ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தேன்சுவை நீயடி- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 35

காலை விடிந்த பிறகும் வெகு நேரம் தூங்கிக் கொண்டிருந்தனர் இருவரும்..

இருவரின் உடைகளும் எங்கோ மூலையில் கிடக்க, வெற்று உடலுடன் ஒரு போர்வைக்குள் தஞ்சம் அடைந்து இருந்தனர்..

லேசாக கண் விழித்த வெற்றியோ நேரத்தை பார்க்க, மணி பத்தை தாண்டி இருந்தது..

தன்மேல் கணமாக இருப்பதை உணர்ந்த வெற்றி என்னவென்று பார்க்க, " அவனின் மார்பில் தன் முகத்தை புதைத்து படுத்துக் கொண்டிருந்தாள் மதி..

இரவில் நடந்த இவர்களின் களியாட்டம் நினைவுக்கு வர, அவனின் இதழ்களோ புன்னகையை தாராளமாக சிந்தின..

"தேனு...!!! அடியேய் தேனு..." என்று அவளை எழுப்ப,

அவளோ " போங்க மாமு... எனக்கு தூக்கமா வருது.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேனே.. ப்ளீஸ்.. " என்று கண்ணை திறக்காமல் அவள் கூறினாள்..

" எல்லாம் சரி தான்.. அது நம்ம மட்டும் இருந்தா ஓகே.. கீழ அத்தையும் மாமாவும் இருக்காங்க.. நம்ம இப்போ கீழ போனாலே ஏதாவது நெனச்சிப்பாங்க.. இன்னும் லேட்டா போனா அவ்ளோதான்.. " என்று அவள் காதில் மெல்ல தன் உதடுகளை உரசிய படி சொல்ல,

அவளும் சிணுங்களுடனே " இப்படி பண்ணா எப்படி எந்திரிக்கிறதாம்.. " என்று அவளின் காதினில் முத்தம் குடுத்தவனை திரும்பி பார்த்து கேட்க,

" உன்ன இப்படி பாக்க பாக்க சும்மா இருக்க தோணலையே.. அதான்.. " என்று ஒரு வித மோகத்துடன் கூறினான்..

அவளோ, "எப்படி.. " கீழே குனிந்து பார்க்க, அவள் போர்த்தி இருந்த போர்வை சற்று கீழே இறங்கி அவள் அங்க வனப்புகளை அவனுக்கு தெள்ள தெளிவாக காட்டியது..

அவசரமாக, போர்வையை இழுத்து மூடிக் கொண்டவள், " ச்சீ... நீங்க ரொம்ப மோசம்.." என்று அவனைப் பார்த்து கூறினாள்..

" அதான் நேத்து நைட் பார்த்து இருப்பியே.. உன்கிட்ட மட்டும் மோசமா இருக்குறதுல தப்பே இல்லை பொண்டாட்டி.. " என்றவன், பின்,
" இனி என்ன மறைக்க இருக்கு.. இழுத்து போர்த்திட்டு இருக்க.. அதான் எல்லாத்தையும் முழுசா பார்த்தாச்சே.. " என்றான் அவள் போர்வைக்குள் உள்ளே புகுந்த படி..

" ஹே.. என்ன பண்றீங்க... " என்று கேட்டு முடிப்பதற்குள் அவள் வார்த்தையை அவன் விழுங்கிக் கொண்டான்..

இனி என்ன, அடுத்த ஆட்டத்தை வெற்றி ஆரம்பிக்க, அவர்கள் குளித்து முடித்து கீழ் இறங்கி வர மதியம் ஒரு மணியை நெருங்கி விட்டது..

இருவரும் வரும் போது ஒருவித சங்கடத்துடனே வந்தனர்..

நல்ல வேலையாக மூர்த்தி இருக்க வில்லை.. அவர் அவரின் நண்பரை பார்க்க சென்று இருந்தார்.. லட்சுமி மட்டுமே இருந்தார் வீட்டில்..

அவருக்கு புரிந்து விட்டது.. அவரும் அந்த நிலையை கடந்து தானே வந்து இருப்பார்..

வெற்றி அங்கு இருந்த ஷோபாவில் அமர்ந்து கொண்டான்..

மதி தான் சமையல் அறைக்கு சென்றாள்.. உண்பதற்கு எதுவும் இருக்கிறதா என்று..

லட்சுமி அப்பொழுது தான் சமையல் வேலைகளை முடித்து இருந்தார்..

சத்தம் கேட்பதை உணர்ந்து திரும்பி பார்க்க, மதி தான், தலைக்கு குளித்து முடியை விரித்து போட்டு, நடுவில் ஒரு சின்ன கிளிப் மட்டும் அணிந்து இருந்தாள்..

மகளின் முகத்தில் இருந்த பூரிப்பு, உதடு, கன்னம், கழுத்து என்று ஆங்காங்கு, வெற்றியின் பற்தடத்தால் ஏற்பட்ட லேசான கயத்தால் சிவந்து இருந்தது..

அதை பற்றி எதுவும் கேட்டு அவர்களை சங்கட படுத்தக் கூடாது என்று நினைத்தவர், " வா மதி.. சாப்பிடுறியா.. வெற்றி எங்க.. " என்று கேட்க,

" அவரு வெளிய ஷோபாவில இருக்காரு மா.. " என்றாள் அவள்..

" சரி வாங்க.. சாப்பிடலாம்.. " என்றவர், அவளிடம் " மதி.. அந்த பாத்திரத்தை எல்லாம் டைனிங் டேபிள்ல கொண்டு வந்து வை.. " என்று சொல்லி விட்டு, அவரும் கையில் ஒன்றை எடுத்துக் கொண்டு சென்றார்..

அத்தை வருவதை கண்டதும், அவரின் முகத்தை நிமிர்ந்து பார்க்க, ஏதோ சங்கடமாக இருந்தது..

" வெற்றி வா பா.. சாப்பிடலாம்.. " என்று அந்த சூழ்நிலையை இலகுவாக்கி, இருவரையும் அமரவைத்து உணவு பரிமாறி, உண்ண வைத்தவர், பின் தானும் அமர்ந்து உண்டு முடித்தார்..

" மாமா எங்க அத்தை.. " என்று வெற்றி கேட்டதற்கு,

" அவரு நண்பரை பாக்க போயிருக்காரு வெற்றி.. அங்கேயே சாப்பிட்டு வரேன்னு சொல்லி இருக்காரு.. " என்றார் அவர்..

" சரி..அத்தை... " என்றவன், " அத்தை.. கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன்.. " என்று அவரிடம் சொல்லியவன், மதியிடம் வெளியே வர சொல்லி கண் காட்டினான்..

அவளும் புரியாமல் வெளியில் வர, " தேனு.. நான் இங்க இருந்தா, மறுபடியும் உன்கிட்ட தான் வருவேன்.. அதான் கிளம்பி வெளிய போறேன்.. என் நண்பன் இங்க பக்கத்துல தான் இருக்கான்.. சும்மா ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரேன்.. ஈவினிங் வந்துருவேன்.." என்றவன் அவசரமாக அவளது கன்னத்தில் ஒரு முத்தத்தை வைத்து விட்டு சென்றான்..

அவளும் தலையை குலுக்கி சிரித்து விட்டு உள்ளே சென்றாள்..

மாலை நேரம் போல மாமனாரும் மருமகனும் அடுத்தடுத்து வீட்டிற்கு வந்து சேந்தனர்..

இரவில் அவர்களது ஊருக்கு மீண்டும் பயணம் செய்தனர்..

இப்படியே வெற்றி மதியின் வாழ்க்கை, எதற்கும் பஞ்சமில்லாமல் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது....

சின்ன சின்ன ஊடல்களும் , அளவில்லாத கூடல்களும், கெஞ்சலும் கொஞ்சலும் என அவர்களின் வாழ்க்கை அழகாக நகர்ந்து கொண்டிருந்தது..

அதே சமயத்தில், ரவிக்கும் காயங்கள் ஆறிக் கொண்டு இருந்தது..

இரண்டு வாரங்களில் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து விட்டான்..

அவனை குணமாக்கும் பொருட்டு, கவி தான் அவன் கூடவே இருந்து அவனுக்கு தேவையானதை செய்து கொண்டிருந்தாள்..

இப்பொழுது அவனாக உண்ண ஆரம்பித்து இருந்தான்.. மெல்ல மெல்ல நடக்க பழகி இருந்தான் வாக்கிங் ஸ்டிக் வைத்து..

அன்று அப்டித்தான், உண்டு முடித்து விட்டு, சிறிது நேரம் நடக்கலாம் என்று எண்ணி வாக்கிங் ஸ்டிக் தேட, அது சற்று தொலைவில் இருந்தது..

சரி ஸ்டிக் இல்லமால் நடந்து பார்க்கலாம் என்று மெல்ல எட்டு எடுத்து வைத்தான்.. ஒரு அடி, இரண்டு அடி எடுத்து வைத்து விட்டான்.. அதற்கு மேல் முடியவில்லை.. பிடிமானத்திற்கும் அருகில் இல்லை..

கால் வேறு வலிக்க ஆரம்பித்து விட்டது..

அதற்கு அடுத்து நிலையாக நிற்க முடியாமல், தடுமாறி கீழே விழ போன சமயம் " என்னங்க.. " என்ற சத்தத்துடன் ஓடி வந்து தாங்கிக் கொண்டாள் அவனை..

