ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தேவதை வம்சம் நீயோ - கதை திரி

Status
Not open for further replies.

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 9

"ஓகே.. அந்த பொண்ணோட மொபைல் லாஸ்ட்டா எந்த லொகேஷன் காட்டுதுன்னுபாருங்க…" என்றவனுக்கு "காலேஜிலிருந்து ஒரு 200 மீட்டர் டிஸ்டன்ஸ் சார்" என்றான் அசோக்.


"அப்போ காலேஜ் பக்கத்தில் உள்ள எல்லா இடத்திலேயும் விசாரிங்க... அங்குள்ள கடையில சிசிடிவி ஏதாவது இருந்தா அதையும் செக் பண்ணுங்க…என்றவன், சிட்டில உள்ள எல்லா போலீஸ் ஸ்டேஷனுக்கும் இன்ஃபர்மேஷன் பாஸ் பண்ணுங்க... அந்த பொண்ண பத்தி எந்த தகவல் கிடைச்சாலும் உடனேயே நமக்கு தகவல் கொடுக்க சொல்லுங்க" என்றான்.

சிறிது நேரத்தில் கையில் ஒரு ஃபைலுடன் வந்த அசோக் அதனை ஹர்ஷவர்தன் முன்வைத்து... "அந்த பொண்ணோட எல்லா டீடெயில்ஸ்ம் இதுல இருக்கு" என வைத்து விட்டு செல்ல.. அதனை ஆராய்ந்தவன் அடுத்து என்ன செய்வது என யோசிக்க தொடங்கினான்.

இரவு 11 மணிக்கு வீடுவந்த மகனைப் பார்த்து "என்னப்பா இன்னைக்கு இவ்ளோ நேரம்?... முதல்ல சாப்பிடு அப்புறம் டிரஸ் மாத்திக்கலாம்" என்றவர், தட்டில் உணவை எடுத்து வைத்தார்.

"ஒரு முக்கியமான கேஸ்மா திரும்பவும் போகணும்" என்றவன் தனது தாய்க்காக சிறிது உண்டு விட்டு எழுந்து அறையை நோக்கி சென்றான்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்தவன் "அம்மா எப்ப வருவேன்னு தெரியாது, நீங்க போய் தூங்குங்க" என்றவனை பார்த்து... "இந்த ஊர் உலகத்தில நீ மட்டும்தான் போலீஸா...நைட் டியூட்டி போலீஸ் எந்த வேலையை பார்க்க மாட்டாங்களா... எல்லா வேலையும் உன் தலையிலே ஏத்திக்கணும்மா" என்று கோபப்பட்ட அன்னையை தோளோடு அணைத்தவன், "ரொம்ப முக்கியமான கேஸ்மா ஒரு காலேஜ் பொண்ண காணோம். அந்த பொண்ணுக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் காப்பாத்துற வரைக்கும் என்னால நிம்மதியா தூங்க முடியாது... இதுவரைக்கும் எந்த இன்ஃபர்மேஷனும் இல்லை" என்றான்.

"அய்யயோ... என்னடா சொல்ற காலேஜ் படிக்கிற பொண்ணா.. ரொம்ப சின்ன பொண்ணா இருப்பா போலயே... கடவுளே அந்த பொண்ணுக்கு எதுவும் ஆகக்கூடாது" என்று கடவுளிடம் வேண்டியவரை பார்த்தவன்... "உங்க நல்ல மனசு மாதிரியே அந்த பொண்ணுக்கு ஒன்னும் ஆகாது" என்றவன் தாயிடம் விடைபெற்று சென்று விட்டான்.

சென்னையில் உள்ள அனைத்து காவல் துறையினர்க்கும் தகவல் அனுப்பியவன் தேடும் படி ஆணையிட்டான். இரவு முழுவதும் எல்லா இடங்களிலும் தேடி களைத்தனர். எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் சற்று தளர்ந்துப்போனான் ஹர்ஷா.

அவன் எதற்கும் தளர்ந்து போகிறவன் இல்லை ஆனாலும் காணாமல் போனது ஒரு இளம்பெண். இந்த காலத்தில் ஒரு இளம் பெண்ணுக்கு என்னென்ன கொடுமைகள் நடக்கிறது என்பதை அவனும் அறிவான் அல்லவா…!

அதிகாலை 5 மணிக்கு வீடு வந்தவன் குளித்து விட்டு திரும்பவும் கீழே இறங்கியவனின் கண்கள் இரண்டும் கோவைப்பழம் போல் சிவந்து காணப்பட்டது. இரவு முழுவதும் தூக்கம் இல்லாததால் கண்கள் எரிச்சலாக இருந்தது... கண்களை கசக்கியவாறே வந்து ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்தான்.

அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஹாலில் அமர்ந்திருக்க...அதிகப்படியான அலைச்சல் காரணமாக தலை பாரமாக இருக்க "அம்மா... ஒரு காபி" என கேட்டவன் முடிக்கும் முன்.. தன் எதிரில் நீட்டப்பட்ட காபியை வாங்கி அருந்தியவனை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் அனைவரும்.

"என்னப்பா... அந்த பொண்ண பத்தி ஏதாவது தகவல் கிடைத்ததா" என்ற அன்னையை பார்த்து உதட்டை பிதுக்கியவன் "இல்லமா இன்னைக்கு அந்தப் பொண்ணோட காலேஜ் போய் விசாரிக்கனும்" என்றவன் காலேஜ் பெயரை சொல்ல,

"எனது…. எஸ்.ஆர்.வி காலேஜா….அங்கதான் நம்ம ஆர்த்தி படிக்கிறா. அவகிட்ட கேட்டு பார்க்கலாம்" என்ற அன்னையை முறைத்தவன்,

"நீங்க எதுக்கு அடி போடுறிங்கன்னு எனக்கு தெரியுது. நான்தான் உன்கிட்ட ஆல்ரெடி சொல்லிட்டேனே... என் மனசுல அப்படி ஒரு எண்ணம் இல்லை, அதனால அவளைப் பத்தி என்கிட்ட பேசாதீங்கன்னு…"

"அதுக்கில்லடா... உங்க அக்கா" என்றவரை இடைமறித்தவன் "அம்மா...அக்கா அந்த வீட்டு மருமகளாக இருக்கலாம்...அதுக்காக நானும் அந்த வீட்டு பொண்ண கல்யாணம் பண்ணி, அந்த வீட்டு மருமகன் ஆகணும்னு அவசியம் இல்ல. முதல்ல எனக்கு பிடிக்கனும் அது மட்டுமில்லாமல் அவளை அந்த மாதிரி நான் பார்த்ததே இல்லை' என்றவன்,கூடிய சீக்கிரம் உங்க மருமகளை உங்க கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்துறேன்" என்று எழுந்து சென்றான்.

"அம்மா... அவனை இந்த விஷயத்துல கட்டாயப்படுத்தாதீங்க…. வாழப்போறது அவன், அவனோட விருப்பம் இதுல ரொம்ப முக்கியம்" என்று தம்பிக்காக தனது ஆதரவை தெரிவித்தவன் தன் மனைவியிடம் கண் அசைக்க...அவளும் "அத்தை ஹர்ஷா பற்றி நமக்கு தெரியாதா... இதுவரைக்கும் நமக்கு பிடிக்காத எந்த விஷயத்தையாவது பண்ணியிருக்கானா... அப்படி இருக்கும்போது அவன்ஆசைப்பட்டு கேட்கிற பொண்ண நம்ம எல்லாரும் சேர்ந்து அவனுக்கு கட்டிவைக்கிறது தான் நம்முடைய கடமை" என்றவள் தனது ஆதரவையும் வர்ஷாவுக்கே தெரிவித்தாள்.

அதுமட்டுமில்லாமல் கீர்த்தனாவுக்கு ஆர்த்தி இந்த வீட்டுக்கு மருமகளாக வருவதில் துளியும் விருப்பம் இல்லை ... ஏனென்றால் அவள் எப்போதும் மாடர்ன் ட்ரெஸ் , மேக்கப் போட்டுக்கொண்டு, பெரியோர்களுக்கு துளியும் மரியாதை தராதவளாக இருந்தாள். அதனால் இந்த அழகான குடும்பத்தில் அவளால் ஏதாவது பிரச்சினை வந்துவிடுமோ என அஞ்சியே ஹர்ஷ காதலிப்பதாக தன் கணவன் செல்லவும்...அவனுக்கு ஆதரவளித்தாள்.

கல்லூரியில் தேவையில்லாத பதட்டத்தை ஏற்படுத்த கூடாது என்பதால் யூனிபார்ம் போடாமல் பார்மல் ஷர்ட் பேண்ட்டில் வந்தவன் தனது வண்டியை நிறுத்திவிட்டு அசோக் உடன் உள்ளே நுழைந்தான்.

"என்னடி... டைம் ஆச்சு ! இன்னும் இந்த சங்கீதாவை காணும். நேத்து அவங்க அப்பா எங்க வீட்டுக்கு கால் பண்ணிருந்தாங்க…. அவ இருக்காளான்னு கேட்டு…" என வைஷாலியிடம் கூறிய கார்த்திகா... "எனக்கு என்னவோ பயமாயிருக்கு, அவ இது மாதிரி எங்கேயும் சொல்லாம போக மாட்டாளே" என தோழிக்காக வருந்தியவள் வாசலை நோக்க…

அங்கே நடந்து வந்த ஹர்ஷவர்தனை பார்த்தவள் அதிர்ந்து நின்றாள். "ஏய் கார்த்திகா... என்னடி உன்ன பாக்காம இருக்க முடியல போல... கண்டுபிடிச்சு காலேஜ் வரைக்கும் தேடி வந்து இருக்காரு…" என்ற தோழியின் காலில் மிதித்தவள் "பேசாம இருடி" என்க,

அவளோ "இப்ப எதுக்கு என்னை மிதிக்கிற... உண்மைய சொன்னா கோவம் வருதா. அன்னைக்கு நீயும் தானே அவரை அப்படியே முழுங்குற மாதிரி பார்த்த…" என்ற தோழியைப் பார்த்து அசடு வழிந்தவள்... "சும்மா இருடி என் மானத்தை வாங்காதே" என மிரட்டினாள்.

பிரின்ஸிபால் ரூமை நோக்கி நடந்தவன் அவர்களை பார்க்காமல் கடந்து செல்ல, அவளின் முகத்தில் தோன்றிய ஏமாற்றத்தை நொடியில் மறைத்தவள்... தன் தோழியிடம் "பாத்தியா அவங்க ஒன்னும் என்ன பாக்க வரல... போதுமா வா போகலாம்…" என தோழியிடம் சிடுசிடுத்தவள் வகுப்பை நோக்கி சென்றாள்.

அப்போது அங்கு வந்த ஆர்த்தி அவனை பார்த்துவிட்டு "ஹாய் அத்தான்... நீங்க இங்க என்ன பண்றீங்க? அதுவும் இந்த நேரத்தில்" என்றவளை பார்த்து…. மெலிதாக சிரித்தவன் "ஒரு கேஸ் விஷயமா வந்தேன், வேற ஒன்னும் இல்லை... நீயும் இந்த காலேஜ் தானா…" என ஏற்கனவே தெரிந்த கேள்வியை கேட்டவன், சரி எனக்கு முக்கியமான வேலை இருக்கு பாய்.." என சொல்லிவிட்டு சென்று விட்டான்.

