ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தந்த்ரா கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 14

சமையலறையில் இருந்த உணவை வைத்து ஏதோ பெயருக்கு உண்டு கொண்டிருந்தனர் சாண்டி & கோ. இதில் பரிதாபம் என்னவென்றால் உணவு பொருட்கள் இருந்ததே இரண்டு பேர் சாப்பிடும் அளவிற்குத் தான். அதையும் 'சமைக்கிறேன்' என்ற பெயரில் தீய்த்து வைத்திருந்தாள் அந்த டாடிஸ் லிட்டில் பிரின்ஸஸ் அதிதி!

"உனக்கு சமைக்கத் தெரியலனா சொல்லிருக்கலாம் இல்ல.. எல்லாம் சமைக்க தெரியுற மாதிரி பில்டப் பண்ணி இப்படி தீச்சு வச்சிருக்க " முகத்தை அஸ்ட கோணலாக வைத்து அருந்ததி கூறினாள்.

"இந்த அதிதிக்கு சுட்டுப் போட்டாலும் சமையல் பண்ண வராது! நீ நல்லா சமைப்ப தான செல்லம்" என்று வருண் அவளிடம் வழியவும், அடுத்த நொடி அவன் தட்டிலிருந்து 'காய்ந்த கருவாடு' போலிருந்த பிரட் துண்டு அதிதியால் பறிக்கப்பட்டது.

"ஏய்.. குடுடி என் பிரட்ட" என்று வருண் அவளிடம் சண்டைக்கு நிற்க, விதுரனும்,சிவாங்கியும் தலையில் அடித்துக் கொண்டனர்.

"மூடிட்டு திங்க மாட்ட, அது என்ன இந்த கிழவிக்கு மட்டும் சமைக்க தெரியும்னு சொல்லுற.. இப்போ நான் தான் சமைச்சேன் இந்த கிழவி இல்ல.. மலைக்குரங்கே" என்று அதிதி வருணிடம் சண்டை போடவும்.. அவளின் 'கிழவி' என்ற சொல்லினால் கடுப்பான அருந்ததியும் அந்த சண்டையில் கலந்து கொள்ள, நிலைமை கைமீறியிருந்தது.

"அய்யோ.. சாண்டி எங்க?" என்று அப்போது தான் சாண்டில்யன் இங்கு இல்லாததை கவனித்த சிவாங்கி உரக்க கூற, அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போயினர்.

அவனுக்காக இருந்த தட்டும் அநாதையாக இருக்க 'இவன் எங்கே சென்றான்?' என்ற கேள்வி எல்லோர் மனதையும் அதிர வைத்திருந்து.

அனைவரும் ஒன்றாக இருந்தால் எதையும் சமாளிக்கலாம் என்ற அவர்களின் கூற்று உண்மை என்றாலும் அந்த வாக்கியத்தை உதிர்க்கும் தைரியம் வந்தது என்னவோ சாண்டி உடனிருக்கும் நம்பிக்கையின் பொருட்டு தான்.

இப்போது அவனையே காணவில்லை எனும்போது இந்த ஐவரின் நிலை? கேள்விக்குறியாக நின்றது.

"மச்சான்.. எங்கடா போயிட்ட" என்று விதுரன் சப்தமாக அழைத்த போதும், எதிர்வினை ஆற்ற சாண்டில்யன் அங்கு இல்லாமல் போனான்.

இப்போது அதிதியின் மனதை பயம் மெல்ல கவ்வியது. 'தன்னைக் காக்க தன்னவன் வருவான்' என்று எவ்வளவு நம்பிக்கையுடன் இருந்தாலோ... அந்த நம்பிக்கை இப்போது இல்லாமல் போனது.

சாண்டில்யனுக்கு ஏதேனும் நடந்து விட்டது என்று அவளது மனம் நம்ப ஆரம்பித்தது. அந்த பயத்தின் தாக்கம் அழுகையாய் மாற, உடைந்து அழ ஆரம்பித்திருந்தாள் சாண்டியின் அதி!

**********************

அங்கு அவன் நின்றிருந்த அந்தறையை இத்தோடு ஆறுமுறைக்கு மேலாக ஆராய்ந்திருப்பான் சாண்டில்யன். அவனின் சி.பி.ஐ மூளையோ இதில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாக அடித்துக்கூறியது. அவனின் அந்த உள்ளூணர்வுக்கு மதிப்பளித்தே ஏழாவது முறையாக ஆராய ஆரம்பித்திருந்தான் அவன்.

அது நேத்திரனின் சகாக்கல் வந்து போகும் மூன்று அறைகளில் ஒன்றாகும்!

மேல்தளத்தில் வருண் இருந்த அறையில் ஒன்றும், சமையல் அறையை ஒட்டியவாறே சுவற்றோடு ஒட்டிய ஒரு மறைக்கப்பட்ட அறையும், பின்பக்கத்தில் இருந்த 'ஸ்டோர் ரூம்' போன்ற அமைப்பில் இருந்த அறையின் பக்கவாட்டில் இருந்தது மற்றொன்று.

இதில் தான் இப்போது சாண்டில்யனுமே இருந்தான்.
அவனின் கணிப்புச் சரியென்றால் அந்த வீட்டில் மறைத்து வைத்திருந்த முக்கால்வாசி ஹிட்டன் கேமராக்களை சந்தேகம் வராமல் அகற்றி இருந்தனர். இதில் பெரும் பங்கு சிவாங்கியையே சாரும்!

இப்போது இந்த அறையிலுமே கண்டிப்பாக ஒரு கேமரா இருக்கும் என்று தெரிந்தே தான் அவனும் தேட ஆரம்பித்திருந்தான். ஆனால் அவன் தேடிய பொருள் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் தேட, சற்றும் எதிர்பாராத உறவு இவனுக்கு அங்கு காத்திருந்தது!

சுவற்றில் தடவி, தரையில் அங்குல அங்குலமாக ஆராய்ந்து, இங்கிருந்த பொருட்களை இன்ச் இன்ச்சாக அவன் சோதித்தப் போதுதான் அங்கு ஒரு ரகசிய அலமாரி இருந்ததை அவன் கண்டான்.

இத்தனையுமே இங்க நேத்திரனின் திரையில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தாலுமே, அதை கண்காணிக்கத் தான் யாருமில்லாம் போனது சாண்டில்யனின் அதிர்ஷ்டமாகவே இருந்தது!

சிவாங்கியின் கூற்றுப்படி இது ஒரு மனித விளையாட்டு! அவளின் விளக்கமும் கார்த்திக் இங்கு தான் இருக்கிறான் என்ற நினைப்புமே அவனை இன்னுமே ஊக்கப்படுத்தியது. இந்த விளையாட்டின் கடை நிலையை அறிய அவன் முன்னோர ஒரு வழியாகவே இருந்தது என்றால் அது மிகா!

அந்த அலமாரியை அவன் கண்டுக்கொண்டுவிட்டான் என்றாலுமே அதனை திறக்கும் வழியறியாது நின்றிருந்தான்.

சட்டென்று ஏதோ ஒரு மரப்பொருள் கீழே விழும் ஓசை கேட்க, காதுகளை அதில் வைத்து கேட்டவன் அடுத்த நொடி தரையில் தான் வீழ்ந்திருந்தான்.

**************************


துளசியைப் பார்க்கவென்று அவளின் வீட்டிற்குச் சென்றிருந்தாள் அமிர்தவர்ஷினி. ஆனால் அங்கு அக்கம் பக்கத்தினர் சொன்ன விசயம் அவளை நிலைக்குழைத் தான் வைத்திருந்தது.

என்ன செய்ய? எங்கு போய் கேட்க என்ற ஒன்றும் புரியாமல் தவித்து நின்றவளுக்கு, எப்படியும் பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்குத் தான் சென்றிருப்பர் என்ற நம்பிக்க எழ அங்கு விரைந்தாள்.

ஆனால் அவள் சென்று சேரும் முன்பே அந்த பச்சிளம் பிஞ்சை மருத்துவமனை நிர்வாகமே எடுத்துக்கொண்டு அதற்காக காரியத்தையுமே செய்து முடித்திருந்தனர், நேத்திரனின் சம்மதத்துடன்!

அழுது கரைந்தவளின் நிலையோ இனி எப்படி துளசியைத் தேற்ற என்ற நினைப்பிலேயே சூழல தன்னுடைய நிலையை மறந்துப் போனால் மாது.

விழுந்த அதிர்ச்சியின் பயனாலும் தீடீர் பிரசவம் ஆனதுமே துளசியின் உடல் ஏற்க மறுக்க, மிகுந்த பிரயத்தனப் பட்டுத்தான் மருத்துவர்கள் அவளின் உயிரையே காத்திருந்தனர்.

ஆனால் அவளின் உடலோ எந்த ஒரு எதிர்வினையுமே புரியாமல் ஜடம் போல் இருக்கவே, மருந்துவர்களுமே அவளை கண்ணானிப்பிலேயே தான் வைத்திருந்தனர்.

இதற்கிடையில் அவளின் கணவனே அவளைப் பாராது அவனுடைய அலுவலைப் பார்க்க சென்றுவிட்டான் என்ற செவிலியர் ஒருவர் கூற, வீறுகொண்டு இருந்தாள் அமிர்தா.

'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்பது எத்துனை உண்மை என்று அப்போது அவள் நின்றிருந்த நிலையே உரக்க கூறியது.

'என்ன மனிதன் அவன்' என்ற நினைத்தவள் அடுத்து செய்தது எல்லாம் துளசியின் வீட்டினருக்கு தகவல் கொடுத்தது தான்.

ஜோன் உடனிருந்தாலுமே அமிர்தா, நிரல்யனின் மனைவி என்ற தெரிந்த பின்னர் சற்று பின்வாங்கி இருந்தான். அதற்கான காரணம், நேத்திரனின் கட்டுப்பாட்டில் தானே நிரல்யன் இருக்கிறான்.

இந்நேரம் ஒரு காவல் அதிகாரியை காணவில்லை என்ற செய்தி நிச்சயம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும். ஆதலால் எப்படியும் தங்களது இடத்தை காவல் துறையினர் கண்டிப்பாக கண்டுகொள்வார்கள், அதற்குள்ளாக நாமே ஏன் வழிய சென்று தலையை இவளிடம் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணித்தில் அனைத்தையுமே தூர நின்றே கவனித்துக்கொண்டிருந்தான் ஜோன்.

இதற்குள்ளாக துளசியின் நிலை தான் மோசமானது. அவளின் நினைவு தப்பி கோமாவிற்கே சென்று விட்டாள் அதிர்ச்சியினாலும் தலையில் அடிபட்ட காரணத்தினாலும்!

தோழியின் நிலையறிந்து உறைந்து தான் நின்றிருந்தாள் அமிர்தா. சின்னச் சின்ன குழந்தைகள் இரண்டிருக்க, இனி அவர்களின் நிலை? இதுவே இவளின் மனதை அப்போது போட்டு ஏகத்திற்கும் அழுத்த, அந்த அழுத்தம் தாங்காது அங்கிருந்த நாற்காலியில் தலையைப் பிடித்தவாறு அமர்ந்துவிட்டாள் அவள்.

அந்நேரம் ஏதோ ஒரு குறுகுறுப்புத் தோன்ற சட்டென்று நிமிர்ந்து பார்த்த அமிர்தா அதிர்ந்து தான் போனாள். காரணம், அவளையே வைத்த கண் எடுக்காது பார்த்திருந்தார் அவளின் தகப்பனார்.

அங்கு அவரை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை! அவர் எவ்வளவு பெரிய மருத்துவர் என்றாலுமே இதுப்போல ஒரு சாதாரண மருத்துவமனைக்கு வரவே மாட்டார் திரு. மதுசூதனன், அமிர்தா மற்றும் சாண்டியின் தகப்பனார்.

மிகச்சிறந்த இதய நிபுணரான அவருக்கு, எப்போதுமே ஒரு பகட்டும் கவுரவமும் இருந்து கொண்டே தான் இருக்கும். அது அவரின் ரத்தத்தில் கலந்த மற்றும் கலக்கப்பட்ட ஒன்று!

