ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தந்த்ரா கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
எபிலாக்...

ஐந்து வருடங்களுக்கு பிறகு...

காலையில் சூரியன் உதயமாவதற்கு முன்பாகவே வீடுமுழுவதும் பரபரப்புடன் இருந்தது.."இந்த தாம்பூலத் தட்டை எடுத்து காருக்குள்ள வையுங்க... அந்த வாழைத்தாரை எடுத்துட்டு வாங்க.. ப்ரியா ரெடியாகிட்டாளா இல்லையா?" என்று கேட்டவாறு ப்ரியாவின் அறைக்குள் வந்தாள் மாதங்கி.

அங்கு ப்ரியாவோ அலங்காரம் முடித்து தயாராக இருந்தாள். நிம்மதியுடன் அவளை பார்த்து புன்னகைத்த மாதங்கி வெளியே வரவும்...

" எதுக்கு இவ்ளோ பதட்டம் பொறுமையா இரு? " என்றவாறு மாதங்கியின் முகத்தில் வழிந்திருந்த வேயர்வை துளிகளை துடைத்து விட்டான் கார்த்திக்.

" நிறையா வேலை இருக்கு கார்த்திக். ஆமா பாப்பா எழுந்துட்டாளா? அவளை ரெடி பண்ணிடீங்களா? " என்று பட படபடப்புடன் கேட்டவளின் தோளில் கைபோட்டு அணைத்தபடி தங்கள் அறைக்குள் அழைத்து வந்தான்.

" இப்போ எதுக்கு இங்க அழைச்சிட்டு வரீங்க எனக்கு நிறையா வேலை இருக்கு கார்த்திக் விடுங்க "

" உன்னை யாரு இந்த வேலை எல்லாம் பார்க்க சொன்னது.. அதான் நான் இருக்கேன்ல"

" நீங்களும் எவ்ளோ வேலையை தான் பார்ப்பீங்க! சின்ன சின்ன வேலையாவது நான் பார்க்குறேனே"

" ஆஹா என் மனைவிக்கு என் மேல இவ்ளோ பாசமா? "

" ஏன் உங்களுக்கு தெரியாதா என்ன? " என்று புருவம் உயர்த்திய மாதங்கியின் நெற்றியில் இதமாக முட்டியவன்...

" அதெல்லாம் தெரியும்... ஆனால் இந்த மாதிரி நேரத்தில என்னை நீ ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணுறடி... உன் மேல உள்ள காதல் இன்னும் இன்னும் அதிகமாகிட்டே இருக்கு"

"ப்ச் பொய் சொல்லாதீங்க " என்றவள் அவனது மார்பில் கைவைத்து தள்ளவும்... அவளது கரத்தை பிடித்து மென்மையாக விரலில் முத்தமிட்டவனின் விழிகள் அவளது விழிகளில் நிலைத்திருந்தது.. இருவரும் சுற்றுப்புறத்தை மறந்து நின்ற நொடி...

" ம்மா " என்று இரண்டு வயதே ஆன அவர்களது குழந்தை ஷாலினி சத்தம் அந்த ஏகாந்த நிலையை கலைத்தது..

"குழந்தை எழுந்துட்டா தள்ளுங்க.." என்று அவனை விட்டு விலகி வந்து குழந்தையை தூக்கி கொண்டாள் மாதங்கி.

கார்த்திக்கோ மாதங்கியையே பார்த்துக் கொண்டிருக்க " என்ன பார்வை... வெளிய பொய் வேலையை பாருங்க? " என்று இதழோரம் மறைந்த புன்னகையுடன் கூறியவளை பார்த்து இதழ் பிரித்து சிரித்தவன் வெளியே சென்று வேலையை பார்க்கத் தொடங்கிருந்தான்.

குழந்தையை குளிக்க வைத்து , தயார் செய்த மாதங்கி, அடுத்து சிவாங்கிக்கு அழைத்தாள்..

அழைப்பை ஏற்று பேசினாள் சிவாங்கி.

