ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தேன்சுவை நீயடி- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 30

ஜான் உள்ளிருந்து வரவும், பலத்த கரகோசத்துடன், அவனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர்..

வெற்றியின் ஐவர் குழு, அனைவரும் எழுந்து நிற்பதை பார்த்து, அவர்களும் எழுந்து நின்றனர்..

குமரன், செல்வத்திடம் " இவனுக்கு இது ஒன்னு தான் கேடு.. " என்று அவன் காதில் கிசு கிசுக்க,

பின்னர் தன் முகத்தை, சிரித்த வண்ணமாக மாற்றிக் கொண்டு, அவர்களும் கூட்டத்துடன் கோவிந்தா போடுவது போல, சேர்ந்து கை தட்டினர்..

குமரன் இப்பொழுது வெற்றியிடம் , " மச்சான் எனக்கு அவனுக்கு கை தட்டுறதை பார்த்தா, அவனுக்கு சாவு மேளம் அடிக்கிற போல இருக்கு டா.. " என்று கூறினான்..

வெற்றியோ, " டேய்.. கொஞ்ச நேரம் சும்மா இருடா.. அப்புறம் அவன் கவனம் நம்ம மேல வரப் போகுது.. " என்றான்.

அதான் பிறகு குமரனும் அமைதியாக ஆனான்.

ஆனால் வெற்றியின் பார்வை மட்டும் கழுகு பார்வை போல, அவனைத் தான் நோட்டம் இட்டது..

அவனோ long கோட் அணிந்து, தலையில் ஒரு தொப்பி, முகத்தில் மாஸ்க், மற்றும் கண்ணில் கூலர்ஸ் உடன் வந்தான் அவன் முகமே தெரியாத வண்ணம்..

( ஆங்கிலத்தில் அவர்கள் பேசுவது தமிழில் பேசுவது போல உரையாடல் இங்கே..)

" ஹாய்.. Everybody... எல்லாரும் எப்படி இருக்கீங்க... " என்று அவனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இருக்கையின் முன்னே நின்ற படி கேட்டுக் கொண்டிருந்தான் அனைவரிடமும்..

அவர்களும் " உங்க புண்ணியத்துல நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் பாஸ்.. " என்றார்கள்..

இதில் என்னவென்றால், இவர்கள் ஐவரை தவிர, மற்ற அனைவரும் ஒருவருக்கு ஒருவர் நன்றாக பேசிக் கொண்டனர்..

இவர்கள் இந்த முறை தான் மீட்டிங்ற்கு வந்து இருப்பதால், அனைவரும் இவர்களை புதிய லிங்க் போல என்று நினைத்துக் கொண்டனர்..

ஆமாம் இந்த தொழிலில் ஒவ்வொரு நபர்களை புது லிங்க் என்றே அழைப்பர்.

அவர்களின் மூலமாக பரப்பப் படும் என்பதால்..

மீண்டும் ஜான்'னே தொடர்ந்தான்..

"இந்த வருடம், ஓவர் ஆல் லா நமக்கு நிறைய லாபம் கெடச்சி இருக்கு... ஆனால் சில இடங்களில் எதிர் பார்த்ததை விட அதிகமா சேல்ஸ் ஆகி இருக்கு.. சில இடங்களில் நம்ம நார்மலா சேல்ஸ் ஆகுறதை விட கம்மியா போய் இருக்கு.. என்ன காரணம்.. " என்று குறைந்த பகுதியில் விற்பனை செய்யப்பட்ட நபரிடம் கேட்க,

அவரோ எழுந்து நின்று, " பாஸ்.. நாங்க எப்பவும் போல தான் டார்கெட் பிளான் பண்ணோம்.. ஆனால் சரியா போய்கிட்டு இருந்த நேரத்தில், போலீஸ் இடையில் வந்து சொதப்பி விட்டிட்டுட்டாங்க.. நம்ம பசங்களும் இப்போ ஜெயில் ல இருக்காங்க.. " என்று கூறினான்..

அவனைப் பார்த்த குமரன் அதிர்ந்து விட்டு, வெற்றியின் மிக அருகில் சென்று " மச்சான்.. அது நம்ம பிடிச்ச கேஸ் தான் டா.. " என்றான்..

வெற்றியும் பார்வையை அவர்களிடத்தில் வைத்துக் கொண்டு, இவனிடம் ஆமாம் என்பதாய் தலை அசைத்தான்..

இன்னும் சில பகுதிகளில் இருக்கும் ஏஜென்ட் அதையே சொல்ல, அந்த பகுதியில் எல்லாம் இடை புகுந்தது வேறு யாரும் இல்லை.. வெற்றியின் ஐவர் குழு தான்..

அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ஜான், " ம்ம்ம் ம்ம்.. அப்போ நம்ம இன்னும் கவனமா இருக்கனும்... முடிஞ்சா யாரு இடையில் வர்ராங்க அப்டின்றதை பார்த்து அவங்க கதையை முடிச்சி விடுறது நல்லது.. " என்றான் ஜான்..

" இப்போ இன்னொரு நபரை நான் அறிமுக படுத்த போறேன் உங்களுக்கு.. " என்று கூறிய ஜான்,

வெற்றியை பார்த்து, எழுந்து நிற்க சொல்லி, தன் அருகில் வரச் சொல்லினான்..

" ஹி இஸ் வெற்றி.. வெற்றி வேந்தன்.. நம்ம கூட்டத்துல புதுசா ஜோயின் பண்ணி இருக்காரு.. இவரு தமிழ்நாட்டுல இருந்து வந்து இருக்காரு.. " என்று அனைவர்க்கும் அறிமுகம் செய்து வைத்தான்.

அனைவரும் அவனுக்கு கைத் தட்டி உற்சாக படுத்தினர்..

அவனும் உள்ளுக்குள் கடுப்புடன் இருந்தாலும் வெளியே சிரித்த முகமாய் ஏற்றுக் கொண்டான்..

ஜான் தொடர்ந்தான்..

" Mr. வெற்றி ஊர்ல என்ன பண்ணிட்டு இருக்காருன்னு தெரிஞ்சா.. நீங்க ஆச்சர்ய பட்டு போயிடுவீங்க.. " என்று அவன் ஊரில் செய்யும் தொழிலை பற்றிக் கூறியவன், பின்பு எப்படி போதை மருந்துகளை அதன் மூலம் மற்றவர்களுக்கு மாற்றம் செய்கிறார் என்று எடுத்துக் கூறினான்..

பின்னர், " ஆனால் இதுல இன்னொரு விஷயமும் இருக்கு.. " என்று அவனை பார்த்து இழுத்துக் கொண்டே சொல்லி, எழுந்து நின்று வெற்றியின் தோள் மீது கை போட்டவாரு மற்றவர்களைப் பார்த்தான்..

வெற்றிக்கு உள்ளுக்குள் ஏதோ நெருடல்.. " என்ன இது என்பது போல.. " ஏதோ தவறாக நடக்க போகின்றது என்று அவன் உள் மனம் எச்சரித்து கொண்டே இருந்தது..

அவன் கையில் இருந்த கடிகாரத்தில் இருந்த அலாரம் பட்டனை அழுத்த போக, அவன் கையை பற்றிக் கொண்டான்..

நிமிர்ந்து ஜான் னை பார்க்க, அவனோ அவன் கண்ணில் மாட்டி இருந்த கூலிங் கிளாஸ்ஸையும் கழட்டினான்..

புரிந்து விட்டது வெற்றிக்கு, தன்னை கண்டு பிடித்து விட்டான் என்று..

அதை கவனித்த நண்பர்கள், உடனடியாக செல்வம் அவன் கையில் மாட்டி இருந்த அலாரம் பட்டனை அழுத்தி விட்டான்..

அங்கே காவல் துறைக்கு இவர்களிடம் இருந்து எச்சரிக்கை வந்ததில், அவர்கள் தடாலடியாக கிளம்பி விட்டனர்..

இவர்களின் மீட்டிங் நடக்கும் இடம் ஊருக்கு ஒதுக்கு புறமாக இருப்பதால், இவர்களிடம் இருந்து எச்சரிக்கை அழைப்பு வந்த பிறகு சென்றால் தாமதமாகி விடும் என்பதால் அந்த கட்டிடத்திற்கு சற்று தொலைவில் இருந்தனர் காவல் துறை..

அந்த இடத்தில் இருந்து 5 நிமிடத்தில் சென்று விடலாம், என்பதால் வேகமாக வண்டியை செலுத்தினர்..

இங்கோ ஜான், வந்து இருந்த நபர்களை பார்த்து மீண்டும் தொடர்ந்தான்..

"வெற்றி வேற யாரும் இல்லை.. " என்று நிறுத்தி,

" நம்மள கூண்டோட பிடிக்க வந்த சீக்ரெட் இன்டெலிஜெண்ட் ஏஜென்ட்.. " என்று சொல்லி முடிக்க,

அனைவரும் அதிரிச்சிக்கு உள்ளாகினர்.. கூட்டத்தில் ஒரு சலசலப்பு.. மைக்கேலோ அவர்களை நக்கலாக பார்த்து சிரித்தான்..

ஆக அவனுக்கு முன்கூட்டியே தெரிந்து இருக்கிறது.. நம்மளை இங்கே வரவழைத்து போட்டு தள்ள வேண்டும் என்பது தான் அவர்களது திட்டம் என்று எண்ணினார்கள்..

" இவன் மட்டுமா.. இவன் கூட சேர்ந்து வந்து இருக்காங்களே , அவன் நண்பர்களும் தான்.. " என்று சொல்லி விட்டு அவன் பாதுகாப்பு வீரர்களை பார்க்க, அவர்களோ நண்பர்கள் நால்வரையும் சுற்றி வளைத்தனர்..

வந்து இருந்த மக்கள் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து, பின் தலைவனிடம் " அவனை கொல்லுங்க.. இப்பவே அவங்களை கொல்லுங்க.. " என்று மாறி மாறி கோஷம் எழுப்பினர்..

