ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் வெட்க சிவப்பழகியே _ கதை திரி

Status
Not open for further replies.

T22

Well-known member
Wonderland writer
19 சிவப்பழகியே...

"நீ செஞ்சதுக்கு தூக்கி வச்சி கொஞ்சுவாங்களா? என் அனுமதி இல்லாம எனக்கு எதுக்கு முத்தம் கொடுத்த" அவனுக்கு இணையான கோபத்தை காட்ட துவங்கி இருந்தாள்.

"உரிமை இருக்கு... யாரை கேட்கனும்?" திமிராக அவனும் செல்ல,

"என்னை கேட்கனும்"

"ஓ... தினமும் என்கிட்ட கேட்டுதான் கட்டிப்பிடிச்சி தூங்குனியா?" வார்த்தையால் சங்கவிக்கு லாக் போட.

"பிரண்டா நினைச்சிதான்..." சங்கவி தயங்கிக்கொண்டே சொல்ல.

"சட் அப் சங்கவி... நீ என்ன இவ்வளவு பார்வேட் ஆகிட்டியா? பையன் பிரண்டை கட்டி பிடிச்சி தூங்குற அளவுக்கு"

'ஐயோ வேந்தன் கண்டு பிடிச்சிட்டாறே... சரி சமாளிப்போம். எக்சாம் முடியும் வரை சொல்ல கூடாது'

அவளது அமைதியை கண்டு, "இன்னும் எதுக்கு நடிச்சிட்டு இருக்க, பிடிச்சிருக்குன்னு நேரா சொல்லு" வேந்தன் நேராக கேட்க.

"இல்ல எனக்கு உன்னை பிடிக்கலை" சங்கவி காலேஜ் முடிச்சி செல்லும் யோசனையில் இருக்க.

"ஓ..." வேந்தனுக்கு சங்கவி எண்ணம் புரிந்தது, இருந்தும் கோபம் பீரிட்டது, 'என்ட சொன்னா நான் என்ன தப்பாவா நினைக்க போறேன்'

"ஆமா அதுக்கு என்ன?" சங்கவி பதற்றத்தை மறைத்துக்கொண்டு தைரியமாக நிற்க.

"ரூம்விட்டு வெளியே போடி" வேந்தன் கர்ஜித்தான். 'காதலை சொல்ல எதுக்கு இவ்வளவு தயக்கம்? என்மேல இவளுக்கு நம்பிக்கை வரலை அதானே' கோபம் தலைக்கு ஏறியது அவனுக்கு.

"சரிதான் போடா... "அவளது அலட்சியம் வேந்தனுக்கு வெறுப்பாக இருந்தது. அவள் செய்த அலட்சியத்தை அவன் திரும்ப காட்டினாள் சங்கவி தாங்குவாளா?

அடுத்த நாள் கடைசி தேர்வு எழுத தயாராகிக் கொண்டிருக்க, வேந்தன் சாப்பிட்டு முடித்து அலுவலகம் கிளம்ப இருந்தான், சங்கவியும் தயாராகி வந்து வண்டியில் ஏறி அமர.

"சங்கவி இறங்கு"

"நம்ம பிரச்சனை அப்புறம் வச்சிக்கலாம், என்னை காலேஜில் விடு"

"முடியாது... ஆட்டோ பிடிச்சி போ" விடாபிடியாக சங்கவியை இறக்கிவிட்டுவிட்டு வேந்தன் கிளம்பி செல்ல.

அவனது இந்த கோபத்தை பெண்ணவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

"போடா போ... இனி செத்தாலும் உன்கிட்ட பேசமாட்டேன்"

"சந்தோஷம்.... நிம்மதி" வேந்தன் வண்டியை நிறுத்தி கத்தி சொல்லிவிட்டு சென்றான்.

சங்கவிக்கு வேந்தன் இப்படி நடந்துகொள்வது ஏதோ போல இருந்தது.

'கேட்காம முத்தம் கொடுத்தது அவன், தவறு நான் என்ன செஞ்சேன், அதுக்கு ரியாக்ட் செஞ்சது என் தப்பா?' தேர்வை முடித்துவிட்டு நேராக ராகவியை பார்க்க போயாச்சி, தாயும் மகளும் பல கதை பேசி சிரிக்க.

கடைசியாக சங்கவி பயந்துகொண்டே குழலி பற்றி கேட்க.

"எதுக்கு இவ்வளவு பயம்... அவ லைப் அவ பாத்துப்பா அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு" கடைசியாக அனுப்பிய குறுஞ்செய்தியை ராகவி சங்கவிறிடம் காட்ட, படித்து பார்த்துவிட்டு.

"நீ ரொம்ப மோசம் அக்கா பாரு கோபமா கடைசியா பேசி இருக்கா கொஞ்சமா நல்லா பேசி இருந்தா தான் என்ன உங்களுக்கு"

"அவ எல்லாம் சரி செஞ்சிட்டு வரட்டும் மொத்தமா பேசிக்கலாம்" ராகவி சங்கவியை சமாதானப் படுத்திவிட்டு, சங்கவிக்கு பிடித்த உணவு சமைத்துக்கொண்டிருக்க,

நாள் முழுவதும் வேந்தனுக்கு மனசே கேட்கலை, எப்போடா ஐந்துமணி ஆகும் என காத்திருந்தவன், முதல் ஆளாக அலுவலகத்தை விட்டு வெளியே வந்த வேந்தன், சங்கவியை பார்வையால் தேட, அவள் இருந்தால் தானே கண்ணுக்கு கிடைக்க, "மா சங்கவி எங்க"

"அவ அம்மா வீட்டுக்கு போறேன்னு காலையிலையே சொல்லிட்டு தான்பா போனா"

"சரி மா" கமலா மகனின் குரலில் இருந்த தவிப்பை கண்டுகொண்டவர், மகனை குளிர்விக்க...

"சரி இன்னைக்கு நீ அங்கே தங்கிக்கோ, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு"

"சரி மா" என்றவன் உற்ச்சாகமாக... சங்கவியை பார்க்க நாலு சட்டை மாற்றி எது நல்லா இருக்குன்னு கமலாவை ஒரு வழி செய்துவிட்டு கிளம்பினான்.

'வேந்தா ரொம்ப அவசர பட்டுட்டே... பாவம் ஒரு போல ஆகி இருக்குமில்ல அவளுக்கு. அதான் கோபமா பேசிட்டா அதுக்கு நீ வண்டியில் இருந்து இறக்கி விட்டு இருக்க கூடாது. எப்படி அவளை சமாளிக்க போறேனோ ஒன்னும் புரியலை" வழி முழுவதும் புலம்பிக்கொண்டு மாமியார் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

மருமகன் மகள் பின் நூல் பிடித்தார் போல வருவதை பார்த்தும், ராகவி வேந்தனை ஓட்டி தள்ளிட்டார்..." என்ன வேந்தன் என் பொண்ணை பிரிஞ்சி இருக்க முடியலை போல"

"ஆமா அத்த மனசு கிடந்து தவிக்குது ஆனா உங்க பொண்ணு தான் கண்டுக்குறதே இல்ல"

"ம்க்கும்..." சங்கவி வேந்தனை முறைத்துவிட்டு இரவு உணவு எடுத்துவைக்க சென்றுவிட.