அதன் தொட்டே மகளது காதலாகட்டும் திருமணமாகட்டும் அவரால் ஏற்றுக்கொள்ளபடாத ஒன்று!

அவரின் இந்த பகட்டும் வரட்டு பிடிவாதமுமே தெரிந்த ஒன்றாகவே இருந்த காரணத்தினால் தான் அமிர்தவர்ஷினியும் சாண்டில்யனுமே மிகுந்த சமூகப் பொறுப்புடனும் மனித நேயத்துடனுமே வளர்க்கப்பட்டனர் திருமதி. வசந்தி மதுசூதனனால்!

என்ன இரத்தத்தில் ஊறிய ஒன்றாக இருந்தாலும் தன் இரத்தத்தால் உருவான பிள்ளையை நெடு நாட்களுக்குப் பின் கண்டால் எந்த தகப்பனால் பார்க்காமல் இருக்க முடியும்?

அதுவும் தந்தையின் வழியே தானும் ஒரு இதய நிபுணராக இருக்கும் அவளின் ஆசை செல்ல மகளை பார்த்தவுடனே அவரின் அந்த கர்வமும் சரிந்தது அங்கு.

அமிர்தாவின் ஓய்ந்த தோற்றமே அவரை உலுக்கியிருக்க, என்ன மனிதன் அவன் என்று மருமகனையும் வசைபாடாமல் இருக்கவில்லை அவரின் மனது‌.

"ப்பா.." என்றவளின் குரல் கலங்கி ஒலித்தாலுமே, மதுசூதனனுக்கு அந்த பத்து மாத குழந்தையாக இருந்த அமிர்தா எப்படி அழைத்தாளோ, அதே மாதிரியே தான் தோன்றியது இருபத்தி ஆறு வருடங்களுக்கு பின்புமே!

கைகளை அந்த இரும்பு நாற்காலியில் ஊன்றியவள், புடவை முந்தானையை பிடித்தவாறே தந்தையை நோக்கி ஓடியவளை ஆதுரமாய் தான் அணைத்துக்கொண்டார் அந்த தந்தையானவர்.

ஆனால் அந்த அணைப்பு நீண்டது என்னவோ சொற்ப நிமிடங்களே. பெற்ற மகளை பார்த்தவரின் மனது நிறைந்திருந்தாலுமே அதனை அவள் மதிக்கவில்லை என்ற நினைப்புடனேயே அவளை உதறியும் சென்றிருந்தார் அவர்.

ஆம், அமிர்தாவின் கதறல் இப்போது அவரை கலங்கவிடவில்லை. அதன் பொருட்டே அவளை உதறி சென்றிருந்தார் அந்த பாசக்கார தந்தையானவர்.

அத்தனையும் தாங்கிக்கொண்டு அழுதவாறு நின்றிருந்தவளின் செவிகளை தீண்டியது அந்த செய்தி!

அதாவது, நிரல்யனின் வாகனம் காட்டுப் பகுதியில் வெடித்துச் சிதறியதாகவும், அவனுடன் சேர்த்து உடன் சென்ற காவலருமே சிதைந்துவிட்டனர் என்ற செய்தி உண்மையில் அமிர்தாவைத் தான் சிதைத்திருந்தது!

*********************
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
கண்கள் கலங்க, காதில் 'ங்கோய்' என்ற சப்தம் கேட்க தலையை இரு கைகளாலும் தாங்கியவாறே அந்த அறையின் தரையில் அமர்ந்திருந்தான் சாண்டி!

சற்று முன்பு கேட்ட சப்தத்தை வைத்து, தனது காதை போக்கிவிட்டோமே என்ற ஆதங்கம் அவன் மனதில் வியாபிக்காமல் இல்லை.

அவன் முன்பு தனது ஆறடி உயரத்திற்கு, கசங்கிய சட்டையுடன் மேல் மூச்சு வாங்க நின்றிருந்தான் நிரல்யன்.

சொட்ட வியர்வையில் நனைந்து, மூச்சுக் கூட விடமுடியாமல் அந்த இருட்டு அறையில் கட்டி வைக்கப்பட்டிருந்தான் நிரல்யன், நேத்திரனின் ஆட்களால்.

அவன் அந்த வீட்டுக் கதவை தொட்ட நொடி தூக்கிய எறியப்பட, விழுந்த வேகத்தில் அவனின் இடது கைவேற நன்கு அடிவாங்கியிருந்தது. இது போதாது என்று அவனை மயங்க வைத்திருந்தனர் நேத்திரனின் சகாக்கள்.

பின்பு, நேத்திரனின் ஆலோசனையின் பெயரில் இந்த அறையில் அவனை அடைத்தும் இருந்தனர், பின் நாட்களில் இவனால் ஏதாவது ஒரு உபயோகம் ஏற்படும் என்று.

ஆனால் எந்தவித காற்றோட்டமுமே இல்லாத அந்த அறை, அவனின் சுவாசத்தை நிறுத்தும் பணியை செய்ய, மயக்கம் தெளிந்தவனின் மூளையிலுமே இதே தோன்றியது.

சிக்கலில் இருக்கும் போது யாரின் உதவியை எதிர்பார்க்க? தன் கையே தனக்கு உதவி என்ற நினைத்தவனின் இடது கை வேற அதுற்கு சதி செய்ய, புத்தி சாதுர்யத்தால் கட்டை அவிழ்ந்து, அவன் அமர்ந்திருந்த மர நாற்காலியாலே அந்த கதவை உடைத்திருந்தான் நிரல்யன்.

ஆனால் இதில் பரிதாபம் என்னவென்றால், அந்த கதவின் மறுமுனையில் சாண்டில்யன் அவனது காதை வைத்திருப்பான் என்று நிரல்யன் என்ன கனவா கண்டிருப்பான்? அவன் ஓங்கி நாற்காலியை கதவில் அடிக்க, அந்த பக்கம் காதை வைத்திருந்தவனின் ஜவ்வு கிழியாமல் இருந்தது என்னவோ, வசந்தியோ (சாண்டியின் அன்னை) இல்லை அதிதி செய்த புண்ணியமாகத் தான் இருக்க வேண்டும்!

"டேய்.. எழுந்திர முதல்ல ஏதோ தலையே வெடிச்ச மாதிரி தான் உட்கார்ந்திருக்க" என்ற நிரல்யனை முடிந்த மட்டும் முறைத்தவாறே எழுந்து நின்றான் சாண்டி.

முறைப்பும் விரைப்புமாகவே நின்றிருந்தவனை பார்த்த நிரல்யனோ, 'இந்த நிலைமையிலும் இவனோட' என்று பல்லைத் தான் கடிக்க முடிந்தது அவனால்‌.

"இங்க வந்து எப்படி மாட்டின நீ? உங்க அக்கா போன் பண்ணாலும் எடுக்கலையாமா? இங்க வந்து மாட்டின பின் தான் என் நினைப்பு வந்து கால் பண்ணியோ" என்ற நக்கலாகவே நிரல் கேட்க, அப்போதும் அவன் அதற்கு எதிர்வினை புரியவே இல்லை.

"ம்ப்ச்.. இப்போ என்ன தான்டா உன் பிரச்சன? எங்க இருக்கோம்னே தெரியாம வந்து மாட்டி இருக்க, நீயும் இப்படி பண்ண? வாய் திறந்து பேசேன்டா" என்ற நிரல் கத்தவும் வெளியே அவர்கள் இருந்த அறையை வருண் கண்டுபிடிக்கவும் சரியாக இருந்தது.


அந்த கதவை வேகம் கொண்டு வருண் திறந்து வர, அங்கு சாண்டியுடன் நிரல்யனையும் பார்த்தவன் அதிர்ந்தாலும் சாண்டியை ஓடிவந்து அணைத்துக்கொண்டான் கதறி அழுதவாறு!

அவர்களையே பார்த்திருந்த நிரல்யன் உள்ளூணர்வு உந்த திரும்பிப் பார்க்க அங்கு அருந்ததியை அவன் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை.

பேச்சற்று இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்திருக்க, முதலில் சுயம் வந்தது என்னவோ அருந்ததிக்கே.

"நிரு.." என்ற கூவலுடன் அண்ணனவனை இறுக்கி அணைத்திருந்தாள் அருந்ததி.

"மை பேபி" என்றவனின் கண்களிலுமே கண்ணீர் வழிய, அவன் தோளில் முகத்தை வைத்தவாறே வெடித்து அழுதாள் அருந்ததி.

கிட்டத்தட்ட ஒரு மாத காலம்! பெற்றவர்கள் இல்லாமல் உடன்பிறந்தவன் இல்லாமல் பாசம் காட்டும் அண்ணியவளும் இல்லாமல் என்று பல இன்னல்களைக் கடந்து, கடினப்பட்டு அவள் கழித்த நீண்ட நெடிய ஒரு மாத காலம்.

அண்ணனைக் கண்டவுடன் தான் தன் உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்தியிருந்தாள் அவள்.

"நிரு.. நிரு.. என்னை என்னை இங்க இருந்து கூட்டிட்டு போயிடு நிரு.. எனக்கு இங்க பிடிக்கவே இல்ல நிரு.. பயமா இருக்கு நிரு.. என்னைய ரொம்ப டார்ச்சர் பண்ணாங்க நிரு.. உன்னையும் அண்ணியையும் கொன்னுடுவேன்னு சொன்னாங்க நிரு.. என்னைய கூட்டிட்டு போய்டுடா நிரு" என்றவளை பரிதாபமாகவே பார்த்திருந்தனர் அங்கிருந்தவர்கள்.

ஆசையாய் பாசமாய் அன்பாய் பார்த்து பார்த்து வளர்த்த அவனின் தங்கையின் நிலையை நினைத்து கடுங்கோபம் நிரல்யனுக்கு வந்தாலும் அவளின் கதறல்களை அவனாலும் சகிக்க முடியவில்லை.

"என் பேபீ.. என் பேபி என்கிட்ட வந்துட்டேல.. அண்ணா பார்த்துப்பேன் சரியா.. இட்ஸ் ஓகே.. உன் நிரு உன் கூடவே தான் இருக்கேன்.." என்றவனுக்கும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

'தங்கை இறந்துவிட்டாள்' என்ற கூற்றை அவன் செவி ஏற்றுக்கொண்டாலுமே, மனதின் ஒரு ஓரத்தில் அது பொய்யாக இருக்க வேண்டும் என்ற நினைத்தவனே. இந்த வலியையும் அனுபவித்தவன் தானே.

இப்போ அவன் எதிரே, அவனை கட்டிக்கொண்டு விசும்புகிறவளை பார்க்கையில் என்ன தான் எதிர்வினை புரிய முடியும், அழுகையைத் தவிர!

"மச்சான்.. மச்சான்.." என்று வருணுமே சாண்டியை அணைத்துக்கொண்டு பிதற்ற, ஒன்றும் புரியாமல் அவனை விலக்கியவனை ஓடிவந்து அணைத்திருந்தாள் அதிதி.

"ஏய்.. என்னடீ" என்றவன் அவளை விலக்க பார்க்க, அவனை இன்னுமே அணைத்துக்கொண்டாள் அவனின் அதிதி.

நிமிந்து பார்த்த போது தான் தெரிந்தது விதுரன், வருண் ஏன் சிவாங்கியுமே கலங்கியிருக்கிறாள் என்று.

"சாரு.." என்று தன் முகத்தை சாண்டியின் நெஞ்சில் பதிந்திருந்தவளின் அழுகையின் அளவானது கூடியதே தவிர குறைந்தபாடு இல்லை.