அப்பொழுது தான் அவனுக்கு மூச்சே வந்தது..

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, அவளை பார்க்க,:அவளும் அவனை தான் பார்த்து கொண்டு இருந்தாள் ..

"நான் இருக்கும் போது இப்படி முயற்சி பண்ணிருக்கலாமே.. ஏன் இந்த விஷப் பரீட்சை உங்களுக்கு.." என்று கண்கள் கலங்கிய வண்ணம் கூற,

" ஸ்டிக் ஓட தான் நடக்கலாம் னு பார்த்தேன்.. ஆனால் அது அங்க கொஞ்சம் தள்ளி இருந்தனால சரி இப்படி நடந்து பாக்கலாம்னு நெனச்சேன்.. " என்றான்..

அவளும் அவனை தாங்கி பிடித்த படி, " நான் பிடிச்சிக்கிறேன்.. நீங்க நடங்க இப்போ.. " என்று அவனுக்கு துணையாக நின்று சொல்ல, அவனும் அவள் தோளில் கைட்டை போட்ட படி மெல்ல மெல்ல நடந்தான்..

இப்படியே, மேலும் ஒரு மாதம் கடக்க, அவன் நன்றாகவே தேறி இருந்தான்..
அவனது வேலைகளை அவனாகவே செய்ய தொடங்கி விட்டான்..

நன்றாக இல்லை என்றாலும் ஓரளவு அவனாக நடக்க தொடங்கி விட்டான்..

அதை எல்லாம் கவனித்த கவியோ, " இனி தன் உதவி அவருக்கு தேவை படாது.. இனி நாம் செல்ல வேண்டியது தான்.. " என்று முதல் நாள் இரவில் தூங்கும் போது நினைத்தவள், அதையே தன் தம்பியிடமும் சொல்லி இருந்தாள் ..

கதிரு, " நான் வந்த வேலை முடிஞ்சிருச்சு டா .. இனி பழையபடி நம்ம வீட்டுக்கு போயிரலாம்.. " என்று சொல்ல, அவனும் சரி என்று கேட்டுக் கொண்டான்..

அவனுக்கு தன் அக்காவை பார்க்க பாவமாக இருந்தது.. " அக்கா, நான் வேணும்னா மாமாகிட்ட பேசி பாக்கட்டுமா.. " என்று கேட்க,

அவளோ, " அவ்ளோ பெரிய மனுஷன் ஆகிட்டியா டா ... நீ படிக்கிறதுல மட்டும் கவனமா இரு.. வேற எதுலயும் உன் கவனத்தை திசை திருப்பாத.. சரியா.. " என்று அவன் தலை முடியை கலைத்து விட்ட படி கூறினாள்..

மறுநாள் காலையில், ரவி, அன்று மருத்துவரை சந்திக்க, அனுமதி வாங்கி இருந்தான்..

அவரை பார்த்துவிட்டு, கோவிலுக்குச் சென்று, அந்த கடவுளுக்கு நன்றி செலுத்தி விட்டு, கவியிடம் தன் மனதை பற்றி சொல்ல வேண்டும் என்று நினைத்து இருந்தான்..

காலையில் அவன் கடமைகளை முடித்து விட்டு, கீழே இறங்கி உண்பதற்காக அவன் வந்து அமர, கவி அவனுக்கு பரிமாறினாள் ..

ஏனோ அவனுக்கு மனமெல்லாம் ஒரு வித மகிழ்ச்சியா .. ஆனந்தமா .. ஏதோ ஒன்று இனம் புரியாத உணர்வு அவனை ஆட்டி படைத்தது..

அந்த சந்தோசமான மனதுடன், உண்டு முடித்து விட்டு, அவளிடம் " நான் டாக்டரை போய் பார்த்துட்டு வரேன்.. " என்று சொல்ல, அவளும் சரி என்று சின்ன தலை அசைப்புடன் அவனுக்கு விடை அளித்தாள்..

போகும் போது செல்லும் இந்த சந்தோச மன நிலை வந்த பிறகு இருக்குமா அவனுக்கு..

மருத்துவமனை சென்று டாக்டரை சந்தித்தவன், " நீங்க நல்லாவே குணமாகிடீங்க.. இனி நீங்க தராளமா ஆபீஸ் க்கு போய் உங்க வேலையை பாக்க ஆரம்பிச்சிரலாம்.. " என்று அவனிடம் சொல்ல, அவனோ " சார் ஒரு சந்தேகம்.. " என்று தயக்கமாக கேட்க, "எதுக்கு உங்களுக்கு தயக்கம்.. எதுனாலும் ஓப்பனா கேளுங்க.." என்று தைரியம் கொடுக்க,

" சார்.. பேமிலி ரிலேஷன்ஷிப் ல இருக்கலாமே.. " என்று தன் சந்தேகத்தை முன் வைத்தான்..

" அதுனால என்ன ரவி.. நீங்க தராளமா இருக்கலாம்.. அந்த ப்ரோப்லேம் எல்லாம் இந்த ரெண்டு மாசத்துல சரி ஆகி இருக்கும்.. You dont worry.. You perfectly all right... " என்று மருத்துவர் கூறிய பிறகே அவனுக்கு திருப்தியாக இருந்தது..

ஆம்!! அவனுக்கு விபத்து நிகழ்ந்த போது, சிறிய பிரச்சனை இருந்தது.. அது அன்றே கூறி இருந்தார் அவனிடம்.. அதை தான் இப்பொழுது தெளிவு படுத்திக் கொண்டான்..

கவியுடன் வாழ்க்கையை ஆரம்பிக்க, அவனுக்கு இது ஒன்று தான் நெருடலாக இருந்தது..

இனி என்ன, தன் மனதில் உள்ளதை அவளிடம் வெளிப்படுத்தி அவளுடன் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும்.. எனக்காக அவள் நிறைய கஷ்டப் பட்டு விட்டாள்.. இனி அவளை தன் உள்ளங்கையில் வைத்து அவளை தாங்கிட வேண்டும்.. என்று பலத்தரப்பட்ட எண்ணங்களுடன் இருந்தான்..

அந்த மகிழ்ச்சியான மன நிலையிலயே, அப்படியே காரை கோவிலுக்கு செலுத்தினான்..

அவனுக்கு அப்படி ஒன்றும் தெய்வ பக்தி எல்லாம் கிடையாது.. ஆனால் இந்த விபத்திற்கு பிறகு நம்பினான் முற்றும் முழுதாக..

காரை ஒரு இடத்தில் தள்ளி நிறுத்தி விட்டு, உள்ளே சென்று அந்த கடவுளுக்கு நன்றி செலுத்தி விட்டு, ஒரு முறை கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து, வெளியில் செல்லும் முன், ஒரு முறை திரும்பி பார்த்தான் இறைவனை..

ஏனோ அவனை பார்த்து, "இனி நலம் உண்டாகும் மகனே.. " என்று சொல்வது போல இருந்தது..

ஒரு சின்ன சிரிப்புடன் வெளியே வந்தவனிடத்தில், " தம்பி பூ வாங்கிங்கப்பா.. " என்று அவனிடன் தான் வைத்து இருந்த மல்லிகை பூவை காட்டிக் கூற,

அவனும் சிந்தித்தவாறு, அவளுக்காக வாங்கினான்..

பூவின் வாசனையை நுகர்ந்து பார்த்தவன், மனம் நிறைய அந்த வாசத்தை தனக்குள் நிரப்பிக் கொண்டவன், அங்கிருந்து காரை கிளப்பிக் கொண்டு வீடு நோக்கி விரைந்தான்..

காரில், பாட்டு கேட்பதற்காக மியூசிக் பிளேயரை ஆன் செய்ய, ஏனோ அவனுக்கு ஏற்ற போல எல்லாம் காதல் பாடல்களாகவே இருந்தன..

அவற்றை கேட்டுக் கொண்டு உல்லாசமாக வண்டியை ஓட்டியவன் வீட்டிற்கும் வந்து சேர்ந்தான்..

காரை பார்க் செய்து விட்டு, பூவை எடுத்துக் கொண்டு, வீட்டினுள் நுழைந்தவன் அவளை தான் தேடினான்..

அவள் இருப்பதாக தெரியவில்லை.. சமையல் அறையில் எட்டிப் பார்க்க, வேலைக்கார பெண்மணி மட்டுமே இருந்தார்..

மேலே சென்று அறையில் பார்க்க அங்கும் அவள் இல்லை..

புருவ முடிச்சுடன், வீட்டில் இருந்த அறைகளில் எல்லாம் தேட எங்கேயும் அவள் தென்படவில்லை..

" எங்க போய் இருப்பா.. " என்று மீண்டும் கீழே இறங்கி வீட்டின் பின் பக்கம் சென்று பார்க்க அங்கும் இல்லை..

" சரி எங்கும் வேலையா வெளிய போய் இருப்பா.. " என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், அவன் அறைக்கு மீண்டும் வந்து கையில் இருந்த பூவை ட்ரெஸ்ஸிங் டேபிளின் மீது வைக்க சென்றவன் கண்ணில், அங்கு இருந்த கடிதம் கண்ணில் பட்டது..

