அத்தியாயம் - 19
ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் குடிக்க ஜூஸ், சாப்பிட ஸ்நாக்ஸ் என அனைவரின் கவனிப்பில் தன் குடும்பத்தின் நினைவு வர...அவள் சிறிதாக முகம் வாடினாலும் உடனடியாக அவளை மாற்றும் பொருட்டு குழந்தைகள் தங்கள் புறம் அவளின் கவனத்தை திருப்ப சின்ன சின்ன சேட்டைகள் செய்ய... அது சரியாக வேலை செய்த்தது. அவளும் தன் சிந்தனையிலிருந்து மீண்டு அவர்களோடு இணைந்து கொள்வாள்.
அன்றிரவு அவளை தனிமையில் விடாமல் அவளுடன் சென்று படுத்துகொண்டார் ராதிகா. "நான் தனியாவே படுத்துகிறேன்" என்றவளை கண்டு…."இன்னும் கொஞ்ச நாளைக்கு என்னோட அட்ஜஸ்ட் பண்ணிக்கோம்மா,கல்யாணத்துக்கு அப்பறம் மேல உன் புருஷன் ரூம்ல படுத்துக்கலாம்" என சிரித்துகொண்டு சொல்ல, வெட்க்கத்தில் முகம் சிவந்தவளை,படுக்க செய்து சிறுகுழந்தைப் போல தட்டிக்கொடுக்க...தன் தாயை அவர் உருவில் கண்டவள் நிம்மதியாக உறங்கிபோனாள்.
அடுத்த நாள் இவன் மட்டும் செங்கல்பட்டு நோக்கி சென்றவன். செம்பாக்கம் அருகிலுள்ள சிறிய கிராமத்தில் நுழைந்தான்.
ஒரு ஓட்டு வீட்டின் முன் தன் வண்டியை நிறுத்திவிட்டு கதவை தட்ட…. கதவை திறந்த பெண்மணி ஒருநிமிடம் இவனை யாரென்று தெரியாமல் குழம்பியவர்,பின் தெளிந்து "உள்ள வாங்க தம்பி" என அழைத்து நாற்காலியை போட்டு அமரவைத்தார்.
"எப்படி இருக்கீங்க ?...உங்க கணவருக்கு சரியாயிடுச்சா" என்க, "இப்போ பரவாயில்ல தம்பி...பெரிய அய்யா தான் எல்லா செலவையும் பார்த்துக்கிட்டார்,அவருக்கு போய் இப்படி நடந்ததைதான் என்னால ஜீரணிக்கவே முடியலை" என முந்தானையை வாயில் வைத்து அழுதார் காமாட்சி... கார்த்திகா விட்டில் பார்த்திபனும் முன் வேலை செய்தவர்.
அவரை அழுகையில் இருந்து மீட்டவன்,தான் வந்ததன் நோக்கத்தை சொன்னான்.
"நீங்கதான் சுமார் பத்து வருஷத்துக்கு மேல அங்க வேலையில் இருந்திருக்கீங்க... இந்த கொலையெல்லாம் நடக்குறதுக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு நாள் அந்த வீட்டுக்கு ராஜிவ் கிருஷ்ணான்னு ஒருத்தர் வந்திருக்கார், அன்னைக்கு என்ன நடந்தது...அன்னைக்கு நடந்த சம்பவம் தான் இத்தனை கொலைக்கும் காரணம்" என்றவன் பதிலுக்காக அவர் முகம் பார்க்க,
அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தவரை களைத்தவன், "சொல்லுங்க" என்க...அவரோ "அன்னைக்கு நடந்த சம்பவமாக இத்தனை கொலைக்கு காரணம்" என்றவர், அனைத்தையும் சொல்ல தொடங்கினார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு
அன்று காலை வழக்கம் போல கார்த்திகா வேலைக்கு சென்றுவிட...கார்த்திக் வெளியே சென்றுவிட்டான்.
சற்று நேரத்தில் பெரிய ஆடிக்கார் வீட்டினுள் நுழைய...அதிலிருந்து இறங்கியவர்கள் கையில் தாம்பூலத் தட்டுடன் உள்ளே நுழைந்தனர்.