"மச்சான் என்னடா?" என்று விதுரனை பார்க்க, அவனோ வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே, "உன்னைக் காணோம்னு தேடுனோம்டா சாண்டி. எங்க நீயும் காணாம போய்டியோனு நினைச்சு ஒரு ஒரு ரூம்மா பார்த்துவிட்டு வந்தோமா அப்போ.. அப்போ.. மேல வருண் இருந்த ரூம்ல உன்னோட ஒரு கை ரத்தக் கறையோட இருந்துதுடா மச்சா..ன்" என்றவன் அப்போது பார்த்த மாதிரியே கதறிவிட்டான்.

"உனக்கு.. நா.. நா போட்டு விட்ட ரிங்.. வருண் பிரசன்ட் பண்ண வாச் கூட இருந்தது சாரு.." என்றவள் அவனின் சட்டையை கைகளில் இறுக்கியவாறே, "செத்துட்டேன் சாரு" என்றாள் மேலும் அழுதவாறு.

ஒரு அளவிற்கு சாண்டில்யன் யூகித்துவிட்டிருந்தான். இதுவுமே இந்த விளையாட்டின் இன்னும் ஒரு படிநிலை என்று. ஆனால் இது எதுவுமே நிரல்யனுக்குத் தெரியாது அல்லவா.

இவர்களையே புரியாமல் பார்த்திருந்தவனுக்கு மெல்ல கூற ஆரம்பித்தாள் அருந்ததி அங்கு என்னதான் நடக்கிறது என்று.

'ஹியூமன் கேமிங்' என்றவனின் இதழ்கள் முணுமுணுக்க, இந்த இடம் முழுவதுமே பூகம்பம் வந்து போல் ஆட்டம் கண்டது!

இதற்கு நடுவே ஒரு பெரும் சப்தத்துடன் வெளியே நின்றிருந்த நிரல்யனின் காவல் வாகனமானது வெடித்து சிதற, அந்த சப்தமே அவர்களை நிலைகுலைய வைத்திருந்தது.

**********
**********

'நோ எரர்' என்று வந்தவுடனேயே நேத்ரன் “சக்சஸ்” என்ற கூவல் அகிலனையும் கார்த்திக்கையும் அதிர வைத்திருக்க, உறைந்து தான் நின்றிருந்தனர் இருவரும்.

ஆனால் இனி விட்டால் நிலைமை கை மீறிவிடும் என்று நினைத்த கார்த்திக்கோ, விரைந்து செயல்பட ஆரம்பித்திருந்தான்.

எங்கிருந்து ஆரம்பிக்க என்ற சிறு தடுமாற்றம் வந்தாலுமே அவனை தூண்டியது என்னவோ அந்த காஃபியின் மனமே!

ஆம் குழம்பியே தான். அவன் நேத்திரனிடம் 'ஒரு காஃபி சாப்பிட்டு வரேன்' என்றே சொல்லி வெளியேறி இருக்க, இப்போது அவனுக்கு அதே காஃபி தான் கைக்கொடுக்க போகிறது.

அகிலனை அழைத்துக்கொண்டு வேகமாக அந்த தளத்தின் கடைக்கோடியில் இருந்த மினி சிச்சன் போன்ற அறைக்குள் விரைந்தவனை வரவேற்றது அவன் தேடி வந்த பொருள்.

ஒரு வெள்ளை நிற பொடியை ஒரு கண்ணாடி குடுவையில் அடைத்து வைத்திருந்தனர். அகிலன் அதனை புரியாமல் பார்க்க, அவனை கண்களால் ஒரு அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தவன் நேத்ரனுக்கான காஃபியை கலக்க ஆரம்பித்திருந்தான் விக்னேஷ் கார்த்திக்.

ஏற்கனவே மன உளைச்சலுடன் சேர்ந்து, தனது மகவை இழந்து, மனைவியின் நிலையும் இப்போது வரை அறியாமல் மனது தள்ளாடி நிற்க, அவனின் கை பிசகல் வலி வேறு அவனின் கவலைக்கு சற்றும் குறையாமல் இரு மடங்காகவே இருந்தது.

வலியின் தாக்கம் உடலில் ஏதோ ஒரு மாற்றத்தை செய்ய ஆரம்பிக்க, முயன்று கட்டுப்படுத்தியவனின் உடல் தள்ளாட ஆரம்பித்திருந்தது மயக்கத்தால்.

இன்னும் பத்தே நிமிடத்தில் அடுத்த பகுதி ஆட்களை பரிசோதனையில் ஈடுபடுத்த அவன் முனைந்திருக்க, இந்த உடல் சோர்வு அவனை பின்னடைய வைத்திருந்தது.

உடலில் சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளதை கவனித்தவன் உடனடியாக எதையாவது உட்கொள்ள முனையும் போதுதான் கையில் அவனுக்காக காஃபியுடன் வந்தான் கார்த்திக்!

அவனை ஒரு நன்றியுணர்வோடு பார்த்த நேத்ரனுக்கு தெரியவில்லை அவன் எந்த உணர்வோடு அதனைக் கொடுத்தான் என்று.

அவன் இருந்த அவசரத்தில் அதன் சுவையைக்கூட உணராது வேகமாக பருகிவிட,

"என்ன? காஃபி திக்கா இருக்கு" என்று மட்டும் கேட்டவன் திரும்பி திரையைப் பார்க்கலானான்.

ஆனால் கார்த்திக் எதிர்பார்த்ததைவிட அந்த பொடி நேத்ரனின் உடலில் மெல்லமாகவே வேலை செய்ய ஆரம்பித்திருந்தது தான் விதியின் சதி!

அகிலனோ அங்கு கேமராக்கல் பொருத்தப்பட்ட அறையினுள் கார்த்திக்கின் காடை பயன்படுத்தி தன்னால் முடிந்த அளவிற்கு ஏதாவது செய்ய முடியுமா? என்று பார்க்க, சரியாக மாதங்கிக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு வந்த டேவிட் உள்ளே நுழைந்திருந்தான்.

வந்தவன் அகிலனை தாக்கும் முன்பாகவே நிலைக்குழைந்து கீழே விழுந்திருந்தான் விதுரன் தீயனைப்பானை வைத்து அடித்த அடியில்!

அவனையே வியந்துப் போய் பார்த்திருந்த அகிலனிடம் விரைந்திருந்தனர் வருண், அருந்ததி மற்றும் அதிதி.

அங்கு இன்னும் ஒரு நிமிடமே பாக்கியிருக்க, நேத்ரனின் முகத்தில் ஒரு வெற்றி களிப்பு.

அவன் முகத்தில் பூத்திருந்த புன்னகை மெல்ல மெல்ல மறைந்து அவனின் கண்கள் மேல் நோக்கி சொருக ஆரம்பிக்க, நிலை தடுமாறி அங்கிருந்த ரோலிங் ச்சேரிலேயே விழுந்திருந்தான் போதையின் தாக்கத்தால்.

அதுவரைக்கும் பிடித்து வைத்திருந்த மூச்சை வேகமாக வெளிய விட்ட கார்த்திக், அந்த மொத்த புரோகிராமையுமே டெலிட் செய்திருந்தான் பாக்கி இருக்கும் பத்து நொடியில்.

ஆனால் அது அவ்வளவு சுலபமாக முடியாது என்று அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

நேத்ரன் சரியும் முன்பவே அங்கு வந்துவிட்ட சாண்டி, கார்த்திக்கின் தோளைத் தொட, அவனோ தன் நண்பனை உணர்ந்தார் போல் ஒரு விரிந்த சிரிப்பை உதிர்த்திருந்தான்!

சரியாக இந்த புரோகிராம் ரீ-ஸ்டார்ட் ஆகவே, இந்த முறை இதற்கான 'கேன்சல்' பட்டன் கூட இல்லாம் ஒரு பாஸ்வேர்டைத் தான் கேட்டது.

எல்லாம் முடிந்தது என்று அவர்கள் நினைத்திருக்க, அது திரும்ப பூதாகரமாக வெளிவந்திருக்கவே ஸ்தம்பித்து தான் நின்றுவிட்டனர் நண்பர்கள் இருவரும்.

முடிந்த அளவிற்கு அந்த பாஸ்வேர்டை கண்டுபிடிக்க அவர்கள் முயல, துளசியின் பெயர் தொடங்கி நேத்ரனின் மகன் பெயர் வரை முயன்று ஒன்றுமே சரியாகவே இல்லை.

நேரமோ இன்னும் 30 விநாடிகளே என்று வந்து நிற்க, இறுதியாக நேத்ரனைப் பார்த்த சாண்டி அவன் கைகளில் இருந்த குழம்பிக் கப்பை பார்த்தவுடன் ஏதோ தோன்ற, 'procaffeinator' என்ற வார்த்தையை போட சரியாக அந்த புரோகிரமுமே தடைபட்டிருந்தது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த வார்த்தை அந்த நொடியில் ஏதோ ஒரு உந்துதலின் பெயரிலேயே அவன் பயன்படுத்தியிருக்க, அதுவே சரியாக அமைந்தும் விட சாண்டில்யனைக் காட்டிலும் கார்த்திக்கு தான் இது மிகுந்த அதிர்வு!

"எப்படிடா" என்று அவன் சாண்டியைப் பார்க்க, "ஏதோ தோனுச்சு" என்றான் தோள்களைக் குலுக்கியவாறே.

"சரி இவ எப்படி இப்படி மயக்கம்?" என்று சாண்டி கார்த்திக்கை கேள்வியாய் பார்க்க, அவர்களின் பின்னே நின்றிருந்த நிரல்யன்,

"கசகசா!" என்றான் இறுக்கமான முகத்துடன்.

******

கசகசா - அளவுக்கு அதிகமாக உட்கொள்ளம் போது அது உடலுக்கு ஒரு போதையைத் தரும். பல நாடுகளில் இதை ஒரு போதை பொருளாகவே கருதி தடையும் செய்துள்ளனர்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 15

"அந்த சாம்பார் பாத்திரத்தை கொஞ்சம் இங்க தள்ளுடா விதுரா" என்று வருண் அந்த இடத்தை தன் ஆளுகைக்கு உட்படுத்திக்கொண்டிருந்தான்.

பதிலுக்கு முறைத்த விதுரனை பார்த்து "ஏன்டா சாம்பார் தானே கேட்டேன் ஏதோ உன் சொத்தைக் கேட்டாப் போல மூக்குல புகை விடுற டார்லிங் மாமாக்கு சாம்பார் பாத்திரத்தை தாடா" என்று சைக்கிள் கேப்பில் அருந்ததியிடம் தன் காதல் பயிரை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டவனிற்கு அருகில் காக்கி சட்டையில் வந்தமர்ந்தான் நிரல்யன்.. அவனைக் கண்டதும் கொதிக்கும் பாலில் நீர் தெளித்ததை போல் அடங்கினான் வருண்..

கடந்த ஒரு வாரமாக நண்பர்கள் பட்டாளம் நிரல்யன் வீட்டில் தான் தங்கியிருந்தனர்.. நேத்ரனின் கைபொம்மையாய் மாறி இருந்த அடியாட்கள் அனைவரும் இப்பொழுது அரசாங்க விருந்தினர் ஆகி சிறைச்சாலையில் இருக்கின்றார்கள்.

நேத்ரன் அன்று மயங்கிய வேளையை பயன்படுத்தி சாண்டி மற்றும் கார்த்திக் கூட்டணி அந்த பங்களாவில் சிறைசெய்திருந்த அனைவரையும் வெளியேற்றினர்.

நிரல்யனின் காலில் அடிபட்டிருந்தமையால் அவனை ஓய்வாக இருத்திவிட்டு மற்றவர்களை காப்பாற்றியவர்களுக்கு அந்த பங்களாவில் பல அதிர்ச்சி வைத்தியங்களும் இருந்தன.

காணாமல் போன அதிதியின் அப்பாவின் கம்பெனியில் வேலை பார்த்த ஆட்களை வைத்து பங்களாவின் அடித்தளத்தில் தங்களை மறந்த நிலையில் சில போதைப் பொருட்களை பொதி செய்யும் பணியில் ஈடுபடுத்தபட்டிருந்தனர்.
இந்த இடத்தை கார்த்திக்கூட அறிந்திருக்கவில்லை.

