ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் ரிதம்- கதை திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
15

'ஆதி இங்க என்ன பன்றான்.!!!' என்று சாரா யோசித்துக்கொண்டே உள்ளே வந்தாள்.

அர்ஜுன், ரித்திகா, அத்தை எல்லோரும் ஒண்ணா இருகாங்க.... பேச்சிக்கு கூட சிரிப்பு இல்லை, யார் மூஞ்சிலயும். எதையோ தீவிரமா யோசிசிட்டு இருகாங்க. ஆதிக்கு ரித்தி மற்றும் அர்ஜுன் மீது அளவுகடந்த கோபம், இருந்தாலும் அனைத்தையும் அடக்கிக்கொண்டு உட்கார்ந்து இருந்தான் ஆதி. நேரில் பார்த்த பிறகும், அவனது குட்டி இளவரசியை இனியும் அவனால் பிரிந்து இருக்க முடியாது, என்ற ஒரே காரணத்திற்காக அமைதியாக இருந்தான்.

ஆதி தாராவை பார்த்து, 'நான்தான் உன் அப்பா, வாடா செல்லம்' என்று கொஞ்ச. ஆதியை பார்த்ததும் மிரண்டு அர்ஜுனிடம் ஒன்றி 'அப்பா பூச்சாண்டி' என்றாள் அர்ஜுனிடம்.

பெத்த பொண்ணு இப்படி சொல்றதை கேட்டு, ரித்திகாவை முறைத்தான் ஆதி' இவதான் இப்படி சொல்லிக்கொடுத்து இருப்பா ' தாரா குட்டி சொல்வதை கேட்டு, சிரிப்பை அடக்கிக்கொண்டு அமர்ந்து இருந்தாள், ரித்தி. என்னதான் ஆதி மீது அளவுகடந்த கோபம் இருந்தாலும், ரித்திகாவிற்கு ஆதி பக்கம்தான் மனம் சாயும் எப்போதுமே. அவனை நெருங்கத்தான் அவளது மனம் துடித்தது இப்போதுகூட.

குட்டி கூப்பிட்டால் வரமாட்டா என்று நினைத்த ஆதி, தாராவை அர்ஜுன் கைகளில் இருந்து பிடுங்கினான். இதுதான் ஆதி அடாவடியாக பாசத்தை காட்டுபவன். குட்டி இப்போது ஆதி கைகளில், குட்டி அர்ஜுனை நோக்கி கைகளை நீட்டி அழுக ஆரம்பித்தாள்.

அர்ஜுனுக்கு சங்கடமா போயிடுச்சி. முதல் முறையாக அர்ஜுன் குற்ற உணர்வில் தவித்தான்... 'என்னோட கோபத்தால தான் இப்படி ஆச்சி, கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கலாம்' என்று நினைத்தான் அர்ஜுன்.

அர்ஜுன் ஆதி கைகளில் அவளது பேபி பொம்மையை திணித்தான். அதை வைத்து தாராவை சமாதானப்படுத்து என்பதுபோல.ஆதி எவளோ ட்ரை செஞ்சான்.. தாரா திமிறிக்கொண்டு இருந்தாள்.

ஆர்ப்பாட்டம் செய்து அர்ஜுன் கைகளுக்கு திரும்ப தாவிட்ட.

ஆதிக்கு இன்னும் வெறி ஏறியது, இவனை எதாவது செய்யவேண்டும் என்று பழிவுணர்ச்சி மேலோங்க. அர்ஜுனை முறைத்தவாறு அமர்ந்து இருந்தான்.

சாரா வந்த சமயம். அனைவரையும் வித்தியாசமாக பார்த்துகொண்டு காலியாக இருந்த இடத்தில் உட்கார்ந்தாள்.

'ஆதி ரித்திகா... இவங்க இரண்டு பேருக்கும் என்ன சம்பந்தம்? எதுக்கு ரித்திகா இவ்ளோ கோபத்துல இருக்கா? ஒன்னும் புரியலயே, அர்ஜுன் எதும் கண்டுக்காம குழந்தைய கொஞ்சிட்டு இருக்கான், அத்தை இங்க என்ன பன்றீங்க..., ரித்தி அத்தையின் மேல சாய்ந்து உட்காந்து இருக்கா? ஏற்கனவே தெரியுமா அத்தைய அவளுக்கு?... என்ட ஒன்னும் சொல்லலையே இதுக்கு முன்னாடி ' சாரா குழம்பிப்போய் உட்கார்ந்து இருந்தாள்.

பெரிய மௌனத்தின் பிறகு ரித்திகா மெதுவாக அத்தையிடம் இருந்து பிரிந்து உட்கார்ந்தாள்.... வேகமாக எந்திரிச்சி நேரா ஆதி முன்னாடி போய் நின்னு, மொத்த கோபத்தையும் திரட்டி ஆதியை அறைய... ஆதி திரும்ப அவளை அடிக்க, இவர்களை பிரிக்க அர்ஜுன் தான் பெரும்பாடு பட்டன்.

சிறுவயதில் இருந்தே இவங்க இரண்டு பேரோட சண்டையை பிரித்து பிரித்து. இப்போவும் அதே வேலையை சிறப்பாக செய்தான் அர்ஜுன்.

''இவன் எனக்கு வேணாம் அர்ஜுன், என்னை தப்பா பேசிய இவன் கூட என்னால வாழமுடியாது. எந்த மூஞ்ச வச்சிட்டு திரும்ப வந்தான் இவன்...இவனை, இடத்தை காலி பண்ண சொல்லு அர்ஜுன்" என்று ரித்திகா அக்ரோசமா கத்திக்கொண்டு இருந்தாள்.

"இது என் அத்தை வீடுடி, நான் இங்கதான் இருப்பேன், உனக்கு பிடிக்கலனா நீ போடி" என்றான் ஆதி.

"அர்ஜுன் இவன போக சொல்லு தேவ இல்லாதத பேசாம."

"என்ன மூச்சிக்கு மூச்சி அர்ஜுன் அர்ஜுன்னு சொல்லுர, என்னவிட இவன் தானே உனக்கு பெருசு, போடி குண்டு,"

"யாரை பார்த்து குண்டுன்னு சொல்ற... செருப்பு பிஞ்சிடும்" ரித்தி ஆதியை அடிக்க கை ஓங்க..

"குண்டா இல்லாம சிம்ரன் மாதிரியா இருக்க" என்று ஆதி கூற, ரித்தி அவனை அடிக்க ஓங்கிய கையை பிடித்தான், திரும்ப அவளை அடிக்க கை ஓங்கினான், திடீரென என்ன நினைத்தானோ, அவளை இழுத்து அணைத்து முத்தமிட தொடங்கினான்.

3 வருட பிரிவு ஏக்கம் மொத்தத்தையும் ஒரு முத்தத்தில் போக்க முனைப்பில் இருந்தான் ஆதி. ஆதி மகளுக்காகத்தான் தவித்தான், என்று நினைத்தவனுக்கு புரிந்தது.... குட்டியை சாக்காக வைத்து குட்டியின் அன்னையை கவர்ந்து செல்ல வந்தோம் என்பது.

அங்கு இருக்கும் அனைவரும் முகத்தை திருப்பி.... ஆளுக்கொரு திசைல போய்ட்டாங்க.

சாரா மனதில் 'இவன் தம்பியே பரவால்ல... இவனுக்கு ஒன்னுமே தெரில' அர்ஜுனை திட்டிவிட்டு, ஆதியை பாராட்ட தவறவில்லை சாரா.

இவர்களின் அன்னையோ "அறிவு கெட்டவன் கொழந்தைல இருந்து இப்ப வர, அவன் அப்பாவ போல ஒரே அடாவடி", குழந்தையை தூக்கிக்கொண்டு, மலரும் நினைவுகளோடு, ஒரு அறைக்கு சென்று விட்டார் மீரா...

அர்ஜுன் வெளியே போய் நின்றுகொண்டு,. 'சாரா எங்க', என்று பார்க்க. அவளோ, அங்கு நடந்த அதிர்ச்சியில் முகத்தை மட்டும் வேறு புறம் திருப்பிக்கொண்டு, அங்கேயே நின்றுவிட்டாள்.

அர்ஜுன், சாரா அங்கேயே அதிர்ச்சியில் நிற்பதை பார்த்து, அவள் கையை பிடித்து வெளியே இழுத்து வந்தான்.

ஓங்கி இழுத்த வேகத்தில், அதிர்ச்சி தெளிந்து அமைதியாகஅவன் இழுக்கும் திசைல நடந்து வந்து அர்ஜுன் நின்றதும் நின்றாள்.

'சரியான லூசு சாரா நீ, அங்கேயே நின்னுட்டியே, என்ன நினைச்சாங்களோ எல்லோரும்'. என்று சங்கடமாக நின்றுகொண்டு இருந்தாள்.

"பட்டிக்காட்டு முட்டாய் கடையை பார்க்கிறது போல நிக்கிறது" என்று அர்ஜுன் முணுமுணுத்தான்.

"ஹலோ!... அர்ஜுன், நான் ஷாக் ல நின்னேன், அதுக்குன்னு இப்படி நீ சொல்றது, சரி இல்ல பாத்துக்கோ.

அர்ஜுன்னுக்கு அது தெரியும் ஆனால், நம்பாதது போலாம் அவளை பார்த்தான்.

'இவன் வேற நம்ப மாட்டேங்கிறனே, எப்படி நம்ப வைக்கிறது ' என்று யோடித்தவள்.

"மூஞ்சக்கூட திருப்பிட்டு தான் இருந்தேன்", தன்னிலை விளக்கம் கொடுத்தாள்.

அர்ஜுனுக்கு சிரிப்புதான் வந்தது, அவள் சொல்லும் தோரணையை பார்த்து. சிரிப்பை மறைத்தவாறு நின்றிருந்தான்.

அர்ஜுனை சீண்ட நினைத்த சாரா... "ஏன் அர்ஜுன் இதெல்லாம் ஜீன்லேயே இருக்குமா?"

"எது?" கேள்வியாக சாரா கேட்டதை புரிந்துகொண்டு முறைக்க..

"அதான் கிஸ் உ..." என்று இழுத்து சொன்னாள்.

"இப்போ என்னடி உனக்கும் வேணுமா வா டி" சாராவை பிடித்து இழுக்க.