" இருங்க இருங்க ஒரு நிமிஷம்.. அதுக்குள்ள இவனை முடிச்சா எப்படி.
நம்ம சம்மந்தப் பட்ட டீடெயில்ஸ் எல்லாம் இவன்கிட்ட இருக்கு.. அதை எல்லாம் மொத்தமா அழிச்சிட்டு அப்புறம் இவஙக 5 பேரையும் முடிச்சிரலாம். இல்லனா இவனை போல அடுத்தடுத்து ஆட்கள் வந்துட்டே இருப்பாங்க.. " என்று ஜான் சொல்ல,

மற்றவர்களுக்கும் அதுவே சரி என்று பட்டது..

இவ்வளவு கூச்சலிலும் வெற்றியோ நிதானமாகவே இருந்தான்.. சிறு துரும்பு கிடைத்தால் கூட அவனை அளித்து விடலாம் என்று நினைத்து தைரியத்தையும் நிதானத்தையும் வர வளைத்து அமைதியாகவே நின்றான்..

ஜான் இப்பொழுது வெற்றியிடம், " எங்களை பத்தி கலெக்ட் பண்ண டீடெயில்ஸ் எல்லாம் எங்க வச்சிருக்க.. " என்று துப்பாக்கி முனையில் அவனிடம் கேட்க,

அவனோ ஒரு நக்கல் சிரிப்பை ஜான் னை பார்த்து சிந்தியவன்.. " நீ என்னை கொன்னே போட்டாலும் உனக்கு கிடைக்காது என்பது போல அந்த சிரிப்பின் அர்த்தம்.. "

" ஓ... அப்போ நீ சொல்லமாட்ட... " என்று ஜான் இப்பொழுது நக்கலாக சிரித்தவன், மைக்கேலை பார்க்க, அவனோ தலை அசைத்து விட்டு ஒரு எல்.இ.டி திரையை ஆன் செய்தான்..

அதில் தெரிந்தது என்னவோ மயக்க நிலையில் இருக்கும் மதி தான்..

வெற்றியின் ஐவர் குழு, இப்பொழுது மதியை பார்த்து பேரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்..

"மதி எப்படி இங்க.. அவள் எப்படி இவன் கையில் சிக்கினா... " என்று பெரும் யோசனையுடன் இருந்தான் வெற்றி..

"தனக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை.. ஆனால் அவளுக்கு எதுவும் நேரக் கூடாது.. " என்று நினைத்தான்...

அவனிடம் அவனை பற்றி திரட்டிய ஆதரங்களை எல்லாம் ஒப்படைக்கிறேன் என்றும் கூறினான்..

"ஆனால் இப்போ என்கிட்ட எதுவும் இல்லை.. அது எல்லாம் என்னோட ரூம் ல இருக்கு.. " என்றான்..

ஆனால் அவனுடைய மனமோ இவன் ஆதாரங்களை வாங்கிக் கொண்டு, உங்கள் எல்லாரையும் கொன்று விட்டாள் என்ன செய்வாய் என்று எதிர் கேள்வி எழுப்பியது..

அதுவும் சரிதான் என்றும் யோசித்தான்..

திடீரென அவன் கண்ணில் பளிச்சென மின்னல் வெட்டியது..

" ஆனால் ஒரு நிபந்தனை.. " என்றவனை கூர்மையாக பார்த்தான் ஜான்..

" என்ன.. " என்று அழுத்தமாக கேட்டான்..

"அந்த டீடெயில்ஸ் எல்லாம் வேணும்னா, நீ மதியையும் என் நண்பர்களையும் விட்டுரனும்... அதுக்கு அப்புறம் நான் நீ கேட்டதை தரேன்.. " என்றான்..

" உன்ன எப்படி நான் நம்புறது.. " என்றான் ஜான்..

" அதே போல, உன்னை எப்படி நான் நம்புறது.. நீ என்கிட்ட வாங்கிட்டு எல்லாரையும் கொன்னுட்டா.. அவங்களாவது உயிரோட இருக்கட்டும்.. " என்றான்.

" சரி.." என்றான் ஜான் வேண்டா வெறுப்பாக..

" இங்கிருந்து அவங்க 5 பேரையும் முதல்ல வெளிய கிளம்பணும்.. அவங்க கிளம்பி 10 நிமிஷம் கழிச்சு நான் என் ரூம்க்கு கூட்டிட்டு போய் உங்களுக்கு தேவயானாதை நான் கொடுத்துருறேன்.. " என்றான்..

அதன் படியே மைக்கேலை பார்த்து கண் காட்ட, அவனும் உள்ளே ஒரு அறைக்கு சென்று மதியை அழைத்து வந்தான்.. அவளோ மயங்கிய நிலையில் தான் இருந்தாள்..

வெற்றிக்கோ நகர முடியாத சூழ்நிலை.. துப்பாக்கி முனையில் இருக்கின்றான்..

வெற்றி குமரனை பார்க்க, அவனும் புரிந்து கொண்டு, மதியை கை தாங்களாக அழைத்துச் சென்றான்..
நண்பர்களும் உடன் சென்றனர்.

போகும் முன் வெற்றியை திரும்பி பார்க்க, அவனோ அர்த்தமாய் தலை அசைக்க குமரனும் புரிந்து கொண்டு சென்று விட்டான்..

வெளியில் வந்து, அவர்கள் வந்த காரிலயே மீண்டும் கிளம்பினர்..


தேன் இனிக்கும்..

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 31

நண்பர்கள் மற்றும் மனைவி, வெளியில் பாதுகாப்பாக சென்றதும் தான் அவனுக்கு போன உயிரே திரும்பி வந்தது..

இனி தான் மட்டும் எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம்.. ஆனால் இன்றோடு இவர்கள் கூட்டத்திற்கு சமாதி கட்ட வேண்டும் என்று நினைத்தவன் இப்பொழுது ஜான் னை பார்க்க,

அவனோ, " ம்ம்... உன்கூட எங்க ஆளுங்க வருவாங்க.. அவங்ககிட்ட நீ அதை எடுத்துக் கொடுக்கணும்.. " என்று சொல்ல,

வெற்றியோ சத்தமாக சிரித்தான்..

அங்கிருந்தவர்கள் வெற்றியை இவனுக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா, என்றே பார்த்தனர்..

ஆனால் ஜான்னும் மைக்கேலும் அவனை கூர்மையாக சந்தேகத்துடன் பார்த்தனர்..

"ஏன் டா டேய்.. என்னை என்ன அவ்ளோ முட்டாள் னு நெனச்சியா.. " என்று சிரிப்புடனே கேட்க ,

அவனுக்கோ கடுப்பாக இருந்தது..

" உன்கிட்ட மொத்தமா தூக்கி கொடுத்துட்டு, என்னை நீ போட்டு தள்ளிட்டு, மறுபடியும் சுதந்திரமா சுத்தலாம்னு நெனைக்கிறியா.. அவ்ளோ சீக்கிரம் உன்னை விட மாட்டேன்.. " என்று பற்களை கடித்து கோபத்துடன் கூறியவன், நிறுத்தி மீண்டும் தொடர்ந்தான்..

" உன் கைல என்னோட ஆளுங்க இருக்கிற வரைக்கும் தான் நான் பயப்படணும்.. அவங்க இப்போ பாதுகாப்பான இடத்துக்கு போய் இருப்பாங்க.. " என்று சொல்ல,

இப்பொழுது சிரிப்பை ஜான் தொடர்ந்தான்..

" அவ்ளோ சீக்கிரம் உன் மனைவி மற்றும் நண்பர்களை விட்டுறுவேன்னு நெனச்சியா.. " என்றவன், மீண்டும்

" என்னோட ஆளுங்க அந்த காரை பின் தொடர்ந்து போறாங்க .. நீ இங்க ஏதாவது தில்லு முல்லு பண்ணாலும், அவங்க கைல இருக்கிற பட்டனை பிரஸ் பண்ணால் போதும். அந்த கார் வெடிச்சி சிதறிடும்.. " என்று மிரட்டல் விடுத்தான்..

இப்பொழுது நக்கல் சிரிப்பு ஒன்றை வெற்றி அவனை பார்த்து சிரித்து விட்டு,

" உனக்கு ஒன்னு தெரியுமா.. இந்நேரம் கார் வெடிச்சி சிதறி இருக்கும்.. " என்றவனை யோசனையுடன் பார்த்தான் ஜான்..

" ஆனால் வெடிச்சது உன் ஆளுங்க போன கார்.. " என்று சொல்லி விட்டு மீண்டும் சிரிப்பை தொடர்ந்தான்..

ஜான்னோ கடுப்பாக, அலைபேசி எடுத்து அழைப்பு விடுத்து பார்க்க, அங்கே அழைப்பு செல்லவே இல்லை..

சிறிது நேரத்தில் வெளியில் துப்பாக்கி சத்தம் கேட்கவும், தன்னுடைய ஆட்களுக்கு கண் காட்ட, அவர்களும் வெளியே சென்றவர்கள் உள்ளே திரும்பி வரவே இல்லை..

என்னவென்று பார்க்க, மீண்டும் சிலர் வெளியில் சென்று பார்த்துவிட்டு அவசர அவசரமாக உள்ளே ஓடி வந்தனர்..

"பாஸ்.. வெளியே போலீஸ் ரவுண்டு பண்ணிட்டாங்க.. நம்ம ஆளுங்க எல்லாரையும் ஷூட் பண்ணிட்டாங்க.." என்று பதட்டத்துடன் சொல்ல,

ஜான் அதிர்ச்சியுடன் வெற்றியை திரும்பிப் பார்த்தான்..

அவனோ கூலாக அவன் அமர்ந்த சேர் ரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்..

வந்த கோவத்தில், ஜான் வெற்றியை சுடுவதற்கு ட்ரிங்கேரை அழுத்தினான்..

ஆனால் குண்டு தன் மேல் பாய்வதற்கு முன்னர் அவன் ஷாக்ஸ்ஸில் வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து அவனின் கையிலேயே சுட்டான்..

துப்பாக்கி நழுவி கீழே விழுந்தது..

