ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தேவதை வம்சம் நீயோ - கதை திரி

Status
Not open for further replies.

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 14

அதற்குப் பின்பும் இருமுறை எதர்ச்சையாக சந்தித்தபோது வைஷாலி அவனிடம் பேச முற்பட... அவனோ ஒரு அந்நிய பார்வையோடு விலகி சென்றான்.
அவன் சாதாரணமாக பேசியிருந்தால் எப்படியோ... ஆனால் அவன் விலகி செல்ல செல்ல அவன் நினைவு இவளுக்குள் அதிகமாக நெருங்கியது.

இந்த காதலில் மட்டும் எல்லாமே தலைகீழாக தான் இருக்கும் போல….
எப்போதுமே நம்மை சுற்றிச்சுற்றி வருபவர்களை விட நம்மை விட்டு விலகி செல்பவரை தான் மனம் அதிகம் நாடுகிறது.

அவன் விலகலே அவளுள் காதலாக மாற…. பொறுமை இழந்தவள் ஒருநாள் அவனை காண போலீஸ் ஸ்டேஷனுக்கே சென்றுவிட்டாள்.

தன் எதிரில் அமர்ந்து தன்னையே வெறித்துக்கொண்டு இருப்பவளை பார்த்து "என்ன விஷயம்?.. ஏதாவது கம்ப்ளைன்ட் கொடுக்க வந்தீங்களா?.." எனக் கேட்க, அவளோ ' ஆமாம் ' என
தலையசைத்து "ஒரு பையன் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றான், அவன் மேல தான் கம்ப்ளைன்ட் கொடுக்கணும்" என்றாள்.

"அவன் யார்?... என்னன்னு... ஒரு கம்ப்ளைன்ட் எழுதிக் கொடுங்க. நாங்க விசாரிக்கிறோம்" என்றவனை பார்த்து "கண்ணாடி முன்னாடி போய் நின்னு பாருங்க... அது யார்ன்று உங்களுக்கே தெரியும்" என்றாள்.

"எக்ஸ்க்யூஸ் மீ.. மைன்ட் யுவர் வேர்ட்ஸ். நான் உங்கள என்ன டிஸ்டர்ப் பண்ணேன், என் மேல புகார்க் கொடுக்க... எங்கிட்டயே வந்திருக்கீங்க" என்றவனை பார்த்து

"என்ன பண்ணல? என்ன பண்ணலன்னு கேட்கிறேன் என்றவள்…. எதுக்கு என்னை அவாய்டு பண்றீங்க, எனக்கு பதில் தெரிஞ்சாகணும்" என்றாள்.

"நமக்கு நடுவுல என்ன இருக்கு? உங்கள அவாய்டு பண்ண' என்றவன், நீங்க கிளம்பலாம். எனக்கு நிறைய வேலை இருக்கு" என்றவன் வாசலை நோக்கி கைகாட்ட…. அவன் கையை தட்டிவிட்டவள், "உங்களுக்கு ஒண்ணுமே இல்லாம இருக்கலாம்... ஆனா எனக்கு எவ்வளவோ இருக்கு "பிகாஸ் ஐ லவ் யூ" என்றாள்.

"நீங்க என்கிட்ட எப்பவும் போல பேசி இருந்தீங்கன்னா... இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை" என்றவள், பதிலுக்காக அவன் முகம் பார்க்க... "சாரி எனக்கு இந்த காதலில் இன்ட்ரஸ்ட் இல்லை என்றவன், யூ கேன் கோ" என்றான்.

"இப்படி சொல்லியே ரொம்ப நாள் தப்பிக்க முடியாது பாஸ்….பார்க்குறேன் இன்னும் எத்தனை நாள் இந்த வேஷம்னு" என்றவள் எழுந்து சென்றாள்.

அனைத்தையும் ஹர்ஷாவிடம் சொல்லியவன்... "இதுதான் சார் நடந்தது எங்களுக்குள்" என்றான்.

"கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க... உங்களுக்கு ஏன் வைஷாலியை பிடிக்கலை "என்றவனை பார்த்து,

"பிடிக்காம இல்ல சார்... பிடிக்கும் அத சொல்ல தான் தயக்கமா இருக்கு. நமக்கு இந்த காதல் எல்லாம் செட்டாகுமானன்னு ஒரு சின்ன குழப்பம் அவ்வளவுதான்" என்றான்.

அசோக் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ஹர்ஷா தனது மொபைலை எடுத்து "என்னமா இப்போ எல்லாம் கிளியர் ஆயிடுச்சா.. அவனுக்கும் உன்ன பிடிச்சிருக்காம், சொல்லதான் தயக்கமாம்…. இந்தா அவங்கிட்டயே பேசிக்கோ" என்றவன் மொபைலை அசோக்கிடம் நீட்ட... "சார் என்ன சார்... இப்படி பண்ணிட்டீங்க?" என சொல்லிக்கொண்டே மொபைலை எடுத்து காதில் வைக்க,

அந்த பக்கமிருந்து... "பொறுக்கி, இடியட்... நீ ஒரு போலீஸ்ன்னு வெளிய சொல்லிடாத. ஒரு லவ்வ சொல்லக் கூட தைரியம் இல்லை' என கன்னாபின்னாவென திட்டியவள்…. இப்போ சொல்லு" என்க… அவனோ "அப்புறம் சொல்றேன்,இப்போ ஃபோனை வை" என்றான்.

"அதெல்லாம் முடியாது இப்போவே சொல்லனும்" என பிடிவாதம் பிடித்தவளை…. "சரி வை நான் வரேன்" என சொல்லிவிட்டு போனை வைத்தான்.

ஜீப்பை காவல் நிலையத்தில் நிறுத்திவிட்டு இறங்கியவனை பார்த்த ஹர்ஷா…"நீங்க உங்க வண்டியை எடுத்துகிட்டு கிளம்புங்க அசோக்" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.

"இப்போ தைரியம் வந்துடுச்சா... இல்லை, இன்னும் வரலையா" என நக்கல் நக்கலடித்தவளை பார்த்து…. "உன் கிட்ட எல்லாம் இப்படி பயப்படுவேன் என்று நான் நினைச்சு கூட பாக்கல...

போலீஸ்னு கூட பயப்படாம அன்னைக்கு எதிர்த்து பேசுனியே அந்த தைரியம்தான் எனக்கு உன்கிட்ட பிடித்திருந்தது என்றவன், …. விஷ் யூ ஹாப்பி பர்த்டே அண்ட் லவ் யூ" என சொல்லியவனை சரமாரியாக அடித்தவள், "இதை முதல்லயே சொல்றதுக்கு என்ன?.." எனக் கூறிவிட்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

நாட்கள் அதன் போக்கில் செல்ல…. டெல்லியில் தொடர் குண்டு வெடிப்புகள், ஆயுதக் கடத்தல் மற்றும் பெரிய அரசியல் பிரமுகரின் கொலை என இந்திய தலைநகரத்தையே ஆட்டுவிக்கும் சம்பவங்கள் நடைபெற…அதனைத் தடுக்கவும் விசாரிக்கவும் ஒரு தனி குழு அமைக்க முடிவெடுக்கப்பட்டது.
வெவ்வேறு மாநிலங்களில் இருந்து திறமை வாய்ந்த போலீஸ் அதிகாரிகள் கொண்ட ஸ்பெஷல் டீம் நியமிக்கப்பட்டது. அதில் ஹர்ஷவர்தன் ஒருவனாக தேர்ந்தெடுக்கப்பட்டான்.

தன் எதிரில் அமர்ந்து அழுது கொண்டிருந்த கார்த்திகாவை பார்த்து…"இன்னும் எவ்வளவு நேரம் இப்படி அழுதுக்கிட்டே இருப்ப? ….வந்து ஒரு மணிநேரம் ஆகுது...நான் விஷயத்தை சொன்னதிலிருந்து இதையேதான் பண்ணிட்டு இருக்க என்றவன், நான் இன்னும் இங்க இருக்கப் போறதே ரெண்டு நாள்தான்…இந்த ரெண்டு நாளையும் உன் கூட ஹாப்பியா ஸ்பெண்ட் பண்ணனும்னு நெனச்சேன்,ஆனா நீ இப்படி அழுதுக்கிட்டே இருந்தா என்ன பண்றது" என்றவனை பார்த்து,

"உங்களுக்கு கொஞ்சம் கூட வருத்தமே இல்லையா,என்னை விட்டுட்டு போறதை நினைச்சு" என அழுது கொண்டே கேட்க...அழுது அழுது சிவந்து போன முகத்தை தன் கைகளில் தாங்கியவன் ...இரு கட்டை விரல்களை கொண்டு அவள் கண்ணீரை துடைத்தவன்…. அவளை இழுத்து இன்னும் தன் அருகில் அமர்த்தி கொண்டான்.

"எனக்கும் என் செல்லத்தை இங்கயே விட்டுட்டு போறதை நினைச்சு கஷ்டமா தான் இருக்கு, வேற வழியில்லையே ... நீயும் தினமும் நியூஸ் பாக்குற தானே, இப்படி ஒரு சிச்சுவேஷன் இருக்கும் போது நாம அமைதியா இருந்தா..
நம்ம நாட்டை நாமளே அழித்ததற்க்கு சமம்' என்றவன்…இந்த கேஸ் முடிஞ்ச உடனே திரும்பி வந்துடுவேன்" என உறுதியளித்தான்.

அவனும் டெல்லி சென்று விட.. இவள் தனது படிப்பில் முழு கவனத்தை செலுத்தினாள். தினம் இரவில் மொபைலில் ஒருமுறையாவது அவன் குரலைக் கேட்டுவிட்டே உறங்க செல்வாள். அவனும் எவ்வளவு வேலை இருந்தாலும் அவளிடம் பேசிவிட்டு தனது வேலையை செய்வான். இருவரும் இடையே அதிகதூரம் இருந்தபோதிலும் மனதளவில் மிக நெருக்கமாக உணர்ந்தனர்.

அன்று கார்த்திகாவின் பிறந்தநாள். அவன் சென்ற நான்கு மாதங்களுக்கு மேல் இருக்க .. அவனை காதலிக்க தொடங்கிய பின்வரும் முதல் பிறந்தநாள், அவன் உடன் இல்லாதது சற்று வருத்தத்தை கொடுத்தாலும்... தனது சின்ன முகமாற்றமே தன் பெற்றோர்களை கவலை கொள்ள செய்யும் என்றுணர்ந்தவள், மகிழ்ச்சியாக வளம் வந்தாள்.

அன்று விடுமுறை நாள் என்பதால் வீட்டிலேயே தன் நண்பர்கள் அனைவரையும் அழைத்து கேக் வெட்டி பர்த்டே கொண்டாடியவள் மனமோ தன்னவன் வாழ்த்திற்காக ஏங்கியது.

