ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தந்த்ரா கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் – 8



திடீரென நடந்து விட்ட செயலில் நால்வரும் திகைத்து அச்சத்தில் உறைந்திருக்க, அருந்ததியின் கதறல் சத்தம் அவர்களின் செவிப்பறையை தீண்டாமலே கரைந்தது..

தன்மேல் விழுந்து கிடந்த மாதங்கியை ஒரு கையால் அணைத்து "மாது அடியேன் இருக்கும்போது எதற்கு இந்த பயம்.. நோ அச்சம்.." என்று ஆறுதலளித்த விதுரன் பெண்ணவள் சாய்வதற்கு இலகுவாக இன்னும் நன்றாக படுத்து கொண்டான்..

கீழே விழுந்ததில் சுள்ளென்ற வலி தீண்டிய பின்னந்தலையை ஒரு கையாலும், மறுகையால் காலையும் பிடித்தபடி சுருண்டிருந்த சாண்டி கடுப்பாகி விதுரனை ஓங்கி மிதிக்க, விதுரனின் காலடியில் கிடந்த வருணும் தன் பங்கிற்கு மிதிக்க, "அய்யோ பேய்.. பேய்.. பேய் என்னைய மிதிக்குது.." என்று கத்தினான் பதற்றத்துடன்..

"டேய் நாங்க உனக்கு பேயாடா..?" என்று சாண்டி மீண்டுமொரு உதை விட, "ஊஃப் நீதானா..?" என்று பெருமூச்சு விட்டு, "அடேய் சொல்லிட்டு மிதிங்கடா.. பக்குனு இருக்குல.." என்றான் பாவமாக..

"ப்ச் எந்திரிச்சு தொலைடா.. நேரங்கெட்ட நேரத்துல தான் உனக்கு ரொமான்ஸ் வரும்.." என்று வருண் சிடுசிடுக்க, சாண்டியின் நினைவலைகள் அதிதியையே சுற்றி வந்தது.. "அதிதி எங்கடி போன.? வந்துருடி.. நீ இல்லாம நானில்லனு புரிஞ்சுக்கிட்டேன்.." என்று மனதினுள் கதறினான்..

கும்மிருட்டுடன் காணப்பட்ட சுரங்கத்தை கண்டு மிரண்ட விதுரன் "ஹே இது எந்த இடம்..?" என்று குரலே எழாமல் கேட்டிட, தன்னவளுக்கு என்ன ஆனதோ என்ற பதற்றத்தில் இருந்த சாண்டி "எங்ககிட்ட கேட்டா எப்படி தெரியும்.. நாங்களும் உன்கூட தானே இருக்கோம் எருமை.." என்றான் விழிகள் சிவக்க..

"மச்சான் டேய்.. போலீஸ் மச்சான் ரொம்ப நல்ல மூடுல இருக்காரு போல.. வாயை குடுத்து வாங்கி கட்டிக்காத.." என்று மெதுவாக விதுரனின் காதை கடித்தான் வருண்..

அவ்விடத்தை மிரட்சியுடன் கண்களால் அளவெடுத்திருந்த மாதங்கி, "விது விது.." என்று விதுரன் என்று நினைத்து வருணின் கையை சுரண்ட, "ஹலோ கேர்ள் இப்ப எதுக்கு நாய் பிரண்டற மாதிரி என் கையை பிரண்டறீங்க..? என்று கேட்டான் தீவிரமான முகத்துடன்..

வருணின் கிண்டலை மூளையில் ஏற்றி கொள்ளும் நிலையில் எல்லாம் மாதங்கி இல்லை.. "நம்ம கூட வந்த அருந்ததியை காணோம் பாருங்க.." என்று கலக்கமாக கூறிட, அப்போது தான் மற்ற மூவரும் அருந்ததியை தேடினர்..

அவளை காணாமல் வெகுவாக குழம்பியவர்கள், "ஒருவேளை அது பேயோ..?" என்று யோசிக்கும் நிலைக்கு வந்திருந்த விதுரன் வாய்விட்டும் கேட்டு விட்டான்..

"என்னது பேயா..?" என்று அதிர்ந்த மாதங்கி பயத்தில் உறைய, அவனை உக்கிரமாக பார்த்த வருண் "உன் வாய்ல நல்ல வார்த்தையே வராதாடா.. அவ ஒண்ணும் பேய் இல்லை.. நீயே ஏதாவது கற்பனை பண்ணிக்காத.." என்றான் காட்டத்துடன்..

"அந்த கிழவி தான் வேணும்னே நம்மளைய இதுல சிக்க வைச்சுருக்கோனு எனக்கு சந்தேகமா இருக்கு.. நம்மளைய மாட்டி விட்டுட்டு அது மட்டும் எஸ்கேப்பாகிருச்சு பாரு.. என் கைல மட்டும் சிக்குச்சு அவ்வளவுதான்.. என் அதிதி எங்க இருக்களோ.." என்று முதலில் காய்ந்த சாண்டி பின்பு வேதனையுடன் மொழிந்தான்..

"எது நடந்தாலும் அருந்ததியையே குறை சொல்லாதீங்கடா.. அவளுக்கே எதுவும் தெரியாம இருக்கலாம்ல.. இவ அதிதியை கடத்தி என்ன பண்ண போறா..?" என்ற வருண் சாண்டியை முறைக்க, அவனும் பார்வை எறிகணையை வருண் மேல் எறிந்தான்..

லேசாக எழுந்த பயத்தில் "அது எக்கேடோ கெட்டு போகட்டும்.. முதல்ல இங்கிருந்து போற வழியை தேடுவோம்டா.. பக்கு பக்குனு இருக்கு.." என்ற விதுரன் எச்சிலை விழுங்க, சண்டை கோழிகளாக முறைத்திருந்த சாண்டிக்கும் வருணுக்கும் இதுவே சரியெனப்பட்டது..

அந்த சுரங்கத்தினுள் எந்த பக்கம் போனாலும் மறுபடியும் மறுபடியும் நின்றிருந்த இடத்திற்கே நால்வரும் வந்து சேர, குழப்பத்தில் அவ்விடத்தில் பார்வையை நிலைத்தபடி சாண்டியோ "நம்மதான் இன்னும் இங்கயே நிற்கறோமா..?" என்று கேட்டான்..

"எனக்கும் அதே சந்தேகமா தான் இருக்கு.." - வருண்

"நீங்க ரெண்டு பேரும் இங்கயே நில்லுங்க.. நானும் விதுரனும் மறுபடியும் போய் பார்க்கறோம்.." - சாண்டி


"அய்யோ.. மாட்டேன்பா.. நீங்க போனதும் அந்த அருந்ததி பேய் வந்துருச்சுனா..?" - மாதங்கி

"அவ பேய் இல்லனு எத்தனை தடவை தான் சொல்றது.." - வருண்

"டேய் நீயே யோசிச்சு பாரு.. அவ ஏதாவது வேணாம்னு சொன்னா தான் நம்ம அதைய செய்வோம்னு இங்க போக வேணாம்னு சொன்னா.. அவ சொன்னதை கேட்காம இதுக்குள்ள நம்ம விழுந்தோம்.. இப்ப அவளையே காணோம்.." - விதுரன்

"அய்யோ உங்களுக்கு எப்படி புரிய வெக்கறதுனு தெரில.. அவ பேயும் இல்ல.. பிசாசும் இல்ல.. நம்மளைய மாதிரி உயிருள்ள மனுசி தான்.. அதிதியை கடத்துன மாதிரி இவளையும் கடத்திருக்கணும்.." - வருண்

"என்னைய பேச வெக்காத வருண்.. தயவு செஞ்சு வாயை மூடிரு.. அந்த கிழவி அப்படியே தொலையட்டும்.. டேய் நீ முதல்ல வாடா.." என்று விதுரனை இழுத்து கொண்டு சென்ற திசையிலே மீண்டும் சென்றான் சாண்டி..

அவர்கள் சென்றதும் பயத்தில் விழிகளை நாலாபுறமும் உருட்டியபடி இருவரும் அமைதியின் தாக்கத்திலே நின்றிருக்க, சென்ற சாண்டியும் விதுரனும் மீண்டும் அவர்கள் நின்ற இடத்திற்கே வந்து சேர்ந்தனர்..

"நீங்க ஏன்டா போய்ட்டு திரும்பி இங்கயே வர்றீங்க.." என்று பொறுமை இழந்த மாதங்கி கத்த, இதில் அவளை விட கடுப்பான சாண்டி "அப்படியே ஒன்னு விட்டனா அவ்வளவுதான்.. எங்களுக்கு என்ன ஆசையா.. இங்கயே வரணும்னு.. எங்க போனாலும் மறுபடியும் மறுபடியும் இங்கதான் வரணும் போல.." என்றான் சீற்றலுடன்..

சாண்டியின் கோவத்தில் மாதங்கிக்கு கண்ணீர் உகுக்க, "அதிதிக்கு என்ன ஆச்சோனு பயமா இருக்கு சாண்டி.." என்று தோழியின் நினைவில் தேம்ப, இறுகி இருந்தவனின் மனதும் பாறையாக மாறி கனகனத்தது..

திடீரென்று ஏதேதோ விழும் சத்தம் கேட்டதில் அச்சத்தில் துடித்த நால்வரின் மனதும் இன்னும் இரட்டிப்பாக துடிக்க ஆரம்பிக்க, மிரட்சியுடன் சத்தம் வரும் திசையில் இவர்கள் விழிகளை பதித்ததும் அந்த சத்தமும் நின்று போனது..

"அஅங்க யா..யாரு இரு..க்கா..ங்க.." என்று கேட்ட மாதங்கிக்கு வார்த்தைகள் கோர்வையாக நில்லாமல் தடுமாற, "இரு நான் போய் கேட்டுட்டு வர்றேன்.." என்று பல்லை கடித்தான் சாண்டி..

"அவளே பயத்துல இருக்கா.. நீ ஏன்டா கத்தி இன்னும் பயப்படுத்தி விடற.." என்று விதுரன் தலையில் அடித்து கொள்ள, சாண்டி வாயை திறவும் முன்பே மீண்டும் சடசடவென ஏதோ விழும் சத்தமும் அதனுடன் சேர்ந்து விநோதமான கூச்சலும் செவியை துளைக்க.. செல்களெல்லாம் உறைந்து இதயமே வெடிப்பது போலானது நால்வருக்கும்..

இடைவிடாது வந்த சத்தத்தில் அசைவற்று நின்றிருந்த மாதங்கி ஒரு கட்டத்தில் மயங்கி விழ, "மாது மாது.." என்று அவளின் கன்னத்தில் தட்டி எழுப்ப முயன்ற விதுரனும் வருணும் கூட எந்தவித அசைவும் இல்லாமல் அப்படியே மயங்கிட, நகர கால்கள் ஒத்துழைக்காத காரணத்தினால் நின்ற இடத்திலே நின்றிருந்த சாண்டிக்கு தான் ரத்தநாளங்கள் எல்லாம் கொதிநிலையின் உச்சத்தை தொட்டிருந்தது..