" இனி என் உதவி உங்களுக்கு தேவை படாது.. என் கடமை முடிந்த பிறகு நான் உங்களுடன் இருந்து, மீண்டும் உங்களை கஷ்ட பட வைக்க விரும்பவில்லை.. நான் செல்கிறேன்... " என்று மட்டும் எழுதி இருந்தாள்..

" கவி... எங்க டி போன, என்னை விட்டு.. " என்று குரல் தழு தழுக்க வார்த்தைகள் வெளி வந்தது...

கையில் இருந்த கடிதம் காற்றிலே அப்படியே பறந்து சென்றது..


தேன் இனிக்கும்....

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 36

அப்படியே கீழே மண்டியிட்டு அமர்ந்தவன், " எங்க டி போன.. உன்னை புரிஞ்சிகிட்டு, உன்கூட வாழலாம்னு நினைக்கும் போது ஏன்டி இப்படி.. " என்று கண் கலங்கிவாரு கூறினான்..

அவனுக்கு இப்பொழுது ஒரு விஷயம் புரிந்தது.. " உங்களுடன் இருந்து மீண்டும் உங்களை கஷ்ட படுத்த விரும்பவில்லை " என்று எழுதி இருந்ததை யோசித்து பார்த்தான்..

"அப்போ, ஆரம்பத்துல அவ என் கூட இருக்கும் போது, அவளை ஒதுக்கி வச்சி, அவ இருக்கறது பிடிக்காம, குடிச்சு குடிச்சு என் உடம்பை கெடுத்துகிட்டேன்.. அப்போ அதுக்காக தான் என்னைவிட்டு போனா.. இப்போ மறுபடியும் அதே போல பண்ணிருவேன்னு நெனைக்கிறாளோ... " என்று சரியாக யோசித்தவன்,

பின்னர், இரு கைகளால் முகத்தை அழுந்த துடைத்து விட்டு " இனி உன்னை விட மாட்டேன் கவி .. உன்கூட தான் என் வாழ்க்கை.. நீ எங்க போனாலும் உன்னை திரும்ப என்கிட்ட கூட்டிட்டு வந்துருவேன்.. " என்று மனதில் தோன்றிய தீர்க்கமான முடிவுடன் எழுந்து கீழே வந்தான்..

சமையல் அறைக்கு வந்து, அங்கு இருந்த வேலைகார பெண்மணியிடம், " கவி.. எங்க.. உங்ககிட்ட எதுவும் சொல்லிட்டு போனாளா.. " என்று கேட்டான்..

" இல்லையே தம்பி.. எதுவும் சொல்லல.. " என்று கூறினார்..

அவள் ஏற்கனவே சென்ற போது தந்தையிடம் தானே கூறிவிட்டு சென்றாள்..

இப்பொழுது அவரிடம் கேட்டால் தெரியுமே, என்று நினைத்தவன் அவருக்கு அழைப்பு விடுத்தான்..

அவரும் சில நிமிடங்களுக்கு பிறகு அழைப்பை ஏற்றவர், " சொல்லு ரவி.. டாக்டர் கிட்ட போய் இருந்தியே.. என்னப்பா சொன்னாரு.. " என்று அவனிடம் விசாரிக்க,

அவனோ, " அப்பா.. அது எல்லாம் இருக்கட்டும்.. கவி வீட்டுல இல்லை.. எங்க போனானு தெரியல.. உங்ககிட்ட எதுவும் சொல்லிட்டு போனாளா.. " என்று அவளை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்டான்..

" இல்லையே பா.. அவ எதுவும் சொல்லல.. ஏன் என்ன ஆச்சு இப்போ.. " என்று என்ன நிலவரம் என தெரிந்து கொள்ள கேட்டார்..

" அவ லெட்டர் எழுதி வச்சிட்டு போய்ட்டாப்பா.. " என்று சொல்லும் போதே அவனது குரல் கரகரத்தது..

" எங்க.. " என்று கேட்க,

" தெரியல.. " என்றான்..

" சரி அவ போனா உனக்கு என்ன.. உனக்கு தான் அவளை பிடிக்காத.. அவ இருந்தனால தான, அவளையும் உன்னையும் வெறுக்கிற அளவுக்கு குடிச்சிட்டி வந்த.. இப்போ எதுக்கு அவளை தேடுற.. அவ உனக்கு ஒரு நர்ஸ் போல இருந்து கூட மாட உதவி பண்ணா.. இப்போ உனக்கு சரி ஆகிடுச்சு.. அதுனால அவ வந்த வேலை முடிஞ்சிருச்சுனு கிளம்பி போயிருப்பா.. இதுக்கு எல்லாம் வருத்தப்படாத.. " என்று நீண்டதொரு விளக்கத்தை அவனுக்கு கொடுத்தார்..

அவனோ, " ப்பா... " என்று அழைக்க,

அவரும் " ம்ம்ம்..." என்றார்..

" எனக்கு அவ வேணும்ப்பா.. அவ தான் என் வாழ்க்கைனு உணர்ந்துட்டேன்.. நான் அப்போ பண்ணது வேணும்னா ஏதோ அவளை புரிஞ்சிக்காம முட்டாள் தனமா நடந்து இருக்கலாம்.. ஆனால் இப்போ முழு மனசா சொல்றேன்.. அவளை முழுசா புரிஞ்சிகிட்டு சொல்றேன்.. நான் அவகூட வாழனும்.. " என்று தழுதழுத்த குரலில் கூறி முடித்தான்..

மகனின் முடிவை கேட்டு பெற்றவர்க்கு அலாதி இன்பம் தான்..

என்னதான் இந்த இரண்டு மாதத்தில், மகனிடத்தில் ஓரளவு மாற்றம் தெரிந்தாலும், அவன் வாய் மொழியாக கூறிய பின்னரே உறுதி செய்ய முடியும்.. அதற்கு தான் அவனிடம் விஷயத்தை போட்டு வாங்கினார்..

" நான் என்னப்பா வேண்டாம்னா சொல்ல போறேன்.. நீயும் அந்த பொண்ணும் சந்தோசமா வாழனும்ன்னு தான இந்த வயசானவனுக்கும் ஆசை.. உன் முடிவுல எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி.. " என்றார்..

" சரி சொல்லுங்கப்பா.. நீங்க தானே எனக்கு ஆக்சிடேன்ட் ஆனப்போ அவளுக்கு தெரிய படுத்துனீங்க.. " என்று கேட்டான்..

" ஆமாம் பா.. " என்றார்..

" எப்படியும் நீங்க போன் தான் செஞ்சி இருப்பீங்க.. " என்று கேட்டதற்கு,

" ஆமாம் பா.. கவிதா நம்பர் இருக்கு.. நான் அனுப்புறேன்.. நீ போன் பண்ணி பாரு.. " என்று அவனுக்கு அவளது தொலைபேசி என்னை அனுப்பினார்..

அவனும் அந்த எண்ணிற்கு முயற்சி செய்து பார்க்க, சத்தம் அருகில் இருந்து வருவது போல கேட்டது..

திரும்பி பார்க்க யாரும் இல்லை.. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பார்க்க, சத்தம் கேட்டுக் கொண்டே தான் இருந்தது..

கீழே அவளை உடமைகள் வைத்து இருந்த அறையில் இருந்து சத்தம் வருவதை தொடர்ந்து, அங்கே சென்று பார்க்க, அங்கு இருந்த ஒரு டேபிளின் மீது அவளின் போன் இருந்தது..

அதை எடுத்து ஆப் செய்தவன், போனை பார்க்க, அந்த காலத்து பட்டன் போன்.. தன்னுடைய போனையும் அவளுடைய போனையும் வைத்து பார்த்தான்..

அவன் ஒரு லட்சத்திற்கும் மேல் செலவு செய்து அவன் போனை வாங்கினான்.. ஆனால் அவளுடையதோ 1000 ரூபாய் கூட தேறாது.. விரக்தியாக சிரித்துக் கொண்டான்.. பொதுவாகவே அவள் அணியும் உடை கூட மிகவும் சாதாரணமாக தான் உடுத்துவாள் இங்கு இருக்கும் போதும்...

தான் ஆடம்பரத்தில் இருக்கும் போது, அவளோ கஷ்டத்தில் அல்லவா இருந்து இருக்கின்றாள்.. இந்த இரண்டு மாதத்தில் இதை கூட கவனிக்கவில்லையே என்று தன்னையே நொந்து கொண்டு தலையில் அடித்துக் கொண்டான்..

ஏனோ அவனுக்கு அந்த போனை பார்க்க பார்க்க, தொண்டையில் அவனையும் மீறி ஒரு வலி.. கண்கள் கூட கலங்கியது..

அது இரண்டாக பிளந்து விட்டது போலும். அதை ரப்பர் பாண்ட் போட்டு மாட்டி வைத்து இருந்தாள்..

அதை எடுத்து அவனது பாக்கெட்டில் போட்டு வைத்தவன், ஒரு பெருமூச்சு விட்ட படி மீண்டும் தன் தந்தைக்கு அழைத்தான்..

அவள் வீட்டிலயே போனை வைத்து விட்டு சென்றதை கூறியவன், அவளை தங்கி இருக்கும் இடம் பற்றி எதுவும் தெரியமா என்று கேட்டான்..

அவரோ, " தெரியலையே ப்பா.. " என்று கையை விரித்து விட்டார்..

ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டு, ஷோபாவில் அமர்ந்தவன் நிதானமாக யோசிக்க ஆரம்பித்தான்..