காலையிலிருந்து அவன் ஃபோன் காலுக்காக காத்திருந்தவள், அவனிடமிருந்து எந்த போனும் வராததால் கோபத்தின் உச்சியில் இருந்தாள்.

இரவு நல்ல உறக்கத்தில் தன் மொபைல் அலற... பெயரைக் கூட பார்க்காமல் அதனை ஏற்று காதில் வைத்தவள் "ஹலோ" என்க... எதிரில் கேட்ட குரலில் எழுந்து அமர்ந்தாள்.

"இப்போ எதுக்கு எனக்கு போன் பண்றீங்க?.." என கோபமாக கேட்க அவனோ "சாரி பேபி ஒரு முக்கியமான வேலை அதான் ஃபோன் பண்ண முடியல. ஹாப்பி பர்த்டே மை டியர்" என்க,

"பரவாயில்லையே என் பர்த்டே கூட தெரிஞ்சு வச்சிருக்கீங்க" என கோவமாக சொல்ல... அவனோ "நீ பேசறது எதுவுமே கேட்க மாட்டேங்குது.. விட்டுவிட்டு கேக்குது... சிக்னல் இல்ல நினைக்கிறேன்…. மாடிக்கு வந்து பேசு" என்றான்.

"அய்யயோ... இந்த நேரத்துலயா, எனக்கு பயமா இருக்கு…" என கூற, அவனோ திரும்பவும் ஒன்னும் கேட்கவில்லை என சொல்ல...தனது பயத்தை ஒதுக்கிவைத்தவள் மாடிக்கு சென்றாள்.

"இப்போ சரியா கேட்குதா" என மாடிக்கு சென்று கேட்க… அவனோ "கொஞ்சம் உனக்கு லெஃப்ட்ல திரும்பி பேசு சரியா கேட்கும்" என்றான்.

சட்டென்று திரும்பியவளுக்கு மிக அருகில் நின்றவனை பார்த்து அதிர்ந்தவள் பயத்தில் இரண்டடி பின்னால் செல்ல…. அவள் இடையில் கைத்தொடுத்து தன்னை நோக்கி இழுத்துக்கொண்டான்.

"என்னடி என்ன பேய் நெனச்சு பயந்துட்டியா?.." என அவள் கண்ணம் தட்ட…. "நிஜமாவே நீங்களா, என்னால நம்பவே முடியல. எப்போ அங்கிருந்து வந்தீங்க?.." என வரிசையாக கேள்வி கேட்டவளின் முகத்தை கைகளில் ஏந்தியவன் "எப்படி என் செல்லகுட்டியோட பர்த்டேவ மிஸ் பண்ணுவேன். ஒரு முக்கியமான வேலை, அதான் ஈவினிங் ப்ளைட்ல வந்தேன், இல்லனா நேத்தே வந்திருப்பேன்" என்றவன்,

அவள் கைப்பிடித்து தண்ணீர் தொட்டிக்கு செல்லும் படிகளின் மேல் ஏற…. "இப்ப எதுக்கு டேங்க் மேல" என்றவளை பார்த்து….தன் இதழ் மீது கைவைத்து 'பேசாதே' என தலையசைத்தவன் அவளை மேலே அழைத்து சென்றான்.

"ஆமா கேட்கணும்னு நினைச்சேன்... எப்படி நீங்க உள்ள வந்தீங்க" என்றவளை பார்த்து… "சுவரெறி குத்திச்சித்தான்" என்றான் அசால்டாக.

"செக்யூரிட்டி பார்த்திருந்தா என்ன ஆகுறது? அதுவுமில்லாமல் ஒரு போலீஸ் ஆபீஸர் இப்படி சுவர் ஏறி குதிக்கலாமா" என்றவளின் முகம்திருப்பி... "அங்க பாரு உங்க வாட்ச்மேன்னை, குடுத்துவச்சவரு ரேடியோவில் இளையராஜா சாங் கேட்டுட்டு நல்லா தூங்குறாரு. இப்படி தூங்கினா நான் மட்டுமில்ல, உங்க வீட்டில் திருடன் வந்து கொள்ளையடிச்சிட்டு போனா கூட தெரியாது. சரி விடு அதனால நமக்கும் கொஞ்சம் யூஸ்ஃபுல்லா தான் இருக்கு" என்றவன்.

"இப்படி உட்காரு" என தன் அருகில் உள்ள இடத்தைக் காட்டி சொல்ல, அவள் அமர்ந்தவுடன் அவளை ஒட்டி அமர்ந்தான். இத்தனை நேரம் இல்லாத தயக்கமும் பதட்டமும் இப்போது அவளுள் எழ…. அவளின் பதட்டத்தை உணர்ந்தவன், அவள் கையை பிடித்து…

"உன் பிறந்தநாள் முடிய இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு" என்றவன் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு வைர மோதிரத்தை எடுத்து அவள் விரலில் அணிவித்தான்.

"ரொம்ப அழகா இருக்கு"" என சொல்லியவளை பார்த்து "உன் பிறந்தநாளுக்கு எனக்கு ஏதும் இல்லையா" என கேட்க…"நீங்க இங்க இருப்பீங்கன்னு தெரியாது, அதனாலதான் எடுத்துட்டு வரலை'என்றவள்...நீங்க இங்கேயே வெயிட் பண்ணுங்க.. ஈவ்னிங் வெட்டின ஐஸ்க்ரீம் கேக் அண்ட் சாக்லேட் இருக்கு நா..ன் போய்க் எடுத்துட்டு வரேன் என கிளம்பியவளை கைப்பிடித்து தடுத்தவன்…"பன்னண்டு மணி ஆக இன்னும் ரெண்டு நிமிஷம்தான் இருக்கு. நீ கீழே போய்ட்டு வந்தா உன்னோட பர்த்டேவே முடிஞ்சிடும்…. அதனால எனக்கு இப்பவே வேணும்" என்றான்.

"இப்ப எங்கிட்ட என்ன இருக்கு?.." என்றவளின் முகத்தை கையில் ஏந்தியவன்... தனது பெருவிரலால் அவள் தலைவகிடில் இருந்து நேராக நெற்றி, மூக்கு என வந்தவனின் விரல் அவள் உதட்டில் தேங்கியது. தன் விரல்க்கொண்டு அவள் இதழை அழுத்தமாக வருடியவனின் செய்கையில் அவன் எண்ணம் புரிய...மெல்ல தலை கவிழ்ந்தவளின் முகத்தை நிமிர்த்தி அவள் இதழில் தன் இதழை அழுத்தமாக புதைத்துக்கொண்டான்.

முதலில் தயங்கி அவனை பிரிக்க முயன்றவள்... பின் அவன் இதழ் முத்தத்தில் மயங்கி.. அவன் தலைமுடிக்குள் விரலை விட்டு நெறித்தாள்.

கூந்தலில் நுழைந்த கைகள்
ஒரு கோலம் போடுதோ...
தன்னிலை மறந்த பெண்மை
அதைத் தாங்காதோ…
உதட்டில் துடிக்கும் வார்த்தை
அது உலர்ந்து போனதோ...
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ...
மங்கையிவள் வாய்திறந்தால் மல்லிகைப்பூ வாசம்...
ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்...
யாரிவர்கள் இரு பூங்குயில்கள்
இளங்காதல் மான்கள்….

என்ன சத்தம் இந்த நேரம்…..!


என இளையராஜாவின் இசை காற்றில் கசிந்து அவனை அடைய….பாடல் வரிகள் அவனின் வேகத்தை இன்னும் கூட்ட மீண்டும் மீண்டும் அவள் இதழ்த்தேனை அருந்தினான்.


 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 15

நீண்ட நெடிய முத்தயுத்தம் முடியாமல் தொடர்ந்து கொண்டே இருக்க... அவள் மூச்சுக் காற்றுக்காக திணறுவதை உணர்ந்தவன், அவளை தன்னிடமிருந்து பிரிக்க... கண்களை மூடி
வேகமாக மூச்சிழுத்து விட்டவளின் தடுமாற்றத்தை உணர்ந்து தன் மார்பில் சாய்த்துக் கொண்டான்.

அந்த அமைதியான இரவின் தனிமையும் நெருக்கமும் சூழலை அழகாக்க... அவள் நெற்றியில் முத்தமிட்டவன் மெல்ல கண்கள், மூக்கு கன்னம், என முத்தமிட்டுக்கொண்டே வந்து அவள் கழுத்தில் இளைப்பாறினான்.

அவன் மார்பில் சாய்ந்தவள் உணர்ந்த... இதயத்துடிப்பும் நெஞ்சுக் கூட்டின் வெப்பமும் தாலாட்டாக மாற... மெல்ல கண் அயர்ந்தாள்.

சிறிது நேரத்தில் அவளின் சீரான சுவாசத்தை உணர்ந்தவன் குனிந்து பார்க்க…. நல்ல உறக்கத்தில் இருந்தாள். பெண்கள் எப்போதும் தன்னைச் சுற்றி பாதுகாப்பையும் நம்பிக்கையும் உணர்ந்தால் மட்டுமே ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்வார்கள். அவளின் இந்த செயலே அவன் மீது அவள் கொண்ட நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வையும் சொல்ல... அவன் மனம் இறக்கைக்கையில்லாமல் பறந்தது.

மெல்ல அவளை தன் கைகளில் ஏந்தியவன், படிகளில் இறங்கி…. படிகளின் முடிவில்லுள்ள முதல் அறை அவளுடையது என அவள் சொல்லி கேட்ட நினைவில்…. அந்த அறையில் நுழைந்து அவளை படுக்கையில் கிடத்தினான்.

இருள் சூழ்ந்த அறையில் நைட் லாம்ப் வெளிச்சத்தில் சிறுகுழந்தையென தூங்கியவளை சற்றுநேரம் நின்று ரசித்தவன், போர்வையை எடுத்து அவள் கழுத்து வரை போர்த்திவிட்டவன்…. அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டுவிட்டு, வந்த வழியே திரும்பிச் சென்று விட்டான்.

அடுத்த நாள் மாலை விமானத்திலேயே டெல்லிக்கு சென்றவன் தான் அதன்பின் இப்போதுதான் வந்திருக்கிறான்.

அவளுக்கும் தனக்குமான முதல் சந்திப்பு, காதல் என அனைத்தையும் நினைத்து பார்த்தவனின் தூக்கம் வெகுதூரம் சென்றருக்க…. விடியலின் போது தன்னையும் அறியாமல் உறங்கிப் போனான்.

அடுத்த நாள் காவல்நிலையம் வந்தவன் ரவீந்திரனை அழைத்து… "நேத்து நான் கேட்ட டீடைல்ஸ் எல்லாம் எங்கே" என்க,

அவனோ "எந்த டீடைல்ஸ் சார்" என்றான்.