இதை எல்லாம் மைக்கேல் அதிர்ந்து பார்த்து கொண்டு இருந்த சமயம் அவனின் காலிலும் குண்டை பாய்ச்சினான் தப்பிக்க முடியாத வண்ணம்..

உள்ளே காவல் துறை நுழைந்து அனைவரையும் சுற்றி வளைத்து பிடித்து இருந்தனர்..

இனி தப்பிக்க முடியாது என்று உணர்ந்த ஜான், வெற்றியிடம் " இங்க எப்படி போலீஸ் வந்தாங்க.. " என்று கேட்க,

அவனோ " ஏன் டா லூசு பயலே.. என் கைல இருக்கிற அலாரம் பட்டன் தான் நீ பிரஸ் பண்ண விடல.. ஆனால் அதை பார்த்ததுமே என் நண்பன் போலீஸ் க்கு இன்போர்ம் குடுத்துட்டான்.. அதுக்கு அப்புறம் அவங்ககிட்ட இருக்குறதை எல்லாம் நீ புடுங்குனா என்ன.. இல்லனா என்ன.. " என்று சொல்லி விட்டு சிரித்தான்..

இவனை பார்த்ததில் இவன் நண்பர்களை கவனிக்காமல் விட்டு விட்டோமே என்று எண்ணி நொந்தான் ஜான்..

அதையே எண்ணி நொந்தவன், நிமிர்ந்து பார்க்க, அங்கே காரில் பின் தொடர்ந்து சென்ற அவன் ஆட்கள் பிடி பட்ட நிலையில் நின்றனர்..

என்னவென்று புரியாமல் வெற்றியை பார்க்க,

" அது சும்மா.. உன்கிட்ட ஒரு பொய்யை அவுத்து விட்டேன்.. பின்ன.. எங்க ஆளுங்க வர வரைக்கும் உன்கிட்ட இப்படி எதையாவது பேசி நேரத்தை போக்கனுமே.. அவங்க போற வழியிலேயே போலீஸ் அவங்களை பிடிச்சிட்டாங்க.." என்று சொல்லிக் கொண்டே அவன் காதை குடைந்தான்..

" அப்புறம் எப்படி யாருக்கும் கால் போகல.. " என்று மைக்கேல் தன் சந்தேகத்தை முன் வைக்க,

" நாங்க உள்ள வரும் போதே வெளிய நிக்குற உன் கார் எல்லாத்துலயும் சிக்னல் zammer செட் பண்ணியாச்சு.. அப்புறம் எப்படி கால் போகும்... " என்று அவன் பின் கழுத்தை வருடியபடி கூறினான்..

ஜான்னோ கோவத்தில் "சே.. " என்று அடிபட்ட கையாலேயே கீழே தரையில் குத்த, அது மேலும் வலியை தான் கொடுத்தது..

வெற்றி இப்பொழுது மைக்கேல் அருகில் வந்தவன், " மதி எப்படி உன் கைல கெடச்சா.. " என்று கேட்க,

மைக்கேல்லோ பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்..

கோவம் வந்த வெற்றியோ, அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு குத்து விட, அப்பொழுது ஏதோ தோள் போன்ற ஒரு உறை அவன் முகத்தில் இருந்து கிழிந்து வந்தது..

யோசனையுடன் பார்த்த வெற்றி அதில் கை வைக்க முயல, மைக்கேலோ பதட்டத்துடன் அவன் கையை தட்டி விட்டான்..

அவன் கையை பிடித்துக் கொண்டு ஒரே கிழியில் அந்த உறையை எடுத்து விட்டான்..

மைக்கேலோ வலியில் " ஆஆஆஆ.... " என்ற சத்தத்துடன் முகத்தை மூடிக் கொண்டான்..

அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவன் முகத்தில் ஊற்ற, முகத்தை துடைத்த மைக்கேலின் கையினை எடுத்த பார்த்த வெற்றிக்கோ அதிர்ச்சி..

" இவனை நான் எங்க ஊரு ஹாஸ்பிடல் ல பார்த்து இருக்கேன்.. " என்று சொன்னவன், உடனடியாக தன்னுடைய அலைபேசியை எடுத்து அவனுடைய போட்டோவை எடுத்துப் பார்த்தான்..

"அதே முகம்.. அவனே தான்.. இவன் இவன்.. Dr. ஹரி.. ஹரி பிரசாத்.. " என்று அங்கிருந்த காவல் அதிகாரிகளிடம் தெரிவித்தான்..

அப்பொழுது தான் அவனுக்கு ஒரு விஷயம் நியாபகம் வந்தது..

இவனை ஒரு முறை, மும்பையில் போதை கடத்தல் பிரிவில் இவன் பிடித்துக் கொடுத்தது.

ஆக அங்கிருந்து, அவன் தப்பி இங்கு வந்து மருத்துவமனை வைத்து நடத்தி, வெளியில் நல்ல முகமாகவும் உள்ளுக்குள் மறைமுகமாக இந்த தொழிலை செய்து வருகின்றான்..

" இப்போதான் புரியுது.. மதி உன்கிட்ட அவ்ளோ ஈஸியா எப்படி கெடச்சானு.." என்று நினைத்துக் கொண்டான் வெற்றி..

ஆம்!!! மதியிடம் சொல்லிவிட்டு கிளம்பியவனுக்கு போகும் வழியிலயே வெற்றியை பற்றிய தகவல் எல்லாம் கிடைத்து விட, அவனுக்கோ கோவம் எரிமலையாக வெடித்தது..

அவனை கொன்று போடும் அளவிற்கு ஆத்திரம் வந்தது.. இந்த நேரத்தில் வேகத்தை விட விவேகமே சிறந்தது என்று நினைத்தவன்,

மதிக்கு அழைத்து வெளியே வர சொல்லினான்..

அவளும் காரணம் எதுவும் கேட்காமல் வெளியில் வர, இவன் காருடன் காத்து இருந்தான் அவளுக்கு..

அவள் காரினில் ஏறாமல், " ஏன் சார் பாதியிலயே வர சொல்லிடீங்க.. " என்று கேட்டதற்கு,

" உங்க ஹஸ்பண்டுக்கு ஆக்ஸிடன்ட் ஆகிருச்சு.. இங்க எங்க ஹாஸ்பிடல் பிரான்ச் ல தான் அட்மிட் பண்ணிருக்காங்க அவரை.. " என்றான் உண்மை போல..

" உங்களுக்கு எப்படி தெரியும் சார்.. " என்று கேட்டாள்..

" உங்களை அவரு கூட ஹாஸ்பிடல் ல பார்த்து இருக்கேன்.. அதான் ஈஸியா என்னால identify பண்ண முடிஞ்சது.. " என்றான்..

உண்மைதான்.. அவன் பல முறை வெற்றியை மதியிடம் சேர்த்து பார்த்து இருக்கின்றான்.. அதுவே இப்பொழுது அவனுக்கு சாதமாகி போனது..

அவன் சொன்னது நம்பும் படியாக இருந்ததால், அவளும் மறுபேச்சின்றி பதட்டத்துடன் ஏறி அமர்ந்தாள்..

முன்னாள் பக்கம் ஹரி அமர்ந்து இருக்க, நடுவில் மதி ஏறிக் கொண்டாள்..

அவளுக்கு பின்னால் இருவர் அமர்ந்து இருந்தனர்.. அவர்கள் ஹாஸ்பிடல் உடையில் இருந்ததால் அவளாள் சந்தேக பட முடியவில்லை.. அந்த மன நிலையும் அவளுக்கு அப்பொழுது இல்லை..

சிறிது நேரத்தில் அவள் மூக்கில் ஏதோ துணியை வைத்து அழுத்த, சற்று நேரத்தில் அவள் மயக்க மடைந்து விட்டாள்..

அப்படியே அவன் காரை தங்கள் இடத்திற்கு சென்று அவன் முகத்தை மாற்றிக் கொண்டு மீட்டிங்ற்கு வந்து சேர்ந்தான்..

அவளை ஒரு அறையில் வைத்து கை காலை கட்டி பூட்டி வைத்து இருந்தான்..

அதை தான் வெற்றிக்கு அனைவரின் முன்னிலையில் படம் போட்டு காட்டியது..

இப்பொழுது மைக்கேல் யார் என்று தெரிந்தவன், ஜான் யார் என்று பார்க்க அவன் அருகில் சென்றான் வெற்றி..

மைக்கேல் உடனே, " ஹே.. வேண்டாம்.. பண்ணிராத.. எதுவும் பண்ணிராத.. " என்று சத்தம் போட,

" அங்க போனா உனக்கு ஏன் டா வலிக்குது.. சரி இல்லையே.. இதுல ஏதோ இருக்குற போல இருக்கே... " என்று சந்தேகமாக அவனிடம் சொல்லியவன், ஜான்னின் அருகில் சென்றான்.

மைக்கேலோ, " ஹே வேண்டாம்.. வேண்டாம்.. நோ.. நோ... " என்று சத்தம் இட்டுக் கொண்டிருந்தான்..

அதை எல்லாம் சட்டை செய்யாமல், ஜானின் தலையில் இருந்த தொப்பியை எடுத்தான் முதலில்..

பின்னர் கூலிங் கிளாஸ்சை கழட்டியவன், முகத்தில் இருந்த மாஸ்க்கையும் கழட்டினான்..

பார்த்தவன் அதிர்ந்து விட்டான்..

நீயா என்று கேக்க வந்தவன், நீங்களா என்று கேட்டான்..


தேன் இனிக்கும்...

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 32

முகமூடியை கழட்டியவன், யார் என்று பார்க்க அதிர்ந்து விட்டான்..

நீயா... என்று கேட்க வந்தவன் நீங்களா என்று அதிர்ச்சியுடன் கேட்டான்..

மற்றவர்களும் பார்த்து விட்டு அதிர்ந்து விட்டனர்..

பெரிய பொறுப்பில் வகிப்பவர்... சமூகத்தில் நல்ல பெயருடன், மக்களின் உயிரை காப்பாற்றும் மருத்துவ தொழிலில் இருப்பவர்..

