ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் ரிதம்- கதை திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
5

"என்னது கண்ணை நோண்டி எடுக்குறியா...... அர்ஜுன் என் தங்க குட்டி இல்ல கண்ணு இல்லமா எப்படி பார்க்க முடியும் ப்ளீஸ் வேண்டாம் அர்ஜுன்..." என்று பதுங்கியவாறு பேசினாள்.

அவள் பேசுவதை காதில் வாங்காது நெருங்கி வந்தான்.

"சாக்லேட் வாங்கி தரேன் ப்ளீஸ் வேண்டாம் குட்டி பாப்பா......பெரிய பாப்பாக்கு வாங்கி தருமாம் குட்டி பாப்பா சாப்பிடுமா எப்படி டீல் ஓகே தானே".... அனைத்தும் மறந்து அவனிடம் பேரம் பேசினாள்...

இவள் கூறுவதை எதையுமே காதில் வாங்காமல் அவள் முகத்தில் மறைத்திருக்கும் கைகளை விலக்கி கண்களுக்கு இடையே இரண்டு விரலை கொண்டு போனான்...

இவர்களுக்கிடையே நடந்துகொண்டிருக்கும் சண்டைகளை மறந்து இவள் பேசிக்கொண்டே இருந்தாள்... அடிக்கடி எல்லாம் மறந்து.... லூசு தனமா பேசவும்....இவன் அவளை வித்தியாசமா பார்க்க.

அதுவும் சிறிது நேரம் மட்டுமே....

"ஓ அப்படி பேசிபேசி,உன்னிடம் மயங்கி இருக்க நான் என்ன பூனைக்குட்டியா? நினைச்சியா போடி".

"ப்ளீஸ் ப்ளீஸ் நா ரெண்டு சாக்லேட் வாங்கி தரேன்" என்றாள்.

அவளின் கொஞ்சும் மழலையின் குரல்கேட்டு நிகழ் காலத்து சண்டையை அர்ஜுனுக்கு மறக்கடித்தது.

இப்பொழுது இருக்கும் நிலையை அவனும் மறந்தான்... இது என்னவோ மாயம்.

"கண்டிப்பா இரண்டு சாக்லேட் வாங்கி தருவியா". இவன் அவளிடம் இறங்கி பேரம் பேச...தொடங்கினான் வழக்கம் போல.

"ரெண்டு என்ன கடைக்கு கூட்டீட்டு போய், எல்லாம் வாங்கித்தரேன்" என்று வாக்கு கொடுத்தாள்.

அவன் சமாதானம் ஆனதும், அவள் தலையை ஒரு புறம் சாய்ந்து கேட்கும் அவளை அவன் அந்த கோவத்திலும் ரசிக்கதான் செய்தான்.

அவனின் பார்வை அவளின் கன்னத்தின் மீது இருந்தது மீண்டும் கன்னத்தை கைகளால் பொத்திக் கொண்டாள்.

இந்தமுறை அவன் அறையும் நோக்கத்தில் பார்க்கவில்லை.....

சற்றுமுன்பு மறந்ததை அவள் செய்கையால் நினைவு படுத்த.... அந்த செயல் அவனை நிகழ்களத்துக்கு கொண்டு வந்தது.

இந்தமுறை அறையும் நோக்கத்தோடு பார்த்தான்.

அவனின் நிலையை மீண்டும் புரிய கன்னத்தில் இன்னும் ஒன்னு விட்டான் அவள் பொத்திய கைகளோடு.

'என்ன இவன் அண்ணியன் மாதிரி பண்றான் மாத்தி மாத்தி பேசிட்டு இருக்கான்"... இவள் குழப்பத்தோடு அவன் முகத்தை பார்க்க.

"இந்த பப்பி ஃபேஸ் காட்டாத டி அடி பின்னி எடுத்துடுவேன்" என்று மிரட்டினான்.

அர்ஜுன் செய்வதை பொறுத்து கொள்ள முடியாதவளாக அவனிடமே கேட்டுவிட்டாள், "ஏன் இப்ப புதுசா வேற மாதிரி பிஹேவ் பண்ற".

"இப்படிதான் இனிமேல் நான் செய்வேன்" என்றான் திமிராக.

"அதான் எதுக்கு இப்படி செய்றா எனக்கு ஒன்றும் புரியல "என்று சாரா அர்ஜுனிடம் வினவ.

"என்ன பாத்து ரெண்டு கல்யாணம் பண்ண ட்ரை பண்ணேன் சொல்றதுக்கு முன்னாடி நீ யோசிச்சு இருக்கணும் "திஸ் இஸ் டூ லேட் பேபி". இனி நீ விலகி இருப்பது தான் சரி." என்றான் வேண்டாதவர் இடம் பேசுவது போல.

"இந்த வார்த்தை என்ன பாத்து சொன்னதுக்கு நீ எதிர்கொள்ள நிறைய இருக்கு இனி.." என்று எச்சரித்துவிட்டு சென்றான்.

"இது எல்லாம் நான் மட்டும் செய்தது போல சொல்கிறான் இவன். நடந்தது அனைத்துக்கும் இவனுக்கு அதிகப் பங்கு இருக்கிறதுதனே..."

"டாக் ....பன்னி.... உன்ன ....வாய்ல வரும் அனைத்து அர்த்தமற்ற வர்தையாள அர்ச்சனை செய்ய துவங்கினாள், அவள் மனசாட்சி பக்கம் இருக்கும்போது சொல்லி பாரு என்று அவளை கேலி செய்தது.

எதுக்கு நான் நல்லா திரும்ப அடி வங்கவா இனிமேல் இங்க வராத நீ எப்ப பாத்தாலும் அவனுக்கு சப்போர்ட் செய்கிறாய் நீ.... என் மனசாட்சி இல்ல அவன் மனசாட்சியா எனக்கு சந்தேகமா இருக்கு.

"பொறுக்கி என்ற வார்த்தை சாதாரணமாகவே திட்டுவேன் இப்ப மட்டும் ஏன் வேற மாதிரி அர்த்தம் எடுத்துக் என்ன இருக்கு இவன் நடவடிக்கை புரியல மண்டை காயுது".

"இவ்ளோ கோவம் கூட உனக்கு வருமா சாக்லேட் பாய் மாதிரி இருந்தான் இப்பொது, என்னடா டெரர் பீஸ் அக .... எதுக்கு எடுத்தாலும் எரிந்து விழுகிறான் ...ஒரு வேளை நாய் கடித்து இருக்குமோ..."

"டாக்டர் ட பார்ப்பது நல்லது என்று நினைத்துக்கொண்டே....

சிறிதுநேரம் அவனின் குண மாற்றத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள் சில மணித்துளிகள் கடந்து பட்டு சட்டையோடு அவன் அறைக்குள் நுழைந்தான் எங்காவது வெளிய அர்த்தராத்திரியில் போகிறது...போல டிரஸ் பண்ணி இருக்கான் என்று நினைத்தவள்.

"என்ன தயாராகலாய? காலையிலே சொன்னது நினைவு இல்லையா?" என்றான் காரியத்தில் கண்ணாக.

"அட பாவி இதுக்கு தான் ரெடியாக சொன்னியா" திருதிரு என்று முழித்தாள்.

திடீரென்று பதட்டம் தொற்றிக்கொண்டது அவள் மனதில் "எதற்காக" என்று ..... பாவமாக கேட்டாள்

உனக்கு தெரியாது தெரியாதா ? அவள் மனம் கேலி செய்தது சாராவை.

இவனிடம் பேசவே பயமா இருக்கு திடீர்னு அறைந்து விடுவானோ என்ற கன்னம் என்ன ஆகிறது.

திரும்பவும் அடிவாங்கிய உடம்புல தெம்பு இல்ல சாமி என்று நினைத்தவள். தைரியத்தை வரவைத்து கொண்டு ஒருவழியாக கேட்டு விட்டாள் அர்ஜுனிடம்.

அவனின் மிக சாதாரணமாக "அதுவா ஃபர்ஸ்ட் நைட் ரெடியாயிட்டு வா". ஏதோ ஷாப்பிங் போலாம் வா என்று கூப்பிடும் தோரணையே கூப்பிடும் அவனை.

"இவளோ ஓபன் கூடவா பேசுவாங்க...விவஸ்தை கெட்டவன்..''

'என்ன இப்படி பேசுறா இந்த மூஞ்சை வச்சிக்கிட்டு ஃபர்ஸ்ட் நைட் ஒன்னுதான் கொண்டாடுவது தான் இப்போ ரொம்ப முக்கியமான விஷயம் பாரு.'

"என்ன இது யோசித்து மாசமாசனு நின்னுட்டு இருக்க கேலம்பு டைம் ஆச்சி".

"எங்கயோ வெளிய போவது போலவே கிளம்பு... சொல்கிறான்.இவனை தலையே அடித்துக்கொண்டு".

தலைமட்டும் அசைத்துவிட்டு அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறையை நோக்கி சென்றாள்.

"மாடு மாதிரி தலை ஆட்டுவதை பாரு வேண்டா வெறுப்பாக யாருக்கோ கல்யாணம் நடந்த ரேஞ்சுல சுத்திட்டு இருக்கிறது".

முழுதாக இரண்டு மணி நேரம் தாண்டியது இவள் தயார்ஆகி வரவில்லை.

அவனின் பொறுமை காற்றில் பறந்து சென்றது..... இன்னும் வரல என்ன பண்ணிட்டு இருக்க அவளைத் தேடி அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் சென்றடைந்தான்.

அவளோ எந்த கூமுட்டை பின்னாடி லேஸ் வச்சது இடியட் கஷ்டப்பட்டு போடுறதுக்கு ஒரு மணி நேரம் போச்சி... எப்போது புடவையை உடுத்துவது.

இந்த சாரி கட்ட தெரியும் ஆனா ரைட் சைடில் இருந்த இல்லை லெப்ட் சைட்ல இருந்த ஆரம்பிக்கனுமா எதுவும் மண்டை குழம்புது . தெளிவா இருந்த பாபாவை குழப்பிவிட்டான் இந்த அர்ஜுன்.

'நம்ம பொண்ணுதான, எனக்கே சந்தேகமாக இருக்கே. . .'

அவன் பொறுமை இழந்து காலால் கதவை உதைத்தான் ரெடியா இருக்கியா என்ன பண்ணிட்டு இருக்க.

மீரா இவர்களுக்கு தனிமை வழங்க உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.... இவன் செய்வதை மீரா பார்த்து இருந்தாள் நன்றாக அடிவாங்கி இருப்பான் அர்ஜுன்...