*****



திரையில் அவர்களை கண்டபடி வெற்றி களிப்புடன் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்த நேத்ரன், "ஹஹஹஹ என்ன ஒரு கண்கொள்ளா காட்சி இது.. மாத்தி மாத்தி அடிச்சுக்கிட்டு.. சண்டை போட்டுட்டு.. ச்சே ச்சே சான்ஸே இல்ல.. இப்பதான்டா இந்த நேத்ரனோட ஆட்டமே ஆரம்பமாகிருக்கு.. இதுக்கே பயந்தா எப்படி.. இன்னும் இன்னும் பல பல நிகழ்வுகள் இருக்கே.." என்று வெடிசிரிப்பு சிரித்தான்..

அப்போது அவனின் அலைப்பேசி கவனத்தை கலைக்க, சார் என்று வந்ததை பார்த்து "நம்ம சார் தான்டா.." என்று தன்னருகில் இருந்தவர்களிடம் மொழிந்தவன் போனை காதில் வைக்க, "என்னடா எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு.." என்று மறுமுனையில் இருந்தவர் கேட்டார்..

"சார் அதெல்லாம் சூப்பரா போய்ட்டு இருக்கு.. நீங்கதான் பார்க்க மிஸ் பண்ணிட்டீங்க.." என்ற நேத்ரன் இச் கொட்ட, "நம்ம பிளான் எதுவும் சொதப்பிடாம எந்நேரமும் அவங்களைய வாட்ச் பண்ணிட்டே இருங்க.. அப்பறம் ரொம்ப முக்கியமான விசயம் அருந்ததி பத்தி அவங்க யாருக்கும் தெரிய கூடாது.." என்று அழுத்தமாக உரைத்தார்..

சின்ன சிரிப்புடன் நேத்ரனோ "அந்த கிழவியும் இப்ப நம்மகிட்ட தான் இருக்கு சார்.. அதைய நம்ப முடியாதுனு அதையும் தூக்கிட்டோம்.." என்றிட, "குட் குட் மை டியர் பாய்.. இருந்தாலும் கேர்புல்லா இருங்க.." என்று விட்டு போனை கட் செய்தார் விஸ்வநாதர்.. அதிதியின் தந்தை..

"என்கிட்டயே உங்க வில்லத்தனத்தை காட்டறீங்களா.. பார்ப்போம்டா அங்கிருந்து நீங்க உயிரோடு வர்றீங்களானு.." என்று கர்வப் புன்னகையை இதழில் சூட்டி கொண்டார் அதிதியின் தந்தை..


******


நேத்ரன் பற்றி தான் நினைத்து வந்தது தோல்வியில் முடிந்ததை நிரல்யனால் ஏற்று கொள்ள இயலாமல் எழுந்த சினத்தில் காரை ஓங்கி குத்திட, இதில் கார்கண்ணாடி சில்லு சில்லாக நொறுங்கி அவனின் கையையும் பதம் பார்க்க, அப்போதும் ஆத்திரம் அடங்காமல் "ஷிட்.." என்று கத்தினான்..

இதை தூரத்தில் இருந்து பார்த்திருந்த விஸ்வநாதருக்கு குரூர சிரிப்பு மின்ன, "நீ என்ன பண்ணுனாலும் உன்னால ஒன்னையும் புடுங்க முடியாதுடா.. உன் தங்கச்சியே உன் முன்னாடி வந்தாலும் அவளை உன்னால கண்டுபிடிக்க முடியாது.. ச்சோ பாவம் தான் நீ.." என்று கேலிச்சிரிப்பை உதித்திருந்தவர் அறியவில்லை பெற்ற மகளே அவரை தூக்கி எறியும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை..!!

ஏமாற்றம் கலந்த முகத்துடன் வீட்டிற்கு வந்த நிரல்யனுக்கு பெற்றோரை காண வேண்டும் என்ற எண்ணம் எழ, மெதுவாக அவர்கள் இருந்த அறைக்கதவை திறந்து அப்படியே நின்றான்.. இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை கண்டு அவர்களை தொந்தரவு செய்ய மனமில்லாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தவனின் கண்ணில் சிக்கியது புகைப்படம் ஒன்று..

கைகள் நடுங்க அதை எடுத்தவன் "அரு.." என்று முணுமுணுத்தவாறு அந்த புகைப்படத்தை வருடிய நிரல்யனுக்கு தொண்டை அடைக்க, "உண்மையாவே எங்களைய விட்டு போய்ட்டியாடா..?" என்று நினைத்தபோதே இதயத்தில் ஈட்டி ஒன்று பாய்ந்த உணர்வு..

புகைப்படத்தில் இருப்பது நிரல்யனின் உடன்பிறந்த தங்கை தான்.. அவர்கள் வீட்டின் செல்ல இளவரசி.. பெற்றவர்களுக்கு மட்டுமின்றி அண்ணனுக்கும் மகளாக இருந்தவள்.. அவள் ஒரு நாள் வீட்டில் இல்லையென்றாலும் அந்த வீடே களையிழந்து காணப்படும்..

புள்ளி மானாய் கல்லூரிக்கு கிளம்பியவள் மாலையில் சடலமாக தான் வீட்டிற்கு வந்தாள்.. மகள் இல்லை என்பதை நம்ப முடியாமல் பெற்றவர்கள் மட்டுமின்றி நிரல்யனும் மொத்தமாக உடைந்ததில் தங்கையின் இறப்பிற்கான காரணத்தை கண்டறிய மறந்திருந்தான்..

அமிர்தவர்ஷினி காட்டிய அன்பிலும் அக்கறையிலும் தான் மெல்ல மெல்ல தேறி.. அருந்ததியின் இறப்பை ஏற்று கொண்டு வாழ பழகி இருந்தனர்.. ஆனால் அவ்வப்போது அவளின் நினைவில் கண்ணீர் வடிப்பவர்களை மருமகளாகவும், மகளாகவும் இருந்து வர்ஷினி தான் தேற்ற வேண்டியதாக இருக்கும்..

புகைப்படத்தையே உள்ளம் நொறுங்க வெறித்திருந்தவனின் தோளில் ஒரு கை பதிய.. அந்த கரத்திற்கு சொந்தக்காரி தன் காதல் மனைவி தான் என்பதை திரும்பாமலே உணர்ந்த நிரல்யன் அப்படியே நின்றிருந்தான்..

நிரல்யன் சென்ற சிறிது நேரத்திலே வர்ஷினிக்கும் முழிப்பு வந்ததில் கணவனை காணாமல் வீடு முழுவதும் தேடியவள் பின்பு சோர்ந்து போய் அறைக்குள் முடங்கியவள், சத்தம் கேட்டு தான் மீண்டும் வெளியில் வந்தாள்..

கணவனின் முகத்தை தன் கரங்கள் கொண்டு தாங்கிய வர்ஷினி "நிரல்.. அரு எங்கையும் போகலடா.. நம்ம கூட தான் எப்பவும் இருப்பாங்க.. அவளுக்கு உங்களைய விட்டுட்டு போக முடியுமா என்ன..? ம்ம்ம்ம் நீயே சொல்லு.." என்றாள் கேள்வியுடன்..

"அதான் போய்ட்டாளே பொண்ணு.. பட்டாம்பூச்சியா பறந்து திரிஞ்சவ ஒரே நாளுல சாம்பலா மாறிட்டா.. அவ இல்லங்கறதை இன்னும் என்னாலயே ஏத்துக்க முடில.." என்றபடி இறுக்கமாக துணைவியை அணைத்து கொண்டான்..

மற்ற விஷயங்களை இலகுவாக கையாள்பவன் தங்கையின் விசயத்தில் மட்டும் யோசிக்க மறந்து விடுகிறான்.. காரணம் தன்னை சேர்ந்தவருக்கு ஒன்றென்றால் மட்டும் மூளை மழுங்கி விடுகிறதோ என்னவோ..

"நிரல் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு சொல்லட்டுமா..?" என்று கணவனின் பின்கேசத்தை கோதியபடி பெண்ணவள் கேட்க, தங்கையின் நினைவில் உழன்றிருந்த நிரல்யனும் "ம்ம்ம்ம்.." என்றான்..

"எனக்கு என்னவோ அரு உயிரோடு தான் இருப்பாள்னு தோணுது.." என்று தான் நினைத்ததை கூறியும் விட்டாள்.. விலுக்கென்று அவளிடமிருந்து விலகிய நிரல், "என்ன சொல்ற..?" என்று அதிர்வலை தாங்கிய முகத்துடன் வினவினான்..

"எஸ் எனக்கு இந்த சந்தேகம் ஆரம்பத்துல இருந்தே இருக்கு நிரல்.. நீங்க ஏன் அரு எப்படி இறந்தாங்கனு யோசிக்கல.. அப்படி யோசிச்சு பார்த்திருந்தா பல கேள்விகளுக்கு பதில் கிடைச்சு.. அரு உயிரோடு இருக்காளா..? இல்லையானு தெரிஞ்சுருக்கும்.." என்று முடித்தாள்..

குழப்ப ரேகைகள் மனதை சூழ்ந்து நர்த்தனமாட, ஒரு வேளை இதுவும் உண்மையா இருக்குமோ..? என்று பலவிதமான சிந்தனைகள் எழுந்து அவனை மீட்டெடுக்க, தங்கைக்கு அண்ணனாக யோசித்தபோது தோன்றாத வினாக்கள் அதே காவல் அதிகாரியாக யோசிக்கும் சமயத்தில் நிறையவே தோன்றின..

"எப்படி பொண்ணு..?" என்று புருவங்கள் மேலேற கேட்ட கணவனுக்கு சின்ன சிரிப்பை பதிலாக குடுத்த வர்ஷினி "நான் போலீஸ்காரன் பொண்டாட்டியாக்கும்.." என்று இல்லாத காலரை தூக்கி விட்டு கண்சிமிட்டியவாறு மொழிந்த மனையாளை மீண்டும் தழுவி கொண்டது ஆடவனின் கரங்கள்..

கையில் இருந்த புகைப்படத்தில் மீண்டும் நிரல்யனின் விழிகள் பதிய, அதில் புன்னகையுடன் இருந்தது சாண்டி அன் கோ - விடம் கிழவியாக அறிமுகமான நிரல்யனின் செல்ல தங்கை அருந்ததியே..

புரியாத பல மர்மங்கள்
அவிழ்க்க படுமா..? இல்லை
அதனுடன் சேர்ந்து இவர்களும்
மர்மமாவார்களா?
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 9...

கால்கள் நகர மறுத்தால் கூட அவன் உணர்வுகள் மற்றவர்களை போல் அவனை விட்டு
செல்லவில்லை...

அவன் தான் மனதிலும் உடலளவிலும் திடகாத்திரமானவன் ஆயிற்றே...

இங்கு இவ்வளவும் நடக்க யார் காரணம்????

எதற்கு தங்களை இவ்வளவு துன்புறுத்த வேண்டும்???

தாங்கள் ஏதேனும் தவறிழைத்து விட்டோமா???

அப்படியானால் தாங்கள் இழைத்த தவறுதான் என்ன???

அதிதி எங்கே???

யார் அந்த கிழவி வேடம் போட்ட அருந்ததி???