இவரா இப்படி..??? என்று அனைவருமே யோசித்தனர்.

மைக்கேல் என்ற பெயரில் இருக்கும் ஹரியோ, இனி ஒன்றும் செய்ய இயலாது. எல்லாம் கை மீறி போய் விட்டது.. தன் பெயர் போனால் கூட பரவாயில்லை.. ஆனால்.. தன் தந்தையின் பெயரும் போய் விட்டதே..

ஆம்!!! அங்கே ஜான் என்ற பெயரில் இருப்பது வேறு யாரும் இல்லை.
அவனின் தந்தை Dr. மாணிக்கவேல் தான்..

வெற்றிக்கு அவரை நன்றாகவே தெரியும்.. அவனது ஊரில் அமைந்துள்ள மருத்துவ மனையில் மதி அதற்கு விண்ணப்பித்து இருக்கிறாள் என்று கூறிய பொழுதே, அதை பற்றி விசாரித்து விட்டான்..

இந்தியா முழுக்க பரவலாக அமைக்கபட்டுள்ள இவர்களது மருத்துவமனை பெயர் போன மருத்துமனை என்று அறிந்த பின்னர் தான் எதுவும் கூறாமல் சரி என்றான்..

ஆனால் இப்பொழுது அவர்தான் அந்த கூட்டத்தின் தலைவன், பாஸ்... சகலமும் எல்லாமே..

மகன் தான் அப்படி என்றால் தந்தை தான் அதற்கு முக்கிய காரணமா.. தந்தை எவ்வழியோ மகனும் அவ்வழியே தானே இருப்பான்..

அனைவரின் முன்னிலையிலும் கூனி குறுகி நின்றார் மாணிக்கவேல்..

"இந்த சமுதாயத்தில் நல்லவன் என்ற பெயரில் இருந்து எல்லாம் செய்து விட்டு, இப்பொழுது தன் சுய ரூபம் தெரிந்த பிறகு ஊரார் தூற்றும் அவ பேச்சுக்களை கேட்டு இனி வாழ முடியாது.. அதற்கு இறப்பதே மேல்.. " என்று நினைத்தவர்,

அருகில் சற்று தள்ளி இருந்த பிஸ்டலை எடுத்தவர், மற்றவர்கள் என்ன என்று சுதாரிக்கும் முன்பு தன்னுடைய நெற்றியில் வைத்து தன்னை தானே சுட்டுக் கொண்டார்..

ஹரியோ, " அப்ப்பாஆஆஆஆ..... " என்று அலறினான்..

வெற்றியும் மற்ற காவல் அதிகாரிகளும் அதிர்ந்து நின்று விட்டனர்..

பின்னர், சிறிது நேரத்தில் சுயம் வந்தவர்கள் அடுத்தடுத்து ஆக வேண்டிய வேலைகளை எல்லாம் செய்தனர்..

ஹரி மற்றும் அவன் போதை மருந்து சப்ளை செய்யும் ஆட்களை எல்லாம் கையில் விலங்கு மாட்டி பிடித்துச் சென்றனர்..

இறந்து கிடந்த மாணிக்கம் மற்றும் அவனது ஆட்களை எல்லாம் ஆம்புலன்ஸ் வரவைத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்..

வெற்றி அங்கிருந்த வண்ணம், தாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் க்கு கிளம்பி விட்டான்.. அவன் வந்த வேலையை சிறப்பாக முடித்து விட்டான்.. இனி காவல் துரையின் பொறுப்பு.

இந்த செய்தி, முக்கிய செய்தியாக எல்லா நியூஸ் சேனல்களிலும் ஒளிபரப்பப் பட்டது.

மருத்துவமனையில் இருந்த ரவியோ,
அறையில் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த செய்தியை பார்த்து விட்டு அதிர்ச்சி அடைந்து விட்டான்..

"தான் அங்கே செல்வதாக தானே இருந்தது.. இப்பொழுது என்னவென்றால் எல்லாம் போதை மருந்து கடத்தும் கும்பலா..

அவர்களுக்கு போயா நான் துணை செய்தேன் ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கு..

ஒருவேளை தான் அங்கு சென்று இருந்தால் என் நிலைமையும் இப்படி தானே இருந்து இருக்கும்..

யார் செய்த புண்ணியமோ, இப்பொழுது இந்த அடியோடு போய் விட்டது..

இல்லையென்றால் ஒன்று ஜெயிலில் இருக்க வேண்டி இருக்கும் அல்லது மொத்தமாக பரலோகம் தான் போக வேண்டி இருக்கும்.."
என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் கவிதா..

யோசனையில் இருந்தவன், சத்தம் கேட்டதும் திரும்பி பார்க்க கவிதா வருவதை பார்த்தவன் " வேறு யாரும் அல்ல.. இவள் செய்த புண்ணியம் தான்.. " என்று உதட்டிற்கும் அறியாத புன்னகை செய்து கொண்டான்..

கடவுள் அவனுக்கு இந்த விபத்தின் மூலம் அந்த விபத்தில் இருந்து தன்னை பாதுகாத்து உள்ளார் என்றும், இதன் மூலம் தான் தன் கவியின் அருமை தனக்கு தெரிந்தது என்றும் அவன் உணர்ந்து கொண்டான்..

கவி, கோவிலுக்கு போய் விட்டு வந்ததால், அவன் அருகில் வந்து ஒரு வித தயக்கத்துடன் நின்று இருந்தாள்..

தன் அருகில் நிழல் ஆடுவதை உணர்ந்தவன், கண் திறந்து பார்க்க, அவள் தயக்கத்துடன் நிற்பதை பார்த்தவன் " என்ன.. " என்று கேட்டான்..

" இல்லை.. கோவிலுக்கு போனேன்.. அதான் திருநீறு உங்க நெத்தியில வச்சி விடலாம்.. னு... " என்று இழுத்துக் கொண்டே சொல்ல,

"ம்ம்... வச்சி விடு.. " என்று சொல்ல,

அவளோ தான் கேட்டது சரிதானா.. என்று " என்ன... " என்ற சந்தேகத்துடன் மீண்டும் கேட்டாள்..

அவனோ, " உனக்கு கேட்டுச்சு.. நானும் அதான் சொன்னேன்.. " என்றான்..

அவளோ அவன் நெற்றியில் வைத்து விட்டு கையை வைத்து ஊதி விட்டாள்.. அவனோ கண்களை மூடிக் கொண்டான்..

அவனை ஒரு வித ரசனையுடன் பார்த்தவள் மீண்டும் வெளியே வந்தாள்..

அவள் சென்றதும் மீண்டும் கண்களை திறந்தவன், தலையை கோதியவாறு ஒரு வித நாணப் புன்னகையை சிந்தினான்..

**********

காவல் துறைக்கு எல்லா வேலைகளையும் முடித்துக் கொடுத்தவன், அங்கிருந்து கிளம்பி தான் தங்கி இருந்த ஹோட்டல்லை நோக்கி காரை செலுத்தினான்..

போகும் வழியில் குமரனுக்கு அழைத்து, " மச்சான், எங்க இருக்கீங்க.. " என்று கேட்டான்..

அவனோ, " நம்ம தங்கி இருந்த ஹோட்டல் க்கு பக்கத்துல கொஞ்சம் தள்ளி வேற ஹோட்டல் ல, ரூம் புக் பண்ணி தங்கி இருக்கோம்.. நாங்க எல்லாம் ஒரு ரூம் ல இருக்கோம்.. தங்கச்சி இன்னோரு ரூம் ல இருக்கா.. " என்றனர்..

" அவளுக்கு மயக்கம் தெளிஞ்சிடுச்சா.. இல்லை.. " என்று சந்தேகத்துடன் கேட்க,

" இன்னும் இல்லை டா... " என்றான் குமரன்..

அவனும் ஒரு பெருமூச்சுடன், " சரி நான் வந்துட்டு இருக்கேன்.. எனக்கு லொகேஷன் ஷேர் பண்ணு.. " என்றான் வெற்றி..

குமரனும் அவர்கள் இருக்கும் இடத்தை ஷேர் செய்து விட, சில மணி துளிகளில் அவனும் அங்கு வந்து சேர்ந்தான்..

வந்தவனை அவனது நண்பர்கள் கட்டி அணைத்துக் கொள்ள, அங்கே ஒரு பாச போராட்டம் நிகழ்ந்தது

குமரனோ, " எங்களை எல்லாம் பாதுகாப்பா அனுப்பி வைக்க சொன்ன பாரு.. அப்பவே புரிஞ்சி போச்சு டா.. நீ இதை சமாளிச்சிருவனு.. " என்றான்..

செல்வமோ, " ஆனா மச்சான், சத்தியமா எதிர் பாக்கல டா.. அப்பனும் மகனும் சேந்து இதை பண்ணிருப்பாங்கனு.. " என்றதற்கு,

மற்றவர்களும் அதற்கு ஆமோதித்தனர்..

பின்னர், வெற்றியே தொடர்ந்தான்..

" மச்சான், நம்ம அங்க பழைய ரூம் ல இருக்குற நம்மளோட திங்ஸ் எல்லாம் எடுத்துட்டு ரூம் வெக்கெட் பண்ணிட்டு இங்க எடுத்துட்டு வந்துருங்க.. " என்று மற்ற இரு நண்பர்களான, அரவிந்த் மற்றும் கார்த்திகேயனை பார்த்து கூறினான்..

" சரி டா நாங்க பார்த்துகிறோம்.. நீ தங்கச்சியை போய் பாரு... " என்று வெற்றியிடம் சொல்லி விட்டு, அவர்கள் இருவரும் அங்கு சென்றனர்..

வெற்றி மதி தங்கி இருந்த அறைக்கு சென்றதும் இங்கு குமரனும் செல்வமும் அங்கு இருந்த கட்டிலில் அக்காடா என்று விழுந்தனர்..