"இன்னும் கொஞ்ச நேரம் இன்னும் ரெடி ஆகல".

'இவன் வேறு அத்தை இல்லை உடனே சத்தம் எல்லாம் பலமாக இருக்குது '.

வேணும் என்று செய்வது போல இருக்கே.

"என்னடி இரண்டு மணி நேரம் ரெடியாக... இல்லங்க நிஜமாவே ரெடி ஆகல " அறையின் அந்த பக்கமிருந்து மெல்லிய குரல் வந்தது.

"பொய் சொல்லிட்டு இருக்காத கதவ திறந்து விடு இல்ல உடைச்சு உள்ள வருவேன்" என்றான் கடுமையாக.

"இருங்க வரேன் கதவை உடைத்து விடாதே". வில்லன் செய்வது போலவே செய்கிறான்.

'எனக்கு சந்தேகமா இருக்கு இவன் ஹீரோ? ஆர் வில்லன்?'

"கொஞ்ச நேரம் இருங்கள் ரெடியாயிட்டு வந்திடறேன் ஒரு பத்து நிமிஷம்" என்றாள்.

"பொய் சொல்லிட்டு இருக்காத கதவை முதலில் திறந்துவிட்டு... உடைச்சிட்டு உள்ள வந்துடுவேன்" என்று மறுபடியும் மிரட்டினான்.

வேகவேகமாக புடவையை சுற்றி கொண்டு கதவை திறந்தாள் மெதுவாக தலையை வெளியில் நீட்டினாள்.

என்ன இவ்ளோ நேரமா நீ ரெடியாக போது ரெடியானதும் முழுசா கதவை திறந்து அவளை தாண்டி உள்ளே சென்றான்.

இல்லங்க அவ சொல்லி முடிக்கும் முன்பு அறையின் உள்ளே சென்றுவிட்டான்.

அவள் புடவை முந்தானை தடுக்கி அர்ஜுன் சாரா மீது விழுந்தான்.

கட்டின சேலையின் லட்சணம் இதிலிருந்து அவனுக்கு தெரிந்தது இடுப்பு சுளுக்கு.....ஆ

"அர்ஜுன் வலிக்குது எந்திரிடா முடியல சுளுக்கு நினைக்கிறேன்".

"இரு கத்தாத என்னாச்சுன்னு பார்க்கலாம்" என்றான் ஆறுதலாக.

எங்க சுளுக்கு அவள் இடுப்பில் கை வைக்க.

அவன் கைகள் அவள் சேலையை ஒதுக்கி விட அவன் கையைப் பற்றினாள்.

"வேணாமுங்க ஒரு மாதிரி இருக்கு என்றாள் வெட்கம் கலந்த குரலில்.

"பாருடா மரியாதை எல்லாம் தூள் பறக்குது" .

"ஏய் கையை எடு ஏதோ இதற்கு முன் பார்க்காதது போல செய்கிறாய்" என்றான்.

"இப்படியா பேசுவா பொறுக்கி உன்னையே..." அடிக்க கை ஓங்கியவள் அவனது முகத்தை பார்த்ததும் அவளுக்கு வெட்கம் அவளை தின்றது.

எனது பொறுக்கி அவனின் கோபம் எக்குத்தப்பாக எகிறியது அவன் மேல் இருந்த அவளை தள்ளி விட்டான் கருணையே இல்லாமல்.

"பொறுக்கி எப்படி ட்ரீட்மென்ட் பண்றது இனி நீ பார்க்க தயார இரு" என்று கர்ஜித்தான்
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
6

"புடவையை சொர்ணாக்கா மாதிரி கட்டினா கீழ விழுந்து கிடக்கவேண்டியதுதான்".

அவனின் வாய் அவளைத் திட்டிக் கொண்டே இருந்தாலும் சிறிது நேரத்திற்கு அவனின் கண்கள் தடுமாறி நின்றது. அவளின் வெற்றிடையை பார்த்து.

அந்த தடுமாற்றத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு அவளுக்கு உதவி செய்ய நெருங்க.

அவனை மிண்டும் தவறாக புரிந்துகொண்டு முகத்தை வேறு புறம் பார்க்க.... அவள் திரும்பியது ஏதோ வெட்கத்தில் தான்....அர்ஜுன் புரிந்து கொண்டது என்னவோ வேறுவிதமாக.

இந்த முறையும் அவன் கோபம் அவனின் கண்களை மறைத்தது.

அவளின் "பொறுக்கி'என்ற வார்த்தையின் நினைவு ஒருபக்கம் நினைவில் வர.....

அது ஏதோ தெரியாம சொல்லிட்டா அதற்க்காக இப்பொது அவளுக்கு உதவி செய்யாமல் இருக்க முடியாது என்று அவனின் இன்னொரு மனம் அவனிடம் சாராவிற்காக வாதாடியது .

"ஏய் பொறுக்கி ஹெல்ப் பண்ணு டா....என்றாள் வலி பொறுக்க முடியாமல். அவள் வாய்வழியாக வேறு இப்போ கேட்டுவிட்டது அந்த வார்த்தை அர்ஜுனின் செவிகளை சென்றடைந்த மறுநோடி.

"நம்பிக்கை இல்லாத பொறுக்கியை எந்த ....... கல்யாணம் செஞ்சிகிட்ட " என்றான் ஆக்ரோஷமாக".

"பிடிச்சிதன் லவ் செய்தேன். விட்டு போய்டுவ னு தெரிந்து இருந்தால் நான் கொஞ்சம் உஷாராகி இருப்பேன்" என்றாள் வெறுப்போடு.

"அப்போ அந்த பொறுகி பிடித்தது இப்ப இந்த பொறுக்கி புடிக்கலையா".

நான் அவள் பேச்சை கேட்கப்போவதில்லை... அதேபோல் சாரா சொல்வதும் எனக்கு புரிய போறது இல்ல.....அவன் மனதுக்கு புரிந்தது அறிவுக்கு சென்றடையவில்லை.

அவனையும் மீறி கோபத்தில் வார்த்தையை விட்டான்.

"அந்த பொண்ணை கட்டி இருந்தால் நிம்மதியா இருந்திருக்கலாம் அவள் என்னை தாங்கி இருந்திருப்ப. இவள் என்னை வதைக்கிறாள்" என்றான் அவளை வெறுப்பு ஏற்ற.

இதைக்கேட்டதும் சாராவிற்கு ஏகத்துக்கு கோபம் வந்தது. தன்னிடத்தில் வேறுஒருவளை வைத்து பேசும் இவனது நாவை இழுத்து வைத்து நறுக்கும் அளவிற்கு கோபம் பெருகியது சாராவிற்கு.

"நீ ஒழுங்கு மாதிரி பேசிட்டு இருக்காத" சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்தாள்...வலியை பொறுத்துக்கொண்டு... கால்களை தாங்கியவாறு...

நானும் எதை நினைச்சாலே இப்படிதான் ஆகின்றது... ஆமா இவரு சொல்றதும் சரிதான் வேற ஒரு பொண்ணை கல்யாணம் செய்து இருந்தாள் அர்ஜுனின் வாழ்கை மகிழ்ச்சியாக இருந்து இருக்கும்.

தாங்கி தாங்கி மெதுவா நடந்து போய் சோபாவில் உட்கார்ந்து கைப்பேசியில் ஏதோ பார்க்க ஆரம்பித்தாள்.

"இங்க வந்து படுத்துக்கோஅங்க படுத்த வழி அதிகமாக ஆகிடும்.... காலையில மருத்துவமனை போகலாம் பெருசா ஒன்னும் இல்லை என்று நினைக்கின்றேன் எதற்கும் ஒரு செக் பண்ணிக்கலாம்." என்றான் அக்கறையாக.

வலியால் அவள் முகம் சுருங்கியது எதுவும் பேசவில்லை சாரா பார்வை போனிலேயே எதையோ மேய்ந்தது .

அர்ஜுன் கோவமாக "இங்க வரப் போறியா இல்லையா."

"முடியாது போடா..." வாய் மட்டும் அசைத்தாள்.

"இங்க வான்னு சொன்னேன்.... ஆக்டிங் பண்ணிட்டு இருக்காத....எழுந்து வா".

எவ்வளவு நேரமா பொறுமையா இருப்பது போல் நடிப்பது..... "ஆமாம் நான் ஆக்டிங் தான் பண்றேன்".

"எனக்கு சுளுக்கு இல்லை போதுமா ஆக்டிங் பண்ணிட்டு இருந்தேன் போதுமா...." கோவத்தில் கத்தினாள்.

"என்னிடம் கத்தி பேசாதே.... " சுட்டு விரலை கொண்டு மிரட்டினான்....

முகத்துக்கு நேராக அவன் விரல் வருகையில்... அவன் விரலை நன்கு கடித்து வைத்தாள்......அவனின் பொறுமை எங்கோ காற்றில் பறந்தது....ஒரு கணநேரத்தில் நடந்ததை நினைத்து கோபம் பன்மடங்கு எகிறியது....

அச்சோ அர்ஜுன் போச்சா.... "இரத்தம் வருது பாரு..." அவன் விரலில் ஜாம் இருபது போல அவன் விரலை வாயில் வைத்து சுவைத்தாள்.

டேஸ்ட் அருமையோ அருமை என்று ... அவள் கூறவும்.அவன் கோபமா இருக்கான். சாராவோ அவனை வெறுப்பேற்ற கங்கணம் கட்டி சுற்றிக்கொண்டு இருந்தாள்.

" இரத்த சுவையே சுவை..."

அர்ஜுனை பார்த்தவாறு கூறினாள்.

அவனின் கோவத்தை பார்த்து அந்த இடத்தை விட்டு ஓட பார்த்தாள் ... ஆனால் அவள் கால்கள் ஒத்துழைக்கவில்லை. வலியால் முனகினாள்.

மறுபடி வலியால் கத்தியவளை கைகளை பிடித்துவாரு முறைதான்.

பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு "அது திடீர் ஜம் போல தெரிஞ்சது அதன் அப்படி செஞ்சிட்டேன் "என்று தன்னிலை விளக்கம் வேறு குடுத்தால்.

"உன்னை.. அப்படியே என்ன சவடிதுவிடு... நிறைய இரத்தம் கிடைக்கும். குடித்து சந்தோசமா இரு" என்றான் அர்ஜுன்.