வந்த கோபத்தை அடக்கியவன் "நேத்து நைட் மாடியில் வாட்டர் டேங்க் பக்கத்தில் பார்த்த நபரை பற்றியும் அந்த விட்டை பற்றியும்" என்றவனை பார்த்து…"சாரி சார்... அது நைட்டு வீட்டுக்கு லேட்டா தானே போனோம் அதான் அசந்து தூங்கிட்டேன், இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாம் உங்க முன்னாடி இருக்கும்" என்றவன் அவன் திட்டுவதற்கு முன்பு சிட்டாக பறந்துவிட்டான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த நபரைப் பற்றி எல்லா தகவலும் அடங்கிய ஃபைலை அவன் முன் வைத்தவன்
"சார்...அந்த வீட்டில் மொத்தமே நான்கு பேர்தான் மாணிக்கம் சகுந்தலா என்ற தம்பதியினரும் அவர்களின் மகன்கள் ரமேஷ் ராகேஷ் என்ற இருவர் மட்டும்தான்…. நேத்து அவங்களோட பெரிய மகன் ரமேஷ் தான் மாடியிலிருந்திருக்கணும் ஏனென்றால் ராக்கேஷ் ஸ்கூல் போற பையன், ஹைட் வெயிட் வெச்சு பார்த்தா இவனாதான் இருக்கணும்" என அவன் போட்டோவை காட்ட, அதனை வாங்கி பார்த்தவன், "இப்போ அவன் எங்க இருக்கான் ? இன்னைக்கு எப்படியும் அவனை பார்த்தே ஆக வேண்டும்" என்றான்.

"அதற்கு ஏற்பாடு பண்றேன் சார்… அவன் எஸ்.ஆர்.வி காலேஜில் தர்ட் இயர் படிக்கிறான்" என்றவனை நோக்கி, "அந்த காலேஜில்லா" என யோசனையோடு சொல்லியவன்,

பின் "எப்படியும் காலேஜ் முடிய ஈவ்னிங் ஆகிவிடும் அதனால அவனை அதன்பின் பார்த்து கொள்ளலாம் …. இப்போ அந்த வீட்டில் வேலை செய்த வேலைக்காரர்கள் விசாரிக்கணும்னு சொன்னேனே அது என்ன ஆச்சு?" என கேட்க,

"எல்லாரும் வந்து இருக்காங்க சார்…. யாரை முதலில் அனுப்பவேண்டும்" என்றவனை பார்த்து "முதல்ல அந்த வீட்டு செக்யூரிட்டியைப் அனுப்புங்க" என்றான்.

உள்ளே நுழைந்த இருவரையும் அமர சொன்னவன் "உங்க பேரு என்ன?" என கேட்க, அவர்களோ…. என் பேரு கஜேந்திரன் என ஒருவரும் , என் பெயர் ராகவன் என மற்றொருவரும் கூறினர்.

"இதில் யாரு கொலை நடந்த அன்னைக்கு நைட் டியூட்டி பார்த்தது" என்க,
"நான்தான் சார்' என்ற ராகவன், மாசத்துக்கு ஒரு தடவை டியூட்டி மாறும்... காலையில ஒருத்தர் நைட் டியூட்டிக்கு ஒருத்தர்" என்றான்.

"அன்னைக்கு என்ன நடந்தது என்பதை சொல்ல முடியுமா?" என்க, அவரோ... காலையில் கதவைத் தட்டி பார்த்த சம்பவத்தையே சொல்ல….

"நான் இதப்பத்தி கேட்கலை மிஸ்டர்.ராகவன்... நைட் என்ன நடந்தது" என்றவனை பார்த்து…."சார் நீங்க என்ன?, என்னை சந்தேகப்படுற மாதிரி கேக்குறீங்க?..".என்றவரை பார்த்து,

"உங்கள சந்தேகப்படாம வேற யாரை சந்தேகப்பட சொல்றீங்க.. ஏன்னா அன்னைக்கு நைட்டு நீங்க மட்டும்தானே இருந்திருக்கீங்க. அப்போ உங்களுக்கு தெரியாம யாரும் உள்ளே போக வாய்ப்பே இல்லையே... பிறகு எப்படி இந்த கொலை நடந்திருக்கும்" என குரலை உயர்த்த,

"சார்... உண்மையாவே அன்னைக்கு யாருமே வரவில்லை" என்றவரை பார்த்து…"வரவேயில்லன்னு சொல்லாதீங்க, நீங்க பார்க்கலைன்னு சொல்லுங்க மிஸ்டர்... அதுதான் உண்மை" என்றான்.

"அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்... அந்த அஞ்சு பேரும் என்ன தூங்கிட்டு இருக்கும்போதே இயற்கையாவா செத்துப் போயிட்டாங்க…. இல்லையே எல்லோரையுமே கொடூரமா அடிச்சி, கத்தியால் குத்தி கொலை பண்ணி இருக்காங்க. அப்படியிருக்கும்போது அதெப்படி ஒரு சத்தமும் கேட்காமல் இருக்கும்… நிச்சயமா சத்தம் கேட்டுருக்கும், அது உங்க காதுல விழுந்திருக்காது" என்றான்.

"சார்... இப்படி அபாண்டமா பழி போடாதீங்க ? என்னவோ பக்கத்திலேயே இருந்து பார்த்த மாதிரி பேசுறீங்க?.." என கோபமாக கத்தியவரை பார்த்து "கத்துனா நான் சொன்னது இல்லைன்னு ஆகிடாது மிஸ்டர். ராகவன். அன்னைக்கு என்ன நடந்திருக்கும்னு நான் சொல்லவா…. ரேடியோவுல சத்தமா பாட்டு வச்சு கேட்டுருப்பீங்க, அந்த சத்தத்தில் அவங்க கத்துனது கேட்காமல் போய் இருக்கும். அப்புறம் பாட்டை கேட்டுட்டே தூங்கி இருப்பீங்க. அதனால யார் வந்ததையோ போனதையோ பார்த்திருக்க மாட்டீங்க" என்றான்.

அதற்கு அவரோ பதட்டமாக…"எனக்கு பாட்டு கேக்குற பழக்கமெல்லாம் இல்ல. அப்புறம் டியூட்டி டைம்ல தூங்கவே மாட்டேன்" என சொல்ல... அதற்கு சத்தமாக சிரித்த ஹர்ஷா "நீங்க பொய் சொல்ல சொல்ல உங்க மேல தான் சந்தேகம் அதிகமா வருது... தூங்குறது ஒன்னும் பெரிய குற்றமில்லை ராகவன், அதுக்காகவெல்லாம் உங்களை தூக்கி ஜெயில்ல போட மாட்டோம்" என்றவன்,

கஜேந்திரனிடம் திரும்பி "என்னை இதுக்கு முன்னாடி பாத்திருக்கீங்களா?.." என்க, அவரோ "பார்த்திருக்கேன் சார், ஒருதடவை அந்த வீட்டுக்கு" என சொல்லத் தொடங்கியவனை கைநீட்டி தடுத்தவன்,

"நான் வந்த நாளுக்கு முந்தைய நாள் நைட் டியூட்டி இவர்தானே பார்த்தாரு" என்க, ஆமாம் என தலையாட்டினார் கஜேந்திரன்.

"உங்களுக்கு ஒன்னு தெரியுமா' என ராகவனை பார்த்து கேட்ட ஹர்ஷா…நீங்க நைட் டியூட்டி பார்த்த ஒருநாள்...நானே அந்த வீட்டு சுவரேரி குத்திச்சிருக்கேன். உங்க ரேடியோல ஓடுன பாட்டு, அந்த வீட்டு மாடியில் கூட நல்லாவே கேட்கும், அந்த அளவுக்கு சத்தமா இருக்கும். நான் வந்ததும் தெரியாது போனதும் உங்களுக்கு தெரியாது... அந்த அளவுக்கு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்திங்க" என்றான்.

பயத்தில் முகமெல்லாம் வியர்க்க..இனி மேல் பொய் சொல்வது வேலைக்கு ஆகாது என உணர்ந்தவன் பயத்தோடு "சாரி சார்…. அது அன்னைக்கு தூங்கிட்டு தான் இருந்தேன் என்றவன்... ஆனா ரேடியோ போடவே இல்லை" என்றார்.

"அது அன்னைக்கு எப்பவும் போல ஒரு பதினோரு மணிக்கு பிளாஸ்க்குல இருந்த டீ குடிச்சேன். கொஞ்ச நேரம் கழிச்சி ரேடியோ போடணும்னு நினைச்சேன், ஆனா அதுக்குள்ளே தூங்கிட்டேன்... காலைல தான் எழுந்தேன்" என்றான்.


"எப்பவுமே டீ குடித்த உடனே தூங்கிடுவிங்களா?.." என்றவனின் கேள்விக்கு…"அப்படியெல்லாம் இல்லை சார்.. டீ குடிச்சு முடிச்சிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு தான் ரேடியோ போடுவேன்.அப்பறம் பாட்டு கேட்டே உட்கார்ந்திருப்பேன், அப்படியே தூங்கினாலும் அப்பப்ப எந்திரிச்சு அக்கம்பக்கத்துல பார்த்துட்டு தான் படுப்பேன். ஆனா அன்னைக்கு எந்திரிக்கவே இல்லை" என்றான்.

"அந்த டீயை எங்க வாங்குவீங்க என அடுத்த கேள்விக்கு செல்ல…."கடையிலெல்லாம் இல்ல சார், அங்க வீட்டிலேயே சமையல்காரன் போகும்போது ஒன்பது மணிக்கு பிளாஸ்கில் கொண்டுவந்து வச்சிட்டுப்போவான்" என்றார்.

"சரி.. அது என்ன சிசிடிவி புடேஜ் அங்கங்க ஸ்டக்காகி ஸ்டக்காகி இருக்கு" என்க…"அது கொலை நடப்பதற்கு இரண்டு நாளுக்கு முன்னாடியே... அது சரியா ஒர்க் பண்ணல சார்..அய்யாகிட்ட சொன்னேன்,அவரும் சர்வீஸ் சென்டருக்கு இன்பார்ம் பண்ணிருந்தார்" என்றான்.

"ஒரு கேமரா சரியில்லனா பரவாயில்லை ஆனா இருக்கிற 3 கேமரா ரெக்கார்டும் அப்படிதான் இருக்கு என்றவன், உங்களை தவிர வேற யாராவது செக்யூரிட்டி ரூம்குள்ள வருவாங்களா?.." என்க,

"வெளியாள் யாரும் வர மாட்டாங்க சார்...சமையல்காரன் மட்டும் மதியத்துக்கு மேல வந்து கொஞ்ச நேரம் உட்கார்ந்து என் கூட பேசிட்டு இருப்பான்" என்றார்.

"சரி... நீங்க கிளம்புங்க,ஏதாவது விசாரிக்கணும் என்றால் திரும்பவும் கூப்பிடுவோம்,எங்களுக்கு தெரியாம எங்கேயும் போக கூடாது" என சொல்லிவிட்டு அனுப்பியவன்,அடுத்ததாக டிரைவரை அழைத்து விசாரிக்க...அவனிடமிருந்து பெரிதாக அந்த தகவலும் இல்லாததால் அடுத்து சமையல்க்காரனை அழைத்தான்.

