ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் ரிதம்- கதை திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
25

ஹாஸ்பிடலுக்கு ஆதி சென்றதும் முதலில் பார்த்த முகம் மீரா..." என்னாச்சி மா சாராக்கு,?".

"டேய்ய் திரும்ப அப்பா ஆக போரடா". என்று மீரா குதூகலமாக சொல்ல...

"என்னது அப்பாவா?", குழப்பத்தோடு ரித்திகாவை நோக்கி சென்றவன்...' தூக்கத்துல ஒருவேள செஞ்சி இருப்பனோ, இருக்கும் இருக்கும், எப்படியோ இன்னொரு குழந்தையை பார்க்க போறேன்', என்று குதித்துக்கொண்டு இருந்தது, ஆதியின் மனது.

உள்ளே சென்றவன், பின் இருந்து ரித்திகாவை அணைக்க.

ரித்தி கைல ஒன்னு போட, "என்னடா இவ்ளோ தைரியமா, செருப்பு பிஞ்சிடும்" என்று ரித்திகா காலை காட்ட,

"பிஞ்சா விடுங்க குண்டு, வேற வாங்கிக்கலாம்" என்றாள், ஆதி திரும்ப கட்டிப்பிடிக்க....

"எதுக்கு டா சம்பந்தம் இல்லாம கட்டி பிடிக்கிற" என்று ரித்தி முறைக்க.

"அம்மாதான் சொன்னாங்க நான் அப்பா ஆக போறேன்னு".

"ஆமா அப்பாதான் ஆக போற, அதுக்கு எதுக்குடா என்ன கட்டி பிடிக்கற".

"அப்போ நீ கர்பமா இல்லையா, அப்போ நான் எப்படி அப்பா அவன்"

"நான் கர்பமா இல்லை, ஆனா நீ மறுபடியும் அப்பா ஆக போற", என்றாள் ரித்தி. அவன் குழம்பியது புரிந்து இன்னும் குழப்ப, சாரா மெதுவாக இருவர் விளையாடுவதை ரசித்துக்கொண்டு இருந்தாள்.

"ஏய்ய்ய் என்னாடி உளறுற, அப்போ நம்ம பாப்பா! நீ கர்பமா இல்லையா ".

'அறிவு கெட்டவன், ஒன்னுமே நடக்கல, பாப்பா இல்லன்னு பீல் பன்றான்' என்று நினைக்கும்போதே. ஆதி ரித்தி வயிரில் கை வைத்து, "என்மேல இருக்க கோபத்துல எதாவது செஞ்சிட்டியா? ரித்தி" என்று புலம்ப ஆரம்பிக்க.

ரித்திக்கு இந்த முறை சமாளிக்க முடியாமல் சாராவை பார்க்க, அவள் சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கி வைத்து இருந்தாள். "ஏய்ய்ய் அறிவு கெட்ட முட்டாள் கூமுட்டை, சித்தப்பா ஆக போரடா, அட அத்தை சந்தோஷத்துல சார்ட்டா சொல்லி இருப்பாங்க".

"ஐய்ய் அப்போ சாராதான் கர்பமா," என்று சந்தோஷத்தில் மீண்டும் ரித்தியை கட்டி பிடிக்க. "அவ தான் டா கர்பம், போ அவளை கட்டிப்பிடி, சும்மா சும்மா என் உயிர வாங்கிட்டு ".

ஆதி தயங்கிக்கொண்டே சாராவை பார்க்க, சாரா நன்றாக மெத்தைல உட்கார்ந்து, ஆதியை பார்த்து கையை தூக்க, அதை பார்த்த அடுத்த நொடி சாராவை ஆதி கட்டியணைத்து, ரொம்ப நேரம் அப்படியே இருந்தான். 'என்னாச்சி இவனுக்கு,' என்று சாரா நினைக்கும்போதே தோல்பட்டையில் அவனது கண்ணீரை நனைக்க.

சாரா அதிர்ச்சில், முகத்தை நிமிர்த்தி பார்த்தாள்.

"ஆதி‍, என்னாச்சி டா" என்று சாரா கேட்க.

ஆதி சிறு பிள்ளை போல, சற்று விசுபி கொண்டு இருக்க.

ஆதியை அப்படி பார்க்க, ரித்திக்கு ஏதோ போல ஆக.

ஆதி அமைதியாகும் வரை சாரா அவனது கையை ஆதரவாக பிடித்துக்கொண்டு இருந்தாள்.

மேஜை மீது இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து மூடியை துறந்து குடிக்க கொடுத்தாள் சாரா. ஆதி வாங்கி குடித்துவிட்டு, சாராவை பார்க்க.

சாரா என்ன என்பது போல ஆதியை பார்க்க, "சாரி" என்றான்.
"பரவால்ல, நீ தெரிஞ்சி செஞ்சி இருக்க மாட்ட" என்று சாரா சொல்ல. ஆதிக்கு ஆச்சரியம், உன்ன சின்னதுல இருந்து தெரியும் ஆதி",

ஆதி உடனே ரித்தியை பார்க்க.

"அவளை எதுக்கு பாக்கற, அவளும் நானும் எப்பவும் ஒன்னா ஆக முடியாது. என்னதான் பிரிண்ட்னாலும் பேமிலிக்கு அப்புறம்தான் புரியுதா," சாரா பேசுவது புரியாமல் ஆதி பார்க்க.

"நீ பிரிண்ட்க்கு கொடுத்த இம்பிர்ட்டண்ட்ட ரித்திக்கு கொடுக்கல, அதான் எல்லா பிரச்சனைக்கும் காரணம், நீ புரிஞ்சிட்டது போல, அர்ஜுனையும் ரித்தியையும் புரிஞ்சிக்கல, நீ அவங்கள வார்த்தையால தெரியாம ஹர்ட் செஞ்சிட்ட, அதனால அவங்களும் திரும்ப உன்ன ஹர்ட் செஞ்சிட்டாங்க".

ஆதி மண்டைய மண்டைய ஆட்ட, " அர்ஜுன மிஸ் பண்றயா?"

"ம்ம்ம், ஆனா நீதான் சீக்ரம் கண்டு பிடிச்சி தந்துடுவாயே எனக்கு" என்றாள் சாரா.

"நான் இப்போவே தேட போறேன்" என்று ஆதி எந்திரிக்க.

"நீ ஒன்னும் தேட வேண்டாம், இனி மூணு பேரோட சேத்து அஞ்சி பேத்துக்கும் சர்வண்ட்டா இரு, அர்ஜுன மெதுவா கண்டு பிடிச்சிக்கலாம்".

நல்லா வருவீங்க எல்லோரும், மீரா, ரித்தி, சாரா சிரித்துக்கொண்டு இருக்க.

தாரா வந்து, ஆதி காலை பிடித்து தொங்க... "ஏண்டி தங்கமே, என்ன சாக்லேட் வேணுமா" என்று ஆதி தூக்க.