இவ எதாவது செய்து அவனை சகாஜ நிலைக்கு கொண்டு வரும் முயற்சி தோற்று போனது மட்டும் இல்லாமல்.... அவள் அவனை சாகடிக்க நினைக்கிறாள் என்று கூறிய அடுத்த நொடி...அவளின் கைகள் அவனின் முரட்டு கன்னத்தை பதம் பார்த்தது...

அவள் கேள்வி கேட்க தொடங்கினாள்.

"செஞ்ச தப்பு எல்லாம் நான்தான் போதுமா. இப்போ உனக்கு சந்தோசம். எதோ வார்த்தை தெரியாம விட்டுட்டேன் அதவே பிடிச்சிட்டு தொங்கிட்டு இரு கடைசிவரை....." இவள் பேசிக்கொண்டே போக.

"அந்த பொண்ணு அவளோ அம்சமா இருந்தது எங்கே சென்றாள் என்று தெரியவில்லை" என்றான் சோகமாக... அவளை வெறுப்பேற்றும் நோக்கத்தோடு.

"இப்போ அந்த பெண் இருந்து இருந்த ஜாலியா கல்யாணம் செய்து சிறப்பாக முதலிரவு கொண்டாடி இருந்து இருப்பேன் " என்றான் அர்ஜுன் ஏக்கமாக.

நான் பேசுறது காதில் விலாது இவனுக்கு இவன் பிரச்சினைதான் முக்கியம்.

இதை அவன் கூரிமுடிக்கும் முன்பே அவன் ஆடையை இறுகி பிடித்து....

"டேய் இன்னும் ஒருமுறை இதை சொல்லி பாரு அப்போ நான் யார் என்று உனக்கு புரிய வைக்கிறேன்" என்றாள் சாரா ஆக்ரோஷமாக.

அவள் சுளுக்கை மறந்து செய்த செயலால்... வலி பொருகா முடியாமல் மீண்டும் அர்ஜுன் மீது சாய்ந்தாள்.

அவள் இருந்த நிலையை பார்த்து "நான் யாரையும் இப்படி தான போய் ஒரசி பழகம் இல்லை" என்று சீண்டினான்.

எந்திரிக்க பார்கிறாள்...முடியவில்லை

"ப்ளீஸ் அர்ஜுன் வலிக்குது ஹெல்ப் பண்ணுடா...."

"நான் உனக்கு ஹெல்ப் பண்ணா என்ன தருவாய்?"

"உனக்கு என்ன வேணும் சொல்லு நான் கண்டிப்பாக தரேன் வலி பொறுக்க முடியல... "அர்ஜுனிடம் வாக்கு கொடுத்துவிட்டாள்.

"நீ போயிடு என்னை விட்டு..."

"என்னால் உன்னை விட்டு போக முடியாது அர்ஜுன்..." என்றாள் வலியை பொறுக்க முடியாமல்.

"நேராக சொல்றேன் எனக்கு உன்கூட இருக்கணும் எனக்கு தோணல என்ன பத்தி எவ்வளவு கீழ நினைச்சுட்டு இருக்கின்ற பொண்ணு கூட என்னால் வாழ்கை வாழ முடியாது" என்றான் அர்ஜுன்.

"நீ உன் வீட்டுக்கு போகலாம், உங்க வீட்டுல என்ன நீ வேற எங்கயாவது போலாம் திரும்ப என்னோட வீட்டுக்கு வரக்கூடாது".

அவளை அர்ஜுனிடம் எதும் பேச முடியவில்லை. ஒரு பக்கம் வலி இன்னொரு பக்கம் இவனின் அவ்வார்த்தை அவளை வதைக்க

சாரா இது தாங்கிக்கொள்ள முடியவில்லை எதுக்கு இந்த வாழ்க்கை.... நீ இல்லாத என் வாழ்க்கையில் இனிக்குமா என்ன?

அவளின் கோபம் போய் வெறுமை சூழ்ந்தது. ஏன் ஒரு வார்த்தைக்காக இப்படி என்ன செய்கிறாய் இவ்வளவு நாள் என் மேல் வைத்திருந்த பாசம் எங்கே? என்று நினைத்துக்கொண்டு இருந்தாள்.

பேசிக்கொண்டு இருக்கும்போதே அவள் அலைபேசி அவளை அழைத்தது.

இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி.... காலிங் ப்ரம் அக்கா...

அவளோட அக்கா கிட்ட இருந்து கால் வரும் அதிர்ச்சியாகி விட்டாள். இவள் எதற்க்காக இப்பொது.. என்ற யோசனையில்.

உயிர்ப்பித்து காதில் வைத்து முன்னே "சாரி சாரி சாரி சாரி சாரி அவர் காதலுக்கு ஹெல்ப் செய்தது இங்க நீ மாட்டிக்கிட்டே என்று சொல்லிட்ட நான் ரொம்ப வருத்தம் ஆக இருந்தேன்.... இருந்தாலும் உனக்கு ரொம்ப பிடித்தவர்களை கல்யாணம் செய்துகொண்டாய். அதுவரைக்கும் எனக்கு ஹாப்பி சாரா" என்று அவளது அக்கா மூச்சி விடாமல் பேசிக்கொண்டு இருந்தாள்.

"சரி நான் அப்புறம் ஒரு நாள் வீட்டுக்கு வரேன் நான் உங்களை தொந்தரவு செய்கிறேன் நினைக்கிறேன் சரி சரி பாய் பாய் பாய்....." என்று அவளை பேசிட்டு அவளே வச்சிட்டா...

இது பேசிட்டு இருக்கும் சமயம் பார்த்து சுழிக்கு எடுத்து விட்டு இருந்தான்.. அவள் போன் வைக்கவும் இவள் கத்தவும் சரியாக இருந்தது.

"இப்போது சரியா போச்சா சூப்பர் மேஜிக் எல்லாம் செய்கிறாய் அர்ஜுன்".

அவள் பாராட்டு எல்லாம் அவன் காதில் எங்கு சென்றடைந்தது "சரி எப்ப கிளம்புறேன்?"

"அர்ஜுன் அக்கா இப்போதுதான் விவரம் சொன்னாள்" என்றாள் தயங்கிக்கொண்டு.

"எப்போ கிளம்பறே"என்றான் மீண்டும்.

"சாரி உங்களை புரிஞ்சுக்கம்மா பண்ணிட்டேன் அதற்க்காக இந்த தண்டனை ரொம்ப அதிகம்".

"காதல் வாழ்க்கையில் நம்பிக்கை ரொம்ப முக்கியம் சாரா எப்பவுமே உனக்கு என்மீது நம்பிக்கை இல்லை".

"அர்ஜுன் வேண்டாம் பேபி ஒரு வார்த்தைக்காக இந்த தண்டனை இரண்டு பேருக்குமே ரொம்ப அதிகம்".

இவள் பேசியது எதுவும் அவன் காதில் விழவே இல்லை.

"உனக்கு இது சாதாரணமான விஷயமா கூட இருக்கலாம்... உனக்கே தெரியும் எனக்கு நம்பிக்கை ரொம்ப முக்கியம்".

"முன்னாடியே சொல்லி இருந்தால் இவை எதுவும் நடந்து இருக்காது அர்ஜுன்" அவனை குற்றம் சொன்னாள்.

நான் சொல்ல வரும்போது தான் எனக்கு வந்து முதல் இரவு தள்ளி வைத்தார்கள்.

ஏனோ நான் சமாதானப்படுத்த எந்த எல்லைக்கும் போவேன்னு...நான் வந்து உன்னை சமாதானப்படுத்த எக்கு தப்பா ஏதாவது ஆகியிருந்தால்.... வீட்ல இருக்க எல்லாரையும் ஃபேஸ் பண்றது ரொம்ப கஷ்டம் ரிலேடிவ் நிறைய பேர் இருந்தார்கள்.... நான் என்ன சொல்றது புரியுது நினைக்கிறேன்.

"உன்ன நான் செலக்ட் பண்ணது காரணம்.... பிடிச்சு இருந்தது உன்னோட ஆட்டிட்யூட் இப்போது நடந்துகிட்டு எனக்கு சுத்தமா பிடிக்கல. இதுதான் உன்னோட ஒரிஜினாலிட்டி னு நான் நினைக்கிறேன் என்னோட கனிப்பு தவறாக போயிவிட்டது" என்று சலித்தவன்,

நீ போயிடு நீ இருந்தா நான் சந்தோஷமாக இருக்க மாட்டேன்".

"ரெண்டு பெரும் கொஞ்ச நேரம் யோசிச்சு பார்க்கலாம் இது வாழ்கை விளையாட்டு இல்லை" என்றாள் சாரா.

சாரா அவனை விடுவதாக இல்லை.

" ஓகே நீ டைம் எடுத்துக்கோ மார்னிங் சொல்லு எங்க வீட்ல இருக்க கூடாது".

"எப்போவும் இந்த முடிவில் இருந்து மாற்றம் அடையாத அர்ஜுன்" என்றாள் ஏக்கமாக.

அவன் சிறு தலையசைத்து தலையணையில் சாய்ந்து படுத்தான் பக்கத்து அறையில்.

நீங்க வரதுக்கு வரைக்கும் இந்த ரூமை உபயோகம் செய்துகோ பக்கத்தில் ரூம் யூஸ் பண்ணிக்கிறேன் இந்த டேபிள் ல ஆயில்மெண்ட் இருக்கு அதை ஆப்பிளை செஞ்சுக்கோ இன்னும் கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுவ.

"இவ்வளவு அக்கறை என் மேல் வைத்துவிட்டு எதுக்கு இந்த பிரிவு..."அவன் முகம் பார்க்காமல் சாரா கேட்க.

"ஏதாவது வேணும் என்றால் கேளு நீங்க இப்போது என்னோட விருந்தாளி" என்றான்... உன்மேல் அக்காரரோ இல்லை நீ எனக்கு மூன்றாம் மனிதன் என்பது போல இருந்தது அந்த பதில்.

"இப்போ நீங்க என்னோட விருந்தாளியை நான்தான் பாத்துக் கொள்ளவேண்டும்" என்றான்.

"அவ்ளோதான் அர்ஜுன் நமக்குள்ளே..." ஏக்கத்தோடு சாரா அவனை பார்க்க... "லவ் செய்த உன்னை விட கூடாது நினைத்த நான்.... என் கணவனை நான் விட்டு விடுவேன் என்று நீ நினைக்கிறாயா? "

"உனக்கு பிடிவாதமும் இருக்கலாம்... உன்னை விட பல மடங்கு அதிகமா எனக்கு இருக்கு" என்றான் அர்ஜுன்.

