ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தேவதை வம்சம் நீயோ - கதை திரி

Status
Not open for further replies.

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 4

வீட்டினுள் நுழைந்தவன், முதலில் பார்த்தது டைனிங் டேபிலில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்த அன்னையை தான். அவன் வந்த சத்தத்தில் கண் விழித்தவர். "என்னடா இவ்வளவு நேரம்…. சாப்பிடலாம் வா" என அழைக்க…இல்லம்மா என சொல்ல நினைத்தவன், "அம்மா.. நீங்க சாப்பிட்டீங்களா" என தாயை பார்த்து கேட்டான்.

அவரோ "உன் கூட சேர்ந்து சாப்பிட தான் சாப்பிடாம வெயிட் பண்ணிட்டு இருக்கேன்" என்றார். தாயின் முகத்தில் தெரிந்த சோர்வில் மறுப்பு சொல்லாமல் சாப்பிட அமர்ந்தான்.

அவனுக்கு பரிமாற வந்த தாயை கைப்பற்றி அமர வைத்தவன், இருவருக்கும் பரிமாறியவாறு உண்ண தொடங்கினான். இரண்டு வாய் உண்டவன் தாய் உண்ணும் வரை அமர்ந்திருந்து விட்டு கைகழுவ முயன்றவனை பார்த்து.. "என்னடா தட்டில் வைத்தது அப்படியே இருக்கு, இன்னும் கொஞ்சம் சாப்பிடு" என்ற அன்னையிடம் "போதும்மா லேட் நைட் நிறைய சாப்பிட முடியாது" என்றவன் கைகழுவிவிட்டு அனைத்தையும் ஒதுங்க வைக்க தாய்க்கு உதவியவன்... தன் அறைக்கு சென்றான்.

குளித்துவிட்டு படுக்கையில் படுத்தவனுக்கு தூக்கம் வர மறுத்தது.. எழுந்து பால்கனியை நோக்கி சென்றான்.

இரவு நேரக் குளிர்காற்று, எலும்பை ஊடுருவும் குளிர்... ஆனால் அதற்கு சற்றும் பாதிக்காதவன் போன்று கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு எதிரில் இருக்கும் இருட்டை வெறித்துக் கொண்டிருந்தான் ஹர்ஷா.

அந்த இருளுக்குள் எதையோ துலாவி தேடி கொண்டிருந்தவனின் முகம் மெல்ல கனிந்தது…. தன் எதிரில் தோன்றிய நிலவை கண்டு. அதனை பார்க்கையில் தன்னவளின் முகம் கண்முன் தோன்ற... இருள் படர்ந்த வானிற்கு அழகு சேர்ப்பது போல் காட்சியளிக்கும் அந்த முழு நிலவு போல் தன்னவளை நினைக்கையில் மனம் முழுவதும் ஒரு புத்துணர்வும் உற்சாகமும் வருவதை அவனால் உணர முடிந்தது.

இதுவரை மனதில் இருந்த சஞ்சலங்கள் விடைபெற்று சென்றது போல் தோன்றியது அவனுக்கு. சிறிது நேரம் அங்கேயே நின்று நிலவினை ரசித்தவன் போய் படுக்கையில் விழுந்தான்.

கடந்த பதினைந்து நாட்கள் இல்லாமல் போன தூக்கம் இன்று அவனை நெருங்கியது. தன்னவளை கண்ட மகிழ்வில் மெல்ல கண்ணயர்ந்தான்.

அவளும் தன்னவனை கண்ட மகிழ்விலும்... இனி அனைத்தையும் அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையிலும் நிம்மதியாக உறங்கி போனாள்.

மறுநாள் காலையில் விரைவாக கிளம்பி கீழே வந்தவனின் முகத்தில் நேற்று இருந்த வெறுமை இல்லாமல் தெளிவாக இருந்ததை கண்டு குடும்பத்தினர்க்கு சற்று நிம்மதியாக இருந்தது.

"என்னப்பா... இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்ட... ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணு டிஃபன் ரெடியாயிடும்" என்ற தாயை தடுத்தவன் "இல்லம்மா... இன்னைக்கு கோர்ட்ல கார்த்திகாவோட கேஸ். அதனால கொஞ்சம் சீக்கிரம் கிளம்பிட்டேன்" என தான் விரைவாக செல்ல வேண்டியதற்கான காரணத்தை கூறியவனை கைபிடித்து பூஜை அறைக்குள் அழைத்து சென்றார்.

கடவுள் முன் கண்களை மூடி கைக்கூப்பி நின்றவன், தன்னவளின் அனைத்து பிரச்சனைகளும் இன்றோடு முடிந்துவிடவேண்டும் என மனமுருகி வேண்டி கொண்டு, தன் முன் நீட்டப்பட்ட ஆரத்தியை தொட்டு கண்களில் ஒற்றியவன்...திருநீரை எடுத்து நெற்றியில் தீட்டிகொண்டான். அனைவரிடமும் விடைபெற்று நீதிமன்றம் நோக்கி புறப்பட்டான்.

சென்னை உயர்நீதிமன்றம்...வெள்ளை சட்டையும் கருப்பு மேலங்கியும் அணிந்த வழக்கறிஞர்கள், காக்கி சட்டையணிந்த போலீசார், கை விலங்குடன் குற்றவாளிகள், சாட்சியாளர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள், செய்தியாளர்கள், பத்திரிகையாளர்கள் என பலதரப்பட்ட மக்களின் கூட்டத்தோடும் சலசலப்போடும் காணப்பட்டது.

நீதிமன்ற வளாகத்தில் மின்னல் வேகத்தில் நுழைந்த ஜீப்பிலிருந்து இறங்கினான் ஹர்ஷவர்தன். அந்த போலீஸ் சீருடை அவனது முறுக்கேறிய உடலுக்கு கச்சிதமாக பொருந்தியது. தனது கேப்பை எடுத்து தலையில் அணிந்தவன் கம்பீர நடையுடன் உள் நுழைந்தான்.

இன்னும் நீதிபதி வந்திராத நிலையில் அந்த வளாகமே சற்று சலசலப்புடன் காணப்பட்டது. அவனின் கண்கள் தன்னவளை தேட... அதேநேரத்தில் கைவிலங்குடன் இரு பெண் போலீஸ் அதிகாரிகளுடன் உள்நுழைந்தாள் கார்த்திகா. இருவர் கண்களும் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொள்ள அவள் கண்களில் கண்ட வெறுமையில் தாக்கப்பட்டவனாய்... தன் கண்களை மூடி திறந்து கண்களாலேயே ஆறுதல் சொல்ல…. அவளும் சிறு தலையசைப்போடு அவர்களுடன் சென்றாள்.

ஒரு நீண்ட சதுர வடிவிலான மேசையின் நடுவில் நீதிபதிக்கான பெரிய நாற்காலி...அதன் மேல் பகுதியில் வாய்மையே வெல்லும் எனும் வாக்கியமும், இடப்புறத்தில்…" நீதி தேவதை"... வெள்ளை நிற பெண் சிலை ஒன்று கண்களில் கருமை நிற துணியை கட்டி கொண்டு இரு தரப்பிற்கும் சமமான நீதியே வழங்கப்படும் என்பதற்கு அடையாளமாக கையில் தராசுடன் காட்சியளித்தது.

நீதிபதி உள்ளே நுழைய அதுவரை இருந்த சலசலப்பு காணாமல் போய்…. அமைதியாக அனைவரும் எழுந்து மரியாதை செலுத்த அதனை ஏற்றுக் கொண்டவர் தனது இருக்கையில் சென்று அமர்ந்தார்.

வழக்கை தொடங்குமாறு அனுமதியளித்த நீதிபதிக்கு "எஸ் யுவர் ஹானர் ...என எழுந்து பதில் அளித்துவிட்டு வழக்கை தொடங்கினார் அரசு தரப்பு வழக்கறிஞர் மிஸ்டர். சக்கரவர்த்தி.

"இதுவரை இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்துள்ளது. அதன் வரிசையில் இன்றும் ஒரு வினோதமான வழக்கு... தன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் தனியொரு நபராக அதுவும் ஒரு பெண்...கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.

அதன்படி என் முதல் கட்ட விசாரணைக்காக குற்றம் சாட்டப்பட்ட கார்த்திகா அவர்களை விசாரிக்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றவர்க்கு அனுமதி வழங்கப்பட,

"கார்த்திகை நிலா…. கார்த்திகை நிலா... கார்த்திகை நிலா…" என மூன்று முறை அழைக்கப்பட, கைவிலங்கு அவிழ்க்கப்பட்டு குற்றவாளிகள் நிற்கும் கூண்டில் ஏறி நின்றாள் கார்த்திகா.

அனைவரிடமும் பெறப்படும் சத்தியம்... "நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை" என பெறப்பட வழக்கு தொடர்ந்தது.

"யுவர் ஹானர்…. குற்றவாளி கூண்டில் நிற்கும் இந்தப் பெண் மிஸ். கார்த்திகா அவர்கள் கடந்த மாதம்... அதாவது செப்டம்பர் மாதம் பத்தாம் தேதியன்று இவர் குடும்பத்தை சார்ந்த ஐந்து நபர்களை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். அதற்கான அனைத்து சாட்சிகளும் தங்கள் முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றவர், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி, இரும்பு கம்பி, பூச்சாடி என அனைத்து பொருட்களிலும் இவரின் கைரேகைகள் பதிவாகி இருக்கிறது.

இதற்கு மேலும் எந்தவித சாட்சிகளும் தேவையில்லை என கருதி இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் படி அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்றவரை இடைமறித்து ஒரு குரல்.

"அப்ஜெக்சன் யுவர் ஹானர்…." என எழுந்து நின்றான் கௌஷிக். பார்ப்பதற்கு ஹிந்தி பட ஹீரோ போல் இருப்பவன்...ஒரு பிரபல கிரிமினல் லாயர். அதுமட்டுமின்றி பல தொழிலதிபர்களுக்கு சட்ட ஆலோசகராக இருப்பவன், ஹர்ஷவர்தனின் உயிர் நண்பன்.

"எஸ் ப்ரோஸிட்…" என்ற நீதிபதியின் அனுமதிக்கு பிறகு... இது நான்
மிஸ். கார்த்திகை நிலா சார்பாக வாதாடுவதற்க்கான அறிக்கை என நீதிபதியிடம் சமர்ப்பித்தவன்,

"கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தில் உள்ள கைரேகையை மட்டும் வைத்துக்கொண்டு இவங்கதான் கொலையாளி என சொல்வது எப்படி நியாயம்" என்றவனை, லூசா நீ என்பதுபோல் பார்த்த சக்கரவர்த்தி,

"யுவர் ஹானர் ...எதிர்தரப்பு வக்கில் சொல்றது விளையாட்டாய் இருக்கு. பூட்டப்பட்ட வீட்டில் இவங்க கொலை பண்ணலன்னா... பூதமா வந்து கொலை பண்ணியிருக்கும்" என்றவரை பார்த்த கௌஷிக்,

"இதில் விளையாட ஒன்றுமே இல்லை சார்….கொலை பண்ணணும்னு முடிவு பண்ணவங்க கொலையும் பண்ணிட்டு அங்கேயே மயங்கி இருப்பாங்களா…. தப்பிச்சு போயிருக்க மாட்டாங்க" என்றவனை நக்கலாக பார்த்து சிரித்த எதிர்தரப்பு வக்கில்..