இதனை தூரத்திலிருந்து பார்த்த தோழிகள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் புரியாமல் பார்த்துக் கொண்டனர். "என்னடி உன் ஆளு நம்ம எதிரி கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்காரு…" என்றவளை பார்த்து "அவர் ஒன்னும் என் ஆள் இல்லை, தேவையில்லாம பேசாதே" என சொல்லிவிட்டு கோபமாக சென்றாள் கார்த்திகா.

அவனை இதற்கு முன்பு ஒருமுறை தான் பார்த்திருந்தாலும்... ஏனோ அவன் அவளை கண்டுகொள்ளாமல் போனதை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அது மட்டுமில்லாமல் அந்த ஆர்த்தியுடன் அவன் சிரித்து பேசுவதை அவளால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அவனிடம் தோன்றும் இந்த உணர்வுக்குப் பெயர் என்னவென்று தெரியாத போதிலும் அது அவளுக்குப் பிடித்திருந்தது மட்டும் உண்மை.

அலுவலகத்தில் பிரின்ஸிபாலிடம் தன்னை பற்றியும் தான் வந்ததன் காரணத்தையும் கூறியவன்….சங்கீதாவின் தோழிகளை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்க, அவரும் ஒப்புதல் வழங்கி அவர்களை அழைத்து வருமாறு ப்பியூனிடம் சொல்லி அனுப்பினார்.

கார்த்திகாவும் வைஷாலியும் பிரின்ஸ்பால் அறையை நோக்கி பதட்டமாக செல்ல…. அவர் சொன்ன செய்தியை நம்பமுடியாமல் அதிர்ச்சி அடைந்தவர்கள், தோழியின் நிலையை எண்ணி கவலைக்கொண்டனர்.

அறையில் நுழைந்த இருவரையும் பார்த்து இப்போது அதிர்வது அவனின் முறையாயிற்று. 'இவர்கள் எப்படி இங்கே' என யோசித்தவன்…. தன்னைக் கண்டு தயங்கி நின்றவர்களை உள்ளே வருமாறு அழைத்தவன், அமரும்படி சொல்ல... இருவருக்கும் ஏதும் புரியாத போதிலும் சென்று அமர்ந்தனர்.

"நான் ஹர்ஷவர்தன்... டி.எஸ்.பி" என்று தன்னை அறிமுகப்படுத்தியவனை கண்களில் வியப்புடன் பார்த்தவள்... அவன் சொன்ன அடுத்தடுத்த செய்திகளைக் கேட்டு அதிர்ந்து போனாள்.

தன் தோழியை நேற்று இரவிலிருந்து காணவில்லை என்ற செய்தியை அவளால் இன்னமும் நம்ப முடியவில்லை.

"நீங்க ரெண்டு பேரும் தானே அந்த பொண்ணோட பிரெண்ட்ஸ்" என கேட்க, "ம்ம்…" என பதட்டமாக அவர்கள் தலையசைக்க…"இது ஜஸ்ட் இன்வெஸ்டிகேஷன் தான் இதுக்கெல்லாம் பயப்பட தேவையில்லை" என்றவன்,

"சொல்லுங்க உங்க பிரெண்ட் சங்கீதாவை லாஸ்ட்டா எப்போ பார்த்தீங்க?..உங்க கிட்ட ஏதாவது சொல்லிட்டு போனாங்களா?.. யூஷ்வலா பொண்ணுங்க பெற்றோர்களை விட பிரெண்ட்ஸ் கிட்டதான் எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்குவாங்க, அதனால தான் உங்ககிட்ட கேட்கிறேன். அவங்களுக்கு ஏதாவது பர்சனல் பிராப்ளம் இருக்கா?.... அதாவது சங்கீதாவுக்கு லவ் ஆப்பெயிர் ஏதாவது இருக்கா?.." என வரிசையாக கேள்விகளை கேட்டவன் பதிலுக்காக அவர்கள் முகம் பார்க்க,

முதலில் தொடங்கிய "வைஷாலி சார்….அவ ரொம்ப நல்ல பொண்ணு, இதுவரைக்கும் யார்கிட்டயும் எந்த பிரச்சினைக்கும் போனதில்லை. எல்லாரோடும் ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருப்பா... அதுவும் எப்பவும் நாங்க மூணு பேரும் ஒன்னாதான் இருப்போம், அதனால் நீங்க நினைக்கிற மாதிரி அவளுக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை" என்றவளை தொடர்ந்து….

"சார்…" என கார்த்திகா தயங்க…. "எதுவா இருந்தாலும் சொல்லுங்க" என்றவனை பார்த்து,

"அவ யாரையும் லவ் பண்ணல …. ஆனா எங்க சீனியர் ஒருத்தன் அவ பின்னாடியே சுத்திகிட்டு இருந்தான். அவ எத்தனையோ தடவை பிடிக்கலன்னு சொல்லியும் கேட்கல. வாட்ச்மேன் மாதிரி காலையில் அவ காலேஜ்க்கு வரும்போது பின்னாடியே வருவான்...போகும்போது பின்னாடியே தான் போவான். ஒரு நாள் லீவ் போட்டாலும் டைரக்டா எங்க கிட்டே வந்து சங்கி வரலையான்னு கேட்பான்...ஆனா இன்னைக்கு அவளப்பத்தி கேட்க்கவுமில்லை...அவளை தேடின மாதிரியும் தெரியலை" என்றாள்.

"அவன் பெயர் என்ன?... எந்த டிபார்ட்மென்ட்?... என அவன் கேட்க, "எங்க டிபார்ட்மென்ட் தான்...அவன் பெயர் சதிஷ்" என்றாள் கார்த்திகா.




படித்துவிட்டு உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள் ஃப்ரெண்ட்ஸ்
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 10


"அந்த சதீஷ் பத்தி யார்கிட்டயும் கம்ப்ளைன்ட் பண்ணலையா" என்றவனை பார்த்து, "ஒரு தடவை பிரின்ஸிபால் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணோம்... ஆனா அத அவங்க பெருசா கண்டுக்கல, ஏன்னா அந்த சதீஷ் இந்த தொகுதி எம்.எல்.ஏ வோட பையன்... இந்த ஏரியாவுல அவங்களுக்கு செல்வாக்கு அதிகம்.அதனால அப்படியே விட்டுட்டாங்க" என்றவள்,

"சங்கீதாக்கு எதும் ஆயிருக்காது இல்ல.. கொஞ்சம் சீக்கிரம் கண்டுபிடிச்சிடுங்க" என கண் கலங்க அவள் கண் கலங்குவதை பார்க்க முடியாதவன் அந்த நிலையிலும்…"என் மேல நம்பிக்கை இல்லையா" என ஆழ்ந்த குரலில் கேட்க, அந்த குரலில் உள்ள உரிமையிலும் அவன் மேல் தன்னையும் அறியாமல் ஏற்பட்ட நம்பிக்கையிலும் கண்களை துடைத்தாள்.

"ஏய்... இப்ப எதுக்கு இந்த கண்ணீர்... உன் அழகான முகத்திற்கு இந்த கண்ணீர் செட்டே ஆகல' என்றவன் இனி எப்பவும் உன் கண்ணிலிருந்து கண்ணீர் வரக்கூடாது புரியுதா...
நீங்க கிளம்புங்க, அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் இதைப் பத்தி யார்கிட்டயும் சொல்லாதிங்க" என்றவன்,அவர்கள் விடைப்பெற்றவுடன் அசோக்கை பார்த்து... "நேத்து அந்த சதீஷ் எங்க எல்லாம் போனான், யாரோட எல்லாம் போன் பேசிருக்கான்னு போன் ஹிஸ்டரிய செக் பண்ணுங்க...அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்... இங்க இருந்து 200 மீட்டர் டிஸ்டன்ஸ்ல தான் அந்த பொண்ணோட மொபைல் சுவிட்ச் ஆஃப் ஆயிருக்கு, அவளை கண்டிப்பா கட்டாயப்படுத்தியோ இல்லனா மயக்க மருந்து ஏதாவது கொடுத்து தான் தூக்கிட்டு போய் இருக்கணும். அதனால இங்க பக்கத்துல உள்ள எல்லா கடை வீடு அப்படி எல்லார்கிட்டயும் விசாரிங்க யாரையும் விட்டுறாதீங்க.. கண்டிப்பா யாருக்காவது தெரிய வாய்ப்பு இருக்கு" என்றான்.

சிறிது நேரத்தில் அனைத்து தகவலும் அவன்முன் இருக்க...அதை பார்த்தவனின் கண்கள் கோபத்தில் சிவந்தது. சதீஷ் தான் குற்றவாளி என்பதற்கான அனைத்து சாட்சிகளும் கிடைத்துவிட்டது. ஆம் அன்று கல்லூரி முடிந்து பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்தவளை இடிப்பது போல் வந்த காரை பார்த்து தடுமாறி கீழே விழுந்தாள் சங்கீதா. அந்த கார் சதீஷ் உடையது,கீழே விழுந்ததில் நடக்கமுடியாமல் கால் வலியெடுக்க...அவளுக்கு உதவுவது போல் காரில் ஏற்றி எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கடத்தியிருந்தான். இது அனைத்தும் அங்குள்ள ஒரு கடையின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.


"சார்…. நாம இப்பவே ஆக்சன் எடுக்கலாமா...அவன்தான் குற்றவாளி என்று தெரிஞ்சிடுச்சே" என்ற அசோக்கை பார்த்து "இல்ல அசோக் அவனை விட அந்த பொண்ணோட சேஃப்டி தான் நமக்கு முக்கியம்" என்றவன்...இன்னும் ரெண்டு மணி நேரத்தில் காலேஜ் முடிஞ்சிடும்.. அவனை பின் தொடர்ந்து அந்த பொண்ண முதலில் காப்பாத்திட்டு அதுக்கப்புறம் இந்த பொறுக்கியை அரெஸ்ட் பண்ணலாம்" என்றான்.

காலேஜ் முடிந்தவுடன் சதீஷை பின்தொடர்ந்த இருவரும், அவனுக்கு சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இருவரும் சாதாரண உடையில் போலீஸ் வண்டியை தவிர்த்து தங்களது சொந்த புல்லட்டில் புறப்பட்டனர்.

சதீஷ் நேராக சென்று நிறுத்தியது நீலாங்கரையில் உள்ள அவர்களது பீச் ஹவுஸ்க்கு ...ஒருமுறை சைடு மிரர் வழியாக யாராவது பின்தொடர்கிறார்களா என ஆராய்ந்தவன்... கேட் கதவை திறந்து உள்ளே நுழைந்தான்.

தங்களது வண்டியை அந்த பீச் ஹவுஸ்க்கு சற்று தள்ளி நிறுத்தியவர்கள்.. வீட்டைச்சுற்றி பார்வையை பதித்தனர். வீட்டின் பின்ப்பக்க சுவர் ஏறி குதித்தவர்கள், வீட்டை நெருங்கி, அசோக் கீழ்தளத்தின் உள்ளே செல்ல முயல… ஹர்ஷாவோ மேலே உள்ள பால்கனியை நோக்கி ஏறினான்.

