ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் ரிதம்- கதை திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
10

அடுத்த நாள்

சரியாக தூங்காத காரணத்தால்... கண் எரிச்சலோடு எழுந்து..... பசி வேறு வயிற்றைக் வதைக்க....வேகமாக தயாராகி கீழே சென்றான் அர்ஜுன்.

இரவு உணவு வேறு சாப்பிடவில்லை, பசி பொறுக்காமல் உணவு மேஜையை ஆராய்ந்தான் ...எதும் இல்லை ?

கிட்சன் சென்று பார்த்ததில்....உணவு செய்த எந்த ஒரு அறிகுறியும் தெரியல.

நம்ம மம்மி எப்போ பாரு சமயல் செய்றேன்னு சமயல் அறையை இரண்டாக ஆக்கிகொண்டு இருப்பர். இப்போ எங்க அம்மாவை காணோம் யோசித்தபடி தேடிக்கொண்டு இருந்தான்...

இன்று அனைத்தும் அர்ஜுனுக்கு வித்தியாசமாக தெரிய.. 'ஒருவேளை ஒடம்பு சரி இல்லாமல் இன்னும் எந்திரிக்க இல்லைபோல' சந்தேகத்தோடு அன்னையின் அறையை நோக்கி சென்றான்.

அவன் அன்னையின் அறையை நோக்கி செல்கையில் ....அவரே எதிரே வர ....

"அம்மா ஒடம்பு எதும் சரி இல்லையா ? ஏன் எதும் சமைக்கலயா "அவன் அவர்கள் கன்னத்தை தொட விடாது தட்டிவிட்டார் ...

"என்ன உங்களுக்கு?" திரும்ப அவர்கள் அருகில் செல்ல.

அவர் விலகவும்.....

ஒரு நிமிடம் அதிர்ச்சியாக அன்னயை நோக்க... இந்த உதாசீனம் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவன் தவறே செய்தலும் அர்ஜுனை கொஞ்சியவாரு தான் அவனை திருத்த முயல்வர்...

அர்ஜுன் அன்னையோ அவனை பார்க்க கூட விருப்பம் இல்லாமல் முகத்தை வேரு புறம் திருப்ப ... ஒரு நிமிடத்தில் சில்லு சில்லாக ஒடைந்தது அவனின் இதயம்.

அர்ஜுன் உலகத்தில் அன்னை மட்டும்தான்....நண்பர்களும் அவனுக்கு குறைவுதான். இதயத்தில் சொல்லமுடியாத வலி பரவியது.

ஒரு நிமிடம் அவன் கண்கள் கலங்காமல் இருக்க முடியல அது அவனால் இயலாம போனது, அதை சமன்செய்து கொண்டு மீண்டும் அவர்கள் அருகில் செல்ல.

இந்த முறையும் அவர் அவனை நெருங்க அனுமதிக்கவில்லை...

"அம்மா இப்படி செய்தால் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது" என்றான் ஏக்கமாக.

"இந்த உதாசீனம் நீ செய்தல் சரி மற்றவர்கள் செய்தால் தவறா?" அவர் வார்த்தைகள் கோபம் தெறிக்க அனல் பார்வை அவன் மீது வீச.

"உன்னை மகன் என்று சொல்லக் கூட எனக்கு பிடிக்கல...."

அதிர்ச்சியில் "அம்மா..." என்றான் அர்ஜுன்

"அப்படி இனி கூப்பிடவேண்டாம்..." விரல் நீட்டி எச்சரித்தார். சாந்தமான அர்ஜுனின் அன்னைக்கு இவ்வளவு கோபம் வருமா...இது இரண்டாவது முறை மீராவிற்கு கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கோபம் வருவது.

"இல்லா மா... என்னால முடியாது உங்களிடம்பேசமல் ஒரு நிமிடம் கூட நினைக்க கூட முடியாது என்ன ஆச்சி உங்களுக்கு இப்போ ".

"நீ என்னிடம் இனி பேசவேண்டாம்" ஒற்றை வார்த்தையே அவனின் மகனை கத்தரித்தார்.

அவனின் இருபது ஏழு வயது பயணத்தில் இதுவரை நடந்திடதா ஒன்று அவனுக்கு.

என்னதான் அவனிடம் இவ்வாறு பேச... தாய் மனம் வலித்தாலும். ஒரு பெண்ணை வீட்டைவிட்டு அனுப்பியது அதிகபட்சம் அதுமட்டும் இல்லாமல்... அவள், என்ன ஆனால் எனக்கென்ன அவனின் பொறுப்பில்லாத பிள்ளையை பெற்றதற்கு வருந்தினார்.

அவரின் மறு மனமோ அந்த பெண்ணிற்கு இங்கு சென்றாள் இப்போ பாதுகாப்பு இருக்கிறாள் இல்லை எதாவது நடந்ததா? நினைக்கும் போதே மனமோ பதைபதைக்க,

அவள் மகனே இவ்வாறு செய்கையில் எந்த தாய் பொருத்திக் கொள்வாள்.

என் சொல் பேச்சை கேட்காத பிள்ளை எனக்கு தேவையில்லை.....நேராக அவர்களின் எதிர்ப்பை தெரிவிக்க,

"என்னை விட அவள் உங்களுக்கு முக்கியமா? இந்த சமயம் அவனது முட்டால் தனமாக இல்லை என்ற பார்வை வீசினாள்.

அப்படியும் வைத்துக்கொள்ளலாம். அவள் எனக்கு முக்கியம்தான் உன்னை விட, ஆம் ஒரு பெண்ணின் பாதுகாப்பிற்கு முன்னால் அவளுக்கு அவன் மகன் கூட தேவை இல்லை...

அர்ஜுனுக்கு சாராவின் மீது மேலும் கோபத்தை விதைத்தது மீராவின் வார்த்தையால்.

"மா... நான் கோபத்தில் எதோ செஞ்சிட்டேன் மன்னிச்சிடுங்க. ஆனால் என்னால் அவளை கூட்டிட்டு வர முடியாது " என்றான் முடிவாக.

"அவள் பாதுகாப்பு தானே உங்கள் முக்கியம் அதற்கு நான் பொறுப்பு "என்று விழக்கம்வேறு கொடுத்தான்.

"அவள் வழக்கைக்கு யார் பொறுப்பு..."என்று மீரா கேட்கும் சமயத்தில்.

அந்த நேரம் பார்த்து சாராவின் வீட்டிலே இருந்து அழைப்பு வர.

இருவரும் ஒரு நிமிடம் பதரிதான் போனார்கள். உங்கள் பெண்ணை போய்விட்டாள் என்ற கூற முடியும் அவர்களிடம்.

அவர்களை நம்பி அனுப்பிவைத்து பெண்ணை நாங்கள் தொலைத்துவிட்டு நிற்கிறோம் என்ற கூறமுடியும்?

அழைப்பு நின்றது

....

அவர்கள் பெண்ணுக்கு அழைத்து எடுக்காமல் இங்கு அழைத்து இருப்பார்கள் என்று யூகித்து.

மறுமுறை அழைப்பு வந்தால் எடுத்து விடவேண்டும் என்ற முனைப்பில். கைபேசியை பார்த்து கொண்டு இருக்க.. அவர்களிடம் என்ன சொல்வது....

அவள் மகனிடம் கேட்க...

பிடிக்காமல் போய்விட்டாள்...என்று சொல்லிவிடுங்கள் சொல்லும் போதே அவன் முகம் கருத்து.

அர்ஜுன் பொறுப்பு இல்லாத பதில்கள்... அவனது அன்னையை அறைய தூண்டியது...சற்றும் யோசிக்காமல் விட்ட அடியில் அரண்டுவிட்டான்.. எப்போ இருந்து அன்னைக்கு இவ்வளவு பலம் வந்தது என்று வியந்தேன்.. அர்ஜுன்.

இவன் சற்றுமுன் சொன்னதை எப்படி ஒரு பெற்றவளிடம் கூறுவது. அவர்கள் பெண் பிடிக்காமல் வீட்டை விட்டு போய்விட்டாள், நாங்களும் விட்டுவிட்டோம் என்ற அவர்களிடம் விளக்கம் அளிக்க முடியும் அவர்களால் ?

"அவனை முறைத்துகொண்டே.... அதை நீயே அவர்களிடம் சொல்லிவிடு".

அவன் அன்னைகோ எப்போ இருந்து இவன் பொறுப்பு இல்லாமல் பேச கற்றுகொண்டான். இவனின் இந்த பரிணாமம் அவர்களுக்கு புதிது.

"என்ன சொல்வது அவர்களிடம்....நீயே பேசிகொள். பொண்டாட்டியை நானே அனுப்பிவிட்டேன் வெளியே.." என்று கைபேசியை அவன் கைகளில் திணித்து விட்டார்.

"மா.... நான் எப்படியாவது கூட்டி வரேன்.. இப்போ கொஞ்ச பேசுங்க பிளீஸ் மாம் பாவம் அவங்க பதறிடுவங்க"

"இப்போ பதறி என்ன புரோஜனம் அனுப்பும் போது தெரியவில்லையா உனக்கு".

அவனை சுட்டுவிடும் பார்வையில்....அழைப்பை ஏற்று

"சொல்லுங்க மா எப்படி இருக்கிங்க?"

அந்த பக்கமா அவசரமாக சாரவின் அன்னையோ.

"சாரா எங்கே சென்றாள்? சாரா போன் பண்ண எடுக்கல எப்போது இப்படி செய்யமாட்டாள்.. கொஞ்சம் போன் கொடுங்க'' பதரியவாரு அவர் கதைக்க.

"அட என்ன அண்ணி சின்னஞ் சிறுசுங்க, புதுசா வேற கல்யாணம் ஆகி இருக்கு கொஞ்சம் லேட் ஆக தான் எந்திரிபங்க. இதற்கு பதறினாள் எப்படி?

அவங்க ரூம் தட்ட எனக்கு சங்கடமா இருக்கு....நானும் அவங்க வரவை எதிர்பார்த்து தான் காத்துகொண்டு இருக்கேன்", எப்படியோ ஒருவழியாக சமாளித்தார்.

அவள் அண்ணயோ சிரித்துகொண்டே ...

"அது மறந்துட்டேன் அண்ணி .... மறுவீட்டுக்கு கூப்பிடத்தான்... கூப்பிட்டேன் அவங்க வெளிய வந்ததும் சொலுங்க சனி ஞாயிறு இங்கு வர".

சிறுபல உபசரிப்பு முடிந்து போனை வைத்தார்கள்.

இருவருக்கும் மூச்சி இப்போ தான் சீராக வந்தது.

"அந்த பொண்ணு எங்க போச்சி என்று தெரில. எங்க கஷ்டப்பட்டு இருக்கோ" என்று மீரா புலம்ப தொடங்கினர்.

'அவ இந்த நேரம் நிம்மதியா Ac ல தூங்கி இருப்பா. அது தெரியாம இவங்க வேற, என்னை அடி பின்றாங்க' .

பொண்ணுப்பாவம் சும்மா விடாதுடா உன்னை ...." அவன் அன்னை புலம்பியவாரு அவனை கோபா பார்வை வீசினாள்.

"எனக்கு தெரியாது அந்த பொண்ணு சாயந்தரம் வீட்டல இருக்கணும் .....