அவனது கலங்கிய கண்களை பார்த்து, "அப்பா அழக்கூடாது, பாப்பா சாக்லேட் தரேன்னு", தாரா கொஞ்ச நேரம் முன்னாடி வாயில் போட்ட சாக்லேட்டை எடுத்து, ஆதிக்கு சாப்பிட கொடுக்க, 'என்னதான் நம்மை கொடுமை படுத்தினாலும், தனக்கு ஒன்னுனா இவங்க இருக்காங்க' என்று நினைத்த ஆதி,

ஆதி ஏதேதோ யோசிச்சிட்டு இருக்கும்போது தாரா கொடுத்த சாக்லேட்ட மறந்துட்டேன், தான் கொடுக்கும் சாக்லேட்டை வாங்காத ஆதியை பார்த்த தாராக்கு எங்கு இருந்து அவ்ளோ கோபம் வந்ததுன்னு தெரில. கையில் இருக்கும் சாக்லேட் ஐ ஆதி மூஞ்சில தூக்கி போட்டு... அவனது நீண்ட முடியை பிடித்து ஆட்ட தொடங்கினாள். அவன் வலியால் துடிக்க, குடும்பமே சிரித்துக்கொண்டு இருந்தது.

ஒருவழியா தாரா முடியை விட, தாராவை மீராவிடம் கொடுத்துவிட்டு... "இனி முடி இருந்தா தான பிச்சி எடுப்ப, மொதல்ல போய் மொட்டை அடிச்சிட்டு வரேன்" என்று ஆதி ஓடிவிட்டேன்.

போகும் ஆதியை பார்த்த தாரா..
"டுபுக்கு இடியட்" தாரா ஆதியை பார்த்து கத்த.

ஆதி சிரிச்சிட்டே போனது என்னவோ முடி வெட்டும் கடைக்கு. அவனது பழைய போட்டோ ஒன்னு காமிச்சு, அதுபோல முடி வெட்ட சொல்ல,
சிறப்பாக அவனுக்கு வெட்டி விட.
ஆதி வீட்டில் போய் குளித்துவிட்டு ஹாஸ்பிடல்ல இருக்கவங்கள கூட்டிட்டு வர போனான்.

ஆதியை பார்த்து அனைவரும் ஆச்சரியமாக பார்க்க... தாரா ஓடி வந்தாள் ஆதியை நோக்கி... 'ஐயோ வராளே, எதை பிடிச்சி இழுத்து கதற விடுவான்னு தெரிலயே '...

ஓடி வந்த தாராவை தூக்கி, எடுத்து முத்தம் கொடுக்க... தாரா ஆதி கன்னத்தை இருக்கைகளால் பிடிக்க... மூக்க கடிப்பாலா இல்லை வாயை பிடிச்சி கடிப்பாலன்னு தெரிலயே ' என்று ஆதியை தாரா நெருங்கும்போது கண்களை மூட.

முகம் முழுவதும் தாரா முத்தம் கொடுக்க ஆரம்பிக்க.

ஆதி ஆச்சரியமாக தாராவை பார்க்க. 'என்னாச்சி இவளுக்கு' ஆதி யோசிக்கும் போது, மூத்தத்தை கொடுத்து முடித்து.

அப்பா.... சொல்லி கட்டி பிடிச்சிட்டா... ஆதி அதிர்ச்சியில் ரித்தியை பார்க்க... 'ஐயோ மாட்டிவிட்டுட்டாலே'.

ஆதி ரித்திகாவிடம் தாராவை தூக்கிக்கொண்டு நெருங்க.

"அத்தை, சாரா வாங்க கிளம்பலாம்" என்று அவர்கள் பொருட்களை தூக்கிக்கொண்டு கார்ட போய் நின்னுட்டா ரித்தி.

ஆதி பில் கட்டிட்டு கார் எடுக்கவும், ரித்தியை பார்த்துட்டே கார் ஒட்டினான். செல்விக்கு விஷயம் சொல்லியாச்சி நேராக அர்ஜுன் வீட்டுக்கு வர சொல்லி. ரித்தி, தாராக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு சென்றார்கள்.

'நைட் பாத்துக்கலாம், அப்போதான் தனியா இருப்பா, இப்போ போனா கடிச்சு வச்சிடுவா '
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
26

அர்ஜுன் இல்லாதது தவிர அனைவருக்கும் மன நிறைவு, புதியதாக ஒரு உயிர் ஜீவணித்து உள்ளது என்று.

தாராவுக்கு தான் அதிக சந்தோசம்.... தம்பியா பாப்பவா என்று கேட்டு அனைவரையும் டார்ச்சர் செஞ்சிட்டு இருக்கா.

சாராக்கு அவ்ளோ ஹாப்பி, "அந்த கழுதைக்கு இருக்கு, நேர்ல பாக்கும் போது. பாவி பையன் என்ன இப்படி புலம்ப விட்டுட்டானே" என்னதான் அர்ஜுனை திட்டினாலும், அவனுக்கும் கொஞ்சம் தனிமை தேவைன்னு விட்டுட்டாங்க
எல்லோரும். ஒடனே சாப்டுட்டு ரூம்க்கு போறாங்க, செல்விக்கு ஒரு ரூம் ஒதுக்கி தராங்க மீரா.

தாரா இப்போலாம் மீராவ விட்டு பிரியரதே இல்ல, பாட்டி பாட்டின்னு முந்தானைய பிடிச்சிட்டு சுத்துவா.

ஆதிகிட்டயும் நல்லா ஒட்டிகிட்டா, ஆனா ரித்தி போலத்தான், எப்போ ஆசையா முத்தம் குடுப்பா, எப்போ காண்டுல மூக்கு வாய் காது எல்லாம் கடிச்சி வைப்பான்னு அவளுக்கே தெரியாது.

சாப்பிட்டு முடிச்சிட்டு டாடின்னு கையை தூக்க, ஆதியும் ஆசையா தூக்கி அணைக்க. அவன் எதிர்பாராத சமயம் மூக்கையும் கண்ணத்தையும் ஒரே கடி தான், ஆதி வீல்ன்னு கத்திட்டான்.

அவனை தவிர மற்றவர்களுக்கு ஒரே சந்தோசம். ஒருவழியாக எல்லாத்தையும் முடிச்சிட்டு அவர் அவர் அறையிலே அடங்கினர்கள்.

ஆதி வழக்கமாக கிட்சன் சுத்தம் செஞ்சிட்டு உள்ளே போனான். இன்று தாரா இருந்த இடத்துல ஒரு பேபி பொம்மை இருக்கா. 'அப்படியே பெரிய வேலி போடுறா, நான் நினைச்சா அத எப்போவோ தாண்டி இருப்பேன், அவ்ளோ நல்ல பையன இப்படி படுத்துறா' என்று நினைத்து கொண்டு, இன்று வழக்கத்துக்கு மாறாக ரித்தியை இடித்துக்கொண்டு படுக்க. கடுப்பாகிய ரித்தி, ஒரே இடி உருண்டு போய் கீழே விழுந்தான்.

'"ஆஆ என் இடுப்பு போச்சே!! என்று பெரும் கூவளோடு ஆதி கத்த.

