சாரி குட்டி தங்கம். யூ கண்டினியு”

அனுக்கு மட்டும் சைகை காட்டியவள் மறைந்து சென்றாள், டிக்கட் வாங்கும் இடத்துக்கு.

எட்டு டிக்கட் வாங்கினாள், இரண்டு ரவுண்ட் போவதற்க்கு.

வாங்கி வந்தவள் கிருஷ்ணா கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.

“அனு நீ உன் மாமாவை இழுத்துட்டு வா நான் என் மாமாவை இழுத்துட்டு வரேன்” இருவரும் காதில் ரகசியம் பேச.

“கிருஷ்ணா இவளுங்க ஏதோ பிளான் போட்டுட்டாங்க வா ஓடிடுவோம்”

இருவரும் நழுவும் நேரம் பார்த்து பிடித்து இழுத்தார்கள், இரு பெண்களும்.

இரண்டு பெண்களால் முடியலை. அந்த இரண்டு மலை மாடுகளை பிடித்து இழுத்து போக.

அங்கு வேலை செய்யும் இரு அண்ணாக்களை கூப்பிட்டாள் ராதா,

“அண்ணா கொஞ்சம் இவங்களை அங்கே ஏத்தி விடுங்க”

“சரி தங்கச்சி” என்றவர் ராதாவுக்கு உதவ முன் வந்தவர்கள்.

உதவியோடு இருவரையும் பெரிய ரங்கராட்டினத்தில் உட்கார வைக்க.

சற்று முன் பார்த்த திருநங்கைகளும் ரங்கராட்டினத்தில் ஏற… அனுவும் ராதாவும் “அக்கா..” என ஆர்பரித்தார்கள்.

“அட தங்கச்சிங்க பாருங்கடி இங்க தான் இருக்காங்க, எங்க என்ற மாமாக்களை காணோம்”

“பயத்தில் காலை பிடிச்சிட்டு உட்கார்ந்து இருக்காங்க” இரு ஆண்களின் இமேஜை டோட்டல் டேமேஜ் செய்ய சிறப்பாக ஜயின்ட் வீல் சுத்த துவங்கியது.

கிருஷ்ணாவும் ராதாவும் அருகருகே உட்கார்ந்திருக்க. இவர்களுக்கு எதிரில் அனு மாதவன் அமர்ந்தாருந்தார்கள்.

“ராதா இப்போ கூட ஒன்னும் கெட்டு போகலை இறங்கிடலாம்”

முதல் சுற்றுக்கே கதறிவிட்டார்கள் ஆண்கள் இருவரும்.

வேகம் கூட கூட.. இரு ஆண்களும் வயிற்றை பிடித்துக்கொண்டு கதறினார்கள்.

“ஆஆஆஆ… நிறுத்துங்க முடியலை” இது கிருஷ்ணா.

“ஆஆஆஆஆ… வயிறு சிரிக்குது விடுங்கடா” இது மாதவன்.

இருவரின் அலறல்களை இரு பெண்கள் கைத்தட்டி ரசித்தார்கள்.

ஒரு எல்லைக்கு மேல் கிருஷ்ணாவால் முடியலை ராதாவின் ஒரு கையை அவனும் இன்னொரு கையை மாதவனும் குத்தகை எடுத்தவர்கள் போல பிடித்து நெருக்கி.. ரத்தம் ஒன்று தான் வராத குறை.

மேல் போகும் போது அமைதியாக இருப்பார்கள் கீழே வரும் போது ராதா கைகள் தான் படாத பாடு படும்.

பத்து நிமிடம் தொடர்ந்து இரு ஆண்களின் அலறல் தான் இடையிடையே.

அங்கிருந்த ஆப்பிரேட்டரிடம், “அண்ணா நிறுத்துங்க”

“பக்கத்துல பெண்ணை வச்சிட்டு அசிங்கமா அடம்பிடிக்கிற. உனக்கு முன்னாடி பெட்டியை பாரு பச்சை குழந்தை அமைதியா உட்கார்ந்து வராங்க” அவரும் இடையில் கலாய்த்துவிட.

‘அட பாவிகளா! வயசுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்’

“இவளை கூட வச்சி இருந்தா மானம் மரியாதை எங்கே தங்கும். ஐந்து நமிசம் முன் பார்த்தவன் எல்லாம் நம்மை கலாய்க்கறான்… எல்லாம் என் நிலைமை” கிருஷ்ணா தலையில் அடித்துக்கொண்டான்.

“ஆஆஆஆ… வயிறு வலிக்குதே”

“ஆஆஆ… வயிறு சிரிக்குதே” இருவரின் குரல்தான் வானத்துக்கும் பூமிக்கும் கேட்டது.

அங்கிருந்தவர்கள் இவர்களின் ரணகலத்தை பார்த்து குலுங்கி சிரித்தார்கள்.

ராதா ஒரு படிக்கு மேல் போய் யூ டியுப் லைவ் போட்டுவிட்டு.. லைக்கும் கமெண்டும் பிச்சிக்கிட்டது.

ஒருவழியாக ஜயின்ட் வீல் அதன் வேகத்தை குறைக்க.

‘அப்பாடா நிக்கபோகுது’ இரு ஆண்களுக்கும் இப்போது தான் மூச்சே வந்தது.

ஒரு ஒரு பெட்டியாக இறக்கி விட. இவர்களின் பெட்டிக்கு அடுத்த பெட்டியை இறக்கி விட துவங்கினான் அந்த ஆப்பரேட்டர் பையன்.

“சார் எங்களை இறக்கி விடுங்க” அவன் காதுலையே வாங்கலை.

“யோவ் பேசிட்டு இருக்கோமில்ல மன்னு மாதிரி நின்னுட்டு இருக்க” கிருஷ்ணா ஆத்திரத்தில் பொங்க.

“இரண்டு ரவுண்டு டிக்கட் வாங்கிட்டு ஒரே ரவுண்டில் இறக்கிவிட சொல்லுறிங்க” என்று அடுத்த பெட்டிகளை இறக்கிவிட்டு வேலையை பார்த்தான், அந்த கிரீஸ் பூசிய சட்டைக்காரன்.

“எது இரண்டு ரவுண்டா! ஒரு ரவுண்டுக்கே வயிறில் இருக்கும் குடல் வெளியே வரேன்னு அடம் பிடிக்குது. இதுல இன்னொரு ரவுண்டா”

“ஏய் எல்லாம் உன் வேலையா” கிருஷ்ணா ராதாவை குனிய வச்சி இரண்டு அடி போட.