வந்தவனை அமரச் சொல்லி, "உங்க பெயர் என்ன? என கேட்க…"பார்த்திபன்" என்றான்.

"நீங்க வேலைக்கு சேர்ந்து எத்தனை நாள் ஆகுது" என்க...அவனோ "சுமார் மூன்று மாதங்களாக வேலை செய்றேன்" என்றான்.

"அன்று நீங்க வீட்டில் இருந்தவரை என்ன நடந்தது என்பதை சொல்லுங்க?" என்க…"புதுசா எதுவும் நடக்கல,எப்பவும் போல டின்னர் முடிச்சிட்டு ஒன்பது மணிக்கு என்னோட வீட்டுக்கு கிளம்பிட்டேன் சார்" என்றவனை பார்த்து,

"அப்போ கார்த்திகா
குடிச்ச பாலில் தூக்கமாத்திரை கலந்தது நீங்க தானே" என்க…."அய்யயோ சார் சத்தியமா நானில்லை,நைட்ல கார்த்திகாம்மா மட்டும்தான் பால் குடிப்பாங்க.தினமும் நான் தான் பால்கலந்து கொடுப்பேன். அதுக்கப்பறம் வாட்ச்மேன்க்கும் டீ போட்டு கொடுத்துட்டு போயிடுவேன்.
நான் எதையும் கலக்கல" என நீலிக் கண்ணீர் வடிக்க...சரிசரி எழுந்து போங்க என்றான்.

"ரவீந்திரன் அந்த சமையல்காரனை கொஞ்சம் தீவிரமாக கண்காணிக்க... அவ மேலே எனக்கு சந்தேகமா இருக்கு' என்றவன்...அவனை இதுக்கு முன்னாடி எங்கயோ பார்த்திருக்கேன். ஆனா எங்கனு தான் சரியா ஞாபகம் வரலை. இதுக்கு முன்னாடி அவன் எங்க வேலை செஞ்சான்,அவனைப் பத்தின எல்லா டீடைல்ஸ்ம் கலெக்ட் பண்ணுங்க" என்றான்.

"சார்.. டைம் ஆயிடுச்சு..நாம அந்த ரமேஷை விசாரிக்க போகணும்" என்க... சரி என எழுந்தவன் ரமேஷின் கல்லூரியை நோக்கி சென்றான்.



 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 16

காலேஜ் கேண்டீனில் தனது ஃப்ரெண்ட்க்காக காத்திருந்தவன் முன் வந்தமர்ந்த இருவரையும் பார்த்த ரமேஷ் "எக்ஸ்க்யூஸ் மீ சார், இங்கே என் ஃப்ரெண்ட் வருவாங்க... நீங்க வேற டேபிளில் போய் உட்காருங்க" என்க, "நாங்க உங்கள தான் பாக்க வந்தோம் ரமேஷ்" என்றான் ஹர்ஷா.

"நீங்க யாரு ?.. உங்களை இதுக்கு முன்னாடி நான் பார்த்ததே இல்லையே?... என்ன எதுக்கு பார்க்கணும்" என வரிசையாக ரமேஷ் கேட்க...அதற்கு அவனோ "என்ன ரமேஷ், எங்கள அதுக்குள்ள மறந்துட்டீங்களா' என இழுத்து கூறியவன் நேத்து நைட்டு மாடியில மறைந்திருந்து எங்களை பார்த்தீங்களே... இப்போ ஞாபகம் வந்திருச்சா... அது நாங்க தான்" என்றான்.

அவன் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த ரமேஷின் உடல் மொத்தமும் வியர்த்து வடிய... தனது பயத்தை மறைக்க முயன்றான்.அது அவனால் சுத்தமாக முடியாமல் போக... "இல்ல.. அது.. நான்... இல்லை.."என திக்கித்திக்கி பேசினான்.

அவன் பயத்தை உணர்ந்து "ரமேஷ் ஜஸ்ட் கூல்டவுன், வி ஆர் போலீஸ்" என தங்களை பற்றியும் வந்ததன் நோக்கத்தை பற்றியும் கூற... அதில் கொஞ்சம் தெளிந்தவன்,ஆனாலும் முழு பயம் தெளியாத நிலையில் "சார் பிளீஸ் எனக்கு ஏதும் தெரியாது,ஏதாவது பிரச்சனை வந்தா என்னோட படிப்பே ஸ்பாயில் ஆகிடும். என்னை விட்டுடுங்க' என கெஞ்சியவனை பார்த்து,

உனக்கு இதனால எந்த பிரச்சனையும் வராது அதுக்கு நாங்க பொறுப்பு ... முதல்ல நேத்து நீ எங்களை பார்த்து ஏன் பயந்தன்னு ஒழுங்கா சொல்லு" என்றான்.

"அது வந்து…. அன்னைக்கு வந்தவங்க தான் திரும்பவும் வந்திருக்காங்க என நினைச்சு பயந்துட்டேன்" என்றவனை பார்த்து "என்னைக்கு வந்தவங்க" என்க,

"அது அன்னைக்கு கார்த்திக் வீட்டுக்கு எல்லாரும் கொலை செய்யப்பட்ட முந்தைய நாள் நைட் ...இதே மாதிரி தான் வந்தாங்க" என்றான்.

"உனக்கு அவங்க ஃபேமிலியை தெரியுமா?...எப்படி" என கேட்க...அவனோ "அது கார்த்திக் எங்களோட கிரிக்கெட் டீம்ல ஒருத்தன். சம் டைம் லேட் ஆயிடுச்சின்னா கார்த்திகா அக்கா தான் வந்து கூட்டிட்டு போவாங்க. அப்புறம் கார்த்திகா அக்கா ஃபைனல் இயர் படிக்கும் போதுதான் நானும் இந்த காலேஜ்ல ஃபர்ஸ்ட் இயர் ஜாயின் பண்ணினேன்" என்றான்.

"அன்னைக்கு என்ன நடந்தது?.. நீ என்ன பாத்தேன்னு?... ஒன்னு விடாம அப்படியே சொல்லு, அதனால உனக்கு எந்த பிரச்சனையும் வராது... உண்மையிலேயே இந்த பிரச்சனையிலிருந்து கார்த்திகா வெளியே வரணும்னு நினைச்சா சொல்லு" என்றான்.


"அது... அது" என இன்னும் தயங்கியவனை பார்த்து "இங்க பாரு ரமேஷ் எனக்கு பொறுமை ரொம்ப கம்மி... உனக்கும் இந்த கேஸ்ல சம்பந்தம் இருக்குனு உள்ள தூக்கிப் போட ஒரு நிமிஷம் ஆகாது. எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு இல்லனா.. நிறைய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்றான்.

"அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க சார்... நான் எல்லாத்தையும் சொல்லிடுறேன்' என்றவன்….அன்னைக்கு என்னோட கேர்ள் ஃப்ரெண்ட்க்கு பர்த்டே 12 மணிக்கு விஷ் பண்ணனும்னு மாடிக்குப் போய் நின்னு போன் பேசிட்டு இருந்தேன்…. அப்போ ஏதர்ச்சையாக பார்க்கும் போது அவங்க வீட்டு மாடில நாலஞ்சு பேர் ஏறிட்டு இருந்தாங்க" என்றவன் கைநீட்டி தடுத்தவன், "கரெக்டா சொல்லு நாலு பேரா அஞ்சு பேரா" என்க,

"அதற்கு ரமேஷ் அஞ்சு பேரு சார், என்றவன் பின் தலையை இருபுறமும் அசைத்து... இல்ல இல்ல..நாலு பேர் வெளியிலிருந்து சுவர் ஏறி வந்தாங்க. ஒருத்தர் மட்டும் வீட்டுக்குள்ளிருந்து கதவை திறந்திட்டு வெளியே வந்தாங்க" என்றவனை அதிர்ந்து பார்த்தனர் ஹர்ஷாவும் ரவீந்திரனும்.

"டேய்…. உலறாமல் ஒழுங்கா யோசிச்சு சொல்லு. அந்த வீட்லுள்ள மொத்தம் ஆறு பேரில் கார்த்திகாவை தவிர ஐந்து பேர் இறந்துட்டாங்க,அப்பறம் அவங்களே எப்படி கதவை திறப்பாங்க" என்றான்.

"நிஜமா உள்ள இருந்து ஒருத்தங்க வந்தாங்க சார்..என்றவன் ஒரு நிமிஷம் இந்த வீடியோவைப் பாருங்க உங்களுக்கே தெரியும்" என தனது மொபைலை அவர்களிடம் நீட்ட….அதில் அன்று இரவு நான்கு நபர்கள் கருப்பு உடையில் மாடியில் இருக்க,அதே நேரம் மாடிகதவு திறக்கப்பட்டு அதிலிருந்து ஒருவன் வந்து இவர்களை உள்ளே அழைத்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

அதிர்ச்சியுடன் அந்த வீடியோவை திரும்ப திரும்ப பார்க்க… சட்டென்று அவன் மனதில் ஒன்று தோன்ற, "இது ஏன் அந்த பார்த்திபன் ஆக இருக்கக் கூடாது" என்க,
"எத வச்சு பார்த்திப்பனாக இருக்கும்னு சொல்றீங்க சார்" என்ற ரவீந்திரனை பார்த்து,

"அவன் கழுத்தில் உள்ள துண்டை பார்..இன்னிக்கு நம்ம விசாரிக்க கூப்பிடும்போது கழுத்துல துண்டோட தான் வந்தான் கவனிச்சீங்களா" என்றான். "ஆமா சார் அவனா இருக்க வாய்ப்பு இருக்கு" என இவனும் பின்ப்பாட்டு பாடினான்.

"இந்த வீடியோ எதற்கு அப்பவே போலீஸ்கிட்ட கொடுக்கலை" என்றவனை பார்த்து…. "அது வந்து இவங்களெல்லாம் திருடர்களாக இருந்திருந்தால் அப்போதே வீடியோவை வந்து போலீஸ் கிட்ட கொடுத்திருப்பேன். ஆனால் எல்லாரையும் கொலைப் பண்ணது தெரிந்ததும் கொஞ்சம் பயந்துட்டேன்" என்றான்.

"சரி இப்போ நீ கிளம்பலாம்... ஏதாவதுன்னா நான் கால் பண்றேன்,அதுவரைக்கும் இந்த விஷயத்தை பற்றி யாருகிட்டயும் எதுவும் சொல்லிக்காதே" என்றவன் அவன் சென்று சிறிதுநேரம் கழித்து எழுந்து சென்றான்.