" சிவா கிளம்பிட்டியா? இல்லையா? இன்னும் அரைமணி நேரத்தில வீட்டுல இருந்து கிளம்பனும்.. சீக்கிரம்வா ? "

" நான் எப்போவே கிளம்பிட்டேன்டி.. என் புருஷன் தான் இன்னும் எழுந்துக்கவே இல்லை "

" இன்னுமா அவன் எழுந்துக்கல... நாலு அடி போட்டு அவனை இழுத்துட்டுவா... கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா பாரு.. " என்று சிடுசிடுத்துக்கொண்டு அழைப்பை துண்டித்தாள் மாதங்கி.

" இவரால அவள் என்னை திட்டுற?.. இன்னிக்கு இருக்கு அவருக்கு" நேராக விதுரனை அழைக்க வந்தாள் சிவாங்கி.

கதவு திறந்திருக்க... எனக்கு என்ன கவலை என்பது போல குப்புற படுத்து உறங்கி கொண்டிருந்தவனின் முதுகில் மனைவின் கை வண்ணமாக பூஞ்சாடி பறந்து வந்து விழுந்தது..

"அம்மா ஆஆ..... " என்ற அலறலுடன் எழுந்தவனை வெட்டவா குத்தவா என்று முறைத்து நின்றிருந்தாள் சிவாங்கி.
"ஹே செல்லம் என்னடி காலையிலேயே ரொமான்டிக்கா பார்க்கிற! நைட் விட்டதை கன்டினியூ பண்ணுவோமா?" என்று கையை பிடித்து இழுக்க அவன் மேல் வாகாக விழுந்தாள்.

இருவரும் மோனநிலையில் இருக்க அதை கலைக்கும் விதமாக ஒலித்தது விதுரனின் அலைபேசி. அதை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அவள் மேனியில் அவன் அத்துமீற, நங்கையவள் நாணி கோணி அவனின் ஒவ்வொரு தொடுகைக்கும் இசைந்து கொடுக்க காதலோடு சிறு கூடல் அங்கு அரங்கேறியது கதிரவன் நடு உச்சியில் தனது ஆதிக்கத்தை செலுத்தும் வரை.

மீண்டும் மீண்டும் அலைபேசி ஒலிக்க எவன்டா திரும்பி திரும்பி போன் பன்னிட்டு இருக்கிறது என்று கடுப்பில் அழைப்பை ஏற்க, பல பீப் வார்த்தைகளில் அவனை அர்ச்சித்தாள் மாதங்கி.

அவனது முக பாவனையை பார்த்து வாய்விட்டு சிரித்தவள், அவனிடம் இருந்து அலைபேசியை வாங்கி, "மாது அரைமணி நேரத்தில் வீட்டுக்கு வந்திருவோம்" என்று அழைப்பை துண்டித்து விதுரனை பிடித்து குளியல் அறைக்குள் தள்ளி சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க, நான் அத்தை ரூமில் போய் கிளம்பறேன் அடுத்த ரவுண்டுக்கு அடிப்போட்டவனை தள்ளி ஓடி சென்றாள் சிவாங்கி.

குளித்து முழித்து வந்த சிவாங்கி தன் மாமியாரை அழைக்க, "சிவா! இன்னுமா விது எழுந்திரிக்கல? இங்க கல்யாணமே முடிஞ்சு பொண்ணு மாப்பிள்ளையே வீட்டுக்கு போய்ட்டாங்க நீங்க இன்னும் வரீங்க?" என்று சற்று கடிந்து பேச,
"அத்தைமா என்னாச்சு அம்மு அழுதாளா?"

"எவ்வளவு சீக்கிரமா உனக்கு பொண்ணு ஒருத்தி இருக்கானு ஞாபகம் வந்திருச்சு?" என்று கேட்டவரின் குரலில் ஏகத்துக்கு நக்கல் பொதிந்திருந்தது.
"அத்தை.... " என்று சிணுங்கியவளை,

"நான் உனக்கு உடம்பு சரியில்லைனு சொல்லியிருக்கேன் அதை அப்படியே மெயின்டைன் பண்ணிக்கோ சிவா அதை சொல்ல தான் கூப்பிட்டேன்"
"என் செல்ல அத்தைமா. கரெக்டா பெர்ஃபோர்ம் பண்ணிடறேன்" என்று அழைப்பை துண்டித்து திரும்ப, அவளை ஆவென பார்த்திருந்தான் விதுரன்.