யாரென்று தெரியாத போதிலும் தமிழர்களின் பண்பாட்டை பின்பற்றி வந்தவர்களை வரவேற்று அமரசெய்தவர்...தானும் அமர்ந்து, "தப்பா நினைக்காதீங்க நீங்க எல்லாம் யாரு ?..இதுக்கு முன்னாடி உங்கள நான் பார்த்ததே இல்லையே" என கேட்க,
"தமிழ்நாட்டிலேயே என்ன பார்த்து யாருன்னு கேட்ட முதல் நாள் நீங்கதான்' என சினிமா வசனம் பேசியவர், நியூஸ்பேபர் எல்லாம் படிக்கிறது இல்லையா... ஐயம் ராஜீவ் கிருஷ்ணா…. கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ், சாப்ட்வேர் சொல்யூஷன், ரியல் எஸ்டேட் இப்படி நாங்க கால் பாதிக்காத ஃபீல்டே இல்ல. தமிழ்நாடு,இந்தியா மட்டும் இல்லை, இன்டர்நேஷனல் லெவல்ல நம்பர் ஒன் பிஸ்னஸ் மேன்" என்றார்.
பெயரைக் கேட்டதுமே அவரை பற்றி தெரிந்துகொண்டவர்…இப்படிப்பட்ட கோடீஸ்வரர் தங்களது வீடு தேடி அதுவும் கையில் தாம்பூலத்தட்டுடன் வந்திருக்கிறார் என்றால் அதன் காரணம் அறியாமல் இருக்க அவர் ஒன்றும் குழந்தையில்லையே.
தங்களிடம் பெண் கேட்டு வந்திருக்கிறார் என தெரிந்த போதும் எதையும் காட்டிக்கொள்ளாமல்... "உங்கள பத்தி நிறைய கேள்விப்பட்டு இருக்கேன் என்றவர்... எங்க வீட்டுக்கு எதுக்காக வந்திருக்கீங்க?" என்க,
"எல்லாம் நல்ல விஷயம் தான். இது என் பையன் கிருஷ்ணா, அவனுக்கு உங்க பொண்ணு கார்த்திகாவை கேட்டு வந்து இருக்கோம்" என்றார்.
"நாங்களும் எத்தனையோ பொண்ணுங்க எங்க வசதிக்கு ஏத்த மாதிரி பாத்தோம்.. ஆனா அவனுக்கு யாரையுமே பிடிக்கலைன்னு சொல்லிட்டான்.
உங்க பொண்ண பார்த்தவுடனேயே லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான். அதுவும் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியிருந்தே லவ் பண்ணிட்டு இருக்கான்.
என்னோட மொத்த சாம்ராஜ்யத்துக்கு இவன்தான் ஒரே வாரிசு. அதனால அவனோட ஆசையை நிறைவேத்தனும்னு ஒரே காரணத்துக்காக தான்... உங்க பொண்ணை என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்" என்றார்.
"சாரி சார்...சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க...என் பொண்ணுக்கு ஆல்ரெடி வேற ஒரு பையனோடு கல்யாணம் பேசி நிச்சயம் பண்ணியாச்சு" என்றார் ஹரிஹரன்.
"உங்ககிட்ட உங்க பொண்ண கல்யாணம் பண்ணி கொடுங்கணு கேட்க வரல….கல்யாணம் பண்ணி கொடுத்து தான் ஆகணும்னு சொல்ல வந்தேன்" என்றவர்,
"என்ன பத்தி உங்களுக்கு சரியா தெரியாது…. பெர்சனல் லைஃபா இருக்கட்டும், பிஸ்னஸா இருக்கட்டும் நான் என்ன நினைக்கிறேனோ அது தான் நடக்கணும், நீங்க நினைக்கிறது எல்லாம் இங்க ஏத்துக்க முடியாது" என்றார்.