என்னோட பிடிவாதம் பத்தி உனக்கு தெரியும் சரோ என்பது போலாம் இருந்தது அவனது பேச்சி.

"என்ன நம்பாதவர் கூட என்னால வாழ்க்கை முழுவதும் பொறுத்துக்கொண்டு தான் இருக்க என்னால் முடியாது இதுதான் என்னோட ஃபைனல் ஸ்டேட்மெண்ட்" என்று அந்த பேச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

சிறிது இடைவெளிவிட்டு.... அவனைநோக்கி "அர்ஜுன் நான் போய்டுறேன் " என்றாள்.

அவளால் அவளுடைய வீட்டிற்கு கூட செல்ல முடியாது நிலை. ஏனென்றால் இவள் வளர்ப்பு மகள்.

இப்போ அவளது வீட்டிற்கு சென்றாலும் நன்றாக பார்த்துக்கொள்வார்கள், அவர்களுக்கு பாரமாக இருக்க அவளுக்கு விருப்பம் இல்லை.

இருந்தாலும் இத்தனை நாட்கள் அர்ஜுனுக்கு சிரமம் கொடுத்தது போதும் இனியும் வேண்டாம் என்று முடிவெடுத்தாள்.

வேறு ஏதாவது ஒரு வழி தான் யோசிக்க வேண்டும். இருவருக்கும் தூங்கா இரவானது..

அடுத்த நாள் காலையில்... சாரா அதிகமாக எந்தப் பொருட்களும் எடுத்து வரவில்லை இரண்டு செட் ஆடை மட்டும் எடுத்து வந்திருந்தாள் வைத்த அனைத்து ஆடைகளையும் அவள் பையில் நிரப்பிக் கொண்டு கிளம்ப ஆயத்தமானாள்.

லக்கேஜ் தூக்குற வேலை மிச்சம் அவசரக் கல்யாணம் அவளுக்கு அவளே பேசிக்கொண்டு சிரிக்கும் நிலையை என்னவென்று சொல்வது. ஒரு பெருமூச்சோடு வரவேற்பு அறையை அடைந்தாள்.

அத்தை நான் கிளம்புறேன் அவரை எனக்கு பிடிக்கவில்லை.

உங்க பையனுக்கு அதேமாதிரி விருப்பமில்லை இந்த திருமணத்தில். உங்க பையனுக்கு கல்யாணம் அகவில்லையென்று நினைத்து கொள்ளுங்கள்" என்றாள் மனதை கல்லாக்கி கொண்டு.

"அவருக்கு ஒரு நல்ல பெண்ணை பார்த்து கல்யாணம் செய்து வைங்க" சொல்லி முடிக்கும் முன்பு ஏதோ ஒன்று அவளது மனதையும் குரலையும் சேர்த்து அடைத்தது.

அர்ஜுனை ஒரு பார்வை பார்த்துவிட்டு வாசல் வரை சென்று திரும்பி அவனை ஒருமுறை ஆழ்ந்து பார்த்துவிட்டு சென்றாள்..

சாரி சாரி அர்ஜுன் தேங்க்யூ நான் உன்னை எப்பவும் மறக்க மாட்டேன் நான் உன்னோட மனைவி..... அப்படி என்ற உரிமையில் நான் இனிமேல் நடந்துகொள்ள மாட்டேன் நான் பேசியது தவறுதான் உன்னை நம்பாமல் விட்டதும் கூட தவறு தான். அதற்காக நீ செய்தாது அனைத்தும் சரி என்று ஒருபோதும் ஆகிவிடாது என்பது போல இருந்தது அவளது பார்வை, அவள் கண்கள் ஆயிரம் மொழி பேசியது நீ மட்டும் தான் என்று நினைத்தேன்.

என்னை ஏன் பாதியிலே.... திரும்ப ஒரு அடிப்பட்ட பார்வை பார்த்துவிட்டு கிளம்பினாள்.

'நான் தொலைந்தாலும் உனக்கு கவலை இருக்காது....'

இவ்வாறு யோசித்துக்கொண்டே நடந்து சென்றாள் பேருந்து நிலையத்தை நோக்கி.

அவள் கிளம்பிய சிறிது நேரத்தில் இவனும் தயாராகி அவனின் அலுவலகத்துக்கு சென்றான். அவன் அங்கு வந்து பார்த்தது என்னவோ சாராவை தான்.

'இவள் இங்கே என்ன செய்துகொண்டு இருக்கா..'

அவளோ அவன் வந்ததைக் கூட கவனிக்காமல் கால் மேல் கால் போட்டு சுழற் நாற்காலியில் சுற்றிக் விளையாடி கொண்டு இருந்தாள்.

வழியில் இருந்த நிம்மதியை இவள் பார்த்ததும் எங்கோ தூரம் பயணித்து சென்றுவிட்டது.

ஜீரணிக்க முடியவில்லை..... கையில் வைத்திருந்த கார் சாவியை அவள் மீது தூக்கி எறிந்தான்.

இது ரெண்டும் திருந்த போறதெல்லாம் திருப்பி அடிச்சுக்க போறாங்க...

நெக்ஸ்ட் சண்டை பார்க்க யார் யாரெல்லாம் வரீங்க....?
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
7

"இங்க எதுக்கு சாரா வந்து இருக்க.. அங்க நடிச்சுட்டு இங்க வந்து டிராமா செய்கிறாயா?" என்ற குரல் வந்த திசையை நோக்கினாள்.

"எக்ஸாக்ட்லி ஒரு பொண்டாட்டிய நான் எதுவும் செய்ய மாட்டேன் மாட்டேன் ஆன இங்க உன்னுடைய அசிஸ்டன்ட் ஆ நான் எது வேண்டுமெனாலும் செய்வேன்" என்றாள் குறும்பு மின்ன...

"இதற்கு முன்பு நீ செய்த அனைத்தும் செய்வேன்..." அவனை வெறுப்பேற்றும் குரலில் அவள் கூறினாள்.

இதுக்கு முன்னாடி நீங்க என்னை என்னவெல்லாம் செய்திர்கள் என்று நினைவு இருக்கிறதா.... அது அனைத்தும் நானும் இனி செய்வதன் நோக்கோடு உன்னை தேடிவந்துவிட்டேன் மை டியர் "சுகர் லிப்ஸ்".

"என்னது சுகர் லிப்ஸ்?" புரியாமல் அர்ஜுன் சாராவை நோக்கினான்.

சாரா அவனை நெருங்கி நின்றவாறு அவனது இதழ்களை சுட்டிக்காட்டி... "இதற்கு நான் வைத்த செல்ல பெயர் என்றாள் மயக்கும் குரலில்.

சாரா சொன்ன மறு நொடி அவளை விட்டு விலகி நின்றான் அர்ஜுன்.

"இந்த செல்ல பெயர் வைத்து கூப்பிடுவதற்கு இனி நீ இங்கு இருந்தால்தானே" என்றான் நக்கலாக.

"இப்போ உன்னுடைய வேலையை காலி செய்கிறேன் பார்...உன்னை இப்போது என்னால் தூக்கி போட முடியும்.."

அவளிடம் இருந்த நகளை எடுத்து காண்பித்தாள்... "நானும் வேலையை விட்டு போகமுடியாது நீங்களும் எனன்னை போக வைக்க முடியாது... "அனைத்தும் தாங்கள் செய்த வேலை என்னவரே" என்று நக்கல் குரலில் அவனை வெறுப்பேற்றினாள்.

அவன் செய்தது அவனுக்கே திருப்பி அடித்தது...

அந்த அகிரிமெண்ட்... அவனாக நினைத்தாலும் அவளை வேலையை விட்டு அனுப்ப முடியாது என்பதாகும்...

ஆரம்பத்தில் அர்ஜுன் செய்த டார்ச்சர் தாங்காமல் வேலையை விட்டு செல்ல இருந்தாள்....சாரா,

அதற்கு அர்ஜுன் அவளிடத்தில் ஏமாற்றி கையெழுத்து வாங்கிவிட்டான். அதில் இரண்டு வருடங்கள் அவளாகவோ அல்லது அவனாகவோ எந்த காரணத்தை கொண்டும் வேலையைவிட்டு நீங்க முடியாது என்று குறிப்பிட்டு இருந்தான்.

...ஒரு :வாரம் தான் முடிந்தது ஆனால் இன்னும் இரண்டு வருடம் பாக்கி இருந்தது. தான் செய்த செயல் திருப்பி அர்ஜுனுக்கு அடிக்கும் என்று அவன் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

இது மேல் கோபம் வந்து அந்த அகிரேமெண்ட் கிழித்து எறிந்தான்...

அவளோ சளைக்காமல் "என்னிடம் நிறைய காப்பி இருக்கிறது" என்று இன்னோரு நகலை அவனது மெயில்... வாட்சப்.. டெலெக்ராம்... என்று அணைத்து சோசியல் மீடியாவில் அவனுக்கு அனுப்பி வைத்தாய்... கூறி அவனை வெறுப்பேற்றுவதில் குறியாக இருந்தாள் சாரா.

"ரித்திகா..." என்று அர்ஜுன் அழைத்த அழைப்பில் பதறி அடித்து வந்தாள், 24 வயதாகும் அவனின் காரியதரிசி.

"அர்ஜுன் என்னாச்சு எதுக்கு இவ்ளோ சத்தம் போட்டா காது வலிக்குதுடா"என்று அவனை திட்டிகொண்டே அருகில் வந்தாள்.

"என்ன சாரா லீவ் சொல்லாம எங்கே போன எனக்கு பொழுதே போகவில்லை நீ இல்லாமல்" என்றாள் வருத்தமாக.

இவன் அடுப்பில் இருக்கும் கடுப்பு தெரியாமல் சாரா விடம் பேசிக்கொண்டு இருந்தாள் ரித்திகா.

"இந்த பொம்பளையை வெளிய போக சொல்லு ....அர்ஜுன் ஆக்ரோஷமாக கர்ஜித்தான்.

"என்னடா பொம்பளைய!!!" ரித்தி அதிர்ச்சியாக அர்ஜுனை பார்த்தாள்.

"நான்... பேபி தங்கம் சுகர் லிப்ஸ்" என்று கொஞ்சிவிட்டு இப்போ இவ்வாறு அழைப்பது நல்லது இல்லை என்று ஆக்ரோஷத்தில் சாரா அர்ஜுனிற்கு சளைக்காமல் சண்டையை தொடங்கினாள்.

இந்த முறை முறைபது ரித்திகா....

'இதுங்களுகு இதே வேலையா போச்சு',

"அர்ஜுன் என்ன ஆச்சு கேட்டுட்டே சாராவை" ஒரு பார்வை பார்த்தாள்.

எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் இருந்தது அவளின் பார்வை.

"அர்ஜுன் என்ன ஆச்சு லவ் பேர்ட்ஸ்க்கு சண்டை இப்போ ஒடைய போறது என் மண்டை...... " அவளின் கோர்வையான வாக்கியத்தை ரசிக்கும் நிலையில் இவர்கள் இல்லை.....

' என்ன இந்த நேரத்துக்கு சிரிச்சி இருக்கணும் அப்போ விசயம் பெரியது போல. என் தலை உருளுது நான் தப்பிக்க வேண்டும்'.

அங்கு ஒரு மாணவன் வந்து

"குட்டி பாப்பா அங்கு ஓடி கொண்டு இருக்கு மேடம் பிடிக்கவே முடியல என்னை கடித்துவிட்டாள்".

'அந்த ராட்சசியை சமாளிக்கவே முடியல அப்படியே அப்பன் புத்தி'.

குழந்தையை திட்டும் நோக்கில் அவளது மணவாளனை திட்டியவாறு.

"அர்ஜூன் நான் அவளைப் பார்க்கிறேன் கிளாஸ் ஸ்டாப் பண்ணிட்டுவா அழுது ஆர்ப்பாட்டம் செய்து .....நான் சென்று துக்கிட்டு வரேன்."

அர்ஜுன் மெல்லிய புன்னகையோடு "அவளுக்கு அனைவரையும் தொந்தரவு செய்வதை விட என்ன வேலை ...." அப்படியே அவளின் தந்தையை போல என்று முணுமுணுத்தான்.

ரித்திகா பின் இரண்டு வயதான தாராவை தூக்கிக் கொண்டு வரவும்.

அர்ஜூனை பார்த்ததும் தாவி கொண்டு அஜு அஜூ கத்திக் கொண்டு அவனின் கழுத்தை கட்டிக்கொண்டு ...இடைவிடாது கன்னத்தில் முத்தமழை பொழிந்தாள் அந்த ரோஜமோட்டு.

இது அனைதும் ரகசிய கேமரா வழியாக பார்த்துகொண்டு இருந்த ஒருவன்... வஞ்சத்தை தண்ணீர் ஊற்றி வளர்த்துக்கொண்டு இருந்தான்...அர்ஜுன் மீது.

"இப்போ சொல்லுங்கள் உங்களுக்கு என்ன தலை போகிற பிரச்சினை" ரித்திகா வினவ.

ரித்திகா கொஞ்சம் பொறுமையாக இரு சொல்லி முடிக்கும் வரை இடையே பேசாதே அர்ஜுன் அவளுக்கு ஆணையிட...

அவளும் பொறுமையாக கவனிக்க தொடங்கினாள்.

"இவளை நான் ஏமாற்றி கல்யாணம் செய்துகொண்டேன் அதனால் மேடம் என்னை விட்டுவிடு போகிறாள்,

அவளுக்கு விவாகரத்து வேண்டுமாம் நடந்ததில் கொஞ்சம் சேர்த்து சொன்னான்.' உனக்கு மட்டும் தான் சேர்த்துச் சொல்ல தெரியுமா எனக்கும் தெரியும் ' என்பதுப் போல சாராவை பார்த்தான் அர்ஜுன்.

"அடிப்பாவி இது எப்ப நடந்தது

கல்யாணமே பண்ணிட்டாங்களா சொல்லாம கொள்ளாமல் சூப்பர்டா சாரா செம தூள்".

ஆன எதுக்கு விவாகரத்து... இதுங்க எப்போ எனக்கு புரிவது போல பேசாதுங்க ரித்திகா அவளுக்குள் பேசிக்கொள்ள.

ரிதிகா விடம் எப்படி பந்து எரியவெண்டும் என்று அர்ஜுனுக்கு தெரியும்.

தன் பக்கம் அவளை வைத்து கொள்வது அவனுக்கு பலம் என்பது அர்ஜுனுக்கு தெரியும்.

உண்மையை திரித்து அவளிடம் கூறிவிட. அதையும் நம்பினாள்... அப்பாவி ரித்திகா.

சாரா இணைந்த உடன் பிரிந்து செல்ல நினைக்கிறாள் என்று புரிந்து கொண்டாள்.

"என்ன சாரா இதெல்லாம்.. இடியட் ஒழுங்கா வாழ பாருங்கஅவளோ இடைவிடாது சாரா வை திட்டிக்கொண்டு ...இருக்க,

'அவன் எது சொன்னாலும் நம்பி என் உயிரை வாங்குகிறாள் இவள் வேறு என்று சாரா ரித்திகா மீது கடுப்பானாள்'.

"குட்டிமா வா நாம போலாம் மாமாவும் மாமியும் சமாதானம் ஆகட்டும்."

குட்டி அவன் கழுத்தை இருக்கமாக கட்டிக்கொண்டு விடவே இல்லை.

ரித்திகா எவ்வளவோ முயற்சி செய்தும் அவளை அவனிடமிருந்து பிரிக்க முடியவில்லை.

சாரா வை முறைத்து பார்க்குது அந்த குட்டி வண்டு. குட்டி கண்களை வைத்து முறைக்க...

அவள் அர்ஜுனிடம் குரலை உயர்த்தவும்.

குட்டி சாராவை ஒரு விரல் நீட்டி "ஏய்ய்ய்ய்ய்...." என்று மிரட்டினாள்.

இவளுக்கு எகிறிவிட்டது கோபம் அந்த குட்டி வண்டு மீது.

என்ன வாழ்க்கை என்று ஆகிவிட்டது நேத்து முளைத்த வண்டு என்னை முறைக்கிறது கொஞ்சியாவாரு சாரா அவளை மிரட்ட...

இவனோட ஜெராக்ஸ் மாதிரியே இருக்கு சாராவின் பார்வைக்கு.

"குட்டி பிசாசு உனக்கு ஒரு நாள் இருக்கு அப்போ ஒரு கை பார்கிறேன் டி" அந்த குழந்தையிடம் குழந்தையாக சண்டைக்கு நின்றாள்.

அர்ஜுனோ " என்ன நீ என் குழந்தையை சத்தம் போட்டு பேசுகிறாய்... தூக்கி அடிச்சிடுவேன் பார்த்துக்கோ".

அவன் சொல்லி முடிப்பதற்குள்

தாராவின் கையிலிருந்த பீடிங் பாட்டில் அவள் கன்னத்தை நன்கு பதம் பார்த்தது.

'என்னதான் இருந்தாலும் நம்மாளுக்கு நம்ம மேல பாசம் ஜாஸ்தி தான்' எனக்கு அடி பட்டுவிட்டது என்று ஓடிவரும் அவனை பார்த்தாள்.

அர்ஜுன் சாராவை நெருங்கிவர சாரவிற்கோ ரெக்கை கட்டி மனது பறக்க...

'என் மேல உனக்கு அவ்வளவு லவ்வா அர்ஜுன்' நினைத்து முடிக்கும் முன்பு.

தள்ளிப்போய் விழுந்த பீடிங் பாட்டிலை எடுத்து அர்ஜுனை பார்த்து வைத்தாள் சாரா இவனை வெட்டவா....குத்தவா என்று பார்த்தாள்.

அர்ஜுன பார்த்து ஃபீடிங் பாட்டில் கை காமிச்சு அழுக ஆரம்பிக்கவும்.

பாவம் இவளுக்கு தெரியவில்லை அவன் சமாதானம் படுத்த போறது குட்டியை என்று.

இந்தமுறை ஏமாந்தது சாரா... இவனை கொல்லாமல் விட கூடாது மனதில் அர்ச்சனை செய்ய ஆரம்பித்தாள்.

அர்ஜுன் அவனை தாண்டி சென்று பாப்பாவின் பீடிங் பாட்டிலை எடுத்து.

அழுதுகொண்டிருந்த தாராவின் கையில் திணித்தான். விசும்பல் குறைந்தது. அவளை தட்டி சமாதானம் செய்ய முயற்சி செய்துகொண்டே....அவளோ அவனை முறைத்தாள்.

'அடப்பாவி என்னடா இப்படி பண்றீங்க இரண்டு பேரும் அடி விழுந்தது எனக்கு ஆனால் கொஞ்சுவது அவளை.....'

அந்த குழந்தை மீது பொறாமை அவளுக்கு வரதன்செய்தது.

தரவோ அவனுக்கு உதவிய அர்ஜுன் கன்னத்தில் அன்புகொடுக்க தொடங்கினாள் கன்னத்தில் மாற்றி மாற்றி முத்தம் குடுத்துகொண்டு இருந்தாள்.

இவனோ ஆசையாக இன்னும் வேண்டும் என்பதுபோல கன்னத்தை மாற்றி மாற்றி கண்பித்துகொண்டு இருந்தான்.

ரித்திகா அந்த இருவரும் செய்யலை மெய்மறந்து ரசித்துக்கொண்டு கேமராவில் வீடியோ பதிவு செய்துகொண்டு இருந்தாள்...

எனக்கு உரிமையான பொருளை பிரித்து எடுத்த உன்னை நிம்மதியாக விடமாட்டேன் என்று கருவிகொண்டு இருந்தது இதை பார்த்துகொண்டு இருந்த வேறு ஒரு முகம்.

எனக்கு வலிக்குது யாராவது ஒருத்தராவது இருக்கிறார்களா இந்த இடத்தில புலம்பிக் கொண்டு இருக்க அவளை யாரும் இப்போது கண்டுகொள்ள தயாராக இல்லை என்பதை புரிந்து கொண்டு... இந்தமுறை அழுக சாரா தயாராகி நின்றாள்.

"வா வா மம்மிட்ட வா அங்கிள் வேலை பார்க்கட்டும்".

பாப்பா ரித்திகாவிடம் தவினாள்.

அர்ஜுனை பார்த்துட்டு பாய் பாய் பாய் கையசைத்து கொண்டே சென்றார்கள் இருவரும்.

சாராவை பாத்துட்டே "இவங்க இரண்டு நம் மண்டையில் கொளுத்திவிட்டு வாங்க நாம எஸ்கேப் ஆகிவிடுவோம்" வாங்கியவாரு பாபாவிடம் கூறிக்கொண்டே சென்றுவிட்டாள் ரித்திகா.

"இந்த இடத்தை விட்டு கிளம்பு சரோஜா".

வேனா அர்ஜுன் சரோஜா சொல்லாத எனக்கு கோபம் வரும்.