உள்ள ஒரு ஷோ முடிஞ்சது, இப்போ ஆதியும் ரித்திகாவும் சண்டை போட்டுகொண்டு இருக்க,

எனக்கு என் குழந்தை வேண்டும் குண்டு, கொடு டி என்ட" என்றான் ஆதி.

அப்போ குழந்தைக்காகத்தான் வந்தய? இப்போ இந்த குழந்தை என்கிட்ட இல்லாம இருந்திருந்தா, வந்து இருக்கமாட்டல்ல நீ. என் ஆதி இல்ல டா நீ, ரொம்ப மாறிட்ட... காலேஜ் போனப்போ இருந்த ஆதி இப்போ இல்ல, என் ஆதியா இவன்?" அவன் சட்டை காலரைப் பிடித்து கோபத்தில் கத்தினாள். ஏக்கத்தில் அவன் காலடியிலே அமர்ந்து கொண்டாள் ரித்திகா.

அதை பார்த்த மீரா, அர்ஜுனை கூப்பிட வெளியே வந்தார்.

அர்ஜுனை கூப்பிட மீரா வெளிய வர, பார்த்த காட்சி மீராவையே மிரள வைத்தது.

"அடேய் வெக்கம் கெட்ட டாக்ஸ்.. பெத்த ரெண்டும் சரி இல்ல..." தலையை அடித்துக்கொண்டு அர்ஜுனின் அன்னை உள்ளே சென்றார்.

அர்ஜுனின் செயலை பார்த்த சாரா... அப்பாடா நம்ம ஆளு சரி ஆகிட்டான்.. அந்த சந்தோசத்தில் அர்ஜுனை பின்தொடர்ந்து சென்றாள்.

அவளுக்கு தெரியவில்லை கடைசியாக அவளுக்கு மிஞ்சுவது இந்த நெருக்கம் தான் என்று... அங்கு இருவர் சண்டை பிடித்துக்கொண்டு இருக்க.

அர்ஜுன் ரித்தியை நோக்கி "என்னாலதான் நீங்க பிரிஞ்சீங்க, என்னால நிம்மதியா இருக்க முடியல ரித்தி, சேந்து இருக்கீங்களா இனி ப்ளீஸ்? என்றான் யாசிக்கும் தோரனையில்.

ரித்திக்கு எல்லாம் அர்ஜுன்தான், அவனுக்காக எது வேணும்னாலும் செய்யும் குணம் உடையவள். அதனால், சரி என்பது போல தலையாட்டினாள் சாரா.

"சரி மா வங்க போலாம், அவங்க சரி ஆகிடுவாங்க." என்று மீராவை வீட்டுக்கு கூப்பிட.

மீரா அர்ஜுனை முறைத்துக் கொண்டே "சாரா வருவாளா? அங்க..." என்றார்.

"இது என்ன அத்தை கேள்வி அவங்க சேரனும்னுதான் அர்ஜுன் என்ட இருந்து விலகி இருக்கான், இதுகூட புரியலையா அத்தை... வாங்க போலாம்" அத்தையிடம் பேசும் சாராவை பார்த்துவிட்டு, மீராவிடம் பேசினான் அர்ஜுன்.

"மா நான் உங்களை மட்டும்தான் கூப்பிட்டேன்" என்றான் அர்ஜுன்.

சாரா.. "அர்ஜுன் என்ன இது போதும் விளையாடுனது" என்று அர்ஜுன் கையை பிடிக்க சென்றாள்.

அவளது கையை விலக்கிவிட்டு "சாரா பிளீஸ் என்மேல இருந்த நம்பிக்கை எப்போ போச்சோ, அப்போவே லவ்வும் இல்ல, எந்த உறவும் இல்ல..."

"நானும் வரல, இங்கவே இருந்துகிறேன்" மீரா ஒரு அறையில் நுழைந்து கொண்டார்.

ரித்திகா எதோ பேச வர.. "வேண்டா ரித்தி.." என்று தடுத்தான் அர்ஜுன். சாரா அதிர்ச்சியில் நின்றாள்.

தாராவை கையிலே ஏந்தி "மை ஏஞ்சல், அப்பா உன்ன மிஸ் பண்ணுவேன்..." தாராவை ஆதியிடம் கொடுத்தான்.

"ஹேப்பி ஆ இருடா எப்பவும்.. நான் எதும் பறிக்கல உன்கிட்ட இருந்து, எல்லாம் உன்னோட வேண்டாத நட்பால வந்தது" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்தான்.

"என்னோட பிரண்ட்ஸ் பத்தி எனக்கு தெரியும் நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்" என்றான் ஆதி.
அர்ஜுன் ஆதியை திரும்பிப்பார்த்து, இருபக்கம் தலையை அசைத்துவிட்டு, ஒரு பெருமூச்சோடு சென்றான்.

சாராவை திரும்பி ஒருமுறை கூட பார்க்கவில்லை.

அவள் அமைதியாக அர்ஜுன் போவதை, கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டு, முடிந்த அளவுக்கு அவனை அவள் கண்களுக்குள் நிரப்பிக்கொண்டாள்.

ஆதியின் செயல் இவ்ளோ சீரியஸ் ஆகும் என்று நினைக்கல அவன், எந்த தவறும் செய்யாத அவன் தோழி வாழ்கையையும் சேர்த்து கெடுத்துவிட்டோமே, அண்ணனை பழிவாங்க நினைத்து. ஆதி செய்தது அவனுக்கு சுருக்கென்று வலித்தது...

சாரா எதும் நடக்காதது போல ஆதியை பார்த்து.... "தாங்க் யூ அதி" என்று சொல்லிவிட்டு அவள் அறைக்கு சென்றாள்.

இதற்கெல்லாம் காரணம் ஆதிதான் என்று நினைத்த சாரா, அமைதியாக அவளது திங்ஸ்ஸை பேக் செய்துகொண்டு கிளம்பினாள்.

அவளை அங்கேயே இருக்க சொல்லி, மூவரும் மாற்றிமாற்றி சொல்லியும், கேட்காமல் கிளம்பினாள். ஏற்கனவே அவள் தங்கி இருந்த வீட்டுக்கு...

சாராவை ஹாஸ்டலில் தங்கவைக்க விரும்பாத அவளது பெற்றோர். ஒரு வீட்டைப்பார்த்து அவளுக்கு துணையாக சொந்தத்தில் ஒருபெண்ணையும் தங்க வைத்தார்கள்.

எங்கு தங்குவது என்று வீடு தேடி அலையும் வேலையும் இல்லை அவளுக்கு இப்போது. அவளது பெட்டியோடு உள்ளே சென்றாள்.

"அக்கா வந்துட்டீங்களா" என்று ஆசையாக ஓடிவந்தாள். கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் செல்வி.

"வந்துட்டேன்...." என்று ஆரவாரத்தோடு செல்வியை கட்டிக்கொண்டாள் சாரா.

"அக்கா மாமா வரலையா? அத்தை சொன்னாங்க நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டிங்கன்னு..." சாரா செல்வியை பார்த்து மெலிதாக சிரித்துக்கொண்டே.

"மாமா வெளியூர் போய் இருக்காரு, வரதுக்கு ஒரு ஒருவருசம் ஆகும்" என்று சொல்லிவிட்டு அவள் அறைக்கு சென்றாள்.

அவளது அறையில் பெட்டியை வைத்து விட்டு திரும்பி வந்தால் செல்வியிடம், "இத வீட்ல சொல்லாத... கொஞ்சம் கொளறுபிடில நடந்த கல்யாணம், இப்போ மாமா இங்க இல்லன்னு தெரிஞ்சா பதறிடுவாங்க".

செல்விக்கு ஓர்அளவுக்கு தெரியும், இந்த திருமண கலாட்டா... அதனால் தலையை ஆட்டிக் கொண்டு சமைக்க சென்றாள்.

சாராவின் மனநிலையை மாற்றிக்கொள்ள செல்வியிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தாள். "காலேஜ் எப்படி போது செல்வி"

"போது சரோஜா அக்கா.... ஒரே போர், நீங்க இல்லாம எங்கும் வெளிய கூட போல தெரியுமா? " என்றாள் செல்வி வருத்தத்தோடு.

"சரோஜா சொல்லாத டி" என்று சாரா செல்வியை முறைத்தாள்.

"சரிக்கா பழக்க தோஷத்துல சொல்லிட்டேன்" செல்வி சிரித்துக்கொண்டு வேலையை செய்தாள்.

செல்விக்கு பெற்றோர் இல்லை.... வீட்டு வேலைக்காகத்தான் சாரா கூட அனுப்பிவைத்தார்கள்... சாரா செல்வியை சமாதானம் செய்து ஒருவழியாக வீட்டுக்கு பக்கம் இருக்கும் கல்லூரியில் சேர்த்துவிட்டாள்.

சாரா வேலை முடிந்ததும் இருவரும் சமைத்து சாப்பிட்டுவிட்டு ஊர்சுற்ற கிளம்பிடுவாங்க... செல்வியின் நண்பர்களுடன், லீவு நாள் என்றாள் போதும் இன்னும் களைகட்டும்..

அன்றைய இரவு உணவை முடித்துக்கொண்டு தூங்கச்சென்றார்கள்... சாராவின் மனதோ பழையதை அசைபோட ஆரம்பித்தது.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
16

அனைவரையும் வெறுக்கும் அளவிற்கு பேசி விட்டு, அர்ஜுன் வீட்டுக்கு சென்று தேவையான சில பொருட்களை எடுத்துக்கொண்டு அவன் அலுவலக அறைக்கு சென்றான்.

அனைத்தும் சரிதான்... ஆனால் சாரா என்ன தவறு செய்தாள்,அவள் கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது என்று கூட தெரியாமல் திணறினான், அதை யோசித்தபடி தூங்க கண்களை மூட. தூக்கம் வந்தால்தானே, அவளுடன் எடுத்த அனைத்து புகைப்படத்தையும் பார்த்துக்கொண்டு இருந்தான்.

முதல் புகைப்படம். இன்னும் நீங்காத நினைவுகள்.

அங்கு சாரா இங்கு அர்ஜுன் ஒரு மாதம் முன் நோக்கி செல்ல,

இங்கு ஆதி ரித்தியை எப்படி சமாளிப்பது என்று குழம்பி போனான்.