குமரன் செல்வடம், " இப்போதான்டா நிம்மதியா இருக்கு... ஒரு வழியா இதை முடிச்சாச்சு.. " என்று மன திருப்தியுடன் சொல்ல,

" எங்களுக்கு என்னமோ ஃபிரீ தான்.. ஆனால் உனக்கு இல்லை மச்சான்.. " என்றான்..

அவன் பக்கம் திரும்பி படுத்து, " என்ன டா சொல்ற... " என்று குழப்பதுடன் கேட்க,

" ஆமா... மறந்துட்டியா.. உனக்கு ஊருக்கு போனதும் ஒரு முக்கியமான வேலை இருக்கு.. " என்றான்..

அவனும் சற்று சிந்தித்தவாரு, " அட ஆமா டா.. மறந்தே போய்ட்டேன்.. போய்ட்டு அதை என்னனு பாக்கணும்.. யாரு இருக்கானு கண்டு பிடிக்கணும்.
" என்றான்..

சிறிது நேரத்தில் பேசிக் கொண்டே நண்பர்கள் இருவரும் கண் அயர்ந்தனர்.

மதி இருக்கும் அறைக்குச் சென்ற வெற்றியோ, கட்டிலில் நிர்மூலமாய் படுத்து இருக்கும் தன் மனைவியை கண்டான்..

அவளது அருகில் சென்று அமர்ந்தவன், அவள் தலையை வருடியவாரு, அவளது நெற்றியில் ஆழ்ந்த முத்தம் இட்டான்..

அவனது ஸ்பரிசத்தில் மெல்ல கண் விழித்தவள், மிக நெருக்கமாக வெற்றியை கண்டதும்,அழுகையுடன் அவனை அணைத்துக் கொண்டாள்..

அவனும் அவளை காற்று கூட புக முடியாதவாரு இறுக அணைத்துக் கொண்டான்..

அவனை அணைத்துக் கொண்டு, தேம்பி தேம்பி அழ, அவளது கண்ணீரோ அவனின் சட்டையை தாண்டி அவனது மார்பை நனைத்தது..

அவளது முதுகை வருடி விட்டவன், மெல்ல " மதி குட்டி .. " என்று அழைக்க,

அவளும் அழுகையுடனே, " ம்ம்ம்... " என்றாள்..

" போதும் டி அழுதது.. எதுக்கு இவ்ளோ அழுகை.. " என்று அவன் கேட்கும் போதே அவன் கண்களும் கலங்கியது..

இருந்தும் அவளிடம் அதை வெளிக் காட்டாமல் பேசினான்..

அவளும், " உங்க.. உங்களுக்கு.. ஆ.. ஆக்சிடேன்ட் ஆகிருச்சுனு சொ... சொன்னாங்க... நா.. நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா.. " என்று அழுதப்படியே கூற,

" அது எல்லாம் உன்னை ஏமாத்துறதுக்கு பொய் சொல்லிருக்காகடி... உன் முன்மாடி நான் முழுசா இருக்கேன் பாரு.. என் உசுரு நீதானடி.
உன்னை விட்டு அவ்ளோ சீக்கிரம் நான் போய்டுவேனா என்ன.. " என்று அவள் நெற்றியோடு நெற்றி முட்டி கூறினான்..

அவளும் அழுகையுடன் சின்ன சிரிப்பை உதிர்த்தாள்.

" மதிமா.. போய் குளிச்சிட்டு வா... அப்போ தான் உனக்கு மயக்கம் இன்னும் நல்லா தெளியும்.. நம்ம நைட் கிளம்பிறலாம் நம்ம ஊருக்கு.." என்றான்.

" ஏங்க.. ட்ரெஸ் எல்லாம் நான் தங்கி இருந்த ரூம் ல இருக்கு.. குளிச்சிட்டு வா னா, எப்படி.. " என்று கேட்க,

அவனும் யோசனையுடன் நெற்றியை தேய்த்தான்..

பின்னர், " நான் உனக்கு ட்ரெஸ் வாங்கிட்டு வரேன் சிம்பிள்ளா.. இப்போதைக்கு அதை போட்டுக்கோ.. " என்று சொல்லிவிட்டு, அருகில் இருந்த துணி கடைக்குச் சென்றான்..

அவளும் சரி என்று சொல்லிவிட்டு, அவன் வரும் வரை காத்து இருந்தாள்..

சிறிது நேரத்தில் வந்தவன், அவளிடம் கொடுத்து, குளித்து விட்டு மாற்றி வர சொன்னான்..

அவளும் குளித்து, அவன் எடுத்து கொடுத்த சல்வாரை அணிந்து வந்தாள்..

பிறகு, வெற்றி தன் நண்பர்கள் இருக்கும் அறையை எட்டிப் பார்க்க, அவர்கள் நால்வரும் ஒருவர் மேல் ஒருவர் கை, கால் போட்டு படுத்துக் கொண்டிருந்தனர்..

அவர்களை பார்த்து தலையை குலுக்கி சிரித்து விட்டு, அங்கிருந்து மதியும் வெற்றியும் அவள் தங்கி இருந்த பழைய ஹோட்டல்க்குச் சென்று அவளது பையை எடுத்துக் கொண்டு மீண்டும் இங்கே வந்தனர்..

" மதி.. நீ அங்க போய் இரு.. நான் பசங்களை எழுப்பி விட்டு கூட்டிட்டு வரேன்.. சாப்பிட போகலாம்.. " என்றான்..

பின்னர் அனைவரையும் எழுப்பி, சாப்பிட சென்றவர்கள், சிறிது நேரம் வெளியில் சுற்றி பார்த்துவிட்டு, இரவு திருச்சியை நோக்கி பயணம் எடுத்தனர்..


தேன் இனிக்கும்..
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 33

இரவில் திருச்சி யை அடைந்தவர்கள், கார் மூலம் அவர் அவர் வீட்டிற்கு சென்று இறக்கி விட்டு இறுதியாக வெற்றியும் மதியும் அவர்கள் வீட்டை அடைந்தனர்..

மதியோ கண் அயர்ந்து இருந்தாள்..
வீட்டிற்கு வந்ததும் அவளை எழுப்பி விட்டு," மதி.. எந்திரி.. வீட்டுக்கு வந்துட்டோம்.. " என்று அவள் தோளில் தட்டி எழுப்பினான்..

அவளும் மெல்ல கண்ணை திறந்து பார்த்து விட்டு, " வந்துட்டோமா.. " என்று கேட்டுக் கொண்டே, கார் கதவை திறந்து கொண்டு வீட்டின் உள்ளே சென்றாள்..

அவன் காரினில் இருந்த அவர்களது பைகளை எடுத்து உள்ளே சென்றான்..

அவளோ அசதியில் அப்படியே கட்டிலில் விழுந்து சாய்ந்து படுத்து இருந்தாள்..

வெற்றியும் வீட்டின் கதவை பூட்டி விட்டு, பையை ஓரமாக வைத்து விட்டு, உடையை மாற்றி விட்டு வந்து படுத்தான்..

அவனும் படுத்ததும் உறங்கி விட்டான்.

காலையில் வெகு நேரம் கழித்தே இருவரும் எழுந்தனர்..

முதலில் கண் விழித்த வெற்றி, நேரம் ஆவதை உணர்ந்து எழும்ப போக, அவனின் மார்பில் தன் கன்னத்தை அழுத்திய படி படுத்து இருந்தாள் மதி..

அவளை ஒரு சின்ன சிரிப்புடன் பார்த்து விட்டு, அவள் தூக்கம் கலையாதவாறு மெல்ல நகர்த்தி விட்டு, அவன் எழுந்து குளிக்க சென்றான்..

அவன் குளித்து முடித்து விட்டு வெளியில் வரும் போது, மதி எழுந்து உட்கார்ந்து இருந்தாள்..

" மதி எந்திரிச்சிட்டியா.. " என்று தலையை துவட்டிக் கொண்டே கேட்டான்..

அவளும்.. " ஆமா.. ரொம்ப லேட் ஆகிருச்சு போல.. ஆனாலும் இப்பவும் எந்திரிக்கவே முடியல.. செம tired ah இருக்கு.. " என்று சொல்லி கொண்டே கட்டிலில் இருந்து எழுந்தாள்..

அவனும் வேஷ்டி மற்றும் சட்டை அணிந்தவன், " போ.. குளிச்சிட்டு வா மதி.. சாப்பிடலாம்.. " என்றான்..

அவளும் அலுப்பு தீர நன்றாக குளித்து விட்டு, உடை அணிந்து வெளியே வந்தாள்..

பின்னர் இருவருமாக சேர்ந்து சாப்பிட்டு முடித்து விட்டு, சிறிது நேரம் இளைப்பாறினர்..

அப்பொழுது மதி அன்று வந்த செய்தி தாளை பிரித்து படிக்க ஆரம்பித்தாள்..

முதல் பக்கத்திலையே அவள் வேலை செய்த மருத்துவமனையை பற்றிய செய்தி என்பதால் அதனை ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்து இறுதியில் அதிர்ச்சி அடைந்து இருந்தாள்..

வெற்றி மேலோட்டமாக சொல்லி இருந்தான்.. இப்பொழுது முழுதாக தெரிந்த பிறகு, எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை..

" என்னங்க.. இப்படி எல்லாம்.. சரி இவங்க தான் சப்ளை பண்றாங்கனா, எங்க அதை தயாரிக்கிறாங்க.. " என்று கேட்டாள்..

" அது அவங்க ஹாஸ்பிடல்லையே அண்டர் கிரௌண்ட் ல தனியா செட் பண்ணி ரெடி பண்ணி அப்புறம் மத்தவங்களுக்கு சப்ளை பண்றாங்க.... இப்போ அவங்க பிரென்ச் ஹாஸ்பிடல் எல்லாம் சீல் வச்சி குளோஸ் பண்ணிருப்பாங்க.. " என்றான்..

அவளும் ம்ம்ம்ம் என்றதோடு முடித்துக் கொண்டாள்.

" சரி நீ எதுவும் மனசுல போட்டு குழப்பிக்காத.. " என்றதற்கு,

" நான் அம்மா அப்பாவை போய் பார்த்துட்டு வரேன் வேந்தன்... " என்றாள்..