பால்கனிக்கும் அறைக்கும் இடையே உள்ள கண்ணாடி கதவின் வழியே எட்டி பார்க்க... உள்ளே ஒரு நாற்காலியில் கைகள் கட்டப்பட்டு மயங்கி கிடந்தாள் சங்கீதா. அந்த நேரம் உள்ளே நுழைந்த சதீஷ், அவள் முகத்தில் தண்ணீரைத் தெளிக்க…. மெல்ல மயக்கத்திலிருந்து தெளிந்தவள் , அவனைக் கண்டு பயந்து "பிளீஸ் சதிஷ் என்னை விட்டுட்டு" என பலவீனமான குரலில் கெஞ்ச... அவனோ சற்றும் இரக்கமில்லாமல் "என்ன கல்யாணம் பண்ணிக்கோ... ஃபர்ஸ்ட் நைட்டை முடிச்சுட்டு ஒரேடியாக போலாம்' என்றவன், இங்க பாரு உன்னை என்ன வேணாலும் என்னால பண்ண முடியும்... ஆனா எனக்கு அது தேவையில்லை. ஏன்னா நான் உன்ன லவ் பண்றேன்.. எனக்கு நீ வேணும் அதுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன் என்றவன்,

அங்குள்ள சோபாவில் அமர்ந்து "உன் வாயிலிருந்து என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன் என்ற வார்த்தை வர்ற வரைக்கும் நீ இங்கதான் இருப்ப" என அலட்சியமாக கூறியவனின் முதுகில் ஓங்கி உதைக்க.. சுருண்டு கீழே விழுந்தான் சதிஷ்.

வலி உயிர் போக யாரென தலை உயர்த்தி பார்த்தவன் முன் கொலைவெறியோடு நின்றிருந்தான் ஹர்ஷவர்தன்.

"இவ்ளோ நேரம் என்னவோ பேசுனியே... இப்ப பேசுடா.. பேசு" என அவனை மீண்டும் ஓங்கி உதைத்தான். அந்த நேரம் உள்ளே நுழைந்த அசோக்கிடம் அவனை ஓப்படைத்தவன், சங்கீதாவை நெருங்கி அவளின் கட்டுகளை அவிழ்த்து விட்டான். நிற்க முடியாமல் தள்ளாடியவளை அங்குள்ள சோபாவில் அமரவைத்து தண்ணீர் அருந்த கொடுத்தவன் அசோக்கிடம் திரும்பி "எப்படியும் இவனை அரெஸ்ட் பண்ணா... உடனே வெளியே எடுக்க ஒரு கூட்டமே வரும் என்றவன், அப்பன் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ என்கின்ற திமிர். இங்கயே அவன ஒரு வழி பண்ணுங்க…"என்றவன் அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.

அவளின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தவன்.. முடிந்த அளவு விஷயம் வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டான்.

அசோக் சதீஷை அடி பிண்ணியிருக்க அப்போது அங்கே வந்த ஹர்ஷவர்தன் …"உண்மையிலேயே ஒரு பொண்ண நீ காதலித்திருந்தால் அவள் ஏற்றுக் கொள்ளும் வரை காத்திருந்திருக்க வேண்டும். அதை விட்டுட்டு இப்படி கட்டாயப்படுத்தி காதலை வர வைக்க கூடாது என்றவன், அசோக் போது விட்டுடுங்க செத்துடப்போறான்"
என்றவனை முறைத்து பார்த்து…" உன்னை சும்மா விட மாட்டேன்டா" என கத்தினான் சதிஷ்.

அதற்கு இவனும் "உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்" என சாதாரணமாக சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு கல்லூரி வந்த தோழியை சென்று அணைத்துக் கொண்டனர் கார்த்திகாவும் வைஷாலியும்.

"எப்படி இருக்க ? உனக்கு ஒன்னும் இல்லையே?.." என கண்கலங்க விசாரிக்கும் தோழிகளை கண்டு அவளுக்கும் கண்கலங்கியது. தன்னை நிலைப்படுத்திக் கொண்டு "அவ்வளவு சீக்கிரம் உங்களை டார்ச்சர் பண்ணாம போகமாட்டேன் அழாதீங்க..' என நக்கலடித்தவள்,
ஒரு நாள் ஃபுல்லா என கடத்திக் கொண்டு போய் வெச்சிருந்தாங்க என நானே சொன்னா தான் தெரியுது. அந்த அளவுக்கு இந்த நியூஸ் வெளியே கசியாமல் என்னைக் காப்பாத்தின அந்த டி.எஸ். பி சாருக்கு தான் நன்றி சொல்லனும். கொஞ்ச நேரம் கழிச்சு வந்திருந்தா கூட என்ன நடந்திருக்கும்னு என்னால யோசனை கூட பண்ணி பார்க்க முடியல.

ஒரு வயசு பொண்ண கடத்தித்திட்டு போய் ஒரு நாள் கழிச்சு அழைச்சிட்டு வந்தா….ஊர் உலகத்துல எப்படி பேசுவாங்க என்று தெரியும்தானே. எல்லாரும் என்னவெல்லாம் பேசுவார்களோ என பயந்து கொண்டிருந்தேன் ஆனால் அந்த பயத்தை ஒன்றுமில்லாமல் செய்து விட்டார் என ஹர்ஷவர்தனை புகழந்தவள்.. அவருக்கு கண்டிப்பா ஒரு தேங்க்ஸாவது சொல்லனும்" என்றாள்.

"சங்கி ...அவரை ஓவரா புகழாதே... இங்க ஆல்ரெடி ஒருத்தவங்க மெல்ட் ஆகியிருக்காங்க... இதுல நீ சொன்னத கேட்டவுடன் ஒரேடியா உருகி கரைந்திட போறாங்க" என அவனை கோயிலில் பார்த்தது , கார்த்திகாவிடம் அவன் பேசியது எல்லாவற்றையும் சங்கீதாவிடம் கூறிய வைஷாலி.. தன் தோழி கார்த்திகாவை கலாய்க்க தொடங்கினாள்.

"ஏஞ்சலாம்... இவங்க அழகான முகத்துக்கு கண்ணீர் செட் ஆகலையாம்... அய்யய்யோ கண்ணிலேயே பேசுகிறாங்கடி" என அனைத்தையும் போட்டு உடைத்தவளை
கண்டு முகம் சிவக்க நின்றிருந்தாள் கார்த்திகா.

"இப்ப என்ன அவருக்கு தேங்க்ஸ் தானே சொல்லணும்... அவருடைய நம்பர் எங்கிட்ட இருக்கு.நாளைக்கு சண்டே தானே.. ஏதாவது காபி ஷாப் இல்லனா ரெஸ்டாரண்டுக்கு கூப்பிட்டு, நம்ம சார்பாக ஒரு சின்ன ட்ரீட் வச்சு தேங்க்ஸ் சொல்லிடுவோம்" என்றார்கள் இருவரும்.

"அய்யய்யோ ...நான் வரலை" என்ற கார்த்திகாவை பார்த்து "எங்களுக்கு ஆல்ரெடி காது குத்தியாச்சு ...அதனால சும்மா சீன் போடாதே, அவரப்பத்தி பேச்சை எடுத்ததும் முகம் பிரகாசமாய் இருந்தததை நாங்களும் பார்த்தோம்... நீ கண்டிப்பா வர அவ்வளவுதான்.
சங்கீ...இந்தா இது தான் அவரோட மொபைல் நம்பர், அன்னைக்கு ஏதாவது தகவல் கிடைத்தால் போன் பண்ண சொல்லி கொடுத்தார். அவருக்கு கால் பண்ணி ப்ரோக்ராம் கன்ஃபார்ம் பண்ணிடு" என்றால் வைஷாலி.

தனது மொபைல் அலற... அதனை ஏற்று காதில் வைத்தவனின் "எஸ் ஹர்ஷவர்தனர் ஹீயர்" என்ற கம்பீரமான குரல் ஸ்பீக்கரின் உதவியால் கார்த்திகாவை அடைய... அந்த குரலே அவளை ஏதோ செய்தது. உடல் மொத்தமும் சிலிர்த்து அடங்க... ஒரு ஆண்மகனின் கம்பீரமான குரல் கூட ஒரு பெண்ணை இந்த அளவுக்கு மயக்குமா என்ற சந்தேகம் தோன்றியது அவளுக்கு.

"சார்... நான் தான் சங்கீதா, என்னை ஞாபகம் இருக்கா" என்று தன் கல்லூரி பெயரோடு கூற... "சொல்லுமா திரும்ப ஏதாவது பிரச்சனையா" என கேட்டான்.

"அதெல்லாம் ஒன்னும் இல்லை சார்…
சும்மா உங்களுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லத்தான் போன் பண்ணேன்" என்றவளுக்கு "இதுல தேங்க்ஸ் சொல்ல என்ன இருக்கு, அது என்னோட கடமை" என்றான்.

"அப்படி சொல்லாதீங்க சார்.. என்னை காப்பாற்றியது வேண்டுமானால் உங்கள் போலீஸ் உத்தியோக கடமையாக இருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி என்னுடைய பேர் வெளியே வராமல் பார்த்துக்கொண்டது, ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணது, இதுக்கெல்லாம் என்ன சொல்றதுன்னே தெரியல...அதுக்காகத்தான் ஒரு சின்ன ட்ரீட் நாளைக்கு லஞ்சுக்கு மட்டும் எங்களோட ஜாயின் பண்ணிக்கோங்க" என்க,

"இல்லமா அதெல்லாம் எதுவும் தேவையில்லை" என சொல்ல, "அப்படியெல்லாம் சொல்லாதீங்க சார்...எங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ரொம்ப ஆசைப்படுறாங்க" என்றவளின் ஃப்ரெண்ட்ஸ் என்ற வார்த்தையை கேட்டவுடன் கார்த்திகாவின் முகம் தோன்ற... வேண்டாம் என மறுக்க நினைத்தவன் தன்னவளின் தரிசனத்திற்காக வருவதாக ஒத்துக்கொண்டான்.

ஞாயிறு மதியம் ஃபார்மல் ஷர்ட் பாண்டில், கண்களில் கூலர்ஸ் அணிந்துகொண்டு வெளியே செல்ல கிளம்பிய மகனை பார்த்த ராதிகா "எங்கடா கிளம்பிட்ட... சண்டே ஒரு நாள்தான் வீட்டிலிருக்க, இன்னைக்கும் வெளியே கிளம்பியாச்சு' என்றவர், எங்க போறதா இருந்தாலும் சாப்பிட்டு போ... உனக்காக தான் இன்னைக்கு நான்வெஜ் எல்லாம் செஞ்சு வெச்சுருக்கேன்" என்றவரை பரிதாபமாக பார்த்தவன்,

"சாரிம்மா இன்னிக்கு ஒரு ஃப்ரெண்டோட லஞ்சுக்கு பிளான் பண்ணிருக்கேன்... நீ ஒன்னும் கவலைப்படாத அங்க கொஞ்சமா சாப்பிட்டுட்டு திரும்பவும் வீட்டுக்கு வந்து என் செல்ல அம்மா செஞ்சதை சாப்பிடுறேன்" என ஒரு பெரிய ஐஸ்கட்டியை தூக்கி தலையில் வைத்துவிட்டு ... நழுவி ஓடிய தம்பியை பார்த்து,

"அது பாய் ஃப்ரெண்டா இல்ல... கேர்ள் ஃப்ரெண்டா" என கேட்க,

"பாய் ஃப்ரெண்ட் தான்" என சத்தமாக சொல்லியவன்,தன் அண்ணனுக்கு மட்டும் கேர்ள் ஃப்ரெண்ட் என வாயசைத்துவிட்டு சென்றான் .