"அப்போ கண்டிப்பா பூதம் தான் கொலைப் பண்ணிருக்கும்..இல்லையாமிஸ்டர் கௌஷிக். நிறைய பேய் படமெல்லாம் பார்ப்பிங்க போல அதுலதான் பேய் கொலை பண்ணிட்டு பழியை வேறொருவர் மேலப்போடும்.
அதுமாதிரி தான் இங்கேயும் ஒரு தப்பும் பண்ணாத இந்த பெண் கார்த்திகா மேலும் சுமத்தப்பட்டு இருக்கு அப்படித்தானே சார். ஆனா அதுக்கும் சாட்சி வேணுமே...ஒருவேளை சாட்சிக்கு ஏதாவது பேய்ய கூட்டிட்டு வந்திருக்கீங்களா" என்று நக்கலாக சிரிக்க.

"மை லார்ட் ...இது மிஸ் கார்த்திகாவின் மெடிக்கல் ரிபோர்ட். அன்னைக்கு மயங்கி விழுந்தவங்கள மருத்துவமனையில் சேர்த்தப்போது எடுக்கப்பட்ட டெஸ்ட் ரிப்போட்...இதன்படி இவங்க உடம்பில் தூக்கமருந்து கலந்திருப்பதாகவும் அதன் வீரியத்தின் அளவுப்படி சுமார் பத்து மணிநேரத்திற்கு முன்பே அது அவங்க இரத்தத்தில் கலந்திருப்பதாகவும் இருக்கு. அப்படி பார்த்தால் கொலை செய்யப்பட்ட நேரத்திற்கு முன்பே அவங்க தன் சுயநினைவை இழந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் அவங்க எப்படி கொலை பண்ணியிருக்க முடியும்.

இல்லைன்னா... சார் சொல்ற மாதிரி தூங்கிட்டு இருந்த மிஸ் கார்த்திகா சரியா நைட் பனிரெண்டு மணிக்கு எழுந்து எல்லாரையும் கொலை பண்ணிட்டு திரும்பவும் போய் தூங்கி இருப்பாங்க போல" என சொல்லிட்டு இப்போது இவன் நக்கலாக சிரிக்க,

அதை பொறுக்காத எதிர்தரப்பு வக்கீல்.."அப்போ இந்த கொலைகளை பண்ணது யாரு?" என கேட்க,

"அத இனிமேல் தான் கண்டுபிடிக்க வேண்டும்' என்றவன், யுவர் ஹானர் இந்த வழக்கை பற்றி இன்னும் விசாரிக்க கால அவகாசம் வேண்டும் என்றும்...செல்வி.கார்த்திகா அவர்களை காவல்துறையினர் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்"
என்று தனது வாதத்தினை முடித்துவிட்டு இருக்கையில் சென்று அமர்ந்தான்.


இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி "போதுமான ஆதாரங்கள் இல்லாததால் வழக்கை இரண்டு வாரங்கள் ஒத்திவைக்கிறேன்" என்றவர்,மேலும் மிஸ் .கார்த்திகை நிலாவை காவல்துறை எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கிவிட்டு... எழுந்து சென்றார்.

வழக்கு முடிந்தவுடன் சக்கரவர்த்தியை நோக்கி சென்ற கௌஷிக் "எனக்கும் ரொம்ப கஷ்டமா தான் இருக்கு சார்.. உங்களுடைய ஜூனியராக இருந்த நான் இப்போது உங்களுக்கு எதிராக வாதாட வந்திருப்பது. ஆனால் எனக்கு வேற வழியே இல்லயே.. என்னோட உயிர் தோழனுக்காக இந்த கேஸை எப்படியும் ஜெயிப்பேன்" என்றவன் தன் நண்பனை நோக்கி சென்றான்.

"தேங்க்ஸ் மச்சி…"என அணைத்து கொண்ட ஹர்ஷவர்தனை தானும் அணைத்துக் கொண்ட கௌஷிக், "ஃப்ரெண்ட்ஸ்க்கு நடுவுல என்னடா தேங்க்ஸ். எனக்கு ஒரு பிரச்சினை என்றால் நீ வரமாட்டியா... அது மாதிரிதான் இதுவும். உனக்கு நான் வராமல் வேறு யாரு வருவா" என உரிமையாக கண்டித்தவன்,

"ஒரு பத்து நிமிஷம்டா ...ஒரு சின்ன வேலை முடிச்சுட்டு வந்துடுறேன்" என விடைபெற்று சென்றான்.

அவன் சென்றவுடன்... தன்னவளை நோக்கி சென்றான். இவனைக் கண்டவுடன் பெண் காவலர்கள் ஒதுங்கிக்கொள்ள... அவள் கையைப் பற்றி மென்மையாக வருடியவன் "இனி நீ எதுக்கும் கவலைப் படாதே... அடுத்த ஹியரிங் உனக்கு கண்டிப்பாக விடுதலையாக தான் இருக்கும் என்றவன், நமக்கான கஷ்டங்கள் எல்லாம் இன்னும் இரண்டு வாரங்களே" எனக் கூறியவன் அணைக்க துடித்த கரங்களை கட்டுப்படுத்தி... அவள் கைகளை அழுத்தி விடுவித்தான்.

கார்த்திகாவுக்கு மனம் நிம்மதியாக இருந்தது. நமக்கான நியாயத்தை கேட்கவும்... தன் மீது அன்பு கொள்ளவும் இந்த உலகில் இன்னும் ஒரு ஜீவன் இருப்பதே சற்று தைரியத்தையும் எதையும் எதிர்கொள்ளும் வலிமையையும் கொடுத்தது.

சற்று நேரத்தில்….அவளை காவல் அதிகாரிகள் ஜீப்பில் ஏறி செல்ல, இவன் தன் நண்பனை நோக்கி சென்றான். அந்தநாள் அவ்வாறே செல்ல…

மறுநாள் தனது அலுவலகத்துக்கு வந்தவன் "ரவீந்திரன் இன்னைக்கு மர்டர் நடந்த ஸ்பாட்டுக்கு போகணும் என்னோட வாங்க" என்றவன் முன்னே செல்ல... திருதிருவென விழித்துக் கொண்டு நின்றவனைப் பார்த்த ஹர்ஷா "என்ன இந்த முழி முழிக்கிறிங்க ?" என கேட்க,

"சார்.. எந்த மர்டர்" என்றவனை... வெட்டவா குத்தவா என்பதுபோல் பார்த்தவன் "நீங்க எந்த கேஸ் அஸைன்மென்ட் பார்க்குறீங்கன்னு கூட தெரியாம தான் டியூட்டிக்கு வரிங்களா... இல்ல அதையும் நான்தான் சொல்லித் தரணுமா…" என கோபமாக கேட்க, அவனை கண்டு பயந்தவன் "சாரி சார்... ஏதோ ஞாபகத்தில்" என உளறி கொட்ட..அவனோ கோபமாக சென்று ஜீப்பில் ஏறினான்.


படித்துவிட்டு தங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 5

கோபமாக சென்று ஜீப்பில் ஏறியவனை பின் தொடர்ந்து ஏறிய ரவீந்திரன் "சாரி சார்"என இழுக்க,

"மப்ச்" என சலித்துக் கொண்டவன் வண்டியை எடுக்குமாறு ஆணையிட... வண்டி கார்த்திகாவின் வீட்டை நோக்கி புறப்பட்டது. கௌஷிக்கை தொலைபேசியில் அழைத்த ஹர்ஷா…"மச்சி மர்டர் நடந்த ஸ்பாட்டுக்கு தான் போறேன். நீயும் வந்தா நமக்கு ஏதாவது எவிடன்ஸ் கிடைக்குதான்னு பார்க்கலாம் என்ன சொல்ற" என்க,

"சரிடா... நீ கிளம்பு நான் நேர ஸ்பாட்டுக்கு வந்துடறேன்" எனக்கூறிவிட்டு அலைபேசியை வைத்தான்.

சென்னை அண்ணாநகர்...அதிகமாக பணக்காரர்கள் வசிக்கும் ஏரியா. சென்னை மாநகரத்தில் பிரபலமான மற்றும் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதி.

ஜீப் கார்த்திகாவின் வீட்டின் முன் நிற்க... சரியாக அதே நேரம் கௌஷிக்கும் வந்து சேர்ந்தான்.

கார்த்திகாவின் வீடு இரண்டு அடுக்கு மாளிகை போன்று அழகாக, உயரமான காம்பவுண்ட் சுவருடன் காணப்பட்டது. கேட்டுக்கும் வீட்டுக்கும் இடையே நீண்ட சிமெண்ட் பாதை, இருபுறமும் பூச்செடிகளும் மரங்களும் நிறைந்து பார்ப்பதற்கு ஒரு நந்தவனம் போல் காட்சியளித்தது.

கேட்டை ஒட்டி செக்யூரிட்டிக்கான சிறிய அறை,சுழலும் சிசிடிவி கேமராக்கள் வாசல் கேட்டின் அருகில் ஒன்றும் வீட்டின் முன்புறம் ஒன்றும், பின் தோட்டத்தில் ஒன்றும்...என மொத்தம் மூன்று சிசிடிவி கேமராக்கள் இயங்கிக் கொண்டிருந்தது.

கேட்டை திறந்து கொண்டு மூவரும் உள்நுழைய... வீட்டின் அழகை கண்டு ஒரு நொடி மூவரும் வியக்கவே செய்தனர். பதினைந்து நாட்கள் எந்தவொரு பராமரிப்பும் இல்லாத போதும் செடிகளும் மரங்களும் பசுமையாகவும், பூக்கள் பூத்து குலுங்க பார்க்கவே ரம்மியமாக இருந்தது.

கௌஷிக் அந்த இடத்தை மிகவும் ரசித்து "செம்ம வீடு இல்லடா...
அண்ணாநகர் என்றாலே எப்போதும் பிசியாகவும் ட்ராபிக்காகவும் இருக்கும் ஆனா... இது கொஞ்சம் உள்ள இருக்கறதுனால ரொம்ப அமைதியா இருக்கு. நானும் ரொம்ப வருஷமா இந்த ஏரியா பக்கத்துல தான் இருக்கேன் இப்படி ஒரு வீட்டை பார்த்ததேயில்லை"என கூற தலையசைத்து ஏற்றவன் முன்நோக்கி சென்றான்.

வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டு உள்ளே நுழைந்தவர்கள் மூக்கை பொத்திக் கொண்டனர். பதினைந்து நாட்களாக அடைத்து கிடந்ததாலும், இரத்த வாடையும் சேர்ந்து ஒரு மாதிரியான துர்நாற்றத்துடன் இருந்தது.

திரும்பவும் ஒரு முறை என்ன நடந்தது என ரவிந்தரனிடம் கேட்க அவன் அனைத்தையும் சொல்லத் தொடங்கினான். அன்று நடந்த அனைத்தையும் சொல்லியவன் "செக்யூரிட்டி சொன்ன வாக்குமூலத்தின் படி அன்று புதிதாக யாரும் வீட்டுக்கு வரவும் இல்லை... யாரும் வெளியே செலவுமில்லை. அது மட்டுமில்லாமல் கொலை நடந்த நேரத்தில் எந்த விதமான சத்தமோ சந்தேகப்படுற மாதிரியான எந்த விஷயமும் நடக்கவில்லை என வாக்குமூலம் கொடுத்து இருக்காரு" என்றான்.

" ஃபோரென்சிக் (தடயவியல்) ரிப்போர்ட்டின் படி இவங்களோட கைரேகை தவிர வேற யாரோட கைரேகையும் கிடைக்கவில்லை.
சிசிடிவி கேமராவிலும் யாரும் வந்ததற்கான எந்த பதிவும் இல்லை" என்றவனை தாடையை தடவியவாறே பார்த்தவன், திரும்பி தன் நண்பனை பார்த்தான் கௌஷிக்.

"மச்சி எனக்கு என்னவோ... இந்த கேஸை எப்படி முடிக்க போறோம்னு தெரியலை. ஒரு எவிடன்ஸ் கூட இல்லை. ஒருவேளை அவளே கொலை பண்ணியிருப்பாளோன்னு எனக்கே சந்தேகமா இருக்கு" என்ற நண்பனை முறைத்து பார்த்தவன், தலையை கையில் தாங்கி அப்படியே அங்குள்ள சோபாவில் அமர்ந்து கொண்டான்.

அவன் கோபமாக இருப்பது புரிய
"சாரிடா…தப்பா எடுத்துக்காத, எந்த எவிடன்ஸ்ம் கிடைக்கலையேன்னு சொன்னேன்' என்றவன் சரிடா... நீ பொறுமையா பாத்துட்டு வா. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு" என விடைபெற்று சென்றுவிட்டான்.

சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தவன் பின் எழுந்து வீட்டிற்கு வெளியே வந்தான். கொலை நடந்த அனைத்து அறைகளையும் பார்க்க வேண்டும் என எண்ணிக் கொண்டு வந்தவன், இப்போது இருக்கும் மனநிலையில் எதையும் யோசிக்க முடியாமல் எழுந்து தோட்டத்தை நோக்கி சென்றான். ஒருமுறை வீட்டை சுற்றிவிட்டு வந்து அங்குள்ள மேடையில் அமர்ந்தவன், சற்று நேரம் யோசனையுடன் தோட்டத்தை ஆராய்ந்தான். பின்பு ரவீந்திரனிடம் "ஜீப்பை எடுங்க... நாம கிளம்பலாம்" என்றவன் கேட்டை நோக்கி சென்றான்.

"வந்தாரு….உட்கார்ந்தாரு….இப்போ போகலாம்னு சொல்றாரு. பொண்ணுங்க மனச தான் புரிஞ்சுக்க முடியாதுன்னு சொல்லுவாங்க.. இங்க எல்லாமே தலைகீழா நடக்குது. இவரை புரிஞ்சுக்கவே முடியலையே புருஷோத்தமா" என சினிமா பாணியில் வாய்விட்டு கூறியவன்... வண்டியை நோக்கி ஓடினான்.

அலுவலகம் வந்தடைந்தவன்
ரவீந்திரனை நோக்கி "நாளைக்கு அந்த வீட்ல வேலை செஞ்ச செக்யூரிட்டி டிரைவர், வேலைக்காரன், தோட்டக்காரன் எல்லாத்தையும் நான் பாக்கணும். அதற்கு ஏற்பாடு பண்ணுங்க' என்றவன்...அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் இன்னைக்கு நைட் நமக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு.சோ நீங்க இப்பவே வீட்டுக்கு போகணும் என்றால் போங்க. நான் கால் பண்ணும் போது வந்தா போதும்" என்று கூறியவன், தன் முன் இருந்த பைலை பார்க்க தொடங்கிவிட்டான்.

அதைக்கேட்ட ரவீந்திரன் "அய்யய்யோ சார் நைட்டா ….எந்த வேலையா இருந்தாலும் இப்பவே முடிச்சிடலாம் சார்" என்றவனை பார்த்து "உங்கள வர்றீங்களான்னு இங்கே யாரும் கேட்கலை...வரணும் அவ்வளவுதான்" என்றவன் எழுந்து சென்று விட்டான்.

அவன் எழுந்து சென்றதைக் கூட அறியாமல் பிரம்மை பிடித்தவன் போல் நின்றவன்... சிறிது நேரத்திற்கு பின்பே தன்நிலையடைந்தான்.

இரவு உணவை அனைவருடனும் சேர்ந்து சாப்பிட அமர்ந்தவன், தன் தாயைப் பார்த்து "அம்மா இன்னைக்கு எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு... நைட் வீட்ல இருக்க மாட்டேன்" என்றான்.

"சரிடா உன் இஷ்டம் எதையாவது பண்ணு. நான் சொன்னா மட்டும் கேட்கவா போற" என சலித்துக் கொள்ள,

"அம்மா... ரொம்ப முக்கியமான வேலை அதனாலதான்" என தாயிடம் கெஞ்ச... "சரி சரி ரொம்ப கெஞ்சாத போயிட்டு வா" என அவன் தலை கோதினார் அவன் அன்னை.

"கேஸ் என்ன நிலைமையில் இருக்கு" என கேட்ட தந்தையை பார்த்து பெருமூச்சு விட்டவன் "இன்னும் ஒரு எவிடென்ஸ்ம் கிடைக்கலப்பா… கூடிய சீக்கிரம் கிடைக்கும்" என்றவன், உண்டுவிட்டு தன் அறைக்கு சென்றான்.

திரும்பவும் வெளியே செல்ல கிளம்பி வந்தவன் அனைவரிடமும் விடைபெற்றுவிட்டு... தனது புல்லட்டை கிளப்பினான்.

செல்போன் ஒலிக்க.. அதை ஏற்று காதில் வைத்த ரவீந்திரன்
"ஓகே சார்..இதோ கிளம்பிட்டேன் சார்...எஸ் சார்" ...என வார்த்தைக்கு வார்த்தை சார் போட்டவன் போனை அணைத்துவிட்டு 'கடவுளே…. இன்னைக்கு எப்படியாவது உயிரோட வீட்டுக்கு திரும்பி வர வச்சிடு' என வேண்டி கொண்டவன், ஹர்ஷவர்தன் சொன்ன இடத்தை நோக்கிப் பயணித்தான்.

கார்த்திகா வீட்டின் ஏரியாவை அடைந்தவன் தெரு முனையிலேயே ஆட்டோவை நிறுத்தி விட்டு ஹர்ஷாக்காக காத்திருந்தான். சற்று நேரத்தில் அவனும் வந்து விட இருவரும் சேர்ந்து ஆள் நடமாட்டம் இல்லாத அந்த தெருவில் நடந்தனர்.

மணி நள்ளிரவு 11:30. 'இந்த நேரத்தில்தான் பேய் வாக்கிங் போகும் என்று கேள்விப்பட்டுருக்கேன்…
இவரு பேய்ய விட மோசமா இருப்பாரு போல. இந்த நேரத்துல எங்க அழைச்சிட்டு போறாறுன்னு தெரியலையே... கருப்புசாமி நீதான் துணை இருக்கணும்' என மனதிற்குள் கடவுளை வேண்டிக்கொண்டு... பலியாடு போல் அவன் பின்னால் சென்றான் ரவீந்திரன்.

"சார்…. நாம இப்போ எங்கே போறோம்" என கேள்வி கேட்டவனை பார்த்து, "போன உனக்கே தெரியும் பேசாம வா" என இழுத்து சென்றான்.

கார்த்திகா வீட்டின் பின்புற தெரு வழியாக அந்த வீட்டை அடைந்தவர்கள்... அங்குள்ள உயர்ந்த காம்பவுண்ட் சுவரின் அருகே சென்றனர்.

"சார்…. நாம…. இப்போ… இங்கே" என இழுக்க,

"நீ நினைக்கிற மாதிரியே தான், சுவர் ஏறி குதிக்க போறோம்" என்றவனை அதிர்ந்து பார்த்தவன், "சார்... நாம போலீஸ்... திருடன் இல்லை என்றான் பயத்துடன்.அதுவுமில்லாம இவ்ளோ பெரிய சுவரை எப்படி சார் தாண்டுறது. ஏதாவது சின்ன ஏணி இல்லனா ஸ்டூல் இருந்தா பரவாயில்லை" என்றவனை பார்த்து பல்லை கடித்தவன்,

"எதுக்கு தேவையில்லாம ஏணியல்லாம்... வேணும்னா நானே உன்னை தூக்கி விடவா" என நக்கலாக கேட்டவனை பார்த்து "உங்களுக்கு எதுக்கு சார் வீன் சிரமம்" என்றவனை கொல்லும் வெறி எழுந்தப்போதிலும் அதனை அடக்கி கொண்டவன்.

தனது கோபத்தை பார்வையில் காட்டி… "உண்மையிலேயே ட்ரெய்னிங்கெல்லம் அட்டென்ட் பண்ணி தான் போலீஸ் வேலைக்கு வந்தியா...இல்ல, லஞ்சம் கொடுத்து போலீஸ் வேலைக்கு வந்தியா.

எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல் இதை விட பெரிய சுவரெல்லாம் ஏறி கொலை, கொள்ளைன்னும் பண்றாங்க. உனக்கு என்ன?.. இப்ப நீ ஏறல, அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது" என மிரட்டியவனை பார்த்து இதெல்லாம் என் நேரம் என மனதுக்குள்ளேயே முணுமுணுத்து கொண்டான்.

ஒரே தாவலில் மரத்தில் ஒரு கால்வைத்து ஏறி குதித்த ஹர்ஷவர்தனை வியந்து பார்த்தவன், மனதில் உலகில் உள்ள அனைத்து கடவுளையும் வேண்டிக்கொண்டு குதிக்க முயற்சித்தான்.

மூன்று நான்கு என எண்ணிக்கை ஏறிக்கொண்டே போக ஐந்தாவது தாவலில் ஏறியவன் உள்ளே குதித்தான்.