ராகவியும் வேந்தனும் பேசிக்கொண்டிருக்க, அடுப்புக்கு பதிலாக சங்கவி வயிறு தான் பத்திக்கொண்டிருந்தது, காலையில் அவன் செய்த காரியம் அப்படி,

இரவு உணவு முடிந்ததும் ராகவி அறைக்குள் புகுந்துகொள்ள, பார்வையாள் சங்கவியிடம் மன்னிப்பு கேட்க, அவனது பார்வையின் அர்த்தம் புரிந்தாலும், புரியாதது போல சங்கவி மெத்தையில் ஓய்யாரமாக படுத்துக்கொள்ள, பின் வந்த வேந்தன், அவளை உரசியபடி படுக்க.

"இப்ப எதுக்கு பக்கம் வரிங்க... தள்ளி படுங்க, பக்கம் படுத்ததுக்கு தான் ஓவரா பேசுனிங்கயில்ல" சங்கவி அவனை தள்ளிவிட.

"ஏன் வரக்கூடாதா? நீ மட்டும் நேத்துவர இப்படி தானே படுத்த" அவள் அவன் மேல் கைப்போட்டு எப்படி படுப்பாளே செய்து காட்டினான்.

"ஆமா படுக்ககூடாது... அது நேத்து இது இன்னைக்கு" அவனை விலக்கிவிட படாத பாடு பட்டுவிட்டு திரும்பி படுத்துவிட்டாள்.

"என் பொண்டாட்டி என் உரிமை" பின்னிருந்து அவளது வயிற்றை இறுக்கி பிடித்தே தூங்கத் துவங்க.

வேந்தன் கையை பிடித்து இழுத்து கடித்து வைத்துவிட்டாள், வலியில் தூக்கம் எங்கோ பறந்திருந்தது அவனுக்கு, "சங்கவி ஓவரா செஞ்சிட்டு இருக்க நீ"

"யாரு நானா ? நீங்களா?"

"புரியலை" கண்கள் இறுக்கி வேந்தன் உத்து பார்க்க.

"எனக்கு உங்களை பிடிக்கலை... விடுங்க"

"உன் வாய்மொழிக்கும் செயல் மொழிக்கும் சமபந்தம் இல்லையே நேற்று வரை நல்லா தானே இருந்த"

"பிரண்டா பிடிக்கும், அதுக்கு மேல எனக்கு... எனக்கு... உங்களை பிடிக்கும் ஆனா..."

"ஆனா என்ன இழுக்காம விஷயத்தை சொல்லு"

"ஆனா புருஷனா பார்க்க முடியலை"

"அதான் ஏன்? என்மேல நம்பிக்கை இல்லையா?"

"அப்படி எல்லாம் இல்ல அத்தான்" வேந்தன் சங்கவியை குழப்பமாக பார்க்க, அவளது முகபாவனையை வைத்து யூகித்தவன், 'ப்ளீஸ் சக்கவி அது மட்டும் சொல்லிடாத... மனதால் மன்றாடினான்' சங்கவி தயங்கி தயங்கி மனதில் உருத்தும் விஷயத்தை உடைக்க தயாராகினாள்,

"அக்கா கட்டிக்க இருந்தவர்ன்னு தான் நினைப்பு வருது" வேந்தன் உடல் இறுகியது.

"சரி கொஞ்சம் பொறுமையா நான் சொல்லுறதை கேளு" வேந்தன் தன்னிலை விளக்கம் தர ஆரம்பிக்கும் முன், "வேணா இப்ப எது சொன்னாலும் சமாதானப் படுத்த பொய் தான் சொல்லுவீங்க. அக்கா இல்லைன்னு, நான் தான் பார்த்தேனே அவளுக்கு தேடி தேடி டிரஸ் நகை எல்லாம் வாங்கி தந்தது"

ஆம் அவன் தேடி தேடி செலக்ட் செய்தது உண்மைதான், ஆனால் சங்கவிக்கு தான் அதை செய்திருந்தது அவளது கோபத்தால் அன்று நடந்ததை சங்கவி மனம் மறந்திருந்தது.

"நான் சொல்லுறது எல்லாம் பொய்ன்னு சொல்ல வரியா சங்கவி?"

"ஆமா" என்றாள் அதன் பிறகு வேந்தனின் உடல் தளர்ந்து அப்படியே விட்டத்தை பார்த்து படுத்துவிட்டான்.

சொல்ல வருவதை கேட்காமல் மொத்தமாக பொய் தான் சொல்லபோகிறான் என சொன்னவளிடம் விளக்கம் கொடுக்க முன் வரவில்லை, வேந்தன் இரண்டு தினம் அப்படியே பட்டும் படாமல் மாமியார் வீட்டில் தங்கிவிட்டு வீட்டுக்கு வரும்போது கமலா பெரிய குண்டாக சங்கவி தலையில போட காத்திருந்தார்.

******

கொடி கோபமாக சண்டை போட தான் காத்திருந்தாள், ராஜாவை பார்த்ததும் புது ஐடியா தோன்றியது.

"ராஜா நம்ம எல்லாம் படத்துக்கு போய் ரொம்ப நாளாச்சில்ல இன்னைக்கு போலாமா? டிக்கட் போடவா"

"சரிக்கா எல்லோருக்கும் போடுங்க" ராஜா மனதில் ஒரு ஆசை எழுந்தது.

'குட்டி... இன்னைக்கு சினிமாக்கு போலாம், முதல் சினிமா' மனதில் பட்டாம் பூச்சி பறந்தது, சிறிது நேரம் ஓய்வெடுக்க படுக்க.

குழலி சந்திராவை பார்க்க போக, "சொல்லுங்க அத்த அரசிக்கு என்ன?"

"அவளுக்கு உடம்புக்கு முடியலையாம், கிளம்பி வரட்டா கேட்டேன், அதுக்கு அண்ணா நினைப்பாவே இருக்காம்... பேச வைக்க சொல்லுறா, நான் என்ன செய்யுறது ஒன்னும் புரியலை"

"அவ்வளவு தானே, உங்க போன் கொடுங்க நான் பேச வைக்கிறேன்"

"உன் போன் என்னாச்சி"

"அது கீழே போட்டேன் பாதி டிஸ்ப்ளே போயிடுச்சி" போனை வாங்கிக்கொண்டு ராஜா அருகில் போய் உட்கார்ந்து அரசிக்கு வீடியோ கால் போட்டு பேசிக்கொண்டிருக்க.

"அண்ணி அண்ணா பேசுவாரா..." தூக்கத்தில் இருந்த ராஜா அரசியின் குரல் கேட்டு வேகமாக எழுந்தவனுக்கு நெஞ்சம் முள்ளாக குத்தியது.