அவள் வரவில்லை என்றால் நான் இங்கு இனி இல்லை" முடிவாக சொன்னார்.

"கூட்டிட்டு வரேன்மா ". அந்த இம்சை இருந்தாலும் பிரச்சினை போனாலும் பிரச்சினை நான் என்னதான் செய்வது புலம்பியவாரு சென்றான். அவன் வாகனத்தை எடுக்க அது அவன் சொல் பேச்சி கேட்காம அடம்பிடிக்க. அவனின் இருசக்கர வாகனத்தில் பறந்தான்..

அவள் அலுவலகத்தில் இருப்பாள் அழைத்து வருவது எளிமை என்று நினைத்து சென்றவனூக்கு தெரியவில்லை, அவ்வளவு சீக்கிரம் அவளை அவனால் வீட்டிற்கு அழைத்து செல்ல முடியாது என்று.

அவளை அந்த கட்டிடத்தின் எல்லா இடங்களில் தேடியாயிற்று அவள் கிடைக்கவில்லை. அங்கு இருந்த சில மாணவர்களை கூட கேட்டான். அவர்களும் பார்க்கவில்லை என்று சொல்ல...அவன் மனதில் பயம் பரவியது....

இரவு நடந்தது அவனுக்கே அதிகபட்சமாக தோன்ற.

"தூங்கி கொண்டு இருந்தவளை கீழே ...ச்சை எவளோ மோசமான செய்யல்" தன்னையே கடிந்து கொண்டு.

"பாவம் என் பேபி.... "பதறிய அவள் முகம் நினைவில் வர. செய்வதை செய்துவிட்டு பேபி ஆம் பேபி அவனது மனசாட்சி காரி உமிழ்ந்தது.

தலையை பிடித்துக்கொண்டு அவன் இருக்கையில் அமர்ந்தான்.

"எங்கே போனாய் சரோ வந்துடு டி.... இனி இப்படி செய்யமாட்டேன்".

இனி இங்கு இருந்து எந்த பயனும் இல்லை வெளியே தேட சென்றான் ....

அவள் வழக்கமாக போகும் ஐஸ் கிரீம் கடைக்கு போக. அங்கு அமர்ந்திருந்த கடைக்காரர்களிடம் .

ஒரு சிறு தலை அசைப் போட்டு காலியாக இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தான் .

"சார் உங்க ஐஸ் கிரீம்...." கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றான் வேலையால்.

சாராவை பற்றி எப்படி கேட்ப்பது யோசனையோடு அந்த உருகும் ஐஸ்கிரீம் பார்த்து கொண்டு இருக்க..

அந்த சமயம் ஒரு குட்டிப்பெண் அவனுக்கு எதிராய் வந்து அமர்ந்தாள் அந்த குட்டி...." மாமா உங்களுக்கு ஐஸ் கிரீம் பிடிக்காதா?"

"பிடிக்குமே .....ஏன் எனச்சி ?" புரியாமல் விழித்தான்.

"இஸ் கிரீம் பிடிகிறவங்க இப்படி வேடிக்கை பார்த்துட்டா இருப்பங்க ஐஸ்கிரீம் கைல வச்சிட்டு" குலுக் என்று சிரிக்க.

சாரா ஐஸ் கிரீம் சாப்பிடும் போது மடடும் எப்படி குழந்தையாக மாறுவாள் என்று அவளுக்கு தெரியாது... வேகமாக அவளது ஐஸ் கிரீம் உண்டு முடித்துவிட்டு அவனது வேண்டும் என்று அடம்பிடித்து, அவனது ஐஸ் கிரீம் பிடிங்கி சாப்பிட்டால்தான் சாராவிற்கு மனது ஆரும்... ஒரு வெற்றி புன்னகை ...அதற்காக எவ்வளவோ முறை வேண்டுமானாலும் அவளுக்கு விட்டு கொடுக்கலாம் என்று நினைத்து கொள்வான்... அவள் நினைவு அவனை வதைத்தது.

அந்த குழந்தையை பார்த்துக்கொண்டே இருந்தவன் அவனை அறியாமல் ஒரு ஸ்பூன் எடுத்து அந்த குட்டிபெண்ணுக்கு ஊட்டிவிட சாராவின் முகமே வந்து போனது .

"அச்சோ நீங்க சாப்பிடுங்க.vஅவளுக்கு சொல்லி இருக்கேன் வந்திடும் அந்த குட்டி பெண்ணின்...." அம்மா அந்த குட்டி பெண்ணை முறைக்க.

'அக்கா பரவவால....." சொல்லிவிடு ஊட்ட தொடங்கினான்.

அந்த குடிப்பெண்ணோ ஐஸ் கிரீம் இவனுக்கு ஊட்டிவிட . இப்போ சாரா பார்க்கணும் அவன் மனமோ துடிக்க. இந்த ஐஸ்கிரீம் காக மறுபடி அவளிடம் தோற்க மனம் ஏங்கியது.

அவள் வழக்கமாக செல்லும். அனைத்து கடைகளும் உணவகங்களும் சென்று தேடி களைத்து போனான்.

அகமொத்தம் ரெண்டு ஒருவாரம் லவ் பன்றதவிட எல்லா கடைக்கு சென்று நன்றாக கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

எதாவது குடித்தால் நன்றாக இருக்கும் என்று தெரு ஓரங்களில் இருந்த கடையில் ஒரு ஆரஞ்சு ஜூசை வாங்கி ஒரு முளுங்கு கூட குடிக்கவில்லை.

சாரா அந்த பாகம் செல்வது போல தெரிய. பணம் கொடுத்து சில்லரை கூட வாங்காமல் வேகமாக சாராவை பின் தொடர்ந்தான்.

நெருங்கி சென்று பார்ககையில் அது அவளில்லை. அவளின் தோற்றத்தை ஒத்த வேறு ஒருபெண்.

அனைத்து உணவகங்கள் குட்டிகுட்டி கடைகள்..இதுவரை சென்ற அனைத்து இடத்திற்கும் சென்று விசாரித்து... அவள் எங்கும் இல்லை.

அவளை இரவு வரை தேடிக்கொண்டு அலைந்து திரிந்தான். எங்கும் காணவில்லை சென்ற எல்லா இடத்திலும் அவர்களின் நினைவு ஏராளம்.... அனைத்தும் ஒன்றாக சேர்ந்து அவனை கொல்லாமல் கொன்றது.

இடையில் ரித்திகா அழைத்த அழைப்பும் அவன் ஏற்க மனம் இல்லாமல் போனை வெறித்து பார்த்து கொண்டு இருந்தான்.

அவள் செல்லும் அணைத்து இடங்களும்....அணைத்து பிடித்த இடம் என்று ஒன்றும் விட்டுவைக்க வில்லை.

வீட்டில் எந்த முகத்தை வைத்துக்கொண்டு செல்வது.

இவளுக்கு என்ன ஆச்சி என்றும் தெரியாமல் அலைந்து திரிந்தான், அன்னையை எப்படி எதிர்கொள்வது மனம் ஒருபுறம் தவித்தது.

ரித்திகாவிடம் இருந்து மீண்டும் அலைப்பு வந்தது .... வேண்ட வெறுப்பாக அடுத்தவன்.

******இந்த மருத்துவமனைக்கு வரவும் ....

யாருக்கு என்னாச்சு பாப்பாக்க இல்ல சாரா.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
11

அரைமணி நேரம் பிடித்தது சென்றடைய. வழி முழுவதும் பதட்டம்... அர்ஜுனுக்கு

சாராவுக்கு தூக்கம் வராமல் இருந்ததால் இடம் மாற்றி, கட்டிலுக்கு மறுபுறம் சென்று தூங்க ஆரம்பித்தாள்... அவள்படுத்திருந்த இடம் தவிர, அனைத்து இடங்களிலும் தேடியவனுக்கு எப்படி கிடைப்பாள், சாரா.

அவள் கைபேசி ஒலித்துக்கொண்டே இருந்ததில் ரித்திகா வந்து அவளை எழுப்பிவிட,

சாரா, முந்தைய நாள் உணவு உட்கொள்ளாததால் நன்றாக எழுந்தவள், மயங்கி ரித்தி மீது சரிந்தாள்.

சாராவை பற்றி அவனிடம் தெரிவிக்க எவ்வளவு முயர்ச்சி செய்தும், அவன் போனை எடுத்தால் தானேசொல்வதற்கு,

அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றாள், ரித்திகா. இரண்டு மாணவர்களின் உதவியோடு.

ரித்தி கொஞ்சம் திண்டாடித்தான் போனாள். இன்று பார்த்து குட்டிக்கு லைட் ஃபீவர் வேறு, இருவரையும் வைத்துகொண்டு நாள் முழுவதும் திண்டாடி விட்டாள். இதற்கு இடையில், அவனுக்கு கால் செய்து சலித்து போய் விட்டது ரித்திகாவிற்கு.

அர்ஜுனை சிலபல அர்ச்சனைகள் செய்து, நாள் முழுவதும் மருத்துவமனைலேயே நேரத்தை கடத்தினாள் ரித்திகா.

சாராவிற்கு இரண்டு ட்ரிப்ஸ் ஏற்றிய பின்பு ஓரளவுக்கு அவளுக்கு தெம்பு வர, எழுந்து அமர்ந்தாள்.

டாக்டர் ரித்திகாவை திட்டிக்கொண்டு இருந்தார் "சாப்பிட்டாங்களா இல்லையான்னு கூட பார்க்காமல் என்ன வேலை, செயிரிங்க, வீட்ல இருக்கவங்க பொறுப்பில்லையா?" என்று நிறைய திட்டுகளை வாங்கிக்கொண்டு சாராவிடம் வந்தாள்.

"ஏன் சாப்பிடல" ரித்திகா சாராவிடம் கேட்க.

"சரியா சாப்பிடல நானும் அவரும்...."என்று சொன்னதும் ரித்திக்கு கோபம் ஏகத்துக்கு எகிறியது.

"இதுல மட்டும் ஜோடி சேருங்க" என்று ரித்திகா திட்டிக்கொண்டு இருந்தாள்.

'என்ன காதலோ! பைத்தியக்காரத்தனம்' என்று ரித்திகா நினைத்துக்கொண்டாள். இவர்களை விட பைத்தியக்காரத்தனம் செய்த ரித்திகா சொல்கையில் அவள் மனமே ரித்திகாவிற்கு ஒரு கொட்டு வைத்தது.

'அவன் நல்லா மூக்கு மூட்ட சாப்டுட்டு இருப்பான். இவளை என்ன செய்வது... இந்த நிலையிலும் அவனை நினைத்துகொண்டு இருக்கிறாள்?' இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்தாள் ரித்திகா.

" உங்களுக்கு என்னதான், ஆச்சி பிரியரா அளவுக்கு" என்று ரித்திகா கேட்க, எதையும் மறைக்காமல் அனைத்தும் கூறினாள், சாரா.

குழந்தையை ஒரு புறம் தூக்கி கொண்டு, சாராவை தாங்கியவாறு வெளியே அழைத்து வந்தாள் ரித்திகா. இவர்களை பார்த்ததும் அர்ஜுன் வேகமாக அவர்களை நோக்கி வந்தான்.