"சார்... நாம இப்படி இருட்ல அதுவும் நைட்டுல வரத்துக்கு பதில் பகலிலேயே வந்திருக்கலாம்" எனக் கூறியவன்...அங்கே இருந்த கல் தடுக்கி விழுந்தான்.

விழுந்தவனை கைக்கொடுத்து தூக்கியவன் "நீ பகல்ல வந்தால் இப்படித்தான் விழுவியா" என கேட்க, "அது எப்படி சார் பகலில் தான் இங்கே இருக்கிற கல் தெரியுமே... ஒதுங்கி போயிடுவேன்" என்றவனை பார்த்து... "இப்ப புரியுதா பகல்ல தெரியிற விஷயம் இருட்ல தெரியாது. அதேபோல் பகல்ல சாதாரணமா தெரிகிற விஷயம் நைட்ல பெரிய விஷயமாகத தெரியும் இந்த கல் மாதிரி. அதனால ஒரு பொருளை எங்க தொலைத்தோமோ அங்க தான் தேடணும்" என்க

"அட நீங்க வேற சார்...பகலிலேயே பசுமாடு தெரியலையாம். நைட்ல அதுவும் இருட்டுல எருமமாடு தெரியுதாம்" என்றவனை "ஏய்...இதெல்லாம் ஒரு பழமொழின்னு சொல்லிட்டு இருக்க பாரு உன்னை" என திட்டியவனை தடுத்தவன்,

"சார் நீங்களே நல்லா யோசிச்சு பாருங்க... போலீஸ், ஃபோரென்சிக் இப்படி எல்லாரும் தேடியும் கிடைக்காத ஆதாரம் அதுவும் இந்த நைட் நேரத்துல எப்படி இருக்கும்" என்று சொல்ல, "நீயும் பாக்கத்தானே போற….எருமமாடு தெரியுதா இல்லையா என வெயிட் அண்ட் சி" என்றவன் வீட்டின் பின்னால் உள்ள சுவரின் ஜன்னலில் கால் வைத்து மாடியை நோக்கி ஏறினான்.

'கையிலயே சாவியை வச்சுக்கிட்டு...இப்படி எல்லாம் போகணும்னு என் தலையெழுத்து…. எல்லா குரங்கு வேளையும் செய்ய வேண்டியதா இருக்கு' என முணுமுணுத்துக்கொண்டே ஏறினான் ரவீந்திரன்.

மாடியை அடைந்தவன் "எந்த மாடியிலிருந்தாவது யாராவது நம்மை நோட் பண்றாங்களான்னு பாரு" என்றவனுக்கு பார்வை சுற்றிலும் பார்த்து இல்லை என சைகை செய்தான் ரவீந்திரன்.

மாடி கதவை திறக்க போனவன் திரும்பவும் ஒரு முறை சுற்றிலும் பார்வையை பதித்தவனின் பார்வை ஓரிடத்தில் நிலைத்தது.





படித்துவிட்டு உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள டியர்ஸ்
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 6

அவன் பார்வை சென்ற திசையில் பார்த்த ரவீந்திரன் "என்ன சார் அப்படி பாக்குறீங்க...அங்க என்ன இருக்கு , யாரும் இல்லையே" என்க, "உனக்கு மூளை தான் கம்மின்னு நினைச்சேன்.. பார்வை கூட கம்மிதான் போல' என்றவன் அந்த வீட்டு மாடியிலுள்ள வாட்டர் டேங்க் பக்கத்தில் பாரு" என்றான்.

உற்றுப் பார்த்தவன் "ஆமா சார் அங்க யாரோ இருக்காங்க...ஆனா தெளிவா தெரியல ஒளிஞ்சி இருக்கிற மாதிரி இருக்கு" என்றவனை பார்த்து "அப்புறம் முன்னாடி வந்து போஸ்சா குடுத்துட்டு இருப்பாங்க ... ஒன்னு அவன் நம்மள பாத்து பயந்து இருக்கணும், இல்லனா இதுக்கு முன்னாடி இது மாதிரி எதையாவது பார்த்திருக்க வாய்ப்பு இருக்கணும். நாளைக்கு அந்த வீட்டை பத்தியும் அங்குள்ள ஆட்களைப் பற்றியும் ஃபுல் டீடைல்ஸ் எனக்கு வேணும்" என்றவன் கேட்டை திறந்து உள்நுழைய இவனும் பின் தொடர்ந்தான்.

அந்த வீட்டில் மேலே மூன்று அறைகள், கீழே இரண்டு அறைகள், பூஜை அறை சமையல் அறை, ஹால் கொண்ட பெரிய வீடு.முதலில் கொலை நடந்த ஒவ்வொரு அறையாக பார்க்க சென்றனர்... முதல் அறை கார்த்திகாவின் தாய் தந்தை
ஹரிஹரன் அகல்யாவின் ரூம்... இரத்தக்கறை படிந்த படுக்கை விரிப்புடன் பதினைந்து நாட்கள் அடைந்து கிடந்ததால் ஏற்பட்ட துர்நாற்றத்துடன் காணப்பட்டது. அதனை கடந்து உள்ளே சென்றவன் ஒவ்வொரு இடமாக நோட்டமிட்டான்.

அங்கிருந்த பீரோவில் அவன் பார்வை பதிய, அதை பார்த்த ரவீந்தர் "எல்லா ரூம்ல உள்ள பீரோவை நல்லா பார்த்தாச்சு சார்… எந்த யூஸ்சும் இல்ல
அவங்களோட டிரஸ், நகை, பணம் , சில டாக்குமெண்ட்ஸ் தவிர எதுவுமே இல்லை" என்றான்.

"ம்ம்"...என்று மட்டும் பதிலளித்தவன் பீரோவைத் திறந்து ஆராய்ந்தான். அவன் சொன்னது போன்ற பொருட்கள் மட்டுமே இருக்க...அதை மூட தொடங்கியவனின் கை அங்குள்ள டைரியை கண்டு பின்வாங்கியது.

அதனை கையில் எடுத்தவன் "இந்த டைரியை பார்த்தாச்சா" என்க, "எஸ் சார் அதுல தினமும் நடக்கிற விஷயங்களை மட்டும் தான் எழுதி இருக்காரு. யாரை பற்றியும் தவறாகவோ, இல்ல சந்தேகப்படுற மாதிரியோ எதுவும் இல்லை" என்றான்.

ஒவ்வொரு பக்கமாக புரட்டியவனின் பார்வை ஒரு பக்கத்தில் எழுதியுள்ள நிகழ்வை யோசனையுடன் பார்த்தது. கொலை நடந்ததற்கு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்…சிறிது நேரம் அதனை யோசனையுடன் பார்த்தவன், பின்பு டைரியை உள்ளே வைத்து மூடிவிட்டு ரூமை விட்டு வெளியே வந்தான்.
ஒருவாறு எல்லா ரூமையும் பார்த்து முடித்தவன் கடைசியாக கார்த்திகாவின் அறைக்குள் நுழைந்தான்.

தன் உயிர் காதலியின் அறை, அவள் சிறையில் இருக்க… அவள் இல்லாத அறையில் நுழைய பிடித்தம் இல்லாத போதும் அவளுக்கான நியாயத்தை நிரூபிக்க வேறு வழி இன்றி உள்ளே நுழைந்தான்.

படுக்கை விரிப்பு, ஜன்னல் திரைச்சீலை என சுற்றியும் அவளுக்குப் பிடித்த பேபி பிங்க் நிறத்தில்.. சுவரில் ஆங்காங்கே சில கிறுக்கல்கள், மெத்தையில் குவிந்து கிடந்த டெடி பியர் பொம்மைகள் என சிறு குழந்தையின் அறை போல் காட்சியளித்தது அந்த அறை. அதனை பார்த்தவனின் இதழ்களில் மெல்லிய புன்னகை... 'இந்நேரம் தங்களுக்கு திருமணம் ஆகியிருந்தால் தன்னுடைய குழந்தைக்கு தாயாகிருப்பாள். இதுல சின்ன குழந்தை மாதிரி பொம்மை, சுவர்கிருக்கல்ன்னு இருக்கா... என்னோட பாடு திண்டாட்டம் தான்' என மனதிற்குள் எண்ணியவன் அறையை சுற்றி பார்வையை பதித்தான்.

சுவரில் ஆங்காங்கே மாட்டப்பட்ட பெயிண்ட் ஆர்ட்களின் நடுவில் அவர்களின் குடும்ப புகைப்படம் அதில் அழகாய் பட்டு பாவாடை சட்டையில் இரட்டை ஜடையுடன் முத்துப்பற்கள் தெரிய சிரித்துக்கொண்டிருந்தாள் கார்த்திகா. இதுவரை அவளை இப்படி ஒரு தோற்றத்தில் பார்த்ததே இல்லாதவனின் பார்வையில் காதல் வழிந்தது. எப்படியும் அந்த புகைப்படம் அவள் பள்ளிக்கு செல்லும் காலங்களில் எடுக்கப்பட்டதாக இருக்கும் என எண்ணியவன் ஒவ்வொன்றையும் ரசித்து பார்த்தான்.

அவன் பார்வையில் இருந்த ரசனையை கண்டுகொண்ட ரவீந்திரன்... 'இந்த ரூமுக்கு வந்ததிலிருந்து முகத்தில் தௌவுசன் வாட்ஸ் பல்பு போட்ட மாதிரி முகம் ரொம்ப பிரகாசமா இருக்கே…' என தனக்கு இல்லாத மூளையை கசக்கி யோசித்தவன் "சார்... பார்த்த எல்லா ரும்லயும் எந்த க்ளுவும் கிடைக்கல, இங்க மட்டும் என்ன கிடைக்க போகுது மணி இப்பவே 1 நாளைக்கு ட்யூட்டிக்கு வேற போகணும்" என இழுத்தவனை பார்த்த ஹர்ஷா "போகலாம் போகலாம்" என சொல்லிவிட்டு மீண்டும் விட்ட வேலையை தொடர்ந்தான்.

அங்குள்ள வார்ட்ரோபை திறந்தவன் அங்கு அழகாக அடுக்கி வைக்கப்பட்ட தன்னவளின் உடைகளை வருடினான். தனக்கு ஏதாவது ஆதாரம் கிடைக்கிறதா என்ற எண்ணத்தில் ஆராய தொடங்கியவனுக்கு எந்த ஒரு ஆதாரமும் கிடைக்காததால் அதனை மூடி வைத்தவன், கட்டில் அருகில் உள்ள மேஜையை ஆராயத் தொடங்கினான்.

மேஜையை ஆராயத் தொடங்கியவனின் பார்வையில் மேஜைக்கும் கட்டிலுக்கும் இடைப்பட்ட சந்தில் ஒரு செயின் தென்பட…. குனிந்து உள்ளே கைவிட்டு அதை எடுத்தவன், அந்த செயினை கண்டு சற்று அதிர்ந்துதான் போனான்.