என்று பல கேள்விகள் அவன் தலைக்குள் ஓடிக் கொண்டிருக்க...

அவனின் முகமோ பாறையை விட கடுமையாக இறுகி போய் இருந்தது...

அங்கு அவர்களுக்கு உடல் அசைக்க முடியாமல் முடக்கம் ஆகும் மயக்க மருந்து அடிக்க பட்டிருந்ததினாலயே மற்ற மூவரும் மயக்கமடைந்திருக்க ஆனால் சாண்டில்யனுக்கோ அதின் தாக்கம் உடனே அவனை சென்று அடையவில்லை...

அவன் பார்க்கும் வேலையில் அவன் எடுத்த பயிற்சிகளின் வீரியம் அப்படி போலும்...

தனக்குள் ஓடிய கேள்விகளுக்கு விடைகள் தேடி களைத்தவனின் மூளையும் ஒரு கட்டத்தில் சோர்வடைய மயங்கி சரிந்திருந்தான் சாண்டில்யன் சிபிஐ (Central Bureau of investigation) ஆபிசர்...

ஆம் அவன் ஒரு சிபிஐ ஆபிசரே படிக்கும் காலத்தில் இருந்தே இந்த வேலையின் மேல் அதிக பற்று வைத்திருந்தவன்...

நினைத்தது போலவே தன் இலக்கை வெற்றிக்கரமாக அடைந்தும் இருந்தான்...

இந்த வேலையில் ரகசியம் காக்க வேண்டி பல கட்டாயங்கள் இருக்க அதனாலயே இவன் இப்படி ஒரு உத்யோகத்தில் இருக்கிறான் என்பது நிறைய பேருக்கு தெரியாத ஒரு விடயமே...

அவன் மயங்கி சரியும் முன் அவன் கண்கள் கண்ட காட்சியை அப்படியே அவனின் மூளை புகைப்படமாக்கியது...

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

" எடுத்துக்கங்க அத்தை..." என்று தன் கணவனின் தாயின் முன் காபியை நீட்டியவாரு நின்றிருந்தாள் அமிர்தவர்ஷினி...

அதை பெற்றுக் கொண்டவரோ வர்ஷினியின் கை பிடித்து தன் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டார் அவர் லஷ்மி நிரலின் தாய்...

" எப்போ பாரு எதாவது வேலை பண்ணிகிட்டே இருக்க வேண்டியது... கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுதுக்க மா... " என்றார் அவளின் தலையை வஞ்சையாக வருடிக் கொண்டே...

அவளோ அவரின் பாசத்தில் நெகிழ்ந்தவள்
" அப்படியெல்லாம் இல்ல அத்தை சும்மா இருக்குறதுக்காக வேலைய பார்த்துகிட்டு இருக்கேன் அவ்ளோ தான்...
இவ்ளோ நாள் நீங்க தானே இதெல்லாம் பண்ணுனீங்க... இனி நீங்க ரெஸ்ட் எடுங்க நான் எல்லாத்தையும் பார்த்துக்கறேன் ஓகே தானே அத்தைமா..." என்றாள் தன் அத்தையின் கன்னம் கிள்ளி கொஞ்சும் குரலில்...

"க்கும் ஆமா ஆமா ஆரம்பத்துல கல்யாணம் பண்ணி வந்த நேரம் மட்டும் உன் அத்தை இப்படியெல்லாம் உன்னைய மாதிரி பண்ணி இருந்தானா நல்லா இருந்து இருக்கும்... நீ சொல்லுறதும் நியாயம் அப்பறம் நானும் உன் புருஷன் மாதிரி எம் பொண்டாட்டிக் கூட ரொமான்ஸ் பண்ணி இருப்பேன்... ஆனா உன் அத்தை தான் கடுவன் பூனையாச்சே அருந்ததி பொறந்து அவளுக்கு 5 வயசு ஆனா அப்றம் தான் சமைக்கவே கத்துக்கிட்டா..." என்று
காபியை ருசித்துக் கொண்டே சோகமாக கூறுவது போல் கூறினார்
அவர் நிரலின் தந்தை வெங்கடாசலம்...

அதை கேட்டு வர்ஷினியோ வாயில் கைவைத்து முத்துப் பற்கள் தெரிய அழகாக சிரித்தாள்...

லஷ்மியோ தன் கணவரை கண்களாலயே பஸ்பம் ஆகிக் கொண்டிருந்தார்...

அதை பார்த்த வர்ஷினியோ இங்கு ஒரு தரமான சம்பவம் நடக்க போகிறது என்பதை அறிந்துக் கொண்டவள்
" சரி ட்ராவல் பண்ணினது ரொம்ப டயர்ட் ஆ இருக்கும் இரண்டு பேரும் நல்லா ரெஸ்ட் எடுதுக்கங்க... " என்றவள் மெதுவாக எஸ் ஆகி அங்கிருந்து சமையலறைக்குள் புகுந்துக் கொண்டாள்...

அவள் சென்றதுமே அங்கு ஒரு போர்க்களமே நடந்தது என்றாள் மிகையாகாது...

சில பல மனக்காயங்களால் நேற்றிக் கடனுக்காக வேண்டி இருந்தவர்களோ புதுமண தம்பதியர்களுக்கு தனிமை கொடுத்துக் கிளம்பியவர்கள் நேற்று மாலை தான் திரும்பி வந்திருந்தனர்...

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

முதலில் கண்களை மெல்ல திறந்தவளிற்கு அனைத்துமே இருட்டாக தெரிய மீண்டும் கண்களை இறுக்க மூடி திறக்க தான் மெல்ல மெல்ல அனைத்தும் தெரிய ஆரம்பித்தது...

கண்களை சுழல விட்டவளிற்கோ ஒரு தனி மெல்லிய வெளிச்சத்துடன் கூடி அறைத்தான் முதலில் புலப்பட்டது...

சிறிய ஜன்னல் ஒன்றின் ஊடாக வெளிச்சம் வந்துக் கொண்டிருக்க அந்த இரவு நேர பௌர்ணமி நிலவு பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக தெரிந்தது...

அந்த அறையில் அவளை கட்டிப் போடப்பட்டிருந்த கதிரையை தவிற வேற எந்த பொருட்களும் இருக்கவில்லை...

கைகளை விடுவிக்க முயச்சித்தவளுக்கோ எவ்வளவு முயன்றும் தோல்வியே எஞ்சியது கைகள் வேறு மரத்துப் போய் இருந்தது...

"ப்ச்.." என்று சலித்துக் கொண்டே திரும்பியவள் அதிர்ந்து போய் " அய்யோ அம்மாஆஆ பேய்ஈஈஈ..." என்று நான்கு ஊரிற்கு கேட்க கத்த...

அவளுக்கு பக்கவாட்டில் அவளை போலவே கதிரையில் கைகால்கள் கட்டிப்போட்டப்பட்ட படி தலைவிரிக்கோலமாக அவளையே வெறித்துக் கொண்டிருந்தாள் அதிதி...

அதை பார்த்து தான் தொண்டை தண்ணீர் வற்ற கத்தி இருந்தாள் அருந்ததி...

" ஏய் சீ நிறுத்து நீயே ஒரு பேய் நீ என்ன பார்த்து பயந்து கத்துறியா கிழவி…" என்று அவளை பார்த்து ஏகத்துக்கும் எகிறினாள் அதிதி...

அப்போது தான் அது அதிதி என்று தெரிந்து மேல் மூச்சி கீழ் மூச்சி வாங்கி தன்னை ஆசுவாசமாக்கிக் கொண்டவளோ அதிதி பேச்சில் மீண்டும் அவளின் பிபி ஏகத்தக்கும் ஏகிறிவிட்டது...

" ஏய் யார பார்த்தது பேய், கிழவி னு சொல்லுறா... உன்ன..."என அடிக்க முயச்சிதவளுக்கோ அப்போது தான் நினைவு வந்தது தன் கைகள் கட்ட பட்டிருப்பது அதில் கடுப்பானவள் முகத்தைத் திருப்பி சலித்துக் கொண்டே அமர்ந்து விட்டாள்...

அதை பார்த்த அதிதியோ வாய்விட்டு சிரித்தவள்
" என்ன அடிக்க போறியா...
எங்க அடி பார்போம்...." என்று அவளை மேலும் வெறுப்பேற்றி கலாய்த்தாள்...

அதை அருந்ததி கேட்டும் கேக்காதவள் போல் அமர்ந்து விட்டாள்...

சிறிது நேரம் அமைதியாக கழிய அப்போது தான் தன் நண்பர்களின் நினைவு வந்தது போலும் அதிதியிற்கு...

தான் எப்படி இங்கு வந்தோம் என்பதை நினைவு கூர்ந்தாள்...

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

மாதங்கியும் அவளும் தூயில்க் கொண்டிருக்க திடீர் என கேட்ட ஏதோ சத்ததில் திடுக்கிட்டு விழித்தாள் அதிதி...

அவளோ தன் கண்களை அங்கும் இங்கும் சுழல விட மீண்டும் கேட்டது அந்த சத்தம் அவர்களின் அறைக் கதவிற்கு வெளியில் கேட்டது...

பயத்தில் திரும்பி மாதங்கியை பார்க்க அவளோ அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள்...

அவளை எழுப்பவும் மனம் இல்லை ஏற்கனவே பயத்தில் இருப்பவளை மீண்டும் பயம்புருத்த அவளிற்கு துளியும் மனம் விரும்பவில்லை...

மெதுவாக கட்டிலில் இருந்து எழுந்தவள் அறைக் கதவின் பிடியில் கை வைக்க மீண்டும் கேட்டது அந்த சத்தம்...

பதற்றமானவளோ முயன்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டே
எச்சிலைக் கூட்டி விழுங்கியவளுக்கு நாவெல்லாம் வறண்டு போனது என்பதே உண்மை...

கதவை மெல்ல திறந்து எட்டு பார்தவளுக்கு தெரிந்தது என்னவோ எந்த சப்தமும் இல்லாத மயான ஹால் மட்டுமே...

ஒரு பக்கம் பார்த்து விட்டு
மறு பக்கம் திரும்பியவளிற்கு என்ன நடந்தது என்று அவளுக்கே தெரியவில்லை விழித்து பார்த்த நேரம் இந்த அறையில் கட்டிவைக்கப் பட்டிருந்தாள்...

எவ்வளவு சத்தமாக கத்தியும் அழைத்தும் அவளை யாரும் வந்து பார்க்கவில்லை எந்த பிரயோசனமும் இல்லை...

சிறிது நேரத்திலே மீண்டும் மயங்கியவள் எழுந்து பார்க்கும் போது அவள் பக்கத்தில் அருந்ததி மயங்கி இருந்தாள்...

இதை யோசித்துக் கொண்டிருந்தவளை களைத்தது அருந்ததியின் கத்தல் சத்தம்...

"ச்சு ஏன் இப்டி பேய் மாதிரி கத்துற அது சரி நீ தான் உண்மையிலயே பேய் ஆச்சே... "என்றாள் அதிதி நக்கல் தோனியில்...