அவனுக்கு ஆசைப்பட்டது, ஏங்கி நின்றது எல்லாம் இன்று அவன் கையில். மனைவி, மகள், அவனின் அம்மா ஆனால் தோழியின் வாழ்க்கை!,

"கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கலாமோ" என்று ஆதையே நினைத்துக்கொண்டு இருந்தான். 'சில நாட்கள் பொறுத்தால் எல்லாம் சரியா போய்டும், நாளைக்கு போய் அர்ஜுனிடம் பேசணும்'. ஆதிக்கு அனைத்தும் மாறியது, ஆனால் அர்ஜுன் மீது இருந்த கோபம் தவிர.

ஆதி சாராவை பார்த்து மனம் வருந்தினான், அர்ஜுன் கிளம்பியதும் சாரா ஆதியை பார்த்து தேங்க்ஸ் சொன்னது, ஆதிக்கு என்னவோ போலானது... அண்ணனை பழிவாங்க தோழியின் வாழ்க்கையை கேடுத்துவிட்டோமே, அதுமட்டும் இல்லாமல சாராவிற்கு ஆதியின் ஒரு ஒரு அசைவும் தெரியும்,சாரா தெரிஞ்சும் ஒருவார்த்தை கூட திட்டாம போனது ஆதிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. சாராவை பற்றி நினைத்து வருத்திக்கொண்டு இருந்தான் ஆதி.

பொறுமையாக முதலில் இருந்து யோசித்துக் கொண்டு வந்தான். இங்கு யார்மீது தப்பு என்று. ஆனால் ஆதிக்கு புரியவே இல்லை... எங்கு தப்பு நடந்தது என்று.

அர்ஜுன் சொல்லும் அனைத்தும் கேட்கும் ரித்திகா, ஆதிக்காக இரத்தம் சிந்த கூட தயங்க மாட்டாள், என்று சொன்னால் யாரும் நம்பவே மாட்டார்கள், அப்படி ஒரு பிணைப்பு இருவருக்கும் சிறுவயதில் இருந்து.

ரித்திகா குழந்தையை தூக்கிக்கொண்டு, அறைக்கு சென்று படுக்க வைத்துவிட்டு, அவள் ஒரு புறம் படுத்தாள்.

ஆதியின் அன்னை மீரா, அவனை முறைத்துக்கொண்டே இருந்தார், 'இவன் முழியே சரி இல்லையே, நாளைக்கு கவனிச்சிக்கலாம் இவனை,' என்று நினைத்து கொண்டு மீரா ஒரு அறையில் படுத்துக்கொண்டார்.

ஆதி வெறும் வரவேற்பு அறையில் ஈ ஓட்டிக்கொண்டு இருந்தான். மீரா இருக்கும் அறையையும் ரித்திகா இருக்கும் அறையையும் மாற்றி மாற்றி பார்த்தவன்.

"ரித்தி செம காண்டுல இருக்கா, ரூமுக்கு போனா ஏதால அடிப்பான்னு கூட தெரியாது, அம்மாட்ட போய் படுத்துக்கலாம்' என்று எழுந்தவன் மீராவின் அறைக்குள் மெதுவாக நுழைந்தான்.

மீரா தூங்கிட்டாங்க என்று மெதுவாக, மூஞ்சிக்கு முன்னாடி கையை அசைத்து பார்த்து "அப்பாடா தூங்கிட்டாங்க" என்று நினைத்து மீரா பக்கம் போய் அமைதியா படுத்துட்டான் ஆதி.

எல்லாம் சரியாகிடுச்சு என்ற நிம்மதி. சாரவையும் நாளைக்கு சரி செஞ்சிடலாம், என்று நினைத்து கண்ணை முடியதும் ஆழ்ந்த தூக்கத்துக்கே போய்ட்டான் ஆதி.

சிறிதுநேரம் கழித்து, ஆதிக்கு யாரோ தலையை வருடுவதுபோல சுகமாக இருக்க.... இன்னும் மீரா அருகில்இன்னும் நல்லா ஓட்டி படுத்தான். ஒரு ஐந்து நிமிடம் இருக்கும், நன்றாக ஆழ்ந்த தூக்கத்துக்கு சுகமாக சென்று கொண்டு இருந்த ஆதி.

"ஆஆஆஆ...." என்று கத்திக்கொண்டு எழுந்தான் ஆதி, மீரா ஆதியின் தலை முடியை பிடித்து மண்டையை நல்லா ஆட்டிட்டு இருந்தாங்க.

"மா.... என்ன பண்றீங்க முடிய விடுங்க வலிக்குது" என்று கத்திக்கொண்டே. மீராவின் கையை எடுக்க முடியாமல் திணறினான்.

"எதுக்குடா என் பக்கத்துல படுத்த, அதான் கல்யாணம் பண்ணி கொழந்த கூட பெத்துட்டீங்க ல, நீ என்ன குழந்தய அம்மாட்ட வந்து படுக்கிற, எரும எரும " என்று ஆதியை திட்ட.

"ஆமா அப்படியே, நான் அவ ரூம்க்கு போனா சும்மா விட்டுடுவா பாரு" என்று வலியை பொறுத்துக்கொண்டு பதில் அளித்தான்.

"மா வலிக்குது மா" மீரா அவன் தலையிலே இருக்கும் மொத்த முடியும் பிடிங்கி எடுக்கும் நோக்கோடு, ஆதியின் தலையை ஆட்டிக்கொண்டு இருந்தார்.

"என்ன கன்றாவிடா இது, ஹேர் ஸ்டைல்னு சொல்லிட்டு, பொண்ணு மாறி முடி வளத்து வச்சி இருக்க, ஒரு ஜோடி குழந்தைக்கு பயம்காட்டி சோறு ஓட்டலாம். மூடிய பாரு நல்லா பின்னி ஜட போடலாம் போல. பிசினஸ் நல்லாதானபோது, என்ன பிச்சையா எடுக்குற. முடிவெட்ட கூட காசு இல்லாதமாதிரி" என்று இந்த ரணகளத்துலயும் மீரா ஆதியை கலாய்த்துக்கொண்டு இருந்தார்.

முடியில் இருந்த கையை ஆதி கஷ்டப்பட்டு எடுத்து, அவன் கைகளுக்குள் வைத்துக்கொண்டான்.

"என்மேல கோபம் இல்லையாமா," என்று மீராவை ஆதி கேட்டான்.இவ்வளவு வருஷம் கழிச்சும் கோபத்தை விட்டு பாசமாக பேச அம்மாவால மட்டும்தான் முடியும்.

"நிறைய இருக்கு ஆதி, அடக்கமுடியாத கோபம், சுத்திநடக்கிறத நீ புரிஞ்சிக்கோ. ரித்திகா பாவம் டா, இவ்ளோனாள் அவளை தனியா விட்டது தப்புடா. உனக்கு தெரியாம நிறைய நடந்துடுச்சி அவ வாழ்க்கைல... அது இன்னும் முடில. அத சரி செய்ய உன்னாலதான் முடியும். எனக்கு சத்யம் செஞ்சி குடு, எப்பவும் அவளைவிட்டு போகமாட்டேன்னு".

"இல்லமா என்னால எப்பவும் அவ இல்லாம இருக்கமுடியாது. எந்த சூழ்நிலையிலும் அவளை விடமாட்டேன் ".

"ஆனா இவங்க ரெண்டு பேரையும் சமாளிக்க நான் நிறைய செய்யனும் போல மா" என்றான் அலுத்துக்கொண்டு.

"ஒரு நாளைக்கே இப்படி சலிச்சுக்கிற இன்னும் இருக்குடா மகனே, அம்மாவும் மகளும் சேந்து உன்ன நிம்மதியா கூட தூங்க விடமாட்டாங்க" என்று மீரா ஆதிக்கு இன்னும் பயத்தை கிளப்ப,

"அதையும் பாக்கலாம், எனக்கு தூக்கம் வருது" என்று மெத்தையில் சரிந்தான்.

"டேய்ய் நீ போ, அவ ரூம் க்கு'' என்றார் மீரா.

"மா என்னால அடிவாங்க முடியாதுமா.... அவ எப்படி அடிப்பான்னு உனக்கு தெரியாது". மீரா சிரித்துக்கொண்டு, "பரவால்ல நா உங்கள பெத்ததே, என் மருமகளுங்ககிட்ட அடிவாங்கதான்". என்றார் சிறித்துக்கொண்டே.

"அம்மா உன்ன..." ஆதி நெருங்கி சென்று மீராவை கட்டிக்கொண்டான். மீரா ஆதியை சிறிது நேரம் தட்டி கொடுத்துவிட்டு. ஆதியை பிரித்தார் மீரா.

"சரி போதும், அங்க போ... அம்மா எங்கும் போல, இங்கதான் இருப்பேன். ரெண்டு பேரையும் சமாதானம் படுத்திட்டு வா, நான் தாலாட்டு பாடி பக்கத்துலயே வச்சிக்கிறேன், இந்த ஆறடி குழந்தையை."
ஆதி மீரா கன்னத்தில் அழுத்தமாக முத்தம் பதித்து விட்டு.... "சரி மா... குட் நைட்" அறையைவிட்டு வெளியேறினான்.

ரித்திகாவின் ரூம்க்கு போறது ஆதிக்கு சரியா படல, ஹால்ல படுக்க நினைத்தவன், படுத்தும் விட்டான். நல்லா வளத்தி அந்த பெரிய சோபா அவனுக்கு சிறிதாகி போனது.

'இத அட்ஜஸ்ட் செஞ்சிக்கலாம் எப்பவும் இங்கயே படுக்கறது கூட ஓகேதான். ஆனா ரித்திகாவை நெருங்குறது அவ்வளவு சுலபம் இல்ல... ஒரே அறையில் இருந்தாலாவது பேசுவதற்கு வாய்ப்பு இருக்கு' என்று ஆதி தயங்கியவாறு‌, அவளது அறைக்குள் நுழைந்தான்.

ஆதி குழந்தையை இடையிலே படுக்க வைத்து இருக்கும் ரித்திகாவின் குழந்தைத்தனத்தை எண்ணி. அவளையும் குழந்தையையும் பார்த்தவாறு கட்டிலில் வந்து அமர்ந்தான்.

சிறிது நேரம் இருவரையும் பார்த்துவிட்டு, குழந்தையை நெருங்கினான் ஆதி.