"ஏய்... நான் கண்டிப்பா இருக்கணுமா, தேங்க்ஸ் சொல்ல தானே.. அதுக்கு எதுக்கு நான், எனக்கு ஒரு மாதிரியா இருக்கு" என புலம்பிய கார்த்திகாவை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர் அவள் தோழிகள்...வைஷாலியும் சங்கீதாவும்.

"அதே தான் நாங்களும் சொல்றோம்...தேங்க்ஸ் சொல்ல தானே அவரை வர சொல்லி இருக்கோம். அதுக்கு எதுக்கு நீ இப்படி ரியாக்ட் பண்ற" என்க,
"அது வந்து….அது வந்து…"என இழுக்க,

"அதான் வந்துட்டியே அப்புறம் என்னடி" என கத்திய தோழியை கண்டு உதடு சுழித்தவள் "நான் கிளம்புறேன்... நீங்களே பார்த்துட்டு வாங்க. எனக்கு ஒரு மாதிரி படபடப்பா இருக்கு" என முகம் சிவக்க சொல்லியவள், ஓட்டமும் நடையுமாக ரெஸ்டாரண்ட் விட்டு வெளியே வந்தாள்.

அந்த பிரம்மாண்டமான ஷாப்பிங் மாலின் முன் வண்டியை நிறுத்தியவன், இரண்டாம் தளத்தில் உள்ள ரெஸ்டாரன்ட்க்கு செல்ல எக்ஸலேட்டரில் பயணித்தவன் இரண்டாம் தளத்தில் இறங்க காலேடுத்து வைக்கும் நொடியில், தன் தோழியிடம் சண்டையிட்டு அவளை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வந்த கார்த்திகா,

எக்ஸலேட்டரில் கால்வைத்து அதன் அதிர்வில் தடுமாறி விழ….சரியாக அதே நேரம் விழ இருந்தவளை தாங்கி பிடித்தான் ஹர்ஷவர்தன்.

தன் கையில் பூ மாலையாக விழுந்தவளை அணைத்து பிடித்தவன்...பயத்தில் கண்களை மூடிக்கொண்டு கடவுளே கடவுளே என வேண்டிக்கொண்டிருந்தவளின் கன்னத்தை தட்டி "ஹாய் ஏஞ்சல்…" என்க,

அவன் குரலில் அவனை உணர்ந்தவள்….இதுவரை தான் யார் அணைப்பிலோ இருக்கிறோம் என பயந்து நடுங்கியவளின் மனம் நிம்மதியாக உணர்ந்தது. மெல்ல தன் கண்களை திறந்தவளின் முன் புன்னகையுடன் காட்சியளித்தான் ஹர்ஷவர்தன்.

"என்ன வரவேற்பு எல்லாம் பயங்கரமா இருக்கு. தேங்க்ஸ் சொல்ல தான் கூப்பிட்டீங்கனு தெரியும், வேண்டான்னு சொல்ல தான் நினைச்சேன்... பட் உன்னை பார்க்கிறதுக்காக தான் வந்தேன என்றவன், ஆனா இப்படி ஒரு வரவேற்பை நிச்சயமா எதிர்பார்க்கலை" என்றவனின் பார்வை அவர்களின் நெருக்கத்தை சுட்டிக்காட்ட…

அப்போதுதான் இன்னமும் தான் அவன் அணைப்பில் இருப்பதை உணர்ந்தவள் பதறி விலகி நின்றாள்.
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 11

தன் உடலின் மொத்தப் பாரமும் அவன் மேல் இருக்க... அதனை கண்டு பதறி விலகியவளின் கை கால்கள் நடுங்க தொடங்கியது. புதிதாக உணரும் ஆண்மகனின் தொடுகையும் அவன் மேலிருந்து வரும் ஆண்மை வாசனையும் அவளை ஏதோ செய்ய.. நிற்க முடியாமல் தடுமாறினாள். அவளின் தடுமாற்றத்தை உணர்ந்து கொண்டவன் அவளின் கையை பிடித்து நிலைப்பெற செய்தான்.

*ஹலோ ஏஞ்சல்... வாங்க உள்ளே போகலாம் நமக்காக உங்க பிரெண்ட்ஸ் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க" என என்னவோ தான் அவனோடு ஜோடியாக லஞ்சுக்கு வந்தது போல் சாதாரணமாக சொல்ல... சட்டென்று தன் கைகளை அவனிடமிருந்து பிரித்துக் கொண்டவள், "இல்லை நான் கிளம்புறேன்... எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு" என சொல்ல


அவனும் "அப்பசரி நானும் கிளம்புறேன்... நீயும் அவங்களோட இருப்ப...இதையே காரணமாக வைத்து உன்னை பார்க்கலாம்ன்னு தான் வந்தேன். இப்பதான் உன்னை பார்த்துடேனே, அதனால நானும் கிளம்புறேன்" என கீழே இறங்க சென்றவனை தடுத்தவள் "இல்ல... அது... நீங்க.." என திக்கி திக்கி பேசியவளை ரசித்துப் பார்த்தான்.

அவனிடம் எந்த பதிலும் இல்லாததால் நிமிர்ந்து பார்த்தவள் அவன் பார்வையில் உள்ள ரசனையில் சட்டென்று முகம் சிவக்க குனிந்து கொண்டாள்.

சிறிது நேரம் மௌனம் காத்தவள் "உள்ளே போகலாம்" என மெதுவாக சொல்ல.. "என்ன சொன்ன ? எதுவாக இருந்தாலும் சத்தமா சொல்லு. அது என்ன உனக்கே கேட்காத குரலில் பேசுற' என அவளை சீண்டியவன்.. வா போகலாம்" என்க அவளும் மறுக்காமல் அவன் பின்னோடு சென்றாள்.

"வைஷு.. அங்க பாருடி, மேடம் நான் போறேன்... போறேன்னு... சொன்னது வீட்டுக்கு போக இல்ல. அவரை வரவேற்க போறேன்னு சொல்லி இருக்கா. அது நமக்கு தான் புரியல, சரியான கேடிடி அவ..அவளை அப்புறமா கவனிச்சிக்கலாம்" என்றவள், அவன் அவர்களை நெருங்கவே இருவரும் எழுந்து நின்றனர்.

"இப்ப எதுக்கு எழுந்து நிற்கிறிங்க... இங்க நான் போலீஸா வரலை உங்களோட கெஸ்டா தான் வந்திருக்கேன்" என்றவன் ஒரு சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.

நான்கு பேர் அமரும் மேஜையில் தோழிகள் இருவரும் எதிர்ப்புறம் அமர்ந்திருக்க... வேறு வழியின்றி அவனருகில் அமர்ந்தாள். இன்னமும் அவளுக்கு நடுக்கம் குறையாத நிலையில் தன் தோழிகள் கேட்ட கேள்விகளுக்கு திக்கித் திணறி பதில் அளித்தாள்.

தங்களுக்கு தேவையானவற்றை ஆர்டர் செய்தவர்கள் பொதுவான விஷயங்களை பேசிக்கொண்டே சாப்பிட்டனர். அனைவரும் உண்டு முடித்தவுடன் மூவரும் சேர்ந்து அவனுக்கு நன்றியை தெரிவிக்க அதனை மெல்லிய புன்னகையோடு ஏற்றவன்... அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு, தன்னவளை மட்டும் பார்த்து கண்ணடித்து விட்டு சென்றான்.

அவன் சென்றவுடன்... தன் தோழிகள் கேட்ட கேள்விகளுக்கு எதையோ சொல்லி சமாளித்தவள் அவன் மீது விழுந்து வாரியதை மறைத்துவிட்டு எப்படியோ வீடு வந்து சேர்ந்தாள்.

எங்கேயோ பார்வையை வெறித்துக்கொண்டு, தனக்குள்ளே சிரித்து கொண்டு வரும் மகளை யோசனையோடு பார்த்த அகல்யா... "ஏய் என்னடி ஆச்சு" என உலுக்க...

அதில் தன்னிலையடைந்தவள் "அது ஒண்ணுமில்லம்மா…"நம்ம வைஷூ ஒரு காமெடி சொன்னா... அதை நினைச்சிடே வந்தேன் அதான்" என வாய்க்கு வந்ததை சொல்லியவள் "
இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தன் வாயாலேயே எல்லாத்தையும் வாங்கி விடுவார் என்ற உண்மையை அறிந்தவள், அவர் அடுத்த கேள்வியை கேட்கும் முன் அறைக்குள் சென்று மறைந்தாள்.

போய் மெத்தையில் விழுந்தவளின் நினைவு முழுவதும் இன்று நடந்த சம்பவத்திலேயே இருக்க.. "ச்சீ இப்படியா என் மானத்தை வாங்குவ" என தன் மனசாட்சியை கேட்டவள், மெல்ல தன் தலையிலேயே தட்டிக் கொண்டாள்.

அடுத்தநாள் கல்லூரிக்கு சென்றவள் தன் தோழிகளிடம் "என்னோட செயினை காணும்டி... காலையில் குளிக்கும் போது தான் பார்த்தேன் கழுத்தில் இல்லாததை... ரூம் ஃபுல்லா தேடிட்டேன் ஒருவேளை நேத்துப்போன ரெஸ்டாரண்ட்ல மிஸ் ஆகியிருக்குமோ... இன்னும் வீட்டில சொல்லல, சொன்னா அம்மா அவ்வளவுதான் என்னை அடிப் பண்ணிடுவாங்க. அது அவங்களோட பாட்டி அவங்களுக்கு போட்டதும் நானும் டிசைன் புது மாதிரியாக இருக்கவும் மறுக்காமல் போட்டுக்கிட்டேன் இப்ப என்ன பண்றது…' என வரிசையாக பேசியவள்... கடைசியில் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணலாமா" என்க,

"அப்படி வா வழிக்கு…உண்மையிலேயே செயின் காணாமப்போச்சா இல்ல, சிங்கம் பட அனுஷ்கா மாதிரி ஒளிச்சு வச்சுட்டு உன் ஆளப்பார்க்க பிளான் போடுறியா" என கிண்டல் செய்த தோழிகளை பார்த்து… "ச்சீச்சீ நான் ஒன்னும் பொய் சொல்லல. நெஜமாவே செயினை காணும், ஏதாவது வழி சொல்லுங்கடி" என கெஞ்சியவளை பார்த்து

"சரி விடு... காலேஜ் முடிந்ததும் போலீஸ் ஸ்டேஷன் போகலாம். கம்ப்ளைன்ட் எல்லாம் கொடுக்க வேண்டாம் அது ஏதாவது பிரச்சினை ஆயிடப் போகுது' என்றவள்... உங்க ஆளு கிட்ட சொல்லுவோம், உனக்காகவாவது வலைவீசித் தேடி தருவார்" என்றவளை கண்டு இதழ் கடித்து தன் வெட்கத்தை மறைத்தவள் வகுப்பில் சென்று அமர்ந்தாள்.