அவனை பார்த்ததும் ரித்திகாவுக்கு கோபம் கொழுந்துவிட்டு எரிய, இப்படியே விட்டால் என்னிலமை தான் இவளுக்கு... என்று முடிவு எடுத்தாள். சிறிது காலம் இவர்களை பிரித்து வைக்க எண்ணினாள் ரித்திகா.

அவளுக்கு அர்ஜுன் பற்றி தெரியும். அவன் கோபம் முழுதாக எப்போ செல்கிறதோ அதுவரை... கிறுக்குத்தனமாக எதாவது செய்துகொண்டே இருப்பான். அதுவே அவன் புரிந்து கொண்டு பிறகு அவர்கள் வாழக்கை சிறு சிறு சண்டை வந்தாலும் இவர்கள் வாழ்கை தெளிந்த நீரோடை போல இருக்கும் என்று நினைத்தாள் ரித்திகா.

சாராவை கண்ட சந்தோசத்தில் அவளை தாங்கி பிடிக்க சென்றவனை, தடுத்தது என்னவோ ரித்திகா தான்.

அர்ஜுனை பார்த்ததும் முகம் மலர்ந்தாள் சாரா.

ரித்திகாவின் செயலை பார்த்த சாராவிற்கு ரித்திகாவின் மீது சட்டென்று கோபம் வந்தது.

"உனக்கும் உன் தம்பிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை அர்ஜுன்...."என்று அவனுக்கு மட்டும் கேட்குமாறு சொல்லிவிட்டு பேச்சை மாற்றிவிட்டாள்.

"நீ பாப்பாவை பிடி, இனி நான் இவளை பார்த்துக்கிறேன்" வெட்டு ஒன்றாக பேசியவளை பார்த்து... சோகமாக முகத்தை வைத்துக்கொண்டான், அர்ஜுன்.

"இனி இப்படி செய்ய மாட்டேன்..." என்று அவன் முடிப்பதற்குள்.

"நிறுத்து... சொன்னதை செய்" என்றாள் ரித்து கோபமாக.

ரித்திகாவின் இந்த முகம் இருவருக்கும் புதுசு.....

சிரித்த முகமாக சிறகு இல்லாமல் சுற்றி திரிந்த அந்த தேவதையா, இவள்? என்று ஆச்சரியமாக பார்த்தனர் இருவரும்,

மறுபேச்சின்றி குழந்தையை வாங்கினான். ஒன்றாக பயணத்தை தொடர்ந்தார்கள்.

சாராவை பார்த்தவாறே கார் ஓட்டினான்.

அர்ஜுன் சாரா இருவர் மனதிலும்... ஏக்கம் எட்டி பார்க்க.

ரித்திகா அவர்கள் விரல் விரல் நுனி கூட பட அனுமதிக்கவில்லை.

இருவருக்கும் ரித்துவிடம் கோபம் வரவில்லை. அதற்கு மாறாக இவள் எப்போ எங்களை பேச விடுவா, என்று எதிர்பார்த்து இருந்தார்கள் இருவரும்... அந்த ஒன்றாக கலந்த இரண்டு காதல் உள்ளங்கள்.

அர்ஜுன் அவன் வீட்டை நோக்கி செல்ல.

"எங்கடா போற..." ரித்திகா கேட்க.

"நம்ம வீட்டுக்கு..." என்று கூறிவிட்டு கேள்வியாக அவளை பார்க்க?

ரித்தி அவனை அவள் வீட்டிற்கு செல்ல சொன்னாள்.

இவனும் மறுபேச்சின்றி காரை வலைத்தான். அவள் வீட்டை நோக்கி.

அர்ஜுன் அவர்களை விட்டுவிட்டு சாராவை அழைத்து செல்வது... என்று நினைத்துகொண்டு இருக்க, ரித்திகாவின் பிளான் வேறாக இருந்தது.

அவனுக்கு தெரியவில்லை... ரித்தி அவளை அனுப்ப போவதில்லை என்ற விசயம்.

'இவ என்ன அமைதியா வாரா' அவன் அவளை பார்க்க.

அவளோ அவன் பார்க்கும் சமயத்தில் கண்ணடித்து வைத்தாள்.

இது எங்க திருந்தபோது மானசீகமாக தலையை அடித்து கொண்டான்... ''ராட்சசி" என்றான் உதட்டை மட்டும் அசைத்து.

"அவ்வளோவு சீக்கிரம் உன்னை நிம்மதியா விடமாட்டேன் டா" அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினாள்.

அவளை முறைப்பதை பார்த்த ரித்திகா, அவனை முறைக்கும் போது, இவளுக்குள் சந்தோஷமோ சந்தோசம்.

இவளின் பக்கமும் ஆளு இருக்கிறது இனி புது தெம்போடு இவனை வம்பிழுக்க அவள் தயாரானாள்.

சிலபல பார்வை பரிமாற்றங்களுக்கு பின்னால்...ஒருவழியாக அவள் வீட்டை அடைந்தார்கள்.

அவர்கள் இறங்கவும் தூங்கி கொண்டு இருந்த குழந்தை சிணுங்க.

அவளை தூக்கி தட்டியவாறு இருவரையும் தொடர்ந்து உள்ளே சென்றான் அர்ஜுன்.

அர்ஜுன் அமைதியாக சாராவை பார்க்க.. ரித்திகா வெறியோடு அர்ஜுனை பார்த்தாள்.

"இங்க பாரு அர்ஜுன் நீ எனக்கு சொன்னதை திரும்ப உனக்கு சொல்றேன்,
அவளை இனி நான் பாத்துக்கிறேன்" என்றாள் ரித்தி.

"அவள் என்மனைவி நான் பார்த்துக்குவேன்" என்றான் பதிலுக்கு.

"நீ பார்த்த லட்சணம் எனக்கு தெரியும், ஒரு நாள் முழுக்க அவள் எதும் சாப்பிடல. அது உனக்கு தெரியுமா?" என்று கோபமாக கேட்டாள்.

மறுப்பாக அவன் தலை அசைக்க.

"நானும் ரெண்டு நாளாக எதும் சாப்பிடல, அது அவளுக்கு தெரியுமா?" மறு கேள்வி அவளை நோக்கி கேட்க...

சாரா தலைகுனிந்து நின்றாள்... இன்று முழுவதும் அவன் தேடி அலைந்ததை மறந்தும் அவர்களிடம் சொல்லவில்லை.
சொன்னாலும் நம்பமாட்டார்கள் என்று அவனுக்குத் தெரியும்.

சாராவை வெற்றிபெற வைக்க அவன் விரும்பவில்லை. அவன்மேல் அவளுக்கு நம்பிக்கை இல்லை என்பதை அவனால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, இப்போது வரை... ஆனால் அவளை மொத்தமாக பிரிந்து இருக்க முடியாது...

'சிறிது காலம் தூரம் இருந்தால்... சற்று காயம் ஆரும்,
ரித்து நினைத்தது சரிதான்'. என்று அர்ஜுன் நினைத்தான்.

"நானும்தான் சாப்பிடல.." என்றான் சாராவை பார்த்து கோபமாக

பாதி தூக்கத்தில் இவர்கள் பேசிக்கொண்டு இருந்ததை மாற்றி மாற்றி பார்த்து கொண்டு இருந்த குட்டி, அவன் சாப்பிடல என்று சொன்னது உடனே.

அர்ஜுனை விட்டு இறங்கி. அவளின் பிஸ்கெட் பேக்கெட் எடுத்துவந்து. தண்ணீரில் அந்த பிஸ்கெட்டை நனைத்து அவனுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தாள்.

வலிமை மிகுந்த அர்ஜுனை அசைத்து தான் பார்த்தது. அந்த சிறு பிஞ்சின் பாசம்.

இதை பார்க்க அவனின் தம்பிக்கு குடுத்து வைக்கவில்லை. அவனுக்காக இவன் மனமும் இறங்கியது இவ்வளவு வருட கோபமும் எங்கோ சென்று ஒளிந்துகொண்டது.

இதை அனைத்தும் வேறு ஒருவன் அவனது மொபைல் போனில் பார்த்துக்கொண்டு இருந்தான்...

அவன் முகமோ கோபத்தில் சிவந்தது. இரண்டு வருடம் என் மகளிடம் இருந்து பிரித்து வைத்த அர்ஜுன் மீது கோபம் பன்மடங்கு அதிகரித்தது.

சட்டென்று ரித்திகாவின் நிலை அர்ஜுனுக்கு உரைக்க... இதுவரை பொறுத்தது போதும் முதலில் இவங்க வாழ்வை சரி செஞ்சிட்டு. தமது வாழ்வை சரிசெய்யலாம் என்று முடிவு எடுத்த அர்ஜுன்.

"இனி என் முன்னாடி அவளை எதாவது சொன்ன நான் பார்த்துட்டு சும்மா இருக்கமாட்டேன் புரியுதா....?" என்றாள் ரித்தி

புரிந்தது என்பது போல. மண்டையை மண்டையை ஆட்ட.....

சாரா விற்க்கு அர்ஜுனை பார்த்து சிரிப்பு அடக்க முடியல... குழந்தையை கொஞ்சியவாறு சிரித்தாள்.

அதில் கடுப்பானவன் அவளை முறைக்க "அங்கே என்ன பார்வை ?" என்று அவனை முறைக்க கூட விடவில்லை ரித்தி.

"இங்க பாரு என்னை..." அவன் முகத்தை ரித்தி அவளை நோக்கி திருப்ப.

அவள் புறம் முகத்தை பாவமாக திருப்பினான்.

இந்த லுக் விட்டா நான் உன்னை நம்பிவிடுவேனா என்றது அவளின் பார்வை.

அதை புரிந்துகொண்டு வேறு புறம் திரும்பி பார்வையால் வீட்டை நோட்டம் விட்டான்.

ரித்தி சாராவை ஒரு பார்வை பார்த்து. அவள் குட்டியிடம் விளையாடி கொண்டிருந்தாள்.

அங்கு மாட்டப்பட்ட புகைப்படத்தை எடுத்து கொண்டு அவள் அறைக்கு சென்றாள் .

"போட்டோ மாட்டுவாங்கலாம்.
ஆனா புருஷன ஏத்துக்க மாட்ட இவ" அவள் காது படவே கூறினான் அர்ஜுன்.

"அவன் யாரு ? " என்று
யாராவது அவளிடம் இந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்று கேட்டால்... அவன் தாராவின் தந்தை என்று கூறி பேச்சை மாற்றிவிடுவாள்.

"இவள் ஒழுங்கு நான் மோசமானவன். என்ன ஒரு வில்லத்தனம் இந்த பொண்ணுங்களுக்கு ".

"என்ன டிசைன்டா இந்த பொண்ணுங்கலாம்" என்று புலம்பினான் அர்ஜுன்.
ரித்திகா அவனை முறைக்க.

"இந்த பொண்ணுங்கள புரிஞ்சிக்க... phd படித்தால் கூட..... ஜஸ்ட் பாஸ் கூட பண்ணமுடியாது, இந்த பாவப்பட்ட ஆண்கள்" என்று மொத்த ஆண்களுக்காக கொடியை தூக்கினான் அர்ஜுன்.

"இங்கு என்ன வேலை உனக்கு இடத்தை காலி செய்". ரித்திகா..... அவனை துரத்துவதிலே குறியாக இருக்க.