புதிதாக யாரோ அருகில் வருவது தெரிந்த தாரா. ரித்திகாவின் புறம் புரண்டு படுத்தாள்.... "மா இடியட் மா" என்றாள், அன்னையிடம் ரகசிய குரலில், ஆனால் ஆதிக்கு நன்றாகவே காது கேட்டது.

'என்னது இடியட் ஆ!"" குழந்தையும் சேர்த்து கெடுத்து வச்சி இருக்காளே. இவகூட சேத்து குட்டி மூட்டைய வேற சேந்து சரி பண்ணனுமா" ஆதிக்கு நினைக்கும்போதே விழி பிதுங்கியது.

தாரா சொன்னதை கேட்டு. ஆதி கோபப்படுவானே இடியட்ன்னு சொன்னாள்... பதறியடித்துக்கொண்டு, தன்விழியால் ஆதியை பார்த்தாள். அவள் நினைத்ததற்கு நேர்மாறாக, அவனின் முகம் சந்தோஷத்துல இருந்தது.

இவ்வளவு இளகிய ஆதியா!!!!என்று ரித்திகாவிற்கு புதிது, மகள் அவனை பாராட்டியது போலவே ரசித்து பார்த்துக் கொண்டு இருந்தான்.

மெலிதாக ஆதி குட்டியை தன்புறம் இழுத்தான்.... "மாஆஆ..." என்று பெரும் கூச்சலோடு சிணுங்கினாள். ரித்திகாவின் கழுத்தை கட்டிக்கொண்டாள். ஆதியின் முகம் சோகத்தை அப்பிக்கொண்டது.

என்னதான் ரித்திகாவிற்கு அவனை பிடிக்கலனாலும், பலமுறை குட்டிக்காக சேர்ந்து விடலாம் என்று நினைப்பாள். மறு நொடி அவன் செய்த அனைத்தும் குறும்படம் போல ஓட, மனதை திரும்ப மாற்றிக்கொள்வாள். இப்படித்தான் ரித்திகாவிற்கு மூன்று வருடங்கள் சென்றது.

ஆதி முகத்தை இப்படி பார்க்க முடியாமல். குழந்தையை தூக்கிக்கொண்டு அமர்ந்தாள்.

"பாப்பா இங்க பாரு...." என்று பக்கத்தில் இருக்கும், ஆதியின் புகைப்படத்தைக்காட்டி. "திஸ் ஐஸ் யுவர் டாடி டா தங்கம்". குட்டி மறுப்பாக.... "நோ, திஸ் ஈஸ் இடியட்..." புகைப்படத்தை காட்டி.

ரித்திகா ஆதியை நினைத்து கோபம் வரும் போதுலாம் இடியட் இடியட் திட்டினது பத்தாது என்று. குழந்தைக்கு அப்பா சொல்லித்தரத்துக்கு பதிலா இடியட்ன்னு சொல்லித்தந்து. குட்டி சொல்லும் போது ரசித்து சிரிப்பாள். குட்டி எப்போ எல்லாம் அந்த போட்டோ பார்க்கிறாளோ. இடியட் சொல்லி சொல்லி ரித்திகாவை சிரிக்க வைப்பாள்.

ரித்தி ஆதியை பார்த்து எதையோ திருடி மாட்டிக்கொண்டது போல முழித்தாள்.

ஆதி நடக்கும் அனைத்தையும் அமைதியாக ரசித்துக்கொண்டு இருந்தான்.

ஆதி எழுந்து அந்த புகைப்படத்தின் அருகில் நின்று, அதும் நானும் ஒன்னு, என்று சுட்டிக்காட்டினான்.

குட்டி வேகமாக நடந்து சென்று ஆதியை தூக்குமாறு கைகளை உயர்த்தினாள். ஆதியின் அருகில் சென்று, கால்களை கட்டிக்கொண்டாள்.

ரித்திகா இந்த கட்சியை பார்த்து நெகிழ்ந்துதான் போனாள். கட்டிலிலேயே சாய்ந்து அமர்ந்து சலனம் இல்லாமல் இருவரையும் பார்த்துக்கொண்டு இருந்தாள், ரித்திகா.

ஆதி ஆசையாக தூக்கினான்.... தூக்கிய மறுநோடி. குட்டி ஆதி கன்னத்தில் ஒன்னு வைத்துவிட்டு. "இடியட்...." என்று சொல்லி மறுமுறை அடித்தாள். ஆதி சிரித்துக்கொண்டு அடிவாங்கினான். அவளின் ஸ்பரிசத்தை பெற, குட்டியிடம் மறுகன்னத்தை மாற்றி மாற்றி காட்டிக்கொண்டு இருந்தான். இன்னும் எவ்வளவு அடி வேணும்னாலும் வாங்கிக்க நான் தயார், என்று உணர்த்தியது அவனது செய்கை.

ரித்திகா ரசித்துக்கொண்டு இருந்தாள் இருவரையும்.

ஆதி குழந்தையை தூக்கிக்கொண்டு ரித்திகா அருகில் சென்று அமர்ந்தான்.

"டெட்டி... "என்றான் ரித்திகாவை எப்போதும் கூப்பிடுவதை போல . ரித்தி அமைதி எங்கோ சென்று, அவளது முகத்தில் கடுமை பரவியது.

அடிச்சி விளையாடி முடிச்சிட்டு... ஆதியிடம் பிரிந்து ரித்திகாவிடம் சென்ற குட்டி, சொப்பு வாயை வைத்து ஆஆஆஆ, என்றாள் பெரியதாக.

அவளின் அந்தச்செயல்... போடா உன்னை அடித்து எனக்கு தூக்கமே வந்துவிட்டது என்பது போலவே இருந்தது ஆதிக்கு. தாராவின் சிறு சிறு செய்கையை ஆதி ரசித்துக்கொண்டு இருந்தான்.

ரித்தி அவளை தட்டி தூங்கவைத்தாள். குழந்தை, நாள் முழுவதும் போட்ட ஆட்டத்தில் வழக்கத்தை விட சீக்கிரம் தூங்கப்போனாள்.

ரித்திகா இடையிலே படுக்க வைத்தாள்... பொசிஷன் மாறவும் குட்டி மெலிதாக சிணுங்க தட்டிக்கொடுத்துக் கொண்டு கண்களை மூடினாள்.... சிறிது நேரம் கழித்து சில்லென்று ஒரு கை ரித்திகா கைமீது படர்ந்தது. அந்த கைக்கு சொந்தக்காரனிடம் இருந்து சட்டென்று கைகளை உருவிக்கொண்டாள்.

ஆதி குழந்தையை தட்டிக்கொடுத்து கொண்டே, ரித்திகாவை பார்த்தான்.... ஆதி, பார்வையால் யாசித்துக்கொண்டு இருந்தான் மன்னிப்பை.

ரித்திகா வேகமாக மறுபுறம் திரும்பி படுத்துகொண்டாள். அதுலாம் தரமுடியாது போடா, என்றது அவளது செயல்.

இங்கு இருவர் இப்படி இருக்க.... அங்கு இருவர் ஒரே கடந்தகாலத்தை தனித்தனியே பயணிக்க தொடங்கினார்கள்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
17

நதியே நதியே காதல் நதியே......

வண்ண வண்ண
பெண்ணே வட்டமிடும்
நதியே வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு

ஹோ.. மெல்லிசைகள்
படித்தல் மேடு பள்ளம் மறைத்தல்
நதிகளின் குணமே அது
நங்கையின் குணமே

சிறு நதிகளே
நதியிடும் கரைகளே
கரைதொடும் நுரைகளே
நுரைகளில் இவள் முகமே

தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா திரனா

தேன்கனியில்
சாராகி பூக்களிலே
தேனாகி பசுவினிலே
பாலாகும் நீரே

தாயருகே சேயாகி
தலைவனிடம் பாயாகி
சேயருகே தாயாகும்
பெண்ணே

வசீகரமான முகபாவனை கொண்ட நம்ம ஹீரோ, அந்த பாடல் வரிகளுக்கு ஏற்றவாறு முணுமுணுத்து கொண்டே வீட்டில் நுழைகிறான்.

"சுப்ரபாதம் இனி ஆரம்பம்" என்று சொல்லிக்கொண்டு ப்ளூடூத் ஆஃப் செய்து, டேபிள் மேலே வைத்துவிட்டு. "அம்மா பால்..." சொல்லி முடிச்சிட்டு.... கவுண்ட் டவுன் ஸ்டார்ட் 1,2,3

"என்னடா தடிமாடு ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்கோ இல்லனா ஒரு நாள் இல்ல ஒரு நாள்... எங்காவது கல்யாணம் நிக்கும், அந்த இடத்தில உங்க பொண்ண என் பையன் வாழ்கை தருவான் னு சொல்லி உன்னை தள்ளி விடபோரன் பாரு" என்று மீரா சாபம் விட,

"ஓகே மா, அப்படி ஒன்னு நடந்தா, நீங்க சொன்ன அடுத்த செகண்ட் அவதான் என் பொண்டாட்டி... ஓகேவா" என்றான் அர்ஜுன் கண்களை சிமிட்டி.

அம்மா கைல இருந்த பாலை வாங்கிக்கொண்டு, ஒரே மூச்சில் குடித்துவிட்டு, நைசா நழுவினான் நம்ம அர்ஜுன்.

"டேய்ய் எங்க டா போற, இப்போதான் வீட்டுக்கு வந்த" மீரா சொல்றத கேக்றதுக்கு அங்க அர்ஜுன் இருந்தா தான.

இவனுக்கு என்ன தான் பிரச்சனை, எல்ல வகையான பொண்ணையும் காட்டியாச்சி, மாடர்ன் ல இருந்து வில்லேஜ் வரை, இவளோ அழகா, என்னமாதிரி இவ்ளோ அழகா, அடக்கமான பொண்ணு கிடைக்கிறது எவளோ கஷ்டம், இவனுக்கு ஒன்னுகூட பிடிக்கலையே....
"இவன நா எந்த லிஸ்ட் ல சேர்க்க?" என்று மீரா தன்னை அழகு, அடக்கம் என்று பெரிய பொய்யை சொல்ல... வாசல் வரை சென்ற அர்ஜுன் திரும்பி வந்து.