" இங்க பாரு திரும்ப திரும்ப அப்டி சொல்லிட்டு இருக்காத... அப்றம் நான் என்ன பன்னுவனு எனக்கே தெரியாது..." என்றாள் அருந்ததி கடுமையாக...

அதை கண்டுக்கொள்ளாத அதிதியோ "ஏன் ஏன் சொல்ல கூடாது... உன்னால தானே இவ்ளோ பிரச்சினையும்... உன்னால தானே நாங்க இங்க வந்து இப்டி மாட்டிட்டு இருக்கோம்... " என்று கத்தினாள் அருந்ததியை விட கடுமையாக...

இதை கேட்டவளோ வாயடைத்து போய் விட்டாள் என்றே சொல்ல வேண்டும்...

உண்மை தானே தான் தானே அவர்களை இதில் வேண்டும் என்றே சிக்க வைத்தது...

அதை நினைத்தவளுக்கோ குற்றஉணர்வாக இருக்க அதிதியை பார்க்காமல் தலை குனிந்துக் கொண்டவள் "சாரி..." என்றாள் நலிந்த குரலில்...

" இப்போ சாரி கேட்டு என்ன ஆக போகுது... தெரிஞ்சி தானே இத பண்ணுன... இப்போ ஏன் சாரி கேக்குற... "என்றாள் வெருப்பாக வெறுமையாக...

அதைக் கேட்ட அருந்ததிக்கோ லேசாக கடுப்பாகி விட்டது... தான் ஒன்றும் இதை வேணும் என்றே செய்யவில்லை என்ற போதிலும் அவள் இப்படி கூறியதில் கடுப்பாகி விட்டாள்...

"நான் ஒன்னும் வேனும்னே பண்ணல… சந்தர்ப்ப சூழ்நிலையால தான் அப்படி பன்னேன்... என் நிலைமைல யார் இருந்திருந்தாலும் இப்படி தான் பண்ணி இருப்பாங்க... நீ உட்பட...."என்றாள் சோகம் இழையோட...

"ஓஓஓஓ அப்படியா அப்படி என்னமா பொல்லாத சந்தர்ப்பசூழ்நிலை..." என்றாள் கிண்டலாக அதை புரிந்துக் கொண்ட அருந்ததியோ அதிதியை முறைத்துக் கொண்டே தான் எப்டி இங்கு வந்தோம் என்பதை கூறலானாள்...

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அன்று காலை கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தவளோ தன் அன்னை ஊட்டும் உணவை உண்டுக் கொண்டே தன் முன் ஸ்டேஷனிற்கு செல்ல ஆயத்தமாகி வந்த அண்ணனை பார்த்து
" என்ன அண்ணா வர வர உன் ஸ்டைல் கூடிடே போகுது... அதற்கு ரக்சியம் என்னவோஓஓ..." என்றாள் கிண்டலுடன் கூடிய இழுவையாக...

அதை கேட்டு சின்ன வெட்க சிரிப்பை உதிர்த்தவனோ "அதுலாம் ஒன்னு இல்ல குட்டிமா... உன் கண்ணுக்கு தான் அப்டி தெரிது போல... " என்றான் அவளின் தலையை வருடிக் கொண்டே...

"என்ன வெக்கம்லா படுற... ஓஓஓ அண்ணி செய்த மாயமோ..."என்றாள் கேலிலாக...

அதை கேட்டு சிரித்துக் கொண்டே அவளின் கன்னத்தை கிள்ளியவன் கிளம்ப எத்தனிக்க அவனை தடுத்தது நிறுத்தியது வர்ஷினியின் குறல்...

அதைக் கேட்டு திரும்பியவனோ என்னவென பார்த்தான்

"வரும் போது பூ வாங்கிட்டு
வாங்க... "என்று அவள் எதையோ நினைத்து சொல்ல அவன் எதையோ நினைத்துக் கொண்டான் போலும்...

அதற்கு தன் முத்துபற்கள் தெரிய சிரித்தவனோ சரி என தலையாட்டி விட்டு "பார்த்து போய்ட்டு வா குட்டிமா...போய்டு வறேன் மா... "என்றவன் வர்ஷினியை பார்த்து தலையசைத்து விட்டு தன் ஜீப்பை எடுத்துக் கொண்டு பறப்பட்டிருந்தான் தன் ஸ்டேஷனை நோக்கி...

ஆம் அவர்களுக்கு கல்யாணமாகி சில நாட்களே ஆகி இருந்தது...

தன் தங்கையை இனி தான் பார்க்க போவதில்லை என்பதை அறியாமல் சந்தோஷமாக புதுமாப்பிள்ளைக்குறிய வெட்கம் கலந்தப் புன்னகையுடன் கிளம்பி இருந்தான்...

உண்டு முடித்த அருந்ததியோ இவ்வளவு நேரம் இங்கு நடந்த சம்பாஷணைகளை புன்சிரிப்புடன் கேட்டுக் கொண்டே செய்தி வாசித்துக் கொண்டிருந்த தன் தந்தை வெங்கடாசலமிடம் வந்தவள்...

"அப்பா ம்ம்ம்..."என்று கையை நீட்ட செய்தித்தாளை மடித்து வைத்தவர் தன் பாக்கெட்டில் இருந்த சாக்லேட்டை எடுத்து அருந்ததியிடம் நீட்ட அவளும் சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டவள் தன் அப்பாவிற்கு ஒரு முத்தத்தையும் சாக்லேட் வாங்கியதால் திட்டிக் கொண்டிருந்த அம்மாவுக்கு ஒரு முத்தத்தையும் கொடுத்தவள் புதிதாக தங்களுடன் சேர்ந்துக் கொண்ட அண்ணிக்கும் ஒன்றை கொடுத்தவள் தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு பறந்து இருந்தாள்...

சிக்னல் சிகப்பு நிறத்தில் விழ வண்டியை நிறுத்தியவளுக்கு இருபக்கமும் அவளை மறைத்தாற் போல் வந்து நின்றது இரு வேன்கள்...

சிறிது நேரத்திலயே பச்சை நிற சமிக்ஞை விழ அந்த இரு வேன்களும் கிளம்ப அருந்ததி வந்த வண்டியை அருந்ததியின் மகன் என்று சொன்னவர் ஓட்டிக் கொண்டு சென்றார்...

"டேய் யார்ரா நீங்கள்லாம் என்னை ஏன் கடத்திட்டு வந்து இருக்கிங்க என்னை விடுங்க..."என்று தன் கைகளை விடுவிக்க போறாடியவாறே தன் முன் முகமூடி அணிந்திருந்த நேத்ரனை பார்த்துக் கத்திக் கொண்டிருந்தாள்...

அவனோ அதற்கு சிறிதும் அசராதவன் எதுவும் கேட்காதவன் போல் தன் பக்கவாட்டில் நின்றிருந்த ஜோனை பார்த்து ஏதோ பேசிக் கொண்டிருந்தான்...

அவளோ கத்துவதை நிறுத்துவதாக இல்லை ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நேத்ரன் அவளின் கன்னத்தில் ஓங்கி அறைய தானாக மூடியது அவளின் வாய்...

"என்ன ஓவர்ஆ கத்திட்டு இருக்க... இப்போ நீ வாய மூடிட்டு இருக்கனும் இல்ல அவ்ளோ தான் சொல்லிட்டேன்..." என்றான் கத்தியை காட்டி மிரட்டலாக...

அதில் கொஞ்சம் ஜெர்க் ஆகியவள் மெதுவாக
"என்ன எதுக்கு கடத்திட்டு வந்திங்க..." என கேட்க...

அதற்கு அந்த அறையே அதிரும் அளவிற்கு சிரித்தவன் அவளை பார்த்து " அது உனக்கு தேவை இல்லாதது... உன்னால எங்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கு பண்ணுவியா... " என்றான் கட்டளையாக...

" ஹலோ யாரு நீங்க எதுக்கு என்னை கடத்திட்டு வந்திங்க... நீங்க சொல்லுறத நான் எதுக்கு கேட்கனும்... என்ன விடுங்க நான் என் வீட்டுக்கு போகனும்..."என்று பிடிவாதமாக கைகளை விடுவிக்க முயல...

"ஏய் அடங்கு நாங்க சொல்லுறத நீ கேட்டு தான் ஆகனும்... உனக்கு வேற வழி இல்ல..."என்க "என்னால முடியாது என்ன விடு... எங்க அண்ணனுக்கு மட்டும் இது தெரிஞ்சா உங்க யாரையும் சும்மா விடமாட்டான்... " என்றாள் திமிரா...

அதை கேட்டு அங்கு இருந்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர் அருந்ததியோ அவர்களை புரியாமல் பார்க்க...

அவளை பார்த்து சிரித்துக் கொண்டே டேவிட் "ஹேலோ மேடம் நீ உயிரோட இருக்கிறதே உன் அண்ணாக்கு தெரியாது... நீ செத்துட்டதா நினைச்சி ஒப்பாரி வைச்சிட்டு இருப்பான்... எல்லாம் பக்காவ என் பாஸ் போட்ட ப்ளான்... நீ உயிர்ரோட இருக்குறதே தெரியாதப்போ உன் நொண்ணன் எப்டி உன் தேடி வருவான்... "என்று நக்கலாக கேட்டுக் கொண்டே மேலும் நகைத்தான்...

அருந்ததியோ திகைத்துப் போனாள்... அவள் இதை கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை என்பது அவளது வெளிறிய முகமே பறைசாற்றியது...

"என்ன சொல்றீங்க... எனக்கு புரியல... "என்றாள் குரல் நடுங்க குழப்பமாக...

நேத்ரனோ மார்க்கை பார்த்துக் கண் காட்ட அதை புரிந்துக் கொண்ட மார்க் அருந்ததியின் முன் ஒரு லாப்டாப்பை வைக்க அதை பார்த்தவளோ ஏகத்துக்கும் அதிர்ந்து போய் விட்டாள்...

அதில் அவளின் அண்ணா, அண்ணி, அம்மா ,அப்பா என அனைவரும் அவளை போலவே உள்ள ஒரு சடலத்தின் முன் இருந்து அழுதுக் கொண்டிருந்தனர்...

அதே அதிர்ச்சியுடன் ஐவரையும் அவள் நிமிர்ந்து பார்த்து "உங்களுக்களாம் என்ன வேணும்... ஏன் இப்படிலாம் பண்றீங்க..." என்று அழுகுரலில் கேட்க...

"பெருசா ஒன்னும் தேவல... நாங்க சொல்லுற படி நீ கேட்டு நாங்க சொன்ன வேலைய முடிச்சி கொடுத்தினா... நீ தாராளமா உங்க வீட்டுக்கு போகலாம்... " என்க அடுத்த நொடி "என்ன செய்யனும்... " என்றாள் கண்களை துடைத்துக் கொண்டே...

நேத்ரனும் செய்ய வேண்டியதை சொல்ல அவளோ உடனை "இல்ல இல்ல என்னால இப்படிலாம் பண்ண முடியாது... ப்ளீஸ் என்ன விட்டுடுங்க..." என்று கெஞ்ச.......