அதுவரை தங்களை விட பெரிய இடம் என அமைதியாக இருந்தவர், இவரின் திமிரான பேச்சை கேட்டு கோபமடைந்து "நீங்க எவ்ளோ பெரிய ஆளா வேணா இருக்கலாம், அதுக்காக எல்லாம் எங்களால பயந்துட்டு இருக்க முடியாது' என்றவர் எனக்கு என் பொண்ணோட வாழ்க்கை தான் முக்கியம், அவளுக்கு பிடிக்காத ஒரு வாழ்க்கையை ஒருபோதும் அமைத்து தரமாட்டேன்… என்னோட உயிர் இருக்கிற வரைக்கும் நீங்க நினைக்கிறது நடக்காது" என்றார் கோபமாக.
"நான் நினைக்கிற விஷயம் நடக்குறதுக்கு உங்க உயிர்தான் தடையா இருக்குன்னா அதை எடுக்க கூட நான் தயங்க மாட்டேன்" என்றவர்,
"என்னோட முடிவுக்கு நீங்க ஒத்துப்போனால் இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கும் இல்லன்னா நீங்க யாருமே இல்லாத அனாதையா உங்க பொண்ணோட கல்யாணம் நடக்கும், எப்படி வசதி" என்றார் ராஜீவ் கிருஷ்ணா.
"என்ன உயிர் பயம் காட்டுறீங்களா ? இதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்,உங்களால முடிஞ்சதை பாத்துக்கோங்க. எனக்கு என் பொண்ணோட வாழ்க்கை தான் முக்கியம்" என்றார் இவரும் விடாப்பிடியாக.
"அவசரப்படாதீங்க மிஸ்டர்... உங்களுக்கு இன்னும் பத்து நிமிஷம் டைம் தரேன், நல்லா யோசிச்சு முடிவு எடுங்க. இல்லன்னா நிறைய பின் விளைவுகளை அதாவது உயிர் பலியை சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்றவர்... எனக்கு கொலை பண்றது ஒன்னும் புதுசு இல்ல, பிஸ்னஸ்க்காக எவ்வளவோ கொலை பண்ணி இருக்கேன். என் பையனுக்காக இதை பண்ணமாட்டேனா" என்றார்.
தான் இவ்வளவு சொல்லியும் தங்கள் முடிவில் நிலையாக இருந்தவரை பார்த்து…. "உங்களுக்கு ரொம்ப தைரியம் தான் மிஸ்டர், உங்க தைரியத்தை பாராட்டுகிறேன் என்றவர்... ஆனா பாவம் உங்க பொண்ணு இவ்வளவு சீக்கிரம் அனாதையாக தேவையில்லை. எல்லாம் விதி" என்றவர் தங்கள் குடும்பத்தோடு வெளியே சென்றார்.
சிறிது தூரம் சென்று பின் திரும்பி பார்த்தவர் "என் குடும்பத்து முன்னாடி என்னோட வார்த்தைக்கு மதிப்பளிக்காமல் என்னை அவமானப்படுத்தியதற்கு உங்களை சும்மா விடமாட்டேன், ஏன்டா இவனை பகைச்சோம்னு ஒவ்வொரு நிமிஷமும் துடிதுடித்து சாக வைக்கிறேன்" என்றார் வன்மம்மாக.
அனைத்தையும் சொல்லிவிட்டு அழுதவரின் முன் தன்னிடம் உள்ள கிருஷ்ணா குடும்பத்தின் புகைப்படத்தை காட்ட …."இவங்க தான் சார் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு" என்றார் காமாட்சியம்மாள்.
அவரிடமிருந்து அனைத்து தகவலையும் பெற்றவன், "சாட்சி சொல்ல கோர்ட்டிற்கு வரவேண்டும்" என்பதை வழியுருத்தியவன், ரவீந்திரனை தொலைபேசியில் அழைத்து இவர்களை பாதுகாப்பான ஒரு இடத்திற்கு மாற்ற சொல்லிவிட்டு அவர்களிடமிருந்து விடைபெற்று சென்றான்.
அனைத்து ஆதாரத்தின் படி கொலை செய்தது கிருஷ்ணா என்பதும் அதற்கு உறுதுணையாக இருந்தது அவனின் தந்தை ராஜீவ் கிருஷ்ணா என்பதும் தெள்ளத் தெளிவாக புரிய…. இருப்பினும் அவர்களை இப்போது எதுவும் செய்ய கூடாது என்பதில் தெளிவாக இருந்தான்.