"ஏன்மா உனக்கே கொஞ்சம் ஓவர் ஆ இல்ல... நீ அழகுன்னு சொன்னதுகூட, என் அம்மாவா போய்ட்டியேன்னு ஏத்துக்கலாம், ஆனா அடக்கம் எத்தனை கிலோ எங்க கிடைக்கும்ன்னு கேக்கற ஆளு நீ.... நீ அடக்கமா?!!!" என்று வாசலில் இருந்து அர்ஜுன் கத்திவிட்டு, செல்லும் நேரம் கரெக்டா அவன் மண்டைல கரண்டி விழுக இருந்ததிலிருந்து, தப்பித்து ஓடினான் அர்ஜுன்.

"ச்சை ஜஸ்ட் மிஸ்...." என்று மீரா தூக்கி எறிந்த கரண்டியை எடுக்க வெளியே வந்தார்.

"டேய்ய் என்னவே கலாய்க்குறியா, கொட்டிக்க வீட்டுக்கு தான வரணும், அப்போ கவனிச்சிக்கிறேன்டா உன்னை" என்று மீரா கத்திக் கொண்டு இருக்க.... ஹெட் செட் காதில் வைத்து பாட்டு கேட்பது போல சென்றான்.

"மீரா எனக்கு காது கேக்கல "என்று அங்கு இருந்தே கத்திவிட்டு சென்றான் அர்ஜுன்.

"எனக்கு கல்யாணமே வேண்டாம்னு சொல்லி இருந்தா, நான் அமைதியா இருந்து இருப்பேன். இவனுக்கு பொண்ணு பாத்ததுக்கு நான் சும்மாவே இருந்து இருக்கலாம்" என்று மீரா வழக்கம்போல பொலம்பிக்கொண்டு இரவு உணவை சமைத்து முடித்தார்.

சைலண்ட் ஆ அர்ஜுன் வெளிய கிளம்பிட்டான்.

இது டெய்லி நடக்கிறது தான், ஈவ்னிங் ஜாக்கிங் போறேன்னு சொல்லிட்டு, ஸ்ட்ரீட் ல ஒரு உலா வருவான்.... ஒரு மணிநேரம் கழிச்சி வீட்டுக்கு வருவான்.

வீட்ல நுழையும் போதே சுப்ரபாதம் ஸ்டார்ட்.....

அர்ஜுன் வரும் சமயம் பார்த்து, மீரா மறுபடியும் சுப்பிரபாதத்தை ஆரம்பித்தார்.

"முருகா இந்த வருஷம் ஆச்சு அவனுக்கு ஒரு பெண்ணை அவன் கண்ணுல படவைங்க" என்று சொல்லி சமையல் செய்ததை டைனிங் டேபிள் ல அழகா அடுக்கி வைத்தார்.

அம்மா போதும் மா எப்போ பாரு இதே சொல்லுர, ஒரு நாள் என்னோட தேவதை ? என் கண்ணுக்கு மாட்டுவா. அப்படியே அவள பிடிச்சிட்டு வந்துடறேன்.. ஓகே வா, கொஞ்சம் சிரிங்க என் மீரா ராணியே" என்றான் அர்ஜுன், அப்பா அடிக்கடி சொல்வது போலவே...

"போடா இன்னொரு முறை அம்மாவ பேரு சொல்லி கூப்பிட்டா, என் மருமகள் ட சொல்லி நல்லா அடிவாங்க வச்சிடுவேன், அப்போ இந்த அம்மா காலுல விழுந்து கெஞ்சினாலும் காப்பாத்த மாட்டேன். அப்போதான் இந்த மீரா எவளோ டெரர்னு தெரியும்" என்று அர்ஜுனுக்கு மெரட்டல்விடட்டார்

"ஓகே மா நீ அந்தமாரி ஆளுதா செஞ்சாலும் செய்வ" என்றான் அர்ஜுன் சிரித்துக்கொண்டே.

"எனக்கு பசிக்குது, கொஞ்சம் சோறு போட்டா நல்லா இருக்கும்" என்று கூறி, மீரா மறந்ததை நினைவு படுத்தினான் அர்ஜுன்.

இந்த அர்ஜுனோட டெய்லி வீட்டு லைஃப், இதுக்கு எதிரான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருந்தான் வெளியே,
இவனுக்கு சிரிக்க தெரியாது என்பது போல சுற்றிக்கொண்டு இருப்பான். இவன் போலி வேஷத்தை கலைக்க, இவனை கலாய்க்க இவனைத்தேடி இவனது தேவதை அர்ஜுனிடம் வருகிறாள்.

ஒரு குட்டியா டான்ஸ் ஸ்கூல் வைத்து நடத்தி கொண்டு இருக்கிறன் அர்ஜுன். முழுக்கமுழுக்க வெயிட் லாஸ் பண்றது மற்றும் உடம்பை பிளேக்சிபில் ஆக வைத்து இருப்பதற்கான வகுப்புகள் எடுத்துக்கொண்டு இருக்கான்.

ஸ்டாப் கொஞ்சப்பேர் வைத்து. இப்போ அதோட ரேஞ்சே வேற, ஆனா நம்ம அர்ஜுனுக்கு அதுவே டெவெலப் செய்யனும்னு எந்த ஒரு ஐடியா வோ இல்ல. ஏன்னா அதுவே டெவெலப் ஆகிக்கும் என்ற தைரியம் தான்.

யாராவது இன்னும் டெவெலப் செய்லாமே என்று அறிவுரை கொடுக்க வந்தா போதும், ரெகார்ட் செய்தது போல இந்த பதிலைத்தான் கூறுவான்.

"எனக்கு பிடிச்ச விசயத்த செய்றேன், இதான் நான். எதுக்கு போட்டி எல்லாம், எந்த வம்புக்கும் போகமாட்டேன்.... வந்தாலும் எப்படி அமைதியா சமாலிக்கணும்னு தெரியும்" என்பான்.

இவன் தான் அர்ஜுன், சாப்டா ஹேண்டில் செய்ற சாக்லேட் பாய். இவனையோ ரோமியோவாகவும், கோவக்காரனாகவும், மாற்றப்போகும் பெண் இவனை தேடிவந்து கொண்டு இருக்கா.

அம்மா வந்த உடனே ஒரு போட்டோ, போன் நம்பர் குடுக்கிறங்க... பொண்ணு போட்டோ போன் நம்பர் கொஞ்சம் பேசு னு.

இவன் போன் பண்றதுக்குள்ள, அர்ஜுனுக்கு போன் வருது.

" ஹலோ " என்று மிக மெல்லிய குரல் கேட்க.

"யாரும் வேணும் " என்றான் அர்ஜுன்.

நந்தாங்க உங்களுக்கு பாத்தா பொண்ணு, அர்ஜுன்க்கு ஒன்னும் புரியல.

பாத்தாங்க னு சொன்னாங்க இப்போதான் என்றான்.

"இந்த மாசம் கடைசிகுள்ள கல்யாணம் னு திடிர்னு வீட்ல சொன்னாங்க எனக்கும், அதான் உங்கட கொஞ்சம் பேசணும்", என்றாள் அந்த பெண் படபடப்பாக.

அப்படியா, 'அம்மா ஏதோ பிளான் பண்ணிடுச்சி போல ' என்று யோசித்த அர்ஜுன்.

"சொல்லுங்க என்ன பேசணும்",

"எனக்கு ஆல்ரெடி ஒரு காதல் இருக்குங்க".

"அப்பாடா ஈசி, ஆட்டத்தை கலச்சி விடுறது" என்று அர்ஜுன் யோசித்தான்.

"அது அப்பா டா சொன்னேன், ஆனா ஒத்துக்கல. என்ன செய்றது னு தெரில" என்றாள் அந்த பெண் பதட்டமாக.

அர்ஜுன் சிறிது நேரம் யோசித்துவிட்டு.

"கல்யாணத்துக்கு ஓகே சொல்லுங்க, உங்க லவ்க்கு நான் உதவி செய்றேன், அதனால எனக்கும் கல்யாணம் கொஞ்ச வருஷம் தள்ளி வைக்க உதவியா இருக்கும்" என்றான்.

இருவர் திட்டம் என்னனா.... கல்யாணம் மேடை வரை வந்து நின்றால். அர்ஜுன்க்கு கொஞ்ச வருஷம் அம்மா வாயை அடைக்கலாம். அந்த பொண்ணு அப்பா, ஏன் லைப் அ கெடுத்துட்டேன்னு வருத்தப்பட்டு, பொண்ண தேடமாட்டாரு. கொஞ்ச வருசத்துல அவங்க சேந்துடுவாங்க. இதுதான் இவங்க 2 பேரும் போட்ட பிளான்.

இவன் பிளான் போட்டு முடித்த சிறிது வாரம் கழித்து இவனோட தேவதை வடிவில் உள்ள ராட்சசி வருகிறாள்...... மிக விரைவில்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
18

"அக்கா போன் விட்டுட்டு போறீங்க" என்று கத்திக்கொண்டே வெளியே ஓடிவந்தாள் செல்வி.

'அவன் மேல இருந்த கோபத்துல மறந்துட்டேன்'... "தேங்க்ஸ் செல்வி..." என்று திரும்பியவள். செல்விடம் மறுபடி திரும்பி ஏதோ சொல்லவந்த சாராவை தடுத்து, செல்வி பேச ஆரம்பித்தாள்.

"காலேஜ்க்கு பத்திரமா போ. ஏதாவதுனா கால் பண்ணு, பணம் எடுத்துகிட்டயா டேபிள் மேல வச்சத, போன் கைலயே வச்சிக்கோ" என்று சாரா தினமும் சொல்லும் சுப்பிரபாதத்தை செல்வி சாராவை போல பேச... சாரா செல்வியின் காதை திருவி "கிண்டலா பண்ற, சாயந்த்ரம் வந்து வச்சிக்கிறேன் உன்ன" இருந்த டென்ஷனை செல்வி குறைத்துவிட்டாள், அவள் குறும்புத்தனத்தால். செல்வியின் சேட்டையை நினைத்துக்கொண்டு அலுவலகத்தை நோக்கி சென்றாள் சாரா, ஆதியை ஒருவழி ஆக்கிவிடும் எண்ணத்தில்.

புயல் வேகத்தில் அலுவலகத்திற்குள் நுழைந்தாள், பட்டாம்பூச்சி ஆக சுற்றி திரிந்தவளை பிடித்துக்கொண்டு வந்து.... "என்னோட கம்பெனியை நெஸ்ட் ஸ்டேஜ்க்கு கொண்டு வந்து விட்டுட்டு கிளம்பு" என்று ஆதி அவளை வலுக்கட்டாயமாக பிடித்து இழுதுவந்து தலைமை பொறுப்பில் விட்டான். இந்த வருடம் முன்பை விட லாபம் பத்து மடங்காக மாற்றி இருந்தனர், ஆதியும் மற்றும் சாராவும்.