" சரி வா.. நான் போய்ட்டு உன்னை அங்க விட்டுட்டு சும்மா தோட்டத்து பக்கம் ஒரு எட்டு பார்த்துட்டு வரேன்.. " என்றவன் அவளை அழைத்துக் கொண்டு சென்றான்..

அங்கு அவளை இறக்கி விட்டு, " போகும் போது போன் போடுறியா.. இல்லை நீயா போயிருவியா.. " என்று கேட்க,

" பக்கம் தானே நான் நடந்தே போயிருறேன்.. " என்றாள்..

அவனும் சரி என்று கூறியவாரு வண்டியை கிளப்பிக் கொண்டு சென்றான்..

உள்ளே சென்றவள், "ம்மா.. " என்று அழைக்க,

அவரும் சமையல் கட்டில் வேலையாய் இருந்தவர் இவளது சத்தம் கேட்டு வெளியில் வந்தார்..

" வா மதி.. போய்ட்டு எப்போ வந்தீங்க நீயும் வெற்றியும்.. " என்று கேட்டார்..

" அது நைட் 12 மணி ஆகிருச்சு ம்மா... " என்றாள்..

" சாப்டியா மதி.. இல்லை எதுவும் சாப்பிடுறியா.. " எனக் கேட்க,

அவளும் சாப்பிட்டேன் என்றாள்..

"சரி அப்பா.. எங்க.." என்று கேட்க,

"அவரு மில்லுக்கு போய் இருக்காரு டி.. " என்றார்..

ஆம்.. வெற்றி தான் அவனுடைய அரிசி ஆலையில் வந்து அவ்வப்போது பார்த்துக் கொள்ள சொல்லி இருந்தான்...

அது போக, அங்கே ஊரிலேயே நிலம் வாங்கி, ஆள் வைத்து விவசாயமும் செய்து வருகிறார்.

"ம்ம்ம் சரி மா... " என்றவளிடம் ,

"மதி..!! உனக்கு ஒரு விஷயம் தெரியுமாடி.. நம்ம ரவிக்கு அங்க ஊருல ஆக்சிடேன்ட் ஆகிருச்சாம் டி.. ரெண்டு நாளைக்கு முன்ன தான் நடராஜன் அண்ணே போன் போட்டு சொல்லி இருந்தாரு.. " என்றார் லட்சுமி..

" அச்சோ.. இப்போ எப்படி மா இருக்கு அவனுக்கு.. " என்று கேட்டவளிடம்,

" தப்பிச்சு வந்துட்டான்டி... பெருசா ஆபத்து இல்லை அவனுக்கு.. ஆனால் காயம் அதிகம்.. எப்படியும் ஆறுறதுக்கு ரெண்டு மாசம் மேல ஆகிரும்.. " என்றார்..

" ஓஹோ... " என்றவள் பின் " நீங்க பாக்க போகலையா.. " என்றாள் மதி..

" போகணும்.. உங்க அப்பா நாளைக்கு கிளம்பனும்னு சொன்னாரு.. " என்றார்..

" சரி மா.. நான் அவருகிட்ட கேட்டுட்டு சொல்றேன்.. நானும் வர்றதா இல்லையானு.. என்னதா இருந்தாலும் அவன் சின்ன பிள்ளையில இருந்து பழகுனது.. ஒரு எட்டு பார்த்துட்டு வந்துரலாம்னு தோணுது.. " என்றாள்..

" எனக்கும் அதான் சரி னு பட்டுச்சு. சரி நீ வெற்றி கிட்ட கேட்டுட்டு சொல்லு... " என்றார் லட்சுமி..

சிறிது நேரம் தாயும் மகளும் பேசி விட்டு, அவள் கிளம்பி விட்டாள்..

பின்னர் மதியத்திற்கு மேல் வெற்றி வீட்டிற்கு வர, அவனிடம் விஷயத்தை கூறினாள் மதி..

" அதுக்கென்ன போய்ட்டு வா.. " என்றான்..

" நீங்களும் வரீங்களா.. " என்று கேட்க,

அவன் அவளை திரும்பி பார்த்தான்..
அவளும் கண்களால் கெஞ்ச, அவனும் சரி என்றான்..

" நீ மாமாகிட்ட சொல்லிரு.. எல்லாரும் சேந்து கார்ல போலாமா இல்லை எதுல போனா வசதியா இருக்கும்னு கேட்டு சொல்லு" என்றான் ..

" எனக்கு ட்ரெயின்ல போகணும் போல இருக்கு.. முதல் தடவை உங்க கூட ட்ராவெல்லிங் பண்ண போல.. அது மாதிரி திரும்பவும் வேணும்.. " என்றாள் சிரிப்புடன் அவனை பார்த்து...

அவனும் அவள் அருகினில் வந்து லேசாக அணைத்து, " ஓ.. போயிரலாமே... " என்றவன், நிறுத்தி பின்,

" இதை அத்தை மாமாகிட்ட சொல்லிரு.. " என்று சொல்லி விட்டு, அவளது கன்னத்தில் பட்டும் படமாலும் ஒரு முத்தத்தை வைத்து விட்டு வெளியில் சென்றான்..

அவளும் தன் பெற்றோர்களிடம் தெரிவித்து இருந்தாள் .. அவர்களும் சரி அதற்கென்ன சென்று விடலாம் என்றும் கூறி இருந்தனர்..

அன்றைய பொழுது அப்படியே கழிந்தது..

மறுநாள், குமரன் தான் விபத்து நிகழந்த போது சிகிச்சை எடுத்துக் கொண்ட மருத்துவமனைக்கு சென்று இருந்தான்..

அங்கு அவனுக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவரை சென்று சந்தித்தான்..

அவருக்கு அவனை நியாபகம் இல்லை.. மறந்து விட்டார் போலும்..

இவன் சென்று, புதிதாக செக்கப் க்கு வருவது போல காட்டிக் கொண்டு, அதற்கு ஏற்ற போல இவனுக்கும் டெஸ்ட் செய்ய பட்டது..

சோதனையின் முடிவில் இவனுக்கு மதி சொன்னது போலவே முடிவுகள் வர, அதனை வாங்கி பார்த்து விட்டு,
" ஏன் டாக்டர்.. இந்த ரிசல்ட் உண்மையா இல்லை, 4 வருஷத்துக்கு முன்னாடி நீங்க கொடுத்த இந்த ரிசல்ட் உண்மையா " என்று அதை தூக்கி அவன் முன்னால் இருந்த டேபிளில் போட, அவரோ அதனை எடுத்து பார்த்தார்..

அவருக்கு அப்பொழுது தான் நியாபகம் வந்தது..

" அது.. அது.. " என்று என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாற,

குமரன் எழுந்து அவனது சட்டையை பிடித்து கேட்க ஆரம்பித்து விட்டான்..

" ஒழுங்கா.. இதுக்கு பின்னாடி யாரு இருக்காங்கனு சொல்லிரு.. இல்லை இதை வச்சியே இந்த ஹாஸ்பிடல் மேல கேஸ் போட்டு உன்னையும் உள்ள தள்ளிருவேன்.. " என்று மிரட்டல் விடுக்க,

அவரும் பயந்து கொண்டு, " ஒரு ஆளு தான் வந்து இப்படி சொல்ல சொன்னாப்புல.. " என்று சொல்ல,

"யார் அது.. " என்று கண்களை கூர்மையாக்கி கொண்டு கேட்க,

" அது.. அது வந்து.. " என்று யோசித்தவன், பின் " ஹாம்.. யாரோ உங்க மாமாவாம்.. அவரு பொண்ண உங்களுக்கு கொடுக்க கூடாதுனு நெனச்சி இப்படி பண்ணி இருக்காரு.. " என்று சொல்லி முடித்தான்..

அவனும் யோசனையுடன் அவனது சட்டையை விட்டவன் மெடிக்கல் ரிப்போர்ட் டை எடுத்துக் கொண்டு கிளம்பி வந்து விட்டான்..

வந்தவன் நேராக தோட்டத்திற்கு தான் சென்றான்..

அங்குதான் அவனின் நண்பர்கள் பட்டாளமும் குழுமி இருந்தனர்..

குமரன் வருவதை பார்த்த அரவிந்த், " என்ன மச்சான், போன வேலை என்ன ஆச்சு.. " என்று கேட்க,

" என்னத்த சொல்ல.. " என்று சலிப்புடன் அங்கு நடந்தவற்றை எல்லாம் கூறி முடித்தான் குமரன்..

" அந்த ஆளு ஏன் டா இப்படி பண்ணனும்.. அவருக்கு என்ன கொலைவெறி உன் மேல... " என்று செல்வம் கேட்க..

" என கருமமோ.. அந்த ஆளு உயிரோட இருந்தாளாவது சட்டையை பிடிச்சு நாலு கேள்வி கேட்டு இருப்பேன்.. எனக்கு இப்படி ஒரு சூனியத்தை வச்சிட்டு அந்த ஆளு போய் சேந்துட்டான்.. இப்போ யாருகிட்ட போய் கேட்க... அவ்ளோதான்.... " என்றான்.

" விடு டா மச்சான்.. ஒரு வேலை உயிரோட இருந்தா கூட இன்னும் பிரச்சனை தான் பண்ணி இருக்குமோ என்னவோ.. சனியன் ஒழிஞ்சதுனு நிம்மதியா இரு.. " என்றான் வெற்றி..

அவனும் ஆமோதிப்பதாய் சரி என்றான்..

" இனி என்ன மச்சான்.. ஆக வேண்டிய வேலையை பாரு.. தமிழ் கிட்ட உன் சம்மதத்தை முதல்ல சொல்லு.. பாவம்.. அந்த பிள்ளைய ரொம்பவே கஷ்ட படுத்திட்ட.. " என்றனர் நண்பர்கள்..

அவனும், " ஆமா டா.. அவ என்னால ரொம்ப கஷ்ட பட்டுட்டா.. " என்று சொல்லியவன்,

அவளுக்கு அழைப்பு விடுத்து பேச சென்று விட்டான்..