அவளிடம் பழகிய நிகழ்வுகளை ஒவ்வொவொன்றாக அசை போட்ட படி யோசித்துக் கொண்டிருந்தான்..

அவளை சந்தித்தது, அவளுடன் பேசி பழகியது.. அவளை பற்றி தெரிந்து கொண்டது என, ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்தவனின் மனதில் திடீரென அவன் கண்கள் பளிச்சிட்டு முகத்தில் சிறு மலர்ச்சியுடன், வீட்டில் இருந்து காரை எடுத்துக் கொண்டு வெளியேறினான்..

அவளிடம் பேசி பழகிய போது, ஒரு சமயம் அவள் தங்கி இருந்த இடத்தை பற்றி கூறி இருந்தாள்.. அவன், அவள் வீட்டிற்கு சென்றது இல்லை என்றாலும், எங்கு உள்ளது என்று கேட்டுக் கொண்டான்.. இப்பொழுது அதுவே அவனுக்கு கை கொடுத்தது..

அந்த பகுதிக்கு விரைவாக வண்டியை செலுத்தியவன், அதை அடைந்ததும் சுற்றும் முற்றும் பார்த்தான்..

அங்கு வரிசையாக வீடுகள் இருந்தன.. எது என்றுதான் அவனுக்கு தெரியவில்லை..

எல்லாமே சாதாரண ஓட்டு வீடுதான்.. கண்டு பிடிப்பதில் அவ்வளவு சிரமம் இருக்காது.. யாரைவது கேட்டால் கூட சொல்லி விடுவர்.. அப்டித்தான் இருந்தன வீடுகள்.. நெருக்கமாக..

முன்னாள் இருந்த வீட்டின் வாசலில் ஒரு பாட்டி உட்காந்து இருக்க, அவரிடம் சென்று, " பாட்டி!!! இங்க கவிதா வீடு எங்க இருக்கு.. " என்று கேட்டான்..

பாட்டியோ, " அதோ அந்த அஞ்சாவது வீடு தான்.. காலைல தான் அக்காவும் தம்பியும் எங்கயோ போய் இருந்துட்டு இன்னைக்கு தான் வந்து இருக்காங்க .. " என்று கை காட்டியவர், பின் " யாருப்பா நீ.. கார்ல எல்லாம் வந்த இருக்க.. " என்று கேட்டார் பாட்டி..

" அது.. அவ புருஷன் பாட்டிமா.. எங்களுக்குள்ள சின்ன பிரச்னை.. கோவிச்சிகிட்டு வீட்டை விட்டு வந்துட்டா.. அதான் கூட்டிட்டு போக வந்தேன்.. " என்றான் அவன், அவள் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில்..

" அப்டியா.. அது சரிதான்.. எல்லாத்துக்கும் கோவிச்சிகிட்டு வந்தா என்ன பண்றது. அங்க இருந்தே சமாளிக்க வேண்டாமா.. நீ போ ராசா.. அவளை கூட்டிட்டு போ.. " என்று பாட்டி சொல்ல, அவனும் சிரித்தபடி அவளது வீட்டை நோக்கி நடந்தான்..


தேன் இனிக்கும்..

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 37

அவளது வீட்டை அடைந்ததும், ஏனோ உள்ளுக்குள் ஒரு படபடப்பு.. அதை கட்டுப்படுத்திக் கொண்டு, லேசாக திறந்து இருந்த கதவை தட்டினான்..

எந்த சத்தமும் உள்ளிருந்து வர வில்லை..

மீண்டும் சற்று பலத்துடன் சத்தமாக தட்ட, " யாரு அது.. " என்று கேட்டுக் கொண்டே நன்றாக கதவை திறந்து பார்க்க, அதிர்ந்து விட்டாள்..

சத்தியமாக அவள் எதிர்பார்க்கவில்லை அவன் வருவான் என்று..

அவள் அப்படியே அதிர்ந்து நின்ற படியே இருக்க, " இது சரி பட்டு வராது.. "என்று நினைத்தவன், அவளிடம் " இப்படியே வெளியவே நிக்கவா.. உள்ள கூப்பிட மாட்டியா.. " என்று கேட்க,

அவளோ, அவனது கேள்வியில் சுயத்திற்கு வந்தவள், " அது.. அது.. உள்ள வாங்க.. " என்றாள்..

உள்ளே சென்று, வீட்டை சுற்றிப் பார்க்க, தன்னுடைய அறையை விட சிரிய வீடுதான் என்று உணர்ந்தான்..

அவன் வீட்டை சுற்றிப் பார்ப்பது என்னவோ அவளுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது..

"அவன் தகுதி என்ன, தராதரம் என்ன.. அவனை தான் மணந்து இருக்கவே கூடாது.. வெற்றி அண்ணனின் பேச்சை கேட்டு தவறு இளைத்து விட்டோம். அவனாவது விரும்பிய பெண்ணுடன் மகிழ்ச்சியுடன் இருந்து இருப்பான்.. " என்று அப்போதைக்கும் தன்னை தாழ்வு மனப்பான்மையுடனே யோசித்தாள்..

அவன் வெகு நேரம் நிற்பதை உணர்ந்து வீட்டின் ஓரத்தில் இருந்த சேர்ரை எடுத்துப் போட்டாள்..

அவனும் உட்காந்து கொண்டு, அவளையே பார்த்து இருக்க, அவளோ சங்கடத்துடன் தலையை குனிந்து கொண்டு இருந்தாள் ..

" வீட்டுல நீ மட்டும் தான் இருக்கியா.. " என்று கேட்க,

அவளோ ஆம் என்னும் விதமாக தலை ஆட்டினாள்..

" சரி... ஏன் லெட்டர் எழுதி வச்சிட்டு நீ பாட்டுக்கு கிளம்பி வந்துட்ட.. "

"அது.. என்னோட கடமை முடிஞ்சிருச்சு.. அதான்.. " என்றாள் வெளிவராத குரலில் ..

" அப்போ வெறும் கடமைக்கு மட்டும் தான் நீ இருந்தியா.. அதுக்கு ஒரு நர்ஸ் போதுமே.. நீ ஏன் கூட இருக்கணும்.. எனக்கு முழுசா குணமாகுற வரைக்கும்.. " என்றவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்தாள்..

மேலும் அவனே தொடர்ந்தான்..

" நீதான் நான் வேண்டாம்னு போய்ட்டல்ல .. அப்புறம் எனக்கு என்ன ஆனால் என்ன.. எதுக்காக எனக்கு ஆக்சிடேன்ட்னு கேள்விப் பட்டதும் துடிச்சு போய் வந்த.. எதுக்காக என்கூட இருந்து என்னை பார்த்துகிட்ட.. இப்போ மறுபடியும் நீ பாட்டுக்கு கிளம்பி வந்துட்ட.. என்னடி நெனச்சிட்டு இருக்க.. சொல்லுடி.. " என்று சற்று கோவமுடன் கேட்டான்..

அவனுடைய ஆதங்கம் எல்லாம் கோவமாக வெளிப்பட்டது..

அவளோ அவன் கோவத்தில் சற்று மிரண்டு தான் போனாள்..

" இப்போ சொல்ல போறியா இல்லையாடி.. " என்று மீண்டும் கத்த,

அவளோ, " ஏன்னா, நான் உங்களை ரொம்ப ரொம்ப விரும்புறேன்.. அதுக்காக தான் உங்களை விட்டு போனேன்.. என்னால நீங்க தினம் தினம் குடிச்சு சாகுறதை பார்த்துட்டு எப்படி சும்மா இருக்க முடியும்.. அதான் கிளம்புனேன்.. உங்களுக்கு ஆக்சிடேன்ட் ஆச்சுனு மாமா சொன்னதும் என் உயிரே என்கிட்ட இல்லை.. உங்களை பார்த்த பிறகு தான் எனக்கு நிம்மதி ஆச்சு..

நான் உங்க கூட இருந்து உங்களை பார்த்துக்கணும்னு நெனச்சேன்.. என்னதான் நர்ஸ் பார்த்துகிட்டாலும், அவங்கள பொறுத்த வரைக்கும் நீங்க பத்தோட பதினொன்னு.. ஆனால் எனக்கு அப்படி இல்லை.. எனக்கு உங்களை பார்த்துகிறதை விட வேற என்ன முக்கியம்.. அதான் உங்க கூட இருந்து பார்த்துகிட்டேன்..

நீங்க சரியான பிறகு, நான் அதையே சாக்கா வச்சி தங்கிட்டா, என்ன பத்தி தப்பா நெனச்சிற கூடாதுனு தான்.. அதே சமயம், மறுபடியும் பழைய படி நீங்க குடிக்க ஆரம்பிச்சிட்டா.. அதான் என்னால யாருக்கும் எந்த வித தொந்தரவும் இருக்க கூடாதுனு தான் நான் கிளம்புனேன் அங்க இருந்து.. " என்று கண்ணீர் விட்டவாறு, அவனுக்கு புரியும் படி கூறி முடித்தாள்..

அவனும் அனைத்தையும் பொறுமையாக கேட்டவன், " இதே போல உனக்கு இன்னொரு கடமையும் இருக்கு.. " என்று புதிர் போட்டான் அவளுக்கு..

என்ன என்று அவள் புரியாமல் பார்க்க, " ஒரு நிமிஷம்.. " என்றவன் வெளியில் வந்து அவனது காரில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து வந்தான்..