மாதவனுக்கு கோபம் வந்துவிட்டது, “கிருஷ்ணா இது டூ மச், எதுக்கு என் ராதைவை அடிக்கிறீங்க”

“சீ இஸ் மைன்.. மை ராதா” அப்போது தான் கிருஷ்ணா இருவர் கை கோர்த்து இருப்பதை பார்த்து முறைந்தான்.

“சாரி கிருஷ்ணா தப்பான இன்டன்சனில் இல்லை” எதுவும் பேசாமல் கிருஷ்ணா கீழே இறக்க சொல்லி வேகமாக இறங்கினான்.

‘என்ன கிருஷ்ணாக்கு கோபம் வருமா!’ அவன் பின் இறங்கி ஓடினாள். பின் அனுவும் மாதவனும் தயக்கத்தோடு ஓடினார்கள்.

“கிருஷ்ணா நில்லு இனி இப்படி நடக்காது சாரி”

“ஏய் என் பின்னாடி வர போ நானே இரண்டு நிமிசத்தில் வரேன்”

“சாரி… அவனுக்கும் உன்னை போல ஜயின்ட் வீல்’ன்னா பயம் அதான் என் கையை பிடிச்சிக்கிட்டான்”

“நீ முதல்ல போ… நான் வந்து பேசிக்கிறேன்” கிருஷ்ணா கடுப்பாக முன் செல்ல.

ராதா கையை பிசைந்து கொண்டே கிருஷ்ணன் பின் சென்றாள்.

ராதாவும் அவனை விடுவதாக இல்லை.

“சாரி கிருஷ்ணா… கண்ணன்”

ராதா கண்ணன் என்று அழைத்ததுக்கு கிருஷ்ணா முறைக்கவும்.

“அவனை அனுப்பி வச்சிடலாம்”

“சரி அனுப்பிடு”

“நான் ஒரு பேச்சிக்கு சொன்னேன்”

“அதான் தெரியுமே போ நீ, நான் வரேன்”

“இல்லை கிருஷ்ணா… என்ட கோபம் காட்டாத, எனக்கு கஷ்டமா இருக்கு”

“ஆவுன்னா டயலாக் பேசாதே. இங்க இருந்து போடி” கத்திட்டான்.

ராதாக்கு அவனது ஹைய் பிச் சவுண்ட் காது கூட சேர்ந்து மனதும் வலித்தது ராதாக்கு.
 

Bindusara

Well-known member
Wonderland writer


8…காதலன்!

‘இவ விட மாட்டா போல’

“எதுக்கு இப்போ என் கூட வர”

“அப்படி தான் வருவேன். நீதான் கோபமா போறயே”

“எனக்கு கோபமில்ல போ”

“நிஜமா”

“நிஜமா” என்றான் கிருஷ்ணா.

“இன்னும் ஏன்டி நின்னுட்டு இருக்க . போ இங்க இருந்து”

“இல்ல நீ பகோபமா இருக்க தானே?”

“ஆஆஆ.. புரிஞ்சிக்கோ டி நான் சுச்சு போகனும்”

“அடச்சி நான் கூட பயந்துட்டேன், எங்கே கோச்சிட்டு ஓடுறியோன்னு”

“நான் கோபமில்லை’ன்னு சொல்லலையே”

“கிருஷ்ணா… ஆஆஆ” ராதா தன் இரு விழிகளை உருட்டி மிரட்டினாள்.

பின் வந்து மாதவனும் அனுவும்… பெக்கபெக்க’ன்னு சிரிச்சிட்டு இருந்தார்கள்.

“அடப்பாவி, பாஸ் நான் கூட கோச்சிட்டு வந்திங்கன்னு பயந்தே போய்ட்டேன்”

“இப்போ இந்த பட்டிமன்றம் அவசியமா. ச்சி நிம்மதியா போக விடுங்கடா” கிருஷ்ணா மறைவான இடத்தை நோக்கி ஓட.

“சரி அந்த மிட்டாய் கடைக்கிட்ட வந்திடுங்க இரண்டு பேரும்”

மாதவனவையும் விட்டுவிட்டு இரண்டு பெண்களும்.. சில இனிப்புகளை வாங்க ஆயத்தமானார்கள்.

அந்த தெரு முழுக்க தேர் போல அடுக்கி வைத்திருந்தார்கள் தேர் மிட்டாயை.

“ராதா இது எதுல செய்றாங்க” வாயில் ஒரு பெரிய சைஸ் தேர் மிட்டாயை திணித்தாள்.

“சக்கரை அண்ட் தேங்கா போட்டு இருப்பாங்க மாமா வைட் கலர் சாக்லேட் மட்டும் தான் வாங்கி தருவாங்க”

“ஏன் எல்லாம்ஒன்னு தானே”

“கலர் போட்டு இருக்குல. அதுலாம் தான் ஹெல்த்தி இல்லைன்னு சொல்லுவாங்க”

இவங்க வாங்கி முடிக்கவும் இருவரும் அமைதியாக வந்தார்கள்.

திருவிழாவை முடித்துக்கொண்டு காரில் ஏறி பறந்தார்கள். சிறிது தூரத்தில் அதியமான் கோட்டையில் இருந்த காலபைரவன் கோவிலை கடக்கும் போது.

ராதா சுட்டிக்காட்டி, “மாமா…ஆஆஆ இங்க நிறுத்து” கிட்டத்தட்ட அலறினாள்.

“அபாய ஒலி… ஆஆஆ என் காது போச்சி, கொஞ்சம் மெதுவா பேசு டி ராட்சசி”

“முடியாது, என் குரலே அப்படி தான்” கிருஷ்ணா காது அருகில் இன்னும் கத்தினாள்.

கிருஷ்ணன் வண்டியை நிறுத்தினான்.

பேருந்து நிலையத்தில் பின் இருந்த புளிய மரத்தை கண்களில் ஆசையோடு வருடினாள்.

“ஏய் இந்த இத்து போன மரத்தை பார்க்கத்தான் நிறுத்த சொன்னியா?”

கிருஷ்ணா வாயிலையே இரண்டு அடி போட்டாள் ராதா.

“இது இத்து போன மரமா. பிச்சிடுவேண்”

“இந்த மரத்தில் என்ன ஸ்பெஷல் இருக்கு”

“இரண்டு ஸ்பெஷல் பிளேஸ் காட்ட தான் நிறுத்த சொன்னேன்”

“என் ஸ்பெஷல் பிளேஸ்? இந்த புளியா மரமா?” அனு அந்த மரத்தை உற்று நோக்கினாள்.