நிலைமை வேறு பாதைக்கு செல்வதைக் கண்ட சாண்டி கார்த்திக்கை அங்கிருக்குமாறு விட்டு வெளியே வந்து நிரல்யனிடம் வந்து தாங்கள் கீழே கண்ட நிலைமையை விவரித்தவன்.. உடனடியாக மீடியா மற்றும் போலீஸிற்கும் தன்னிடமிருந்த ரகசிய தகவல் பரிமாறும் கருவி மூலம் தகவலை பரிமாறியவனை நிரல்யனைத் தவிர்த்து அனைவரும் வியந்து பார்த்தனர்.

"அட நாசமா போறவனே என்னை கொன்று போட்டானுக.. நம்ப ப்ரண்ட்ஸ் எல்லாத்தையும் வைச்சு செய்தான்.அப்போ எல்லாம் இந்த போனை எங்கடா வைச்சிருந்த?? ப்ரண்டை காப்பாத்த கூட நீ அதை எடுக்கலயே பாவிப்பயலே" என கதறியவனைப் பார்த்து நிரல்யனும் சாண்டியும் மர்ம புன்னகை வீசியவாறு "கொஞ்சம் இரு வேலை முடிய சொல்றேன்" என தங்கள் வேலையை செய்து முடித்து விட்டு வந்தமரவும்… கீழே இருக்கும் கார்த்திக் சத்தமிடவும் சரியாய் இருந்தது. "இப்போ தானேடா எல்லாம் முடிந்து நிம்மதியா மூச்சு விட்டோம் மறுபடியுமா??" என வருணின் புலம்பலைக் கேட்டவாறு அனைவரும் கீழ்த்தளத்தை நோக்கி சென்றனர்.

கார்த்திக் தலையில் அடிபட்ட காயத்துடன் ஒரு பெண்ணின் கையைப்பிடித்து தன்னை மீண்டும் தாக்காமல் இருக்க போராடிக் கொண்டிருந்தான்.

விதுரனும் சாண்டியும் பாய்ந்து சென்று அவனையும் அப் பெண்ணையும் பிரித்து விட்டவர்கள் அந்த பெண்ணின் முகத்தை கண்டு குழப்பத்திற்கு உட்பட்டனர்.

சற்றுத் தெளிந்த வருண் "அடேய் இங்க ஒருத்தர் போல இன்னொருத்தரையும் உருவாக்கி விட்டிருக்காங்க பாருங்கடா நம்ம மாதங்கி போல ஒரு குளோனிங் இருக்கு.. நம்மளை போலவும் யாரும் இருப்பாங்க தேடிப்பாருங்கடா " என்று பானையில் இட்ட நண்டாய் படபடத்தவனை நிரல்யனின் பார்வை அடக்கியது.

. தன் நண்பர்களை கண்ட மாதங்கி கார்த்திக்கை விட்டு விலகி அவர்களை பாய்ந்து கண்ணீர் விட்டவளை விலக்கி விட்டு "நீ யார் எங்க மாதங்கி போல இருக்கும் மாயாவியா" என்று பரபரத்த அதிதியை சாண்டி தன் தோள் வளைவில் நிறுத்தி "ஹேய் ரிலாக்ஸ் இவதான் நம்ம மாதங்கி அவங்க யாருன்னு அவங்களே சொல்லுவாங்க " என்றதும் விதுரனைத் தவிர மற்றவர்கள் மாதங்கியை அணைத்து தம் அன்பை பரிமாறிக் கொண்டனர்.

சாண்டி அவ்வாறு சொன்ன பின் சிவாங்கி தன் கடந்த காலத்தை பகிர்ந்தாள் தன் இரட்டையை கட்டி அணைத்து தன் மகிழ்ச்சியை மாதங்கி பகிர்ந்தாள்.

தன் இரட்டையின் அணைப்பிலிருந்த சிவாங்கியை விதுரன் உறுத்து விழித்தான்…


தன் முன்னால் நின்றிருந்த விதுரனை குற்றவுணர்ச்சியுடன் பார்த்தாள் சிவாங்கி, மாதங்கி என பொய் சொல்லியல்லவா அவனுடன் நெருக்கமாக பழகினாள்.. அவனை விட்டு பிரியப் போகிறோம் என்பது இதயத்தை யாரோ பிடுங்கி எடுப்பதை போல் வலிக்க.. ஏதும் பேசாமல் மௌனமாக நின்றிருந்தவளை மேலிருந்து கீழ் வரை ஆராய்ச்சி பார்வை பார்த்தவன்..

"அப்போ நீதான் சிவாங்கி.. மாதங்கியோட ட்வின் சிஸ்டர்… இந்த ரெண்டு நாளா என்னைக் காதலிச்சு ஏமாத்தியிருக்க??" என்றவனின் கணீர் குரலில் குற்றவுணர்ச்சி மேலிட அவனின் கண்களை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்தாள்.

அவள் நாடியில் ஒற்றை விரலை வைத்து தன் முகத்தை பார்க்க வைத்தவன்.. அவள் கண்களில் தெரிந்த தவிப்பையும், காதலையும் கண்டவன் காற்றுப்புகாத இடைவெளியில் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்..

ஒரு நொடிக்கு முன்னால் வரை "விதுரன் தன்னை தவறாக நினைப்பான்?? அருவெறுத்துப் பார்ப்பான்" என நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு அவனின் இறுகிய அணைப்பு எதையோ உணர்த்த, சிறகில்லாமல் காற்றிலே பறந்த உணர்வு..

மெல்லிய விசும்பலுடன் தன்னை அணைக்காமல் ஏதோதோ சிந்தனைகளில் நின்றிருந்தவளின் நெற்றியில் முத்தமிட்டான்.. அவன் அணைத்ததே அதிர்ச்சி என்றால் முத்தமிட்டது பேரதிர்ச்சியாக, தன் முட்டை விழிக் கண்களை பட்டென்று திறக்க.. "விது" என்றவளின் கன்னத்தில் மென்முத்தம் ஒன்றை வைத்தவன்.. "எனக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே தெரியும்… நீ மாதங்கி இல்லைன்னு" என்றவனை பேரதிர்ச்சியில் பார்க்க..

அவனோ மெல்ல அவள் கைகளை தூக்கியவன்.. "கார்த்திக்கை மாதங்கி எவ்ளோ லவ் பண்ணான்னு எங்க குரூப் எல்லாருக்குமே தெரியும்.. நான் காதலை சொன்ன பின்னாடியும் என்னை வெறுப்பா பார்த்த கண்கள் ரெண்டு நாளா காதலோட பார்த்தவே புரிஞ்சிது… நீ வேறன்னு.. ஆனா ஏனோ மனசில உன்னை விலக்க முடியலை.. ஐ லவ் யூ சிவாங்கி" என்றவனின் இறுக்கமாக அணைத்தவளின் கண்ணீர் அவனின் ஷேர்ட்டை நனைத்திட.. அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக், மாதங்கியை அணைத்துக் கொள்ள.. மாதங்கியும் கார்த்திக்கை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்..

சிவாங்கிக்கும், மாதங்கிக்கும் ஒரே நாளில் திருமணம் வைத்துக் கொள்ளலாம் என பெரியவர்கள் முடிவெடுக்க.. விதுரனுக்கு தன்னையும் மீறி கண்களில் ஓரம் கண்ணீர் துளித்தது..

புழல் ஜெயிலில் சிறைக்குள் சிறு சிறு காயங்களுடன் படுத்திருந்த நேத்ரனின் மனமோ தன் வாழ்க்கையை பற்றியே இருந்தது.. அன்று காபியில் கலந்த பொருளால் மயக்கநிலைக்கு தள்ளப்பட்டு, கண் முழித்துப் பார்த்தவனின் எதிரில் அமர்ந்திருந்தனர் நிரல்யனும், சாண்டில்யனும்… கார்த்திக், சிவாங்கி…

அவர்கள் இருவரையும் கோபமாக முறைத்தான்… சாண்டில்யன் தான் முதலில் வாயை திறந்தான்.. "சொல்லு.. ஏன் இப்படி பண்ண??" என்றவனை கோணலாக பார்த்து சிரித்தவனின் மூக்கை உடைத்து விடும் நோக்கில் வேகமாக அவன் அருகில் செல்ல, நேத்ரனின் போன் சிணுங்கியது..

நிரல்யன் அருகிலிருந்த போனை எட்டிப் பார்க்க.. அது சர்வேதச இணைப்பு எண் என பார்த்தவுடனே புரிந்தது.. நிரல்யனும், சாண்டில்யனும் புருவம் சுருக்கி பார்த்தவர்கள்.. "இது யார் நம்பர்??" என போனை தூக்கிக் காட்ட.. "தெரியாது" என்ற நேத்ரனின் பதிலில் கடுப்பான சாணடில்யனோ, நேத்ரனின் முகத்தில் ஓங்கி குத்த, அவன் கையிலிருந்த மோதிரம் கிழித்து, மூக்கிலிருந்து ரத்தம் வர ஆரம்பித்தது.. வலித்தாலும் அதை பொருட்படுத்தாமல், அவர்கள் இருவரையும் நக்கல் புன்னகையுடன் பார்த்தான்..

"இருவராலும் அவனை கண்டுபிடிப்பது என்பது சாத்தியமில்லாத ஒரு விஷயம்" என மனதுக்குள் நினைக்க… "நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்குமாம்" என்பதைப் போல் மறுபடி வந்த போன் கால் கட் ஆவதற்குள்.. அதை அட்டென்ட் பண்ணிய சாண்டில்யன் ஸ்பீக்கரில் போட்டான்

"நேத்ரன்" என்றதும் சிறிது நேரம் அமைதியாக இருந்தது எதிர்முனை..

இருவரும் நேத்ரனை பார்க்க, "ம்ம்ம்.. சொல்லுங்க ஜி" என்றவனின் குரலை கேட்டதும் சிறிது நிம்மதி தோன்றியது எதிரே இருப்பவருக்கு..

"நான் இப்போ பாண்டிச்சேரிக்கு வந்திருக்கேன் நேத்ரன்" என்றவனின் பதிலில் மூவரின் விழிகளும் விரிந்தது…

"என்ன ஜி?? பாண்டிச்சேரிக்கா?? எப்போ??" என நேத்ரனின் கேள்விக்கு புன்னகைத்தவாறே,

"என்ன நேத்ரன் நீ… நம்மளோட கேம்ல விளையாடுன ஆட்களெல்லாம் பாண்டிச்சேரியில தான வச்சிருக்க… அவுங்களையெல்லாம் நான் ஃபாரின் கூப்பிட்டு போறதுக்காக கன்டெய்னர்ல ஏத்திட்டு இருக்கேன்.. ஐம்பது பேர் கரெக்டா இருக்காங்கள்ள" என்றவரின் கேள்விக்கு நேத்ரனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை??" பயத்தில் முகமெல்லாம் வியர்க்க ஆரம்பித்தது..

சாண்டில்யனோ தன் குரலை சற்று செருமியவாறே, "இன்னும் ஒரு மூணு பேர் என்கிட்ட இருக்காங்க ஜி.. நான் கூப்பிட்டு வந்திடுறேன்" என நேத்ரனை போல் குரல் மாத்தி பேசி போனை ஆஃப் பண்ணியவனுக்கு உச்சக்கட்ட கோபம், ஆத்திரம் தாளாமல் நேத்ரனை அடிக்க வர.. எப்பொழுதும் அடி வாங்கி கொண்டா இருப்பான் எதிரில் இருப்பவன்… அவன் வருவதற்குள் இவனும் அவன் மேல் பாய்ந்து அவன் வயிற்றில் ஓங்கி குத்தியிருந்தான்…

இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு உருள ஆரம்பிக்க.. அவர்களை தடுக்க பெரிய போராட்டமே நடந்து கொண்டிருந்தது..

"கொஞ்சம் நேரம் அமைதியா இரு சாண்டி.. நாம இன்வெஸ்டிகேசன்க்கு வந்திருக்கோம்.. இப்படி சண்டை போட வரலை" என கடுமையாக சாடிய நிரல்யனை கண்டு முறைக்க..