காலேஜ் முடிந்தவுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல வேண்டியிருப்பதால் சீக்கிரமா கிளம்பி தன் ஸ்கூட்டியை எடுக்க பார்க்கிங் நோக்கி சென்றவளை... இடிப்பது போல் வந்து நின்றது ஒரு பைக்.

தலையில் ஹெல்மட்டுடன் காலை தரையில் வைத்து நின்றவன் "ஹாய் பேபி ஐயம் கிருஷ்ணன்... உன்ன பார்த்த நொடியிலிருந்து எனக்கு என்னையே மறந்துடுச்சு.. ஐ திங்க் ஐயம் இன் லவ் வித் யூ" என்றவன், அவள் கையில் ரோஜா பூங்கோத்தை திணித்துவிட்டு தன் வண்டியை கிளப்பிக்கொண்டு சென்று விட்டான்.

அவன் செல்லும் வரை அதிர்ந்து நின்றவள், "யாருடி இது... சரியான லூசா இருப்பான் போல, ஹெல்மெட்ட கூட கழட்டாம... ஐ லவ் யூ சொல்லிட்டு போறான்" என்க,

அதற்கு வைக்ஷு "சரியான பயந்தாங்கொள்ளியா இருப்பான் போல... சரிவிடு லிஸ்ட்ல இன்னொன்னு சேர்ந்துச்சு அவ்வளவுதான். நாம நம்ம வேலையை பார்க்க போகலாம்" என சொல்ல ...இருவரும் தங்கள் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் நோக்கி சென்றனர்.

"டேய் மச்சான்... ஹெல்மட்டை ஏன்டா கழட்டல...? உன்ன பாக்காம எப்படி லவ் பண்ணுவா...? என்ற நண்பனை பார்த்த கிருஷ்ணா "அவளை எத்தனை பேரு ப்ரொபோஸ் பண்ணியிருப்பாங்க.. அவங்கள மாதிரி நானும் போய் ஐ லவ் யூன்னு மட்டும் சொன்னா…நானும் நூத்துல ஒரு ஆளா இருப்பேன். ஆனா இப்போ பாரு... நான் யாரு ? எப்படி இருப்பேன்னு தெரிஞ்சுக்க ஒரு ஆர்வம் இருக்கும். எப்பவும் நம்மள பத்தியே நினைச்சுட்டு இருப்பா. அதான் எனக்கு வேணும்' என்றவன், இது சும்மா கொஞ்சநாள் தான், கண்டிப்பா என்னோட முகத்தை அவ பாக்குற நாள்… என்ன பார்க்க போற தவிப்பு,ஆசை அவ கண்ல இருக்கணும் அதை நான் பாக்கணும்" என்றான்.

பாவம் அவனுக்கு ஒரு விஷயம் தெரியவில்லை அவன் எவ்வளவு அழகனாக இருந்தாலும், விதவிதமாக லவ் புரோபோஸ் பண்ணாலும் ...ஒரு பெண்ணின் மனதில் வேறு ஒருவன் இருக்கும் பட்சத்தில், அவளுக்கு இவன் துட்ச்சமாக தான் தெரிவான் என்பது.

காவல் நிலையம் வந்தவர்கள் அங்குள்ள கான்ஸ்டேபிலிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். "சார்.. நாங்க டி.எஸ்.பியை பாக்கணும்" என வைஷாலி சொல்ல,

"எந்த விஷயமா பார்க்கணும்" என அவர் கேட்க, "ஒரு செயின் காணாம போயிடுச்சு அதற்கு கம்ப்ளைன்ட் கொடுக்க வந்திருக்கோம்" என்றவர்களைப் பார்த்து "ஏன்மா இது உங்களுக்கே அநியாயமாக தெரியலையா... செயின் காணாமல் போனதுகெல்லாம் இந்த சைட் இன்ஸ்பெக்டர் இருப்பாரு, அங்க போய் சொல்லுங்க. இதுக்கெல்லாம் டி.எஸ்.பி யைப் பார்க்க முடியாது" என்றவனை முறைத்த வைஷாலி,

"முதல்ல போய் உங்க சார்கிட்ட சொல்லுங்க.. எஸ்.ஆர்.வி காலேஜிலிருந்து கார்த்திகா வைஷாலின்னு ரெண்டு பொண்ணுங்க வந்திருக்காங்க... அவர்களை அனுப்பவா வேணாமான்னு … ஒருவேளை அவர் எங்களை போக சொல்லிட்டா நாங்க போறோம்" என்றவளை கண்டு தன் தலையிலேயே அடித்து கொண்டவர், எனக்குன்னு வந்து மாட்டுதுங்க பாரு ? எனப் புலம்பிக் கொண்டே சென்று அவர்களைப் பற்றி அவனிடம் கூற.. அவனோ அவர்களை உடனே உள்ளே அனுப்புமாறு ஆணையிட்டான்.

வெளியே சென்று "உங்களை சார் உள்ளே வரச் சொன்னார்" என்றவரை பார்த்து... "இப்ப தெரியுதா நாங்க யாரு? எங்க பவர் என்னன்னு?.." என கெத்து காட்டிய வைஷாலி, வாடி போகலாம் என கார்த்திகாவை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.

"வாங்க வாங்க…. உங்களை தான் எதிர்பார்த்தேன்" என்றவனை புரியாமல் பார்த்தவர்கள் "எங்களை ஏன் நீங்க எதிர் பார்த்தீங்க"என கேட்டவளை பார்த்து... தான் உளறிக்கொட்டியதை உணர்ந்தவன்

"அது ஒன்னுமில்ல இப்பதானே கான்ஸ்டபிள் சொன்னாரு, அதனால சொன்னேன்" என்றான்.

வந்தவர்களை அமர சொன்னவன், "ஏதாவது சாப்பிடுறீங்களா" என கேட்க,

அதற்கு "எதுவும் வேண்டாம் சார்" என்ற வைஷாலியை பார்த்து…"உங்க ஃப்ரெண்ட் எதுவும் பேச மாட்டாங்களா? இன்னைக்கு மௌன விரதமா... இல்ல திடீர்னு ஊமையாகிட்டாங்களா…" என நக்கல் பேசியவனை நிமிர்ந்து பார்த்த கார்த்திகா

"நான் ஒன்னும் ஊமையில்லை" என கூறியவள் திரும்பவும் மௌனத்தை கையிலேடுத்தாள்.

முதலில் தொடங்கிய வைஷாலி "சார் இவளோட செயினை காணும் கோல்ட் செயின் வித் டைமண்ட் டாலர்... ரொம்ப காஸ்ட்லியானது' என்றவள் இன்னும் வீட்ல சொல்லல, அதான் உங்ககிட்ட சொன்னா சீக்கிரம் கிடைக்கும்னு" என்றவளை பார்த்து

"தொலைந்துபோனது உங்க ஃப்ரெண்டோட செயின் தானே.,. ஏன் அவங்க வாயை திறக்க மாட்டாங்களா" என்றவனை நிமிர்ந்து பார்த்து,

"என் செயினை தான் காணோம்" என மௌனத்தை உடைத்து பேசத் தொடங்கினாள் கார்த்திகா.

"அந்த செயின் எப்படி இருக்கும் ஏதாவது அடையாளம்,இல்லனா ஃபோட்டோ இருக்கா" என்றவனுக்கு தன் மொபைலில் உள்ள போட்டோவை காட்ட…. அந்த போட்டோவில் அழகாக சிரித்துக் கொண்டிருந்த கார்த்திகாவின் கழுத்திலுள்ள செயினை தவிர... அவளையே ரசித்தவன், "இந்த போட்டோவை எனக்கு சென்ட் பண்ணுங்க, செயின் கண்டுபிடிக்க உதவும்" என்றவனின் எண்ணம் புரியாதவள், செயின் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் போட்டோவை அவனுக்கு அனுப்பினாள்.

அப்போது கையில் ஃபைலோடு உள்ளே நுழைந்த அசோக், "சார் நீங்க கேட்ட ஃபைல்" என அவன் முன்வைத்துவிட்டு வெளியே செல்ல முயல,

தொண்டையை கனைத்து அவனை செல்ல விடாமல் தடுத்த ஹர்ஷா…. அவனிடம் வைஷாலியை காட்டி கண்களால் ஏதோ சொல்ல...சரியென தலையைசைத்தவன் வெளியே சென்றான்.

இரண்டு நிமிடத்தில் மீண்டும் உள்ளே வந்தவன் "எக்ஸ்க்யூஸ் மீ மேம்... ராயல் ப்ளூ கலர் ஆக்டிவா யாருடையது" என கேட்க, "என்னுடையது தான் சார்" என எழுந்து நின்றாள் வைஷாலி.

"நீங்க பார்க் பண்ணிருக்குற இடம் இன்ஸ்பெக்டர் வண்டியை நிறுத்துற இடம். கொஞ்சம் வந்து தள்ளி நிறுத்தி வைக்கிறிங்களா" என கேட்க,

"ஓகே சார், என்றவள் நான் போய் பார்க் பண்ணிட்டு வரேன்" என எழுந்து சென்றாள். கண்களால் அசோக்கிற்கு தன் நன்றியை தெரிவித்தவன்... தன்னவளை ரசிக்க தொடங்கினான். வைஷாலி இருந்த தைரியத்தில் பேசிக் கொண்டிருந்தவள், அவள் சென்றவுடன் அமைதியை கடைப்பிடித்தாள்.

அந்த அமைதியை தனது ஆழ்ந்த குரலால் களைத்தான் ஹர்ஷவர்தன்.

"ஓய் ஏஞ்சல்... உன்னோட செயின் இதுவா பாரு" என தன் பாக்கெட்டிலிருந்து எடுத்து நீட்ட... அதை பார்த்து அதிர்ந்தவள், அவனை நிமிர்ந்து பார்க்க அவன் பார்வையில் உள்ள குறும்பில் தடுமாறியவள், தலை குனிந்துக்கொண்டு செயினுக்காக கையை நீட்ட அவனோ செயினை தன்னை நோக்கி இழுத்துக் கொண்டான்.




படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை மறக்காமல் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 12

"என்ன விளையாட்டு இது, என்னோட செயினை கொடுங்க... நானே காலையிலிருந்து செயினை காணோம்னு எவ்வளவு கஷ்ட்டப்பட்டேன் தெரியுமா?.." என சிணுங்கலான குரலில் கேட்க..

அவனோ செயினை தரமுடியாது என தலையசைக்க... தன் நாற்காலியை விட்டு எழுந்தவள், "கொடுங்க" என மீண்டும் கேட்க,அவன் மறுக்க... எப்போது அவள் அவன் அருகில் சென்றாள் என கேட்டால் இருவருக்குமே தெரியாது. செயினை அவனிடமிருந்து பறிக்கும் ஆவலில் அவன் அருகில் சென்றுவிட்டாள்.