நண்பர்கள் மகிழ்வுடன் சிரித்துக் கொண்டனர்..

" அப்புறம் மச்சான், இன்னைக்கு நைட் சென்னைக்கு கிளம்புறேன் டா.. போய் வர ரெண்டு நாள் கூட ஆகலாம்.. பார்த்துக்கோங்க டா " என்று சொல்லிவிட்டு அவர்களிடம் விடை பெற்று கிளம்பினான்..

இரவில் நிலவின் குளுமை.. இதமான தென்றல் காற்று.. ரயில் பயணம். சென்னையை நோக்கி...


தேன் இனிக்கும்...


 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 34

இரவில் நிலவின் குளுமை.. இதமான தென்றல் காற்று அவர்கள் முகத்தில் வீச, அந்த ஏகாந்த நிலையை அனுபவித்துக் கொண்டு பயணம் செய்தனர்..

மூர்த்தியும் லட்சுமியும் வெகு நாட்களுக்கு பிறகு ரயில் பயணம் செய்ததில் அவர்களுக்குள்ளும் ஏதோ ஒரு மகிழ்ச்சி..

இது போல சின்ன சின்ன சந்தோசத்தை இழந்து விட்டோமே என்ற வருத்தம் இருவருக்கும்..

இனி இழந்ததை மீட்டுக் கொள்ளலாம் என்ற புத்துணர்வோடு விட்ட கதை எல்லாம் பேசிக் கொண்டிருந்தனர்..

இவர்கள் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் வெற்றியும் மதியும் படிக்கட்டு அருகில் நின்று கொண்டு, இருவரும் ஒருவரோடு ஒருவர் கையை கோர்த்துக் கொண்டு விழியோடு விழி கலக்க விட்டு இருந்தனர்..

பின்னர் இதமாக வீசிய காற்று, வாடை காற்றாக வீச தொடங்க, லேசாக குளிர தொடங்கியது மதிக்கு..

அவள் குளிரை சமாளித்துக் கொண்டு நிற்பதை பார்த்த வெற்றி, " மதி உள்ள போகலாம்.. " என்று அழைத்துக் கொண்டு அவர்கள் இடத்திற்கு வர,

அங்கு மூர்த்தியும் லட்சுமியும் தூங்கி விட்டு இருந்தனர்..

இவர்களும் அவர் அவர் இடத்தில், படுத்த படி ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்தனர்..

வெற்றி, தூங்கு என்று சைகை செய்ய, அவளோ, " ஹுஹும்.. " என்று தலையை ஆட்டினாள்..

அவனோ சிரித்துக் கொண்டே, " கொல்ல போறேன்.. பாரு.. " என்று சொல்ல,

அவளும் இதழ் குவித்து பறக்கும் முத்தத்தை அவனுக்கு அனுப்பி வைத்தாள்....

அவன் வெட்கத்துடன் தலையை கோதிக் கொள்ள, அவன் வெட்கப் புன்னகையை ரசனையுடன் பார்த்தாள்..

ஒரு வழியாக இருவரும் கண் அயற, விடியல் காலையில் ரயில் அவர்களை சென்னையில் இறக்கி விட்டது..

நால்வரும் இறங்கி, சென்னையில் வசித்த மூர்த்தியின் பழைய வீட்டிற்கு சென்றனர்..

அவர்கள் செல்லும் போது விடிந்து விட்டது..

சிறிது நேரம் களைப்பாறியவர்கள், அடுத்து ஒவ்வொருவராக குளித்து கிளம்பி ஆயத்தமாகினர்..

காலை உணவை மதியும் லட்சுமியும் சேர்ந்து செய்து முடிக்க, நால்வரும் உண்டு முடித்து மருத்துவமனைக்கு கிளம்பினர்..

மூர்த்தி ஏற்கனவே தாங்கள் வருவதாக சொல்லி வைத்து இருந்தார் நடராஜனிடம்..

அதனால் அவரும் கிளம்பி குறித்த நேரத்தில் மருத்துவ மனைக்கு கிளம்பி வந்து விட்டார்..

தந்தை இவ்வளவு சீக்கிரம் வர மாட்டாரே என்று அறிந்தவன், " என்னப்பா.. இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க.. " என்று கேட்க,

அவரோ, " இன்னைக்கு நம்ம மூர்த்தி உன்ன பாக்க வரேன்னு சொன்னான் பா.. அதான் நான் கிளம்பி வந்தேன்.. " என்றார்...

" அவரு மட்டும் தானா.. இல்லை கூட ஆன்ட்டியும் வர்றாங்களா.. " என்று கேட்டான்..

" லட்சுமியும் தான்.. கூடவே மதியும் வர்றா.. " என்று சொல்ல,

அவனோ " ஓஹோ.. " என்று மட்டும் தந்தையிடம் சொல்லி கொண்டு, மனதில், " மேன்மக்கள் மேன்மக்களே.. " என்று நினைத்துக் கொண்டான்..

கவிதா அந்த அறையில் இருந்த பாத்ரூமில் குளித்து முடித்து உடை மாற்றி விட்டு வந்தாள்..

வந்தவள் நடராஜனை பார்த்துவிட்டு, " வாங்க மாமா.. சாப்ட்டீங்களா.. " என்று கேட்க,

அவரும் " சாப்பிட்டேன் மா.. " என்று பதில் கூறினார்...

அவனுக்கு காலை உணவை ஊட்டி விட்டு தான் அவள் குளிக்க சென்றது..

அவன் பெட் க்கு அருகில் இருந்த சேர்ரில் உக்காத்து இருந்தார் நடராஜன்..

அவரிடம், " மாமா.. ஒரு நிமிஷம்.. கொஞ்சம் தள்ளி அங்க உட்காந்துகிறீங்களா.. " என்றவளுக்கு அவள் ஏன் சொல்கிறான் என்றும் தெரியும்..

அதனாலயே சற்று தள்ளி அமர்ந்து கொண்டார்..

அவளும் அவன் படுக்கையை சுற்றி மறைவாக ஸ்கிரீனை போட்டவள், அவனுக்கு உடம்பு துடைத்து விட்டு, வேறு துணியையும் மாற்றி விட்டாள்..

அவள் செய்யும் போது அவனுடைய பார்வை எல்லாம் அவள் மேல் தான் இருந்ததே ஒழிய வேறு பக்கம் திரும்பவே இல்லை..

ஆனால் அவள் வேளையில் கண்ணும் கருத்துமாக இருந்தாள்.. அவனை கண்டு கொள்ளவே இல்லை அவள்..

முடித்து விட்டு, ஸ்கிரீனை திறந்து வைத்தாள்..

சிறிது நேரத்தில் மூர்த்தி மற்றும் மற்றவர்கள் வந்து சேர, வந்தவர்களை ஒரு மென் சிரிப்புடன் வரவேற்றான் ரவி..

நடராஜோ, " வா மூர்த்தி.... லட்சுமி வா மா.. அம்மாடி மதி.. வாடா.." என்றவர், வெற்றியிடம், " வா ப்பா.. " என்று வரவேற்றார்..

வந்தவர்களும் ஒரு சின்ன தலை அசைப்புடன் ஏற்றுக் கொண்டனர்....

லட்சுமி தான், " என்னய்யா ரவி.. பார்த்து போக வேண்டாமா.. எதுக்கோ வந்தது எதுக்கோ போயிருச்சுனு நெனச்சிக்க வேண்டியது தான்.. " என்றார் வருத்தப்பட்டுக் கொண்டே..

மதியும்.. " இப்போ ஓகே வா ரவி.. " என்று கேட்க, அவனும் ஆம் என்பதாய் தலை அசைத்தான்..

பின்னர், " ஐ அம் சாரி மதி.. " என்றான் பொதுவாக..

ஆனால் அவர்களுக்கு தான் தெரியுமே..

ஏன் எதற்கு என்று விளாவரியாக விளக்கம் கொடுப்பதற்கு பதில் ஒரு புரிதலோடு இருப்பது இருவருக்குமே நல்லது தான்.. அது அவர்களுக்கு மேலும் குற்ற உணர்வை தான் பெருக்கும்...

அதை தான் மதியும் ஒரு புரிதலோடு அவன் கூறிய மன்னிப்பை ஏற்றுக் கொண்டாள்..

வெற்றியோ, அவன் கையை பிடித்து, " பார்த்துக்கோங்க ப்ரோ.. இனிமே கவனமா போயிடு வாங்க எங்கயும்.. " என்று கூறினான்..

அவனும் சரி என்பதாய் கூறினான்..

பின்னர், கவிதவை பார்த்து, " நல்லா இருக்கியாமா.. " என்று கேட்க,

" நான் நல்லா இருக்கேன் ண்ணா.. " என்று கூறினாள்..

" சரி மா. பார்த்துக்கோ அவரை.. " என்று கூறி விட்டு நால்வரும் அவர்களிடம் சொல்லிவிட்டு விடை பெற்றனர்..

அவர்கள் அங்கிருந்து கிளம்பும் போது, மதியம் ஆகி விட்டது..

நால்வரும் ஒரு ஹோட்டல் க்கு சென்று சாப்பிட்டு விட்டு, அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பினர்..

வந்தவர்கள், மாலை வரை இளைப்பாரி விட்டு, மாலையில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்த பிறகு, வெளியில் செல்லலாம் என்று நினைத்து இருந்தனர்..

லட்சுமியும் மூர்த்தியும் " நாங்க எதுக்கு பா.. நீங்க மட்டும் வெளியில போய்ட்டு வாங்க.. " என்று அவர்களை மட்டும் அனுப்பி வைத்தனர்..

வெற்றியோ t ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து இருந்தான்..

மதியோ, இலகுவான புடவை அணிந்து இருந்தாள் ..

இருவரும் ஜோடியாக கிளம்ப, அதை கண்ட பெரியவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி..

முதலில் இருவருமாக பிரசித்தி பெற்ற கோவிலுக்கு சென்று கடவுளை வழி பட்டு , பின் பீச் க்கு சென்றனர்..