H என டாலர் உள்ள செயின்…"சார் இது அவங்களோட சையினா கூட இருக்கலாம்" என்றவனை முறைத்து,

"உங்களோட சொந்த கருத்தை கேட்க நான் தயாராக இல்லை...இது கார்த்திகாவோடது இல்லை… இந்த செயின் யாரோடதுன்னு எனக்கு நல்லா தெரியும்" என்றான்.


"சார்... நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே" என்றவனை பார்த்து "ஏதோ தப்பாதான் கேக்க போற கேளு" என்றான் ஹர்ஷாவும்.

"அது வந்து... இந்த கேஸ்ல நீங்க கொஞ்சம் ஓவரா... அதாவது அந்த பொண்ணு மேல தப்பில்லாத மாதிரியான கண்ணோட்டத்திலேயே பாக்குறீங்க. அதுமட்டுமில்லாம உங்களுக்கு அந்தப் பொண்ணு மேல ஒரு சாஃப்ட் கார்னர், அது ஏன்னு தெரிஞ்சுக்கலாமா" என்றவனை பார்த்து வாய்விட்டு சிரித்தவன்,

"இந்த கேஸை நீங்க கையிலெடுத்து எவ்வளவு நாள் ஆகுது" என கேட்க... 'நான் கேட்டதுக்கு பதில் சொல்லாமல் என்னை திருப்பி கேட்கிறார்' என மனதில் முணுமுணுத்தவன் "பதினைந்து நாள் ஆகுது சார்" என்றான்.

பின்னர் "இதுவரை இந்த கேஸ் சம்பந்தமாக யாரையெல்லாம் விசாரித்திருக்கீங்க" என்றவனுக்கு… "யாரையும் விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லையே சார்….வீட்டில் உள்ள வேலைக்காரர்கள் டிரைவர்,செக்யூரிட்டி இவங்கல மட்டும்தான் விசாரிச்சோம். அது மட்டுமில்லாமல் எல்லா சாட்சியும் அவங்களுக்கு எதிரா இருந்ததுனால யாரையும் விசாரிக்க வேண்டிய சூழல் ஏற்படலை" என்றான்.

"அது எப்படி ரவீந்திரன்... அஞ்சு பேர் கொடூரமாக கொலை பண்ணப்பட்ட கேஸ்ல, வெறும் வீட்ல உள்ளவங்கள மட்டும் விசாரிச்சு இருக்கீங்க' என்றவன் ... இப்போ நான் ஒன்னு சொல்றேன் நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க... உண்மையிலே உங்களுக்கு இருக்கிற இவ்வளவு பெரிய மண்டையில கொஞ்சுண்டு மூளை இருந்திருந்தா….அவ தான் குற்றவாளின்னு முடிவு பண்றது முன்னாடி அவ காலேஜ் ஃப்ரெண்ட்ஸ்,வேலை செய்த ஆஃபீஸ்,அவளுக்கு ஏதாவது பாய்ஃப்ரெண்ட் இல்லனா லவ் அப்ஃபெயிர் ஏதாவது இருக்கானு விசாரிச்சிருக்கணும். அப்படி மட்டும் நீங்க பண்ணி இருந்தீங்கன்னா... நீங்க விசாரிக்க வேண்டிய லிஸ்டில் முதல்ல என் பேரு தான் இருந்திருக்கும்" என்றான்.

"இந்த வீட்டை சுற்றியுள்ள எல்லா வீட்டிலும் விசாரித்திருந்தால் இன்னைக்கு நம்மள ஒருத்தன் பார்த்த மாதிரி அன்னைக்கு நடந்த சம்பவத்திற்கு ஏதாவது ஆதாரம் கிடைத்திருக்கும்.
அப்புறம் எதுவோ சொன்னீங்களே... எல்லாம் சாட்சியும் அவங்களுக்கு எதிராக இருக்குன்னு. அப்படி இல்ல ரவீந்திரன், எவ்ரி காயின் ஹேஸ் டூ சைட்ஸ்.
அதாவது எல்லாம் நாணயத்திற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கு... நீங்க அவதான் கொலைகாரின்னு ஒரு கருப்பு கண்ணாடி போட்டுட்டு பார்த்தீங்கன்னா அவள் மட்டும்தான் குற்றவாளியா தெரிவா... அந்த கண்ணாடியை கழட்டிட்டு பாருங்க அப்பதான் சுத்தி என்ன நடக்குதுன்னு உங்களால புரிஞ்சுக்க முடியும்" என்றான்.


அவன் பேச்சில் அதிர்ந்து "சார்... நீங்க எப்படி கேஸ்க்கு விட்னஸ்" என இழுத்தவனுக்கு பதிலாக புன்னகையை மட்டுமே பதில் அளித்தவன், அந்த மேசை மேல் உள்ள போட்டோ ஃபிரேமில் உள்ள புகைப்படத்தின் பின்னாலிருந்த போட்டோவை எடுத்து அவன் முன் நீட்டினான்.

அதனை வாங்கி பார்த்தவன் அதிர்ந்து "சார்... இது.." என திணறியவன் கண்களை நன்றாக கசக்கிவிட்டு திரும்பவும் பார்த்தவனின் கண்களில் தெரிந்தது என்னவோ…. ஹர்ஷவர்தனின் மார்பில் சாய்ந்திருந்த கார்த்திகாவின் பிம்பமே.

கைகள் நடுங்க அந்த புகைப்படத்தை பார்த்தவன் "சார்... இவங்க" என இழுக்க... "ஷி இஸ் மை லவ். அவ என்னோட உயிர் ரவீந்திரன்' என்றவன், இப்போ சொல்லுங்க? இந்த கேஸ்ல நான் ரொம்ப ஓவரா போறனா. என்னை பொறுத்தவரைக்கும் நான் ரொம்ப நிதானமா போயிட்டு இருக்கேன். எந்த ஒரு சின்ன விஷயத்தையும் விட்ற கூடாதுன்னு ஒவ்வொரு அடியும் பார்த்து பார்த்து வச்சுட்டு இருக்கேன்.
எந்த சாட்சியும் கிடைக்கலைன்னு சொன்னிங்களே ரவீந்திரன்... யார் சொன்னா கிடைக்கலைன்னு. அது உங்க கண்ணுக்கு தெரியல.
இந்த செயின்...இவங்க அப்பாவோட டைரி...அப்பறம் மாடியில் பார்த்த நபர் ..இவங்கல விசாரிச்சாலே போதும் நம்ம தேடலுக்கு பதில் கிடைக்கும்" என்றான்.

சிறிது நேரத்தில் வந்தது போல் அந்த வீட்டை விட்டுத் திரும்பி சென்றனர்.
இரண்டரை மணிக்கு வீடு வந்தவன் தன்னிடமுள்ள சாவி கொண்டு வீட்டை திறந்து உள்ளே நுழைந்தான்.
தன் அறையில் மெத்தையில் விழுந்தவனின் நினைவு இரண்டு வருடங்களுக்கு முன்பு பயணித்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு

காலை 6:00 மணி….சென்னை மெரினா கடற்கரை சாலையில் குளுமையான குளிர்காற்று முகத்தில் மோத... தனது தினசரி ஜாகிங்கை முடித்தவன் வீட்டை நோக்கி தனது ராயல் என்ஃபீல்ட் புல்லட்டை விரட்டினான்.

வீட்டில் நுழைந்தவனின் மேல் பாய்ந்து வந்து அணைத்துக் கொண்டனர் அந்த வீட்டின் சிறிய செல்வங்கள். "சித்தப்பா...ஹாப்பி பர்த்டே" என்று அவன் இரு கன்னத்திலும் முத்தமிட்ட தன் அண்ணன் மகளையும் மகனையும் கைகளுக்கு ஒன்றாய் தூக்கிக்கொண்டு வீட்டினுள் நுழைந்தான்.

தன் தோளில் தொங்கிக் கொண்டு செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்த இருவரையும் சோபாவில் அமர்ந்து தனது மடியில் அமர்த்தி கொண்டவன், இருவரின் மழலை கேள்விகளுக்கு அவர்கள் மழலைக் குரலிலேயே பதில் சொல்லியவனை...தோளோடு அணைத்துக் கொண்டு தனது வாழ்த்தை தெரிவித்தார் அவன் தந்தை.

கதிர்வேலன் ராதிகா தம்பதியினருக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள்... மூத்தவன் ஹரிஷ் டாக்டராக ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறான், தன்னுடன் பயின்ற கீர்த்தனாவை காதலித்து மணந்தவனுக்கு ரோகித் என்ற மகனும் தியா என்ற மகளும் உள்ளனர்.இரண்டாவது ஒரு மகள் வைஷ்னவி திருமணம் முடிந்து தன் கணவனுடன் சென்னையிலேயே இருக்கிறாள். கடைசியாக கடைக்குட்டி நம்ம ஹர்ஷவர்தன் வீட்டின் செல்லப் பிள்ளை….சிறு வயதிலிருந்தே போலீஸ் வேலையில் உள்ள ஈடுபாட்டினால் படித்து முடித்தவுடன் ஐ.பி.எஸ் எக்ஸாம் எழுதியவன் நல்ல கிரேட் பெற்று சென்னையில் டி.எஸ்.பி யாக பதவியேற்றான்.


படித்துவிட்டு உங்கள் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் டியர்ஸ்
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 7

அனைவரின் பிறந்தநாள் வாழ்த்தையும் பெற்றவன் தனது அறைக்கு சென்று குளித்துவிட்டு அலுவலகம் செல்ல ரெடியாகி கீழே வந்தான்.

உணவருந்த அமர்ந்தவன் முன் வைக்கப்பட்டது அழகிய பிளாக் ஃபாரஸ்ட் கேக். அதனைக் கண்டு "ஓ... சர்ப்ரைஸா…" என்றவன் மெழுகுவர்த்தி ஊதிவிட்டு கேக்கை வெட்டி முதலில் தாய்க்கு ஊட்ட…. அதனை பெற்றுக் கொண்டவர் அவனுக்கும் ஒரு துண்டு கேக்கை ஊட்டி விட்டு அவன் நெற்றியில் முத்தமிட்டு…."இன்றைக்கு மாதிரி என்றும் சந்தோசமாக இருக்க வேண்டும்" என்று ஆசீர்வதித்தார்.

பின்பு தந்தை, அண்ணன், அண்ணி,குட்டீஸ் எல்லாருக்கும் கேக்கை கொடுத்தவன், அவர்கள் தந்த பரிசை பெற்றுக் கொண்டு... காலை உணவை முடித்தவன், அனைவரிடமும் விடை பெற்று அலுவலகம் செல்ல வெளியே வந்தவனை வழியனுப்ப வந்த அவனின் தாய் "டேய்... இன்னைக்கு ஈவினிங் கோவிலுக்கு போகணும்.சீக்கிரம் வந்துடு…. ஏதாவது காரணம் சொன்ன என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது" என்ற தாயின் கன்னத்தில் முத்தமிட்டு "வரேன்... வரேன்…." என்றவன் ஓடிவிட்டான்..