“ஆமா... இங்க தான் நான் பிறந்தது. எங்க அம்மா ஓட பாட்டி வீடு இங்க இருந்தது. ரோட் வந்ததும் வீடு எடுத்துட்டாங்க, மரம் மட்டும் நின்னுடுச்சி.

“ஓ… சூப்பர் ராதா. இந்த ஊருக்கு தான் பெரிய கதை இருக்கும்’ன்னு நினைச்சேன் உனக்கு கூட கதை இருக்கு போல”

“என் வாழ்க்கையின் பக்கங்கள் அதிகம் அனு, ஆனா அனைத்தும் வீனாக போயிடுச்சி” அர்த்தமாக மாதவனை பார்த்து வைத்தாள்.

ராதா சொல்வது மாதவனின் இதயத்தை கூறு போட்டாலும் அமைதியாக அந்த மரத்தை தூரமிருந்து ரசித்தான்.

“மாதவன் மாமா என்ன மரத்தை இப்படி தொட்டு பாத்துட்டு இருக்கிங்க?” அனு கேட்க.

“மரம் அழகா இருக்கு அதான்”

‘எதே அழகா இருக்கா. இந்த இத்து போன மரமா?’ கிருஷ்ணா மாதவனையும் அந்த மரத்தையும் மாற்றி மாற்றி பார்த்தான்.

‘இவ கூட சுத்தறவங்க எல்லோரும் லூசு தான் போல’

மாதவன் அந்த மரத்தை எதுக்கு அப்படி பாத்தான் என்று அவனுக்கும் ராதாக்கு மட்டும் தான் தெரியும்.

மாதவன் அந்த மரத்திலிருந்து இளம் தளிர், அந்த மரத்துக்கு வலிக்காதது போல பிச்சி எடுத்தான் யாருக்கும் தெரியாமல்.

அவனது கள்ளத்தனம் ராதா கண்களில் மாட்டியது. ஆனால் அதை ஊதி பெரிதாக்க விரும்பாதவள். ரோட்டில் அந்த புறம் இருந்த கால பைரவன் கோயிலை காட்டி.

“காசிக்கு அடுத்து கால பைரவனுக்கு தனி கோவில் இது தான்”

“ராதா, இது எல்லாம் அப்பாவா உனக்கு சொன்னார்” கிருஷ்ணா ஆச்சரியமாக கேட்டான்.

“ஆமா”

“சரியான பிராடுங்க, எனக்கு எதாவது சொன்னாரா ஓரவஞ்சனை, பிறந்த நாளுக்கு கூட கோவிலுக்கு கூட்டி போனது இல்லை, அந்த ஹிட்லர்”

“கிருஷ்ணா நீ காலேஜ் போன சமையத்தில், நாங்க இரண்டு பேரும் நம்ம ஊரை அலசி ஆராய்ஞ்சிட்டோம். நம்ம ஊரில் சுற்றி பார்க்க எவ்வளவு இடம் இருக்கு. அதை விட்டுட்டு வெளி ஊருக்கு போட்டி போட்டுட்டு போறாங்க கிறுக்கு பசங்க”

“இது இல்லாம இன்னும் நிறைய இருக்கா!” ஆச்சரியமாக கேட்டார்கள் மூவரும்.

“ஆமா… கொஞ்ச பிளேஸ்க்கு மட்டும் போலாம்”

“ராதா எல்லா இடத்துக்கும் போலாம்”

“போலாம் தான், அடுத்த சம்மர்க்கு போலாம்” ராதா அனுவிடம் பேசி கொண்டிருக்கும் போது.

“அட பாவிகளே… இரு உன்ற மாமா வீடு திரும்பட்டும், வச்சி செய்றேன். கொஞ்சமாவது பெத்த புள்ள மேல பாசம் இருக்கா” கிருஷ்ணா நான்சிங்கா தன் தந்தையை வறுத்தெடுத்தான்.

“ஹா… ஹா, எது நீ எங்களை வச்சி செய்வியா இல்லை, நாங்க வச்சி செய்வோமா”

“இதில் என்ன சந்தேகம் நீங்க தான்” கிருஷ்ணா தடாலடியாக சரண்டர் ஆனான்.

மாதவன் புறம் திரும்ப கூட இல்லை கிருஷ்ணன். அவனுக்கு கோபம் வந்தது, ‘வேணான்னு விட்டுட்டு போனவன். என் மனைவியை எப்படி பிடிக்கலாம்’ மாதவனை முறைத்துக் கொண்டே கால பைரவன் கோவிலுக்கு போனார்கள். கூட்டம் குறைவாகத்தான் இருந்தது.

“என்ன ராதா பேமஸ் கோவிலுக்கு வெளி ஊரில், வெளிநாட்டிலிருந்து வருவாங்க சொன்ன எங்கே ஒரு ஈ காக்கா கூட வரலை” அனு சுற்றி முற்றி பார்த்தாள்.

“இன்று திங்கள், ஞாயிறு கிழமை மற்றும் அஷ்டமி தினங்களில் தான் கூட்டம் அலை மோதும். நிக்க கூட இடமிருக்காது உள்ள வாங்க இன்னொரு அதிசயம் சொல்லுறேன்”

மூவரும் ஆர்வமாக உள்ளே சென்றார்கள் கோயில் குருக்கள் எவரும் இல்லை.

கோவில் உள்ளே நுழையும் போது கோபுரத்தில் நாய் சிலை இருப்பதை பார்த்த அனு.

“ராதா இது என்ன நாய் பொம்மை வச்சி இருக்காங்க, அதும் கோவில் முன்னாடி!”

“வாயில் போட்டுக்கோ… காலபைரவர் வாகனம் அது. கனவில் அடிச்சி துவச்சிடுவாரு” அனுவை ராதா பயம்படுத்தி விட்டதும்.

“ஐயோ! மன்னிச்சிடுங்க” அனு அந்த சிலைக்கு முன் நின்று.

“டாக் சார் டாக் சார் தெரியாம சொல்லிட்டேன், இந்த அறிவு கெட்டவளை மன்னிச்சிடுங்க” அந்த சிலையின் காலை பிடித்து மன்னிப்பு கேட்க, மூவறும் அனுவின் செயலை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

“ஏய் அனு போதும் வா அவதான் ஏதோ கலாய்க்க சொல்லி இருக்கா அதுக்கு இப்படி பயந்து சாகுற”

“பாஸ் உங்களுக்கு தெரியாது இது எல்லாம் சாமிக்கு எப்போ பவர் இருக்கோ இல்லையே. நம்ம எப்ப அவங்களை குறைவா அல்லது இளக்காரமா பேசுறோமே. அப்போ சக்தி வந்து பனிஸ்மென்ட் கொடுத்துடுவாங்க”


முழுதாக பக்தி பழமாக மாறி பேசிய அனுவை பார்க்க மூவருக்கும் எல்.கே.ஜி பிள்ளையை தூக்கி வந்தது போல ஒரு உணர்வு ஏற்ப்பட்டது.