போகும் வழியில் ஜீப்பை ஓட்டிக்கொண்டே…"சார் அந்த பார்த்திபனை அரஸ்ட் பண்ணிடலாமா" என ரவீந்திரன் கேட்க….அவனோ "இல்ல இப்போ யாரையும் அரஸ்ட் பண்ண வேண்டாம். முதல்ல யாரு அந்த கொலைகாரன் என்று தெரியும் வரைக்கும், நமக்கு எதுவும் தெரியாத மாதிரியும்,எந்த எவிடன்ஸ்ம் கிடைக்காத மாதிரியும் நடந்துக்கோங்க...அப்பறம் யாரு கேட்டாலும் என்னை கேட்காமல் எந்த உண்மையும் வெளிய சொல்லக்கூடாது" என்றான்.

அந்தநாள் அவ்வாறே செல்ல….மறுநாள் அனைத்து வேலையும் முடித்துவிட்டு சீக்கிரமாக வீட்டுக்கு வந்தவனை பார்த்து "ஏண்டா உன்கிட்ட எத்தன தடவை படிச்சு படிச்சு சொன்னேன் சீக்கிரம் வா... சீக்கிரம் வான்னு,இவ்வளவு நேரம் கழித்தா வருவது. போய் சீக்கிரம் கிளம்பு" என திட்டிய தாயை பார்த்து, "ஒன்லி டூ மினிட்ஸ்" என கைக்காட்டிவிட்டு ரூமுக்குள் நுழைந்து ஐந்து நிடத்தில் கிளம்பி கிழே வந்தான்.

இன்று ஹர்ஷவர்தனின் அக்கா மகள் ஐஸ்வர்யா வின் ஐந்தாவது பிறந்தநாள் விழா.

வைஷ்ணவியின் வீட்டை அடைந்தவர்கள் காரை பார்க் பண்ணிவிட்டு உள்ளே நுழைந்தனர். "மாமா" என ஓடிவந்து அணைத்துக்கொண்ட தன் அக்கா மகளை தலைக்கு மேல் தூக்கிப்போட்டு பிடித்தவன் "ஹேய் செல்லக்குட்டி இன்னைக்கு உங்களுக்கு பர்த்டேவா" என கேட்க... சின்னவளும் ஆமாம் என அழகாக தலையசைக்க,அந்த மழலை அழகில் மயங்கியவன்...அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டுவிட்டு தன் கன்னத்தை காட்ட...சின்னவளோ தன் பிஞ்சிக் கரங்களால் அவன் கன்னத்தில் அடித்தது.

"போ... போ உன் பேச்சு கா என்றவள்….போன பர்த்டேக்கு அத்தைய கூட்டிட்டு வரேன்னு சொன்னதான" என கேட்க, என்ன பதில் சொல்லுவது என தடுமாரியவன் "சாரிடா செல்லம் இன்னும் ஒரு வாரத்தில் அத்தை வந்துடுவாங்க... வந்த உடனயே என் தங்கத்தை பார்க்க அழைச்சிட்டு வரேன்" என சத்தியம் செய்து சமாதானம் செய்த்தவன்...அவளை கேக் வெட்டுமிடம் அழைத்து சென்றான்.

கேக் வெட்டி முடித்தவுடன் தான் வாங்கிவந்த தங்க செயினை சின்னவளுக்கு அணிவித்தான். அனைத்து கொண்டாட்டமும் முடிய ஆர்த்தியை நோக்கி சென்றவன் "ஹாய் ஆர்த்தி" என்க...அவளோ கண்களில் ஆச்சிறியத்துடன் "ஹாய் அத்தான்" என்றாள்.

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ஆர்த்தி, இங்கயில்ல ...தனியா மே பி நாளைக்கு வெளிய ஏதாவது காபி ஷாப்பில்" என்க...அதனை கேட்டு சந்தோஷமடைந்தவள் "சரி ஆத்தான்" என வேகமாக தலையசைத்தாள்.

மறுநாள் அவளைக் காண காபி ஷாப் வந்தவன்...தனக்கு முன்பே வந்தமர்ந்திருக்கும் ஆர்த்தியின் எதிரில் உள்ள சேரில் சென்று அமர்ந்தான்.

"ஹாய் அத்தான்... கரெக்டா சொன்ன டைம்க்கு வந்துட்டிங்க என்றவள் என்ன சப்பிடுறிங்க ?" என்க,அவனோ "எதுவும் வேண்டாம் என்றவன், ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேசத்தான் வந்திருக்கேன்" என்றவன் தன் பாக்கெட்டிலிருந்து ' H ' டாலர் போட்ட செயினை எடுத்து டேபிள் மீது வைக்க…

அதனைக்கண்டு "ஹையோ... சூப்பர் அத்தான் இந்த செயினை எங்க மிஸ் பண்ணேனு தெரியாம ரொம்ப கஷ்டப்பட்டேன் தெரியுமா?... என சந்தோஷமாக கேட்டவள் நிமிர்ந்து அவன்முகம் பார்த்து...இது உங்ககிட்ட எப்படி கிடைத்தது அத்தான்" என கேட்டாள்.

"எனக்கும் அதுதான் சந்தேகமா இருக்கு, தொலைஞ்சு போன செயின் எப்படி கார்த்திகாவோடா பெட்ரூம்ல
இருந்தது" என கேட்டவன்….இது மட்டும் கொலை நடந்த அன்னைக்கு கிடைத்திருந்தால் நீயும் இந்நேரம் ஜெயில்ல கம்பி எண்ணிட்டு இருந்திருப்பாய் என கூறியவன், என்ன பதில் சொல்லாம அமைதியா இருக்க" என்க,

"அய்யய்யோ…. அத்தான் நீங்க பேசுறத பார்த்தா என்னமோ நான்தான் கொலை பண்ண மாதிரியில்ல இருக்கு என்றவள்...நான் ஒத்துக்குறேன் எனக்கு கார்த்திகாவை பிடிக்காது தான், அதுக்காக கொலைப் பண்ற அளவுக்கெல்லாம் போறதுக்கு நான் ஒன்னும் சைக்கோயில்லை.

நீங்க அவளை லவ் பண்றீங்கனு சொன்னதும் கோபத்தில் காலேஜில் ஓவரா சீனியாரிட்டி காட்டி மிரட்றது, டீஸ் பண்றது இது மாதிரி தான் நடந்துகிட்டேன். அப்பறம் ஃபைனல் இயர் முடிந்ததும் அவளை நான் பார்க்கவே இல்லை" என்றாள்.

"அப்பறம் எப்படி உன் செயின் அங்க போச்சு" என்க…."அது கொலை நடந்ததுக்கு முந்தைய நாள் ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்…. ஆபீஸ் போய்ட்டு வரும் போது ரெண்டு பசங்க என்னை டீஸ் பண்ணாங்க.அப்போ ஸ்கூட்டியிலிருந்து விழுந்துட்டேன்.

ட்ரெஸ் எல்லாம் ஒரே சேறும் சகதியுமாக ஆய்டுச்சி...அப்போ அந்த பக்கமா ஸ்கூட்டியில் வந்த கார்த்திகா "அய்யய்யோ என்னாச்சி சீனியர்...எதும் அடிபடவில்லையே என நலம் விசாரித்தவள் ...எங்க வீடு இங்க கிட்டத்தான் வந்து ட்ரெஸ் வாஷ் பண்ணி நீங்களும் ஃப்ரெஷ் ஆகிக்கோங்க" என்றாள்.

"அதனால அவ வீட்டுக்கு போய் அவ ரூம்ல ரெடி ஆனேன். மே பி அப்போ செயினை மிஸ் பண்ணிருப்பேன்" என்றாள்.

"உங்களுக்கு இன்னும் என் மேல சந்தேகம் தீரவில்லை என்றால் கார்த்திகா கிட்டயே கேட்டுகோங்க என்றவள்,நீங்க என்ன சந்தேகப்படுறிங்களா அத்தான்….அந்தளவுக்கு நான் ஒன்னும் கேவலமான பொண்ணில்ல,அந்த மாதிரி குடும்பத்திலையும் பிறக்கலை" என்றவள் கண் கலங்க….

ஆர்த்தி "நான் அப்படி சொன்னேனா…. இந்த செயினை பார்த்ததிலிருந்து நீ எப்படி இந்த வீட்டுக்கு வந்தேன்னு நினைத்தேனே தவிர... நீ சொன்ன மாதிரி ஒரு நிமிஷம் கூட நினைக்கலை" என்றான்.

"இதுல இருக்குற H உங்க நேம் தான் என்றவள்... ஆனா இனி இது என்கிட்ட இருக்கக் கூடாது . இந்த செயினை உங்க கார்த்திகா கிட்ட கொடுத்திடுங்க" என்றாள் கண்கலங்க.

பின்னர் கண்ணை துடைத்தவள்…"சரி அத்தான் கார்த்திகா கேஸ் என்னாச்சி... அவளை பத்தி ரொம்ப லேட்டா தான் புரிஞ்சிக்கிட்டேன்,அதுவும் அவங்க ஃபேமிலி ரொம்ப சூப்பர். நான் இருந்த ஒரு மணி நேரமும் என்னை அப்படி

கவனிச்சாங்க… அவ வந்ததும் அவகிட்ட சாரி கேட்கணும்" என்றவளை பார்த்து புன்னகைத்தவாறே …"அவளை பத்தி கவலையை விட்டுத்தள்ளு, அவ அடுத்த ஹியரிங்ல வெளிய வந்திடுவா என்றவன், சரிவா கிளம்பலாம்" என இருவரும் எழுந்து சென்றனர்.



 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 17

மறுநாள் தனது அலுவலகத்தில் ஒரு முக்கியமான ஃபைலை ஆராய்ந்து கொண்டிருந்தவன் முன்…. தான் கொண்டு வந்த ஃபைலை வைத்துவிட்டு "சார்... அந்த பார்த்திபன் பற்றிய எல்லா தகவலும் இதில் இருக்கு" என்றான் ரவீந்திரன்.

அந்த ஃபைலை புரட்டிக் கொண்டே வந்தவன், அவனின் குடும்பம்,ஊர், இதற்கு முன்பு வேலை செய்த இடம் என அனைத்தையும் படித்தவன், ஃபைலை மூடிவிட்டு…"வெல் குட் ஜாப்" என சொல்லி தோள்களைக் குலுக்க,

"சார்...என்ன சார் இப்படி சொல்றீங்க?...இதை படிச்சதும் எனக்கே ரொம்ப அதிர்ச்சி ஆயிடுச்சு, நீங்க என்னன்னா சாதாரணமா இருக்கீங்க" என்க,

"இதில் அதிர்ச்சியடைய என்ன இருக்கு ரவீந்திரன்...எனக்கு அன்னைக்கு நைட் கார்த்திகா வீட்டில் அவங்க அப்பாவோட டைரியை படிச்சதுமே தெரிஞ்சிடுச்சி. இவன் தான் எல்லா கொலைக்கும் காரணம்னு,ஆனா நம்ம வார்த்தையை யாரும் நம்பமாட்டங்களே...எல்லாத்துக்கும் சாட்சி வேணும். அதனால தான் நான் இவ்வளவு பொறுமையா இருக்கேன்.