"அரசி..." குழலி கையில் இருந்த திரையில் எட்டிபார்க்க, அண்ணன் முகம் பார்த்ததும், அந்த சோர்விலும்... "ஐ.... அண்ணா என்ட பேசிட்டான்" குதிக்காத குறையாக கூச்சலிட்டாள்.

"என்னாச்சிடாமா.... மூஞ்சே சரி இல்லையே"

"எக்சாம்க்கு ரொம்ப படிச்சி இப்படி ஆகிடுச்சி அண்ணா"

"சரி எப்ப ஊருக்கு வர?"

"ஒரு வாரம் கழிச்சி, பிரண்ட்ஸ் கூட இருந்துட்டு வரேன். அண்ணியை பத்திரமா பாத்துக்கோங்க, உங்கள போலவே செம ஸ்வீட்..." பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

"அண்ணா..."

"சொல்லு அரசி...."

"அம்மாக்கு சளி பிடிச்சிருக்கு... உடம்பு முடியலை ஹாஸ்பிட்டல் கூட்டி போறீங்களா"

"என்... என்னாச்சி? " தன்னையும் மீறி பதறினான் ராஜா.

"பெருசா இல்லை, அண்ணா பெருசா ஆகுரத்துக்கு முன்னாடி சரி ஆனா பரவாயில்லையில்ல அதான்"

"சரி நீ ரெஸ்ட் எடு நான் அம்... சித்திய பாத்துக்கிறேன"

"தேங்ஸ் அண்ணா லவ் யூ" போன் கட் ஆனதும் குழலி கையில் போனை கொடுக்க.

"இது என் போனில்லை, அத்தையை ஹாஸ்பிட்டல் கூட்டிபோக போறீங்களா அவங்ககிட்ட கொடுத்திடுங்க" குழலி மெத்தையில் இருந்து எந்திரிக்க, தாவணி விலகி தெரிந்த அவளது இடை கருத்து போயிருந்தது.
அடுத்து அவளது முகத்தை பார்க்க அதுவும் இயல்பாக இருக்கும் கலரை விட மங்கி போயிருந்தது. எல்லாம் என்னாலதானே, உடல் இழைத்து, கருத்து எதுக்கு இந்த தேவையில்லாத காதல் என்னால உனக்கு ஒரு சுகத்தையும் கொடுக்க முடியாது, கஷ்டம் மட்டும் தான் கொடுக்கபோறேன் நான் உனக்கு வேண்டாம்" ராஜாவாக யோசிக்க.

காதல் கொண்ட விக்கியோ... 'இல்லை இவ எனக்குமட்டும்... நான் விட்டுக்கொடுக்க மாட்டேன் உறுதியாக இருந்தது'

"சினிமா போலாம் ரெடியாகு"

"நிஜமாவா?"

"ம்ம்ம்"

"யார் யார் போறோம்?"

"வீட்டில் எல்லோரும்..."

"ஓ... அண்ணா வராங்களா?"

"ம்ம்ம்ம்" அவளது முகத்தில் பூத்த புன்னகை அவனுக்கு இனித்தது.

இருவரும் தயாராகி கீழே வர, மலர்கொடியின் குழந்தை மாமா என அவனின் கழுத்தை கட்டிக்கொண்டது.

குழலிக்கு ராஜாவின் சிரித்த முகத்தோடு குழந்தையை கொஞ்சுவதை பார்த்து.

அவர்களது குழந்தையை தன்னவன் கொஞ்சுவது போல பிம்பம் தோன்ற, பெண்ணவள் முகம் அந்திவானமாக சிவந்தது.

குழந்தையை கீழே விட்டுவிட்டு போன் பேச சென்றிருந்த நேரம், "அத்த" என அழைத்த குழந்தையை அள்ளி கொஞ்ச ஆசை வந்தது. ஆனால் கொடியின் புத்தி தெரிந்து தூக்க அவள் என்ன முட்டாளா, தூரம் இருந்தே கொஞ்சினாள்.

"கையில் வைத்திருந்த சாக்லேட்டை குழந்தை பாசமாக நீட்ட" குழலி தயங்கிக்கொண்டே வாயில் போட, இந்த காட்சி சரியாக கொடி கண்களில் பட.

"ஏய் எதுக்கு குழந்தைகிட்ட இருந்து திருடி சாப்பிடுற"

"அவ தான் கொடுத்தா, தேவையில்லாம பேசுறீங்க நீங்க"

"ஆமா... வந்துட்டா இவகிட்ட பேசுரது தான் எனக்கு வேலை பாரு" கொடி குழந்தை தலையில் நங்கென ஒரு கொட்டு வைத்துவிட்டு தூக்கி சென்றாள், குழந்தை அழுதுகொண்டே போனது.

என்ன தான் தைரியமாக கொடியிடம் எதிர்த்து பேசியிருந்தாலும் அவள் சொன்ன சொல்லை ஜீரனிக்கவே முடியவில்லை, 'என்னை பார்த்தா திருடி போலவா இருக்கு... அதும் குழந்தைக்கிட்ட இருந்து'

முதலில் ரங்கனும் பவளமும் ஒரு வண்டியில் கிளம்ப,

"அக்கா மாமா எங்க இன்னும் காணோம்"

"மாமா வா அவர் இரண்டு நாள் கழிச்சி தான் வருவார், சரி வா டா போலாம்" குழந்தையை முன் உட்கார வைத்துவிட்டு கொடி நக்கலாக குழலியை பார்த்துக்கொண்டே பின் ஏறி அமர்ந்துகொண்டாள். ராஜாக்கு புரியாமலில்லை அக்காவின் எண்ணம்.

'இது எல்லாம் எதிர்பார்த்தது தானே குழலி விடு' வாசர் கதவில் சாய்ந்துநின்ற ராஜாவை தான் சலனமற்று பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவனும் சைட் மிரர் வழியாக அவளது பிம்பம் மறையும் வரை பார்த்திருந்தான்.

ஒரு பெரு மூச்சோடு சந்திரா வீட்டுக்கு போக... அவருக்கு இருமல் அதிகமாகி இருந்தது.

சுக்கு காபி வைத்துகொடுத்து அவரை படுக்க வைத்தவள், தானும் சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கே டிவியில் பழைய படம் ஓடிக்கொண்டிருந்ததை பார்த்துகொண்டிருக்க.

சந்திராவுக்கு இருமல் அதிகரித்துக்கொண்டே போனது.

"இனியும் டாக்டரிடம் காட்டலைன்னா சரிவராது, அத்த எழுங்க போலாம்" வற்புறுத்தி அழைத்துக்கொண்டு அந்த ஊரில் இருக்கும் ஒரு நர்சை பார்க்க சென்று மருந்து மாத்திரையோடு வீட்டுக்கு வரும்போது சினிமாவுக்கு சென்றிருந்தவர்களும் திரும்ப வரவும் சரியாக இருந்தது.