அனு மீண்டும் ஒரு மன்னிப்பு போட்டுவிட்டு உள்ளே போனார்கள்.

உள்ளே பிரம்மாண்டமான தூண்கள் இல்லா விட்டாலும், எளிமை அழகோடு இருந்தது. பல வளைவுகளை கடந்து நடந்தவர்கள்.

“இந்த இடத்தை பார்த்துக்கோங்க” ராதா அங்கு போடப்பட்டு இருந்த தரையை சுட்டி காட்டினாள்.

கருவரைக்கு வெளியே இருக்கும் சிறு நுழைவு அது.

“இந்த தரையில் என்ன இருக்கு” அனு காலால் மிதித்து பார்த்தாள்.

“இங்கே தரை தானே இருக்கு“ மாதவன் ஆராய்ச்சியாக பார்த்தான்.

“இங்கே ஒரு ரகசிய சுரங்கப்பாதை இருந்தது”

“எதே சுரங்கபாதையா! யூ மீன் ரகசிய வழியா”

“அதே தான், இந்த இடத்தில் இருந்து தருமபுரி கோட்டை காமாச்சி அம்மன் கோவில் உள்ளே வரை ஒரு ரகசிய பாதை அமைத்து, உபயோகப்படுத்தி இருக்காங்க”

“எவ்வளவு கிலோ மீட்டர் தூரம் இருக்கும்”

“ஒரு எட்டிலிருந்து ஒன்பது கிலோமீட்டர் இருக்கும். எனக்கு சரியா தெரியலை”

“வாவ்! ஜாலி நாம போய் பார்க்கலாமா மென் விஸஸ் வைல்டில் கூட அவன் ஜாலியா குகையில் தங்குவானே அதுபோல நாமும் ஒரு டிரிப் போலாமா?” அனுவும் மாதவனும் ஆர்வமாக கேட்டனர்.

“ஆசை தான். அது எல்லாம் அடைச்சி ஒரு 20 வருசம் மேல் ஆகும்”

“ஓ…! அப்படியா. சரி இதோட எண்ட் இருக்குமில்ல அங்க போலாமா. ஏதோ காமாச்சி அம்மன் கோவில் சொன்னியே”

“அனு நானே இது தான் மனசுல நினைச்சேன், நீ சொல்லிட்ட” மாதவன் அனுவிடம் கை அடித்துக்கொள்ள.

“குடும்பமே மக்கா இருக்கும் போல. நம்ம எதும் சொல்லுவதற்க்கு இல்லை” கிருஷ்ணா தலையில் அடித்து கொண்டான்.

“ஆமா இரண்டு அறிவாளி ஜீவன் இருக்கு’ன்னு உங்களுக்கு பொறாமை” அனு பீத்தி கொண்டாள்.

ராதா அனு தலையை தட்டி விட்டு, ’ஏய் டுபுக்கு, இங்க அடச்சவங்க அங்க அடச்சி இருக்க மாட்டாங்களா? என்ன ஒரு அறிவாளித்தனம்”

“ஆமால்ல…” மாதவனும் அனுவும் கோரஸ்சாக சொல்ல.

“சரி வாங்க சாமியை கும்பிட்டுட்டு கிளம்பலாம்”

அனைவரும் வெளியே வர நிறைய பேனர் இருந்தது. எந்த ராசி காரங்க என்னென்ன பூஜை செய்ய வேண்டும். விளக்கு ஏற்றுவது, தொடங்கி எந்த பிரச்சனைக்கு எந்த பரிகாரம் என அனைத்தும் பெரிய பேனரில் அச்சிட்டு பக்கதர்களின் பார்வைக்கு வைத்திருந்தார்கள்.

“சரி வாங்க கிளம்பலாம்.. எனக்கு அந்த இன்னொரு என்ட் பார்க்க போலாமா?”

“சரி போலாம்”

இவர்களின் அடுத்த பயணம், கோட்டையில் இருக்கும் காமாச்சி அம்மனை பார்க்க போனார்கள்.

மாதவன் ராதா பிறந்த அந்த மரத்தை ஆசையாக கண்களில் வருடினான். வண்டி புறப்பட்டது.

மாதவனின் மனம் அடம் பிடித்தது இன்னும் கொஞ்ச நேரம் இங்கே இருக்க வேண்டும் என்று.

முன் இருக்கையில் ராதா கிருஷ்ணா ஏறிக்கொள்ள.

பின்னிருக்கையில் அனுவும், மாதவனும் ஓய்வாக சாய்ந்தார்கள். அங்கு வாங்கி வந்த தேர் மிட்டாயும்… ஜவ்வு மிட்டாயையும் அடித்து பிடித்து சாப்பிட்டு கொண்டே வந்தார்கள்.

ராதாக்கு ஒரே மயக்கம் படுத்துட்டா.

தர்மபுரி பேருந்து நிலையத்தை கடந்து கோட்டை கோவிலை நோக்கி போக வண்டியில் செல்ல ராதா தூக்கத்துக்கு சென்றாள்.

அழகான காலைப்பொழுது, பழக்கம் இல்லாத ஒரு இடம், கையில் பெரிய கப்பில் பாலும் பக்கத்தில் ஒரு கிலோ பூஸ்ட் பாட்டில் ஒரு கின்னத்தில் நாலு ஸ்பூன் பூஸ்ட் போட்டு அருகில் கொடுக்க.

“யாருடா இது… என்று திரும்பி பார்த்தவள் அதிர்ச்சியில் பால் கிளாசையும் பூஸ்ட்டையும் தட்டி விட்டுவிட்டாள். கை தவறி” அதிர்ச்சியில் அவள் எழுந்திரிக்கவும் கோவில் வரவும் சரியாக இருந்தது.
 

Bindusara

Well-known member
Wonderland writer
9…காதலன்!

கோவில் குளம் என்று சுத்தித் திரிந்தவர்கள் அடுத்த நாள் எங்கே போலாம் என்று தீவிர சிந்தனையில் இருந்தார்கள் ஆளுக்கு ஒரு மூலையில்.