தினமும் ஏதோ மெஷின் போல ஓடிக்கொண்டு இருக்கும் சாராவிற்கு அழுத்துப்போய், 'இன்னைக்கு ஒரு முடிவு கட்டனும்' என்று ஆக்ரோசமாக வந்துகொண்டிருந்தாள்.

"இவனுக்கு உதவி செய்யலாம்னு வந்தா, எனக்கே ஸ்ட்ரெஸ் ஏத்தி விட்டுட்டியே டா நீ, மவனே இன்னைக்கு உனக்கு இருக்குடா கச்சேரி. சும்மா ஒரு அப்பரெண்டிஸ் கிடைச்சதுனு சம்பளம் கூட கொடுக்கல, மூணு வருஷமா" என்று ஆக்ரோஷமாக வந்துகொண்டிருந்தவள், அந்த கம்பெனி முதலாளியின் ரூம் கதவை டமார் டுமீல்னு ஒதச்சிக்கிட்டு என்ட்ரி கொடுக்கறா நம்ம சாரா...

அவள் வந்த சத்தத்தை கேட்டு திரும்பிய ஆதி 'ஆத்தி என்ன இப்படி சத்தம் போட்டுட்டு வராளே, இன்னைக்கு எத உடைக்க காத்துட்டு இருக்கான்னு தெரிலயே' சாரா பக்கம் வரதுக்குள்ள டேபிள் மேல இருந்த உடையும் பொருளை எடுத்து மறைத்து வைத்தான் ஆதி.

"டேய்ய் நீ சொன்ன மாதிரி உன் ஆபீஸ்ல எல்லாம் ஒரு அளவுக்கு செட் ஆயிடுச்சி, ஆனா இன்னும் இந்த இடத்த விட்டு நகர விடமாட்டேங்குற, என்னால முடிலடா மூச்சி முட்டுது இங்கயே இருந்தா!..." ஆக்ரோஷமாக பேசி சோகத்தில் முடித்தாள் ஆதியிடம்.

ஆதி வீட்டுல அடங்கவே மாட்டேங்கிறான் என்று வீட்ல இருக்கவங்க ஒரு வருஷம் வெளி ஊரில் ஹாஸ்டல்ல சேர்த்துவிட்ட நேரத்தில் கிடைத்த நட்புதான் சாரா. ஸ்கூல் படிக்கும் போது இருந்து இருவரும் நெருங்கிய நண்பர்கள். அங்கு இருந்து வந்த பிறகும் போனின் உதவியால் நட்பை வளர்த்து வந்தார்கள்.

"நா எப்படிப்பட்ட லைஃப்ல... அப்படியே ஜாலியா எந்த வலியும் இல்லாம அப்படியே நாள்முழுக்க பேக்கிரவுண்ட்ல சாங் கேட்டுட்டே இருக்கனும், நான் நடக்கற ஒவ்வொரு ஸ்டெப்பும் டான்ஸ் ஆடுர ஃபீள்ல அப்படி இருக்கணும்னு, எவ்ளோ அசையா அதுக்கு ஏத்தது போல பிளான் பண்ணன் கடங்காரா... நடுவுல வந்து ஆட்டத்தை களைச்சி விட்டுட்டான்" ஆதியை திட்டிக்கொண்டே அவனை அடிக்க எதாவது கிடைக்குமா என்று தேடிக்கொண்டு இருந்தாள் சாரா.

"அதுல அடிக்க எதுமே கிடைக்காது எல்லாம் எடுத்து பத்திரமா ஒளிச்சி வச்சிட்டேனே" என்று ஆதி பெருமையாக சாராவிடம் சொல்ல, கடுப்பான சாரா அவனது போன் டேபிள் மேல இருக்குறத பார்க்க, சாரா பார்ப்பதை ஆதி பார்க்க... ஆதி எடுக்கும் முன்பு சாராவின் கைகளில் மாட்டியது ஆதியின் போன்.... சரியாக தூக்கி அவன் நெற்றியில் அடித்தாள்.

"அவ்வ்வ் வலிக்குது டி..." என்று ஆதி நேத்தியை தேய்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

"நீ இல்லைனா என் லைப் இல்ல, வருமானம் இருக்காது என்ன யார் கட்டிப்பானு டயலாக் பேசி முழுசா மூணு வருஷம், என்ன கொடும படுத்தி, அதான் எல்லாம் செட் ஆச்சி இல்ல. போதாதுன்னு எதுக்குடா இன்னும் என்ன இப்படி சாவடிக்கிற..." என்று திரும்ப எதாவது அவன அடிக்க கிடைக்குதான்னு தேடுவதில் பிசியான நம்ம செல்லக்குட்டிக்கு பயந்து சார் உஷாராகி, அவன் ரூம்ல விட்டு வெளியே ஓடி போயிடுறான்.

"டேய்ய்..! நீ எங்க போனாலும் உன்ன விடமாட்டேன்டா...." என்று சாரா ஆதியை துரத்தி கொண்டே ஓட.

"ஆதி முடிஞ்சா இப்போ பிடி பார்க்கலாம்" என்று ஓடிவிட்டான்.

"அடியேய் எங்கடி போற" என்று அங்கு வேலை செய்யும் ஒரு பொண்ணு, சாராவை பிடித்து நிறுத்த.

"இந்த ஆதியை கொல்லனும், என்ன விடுடி" என்று அவள் கையை ஒதறிவிட்டு திரும்ப துரத்தச்சென்ற சாராவை, திரும்ப பிடித்துக்கொண்டாள்.

"அடியே அற மெண்டல், அது ஜென்ட்ஸ் டாய்லெட் டி பைத்தியம், இவளுக்கு கோபம் வந்தா எல்லாம் மறந்துடுது" அப்போதுதான் சாரா கவனித்துவிட்டு.

"இருந்துட்டு போகுதுடி, அந்த இடத்துக்கு நான் வரமாட்டேன்னு நினைச்சிட்டியா டா ஆதி பயலே, லேடி கெட் அப் ல இருக்க பையன் டா நானு" என்று ஆதியை பிடிக்கமறுபடி உள்ளே செல்ல பார்த்தாள் சாரா.

"ஹேய்ய்ய் நீ விடுடி இப்ப அவன என்ன பண்றேன்னு பாரு, உன் பாய்பிரண்ட்னா உன்னோட வச்சிக்கோ, இந்த காப்பாத்துற வேலைலாம் வச்சிக்காத".

"எது இவன் என் பாய் பிரின்டு ஆ, என் புருஷன் இத கேட்டா காண்டாகி டிவோர்ஸ் செஞ்சிடுவான், பாத்து பேசுடி அவன் முன்னாடி.... எதுக்கு அவன தரத்துற அத, மொதல்ல சொல்லு".


"எனக்கு எதாவது ஜாலியான வேலை வாங்கித்தாடான்னு சொன்னா... என்ன இங்கயே வச்சி சாவடிக்குரான்".

"இங்க பாரு உனக்கு ஏத்த மாதிரிதான் நான் தேடிட்டு இருக்கேன். கொஞ்சம் நேரம் இரு இன்டெர்வியூக்கு கூப்பிடுவாங்க இன்னைக்கு" என்றாள்.

அந்த வழியில் வந்த ஒருவனை நிறுத்தி, சாரா அவனிடம், "மிஸ்டர். ஜான் உள்ள ஒருத்தன் இருக்கான், அவன அலேக்கா தூக்கிட்டு வந்துடு டா செல்லம்" என்று ஆணையிட்டாள்.

'சாரா சும்மா சொன்னவே அந்த ஜான் ஓடி ஓடி வேல செய்வான் இதுல செல்லம் வேற சொல்லிட்டாளா ' என்று பக்கம் இருந்தவ சொல்ல.

"அதுக்கு லாம் டாலன்ட் வேணும் டி '' என்றாள் சாரா சிரித்துக்கொண்டே.

சாரா சொன்னதை சிறப்பாக செய்தான் அந்த ஜிம் பாய் ஆதியை தூக்கிக்கொண்டு சாராவின் முன்னே நிறுத்திவிட்டு, "போதுமா பிரின்சஸ், இல்ல வேற எதாவது உனக்காக செய்யணுமா சாரா?" என்று சாராவிடம் ஒரு சேவகன் போல பேசினான்.

"போதும் ஜான்" என்றதும் அழகாக அந்த ஏழு அடி மனிதன் மஹாராணிக்கு தலை வணங்குவது போல வணங்கி சென்றான்.

"என்னவே ஆளுவச்சி தூக்கிட்டு வர வச்சிட்டாலே, எங்க போனாலும் இவளுக்குனு, எப்படி தா அடிமைகள் சிக்குதோ?"

சந்தோஷ் ஆதியின் அசிஸ்டன்ட், ஓடி வரான் "ஹெய் சாரா, ஹாய் ஆதி... இங்க பாரு உனக்கு ஒரு இண்டெர்வியூ இருக்கு, ஜஸ்ட் போயிட்டு வா, உன்னைபோலதான் தேடிட்டு இருகாங்க" என்றான்.

"வேல எப்படி, ஜாலியா இருக்குமா?" என்றான் அவன்.

"ஓகே எப்போ இண்டெர்வியூ போனும்" என்று சாரா கேட்க.

"ஈவினிங் நாலு மணிக்கு, ஷார்ப் ஆ அங்க இருக்கணும்" என்றான் சந்தோஷ்.

"அப்பாடா தேங்க்ஸ் டா சந்தோஷ்... கொஞ்சம் லேட்டா ஆ வந்து இருந்தாலும், இந்த பாஸ் அ உயிரோட பாத்து இருக்கமாட்டடா" என்று வராத கண்ணீரை துடைத்துக்கொண்டு சந்தோஷிடம் ஆதி சொல்ல.

"டேய்ய் ஆதி நடிக்காத வாடா...." அவன் காலரைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனாள் சாரா.

"என்ன வேலைன்னு சொல்லலையே", சந்தோஷைப் பார்த்து கேட்டாள்.

"எல்லாம் உனக்கு பிடிச்ச வேலைதான், சாரா" என்றான்.