சாட்சி மட்டும் கிடைக்கட்டும்...என்னோட உடம்பில் உள்ள ஒவ்வொரு அணுவும் அவனை கொல்லத் துடிச்சுக்கிட்டு இருக்கு. எனக்கு உயிரா இருந்தவளோட மொத்த குடும்பத்தையும் கொன்னு,அவளோட மொத்த சந்தோஷத்தையும் குழித்தோண்டி புதைச்சவனை என் கையாலேயே அடிச்சு கொல்லனும்" என்றான் ஆத்திரமாக.

"சாரி சார்" என்றவனை பார்த்து…"நீங்க என்ன பண்ணுவீங்க விடுங்க, எல்லாமே என்னோட தப்புத்தான். நான் டெல்லிக்கு போனதும் அவளை பாதுகாக்க ஏற்பாடு பண்ணிருக்கணும்,அதை செய்யாமல் அவ குடும்பத்தோட தானே இருக்கான்னு நானும் நிம்மதியா இருந்துட்டேன்..அதுதான் நான் பண்ண பெரிய தப்பு" என்றான்.

"ஆனா எனக்கு ஒருவிஷயம் தான் புரியவேயில்லை ...இவ்வளவு கொடூரமாக கொல்ல என்ன காரணம் ? அதுதான் ஒரே குழப்பமா இருக்கு" என்றான்.

"ஆனா இப்ப வரைக்கும் நமக்கு எந்த எவிடன்ஸ்ம் கிடைக்கலையே சார்" என்றவனை பார்த்து "எவிடன்ஸ் எதுவும் நம்ம கைக்கு வராது, நாமதான் அதை தேடிப் போகணும். இன்னைக்கு கார்திகாவோட ஃப்ரெண்ட் வைஷாலியை பார்த்து விசாரிக்க போகணும்,கண்டிப்பா எதாவது எவிடென்ஸ் கிடைக்கும்" என்றான்.

"சார் அப்பறம் ஒரு முக்கியமான விஷயம் மனோகர் சாரோட ஆக்ஸிடென்ட்க்கு காரணமான லாரி நம்பரை டோல் கேட் ரெக்கார்ட்ஸ் முலமா வாங்கியாச்சு. இது டோல் கேட் புட்டேஜிலிருந்து எடுக்கப்பட்ட ஃபோட்டோ" என அதனை காட்ட….அதனை பார்த்து "இவனா தான் இருக்கும்னு நினைத்தேன்...பார்த்திபன் பயங்கரமான விஸ்வாசி தான், தன்னோட முதலாளிக்காக எத்தனை கொலை வேணாலும் பண்ணுவான்" என சொல்ல,


"எப்படி சார் இவ்வளவு தப்பு பண்ணிட்டு எதுவும் பண்ணாதவன் போல இருக்காங்க" என்க,

"புதுசா கொலை பண்ணவன் தான் பயப்படுவான்..இவங்களுக்கு இதெல்லாம் எத்தனையாவதுனு அவங்களுக்கே கணக்கு தெரியாது" என்றான் ஹர்ஷா.

"அடுத்து நாம என்ன பண்றது சார்...இந்த போட்டோவை வைத்து அவனை உள்ள தள்ள முடியாதா" என்க,

"நான்தான் சொன்னேனே ரவிந்தீரன்...பார்த்திபன் விஸ்வாசினு. நான் தான் கொலை பண்ணேன் என்று ஒத்துக்குவானே தவிர...அவனோட பாஸ்ஸை காட்டிக்கொடுக்க மாட்டான்" என்றான்.

"இதுக்கு என்னதான் சார் வழி" என்றவனை பார்த்து…."அவரசப்படாதிங்க ரவி இன்னும் கொஞ்சநாள் அமைதியா இருங்க ...எல்லாம் நல்லபடியா நடக்கும் என்றவன்….நான் வைஷாலியைப் பார்க்க போறேன்" என கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

"வீட்டின் காலிங் பெல் அடிக்க,நீ உட்காரு நான் போய் கதவை திறக்கிறேன்" என வைஷாலி சோபாவில் அமர வைத்துவிட்டு கதவை திறந்தான் அசோக்.

கதவைத் திறந்த அசோக்... எதிரில் நின்ற ஹர்ஷவர்தனை பார்த்து "சார் நீங்களா ? என்னால நம்பவே முடியல என்றவன் அவனை உள்ளே வாங்க" என அழைக்க…

'யாருகிட்ட இப்படி பேசுறாரு ?..' என எழுந்து வந்த வைஷாலி அங்கு நின்றவனை பார்த்து கண்கலங்க சார் என்றவள் பின் உதட்டை கடித்து.. "சாரி "அண்ணா என அழைக்க...அவளை பார்த்து மென்மையாக புன்னகைத்தவாறே எப்படி இருக்கமா" என கேட்க,

"நான் நல்லா இருக்கேன்' என்றவள் மெல்ல தன் தலையிலேயே தட்டிகொண்டவள்.. அய்யோ அண்ணா உள்ள வாங்க வெளியவே நின்னு பேசுறிங்களே" என்றவள் அவன் வர வழிவிட்டு தள்ளி நின்றாள்.


வந்தவனை சோபாவில் அமர வைத்து…"என்ன சாப்பிடுறீங்கண்ணா...காபி இல்ல டீ " என கேட்க.. அவனோ "எனக்கு எதுவும் வேணாம்...நீ வந்து முதலில் உட்காரு. இந்த மாதிரி நேரத்தில் ரொம்ப நேரம் நிற்கக்கூடாது" என்றவன் தன் எதிரில் இருக்கும் சோபாவை காட்டி அமர சொன்னான்.

"கார்த்திகாவை போய் பாத்தீங்களா? அவ எப்படி இருக்கா?.." என அழுதுகொண்டே கேட்க...அவள் அழுவதை தாங்கமுடியாத அசோக்,அவளை தன் மார்பில் சாய்த்துக்கொண்டு " அழாதடா பிளீஸ்,டாக்டர் சொன்னது ஞாபகம் இருக்கா" என அவளை மென்மையாக கடிந்தவன்….அவள் முதுகை தடவி அறுதல் சொன்னான்.


"இப்படித்தான் சார்...கார்த்திகா ஜெயிலுக்கு போனதிலிருந்து அடிக்கடி அழுதுகிட்டே இருக்கா. டாக்டர் இவ ரொம்ப வீக்கா இருக்கான்னு சொல்லி இருக்காங்க… இவளோட ஆறுதலுக்காக ஒருதடவை அழைச்சிட்டு போய் கார்த்திகாவை காட்டிட்டு வந்தேன்.அப்பறம் நீங்க திரும்பவும் சென்னை வந்தது தெரியவந்தது, இனி எல்லாத்தையும் நீங்க பார்த்துப்பிங்கன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்குறா" என்றான்.

"என் மேல நம்பிக்கை இல்லையா.. அவளை அப்படியே விட்டுடுவேனா என்ன…." அதங்கமாக ஹர்ஷா கேட்க,

"ச்சச்ச... அப்படியெல்லாம் நினைக்கலை. நீங்க வந்த பிறகுதான் கொஞ்சம் தைரியமாக இருக்கேன் என்றவள்,யார் அந்த குற்றவாளின்னு
கண்டுப்பிடிச்சிட்டிங்களா" என கேட்க,

அவனோ "அதை தான் தேடிட்டு இருக்கேன்' என்றவன்…. இந்த கொலை அவங்க குடும்பத்தை மையமா வச்சு செஞ்சதில்லை,எல்லாமே கார்த்திகாவை மையமாக கொண்டு நடந்தது" என்றான்.

"என்ன சார் சொல்றீங்க ? அவங்களுக்கு யாரு இப்படி கொலை பண்ற அளவுக்கு எதிரியாக இருப்பா" என அசோக் கேட்க,

"லவ்...அதுதான் காரணம்' என்றவன்... வைஷாலியை நோக்கி…'உனக்கு தெரியாம எதுவும் நடக்க வாய்ப்பில்லை.யாராவது அவளுக்கு லவ் ஃபரோபோஸ் இல்லனா.. லவ் டார்ச்சர் எதவாவது உங்க காலேஜ் இல்லனா ஆஃபீஸ்ல பண்ணாங்களா" என்க,

அவளோ "நீங்க வேற அண்ணா... அவளை லவ் பண்ணவங்க லிஸ்ட் எடுத்தா மொத்த காலேஜையும் லிஸ்ட்ல சேர்க்கணும் என்றவள்,ஆனா யாரும் டார்ச்சர் எல்லாம் பண்ணதில்லை" என்றாள்.

பின்னர் ஏதோ ஞாபகம் வர…."அண்ணா ஒரு முக்கியமான விஷயம் ஒரு நாள்' என தலையை தட்டி யோசித்தவள்….அன்னைக்கு செயின் காணும்னு போலீஸ் ஸ்டேஷன் வந்தோமே,அன்னைக்கு கிருஷ்ணான்னு ஒருத்தன் தலையில ஹெல்மெட்டோடு வந்து ஃபரோபோஸ் பண்ணான். அப்பறம் ரெண்டு மூணு தடவை அடிக்கடி வந்து சொல்லிட்டு போனான்,நாங்களும் எல்லாரையும் மாதிரிதான் இவனும்னு நினைச்சு விட்டுட்டோம்" என்றாள்.

"அதுக்கப்புறம் அவன் உங்களை டிஸ்டர்ப் பண்ணலையா" என்க…"இல்ல அப்பறம் வரலை. ஆனா இப்போ ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடி ஆஃபீஸ் போகும் போது திரும்பவும் வந்து சொன்னான்.ஆனா அப்போ கார்த்திகா திட்டி அனுப்பிட்டா" என்றாள்.

"இதை எதுக்கு நீங்க ரெண்டு பேரும் சொல்லல…' என்றவன், நான்தான் இங்க இல்ல அட்லீஸ்ட் அசோக் கிட்டயாவது சொல்லிருக்கலாமே" என கத்த…."ஐயோ அண்ணா அது இதுமாதிரி அடிக்கடி நடக்கிறது தானேனு சொல்லல" என்றாள்.

"சாரி...கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்,அதான் கோபமா கத்திட்டேன் என்றவன்...அவனோட முகத்தை யாராவது பார்த்திருக்கீங்களா" என்க,

"இல்லன்னா நாங்க ரெண்டு பெறும் பார்த்தத்தில்லை.அவன் எப்ப வந்தாலும் ஹெல்மெட்டோட தான் வருவான்" என்றாள்.


"அண்ணா... என்னாச்சு எதாவது பிரச்சனையா" என்க…"அதெல்லாம் ஒன்னுமில்ல என்றவன் சரி நான் கிளம்புறேன்" என எழ அவளும் எழுந்து …"அவ சீக்கிரம் வந்துடுவா தானே" என கேட்க..