"நாயே ஏன்டா கத்துற, வீட்ல எல்லோரும் தூங்கறாங்க" என்று அவன் வாயை கைகளால் மூட. இடுப்பு ஒடஞ்சும், ஆதிக்கு குசும்பு போகல, மூடிய கரங்களுக்கு முத்தம் கொடுக்க, ரித்திக்கு ஏதோ போல ஆனது, இப்போதுதான் ரித்தி உணர்ந்தாள். ஒரு வேகத்தில் ரித்தி மொத்தமாக ஆதி மீது இருந்தாள். ரித்தி நெளிந்துகொண்டே எந்திரிக்க பார்த்தாள், ஆனால் ஆதி விட்டாள்தானே.

"ரித்தி சாரி" என்றான்.

"ஒன்னும் தேவையில்ல" என்று ரித்தி முகத்தை திருப்ப.

"ரித்தி சாரி", ரித்தியின் வீராப்பு எல்லாம், விலகி இருக்கும் வரைதான் என்று ஆதிக்கு இன்றுதான் புரிந்தது. 'இது தெரியவே இவ்ளோ நாள் எடுத்துகிட்டயே ஆதி' என்று கொஞ்சம் முன்னேற.

"வேண்டா இப்போ", ஆதிக்கு பியூஸ் போக.

"அதான் கோபம் இல்லல," என்றான் ஆதி.

"கோபம் இல்லை லூசு நீ செய்றதுக்குலாம் கோப பட முடியுமா சொல்லு".

"அப்புறம் என்னடி?"

"அது அர்ஜுன் கிடைக்கட்டும்".

"அதுலாம் கிடைச்சிடுவான், அவன் ஒன்னும் என்ன போல லூசு இல்லை". ரித்திகா கண்கள் கலங்கியது.

"சாரி" என்று சொல்லி விலகினான். விலக சொன்னது ரித்தித்தான், ஆனால் அவன் விலகல் வலித்ததும் அவளுக்குத்தான்.

"என்னாச்சி" என்று கிழே குனிந்து இருக்கும் அவள் முகத்தை நிமிர்த்தினான் ஆதி.

ஒன்னுல என்று எந்திரித்த ரித்திகா, பெட்ல படுக்க.

ஆதி சிரித்துவிட்டு ரித்தியை பார்த்து, "ரித்தி" என்றான் மெதுவாக.

ரித்தி கண்களை மூடிக்கொண்டே "ம்ம்" என்றாள்.

"இனி என்ட நல்லா பேசுவயா?"
ம்ம் என்றாள் அதற்கும். "வாயை தொறந்து பேசுடி" என்றான் ஆதி கொஞ்சும் குறளில்.

"பேசுவேன் பட் பனிஷ்மென்ட் இன்னும் முடில,"

"என்னது முடிலயா?" என்று ஆதிக்கு சற்றுமுன் கிடைத்த ஆனந்தமும் மறைந்துவிட்டது.

"அர்ஜுன் கிடைக்கிற வரை, இனி ஹால் ல படு" என்று ரூமை விட்டு துரத்தினாள்.

ஆதி சிரித்துக்கொண்டே மீரா ரூம் போய், மா சமாதானம் ஆகிட்டோம்ன்னு மீராவ போய் கட்டி பிடிக்க.

"அதான் சமாதானம் ஆயிட்டீங்கல்ல இங்க எதுக்கு டா படுக்கையோட வந்து இருக்க?" நடந்ததை சொல்ல.

"அது தான் என் தங்கம் ஹால்ல படுக்க சொல்லிட்டால்ல போய் படு", என்று மீரா கலவர படுத்த. ஆதி "போ மா, சரியான அலுப்பு, புல் டே வேலை செஞ்சி" என்று ஆதி நீட்டி படுக்க.
மீரா ஆதி தலையை வருடி விட "அர்ஜுன் எங்கடா போய்ட்டான்".

"தேட அழு அனுப்பியாச்சு மா கிடைச்சிடுவான்".

மீராவும் அப்படியே படுத்து தூங்க.
வேறு பெட்டில் படுத்து இருந்த தாரா அம்மா மகனுக்கு இடையில் வந்து அமர்ந்து... பாட்டி வயிறுல தலைய வச்சி அப்பா கழுத்துல கால் வச்சு, கிராஸ் ஆ படுத்து தூங்க ஆரம்பிக்க.

ஆதி தாரா காலை பிடித்துக்கொண்டே தூங்கினான்.

கொஞ்ச நேரம் கழித்து எழுந்த மீரா, "இவளுக்கு கொழுப்ப பாரு, என் பையன் தலைமேல காலு போட்டு படுத்து இருக்க" என்று மீரா தாராவை தூக்கி நேராக படுக்க வைக்க, அவள் திரும்பி ஆதி மீது ஒரு காலை போட்டு தூங்க ஆரம்பித்தாள்..... இப்படியே நாட்கள் மாதங்களாக ஓடின. சாராவிற்கு ஒன்னு ஒன்னும் பாத்து பாத்து செய்தான், அவனுக்கு மட்டும் அல்ல, ரித்தி, மீரா, தாரா, செல்விக்கும் வேண்டாம் என்று சொன்னாலும், அவளையும் வேலை செய்ய விடாமல் ஆதி அருமையாக பார்த்துக்கொண்டன்.

ஆதி நிலைமைதான் பாவம் முழுதாக வேலைகாரணாக மாரிய நம்ம ஆதியை பாருங்கள்..... ஆதிக்கு ஒரு அழைப்பு வர, அதை சாராதான் எடுத்தாள்.

மறுமுனையிலே கேட்ட செய்தியை கேட்டு சிறு பிள்ளை போல கத்திக்கொண்டு குதிக்க ஆரம்பித்தாள்.

இவள் சத்தம் கேட்டு எல்லோரும் வெளியே வர, அவள் குதிப்பதை பார்த்து மீரா அவளை திட்ட, அப்போதுதான் சாரா அமைதியானாள்.

ரித்தி, சாரா, ஆதி
அர்ஜுனை தேடி பயணத்தை தொடர்ந்தார்கள்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
27

நான்கு மாதம் கழித்து ஒருவழியாக ஆதியும் ரித்திகாவும் சேர்ந்து அர்ஜுனை கண்டுபிடித்தனர்... உள்ளே சென்று ஆதி அர்ஜுனை கட்டியணைத்தான். ஆனால் அர்ஜுன், என்னை சுத்தி இருக்குற பிரிண்ட்ஸ்னு நினைச்சிட்டான், ஆட்டு தோல் போர்த்தி இருந்த மிருகம் என்று... ரித்தி உன்ன, அம்மாவை எல்லோரையும் கஷ்டப்படுத்திட்டேன்... சாரி அர்ஜுன்.. இத என்ட சொல்லி இருந்தா கேட்டு இருப்பேன்ல என்றான்... உனக்கா தெரியும்னு நினச்சேன், ஆதி எங்க டா என் பொண்ணு... பொண்ணு இல்ல ரெண்டு பையன் என்றான் ஆதி...

அர்ஜுன் புரியாமல் விழிக்க அப்போதுதான் சாரா நடக்க முடியாமல் நடந்து வந்து கொண்டு இருந்தாள்... தாராவை ஒரு கையில் பிடித்துக்கொண்டு.