குழவி ராஜா இருக்கும் திசையை கூட திரும்பி பார்க்கவில்லை. சந்திராவை வீட்டிற்க்கு அழைத்து சென்று சாப்பிட வைத்து மருந்து கொடுத்து படுக்கவைத்து வீட்டிற்க்கு வர, அனைவரும் ஹாலில் கூடி இருந்தார்கள்.

ரங்கனின் முகத்தில் அப்படி ஒரு கோபம் அப்பி இருந்தது.



கருத்து
 

T22

Well-known member
Wonderland writer
20 சிவப்பழகியே...

ரங்கனின் கோபத்தை பார்த்திருக்கிறார்கள் தான்... இப்ப இருக்கும் முகம் சோகமும் கோபமும் கலந்து இருப்பது வயிற்றை பிசைந்தது. இடையில் போன்போட்டு தியாகுவையும் அவன் அன்னையையும் வரவைத்துவிட்டார். அவர்கள் வர பல மணி நேரம் பிடித்தது. இருந்த இடத்திலிருந்து ஒரு இன்ச் கூட நகரவில்லை, என்ன? ஏது ? என விசாரிக்க கூட சுற்றி இருந்தவருக்கு பயத்தால் நா எழவில்லை.

தியாகு அவன் அம்மாவோடு உள்ளே நுழைய, "ராஜா போய் உன் சித்தியை... இல்ல உன் சொந்த அம்மாவை கூட்டிவா?"

"அப்பா...!" ராஜா அதிர்ச்சியோடு பவளத்தை பார்க்க, அவரே கணவன் சொன்னதில் பைத்தியம் பிடித்த நிலையில் நின்றிருந்தார்.

"போய்... உன் அம்மாவை கூட்டிவான்னு சொன்னேன்"

"அப்பா இல்ல..." ராஜா உறுதியாக நின்றிருக்க.

"இப்ப நீ போல, நான் எங்காவது போயிடுவேன்"

"அப்பா...! என்ன பேசிட்டு இருக்கிங்க"

"உன்ட பேச்சு வார்த்தை நடத்த நான் தயாரா இல்ல முதல்ல நீ கிளம்பு"

ராஜா வேகவேகமாக போக... அரசியும் நேற்று பலத்த மழையில் உடைந்த ஓட்டை மாற்றிக்கொண்டிருக்க.

இந்த காட்சியை பார்த்து மனம் கனத்தது மகனாக அவருக்கு துணையாக இருக்கும் என்னை மூன்றாம் மனிதன் போல பார்ப்பது வலித்தது.

"அரசி... வேற ஓடு எடுமா... இது முழுசா உடைஞ்சிடுச்சி"

"பார்த்து பிடிச்சிக்கோ மா... எடுத்துவரேன்" அரசி புதிய ஓடு எடுத்து வர நகரவும் ஏணி சரியவும் சரியாக இருந்தது.

"அம்மா..." சந்திரா அலறிக்கொண்டே ஏணியோடு சரிய, ராஜா நொடி பொழுதில் சுதாரித்து பிடித்துக்கொள்ள.

"அப்பாடா அரசி நல்ல வேலை பிடிச்சிட்ட இல்லன்னா விழுந்து இருப்பேன். ஹாஸ்பிட்டலுக்கும் வீட்டுக்கும் அலைய சரியா இருக்கும். நம்ம வீட்டுலையும் ஒரு பையன் இருந்து இருந்தா அவன் இது எல்லாம் பார்த்து இருப்பானில்ல" மேலே இருந்தவாறு திரும்பி பார்க்க, கண்களில் குலம் கட்டிய கண்ணீர் ராஜாவை பார்த்ததும் உதிரத் துவங்கியது.

அவனது நெற்றியில் தாயின் சூடான கண்ணீர் விழுக, ராஜாவுக்கு கண்ணீர் பட்ட இடம் தீப்பற்றி எறிந்தது.

சந்திரா வேகமாக கீழே இறங்க, "ரொம்ப நன்றி தம்பி... எனக்கு ஆஸ்பத்திரி செலவு மிச்சம் செஞ்சிட்டிங்க" வேறாளிடம் பேசுவது போல சந்திரா பேச முதல் முறை ராஜாக்கு வலித்தது.

"மா!"

"வேணா உனக்கு சித்தியாவே இருந்துக்கிறேன்... அரசி அப்புறம் பார்த்துக்கலாம் வா சாப்பிடுவ" அரசி ராஜாவை தான் வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தாள். அவனது ஒதுக்கத்தை தாயால் தாங்கமுடிந்த அளவுக்கு தங்கையால் ஒதுங்க முடியவில்லை. அவளுக்கு அண்ணனுமாக தந்தையாக விளையாட்டு தோழனாக இருந்தவனின் ஒதுக்கம் அவளை மனதளவில் பாதித்திருந்தது.

"மா இந்த வீடு வேண்டாமா, நம்ம சின்னதா ஒரு ரூம் இருப்பது போல நல்ல வீடா கட்டிக்கலாம் மா" அரசி தன் மனதை மாற்ற கை கழுவிக்கொண்டே சந்திராவிடம் பேசத் துவங்க.

"நானும் அதை தான் யோசிச்சிட்டு இருக்கேன், உன் அப்பா நிலம் வித்துடலாம். நம்ம என்ன விவசாயமா பார்க்க போறோம், நான் வெளியே வேலை செஞ்சிக்கறேன். உனக்கு கல்யாணம் வேற பண்ணனும் அதுக்கு இந்த வீடு செட் ஆகாது" தாயும் மகளும் ராஜாவை திரும்பி கூட பார்க்காமல் பேசிக்கொண்டிருக்க. இத்தனை நாள் தான் ஒதுக்கியது இருவருக்கும் எப்படி வலித்து இருக்கும் என புரிந்துகொள்ள முடிந்தது.

"அரசி வெளியே உட்காரு சாப்பாடு எடுத்துவரேன்"

இரண்டு தட்டில் சாப்பாடு போட்டு எடுத்துவந்து உட்கார்ந்து இருவரும் சாப்பிட ஆரம்பிக்க, பழைய நியாபகங்கள் ராஜாவை உள் இழுத்துக்கொண்டது.

விவரம் தெரிந்தது முதல் கல்லூரி கடைசி வருடம் வரை சந்திரா தான் ஊட்டி விடுவார். நாள் முழுவதும் வீட்டில் இருந்தாலும் சாப்பாடு நேரமும் தூங்கும் நேரமும் சித்தி சித்தி என முந்தானையை பிடித்து சுற்றிக்கொண்டிருப்பான். இப்போது இருவருக்கும் இருக்கும் இடை வெளியை வெறுத்தான்.

சந்திரா கண் கலங்கிக்கொண்டே சாப்பிட, அரசி கையில் தட்டோடு ராஜாவை பார்த்துக்கொண்டிருந்தாள்.

"அண்ணா சாப்பிடுறியா?"