ஓட்டலில் வாங்கி வந்த மஸ்ரூம் மற்றும் சிக்கன் செஸ்வான், பல சைடிஸ் கடையை பரப்பிக் கொண்டே தீவிரமாக பேசினார்கள்.

ஒருவர் சொல்லும் இடத்துக்கு மற்றவர்கள் மறுப்பு சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

முன் கடை பரப்பி வைத்திருந்ததை சுட்டிக்காட்டிய கிருஷ்ணா.

“நம்ம சரக்கு மட்டும் தான் வாங்கலை மத்த எல்லாம் இருக்கு”

“என்ன பாஸ் ரொம்ப பழக்கம் போல, நீங்க பேசுவதை பார்த்தால் எல்லா சரக்கு அண்ட் சைடிஸ் டேஸ்ட் செஞ்சி இருப்பிங்க போல”

‘இவளை… நம்ம மானத்தை வாங்குரதிலேயே இருக்குங்க எல்லாம்’

“கிருஷ்ணா நம்ம மலரும் நினைவுகள் சொல்லுறது”

“சொல்லுற போலவா இருக்கு என்னோட நினைவுகள் போமா அங்குட்டு கடுப்பை கிளப்பாமல்”

“ஏய் எனன மேட்டர் சொல்லுங்க” மாதவன் கேட்க.

“அப்படியே எல்லோரும் மேலே பாருங்க…”

சிறு வயதில் பீர் வாங்கி ரகுவரனிடம் மாட்டிவிட்ட நினைவுகளை ராதா சொல்ல, அனுவும் மாதவனுக்கும் அடக்க முடியாத சிரிப்பு தான் வந்தது.

மூவரும் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தார்கள்.

கடுப்பாகிய கிருஷ்ணாவுக்கு பசி அதிகம் எடுத்தது.

ராதா பிரித்து வைத்திருந்த பார்சலை எடுத்தான்.

“கிருஷ்ணா இது என்னோடது சாப்பிடாதே”

“அப்படிதான் சாப்பிடுவேன் போடி”

செஸ்வான் ரைஸ் ஒரு வாய் தான் வைத்தான் கிருஷ்ணா, “ஆஆஆஆ… காரத்தை போட்டுக் கொல்லப் பார்க்கரா கொலைகாரி”அருகிலிருந்த ஒரு லிட்டர் பாட்டிலை காலி செய்தான்.

“டேய் கிருஷ்ணா இதை எதுக்கு எடுத்த உங்க இரண்டு பேருக்கும் அந்த பார்சல், “இதை முன்னவே சொல்லுவதற்க்கு என்ன”

“சொல்லும் வரை பொறுமையா இருந்து இருக்கனும்” ராதாவும் அனுவும் அந்த காரத்தை அசால்ட்டாக சாப்பிட்டார்கள். கிருஷ்ணா தான் விழி பிதுங்கி இருந்தான், இருவர் சாப்பிடுவதை பார்த்து.

“எப்படி இரண்டு பேரும் இப்படி சாப்பிடுறிங்க?”

“இது என்னோட பேவரைட் மாமாவும் நானும் அடிக்கடி சாப்பிடுவோம்”

“அப்பாவுமா?”

ராதா காதை பிடித்து வலிக்கும் அளவுக்கு திருகினான்.

“என்னைக்காவது வெளியே போய் சாப்பிடலாம் என்று சொன்னா, இரண்டு சாத்தானும் என்ன சொல்லுவிங்க”

“மாமா வலிக்குது விடு”

“கேட்டத்துக்கு பதில் சொல்லு ராதா”

“அது வெளியே சாப்பிட்டா ஹெல்த்தி இல்லைன்னு”

“அப்போ நீங்க சாப்பிட்டதுக்கு பேரு”

“ரூல்ஸ் போட்டவங்களுக்கு பிரேக் செய்யும் உரிமை இருக்குல்ல”

“நல்லா வருவீங்க தெய்வங்களா”

“மாமா காது வலிக்குது விடு”

“சாப்பிட்டுட்டு உன்னை பார்த்துக்கிறேன்”

நால்வரின் பேச்சும் பல திசைக்கு சென்று மீண்டும் நாளை சுத்துவதற்க்கா வழி மாறியது. “வத்தல் மலை போகலாமா?”அனு கேட்க.

ராதா அவசரமாக மறுப்பு தெரிவித்தாள்.

“ஏன் ராதா, உனக்கு தான் மலை பகுதி எல்லாம் பிடிக்குமே” கிருஷ்ணா கேட்டான்.

“பிடிக்கும் கிருஷ்ணா… அதற்க்கு முன் நிறைய பிளான் இருக்கு”

“என்ன பிளான் அப்போ வத்தல் மலை போக மாட்டோமா?”

“போலாம் கடைசி நாள் போலாம்”

“இன்னும் நிறைய நாள் இருக்கே”

“சொடக்கு போடும் நேரத்தில் கடைசி நாள் வந்திடும்”

“அதுக்கு முன்னாடி சில அதிசய இடத்தை பார்த்துட்டு அதுக்கு அப்புறம் மாதவன் வீட்டுக்கு போயிட்டு, அவங்க வீட்டுக்கு பக்கம் நிறைய இயற்க்கை இடம் இருக்காம், அங்கே ஒரு கொஞ்ச நாள் எஞ்சாய் செஞ்சிட்டு, இரண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு திரும்ப வரும் போது நேராக வத்தல் மலைக்கு போய் கையோட மாதவனை அனுப்பி வச்சிடலாம், இதான் பிளான் ஓகே தானே எல்லோருக்கும்”

ராதா தொடங்கி ஒரு நாள் கூட ஆகலை.. அதற்க்குள் அனுப்புவதை பற்றி பேசியதும் மனம் தொட்டா சினுங்கி போல சுருங்கியது மாதவனுக்கு.

ராதாவும் கிருஷ்ணாவும் தனது அறைக்குள் புகுந்து கொள்ள.

மாதவனுக்கு மனம் சிறிது நிறைந்ததாக தோன்ற நிம்மதியாக தூங்கினான்.

ராதாவும் கிருஷ்ணா அவர்கள் அறையில் இருக்கும் சேரில் எதிர் எதிராக அமர்ந்து இருந்த அமைதி மட்டுமே ஆட்சி செய்தது.

“மாமா சாரி…”

“போய் தூங்கு” கிருஷ்ணன் முகம் கூட அவள் புறம் திருப்பாமல் சொன்னான்.