அர்ஜுன் ப்ரொபோஸ் செய்த அன்று, மிகுந்த மகிழ்ச்சியில் இருவரும் ஒன்று சேர்ந்து நினைவில் வர... அர்ஜுனுக்கு கொஞ்சம் சங்கடமாக போனது... அவர்கள் திருமணத்திற்கு ஒருவாரம் முன்பு நடந்தமையால் யாருக்கும் சந்தேகம் வந்து, சாராவை ஏதும் சொல்லி இருக்க மாட்டார்கள் என்று, மனது கொஞ்சம் தெளிவு பெற்றது.

அர்ஜுன் சாராவை தாங்கி பிடித்து நடந்து வந்தான்... சாரா அவன் புறம் திரும்பக்கூட இல்லை.

ஆதி ரித்திகாவை பார்க்க, அவள் இதுவரை ஆதி இடம் முன்பு போலவே ஒரு வார்த்தை கூட பேசவில்லை...

கிட்டத்தட்ட பத்து மணிநேரப் பயணம் செய்ததால் மற்றவர்களை விட சாரா சோர்ந்து காணப்பட்டாள். அதை பார்த்த அர்ஜுனுக்கு பொறுக்குமா என்ன.... கேரட் எடுத்து ஜூஸ் போட்டவன் சாராவிடம் நீட்ட, அவள் வாங்க மறுத்தாள்...

"ப்ளீஸ்..." என்றான்.

சாரா அவனை ஒரு பொருட்டாக கூட எண்ணாமல்... தாராவிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தாள்...

அஜூ ரெண்டு தம்பி எனக்கு என்றாள்... இரண்டு விரல்களை காமித்து... அர்ஜுனுக்கு சாராவை அணைக்கவேண்டும் என்று பரபரத்த கைகளை அடக்கியவன்... ரித்தி ஆதியை பார்த்தாள்... அதை புரிந்து கொண்ட ஆதி எந்திரிக்க... ஆதி எனக்கு கால் வலிக்குது என்ற அடுத்த நொடி, சாராவின் கால்கள் அருகில் அமர்ந்து பிடித்துவிட ஆரம்பித்தான்..

"ஆதி என்ன பண்ற எந்திரி நான் பாத்துக்கிறேன்" என்றான்.

"என் பிரிண்டு டா அவளுக்கு நான் இதகூட செய்யாம யார் செய்வா" என்றான்.

அர்ஜுன் இவர்களின் நட்பில் நெகிழ்ந்துதான் போனான். ஏக்கமாக கூட வந்த அர்ஜுனுக்கு... இதுபோலத்தான ஆதிக்கும் இருந்து இருக்கும் என்னோட கோபத்தால் முழுதாக இரண்டு வருடம் இவர்களை பிரித்து விட்டேனே என்று மனம் வருந்தி எந்திரித்து சென்றான்... அதை பார்த்த ரித்தி அர்ஜுனை பின்தொடர்ந்து "என்னாச்சி அர்ஜுன்" என்றாள்.

"சாரி ரித்தி என்னால தான நீங்க பிரிஞ்சீங்க" என்றான் குற்ற உணர்வில்.

இல்ல அர்ஜுன் அவனோட வார்த்தையால பிரிஞ்சோம் என்றாள் ரித்தி புதிதாக.

ஆதி ரித்திகா சிறுவயதில் இருந்தே இணைபிரியாத நண்பர்கள்... ஆதிக்கு ரித்தியை பிடிக்க காரணம் கொழுகொழு கன்னங்களோடு ஆதி ஆதி என்று ஆதி பின்னாடி சுற்றி திரிவாள். ஆதி ஒருவயது ரித்தியை விட பெரியவன்.

வாரத்திற்கு ஏழு சண்டையை இழுப்பாள்... ஆதிக்காக அவனை ஒன்றும் சொல்லக்கூடாது ஸ்கூல்ல யாரும், வாய் பேசாது, ரித்திகா கைதான் பேசும்.

ஆதிக்கு எப்போது எல்லாம் ரித்தியை பார்க்கணும் தோணுதோ அப்போ எல்லாம், ரித்தி வகுப்பு பக்கம் போய் ஒரு ஹாய் சொல்லி கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுத்து விட்டு வருவான்...

இவன் செய்வதே ஓவர் ஆனால் ரித்திகா அவனையே மிஞ்சியவள்... அவனது வகுப்பில் போய் அமர்ந்து கொள்வாள்... ஒருநாள் ஆதி அருகில் அமர்ந்து இருந்த பையனிடம் ஒரே சண்டை... என்ன என்று விசாரிக்கும் போதுதான் தெரிந்தது... ரித்திகா அடிக்கடி இங்கு வந்து அமர்ந்து கொள்வதாக... அந்த பயனுக்கு இடம் கொடுக்காமல் ரித்திகா அமர்ந்து இருக்கிறாள்... அந்த பயனுக்கு கோபம் வந்து அவளை கீழே தள்ளிவிட ஆதிக்கு கோவம் வந்து சட்டையை கிழித்துக்கொண்டு சண்டை போட்டு உள்ளனர் என்று.

மூவரின் பெற்றோரையும் வரவைத்து ஒரே ரகளை... ரித்திகா மற்றும் ஆதியின் பெற்றோர் அடிவாங்கின பயனுக்கு மருத்துவ செலவை ஏற்றுக்கொண்டு சமாதானமாக சென்றுவிட்டனர்.

இதுபோல அடிக்கடி நடப்பதால்... இருவரும் பெற்றோரிடமும், பள்ளி முதல்வர் அழைத்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.

வீட்ல போய் பாத்துக்கோங்க ரெண்டு பேரும்... இனி மாத்தி மாத்தி யார் கிளாஸ்க்கும் போகக்கூடாது என்று ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லிவிட்டார்.

ஆதி கொஞ்சம் புரிந்து கொள்பவன் அவளை பார்க்க செல்லவில்லை... ரித்திகா அடுத்த நாளே இரண்டு முறை சென்று வந்துவிட்டாள்... ஸ்கூல் சென்ற ஒருமணி நேரத்திற்குள்.

ரித்திகா இல்லாததை அறிந்த அவளது மிஸ்... தேடிக்கொண்டு வர, அவள் ஒரு மரத்தடியில் சோகமாக அமர்ந்து இருந்தாள்.

"என்னாச்சி பாப்பாக்கு" என்று அவளது அருகில் சென்று அமர்ந்த மிஸ் ஐ பார்த்து.

"ஆதிக்கு என்னை பிடிக்கல மிஸ்.." என்றாள் சோகமாக.

"ஆதிக்கு உன்ன மட்டும்தான் பிடிக்கும் அதனால்தான் உனக்காக சண்டைலாம் போட்டான் நேத்து" என்றார் சமாதானம் படுத்த.

"மிஸ் அது நேத்து இன்னைக்கு இல்ல, அவனை பாக்க கிளாஸ் போனேனா அவன் என்னை திரும்பி கூட பாக்கல" என்றாள் கண்ணீரை தேக்கிவைத்துக்கொண்டு.

"இந்த டே முடிய இன்னும் எவ்ளோ டைம் இருக்கு... ஆதி வருவான்" என்று ஆறுதல் படுத்தி அவளை கிளாஸ்க்கு அழைத்து சென்றார்.