என்னதான் ரித்திகா நினைப்பது சரியாக இருந்தாலும் அர்ஜுனுக்கு சாராவை விட்டு செல்ல மனம் வராமல் "நான் அவள வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்" என்றான் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு.

சாரா ரெடி ஆனால் அர்ஜுனுடன் கிளம்புவதற்கு ரித்தி அவளை விடுவதாக இல்லை.

அர்ஜுன் கெஞ்சியும் ரித்தி விடுவதாக இல்லை.

சாரா முகத்தில் வந்து போன சிரிப்பை அவன் பார்க்க.

'என்னையே இப்படி கெஞ்சவிட்டுடாலே' என்று நொந்து போனான்.

தூங்கிக்கொண்டு இருந்த பூனையை அவள் சீண்டிவிட்டாள்.

கோவமாக அவளை முறைத்தவாரு... சென்றான்.

மறுநாள் இருக்கு உனக்கு எப்படியும் என்னிடம் தான் வரவேண்டும், அப்போ பார்த்துக்கொள்கிறேன்.... பார்வையால் அவளை மிரட்டி சென்றான்.

வாசலில் சென்றதும் சிரித்து கொண்டு சென்றான்.

"ரித்தி மிஷன் ஸ்டார்ட்...... உங்களை சேர்த்துவிட்டு அவளை வைத்து செய்யப்போகிறேன்..." என்று குதூகலமாக வீட்டை நோக்கி சென்றான்.

அம்மாவை சமாளிப்பது சுலபம் என்று நினைத்தேன். ஆனால் நடந்தது வேற, அவன் தனியே வருவதை பார்த்த, மீரா வேகமாக கதவை அடித்து மூடி சென்றார்.

சிறிதுநேரம் கழித்து கதவு திறக்கும் சத்தம் கேட்க திரும்பி பார்த்தான்.

அவனின் அன்னையோ அவர்கள் காலை சொன்னது போல அவர்கள் கைல லக்கேஜ் உடன் நின்று இருந்தார்.

"அம்மா வேண்டாம்மா.... அவ பாதுகாப்பா தான் இருக்கா. ரித்தி வீட்ல" என்றான்.

"ஏற்கனவே உன் தம்பி! இப்போ நீ அந்த பொண்ணை...., பேச முடியாமல் மீரா திணறினர்...இப்போ நிம்மதியா!! இருவருக்கும் ஒரே குணம்... இனி ஒரு நிமிடம் கூட நான் நீ இருக்கும் இடம் நான் இருக்கமாட்டேன்.

சொல்லி முடிக்கும் முன்பே அவன் கன்னத்தை நன்கு பதம் பார்த்து சென்றார், அவனின் அன்னை வீட்டைவிட்டு கிளம்ப தயாரானார்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
12

"மா நீ இல்லாம என்னால் இருக்க முடியாது?" என்றான் அர்ஜுன்.

"ஆனா, என்னால இருக்க முடியும்...." என்று மீரா ஒரு முடிவோடு அர்ஜுனை பார்க்க.

' சரி எதாவது பாட்டு பாடி சிரிக்க வைக்கலாம் ' என்று நினைத்தவன் குரலை சரி செய்துதொடங்கினான்..... ராகமாக....

சொல்லால் அடிச்ச
சுந்தரி,
மனம் சுட்டுவிட்ட
கோலம் என்னடி,
சொல்லால் அடிச்ச
சுந்தரி
மனம் சுட்டுவிட்ட
கோலம் என்னடி!
பட்டக் காயத்துக்கு
மருந்தென்னடி,
என் தாயைத் தந்த தாயும்
நீயடி!!
என்னதான் சொல்ல
ஒன்னும்கூட இல்ல
மன்னவன் நெஞ்சிலே
மூச்சடைச்சதென்ன!!!
சொல்லால் அடிச்ச
சுந்தரி,
மனம் சுட்டுவிட்ட
கோலம் என்னடி!!!!

அர்ஜுன் பாடுனது விட... அவன் அக்க்ஷன் அல்டிமேட்.... மீரா தான் பெரும்பாடுபட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டு இருந்தார்.

"என்னவே டி சொல்றயா...." மண்டைல நாலு கொட்டு வைத்துவிட்டு "டேய் பாட்டு பாடி நடிக்காத....
போக போறது நான் இல்லை நீ..."

அர்ஜுன் தலையில பெரிய குண்டை போட.... அதிர்ச்சியில் மீராவின் முகத்தை பார்க்க..

"ஷாக்க கொறடா..... சீக்கரம் இடத்தை காலிபன்னு".

மீரா அர்ஜுனை பார்த்து ஒரு புருவம் உயர்த்தி, ஹேப்பி இன்று முதல் ஹேப்பி, விசில் அடித்தவாரு மீரா அர்ஜுனை பார்த்து விசில் அடிக்க...

'அயோ இதல்லாம் பாக்கணும் னு எனக்கு இருக்கு...' அர்ஜுன் மனதில் புலம்ப.

"இந்தா உன்னோட குப்பைய எடுத்துட்டு, இடத்தை காலி பண்ணு.

"அம்மா...." என்று அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றான்.

"போடா... முதலில் ஷாக்க கொஞ்சம் கம்மி பன்னு". மெலிதாக துறந்து இருந்த அவன் வாயை... "மூடு ஆல்ரெடி நாலு கொசு போயிடுச்சி ".

சொன்ன உடனே வாயை வேகமாக மூடினான். "என்னமா என்னவே போக சொல்லிட்ட...." என்றான்.

"என் புருசன் வீட்ட விட்டு நான் ஏன்டா போனும், அதுவும் இல்லாமல் தப்பு செஞ்சது நீதானா, வெளிய போடா..." என்றார் மீரா.

"தப்பு செஞ்ச நாய்க்கு இங்க இடமில்லை. கிளம்பு கிளம்பு.... இனி எந்த தொல்லையும் இல்லாமல் ஜாலியா இருப்பேன்.... இந்த டாகுக்கு சமையல் செய்து போட்டு என் இளமையே போச்சு... இனி பிரீயா ஜாலியா இருப்பேன் டா.. ஆடர் செஞ்சி சாப்பிட்டுட்டு ." என்றார் மீரா குதூகலமாக.

இவனுக்கு பாடல் திறமை எங்கு இருந்து வந்தது, அனைத்தும் மீராவிடம் இருந்து வந்ததுதான்.... அதை வைத்தே வெறுப்பேற்றினார் அவர் அர்ஜுனை.

அவன் அறிவு வேகமாக செயல்பட... 'எப்படியாவது இவங்கள ஏமாத்தி உள்ளே போய்ட்டா போதும்.... எஸ்கேப் அய்டலாம்'. என்று யோசித்தவனின் மனதை மீரா படித்துவிட்டார்.

"மீரா நீ சரியா, என் பொருட்கள எடுத்து வச்சி இருக்க மாட்ட, இரு நான் வந்து பார்க்கிறேன்" உள்ளே நுழைய பார்த்தான், மீரா அவனின் அம்மாவாச்சே... விடுவாரா அவனை.

" எல்லாம்எடுத்து வச்சாச்சு ... பெரிய லக்கேஜ்... உன் டிரஸ் சின்ன லக்கேஜ், உனக்கு தேவையானது எடுத்து வச்சிட்டேன், எடுத்துட்டு போடா ". என்றார் மீரா விவரமாக.

'எதாவது சொல்லி உள்ளே போலாம்னு பாத்தா.... என்ற மம்மி உஷாரா இருக்கே'.

"டேய் நீ எனக்கு பிள்ளை... உன்னை விட நான் வேகமாக புரிஞ்சுப்பேன் கண்ணா" அவன் கண்ணத்தை போற போக்கில் தட்டிச் சென்றார்,

நீ குரங்கு சேட்டை செய்தாலும் நான் உன்ன உள்ள போக விட மாட்டேன் ".

'சரி சென்டிமென்ட் அட்டாக் தான் சரி...' என்று நினைத்தவன் அடுத்த தாக்குதலை ஆரம்பித்தான்.

"அம்மா நான் அப்பா இல்லாத கொழந்த, அதனால தான என்ன இப்படி அனாதையா விட பாக்குற" என்றான் வராத கண்ணீரை துடைத்துக்கொண்டே.

"புருசன் இல்லாத அம்மாவ அதான் அடங்காம திரிரய." மறு கேள்வியில் வாயை மூடிக் கொண்டான்.

"நான் உனக்கு பொண்ணுக்கு மரியாதை குடுக்க சொல்லித் தரலையா டா?"

'இவங்கவேற அவ பண்ணது தெரியாம பரிதாபமா பாக்ராங்க அவளை'. என்று நினைத்தான் அர்ஜுன்.

'எப்படி பால் போட்டாலும் மம்மி கேட்ச் பிடித்து திரும்ப வீசுதே.. அடுத்து என்ன செய்லாம்' அவன் யோசிப்பதற்குள்.

"நீ ரூம் போட்டு யோசிச்சி வந்து நாடகத்தை நடத்து இப்போ கிளம்பலாம். எனக்கு டைம் இல்ல, pubg விளாடனும், என் கூட விளையாடுற பிளேயர் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க".

"என்னது pubg ஆ!! மா உனக்கு விளையாட கூட தெரியுமா?" என்று அர்ஜுன் ஷாக் ஆக, "நீ வேலைக்கு போனதும், அதுதான் என்வேலையே".

"Devil Angel னு ஒரு பொண்ணுகூட விளையாட்றல்ல, வேலைக்கு போறேன்னு சொல்லி... அந்த பொண்ணு நான் தான்" என்றார் மீரா.

அர்ஜுன் ஷாக் ஆயிட்டான்... பொண்ணுங்க கூட எவ்ளோ ஆர்வமா விளையாடறாங்கன்னு ஆச்சரியமாக பார்த்தது அந்த devil Angel id..... பார்த்து, அர்ஜுன் நிறைய வாட்டி ஷாக் ஆகி இருக்கான்.

'அம்மாவை சமாதானம் படுத்தறது ரொம்ப கஷ்டம் தான்', என்று நினைத்தவன்.

'இங்க வேலைக்கு ஆகாது' அவன் லக்கேஜ்யை எடுக்கப்போக... அந்த பையை ஒரு உதை விட்டுவிட்டு வீர நடையோடு உள்ளே சென்றார் மீரா.

"மா இது ரொம்ப அதிகம்.... ஒதைத்தது கூட பரவாயில்லை ஆனா அந்த நடை பாக்க சகிக்கல,

அப்படியே நீலாம்பரி என்று நினைப்பு...." என்று அன்னையை வாய்விட்டு வதக்கி கொண்டு இருந்தான்.

பேசுவது அவர்கள் காதில் விழுந்தால் தானே! அர்ஜுன் தனியாக கத்திக்கொண்டு இருந்தான்.

"கதவை சாத்தி பத்து நிமிஷம் ஆச்சி" என்று மீண்டும் கதவை திறந்து, மறுபடி வாசல் கதவை வேகமாக அடித்து சாற்ற.. pubg ஆட தொடங்கினார்.

"எங்கே செல்லும் இந்த பாதை".... என்று அர்ஜுன் பாட.....