அலாரம் அடிக்கும் சத்தத்தில் கண் விழித்தவள்…. அவசரமாக எழுந்து மணியை பார்த்தால் மணி காலை ஆறு என்றிருந்தது... கண்கள் தூக்கத்திற்கு கெஞ்ச மீண்டும் போர்வை இழுத்து போர்த்தியவள் …..இன்னும் ஒரு பத்து நிமிஷம் என தனக்குள்ளேயே சொல்லி கொண்டு தூங்கிப் போனாள்.
மீண்டும் கண் விழிக்கும்போது மணி ஏழு ஆகியிருந்தது….. அவள் அவசரமாக எழுந்து அமரவும் கதவு தட்டப்படவும் சரியாக இருந்தது.

எழுந்து கதவைத் திறந்தவளின் முன் கையில் காபியோடு காட்சியளித்தார் அவள் அன்னை அகல்யா. "குட்மார்னிங்மா" என்ற மகளை முறைத்தவர் "ஏண்டி... மணி என்ன ஆகுது இவ்வளவு நேரமா தூங்குவே…. காபிய குடிச்சுட்டு சீக்கிரம் காலேஜுக்கு கிளம்புற வழியை பாரு"என கத்திவிட்டு தனது வேலையை கவனிக்க கீழே சென்று விட்டார்.

காப்பியை கையில் ஏந்தியவள் பால்கனியை நோக்கி சென்றாள்... அவளுக்கு எப்போதும் தோட்டத்தை பார்த்துக் கொண்டே காபி அருந்த ரொம்பப் பிடிக்கும். இந்த தோட்டத்தில் உள்ள அனைத்து பூச்செடிகளும் இவள் நட்டவை. லீவு நாட்களில் தனது மொத்த நேரத்தையும் தோட்டத்தை ஒழுங்குபடுத்துவதிலும் செடிகளை நடுவதிலும் தான் கழிப்பாள். நிதானமாக காஃபியை ரசித்து அருந்தியவள்,அவசரமாக குளியல் அறையில் புகுந்து கொண்டாள்.

காலேஜுக்கு கிளம்பி கீழே வந்தவள் டைனிங் டேபிளில் சென்று அமர்ந்தாள்.அவளின் வரவுக்காகவே காத்திருந்த தந்தையை சென்று அணைத்துக்கொண்டவள் "குட் மார்னிங்ப்பா…. ஐ லவ் யூ சோ மச்" என்று சலுகையாக சாய்ந்தவளை தோளோடு அணைத்துக் கொண்டார் அவளின் தந்தை ஹரிஹரன்.

"என்னடாம்மா …..இன்னைக்கு கொஞ்சம் லேட், காலேஜ்க்கு டைம் ஆயிடுச்சே…. நான் வேணும்னா உன்னை காரில் ட்ராப் பண்ணவா" என்றவறை பார்த்து "இல்லப்பா... பரவால்ல நான் என்னோட ஸ்கூட்டிலேயே போய்க்கிறேன்" என்றவள்,
கையால் டைனிங் டேபிளில் தாளம் தட்ட தொடங்கினாள். "அம்மா.. டிபன் டிபன்…. டிபன்.." என சத்தம் போட... கையில் கரண்டியோடு அந்த தாயை பார்த்தவள் வாயை இறுக மூடிக் கொண்டாள்.

"எத்தனை தடவை தான் உன்கிட்ட சொல்றது ? இப்படி டைனிங் டேபிள்ல வந்து கத்தக் கூடாதுன்னு… சாப்பாடு சாமி மாதிரி... அதுக்கு மரியாதை தந்தால் தான் நமக்கு அது கடைசிவரை நிலைக்கும்" என்றவர் அவர்களுக்கு டிபன் எடுத்து வைக்க தொடங்கினார்.

தன் தட்டில் உள்ள பூரியை "உம்" மென்று முகத்தை வைத்துக்கொண்டு சாப்பிடும் மகளை பார்த்தவர், மெல்லிய புன்னகையோடு பூரியை பிட்டு கிழங்கில் தொட்டு மகளுக்கு ஊட்டி விட்டார். "சாரிம்மா" என தாயை இடையோடு அணைத்துக்கொண்டு சாப்பிட தொடங்கினாள்.

"இதெல்லாம் ரொம்ப ஓவர்ம்மா…. நானும் பாக்குறேன் இந்த வீட்டுல நான் சின்ன பிள்ளையா ? இல்லை இவளா?.." என இடுப்பில் கைவைத்து ஸ்கூல் யூனிபார்மில் நின்ற தன் தம்பியை பார்த்து... "உனக்கு பொறாமைடா தடியா" என்றாள்.

"யாரு நான் தடியனா... எல்லாமே நீ தான். நீ வேணா பாரு பூரி சாப்பிட்டு சாப்பிட்டு பூரி மாதிரி ஆக போற" என கத்தியவனை பார்த்து…"டேய் நீ மட்டும் பூரி மேல கை வைச்ச…. மகனே உனக்கு இருக்கு' என வீர வசனம் பேசியவள்... அம்மா அவனுக்கு பூரி வேணாமா பழைய சோறு இருந்தா போடு... அப்பயாவது கொஞ்சம் வளர்வியானு பாக்கலாம்" என்றவள் கை கழுவிவிட்டு எழுந்து சென்றாள்.

அங்கு நடக்கும் அனைத்தையும் மெல்லிய சிரிப்போடு பார்த்து கொண்டிருந்தனர் கார்த்திகாவின் தாத்தா பாட்டி ராமலிங்கம் ராஜேஸ்வரி தம்பதியினர்.இதே மாதிரி தங்கள் குடும்பம் என்றும் சந்தோசமாக இருக்க வேண்டும் என அவசரமாக கடவுளை வேண்டிக் கொண்டனர்.

அந்த வீட்டின் அனைவரின் செல்லப்பிள்ளை கார்த்திகா தான்... திருமணமாகி ஐந்து ஆண்டுகள் கழுத்து பிறந்ததனால் அவள் மேல் உயிரையே வைத்திருந்தனர். அவள் பிறந்து நான்காண்டுகள் கழித்து பிறந்தவன் கார்த்திகேயன் அவனும் அக்காவிடம் எவ்வளவு சண்டை போட்டாலும் அவனுக்கும் தன் பெற்றோரைக் காட்டிலும் அவள் தான் முதன்மை.

அவள் பிறக்கும் முன் வரை அந்தளவுக்கு வசதி வாய்ப்புகள் இல்லாமல் இருந்தவர்கள் அவளின் வருகைக்குப் பிறகே ...பிரமோஷன் கிடைத்தது. அதன் பிறகு அவர்கள் வாழ்க்கையில் எல்லாமே ஏறுமுகம் தான். அதனாலேயே அவளை வரம் தரும் தேவதையாக தான் அனைவரும் பார்த்தனர்.அவளுக்கும் தன் குடும்பமே உலகம்.... அவர்களுக்கு தெரியாமல் இதுவரை எதையும் செய்ததில்லை.

"அம்மா அப்பா பாய்... டேய் தடியா பாய்.. மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராமலிங்கம் பாய்…"என்றவள் தனது டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டியை கிளப்பி கொண்டு கல்லூரியை நோக்கி சென்றாள்.

சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வந்து இறங்கியவன், தன் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றான். அனைவரின் மரியாதையையும் ஏற்றவன் தன் அறையில் சென்று அமர்ந்தான்.

"அசோக்…நான் கேட்ட டீடெயில்ஸ் என்ன ஆச்சு...அந்த அக்யூஸ்ட் பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா...அவங்களோட போன் நம்பரை டிரேஸ் பண்ண சொன்னேன்னே என்ன ஆச்சு" என வரிசையாக கேள்விகளை கேட்டவனை பார்த்து "எஸ் சார்... அவங்க இப்ப ஹைதராபாத்தில் இருக்காங்க. அங்குள்ள போலீசுக்கு தகவல் சொல்லியாச்சு ... அவங்கள பிடித்ததும் நமக்கு தகவல் சொல்றதா சொல்லியிருக்காங்க" என்றவனின் மொபைல் அலற…அதனை ஏற்றவன் "எஸ் சார்... ஓகே... தேங்க் யூ சார்...என்று பேசிவிட்டு போனை வைத்தவன்,

"சார்..அந்த அக்யூஸ்ட்ட பிடிச்சிட்டாங்க... அவன் கொள்ளை அடிச்சுட்டு போன பத்து லட்சம் பணம் மற்றும் நகைககள் எல்லாத்தையும் பறிமுதல் பண்ணியாச்சாம். எல்லா ஃபார்மாலிட்டீஸ்ம் முடிஞ்ச பிறகு அனுப்பி வைக்ககிறதா சொல்லிருக்காங்க" என்றான்.

"குட்... வேற ஏதாவது புது கேஸ் பைல் ஆகியிருக்கா" என்க... "ஏதும் இல்லை" என்ற பதிலை ஏற்றவன், அங்குள்ள கோப்புகளை பார்வையிட தொடங்கினான்.

"சார்…" என தயங்கி நின்றவனின் முகம் பார்த்து "வாட் எனி ப்ராப்ளம்" என்க,

"நத்திங் சார்…. விஷ் யூ ஹாப்பி பர்த்டே சார்" என்றவனைக் கண்டு புன்னகைத்தவன் "தேங்க்யூ அசோக்" என கூறிவிட்டு தன் வேலையில் மூழ்கினான்.

எஸ்.ஆர்.வி பொறியியல் கல்லூரியின் உள்ளே ஸ்கூட்டியை செலுத்தியவள் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு தனது புக்ஸை எடுத்துக் கொண்டு வகுப்பை நோக்கி நடந்தாள் கார்த்திகா.

"எக்ஸ்க்யூஸ் மீ …".என்ற அழைப்பில் திரும்பியவள் முன் கையில் ஒற்றை ரோஜாப் பூவுடன் நின்றிருந்தவனை பார்த்து ஹையோ... என்றிருந்தது அவளுக்கு. இது இன்று நடக்கும் விஷயம் அல்ல... இந்த கல்லூரியில் சேர்ந்தது முதல் அவளுடைய கிளாஸ்மேட், சீனியர், அதர் டிபார்ட்மெண்ட் ஸ்டுடென்ட் என்று ஒரு பட்டாளமே இவளின் பின் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவளுக்கு அதில் ஆர்வம் இல்லாததால் அதனை கண்டுகொள்ளாமல் போய்விடுவாள். இன்றும் இது தொடர…. "உங்களுக்கு என்ன வேணும்" என்றவளை பார்த்து,

"ஐ லவ் யூ சோ மச்" கார்த்திகா... நீங்க இந்த காலேஜீல் ஜாயின் பண்ணதிலிருந்து உங்களைக் காதலிக்கிறேன். சோ ப்ளீஸ் அக்செப்ட் மை ரிக்வெஸ்ட்" என்று அவனை முறைத்துப் பார்த்தவள் "இது என்ன லீவு லெட்டரா உங்க ரிக்வெஸ்ட்ட அக்செப்ட் பண்ண... சாரி எனக்கு இதுல இஷ்டம் இல்லை" என்றவள் தனது நடையை தொடர்ந்தாள்.