இப்போது என்ன செய்தாலும், அவர்கள் வெளியே வர அல்லது சாட்சியை கலைக்க வாய்ப்பிருப்பதால்... கோர்ட்டில் நேரடியாக அனைவர் முன்னிலையிலும் உண்மையை உரைக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தப்பிக்க எந்த வழியும் இருக்காது என நம்பியவன்... அந்த நாளுக்காக காத்திருக்க தொடங்கினான்.
பின்னர் அனைத்து வேலையும் முடித்து வீட்டிற்கு செல்லவே இரவு பத்து மணியை கடந்திருக்க... உணவை முடித்தவன் கார்த்திகாவின் அறையை திறந்து பார்க்க... அவள் உறங்கிக் கொண்டிருப்பதை உறுதி செய்தவன், தன் அறைக்கு சென்றான்.
இரவு 12 மணி வரைக்கும் நிலுவையிலுல்ல வேலையை செய்து கொண்டிருந்தவன், மணி நள்ளிரவை கடந்தும் தூக்கம் வராததால் மொட்டை மாடிக்கு செல்ல….
அங்கு இருளை வெறித்துக் கொண்டு நின்றிருந்த கார்த்திகாவை பார்த்து, யோசனையோடு அருகில் சென்றவன் அவள் தோளில் கை வைக்க…. பயத்தில் அதிர்ந்து திரும்பியவளை பார்த்து "நான்தான் பயப்படாதே என்றவன்... இவ்வளவு பயம் இருக்கிறவ எதுக்கு இந்த அர்த்தராத்திரியில் மாடிக்கு வந்த" என்றவன் அப்போதுதான் அவள் முகம் பார்க்க... அதுவோ அழுது வீங்கியிருந்தது.
அவளை என்ன சொல்லித் தேற்றுவது என அறியாமல் அவளை இழுத்து அணைத்தவன் "போதும் நிலா இன்னும் எத்தனை நாள் தான் அதையே நினைத்து அழுதுட்டே இருப்ப" என்க….அவளோ அழுவதற்கு நல்ல இடம் கிடைத்தது என்பது போல் அவன் மார்பில் சாய்ந்து கதறி அழ தொடங்கினாள்.
"எனக்கு அம்மா வேணும், அப்பா வேணும்" என சிறு குழந்தை போல் தேம்பித் தேம்பி அழுதவளை எப்படி சமாளிப்பது என குழம்பி போனான்.
அவள் வேறு எதை கேட்டிருந்தாலும் வாங்கி கொடுத்திருப்பான் ஆனால் அவள் கேட்பது…'அம்மா அப்பாவை' பணத்தினால் குழந்தையைக் கூட வாங்கக்கூடிய நவீன உலகத்திலும் தாய்த் தந்தையையும் அவர்களின் அளவில்லா தூய்மையான அன்பை கடவுளால் கூட வாங்க முடியாதே என எண்ணியவன்….அவள் அழுவதை வேடிக்கை பார்க்கும் தன் நிலையை அறவே வெறுத்தான்.
சிறிது நேரம் அழ அனுபவித்தவன், பின்னர் அப்படியே சுவரில் சாய்ந்து கீழே அமர்ந்தவன்...அவளை தன் மடியில் தலைவைத்து படுக்க வைத்து,முதுகை வருட தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தவள், அவன் வருடலில் அப்படியே தூங்கிப் போனாள்.
அவனும் அப்படியே சாய்ந்து உறங்க….அதிகாலையில் முதலில் கண்விழித்து மணியை பார்க்க அதுவோ நான்கு முப்பது என காட்டியது.
அன்று போல் இன்றும் குழந்தையைபோல் அவளை கையில் ஏந்திக்கொண்டு படிகளில் இறங்கி அவளின் அறையில், தன் தாயின் அருகே மெதுவாக படுக்க வைத்து போர்வையை இழுத்து போர்த்திவிட்டு வெளியே வந்தான்.