"பழைய சோறு இல்லபா, நாளைக்கு வா..." என்று அவன் அன்னை குரல் ஒலிக்க.

'சும்மாவே இந்த மீரா என்னை போட்டு வாங்கும், இப்போ என்னை ரோட்டுல நிக்கவச்சிடுச்சே...' என்று சிறிது நேரம் அங்கு புலம்பிக்கொண்டு இருந்தான், அர்ஜுன்.

"இது உனக்கு தேவைதான்டா... எல்லாம் அந்த குட்டிப்பிசாசு வேலை, அவளை வச்சி செய்யாம நான் விட்றாத இல்ல" சிறிதுநேரம் அங்கு படிக்கட்டில் அமர்ந்தவன்.

"பேசாமல் ரித்தி வீட்டுக்கு போய்டலாம் சோறு ஆச்சி சாப்பிட தருவா...."

"அவ தரலனாலும் என்னோடா பொண்ணு என்ன கண்கலங்காம பத்துக்கறாலோ இல்லையோ வயிறு கலங்காமல் பத்துப்பா". குட்டியை நினைத்ததும் மனதில் ஒரு இதம் பரவியது அர்ஜுனுக்கு.

"இந்த மீரா போல அவ இல்ல, எப்பவும் என்ன யார் விட்டாலும் அவ விடமாட்டா". அங்கு போய் பார்த்தா தானே தெரியும், சோறு கிடைக்காத இல்ல அடி கிடைக்காத னு.

சாப்பாடு போட்டு நம்ம தல ஸ்டைல்ல அவ அடிப்பா... பாவம் அர்ஜுன் அந்த விசயம் உனக்கு தெரிய வாய்ப்பில்லை ராசா.

மெதுவாக காரை உருட்டிக்கொண்டு ரித்திகா வீட்டின் முன்னே நிறுத்தினான். அர்ஜுன் தயங்கி தயங்கி காலிங் பெல் அமுக்க.

"சோறு கிடைக்குமா? கிடைக்காதா?" என்று தான் அவன் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.

இங்கு தங்க அனுமதி கிடைக்குமா? கிடைக்காதா? என்றுகூட அவன் யோசிக்கல.

வந்து திறந்தது என்னவோ அவன் மனைவிதான்.

"ஆட ஆட என்ன அழகு, மேக் அப் போடாமயே ஹீரோயின் கணக்கை இருக்காளே," என்று நினைத்து அர்ஜுன் கண்ணு கூட சிமிட்டாம சாராவை சைட் அடித்துக்கொண்டு இருந்தான்.

"இவன் என்ன லூசு கணக்கா நிக்ககரான்", அர்ஜுனின் கன்னத்தை நன்கு கிள்ளி வைத்தாள்...

"ஆஆஆஆ.... என்னாடி பண்ண என்றான் கன்னத்தை" தேய்த்துக்கொண்டு.

"அஹ... மாமா மேல ஆசை அதான், கிள்ளி வச்சேன்" என்றாள் சிரித்துக்கொண்டு.

அவளை கண்டுகொள்ளாமல் "ரித்தி" என்றுஅர்ஜுன் கூவி கொண்டு இருந்தான்.

"என்னங்க மாமா, உன்ற பொண்டாட்டி உங்க முன்னே இருக்கும் போது அவளை எதுக்கு கூப்பிடறீங்க.." என்றாள் நக்கலாக.

"யாருக்கு யாரு டி மாமா? விலகு நான் உள்ள போனும்". அவன் கொஞ்சம் உறக்க கத்த...

"கத்தி பேசாதீங்க குட்டி தூங்குரா" என்றால் சாரா மெதுவாக.

"நீங்கதான்... அன்னைக்கு, மாமா கூப்பிடு இல்லனா முத்தம் கூடு னு கேட்டீங்க அதான், இப்போ முத்தம் கொடுக்க முடியாது அதான் மாமா கூப்பிட்டேன்." என்றாள் சம்பந்தம் இல்லாமல் சாரா அவனிடம் பேச்சை வளர்த்தாள்.

' எப்போ கேட்டத, எப்போ சொல்ற பாரு',

"தினமும் மிரட்டி வைக்க வேண்டிது, அப்புறம் மறந்துட்டு லூசு மாறி முழிக்கறது"? அவள் மையலோடு அவனை பார்க்க...

அவள் பார்வையை தவிற்கும் நோக்கோடு ...

"நகரு நான் உள்ள போனும்". அவள் முகம் பார்க்காமல் அவளிடம் பேச.

"என்ன என் மூஞ்சி பார்க்க பிடிக்கலயா?" என்று ஒரு அடி முன்னே வந்தாள்." இவ்ளோ பக்கத்துல பிடிக்குதா பாருங்க " என்று இன்னும் நெருங்கி வந்து நின்றாள்.

'இவள் வேறு மனுசன் மனசு புரியாம ஒரசிட்டு நிக்கறா'. மனதில் சலிப்பாக நினைத்தவன்.

"கொஞ்சம் தள்ளி நில்லு..." என்றான் கோபமாக கஷ்டப்பட்டு முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான்.

"முடியாது மாமா... கல்யாணம் ஆகாமலே, நீ என்னென்னமோ செஞ்ச மறந்துட்டயா...... நீ மறந்தா என்ன நான் உனக்கு இப்போ ஞாபக படுத்தறேன் கவல படாத" என்றாள் புருவம் உயர்த்தி கேட்க,

'அடி பாவி, முத்தம் கேட்டதுக்கு இவ்ளோ பேசறாளே'.

அர்ஜுன் கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு 'ராட்சசி... நான் கேட்டது எதும் குடுக்கல, இப்போ மொத்தமா குடுத்தா தாங்காதுமா, இந்த குட்டி நெஞ்சம்... மனதில் இவ்வாரு பேசியவன், வெளியே அவளை முறைத்தான்...

'இடியட் அப்போ தூரம் இருந்து இம்சை செய்தா... இப்போ ஓரசியே மனுசன சாகடி' என்று மனதில் கொஞ்சிக்கொண்டு இருந்தான்.

"கொஞ்சம் தள்ளி நில்லு..." என்றான் இந்த முறை கடுமையாக.

'கத்தாதிங்க பாப்பா தூங்கறா, எத்தனை முறை சொல்றது" என்று கடிந்தவள்.... ஏன் நான் உரசனா எறிஞ்சிடுவியா... போயா பேக்கு மாமா" என்றாள் உரிமையோடு.

"இதவே சொல்லிட்டு எவ்வளோ நேரம் வழிவிடாம நிற்கலாம்னு இருக்க" என்றான் புருவத்தை உயர்த்தி.

அவன் புருவத்தை ரசித்தவள்... "ஒரு ஹக் கொடுத்த அப்புறம், உள்ளே மெதுவா போலாம்" என்றாள் அவனை பார்வையால் விழுங்கிக்கொண்டு.

'இவ எப்போ இருந்து இப்படி ஆனால்' என்று யோசித்தவன் முற்பகல் செய்தது, இப்படி வந்து விளையும் னு அர்ஜுன் கனவா கண்டான்.

'நான் செஞ்சது எல்லாம் சேர்த்து வச்சி இப்போ செய்றாளே, மனுஷனோடநேரம் காலம் புரியாமல்... நான் அவளோ நல்லவன் இல்லைமா... 'அவன் மனம் சத்தமிட அது இவள் காதுல விழுந்த தானே, இன்னும் நெருங்கி, அவனை சீண்டிக்கொண்டு நின்றிருந்தாள்.

"யாரது? "சாராவின் பின்னிருந்து குரல் கேட்க இருவரும் விலகினார்கள்..

"சாரா எதுக்கு கத்திட்டு இருக்க. நான் சொல்லிட்டு தானே வந்தன் பாப்பா சத்தம் கேட்டா தூங்கமாட்டானு".

தூங்கும்வரை தாராவிற்கு சத்தம் கேட்கக் கூடாது... சத்தம் கேட்டால் அவ்ளோதான் தூங்காமல், அங்கு போலாம் என்று கையை சத்தம் வந்த திசையை காட்டி அடம் பிடிப்பாள், அவளின் செல்ல ராட்சசி.

"நான் இல்லை இவன் தான் சத்தம் போட்டான்..." என்று அர்ஜுனை கை காண்பித்து, எஸ்கேப் ஆகிட்டா.

'இவளுக்கு என்னை போட்டுக்கொடுப்பதே வேலையா போச்சி' அவளை முறைத்து கொண்டே..." அது வந்து ரித்தி " என்று அவன் ஆரம்பிக்கும் முன்பு.

"எதுக்கு இங்க வந்த" என்றாள் ரித்திகா கேட்க".

"அம்மா என்ன வீட்ல இருந்து போக சொல்லிட்டாங்க" என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு சொல்ல.

"சோ கியூட்...." அந்த ரணகளத்துலயும் சாராவால் அர்ஜுனின் குழந்தை முகத்தை, ரசிக்காமல் இருக்க முடியல. அவன் கன்னத்தை வலிகும்மாறு நன்றாக கிள்ளி வைத்தாள்....

"ஷ்.... ராட்சசி வலிக்குது, தொட்டு பேசாத... போ தூரமா" அர்ஜுன் சாராவை முறைக்க...

"அதென்ன போக சொல்லிட்டாங்க, வீட்ல இருந்து துரத்தி விட்டுட்டாங்கன்னு சொல்லு..." ஹாஹா... என்றால் ரித்திகா.

சாராவும் ரித்தியும் ஹை பை போட்டுக்கொண்டு சிரிக்க.
அர்ஜுனின் நிலைமை, அந்தோ பாவம் என்றாகிவிட்டது.

எந்த கேலி அம்பும் என்னை தாக்கல.... என் மீசைல மண்ணு ஒன்னும் ஒட்டல.... என்ற ரேஞ்சிக்கு முகத்தை சாதாரணமாகமுகத்தை வைத்துக்கொண்டு இருந்தான். 'இந்த கன்னிப்பையன் சாபம் உன்ன சும்மா விடாதுடி ' என்று மனதுக்குள் இருவருக்கும் சாபம் விட்டுக்கொண்டு இருந்தான்.

"அதுக்கு எதுக்கு நீ இங்க வந்த..." என்றாள் ரித்திகா. நேரடியாக கிளைமாக்ஸ்க்கு கொண்டு வந்துட்டா.

"இங்கு தங்கலம் னு..." அவன் தயங்கி தயங்கி சொல்ல. இவர்கள் இருவரும் இவனை வாருவதிலேயே குறியாக இருக்க...

"இந்த வீடு ரொம்ப சின்னது, உனக்கு இங்க இடம் இல்ல...." என்றாள் ரித்திகா... வீட்டை ஒரு சுற்று பார்த்துவிட்டு.... ஒரு 10 பேர் தங்கலாம் தாராளமாக.... வீடு கொஞ்சம் இல்ல ரொம்ப பெருசு..

எவளோ வலிய தாங்கும் இந்த குழந்தை... ரெண்டு லக்கேஜ் ஓட மறுபடியும் ரோட்ல நிற்க, உள்ள வான்னு கூட ஒருஜீவனும் கூப்பிடல... எட்டி உள்ள பாத்தான்.... அவனை ஆதரிக்கும் அந்த பெரியமனிசியை....