அவனோ "கண்டிப்பா... அடுத்த தடவை வரும் போது அவளோட தான் வருவேன்" என்றவன் இருவரிடமும் விடைபெற்றுவிட்டு வெளியே சென்றான்.

அவனை அனுப்பிவிட்டு வந்த அசோக்...ஏதோ யோசனையிலிருக்கும் தன் மனைவியின் அருகில் சென்று அமர்ந்தான்.

"வைஷூ என்ன யோசனையில் இருக்க" என கேட்க...அவளோ கண்களில் தேங்கிய கண்ணீரோடு அவளை ஏறிட்டுப் பார்த்தவள், "நாங்க அவனை பத்தி சொல்லாம விட்டது தான் இப்ப இவ்வளவு பிரச்சனைக்கு காரணமா" எனக் கேட்டவள் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாக கொட்ட…

"லூசு மாதிரி பேசாத.. விதியைப் யாராலயும் மாத்த முடியாது வைஷூ,இதெல்லாம் நடக்கணும்னு விதி நடந்திடுச்ச. நம்மளால எதையும் மாற்ற முடியாது. என்றவன் அவள் முகத்தை கைகளில் ஏந்தி கண்ணீரை துடைத்தவன்...இனி எல்லாத்தையும் ஹர்ஷா சார் பர்த்துப்பார்,அவரை பத்தி உன்னை விட எனக்கு நல்லாவே தெரியும்.யாரோ ஒருத்தருக்கு பிரச்சினை என்றாலே அவ்வளவு யோசிச்சு செயல்படுவார். இப்போ அவரோட சரிப்பாதிக்கே பிரச்சனை என்னும்போது அவரோட ஒவ்வொரு செயலும் எதிரிக்கு மரண அடித்தான்" என்றான்.

அவன் சொல்லில் சிறிது ஆறுதலடைந்தவள் கண்களை துடைத்துக்கொண்டாள்.

"வைஷூ போதும் இந்த ஒரு மாசம் ரொம்ப அழுதுட்ட...இனி அழக்கூடாது" என்றவன், அவளை அப்படியே தூக்கி மடியில் அமர்த்திக்கொண்டு அவளை பின்னாலிருந்து இறுக்கமாக அணைத்தவன்,அவள் கழுத்தில் முகம் புதைத்து … "பாப்பா வந்ததிலிருந்து என்ன கண்டுக்கவே மாற்ற, அதுவும் இந்த ஒரு மாசம் சுத்தம்" என்றவன் தன் வேலையில் கண்ணாய் இருக்க…"போதும் டாக்டர் சொன்னது இப்போ சார்க்கு ஞாபகம் வரலையா" என சிணுங்க,

"அதெல்லாம் நிறையவே ஞாபகம் இருக்கு...உன்ன கவனமா கண்ணாடி பாத்திரம் போல பார்த்துக்கணும் அவ்வளவு தானே.. அதுக்காக ஒரு முத்தம் கூட இல்லாமையா நோ…."என்றவன் அவளை தன் முகம்பார்க்க செய்தவன், அவள் இதழில் மென்மையாக இதழ் பதித்தான்.


அந்த விசாலமான நெடுஞ்சாலையில் அவர்களது ஜீப் புயல் வேகத்தில் சீறி கொண்டு செல்ல... அதனை செலுத்திய ரவீந்திரன், "சார் ஆல்ரெடி செங்கல்பட்டை தாண்டியாச்சு, இன்னும் நாம எங்க போறோம்னு சொல்லலையே" என்க,

"சேருமிடம் வரும்போது நானே சொல்றேன் அது வரைக்கும் போய்கிட்டே இருங்க" என்றான் ஹர்ஷா.

அதற்கு அவனோ "இதுக்கு நான் கேக்காமல் இருந்திருக்கலாம்" என வாய்க்குள் முணுமுணுத்து கொண்டவன் சாலையில் தன் கவனத்தை செலுத்தினான்.

சற்று நேரத்தில் எதிரில் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த லாரியை பார்த்து வண்டியின் வேகத்தை குறைக்க முயல... சட்டென பிரேக் கட்டாகி... ஜீப் கட்டுப்பாட்டை இழந்தது.

அதனை கண்டு அதிர்ந்தவன் சத்தமாக "சார் ப்ரேக் பிடிக்கலை" என கத்த,


அதேநேரம் ஜெயிலில் தனக்கு ஒதுக்கப்பட்ட வேலையை செய்துகொண்டிருந்தவளை, தோளில் இடித்தாள் சக கைதி சரோஜா. பல திருட்டு கொள்ளை என சுற்றிகொண்டிருந்தவள்…. சில நாட்களுக்கு முன் ஒரு கஞ்சா கேஸில் உள்ளே வந்திருந்தாள்.

அவளை நிமிர்ந்து பார்த்த கார்த்திகா "என்ன வேணும் எதுக்கு கூப்பிட்டிங்க" என கேட்கச்

அவளோ "நீதான் அந்த அஞ்சு கொலைப் பண்ண கொலைகாரியா" என்றவள், தன் இடுப்பிலிருந்து கத்தியை எடுக்க...அதனை கண்டு அதிர்ந்தவள் மெல்ல பின்வாங்கினாள்.
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 18

கட்டுப்பாட்டை இழந்து ஓடிக்கொண்டிருந்த ஜீப்பின் ஸ்டைரிங்கை தன் கையால் பிடித்து அதன் வேகத்தை குறைக்க முயன்றான் ஹர்ஷா.

சிறிது வேகத்தை குறைத்தாலும்,கண்டிப்பாக அந்த லாரியில் மோதிவிடும் என்னும் நேரத்தில்... சட்டென்று வண்டியை சாலையின் ஓரத்தில் செலுத்தியவன் அங்குள்ள பெரிய மரத்தில் மோதி ஜீப்பை நிறுத்தினான்.

மோதிய வேகத்தில் ஜீப்பின் முன்பகுதியில் தலை பலமாக மோதிக்கொள்ள …. நெற்றியிலிருந்து இரத்தம் கசியத்தொடங்கியது. சிறிது நேரத்தில் தன்னை சமன் செய்தவன் எழுந்து ரவிந்தரனை பார்க்க அவனுக்கும் நெற்றியில் சிறிய காயம் மட்டுமே இருக்க "தேங்க் காட்" என சத்தமாக சொன்னவன்...ஜீப்பை விட்டு இறங்கி, பாக்கெட்டிலிருந்து மொபைலை எடுத்தான்.

காவல்துறையினருக்கு தகவல் சொல்லிவிட்டு,பின் அசோக்கிற்கு அழைத்து பேசியவன் மொபைலை அணைத்து பாக்கெட்டில் வைத்தான்.

தன் முன் நீட்டப்பட்ட கத்தியை கண்டு இரண்டடி பின்னால் நகர்ந்தவளை பார்த்து சிரித்தவாறே வந்த சரோஜா "நீ எங்க போனாலும் உன்ன விடமாட்டேன். சின்ன சின்ன தப்பு அஞ்சுக்கும் பத்துக்கும் பண்ண எனக்கு,ஒரு கொலைக்கு லட்ச கணக்குல அள்ளிக்கொடுத்தா வேணாம்னு சொல்லுவேனா...நீயெல்லாம் வாழ்ந்து என்ன பண்ண போற,யாருக்கும் புரோஜனம் இல்லாமல் இருக்கிறதுக்கு செத்தா எனக்காவது பணம் கிடைக்கும்" என வசனம் பேச...அதுவரை பயத்தில் உறைந்திருந்தவள், தன்னை காப்பாற்றிக்கொள்ள ஓட தொடங்கினாள்.

பயத்தில் முகமெல்லாம் வேர்த்துக்கொட்ட….மனது தன்னவனின் துணையை தேடியது.

பயத்தில் வேகமாக ஒடியவள் வார்டனின் மீது மோதி நின்றாள். வார்டனின் பின்பு மறைந்து நின்றவள் தன்னை காப்பாற்றுமாறு அவளிடம் கெஞ்ச, அவளோ சரோஜாவை முறைத்து "உன்கிட்ட ஒரு வேலையை சொன்னா உருப்படியா பண்ண மாட்டியா ?... ஓடவிட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்க. யாருக்கும் தெரிய கூடாதுன்னு தான் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில அவளை வேலை செய்ய சொல்லிவிட்டுட்டு வந்தேன்" என சரோஜாவை திட்டியவள்,

"இந்த சைடு எல்லாரும் கூட்டமா இருக்காங்க,இவளை அந்த சைடு அழைச்சிட்டுப்போ" என கத்தியவள்….தன் பின்னால் ஒளிந்தவளை முன்னால் இழுத்து,"யாருகிட்ட உன் வேலையை காட்டுற….உன்னால என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது" என்றவள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சரோஜாவிடம் அவளை முடித்துவிடுமாறு கண் காட்டிவிட்டு சென்றுவிட்டாள்.

வார்டனின் வார்த்தையில் அதிர்ந்து நின்றவள் இனி தன்னால் இவளிடமிருந்து தப்பிப்பது இயலாத காரியம் என உணர்ந்து… மெல்ல பின்னால் நகர, அங்குள்ள பெரிய மரத்தில் மோதி அப்படியே சாய்ந்து,கண்களில் கண்ணீரோடு நின்றாள்.

ஓடி வரும்போது ஒரு இடத்தில் விழுந்து எழுந்ததில் கை கால்களில் அடிபட்டு ரத்தம் கசிய,நெற்றியிலிருந்து வழியும் இரத்தம் கண்களை மறைக்க...மயக்கம் வரும்போல இருந்தது கார்த்திகாவுக்கு.

தன்னை நோக்கி கத்தியோடு வந்தவளை கண்டு கண்களை இறுக்கமாக மூடிக்கொள்ள...ஓங்கிய கத்திக்கும் அவளுக்கும் நூலிழை இடைவெளியில் அவள் கை அப்படியே பின்னால் முறுக்கப்பட வலியில் "அய்யோ அம்மா " என கத்தியவளின் அந்த சத்தத்தில் கண்விழித்தாள் கார்த்திகா.

தன் முன் நின்ற அசோக்கை பார்த்து "அண்ணா" என சொல்லியவள் தொடர் அதிர்ச்சியின் காரணமாக அப்படியே மயங்கி சரிந்தாள்.

கையை முறுக்கியப்படி பிடித்திருந்த சரோஜாவை கிழே தள்ளியவன்...மயங்கி விழயிருந்தவளை தாங்கி பிடித்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்.

ஆக்ஸிடென்ட் நடந்த அடுத்த நொடி அவனின் உள்ளுணர்வு ஏதோ சரியில்லை என தவறாக தோன்ற...உடனடியாக அசோக்கிற்கு அழைத்தவன் நடந்தவற்றை கூறிக் கார்த்திகாவை சென்று பார்க்குமாறு பணிந்தான்.