"சரோஜா கூப்பிடாதடா கால் மீ சாரா.... " என அர்ஜுனை முறைக்க.

" என்னது சாராவா ஐ ரிமெம்பர் உன்னோட சர்டிபிகேட் பெயர் சரோஜா என்று இருந்தது".

"நோ அர்ஜுன் எனக்கு கோபம் வரும் அப்படி கூப்பிடாதே எனக்கு அந்த பெயர் பிடிக்காது".

"உனக்கு பிடிச்சா என்ன பிடிக்காட்டி என்ன..." எனக்கு என்ன உன்னோட நேம் என்னவோ அதை தான் கூப்பிடுறேன்.

நீ இங்க இருந்து கிளம்பு... காத்துவரட்டும்.

"முடியாதுடா சாரா சொல்லு அப்பதான் நான் போவேன்" என்றாள் பிடிவாதமாக.

"உனக்கு சாராவை விட சரோஜா பெயர் சூப்பரா இருக்கு " என்று அர்ஜுன் கூறினான் மயக்கும் குரலில் ...

"ஆனா ஒன்னு உனக்கு பெயர் வைத்தவர்களுக்கு... கோவில் கட்டி கும்பிடனும்".

"உனக்கு சரோஜா விட சொர்ணா அக்கா னு பேரு வச்சா இன்னும் சூப்பரா இருக்கும்" என்று கூறி பெருங்குரலில் சிரித்தான்.

"அடிச்சிடுவேன் டா அப்படி கூப்பிடாதே" அர்ஜுனை அடிக்க கை ஒங்க...

"என்னையே அடிப்பயா வந்த அடிச்சு பாரு". என்று அர்ஜுன் சாராவிடம் மல்லுக்கு நின்றான்.

"நேத்து வாங்கினா அடி எல்லாம் பத்தலையா"அர்ஜுன் அவளது கன்னங்களை பார்த்தவாறு வினவினான்.

"எனக்கு கீழ் வேலை செய்யும் நீ என் பெயர் சொல்லி அழைக்க யார் உனக்கு அனுமதி குடுத்தது?" என்றான்.

"சரோஜா அப்படி கூப்பிடாதீங்க சரோஜா குப்பிடுங்க". பதற்றத்தில் அவளே அவனுக்கு எத்தவாரு தவறுதலாக மாற்றி கூறிவிட்டாள்...

"ஹாஹா நீயே சொல்லிவிட்டாய் இனி அப்படியே அழைத்துத்துவிடலம்" என்றான் நக்கலாக.

"சார் நான் எதோ மத்தி சொல்லிட்டேன்" என்றாள் அப்பாவி முகத்தை வைத்துக்கொண்டு.

"சரி இனி அப்படி சொல்லல"அர்ஜுன் குரலைமாற்றி பேசினான்.

,"சரி இங்க வா சொர்ணாக்கா....."

அவளின் கோபத்தை எத்திவிட ....அடுத்த ஆயுதத்தை எடுத்தான்.

"நான் உனக்கு அக்கவாடா.... ''என்று

இவள் கையில் வைத்திருந்த கிளிப்பை தூக்கி மூஞ்சியில் அடித்தாள்.

இந்த பாப்பா இவளை பார்த்து தான் தூக்கி எறிஞ்சி இருக்கும் டார்கெட் சரியாக அடித்தது.

அவளின் ஹேர்க்கிளிப் அவனின் கண்ணின் ஓரத்தில் பட்டதும் அலறிவிட்டான்.

வேகமாக எழுந்த அர்ஜுன் அவள் கழுத்தை அக்ரோசமாக ஒற்றைகையல் பிடித்தான். வலி பொறுக்காமல் சாரா திணறினாள்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
8

அவன் கண்கள் உருத்த...

"கண்கள் தான் முதலில் பார்க்கணும்.. "அவள் கழுத்தை பிடிப்பதை நிறுத்திவிட்டு கண்கள் தேய்த்தவாறு அப்படியே அமர்ந்தான்.

"அர்ஜுன் சாரி ரொம்ப வலிக்குதா பேபி, இங்க பாரு நான் ஊதிவிட்ட சரியா போய்டும்" சாரா இரும்பியவாறு அவனை சமாதானப் படுத்த முயற்சி செய்தாள்.

சாராவின் கையை விலகிவிட்டு தண்ணீர் பாட்டிலை அவள் புறம் நகர்த்தி வைத்தான், அவள் இரும்பிக்கொண்டு இருப்பதை பார்த்து.

சாரா சற்று நெகிழ்ந்து தான் போனாள்...அவளின் மீது உள்ள பாசத்தில், அவளும் அவனை பார்த்தவாறு தண்ணீர் குடித்துவிட்டு.

"இங்க பாரு அர்ஜுன் மொத்தமா கோபம் படாத, முதலில் கண்களை பார்ப்போம் அதுக்கு அப்புறம் நமது சண்டையை வச்சிக்கலாம் ".

"ஒரு முறை சென்னால் உனக்கு புரியாத... கேட் லாஸ்ட்.... " சாரா திரும்ப அவன் முகத்தை கைகளால் தாங்கி.... அவன் கண்களை ஆராய்ந்து பார்த்தாள்.

"தொடாதே... சொன்னேன்..." என்று அவள் கைகளை விலகினான்.

அவன் அலுவலக அறையில் அவனுக்கான ஒரு பெரிய அறை அமைத்திருந்தான், தாராளமாக ஒரு குடும்பம் அங்கு வசிக்கலாம்.

முகத்தை கழுவிவிட்டு.... அவன் கண்களை கண்ணாடியில் ஆராய்ந்து கொண்டு இருந்தான் அர்ஜுன், வழக்கத்தை விட சற்று கூடுதல் சிவப்பாக மாறி இருந்தது.

அவளோ அவன் அருகில் வந்து நின்று "வா நாம் டாக்டர்ட போலாமா? " என்று கையை கைபிடித்து இழுத்தாள் சாரா

அர்ஜுன் கோவமாக "சரோ வெளிய போ....." சரோ என்ற அழைப்பில் துவண்டாள்.

அன்பு மற்றும் கோபத்தின் வெளிப்பாடாக அர்ஜுன் உபயோகிக்கும் வார்த்தை,

அந்த "சரோ" என்ற அழைப்பு, அர்ஜுன் அவளை சிண்டும் போது வராத மனவருத்தம், இப்போ அவளின் இதயத்தை பிசைந்தது.

சாராவின் கண்களில் தானாக கண்ணீர் கசிந்தது அதனை கட்டுப்படுத்திக்கொண்டு.

கண்களை துடைத்தபடி.....

"ஒருநாள் சிரித்தேன்... மறுநாள் வெறுத்தேன் உன்னை நான் கொல்லாமல் கொன்றுபுதைத்தேனே.... மன்னிப்பாயா.."என்று அவனை பார்த்து பாட தொடங்கினாள் கரகரப்பான குரலில்.

கைகளால் அவளை நிறுத்த சொல்லிவிட்டான்.

"அர்ஜுன் அது வந்து...." சாரா கொஞ்சம் பேச தடுமாறினாள்.

ஆசையாக எப்போது பாட சொன்ன பாடலை இந்த சூழ்நிலையில் பாடிய சாராவை பார்த்து வெறுத்துப்போனான்.

"அர்ஜுன்..."

"பெயர் சொல்லி கூப்பிடாதே ".

"மன்னித்துவிடு..." என்று சாரா கண்களால் அர்ஜுனை யாசித்தாள்.

அர்ஜுன் கண்கள் நிறம் மாறிவிட்டது ...."இங்க பாரு முன்பை விட சிவப்பா மாறிடுச்சு டாக்டரிடம் போலாம்...பிளீஸ் புரிஞ்சிக்க மாமா ".

சொல்வதை புரிந்து கொல்லாமல் இருக்கும் இவனிடம் பேசி எந்த பலனும் இல்லை என்று அதிரடியில் இறங்கினாள்.

அவன் மடி மீது அமர்ந்து அர்ஜுன் கண்களை ஆராய்ச்சி செய்யதாள், பெரிதாக பாதிப்பு இல்லாதது போலத்தான் தோன்றியது அவளுக்கு.

அர்ஜுன் சுதாரிக்கும் முன் அவன்மீது அமர்ந்ததால் பேலன்ஸ் இல்லாமல் மெத்தையில் அவளோடு சாய்ந்தான்.

அவளோ அவன் மீது சாய்ந்தவாறு கண்களை வருடிக்கொண்டு இருந்தாள்.

அர்ஜுனுக்கு ஆச்சரியமாகி போனது இவளின் அருகாமையில், அவனது திமிர, கோபம் அனைத்தும் அடங்கிவிடுகிறததே சரியான 'மாயக்காரி ' என்று நினைத்தது அவளது செய்கையை கண்மூடி ரசித்துக்கொண்டு இருந்தான்... காதலோடு.

"அர்ஜுன் இப்போ சரியாகிவிட்டது... " கண்ணின் நிறமும் பழையபடி மாற தொடங்கிவிட்டது பழையபடி, உற்சாகமாக அவனின் கன்னத் தோடு கன்னம் வைத்து குழந்தையை சமாதானம் செய்வது போல பேசிகொண்டே இருந்தாள்.

'இவள் ஒரு பைத்தியக்காரி ....அதுமட்டும் இல்லாமல் என்னையும் பைத்தியம் ஆக்கிவிடுவாள்'. என்ற என்னம் அர்ஜுனுக்கு தோன்றத்தான் செய்தது.

" போதும் உனது முத்த வைத்தியம், மேலே இருந்து எந்திரி" அர்ஜுன் எரிஞ்சு விழுந்தான்.

அர்ஜுன் சொன்ன வார்த்தையை கேட்டு, வெட்கம் அவளை தின்றது.... அவனது கண்களை வருடிவிடும் போது இடையில் அவன் கண்களுக்கு முத்தங்களும் கொடுத்தது நினைவில் வர...அவனின் மார்பில் தஞ்சம் புகுந்தாள் வெட்கத்தோடு...

இந்த நெருக்கம் அவளுக்கு புதியது இல்லை...அனால் அவளாக அர்ஜுனை நெருங்கியது இதுவே முதல்முறை...

"அறிவு இல்லையா எந்திரி என் மேல இருந்து".

"மாமா ஷல் வீ் கிஸ்..."

"வாட்!! இவளுக்கு இப்படி எல்லாம் பேச கூட தெரியுமா? அதிர்ச்சி அடைந்தான் அர்ஜுன்.