அங்கு ஆள் இல்லாத இடமாக பார்த்து அமர்ந்து கொண்டனர் இருவரும்.. வெற்றியின் தோளின் மீது சாய்ந்து அமர்ந்து கொண்டாள் அவள்..

இருவருமாக வெகு நேரம் எதை எதையோ பேசினர்...

கடற்கரை காற்று, பௌர்ணமி நிலவு என்று இருவரின் உணர்வுகளையும் கிளர்த்தௌ செய்தது என்று தான் சொல்ல வேண்டும்..

அங்கிருந்து ரெஸ்டாரெண்ட் சென்று வெற்றிக்கு பிடித்த உணவை அவளும், அவளுக்கு பிடித்த உணவை அவனும் ஆர்டர் செய்து சாப்பிட்டு முடித்து இரவு வெகு நேரம் கழித்தே வீடு திரும்பினர்..

லட்சுமி முன் அறையில் தான் இருந்தார் இவர்கள் வரும் வரை..
வந்ததும் இவர்களை வரவேற்று, கதவை பூட்டி விட்டு, மதியை அழைத்தார்..

அவளும் வந்து, " என்னம்மா.. " என்று கேட்க,

" பிரிட்ஜ் ல பூ வாங்கி வச்சிருக்கேன்.. நைட் குளிச்சிட்டு எடுத்து வச்சிக்கோ.. " என்று சொல்லி விட்டு சென்றார்..

அவர் எதை நினைத்து கூறினாரோ, ஆனால் அவர் சொன்னதில் ஒரு அர்த்தமும் பொதிந்து இருந்தது அவளுக்கு..

முப்பது வருடம் தாம்பத்திய வாழ்க்கையில் அவர் அறியாததா..
மகளுக்கு சொல்லாமல் சொல்லி விட்டு செல்கின்றார்..மகளும் அதை புரிந்து கொண்டு இருக்க வேண்டும்.. வெட்கத்துடன் மாடியேறி சென்றாள்..

அறையின் உள்ளே சென்றதும் வெற்றியை தேட, குளியல் அறையில் இருந்து சத்தம் வந்ததை உணர்ந்து குளித்து கொண்டிருக்கின்றான் போலும் என்று நினைத்து பால்கனி பக்கம் சென்று நின்று கொண்டாள்..

அவனும் குளித்து விட்டு, இடுப்பில் வெறும் துண்டுடன் மட்டும் வந்தான்..

ஆள் அரவம் கேட்டு திரும்பி பார்க்க, அவன் தான் தலையை துவட்டிக் கொண்டிருந்தான்..

அவனை ரசனையுடன் பார்க்க பார்க்க, அவன் தன்னவன், தனக்கானவன் என்ற கர்வமே மேலோங்கி இருந்தது..

" என்னடி.." என்று கேட்டுக்கொன்டே, அவள் அருகில் வர,

அவளும் ஒன்றும் இல்லை என்பது போல தலையை ஆட்டி விட்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்..

அவனும் செல்கின்ற அவளை சிரிப்புடன் பார்த்து, தலையை குலுக்கி விட்டு, வேஷ்டி மட்டும் கை இல்லாத பனியன் அணிந்து கொண்டான்..

அவள் வரும் வரை, சிறிது நேரம் மொட்டை மாடியில் இருந்து விட்டு வரலாம் என்று நினைத்து அங்கு சென்றான்..

இவளும் குளித்து முடித்து, வெளியே எட்டிப் பார்க்க, வெற்றி இல்லை என்பதை உணர்ந்து " ஹாப்பாடா..." என்று சொல்லிக் கொண்டு வெளியில் வந்து, அவளது கபோர்டில் இருந்து புது புடவை ஒன்றை அணிந்து கொண்டாள்..

மிதமான ஒப்பனை உடன், தாய் கூறியது போல பிரிட்ஜ்ல் இருந்து மல்லிகையை தலை நிறைய சூடிக் கொண்டு, கட்டிலிலும் புது மெத்தை விரிப்பை விரித்து கொஞ்சம் மலர்களை தூவி விட்டவள், நறுமணமிக்க மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து இருந்தாள்..

பின்னர் கீழே சென்று பாலை சுண்ட காய்ச்சி, மேலே அறைக்கு வந்தவள், அவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்..

நேரம் ஆக ஆக, வாடைக் காற்று வீசி, அவனது உணர்ச்சிகளை மென்மேலும் அதிகரிக்க தான் செய்தது..

அவள் மேலே வருவாள் என்று அவன் நினைத்து இருக்க, அவள் வரவில்லை என்றதும், " தூங்கிட்டா போல.. " என்று சலிப்புடன் கீழே இறங்கி அறைக்கு வந்தான்..

அறையின் கதவை திறந்ததும், நறுமணமிக்க மெழுகு வர்த்தியின் வாசனை தான் அவன் நாசியை துளைத்தது.. மின் விளக்கு எல்லாம் அணைத்து வைத்து இருந்ததாள், மெழுகுவர்த்தியின் வெளிச்சம் மட்டுமே..

இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவன்..

கட்டிலை பார்க்க, பூக்கள் தூவி வைக்க பட்டு இருந்தது..

ஒவ்வொன்றையும் பார்க்க பார்க்க அவனுக்கு எதுவோ உணர்த்துவது போல இருந்தது..

அந்த வாசத்துடன் மதி எங்கே என்று தேட, அவள் இருப்பதாக தெரியவில்லை..

வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு, " தேனுக் குட்டி... " என்று அழைத்திட, அவள் பால்கனி பக்கம் இருந்து வெளியில் வந்தாள்..

அந்த வெளிச்சத்தில் உண்மையாகவே தேவதை தான் நேரில் வந்து விட்டதோ என்று சில கணம் ஸ்தம்பித்து நின்று விட்டான்..

பின் சுயத்திற்கு வந்தவன், எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டே அவளை நெருங்க, அவளோ அவனை பார்க்க வெட்கப் பட்டு கொண்டு அவனுக்கு முதுகு காட்டிக் கொண்டு திரும்பி நின்று விட்டாள்..

அவள் அருகில் சென்றவன், பின்னால் இருந்து அவளை அணைத்து, அவள் வைத்து இருந்த பூவின் வாசத்தை தனக்குள் உள்வாங்கிக் கொண்டான்..

அது அவனுக்கு மேலும் போதை ஏற்ற, அவள் முடியை ஒதுக்கி விட்டு, முதுகில் அவனது இதழை பதித்தான்..
அவன் இதழ்கள் மெல்ல மெல்ல ஊர்வலம் சென்று அவள் கழுத்து வளைவினில் தஞ்சம் அடைந்து அங்கு அவன் பற்களை பதித்தான்..

அவள், அவன் முத்தத்தில் நெளிந்து குழைந்து, அவன் மார்பின் மேலேயே சாய, அவன் இப்பொழுது அவளை முன் பக்கம் திருப்பி, அவளது இதழில் அவன் இதழை பதித்தான்..

அழுத்தமாக... ஆழமாக....

அவளது இதழ்கள் அவன் முரட்டு இதழ்களுக்குள் மாட்டிக் கொள்ள, அவளும் அவனுக்கு ஈடு கொடுக்க ஆரம்பித்தாள்..

முத்தத்தின் வேகம் அவர்களுக்குள் இருக்கும் உணர்ச்சிகளை பெருக்க, இருவருக்குள் இருக்கும் காம உணர்வுகள் ஆட்டம் போட, இதற்கு மேலும் தாமதிக்க முடியாது என்று எண்ணியவன், அவளை விலக்கி, அவள் கண்களை பார்த்து சம்மதமா என்று கேட்க,

அவளும் அதை வார்த்தையால் கூறாமல், அவனை அணைத்துக் கொண்டு அவனது மார்பில் முத்தம் இட்டவள், அவனை நோக்கி முகத்தை நிமிர்த்தி, கண்களை சிமிட்டி சம்மதம் தெரிவித்தாள்..

அவளை அப்படியே இரு கைகளால் தாங்கியவன் அறையின் உள்ளே சென்று, காலால் பால்கனி கதவை சாற்றி விட்டு, மஞ்சத்தில் தஞ்சம் அடைந்தனர் இருவரும்..

இருவரது ஆடைகளும் அநாதரவாய் கிடக்க, ஒருவருக்கு ஒருவர் ஆடையாய் மாறிக்கொண்டனர்..

இதழில் ஆரம்பித்து, அவளது சங்கு கழுத்தில் பற்த்தடத்தை பதித்து, அவளது மேடு பள்ளங்களில் தங்கு தடையின்றி பயணித்து, குழந்தையாய் மாறி, அவளது உடல் எங்கும் அவன் எச்சிலால் அபிஷேகம் செய்தான்..

தாம்பத்தியத்தை பொறுத்த மட்டில், இரு மனம் ஒத்த கணவன் மற்றும் மனைவி, இருவருக்கும் எந்த வித அருவருப்போ, முகம் சுழித்தளோ அங்கே நிகழாது..

அப்படித்தான் வெற்றியும் மதியும், ஒருவருக்குள் ஒருவர் ஐயக்கியமாகினர்.. அவளை முழுவதுமாக ஆட்கொண்டு, தன்னை அவளுள் நிலை நாட்டினான்..

வேக மூச்சுக்களை விட்டு, அவளின் மார்பின் மேல் படுத்தவாக்கில், அவளின் முகத்தை பார்த்தவன், " உன்னை தேனு னு சொல்றதுல தப்பா இல்லடி... தேனாட்டம் இனிக்கிறியே மதிக் குட்டி... " என்று மேலும் அவளை வெட்கத்தில் ஆழ்த்தினான்..

அவனின் "தேனு.. தேனு " என்ற முணுங்களுடனும் , அவளின் " மாமு.. " என்ற சினுங்களுடனும் அவர்களின் பயணம் விடிய விடிய தொடர்ந்தது..



தேன் இனிக்கும்....

 
Status
Not open for further replies.
Top