“சாரி மாமா, இனி நான் கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின் டெயின் செஞ்சிக்கிறேன்”

“அறஞ்சனா வை, கழுதை என்னை என்ன அவ்வளவு கீழ நினச்சிட்டியா”

ராதா புரியாமல் கிருஷ்ணாவை பார்த்து வைத்தாள்.

“என்னாச்சி மாமா புரியலை. என்னைக்காவது புரியும் போல பேசி இருக்கியா பிசாசே”

“நீ அவனை கட்டி பிடிச்சிட்டு இருந்தாலும், எனக்கு உன் மேல சந்தேகம் வராது, ஆனா கோபம் கண்டிப்பா வரும்”

“எதே சந்தேகம் வராதா! டேய் தடியா புரியும்படி சொல்லி தொலையும்”

“நீ சேட்டை செஞ்சிக்கிட்டு சிரிச்சிட்டு இருக்கனும், சும்மா பழையதை நினைச்சிட்டு இருந்தா உன்ட பேச மாட்டேன் புரியுதா”

“அட இவ்வளவு தானா கிருஷ்ணா நான் கூட என்னவோ ஏதோ’ன்னு பயந்துட்டேன் தெரியுமா”

“சரி நீ தூங்கு போ”

“நீ தூங்கலையா”

“ம்ம்ம்.. வரேன் நீ போ” அவளை அனுப்பிவிட்டு பால்கனிக்கு வந்தவன் புகையை அடித்து தள்ளினான்.

மனதில் உள்ள ரணங்களை புகையை விட்டு கொஞ்சம் ஆத்தியவன், ராதாவின் குழந்தை முகத்தை பார்த்தவாறு படுத்தான்.

மனதில் இந்த மாதம் சீக்கரம் முடியனும் என்ற பிராத்தனையோடு.

அடுத்த நாள் கிருஷ்ணா சீக்கரமாக எழுந்து காப்பி போட்டான்.

மாதவனும் புதிய இடத்தில் சீக்கிரம் முழிப்பு தட்ட எழுந்து வந்தவன், காபி குடிக்க உள் நுழைய கிருஷ்ணா வெறுப்பாக வேலை பார்ப்பதை பார்த்து மனதில் மெச்சியவன்.

“காலை வணக்கம் கிருஷ்ணா”

‘வந்துட்டான் பெரிய இவன்’ கிருஷ்ணா அவனை சட்டை செய்யாமல் அடுத்த வேலை பார்க்க துவங்கினான்.

கிருஷ்ணா கூட குறுகிய காலம் பழகினாலும் நெருங்கிய நண்பனின் உணர்வுதான் ஏற்றப்பட்டது.

இந்த ஒதுக்கம் அவனது மனம் ஏற்கவில்லை, “கிருஷ்ணா உங்களுக்கு பிடிக்கலைன்னு புரியுது, நான் கிளம்பிடுறேன் ராதா எழுவதற்க்குள்”

“இந்த சிறு ஒதுக்கமே தாங்கிக்கொள்ள முடியலை இல்ல மிஸ்டர் மாதவன்” கிருஷ்ணன் ஒரு அர்த்தமுள்ள பார்வை பார்த்து வைத்தான்.

‘ஒரு வருசம் என் ராதாவின் நிலையை நீங்க நினைத்து கூட பார்க்கலையே’ கிருஷ்ணா தானே அவளது வலிகளை கண்கூடாக பார்த்தவன் ஆயிற்றே. அவளை மீட்டெடுக்க புரியாமல், தெரியாமல் இந்த திருமணத்தை வற்புறுத்தி செய்யும் போது அவன் பட்ட பாடு அவனுக்கு தான் தெரியும்.

“இந்தாங்க மாதவன் காபி குடிங்க, நேத்து நான் கொஞ்சம் அப்சட் அதான் உங்ககிட்ட பேச மனசு வரலை. நீங்க கை பிடிச்சதால வந்த கோபமில்லை இது” மாதவன் கேட்க தயங்கிய கேள்விக்கு பதிலுக்கு தானாக முன் வந்து பதில் சொன்னவன். ஹாலில் அமர்ந்திருக்கும் அனுக்கு ஒரு காப்பி கொடுத்துவிட்டு, ராதாவை எழுப்பி விட்டு வந்தான்.

மாதவனிடம் கிருஷ்ணன் இப்போது சாதாரணமாக பேசினார்.

மாதவன் கிருஷ்ணாவை பார்த்து வியந்தான், ‘இப்படி ஒரு மனிதன் இருக்க முடியுமா?’ என்று.


‘வித்யாசமானவன் அன்பானவன், அறிவானவன்.. அதையும் தாண்டி தன் மனைவியை பாசமாக பார்க்கும் கணவன் தான் அவளை கல்யாணம் செய்து இருந்தாள் கூட இப்படி பார்த்துக்கொண்டு இருந்திருக்க மாட்டேன்’ காபியை குடித்து முடிக்கவும், ராதாவும் தயாராகி வர.

“எல்லோரும் ரெடியா? கிளம்புங்க சேலம் போறோம்”

“என்ன திடிரென சேலம்”

“எனக்கு சேலம் போனும்னு டிரிம்ஸ்ல வந்தது பஸ்ல போக போறோம்”

“ராதா நீ ரசிகை டி” அனு தனது தோழியை மெச்சினாள்.

வீட்டிலிருந்து தேவையானதை எடுத்துக்கொண்டு காரை கிளப்பியவர்கள், செட்டில் காரை விட்டுவிட்டு பஸ் டான்டை நோக்கி நடந்தார்கள்.

இருவர் சீட்டில் ஆண்களும் பெண்களும் தனியாக உட்கார்ந்தார்கள்.

பஸ் பயணம் உற்ச்சாகமாக துவங்கியது, தொப்புர் துவங்கும் முன்பே ராதா தூங்கும் வேலையை சிறப்பாக துவங்கினார்கள்.

“அடிப்பாவி எஞ்சாய் செய்வான்னு இவ பக்கம் வந்தா சாகடிக்கரா தூங்கி” பொறுத்து பார்த்த அனு காண்டாகி.

“யோவ் பாஸ் உன் பொண்டாட்டி பக்கம் வந்து உட்காந்துக்கோ, நான் மாதவன் கூட பேசிட்டு வரேன்”

சீட்டை மாறி இருவரும் உட்கார அனு மாதவனுடன் பேச துவங்கினாள்.