அதை அவளிடம் நீட்டி "இதுல ஒரு சைன் போடு.. " என்றான்..

"ஓஹோ... டிவோர்ஸ் பேப்பரா.. " என்று அவனிடம் கேட்கும் போதே உள்ளுக்குள் ஏதோ உடைவது போல் இருந்தது..

அவளுக்கு கதறி அழ வேண்டும் போல இருந்தது.. அவன் முன்னால் வேண்டாம் என்று நினைத்தவள், நடுங்கிய கைகளுடன் பேப்பரை திறந்து பார்க்க, அதில் இருந்ததோ வேறு..

அவனை யோசனையுடன் பார்க்க, "ம்ம்.. கை எழுத்து போடு.. " என்று கூறினான்..

" இது.. இது.. மேரேஜ் ரெஜிஸ்டர் பண்ற ஃபார்ம்..." என்றாள்..

" ஆமாடி... அதான்.. நீ போடு.. " என்றான்..

" என்ன உளறுறீங்க.. டிவோர்ஸ் பேப்பர்னு தான சொன்னீங்க.. " என்று கேட்டதற்கு,

" நான் எங்கடி சொன்னேன்.. நீயா நெனச்சுகிட்ட.. " என்று பதில் கூறினான்.

ஆம்!! அவன் எதுவும் கூறவில்லை.. அவளாக தான் அதுவாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டாள்..

" ஆனால் இது எதுக்கு... "

" நீதானடி என் பொண்டாட்டி.. அப்போ உன்கிட்ட தான நான் சைன் வாங்கணும் ரெஜிஸ்டர் பண்ண.. " என்று சலிப்புடன் கூறினான்..

" என்ன சொல்றீங்க .. எனக்கு புரியல.. நமக்குள்ள உறவே இல்லனு ஆன பிறகு, இது எதுக்கு.. " என்று அவனைப் பார்த்து கேட்க,

அவனோ அவளை அழுத்தமாக பார்த்தவன், " உறவு இல்லனு யாரு சொன்னா.. நீயா நெனச்சுக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பா.. இந்த உறவு.. ஐ மீன் நம்ம உறவு தொடரும்.. முற்றும் போட நீ நினைக்கிற... ஆனால் நான் தொடரும் போட விரும்புறேன்.. " என்றான்..

அவள் யோசனையுடன் அவனை பார்க்க, அவனோ அவளது அருகில் நெருங்கி, அவளை மெதுவாக அணைத்தபடி, அவள் நெற்றியோடு நெற்றி முட்டி, " இன்னுமா புரியல.. நீ எனக்கு வேணும்னு சொல்றேன் டி.. நம்ம சேந்து வாழலாம்னு சொல்றேன்டி.. எனக்காக நீ கஷ்ட பட்டது எல்லாம் போதும்.. இனி நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கையும் ஒன்னா தான்.. " என்று அவன் பேச பேச அவளது கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது..

அவன் கன்னதால், அவளுடைய கண்ணீரை துடைத்து விட்டான்..

"ஆனா.. உங்க தகுதிக்கும் தராதரத்துக்கும், கொஞ்சம் கூட உங்களுக்கு ஏத்தவ இல்லை.. " என்றாள் கண்ணீர் விட்டபடியே...

" தகுதி, தராதரம் பாக்குற அந்த ரவி அந்த விபத்தோட காணாம போய்ட்டான்.. இப்போ உண்மையான அன்பை மட்டுமே பாக்குற ரவி.. உன்னோட சுயநலமில்லாத, என் மேல காட்டுற அன்பும் அக்கறையும் மட்டும் போதும்டி.. " என்றான் அவள் நெற்றியில் முத்தம் இட்டவாரே...

" நம்ம வீட்டுக்கு போயிரலாம் கவி.. " என்று அவள் மூக்கோடு மூக்கு உரசிய படி கூற அவளும் சிரித்துக் கொண்டே தலையை ஆட்டினாள்..

" சரி.. என் மச்சான் எங்க.. " என்று அவளிடமிருந்து விலகிய படி கேட்க,

அவனின் மச்சான் என்ற உரிமையான அழைப்பில் அகம் மகிழ்ந்தவள், " அவனை வெளிய கடைக்கு அனுப்பி இருக்கேன்.. " என்றாள்..

" சரி.. அவன் வந்ததும் கிளம்பிடலாம்.. " என்று சொல்ல,

" அது.. முதல் தடவை இங்க வந்து இருக்கீங்க.. சமைச்சி சாப்டுட்டு போகலாமே.. " என்று தயங்கிவண்ணம் கூற,

" ம்ம்ம்.. இதுனால என்ன.. சாப்டுட்டே போகலாம்.. " என்று சொல்லியவாறு ஷேரில் அமர்ந்து கொண்டு அவன் போனை எடுத்து பார்க்க ஆரம்பித்து விட்டான்..

அவளும் சமையல் வேலைகளை பார்க்க தொடங்கி விட்டாள்..

சிறிது நேரத்தில் கதிரும் " அக்கா.. " என்ற அழைப்புடன் வந்து சேர்ந்தான்..

ரவி, சற்று தள்ளி ஓரத்தில் அமர்ந்து இருந்ததால், அவனை கவனிக்கவில்லை கதிர்...

நேராக தன் தமக்கையிடம் சென்றவன், " அக்கா.. அந்த கடைக்காரர் ரொம்ப தான் க்கா பேசுறான்.. கடனுக்கு வாங்குனோம் னா, நமக்கு எல்லாம் மான மரியாதை எல்லாம் இருக்காதா.. ரொம்ப அசிங்க படுத்துறான்க்கா.. சீக்கிரமா ஒரு வேலையை பார்த்து அந்த ஆளு கடனை அடைச்சிரனும்.. " என்று பட படவென்று பேசி தள்ள, அவளோ ரவியை பார்த்துவிட்டு மிகவும் சங்கடத்துடன் இருந்தாள்..

" என்ன நான் பேசிட்டு இருக்கேன்.. நீ பின்னாடி பார்த்துட்டு இருக்க.. " என்று அவன் பின்னால் திரும்பி பார்க்க, அங்கு ரவி அமர்ந்து இருந்ததை பார்த்ததும்,

" அய்யோ.. மாமா.. " என்று அலறி விட்டான்..

கவியோ, தலையில் அடித்துக் கொண்டு, சமையல் வேலையை பார்க்க சென்று விட்டாள் ..

ரவியோ, "இங்கே வா.." என்று தலையை அசைத்து அவனை அழைக்க,

அவனும் அருகில் வந்து நின்று, " வாங்க... " என்று சொல்லியவன், அமைதியாக அவனையே பார்த்தபடி நிற்க,

அவனும் " அந்த கடைகாரனுக்கு எவ்ளோ பாக்கி தரணும்.. " என்றான்..

" அது.. அது.. " என்று இழுக்க..

" ம்ம். சொல்லு.. " என்ற ரவியிடம்,

" 500 ரூவா " என்றான்..

" வெறும் 500 ரூபாய் கூட இல்லாமல் இந்த அளவுக்கு கஷ்ட படுகிறாளே.." என்று மனதில் நினைத்தவன், அவளை உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்துவிட்டு, கதிரிடம் தன் பர்ஸ்ஸில் இருந்து இரண்டு ஐன்னூறு ரூபாய் எடுத்து நோட்டை நீட்டினான்..

அவனும் தயங்கியவாறு பின்னால் திரும்பி தன் அக்காவை பார்க்க, அவளும் " வாங்கிக்கோ.. " என்பது போல தலையை அசைத்தாள்..

அவனும் தன் மாமாவிடம் இருந்து வாங்கியவன், " தேங்க்ஸ் மாமா... ".. என்றவன், " மாமா னு கூப்பிடலாம்ல உங்களை.. " என்று கேட்க,

அவனும் சம்மதமாய் புன்னகையுடன் தலை அசைத்தான்..

" உங்க அக்காகிட்ட, வேற என்ன வாங்கணும்னு கேட்டு வாங்கிட்டு வந்துரு.. " என்று சொன்னான்..

கதிரும் தன் அக்காவிடம் கேட்டு விட்டு கடைக்குச் சென்றான்..

இப்பொழுது மனது கேளாமல் எழுந்து கவியிடம் சென்றவன், " கவி.. " என்றவன், அவள் என்னவென்று திரும்பி பார்த்த பிறகு, " உன்கிட்ட சுத்தமா பணமே இல்லையாடி.. " என்று வருத்தமாக கேட்க,

அவளும் கண் கலங்கியப்படி இல்லை என்று தலையை ஆட்டினாள்..

ஏனோ, அவனை போட்டு பாடாய் படுத்தியது..

உடனே, தாவி அவளை இறுக அணைத்துக் கொண்டான்..

அவள் கழுத்தினில் முகம் புதைத்தவனின் கண்ணில் இருந்து கண்ணீர் வெளியேறியது..

" சாரி டி.. ரொம்ப ரொம்ப சாரி.. " என்று அவள் கழுத்து வளைவில் இருந்தே அவளிடம் மன்னிப்பு கேட்டான்..

ஏனோ அவனுக்கு மனம் ஆறவே இல்லை..