"அவ தூங்கி ரொம்ப நேரம் ஆச்சி " என்றாள் ரித்திகா. அவனது எண்ணஓட்டத்தை படித்தவளாக.

என் மகள் ஊட்டி விட்ட ஒரு பாக்கெட் பிஸ்கெட், மீராவிடம் பேசும்போதே ஜீரணம் ஆயிடுச்சி.' இப்போ சாப்பாட்டுக்கு என்ன பண்றது '.

அவனது பசி எல்லையைத்தாண்ட.... "பசிக்குது..." என்று வெட்கத்தை விட்டு கேட்டே விட்டான், பாவமாக முகத்தை வைத்து கொண்டு.

அதை கேட்டதும் பதறி அடித்து ஓடிச்சென்று, இருந்ததை எல்லாம் எடுத்து வந்து, அவனுக்கு சாப்பாடு ஊட்டிவிட ஆரம்பித்தாள் சாரா.

அவள் கைகளில் இருந்து தட்டை பறிக்க முயன்றான், அவள் தருவதில்லை என்று பிடிவாதமாக நின்றாள். 'சோறு முக்கியம்...யார் கையால சாப்பிட என்ன '

அர்ஜுன் பசியை பொறுக்க மாட்டான், 'சண்டையை சாப்பிட்ட முடிச்சி வச்சிக்கலாம்' என்று பொறுமை காத்தான்.

"சாப்பிடும்போது மூஞ்சை சிரிச்சா மாதிரி வைடா, அப்போதான் சாப்பாடு செறிக்கும்" என்று திட்டினாள் சாரா.

'வராத சிரிப்பை வா வா னா, எங்கிருந்து வரும். பாவம் கொழந்தய விட்டுடுங்க பா...' என்று அர்ஜுன் நினைக்க.

"அமைதியா ஊட்டு இல்லனா எனக்கு சாப்பாடும் வேணா ஒன்னும் வேணா", முகத்தை திருப்பிக் கொண்டான், அர்ஜுன்.

அதன்பின் அவள் அமைதியாக ஊட்டி விட்டாள்.

இவ்வளவு நேரம் அவர்களுக்கு தனிமை அழித்த ரித்திகா... அவன் சாப்பிட்டு முடிக்கும் சமயத்தில் வந்தாள்.

"சரி அர்ஜுன் கிளம்பு..." என்று அவன் அருகில் வந்து நின்றாள் ரித்தி.

"நேரம் ஆச்சி வயசு பொண்ணுங்க இருக்குற இடம்... இடத்த காலி பண்ணு " என்றாள்.

'அர்ஜுன், நம்ம துரத்துறதுலயே குறியா எல்லோரும் இருகாங்க, அதுக்கு சொன்ன காரணம் சகிக்க முடியல ஆண்டி போல இருந்து கொண்டு வயசு பொண்ணுங்களாம் இதுங்க'. தலையில் அடித்துக்கொண்டான்.

"அப்படியே பாட்டினு மாத்தி சொல்லு'' என்று முறைதவன் கிளம்ப தயாரானான்.

"சரிதான் உன்னை நம்பி கிழவியை கூட விடமுடியாது" என்று அவனை வார.... total damage அர்ஜுனுக்கு.

"இந்த உலகத்துல எனக்கு தங்க கூட இடம் இல்லையா என் கடவுளே?" என்று புலம்பிக்கொண்டு இரண்டு பைகளை தூக்கினான்.

"அதான் அவளோ பெரிய ரூம் கட்டி வச்சி இருக்கியே போ அங்க...." என்றாள் ரித்திகா.

"தங்குறது சரிதான் சாப்பிட என்ன செய்றது" என்று புலம்பினான்.

"ரித்தி ஹோட்டலுக்கு போ..." என்று சொல்லி முடிப்பதற்குள்...

"நானே என் கையால செஞ்சி எடுத்து வரேன் அர்ஜுன்...." என்றாள் சாரா முந்திக்கொண்டு சொல்ல.... அவளை ரித்தி முறைக்க.

அவனுக்கு சாரா... ரித்திக்கு எதிராக பேசுகையில் கேட்க.... என்னதான் நடந்தாலும், சாரா என் பக்கம்தான்..... என்பதுபோல ரித்திகாவை பார்த்தான்.

அந்த சந்தோசம் சிறிது நேரம் கூட நிலைக்கல.

"உனக்குதான் சமைக்க வேற தெரியாதே எப்படி சமைப்ப சாரா" என்றாள் ரித்திகா. அர்ஜுனை பார்த்து நக்கலாக சிரித்துக்கொண்டு.

"நான் கத்துட்டு சமைப்பேன்...." என்றாள் சாரா. ரித்தியின் சிரிப்புக்கு எல்லையே இல்லை.

இவளை அர்ஜுன் அடிக்க வர... ரித்தி பின்னால் சென்று மறைத்தாள்.

"நீ தினமும் மூணு வேலை அவனுக்கு சமைத்து கொட்டு...." சாரா சொன்னதைவிட பெரிய இடியை அவன் தலையில் இறக்கி வைத்தாள் ரித்திகா. அவளாவது ஒருவேளையோட நிறுத்தி இருப்பா... இவ மூணு வேலைக்கு டைம் டேபிள் போட்டுட்டா... என்று அதிர்ந்தவன்,

"ரித்தி வேண்டாம் நான் உன்னோட ஒரே நண்பன் கொன்னுடாத" என்றான்.

அவளோ சிரித்தவாறு அவனை வழியனுப்பி வைத்தாள்.

'சாரா நூடுல்ஸ் கூட ரொம்ப சுமாரா தான் செய்வா" என்று புலம்பி கொண்டே போனான்.

ஒருநாள் இப்படித்தான் "நான் தான் சமைத்தேன்" என்று அவன் முன் வந்து நின்றாள்.

அதனின் விபரீதம் புரியாத அர்ஜுன்..." போ எடுத்து வா என்று அதிகார குரலில்.. சொல்லவும் உடனே எடுத்துவந்தாள்.

சாராவிடம் இருந்ததை வாங்கினான்.... மஞ்சா கலர் ல எதோ இருக்க...

"என்ன சாரா, மாமா காக புதுசா டிஷ்லாம் செஞ்சி வந்து இருக்க, ஆசையாக ஒரு ஸ்பூன் எடுத்து வாய்ல வைக்க, களி போல இருந்தது...

"சாரா களிக்கு தொட்டுக்க சாம்பார் சட்னி எதும் இல்லையா?" அவளை பார்த்து கேட்க...

"அய்யோ சார், அது மேகி களி இல்லை..." இதுகூட தெரியல என்று கலாய்க்க.

"என்னது மேகி ஆ?" அவன் வாயை போலந்து கேட்க...

அர்ஜுன் உன்னோட ஒளிமயமான எதிர்காலம் என் கண்ணுக்கு தெரிகிறது. அவன் மனசாட்சி அவனை பார்த்து கேலிசெய்யது, பாட்டு பாடியது.

"மேகி எங்க இருக்கு சரோ... எனக்கு கொஞ்சம்கூட தெரில" என்றான் ஸ்பூனால் அவள் செஞ்சதை கிண்டிக்கொண்டு.

"சமைக்க கொஞ்சம் தெரியாது சார்... ஆன மேகி சூப்பரா செய்வேன்" என்றாள் பெருமையாக.

'அடிப்பாவி மேகி செய்ய எதுக்கு சாப்பாடு செய்ய தெரியனும்.... சுடுதண்ணி காயவைக்க தெரிந்தா போதுமே' அவனே குழம்பி போனான்... அவளின் சமையல் திறனை பார்த்து.

"சமைக்க தெரியாம, எதுக்கு எனக்கு சாப்பிட கொண்டுவந்த?" என்றான் எரிச்சலாக.

"சார் நான் எங்க சாப்பிட குடுத்தேன், நீங்க தான் மிரட்டி பிடிங்கி சாப்டிங்க" என்றாள்.

"அப்போ எதுக்கு தயங்கி தயங்கி, நானே சமைச்சேன்னு வந்து என்ட சொன்ன"

"ஹோட்டல் எங்க இருக்கு கேட்கத்தான் வந்தேன், நீங்கதான் அவசரப்பட்டுட்டீங்க...." அவனின் நிலமை பாவமாக போனது.. "அவசர பட்டுட்டயே அர்ஜுன்.." என்று அவனையே கடிந்து கொண்டான்.

"வா நானும் சாப்பிட தான் போறேன் போலாம்...." என்று இருவரும் கிளம்பினார்கள்.

இதை நினைத்து சிரிப்பதா அழுவதா என்றுதான் அவனுக்கு புரியவில்லை.

அவனுக்கு தூக்கம் சென்று துக்கம் தொற்றிக்கொண்டது...அவளது சமையலை நினைத்து, இனி தினமும் கொல்ல போகறா.... இதில் இருந்து எப்படி தப்பிக்க யோசித்தபடி தூங்கினான், அவனது அலுவலக அறையில்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
13

மறுநாள் அர்ஜுன் தூங்கியவாறு நடித்துக்கொண்டு இருந்தான்... பதினோரு மணிவரை....

சாரா அவனை எழுப்பி எழுப்பி, சோர்ந்து போனது தான் மிச்சம்.

அவளும், காதல் வசனங்கள் பேசியும் பார்த்துவிட்டாள்..... இவள் காதல் டயலாக் எதாவது பேசினா, அவனுக்கு சிரிப்பு வந்துவிடும்.... நம்ம சாரா தப்பு தப்பா எதாவது ஒளறுவா.

'அப்போ உண்மையா தூங்கிட்டுதான் இருக்கானோ!!! நைட் லேட்டா தூங்கி இருப்பான் போல" என்று அவள் வேலையை பார்க்க சென்றுவிட்டாள்.

எப்போடா சாரா போவாள் என்று பார்த்துக்கொண்டு இருந்தவன், அவள் பேசிய தப்பு தப்பான, டயலாக்கை கேட்டவன், அடக்கி வைத்திருந்த சிரிப்பை மொத்தமாக சேர்த்து வைத்து, விழுந்து விழுந்து சிரித்தான். அவள் சென்ற மறு நொடி...

அவள் பேசிய வசனங்களை நினைத்துப்பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தான்.... அவள் மறுமுறை வரும்வரை.

சிரித்து முடித்ததும், அவள் கொஞ்சியதை நினைத்து, அப்படியே படுத்து கண்மூடி, ரசித்துக்கொண்டு இருந்தான்....அவள் சொன்னது அனைத்தும் நினைத்து.

'என் ரசகுல்லா... என் குளோப்ஜாமுன் இல்ல... என் பஞ்சுமிட்டாய் இல்ல..... என் தேன்மிட்டாய் இல்ல,எழுந்து சாப்டுட்டு தூங்கு டா " கண், மூக்கு, வாய், கன்னம் என்று, ஒன்னு ஒன்னுக்கும், ஒரு இனிப்பு பெயர் வைத்து கொஞ்சிக்கொண்டு இருந்தாள்.

கொஞ்சி கொஞ்சி களைச்சி போய் ஜூஸ் குடிக்க போய்ட்டா...

ரித்தி நடனம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் இடத்திற்கு ஒரு ரவுண்ட்ஸ் போய்ட்டு வந்தாள். அனைத்து வகுப்பையும் மேற்பார்வை பார்க்கும் பணி இவளுடையது. சில சமயம் ஆசிரியர் வரவில்லை என்றால் மட்டும், ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு எதாவது சொல்லிக் கொடுப்பாள் சாரா.