"பாப்போம் அதை நான் சொல்லனும், போய்ட்டு வந்து சொல்றேன்" என்றாள்.

ஆதி சந்தோஷடம் "எங்க வேல?" என்று கேட்டான்.

சிட்டிக்கு பக்கத்துல.... அட்ரஸ் சொன்னதும். ஆதி முகம் யோசனையில் மூழ்கியது..

சந்தோஷ் கொஞ்ச நேரம் கழிச்சி "ஒன்னு சொல்ல மறந்துட்டேன், உனக்கு இரண்டு ரவுண்டு" என்றான்.

"போடா டேய்ய், நாங்கள் யாரு எங்க, டாலன்ட் என்னன்னு தெரியாம பேசற..... வெயிட் செஞ்சி பாருடா ஆனியன்,

சும்மாவே ஆடுவேன், நீ எனக்கு சலங்கைய கட்டிவிட்டுட்ட, இன்னும் ஜோரா அடுவேன்னு" சவால் விட்டாள் சாரா. அங்கு ஒருவன், இவலுக்கு சலங்கை கட்டிவிடாமலே உன்ன ஆட வைக்க போறான், அது தெரியாம சாரா வீரவசனம் பேசினாள்.

மதிய உணவு முடித்து விட்டு இண்டெர்வியூக்கு கிளம்பிட்டா, சந்தோஷிடம் அட்ரஸ் வாங்கிக்கொண்டு.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
19

"இன்னும் இன்டெர்வியூக்கு, டைம் இருக்கு, அப்படியே ஒரு ரவுண்டு போய்ட்டுவரலாம்" என்று ஸ்கூட்டியை உயர் வேகத்தில் மூறுக்கி ஒரு ஆறு கிலோமீட்டர் சுத்திட்டு, இன்டெர்வியூ நடக்கும் இடத்துக்கு வெளியே வந்து நிக்கும்போது தான் டைம் பாத்தா... இன்னும் அஞ்சி நிமிஷம் தான் இருந்தது.

"ஐயோ வழக்கம் போல சொதப்பிட்டயே சாரா" என்று புலம்பியவள் வேகமாக உள்ளே நுழைந்ததும், சாரா ரித்திகாவை மோதிவிட்டாள். இருவரும் தலையை தேய்த்துக்கொண்டு உள்ளே சென்றார்கள்.

வழக்கம் போல சாரா நிறைய சாரி கேட்டுவிட்டு, ரித்திகாவிடமே வழிகேட்டு இன்டெர்வியூ நடக்கும் இடத்திற்குச் சென்றாள்.

அங்கு சென்று பார்த்தாள் ஒருத்தரும் இல்லை... "என்னடா இது நம்ம இன்டெர்வியூ வரோம்னு தெறிச்சி எல்லோரும் ஓடிட்டாங்க போல" என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு வந்தாள்.

சிறிது நேரம் கழித்து ஒருவன், அவளுக்கு ஒரு இருக்கையில் தள்ளி அமர்ந்தான்.

அவன் அமைதியாக போன் நோண்டிக் கொண்டு இருந்தான். சாரா அவனது பக்கத்து இருக்கையில் சென்று உட்கார்ந்தாள். "நீங்களும் இன்டெர்வியூக்கு வந்து இருக்கீங்களா?" என்று அவனை கேட்டாள்.

'இந்த பொண்ணு நம்மகிட்டயா பேசுது என்று சுத்தியும் பார்த்துவிட்டு. அவன் சிறிது நேரம் அவளது முகத்தை பார்த்து யோசித்து "ஆமாம்" என்று தலையை ஆட்டினான்.

"உங்களுக்கு பேச வராதா மண்டைய மண்டைய ஆட்டுரிங்க'' என்றாள் கலாய்க்கும் தோனியில்.

அவனோ மெலிதாக சிரித்து விட்டு... "ஆமாம்" என்றான் மறுபடியும்.

"சிரிச்சா அழகா இருக்க மச்சி" என்றாள் ஏதோ பல வருஷம் நன்றாக பழகிய நண்பனைப்போல பேசிக்கொண்டு இருந்தாள்... அந்த நபரிடம்.

அவனும் சிறு சிரிப்போடு அவள் பேசும் சுட்டித் தனமான பேச்சை ரசித்துக்கொண்டு இருந்தான்.

"சரி எப்படியும் இந்த கம்பெனி பத்தி டீட்டைல் பத்தி கூகிள்ல சர்ச் செஞ்சி இருப்ப, கொஞ்சம் சொல்லு" என்றாள் சாரா அவனிடம்..

'அடிப்பாவி என்னவேலைனு கூட தெரியாம வந்து இருக்காளே' என்று யோசித்து எடக்குமுடக்காக கம்பெனி டீட்டைல்ஸ் கொடுத்தான்.

"ஒன்னு பெருசா இல்ல சூப்பர்வைசிங் வேலைதான்.... ஜாலியா வந்து ரவுண்டு அடிக்கணும்" என்றான் சிரிப்பை அடக்கிக்கொண்டு பொறுமையாக.

"ஐய்ய் நமக்கு பிடிச்ச வேலை" என்று.... சுற்றுமுற்றும் பார்க்காமல் ஆர்பரித்தாள். அந்த பக்கம் சென்று கொண்டு இருந்த அர்ஜுன் இவளை ஒரு முறை திரும்பி பார்த்து என்ன நினைத்தானோ. அவளின் பக்கத்து இருக்கையில் வந்து உட்கார்ந்தான்.

ஆனந்தன் அவனை பார்த்ததும், எழுந்து நின்றான். அவன்தானே இந்த அலுவலக சாம்பிராஜ்யத்தின் தலைவன். ஆனந்தன் அங்கு பணிபுரிபவன், எழுந்து நிக்கறதுதான மரியாதை.

தொடர்ந்து மூன்று வகுப்புகள் எடுத்து கலைத்துவிட்டான், ஆனந்தன் சற்று ஒய்வேடுக்க அமர்ந்தான். அங்கு அவன் பணிபுரிபவன் என்று தெரியாமல், சாரா பேச்சை வளர்க்க அவனும் அவளது சுவாரசியம் மிகுந்த பேச்சில் ஆவலுடன் இன்டெர்வியூக்கு வந்து இருக்கேன், என்று சொல்லிவிட்டான்.

சாரா பக்கத்தில் புதிதாக வந்து உட்கார்ந்தவனை பார்த்து. "டேய்ய் நீயும் இன்டெர்வியூக்கு வந்து இருக்கியா?" என்றாள். எடுத்த எடுப்பில் "டேய் யா" என்று ஆனந்தன் வாயைப்பிளக்கா விட்டாலும், அர்ஜுன் ஷாக் ஆனது முகத்தில் தெரிந்தது.

ஆனந்தன் அதை பார்த்து... சாராவிடம் சொல்ல நினைக்கையில், அர்ஜுன் பார்வையால் சொல்லாதே என்று சொல்லிவிட்டு.

"ஆமா டி இன்டெர்வியூக்கு வந்து இருக்கேன்" என்றான் டியை அழுத்தமாக.

எடுத்த எடுப்பில் "டிடி சொல்ற..." என்று சொல்ல வந்தாள், பாதியிலே நிறுத்திவிட்டு, நான் டா சொன்னேன் நீ டி சொன்ன சரி விடு" என்றாள்.

"உனக்கு எவ்ளோ வருஷம் முன்னனுபவம்" என்று கேட்டாள்.

"ஒரு அஞ்சிவருஷம் இருக்கும்..." என்றான் அர்ஜுன்.

ஆனந்தன் அதிர்ச்சியாக பார்த்துக்கொண்டு இருந்தான்... அர்ஜுன் சாரா இது என்பதுபோல.

அர்ஜுன் பேசுவதை என்னிவிடலாம். ரித்திகாவிடம் அதிகம் பேசுவான்தான், இருந்தாலும் வெளியாட்கள் முன்னிலையில் பெரிதாக பேசமாட்டான்.

இந்த பக்கம் சாரா ஏதோ ஏதோ பேசிக்கொண்டு போனாள். அனைத்தும் சுவாரசியமாக கேட்டுக்கொண்டு இருந்தான் அர்ஜுன்.

ஆனந்தன் 'நல்லா பத்திக்கிச்சி காதல் நெருப்பு' என்று நினைத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு நழுவ பார்த்தான்.

அந்த சமயம் சாரா ஆனந்தனை பார்த்து. "டேய்ய் மச்சான் இங்க பாருடா, இன்னொரு டிக்கெட் கிடைச்சிடுச்சி. நீயும் பேசுடா, ஏன் இவன் வந்ததும் அமைதியா இருக்க" என்றாள் சாரா.

"என்னது டிக்கெட்டா!.." வாயை பிளந்தான் ஆனந்தன்.

அர்ஜுனிற்கு சிரிப்புதான் வந்தது, அவளது பாஷையை கேட்டு.

"என்னடா வாயை பிளந்து நிக்கற வேலை நேரத்தில் கடலை போடும்போது லீடர் ட மாட்டுனது போல" என்றாள் சாரா.

"ஆமாம்..." என்று வாய் எடுக்கும் முன்பு... அர்ஜுன் பின்னே இருந்து சொன்ன கொன்னுடுவேன், என்றான் கைகளால் கழுத்தை பிடித்து காட்டி.

ஆனந்தன் அமைதியாகி விட்டான். சாராவையும் அர்ஜுனையும் மாறி மாறி பார்த்தான். எதாவது சமாளி என்பது போலவே இருந்தது அர்ஜுனின் பார்வை... "எனக்கு புதுசா யாரிடம் பேச வராது" என்றான் ஒருவழியாய் திக்கி திணறி, சம்பந்தம் இல்லாத ஏதோ சொல்லி முடித்தான் ஆனந்தன்.

சாரா குலுங்கி சிரித்தாள்... "அடேய் என்ட மட்டும் ஒடனே பேசின" என்று சாரா சந்தேகமாக பார்க்க.

"அதுவா நீ என் அக்கா மாதிரி இருந்த அதான்" என்றான் ஆனந்தன்.

"அக்காவா டேய்ய் மாடுமாறி வளந்து இருக்க, நான் உனக்கு அக்காவா. சரி அக்காவும் வேணா தங்கச்சியும் வேணா. நம்ம பிரிண்ட்ஸ் ஓகே வா டா மடையா" என்றாள் உரிமையாக.