"ஹாய் டி …"என கூறியபடி தன் தோழிகள் வைஷாலி சங்கீதாவுடன் இணைந்து கொண்டவளை பார்த்து "என்ன மேடம் இன்னைக்கு லேட்டா வர்றீங்க" என இருவரும் கேட்க,

"அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது… அடிக்கிற அலாரத்தை நிறுத்திட்டு தூங்குற சுகம் இருக்கே…எப்படி இருக்கும் தெரியுமா ? அதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும்.."என்றவளை
முறைத்தவர்களை பார்த்து அசடுவழிந்தாள் கார்த்திகா.

"அப்புறம் சங்கீ... எங்க உன்னோட வாட்ச்மேனை காணோம்" என கார்த்திகா தோழியை சீண்ட,

"ஏண்டி..நான் சந்தோஷமா இருக்குறது உனக்கு பொறுக்காதே' என்றவள், நானே இந்த வருஷம் எப்போ முடியும்னு இருக்கேன்... அவன் தொல்லை தாங்க முடியல" என்றாள்.

"ஏய் … நீ அவளை கலாய்க்கிறத நிறுத்து...பெருசா அவள சொல்ல வந்துட்ட... நாங்க இப்போதானே ஒரு லவ் ப்ரொபோஸ பார்த்தோம். இன்னைக்கு யாரு? எந்த டிபார்ட்மென்ட்" என வைஷாலி கேட்க,

"நீ வேற யாருனே தெரியலடி... ஒரே குஸ்டமா இருக்கு...ச்சீ கஷ்டமா இருக்கு" என கூறியவள், தன் தோழிகளுடன் பேசியவாறே தங்கள் பிரிவை நோக்கி நடந்தாள்.

"ஏய் கார்த்தி... அங்க பாருடி நம்ம எதிரி கேங்க் வருது" என்றவளை பார்த்து "வந்தா வரட்டும்... நாம நம்ம வேலையை மட்டும் பார்க்கலாம்" என்றவள் முன் வந்து நின்றாள் ஆர்த்தி.

கார்த்திகாவின் சீனியர்... கல்லூரியின் முதல் நாளிலிருந்து இருவருக்கும் ஆகாது... அது மட்டுமில்லாமல் கார்த்திகாவின் அழகின் மேல் கொலைவெறியே அவளுக்கு உண்டு.
அதுவும் கார்த்திகாவின் வருகைக்குப் பிறகு இந்த காலேஜில் எல்லா பசங்களும் எதற்கெடுத்தாலும் கார்த்திகா கார்த்திகா என வழிவதை பார்த்தால் அவ்வளவு ஆத்திரம் வரும்.

"ஹலோ... சீனியர பார்த்தா விஷ் பண்ணனும்னு தெரியாதா" என ஆர்த்தி கார்த்திகாவை பார்த்து கேட்க, அவளோ "சீனியர்…. மரியாதை எல்லாம் தானா கொடுக்கணும் இப்படி கேட்டு வாங்க கூடாது. அதுமட்டுமில்லாமல் நாங்க ஒன்னும் ஃபர்ஸ்ட் இயர் இல்லை….உங்களைப் பார்த்தவுடன் நடுங்கிட்டு குட்மார்னிங் சீனியர்ஸ் அப்படின்னு சொல்றதுக்கு... நாங்க இப்போ தர்ட் இயர் அடுத்த வருஷம் நாங்க தான் சீனியர், அத தெரிஞ்சுக்கோங்க" என்றவள் தன் தோழிகளை பார்த்து வாங்க போலாம்... கிளாசுக்கு டைம் ஆகுது,என வேகமாக சென்றுவிட்டாள்.


"என்னடி… அவ நம்மள கொஞ்சம் கூட மதிக்க மாட்டிங்கிறா" என்ற தோழியைப் பார்த்து, "அழகா இருக்குற திமிர்… ஒருநாள் அந்தத் திமிர அடக்குறேன்" என்ற ஆர்த்தி கோபமாக தன் வகுப்பை நோக்கி சென்றாள்.

கருத்துக்களை இங்கே சொல்லிட்டு போங்க டியர்ஸ்
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 8

"ஹேய் சூப்பர்டி….ஆர்த்திக்கு செம்ம பல்பு…" என தோழிகள் மூவரும் ஆர்த்தியை தங்களுக்குள் கலாய்த்து கொண்டு வகுப்பில் நுழைந்தனர்.
பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகள்.

"கார்த்தி…. அடுத்த அப்ளிகேஷன் ரெடி ஆயிடுச்சு போல... அங்க பாரு நம்ம கிளாஸ் தேவதாஸ், உனக்காக தான் வெயிட் பண்றார்" என அங்கு நின்றுகொண்டிருந்த அவள் க்ளாஸ் மேட் பிரகாஷை காட்டி சொல்ல…. அவளோ "இவனுங்க தொல்லை தாங்க முடியலடி. இதிலிருந்து தப்பிக்க ஒரு வழி சொல்லுங்க...அதை விட்டுட்டு நீங்களே என்ன கலாய்க்கிறீங்க" என்றாள் கடுப்புடன்.

"விடுடி….இது கூட செம என்டர்டெயின்மென்ட்டா தான் இருக்கு" என்ற வைஷாலியின் முதுகிலேயே ஒன்று போட்டவள், "இருக்கும் இருக்கும் அனுபவிக்கிறது நான் தானே உங்களுக்கு எங்கே என் கஷ்டம் தெரியப்போகுது" என்றவளை பார்த்து...

"சும்மா சொன்னேன்டி இதுக்கு போயி சீரியஸ் ஆகாத. உனக்கு என்ன இதிலிருந்து தப்பிக்க ஒரு வழி வேண்டும் அதானே... என்கிட்ட ஒரு செம ஐடியா இருக்கு என்க, "என்ன ஐடியாடி சொல்லு சொல்லு" என ஆர்வமாக கேட்டாள் கார்த்திகா.

"நான் ஆல்ரெடி கமிட்டெட்ன்னு சொல்லு... அதாவது நல்ல ஹாண்ட்சமான ஒருத்தனை காட்டி... நான் இவரைத்தான் லவ் பண்றேன், அதனால என்ன டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னு சொல்லு. அப்பறம் பாரு...எல்லாரும் தேவதாஸ் மாதிரி சோகப்பாட்டு பாடிக்கிட்டு சுத்த ஆரம்பிச்சுடுவாங்க. உன் ரூட் கிளியர் ஆயிடும்" என்ற தோழியை பார்த்து "உன் கிட்டப்போய் ஐடியா கேட்டேன் பாரு…" என்று கோவபட்டவள் தன் இடத்தில் சென்று அமர்ந்துக்கொண்டாள்.

மாலை நுங்கம்பாக்கத்தில்
உள்ள பெருமாள் கோயிலில் குடும்பமாக சென்றவர்கள்…. ஹர்ஷவர்தன் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதனை முடித்து விட்டு பிரகாரத்தை சுற்றி வந்து கொண்டிருந்தனர்.

"வாவ்..ஏய் நிலா... அங்க பாருடி அந்த ஹாண்ட்சம செமையா இருக்காரு. இவர மட்டும் நீ கரெக்ட் பண்ணிடு, அப்புறம் எந்த தொல்லையும் இருக்காது. எந்த பசங்களும் உன் பின்னால சுத்த மாட்டானுங்க... பார்க்கவே வாட்டசாட்டமா இருக்காரு" என்றவளின்
கையில் நறுக்கென்று கிள்ளிய கார்த்திகா "கொஞ்ச நேரம் உன் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா… அவங்க காதுல விழுந்திட போகுது. அப்புறம் நம்மள பத்தி என்ன நினைப்பாங்க" என்றவளின் பார்வை ஒருமுறை அவனை தீண்டிவிட்டு வந்தது.

இதுவரை எத்தனையோ ஆண்மகன்கள் அவளிடம் காதலை யாசிக்க... முதன்முறை முதல் பார்வையிலேயே அவளை மிகவும் பாதித்தான் ஹர்ஷவர்தன். கோயிலுக்கு வருவதாலும் பிறந்தநாள் என்பதாலும் வேட்டி சட்டையில் வந்திருந்தவனுக்கு அந்த உடை மிகக்கச்சிதமாக பொருந்தியது. ஏற்கனவே அவன் ஆணழகன் தான் இருப்பினும் இந்த உடை இன்னும் அவனை அழகனாய் காட்டியது.

அதே நேரம் தன் எதிரில் பதுமையென நடந்து வந்துகொண்டிருந்தவளை பார்த்தவன் ஒரு நிமிடம் பிரம்மித்து தான் போனான் ... வானிலிருந்து தேவதைதான் சுடிதாரில் பூமிக்கு வந்து விட்டதோ என என்னும் அளவுக்கான ஆச்சரியம் அவன் பார்வையில்.

அவன் பார்க்கும் அதே வேளையில் அவளும் பார்க்க... ஒரு நொடி இருவரின் பார்வையும் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டது ... சில நொடிகளே ஆனாலும் அவன் கண்ணில் தோன்றிய ஏதோ ஒன்றில் அவள் மனது சலனம் கொண்டது மட்டும் உண்மை.

அந்த ஆழ்ந்த பார்வையில் மொத்தமாக தொலைய ஏங்கிய மனதை எண்ணி திடுக்கிட்டு போனாள் கார்த்திகா. 'இது நான்தானா இதுவரை இது போல் எவரிடமும் தோன்றவில்லையே...இவனிடம் மட்டும் ஏன்' என்ற கேள்விக்கு அவளிடம் பதிலில்லை.

கடவுள் நாம் பிறக்கும்போதே இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்திருப்பார். அதேபோல் இவனுக்கு இவள் தான் என்று கடவுள் எழுதி வைத்துவிட்டார் போல…. முதல் பார்வையிலேயே இருவருக்குள்ளும் ஒரு தடுமாற்றம்.

பிரகாரத்தை சுற்றி விட்டு ஒரு தூணுக்கு அருகில் சென்று அமர்ந்தனர் பிரசாதத்தை அனைவருக்கும் கொடுத்து கொண்டிருந்த அவனின் அன்னை…"டேய் நீ எங்கடா பார்த்துட்டு இருக்க இந்தா பிரசாதத்தை சாப்பிடு" என்றவருக்கு எதையோ சொல்லி சமாளித்தவன், தாய் தந்த பிரசாதத்தை உண்டான்.