அவள் கையை நீட்டும் போதெல்லாம் இவன் கையை அவளுக்கு எட்டாமல் செய்ய.. எக்கி பறிக்க முயன்றவள், தடுமாறி அவன் மேலே விழ முயல... அவள் இடையை பிடித்து விழாமல் நிறுத்தினான் ஹர்ஷா.

இருவருமே இந்த நிலையை சற்றும் எதிர்பாராமல் இருக்க... அவள் இடையில் பதிந்த தன் கரங்கள் உணர்ந்த மென்மையில் மொத்தமாக வீழ்ந்துப்போனான்.
இருவர் பார்வையும் ஒன்றோடொன்று பின்னிக் கொள்ள அதே நிலையில் ஸ்தம்பித்து நின்றனர்.

அதேநேரம் கதவை திறந்து கொண்டு வந்த வைஷாலி அதிர்ந்து நின்றாள். 'இங்க என்ன நடக்குது, நம்ம ஏதாவது கனவு காண்கிறோமா' என கண்களை கசக்கி பார்த்தாள், இன்னும் அந்த இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு அதே நிலையில் இருக்க... அதை கலைக்க நினைத்தவள் தொண்டையை செருமினாள்.

அவள் சத்தத்தில் தன் நிலையடைந்த இருவரும் அவசரமாக பிரிய அவனோ சங்கடமான ஒரு பார்வையை வைஷாலியை நோக்கி செலுத்தியவன், "இல்ல... அவங்க விழ பார்த்தாங்க அதான் தாங்கி பிடித்தேன்" என காரணம் கூற,

கார்த்திகாவோ வெட்கத்தாலும் சங்கடத்தாலும் முகம் சிவந்து தலையை குனிந்து கொண்டாள்.

அப்போதுதான் அவன் கையிலுள்ள செயினை பார்த்த வைஷாலி 'ஓ ... இதுதான் விஷ்யமா' என மனதுக்குள் சொல்லிக்கொண்டவள் "திருடன் கிட்டயே சாவியை கொடுப்பது போல்... செயினை எடுத்த உங்ககிட்டயே செயினை காணும்னு கம்ப்ளைன்ட் கொடுக்க வந்திருக்கோம் இல்லையா சார்…" என இழுத்தவளை பார்த்து,

"அது நான் ஒன்னும் திருடல சிஸ்டர்... நேத்து ரெஸ்டாரெண்டில் அவங்களை கட்டிபிடிச்சப்போ" என்க…"என்னது கட்டிப்பிடிச்சிங்களா…
இது எப்போ நடந்தது" என அதிர்ந்து கேட்க,

"இல்ல இல்ல... அது இன்னைக்கு மாதிரி நேத்தும் அவங்க விழும்போது தாங்கிப் பிடிச்சேனா...அப்போ பேலன்ஸ் இல்லாம அவங்கள கட்டிப்பிடிச்சப்போ… இந்த செயின் என்னோட சட்டை பட்டனில் மாட்டிக்கிச்சி, நானே கொடுக்கணும்னு நினைச்சேன் அதுக்குள்ள நீங்களே வந்துட்டிங்க" என்றான்.

இதனை கேட்ட வைஷாலி "அடிப்பாவி நேத்து இவ்வளவு விஷயம் நடந்திருக்கு ஒண்ணுமே இல்லைன்னு சொல்லிட்ட இல்ல... இருடி உன்ன அப்புறம் கவனிச்சிக்கிறேன்" என்றவள்,

கார்த்திகாவை பார்த்து... "மேடம் வீட்டுக்கு வருவீங்களா?... இல்ல சார் கூடவே இருக்கீங்களா… ஏனா எனக்கு டைம் ஆகுது, எங்க வீட்டுல திட்டுவாங்க" என்றவளை பார்த்து சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு "வா போகலாம்" என்றாள்.

ஒரு அடி எடுத்து வைத்தவள் மீண்டும் திரும்பி பார்த்து "என்னோட செயின்" என அவன் முகத்தை பார்க்காமல் கையை நீட்ட... அவனும் வைஷாலி இருப்பதால் எந்த சில்மிஷமும் செய்யாமல் செயினை அவள் கையில் வைத்தான்.

அவள் சென்ற பின்பும் அந்த அறையில் அவளின் மேல் எழுந்த வாசனை நிரம்பியிருக்க…. ஆழ்ந்து சுவாசித்தான். ஏதோ டீனேஜ் பையனை போல் துள்ளி குதிக்க வேண்டும் போலிருந்தது, அந்தளவுக்கு மனம் மகிழ்ச்சியாக உணர்ந்தது.

அன்று மாலை வீடு வந்து சேர்ந்தவனை வாசல்வரை ஓடிவந்து வரவேற்றாள் ஐஸ்வர்யா அவனின் அக்கா வைஷ்ணவியின் மகள்.

"ஏய் செல்லக்குட்டி எப்ப வந்தீங்க..?" என தூக்கிப்போட்டு பிடித்தவனின் கழுத்தை கெட்டியாக பிடித்து கொண்டவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டு…. "இப்போதான் வந்தோம் மாமா" என தன் மழலை குரலில் சொல்ல... அவனும் சின்னவளின் இரு கன்னத்திலும் முத்தமிட்டு தூக்கிக்கொண்டே உள்ளே நுழைந்தான்.

ஹால் சோபாவில் அமர்ந்திருந்த அக்காவை நெருங்கியவன் அப்போது தான் பார்த்தான், அவள் அருகில் அமர்ந்திருந்த ஆர்த்தியை. மரியாதைக்காக அவளுக்கும் ஒரு ஹாய் சொல்லியவன்… தன் அக்காவின் அருகில் சென்று அமர்ந்தான்.

வைஷ்ணவிக்கு தம்பி என்றால் உயிர்... அவனுக்கு பிடிக்காத எந்த விஷயத்தையும் அவள் செய்யவே மாட்டாள். அனைத்து நல விசாரிப்புகளுக்கு பிறகு "நான் போய் குளிச்சுட்டு வந்துர்றேன்" என்றவன், தன் அறைக்கு சென்றான்.

குளித்து முடித்தவன் ஒரு நைட் பேண்டையும் டீ - ஷர்ட்டையும் அணிந்து கொண்டு வெளியே செல்ல கதவை திறக்க… அதே நேரம் "ஐஸூ நம்ம மாடிக்கு போகலாம் வா" என குழந்தையை தூக்கிக்கொண்ட ஆர்த்தி, அவன் அறைக்கதவை திறந்தாள்.

"ஹாய் அத்தான்... என்ன அப்படி பாக்குறீங்க ? ஏன்... நான் உங்க ரூம்க்கு வரக்கூடாதா?.." என கேட்க, அவனோ "அப்படியெல்லாம் ஏதுமில்லை என்றவன், உள்ள வா" என அழைத்தான்.

அவனின் அறை மிகவும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது, அதனை பார்த்தவள் "அத்தான் நீங்க சரியான மிஸ்டர் கிளீன் போல... ரூம்ம கண்ணாடி மாதிரி வச்சிருக்கீங்க" என்றவள் குழந்தையை கீழே விட.. குழந்தை மெத்தையில் ஏறி அருகில் உள்ள மேஜையில் வைக்கப்பட்ட அவனது மொபைலில் கேம் விளையாட தொடங்கியது.

ஹர்ஷவை நெருங்கியவள் "அத்தான் நான் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்" என்றாள்.

அவனுக்கு அவள் எதைப்பற்றி பேசப் போகிறாள் என தெரிந்திருந்தப்போதிலும் "ம்ம்" என தலையசைத்தவன் பால்கனியை நோக்கி சென்றான்.

"அத்தான்… எனக்கு இந்த வருஷத்தோட படிப்பு முடியுது, வீட்டில் அம்மா அப்பா கல்யாணத்தை பத்திக் கேக்க ஆரம்பிச்சிட்டாங்க. இப்போ நான் எதைப்பத்தி பேச போறேன்னு உங்களுக்கும் தெரியும்னு நினைக்கிறேன் என்றவள், இதுக்கு மேல மறைத்து எந்தவொரு புண்ணியமும் இல்லை. ஐ லவ் யூ அத்தான்" என அவன் விழிகளை பார்த்து கூறியவள் பதிலுக்காக காத்திருக்க,

"சாரி டூ சே திஸ் ஆர்த்தி... உன்ன அந்த மாதிரி ஒரு எண்ணத்தில் நான் பார்த்ததே இல்லை, அதுமட்டுமில்லாமல் நான் ஒரு பெண்ணை மனதார காதலிக்கிறேன்" என்றான்.

அதனைக் கேட்டு அதிர்ந்தவள்... "சும்மா பொய் சொல்லாதீங்க அத்தான்...என்னை பிடிக்கலன்னு சொல்லுங்க ஒத்துக்கிறேன்.அதுக்காக நீங்க யாரையோ லவ் பண்ரெண்ணு பொய் சொல்ல தேவையில்லை' என்றவள், இப்ப என் மேல லவ் வரலைன்னா என்ன அத்தான்... கல்யாணத்துக்கு அப்புறம் கண்டிப்பாக லவ் வரும்... எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது" என்றாள் விடாமல்.

"புரியாம பேசாத ஆர்த்தி... உன்கிட்ட பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை. நிஜமாகவே நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்றவன், உன்மனசுல இந்த மாதிரி ஒரு எண்ணம் வர காரணமாக இருந்ததற்காக உன்கிட்ட மன்னிப்பு கேட்கிறேன்" என்றான்.

அவன் மனதில் வேறு ஒரு பெண் இருக்கிறாள் என்பதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. அப்பொழுது "மாமா..இந்த போட்டோல இருக்குற ஆன்ட்டி யாரு?.. ரொம்ப அழகா இருக்காங்க?.." என அவனது மொபைலில் உள்ள கார்த்திகாவை காட்டி கேட்க,

உள்ளே நுழைந்த ஆர்த்தி... அந்த போனை சின்னவள் கையிலிருந்து பிடுங்கி பார்க்க…. அந்த போட்டோவில் உள்ள கார்த்திகாவை பார்த்து அதிர்ந்தவள் "இந்த பொண்ணு" என அவனை பார்த்து கேட்க,

"இவ தான் நான் சொன்ன பொண்ணு கார்த்திகா என்றவன், இவளும் உங்க காலேஜ் தான்" என்றான்.

அவன் காதலிக்கும் பெண் வேறு ஒரு பெண்ணாக இருந்தால் கூட அவள் அமைதியடைந்து இருப்பாளோ என்னவோ... ஆனால் கார்த்திகா என தெரிந்த பின்பு அவள் மேல் கொலைவெறியே எழுந்தது. காலேஜிலும் அவளின் புராணம், இங்கே தான் உயிராக காதலிக்கும் ஆண்மகனின் மனதிலும் அவளே என்பதை தாங்க முடியாதவள் அறையை விட்டு வெளியே சென்றாள்.

கீழே வந்தவள்…"அண்ணி எனக்கு தலை வலிக்குது, நீங்க இருந்துட்டு வாங்க... நான் கிளம்புறேன்" என்றவள் உடனடியாக வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டாள்.