நாள் முழுவதும் ஆதி வருவான் என்று காத்து இருந்தவளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

ஈவினிங் ஸ்கூல் முடிந்ததும்... ரித்தியை அழைத்து செல்ல வந்தவனுக்கு ரித்தி கிடைக்கவில்லை... வீட்டின் அருகில் தான் ஸ்கூல்... வழக்கமாக இருக்கும் இடத்தில் ரித்தி இல்லை.. ஸ்கூல் முழுவதும் தேடி சென்றவனுக்கு ரித்தி கிடைக்காமல்... வீட்டிற்கு வேகமாக சென்று.. "ரித்தி பாப்பாவ யாரோ தூக்கிட்டு போய்ட்டாங்க, வாங்க தேடலாம் என்று அழைத்து சென்று தேட ஆரம்பித்தான்... ஆதி தந்தையுடன்.

ரித்தி வீட்டிற்கு அழைப்பு விடுக்க... அண்ணா அவ ஸ்கூல் விட்டதும் ஒடனே வந்துட்டா... "

"சரி மா பாப்பா என்ன பண்றா".

என்னனு தெரில வந்ததும் போய் படுத்துக்கிட்டா ஸ்னாக்ஸ் கூட சாப்பிடாம".

"சரிமா வீட்டுக்கு வரோம்" என்று போன் வைத்துவிட்டார்.

"டேய் அவ வீட்ல இருக்கலாம், என்னடா இம்சை பண்ற" என்று ஆதியை கடிந்துவிட்டு ரித்திகா வீட்டை நோக்கி சென்றார்.

ஆதி வண்டியில் இருந்து இறங்கிய மறுநொடி ரித்திகாவை தேடி சென்றான்.

ஆத்தை என்று கத்திக்கொண்டு ஓடிவந்தான்...

"என்னாச்சி டா... பாப்பாக்கு ஏதோ ஆச்சி" என்றான்.

அனைவரும் போய் பார்க்க, ரித்திகாக்கு பிட்ஸ் வந்துடுச்சி.... வலி முழுவதும் ரித்திகா கையை விடாமல் பிடித்து இருந்தான்.

டாக்டர் பரிசோதனை செய்து விட்டு "ஒன்னும் இல்ல பாப்பாக்கு கொஞ்சம் ஓவர் பிவெர் ஏதோ நினைச்சி நினைச்சி இப்படி ஆயிடுச்சி என்னனு பாருங்க... டேப்லெட் பிவெர்க்கு கொடுத்து இருக்கேன்."

வீட்டுக்கு வந்ததும் சாப்பிட வைத்து தூங்கி எந்திரிச்சி பின்பு... ஆதி அருகில் இருந்ததை பார்த்து... அத்தையை கட்டிக்கொண்டாள்,

"ரித்தி இப்போ ஓகேவா... இல்ல டாக்டர் ட போலாமா" என்றான் ஆதி பெரியமனித தோரணையில்.

"ஆத்தை i hate him போக சொல்லுங்க" என்று அழுக தொடங்கினாள்.

அவன் ஒருநாள் செய்ததற்கு ஒருவாரம் ஆதியிடம் பேசாமல் ஏதோ சோகத்தோடு இருந்தாள்.
ஸ்கூல்க்கு ரெடி செய்துவிட நான் போகமாட்டேன் என்று வீடு முழுவதும் அம்மாவும் மகளும் ஓடி திரிந்துகொண்டு இருந்தார்கள்... அத்தையை பார்த்தவுடனே... "அத்த நான் ஸ்கூல்க்கு போல" என்றாள் முடிவாக.

"என்னாச்சி தங்கத்துக்கு ஆதி பாரு ரெடி ஆயிட்டான்... நீயும் ரெடி ஆகு" என்றார்.

"நான் வேற ஸ்கூலுக்கு போறேன்"

"என் ஸ்கூல் பிடிக்கலையா" என்ற கேள்விக்கு பதிலை கேட்டு அதிர்ந்தனர் அனைவரும்.

"ஆதி போற ஸ்கூல்க்கு நான் போகமாட்டேன்... போன எனக்கு ஒடம்பு சரி இல்லாம போய்டும்" என்றாள்.

"அப்படி எல்லாம் இல்லடா தங்கம்.." என்று ஆறுதல் படுத்த அவள் கேட்கவே இல்லை.

"அவன் என்ன பாக்க வரலைனா எனக்கு திரும்ப ஒடம்பு சரி இல்லாம போய்டும்... அவனுக்கு அவங்க பிரிண்ட்ஸ் தான் முக்கியம்... என்ன பாக்கவே வரல.... அவன் என்ன பாக்க வருவான்னு ஈவினிங் வர பார்த்துடே இருந்தேன் தெரியுமா" என்றாள் அழுகையுடன் அத்தையை அணைத்துக்கொண்டு.

"சரி இனி ஆதி பாக்க வருவான், ஓகே வா.. இப்போ ஸ்கூல் போறயா?" என்றாள் மீரா.

"அவன் வரமாட்டான்.." என்றாள் ரித்திகா சோகமாக.

ஆதி மீராவின் காதில் ஏதோ சொன்னவுடன்... "அப்பா டா போய் சொல்லு அவருக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே" என்றாள் மீரா.

ஆதி எப்படியோ அப்பாவிடம் சம்தம்வாங்கி வலுக்கட்டாயமாக ரித்தியை இழுத்துக்கொண்டு போனான்.

பிரின்சிபால் முன்னாடி ரித்தியை கூட்டிச்சென்றவன்... நானும் இனி ரித்திகா கிளாஸ்க்கு போய்டுறேன்....

இவனது பேச்சை கேட்ட முதல்வருக்கு என்ன செய்வது என்பது போல இருவரது பெற்றோரையும் மாற்றி மாற்றி பார்த்தார்.

ஆதி பெற்றோர்... சரி என்பது போல தலையை ஆட்ட... ரித்திகா பெற்றோர் தயங்கியவகிரு ஆதி பெற்றோரை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

முதல்வர் ஆதி ரித்திகாவை ஒருதரம் பார்த்து ஆழ்ந்த மூச்சை விட்டு.... ஆதியை ரித்தி கிளாஸ்க்கு அனுப்பமுடியாது.... என்று சிறிது இடைவேளை விட்டு ஏதோ பேச துவங்கும் முன்பு,

ஆதிக்கு கோபம் வந்தது... சார் நான் இல்லனா ரித்திக்கு பீவர் வந்துடும் இனி எப்பவும் அவ கூடத்தான் இருப்பேன், என்றான் முடிவாக.

"ஆதி சட் அப், நான் இன்னும் பேசி முடிக்கல" என்றார்.

என்ன என்பது போல, அனைவரும் அவரை பார்க்க... ரித்தி சூப்பரா படிக்கறதால அவளை ஆதி கிளாஸ்க்கு அனுப்பிடலாம், பட் எக்ஸாம் முடிய இன்னும் ஒரு மாசம் இருக்கு அது முடியட்டும்" என்றார்.

அனைவரும் சந்தோசமாக வீட்டுக்கு சென்றார்கள்... அதன் பிறகு ஒன்றாக ஸ்கூல் முடித்து கல்லூரிக்கு செல்லும் காலத்தில், ஆதிக்கு வேண்டாத சவகாசத்தால் ரித்தி தனித்து விடப்பட்டாள்.... ஆதியிடம் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை அவர்களை பற்றி... ஏன் என்றால் ஆதியிடம் அவனது நண்பர்கள் நடித்துக்கொண்டு இருந்தார்கள்.