நேத்ரனோ "ஏய் ஓவர் ஆ பண்ணாதே... நாங்க சொல்றத நீ பண்ணி தான் ஆகனும்..... இல்லனு வை இது என்னனு தெரியுமா..." என்று கையில் இருந்த சிறிய ரிமோர்ட் ஒன்றை காட்டி கேட்க அவளோ தெரியாது என்ற விதமாக தலையை வலமும் இடமுமாக ஆட்டினாள்...

"இது வெடிகுண்டை ஓப்ரேட் பண்ணுற ரிமோர்ட்... அந்த பாம் எங்க இருக்கு தெரியுமா உன் வீட்டுல... இத நான் ஒரு அழுத்து அழுத்தினா போது உன் மொத்த வீடும் வெடிச்சி சிதறிடும்... " என்று கூறிக்கொண்டே நகைக்க...

அவளோ ஸ்தப்பித்துப் போய் அவர்களை பார்த்தாள்...

"என்ன இத அழுத்தவா... " என்று கேட்டுக் கொண்டே நேத்ரன் பட்டனில் கை வைக்க அவளோ பதறிபோய் "இல்ல வேணா வேணா நான் நீங்க சொன்னத பண்ணுற எதும் பண்ணிடாதிங்க என் குடும்பத்த... "என்றாள் அழுகையோடு...

அதை கேட்ட ஐவரின் முகத்திலும் குரூர புன்னகை தோன்றியது...

இதற்கு பிறகே அவள் பாட்டி வேடம் போட்டது சாண்டி அன் கோ வை ஏமாற்றியது அனைத்துமே...

ஆனால் அவளுக்கோ வருண் எப்படி இறந்தான் எப்படி மீண்டும் வந்தான் என ஒன்னுமே தெரியாது...

அன்று இரவு அருந்ததியிடம் வந்த முகமூடி அணிந்த நேத்ரன் வருணின் அறைக்கு சென்று அவனை மயக்க கூறினான்...

இவர்களின் இந்த கதை சத்ததில் தான் வருண் எழுததும் அருந்ததியை பெண்ணாக பார்த்ததும்...

எப்டியோ அவனுக்கு சந்தேகம் வராமல் தப்பித்தவர்கள் இரண்டாவது முறை அவனை மயக்கமடைய செய்ய அருந்ததி கிட்ட நெருங்கிய நேரம் அவன் விழித்ததும் அவன் நேத்ரனை பார்த்து விடக்கூடாது என்பதற்காக முத்தமிட்டதும்...

மற்றபடி வருணிற்கு என்ன நடந்தது என்று அருந்ததியிற்கே தெரியாது என்பதே உண்மை...

அவளும் அவர்கள் அவள் காதில் பொருத்தி இருக்கும் கருவியில் கூறுபவைகளை கேட்டு பொம்மை போல் நடந்துக் கொள்வாள்...

அன்றும் அதே போல் அவர்களை கண்காணித்துக் கொண்டிருந்தவர்களுக்கு அருந்ததி வருணை விருப்புவது தெரிய வர...

அவளிடம் நடக்கும் விடயங்களை தெரியாதது போல் கேட்டவர்கள் பின்பு அவள் வருணை விரும்புவது தெரியும் எனவும் நீ அவர்களிடம் எதவாது கூறினால் உன் குடும்பத்தை கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள்...

இறுதியில் அவளின் மேல் நம்பிக்கை இல்லாமலயே அவளையும் மற்றவர்களையும் அந்த சுரங்கத்தில் மாட்ட வைத்து அவளை மீண்டும் கடத்தியது...

ஆனால் இப்போது வரை அந்த ஐவரும் யார் என்று அருந்ததியிற்கு தெரியாது முகமூடி அணிந்த காரணத்தினால்....

தனக்கு தெரிந்த அனைத்தையும் அருந்ததி கூறி முடிக்க அதிதிக்கோ பேச வார்தைகள் இல்லை அங்கு ஒரு மயான அமைதியே அங்கு நிலவியது...

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

சாண்டில்யனோ வருண்னின் அறையில் இருந்து அந்த முழு நிலாவை வெறித்துக் கொண்டிருந்தான்...

அங்கு இருந்த படுக்கையில் வருண் தூங்கியிருந்தான்....

மயக்கமடைந்த நால்வரும் விழிக்கயில் அவர்கள் இருந்தது என்னவோ வருணின் அறையில் தான்...

தங்களுக்கு நடந்தது அனைத்தும் கனவோ என தோன்றாமல் இல்லை அவர்களுக்கு ஆனால் அருந்ததி இல்லாதது தான் அவர்களுக்கு நிதர்ச்னத்தை உணர்த்தியது...

அவர்கள் விழுந்த அந்த சுரங்கம் நுழையும் இடத்தை போய் பார்த்தால் அதோ மற்றய தரைகள் போல் சாதாரண தரையாகவே இருந்து...

அவர்கள் நால்வருக்கும் தான் மேன்மேலும் குழப்பமே மிஞ்சியது...

அதை யோசித்த சாண்டில்யனுக்கோ ஒன்றும் புரியவில்லை...

அக்காவின் திடீர் திருமணத்தில் கோபம் மற்றும் வருத்தம் என கலவையான உணவுகளில் தத்தளித்தவன்...

அதிதியின் பிரிவில் மொத்தமாக உடைந்து தான் போனான்....

அதில் அவனின் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போக சில நாள் வேலையிற்கு விடுப்பு எடுத்திருந்தான்...

அப்போது பார்த்து நண்பர்கள் அவனை வெளியில் அழைக்க மனமாற்றதுக்காக கிளம்பி வந்தவன் இப்டி ஒரு சிக்கலில் மாட்டி விட்டான்...

இப்போது அவனின் தொழில் குழுவை கூட தொடர்புக் கொள்ள முடியாத கையாலாகத நிலையில் இருப்பதை நினைத்து தன்னையே கடிந்துக் கொண்டான்...

ஆனால் அவன் அவசரத்திற்கு உதவும் என எடுத்து வந்த அந்த பொருள் அவனிடம் இருப்பது ஓர் சிறிய நிம்மதியே...

அதே நேரம் விதுரன்னும் தன் அறையில் சளாரத்தின் ஊடாக அந்த நிலவைத் தான் வெறித்துக் கொண்டிருந்தான்...

அவன் மனமோ குற்ற உணர்வில் தத்தளித்துக் கொண்டிருந்தது தன்னால் தான் தன் நண்பர்களுக்கு இந்த நிலை என்று...

அதே சமயம் அதிதி மற்றும் அருந்ததி இருந்த அறைக்கு பக்கத்து அறையில் மௌனமாக கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் பேதை பெண் ஒருத்தி...

அவிழ்க்கப்படும் முடிஞ்சுகளுடன் தொடர் முடிச்சிகள்...

முடிச்சிகள் அவிழ்க்க படுமா இல்லை மொத்தமாக அறுந்து விழுமா...

காத்திருப்புடன்...
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 10

'இவள் சொல்வதை நம்பலாமா? இல்லை இதுவும் இவர்களின் நாடகமா?' என்று தளம்பலான மன நிலையில் அதிதி அருந்ததியை ஆராய்ச்சி பார்வை பார்க்க, அவளை அடிப்பட்ட பார்வை பார்த்த அருந்ததியோ சலிப்பாக தலையை ஆட்டிக் கொண்டாள்.


அதிதி இடத்தில் அவள் இருந்திருந்தால் கூட தங்களை சிக்கலில் மாட்டி விட்டவளே, 'நானும் அதே சிக்கலில் தான் சிக்கிக் கொண்டிருக்கிறேன். எனக்கும் எதுவும் தெரியாது' என்று சொன்னால் அவளும் சந்தேகிக்க தானே செய்வாள்.


அதிதி நம்பவில்லை என்று கோபமெல்லம் இல்லை. தன் பேச்சை யாரும் நம்ப தயாராக இல்லை என்ற வருத்தம் தான் அவளுக்கு. தன்னை இந்த நிலைக்கு தள்ளிய அந்த கயவர்கள் மீது தான் கோபம், கொலைவெறி எல்லாம் வந்தது.


தன் உணர்வுகளை புறம் தள்ளியவள், "இங்க பாரு, நீ என்னை நம்பு நம்பாம போ, அதை பத்தி எனக்கு கவலை இல்ல, நாம இங்க இருந்து தப்பிக்கிறது தான் முக்கியம்" என்று சொன்ன அருந்ததியை இன்னமும் சந்தேக கண்ணோடு பார்த்தவள், 'மறுபடியும் எங்கேயாவது கொண்டு தள்ளி விட்டுருவாளா? இவளை விட்டா நமக்கும் வேற வழி இல்ல, சாண்டி வந்து காப்பாத்துவானு வெயிட் பண்ணா ஆண்டி ஆக வேண்டியது தான். முதல் நம்ம கூட்டத்தோட சேருவோம். அதுக்கு அப்புறம் இவ பாட்டியா? பியுட்டியா? தீஞ்சி போன ரொட்டியானு? கண்டுபிடிக்கலாம்' என்று எண்ணிக் கொண்டவள் வேறு வழியின்றி அவளுடன் இணைய தலையசைத்தாள்.


அவள் சிறு தலையசைப்பே அருந்ததிக்கு நிம்மதியை கொடுக்க, அவள் இதழ்களோ மெலிதாக புன்னகைத்துக் கொண்டது. உடனே அதிதி, "உன் பேச்சை கேட்டு ஒத்துகிட்டேனு ரொம்ப சந்தோசபடாத, இன்னமும் நீ வான்டட் லிஸ்ட்ல தான் இருக்க கிழவி" என்று நக்கலாக சொல்ல, மீண்டும் கிழவி என்ற விழிப்பு அவளை கடுப்பாக்கியது.


"மறுபடியும் இந்த மாதிரி என்னை கூப்பிடாத, காண்டாவுது" என்று எச்சரிக்கை செய்ய நினைத்தவள் வார்த்தைகளோ பாவமாக தான் வந்தது. "நான் ஒன்னும் கிழவி இல்ல. என்னை இந்த வேசம் போட வைச்ச அந்த தீவெட்டி தடியன் மட்டும் என் கையில சிக்கினா? அவன் செவில்லயே நாலு விடுவேன்" என்று மற்றவர்களின் ஏளன விளிப்பால் நொந்து சிடு சிடுத்தவளை பார்த்து அதிதியோ "யாரு நீ அடிக்க போறியா? வயசான காலத்துல எதுக்கு ஸ்டண்ட் எல்லாம் ட்ரை பண்ற கிழவி" என்று கிழவி என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து சத்தமாக சிரிக்க, தான் அமர்ந்திருந்த கதிரையிலிருந்தே காலால் அவளுக்கு ஒரு எத்துவிட்டாள் அருந்ததி.

அந்த இரவு அப்படியே கழிய, அருந்ததி அர்ச்சித்த அந்த கயவனோ! உடல் முழுவதும் வியர்வையில் குளித்தப்படி அதி உயர் வேகத்தில் டிரட்மில்லில் ஓடிக் கொண்டிருந்தவன் அகமும் புறமும் பாறை போல் இறுகியிருக்க, அவன் கண்களிலோ எதையோ அடைந்தே தீர வேண்டும் என்ற வெறி அப்பட்டமாக தெரிந்தது.