"அதை அவன் கிட்ட சொல்லுங்க.. என்னமோ நான் தப்பு பண்ண மாதிரி என்னை திட்டுறீங்க.. நான் என் ஸ்டையில்ல தான் இன்வெஸ்டிகேஷன் பண்றேன்" என கோபத்தில் முகத்தை திருப்பி வைத்து நின்றிருந்தவனை பார்த்து பெரூமுச்சு விட்டவாறே,

தன் எதிரில் தன் கண்களை பார்க்காமல் நின்றிருந்த நேத்ரனை ஆழ்ந்து பார்த்தவனின் கண்களில் ஒரு துளி கண்ணீர் சிந்தியது.. "அண்ணாஆஆ" என்ற குரலில் அதுவரை திடமாக இருந்த ஆண்மகனின் இதயமும் சிறிது ஆட்டம் கண்டது..

திரும்பி நின்றிருந்த சாண்டில்யன், 'அண்ணா' என்ற வார்த்தையில் சட்டென திரும்பியவன். நிரல்யன் அருகில் வந்தவன்.. "இப்போ நீங்க என்ன சொன்னீங்க.. அண்ணாவா.. இவன் உங்க அண்ணாவா??" என நம்ப முடியாமல் திரும்ப திரும்ப கேட்டவனை கண்டு கசந்த புன்னகை ஒன்றை வெளியிட்ட நிரல்யன்.. "ஆமா என்னோட அண்ணா தான்" என கத்தியவனின் குரலில் இருந்த நெகிழ்வும், பாசமும் இரும்பு இதயமாய் நின்றிருந்தவனையும் அசைத்துத் தான் பார்த்தது…

சாண்டிக்கு இப்பொழுதும் நம்ப முடியவில்லை.. அவன் கனவில் கூட நினைக்கவில்லை… நேத்ரனும், நிரல்யனும் அண்ணன் தம்பிகள் என… நிரல்யனுக்கு நேத்ரன் என எப்பொழுது கேட்டானோ?? அந்த நொடியில் இருந்து தன் அண்ணனாக இருக்கக்கூடாது.. என வேண்டிக் கொண்டு தான் இருந்தான்..

அவன் தான் குற்றவாளி என தெரிந்த பின் தன் இதயத்தில் ஏற்பட்ட வலி யாரும் அறியாத ஒன்று?? கடமையா?? பாசமா?? என இறு வேறுபட்ட உணர்வுகளில் தவித்தவனுக்கு நேத்ரனை பார்த்த நொடியில் வெளியே சொல்லவும் முடியாமல், தனக்குள்ளேயே பொத்தி வைத்தவனின் வலி அவன் மட்டுமே அறிவான்…

 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer

மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவன் நேத்ரன்.. நிரல்யன், அருந்ததி இருவருக்கும் மூத்தவன் தான் நேத்ரன்.. பலவித நுணுக்கமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி லாபம் பார்ப்பதில் வித்தகன்.. "ப்ளூவேல் கேம்" எவ்வாறு உயிரை குடிக்குமோ?? அதே போல் பல வித கேம்களும் தங்களையறியாமல் உயிரை குடிக்கும் வல்லமை பெற்றது..

அதை அறியாத சின்னஞ்சிறுவர்களும், இளைஞர்களும் தங்கள் சுற்றம் மறந்து தற்கொலை பண்ணிக் கொள்கின்றனர்..

நேத்ரன் கேம் கிரியேட்டர்.. அவன் கண்டுபிடித்த தயாரிப்புகள் பல, ஆபத்தானதும், அபாயகரமானதாகவும் இருக்கும்.. அதிலிருந்து வெளிவரும் மார்க்கம் அவனை தவிர வேறு யாருக்கும் கொடுக்க மாட்டான்..

அவனின் தொழில்நுட்பத்தை போல் அவனின் காதலும் புதுமையானதே.. முதன் முதலாக துளசியை ஒரு ஆக்சிடெண்டில் தான் சந்தித்தான்.. எப்பொழுதும் போல் அன்று தன் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தவன் பைக்கை ஸ்டார்ட் பண்ண.. அதுவோ ஸ்டார்ட் ஆகவே மாட்டேன் என அடம் பிடித்தது..

"ப்ச்ச்ச்" என ஒருவித எரிச்சலுடன் தன் வாட்சை திருப்பி பார்த்தவன்… டைம் வேற ஆகிடுச்சி" என்றவன் நேராக பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான்..

அவன் ஆபீஸிற்கு செல்ல வேண்டிய பஸ் கூட்ட நெரிசலுடன் வந்து சேர்ந்தது.. இதை விட்டால் வேறு வழியில்லை என பஸ்ஸில் அடித்து பிடித்து ஏறியவன் பஸ்ஸின் நடுவில் வந்து நின்று கொண்டான்..

அருகிலிருந்த பெண், புதிதாக சேலை கட்டியிருந்தாள் போல, ஆங்காங்கே இழுத்து விடுவதும், அவிழ்ந்து விடுமோ என பயப்பார்வையுடன் கம்பியை பிடிக்க முடியாமல் தொங்கிக் கொண்டிருந்தாள்.. அதை பார்த்தும் கேலியாக ஒரு புன்னகை சிந்தியவாறே பஸ்ஸை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்..

பஸ்ஸின் குறுக்கே நாய் ஒன்று ஓட, சட்டென டிரைவர் சடன் பிரேக் அடிக்கவும்.. முன்னால் நின்றிருந்தவளோ கம்பியை பிடிப்பதாக நினைத்து பயத்தில் பின்னால் இருந்தவனின் ஷேர்ட்டையும் பிடித்திழுக்க. அவள் கீழே விழுந்து விடுவாளோ?? என அவளை பிடித்தவனின் கரமோ அவளின் மெல்லிடையில் அழுத்தமாக பதிந்தது..

இருவருமே எதிர்பார்க்கவில்லை.. ஒரு ஆடவனின் வெம்மையான கரம் தன் இடுப்பில் பதிந்ததில் விதிர்விதிர்த்துப் போயிருந்தவள் மெல்ல தன் தலையை திருப்ப.. நேத்ரனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்..

அதிர்ந்து பேசாத பூமுகம், ஆளை உள்ளிழுக்கும் ஆழமான பார்வை என முதல் பார்வையிலேய நேத்ரனின் உள்ளத்தை திருடி சென்றவள் துளசியே...

அவன் கரத்தை எடுக்கவும், தவிப்பும், பயமும் கலந்த பார்வையில் தவித்தவளை பார்த்தவனின் இதழ்களோ மென்மையாக புன்னகைத்தது.. அவளின் காதோரம் குனிந்தவன்..

"என்னவளே
என் கரம் தீண்டிய உன் இடையை, என் இதழ்களும் விரைவில் தீண்டும்..
முதல் பார்வையில் என் இதயம் கொய்தவளே!!
உன் சங்கு கழுத்தில் நான் மூன்று முடிச்சிடும் நாள் எதுவோ??".

என்றவனின் வார்த்தையில் விதிர்விதிர்த்து திரும்பினாள் துளசி..
மெல்லிய மழைச்சாரல் வீசுவதை கூட பொருட்படுத்தாமல் பஸ்ஸை விட்டு ஓடியவளின் பின்னால் அவனும் பின்னால் செல்ல.. அவளுக்கோ பயத்தில் வேர்த்து விறுவிறுக்க ஆரம்பித்தது…

வேகமாக எட்டி நடைபோட்டவளுக்கு சேலை சதி செய்தது.. அதிகமான மழை ஊற்றிக் கொண்டிருக்க.. அவளுக்கோ வீடை எப்படியாவது அடைந்து விட வேண்டுமென வேகமாக ஓடினாள்.. வழியிலிருக்கும் குண்டும், குழியையும் கவனிக்காமல் ஓடியவள், கால் இடறி தொப்பென விழுந்ததில் முழங்கையில் சிராய்ப்புடன் பலமாக அடி..

"ஆஆஆ… அம்ம்மாஆஆ" என அலறியவளை வேகமாக செல்ல மழை நீர் வேறு கண்களில் வேறு பட்டு உறுத்த ஆரம்பித்தது.. அடிபட்ட கையின் வலி, கண்களின் உறுத்தல் என வேதனைபடுபவளை பார்த்தவனுக்கு தன்னால் தானோ என சிறு குற்றவுணர்வு தோன்ற, "ஸாரி' என்றவாறே அவளின் கண்களை ஊதி விட்டவனின் அணிந்திருந்த பெர்பிஃயூமின் நறுமணமும், அவனின் அருகாமையும் பெண்ணவளை ஏதோ செய்தது..

அவளை ஹாஸ்பிட்டல் கூப்பிட்டு செல்லலாம் என நினைத்தவன் அப்பொழூது தான் முழுமையாக பார்த்தான். பல்லவர் கால சிற்பத்தில் இருக்கும் மோகன சிற்பமாய் தன் அங்கங்களின் அழகினால் எதிரில் இருப்பவனை கட்டியிழுத்தாள்..

"தான் அணிந்திருந்த சட்டையை கழட்டி அவளின் மேல் போர்த்தி விட.. அப்பொழுது தான் அவள் தன்னையே பார்த்தாள்.. அவளின் அங்கங்களை அப்படியே புடம் போட்டு காட்டியது அவள் அணிந்திருந்த சேலை... சட்டென தன் வலித்த கைகளை கொண்டு மறைக்க முயன்றவளை பார்த்து நமட்டு சிரிப்புடன்… அவளின் காதோரம் ட்ரீம் செய்யப்பட்ட தாடி உரசியவாறே, "என்னைக்கா இருந்தாலும் உன்னை முழுசா பார்க்க போறவன் நான் தான். ஐ லவ் யூ செல்லம்மா" என கிசுகிசுப்பாக மொழிந்தவனின் குரலும், அவனின் அருகாமையும் பெண்ணவளை பித்துக் கொள்ள வைக்க… மெல்ல எழுந்தவள் தடுமாற, எங்கே விழுந்து விடுவோமா??" என்ற பயத்திலேயே அவன் சட்டையை இறுகப் பிடித்தவாறே நடக்க ஆரம்பித்தவளை இரு கைகளிலும் ஏந்தியதும், "விடுங்க.. என்னை இறக்கி விடுங்க??" என முதல் முறை வாயை திறந்து பேசியவளை இதழ்களில் சிரிப்புடன் அவள் வீட்டு வாசலில் நிறுத்தியவன். "பாய்ய்" என அவளே எதிர்பார்க்கா வண்ணம் அவளின் கன்னத்தில் முத்தமிட்டு சென்றான்..

எதிரில் இருந்த கடையில் வேறு ஒரு சட்டை வாங்கி மாட்டிக்கொண்டு இதழ்களில் மந்தகாச புன்னகையுடன் அலுவலகத்திற்கு சென்றவனுக்கு அவன் வாழ்வை மாற்றிய இரு விஷயங்கள் நடந்தேறியதும் அந்நாளிலே..

பஸ் ஸ்டாண்டில் இருந்து சிறிது தூரம் நடந்தால் தான் அவனின் ஆபீஸ் வரும்.. நடந்து சென்றவனின் மனமோ முழுவதும் துளசியை பற்றியே இருந்தது.. அவளின் அருகாமை அவனை பித்துக்கொள்ள வைத்தது.. அவளை பார்க்க வேண்டுமென உள்மனம் தூண்டியது..

துளசியை பற்றிய நினைப்பிலேயே பின்னால் வந்து கொண்டிருந்த காரை கவனிக்க மறந்து விட்டான்.. சில மூகமுடி அணிந்த மர்ம நபர்களால் கடத்தப்பட்டான்..