ஐஸூவை தூக்கிக் கொண்டு கீழே வந்தவனை பார்த்த ராதிகா... "என்னடா சொன்ன?.. ஒரு மாதிரி முகத்தை சோகமாக வச்சுகிட்டு போறா…" என்ற தாயைப் பார்த்து,

"நான் ஒன்னும் சொல்லலம்மா.. அவ ப்ரொபோஸ் பண்ணா... நான் ஸாரி வேற ஒரு பொண்ணை லவ் பண்றேன்னு சொன்னேன்... போய்ட்டா. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்" என்றான்.

"டேய் யாரைடா லவ் பண்ற ? எங்கிட்ட கூட சொல்லவே இல்லை பத்தியா" என வருந்திய தாய்யை சென்று தோளோடு அணைத்தவன், "நான் இன்னும் அவகிட்டயே சொல்லலை" என்க..

அப்போது பாட்டி…" நான் அத்தையை பார்த்தேனே…. மாமா ஃபோன்ல.. ரொம்ப அழகா இருந்தாங்க" என தன் மழலை குரலில் சொன்னவள் போட்டோவை எடுத்து ராதிகாவிடம் நீட்டினாள்.

அதனை பார்த்தவர் இனிமையாக அதிர்ந்தார். "பார்க்கவே தேவதை மாதிரி இருக்கா" என்றவர்,தன் மகளிடம் காட்ட அவளும் ரொம்ப அழகா இருக்கா என கூறினாள்.

இப்படியே வீட்டில் இருக்கும் அனைவரும் அவள் புகைப்படத்தை மாறி மாறி பார்த்துவிட்டு அவன் காதலுக்கு க்ரீன் சிக்னல் வழங்கினர்.

அடுத்தநாள் மாலை அவளை பார்க்க வேண்டும் என்பதற்காக அவள் வழக்கமாக செல்லும் கோவிலில் காத்திருந்தான். அவன் நம்பிக்கையை பொய்யாக்காமல் அவன் தேவதையும் வந்து சேர்ந்தாள்.

சாமி கும்பிட்டு முடித்தவள்... பிரகாரத்தை சுற்றியப்போது அவள் எதிரில் வந்து நின்றான் ஹர்ஷவர்தன். அவன் வருவான் என எதிர்பாராதவள் முதலில் அதிர்ந்து பின் தன் மகிழ்ச்சியை மறைத்து கொண்டு அமைதியாக நின்றாள்.

"ஹாய் ஏஞ்சல் எப்படி இருக்க?.. என்றவன், வைஷாலியை பார்த்து, ஹாய் சிஸ்டர் நீங்க எப்படி இருக்கீங்க?.." என்றான்.

"நாங்க நல்லா இருக்கோம் சார்" என்ற வைஷாலியைப் பார்த்து... "கொஞ்சம் உங்க ஃப்ரெண்ட் கிட்ட தனியா பேசணும்" என்க,

அதற்கு அவளோ "அன்னைக்கு அந்த இன்ஸ்பெக்டரை அனுப்பி என்னை வெளியே போக வச்சிங்க… இன்னைக்கு டைரக்டாவே போக சொல்றீங்க...நடத்துங்க நடத்துங்க…" என்றவள், கார்த்திகாவை அங்கேயே விட்டுவிட்டு இவள் மட்டும் பிரகாரத்தைச் சுற்ற தொடங்கினாள்.

கை கால்கள் நடுங்க பதட்டமாக நின்ற கார்த்திகாவை பார்த்து "இப்போ என்னாச்சு? எதுக்கு இப்படி கை காலெல்லாம் நடுங்குது' என்றவன், கொஞ்சம் ரிலாக்ஸ் இரு, ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேச தான் வந்தேன்" என்றான்.

"எனக்கு அந்தளவுக்கு எந்த விஷயத்துலயும் பொறுமையெல்லாம் இல்ல... இதுவே எனக்கு தெரிஞ்சு ரொம்ப லேட்' தான் என்றவன் ... உன்னை பார்த்த அன்னைக்கே சொல்லி இருப்பேன் ... உனக்காக தான் கொஞ்சம் வெயிட் பண்ணேன்" என்றவன்,

அவள் கண்களை பார்த்து "ஐ லவ் யூ... டூ யூ லவ் மீ" என்க,
அவன் சொன்ன ஐ லவ் யூ அவள் உயிர்வரை சென்று தீண்டியது. எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தவளை பார்த்து... "பிடிக்கலைன்னா வெளிப்படையா சொல்லிடு, நான் எதுவும் தப்பாக நினைக்க மாட்டேன்" என்றான்.

அப்பொழுதும் அவள் அமைதியாக இருக்க... "இந்த மௌனத்தை நான் எப்படி எடுத்துக்கறது... பிடிச்சிருக்கு என்று எடுத்துக்கவா,இல்ல பிடிக்கலைன்னு எடுத்துக்கவா" என்றான்.

இன்னும் அவள் அமைதியாக இருப்பதை கண்டு …"உன் கண்ணுல எனக்கான காதலை பார்த்ததுக்கு அப்புறம்தான் உன்கிட்ட என்னோட லவ்வ சொன்னேன். ஆனா அப்படி இல்லைன்னு இப்போ நினைக்கிறேன் என்றவன், இந்த மௌனத்தை நான் பிடிக்கலன்னு எடுத்துக்கிறேன்...சாரி இனிமேல் உன்னை நான் டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்" என்றவன் செல்ல திரும்ப ...அவன் கையை பிடித்தவளின் கண்ணிலிருந்து ஒரு துளிக்கண்ணீர் அவன் கையில் விழுந்தது.



படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் டியர்ஸ்
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 13

கைப்பிடித்து தடுத்தவளை பார்த்து... "இப்போ என்ன ?" என கேட்க,

ஒன்றுமில்லை என தலையாட்டியவளை கண்டு கோபம் எழ, அவள் கையை உதறிவிட்டு சென்றான். திரும்பவும் அவன் முன்பு சென்று நின்றவள் கண்களில் தேங்கிய கண்ணீரோடு அவனை ஏறிட்டுப் பார்க்க,அவள் முகத்தில் உள்ள தவிப்பும் கண்ணீரும் அவள் மனதை எடுத்துரைத்தாலும் அதை அவள் வாயால் சொல்லிக் கேட்க விரும்பியவன்... அவள் முகம் பார்த்து அமைதியாக நின்றான்.

தொண்டை வரை உள்ள வார்த்தை வெளியே வர சண்டித்தனம் செய்தது.எங்கே திரும்பவும் தன் அமைதி அவனை கோபப்படுத்தி விடுவோமோ என அஞ்சியவள் அவன் முகம் பார்ப்பதை தவிர்த்து கீழே குனிந்தவாறு "நானும்" என சொன்னாள்.

"நானும்" என்றால் என்ன அர்த்தம் என்றவனை பார்த்து...சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் பின்பு "நானும் உங்களை காதலிக்கிறேன்" என்றாள்.

"நிஜமாவா?.." என கேட்டவனுக்கு , ஆமாம் என தலையாட்டியவளை பார்த்து... "அப்போ எதுக்கு கீழ குனிஞ்சு சொல்ற ? என் கண்ணை பார்த்து சொல்லு" என்றவனை... ஏறிட்டு பார்க்க நாணம் தடுக்க, மெல்ல விழி மலர்த்தியவள் அவன் பார்வையின் வீச்சை தாங்காமல் கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள்.

அவள் செய்கை ஒவ்வொன்றையும் ரசித்து பார்த்தவன், அவள் வெட்கத்தை கண்டு வாய்விட்டு சிரித்துவிட்டான்.

"ஓய் ஏஞ்சல்...என் முகம் என்ன அவ்ளோ பயங்கரமாவா இருக்கு ? இப்படி முகத்தை மூடிக்கிட்ட" என்றவன்…. அவள் முகத்தில் இருந்த கையை பிடித்து தன் கைக்குள் வைத்துக் கொண்டான்.

"நிலா... நிலா என்ன பாரு" என்று ஆழ்ந்த குரலில் கேட்க...அவளோ மாட்டேன் என அவசரமாக தலையசைத்தாள்.

"இப்போ நீ பார்க்கலைன்னா... நான் போயிடுவேன்" என சிறுபிள்ளையை பயமுறுத்துவது போல் மிரட்ட…. அது சரியாக வேலை செய்தது. அவனை நிமிர்ந்து பார்த்தவள், அவன் பார்வையில் உள்ள காந்த விசையின் ஈர்க்கப்பட்டு கண் இமைக்காமல் பார்க்க... இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று கலந்து விழி வழியே இதயங்களை பரிமாறிக் கொண்டது.


அப்போது "இங்க என்ன நடக்குது?.." என கேட்டுக்கொண்டே வந்த வைஷாலி…. "ஹலோ டி.எஸ்.பி சார்... இது ஒன்னும் பார்க் இல்ல, கோயில் உங்க லவ்... ரொமான்ஸ் எல்லாம் வெளிய போய் வச்சுக்கோங்க" என்க,

"அது எப்படி நாங்க லவ் பண்ற விஷ்யம் உங்களுக்கு தெரியும்" என்றவனை பார்த்து…. "இது என்ன பெரிய உலக அதிசயமா?... அதான் முகத்திலேயே எழுதி ஒட்டி இருக்கே. அப்புறம் ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக் கொள்ளும் போது டன் கணக்கில் வழியிறிங்களே…. எனக்கெல்லாம் நீங்க ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ணும் போதே, இப்படித்தான் ஆகும்னு தெரியும்" என்றவளை பார்த்து... "சூப்பர் சிஸ்டர் செம ஸ்மார்ட் நீங்க...கொஞ்சம் உங்க ஃபிரண்டுக்கும் சொல்லிக் கொடுங்களேன் …. என் முகத்தை பாத்து பேசவே அவளுக்கு நான் தனியா ட்ரெய்னிங் எடுக்கனும் போல" என சொல்லி சிரித்தான்.

சிரிக்கும் போது இன்னும் வசீகரமாகத் தோன்றியவனை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்தவளின் தோளில் இடித்த வைஷாலி "போதும் நீ சைட் அடித்தது, டைம் இப்பவே ரொம்ப ஆயிடுச்சு வா போகலாம்" என்றவள்... ஹர்ஷாவிடம் திரும்பி "நாங்க கிளம்புறோம் சார், இப்பவே டைம் ஆயிடுச்சு... உங்க லவ்ஸை நாளைக்கு கண்டினியூ பண்ணிக்கோங்க" என்றுவிட்டு அவளை அழைத்துக் கொண்டு சென்றாள்.

திரும்பிப் பார்த்து தலையசைத்து விடை பெற்றவளை பார்த்து கண்ணடித்து விடை கொடுத்தான். அவன் செய்கையில் மயங்கிய மனதை கட்டுப்படுத்திக்கொண்டு தன் தோழியின் இழுப்பிற்கு சென்றாள் அவனின் நிலா.