கதிரவன் கூட களைப்பில் தன் கதிர்களை பாரெங்கும் பரப்ப யோசித்து வெளி வந்துக் கொண்டிருந்த கார் காலப் பொழுதில், வழமை போல் அதிகாலையே எழுந்துக் கொண்ட நேத்ரனோ இரண்டு மணி நேரம் கடுமையான உடற்பயிற்சியை முடித்து விட்டு, தன் உடலை நனைத்திருந்த வியர்வை துளிகளை டவளால் துடைத்தபடி குளியலறைக்கு சென்றவன் தன்னை சுத்தபடுத்தி விட்டு அடுத்து சென்றது என்னவோ சமையல் அறைக்குள் தான்.

தனக்காக கிரீன் டீ தயாரித்துக் கொண்டவன், காலை உணவையும் தயாரித்து வைத்து விட்டே அலுவலகம் செல்ல தயாராக சென்றான்.

அவன் ரெடியாகி மீண்டும் சமையலறை வந்த போது அங்கு நின்றிருந்தவளை பார்த்து ஒரு நொடி பதறி தான் போனான். பாதி ஷர்ட் பட்டன்களை போட்ட படி வேகமாக அவள் அருகே ஓடி வந்தவன், அவள் கையில் இருந்த லைட்டரை பறித்து, "பேபி மா நீ ஏன் இதெல்லாம் பண்ற? அதான் நான் இருக்கேன்ல, நான் பால் சூடாக்கி தரேன்" என்று அவளுக்காக பாலை சூடாக்கி கொண்டிருந்தவன் முகத்தில் சற்று முன்னிருந்த இறுக்கம் முற்றிலும் களைந்து, அன்பும், அக்கறையும் மட்டும் தான் கரை புரண்டு ஓடியது.

ஏழு மாத மேடிற்ற வயிற்றுடன் அவனை முறைத்துக் கொண்டிருந்த அவன் மனைவி துளசியோ, "அடேய் உன் அலப்பரைக்கு அளவே இல்லையா? பால் தானே காய்ச்ச போனேன். ஏதோ பாரங்கல்ல தூக்கின போல பதருற " என்று கணவனின் அதீத கவனிப்பில் அலுத்து கொண்டவள்,



"அதுவும் முதல் குழந்தையா இருந்தா கூட உன் அக்கறை சர்க்கரை, பொறுப்பு பருப்பெல்லாம் ஏத்துக்களாம். மூனாவது புள்ள டா. இவ்வளவு வேணாம் கொஞ்சம் அடக்கி வாசிப்போம்" என்று நக்கலடிக்க, அதையெல்லாம் சட்டை செய்யாதவன் பாலை அவளுக்கு புகட்டி விட்ட படி,




"முதல் குழந்தையோ மூணாவது குழந்தையோ வலி ஒன்னு தானே? உன் அம்மாவ வந்து தங்கி பார்த்துக்க சொல்லு, நான் இதெல்லாம் பண்றத குறைச்சிக்கிறேன்" என்று அவன் கூற, அவன் புகட்டிய பாலை குடித்தபடி கண்களை சுருக்கி அவனை முறைத்தவள், "உனக்கும் உன் புருஷனுக்கும் வேற வேலையே இல்லையா? வருஷத்துக்கு ஒன்னு ரிலீஸ் பண்றீங்கனு சொல்லி என்னை கேவலமா பார்க்கிறாங்க. ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் நடுவுல அட்லீஸ்ட் ஒன் யேர் கூட கேப் விட மாட்டியானு கேட்டு எனக்கு திட்டு வேற" என்று கணவன் காதலால் அம்மாவிடம் வசவு வாங்கிய கடுப்பை எல்லாம் சேர்த்து அவன் மீது சாட,



அவனோ "இது என்ன டா வம்பா போச்சு. என் பொண்டாட்டி, நான் காதலிக்கிறேன், கசமுசா பண்றேன், குழந்தை பெத்துக்கிறேன். இதுக்கெல்லாம் உன் அம்மாகிட்ட பெர்மிஷன் கேட்கணுமா?" என்று ஏகத்துக்கும் நக்கல் கலந்த குரலில் கேட்டான்.



அவன் வெளிப்படையான பேச்சில் மேலும் அவனை முறைத்தவள், "உன்னையும் மாத்த முடியாது, என் அம்மாவையும் சமாளிக்க முடியாது. அதான் அவங்களை வர வேணாம் சொல்லி, பசங்களை அங்க அனுப்பி வச்சிட்டேன்" என்று சோர்வாக சொல்லி முடிக்க,



குறும்பு புன்னகையுடன் அவள் இடையை பற்றி தன்னருகே அணைத்துக் கொண்டவன் "அது தான் எனக்கு இன்னும் வசதியா போச்சு" என்று சொன்னபடி எப்போதும் போல் அவள் அருகாமை தந்த கிறக்கத்தில் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து வாசம் பிடித்தபடி மென் முத்தம் ஒன்றை வைக்க, சில்லிட்டிருந்த அவன் கரங்களின் ஸ்பரிசத்தில் அவளோ சுயம் மறந்து கண்களை மூடிட, அடுத்து அவன் அதரங்களோ அழுந்த படிந்தது அவள் கன்னத்தில்.



எல்லையில்லா காதலில் கரைக்கண்டவன் அறியா காதல் வித்தையா? கர்ப்பமாக இருக்கும் மனைவியை கையாளும் வழியறியாதவனா அவன்? அவள் இடையில் கோலமிட்டபடி அவள் அதரங்களை நெருங்க, அவன் எண்ணம் அறிந்தவளோ சட்டென்று அவன் மார்பில் கை வைத்து தள்ளி விட்டபடி பின்னால் நகர்ந்து நின்றாள்.



அவனோ ஏமாற்றமாக அவளை பார்க்க, அவளோ "போதும் இதோட நிறுத்திப்போம்" என்று கையை துக்கி சொல்ல, குறும்பு கண்களுடன் புன்னகைத்துக் கொண்டவன், "கரெக்ட் இப்போ வேணாம். பேலன்ஸ் நைட் பார்த்துக்கலாம். எனக்கும் ஆபீஸ்க்கு டைம் ஆகுது" என்று சொல்லியபடி டைனிங் டேபிளில் அமர்ந்தவன் வழமை போல் மனைவிக்கு ஊட்டிவிட்டே தானும் சாப்பிட ஆரம்பித்தான்.



அவளோ ஒய்யாரமாக போனில் விளையாடிய படி சாப்பிட, எட்டி அவள் போனை பார்த்தவன், "நீ இன்னும் இந்த விளையாட்டை விடலையா? கேம்ல அடிக்ட் ஆகா கூடாது" என்று சொல்லி அவள் கையில் இருந்த போனை பறித்து மேஜையில் வைத்து விட்டு தன் பணியை தொடர, அவனை பாவமாக பார்த்தவள் "ஒரு கேம் கிரியேட்டர் பேசுற பேச்சா இது? மாமூ இப்போ புதுசா என்ன புராஜக்ட் போகுது?" என்று ஆர்வமாக கேட்க, எப்போதும் அவளை ரசிக்கும் கண்களோ, அவள் கேள்வியில் வஞ்சகமாக புன்னகைத்த படி "ஹியூமன் லைவ் அலைவ் கேம் ஒன்னு போகுது. நானும் கூட அதோட ரிசல்ட்காக ஈகர் ஆஹ் வெயிட் பண்றேன். சக்சஸ் ஆன நிறைய பணம் சம்பாதிக்க முடியும்" என்று சொல்லி இதழ்களை கடக்காத குரூர புன்னகை ஒன்றை புரிந்தவன் வாய் மொழியை உணர்ந்த அவளுக்கு அவன் விழி மொழியை உணரும் திறன் இல்லாமல் தான் போனது.



கணவனே கண் கண்ட தெய்வம் என்று வாழும் பெண் அவள் இல்லை என்றாலும், கணவன் பேச்சின் பேதம் புரிந்துக் கொள்ளா மடந்தை தான் அவள். அவன் தன் மீது கொண்டுள்ள காதலே அவள் கண்ணை கட்டி போட்டிருக்க, வெற்றி மட்டுமே குறிக்கோளாக கொண்டு உழைப்பவன் மனித உயிர்களையும் பலி கொடுக்க தயங்குவதில்லை என்பதை உணராமலே போனாள்.



இப்போதும் கூட, அவனுக்கு ஆல் த பெஸ்ட் சொன்னவள் கவனத்தை கலைத்தது, அவள் கைபேசியில் வந்து விழுந்த மெசேஜ் டோன் சத்தம் தான்.



அதை எடுத்து பார்த்தவள் முகமோ இதுவரை இருந்த மகிழ்ச்சி நீங்கி கவலையை அப்பிக் கொள்ள, அவள் முகம் சுணங்கினால் அவனால் தாங்கிக் கொள்ள இயலுமா? "என்னாச்சு?" என்று கேட்டான்.



"மாமூ... நான் சொன்னேன்ல என் ப்ரெண்ட் அம்மு. அவளோட தம்பியை ரெண்டு நாளா காணோமாம். பேச்சு இல்லைனாலும் அவனை பத்தி எப்பவும் அக்கறை இருக்கு. டெய்லி அவ அப்பா, அம்மா, தம்பி பத்தி யார் மூலமாவது விசாரிச்சு வச்சிருவா. அப்படி விசாரிச்சதுல தான் ரெண்டு நாளா அவ தம்பி பத்தி எந்த தகவலும் இல்ல சொல்றா. வீட்ல அவகிட்ட இருந்த, அவ தம்பி ஃபோட்டோ வேற உடஞ்சி போனது மனசுக்கு கஷ்டமா இருக்குனு கவலையா இருக்கா" என்று தன் கல்லூரி நண்பிக்காக இவள் வருத்தம் கொள்ள, "யாரு? அந்த போலீஸ்காரன் பொண்டாட்டியா?" என்று கேட்டவன், துளசி "ஆம்" என்று சோகமாக தலையாட்டியதும் "அவ தம்பி காணாமலாம் போகல, ஒரு பொண்ண தள்ளிட்டு போய்ட்டான்" என்று ஒன்றை கண்ணை சிமிட்டி சொன்னான்.



துளசியோ, 'இது எப்படி சாத்தியம்? அவன் உத்தமன் ஆச்சே' என்னும் வகையில் அவனை அதிர்ந்து பார்க்க, "நம்ம சேர்மன் விஸ்வநாதன் இருக்கார் இல்லையா அவர் பொண்ண தான் தள்ளிட்டு போய்ட்டதா ஒரு காசிப்" என்று அவன் மூன்றாம் மனிதனாக கொளுத்தி போட, அறிவு ஜீவி அவன் மனைவியோ "ஓஹ்... இது தான் கதையா? இது தெரியாம அந்த லூசு அழுதுட்டு இருக்கா" என்று போனை எடுத்து உடனே நண்பிக்கு அழைத்தவள் 'சாண்டி அதிதியை தள்ளிட்டு போய்ட்டான்' என்று வதந்தியை பரப்ப, கொடுப்புக்குள் சிரித்த படி அவளை பார்த்துக் கொண்டிருந்தான் நேத்ரன்.