அவன் வீட்டில் இருந்த பொழுது ஒரு வேலைக்காரியாக இருந்தாள்.. அவளுக்கென்று ஒரு பைசா கூட சேர்த்து வைக்க வில்லை.. கையில் இருந்த பணத்தை எல்லாம் அவள் தம்பியின் படிப்பு செலவிற்கு உபயோக படுத்தி விட்டாள்..

அங்கிருந்து கிளம்பி, ஒரு வேளையில் சேர்ந்த இரண்டு தினங்களில் அவனுக்கு அடிபட்டு விட்டது என்று அந்த வேலையை விட்டு விட்டு, அவனை கூடவே இருந்து பார்த்துக் கொண்டாள்..

இப்பொழுது இங்கு மீண்டும் வந்த பிறகு, வேறு ஒரு வேலை தேடிக் கொள்ள தான் நினைத்து இருந்தாள் ..
இப்பொழுது தான் அவளவன் வந்து விட்டானே.. இனி அவன் பார்த்துக் கொள்வான்.. என்ற நம்பிக்கையில் இருந்தாள் ..

ஆனால் ஏனோ அவன் தனக்காக அழுவது, அவளுக்கு மேலும் கண்ணீரை பெருக்கின..

அவனின் முகத்தை நிமிர்த்தி, " ஒன்னும் இல்லங்க.. நீங்க வரனாலும் நான் நாளைக்கே ஏதாவது வேலை தேடி இருப்பேன்.. அந்த கடனை அடைச்சு இருப்பேன்.. நீங்க எதுக்கு பீல் பண்றீங்க.. ஒன்னும் இல்லை.. விடுங்க.. " என்று அவனின் கண்களை துடைத்து விட்டவளை பார்த்து என்ன நினைத்தானோ, அவளையே பார்த்து இருந்தவன், சட்டென்று அவளின் இதழில் தனது இதழை பதித்தான்..

எதிர் பாராத முத்தத்தால் அவளே சற்று தடுமாறி தான் போனாள்..

பின்பு, அவனுடன் ஒன்றி அவன் முத்தத்தில் மயங்கி தான் போனாள்..

அவனுடன் கூடிய பொழுது கிடைத்த இதழ் முத்தம்.. அதற்கு பிறகு இன்று தான் அவனிடம் இருந்து பெறுகிறாள்...

அவனுடைய பார்வை தன் மேல் படாதா.. அவன் மனது மாறாதா.. என்று எத்தனை நாள் ஏங்கி இருப்பாள்..

இன்று அவளுடைய காத்திருப்பிற்கு பலன் கிடைத்து விட்டது..

நீண்ட, நெடிய, ஆழமான முத்தத்திற்கு பிறகு இருவரும் மூச்சுக்கு ஏங்க, இருவருமாக விலகி பலத்த மூச்சு வாங்கினர்..

சற்று நேரத்தில் கதிரும் வந்து விட, மாமனும் மச்சானும் பேச ஆரம்பித்து விட, அவளும் சமையல் வேலையை தொடர்ந்தாள்..

பின்பு மூவருமாக உண்டு விட்டு, அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றனர்..


தேன் இனிக்கும்..

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 38( இறுதி பாகம் )

வீட்டிற்கு வந்தவர்களை, நடராஜன் தான் எதிர்கொண்டார்.. அவருக்கு முன்கூட்டியே தகவலை சொல்லி விட்ருந்தான் ரவி..

அதனால் வந்தவர்களை, வீட்டு வேலைக் கார பெண்மணியை அழைத்து, இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து ஆழம் சுற்றி, திருஸ்ட்ரி கழித்தனர்..

ஏனோ நடராஜனுக்கு இப்பொழுது தான் மனமெல்லாம் நிம்மதியாக இருந்தது..

" நீ இப்டியே இருந்துருவியோனு நான் எவ்ளோ பயந்துட்டு இருந்தேன் தெரியுமா ரவி.. இனிமே உன்ன கவி பத்திரமா பார்த்துப்பா.. " என்று கண் கலங்க கூறினார்..

அவனும் தந்தையை அணைத்துக் கொண்டான்..

பின்னர் இருவருமாக சேர்ந்து அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்..

அவர்களின் வாழ்க்கை இனி சிறப்பாக அமையும் என்பதில் துளியும் ஐயம் இல்லை அவருக்கு... இனி அனைத்தையும் தன் மருமகள் பார்த்துக் கொள்வாள்..என்ற நம்பிக்கையுடன் போகின்ற அவர்களை புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்..

கதிர், ஏற்கனவே உபயோக படுத்திய அறையிலேயே தங்கிக் கொண்டான்..

அன்று இரவு வேலைகளை எல்லாம் முடித்து விட்டு, குளித்து விட்டு, அவனுக்கு குடிப்பதற்கு பால் எடுத்துக் கொண்டு அவனது அறைக்கு சென்றாள்..

இதுக்கு முன்னர் பல தடவை சென்று இருந்தாலும் ஏனோ உள்ளுக்குள் இன்று படபடப்பு..

அதை அடக்கி கொண்டு, அவனது அறைக் கதவை தட்ட, சத்தம் எதுவும் கேட்க வில்லை..

மெல்ல எட்டிப் பார்க்க, அவன் இருப்பது போல தெரியவில்லை.. சரி உள்ளே சென்று பார்க்கலாம் என, கதவை மெதுவாக திறந்து உள்ளே போக, பின்னால் இருந்து இரு வலிய கரம் அவளை இறுக அணைத்து இருந்தது..

அந்த ஸ்பரிசத்தை வைத்து அந்த கரங்களுக்கு சொந்தக்காரன் யார் என்பதை அறிந்து கொண்டாள்..

வந்த சிரிப்பினை இதழ்ங்களுக்குள் அடக்கிக் கொண்டாள்..

அவள் காதருகினில் வந்து " என்னடி.. பயம் இல்லையா.. " என்று அவன் இதழ்களால் அவள் காதினை உரசிக் கொண்டு கேட்க,

" ஹுஹும்.. உங்களை தவிர என் மேல யாரு இப்படி கை வைப்பாங்க.. அதுவும் உங்க மேல இருந்து வரும் வாசனை.. அது நீங்க தான்னு சொல்லாம சொல்லிருச்சு.. " என்றாள் அவனிடம் மயங்கியவாரு..

அவள் கையில் இருந்த பால் சொம்பை டேபிளின் மீது வைத்து விட்டு, அவளை தன் பக்கம் பார்த்து திருப்பி, அவளை மேல் இருந்து கீழ் வரை ஒரு முறை பார்த்தான்..

மெல்லிய புடவை அணிந்து இருந்தாள்.. தலைக்கு குளித்து முடியை விரித்து விட்டு, மல்லிகை வைத்து இருந்தாள்..

கையில் கண்ணாடி வளையல்.. கழுத்தில் அவன் கட்டிய தாலிக் கயிறு மட்டுமே.. நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்து இருந்தாள் ..

எந்த வித ஒப்பனையும் இல்லாத அழகு தேவதையாக தெரிந்தால் அவனுக்கு ..

" மேக்கப் போட்டு தன்னை அழகா காட்டிக்கிற பெண்கள் மத்தியில என் பொண்டாட்டி, எந்த வித மேக்கப்பும் இல்லாம அழகா இருக்கா.. " என்று அவளை பார்த்து ரசனையுடன் கூறினான்.

அவளோ வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டாள்..

அவளது முகத்தை நிமிர்த்தி, அவள் நெற்றியில் தன் இதழ்களை பதித்து, அப்படியே நாசி, கன்னம் என்று கீழ் இறங்கிவன், அவளது இதழில் அவன் பெருவிரலால் வருடியவன், அடுத்த கணம் அழுத்தமாக அவனது இதழை பதித்து இருந்தான்..

முத்தத்தில் மயங்கி நின்றவளை, அவனிடம் இருந்து விலக்கி, மஞ்சத்தில் சாய்ந்தவர்கள் அடுத்த அடுத்த கட்டத்திற்கு முன்னேறினார்கள்..

அவர்களின் ஆடை எப்பொழுது அவிழ்க்க பட்டது என்று கூட அறியாமல் மோகத்தில் முத்து எடுத்தனர்..

அங்கே அவர்களின் தாம்பத்தியம் இனிதாக சங்கமம் ஆகியது.. இனி அவர்களின் இல்லற வாழ்க்கையும் அழகாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.. இதே போல, மகிழ்ச்சியுடனும் நலமுடனும் என்றும் இணை பிரியாத தம்பதிகளாக இவர்களின் வாழ்க்கை பயணம் தொடரட்டும்..

*******

இங்கே நாட்கள் ஓடி இருந்த சமயத்தில், வெற்றி, மதிக்கு ஏற்பாடு செய்து இருந்த கிளினிக் செயல் பாட்டுக்கு கொண்டு வந்து இருந்தான்..

மதியும் அங்கு சென்று வந்து கொண்டிருந்தாள்..

இதற்கு முன்னர் வேலை செய்த மருத்துவமனை, சீல் வைத்து மூடப் பட்டதால் அங்கு அவளை பார்க்க வந்த கர்ப்பிணி பெண்கள் அனைவரும் அவளை பார்க்க அவளது சொந்த கிளினிக்கிற்கே வர ஆரம்பித்து இருந்தனர்..

இரண்டு தளங்கள் கொண்டதாக இருந்தது அந்த கிளினிக்.. கீழே அவளது அறை மற்றும் மேலும் மருத்துவ உபகரணங்களுக்கு என்று தனி தனி அறைகள் இருந்தன..