அவன் எவ்வளவு முயன்றும் அவர்களின் பிடியில் இருந்து அவனால் வெளிவர முடியவில்லை.. அவன் கண்ணையும் கட்டி, கைகளையும் இறுக்கமாக கட்டி விட்டனர்.. அவனை ஓரிடத்திற்கு அழைத்துச் சென்று சேரில் அமர வைத்த பின்னே அவனின் கண் கட்டை அவிழ்க்க, கண்களை பிரிக்க முடியாமல் கஷ்டப்பட்டு விழித்துப் பார்க்க.. அவன் எதிரில் அமர்ந்திருந்தான் ஒருவன்.. பார்ப்பதற்கு டீசண்டாக இருந்தாலும், அவனின் கண்களில் ஏதோ ஒரு வித அரக்கத்தனம் இருந்தது.. அந்தப் பார்வை நேத்ரனுக்கு பிடிக்கவில்லை..

"வாங்க நேத்ரன் உங்களுக்காகத்தான் வெயிட்டிங்??" என ரொம்ப நாள் பழகியதைப் போல் பேசியவனை கண்டு குழப்பமாக பார்த்தான்..

"எனக்காகவா???.. யார் நீ?? என்னை ஏன் கடத்தியிருக்க?" என்றவனை அர்த்தமுள்ள பார்வை பார்த்தவன்…

"உன் பேரு நேத்ரன்.. கேம் கிரியேட்டர் மிடில் கிளாஸ் பேமிலி… ஒரு தம்பி, தங்கச்சி, அப்பா, அம்மா அவ்ளோ தான்.. இன்னைக்கு காலையில பஸ் ஸ்டாண்ட்ல ஒரு பொண்ணை பார்த்திருக்க.. பார்த்ததுலயிருந்து அவளை மட்டுந்தான் நினைச்சிட்டு இருக்க" என தன் ஜாதகத்தையே புட்டு புட்டு வைப்பவனை சற்று திகிலுடன் பார்த்தான்..


"என்னை பத்தி தெரிஞ்சு வச்சிக்கிறதுனால உனக்கு என்ன லாபம்??" என கரெக்டாக பாயிண்டுக்கு வந்தவனை பார்த்து எதிரில் இருந்தவனின் முகம் கர்வப்புன்னகை சிந்தியது.. தான் தேர்ந்தெடுத்தவன் சோடைப் போகவில்லையென..

"உன்னால எனக்கு ஒரு காரியம் ஆகணும்"

"என்னாலையா??"

"ஆமா நேத்ரன்.. நாம ஒரு புது கேம் கண்டுபுடிக்கணும்"

"என்னால முடியாது??" என வெடுக்கென சொல்லியவனை கண்டு மர்மப் புன்னகை ஒன்றை புரிந்த எதிரில் இருந்த நபர்

"நீ கண்டுபுடிச்சி தான் ஆகணும்.. உனக்கு வேற வழியில்ல??" என அங்கிருந்த ஒருவனுக்கு கண்ணை காட்ட.. நேத்ரனின் எதிரில் லாப்டாப்பை ஒருவன் பிடித்தபடி இருக்க??.. அங்கு அவன் அப்பாவின் ஆபீஸில் இருந்தவரின் பின்னால் ஒருவன் துப்பாக்கியுடன் அவரை சுடுவதற்காக நின்றிருந்தான்.. அவருக்கு மட்டுமல்ல.. அவனின் அம்மா, நிரல்யன், அருந்ததி என எல்லார் பின்னாடியும் இருந்தனர்.. தான் மட்டுமல்ல தன் ஒட்டு மொத்த குடும்பமும் வசமாக சிக்கியிருக்கிறோம் என்பது மட்டும் நன்றாக புரிந்தது..

"இது நீ கண்டுபுடிக்கிற கேம் மாதிரி இல்ல நேத்ரன். ஹீயூமன்ஸை வச்சி" என்ற வார்த்தையில் அதிர்ந்தான் நேத்ரன்.

"வாட் டூ யூ மீன்.. ஹுயூமன்ஸை வச்சா??"

"ஆமா நேத்ரன்.. ஹுயூமன்ஸை வச்சித்தான்.. நாம ஒரு அஞ்சி பேரை செலெக்ட் பண்றோம்.. அவுங்களை அரண்மனை மாதிரி இடத்துல, திகில், அமானுஷ்ய நிறைந்த மாதிரி அவுங்களுக்கு விஸூயூவல் காட்டி அவுங்களை மைண்ட்லி டிஸ்டர்ப் பண்றோம்… ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு லெவல்.. அவுங்களோட மன தைரியத்தை உடைக்கிறோம். ஒவ்வொரு டாஸ்க்கும் எந்த லெவல் இருக்கோ அதே மாதிரி உன்னோட சம்பளமும் உயரும்… உனக்காக தனி வீடு, கார்ட், பேங்க் அக்கவுண்ட் எல்லாமே உனக்கு ஸ்பான்சர் பண்ணுவேன்".

"என்னால முடியாது… ஒரு உயிரை வச்சி விளையாட மனசு வரலை??" என்றவனின் வார்த்தையில் சொடக்கிட அவனின் முன்பு லேப்டாப் ஒன்றை வைத்தனர்..

. ஆம்… அவனின் தந்தையின தோள்பட்டையை உரசியவாறே சென்றது ஒரு தோட்டா.. "அப்பாஆஆ" என அலறி முடிப்பதற்குள்.. காலையில் இருந்து யாரை நினைத்துக் கொண்டிருந்தானோ அவளுக்கு பின்னால் ஒருவன் துப்பாக்கியை வைத்த வண்ணம் இருக்க அதிர்ந்தே விட்டான்… "நோஓஓ.. அவுங்களையெல்லாம் விட்டுடு.. அவுங்க எல்லாரும் என்ன பண்ணாங்க??" என்றவனின் கர்ஜனையில் எதிரில் இருப்பவன் சிறிதும் பயப்படவில்லை..

"நேத்ரன்.. இது சாதாரண கேம் தான்.. அவுங்க உயிருக்கு எந்தவித ஆபத்தும் வராது நேத்ரன்" என்றவனை வெறுப்புடன் பார்த்தவனின் மனமோ, "இவன் சைக்கோவா??" என எண்ணாமல் இருக்க முடியவில்லை…

"என்ன சொல்ற?? அவுங்க உயிருக்கு ஆபத்து வராதுன்னு சொல்ற??.. அப்புறம் எதுக்கு மனுஷ உயிரோட விளையாடணும்.. பேசாம இருக்க வேண்டியது தான??"

"நாம அவுங்களுக்கு பயம் காட்டப் போறோம்.. அவ்ளோ தான்" என்றவனின் கூற்றை ஏனோ மனது ஏற்றுக் கொள்ள மறுத்தது.. பெருமூச்சு விட்டுக் கொண்டவனுக்கு ஏனோ மனதில் சிறு நெருடல் ஒன்று இருந்து கொண்டே இருந்தது..

. நேத்ரனோ, "நான் யோசிக்கணும்" என்ற நேத்ரனை ஆழ்ந்து பார்வை பார்த்தவன்.. "நோ நேத்ரன் இங்கயிருந்து நீ போகணும்னா.. அக்ரீமெண்ட்ல சைன் பண்ணியாகணும்" என்றவனுக்கு நேத்ரனின் திறமை மேல் அளவு கடந்த நம்பிக்கை இருந்தது.. "நேத்ரன்.. நீங்க ஓகேன்னு சொல்லிட்டா.. ஒன் க்ரோஸ் உங்க அக்கவுண்ட் டிரான்ஸ்பேர் ஆகிடும்" என பணத்தாசை காமித்தார்..

அவன் அதற்கும் பிடிகொடுக்காமல் இருக்க.. போனை எடுத்து காதில் வைத்தவன்.. "துளசியை நடுரோட்டுல அவமானப்படுத்தி, அவளை கற்பழி" என்பதற்குள் தான் அமர்ந்திருந்த சேரை காலாலே தூக்கி வீசியிருந்தான் நேத்ரன்..

"அக்ரீமெண்டை கொடு" என கர்ஜித்தவனுக்கு நன்றாக தெரியும்.. இது ஒரு வழிப்பாதை. இதிலிருந்து வெளியே வரவேண்டுமென்றால் அது அவன் உயிர் சென்றபின்பு மட்டுமே… தந்தையின் உயிரை காப்பாற்ற வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டு அக்ரிமெண்டில் கையெழுத்திட்டவனின் ஒரு சொட்டுக்கண்ணீர் அக்ரிமெண்டை நனைத்தது..

காலமும், நேரமும் ஒருவனை நல்லவனாகவும் காட்டும்… கெட்டவனாகவும் மாற்றும்.. தன்னை சுற்றி நடக்கும் எதையும் அறியாதவரை நாமும் யாரோ ஒருவரின் கைப்பொம்மையே…
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer


துளசியின் மனமோ நேத்ரனை பற்றியே சுற்றி சுழன்றது.. அவனின் அதிரடியில் பயந்தாலும் மனம் அவனை விரும்ப ஆரம்பித்தது.. அவளுக்காகவே டெய்லி பஸ்ஸில் வர ஆரம்பித்தான்.. அவனின் குறு குறு பார்வையும், கல்மிஷமில்லா சிரிப்பும், கூலிங்கிளாஸ் அணிந்திருந்தாலும் அவன் பார்வை அடிக்கடி தன் இடையை வருடி செல்வதை பார்த்தவள் சேலை கட்டுவதையே நிறுத்தி விட்டாள்.. சுடிதாரில் வருபவளையும் கண்ணிமைக்காமல் ரசித்தான்.. அவனுக்கு கையெழுத்திட்டது நெரூடலாக இருந்தாலும் துளசியை அவனால் இழக்க முடியாது…

அப்படியே நாட்கள் செல்ல, கேம் தயாரித்து கொடுத்தாலும்.. இறுதிக்கட்டத்தில் அவர்களின் உயிரை காப்பாற்றி விடுவது தான் நேத்ரனின்.. தன்னை ஆட்டுவிப்பனுக்கு தெரியாமலேயே கேமில் இதை வைத்திருந்தான்... எதிர்பாராத அதிர்ச்சி அவனின் பேங்க் அக்கவுண்டும், காதல் விவகாரம் அவன் தந்தைக்கு தெரிந்தது தான்..

அவரால் அவன் காதலை கூட சகித்துக் கொள்ள முடிந்தது.. ஆனால் பேங்க் அக்கவுண்டை பற்றி விசாரிக்க.. நேத்ரனோ மூச்சைக்காட்டவில்லை.. தன் பையன் தப்பான வழியில் செல்கிறான் என்பதையறிந்தவர் உடனே வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்..

அவனுக்கு கம்பெனி கொடுக்கும் வீட்டில் தனியாக செல்ல விருப்பமில்லாமல் துளசியின் வீட்டில் முறைப்படி பேச அவர்களோ முதலில் ஏற்றுக் கொள்ளவேயில்லை.. ஆனால் நேத்ரனோ புத்தி சாமர்த்தியத்தால் துளசியின் பெற்றோரை சம்மதிக்க வைத்து விட்டான்.. அவர்கள் முன்னிலையிலேயே ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டான்.

அவர்கள் வீட்டில் முதல் முதலாக அடியெடுத்தது இன்றும் பனிச்சாரல் தான் மழையில் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்தவன் நேராக சென்றது அவர்களின் புது வீட்டிற்கு தான்.. உள்ளே நுழைந்தவளை அடுத்த நிமிடமே தன் கையில் ஏந்தியவன்..

மாடிக்கு ஏற, "எங்கே போறீங்க.. முதல்ல பூஜை ரூம்க்கு போகணும்" என்றவளின் பேச்சை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் செல்பவனின் தோள்பட்டையில் கடித்து வைக்க.. "ஸ்ஸ்ஸ்.. வலிக்குதுடி" என முகத்தை சுருக்கவும், "வேகமாக கடித்து விட்டோமோ??" என வருந்தியவள் தோள்பட்டையை நீவிவிட… அவளை நமட்டுப் புன்னகையுடன் பார்த்தவன். "இதுக்கு மருந்து இருக்கு போட்டு விடுறீயா??" என்றதும்.. 'ம்ம்' என கண் கலங்க கூறியவளை கொடுப்புக்குள் பார்த்து சிரித்தவன்..