"அடியே என்னை மட்டுமில்ல என் அம்மாவையும் டியூன் பண்ணி வைச்சிருக்க. ச்ச அம்மா எனக்கு போன் பண்ணியிருந்தா உன்னை இவ்வளவு சீக்கிரம் விட்டிருக்க மாட்டேன். ஜஸ்ட் மிஸ்" என்று கூறி கார் சாவியை சுற்றியவாறு அவளை நெருங்க "அம்மா மீ எஸ்கேப்" என்று அறைக்குள் ஓடிவிட்டாள்.

பின் அவள் கிளம்பி வரும் வரை அமைதியாக இருந்தவன் அவளை சீண்டி தீண்டி கார்த்திக் வீட்டிற்கு அவளை அழைத்து சென்றிருந்தான்.


இங்கு சாண்டில்யனது வீட்டில் காலையில் ப்ரியாவின் கல்யாணத்திற்காக ஐந்து மணியளவிலிருந்தே அலாரம் அடித்துக் கொண்டிருந்தது.. அலாரம் அடித்த சத்தத்தில் முதலில் எழுந்தது என்னவோ சாண்டி தான்..

"அதி எந்திரிடி.. ப்ரியா கல்யாணத்துக்குப் போகணும்.. கார்த்திக் வேற போன் போட்டுருப்பான்" என்றவனின் குரல் ஆழ்ந்த துக்கத்தில் இருப்பவளுக்கு கேட்டாள் தானே??"

"அதி எந்திரி. நான் குளிச்சிட்டு வர்றேன்" என எழுந்து குளித்து விட்டு வெளியே வர, இப்பொழுதும் பொசிஸன் மாறா நிலையில் உறங்கிக் கொண்டிருந்தாள் அதிதி.. அவளை சற்று கடுப்பாக பார்த்தவன்..

"அதி எந்திரின்னு சொல்றேன்ல" என மேலே போர்த்தியிருந்த பெட்ஷீட்டை உருவ.. நேற்று அவனால் கலைக்கப்பட்ட ஆடைகள் எங்கேங்கோ கிடக்க.. தேவலோக மேனகை போல் கிடந்தவளை ரசித்தவாறே, அவள் அருகில் சரிந்து படுத்தவனின் தலையில் வழிந்த நீர் சொட்டு சொட்டென, அதிதியின் கழுத்தில் வடிய.. மெல்ல விழிகளை திறந்தவளை கிறக்கமாக பார்த்தவன்.. அவள் கழுத்தில் வழிந்த நீரை.. தன் இதழ்களால் அழுத்தமாக உறிஞ்செடுக்க.. அவன் இதழ்களின் வன்மையும், நீரின் குளுமையும் சேர்ந்து உடலில் அனைத்து வித நரம்புகளும் அதிவேகமாக பாய்ந்தோட.. "நோ.. சாண்டி" என்றவளின் இதழ்கள் வேண்டாமென சொல்லினாலும்.. கண்களோ அவனின் செய்கையை ரசித்தது..

"அதி" என ராகமாய் இழுத்தவாறே, "கல்யாணத்துக்குப் போகணுமா?" என்றவனின் கிறக்கத்திலும், அவன் மேல் கொண்ட காதலிலும், 'வேண்டாம்' என தலை தானாக ஆடியது..

பெண்ணவளின் சம்மதத்தில் இதழ்களாலேயே கழுத்தில் போட்டவனை சுண்டியிழுத்தது. அவளின் செவ்விதழ்கள்.. அவனின் மோக சிந்தும் பார்வையும், அதில் தெரிந்த வேட்கையும்.. பெண்ணவளை வெட்கம் கொள்ள வைக்க.. முகமோ அந்தி தாமரையை போல் சிவந்து தான் போனது..