கல்லூரியிலும் ஒரே வகுப்பு இருந்தாலும் ரித்திகா தனிமையில் இருந்தாள்... சிறு வயதில் கொழுகொழு வென்று இருந்தவள்... ஆதிக்கு பிடிக்கும் என்று உடம்பை குறைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை..

அவனுடைய நண்பர்கள் அவளது உருவத்தை கலாய்க்க.... கூட சேர்ந்து ஆதியும் சிரித்தது, அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

சிறுவயது போல ஆதி கூடத்தான் இருப்பேன், என்று அடம் பிடிக்கவும் இல்லை ரித்திகா... என்னதான் எல்லாத்தையும் மறைத்தாலும் அவளால் அவனை மறக்க முடியவில்லை.... அவனுக்கு தெரியாமல் சிறுவயதில் இருந்து ஆதியை காதலித்து வந்தாள்... ஆதி நல்ல நிலைக்கு வரும் வரை சொல்லக்கூடாது என்றவளுக்கு தெரியவில்லை சொல்லாமலே அவளது காதல் மண்ணில் புதைந்துவிடும் என்று.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
28

அர்ஜுன் அவனது மேற்படிப்பை முடித்துவிட்டு... டான்ஸ் கிளாஸ் ஆரம்பிக்க ஏற்பாடு செய்துகொண்டு இருந்தான்... வெயிட் லாஸ் ஈசி ஆகும் வகையான நடன பள்ளியில், அதற்காக சிறப்பு பயிற்சி எடுத்துக்கொண்டு வந்தான்.

ரித்திகா பெற்றோர் மற்றும் அர்ஜுன் அப்பா மூவரும் ஒரு விபத்தில் தவறிட்டாங்க. ரித்திகாவை காப்பாற்றிவிட்டு மூவரும் இறந்துவிட்டார்கள்... அப்போது இருந்து ரித்திகா அர்ஜுன் வீட்டில்தான் இருக்கிறாள். அதனால் தான் அவள் சோகமாக இருக்கிறாள் என்று அனைவரும் நினைக்க... அந்த சோகம் போக ஆதியை நாடினால், அவனும் தந்தை இல்லாமல் சோகத்தில் வாடிக்கொண்டுதான் இருந்தான்... ஆதி தன்னை தேற்றிக்கொண்டு சிறிது காலத்தில் வெளியே வந்துவிட்டான்... ரித்திமா முயற்சி செய்து தோற்றாள்... ஆதி துணை தேவைப்பட்டது அவளுக்கு, ஆனால் அது கிடைக்காமல் போகவும் அந்த சோகம் இவளிடம் நிரந்தரமாக தங்கிவிட்டது.

ரித்திகாவின் சோக முகத்தை பார்த்து விசாரிக்க, அவளும் சொல்லிவிட்டாள். கல்லுாரியில் நடந்ததை... "ஆறு மாசத்துல நார்மல் ஆகிடலாம்... டான்ஸ் ஸ்விம்மிங் ரெகுலரா செஞ்சா" என்றான் அர்ஜுன்... வேண்டா வெறுப்பாகத்தான் ஆரம்பித்தாள் ரித்தி... அதன் பிறகு அவளுக்கு மிகவும் பிடித்து செய்ய ஆரம்பித்தாள்... நேரம் போவதே தெரியாமல் அவளது கல்லுாரி நாட்கள் முடிந்தது.... ஆதி தேர்ச்சி பெற்ற அலுவலகத்திலேயே இவளுக்கும் வேலை கிடைத்தது... அவன் பேசா விட்டாலும், பார்த்துக்கொண்டாவது இருக்கலாம் என்றது அவளது காதல் மனம்.

அவனது நண்பர்களும் அதே அலுவலகத்தில்தான் இருந்தார்கள்... ஆதியின் திறமையால் அவன் பதவி உயர்ந்துகொண்டு இருந்தது... அதில் பொறாமை கொண்ட அவனது நண்பர் வட்டாரம் அவனது பேரை கெடுக்க சமையம் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்... அவனது வட்டத்தில் ஒரு பெண் மற்றும் நான்கு ஆண்கள். அந்த ஐவரும் கேடி ஆதியை தவிர... ஆதியின் உதவி அவர்களுக்கு தேவை எல்லா விதத்திலும், அதனால் அனைத்தும் ஆதியிடம் மறைத்து வெளிவேஷம் போட்டுகொண்டு இருந்தார்கள்.

ஆதிக்கு பாராட்டுவிழா ஒன்று ஏற்பாடு செய்தது, அந்த ஐந்து நயவஞ்சக கூட்டம்... அது தெரியாமல் ஆதி குதூகலமாக சுற்றி திரிந்தான்... என்னதான் பழக்கவழக்கம் மாறினாலும் ஆதி தண்ணி அடிக்கமாட்டான்... ஆரஞ்சு ஜூஸ் தாண்டி என்றும் சென்றதில்லை.

"மச்சான் சக்ஸஸ் அந்த பவுடர் கலந்துட்டேன்.... நியூ வா சேர்ந்த அந்த பெண்ணையும் அவனையும் ஒரே அறையில் வைத்து அடைத்தால் போதும்... அந்த பவுடர் பொண்ணு பக்கம் இருந்தா எக்கச்சக்கமா போதை ஏறி எல்லாம் முடிஞ்சிடும், அப்புறம் அவன் வெளிய தலைகாட்ட முடியாது" என்று சொல்லி அந்த ஐவரும் கைதட்டி ஆர்பரித்துக்கொண்டு இருந்ததை ரித்திகா கேட்டுவிட்டாள்.

என்ன செய்வது என்று ஒன்னும் புரியல அவளுக்கு, அர்ஜுன் ஊர்ல இல்ல, வீட்ல சொல்லவும் முடியாது என்று யோசித்தவள்... ஆதிக்கு அருகில் சென்று அமர்ந்தாள் எப்படியாவது அவனிடம் பேச்சுக்கொடுத்து ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்டலாம் என்று நினைத்து கொண்டு இருந்தாள்.

சிறப்பான தருணம் சொல்ல நினைத்ததை.. சொல்ல ஆரம்பித்தாள். "ஆதி ஐ லவ் யு"என்றாள்.

"ஐ டூ லவ் யு டீ, உனக்கு சொல்ல இவளோ வருஷம் ஆச்சா... இடியட் என்றான் காதலோடு.

"போதையில் பேசுறயா" என்றாள் ரித்தி.

"இல்லை ஜூஸ் கூட இன்னும் ஸ்டார்ட் செய்ல" என்றான் இப்போதுதான் அவனின் நண்பர்கள் வந்தார்கள்... அவனுக்கு ஜூஸ் கொடுக்கப்பட்டது... ஆதியை தடுக்க நினைத்தவளுக்கு.

ஆதி அவளுக்கும் கொஞ்சம் வற்புறுத்தி குடிக்கவைத்துவிட்டான்... மீதியை அவன் குடித்துவிட்டான், சொல்லவருவதற்குள் நிமிடத்தில் நடந்துவிட்டது...