"உன் இதழ் முத்தம் என் காயம் அனைத்திற்கும் மருந்து" என்றவனின் தோளிலேயே அடித்தவள்.. ஓட ஆரம்பிக்க.. அவளின் முந்தானையோ அவனின் கைக்குள் அகப்பட்டிருந்தது..

"விடு நேத்து" என்றவளை தன்னை நோக்கி இழுத்தவாறே, "பேபி" என குலைந்து கேட்டவனின் குரலிலும், தயக்கத்திலும் பெண்மையின் நாணம் மேலிட.. புதுவித உணர்வுகளில் சிக்கி தத்தளித்தவளை இரு கரங்களில் ஏந்தியவன்.. அவளை அறைக்கு தூக்கிச் சென்றான்.. அவளின் அழகும், அருகாமையும் அவனை பித்து பிடிக்க வைத்தது.. அவளின் இதழ்கள் அவன்தாபத்திற்கும், மோகத்திற்கும் விருந்தாக… அவளின் இதழ்களை சிறையெடுத்தான்.. மென்மையில் ஆரம்பித்த இதழ் முத்தம், பின் அவளை கொள்ளையிட ஆரம்பிக்க.. அவனின் இறுகிய அணைப்புக்குள் சிக்கித் தவித்தாள்.. அவன் கரங்களின் வருடலில், நாணத்தினை மறைக்க முயன்றவளின் கன்னங்களோ சிவந்தே காட்டிக் கொடுத்தது.. தன்னை கொள்ளையிடும் கள்வனுக்கு… அவனின் அசைவிற்கெல்லாம் இசைந்து கொடுத்தாள் பெண்ணவள்.. மகிழம்பூவின் தேனை உறிஞ்சும் மன்மத வண்டாய் மாறினான்.. அவர்களின் வாழ்க்கை அழகாக செல்ல இரு குழந்தைகளின் அன்னையான பின்பும் அவன் துளசியின் மேல் கொண்ட காதல் சிறிதும் குறையவில்லை… தன் குடும்பத்தின் நினைவு வரும் போதல்லாம் "எங்கே தன்னால் அவர்களுக்கு ஆபத்து வந்து விடுமோ??" என நினைத்து பயந்தே அவர்களை ஒதுக்கி தள்ளினான்..

கார்த்திக் தங்கை ப்ரியா காணாமல் போன பின்பு தான் சாண்டில்யன் மூளையோ சற்று வேகமாக சிந்தித்தது.. கார்த்திக்கை பற்றி அவனுக்கு நன்றாக தெரியும்.. அவன் யார் மேலேயும் பழி போடுபவன் கிடையாது.. அவன் தங்கை ப்ரியா தைரியமான பெண் தான்.. காதலித்தால் கூட வெளியே சொல்லும் அளவிற்கு தைரியம் அவளிடம் இருக்கிறது.. அவள் வீட்டில் எந்தவித எதிர்ப்பும் வராது என தெரிந்த பெண் ஏன் எவனோடு செல்லப் போகிறாள்?? என்ற கேள்வியே அவனை போட்டு உறுத்த.. தன் போலீஸ் மூளையை பயன்படுத்த ஆரம்பித்தான்.

காலேஜ் முடிந்தவுடன் தன் தந்தைக்கு பயந்து வெளியில் ஐ.டி வேலையில் சேர்வதாக சொல்லியவன் இண்டர்வியூ என பொய் சொல்லிட்டு சென்றதோ போலீஸ் டிரெயின் அகெடமிக்கு தான்….

ட்ரெயினிங்கில் அதிகமாக ஒலித்த பெயர் நிரல்யன்.. எல்லாரும் அவனின் திறமை, வேகம், அனைவரிடம் பழகும் பாங்கு என சொல்லி, சொல்லியே நிரல்யனை சுத்தமாக பிடிக்கவில்லை சாண்டில்யனுக்கு..

டிரெயினிங்கில் இருந்தவனை பார்ப்பதற்கு ஒரு பெண் வந்திருப்பதாக சொல்ல… சாண்டிக்கு நன்றாக தெரியும் வந்திருப்பது தன் ஆரூயிர் தமக்கையே என்று..

வேகமாக சென்றவன் நிரல்யனை இடித்து கொண்டு சென்றான்.. ஒரு ஸாரி கூட சொல்லாமல் செல்பவனை பார்த்தவனின் கண்கள் இடுங்கியது. "யார் இவன்??" என அவனை பார்த்துக் கொண்டிருந்தவனின் விழிகளில் விழுந்தாள் மஞ்சள் நிற சுடிதாரில் நின்றிருந்த தேவதை.. தன் தம்பியை அமர வைத்து சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு ஏனோ அவள் மடியிலே தன் வாழ்நாளெல்லாம் கிடக்க வேண்டும் என பேரவா தோன்றிட.. மெல்லிய புன்னகையுடன் கடந்து போனவன்.. அங்கிருந்த கான்ஸ்டபிளை பிடித்து அந்தப் பெண்ணின் டீடெய்லஸை வாங்கினான்.

பெயர் அமிர்தவர்ஷினி.. அவன் தம்பி தான் சாண்டில்யன் டிரெயின்ங்கிற்காக வந்திருக்கிறான்… பணக்கார குடும்பமாக இருந்தாலும்.. தன் பிள்ளைகளை பகட்டில்லாமல் வளர்த்தார்… அதன் பின் அமிர்தவர்ஷினியை இயல்பாக சந்திப்பதை போல் சந்தித்தவன்… அவளிடம் ஒரு நாள் காதலை சொல்ல.. அவளுக்கும் பிடித்திருந்ததால் உடனே சம்மதித்து விட்டாள்..

அப்பொழுது தான் விஷ்வநாதன் கம்பெனியில் இருந்த தவறு நடக்கிறதென்பதை புரிந்து கொண்ட சாண்டி ஏதோ நடக்கிறது அதிதி மூலம் அவளின் தந்தையை சந்திக்க நினைத்தான்..

அதிதியின் தந்தையும் அவ்வாறே மகளின் மூலம் சாண்டில்யனை பற்றி அறிந்தவர்.. ஒரு டிடெக்டிவ் ஏஜென்ஸியின் மூலமாக சாண்டில்யனை பற்றி விசாரிக்க.. அவன் சிபிஐ ஆபீசர் என்பதையும் புட்டு புட்டு வைக்க.. விதிர்விதிர்த்து போனவர்..

சாண்டில்யனை ஏதாவது செய்ய வேண்டுமென தோன்றிக் கொண்டேயிருந்தது.. தன் மகளை காதலிப்பதாக சொல்லி ஏமாற்றும் அவனை மருமகனாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தில் எல்லாம் இல்லை.. அவனை தன் கேமில் விளையாட வைத்து கொன்று விடும் நோக்கத்தில் இருந்தார்.. அதற்காகவே தக்க தருணத்தை எதிர்பார்த்தவருக்கு அவனை கேமில் எப்படி சேர்ப்பது என யோசித்தவருக்கு, சாண்டியின் அக்கா அமிர்தவர்ஷினியினை நிரல்யன் கல்யாணம் செய்திருப்பது தெரிய வந்தது.. நிரல்யனின் தங்கையை கடத்தி, அவள் மூலமே இந்த கேமை வழி நடத்தி, சாண்டியை அங்கு வைத்தே போட வேண்டுமென்பது தான் அவர்களின் திட்டம்.. ஆனால் அவர்கள் அறியாதது அசாகயசூரன் ஒருவன் தங்களிடத்தில் அருந்ததிக்கு பாதுகாப்பு அரணாய் இருக்கிறான் என்பது…

விஸ்வநாதனும் பிளான் பண்ணி அருந்ததியை தூக்கிவிட்டனர்.. நேத்ரனின் ஆட்கள் அருந்ததியை இழுத்துக் கொண்டு வர திகைத்து நின்று விட்டான் நேத்ரன்.. தன் உணர்வுகளை வெளியே காண்பிக்காமல் இருக்க அரும்பாடு பட்டான்.. அருந்ததி முதல் பார்வையிலேயே கண்டு கொண்டாள்.. "அண்ணா" என கூப்பிடுவதற்குள் கண்களாலேயே வேண்டாமென்று சொல்லி விட்டான்.. நேத்ரன் மேல் அளவு கடந்த நம்பிக்கை இருந்தது அருந்ததிக்கு..

அதனால் தான் அதிதியிடம் நேத்ரனை யாரோ ஒருவன் போல பேசியவள்.. நேத்ரன் தன் அண்ணன் என்பதையும் மறைத்து விட்டாள்..

விஸ்வநாதனுக்கு தெரியவில்லை.. நேத்ரனின் குடும்பத்தை பற்றி.. அருந்ததிக்கு எதுவும் ஆகக்கூடாது என்பதற்காகவே அவளை மாறுவேடமிட்டு அவளே காய் நகர்த்துவதை போல் நகர்த்தினான்.. அவளுக்கு எதுவும் ஆகக்கூடாதென்ன பல முன்னேற்பாடுகள் பண்ணியவனுக்கு அருந்ததி வருணுக்கு முத்தமிட்டது மிகப்பெரிய அதிர்ச்சி தான்.. காதல் வலையில் எதுவும் பைத்தியகாரத்தனம் பண்ணிறக்கூடாது என்பதாலேயே அவளை கடத்தி ஒரு அறையில் கட்டி வைக்க சொல்லினான்…

சாண்டியின் அக்காவும் நிரல்யனும் ஓடிச்சென்று கல்யாணம் செய்தது சாண்டில்யனுக்கும் பேரதிர்ச்சி தான்.. அவளின் தந்தையோ அவளை தலைமுழுகிறேன் என வீட்டில் அட்டகாசம் செய்து கொண்டிருக்க அப்பொழூது தான் அதிதி போன் போட்டுக் கொண்டிருக்க.. ஒரு கட்டத்தில் கோபத்தில் போனை ஸ்வீட் ஆப் செய்து விட்டான்..

ஆனால் அதற்குள் ஏதோதோ நடக்க அனைவரும் இந்த சக்கர வியூகத்தில் வந்து மாட்டிக் கொண்டனர்.

"இப்போ நாம எல்லாரும் பாண்டிச்சேரி கிளம்புறோம்" என மூவரும் புறப்பட.. சிவாங்கி தானும் கூட வருவேன் என சொல்லியவளை எல்லாரும் அதிர்ச்சியுடன் பார்க்க.. "எதுக்கு?" என நிரல்யன் சிடுசிடுக்க..

சாண்டியோ, "வரட்டும்.. சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என அனைவரும் தேடிச்சென்றனர் பூமிக்கு பாரமாய் இருப்பவனை அழிப்பதற்காகவே..

பாண்டிச்சேரியை அடைந்தவன்.. காரை ஹார்பர் பக்கம் ஓட்டச் சொல்லினான்.. ஹார்பரில் வந்து இறங்கியவன்.. மெல்ல தன் பார்வையை நாலாப்பக்கமும் சுழற்றியவாற வந்தவனின் அருகில் நின்றான் ஆப்பிரிக்கக்காரன்.. கருகருவென உடம்புடன்.. திண்ணென்ற மார்பில் நின்றவனை ஒரு பார்வையில் ஏறப் பார்த்தவன் காதிற்குள் ஏதோ சொல்லவும் நேத்ரனையும் அவன் ஆட்களையும் ஒரு இடத்திற்கு கூட்டிச் சென்றனர்..

அது மீனை பதப்படுத்துவதற்காக ஐஸ்பார்களை வைத்திருக்கும் இடம்.. அங்கு செல்ல.. அனைவரும் தங்கள் பார்வையே கூர்மையாக்கி நடந்தனர்.. சிவாங்கிக்கு சற்று பயமாக இருந்தாலும் ஏனோ தைரியமாகவே நடந்தாள்..