அவளின் வெட்கத்தை, நாணத்தை, களையுமுன்பே இதழ்களை சிறையெடுத்தான்.. அதியின் கரங்களோ அவளின் பின்தலையை அழுத்தமாக பற்றிக்கொள்ள.. இரு தேகங்களின் உரசலில் மோகம் பற்றிக் கொள்ள சிறு கூடலிலே நிறைவு பெற்றது..

அவளை விட்டு அவன் பிரியும் நேரம். கல்யாணத்திற்கு இன்னும் அரைமணி நேரம் மட்டுமே இருந்தது.. இருவரும் சேர்ந்தே குளித்து, ஒன்றாக ரெடியானவர்கள்.. கல்யாண மண்டபத்திற்கு சென்றிருந்தனர்.

செல்லும் வழியில் சாண்டி வருணுக்கு அழைப்பினை விட, அவனோ கைபேசி எடுக்காது ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தான்.

"இந்த தடிமாடு என்னத்தான் பண்ணுவானோ?" என்றவன் புலம்ப, அங்கு வருணும் அருந்ததியும் அடித்துப் பிடித்தபடி தயராகிக் கொண்டிருந்தனர்.

பிரியாவின் திருமணத்திற்கு அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தனர் வருணும் அருந்ததியும்.. இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்திருந்தது முதலில் அவர்கள் காதலுக்கு ஆரம்பத்தில் முறைத்துக்கொண்டிருந்த நிரல்யனை பதிலுக்கு முறைத்து அவர்கள் திருமணத்தை நடத்தியிருந்தாள் அமிர்தா.

அழகான பச்சை நிற பட்டுடுத்தி கிளம்பியவள் வருணை கடைக்கண்களால் பார்க்க அவன் அவளை கோபமாக பார்த்தபடியே தன் ஷர்ட் பட்டனை பூட்டிக்கொண்டிருந்தான்.

“இப்ப என்ன நடந்திருச்சுனு முறைக்குறடா?” என்று அவனை சீண்ட
“என்னடி எகத்தாளமா!? கல்யாணத்துக்கு நேரமாகுது அமைதியா கிளம்பு..” என்று சிடுசிடுத்தான்.

“சரி விடுங்க தெரியாமதான பண்ணேன்.. சாரிடா குட்டிப்பையா..” என்று அவனை மூக்கைப் பிடித்து கொஞ்சியவள் கைகளை பட்டென தட்டிவிட்டவன்.. “ஏய்ய் வலிக்குதுடி...” என்றான்.

நேற்றிரவு நடந்த அவர்களின் காதல் கூடலின் நடந்த ஊடல் அது. ஆம் அவன் செய்த சேட்டையில் கூச்சம் தாங்காது அவன் மூக்கு நுனியை கடித்துவிட்டாள். “ஆ...” என்று கதறியவனின் காதல் பிஜிஎம்கள் எல்லாம் அங்கிருந்த கண்ணாடியில் தன் முகம் பார்த்தவுடன் சோக வயலினாக மாறியது... அவள் சின்னதாக கடித்திருந்தாலும் அவன் பால்நிற முகத்தில் மூக்கு மட்டும் சிவந்திருந்தது..

சாதாரண நாளாக இருந்திருந்தால் மனைவியின் லவ் பைட்டை நினைத்து நினைத்து சொக்கியிருப்பான். ஆனால் நாளை காலை பிரியாவின் திருமணவிழாவில் அவன் சகாக்களான கேடி பில்லாக்களும் கில்லாடி ராங்கிகளும் வருவார்களே... அதை நினைத்து நினைத்து நொந்து போனான்.

அவனின் புலம்பலில் சத்தமாக சிரித்தவள் ஒருவாறு அவனை சமாதானம் செய்தாள். ஸ்லீப் மோடில் கிடந்த அவன் ரொமான்டிக் சிஸ்டம் அவளின் கொஞ்சலில் லாக் இன் ஆனது காதல் ஐடிக்குள்... இருவரின் உடல்களையும் காமன் என்னும் குறும்பன் ஹாக் செய்ய தொடங்கிவிட்டான். அவர்களின் காதல் கணினியெங்கும் காதல் வைரஸ்கள் நிரம்பின.