"அரசி... அமைதியா இரு, அடிவாங்கிக்காத" மகளை சந்திரா கடிந்துகொள்ள.

இனியும் ஒதுங்கி இருக்க ராஜாவால் முடியவில்லை மனதில் உதித்த சிறு பொறியை பிடித்துக்கொண்டு பயணமாக தொடங்கினான். ஆழ்ந்த மூச்செடுத்துவிட்டு இருவர் அருகில் வந்து உட்கார்ந்தவன், "மா... பசிக்குது" சாப்பிட்டுக்கொண்டு இருந்த சந்திரா தலை குணிந்துகொண்டு சிலையாகிவிட.

"அண்ணா..." தட்டை அவன் புறம் நீட்ட மறுப்பது போல தலை அசைத்து, ஆஆஆ ஊட்டி விடும்படி சைகை காட்ட.

அரசி அழுவதா சந்தோசத்தில் சிரிப்பதா என தெரியாமல் இரண்டும் செய்துகொண்டே ஊட்டிவிடத் துவங்க.

"அரசி... வேண்டாம்மா"

"ப்ளீஸ்மா ஒரு டைம்" அரசி கொஞ்ச சந்திராவுக்கு தான் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

"மா ஊட்டிவிட மாட்டியா?" ராஜா பரிதாபமாக கேட்க, சந்திரா அமைதியாக எழுந்து சென்றுவிட, அரசி உற்ச்சாகமாக அண்ணனுக்கு ஊட்டிவிட்டு முடிக்க.

"அரசி நீ சாப்பிட்டியா?"

"எனக்கு நீ சாப்பிட்டதே நிறைஞ்சிடுச்சி அண்ணா"

"சரி கை கழுவிட்டு அம்மாவை கூட்டிட்டு வா" சந்திரா முன் வந்து நின்று இறுக்க அணைத்து அவரது கன்னத்தில் முத்தமிட்டு சென்றிருந்தான்.

இத்தனை நாளில் அவனை சூழ்ந்த வெறுமை அவனை விட்டு அகன்றது போலானது.

இங்கு நடக்கும் பாச போராட்டத்தை மறைந்திருந்து பார்த்த குழலிக்கு அவ்வளவு நிறைவாக இருந்தது.

ராஜா வருவதை பார்த்து வேகமாக அவனுக்கு முன் வீட்டுக்குள் நுழைந்துகொள்ள.

சந்திராவும் அரசியும் குழப்பத்தோடு ராஜா வீட்டில் நுழையவும் தியாகு அவனது அம்மாவை அழைத்து வரவும் சரியாக இருந்தது.

"மாமா என்னாச்சி?"

"என் பையனுக்கு மனைவி வந்தாச்சி, இனியும் உங்க மனைவி இங்க இருப்பது சரி இல்ல, உங்க கூட கூட்டிப்போங்க"

என்றும் பேசாத மாமனார் பேசுவது இன்ப அதிர்ச்சி என்றால் அவர் சொன்ன செய்தி இன்னும் இனிப்பாக இருந்தது. ஆனால் அவர் முகம் கோபத்தை தத்தெடுத்திருப்பதை பார்த்து யோசனையோடு பார்க்க. தியாகு அம்மாவோ ஒரு பக்கம் பேத்தி தன்னோடு இருப்பது இனித்தாலும் மருமகள் குணம் அறிந்து பாவக்காயை தின்றது போல முகம் சுழித்தார்.

தியாகு தாயின் முகத்தை பார்த்து என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் தத்தளிக்க, முதலில் இங்கு என்ன பிரச்சனை அதை கேட்போம் என மாமனாரிடம் கேட்க.

சில மணி நேரம் முன் தியேட்டரில் நடந்ததை அப்படியே சொல்லத் துவங்கி இருந்தார்.

ராஜா வண்டியை நிறுத்த போயிருக்க,
"கொடி குழலி எங்கே"

"அடுத்த ட்ரிப் கூட்டிவருவான்பா" அவள் வரப்போவதில்லை என சொன்னால் படம் பார்க்க முடியாது என வராததை மலர் கொடி மறைத்திருந்தாள்.

இன்டர்வல் வரை ரங்கனுக்கு தெரியவில்லை மருமகள் வராதது.

"ராஜா குழலி எங்கே"

"அது அப்பா, அவ வரலை"

"அவ வரலையா இல்ல அக்கா தம்பி பிளான் போட்டு கூட்டி வரலையா?"

"கொடி, ராஜா, பவளம் நீ செய்யுறது எனக்கு தெரியாதுன்னு நினைச்சிக்காதிங்க, நானும் பார்த்துட்டு தான் இருக்கேன். வீட்டில் பிரச்சனை வர கூடாதுன்னு அமைதியா இருந்தா தலைமேல ஏறி ஆடுவீங்களா... வீட்டுக்கு வாங்க இருக்கு உங்க எல்லோருக்கும் ஒரு முடிவு கட்டுறேன்" ரங்கன் மனைவியை கூட அழைத்து வராமல் வேகமாக வீட்டுக்கு வண்டியில் தனியாக வந்து சேர்ந்தார். ரங்கன் பவளத்தை விட்டு வந்தது மனதில் பலத்த அடி கொடுத்தது. அந்த பொண்ணுக்கும் இப்படித்தானே இருக்கும் பவளம் முதல் முறை குழலிக்காக மனம் கலங்கினாள்.

தனக்கு வந்தால் தான் அதன் வலியை உணர முடியும் என சும்மாவா பெரியவர்கள் சொன்னார்கள்? பவளம் அவளது மனக்குமுரல்களை புரிந்துகொண்டார். குற்றவுணர்வு ஒருபக்கம் ரங்கன் மீது பயம் வேறு அவரை அச்சுறுத்தியது.

மவர்கொடி மனதில், 'ச்சே... என்ன இப்படி சொதப்பிடுச்சி. இவங்களை விட்டுவந்தா தான் பிரச்சினைன்னு கூட்டிவந்தா இப்படி ஆகிடுச்சே' பவளத்தின் தெளிந்த முகத்தை பார்த்த கொடி, 'இது சரி இல்லையே' என இன்ஸ்டன்ட் திட்டம் ஒன்று போட்டு அதை அரங்கேற்றம் செய்ய வாய் திறக்கும் முன்.

"கொடி போதும்... இனி நீ சொல்லுறது நான் கேட்கப்போவதில்லை, அவன் என் பையன் தான் அதுக்கு அவன் பொண்டாட்டிக்கு உரிமை இல்லைன்னு ஆயிடாது. என்னை விட அவளுக்கு தான் ராஜா மேல உரிமை ஜாஸ்தி" பவளம் பேசியது இடியை இறக்கியது மலர்கொடிக்கு.

தியாகு அதிர்ந்து நின்றான் மனைவியின் செயல் கண்டு, அவனுக்கு இந்த வக்கிர புத்தி இருக்கும் மனைவி அமைந்ததை நினைத்து அவமானமாக இருந்தது.