அப்போது அவன் செல்போன் ஒலிக்க, அதை எடுத்து காதில் வைத்தவன் எதிர் முனையில் சொன்ன செய்தியில் "வாட்?" என்று அதிர்ந்து கத்தியபடி "யூஸ்லெஸ்.." என்று கோபமாக திட்ட, நண்பியிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்த துளசியோ நொடியில் வெம்மை பூசி, அனல் கக்கிய கணவன் கோப முகத்தை பார்த்து அவனை அடக்கும் பார்வை பார்க்க, அவள் பார்வையில் நொடியில் தன் முகத்தை மாற்றிக் கொண்டு, விழிகளில் மட்டும் கோபத்தை தேக்கி அவளை பார்த்து சிரித்தவன், முகத்திலும் குரலிலும் அவள் முன் தன்மையை காட்ட பாடாத பாடுப்பட்டு தான் போனான்.



தன் கட்டளைகளை மென்மையாக பிறப்பித்தவன் அவள் உண்டு முடிய, அவள் நெற்றியில் முத்தமிட்டு விடைபெற்று திரும்பிய கணம், அவன் முகமோ அத்தனை நேரம் இழுத்து பிடித்திருந்த மொத்த கோபத்தையும் பிரதிபலிக்கும் முகமாக சிவந்து தான் போனது.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
……………………………………………

இங்கே வழமையை விட உற்சாகமாக சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்த தன் மனையாளை குழப்பமாக பார்த்த நிரல்யன், "என்ன பொண்ணு இன்னைக்கு முகத்துல ஏதோ ஒளி வட்டம் தெரியுது. என்ன விசயம்?" என்று ஆவலாக கேட்க, அவளும் அதே ஆவலுடன் "நம்ம கல்யாணம் ஆனதுல இருந்து சாண்டி நினச்சு கொஞ்சம் கவலையா இருந்தேன். என்னால அவன் காதலை இழந்துட்டானோனு கில்டியா இருந்துச்சு. ரெண்டு நாளா அவனை பத்தி எந்த தகவலும் இல்ல, ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இப்போ தான் நிம்மதியா இருக்கு. சாண்டி அவன் விரும்பின பொண்ணு கூட தான் போய் இருக்கான்" என்று அவள் கூற,



அவனோ "இந்த தகவல் யார் சொன்னாங்க?" என்று தான் சந்தேகமாக கேட்டான்.
போலீஸ்காரன் ஆயிற்றே நல்லது கெட்டது இரண்டையும் சந்தேக கண்ணோடு தானே பார்த்தாக வேண்டும்.



வர்ஷினி, "என் ப்ரெண்ட் துளசி புருஷன் நேத்ரன், அதிதி அப்பா கம்பனில தான் சி இ ஓ ஆஹ் இருக்கார். அவர் தான் சொல்லி இருக்கார்" என்று சொல்ல, முதலில் "ஓ.. " என்று சாதாரணமாக அதை கடந்தவன் அவள் கூறிய பெயரில் மூளை சடன் பிரேக் போட்டு நிற்க, "இப்போ என்ன பெயர் சொன்ன?" என்று அவசரமாக கேட்டான்.



அவளோ "துளசி" என்று எதற்கு கேட்கிறான் என்று புரியாமல் சொல்ல, "இல்ல அவங்க ஹஸ்பண்ட் நேம்" என்று கேட்டான். அவளும் "நேத்ரன்" என்று சொல்லி விட்டு அவன் முகத்தையே புரியா பார்வை பார்க்க, சில கணம் வெளியே அமைதியாக இருந்தவன் மூளையோ உள்ளே பல கணக்குகளை போட்டு கொண்டது.



அதன் முடிவில் அவன் இதழ்கள் மெலிதாக விரிந்து கொள்ள, "நிரல் என்னாச்சு?" என்று உலுக்கிய தன் மனைவியை பார்த்து பிரகாசமாக சிரித்தவன் "ஐ லவ் யூ பொண்ணு" என்று கூறி அவள் இதழில் அவசரமாக இதழ் பதித்து விலகியவன், அவன் அவசர முத்தத்தில் விழி விரித்து அதிர்ந்து நின்ற மனைவியை தற்போது ரசிக்க கூட நேரமின்றி "நான் இப்போ உடனே எஸ் பி ஆபீஸ் போகணும்" என்று நிற்க கூட நேரமில்லாமல் ஓடி விட, சில கணம் அவன் சென்ற திசையையே புரியாமல் பார்த்தவளோ "இவருக்கு என்னாச்சு?" என்று தோள்களை குலுக்கி விட்டு தன் வேலைகளை பார்க்க சென்று விட்டாள்.



இங்கே தன் எதிரே நின்றிருந்த மார்க் கன்னத்தில் தன் கோபம் மொத்தத்தையும் இடியாக இறக்கி இருந்த நேத்ரன், "உன்னால மூனு பொண்ணுங்களை ஒழுங்கா பார்த்துக்க முடியாதா? இப்படி கோட்ட விட்டுட்டு நிற்கிற" என்று சீற, மார்க்கோ கன்னத்தை பொத்தியபடி அரண்டு போய் தான் அவனை பார்த்துக் கொண்டிருந்தான்.



"யூஸ்லெஸ்.. யூஸ்லெஸ்... நம்மள பத்தி பாதி விசயம் அவளுக்கு தெரியும். அவ மட்டும் ஏதாவது வாய் திறந்தா? இத்தனை நாள் கஷ்டபட்டு உழைச்சது எல்லாம் வீணா போயிடும்" என்று சீற்றமாக உரைத்தவன் "டேம்... " என்று அங்கிருந்த மேஜையில் தன் காலை உதைத்து தலையை கோதியவாறு, அடுத்து செய்ய வேண்டியதை யோசிக்க தொடங்கினான்.



இரவு முழுவதும் தன்னவளுக்கு என்ன நேர்ந்தது என்று அறியாமல் தவிப்புடன், அவளை கண்டெடுக்க ஏதேனும் வழி கிடைக்குமா? என்று யோசித்த சாண்டி, அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையையும் அலச ஆரம்பித்திருக்க, பெண்கள் ஒவ்வொருவராக காணாமல் போனது மனதை பிசைய, தன்னவளுக்கு எந்த ஆபத்தும் நேரும் முன் இங்கிருந்து செல்ல வேண்டும் என்று நினைத்த விதுரனும் சாண்டியுடன் இணைந்து தப்பிக்கும் மார்க்கம் தேடி செல்ல எத்தனித்த நேரம் மருந்தின் வீரியம் குறைந்து கண் விழித்த வருண் மற்றும் மாதங்கியும் கூட காணாமல் போன அதிதி, அருந்ததியை தேடும் வேலையுடன், வெளியே செல்ல வழிக் கிடைக்குமா? என்றும் தேட ஆரம்பித்தனர்.



முந்தைய நாள் அவர்கள் விழுந்த சுரங்க பாதையை கூட அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், முயற்சியை கை விடாது ஹால், மாடி அறை, கிச்சன் என்று மூலை முடுக்கை கூட விடாது எதை தேடுகிறோம் என்று கூட சரியாக தெரியாது தேடிக்கொண்டிருந்தனர்.



ஆண்கள் மூவரும் ஆளுக்கொரு திசையில் ஹாலில் ரகசிய அறை எதனும் இருக்கிறதா? என்று சுவரிலும், நிலத்திலும் தட்டி பார்த்துக் கொண்டிருக்க, மாதங்கியோ சமையல் அறையில் தேடிக் கொண்டிருந்தாள். கீழே கபோர்டில் தேடி விட்டு நிமிர்ந்த சமயம், மேலிருந்த புகைப் போக்கியிலிருந்து தலை கீழாக நீளமான முடி மட்டும் வர, அதை பார்த்தவள் பயந்து சட்டென்று அலறி விட்டாள்.



அவள் குரல் கேட்டு ஆண்கள் மூவரும் சமயலறைக்கு விரைய, அவர்களும் கூட ஒரு நொடி பயந்து போயினர். விதுரன் மாதங்கி அருகில் ஓடி வந்து தன் கைவளைவில் அணைத்து அவளை பின்னால் இழுக்க, அவளும் கூட பயத்தில் கண்களை மூடியபடி அவன் மார்பில் முகம் புதைத்து அவன் ஷர்ட்டை அழுத்தமாக பிடித்து கொண்டாள்.



வருண் கால்களோ நிலத்தில் வேரூன்றி உறைந்து நிற்க, சாண்டி தான் தைரியத்தை வரவழைத்து முன்னேறி சென்று மேலிருந்து கீழாக பரவி கிடந்த முடி கற்றைகளை விலக்கி உள்ளே பார்த்தவனுக்கோ உட்ச பட்ச அதிர்ச்சி தான்.



அவன் காதலி அல்லவா அதனுள் மாட்டி தலை கீழாக தொங்கிக் கொண்டிருந்தாள். விரைந்து செயல்பட்டு அதனுள் இருந்து அதிதியை அவன் இறக்கி விட, அவளை தொடந்து அடுத்து இரு கால்கள் கீழே வந்தது. அந்த கால்களை பார்த்ததும் "இது நம்ம ஆள் கால் மாதிரி இருக்கே" என்று ஓடி வந்த வருணோ அதற்குள் இருந்து அருந்ததியையும் வெளியேற்றினான்.



பரட்டை தலையும், சோர்ந்த முகமாக நின்றிருந்த அதிதியை பார்த்த மாதங்கியோ அவளை ஓடி வந்து அணைத்து "எங்கடி போன? உன்ன காணலை என்றதும் ரொம்ப பயந்துட்டேன் தெரியும். நீ நல்லா இருக்க தானே?" என்று கேட்டப் படி அழுது கரைய, ஏற்கனவே நொந்து நூடுல்ஸ் ஆனது போல் இருந்தவள் தன்னை அணைத்து கொண்டவள் பாரம் தாங்காமல், "அய்யோ! என்னால முடியல. நான் கொஞ்சம் உட்கார்ந்துகிறேன். அப்புறம் உங்க கேள்வியை கேளுங்க" என்று சொன்ன படி நிலத்திலே தோய்ந்து அமர, மற்றவர்களும் அவளுடன் கீழே அமர்ந்துக் கொள்ள, சாண்டி தான் அதிதிக்கும் அருந்ததிக்கும் குடிக்க தண்ணீர் எடுத்து கொடுத்தான்.

அதை வாங்கிக் கொண்ட இருவரும் பசி களைப்பில் ஒரே மூச்சில் காலி செய்த பிறகே, தாங்கள் வந்த கதையை கூறினர்
சற்று நேரம் முன்......