நடந்தவைகளை எண்ணியபடியே கிளம்பியவர்களின் மனங்களில் சிறிது நாணமும் சிறிது காமமும் சாரல் வீசின. இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்திருந்தனர். தங்களை ஜோடியாக கண்ணாடியில் சிறிது வினாடி ரசித்தவர்கள் ஒரே நேரத்தில் அதிர்ந்தனர். இருவருமே ஒருசேர கீழே அமர்ந்து பதட்டமாக எதையோ தேடத்தொடங்கினர்.

“எல்லாம் உன்னால தான்.. நான் அப்பவே வேணாம்னு சொன்னேன் ..”

“அந்நேரம் அது முக்கியமா தெரியலைடி...”

“பேசாதடா ஒழுங்க தேடு போ..” என்று அவள் முடிக்கும்பொழுதே அவள் விழியோரம் கலங்கிவிட்டது.

அதை கண்டவன் குற்றவுணர்வுடன்,” சாரிடி இங்கதான் இருக்கும் அழாத.. இதுக்குப் போய் ஏன்டி அழுற?!” என்று அவளை நெருங்க...

“என்ன ரொமான்ஸ் பிட்டா அவ(இதை எழுதியவள்)தான் ரொமான்ஸ் எழுத பறக்குறா.. உனக்கென்னடா ஒழுங்கா தேடு...”
‘எதே பறக்குறேனா அடிங்க'(இது நானு)
‘இன்னும் பயிற்சி வேண்டுமோ?!’ என்று மனதினுள் புலம்பியவன் கைகளில் அவன் தேடிய பொருள் கிடைத்தது.

அதனை எடுத்து அவள் கழுத்தில் வேகமாக அணிவித்தவன், “இந்தம்மா உன் தாலிக்கயிறு பத்திரமா வச்சுக்கோ! இதுக்காக என்னையும் என் ஆத்தரையும் திட்ற வேலை வச்சிக்காத..” என்றான்..

ஆம் நேற்றிரவு மீண்டும் தொடங்கிய அவர்கள் கூடலில் மீண்டும் கத்தினான் வருண். அதில் பதறியவள், “நான் எதுவும் பண்ணலைப்பா!!” என்று அப்ரூவராக மாற... அவள் கழுத்தில் கிடந்த கல்ப்ரிட்டோ அவனை நறுக்கென குத்திய களிப்பில் மின்னிக்கொண்டிருந்தது.

அதனை முறைத்தவன் “எனக்கும் என் பொண்டாட்டிக்கும் நடுவுல வர்றதே உன் முழுநேர வேலையா போச்சு... ஓடிப்போ...” என்று அதனை கலட்டி எடுத்தவன் கைகெட்டிய தூரத்தில் வைத்துவிட்டு அதை எடுக்க முயன்றவளை அடக்கி அவன் அவளில் மூழ்கி முத்தெடுக்க தொடங்கினான்.

சிறிது நேரத்திற்கு பின்... திருமண மண்டபத்தில் அவர்களை கார்த்திக்கும் மாதங்கியும் வரவேற்றனர். இவள் காதருகினில் வந்த மாதங்கியோ “வாங்க பாட்டிம்மா" என்றுவளை வம்பிழுக்க கோபப்படவேண்டியவளோ தன் கணவனை பார்த்து சிரித்துக்கொண்டாள்..

அங்கிருந்த வருணின் நண்பர்கள் அவளை வேண்டுமென்றே மறுபடி மறுபடி பாட்டியம்மா கிழவி என்று வம்பிழுத்தனர். திட்டுவாள் என்று அனைவரும் நினைத்திருக்க அவளோ தன் கணவனை காதலாய் பார்த்தாள். அவனும் ரகசியமாக அவளை பார்த்து கண்சிமிட்டினான். (நம்மாளுதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழவினு கிண்டல் பண்ணா கோபப் படவேணாம்... ஒவ்வொரு கிழவிக்கும் வீட்டுக்கு வந்து ஒவ்வொரு உம்மானு டீல் பேசிட்டானே...)
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
எப்படியோ ஒரு வழியாக அனைத்து ஜோடிகளும் வந்திருக்க, இவர்கள் ஐவருக்கும் சீனியர் ஜோடியான நிரல்யனும் அமிர்தவர்ஷினியும் தங்களது பிள்ளைகளை வைத்துக் கொண்டு போராடிக் கொண்டிருந்தனர்.