அவளின் பணி முடித்தது... அவன் அறைக்கு வருகையில், இன்னும் அர்ஜுன் தூங்கிக்கொண்டு இருக்க.

இவளின் பொறுமை எங்கோ பறந்தது.

'கடைசியாக ஒருமுறை கொஞ்சிட்டு, அடித்து எழுப்பலாம்' என்று முடிவு எடுத்தவள்...

என் தேன்மிட்டாய் இல்ல... கண்களை வருடியவாறு...
என் தேனடை இல்ல... கன்னத்தில் கை வைத்து, என் மிளகாய்ய்ய்ய் மூக்கை செல்லமாக கிள்ளிவிட்டு.... கொஞ்சம் இறங்கி அவன் உதட்டில் கைவைத்து என் ரசகுல்லா இல்ல, தன்னையும் மறந்து முத்தமிட நெருங்கியவள் நூலிழையில், செய்யவந்த செயலை எண்ணி விலகினாள் வெட்கத்தோடு, இவ்ளோ செஞ்சியும் எழும்பாத இவனை, என்ன செய்யலாம், தலையில் கைவைத்து யோசித்துக்கொண்டு.... சிறிது நேரத்தில் ஐடியா வர.

"அர்ஜுன் சாப்பாடு நான் சமைக்கல" என்று சொன்ன அடுத்த நொடி... அடித்து பிடித்து எழுந்தான்.

"நீ அதை முன்னாடியே சொல்லி இருக்கலாம், கொலை பசில இருக்கன், போய் எடுத்து வை... வயிற்றை தடவியவாறு" என்றான் அர்ஜுன் சாராவிடம்.

அவன் சொன்னதை கேட்டதும், சாரா முகம் திருப்பி கொண்டாள்.. திருமணம் ஆன பெண்களுக்குரிய ஆசைதான் அவளுக்கு, சமைக்க தெரியவில்லை என்றாலும் ஆசையாக சமைத்தாள், இவன் அதற்கும் பயந்து கொண்டு தூங்குவது போல நடிக்க... அவளுக்கு எதோ மொத்தமாக இழந்தது போல உணர்ந்தாள்.

சாரா யாருக்கோ கால் செய்தாள்... சாப்பாடு வாங்கி வருவதற்கு.

"இன்னும் பத்து நிமிஷத்துல உங்களுக்கான சாப்பாடு வரும், போய் பிரஷ் பண்ணிட்டு வாங்க " என்று தெரியாதவர்களிடம் சொல்லுவது போல் சொல்லிவிட்டு சென்றாள்.

"அதுலாம் ரெடி ஆகி தான் படுத்துட்டு இருதேன் " அவனையும் மீறி உண்மையை அர்ஜுன் உளறிவிட்டான். சாராவின் முகம் குட்டிய ஆயிடுச்சி... அவனது பதிலை கேட்டு.

அவன் அவளிடம் விளையாடத்தான் அப்படி செய்தான், அது அவளை இவ்வளவு பாதிக்கும் என்று அர்ஜுன் நினைக்கல.

முதலில் எழுப்பும் போதே எந்திரிக்க நினைத்தவன், இவளிடம் கிடைத்த கொஞ்சல், நெருக்கம் எல்லாம் அர்ஜுன் அவளிடம் எதிர் பார்த்தது, கிடைக்கவும் அதை ரசிக்க நினைத்தவன், தூங்குவது போல பாசாங்கு செய்து கொண்டு இருந்தான். அதுமட்டும் இல்லாமல், அவளது சமையல் என்றால் இவனுக்கு சிறிது பயம்.

சாப்பாடு வரும் வரை சாரா அமைதியாக அமர்ந்து இருந்தாள்...

இவளது அமைதி அர்ஜுனுக்கு என்னவோ செய்தது. சாராவையே பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தான்.

அவனுக்கு வாங்கிவரச் சொன்ன சாப்பாடு வந்ததும், அவனுக்கு அமைதியாக எடுத்து வைத்தாள்.

அர்ஜுன் மனமோ பரபரத்தது... 'எனக்காக ஏதோ செஞ்சி எடுத்து வந்ததை கொடு' என்று கூற நினைத்தவன் ஆசையை அடக்கிக்கொண்டான். 'ரித்தி வாழ்வை சரி செய்து மத்ததை, பாத்து கொள்ளலாம், என்று அமைதியாக சாப்பிட தொடங்கினான்.

அர்ஜுன் உணவை சாப்பிட்டு முடித்ததும், சாரா அவளின் உணவை உண்ண ஆரம்பித்தாள்.
அவனுக்கு எடுத்து வந்ததையும் சேர்த்து சாப்பிட்டால் அமைதியாக.

இதை எல்லாம் அர்ஜுன் வருத்தத்தோடு பார்த்துகொண்டு இருந்தான்.

ரித்திகா அர்ஜுனை வெறித்து பார்க்க... "இவனுக்கு என்னாச்சி, வித்யாசமா பன்றான்" ரித்திகாவிற்கு அர்ஜுன் செயலின் நோக்கம் புரியவில்லை.

"இவங்க செய்றத பாத்தா, என்ன ஒரு வழி செஞ்சிடுவாங்க போல..." என்று ரித்திகா அர்ஜுனை பரிதாபமாக பார்த்துக்கொண்டு இருந்தாள்.

சாரா சாப்பிட்டுவிட்டு தாரா குட்டியை தூக்கிக்கொண்டு, தூங்கவைக்க சென்றாள்.... அர்ஜுனும் வகுப்பை முடித்துவிட்டு, ஜூஸ் போட்டு எடுத்துவந்தான் அனைவருக்கும்...

"நீ போட்ட ஜூஸ் குடிக்கலனா, அந்த நாளே முழுமையாகாதுடா..." என்றாள் ரித்திகா.

"ஜூஸ் வேணும் அதுக்கு இவளோ பெரிய ஐஸ் வேண்டாமே கண்மணி...." என்றான் ரித்தியை வெறுப்பு ஏத்துவதற்காக, கண்மணியை அழுத்தி சொன்னான் அர்ஜுன்.

ரித்திகா அவனை முறைத்துவிட்டு "கண்மணியாம் கண்மணி..." ஆத்திரத்தில் அந்த பெரிய கண்ணாடி கோப்பையை மூச்சி விடாமல் குடிக்க துவங்கினாள்.

பாதி டம்ளர் குடித்து முடிக்கும் முன்பே இரும்ப தொடங்கிவிட்டாள்... "ரித்தி என்ன இது முட்டாள்தனம்.." அவளை திட்டியவாரு அர்ஜுன் தலையை தட்டிவிட்டுக்கொண்டு இருந்தான்.... கொஞ்ச நேரம் பிடித்தது, ரித்திகா இயல்பாக ஆக...

அங்கு இன்னொரு ஜீவன், அவளது செயலை பார்த்து கோபம் வந்தாலும், பதறித்தான் போனான்," இந்த சமயத்தில் அவள் பக்கம் இல்லாமல் போனோமே" என்று.

"அதை சொல்லாத அர்ஜுன்" என்றாள்.

"ஏன் நான் சொல்லக்கூடாது, அப்படித்தான் சொல்லுவேன் " என்று வீம்பு பேசினான்.

"அது அவன் மட்டும் தான் சொல்லணும்...." என்றாள் ரித்தி.

இதை கேட்டதும் அவளை ரகசியமாக பார்த்துக்கொண்டு இருக்கும் கடுமையான முகம் கொண்ட உருவத்திற்கு.... மெல்லிய சிரிப்பு மலர்ந்தது...

அவள் சொல்லி முடித்த மறு நொடி, ரகசிய கேமரா பொருத்தி இருந்த இடத்தை நோக்கி கண்ணடித்தான் அர்ஜுன். அவனது செயலை கண்டு அவன் திகைத்துவிட்டான், தெரிஞ்சிடுச்சா என்பதுபோல அமர்ந்து இருந்தான்... "தெரிஞ்சி எதுக்கு எடுக்காம இருக்கான்", என்று அந்த கருப்பு மற்றும் வெள்ளை உடையில் இருந்தவன் யோசித்துக்கொண்டு இருந்தான்.

"இப்போ அவன் வந்தா.... ஏத்துப்பியா?" ஒருவழியா தயங்கியவாறு கேட்டு முடித்தான், அர்ஜுன்.

மறுப்பாக தலையை ஆட்டிவிட்டு... எழுந்து சென்றுவிட்டாள்.

ரித்திகாவின் இந்த பதில்.... அர்ஜுனுடன் சேர்ந்து, அவளின் நிழலாய் தொடர்ந்து வரும் அவனுக்கும் இதயம் வலித்தது....

தன்னை பற்றி பேசும் போது எழுந்து சென்றவளை, அவனால் தடுக்கக்கூட முடியவில்லை என்று தன் நிலையை எண்ணி வருந்தியவன்... அடுத்த நொடி, இதற்கு காரணமானவனை எதாவது செய்யவேண்டும் என்ற வெறி வந்தது....

இவை அனைத்திற்கும் பழிவாங்கும் நேரம் தூரமில்லை என்று நினைத்து, இருக்கையில் இருந்து எந்திரித்தான் உச்சகட்ட கோபத்தில்....

சிறிது நேரம் மனதை தேற்றிக்கொள்ள, அலுவலக வேலையை தீவிரமாக முடித்துவிட்டு, மனது கொஞ்சம் சாந்தமாக ஆகவும் ஒரு பெருமூச்சோடு, மறுபடி அவனது காதலியை பார்க்கும் வேலையை தொடர்ந்தான்.

இங்கு அர்ஜுனிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, இதுநாள் வரை ரித்திகாவை அவளது காதல்கணவனிடடம் சேர்த்துவைக்க, மறைமுகமாக அர்ஜுன் செய்த அனைத்து முயற்சியும் தோல்விதான்.

இவளை இப்படி விட்டுட்டு அவனது வாழ்க்கையை தொடங்குவதில், அர்ஜுனிற்கு சிறிது கூட விருப்பம் இல்லை. முன்பு சாரா மேலிருந்த கோபம், அர்ஜுனிற்கு இப்போ சுத்தமாக இல்லை. கொஞ்சி கொஞ்சி பேசும் மனைவியை, எந்த ஆணுக்கு தான் பிடிக்காது...

'ரித்திகாவை சரிசெஞ்சிட்டு சரோவைப் பாத்துக்கலாம்.... அதுவரை என்னை நம்பாததுக்கு, அனுபவிப்படி என் செல்ல ராட்சசியே' என்று நினைத்து கொண்டு, அவசரமாக அலுவலகத்தை விட்டு கிளம்பினான். அடுத்த திட்டத்தை தீட்டிக்கொண்டு.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
14

இது அனைத்திற்கும் முடிவு கட்ட எண்ணினான் அர்ஜுன், அதற்காக அதிவேகமாக அவனின் தம்பி ஆதியை நோக்கி சென்றான். ( Aarthi un alu vantan paru)

யாரிடமும் அனுமதி கேட்காமல் உள்ளே சென்றான், வாட்ச்மேன் அவனின் பின்னே வர...