"நான் கேட்கும்போது கிடைக்காத எதும் என்னிடம் இருந்து உனக்கு கிடைக்காது எப்போதும் " அவளை வேறுபுறம் நகர்த்தி விட்டு, அவன் வேலையை பார்க்க சென்றுவிட்டான்.

அவள் பேசிய வார்த்தையின் விரியம் தெரிய சிறிது நேரம் பிடித்தது சாராவிற்கு.

"சும்மாவே என் மேல நல்ல என்னம் அவனுக்கு, இப்போ இதுவும் அவன் கணக்கில் சேர்ந்து விட்டதே". அதுவா எங்க சேர்ந்தது நீ செய்தது என்று கிண்டல் செய்தது அவளது உள்ளம்.

நீ கொஞ்சம் நிறுத்து... என் புருசன்... நான் கேட்பேன் உனக்கு என்ன? சும்மா அமைதியா இரு இல்ல கிளம்பு அவளது மனசாட்சி விரட்டினாள்.

அவளுடைய எக்சர்சைஸ் கிளாஸ் அவன் எடுக்க சென்றுவிட்டான் .

இசைக்கு ஏற்ப அவன் கை கால்களை அசைது மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கும் அவன் அழகில் சொக்கித் தான் போனாள் சாரா.

"கிளாஸ் ஓவர்... டான்ஸ் ரூம் போங்க அங்க ஸ்டாப் இருப்பாங்க" என மாணவர்களை அனுப்பிவைத்தான்.

"ஓகே சார்.... " மாணவர்கள் அவர்களது உடைமைகளை எடுத்துகொண்டு அகன்றார்கள்...

அதில் ஒரு மாணவி 12 வகுப்பு படிக்கும் பெண் போல தெரிந்தாள்.

"வாவ் செம ஹார்ம்ஸ் ஒன்ஸ் டச் செஞ்சி பார்கவா சார் "ஆர்வமாக அந்த மாணவி அர்ஜுனிடம் கேட்டாள்.

அந்த பெண்ணிடம் "இல்லை" என்று கூற வரும் வேலையில், அங்கு சாரா வருவதை பார்த்ததும் இவளை கொஞ்சம் வெறுப்பேற்ற தயாரானான்...

"ஓகே பேபி...."என்றான் அர்ஜுன் சாராவிற்கு கேட்க அளவு சிறிது சத்தமாக..

'எனன்னது பேபி ஆ!!!!! அடே என்ன பேபி கூப்பிட்டுட்டு இப்போ இவளை கூப்பிடுகிறாயா ' கோபத்தோடு அர்ஜுனை முறைத்தாள்.

"உன்னை விடமாட்டேன் டா இன்று. அந்த வாய் தானே சொன்னது சூடு வைக்கிறேன் இரு..." என்று கருவினாள்.

அவனோ அந்த பெண்ணிடம் பேச்சை வளர்த்துக்கொண்டு இருந்தான்.அவளை வெறுப்பேற்ற தான் பேசுகிறான் என்று தெரிந்தும்... அதை ஏற்க தான் முடியவில்லை.

சரிதான் போடி.. என்பதுபோல அவளை அலட்சிய பார்வை பார்த்து,

அவளை கண்களால் செய்கை செய்து "ஜோடி பொருத்தம் சரியா" என்று சாராவிடம் கேட்டான்.

"சரி கிளாஸ் நேரம் ஆச்சி.. நீ கிளம்பு".என்றான் அர்ஜுன் அந்த சிறு பெண்ணிடம்.

இவன் அவளிடம் பேசுவதை பார்த்து இனி நான் உன்னிடம் வரமாட்டேன் அவளிடமே போ... என்ற தோரணையில் அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

"லூக் பேபி .... இனி இப்படி பண்ணாதே... ஓகே வா, அங்கு சாரா மிஸ் இருந்தாங்க அதன் உன்னை ஹர்ட் பண்ண வேண்டாம் என்று ஏதும் சொல்லல ".

"சார் எனக்கு என்ன தோணுச்சோ அதுதான் சொன்னேன்...." தன்னிலை விளக்கம் கொடுதாள்.

"போ கிளாஸ்க்கு நேரம் ஆச்சி..."

"சாரி சார்.."

கோவமாக சென்ற சாரா திரும்பி அர்ஜுனை நோக்கி வந்தாள்.

அவள் பார்த்த காட்சி என்னவோ, அந்த பெண்ணை அழைத்து செல்லும் அர்ஜுனை தான்.

அவளை கொண்டு சென்று வகுப்பிற்கு விட்டது மட்டும் இல்லாமல், ஒருமணிநேரம்... அந்த வகுப்பில் நின்றுகொண்டு அந்த பெண்ணிற்கு...நடன வளைவுகள் சொல்லிக் கொடுத்து கொண்டு இருந்த காதலன் மீது ஆத்திரம் பொங்கியது..

அவன் செல்லும் அணைத்து இடங்களுக்கும் சாரா பின்னாடி சுற்றி திரிந்தாள். பொறுமை இழந்தவன்..

"ஒழுங்காக வேலை செய்யாமல், சும்மா சம்பளம் கொடுக்க உன்னுடைய இடமா இது?" என்று அங்கும் இங்கும் சும்மா திரிந்து கொண்டு இருக்கும் சாராவை அழைத்து திட்டினான்.

"போ வேலையை பார்... அவளை ஒருவழியாக துரத்தினான்".

சிறுது நேரம் அர்ஜுன் எங்கோ சென்று விட்டு வந்தான்...இவள் அவனை அடிக்க தயாரகிக் கொண்டு இருந்தாள்...

"எப்படி அவன் என்னை நிராகரிக்கலாம், அவன் வரட்டும் இன்று இந்த சாரா எவ்ளோ பெரிய ரவுடி என்று அவனுக்கு தெரிய வேண்டும்.."
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
9

"என் பின்னாடி எப்படிஅலைந்து திரிந்து... இப்போ வேற பொண்ணுகூட....."

போன வாரம் வேற கல்யாணம் பண்ணைப்பாத்தான், இன்னைக்கு வேற ஒரு பொண்ணு கூட சூத்ரன், என்னை என்ன பொம்மை என்று நினைச்சி இருக்கான். இன்று உன்னை அடிக்கற அடிலே சும்மா கூட யாரையும் பார்க்க கூடாது.. படத்துல கூட ஹீரோயின் பார்க்க கூடாது" என்று சபதம் எடுத்தாள்.

அவன் வருவான் என்று வெகுநேரம் பார்த்துகொண்டு இருந்தாள் சாரா, அவனோ பொறுமையாக ஆடி அசைந்து ஒருமணி நேரம் தாழ்த்தி வந்தான்.

"நீங்கள் செய்வது கொஞ்சம் கூட எனக்கு பிடிக்கல..." சாரா அர்ஜுன் வந்ததும் பொரிந்து தள்ளினாள்.

"அதற்கு? " என்றான் அர்ஜுன் சாதாரணமாக.

"இனி இப்படி செய்யாதே.. யாரிடமும் பேசாதே முக்கியமாக அந்த பொண்ணுகூட..." என ஆணையிடும் தோரணையில்.

"அது என்னுடைய இஷ்டம் அதை கேட்க நீ யார்?" என்றான் அர்ஜுன்.

இப்படி பேசும் அவனிடம் எது பேசியும் பிரயோஜனம் இல்லை என்று நினைத்து, அர்ஜுனை முறைத்தவாறு அவள் வகுப்புக்கு சென்றாள்.

அவளின் எண்ண அலைகளில் சிக்கி தவித்தாள், ஒருவழியாக வகுப்பை முடித்து, அவளின் அலுவலக அறைக்கு வந்தாள்....

அர்ஜுன் அவளை எதிர் புறம் பார்த்தவாறு அமர்ந்து இருந்தான்.

அவன் முதுகை வெரிக்க பார்த்து கொண்டு இருந்தாள் கோபத்தோடு.

ஏதோ குறுகுறுப்பு ஏற்பட...வேகமாக திரும்பி பார்த்தான் அர்ஜுன்.

என்ன என்பது போல புருவம் உயர்த்த.... அவளையும் மிறி அவனை நோக்கி நடந்தாள்.... அவன் புருவ வெட்டுதளும்பை வருட.... இதுவும் சாராவால் ஏற்படது தான்.

அன்று தான் சாரா புரிந்துகொண்டாள் "விளையாட்டு வினையாகும்" என்று,

அவளோ தூக்கி எரிவதில் கை தேர்ந்தவள் ... ஸ்டீல் ஸ்கேல் தூக்கி போட்டு விளையாடி கொண்டிருந்தாள், அதை கவனிக்காமல் அந்த பக்கம் சாராவை ரசித்தவாறு வந்தவனுக்கு, அந்த ஸ்டீல்ஸ்கேல் புருவத்தை நன்கு பதம் பார்த்தது.

"அப்போ ரொம்ப வலிய இருந்ததா, இரத்தம் கூட அதிகமா வந்தது..." அன்று நடந்ததை எண்ணி இப்போது வருந்தினாள்.

சாரா புருவத்தை பற்றியிருந்த கையை வேகமாக தட்டி விட்டான், 'செய்வது அனைத்தும் செய்துவிட்டு இப்போ என்ன இவளுக்கு கொஞ்சல் வேண்டிக்கிடக்கு'. என்று நினைத்தவன்.

"ஸ்டே யுவர் லிமிட் சாரா"என்று அவளை தள்ளி நிறுத்தினான்.

"விலகி விலகி போனவளின் மனதில் ஆசையை வளர்த்துவிட்டு, இப்போது நீ செய்வது சரி இல்லை அர்ஜுன் "

சாராவை..தினமும் சீண்டி விளையாட அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று.

அவன் எதிர்பார்த்த ஒன்று அவளாக அவனை நெருங்கிய நின்றவது பேசமாட்டாளா என்று எங்கிய நாட்கள் உண்டு. ஆனால் இப்போது? இவன் வேறு அர்ஜுன்.

'எனக்கு எதாவது நடந்தால் தான் உனது பாசம், அக்காரை கிடைக்குமா....? அது எனக்கு தேவை இல்லை எப்போதுமே' என்றான் கொஞ்சம் வருந்துகிறேன் நிறைய கோபத்தோடு.

"முன்னாடி என் புருவம் இப்போ என் கண்ணை குறிவைத்து இருகிறாய் சரிதானே..." வார்த்தையால் அவளை வதைத்தான்.

'அவள் மனமோ கனத்தது. என்னால் இவனுக்கு எப்போதும் ஆபத்து என்று கூறுகிறானா?'