நேத்ரனை செல்ல செல்ல ஏதோ பாதாள உலோகத்தில் செல்வதைப் போல் இருந்தது.. போய்க்கொண்டேயிருந்தனர் ஒரு ரூமின் முன்னால் நிற்க.. அந்த இடமோ அப்படி ஒரு குளிரை கொடுத்தது.. எங்கே உறைந்து விடுவோமோ?? என பயத்தில் கைகளை தேய்த்தபடி அனைவரும் நுழைய கதவை திறந்தது.. வெளியில் இருந்த குளிர் உள்ளே சுத்தமாக இல்லை.. "வா.. நேத்ரன்" என வரவேற்றான் ஆத்ரேயன்.. நேத்ரனை ஆட்டிப்படைத்தவன்..

"வணக்கம் ஜி" என்றவனின் பார்வையோ மற்ற மூவரில் பதிய.. சாண்டில்யனும், நிரல்யனும் தங்கள் தோற்றத்தை மாற்றிக் கொண்டு வந்ததால் யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.. ஆனால் அவசரக்குடுக்கை சாண்டில்யனோ, அங்கு நின்றிருந்த அதிதியின் தந்தையை பார்த்தவன் கோபத்தில் கொப்பளித்துக் கொண்டிருந்தான்.. நேத்ரனை தவிர மற்ற அனைவரையும் ஆத்ரேயன் பிடித்துக் கொள்ள வைக்க.. அங்கு கண்டெய்னருக்கு கொண்டு செல்ல.. கண்டெய்னரை திறக்கும் வரை அமைதியாய் இருந்தவர்கள்.. அதன் பின் அடிதடியை ஆரம்பித்தனர் நிரல்யனும், சாண்டில்யனும்.. சாண்டி அங்கு நின்றிருந்த விஸ்வநாதனை பொளக்க ஆரம்பிக்க, கார்த்திக் ஒரு புறம் சண்டையிட.. சிவாங்கி கண்டெய்னரில் இருந்த ஒவ்வொருவரையும் கீழே இறக்கிக் கொண்டிருந்தாள்.. அனைவருமே இளவயதுக்காரர்கள் மட்டுமே.. இவர்களை நாடு கடத்தியிருந்தால் இவர்களின் நிலைமையை யாராலும் நிர்ணயிக்க முடியாத நிலை இருந்திருக்கும்.. அங்கு நின்றிருந்த ஆட்கள் அனைவரும் சுத்தி வளைக்க.. சாண்டில்யனை நாலைந்து பேர் பிடித்துக் கொள்ள, அவனை காப்பாற்ற வந்த சிவாங்கியை பிடித்து தள்ள வேகமாக கண்டெய்னரில் இடித்து தலையில் இருந்து ரத்தம் வழிந்தது..

நிரல்யன் ஒரு பக்கம் போராட.. நேத்ரன் சாண்டில்யனை பிடித்து வைத்திருந்த நால்வரையும் கண்ணிமைக்கும் நொடியில் சுட்டுத்தள்ளினான்.. அங்கு இருந்தவர்களை சுட்டுத்தள்ளியதும் ஆத்ரேயன் கோபத்தில் நேத்ரனின் கழுத்தை பிடித்து நெறிக்க.. விடுபட போராடியவனின் கையிலேயே அழுத்தியதும்.. ஏற்கனவே அடிபட்ட கை இன்னும் நன்றாக வலித்தது.. "அம்மாஆஆஆ" என்றவனின் அலறலில் நிரல்யன் ஆத்ரேயனை பிடித்திழுத்தான்..

ஆத்ரேயன் நிரல்யனுடன் சண்டையிட.. அதற்குள் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஆத்ரேயனை சுட்டுத் தள்ளியிருந்தான் நேத்ரன்..

அதிர்ச்சியில் அனைவரும் உறைந்து நின்றனர்.. நேத்ரனோ லோட் பண்ணிய புல்லட்டை இறக்கியவன். சிறிதும் வருத்தம் கொள்ளவில்லை.. நிம்மதி தான் அடைந்தான்.. அதன் பின் மளமளவென அனைத்து வேலைகளும் நடந்தேற. அனைவரையும் அவர்கள் வீட்டின் ஒப்படைத்தனர்.. நேத்ரனை ஜெயிலுக்கு கூட்டிச் சென்றனர் சாண்டில்யனும், நிரல்யனும்..

அவனுக்கு ஜெயிலுக்குப் போறதுக்கு முன்னாடி ஒரு முறையாவது துளசியை பார்க்க வேண்டுமென தோன்றியது..

காரில் அழைத்துச் சென்றவர்களை நோட்டமிட்டவாறே சிக்னலில் வண்டி ஸ்லோவாக நிற்க.. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நேத்ரன் வேகமாக ஓடி விட, நிரல்யனோ கடமை தவறாதவனாக அவனை காலின் கீழே சூட் பண்ணுவதற்காக குறி வைத்தவனின் கையை தட்டி விட்ட சாண்டில்யனோ, "அட பொறுங்க இன்ஸ்பெக்டர், உங்க அண்ணன் எங்கேயும் போக மாட்டாரு. அவர் பொண்டாட்டி கோமா ஸ்டேஜ்ல இருக்காங்க.. அவுங்களை பார்க்கத்தான் போறாரு" என்றவனை நம்பாத பார்வை பார்த்தவன்,

"அதெப்டி நீ சொல்ற?? அவளை தான் பார்க்கப் போறான்னு??" என்றவரை "சிபிஐ ன்னா எல்லாம் தெரிஞ்சு வச்சிருப்போம்.. அவனோட ஒரே வீக்னெஸ்.. அவன் ஒய்ஃப் தான்.. அவுங்க தான் இவனுக்கு எல்லாம்.
அவுங்க இல்லாம இவன் வாழவும் மாட்டான்.. வாழவும் விரும்ப மாட்டான்"

"அப்போ வா ஹாஸ்பிட்டல் போவோம்??"

"ஹாஸ்பிட்டல்ல என் ஆட்கள் ஏற்கனவே இருக்காங்க. அவுங்க இவனை பார்த்துப்பாங்க" என்றவன் அங்கிருந்த டீக்கடையில் டீ குடிக்க.. ஓரப்பார்வையில் பார்த்த நிரல்யனுக்கு அவன் திறமை மீது நம்பிக்கை வந்தது..

ஹாஸ்பிட்டலில் அரக்க பரக்க ஓடி வந்தான் நேத்ரன்.. கைகள் அடிபட்டிருந்தது, நிரல்யன், சாண்டில்யனுடன் சண்டை போட்டது என எல்லாம் சேர்ந்து, அவனை மிகவும் சோர்வாக்கியது..

தளர்ந்த நடையில் மாடிப்படி ஏறியவனுக்கு, கண்களில் வழிந்த கண்ணீர் துளசியின் மேல் அவன் கொண்ட காதலை பறைசாற்றியது..

இரண்டாம் மாடி ஏறியவன் உள்ளே நுழைய, அவனின் இதயமோ பலமடங்கு துடித்தது.. துளசி இருந்த அறைக்குள் நுழைய, வயிற்றின் பாரம் இறங்கியதால் நார்மலாக இருந்த வயிற்றை பார்த்தவனுக்கு இதயத்தை யாரோ பிடுங்கி எடுத்ததை போல் வலித்தது..

மெதுவாக அடியெடுத்து வைத்தவாறே, துளசியின் அருகில் செல்ல, அவளோ இறுகி மூடிய கண்களுடன் எந்தவித அசைவுமில்லாமல், படுத்திருந்தாள்.. அவளின் முகத்தை வருடியவனின் கரமோ வயிற்றில் பதிய, தன் உயிரை தானே கொன்றது தான் நியாபகத்திற்கு வந்தது..

"பாப்பாஆஆஆஆ… அப்பாவே உன்னைக் கொன்னுட்டேன் டா" என கதறியழுதவனின் குரல் கோமாவில் இருந்த துளசியை சென்றடைந்தது..

"நான் பல பேரோட வாழ்க்கையை அழிச்ச பாவம், எனக்கு இப்படியொரு நிலைமை.. உன்னை நானே கொன்னுட்டேனே" என தலையிலடித்துக் கொண்டு அழுதவன்.. துளசியின் கால்களை இறுகப்பற்றியவன்.. பாவமன்னிப்பை வேண்டினானோ??? இல்லை தன் பாவத்தை கரைக்க நினைத்தானோ?? தன் கண்ணீரால் துளசியின் பாதத்தை நனைத்தான்..

"நம்ம குழந்தையை நானே கொன்னுட்டேன்டி.. என்னை மன்னிச்சிரு செல்லம்மா.. செத்துரலாம் போல இருக்கு செல்லம்மா.. ஆனா சாகமாட்டேன்.. நான் பண்ண கொடுமைக்கு தண்டனை அனுபவிக்காம சாக மாட்டேன்.. என் பாவத்தோட நிழல் கூட என் பிள்ளைங்க மேல படக்கூடாது.. அவுங்க நல்லா இருக்கணும்.. அவுங்களை பாத்துக்க உன்னால மட்டுந்தான் முடியும்.. எந்திரிச்சு வாடி.. கோமாவுல இருந்து வந்திடு செல்லம்மா.. உன் கையாலேயே என்னைக் கொன்னுடுடி… அதுதான் எனக்குக் கிடைக்கிற பாவ மன்னிப்பு" என்றவனின் வார்த்தையில் படுத்திருந்தவளின் கண்ணீர்க் கோடாய் வழிந்து காதில் விழுந்தது..

எதையும் அறிய முடியாத பித்துப் பிடித்ததை போல் இருந்தவன்.. மெல்ல எழுந்து வெளியே செல்ல முயன்றவனின் காதில் சிறு முணகல் சத்தம் கேட்க.. மெல்ல திரும்பி பார்த்தவனுக்கு இமைகளை உருட்டியபடி இருந்த துளசியை வேகமாக சென்று அணைத்துக்கொண்டான்..

"நேத்து" என்ற வார்த்தையில் உடைந்து அழுதான்.. அவனின் அழுகையே தன் குழந்தை இந்த பூமியை பார்க்க விரும்பவில்லை என்பதை அறிந்தவளுக்கு கண்ணீர் வந்ததே தவிர, கத்தி அழக்கூட அவள் உடம்பில் தெம்பில்லை… மெல்ல மெல்ல விழிகளை மூடியவளை பார்த்து கண்களில் வழிந்த கண்ணீர் கூட நின்றது..

இதற்கு மேலும் இங்கே இருந்தால் விபரீதமான முடிவை நோக்கி செல்வோம் என அறிந்தவன்.. வேகமாக வெளியே சென்றான்..

கண்களை சுற்றி சுழலவிட்டவனின் கண்ணில் நிரல்யனுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க.. அவன் அருகில் நின்றிருந்த சாண்டில்யன் தான் கண்ணில் தெரிந்தான்..

அவன் அருகில் சென்றவன்.. "என்னை அரெஸ்ட் பண்ணுங்க" என்றவனை சிறு புன்னகையுடன் அவனுக்கு ட்ரீட்மெண்ட் எடுத்தபின்பே போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்

தான் செய்த குற்றம் அனைத்தையும் சொல்லியவன் சிறைத்தண்டனையே விரும்பியே பெற்றான்..

இதனிடையே, விஸ்வநாதனோ அனைவராலும் வெறுக்கப்பட்டு சிறைக்குள் காலம் தள்ள ஆரம்பித்து இருந்தார்.
நிரல்யனின் குடும்பமே நேத்ரனின் குடும்பத்துக்கும் குழந்தைகளுக்கும் உற்ற துணையாக இருக்க, ஒரே மேடையில் மாதங்கி மற்றும் சிவாங்கியின் திருமணம் கார்த்திக் மற்றும் விதுரனுடன் நடந்தது.
அதனை தொடர்ந்து அதிதியும் சாண்டியும் திருமணம் செய்து இருக்க, வருண் மற்றும் அருந்ததியின் திருமணமும் கோலாகலமாக நிறைவு பெற்று இருந்தது.
 
Status
Not open for further replies.
Top