மேல் தளத்தில், அறுவை சிகிச்சை செய்யப்படும் அறை மற்றும் குழந்தை பிறந்த பிறகு தங்குவதற்கு என்று ஆறு அறைகள் இருந்தன..

பெரும்பாலும் மதி, சுகப்பிரசவமே கை ஆள்வாள் .. ஆனால் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் இக்கட்டான சூழ்நிலை என்றால் மட்டுமே அவள் அறுவை சிகிச்சை மேற்கொள்வாள் ..

அதனாலே கர்ப்பிணி பெண்கள் விரும்பி அவளை தேடிச் சென்றனர்..

ஊரின் மத்தியிலும் நல்ல கை ராசியான மருத்துவர் என்று பெயரும் வாங்கி இருந்தாள்..

அதே சமயம், இந்த இரண்டு மாத இடைவெளியில் குமரனுக்கும் தமிழுக்கும் திருமணம் நடந்து இருந்தது..

குமரனும் அவளுக்கு அள்ள அள்ள குறையாத காதலை காட்டினான்..

அவர்களின் வாழ்க்கையை இனிமையாய் வாழ்ந்து கொண்டிருந்தனர்.. இழந்த சந்தோசத்தை எல்லாம் மீட்டுக் கொண்டிருந்தனர்..

இப்படியே நாட்கள் அனைவர்க்கும் இன்பமயமாய் கழிய, மறுநாள் வெற்றிக்கு பிறந்தநாள்.. அதை அவனுக்கு மறக்க முடியாத நாளாக மாற்ற வேண்டும் என்று எண்ணியவள், அன்று இரவு அவனுக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்து இருந்தாள்..

வெற்றியின் நண்பர்கள், அவளின் பெற்றோர்கள் என அழைத்து இருந்தாள் ..

ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே வந்து அனைத்தையும் ஏற்பாடு செய்ய சொல்லிருந்தாள்..

அவன் தூங்கிய பிறகு, தான் வந்து கலந்து கொள்வதாக கூறி இருந்தாள் அவர்களிடம்..

அவர்களும் சரி என்று கேட்டுக் கொண்டனர்..

அன்று இரவு வந்த வெற்றியோ, சாப்பிட்டு விட்டு, மதியுடன் கூடிக் களித்து விட்டு, அசதியில் உறங்கி விட, அவளும் அவனுறங்கிய பிறகு, குளித்து விட்டு புடவை அணிந்து கொண்டு வெளியில் வந்தாள்..

மற்றவர்கள் வந்து வேலையை தொடங்கி இருந்தனர்.

ஒரு பக்கம் அலங்காரம் இன்னொரு பக்கம் டேபிள் சேர் எல்லாம் ஒதுக்கி வைத்து கொண்டிருக்க, குமரனோ செல்வத்தின் காதில் " இங்க பாரு டா கொடுமையை.. அந்த வெற்றி பையன் அவன் பொண்டாட்டி கூட ஜல்ஸா பண்ணிட்டு நல்லா தூங்கிட்டு இருக்கான்.. அவன் பொண்டாட்டி பாரு நம்மள கூப்டு வச்சி அவனுக்கு அலங்காரம் பண்ண வச்சிட்டு இருக்கா.. இந்நேரம் என் பொண்டாட்டி நான் வரலனு எனக்காக ஏங்கி காத்துகிட்டு இருப்பா.. " என்று புலம்பிக் கொண்டிருக்க,

" மச்சான் கொஞ்சம் அங்க பாரு.. " என்று அவன் கன்னத்தை பிடித்து பக்கவாட்டில் திருப்ப, தமிழ் தான் மதியிடம் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தாள்.

" இவ எப்போ டா இங்க வந்தா.. " என்று அதிர்ச்சியுடன் கேட்க,

" மச்சி உன்ன விட அவளுக்கு தான் ரொம்ப ஆர்வம் போல.. உனக்கு முன்னாடியே வந்து கற்பகம் அத்தை கிட்ட பேசிட்டு இருந்து இருப்பா போல.. " என்று செல்வம் அவன் காதில் குசு குசுவென்று கூறிக்கொண்டு இருந்தான்..

அதை கவனித்த தமிழோ, " என்ன நீங்க ரெண்டு பெரும் அப்போ இருந்து ஏதோ ரகசியமா பேசிட்டு இருக்கீங்க.. " என்று தமிழ் கேட்க,

குமரனோ, " இல்லமா.. சும்மா பேசிட்டு இருந்தோம்.. " என்று வடிவேலு பாணியில் கேவலமாய் சமாளித்தான்..

" ஏங்க.. பேசாம சீக்கிரம் வேலையை பாருங்க.. ' என்று அவனிடம் சொல்லிவிட்டு நடந்தாள் தமிழ் ..
அவனும் பூம் பூம் மாடு போல தலையாட்டினான்..

மற்ற நண்பர்கள் அவனை பார்த்து, வாயை பொத்தி சிரித்தனர்..

" ஏன் டா சிரிக்கிறீங்க.. நீஙகளும் இப்படி அனுபவிப்பீங்க.. அப்போ நான் கைக் கொட்டி சிரிப்பேன்... " என்றான் குமரன்..

பின்னர் கேலி கிண்டலுடன் வேலையை முடித்து இறுதியில் டேபிளின் மீது கேக்கை வைத்து விட்டு, வெற்றியை எழுப்ப சென்று இருந்தாள்..

அவன் அருகினில் சென்று, " மாமு.." என்று அழைக்க அவனும் லேசாக சிணுங்க, " மாமு... எந்திருங்க.. " என்று அவள் மீண்டும் சொல்ல,

" என்னடி... " என்று தலையை சொரிந்து கொண்டு அவன் எழுந்து உட்காந்து கொள்ள,

" ஒரு நிமிஷம் இங்க வாங்களேன்.. " என்று அவனின் கையை பிடித்து அழைத்து செல்ல,

" அடியேய் இருடி.. வேஷ்டியை நல்லா கட்டிட்டு வரேன்.. " என்று கட்டிவிட்டு, தூக்க கலக்கத்துடனே அவளுடன் நடந்து சென்றான்..

அங்கே முன்னாடி அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.. பேச்சு சத்தமும் கேட்டது..

இந்த நேரத்தில் என்ன இது என்று தூக்கம் முழுவதும் கலைந்து, நன்றாக பார்த்தான்..

அப்பொழுது தான் அவனது மூளையில் மணி அடித்தது..

" ஆஹா.. நமக்கு நாளைக்கு பிறந்தநாளுல .. அது தான் நம்ம பொண்டாட்டி நமக்கு சர்பிரைஸ் பண்றாளா.. " என்று நினைத்துக் கொண்டு, அவளுடன் நடக்க,

" மதிக் குட்டி.. என்ன.. பெர்த்டே செலிபரேஷனா.. " என்று அவளின் கையை விடுத்து, அவளை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டு முன் அறைக்கு வந்தான்...

" வாங்க டா... " என்று நண்பர்களை பார்த்து அழைக்க,

" ஏன் டா.. என்னமோ நீ ரெடி பண்ணி வச்சிட்டு, எங்களை வாங்கனு கூப்பிடற.. நாங்க தான் டா சொல்லணும்.. அதை.. " என்று சொன்னான் குமரன்..

" சரி சரி டா.. கோவிச்சிக்காத.. நீ ஏதோ காண்டுல இருக்குறனு மட்டும் தெரியுது.. " என்று வெற்றி சொல்ல.

" இல்லையா பின்ன.. " என்று ஏதோ சொல்ல வந்து ஆரம்பிக்க,

செல்வம் அவன் வாயை பொத்தி விட்டான்..

" அடேய்.. சும்மா இருடா.. நீ வேற.." என்று அவனை அடக்கினான்..

அங்கே சிரிப்பலையுடன் வெற்றியும், கேக்கை கட் செய்து முதலில் மதிக்கு ஊட்டியவன், பின்பு மாற்றி மாற்றி அனைவர்க்கும் ஊட்டி விட்டான்..

பின்னர், தன் அன்னை மற்றும் அத்தை மாமாவிடம் ஆசீர்வாதமும் வாங்கிக் கொண்டான்..

பின்னர் ஆளாளுக்கு அவனுக்கு பரிசுகள் வழங்கினர்..

" டேய்.. இது எல்லாம் தேவையா.." என்று வெற்றி கேட்க,

" நாளைக்கு நீ இதை விட பெருசா செய்வள, அதுக்கு தான் மச்சி... " என்று குமரன் வாயை விட,

தமிழோ அவனை முறைத்துப் பார்த்தாள்..

குமரனோ, " சும்மா டி... " என்று அவளிடம் மீண்டும் கேவலமாக சமாளித்துவிட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்..

இறுதியாக மதி, கிப்ட் பேப்பர் சுற்றப்பட்ட ஒரு சிறிய பெட்டியை அவனுக்கு பரிசு அளித்தாள்..

அவனும் யோசனையுடன் பேப்பரை அகற்றி விட்டு பார்க்க, அது ஏதோ நகை பெட்டி போல இருந்தது..

" எனக்கு எதுக்கு நகை எல்லாம் மதி.. " என்று சொல்லிக் கொண்டே திறந்து பார்க்க, அவனது கண்கள் அதிர்ச்சியில் விரிந்து விட்டன..