ஒரு நொடி கூட யோசிக்கவில்லை... அறைந்து விட்டு தான் பேசத் துவங்கினான், "ச்சி... நீ எல்லாம் பெண்ணாடி? உன்னை இப்படி என் தங்கச்சியோ அக்காவோ இருந்து இதுபோல நடத்தி இருந்தா நல்லா இருந்து இருப்ப"

தியாகு அறைந்ததை கொடியால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை, அவனை திட்ட தொண்டை வரை வரவிருந்த வார்த்தையை விழுங்கியவள், பேச பேச பிரச்சனை தான் பெரியதாகும் என கோபத்தை தொண்டையில் விழுங்கிக்கொண்டு நின்றிருந்தாள்.

"இனி ஒரு நிமிஷம் நீ இங்க இருக்க கூடாது கிளம்பு டி முதல்ல"

"அதுக்கு முன்னாடி இதை பிடிங்க" ரங்கன் கையில் சில பத்திரங்களை மலர்கொடியிடம் கொடுத்துவிட்டு.

"இது என் மேலே சொத்து எல்லாம் இவளுக்குதான், ஆனா இனி எந்த உரிமையும் இந்த வீட்டில் இல்லை...

"அப்பா !"

"ச்சி அப்படி கூப்பிடாத... உன்னை பெத்ததுக்கு சும்மா இருந்து இருக்கலாம்"

"கிளம்பறேன்... போறேன் மாமா" பவளம் கையில் இருந்த குழந்தையை வாங்கி தாயிடம் கொடுத்தான் தியாகு.

"என் குழந்தையை கொடுங்க"

"இனி என் பொண்ணை தொடாதே, அவ உன்னைப்போல கெட்ட புத்தியோடு வளர எனக்கு விருப்பமில்லை, என் அம்மா சிறப்பா வளர்ப்பாங்க. கட்டுன கடமைக்கு தான் கூட கூட்டிப்போறேன், இனி உன் வாயில் இருந்து வார்த்தை வரக்கூடாது புரியுதா" கொடிக்கு வேறு வழியும் இல்லாமல் அமைதியாக தியாகுவை பின்தொடர.

"மாப்பிள்ளை இன்னும் ஒரு விஷயம் சொல்லனும்"

"அப்பா... வேண்டா"

"மாமா வேண்டா" ரங்கன் சொல்ல வருவதை புரிந்துகொண்ட ராஜாவும் சந்திராவும் ஒரு சேர சொல்ல.

"இனியும் மறைக்கிறது சரி வராது" ரங்கன் உறுதியாக சொல்ல.

ராஜாவும் சந்திராவும் கையை பிசைந்துகொண்டே நின்றனர்.
 

T22

Well-known member
Wonderland writer
21 வெட்க சிவப்பழகியே...

"ராஜா என் பையனில்லை" என்று விஷயத்துக்கு நேராக வந்தார் ரங்கன். இனியும் இதை மறைத்தால் ராஜா அவன் வாழ்க்கையை வாழ முடியாது என தெரிந்துகொண்டவர் உறுதியாக உண்மையை சொல்லத் துணிந்தாலும் பவளத்தை நினைத்து சிறு பயமாக தான் இருந்தது. நாம் வாழ்ந்து முடித்தவர்கள் வாழ போரவர்களுக்கு வழி விடவேண்டும் என மனதில் நினைத்து மனதை கல்லாக்கி சொல்லி முடித்திருந்தார்.

"என்ன மாமா சொல்லுறீங்க" தியாகு அதிர, பவளம் உயிரற்ற ஜடம் போல ஸ்தம்பித்து நின்றார். இறந்த மகனுக்காக பல வருடம் கழித்து அழுவதா ? இல்லை நேரில் இருப்பது தன் மகனில்லை என்பதை நினைத்து கலங்குவதா என தெரியாம இருந்தார்.

"இவன் என் தம்பி பையன், என் பையன் செத்து பல வருடம் ஆச்சி" பவளத்தை ஆதரவாக ரங்கன் பிடித்துக்கொண்டார்.

பழைய கசப்பான நிகழ்வுகளை சொல்லத் துவங்கினார், இருவரும் சிலநாள் முன் பின் பிறந்து இருந்தார்கள், நானும் என் தம்பியும் இரட்டைப்பிறவி, அதனால் என்னவே இருவரின் மகன்களும் பார்க்க ஒரே ஜாடையில் இருப்பங்க. என் தம்பி இறந்த சமையம் அப்போ தான் அரசி பிறந்திருந்தாள்.

பவளம் உடல் நலக் குறைவால் ஆப்பரேசன் முடிஞ்சதும் ஓய்வுக்கு ஊருக்கு போய் இருந்த நேரம்" சொல்லும்போதே ரங்கனுக்கு தொண்டை அடைத்தது.

"என் பையன் ராஜா பெயர் தெரியாத வியாதி வந்து இறந்திருந்தான். சந்திரா தான் பவளத்துக்காக அவள் உயிருக்காக தன் மகன் இறந்தது போல வெளியே சொல்லி உண்மையை மறைத்து, அவள் பையன் விக்கியை என்கிட்ட கொடுத்துட்டா அவன் ராஜாவா இங்க வளர்ந்தான்"

சந்திரா பழைய நினைவை நினைத்து வெடித்து அழுதார், பவளம் வேர் அருந்த கொடி போல சாய்ந்து நிற்க, ரங்கன் தான் தாங்கி பிடித்துக்கொண்டார்.

"மாமா நான் கிளம்புறேன்... அத்தையை பார்த்துக்கோங்க" தியாகு கிளம்பி சென்றுவிட. அவனுக்கும் இங்கே என்ன பேசி சமாதானப் படுத்த என தெரியவில்லை. மலர்கொடியும் தாயை சமாதானம் படுத்திவிட்டு தியாகு பின் சென்றிருந்தாள்.

இந்த விஷயத்தை வைத்து தான் சந்திராவை ஆட்டி படைத்துக்கொண்டு இருந்தாள் மலர் கொடி தன்னிடம் ஆட்டிவைக்கும் விஷயத்தை உடைத்த தந்தை மேல் கடும் கோபம் ஏற்பட்டது.

சிறு வயதிலேயே மலர் கொடிக்கு இந்த விஷயம் தெரியும் தன் தம்பி இடத்தில் வேறு ஒருவனை வைத்து பார்க்க முடியவில்லை அவளால். இவன் இருக்க போய் தானே இப்படி ஆனது இவன் தன் தம்பி இடத்தில் ராஜாவாக இருப்பது சுத்தமாக பிடிக்கவில்லை. விக்கி மேல கோபம் திரும்பியது, சிறு சிறு விஷயத்துக்கு கூட அவனை ஒதுக்கி வைத்தாள் விக்கி முகம் வாடுவதை பார்த்து கொடிக்கு ஒரு பேரானந்தம் வரும், வளர வளர அது அவளது இயல்பாக மாறியது. ரங்கன் ராஜா என்ற பெயரை விக்ரம ராஜா என மாத்தி வைத்தார். தாய் மகனை பிரித்த பாவம் என தெரிந்தும் அமைதியாக இருந்தார் பவளம் உடல்நலத்துக்காக.