இருவருக்குமே இரட்டைக் குழந்தைகள். மூன்று வயது நிரம்பிய தர்ஷனையும், ஆதர்ஷனையும் தயார் படுத்துவதிலேயே ஒரு வழியாகி போயினர் இருவரும்.

"பொண்..... என்ன தூக்கு." என்று மழலைக் குரலில் ஆதர்ஷன் கூற,

"பொண்ணு இவனுக்கு லொள்ளு பாத்தியா? என்ன மாதிரியே பேசுறான்?" என்று தர்ஷனை தயார் செய்தபடி உரைத்தான் நிரல்யன்.

"அப்பன் போல பிள்ளை. ஒன்னு சொல்றதுக்கு இல்லை." என்றவளோ முகத்தை திருப்பிக் கொள்ள,

"என்ன பொண்ணு ரைமிங் எல்லாம் பலமா இருக்கு." என்றவன் பையனைத் தூக்கிக் கொண்டு அவளது அருகே நெருங்கினான். அந்நொடி ஆதர்ஷனைத் தூக்கி அவனது கைகளில் ஒப்படைத்தவள்,

"வெளிய அத்தைகிட்ட போய் கொடுங்க. அப்புறம் சீக்கிரம் வந்து ரெடியாகுங்க. அங்க எல்லாரும் போயிட்டாங்க. நம்ம மட்டும் தான் லேட்டு." என்றவள் சிடுசிடுக்க,

"சரிங்க மேடம்." என்றவன் புன்னகையுடன் வெளியே சென்றான்.
அந்நேரம் அவனது மாமனார் மதுசூதனனும், மாமியார் வசந்தியும் வர அவர்களை இன்முகத்துடன் வரவேற்றான்.

ஐந்து வருடம் முன்பு நிரல்யன் சென்ற காவல் வாகனம் வெடித்துவிட்டாதாக செய்தி மருத்துவமனையிலிருந்த தொலைகாட்சியில் ஒளிபரப்பாக, அந்நொடி ஸ்தம்பித்துப் போய் நின்ற தன் மகளை தாங்கிப் பிடித்தது என்னவோ மதுசூதனன் தான். அன்று மகளது கண்ணீர் அவரை உலுக்கியிருக்க அன்று தன் மகளை தாங்கி நின்றவர் தான் அதன் பின் நிரல்யன் உயிரோடு இருக்கிறான் என்ற செய்தி கேட்டு முதலில் மகிழ்ந்தது என்னவோ அவர் தான். அதன்பின் இருவரையுமே ஏற்றுக் கொண்டார் மதுசூதனன்.

குழந்தைகளை மதுசூதனனும், வசந்தியிடமும் ஒப்படைத்தவன் தயாராகி வருவதாக கூறி அறைக்குள் நுழைந்து விட்டான். ஊதா நிற பட்டில் தேவதை போல மிளிர்ந்த தன் மனையாளை பின்னிருந்து அணைத்துக் கொண்டவன், "பொண்ணு" என்று ஆசையாக அழைக்க, அவளோ அவனை முறைத்தாள்.

"நிரல் லேட்டாச்சு."

"ஆகட்டும் பொண்ணு நம்ம தர்ஷனுக்கும் ஆதர்ஷனுக்கும் ஒரு தர்ஷினி பாப்பாவை வர வெச்சா என்ன?"

"யோவ் என்னையா இப்படி இறங்கிட்ட. சார்க்கு இரட்டை பிள்ளை பத்தலையா?"