"சார் அனுமதி இல்லாமல் உள்ளே போனா, என் வேலை போய்டும்", என்று அவனின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், போட்டி போட்டு ஓடிவந்தான் அந்த வாட்ச்மேன்...

"என்ன தடுக்க நீ யாரு, தள்ளு.." என்று அவனது ஒரு கையால் வாட்ச்மேனை இடித்துவிட்டு சென்றான், அர்ஜூன்.

அர்ஜுன் பின்னே கெஞ்சிகொண்டு வந்தான் வாட்ச்மேன். ஆனால், அது அவன் காதுகளில் விழுந்தால் தானே.

ஆதித்யா, பெயர்ப்பலகை தங்க நிறத்தில் மின்ன, அதனை பார்த்து ஒரு மெச்சும் பார்வை பார்த்து, பெருமூச்சு விட்டுக்கொண்டு உள்ளே சென்றான்.

"ஆதி நான் உன்கிட்ட பேசனும்..." என்றான் அர்ஜுன் எடுத்த எடுப்பில்.

சாதாரணமாக அமர்ந்து இருந்தவன், அர்ஜுனை கண்டதும் மிடுக்காக அமர்ந்தான், ஆதி.

"சொல்லுங்கள் ஆட்டக்கார அர்ஜுன்?" என்று கேலிசெய்து வரவேற்றான் ஆதி.

அவன் பேசிய விதத்திற்கு வெறி வந்தாலும், அனைத்தையும் அடக்கிக்கொண்டு...

"நான் உன்கிட்ட பேசனும்" என்றான் அர்ஜுன்.

பேசனும்னு சொன்னதுமே பேசுவதற்கு அவன் என்ன சாதாரண மனிதனா? ஆதி ஆயிற்றே..

"தாராளமாக உனக்கு இல்லாத நேரமா, ஆட்டக்கார சார்... என்ன, அங்க ஆடுனது பத்தாதுன்னு, இங்க ஆட வந்துட்டயா" என்றான். அதிலும் ஆட்டக்காரன் என்ற வார்த்தைக்கு மட்டும் அழுத்தம் கொடுத்து கேலி செய்தான்.

"பாப்பாவை பார்க்கணும் னு கூட உனக்கு தோனலைய டா ?" என்றான் அடக்கி வைத்த கோபத்தோடு.

"அது என் விருப்பம்..." என்றான் ஆதி சாதாரணமாக.

"மனுசனா டா நீ, உன் குழந்தை டா அவ... எப்படிடா உன்னால அவளப்பிரிஞ்சி இருக்க முடியுது?" என்றான் அர்ஜுன் கோபத்தோடு.

"அத எங்கள பிரிச்சவங்ககிட்ட கேக்கணும் அர்ஜுன் சார்" என்று ஆதி கர்ஜிக்க,

"அதற்கும் முன்னாடி நீ செஞ்சத மறந்துடாத?" என்றான் அர்ஜுன்.

"சரி அதை விடு... பழசை எதுக்கு பேசிட்டு, இப்போ டீல் பேசலாமா," என்றான் ஆதி, மர்ம சிரிப்போடு...

"அதற்கு முன்னாடி ஒரு கேள்வி..." என்று தொடங்கினான் ஆதி. "இவ்வளவு நாள் இல்லாத திடீர் பாசம் எங்க இருந்து வந்தது, ஆட்டகார சார்" என்றான் ஆதி நக்கலாக அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு.

"எதும் தெரியாம பேசாத ஆதி..." என்றான் அர்ஜுன்.

"எல்லாம் தெரிஞ்சி தான் பேசுறேன் "

"நான் சொன்னாலும் உனக்கு புரியாது ஆதி..." என்றான்.

" எனக்கு புரிஞ்சா வரை போதும், சரி அதை விடு டீல் பேசலாமா, இப்போ?,

அர்ஜுன் நீ சொல்றது எல்லாம் கேட்கறன்... நான் சொல்ற வெறும் ரெண்டே விஷயம் தான், அதை செஞ்சா, நீ சொல்றத கேக்க நான் ரெடி..." என்றான் கூல் ஆக.

ஆதி சாதாரணமாக கோபத்தை வெளிப்படுத்துவான் என்று நினைத்த அர்ஜுன்னுக்கு தெரியவில்லை, வாழ்கையை பணயம் கேட்பான் என்று,

"ஒன்னு அம்மா என்கூட இருக்கனும், இன்னோனு ரித்தி, பாப்பா என்கூட இருக்கனு".

'அம்மா அவன்கூட இருக்கனும் னா நான் சாரா கூட இல்லனா தான் அம்மா அவன்கூட இருப்பாங்க ' சிறிது நேரம் அமைதியாக இருந்த அர்ஜுன். ஆதிக்கு தெரியவில்லை மீராவிற்கும் அர்ஜுனுக்கு நடந்த சண்டை, தெரிந்து இருந்தாள் இவ்வாறு கேட்டு இருக்கமாட்டானோ என்னவோ.

"சரி...." என்றவன் சிறு தலை அசைவோடு சென்றுவிட்டான்... இந்த ரணத்தை எப்படி போக்குவது, என்றுதான் தெரியவில்லை.

அவன் மனமோ 'சாராவையும் அன்னையையும் எப்படி விட்டுவிட்டு இருக்க முடியும்' என்ற கேள்வி மனதில் பாரமாக ஏறியது.

ரொம்பநேரம் இங்கேங்கோ அலைந்து திரிந்து, அவனின் அலுவலுக அறைக்கு சென்றான்.

வழக்கம் போல சாரா அவனுக்காக சமைத்ததை அவள் பக்கமும், கடையில் வாங்கியதை அவன் பக்கமும் வைத்துவிட்டு, அவன் வரவுக்காக காத்துக்கொண்டு இருந்தாள்.

அவனுக்கான இடத்தில் அமராமல், அவள் சமைத்த சாப்பாட்டை எடுத்து போட்டு சாப்பிட ஆரம்பித்தான்,' அது எனது...' என்று வாய் வரை வந்த வார்த்தையை சாரா முழுங்கிவிட்டாள். அவனும் அமைதியாக மனதுக்குள், அவளை மேச்சிகொண்டான், செம டேஸ்ட்டுன்னு... குறை சொல்ல ஒன்னும் இல்லை, அவ்வளவு நேர்த்தியாக சமைத்து இருந்தாள் அவனுக்காக. உணவின் சுவை மனதுக்கு சென்றடைந்தது.

"சாப்பாடு நல்லா இருக்கு, எந்த கடைல ஆர்டர் செஞ்சியோ, இனி எனக்கு அங்கு இருந்தே வாங்கிட்டு வந்துடு" என்றான் அர்ஜுன்.

அவனுக்கு தெரியும், இனி இந்த சாப்பாட்டை தவிர, அவளிடம் செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்க போவது அர்ஜுன் மட்டுமல்ல சாராவும் தான், மனதுக்குள் சிரித்துக்கொண்டு. சாப்பிட்டு முடித்தான்.

அனைத்தையும் எடுத்துக்கொண்டு, சாரா கிளம்ப தயாரானாள். அறையில் ஏதோ சத்தம் கேட்க, சாரா எட்டி பார்த்தாள். அர்ஜுன் எதையோ தாராவின் பொருட்களில் தேடிக்கொண்டு இருந்தான்.

"அர்ஜுன் என்னாச்சி? என்ன வேணும்?" என்றாள் அவன் அருகில் நின்று.

"சாக்லேட் வேணும்.. இருக்கா?" என்றான் காரம் தாங்காமல், உஷ் உஷ் என்று மூச்சி வாங்கி கொண்டு.

'இந்த நேரத்தில் அது எதுக்கு இப்போதானே சாப்பிட்டான்' என்று யோசனையோடு சாரா அர்ஜுனை பார்த்தாள்.

"காரம் ஜாஸ்தி" பேசிக்கொண்டே அர்ஜுன் தேட...

அவனின் அவஸ்தை இவளால் பொறுக்க முடியாமல். என்ன செய்வது என்று யோசித்து, தண்ணீர் அருந்த அவனிடம் நீட்ட, ஏற்கனவே அவன் முழுசா ஒரு லிட்டர் மேலே தண்ணிர் குடித்தும் காரம் அடங்காமல் தான், குட்டிபாப்பா பொருட்களில் சாக்லேட் தேடி கொண்டு இருந்தான்.

எவ்வளவு நேரம் தேடியும் இனிப்பு ஏதும் கிடைக்கல... அவன் படும் அவஸ்தையை பொறுக்காமல், அவன் மீது அமர்ந்து முத்தமிட தொடங்கினாள்.... ஆரம்பித்தது இவளாக இருந்தாலும் அந்த செயலை அர்ஜுன் தன்வசம் ஆக்கிக்கொண்டான்... அவர்களின் வாழ்க்கையின் அடுத்த கட்டதுக்கு கொண்டு சென்றது.... இத்தனை நாள் பிரிவை மொத்தமாக போக்கும் விதமாக, ஒருவரை ஒருவர் நீண்டநேரம் பிரியாமல்..... காதல் காவியத்தை எழுத தொடங்கிவிட்டார்கள்.

சாரா எதோ முணுமுணுக்க... அவன் அவளை இன்னும் நெருங்கி... "என்ன.." என்று வினவ..

"பிடிக்கலனு சொல்லி செய்யற வேலைய பாரு," என்றாள் வெட்கம் கலந்த சிரிப்போடு

"ஆரம்பித்து வைத்தது யார்" என்று அவளை பார்த்து அர்ஜுன் கேட்க... வெட்கத்தில் சிவந்தாள் சாரா.

"விட்டா இன்னும் 10 மாசத்துல குழந்தை வந்துவிடும், அவ்ளோ அவசரம் உங்களுக்கு" வெக்கத்தில் அவன் மார்பில் புதைந்தாள்.

அவள் கூறுவது சரிதான்... அவளை விலகிவிடும் நோக்கில் நகர்த்த.

"அர்ஜுன் ஒன்னு கேட்கவா?" என்றாள் தயங்கியவாறு.

அமைதியாக "என்ன?" என்றான் அர்ஜுன், அவளது முகத்தை ஆர்வமாக பார்த்து.

சாரா தயங்கியவாறு அவனை பார்க்க... கன்னத்தை காட்டி.... முத்தம் கேட்டு வெட்கப்பட்டாள். இவளின் வெட்கம் அவனை கொல்லாமல் கொன்றது..

கணக்கு வைக்காமல் தொடர்ச்சியாக அவள் முகம் முழுவதும் இதழை மென்மையாக ஒற்றி எடுத்தான்...

வழி முழுவதும் அவன் முத்தமிட்ட கன்னத்தை வருடியவாறு, ரித்திகா வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

விதி அவளை பார்த்து சிரித்தது... கடைசி வரை உனக்கு மிச்சம் ஆனது இந்த ஒருநாள் இன்பமும் இந்த முத்தம் மட்டும்தான் என்று...

வீட்டில் உள்ளே வந்து அதிர்ச்சியுடன் அனைவரையும் நோக்கினாள்... சாரா.

அவளுக்கு தெரியாத அனைத்து முடிச்சும் அவிழ்க்கப்பட்டது. அவளது வாழ்கையைத்தவிர.
 
Top