அருந்ததியும் அதிதியும் தப்பி செல்ல திட்டம் தீட்ட, அப்போது தான் அருந்ததிக்கு அந்த அரண்மனை மொத்தமும் சி சி டி வி மூலம் கண்காணிக்க படுவது நினைவில் வந்தது. உடனே அதிதியிடம் அவர்கள் கண்காணிக்க படுவதை சொல்ல, அவளோ "எத? கேமராவா ஆஹ்?" என்று அதிர்ந்து தலையை மட்டும் திருப்பி நாலா புறமும் தேட, 'இவளே மாட்டி விட்டுருவா போல' என்று அவள் செயலில் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவள், "அதிதி இவ்வளவு ரியாக்ட் பண்ணாத. அப்புறம் இங்க இருந்து தப்பிக்கவே முடியாது" என்று சலிப்பாக சொன்னதும், "அய்யயோ!" என்று பதறி அவள் புறம் திரும்பிய அதிதி, "சரி நான் கேஷுவலாக செக் பண்றேன்" என்று சொன்னபடி கழுத்தை நெட்டி முறிப்பது போல் ஆட்டிக் கொண்டவள் அந்த அறையை ஆராய அவள் கண்ணிற்கு எதுவும் தெரியவில்லை.



உடனே "என்ன? என்னை ஏமாத்த பார்க்கிறியா? எங்க கேமரா இருக்கு? என் கண்ணுக்கு எதுவும் தெரியல" என்று கோபப்பட, அருந்ததியோ "ஹிட்டன் கேமரா" என்று அவளை நம்ப வைப்பதற்குள் ஒரு வழியாகி விட்டாள்.



இறுதியில் அருந்ததி தான் திட்டம் ஒன்றை வகுத்து, "யாராவது இருக்கீங்களா? ரெஸ்ட் ரூம் போகணும். பிளீஸ் கட்ட அவுத்து விடுங்க" என்று கத்தி கதறியபடி அமர்ந்திருந்த கதிரையை ஆட்டி, உருட்டி எண்ணலாமோ செய்ய, அவளை விசித்திர ஜந்துவை போல் தான் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள் அதிதி.



'இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்தா. திடீர்னு லூசு மாதிரி பண்றா' என்று அவள் செயலில் பயந்து போனாலும், 'அவ கஷ்டம் அவளுக்கு' என்று எண்ணிக் கொண்டே அமைதியாக அவளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.



அருந்ததி முயற்சி வீண் போகவில்லை. அவள் கத்துவது சகிக்க முடியாமல் அவர்களை கண்காணித்து கொண்டிருந்தவன் அங்கு வந்து அவள் கயிற்றை அவிழ்த்து விட, நொடியும் தாமதிக்காது, பொழுது போகாமல் பள்ளி நாட்களில் தமையனுடன் சென்று கற்றுக் கொண்ட ஜூடோ கலையை அவனிடம் ட்ரையல் பார்த்து, அவனை அடித்து வீழ்த்தியவள் துரிதமாக செயல் பட்டு அதிதி கட்டையும் அவிழ்த்து விட, அவளோ 'இப்போது என்ன நடந்தது?' என்று புரியாமல் தான் தன் காலடியில் விழுந்து கிடந்தவனை விழி விரித்து அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.



அதிதி கையை பிடித்துக் கொண்டு அவள் வாசலை நோக்கி ஓட, அந்த அறையை கண்காணித்து கொண்டிருந்த இன்னும் இருவர் அங்கே விரைந்திருக்க, சென்ற வேகத்தில் மீண்டும் திரும்பியவள் அறைக்குள் இருந்த கழிவறைக்குள் நுழைந்து கொண்டாள் தன்னுடன் அதிதியையும் இழுத்துக் கொண்டு.



உள்ளே தாழிட்டவள் இதயமோ 'வசமாக மாட்டி கொண்டோம்' என்று வேகமாக துடித்து அவளை வியர்வையில் குளிக்க வைக்க, அதிதியோ வெளியே அவர்கள் கதவை தட்டுவது மண்டையில் பெரிய சுத்தியல் வைத்து அடிப்பது போல் மதி கலங்கிய நிலையை தான் நின்றுக் கொண்டிருந்தாள்.



"இங்க இருந்து தப்பிக்க நினைச்சியா? எங்கேயும் போக முடியாது, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது" என்று வெளியே ஒருவன் எச்சரிக்கை விடுத்தபடி இருவரும் சேர்ந்து கதவை உடைக்கும் முயற்சியில் இறங்கி இருக்க,



'பயந்தால் பாடை தான்' என்று எண்ணிய அருந்ததி அச்சத்தை புறம் தள்ளி, தப்பிக்க ஒரு சதவீதம் வாய்ப்பாவது கிடைக்காத என்று யோசித்தாள்.



ஒரு பிளாஸ்டிக் பக்கெட், பாத் டப், க்ளோசெட் டாய்லெட் தவிர்த்து அந்த அறையில் எதுவும் இல்லை. ஜன்னல் கூட இல்லாமல் போனது. எல்லா வழியும் அடைப்பட்ட உணர்வில் அருந்ததி கண்கள் கலங்கி போக, வெளியே நின்றவனோ "எலி குஞ்சு சைஸ்ல இருந்துட்டு ஏமாத்திட்டா ஓட பார்க்கிறீங்கா, உங்களால டாய்லெட் வழியா கரைஞ்செல்லாம் போக முடியாது. கையில சிக்கி தான் ஆகனும். ஏய் கிழவி அப்புறம் இருக்கு உனக்கு, நரகம்னா என்னனு காட்டுறேன்" என்று கதவை முட்டி தள்ளியபடி காட்டமாக திட்ட,


அருந்ததியோ 'கரைந்தே போகலாம்' என்று முடிவெடுத்து விட்டாள் போல, அணிந்திருந்த சேலையின் முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகியவள், டாய்லெட்டை நகர்த்தும் முயற்சியில் இறங்கிவிட்டாள்.



அவளை விசித்திரமாக பார்த்த அதிதி, "என்ன பண்ற நீ?" என்று பதட்டமாக கேட்க, "இதை விட்டா நமக்கு வேற வழி இல்ல, எனக்கு ஹெல்ப் பண்ணு" என்று அவளை அழைக்க, அருவருப்பாக பார்த்த அதிதியோ "பைத்தியம் ஆகிட்டியா டி நீ. இது வழியாலாம் வீட்டுக்கு போக முடியாது, ஒரேயடியா தான் போய் சேரனும்" என்று ஜாகா வாங்க, "இங்க பாரு நாம பார்க்கிற எல்லாம் நிஜம் இல்ல, இருக்கிறது உண்மை இல்ல, இல்லாமல் இருக்கிறது பொய்யும் இல்ல. இப்போ எதுவும் விளக்க நேரமில்ல, உனக்கு உன் ஃப்ரெண்ட்ஸ் பார்க்க வேணாமா?" என்று கேட்க, அவள் சொன்னது எதுவும் புரியாமல் மொத்தமாக குழம்பி திரு திருவென விழித்தாலும் யோசிக்க கூட நேரம் கொடுக்காமல் கதவை உடைத்தே தீருவேன் என்று தங்கள் பலத்தை அதன் மீது அவ்விரு தடியர்கள் காட்ட, அவளை விட்டாலும் தனக்கு வேறு வழி இல்லையே. எப்படியாவது சாண்டியிடமும், தன் நண்பர்களிடமும் போய் சேர்ந்தால் மட்டும் போதும் என்று எண்ணியவள் அவளுடன் சேர்ந்து அதை நகர்த்த, அதிதி சுதாகரிக்கும் முன் உள்ளே இருந்த குழியில் அவளை தள்ளி விட்ட அருந்ததியும் அதனுள் குதித்திருந்தாள்.


அருந்ததி உள்ளே குதித்த கணம் கதவை உடைத்து உள்ளே வந்தவர்கள் அவர்கள் குதித்த குழியை அருவருப்பாக பார்த்து "இதுக்குள்ள எப்படி டா குதிச்சாளுக, ச்சைக்" என்று முகத்தை சுருக்கி ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு டிரெயினேஜ் கழிவு தொட்டிக்குள் இருந்து அவர்களை தூக்கி விடலாம் என்று எண்ணி அங்கே செல்ல, மர்மங்கள் நிறைந்த அந்த வீட்டின் தந்திர வழிகள் அந்த கைக்கூலிகளுக்கு கூட தெரியாமல் தான் போனது.



அங்கே விழுந்தவர்கள் வளைந்து, நெளிந்து நீண்டுக் கொண்டே சென்ற பெரிய குழாய் வழியே பயணம் செய்து கடைசியில் லேண்ட் ஆனது புகைப் போக்கி வழியாக தான்.



அதிதி சொல்லி முடிக்க, சாண்டி கண்களோ அடுத்து அருந்ததி மேல் தான் ஆராய்ச்சியாக பதிந்தது. அவனோ அவளை தீர்க்கமான பார்வை பார்த்துக் கொண்டிருக்க, வருண் தான் "அதிதி சொன்னதை கேட்ட தானே, இவளும் நம்ம கூட இங்க மாட்டிகிட்டு தான் இருக்கா" என்று அருந்ததிக்கு ஆதரவாக கூற, "சரி அவளும் இங்க மாட்டிட்டு இருக்கானு நானும் ஒத்துக்கிறேன். ஆனா நமக்கு தெரியாத சில விசயங்கள் அவளுக்கு தெரிஞ்சிருக்கு" என்று சொல்லி அவளை சந்தேகமாக பார்த்தான்.



இம்முறை அருந்ததி புறம் திரும்பிய வருண், "அரு, நான் உன்னை முழுசா நம்புறேன். பிளீஸ் உனக்கு தெரிஞ்ச எல்லாம் சொல்லு. அப்போ தான் தப்பிக்கிற வழியை எங்களாலும் கண்டு பிடிக்க முடியும். இங்க இருந்து போகணும் தானே" என்று அவள் கண்களை ஊடுருவி பார்த்து கேட்க, அவளும் அனைவர் முன்னும் முகத்திலும், கையிலும் ஒட்டியிருந்த வயது முதிர்வு சுருக்க உரையை களைந்து தன் வேசத்தை களைந்தாள். தன் முன் அழகு இளம் மங்கையாக இருந்தவளை வருண் மெய் மறந்து ரசிக்க, அதிதியோ "பாட்டி இல்ல நிஜமா பியூட்டி" தான் என்று மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாகவே சொல்லி விட, வெளியே சொல்லவில்லை என்றாலும் மற்றவர்கள் எண்ணமும் அதுவாகவே இருந்தது.



"என் பெயர் அருந்ததி" என்று ஆரம்பித்தவள் தன்னை பற்றியும், இங்கு வந்து சூழ்நிலை கைதியாக மாட்டிக் கொண்டதை பற்றியும் சொல்ல, சாண்டிக்கோ அவள் நிரல்யன் தங்கை என்றதும் இரத்த அழுத்தம் அதிகமானது. இருந்தும் தமையன் தவறிற்கு தங்கை மீது கோபப்படுவது நியாயம் இல்லை என்று தன் கோபத்தை கட்டு படுத்திக் கொண்டவனுக்கு அவளை நம்பவும் முடியவில்லை, பொய் என்று முழுதாக அவள் வார்த்தைகளை புறம் தள்ளவும் முடியவில்லை.

மற்றவர்களுக்கும் அவள் நிரல்யன் தங்கை என்றது அதிர்ச்சி தான் என்றாலும், எதையும் காட்டும் நிலையில் இப்போது அவர்கள் யாரும் இல்லையே!
 
Status
Not open for further replies.
Top