சிறிது சிறிதாக போதை ஏற... ரித்தியால் பேச கூட முடியவில்லை... இதுதான் சமயம் என்று இருவரையும் ஒரு அறையில் கொண்டுபோய்ட்டு விட்டுவிட்டு அனைவரையும் கிளப்பிக்கொண்டு சென்று விட்டார்கள்...

இருவரையும் காணோம் என்று தேடி வந்தவர்களுக்கு.... ரித்திகா சற்று முன்புதான் எழுந்து அவளது ஆடைகளை அணிந்துகொண்டு நடக்க முடியாமல் வந்து கதவை திறந்தாள்.... ரித்திகாவை மீரா அடிபின்னி எடுத்துட்டார்... வெளியே சத்தம் கேட்டு ஓடிவந்த ஆதி அன்னையை பார்த்து அதிர்ந்தான்... மீரா அவளை அடிப்பது தாங்கிக்கொள்ள முடியாமல்... "அம்மா நாங்க லவ் பன்றோம் கல்யாணம் பண்ணிக்குவோம் அவளை அடிக்காதீங்க" என்றான்.

லவ் பண்ண என்ன வேணும் நாலும் பண்ணுவீங்க... ஒழுங்கா வளக்கலன்னு என்னதான் டா நாலு பேரு பேசுவாங்க என்றார்.

அந்த சமையம் பார்த்து ஆதி நண்பர்கள் வந்து... "என்ன மச்சான் இப்படி ஆயிடுச்சி இந்த ரித்திகா நேத்து உன் ஜூஸ்ல ஏதோ கலந்தா அப்போவே நினச்சேன்" என்று மொத்த பழியையும் ரித்திகா மீது போட்டான்.

ஆதிக்கு கோவம் எல்லையை மீறி "நீயெல்லாம் ஒரு பொண்ணா..." என்று கண்டபடி திட்டிக்கொண்டு இருக்க...

ரித்தி அவனவே பார்த்துக்கொண்டு இருந்தாள்... மீரா இருவரின் கையை பிடித்து இழுக்குக்கொண்டு வீட்டுக்கு சென்று இருவரையும் தயாராக சொல்ல... ரித்திகா அமைதியாக இருந்தாள்... மீரா இவளை தயார் செய்து அர்ஜுனை வரவைத்து இருவருக்கும் கோவிலில் எளிமையாக திருமணம் நடந்தது.... வீட்டுக்கு வந்ததும் ஆதி ரித்திகாவை நம்பாமல் நண்பர்கள் சொன்னதை பிடித்துக்கொண்டு நின்றான்.... கோவத்தில் அவன் ரித்திகாவை அடிக்க... அர்ஜுன் ஆதியை சரமாரியாக அடித்தான்... எவனோ சொன்னான்னு நம்ம ரித்தியை இவளோ கேவலமா பேசுற, நீ எல்லாம் ஒரு மனுஷனே இல்ல... வீட்ட விட்டு வெளியே போடா என்றான்... "எவளோ ஒருத்திக்காக என்ன போக சொல்றிங்க இல்ல" என்று கோவமாக வெளியேறினான்.

ரித்திகாவால் எவளோ ஒருத்தி என்று சொல்லியதையும், செய்யாததை யாரோ சொன்னதை நம்பி என்னை நம்பாத ஆதியை வெறுத்தாள் ரித்திகா.

இவை அனைத்தும் பின்னாடி இருந்து கேட்டுக்கொண்டு இருந்தான் ஆதி. ரித்திகாவின் துடிப்பை அவனாலும் உணர முடிந்தது... பல வருடம் கழித்து நான்கு மாதத்துக்கு முன்னால் அவனது நண்பர்களை சந்தித்தான்... அப்போதுதான் சரக்கு அடித்துவிட்டு அவனது நண்பர்கள் ஒளறியதை கேட்டவன், துடிதுடித்து விட்டான்... அண்ணன் ரித்திகா என்று அனைவரையும் எதிர்த்து தவறாக பேசியதை எண்ணி மனதால் செத்துவிட்டான் என்று சொல்லலாம்... ஒரு முடிவு எடுத்தவன்... அந்த ஐவரின் வாழ்க்கைக்கு ஒரு முடிவு கட்டினான்... எங்கு சென்றாலும் இவர்களுக்கு வேலைகிடைக்காதது போல செய்தான் ஆதி... மனது அப்போதும் ஆறாதவன்.... போலீஸ் கம்பளைண்ட் கொடுத்து இவர்களை அலையவிட்டான்... அண்ணனின் வாழ்க்கையும் கெடுத்துவிட்டேனே.... சாராவும் அவளது குழந்தையும் அர்ஜுனிடம் இருந்து பிரித்துவிட்டோமே என்று இன்னும் குற்ற உணர்ச்சில் சிக்கி தவித்தான்.... அர்ஜுனின் தேடுதல் வேட்டைக்கு இன்றுதான் முற்றுப்புள்ளி வைக்க முடிந்தது.

ஆதி வரவும் ரித்திகா சாராவிடம் சென்று அமர்ந்து கொண்டாள்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
29

இரு ஜோடிகளும் சரியாக பேசிக்கொள்ள வில்லை என்றாலும்... அனைவர் மனதிலும் ஒரு நிம்மதி... அடுத்த நாள் அனைவரும் கிளம்பி வீட்டிற்கு சென்றனர்.... அங்கு நடக்க போகும் கலவரம் தெரியாமல்..

மீரா ரெடி ஆக கரண்டி ஓடு ஹாலில் அதும் விதவிதமா.... வைத்துக்கொண்டு இருக்க.

அர்ஜுன் சாராவின் கை பிடிக்க... "செருப்பால அடிவேணுமா?" என்றாள் கோபமாக.

"பப்ளிக் ல வேண்ட ரூம் ல போய் அடிச்சிக்கோ " அர்ஜுன் சர்வ சாதாரணமா சொல்லிட்டு சாராவை அனைவாக கைக்குள் வைத்துக்கொண்டு வந்தான்.

அதற்கும் மேல் இடையிலே காரில் சென்றாலும் ஒருவித மயக்கம் சாராவிற்கு, இரண்டு மூன்று இடங்களில் சாரா வாமிட் அதில் இரண்டு முறை அர்ஜுன் மீதே எடுத்து வைத்தாள்.

அர்ஜுன் அப்போதும் விலகல. " ஸ்மெல் வருது நகர்ந்து உட்காரு " என்று சாரா மயக்கத்தில் எரிச்சலோடு சொல்ல. அர்ஜுன் சற்று விலகி சர்ட் ஐ கழட்டி போட்டுட்டு திரும்ப சாராவை நெருங்கி உட்கார. அவனது வேற்றுடல் சாராவிற்கு ஏதோ போல ஆனது.

' எரும மாடல் மாதிரி உட்காந்து இருக்கறத பாரு ' என்று மனசில் நினைக்க.
"நான் ஒன்னும் மாடல் போல உட்காரல, நீதான் வாமிட் செஞ்சி உட்கார வச்சி இருக்க " சாரா விழுக்கென்று திரும்பி பார்த்தாள். 'என்ன இவன் நினைச்சதை சொல்லறான் '.