"எனக்கு உன்னை மாதிரி ஒரு பொண்ணு வேணுமே பொண்ணு. ப்ளீஸ் டி கொஞ்சம் கன்சிடர் பண்ணு." என்றவன் அவளை செல்லம் போல கொஞ்ச,

அவளோ ஆசையாக அவன் புறம் திரும்பியவள், அவனது கன்னத்தை பிடித்து முத்தம் கொடுப்பது போல நெருங்க, அவனோ ஆசையாக கன்னத்தைக் காட்டிய நொடி நறுக்கென்று கடித்து வைத்திருந்தாள் அமிர்தவர்ஷினி.

அவளது திடிர் செயலில் ஆணவன் ஆவென கத்த, வெளியே அமர்ந்திருந்த வசந்தியோ, "என்னாச்சு அமிர்தா?" என்று சத்தமிட, "ஒன்னுமில்லை அம்மா." என்று அவனது வாயை பொத்தியபடி கூறியவள்,

"ஒழுங்கா சத்தம் போடாம வாங்க." என்று கண்களை உருட்டி முறைத்து விட்டே அவனை அழைத்து சென்றாள்.

அதன் பின் நிரல்யனும் அமிர்தாவும் மண்டபத்தை அடைந்திருந்தனர். மதுசூதனனும் வசந்தியும் பேரப்பசங்களை பார்த்துக் கொள்வதாக கூறியிருக்க, இருவரும் ஜோடியாக மண்டபத்தில் நுழைந்திருந்தனர். அதிதி அமிர்தாவைக் கண்டதும் அவளைக் கையோடு அழைத்துக் கொண்டு புகைப்படம் எடுக்க சென்றிருந்தாள்.

இங்கு திருமண மண்டபத்துக்குள் அனைவரும் நுழைந்த சமயம் அங்கே துளசியின் கரத்தை பற்றியபடி குழந்தைகளை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தது என்னவோ நேத்ரன் தான்.

ஜெயிலில் இருந்து விடுதலையானவனுக்கு குற்ற உணர்வு மட்டும் குறையவே இல்லை... குழந்தையை வேறு இழக்க காரணமாகி போனவனுக்கு அந்த ரணங்கள் இலகுவில் ஆறிவிடவில்லை.

யாரையும் ஏறிட்டு பார்க்க முடியாமல் தவிப்புடன் இருந்தவன் அருகே வந்து அமர்ந்த நிரல்யனோ நேத்ரனின் தோளில் கையை போட்டுக் கொண்டே " நேரத்துக்கே வந்திட்ட போல " என்று சொன்னான்.

அவனை ஏறிட்டுப் பார்த்த நேத்ரனோ " நான் தான் முடியலன்னு சொன்னேன்ல.. எதுக்கு போர்ஸ் பண்ணி வர வச்ச?? என்னால யாரையும் பார்க்கவே முடியல " என்றான் கரகரத்த குரலில்.

" அதெல்லாம் முடிஞ்சு போனது நேத்ரா.. யார் தான் தப்பு பண்ணல?? எல்லாத்தையும் கடந்து வா " என்று சொல்ல அவனை எட்டி பார்த்த துளசியோ " உங்க அண்ணாக்கு புரிஞ்சுகிற போல சொல்லுங்க.. எப்போ பார்த்தாலும் சோர்வா இருக்கிறார்.. நடந்ததையே நினைச்சிட்டு இருக்கார்.. " என்று சொல்ல நிரல்யனோ " பார்த்தியா எல்லாருக்கும் உன்னால எவ்ளோ கஷ்டம்னு... அதெல்லாம் விட்டு வெளிய வா ப்ளீஸ் " என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே , " அண்ணா வந்துடீங்களா? " என்று கேட்டுக் கொண்டே அங்கே வந்து அமர்ந்தாள் அருந்ததி..

என்ன தான் நேத்ரன் அவர்களுடன் ஒன்றி விட தயங்கினாலும் அவனுடன் தாமாக வந்து அனைவரும் பேசினார்கள்.அவன் மனநிலை அறிந்து..