அன்றிரவு பால் அருந்தி விட்டு தூங்க சென்ற சமயம் அவள் மொபைல் அலற... அதை எடுத்து காதில் வைத்தவள் எதிரில் கேட்ட குரலில் அதிர்ந்து பின் சுதாரித்தவள்... "நீங்க எப்படி..? என் நம்பர் உங்களுக்கு எப்படி கிடைத்தது?.." எனக் கேட்டவளை,

"நீ இன்னும் பேபியாவே இருக்கியேடி...இப்படியே இருந்தா எம்பாடு திண்டாட்டம்தான் என்றவன், ப்ளீஸ் பேபி சீக்கிரம் வளர்ந்திடு ... ரொம்ப நாள் எல்லாம் என்னால வெயிட் பண்ண முடியாது" என்றவன்...

"என் வருங்கால பொண்டாட்டியை பத்தி இது கூட தெரிஞ்சுக்கலனா அப்புறம் நான் என்ன போலீஸ் ஆபீஸர்" என்றவனின் வார்த்தையில் தனது கேள்வி எவ்வளவு முட்டாள்தனமானது என உணர்ந்தாள்.

அதன் பின்னர் அந்த அறையில்... "ம்ம்... இல்ல... ஆமா... ச்சீ" என்ற சில வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலிக்க... காதலர்களிடம் பேசப்படும் ஸ்வீட் நத்திங்ஸ் இங்கேயும் நிகழ்ந்தது. நீண்ட நேரம் பேசியவர்களுக்கு என்ன பேசினோம் என்பதே சுத்தமாக நினைவில்லை.

நாட்கள் அழகாக செல்ல... அவர்கள் ஒருவர் மீது மற்றொருவர் வைத்த காதலும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அவள் கல்லூரிக்கு செல்வதால் அவளை அதிகம் தொல்லை செய்யாமல்…. அவள் வழக்கமாக கோயிலுக்கு வரும் நாட்களிலேயே இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

அன்றும் அவனுக்காக கோயிலில் காத்திருக்க.. "சாரி ஏஞ்சல் கொஞ்சம் டைம் ஆயிடுச்சு, ஒரு சின்ன வேலை, ரொம்ப நேரமா வெயிட் பண்றியாடா" என பாசமாக கேட்க… இல்லை என தலையாட்டியவள், கோவில் பிரசாதமான திருநீரை எடுத்து அவன் நெற்றியில் வைக்க செல்ல, அவனோ அவள் கையை பிடித்தவன், சுற்று முற்றும் பார்த்துவிட்டு அவளைத் தன்னை நோக்கி இழுக்க… அரண்டு விழித்தவளை கண்டு சிரித்தவன், தன் நெற்றியோடு அவள் நெற்றியை ஒட்டி... அவள் நெற்றியில் இருந்த திருநீரை தன் நெற்றிக்கு மாற்றினான்.

"ஐயோ... என்ன பண்றீங்க ? கோயில்ல போய் இப்படி எல்லாம் யாராவது பண்ணுவாங்களா" என தன் சிவந்த முகத்தை மறைக்க முயன்று தோற்றவள்... சிணுங்களான குரலில் சொல்ல… அவனோ கூலாக "நான் என்னடி பண்ணேன், நீதான திருநீர் வைக்க வந்த... சரி உனக்கு எதுக்கு கஷ்டம்ன்னு தான் இப்படி பண்ணேன்" என்றான்.

"அதுக்குன்னு இப்படியா ?.. நீங்க ரொம்ப மோசம்" என்க...அவனோ "நானெல்லாம் ரொம்ப நல்ல பையன்... எப்போ உன்ன பார்த்தேனோ அப்போதிருந்து தான் கெட்ட பையனா மாறிட்டேன்" என்றான்.

"ஐயோ... போதும் போதும் உங்களுக்கு கோயில்ல என்ன பேசனும்னே தெரியாது... வாங்க போகலாம்" என அவனை இழுத்து சென்றாள்.

அன்று ஒரு முக்கியமான பெரும் புள்ளியின் கொலை கேஸ் விஷயமாக விசாரிக்க ஷாப்பிங் மால் வந்திருந்தான். கொலைக்கு முக்கிய சாட்சியாக அங்குள்ள ஒரு கடையின் பில் மட்டுமே இருக்க... அதனைப் பற்றி விசாரிக்க வந்தவன்,வந்த வேலையை முடித்து விட்டு செல்லும் போது அவன் மொபைல் அலற... அதனை ஏற்று காதில் வைத்தான்.

"போலீஸ் ஆபீசர்க்கு டியூட்டி டைம்ல ஷாப்பிங் மால்ல என்ன வேலை" என கேட்டவளுக்கு... "அதே கேள்வியை நானும் திருப்பிக் கேட்கிறேன்... காலேஜ் டைம்ல ஷாப்பிங் மால்ல நீ என்ன பண்ற" என்க,

"பொண்டாட்டி கேள்வி கேட்டா பதில் சொல்லணும், இப்படி எதிர் கேள்வி கேட்க கூடாது என்றவள், இன்னைக்கு வைஷாலி பர்த்டே… அதனால ஆஃப் டே லீவ்" என்க, அவனோ "ஒரு கேஸ் விஷயமா விசாரிக்க வந்தேன்டி என் பொண்டாட்டி... பதில் சொல்லிட்டேனா போதுமா" என்றவனை,

"நீங்களும் வரீங்களா ?... உங்களுக்கு எதிரில் இருக்குற கேக் ஷாப்ல தான் இருக்கோம்" என்றாள்.

சரியென சொல்லியவன்…. அசோக்குடன் அந்த கேக் ஷாப்பில் நுழைந்தான். அப்போதுதான் கேக் வெட்டி முடிந்திருக்க…வைஷாலியிடம் தன் வாழ்த்தை தெரிவித்து விட்டு அங்குள்ள இருக்கையில் அமர்ந்தான்.

உடன் அசோக்கும் அமர இருவருக்கும் கேக்கை வெட்டி ஒரு பேப்பர் பிளேட்டில் வைத்து கொடுத்தவள்….அசோக்கின் முகம் பார்க்க... அவனோ அவளை நிமிர்ந்து பார்க்காமல் கேக்கை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

'மூஞ்சப்பாரு உர்ரென்று, ஒரு விஷ் பண்ணா குறைந்து போய் விடுவான்போல…. கேக்கை மட்டும் எப்படி சாப்பிடுகிறான்' என திட்டித்தீர்த்தவள்... அமைதியாக அவனை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

சிறிது நேரத்தில் இருவரும் கிளம்பி சென்று விட...ஜீப்பில் போகும் வழியில் "என்ன அசோக்...போனது பர்த்டே பார்ட்டிக்கு, வைஷாலிக்கு ஒரு விஷ் கூட நீங்க பண்ணல" என்றவனை பார்த்து சிறிது தடுமாறியவன்,

பின் "அப்படியெல்லாம் ஏதும் இல்லை சார்.. அவங்க கிட்ட அவ்வளவா பேசினது இல்ல, அதான்" என்றான்.

"அப்படியா... அசோக், எனக்கு அப்படி ஒன்னும் தெரியலையே...நீங்க ஒரு வார்தையாவது சொல்லுவிங்களானு அந்த பொண்ணு உங்களையே தான் பார்த்துட்டு இருந்தா...நீங்கதான் அவளை அவாய்ட் பண்ற மாதிரி தெரியுது" என்றான்.

அதனை கேட்டு தலைகுனிந்தவன் "அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை" என தயக்கமாக சொல்ல…."முதல்ல உங்க ரெண்டு பேருக்கும் நடுவில் என்ன நடந்தது என்று சொல்லுங்க" என்றான் தீர்மானமாக.

சற்றுநேரம் அமைதியாக இருந்தவன் பின்பு அவர்களுக்குள் நடந்த சம்பவத்தை செல்லத் தொடங்கினான்.

அன்று பார்க்கிங்கில் ஸ்கூட்டியை தள்ளி வைக்க சென்ற வைஷாலி….அங்கு அவளின் ஸ்கூட்டியும் கார்த்திகாவின் ஸ்கூட்டியையும் தவிர வேற எந்த வண்டியும் இல்லாததை கண்டு யோசனையோடு அசோக்கை திரும்பிப்பார்த்து "சார் நீங்கதானே வண்டியை தள்ளி வைக்கணும்னு கூப்பிட்டீங்க…. இங்க பாருங்க எந்த வண்டியும் இல்லாம பார்கிங்கே காலியா இருக்கு. இதுல என்னோட வண்டி உங்க இன்ஸ்பெக்டருக்கு டிஸ்டர்பன்ஸா இருக்கா?... யாரந்த இன்ஸ்பெக்டர் கூப்பிடுங்க... நான் கேட்கிறேன்" என போலீஸ் என்ற பயம் சிறிதும் இல்லாமல் சண்டைக்குத் தயாராக நின்றவளைப் பார்த்து,

"நான்தான் அந்த இன்ஸ்பெக்டர்...என்னோட வண்டி நிக்கிற இடத்துல தான் உங்களோட வண்டி நிக்குது…. சோ வண்டியை எடுங்க" என்க, அவனை கண்கள் சிவக்க முறைத்து பார்த்தவள் "இந்த இடத்தில் ஒன்னும் இன்ஸ்பெக்டர்...என இழுத்தவள், உங்க பெயர் என யோசித்து அவன் நேம் பேட்ச்ச்சை பார்த்து அசோக்குமரோட இடம்னு எழுதி ஒன்னும் வைக்கல...அதனால் என்னோட வண்டியை ஒரு இன்ச் கூட நகர்த்த மாட்டேன்" என ஒற்றைக் காலில் நின்றாள்.

அவள் பேச்சில் கோபம் கொண்ட மனது, ஒருபுறம் அதை ரசிக்கவும் செய்தது. 'இது என்ன ? நாமளா இப்படி' என தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டவன் பின்பு… "இப்போ இந்த வண்டியை எடுக்க முடியுமா முடியாதா" என கர்ஜிக்க... அதில் சற்று பயந்துதான் போனாள் பெண்ணவள்.

இருந்தும்…"இப்படி கத்துனா நாங்க பயந்திடுனும்மா... தப்பு பண்ணா தான் போலீசுக்கு பயப்படனும், நான் எந்த தப்பும் பண்ணல, அதனால நான் பயப்பட மாட்டேன்" என வீர வசனம் பேசியவளை பார்த்து இன்னும் கோபம் அதிகரிக்க... என்ன பேசுகிறோம் என அறியாமல் "இப்போ எடுக்க முடியுமா முடியாதாடி" என ஒருமையில் பேச….

அவளோ அதற்கு "யாரை பார்த்து டி சொன்ன... நான் என்ன உன் பொண்டாட்டியா?...நீ பாட்டுக்கு வாடி போடி சொல்ற" என இவளும் கேட்க,

அதனைக் கேட்ட அவனுக்கு அப்படி பொண்டாட்டியா இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்றே தோன்றியது.

சொல்லி முடித்த பின்பே தான் என்ன சொன்னோம் என்று உணர்ந்தவள் நாக்கை கடித்துக் கொண்டு அவன் முகம் பார்க்காமல் தனது வண்டியை தள்ளி நிறுத்திவிட்டு ஓடிவிட்டாள்.


 
Status
Not open for further replies.
Top