" அதுலாம் அப்படித்தான் " என்றான் அவள் மனதில் நினைத்ததுக்கு பதிலாக.

இவன் வேற, என்று சலித்து கொண்டவள் சிறிது நேரத்தில் தூங்க ஆரம்பிக்க. சாரவையும் அவள் வயிரையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டே வந்தான்... சில மணி நேரம் கழித்து வீடு வந்தார்கள்.

தூங்கி கொண்டு இருந்த சாராவை ரித்தி எழுப்பி விட. சாரா ஆதி கையை பிடித்துக்கொண்டு நடந்து வந்தாள்.

"சாரா" என்றான் அர்ஜுன் தயக்கமாக.

சாரா திரும்பி பார்த்தாள் " என் கை லாம் பிடிச்சிட்டு வரமாட்டயா" என்றான் ஏங்கும் குறளில்.

சாரா கண்டு கொல்லாமல், ஆதி கையை பிடித்துக்கொண்டு மெதுவாக படி ஏறினாள். உள்ள சென்ற மறு நோடி மீரா அவளாக வாசலை பார்த்துக்கொண்டு இருக்கும் அர்ஜுன், பார்த்து ' அம்மாக்கு என் மேல எவ்ளோ பாசம் ' என்று நினைத்துக்கொண் டு வர. அர்ஜுன் மீரா பக்கம் உட்காற. "எப்படி டா இருக்க " மீரா பாசமாக கேட்க.

" சூப்பர் ஆ இருக்கேன் மா " என்ற மறு நொடி.

" எப்படி நீ சூப்பர் ஆ இருக்கலாம் சரி இல்லையே " சோபா வில் உட்கார்ந்து இருந்தா அர்ஜுனை தள்ளி கிழே உட்காற வைக்க, புரியாமல் பார்த்தான் அர்ஜுன்.

ஆதி நைசாக நழுவ பார்க்க "ஆதி கண்ணா வந்து அண்ணா பக்கம் உட்காரு". என்று சொன்ன உடனே தயங்கி கொண்டே நிற்க. அர்ஜுன்ஆதி கையை பிடித்து இழுத்து, அவன் பக்கம் உட்கார வைக்க." அம்மாதான் பாசமா கூப்பிட்றங்க இல்லை ".
' இவன் வேற இவங்க மூணு பேர பத்தி தெரியாம, வழியாறான் '.

சாரா ஒரு பக்கம் ரித்திகா ஒரு பக்கம் இடையில் மீரா. முப்பெரும் தேவிகள் போர் தொடங்க இருக்க.

மீரா இருவரையும் பார்த்து "ஸ்டார்ட் செய்லாமா "என்று கேட்க. இருவரும் வேகமாக தலையாட.
பக்கத்தில் இருந்த கரண்டியை எடுக்க.

அதுக்கு முன்னாடி பாப்பாக்கு ஒரு கப்ல கஞ்சி ஊத்தி ரித்திகா கொடுத்து வர.

" இந்த இடத்த விட்டு நாங்க சொல்ற வரை எல கூடாது ரெண்டு பெரும் " மூவரும் ஒரே நேரத்தில் சொல்ல. இவர்கள் செய்ய இருப்பது ஆதிக்கு எப்போவோ தெரியும், என்ன இவனையும் வச்சிட்டு தான மூணு பெரும் டிஸ்கஸ் செஞ்சாங்க.

அர்ஜுனுக்கும் இப்போது புரிந்தது. அர்ஜுன் வேறு சட்டை போடாமல் இருக்க.

மீராவிடம் " மா சட்டை போட்டுட்டு வரவா " என்று கேட்க. சாரா வேகமாக. " மாமா யு லுக் செ ஹாட் " என்று சொல்ல. அர்ஜுன் வழிந்து கொண்டே பரவால்ல சட்டை வேண்ட என்றான். ஆதி தலையை அடித்துக்கொண்டான்.

சாரா சிரித்துக்கொண்டே முதல் அடியை துடங்கினால். மீரா இருவரையும் மாற்றி மாற்றி அடிக்க... சாரா அர்ஜுனை.. ரித்தி ஆதியை என்று பிரித்து அடிக்க.

ஓரமாக தாரா உட்கார்ந்து கஞ்சி சாப்பிட்டு கொண்டே கமென்றி கொடுத்து கொண்டு இருந்தாள். ஆதிஅப்பாக்கு அடி அர்ஜுன் அப்பாக்கு அடி. என்று மாற்றி மாற்றி சொல்ல. குழந்தையை உற்சாகம் பார்த்த ரெண்டு அடி சேர்த்து விழுந்தது தாரா சொல்லு பேர் க்கு.

அதிகமாக ஆதியை தான் சொன்னால். 'வில்ல்ங்கம் பிடிச்சவ, அடி வாங்க மட்டும் ஆதி அப்பா...கொஞ்சும் போது மட்டும் அர்ஜுன் அப்பா ' மகளை மனதில் திட்டினான்.

மூவரும் இருவரை ஒரு வழி செய்ய. ஆதி ஒரு பக்கம் அர்ஜுன் ஒரு பக்கம் அலறிக்கொண்டு இருந்தான்.

ஆதிக்கு அவ்ளோவா ஒடம்பு சிவக்கல ஆனா அர்ஜுன் சட்டை வேற போடாம... ஜல்லி கரண்டி தோசை கரண்டி.... னு விதவிதமா மூதுகில் டிசைன் இருக்க... தாரா அதை பார்த்து சிரிக்க. ஒரு வலியாக மூணு பேரும் டையர்ட் ஆக ஆதி அர்ஜுன். அப்பாடா முடிஞ்சது என்று நினைக்க.

பின்னாடி இருந்து சூடா ஏதோ கொட்ட. திரும்பி பார்த்தா, தாரா சூடான கஞ்சியை இருவரின் தலைலும், சரி பதியாக கொட்டி ஸ்பூன் வைத்து இருவர் மண்டைலயும் டிரம்ஸ் வாசிக்க.

இதை ரித்திகா, மொபைலில் பதிவு செய்துகொண்டு இருந்தாள்.

கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்த அர்ஜுன் ஆதி... அவங்க மூணு பேராவது டையர்ட் ஆனாங்க, இந்த தாரா அப்போதான் பிரெஷ் ஆகி பிரேக் பாஸ்ட் முடிச்சிட்டு தெம்பா விளடிட்டு இருக்க.

அது பாத்ததும்னு அர்ஜுன் முதுகில் அப்பா அப்பா நியூ டிசைன்னு, வீங்கி போய் இருந்தா இடத்தை தட்டி தட்டி விளையாடிட்டு இருந்தா.

பொறுத்து பார்த்த அர்ஜுன் அவன் மேல இருந்தா கஞ்சியை தாரா மீது பூசி மூணு பேரும் விளையாடிட்டு இருக்க. இடையிலே சாரா கரண்டி எடுத்து அர்ஜுனை அடிக்க. அனைத்தையும் சிரித்துக்கொண்டே வாங்கி இருந்தான் அர்ஜுன்.

மீரா ஒரு மணிநேரம் கழித்து... போதும் மூணு பேரும் பிரெஷ் ஆகுங்க மிரட்டி அவங்க அவங்க ரூம் க்கு போக.
 
Top