பவளத்துக்கு உடல் நலம் முழுவதும் சரியானதும் சொல்ல தான் நினைத்தார் ஆனால் விதி விடவில்லை. சிறு சிறு பக்கவிலைவுகள் இருபது வருஷம் பவளத்துக்கு ஒன்று மாத்தி ஒன்று உடல் உபாதைகள் இருந்துகொண்டே இருந்தது, சொல்ல சந்தர்ப்பமும் அமையவில்லை.

விக்கி ராஜா என்ற பெயரில் அக்கா அக்கா என வலம் வருவான். அவனை அடித்து வைப்பது கிள்ளி வைப்பது அவளது பாசத்துக்காக ஏங்கவைப்பது என அவனை ஒரு அடிமை போல தான் வைத்திருந்தாள் பல வருடங்களாக. அவன் கல்லூரி சேரும் போது அவளுக்கு திருமணம் ஆனதும் அவளது முழு கவனமும் கணவன் மீது போக இரண்டு வருடம் அவன் அவனாக இருந்தான் ஒன்று தான் சொல்ல வேண்டும்.

ராஜாவுக்கு பவளத்தைவிட சந்திராவிடம் பாசம் ஜாஸ்தி இயற்க்கையாகவே... பவளம் மகனிடம் பேச கூட விட மாட்டாள் மலர்கொடி. தாய் பாசத்துக்கு ஏங்கிய விக்கிக்கு அந்த குறையை சந்திரா தான் தீர்த்து வைத்தார். அக்காவிடம் கிடைக்காத பாசத்தை அரசி பல மடங்காக தங்கையாக இருந்து வாரிவாரி கொடுத்தாள். எதையும் எதிர் பார்க்காமல் திருப்பி கொடுத்தாள் அந்த குட்டி தேவதை.

கொடியிடம் மரியாதை கூடிய பயம் மட்டும் தான் அக்காவின் பாசத்துக்கு சிறு வயதில் ஏங்கி கிடைக்காததால்... அதன் பிறகு அவனோ பெரியதாக ஏங்கவில்லை. பாசம் கிடைக்கும் இடத்தில் சாய்ந்துகொண்டான். மனதில் ஒரு குழப்பம் எப்போதும் விக்கிக்கு இருக்கும், உண்மையிலையே இவள் என் சொந்த அக்கா தானா? அதற்க்கு விடை தெரிய நாளும் வந்தது.

குழலி காதலுக்கு மறுப்பு சொல்லவும் முதலில் சந்திராவிடம் சொல்லி மனதை ஆத்த உடனே புறபட்டு இருந்தான்.

வீட்டுக்கு வந்ததும் பையை வாசலிலேயே வைத்துவிட்டு சந்திராவை பார்க்க போக அங்கே மலர் கொடி சந்திராவிடம் காரசாரமாக சட்டையிட்டுக் கொண்டு இருந்தாள்.

ரங்கன் சொத்தை இரண்டாக பிரிக்க முடிவு எடுத்தது மலர் கொடிக்கு தெரிய வந்ததும் சந்திராவிடம் சண்டையிட வந்துவிட்டாள்.

"என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? சொத்தை எல்லாம் உங்க பையன் பேரில் மாற்றி அமுக்கலாம்ன்னு பார்க்குறீங்களா?"

"ஐயோ கொடி அப்படி இல்ல மா" சந்திரா பதற்றத்தில் சொல்ல.

"சொத்து வந்ததும் அனுபவிக்கலாம்னு பிளானா போடுறீங்க, அது நடக்கக் கூடாது. நீங்க என்ன செய்வீங்க ஏது செய்வீங்களோ எனக்கு தெரியாது அப்பா கிட்ட நீங்க தான் வந்து பேசனும் இதை பத்தி"

"எனக்கு உங்க சொத்துல ஒத்த ரூபாயும் வேண்டாமா, எனக்கு கை கால் இருக்கு என் மகளை காப்பாத்த" என சந்திரா நிமிர்வோடு பதில் சொல்ல. சற்று தொலைவில் இருந்து இந்த விவாதத்தை கேட்டுக்கொண்டிருந்த ராஜாவுக்கு தான் தலையும் புரியலை வாலும் புரியலை. 'சித்திக்கிட்ட எந்த சொத்தை பத்தி அக்கா கேட்டுட்டு இருக்காங்க?' யோசனையோடு மறைந்து நின்று கவனிக்க துவங்கி இருந்தான்,

"அப்பப்பா... வசனம் எல்லாம் நல்லா இருக்கு, ஆனா உங்க மேல நம்பிக்கை தானில்ல" மலர் கொடி அலட்சியமாக சொன்னாள்.

"என்னை நம்பலாம், இந்த சொத்துக்கு எல்லாம் ஆசை பட்டு இருந்தா என் மகனிடம் எப்பவோ உண்மையை சொல்லி நாடகம் ஆட வச்சி எழுதி வாங்கிருக்க முடியும், ஆனா அதை நான் பண்ணலை பண்ணும் நினப்பும் எனக்கில்ல"

"சரி அப்பாவிடம் சீக்கிரம் மொத்த சொத்தை என் பேரில் எழுதி வைக்க சொல்லுங்க"

"சரி" சந்திராவை ஏளனமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு பாதி தூரம் சென்று திரும்பி வந்து.

"அப்புறம் இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்... ராஜா... சாரி உங்க பையன் விக்கி தான் இந்த ராஜான்னு அவனுக்கு தெரிய கூடாது. இனி அவனிடம் கொஞ்சம் விலகியே இருங்க" சொத்தை பற்றி பேசியது எல்லாம் சந்திராவுக்கு ஒரு பொருட்டே இல்லை.

ஆனால் ராஜாவிடம்... தன் மகனிடம் பேச கூடாது என சொன்னதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை, "அது மட்டும் முடியாது" சந்திரா உறுதியாக சொல்ல.

"அப்போ ராஜா... அதான் உங்க புள்ள விக்கி தான் இந்த ராஜா, உன்னை வளரக்க துப்பு இல்லாம எங்களுக்கு கொடுத்துட்டான்னு அவனுக்கு போன் போட்டு சொல்லவா?" சந்திரா உடல் நடுங்கியது. அவன் சித்தி என கூப்பிடும் போது மனது வலித்தது இல்லை என சொல்ல முடியாது. அவனது வாயில் இருந்து தவறுதலாவது அம்மா என வந்துவிடாதா என ஏங்கியவர் ஆகிற்றே.