சாராவை வார்த்தையால் வதக்கிவிட்டு... அவனது தனிப்பட்ட அறையில் நுழைந்தான் அர்ஜுன.

இரண்டு மணி அகிவிட்டது வகுப்பு முடியும் சமயம்... எந்த தொந்தரவும் இருக்காது, ஒரு பெருமூச்சோடு அவனது மெத்தையில் சரிந்தான்.

ஒரு ஆழ்ந்த தூக்கத்துக்கு சென்று வந்ததால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நினைப்பில் கண்களை மூடினான்...

அந்த பக்கம் சுற்றி திரிந்து இருந்த குட்டிப்பாப்பா. இவன் தூங்க செல்வதை பார்த்து ஒடி வந்து அவன் மேலே விழுந்தாள் .... "அஜூ அஜு" என்று அவன் மீது அமர்ந்து குதிரை ஓட்டினால் அவன் கழுத்தை பிடித்து கொண்டு.

அவள் எங்கே அவனை தூங்க விட்டாள்...அங்கு இங்கு கையை காட்டி... "அது என்ன இது என்ன?" கேட்ட கேள்வியையே திரும்ப திரும்ப கேட்டு.... அர்ஜுனை படுத்தி எடுத்தாள்....

"விடிய விடிய என்னை தூங்க விடாது இந்த ராட்சச பொம்மை" செல்லமாக கடிந்துகொண்டான்.

அவளை அணைத்தவாறு தட்டி தூங்க வைக்க முயற்சி செய்துகொண்டு இருந்தான், குட்டி தூங்காமல் அவனுக்கு கண்களை அவன் கழுத்தில் வைத்து சிமிட்டி சிமிட்டி கிச்சிக்கிச்சி மூட்டிக்கொண்டு இருந்தாள் அவளின் இமைகளால்.

அந்த குறுகுறுப்பில் அர்ஜுனன் தூங்க முடியவில்லை...இவளை தூங்க வைக்க வழிதெரியாமல் பாதி தூக்கத்தில் விழித்துக்கொண்டு இருந்தான்.

"குட்டிக்கு பாட்டு வேணுமா ? " என்றான்.

அர்ஜுன் வயிற்றின் மீது நன்கு ஏறி உட்கார்ந்து....கை தட்டி....சிரித்தாள் வேணும் என்பதுபோல,

"என்ன பாட்டு....வேணும் ?" ஒரு புருவத்தை உயர்த்தி கேட்க,

குட்டி அவன் கேட்ட அழகில் மயங்கிய... அந்த வெட்டு புருவத்தில் எட்டி ஒரு முத்தம் கொடுத்தாள்.

குட்டியின் செயல் சாராவை நினைவூட்ட... தலையை இருபக்கம் குலுக்கி மனதை சமன்செய்து...

" என் தங்கத்துக்கு என்ன பாட்டு வேணும் ".

இங்கு நடக்கும் அனைத்தும் கணினியில் பார்த்துக்கொண்டு இருந்தவன் வாய் தானாகவே முணுமுணுத்தது...

"ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்

அன்பென்னும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்பாஷைகள் எதுவும் தேவையில்லை" அங்கு ஒருவன் மெய்மறந்து பாடிக்கொண்டு இருந்தான்.

இங்கு அர்ஜுன் கேட்ட கேள்விக்கு தாரா அவளது குருவி வாயை குவித்து...

"பாப்பா பாட்டு..." என்று தன்னை சுட்டிக்காட்டி சொன்னாள்.

கண்களை மூடி... பாட துவங்கினான் இருவரை நினைத்து...

"பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு

தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு

வாயுரைக்க வருகுவதில்லை வாழிநின்றன் மேன்மை எல்லாம்

தூய சுடர் வானொலியே சூரையமுதே கண்ணம்மா...

வீணையடி நீ எனக்கு மேவும் விறல் நானுனக்கு

பூணும் வடம் நீ எனக்கு புது வைரம் நான் உனக்கு

காணுமிடந்தோறும் நின்றான் கண்ணினொளி வீசுதடி

மானுடைய பேரரசே வாழ்வு நிலையே கண்ணம்மா...

காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு

வேதமடி நீ எனக்கு விந்தையடி நான் உனக்கு

போதமுற்ற போதினிலே பொங்கிவரும் தீஞ்சுவையே

நாதவடிவானவளே நல்ல உயிரே கண்ணம்மா...."

அவனுக்கு பாட தொடங்கியதும் சிறிது நேரத்தில். தூக்கம் தாராவின் கண்களில் தெரிய ஆரம்பித்தது..

அவளை அவன் மார்பில் போட்டுகொண்டு தட்டி கொடுக்க ஆரம்பித்தான் அர்ஜுன்.

அந்த பிஞ்சி கைகள் அவனையும் தட்டி கொடுத்தாள். இதை பார்த்த அந்த உருவம் அந்த குட்டி பூவை எடுத்து அணைக்க கைகள் பரபரத்தது.

அவனின் பாடலுடன் சேர்த்து....அவனின் இதயத்தின் ரிதத்தை கேட்டுக்கொண்டு.....தூங்க அந்த மென்மையான பூவின் ஸ்பரிசத்தில் அவனுக்கு அழ்ந்த துக்கத்துக்கு கொண்டு சென்றது .

'கனவில்கூட உன்னை சுமந்தேன் . என்னை ஏன் நம்பவில்லை என்னவளே ........

நாம் பழகிய நாட்கள்.... மற்றும் நம் காதலை பொய்த்து போகவைத்து விட்டாயே ....."

மனது ஒருபுறம் கூவியது அவன் துங்கையில் கூட.

போதும் எந்திரிப்போம் ...... அவன் உடலை அசைக்க கூட முடியவில்லை .

'குட்டி இன்னும் தூங்கி கொண்டுதான் இருக்கிறாள் போல ' என்று சிறிது நேரம் கண்மூடி படுத்து இருந்தான், வரமான காலங்கள் குழந்தை பருவம்.....சிறிது நேரம் அவளை தட்டி கொடுக்க.... பாரம் எறிகொண்டே போக "பாப்...இல்லை இது...இவ்வளவு வெயிட் இல்லையே அவள் "

கண்களை வேகமாக திறந்து பாத்தான்.

சாராவின் மொத்த பாரமும் அவன் மேல ..... "வேலை நேரத்தில் எதுக்கு தூங்கிட்டு இருக்க இவள்... " என்று நேரத்தை பார்க்க, பேய்கள் அலையும் நேரம் ஆனது.

"ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல..."

இந்த இடியட் எதுக்கு இங்க படுத்து இருக்கா. ஒரு நிமிடம் அவளின் செய்கைகள் நினைத்து சிரித்தவன் மறுநோடியே சிரிப்பு மறைந்து கோபம் அவனை ஆட்கொண்டது .

"சாரா எந்திரி..." அவளின் வெண்ணிற கன்னத்தை வருட....

எழுப்புவது போல தெரியலையே ஹீரோ சார்..... என்றது அவனது மனசாட்சி.

"இந்த கொசு வேற எனக்கு கிஸ் கொடுக்குது... " என்று தூக்கத்தில் சிணுங்கியவாறு அவன் மீது இன்னும் வசதியாக படுத்து கொண்டாள் .

சிறிது நேரம் அவளை ரசித்தவாறு படுத்திருந்தவன். சிறிது நேரத்தில் பழைய நினைவுகள் மேலோங்க,

சற்று முன்பு இருந்த காதல் வானிலை மாறி.... கோபப்புயல் அவனது மனதை ஆட்கொண்டது.

புயல் வேகத்தில் அவளை.... படுக்கையில் இருந்து தள்ளிவிட்டு விட்டு விறுவிறுவென்று..... எழுந்து சென்றான்.

திடிரென்று விழுந்தவள் திடுக்கிட்டு கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய தொடங்கினாள்.

அந்த இடத்தை விட்டு போகும் முன்பு அர்ஜுன் காதில் சென்றடைந்தது அவளின் பிதற்றல்.

"இப்போ எதுக்கு ஆர்ப்பாட்டம் பன்ற வாயில கைவை...." என்று மிரட்டினான். எதுக்கு இந்த அழுகை கிழவிழுந்துள்ள பெருசா அடிபட்டு இருக்காது. இன்னும் ஒரு சொட்டு கண்ணிர் வந்தது நாலு அறைவிலும்.

மிரண்டவள் அழுது கொண்டே அவள் ரோஜா இதழின் அவளது வெண்டை விரலை வைக்க.

அவளை பார்த்து சொக்கித்தான் போனான் .

"காலைல நீ கேட்டதா நான் தரவா இப்போ" தன்னிலை மறந்து...

திருதிரு முழியோடு அவனை பார்த்தாள்.

பேச்சிக்கு இங்கு இடமில்லை.. அவளின் இதழை சிறைபிடித்தன்......அவளுக்கு மூச்சி முட்டும் வரை தொடர்ந்தது அந்த இதலனைப்பு.

சாரா முகமோ அழுகையில் சிவந்த முகம் இப்போது வெட்கத்தில் சிவந்து கிடந்தது... அந்த அணைப்பு முற்றுப்பெற்றதும் அவளைவிட்டு அவ்வறையை விட்டு நகர்ந்தான்..

விடியற் காலை முன்று மணி....

இதற்கு மேலே அவளுக்கு தூக்கம் வந்தாள் தானே..... சிறிது நேரம் முன்பு நடந்ததை, பலமுறை நினைத்து..... வெட்கப்பட்டு கொண்டு இருந்தாள் தூங்கா இரவானது.

அவனின் அன்னையோ அவனின் வருகைக்காக இரவு முழுவது வாசலை காவல் காத்து கொண்டு இருந்தார்.

"இப்போ என்ன டைம் எதுக்கு இவளோ லேட்டா ஆச்சி" கேள்வி மேல் கேள்வி கேட்க.... அணைத்து ஆத்திரமும் அண்ணைமேல் காண்பித்துவிட்டு.

"என்னால் தான் இவை அணைத்தும், நான் அவனுக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து வைத்து இருந்தால் அவனுக்கு நன்றாக இருந்து இருப்பான்..." நடந்த எதும் மாற்ற முடியாது ஆனால் இவர்களை சரிசெய்ய வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தார் அர்ஜுனின் அன்னை மீரா.

அவனின் அப்பாவி அன்னைக்கு தெரியவில்லை, என்னதான் திடீர் திருமணம் என்றாலும்.... அவனின் உயிர் காதலோடுதான் சேர்ந்துவைத்துள்ளார் என்று.
 
Top