அவன் மனதில் திரும்பவும் அவளின் நினைவு... 'ஐயோ கடவுளே ஃப்ளீஸ் எப்படியாவது அவளை கோயிலை விட்டு போகாமல் பார்த்துக்கொள்' என கடவுளை வேண்டியவன் "அம்மா... ஒரு முக்கியமான போன்... ஒரு பத்து நிமிஷத்துல பேசிட்டு வந்துடுறேன்" என்றவன் எழுந்து அந்த கோவிலை சுற்றி அவளைத் தேட தொடங்கினான்.

கோவில் சன்னிதானத்தில் கண் மூடி நின்றவளின் முன் சென்று நின்றவனின் பார்வை அவள் உதட்டில் பதிந்தது. கொஞ்சமும் நிறுத்தாமல் முனுமுனுத்துக் கொண்டே... தலையை அசைத்து அவள் பேசியது கடவுளிடம் எதையோ தீவிரமாக விவாதித்து போல் இருக்க... அதை தெரிந்து கொள்ள அவன் மனம் விரும்பியது. அவளின் விருப்பத்தையும் வேண்டுதலையும் நிறைவேற்ற மனம் பரபரத்தது. அர்ச்சகர் வந்து அனைவருக்கும் தீபாராதனை காட்டிவிட்டு... விபூதி குங்குமம் வழங்கியவர் கண்மூடி நின்றவளைப் பார்த்துவிட்டு சென்றுவிட்டார்.

கடவுளை வணங்கிவிட்டு கண் திறந்தவள் குங்குமத்திற்காக கைநீட்ட அதற்குள் அர்ச்சகர் சென்று விட "அச்சச்சோ…. எனக்கு பிரசாதம் தராமயே போய்விட்டார்" என தன் தோழியிடம் சொல்ல... அவளோ "நீ ஒரு மணி நேரமா சாமிகிட்ட பெரிய லிஸ்டே சொல்லிக்கிட்டு இருந்தா என்ன பண்ணுவாங்க" என்றவள் தன் கையிலுள்ள குங்குமத்தை அவள் புறம் நீட்ட,

அதற்கு முன்பே தன் முன்னால் நீட்டப்பட்ட கையை நிமிர்ந்து பார்த்தவள்... தன் கண்களை நம்ப முடியாதவளாக இமைக்காது பார்த்தவளின் இதயம் பந்தய குதிரை போல் படபடத்தது. தன்முன் நீட்டப்பட்ட கையையும் அவனையும் மாறி மாறி பார்த்தவள் தலை கவிழ்ந்தாள்.

"எடுத்துக்கோங்க... சாமி பிரசாதம் யாரு கொடுத்தா என்ன?" என்றவன் எடுக்குமாறு கண்ணசைக்க... அவன் கண்களைப் பார்த்தவாறு எடுத்துத் தன் நெற்றியில் வைத்துக்கொண்டாள்.

வைஷாலி அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு "எக்ஸ்கியூஸ் மீ சார்… நீங்க யாரு அவளுக்கு குங்குமம் கொடுக்க" என்றவளை பார்த்து
"என்னங்க இப்படி சொல்லிட்டீங்க?.. நீங்க தானே என்னை ஹாண்ட்சம்ன்னு சொன்னீங்க. அப்பறம் யாருன்னு கேட்டா என்ன அர்த்தம்" என்றவனை கண்டு,

"ஐயையோ" என அசடுவழிய நின்றவளின் கைப்பிடித்து "என் மானமே போச்சு" என இழுத்து சென்றாள் கார்த்திகா.

"ஹேய்…. ஏஞ்சல் ஒரு நிமிஷம்" என்றவன் அவர்களைப் பின்தொடர்ந்து…"ஏஞ்சல் உன்னைத்தான்" என திரும்பவும் அழைத்தவனை பார்த்து,

"என் பெயர் ஒன்னும் ஏஞ்சல் இல்லை" என்றவள் செல்ல முயல. கைநீட்டி தடுத்தவன் "உன் பெயர் ஏஞ்சல் இல்லைன்னு எனக்கு தெரியும்" என்றான்.

"உங்களுக்கு எப்படி தெரியும்" என்றவளை பார்த்து…"இது என்ன பெரிய சிதம்பர ரகசியமா. ஏஞ்சல்ன்னு பெயர் உள்ளவங்க சர்ச்சுக்கு தானே போவாங்க, கோயிலுக்கு வர மாட்டாங்க" என்க,

"அப்புறம் எதுக்கு என்னை அப்படி கூப்பிட்டீங்க" என்றால் கொஞ்சம் கோபமாக.
"ஏஞ்சல் வெறும் பெயர் மட்டுமில்லை.. தமிழ்ல தேவதைன்னு சொல்வாங்க…. உன்னை பார்த்ததுல இருந்தே என் கண்ணுக்கு நீ தேவதை மாதிரி தான் தெரிகிற" என்றவனை பார்த்தவள் மௌனமாக எதுவும் சொல்லாமல் அவனை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு சென்று விட்டாள்.

கோவில் பிரசாதம் வாங்கி விட்டு வந்த வைஷாலி "உன்ன அங்கதானே நிக்க சொன்னேன்... இங்க எதுக்கு வந்து நிக்குற. ஆமா அவர் உன்கிட்ட என்ன சொன்னாரு…" என்ற தோழியின் கேள்விக்கு "ஒன்னும் இல்லை" என பதில் சொல்லியவள் கோயிலை விட்டு வெளியே வந்தாள்.

போகும் அவளை பார்த்துக் கொண்டிருந்தவன் தோளில் உணர்ந்த கையில் திரும்பி பார்த்தவன், தன் முன்பு நின்ற அண்ணனைப் பார்த்து அசடு வழிந்தான். "என்னடா... அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நம்ம முழிச்ச திருட்டு முழி…. நம்ம தம்பி கண்ணல தெரியுதேன்னு சந்தேகப்பட்டேன், சரியா போச்சு…. நீ நடத்துடா நடத்து" என்றவன் தன் தம்பியை தோளோடு அணைத்து "ஆல் த பெஸ்ட்" என்று கூறிவிட்டு சென்றான்.

அவர்களை பின்தொடர்ந்து அவளின் வண்டி எண்னை நோட் பண்ணியவன்... தன் குடும்பத்துடன் ஒன்றும் நடவாதது போல் சென்று அமர்ந்து கொண்டான்.

அன்று இரவு கையில் புக்கை வைத்துக்கொண்டு படிக்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்தாள் கார்த்திகா. அவள் மனது அவனையே நினைத்து கொண்டிருக்க...அவனும் அவள் நினைவில் தான் உறக்கமின்றி தவித்துக் கொண்டிருந்தான்.

புக்கை மூடிவைத்தவள்... தன் மனதை திசை திருப்ப எண்ணி டிவியை போட ... அதில் ஓடிக்கொண்டிருந்த பாடலும் அவள் மனதை எடுத்துரைப்பது போல

என்னுள்ளே என்னுள்ளே..
ஏதேதோ செய்கிறதே அதை என்னென்று அறியேனடி….
என்னுள்ளே என்னுள்ளே
ஏதேதோ செய்கிறதே அதை என்னென்று அறியேனடி
ஓர ப்பார்வை பார்க்கும் போது…
உயிரில் பாதி இல்லை
மீதி பார்வை பார்க்கும் துணிவு பேதை நெஞ்சில் இல்லை..
எனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கே.
எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ….

அந்தப் பாடலின் வரிகள் அவர்களுக்காகவே எழுதியது போல் தோன்றியது. மனதை திசை திருப்ப டிவியை போட்டவளின் மனம் திரும்பவும் அவனிடமே வந்து நின்றது. டிவியை அனைத்தவள் பால்கனியை நோக்கி சென்றாள்.

இரவுநேர காற்றை ரசித்து நின்றவள் மனதில் அவனை பார்த்தது முதல் நடந்தது அனைத்தும் உலாவர...மனதில் ஒருவித சிலிர்ப்பையும் மகிழ்ச்சியும் உணர்ந்தவள் அப்படியே வந்து மெத்தையில் விழுந்தாள்.

இரண்டு நாட்கள் கடந்த நிலையில்... ஸ்டேஷனில் தன் அறைவரை கேட்ட அழுகை குரலில் அந்த இடத்தை அடைந்தவன்.. அழுது கொண்டிருந்த தம்பதியினரிடம் "என்னாச்சு? எதுக்கு இப்படி அழறிங்க?.." என்றவன் அவர்களை அமருமாறு சைகை செய்ய, அமர்ந்தவர்கள் "சார்... என் பொண்ண காணோம்" என்றனர்.

"எப்பவும் காலேஜ் போயிட்டு அஞ்சு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடுவா... ஆனா, இன்னைக்கு மணி ஏழு ஆகியும் வரலை... அவள் போன்க்கு போட்டா ஸ்விட்ச் ஆஃப்ன்னு வருது" என அழுதவர்களை பார்த்து

"கொஞ்சம் ரிலாக்ஸா இருங்க. என்னன்னு விசாரிக்கலாம் என்பவன். உங்க பொண்ணோட ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கேட்டீங்களா" என்றவனை பார்த்து...

"கேட்டாச்சு சார் ...அவ அப்பவே வீட்டுக்கு போயிட்டதா சொல்றாங்க" என்றார்.

"கேக்கறேன்னு தப்பா நினைக்காதீங்க... உங்க பொண்ணுக்கு லவ் அஃபெயிர் ஏதாவது இருக்கா" என கேட்க, "அவ அந்த மாதிரி பொண்ணு இல்ல... ரொம்ப நல்ல பொண்ணு. நாங்க பார்க்கிற மாப்பிள்ளையை தான் கட்டிக்குவேன்னு எப்பவும் சொல்லுவா... அதனால அந்த மாதிரி எதுவும் இருக்காது" என்றார் கண்கள் கலங்க,

"நாங்க விசாரிக்கிறோம் நீங்க வீட்டுக்கு போங்க... ஆல்ரெடி டைம் ஒன்பது ஆகுது. உங்க பொண்ணு உங்க கிட்ட வந்து சேரும்... அதுக்கு நாங்க பொறுப்பு' என்றவன், உங்க பொண்ண பத்தின எல்லா டீடெயில்ஸ்ம் கொடுத்துட்டு போங்க என்றான்.

அவர்கள் விடைபெற்றுச் சென்ற உடன்…

"அசோக் அந்த பொண்ண பத்தின டீடெயில்ஸ்ம் கலெக்ட் பண்ணிட்டீங்களா அந்த பொண்ணோட பெயர் என்ன?.." என்க…."சங்கீதா" சார்" என்றான் அசோக்.


படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள் டியர்ஸ்
 
Status
Not open for further replies.
Top