" மதி... " என்று வார்த்தை வராமல் தடுமாற, கண் கலங்கியவாரு அவளை பார்த்தான்..

அவளும் ஆமாம் என்பதாய் தலை அசைத்தாள்..

இதை விட வேறு என்ன சிறந்த பரிசு குடுக்க முடியும்..

"அடேய்.. என்னடா.. புருசனும் பொண்டாட்டியும் மட்டும் கண்ணால ரகசியமா பேசிக்கிறீங்க.. அப்படி என்ன தான் இருக்கு.. " என்ற செல்வம், அதை அவனிடம் இருந்து வாங்கி பார்க்க,

பார்த்தவர்கள் அனைவர்க்கும் மற்றட்ட மகிழ்ச்சி..

ஆம்!! அதில் மதியின் கர்ப்பதை உறுதி செய்த பிரகன்னன்சி கிட் தான்.. அதில் இரண்டு சிவப்பு நிற கோடுகள் தெளிவாக இருந்தன..

லட்சுமியும் கற்பகமும் மதியிடம் சென்று அவளை கொஞ்சித் தள்ளி விட்டனர்..

நண்பர்கள், வெற்றியை கேலி செய்து ஒரு வழி ஆக்கி விட்டனர்..

கூத்தும் கும்மாளுமுமாக வெற்றியின் பிறந்தநாள் கொண்டாட்டம் சிறப்பாக முடிந்தது..

அனைவரும் கிளம்பிய பிறகு, இருவரும் அவர்களின் அறைக்கு சென்றது தான் தாமதம்..

வெற்றி அவளை தூக்கி தட்டாமலைச் சுற்றினான்..

" ஏங்க.. ஏங்க.. போதும்.. தலை சுத்துது எனக்கு... " என்று சொல்லிய பிறகுதான், அவளை கீழே இறக்கி விட்டான்..

" தேனுக் குட்டி... எவ்ளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமா... " என்று அவளை இறுக அணைத்துக் கொண்டு கூறினான்..

" உன்கூட நான் சேருவேனா இல்லையானு தெரியமா எத்தனை நாள் உள்ளுக்குள்ள மருகி இருக்கேன் தெரியுமா.. இப்போ உன்னை கல்யாணமும் பண்ணிக்கிட்டு, உன்கூட வாழ்க்கையை தொடங்கி, என்னோட உயிர் உன் வயித்துல இருக்கறதை நினைக்கும் போது, இதை விட வேற என்ன வேணும் எனக்கு.. எனக்கு அப்பான்ற ஒரு அந்தஸ்தை குடுத்துட்ட.. இப்பவே நான் போனா கூட.. " என்று வார்த்தையை முடிக்க வில்லை அவன்.. அதற்குள் அவன் வாயை, அவள் இதழ்களால் அடைத்து விட்டாள்..

இருவருக்குமே மகிழ்ச்சியில், கண்ணில் இருந்து லேசாக கண்ணீர் வெளிப்பட்டது..

அவளுக்கு பிடிக்காமல் அவளை திருமணம் செய்து, அவளுக்கு பிடிக்க வைத்து ரசிக்க வைத்து, அவனுள் கலக்க வைத்து, அவனின் உயிரை சுமக்க வைத்து, அவனவளாக மாற்றி விட்டான்...


மூன்று வருடத்திற்கு பிறகு,

" ஏங்க.. என்னங்க பண்றீங்க.. நீங்க போய் பாருங்க .. அங்க எல்லாம் ஆளுங்க வந்துட்டாங்க.. நீங்க தமிழை அனுப்பி வைங்க.. " என்று சொல்ல,

" ஏண்டி.. இந்த வேலை எல்லாம் நான் பாக்க கூடாதா.. என் பொண்டாட்டிக்கு நான் பாக்குறேன்... " என்று அவளது சேலை மடிப்பை கீழே உட்காந்து கொண்டு சரியாக எடுத்து விட்டுக் கொண்டிருந்தான்..

லட்சுமி வந்து எட்டிப் பார்த்து விட்டு, " வெற்றி, உன்னை அங்க எல்லாம் தேடிட்டு இருக்காங்க.. நீ என்ன டா இங்க இருக்க.. நீ போ.. நான் பார்த்துகிறேன்.. " என்றார் லட்சுமி..

" இருங்க அத்தை, நான் முடிச்சிட்டேன்... " என்று சொல்லிவிட்டு, அவளுக்கு மடிப்பை சீராக ஒன்று போல வைத்தவன், எழுந்து அவளை மேல் இருந்து கீழ் ஒரு முறை பார்க்க, " ம்ம். இப்போதான் என் மதிக்குட்டி அம்சமா இருக்கா.. " என்று சொன்னவன், அத்தையிடம், " பசங்க என்ன பண்றாங்க அத்தை.. " என்று கேட்டதற்கு,

" அவங்க தாத்தாவை ஒரு வலி பண்ணிட்டு இருக்காங்க டா.. " என்று சொல்லிவிட்டு மதியை அழைத்துக் கொண்டு, வெளியே வந்து மேடை மீது இருந்த ஷேரில் அமர வைத்தார்..

ஆம்..!! மதிக்கு இது இரண்டாவது வளைகாப்பு..

முதல் பிரசவத்தில், இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்து இருந்தன.. இனியன் - செழியன்.

இப்பொழுது இரண்டாவது முறைக்கு இவ்ளோ ஆடம்பரமாக வைக்க வேண்டுமா, என்று அவள் மறுக்க அவனா விடுவான்..

ஆடம்பரமாக இல்லை என்றாலும், ஓரளவு ஆட்களை அழைத்து இருந்தான்..

இப்பொழுது அவளுக்கு ஒன்பதாவது மாதம் நடக்கிறது..

ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர்..

வெளியே காரில் இருந்து இறங்கிய கவி, ஐந்து மாத கற்பமாக இருந்தாள்..
அவளை பின் தொடர்ந்து அவளது இரண்டரை வயது மகள் மகிழினியும் இறங்கினாள் ..

வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு, ரவியும் இறங்கி வந்தான்.. வந்தவன், அவன் மகளை தூக்கிக் கொண்டான்..

மூவருமாக சேர்ந்து உள்ளே செல்ல, வெற்றியோ, " ரவி... என்ன இது இவ்ளோ லேட்டா வர.. " என்று கேட்டதற்கு,

"நான் என்ன பண்றது.. அம்மாவும் மகளும் லேட் பண்ணிட்டாங்க.. " என்று சொல்ல,

" டாடி... " என்று அவனது மகள் அவனை பார்த்து இழுத்துக் கொண்டு சொல்ல,

" ஐயோ.. சும்மா சொன்னேன் செல்ல குட்டி.. " என்று தன் மகளை சமாளித்தான்..

அதை பார்த்த வெற்றிக்கு சிரிப்பு வர, அவர்களை அழைத்துக் கொண்டு அங்கிருந்த ஷேரில் அமர வைத்தான்..

பின்னர் மதிக்கு வளைகாப்பு பூட்டி, விழாவும் சிறப்பாக நடந்து முடிந்து இருந்தது..

இரண்டு வாரங்கள் கழித்து,
" அம்மாஆஆஆஆ.. அம்மாஆ.." என்ற அலறல் சத்தம், அறைக்கு வெளியில் நின்று இருந்த வெற்றியின் காதை கிழித்தது..

உள்ளுக்குள் அவ்வளவு பதட்டம் இருந்தாலும் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல், திடமாக இருப்பது போல காட்டிக் கொண்டான்..

" அம்மாஆஆஆஆஆஆ.. " என்ற பலத்த சத்தத்திற்கு பிறகு குழந்தையின் அழுகுரல் கேட்டது.. அப்பொழுது தான் அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது.. கடவுளுக்கும் நன்றி சொல்லினர்..

குழந்தையை வெளியில் தூக்கி கொண்டு வந்த செவிலியர், " பெண் குழந்தை பிறந்து இருக்கு.. " என்று அவனிடம் கொடுத்தார்..

" ரோஜா பூவை கொத்தாக வைத்து இருந்தது போல இருந்தது.. குழந்தையின் நிறம்.. தன் குழந்தையை அள்ளி அணைத்தவன் மற்றவர்களுக்கும் காண்பித்தான்..

மதியை அறைக்கு மாற்றியதும், அவளை பார்க்க சென்றான் வெற்றி..

அவளும் மயக்கத்தில் இருந்து அப்பொழுது தான் கண் விழித்து இருந்தாள்..

வெற்றி, மதியின் அருகில் சென்று, அவளின் நெற்றியில் இதமாக இதழை பதித்தவன், " தேங்க்ஸ்.. தேனு மா.. " என்றான் நெகிழ்வில்..

"நீ வந்ததுக்கு அப்புறம் என்னோட வாழ்கை தேன் போல ரொம்ப தித்திப்பா மாறிடுச்சுடி .. லவ் you டி தேனுக் குட்டி..♥️♥️♥️♥️"

அவளும் அவனுடைய கைகளில் இதமாக ஒன்றினாள்..

இன்று போல என்றும் அவர்கள் வாழ்வாங்கு வாழட்டும்..


தேன் இன்று மட்டும் அல்ல, என்றும் இனிக்கும்...

***********
 
Status
Not open for further replies.
Top