அருந்ததியோ " நாம மூணு பேரும் இருக்கிற போல ஒரு செல்பீ கூட இல்ல " என்று சொல்லிக் கொண்டே போனை எடுக்க , அதனை பார்த்துக் கொண்டு நின்று இருந்த வருண் தோளில் சாண்டி கையை போட்டுக் கொண்டே " என்னடா அண்ணாவை பார்த்ததும் உன்ன கழட்டி விட்டுட்டாளா? " என்று கேட்க , அவனோ பெருமூச்சுடன் " ம்ம் " என்றவனோ மேலும் " எங்கடா அதிதி?? " என்று கேட்க , அவன் கண்களை அதிதி இருக்கும் திசையில் காட்டினான்..

அங்கே அதிதி செல்பீ எடுத்துக் கொண்டு இருந்தது என்னவோ வர்ஷினியுடன்..
" இந்த சாரி அழகா இருக்கு " என்று அலங்காரத்தை பற்றி இருந்தது அவர்கள் சம்பாஷணைகள்.

"அதிதி வா எல்லாரும் சேர்ந்து செல்ஃபி எடுப்போம்" என்று வருண் அழைத்ததும் தான் தாமதம் அமிர்தாவை அழைத்தபடி ஓடி வந்து நின்றுக் கொண்டாள் அதிதி. மாதங்கி கார்த்திக், சிவாங்கி விதுரன், வருண் அருந்ததி, அதிதி சாண்டில்யன், நிரல்யன் அமிர்தா, நால்வரும் நேத்ரன் துளசியின் அருகில் நிற்க, கல்யாண பெண் பிரியா, அவள் கணவன் பார்கவ்வை அழைத்துக் கொண்டு அவர்களுடன் சேர்ந்து நின்றுக்கொண்டாள்.

பின் அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள, ஆண்களோ தன் மனைவிமார்களிடம் பவ்யமாக நிற்பது போல போஸ் கொடுக்க, "எல்லாம் நடிப்பு மக்களே நம்பாதீங்க." என்று சிவாங்கி செல்ஃபி எடுக்காது வீடியோ எடுத்துக் கொண்டிருக்க, ஆண்கள் அனைவரும் "ஏய்" என்று கத்த "பார்த்தீங்களா பார்தீங்களா எல்லாம் சரியான தந்திரவாதீங்க." என்றவள் பேசியது கூட அழகாக வீடியோவில் பதிந்திருந்தது.

மந்திரமோ அது தந்திரமோ மனிதர்கள் நிகழ்த்திய இந்த விளையாட்டு முடிவை அடைந்திருக்க, மகிழ்ச்சியில் திளைத்து இவர்கள் அனைவரும் இருக்க அந்நொடி சாண்டில்யனது அலைபேசி சிணுங்கியது.

புதிய எண்ணைக் கண்டு முகம் சுருக்கியபடி தனியாக வந்தவன் போனை எடுத்து காதில் வைத்தான்.

"மறுபடியும் ஆடுவோமா?" என்ற கணீர் குரலில் அவனது புருவம் கேள்வியாய் முடிச்சுட்டு பார்க்க, "யார்டா நீ?" என்றவன் அழுத்தமிட்டுக் கேட்டான்.

"தந்த்ரா..." என்ற மறுபுறம் வந்த குரலில் அதிர்ந்து நின்றான் சாண்டில்யன். இவர்கள் அவ்விடம் மாட்டும் முன்னரும் இதே போன்ற குரலில் அவனுக்கு அழைப்பு வந்திருக்க அன்று அவன் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் இன்று அப்படி இல்லையே! பிரச்சனை முடிந்தும் வந்த அழைப்பினைக் கண்டவனுக்குத் தலை சுற்றாத குறை தான்.

'தந்த்ரா இது விடாது போலயே?' என்று மானசீகமாக உரைத்தவனை கேள்வியாக நிரல்யன் பார்க்க, "ஒன்னுமில்லை" என்று அந்நொடி சமாளித்தவன் புகைப்படம் எடுக்க வந்திருந்தான்.

இம்முறை அனைவரும் புன்னகைக்க, விதுரன் செல்ஃபியை எடுத்திருந்தான்.


முற்றும்
 
Status
Not open for further replies.
Top