ஆனந்தனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இவ்வளவு பாசமா இதுவரை அவனிடம் பேச யாரும் இருந்ததில்லை. பெற்றோர்கள் தவறின பிறகு, பாசத்துக்காக ஏங்கும், சிறுகுழந்தைதான் இந்த ஆனந்தன்.

"எதுக்கு டா கண்கலங்குது" என்றாள்.... அதற்கு அர்ஜுன் "அவனுக்கு யாரும் இல்லை" என்றான். அதை கேட்டதும் "டேய்ய் மாடு நான் இருக்கேன். உனக்கு நா நல்லா பெரிய பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிவைக்கறேன். அவ சைஸ் பாத்து உனக்கு தனியா இருக்குற பீல்லே வராது, எப்போ பாரு ஒரு மூணு பேர்கூட, சுத்துற பீல் தான் வரும் பாரேன். நான் பாத்துக்கிறேன் உன் தனிமையை போக்க நான் இருக்கிறேன்" என்றாள் அவனது மனதின் சூழலை மாற்ற. ஆனந்தன் சிரித்துவிட்டு நின்றான்.

"ஒன்னும் தேவ இல்ல சாமி" என்று ஆனந்தன் தலைக்குமேல் கையை தூக்கி கும்பிட்டு நின்றான். ஆனந்தன் செயலை பார்த்து சாரா, அர்ஜுனிடம் திரும்பி.

"ஆமா உனக்கு எப்படி டா தெரியும், அவனை பத்தி" என்று சாரா கேட்கும்போது. அர்ஜுன் திருதிருவென்று முழித்தான்... அந்த சமையம் பார்த்து.

"இங்கு சாரா யார்? உங்களை இன்டெர்வியூ செய்ய உள்ள கூப்புடுறாங்க" என்று குரல் வந்தது. கேட்டதை மறந்துவிட்டு அர்ஜுனிடம் அவளது செல்போன் கைப்பையை, அவன் கைகளில் திணித்து விட்டு சென்றாள் சாரா.

ஆனந்தன் மெலிதாக சிரித்தவாறு கையை நீட்டினான் அவளது பொருட்களை வாங்கும் நோக்கோடு.

"ஆனந்தன் பிரீயா இருக்கீங்க போல, எக்ஸ்ட்ரா கிளாஸ் வேணுமா?" என்றான் அர்ஜுன்.

"ஐயோ சார்!" "வேண்டாம்" என்று ஓடிவிட்டான் ஆனந்தன்.

அர்ஜுன், செகண்ட் ரவுண்டு என்கூட என்று ரித்திகாவிற்கு குறுந்செய்தி அனுப்பிவிட்டு, நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து இருந்தான்.

உள்ளே ரித்திகாவை பார்த்து, ஹாய் என்று கை அசைத்துவிட்டு அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தாள்.

"நெக்ஸ்ட் ரவுண்டு எங்க பாஸ் கூட" என்று அறிவித்துவிட்டு சாராவை அழைத்துக்கொண்டு, அர்ஜுனின் அறையின் வாசலில் விட்டுவிட்டு சென்றாள் ரித்திகா.

உள்ளே சென்றதும் சாரா, அர்ஜுனை பார்த்துவிட்டு "டேய்ய் நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே டைம்ல இன்டெர்வியூவா" என்றாள் அவனின் தோலை தட்டி. சாராவை பார்த்தவாறு அவனது இருக்கையில் அமர்ந்தான்.

"டேய்ய் இன்டெர்வியூ பண்றவங்க வந்துட போறாங்க, எந்திரிடா" என்றாள் சற்று குரலை உயர்த்தி.

அவள் பேசுவதை காதில் வங்காது, அவளது பைலை சிறிதுநேரம் பார்த்துவிட்டு.

"சொல்லுங்கள் மிஸ். சரோஜா" என்றான் அர்ஜுன்.

இப்போதுதான் சற்று பிடிபட்டது சாராவிற்கு, இவன் இன்டெர்வியூக்கு வரல என்று, சிறிதுநேரம் முழித்துக்கொண்டு இருந்தாள்.

"உட்காருங்க சாரா மேடம் சாரி சாரி சரோஜா மேடம்" என்றான் அர்ஜுன் கிண்டலாக.

"கால் மீ சாரா..." என்றாள் ஆக்ரோஷமாக முகத்தை சுலித்துக்கொண்டு.

"பொறுமை டார்லிங் பொறுமை" என்று கேள்விகளை கேட்க ஆரம்பித்தான்.

"டெல் அபௌட் திஸ் ஜாப்?" என்றான் அர்ஜுன்.

அனைத்தும் தெரிந்த ஞானி போல, சாரா தொடங்கினாள். "சூப்பர்வைசிங் ஜாப் சார்" என்றாள், சரியான பதிலை சொல்லியது போலவே கெத்தாக பதில் கூறினாள்.

அர்ஜுன் சிரிப்பை அடக்கிக்கொண்டு...

"செயல்முறை தேர்வு பத்தி என்ன நினைக்கிறீங்க சாரா" என்றான் அர்ஜுன்.

"எனக்கு பிடிக்காத ஒன்று" என்றாள்.

"அடியே வந்ததே டான்ஸ் சொல்லிக் கொடுக்க ஆனா பிடிக்காதுன்னு சொல்றா. மொத்தமா இன்டெர்வியூக்கு வந்து இருக்காளே" என்று மனதுக்குள் இவளின் பைத்தியக்காரத் தனத்தை நினைத்து சிரித்தான்.

"சாரா டான்ஸ் பத்தி என்ன நினைக்கிறீங்க?" என்றான் அர்ஜுன்

"சிம்பல் ஆப் ஜாய் அண்ட் லவ்" என்றாள் சாரா.

பரவால்ல ஏதோ இன்டெரெஸ்ட்டிங்க் இருக்கு, "என்னனு கேப்போம்" என்று மனதில் நினைத்துக்கொண்டு. அடுத்த கேள்வியை கேட்டான்.

"டான்ஸ் ஆட தெரியுமா?" என்றான்.

"தெரியுமே அதுலாம் கைவந்த கலை '' என்றாள்.

"இன்டெரெஸ்ட்டிங்... இப்போ எனக்கு டான்ஸ் ஆட தெரியாது, டீச் மீ பியூ ஸ்டெப்ஸ்" என்றான் அர்ஜுன்.

சாரா கன்னத்தில் விரலை வைத்து சிறிது நேரம் யோசித்த பின் ஆரம்பித்தாள்...

"ஒன்னும் இல்ல டான்ஸ் லா ஈசி. முன்னாடி ஒரு ப்ளாக்கபோர்டு இருக்குன்னு நினைச்சுக்கோங்க. கைல ரெண்டு டஸ்டர் இருக்கு". என்று சொல்லி கையை விரித்து காட்டினாள்.

"பர்ஸ்ட் ரெண்டு கையும் ப்ளாக்கபோர்டுக்கு கொஞ்ச கேப் விட்டு வச்சுக்கணும், முதல ரைட் சைடு அழிக்கனும், தென் லெப்ட் சைடு அழிக்கனும். இப்போ பாஸ்ட்டா, ரைட் லெப்ட் வேகமா கைய அசைச்சா போதும். ஒரு ஸ்டெப் முடிஞ்சது" என்றாள் கெத்தாக.

அர்ஜுன் ஷாக்ல நின்னுட்டான்... 'அடி பாவி கைய அசைக்க இவளோ டெபனிஷன் தேவையா!!!.

அவன் முகத்தை பாத்து, "பிடிச்சிப்போச்சு போல இவனுக்கு, சாரா எது செஞ்சாலும் அட்டகாசம் தான்" என்று நினைத்து அர்ஜுனை பார்த்து.
" எப்படி சார் ஸ்டெப் புரிஞ்சுதா" என்றாள்.

நெஸ்ட் என்றான் சைகையில்... அவனால பேசக்கூட முடில இவ சொல்லித்தந்ததுல, பாத்துட்டு வார்த்தையே வராம நின்னுட்டான்.

"அடுத்த ஸ்டெப் லாஸ்ட் ஸ்டெப் ஓட பொசிஷன் தான், பட் கொஞ்சம் வேற மாதிரி. இப்போ போர்டு அழிச்சி அழிச்சி டஸ்ட் வந்துடுச்சி. இப்போ என்ன பண்ணுவீங்க?" என்று அர்ஜுனை பார்த்து கேள்வி கேட்டாள்.

"அதையும் நீயே சொல்லு" என்றான் ஏதோ அறிவாளி தனமா சொல்லுவா என்று நினைத்தவனுக்கு பலத்த அதிர்ச்சி.

"டஸ்ட் ட தட்டுவோம் ல.. முன்னாடி போட்ட அதே ஸ்டெப் ல ரைட் சைடு ரெண்டு, ரெயின்போ ஸ்டெப் ல ரெண்டு தட்டு லெப்ட் ரெயின்போ ல ரெண்டு தட்டு... ஈசியா ரெண்டு ஸ்டெப் போட்டாச்சு" என்று கைதட்டி சிரித்தாள்.

"சார் இன்னும் ஸ்டெப் வேணுமா" என்றாள் சாரா அர்ஜுனிடம்.

வேணாம் தாயே என்பது போலவே தலையை ஆட்டி, "பாலோவ் மீ..." என்று எந்திரித்து நடக்க ஆரம்பித்தான். சாரா அவளது உடைமைகளை எடுக்க கை வைக்க.

"அப்புறம் வந்து எடுத்துக்கோ சரோ" என்றான் செல்ல பெயர் வைத்து..... சாராவிற்கு பத்திக்கொண்டு வந்தது அந்த சரோ என்ற பெயரை அவன் கூப்பிடும்போது.

அவனை திட்டிக்கொண்டே பின்தொடர்ந்து சென்றாள் சாரா, அவன் ஒரு அறைக்குள் நுழைந்தான். அதிகபட்சமாக... கொறஞ்சது ஒரு இருபது பேர் இருந்து இருப்பாங்க.

"சாரா ஆர் யூ ரெடி?" அவள் தலையை ஆட்டக்கூட டைம் தராமல்... ஸ்டார்ட் என்பது போலவே சைகை காமித்தான். அங்கு இருக்கும் நபரிடம் பாடலின் ஒலி கேட்டதும் சாராவை சுழற்ற ஆரம்பித்தான் அர்ஜுன்.
 
Top