இப்போது அதை நினைத்த அசோக்... அவன் காதலின் ஆழத்தை கண்டு வியந்து தான் போனான். அவளுக்கு ஏற்ப்படபோகும் ஆபத்து கூட அவனை பாதிக்கும் அளவிற்கான ஆத்மாத்தமான காதலை உணர்ந்தவன் அவர்கள் இருவரும் வாழ்க்கையில் இணைய வேண்டுமென்று கடவுளிடம் வேண்டிகொண்டான்.


தலையில் கட்டுடன், மருத்துவமனை வளாகத்தில் புயல்போல் நுழைந்தவன்,கார்த்திகாவின் அறைக்குள் நுழைய,அங்கு வாடிய மலர் போல் தலையிலும் கை கால்களிலும் கட்டுடன்,இடது கையில் டிரிப்ஸ் ஏறிக்கொண்டிறுக்க...சுற்றியும் மருத்துவ கருவிகளின் நடுவே, மருந்துகளின் உதவியில் உறங்கிக்கொண்டிருந்தவளின் அருகில் சென்று அமார்ந்தவன்...அவளின் வலது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துகொண்டு அவளின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனின் தொடுகையில் மயக்கம் தெளிந்து கண்களை திறக்க...தன் முன் அமர்த்திருக்கும் ஹர்ஷாவை கண்டு ஒருவித நிம்மதி மனமெங்கும் பரவ….அவனின் கைகளுக்குள் உள்ள தன் கைவிரலில் அழுத்தம் கூட்டினாள்.

அதுவரை அவள் விழித்ததை கூட அறியாமல் வெறித்துக்கொண்டிருந்தவன்… அவள் கையின் அழுத்தத்தில்
தன்நிலையடைந்தான்.

"நிலா"... என மென்மையாக அழைத்தவன் தாவி அவளின் கன்னத்தோடு கன்னம் வைத்து அணைத்துக்கொண்டான்.

இருவர் கண்ணீரும் ஒன்றோடு ஒன்று கலக்க...தன் வலது கையை மெல்ல உயர்த்தியவள் அவனின் நெற்றியை வருட... "மப்ச்…அதெல்லாம் சின்னக்காயம் தான் என்றவன்,அவளின் முகத்தை வருடி வலிக்குதா" என கேட்க, இல்லை என தலையாடியவள்…"எனக்கு ரொம்ப பயமா இருக்கு" யாரையும் நம்ப முடியலை,என்னை உங்களோடயே கூட்டிட்டு போயிடுங்க பிளீஸ்" என அவனிடமே கெஞ்ச,

தன்னிடம் கெஞ்சுவதை கூட பொறுக்காதவன், அவள் இதழ் மீது விரல் வைத்து மூடியவன் "இல்லம்மா... இனி உன்ன தனியா விடமாட்டேன்.இனி எப்பவும் உன்னோட நிழல் மாதிரி உங்கூடவே இருப்பேன் சத்தியம்" என அவள் கையின் மேல் கை வைத்து உறுதியளித்தான்.

சிறிது நேரம் அவளுடன் பேசிக்கொண்டு இருந்தவன் "நீ தூங்குடா.. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு போயிட்டு வந்துடுறேன்" என எழுந்தவனின் கையை பிடித்து தடுத்தவள்

' வேண்டாம் ' என தலையசைக்க…. "நீ என்கூடவே இருக்கறதுக்கு நிறைய பார்மலிடீஸ் இருக்கு, அதை முடிச்சிட்டு உடனே வந்துடறேன்" என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு சென்றான்.

நேரே கௌஷிக்கை காண சென்றவன்...நடந்த அனைத்தையும் கூறி அவளை பரோலில் எடுக்கவேண்டும் என கேட்க..

அதற்கு அவனோ "கைதிகளோட இரத்த சொந்தங்களால் மட்டும் தான் முடியும்" என சொல்ல…."முடியாதுன்னு சொல்லவா உன்னப் பார்க்க வந்தேன் என சீறியவன்,உன்னால முடியுமா முடியாதா... முடியாதுனா சொல்லு, அவ கழுத்துல தாலிக்கட்டி என் பொண்டாட்டியா வெளிய கொண்டு வந்துக்குறேன்" என்றான்.

"எதுக்குடா அவசரப்படுற... நான் எப்ப முடியாதுன்னு சொன்னேன், சட்டத்தில் அதற்கென்று உள்ள வழிமுறையை தான் சொன்னேன், என்றவன் இப்போ உனக்கு என்ன வேணும்" என்க…

"ஜெயில்லயே அவளுக்கு பாதுகாப்பு இல்லாத போது இனிமே எப்படி அவளை அங்கே விட்டுட்டு இருக்க முடியும்.
அதனால் அவளோட உயிருக்கு ஆபத்து இருக்குன்னு சொல்லி பரோலில் எடுக்கணும்" என்றான்.

"அது சரிடா இன்னும் ஹியரிங்க்கு மூன்று நாள் தான் இருக்கு...அதுக்குள்ள என்ன அவசரம்" என்க,
"மூனு நாளில்ல மூன்று மணிநேரம் இருந்தா கூட அது என்னோடு தான் இருக்கணும் என்றவன்….நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது அவளை வெளிய எடுக்கணும்" என்றான்.

"சரிவிடு...நீ போய்ட்டு ஈவ்னிங் வா…. அதுக்குள்ள எல்லா ஃபார்மாலிட்டீஸ்ம் முடித்து வைக்கிறேன்" என்றான் கௌஷிக்.

"தேங்க்ஸ் டா "என்றவன் அவனிடம் விடைபெற்றுவிட்டு மருத்துவமனைக்கு சென்றான்.

அவள் திரும்பவும் கண்விழிக்கும் போது எதிரில் அவன் இருக்க...மெல்ல தன் கையை அவனை நோக்கி உயர்த்தியவளின் கையை பற்றிகொண்டான்.

சிறிது நேரத்தில் அவளுக்கான மதிய உணவு வந்துவிட...அதனை தானே அவளுக்கு ஊட்டிவிட முனைந்தவனை தடுத்தவள், "நானே சாப்பிடுறேன்" என்க,அவள் கையை தட்டிவிட்டவன் உணவை அவள் வாயருகே கொண்டுசெல்ல அமைதியாக வாங்கிக்கொண்டாள்.

நான்கு வாய்
உண்டவள் "நீங்க சாப்பிட்டிங்களா" என கேட்க…

"ம்ம்" என்றவன் அவளுக்கு ஊட்டுவதை தொடர...அவன் கையை பற்றி நீங்களும் சாப்பிடுங்க என அடம்ப்பிடித்தவளை கண்டு மெலிதாக புன்னகைத்தவன் அவள் உண்ட மீதியை உண்டுவிட்டு கைக்கழுவினான் .

சிறிது நேரத்தில் அவன் மொபைல் அலற, திரையில் கௌஷிக் என்ற பெயரை கண்டு உடனடியாக அதனை ஏற்றவன் "ஓகே டா... ரொம்ப தேங்க்ஸ்" என்றவனின் மகிழ்ச்சியான முகத்தைக் கண்டு என்ன என விழிகளால் கேட்க…

ஃபோனை அனைத்தவன் அவள் அருகில் அமர்ந்து "இன்னைக்கு நம்ம வீட்டுக்கு போறோம்,இனி நீ எப்பவும் என்னோடவே இருக்கலாம்" என்றவன் அவளை தன்னோடு அழைத்து செல்வதற்கான அனைத்து ஆவணங்களையும் நீதி மன்றத்தின் உத்தரவையும் சிறைச்சாலையில் சமர்ப்பித்தான்.

அனைத்து ஃபார்மாலிட்டீஸ்ம் முடித்தவன்…மருத்துவரை சென்று சந்தித்தவன்,அவரின் ஆலோசனைப் படி அவளை டிஸ்சார்ஜ் செய்து விட்டுக்கு அழைத்து சென்றான்.

கேட்டை கடந்து வீட்டினுள் நுழைந்த வண்டியை பார்க்கிங்கில் சென்று நிறுத்தியவன்,அவள் இறங்குவதற்கு காரின் கதவை திறந்துவிட்டு, இறங்குமாறு கூற...அவளோ தயங்கியவாறே இல்லையென தலையாட்டி "ஏதாவது சொல்லப் போறாங்க வேண்டாம்" என்றவளை முறைத்தவன் கைப்பிடித்து கீழே இறக்கினான்.

அவளின் கைப்பிடித்து அழைத்து உள்ளே நுழைய முயன்றவனை "அங்கேயே நில்லுடா" என்ற அன்னையின் குரலில் நின்றவனை பார்த்து 'இதுக்குத்தான் நான் வரமாட்டேன் என்று சொன்னேன்' என்பதுபோல் அவள் பார்க்க,

அந்த நேரம் கையில் ஆரத்தியோடு வந்த கீர்த்தனா இருவருக்கும் ஆரத்தியை சுற்றி நெற்றியில் குங்குமம் வைத்து, "வலது காலை எடுத்து வைத்து உள்ள வாம்மா" என்க... அதுவரை மனதில் ஏதேதோ நினைத்துக்கொண்டு இருந்தவள்,அவர்களின் செயலில் அழ தொடங்கினாள்.

இன்னுமே தான் நிரபராதி என நிரூபிக்கப்படாத நிலையில் தன்னை வரவேற்கும் குடும்பத்தை கண்டு... அழ தொடங்கியவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார் ஹர்ஷாவின் தாய் ராதிகா.

"இப்ப எதுக்கு அழற? இந்த வீட்ல உள்ள எல்லாருக்கும் உன்ன பத்தி நல்லாவே தெரியும்... உனக்கு எங்களை தெரியாது ஆனா எங்களுக்கு உன்ன முதல்ல இருந்தே தெரியும். எதைப்பற்றியும் கவலைப்படாத இனி எல்லாத்தையும் அவன் பாத்துப்பான் என ஆறுதல் கூறியவர் ஹாஸ்பிடல்ல இருந்து வந்தது டயர்டா இருக்கும், நீ போய் ரெஸ்ட் எடு" என்றவர் அங்குள்ள ருமை திறந்து அவளை ஓய்வெடுக்க செய்தவர்,

தன் மகனை நோக்கி
"என்னடா இப்படி அடிபட்டுருக்கு...நான் முதல்ல பார்த்ததுல பாதிதான் இருக்கா. பார்க்கவே கஷ்டமா இருக்கு என வருந்தியவர்,இதுக்கு காரணமானவங்களை சும்மாவே விடாதே" என்றார் ஆதங்கமாக,

மாலையில் குழந்தைகளும் வந்துவிட...அதுவரை எதையோ பறிக்கொடுத்தவள் போல் இருந்தவள், தன் கவலையை மறந்து அவர்களுடன் விளையாட தொடங்கினாள்.

குழந்தைகளும் சித்தி சித்தி என வாய் ஓய்யாமல் அழைக்க...அவளுக்கு கசக்குமா என்ன...மகிழ்ச்சியில் தத்தளித்தாள்.
 
Status
Not open for further replies.
Top