“கண்ணா… என்னை ஏன்டா பிடிக்கலை சாரி இது இப்படி செய்ய மாட்டேன், இனி நீ சொல்லுறது கேட்டுக்கிறேன். ஃபோன் போட்டு தொந்தரவு செய்யமாட்டேன், என் கண்ணா… வா” வாயிக்கு வந்தது எல்லாம் பிதற்றிக்கொண்டு வர கிருஷ்ணா உடல் விறைத்தது. மாதவனை இப்போதே தூக்கிப்போட்டு மிதிக்கும் ஆத்திரம் வந்தது.

“ராதா எந்திரி, தண்ணி குடிச்சிட்டு படு”

“எனக்கு டிரீம்ல கண்ணா வரான் எனக்கு தண்ணி வேண்டாம்” கிருஷ்ணா அவளை வற்புறுத்தி குடிக்க வைத்தான். அதன் பிறகு தான் அமைதியாக படுத்தான்.

அனு பேசுவதில் மனம் நிலைக்காமல் ராதா தூக்கத்தில் உளறியது தான் அவனது காதில் எதிரெலித்தது.

மாதவன் கண்களை மூடி தன்னை சமன் செய்துகொண்டான்.
அடுத்த ஒரு மணி நேரம் ஆளுக்கு ஒரு எண்ணத்தில் மனம் போனது.

முதலில் இறங்கியவர்கள்…

“ராதா எந்த கடைக்கு போறோம்?”

“பார்பிக்கியூ’க்கு போறோம் சாப்பிட்டுட்டு அப்புறம் டிரஸ் எடுக்க போறோம்”

நேராக பார்பிக்கியூ வுக்கு போனார்கள்.

இந்த முறை மாதவனும் ராதாவும் ஒரு புறம் உட்கார எதிரே மற்ற இருவர் உட்கார.

மாதவன் தான் சங்கடமாக உணர்ந்தான்.

“கிருஷ்ணா நீங்க இங்கே வாங்க, நான் அங்கே உட்காருங்க”

“எதும் பிரச்சினை இல்ல உட்காருங்க மாதவன்”

இவர்களுக்கு ராஜ உபசரிப்பு தான் மேஜையில் காலி ஆக ஆக அடுக்கிக்கொண்டே இருந்தார்கள்.

நடுவில் அனலில் இருந்த மீனை எடுத்து… “மாதவன் சாப்பிடுங்க இது நல்லா இருக்கும் சாப்பிடு” மாதவன் மற்ற கறியை பெயருக்கு ருசி பார்த்தவன், மீனை வெளுத்து வாங்கினான்.

அதன் பிறது ஐஸ் கீரிம் குல்பி… என முடித்துவிட்டு வெளியே வந்தார்கள்.
 

Bindusara

Well-known member
Wonderland writer
10…காதலன்!

சாப்பிட்டு முடித்து வெளி வர மதியம் ஆனது, ராதா மாதவனை நல்லா சாப்பிட வைத்தாள்.

மாதவனுக்கு கனவில் கூட நடக்காது என நினைத்தது அனைத்தும் வரிசையாக நடந்துகொண்டிருந்தது.

“நல்ல சாப்பாடு…” அனு மெச்சினாள்.

“அடுத்து எங்கே போலாம்?”

“டிரஸ் எடுக்க போலாம்” ராதா சொல்லவும் கிருஷ்ணாக்கு இதயம் வெடிப்பது போலானது.

“ஆஆஆஆ… அடியே ராதா சரியான இம்சை டையார்டா இருக்கு பஸ் ஏறி ஊரை பார்க்க போலாம்’ன்னு நினைச்சா, திரும்ப ஆரம்பிச்சிட்டா”

“ஓய் கிருஷ்ணன் மணி இப்போ 12 தான் அகுது, நான் தேடுற டிரஸ் கிடைக்கற வரை நம்ம தர்மபுரி போகப் போரதில்லை” கைக்கட்டி பிடிவாதமாக நின்றாள் ராதா.

“கிழிஞ்சது… சரி நடந்து தானே போகனும் நடங்க”

“அடடே மாமா இப்போ தான், நம்ம வழிக்கு வந்து இருக்க, பிழைத்து போ”

“கழுதைய கட்டினா உதைப்பதை பொறுத்துக்க வேணும் இல்ல பழகவேணும். எனக்கு தான் என் நைனா எல்லாம் கத்துக்கொடுத்து இருக்காறே”

“ஹா ஹா தெரிந்தால் சரி தான்”

கண்ணில் படும் அனைத்து கடைக்கு உள்ளே நிழைந்து வெளியே வந்தாள், வண்ண வண்ண ஆடைகள் நிரம்பி வழிய.

“அண்ணா பியூர் பிளாக் இருக்கா?”

அந்த கடையில் பணிபுரிபவர்களும், நிறைய விதமான பிளாக் டாப்ஸ் எடுத்து போட.

“அக்கா இது இல்லை.. நான் கேட்டது பியூர் பிளாக்”

ஆண்கள் இருவரும் குழம்பி நின்றார்கள்.

“ஏன் மாதவன், உனக்கு எதாவது தெரியுமா இது பத்தி”

“எது பத்தி கிருஷ்ணா”

“அதான் ஏதோ, பியூர் பிளாக்காம், எனக்கு தெரிஞ்சது ஒரே பிளாக்தான், கருப்பு அவ்வளவுதான் அதுவே கருப்பு இதில் என்ன பியூர்’ன்னு எனக்கு தெரியலை சாமி”

“எனக்கும் தெரியலை கிருஷ்ணா.. எதேதோ சொல்றாங்க எனக்கு தெரிஞ்சது செவன் கலர்ஸ் தான், பிளாக்குக்கே இத்தனை அலும்பல் செய்றாங்க.. மத்த கலருக்கு என்னென்ன இருக்கோ. இனி இவங்க டிரஸ் கடைக்கு வரும் போது எப்படியாவது தலை மறைவா ஆகிடனும். சாதாரணமாகவே ராதா செய்வது எனக்கு மண்டை காயும் இதில் இது வேற”

“ராதா, அனு ஏதோ ஒரு பிளாக் எடுத்துட்டு வாங்க எல்லாம் ஓரே கலர் தானே”

“எது எல்லாம் ஓரே கலர்ரா…” இரு பெண்களும் ஒருவர் மாற்றி ஒருவர் முகத்தை பார்த்து.

“பிளாக்ல அபிசியல் கலர் எத்தனை தெரியுமா?” ராதா கேட்க அதை தொடர்ந்து.

“மொத்தமா 134 பிளாக் செட்ஸ் இருக்கு அதுவாது தெரியுமா”

“ஏதே 134 ஆஆஆஆ” இரு ஆண்களும் வாயை பிளந்து நின்றார்கள்.

வாங்க விளக்கமா சொல்லுறேன், இரு பெண்களும் வரிசையாக பரப்பி வைத்திருந்த கரு நிற ஆடைகளின் புறம் திரும்பி.

இது “ebony”
இது “crow”
“charcoal”
“midnight”
“ink”
“oil”
“grease”
“pitch”
“jet black”
“coal”
“metal”
“spider”
“leather”
இரு பெண்களும் மாறி மாறி அந்த கருப்பின் நிறத்தை சொல்ல, கடையில் வேலை பார்க்கும் அனைவரின் பார்வையும் இவர்கள் மீது தான் இருந்தது.

இருவரும் கருப்பை பிரித்து சொன்ன விதத்தில்.

கிளாப்ஸ் சத்தம் அந்த தளத்தையே அதிர வைத்தது.

“நன்றி… நன்றி” இரு பெண்களும் வெளிநாட்டு பாணியில் தலையை சற்று தாழ்த்தி சொல்ல.

அனைவரும் இரு பெண்களை மெச்சும் பார்வை பார்த்தார்கள்.

சிறிது நேரத்தில் அங்கிருந்த கூட்டம் களைந்தது.

“இது சும்மா சேம்பிள் தான்… இன்னும் நிறைய பிளாக் இருக்கு, ஒரு விஷயம் தெரியுமா எல்லா கலரின் பெயரும் தெரியாது. ஆனா பிரித்து பார்க்க முடியும் எங்களால அதான் பெண்கள்.

“raven black இதை தான் தேடிட்டிருக்கோம், அதான் அண்டங் காக்கா கலர். அது தான் நல்லா கருப்பா இருக்கும், என்னோட பேவரைட் கலர்”

‘நமக்கு எல்லாம் கருப்பு பிடிக்கும் சிவப்பு பிடிக்கும்’ன்னு சொல்லுவோம். இந்த அறிவாளி அந்த கலர்லையே தரம் பிரித்து அதில் ஒன்னு பிடிக்கும்’ன்னு சொல்லுது சூப்பர்’ கிருஷ்ணா மெச்சுதல் போல சொல்லி கலாய்த்தான்.

மாதவனும் கிருஷ்ணாவும் பல மணி நேரம் ஏதோ பேசி கலைத்தவர்கள் போல எச்சையை கடினப்டு விழுங்கினார்கள்.

“கிருஷ்ணா ஜூஸ்”

“ஏம்பா உங்க கடையில் ஜூஸ் எல்லாம் கொடுக்க மாட்டிங்களா, அந்த இரண்டு தெய்வத்துக்கு கொடுங்கபா. பாவம் பெரிய சொற்பொழிவு எல்லாம் நடத்தி இருக்காங்க”

“சரிங்க சார்” என்று கடையின் முதலாலியே ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தார்.

“விளங்கும்… இவளுங்க கலர் பேர் சொல்லி முதலாலியையே கவுத்துட்டாங்க”

“சரி எதாவது எடுத்துட்டு வாங்க, இவ்வளவு நேரம் கலைத்து போட்டத்துக்கு கூலியா”

“சரி நாங்க வேற கடை பாத்துக்கறோம், உங்களுக்கு சட்டை எடுக்கலாம் வாங்க”

இருவருக்கும் அவள் தேடி வந்த கலர் கிடைத்தது, இரண்டு சட்டை எடுத்ததும் காக்கி கலர் பேண்டையும் சேர்த்து எடுத்தார்கள்.

கடையில் இவர்களுக்கு மட்டும் 70% டிஸ்கவுன்ட்.

“ஒரு கலர் பத்தி பேசியதுக்கு இவ்வளவு டிஸ்கவுண்டா” இரு பெண்களும் அடுத்த கடைக்கு போக அங்கேயும் செட் ஆக வில்லை.

கடைசியாக ஒரு சிறிய கடைக்குள் நுழைய அவர்கள் தேடி வந்த கருப்பு கிடைக்கவும்‍, இரு பெண்களும் ஒரு போல எடுத்து.

ஆண்களுக்கு மேச்சாக காக்கி ஜெகின்ஸ் எடுத்துக்கொண்டு.

செல்வி மெஸ்சில் இரவு உணவு முடித்துக்கொண்டு பஸ் ஏறினார்கள்.

“இந்த டிரஸ் எப்போ போடுறது?” கிருஷ்ணா கேட்க.

“வத்தல் மலை போகும் போது போட்டுக்கலாம்” தர்மபுரியில் ஒரு தெருக்கள், ஒரு டிபார்ட்மென்ட் என கடை கடையாக அடுத்த ஒரு வாரம் திரிந்தார்கள், நால்வரும்.

“ராதா டயார்டா இருக்கு இரண்டு நாள் நான் ரெஸ்ட், தலை பயங்கரமா வலிக்குது”

சரி வா இப்படி உட்காரு காரில் உள்ளே உட்கார சொல்லிய ராதா தலையை பிடித்துவிட்டாள்.

“இப்போ ஓகேவா மாமா”

“இப்போ பரவாயில்லை, ஆனா முழுசா சரி ஆகலை எதாவது ஜூஸ் வாங்கிட்டு வா”

“ஜூஸ் குடிகச்சா இன்னும் தான் தலை வலிக்கும் வாங்க. ஒரு இடத்துக்கு போலாம் தலை வலி பத்து நிமிசத்தில் போயிடும்”

“அதுக்கு அப்புறம் கார்ட் போர்ட் கொஞ்சம் வாங்கனும், வரைய. ஒரு நாலு நாளைக்கு நம்ம நாலு பேரும் பெயின்ட் செய்யலாம்”

கிருஷ்ணா ராதா நெருங்கி உட்காரும் போது மாதவனுக்கு எதோ போல ஆகும். மாதவன் மிகவும் சிரமப்பட்டு தன்னை கட்டுப்படுத்தினான்.

கிருஷ்ணா துடிப்பதும், கிருஷ்ணாக்கு ஒன்னுனா ராதா துடிப்பதை பார்த்து மாதவன் இருவரையும் வாழ்த்தினாலும், ஒரு மனம் பொறாமையில் தான் பார்த்தது. வயிறு எரிந்தது என்றே சொல்லலாம்.

இப்படி நினைக்க கூடாது என்று அவள் எவ்வளவு முயற்சி செய்தும் கல்லாகி போன அவனது மனது சொல் பேச்சை கேட்கவில்லை.

மனதை திசை திருப்ப அனுவுடன் பேசிக்கொண்டே வந்தான்.
 
Status
Not open for further replies.
Top