பணத்துக்காக கொடுக்கவில்லை... அக்காவின் நிலை எண்ணி தான் கொடுத்தார். அந்த சமயம் அக்காவுக்கு ஹார்டில் பெரிய சர்ஜரி செய்திருந்தார்கள். குழந்தை போல பார்த்துக்கொள்ள வேண்டும் என சொல்லி இருந்தார்கள். மகன் இறந்த விஷயம் தெரிந்தால் அந்த ஜீவன் உயிரே விட்டுவிடும், பவளத்துக்காக சொந்த மகனை விட்டுக் கொடுத்தார் சந்திரா, கடினமான விஷயம் தான் ஆனால் ஒரு உயிர்காக மகன் எனும் மொத்த உரிமையையும் விட்டு கொடுத்தார்...

"இல்ல நான் இனி பேசலை போதுமா" சந்திரா இப்போதும் பவளத்துக்காக தான் இதை ஏற்றுக்கொண்டார்.

சந்திரா வாய்விட்டு அழுதால் அங்கே ஒரு ஜீவன் மனதால் அழுது தீர்த்தது. ஒரே நாளில் ராஜாவுக்கு அத்தனை கேள்விக்கும் பதில் கிடைத்திருந்தது.
அக்காவின் பாசமில்லா தன்மை மற்றும் சந்திரா மேல தாயை விட ஏன் அதிகம் பாசம் என்பதற்க்கு விடை இன்று தெரிந்தது. மலர் கொடியின் குணம் எல்லாம் அவனுக்கு பெரியதாக படவில்லை... சந்திராவை முற்றிலும் வெறுத்தான். மலர் கொடி போன பின்பு சந்திரா முன் வந்து நின்றான்.

"நீங்க தான் என் அம்மாவா" குரல் கேட்டதும் நெஞ்சில் கை வைத்து திடுக்கிட்டு பார்க்க.

"விக்கி... எப்போ பா வந்த" முதலில் அதிர்ந்தாலும் சமாளிக்க முயற்ச்சி செய்ய.

"விக்கி இல்ல ராஜா... வந்து கால் மணி நேரமாச்சி அது முக்கியமில்லை. கேட்டதுக்கு பதில்"

"அது வந்து" சந்திரா தயங்க,

"ஆமா இல்லை மட்டும் சொல்லுங்க" சிவப்பேறி இருந்தது அவனது இரு கண்களும் பார்க்க சந்திராவுக்கு பயமாக இருந்தது.

"ஆமா சொல்லுறது புரிஞ்சிக்கோ பா" சந்திரா சமாதானம் செய்ய வர,

"போதும்... நீ எல்லாம் ஒரு தாயா? நல்ல வேலை உன் குணம் இப்பவாவது தெரிஞ்சதே, கேவலமா காசுக்காக வித்துட்ட இல்ல என்னை" சந்திரா மனதில் குமுறியதை வாய்விட்டு சொல்லி இருந்தாள் ராஜா புரிந்துக்கொண்டு இருப்பான், மனதில் அழுதது அவன் காதுக்கு எப்படி எட்டும், கொடி சொன்னதை வைத்து தவறாக புரிந்துக்கொண்டான் விக்கி என்கிற ராஜா.

"இல்ல விக்கி" சந்திரா விக்கி சொன்னதும் உச்சந்தலைக்கு கோபம் ஏறியது. அருகில் வைத்திருந்த அரிசி மூட்டையை துக்கி வாசலில் வேகமாக போட அது பிய்ந்து சிதறி இருந்தது, வாசல் முழுவதும்.

சந்திராவுக்கு எதிரே எதிரான குணமுடைய மகன் புதியது, வெடவெடத்து போனார்.

"இனி என் முன்னாடி வந்திடாதீங்க... அவ்வளவு தான் உங்களுக்கு மறியாதை" சந்திரா எவ்வளவு பேச முயற்ச்சித்தும் தோல்வி தான் மிஞ்சியது சந்திராவுக்கு. உடைந்து போய் இருந்த இடத்தில் அமர்ந்துவிட்டார்.

"காசுக்காக என் பையனை விக்கலை... புரிச்சிக்கோ விக்கி, அக்காக்காக தான்... என் பையனால இந்த உலகத்துல ஒரு உயிர் வாழ்றதுக்காக செஞ்சேன். இந்த விஷயம் உனக்கு தெரியும் போது இந்த சித்தி... இல்ல இந்த அம்மாவை புரிச்சிக்கோ பா" அவன் சென்ற திசையை பார்த்து சொல்ல, மனம் உடைந்து சென்றுக்கொண்டிருந்த விக்கி காதுக்கு அது சென்றடையவில்லை.

ராஜா சிறிது நேரம் தன்னை சமன் செய்துவிட்டு வீட்டிற்க்குள் நுழைய, "கொடி தம்பி வந்தானா... அவன் வந்தது போல ஒரு உணர்வு எனக்கு காலையிலிருந்து" பவளம் சொல்ல கொடிக்கு தான் பத்தி எறிந்தது.

"மா சும்மா தம்பி தம்பின்னு, நானும் உன் பொண்ணு மறந்திடாத" எரிச்சலில் விழுந்தாள் மலர் கொடி

"சரியான பொறாமை பிடிச்சவ... சின்ன வயசுல தம்பி தம்பின்னு திரிஞ்சா இப்ப பாரு நேர் எதிரா இருக்கா" பவளம் சாதாரணமாக சொன்ன விஷயம் விக்கி மனது அடிவாங்கியது.

'நான் அவங்க தம்பி இல்ல, அதுக்கு தான் அவங்க விலகி இருந்தாங்களா' மனதில் ஆயிரம் எண்ணங்கள் வலம் வந்தது கடைசியாக வந்தது குழலியிடம் தான். 'குழலி நீ எனக்கு ஓகே சொல்லாததும் நல்லது தான். இது கொடி அக்காவீடு என்கிட்ட நடந்துகிட்டதை விட மோசமா தான் நடந்துப்பாக. உனக்கு நல்ல பையன் கிடைப்பான்,

நீ இங்க வந்து ஒவ்வொரு உரிமைக்காகவும் ஏங்க கூடாது அழகி. நீ நீயா இருக்கனும் அதுக்கு இந்த சுழல் உனக்கு செட்டாகாது' வாழ்க்கையில் இருந்த மொத்த பிடிப்பும் அவனை விட்டு சென்றது போல உணர்ந்தான். தன் காதலுக்காக சுயநலமாக அவன் நினைக்கவில்லை. இந்த வீட்டில் சேவகனாக மாற நினைத்தான். பவளம் பிடிக்கும் இல்லை என மறுக்க முடியாது தான் யாரு எண்ணும் விஷயம் அவருக்கு தெரியாமல் பார்த்துக்கொள்ள முடிவெடுத்தான் அதற்க்கு அவன் கொடுத்த விலை அவன் காதல்,

வலியோடு வலியாக தன் காதலுக்கு பெரிய குழி வெட்டி புதைத்திருந்தான். பாவம் அவன் விதைத்தது குப்பையில் மக்கி போக, அவன் மூடிய விதை சாதாரண விதையில்லை அவனது உயிருக்கு மேலான காதல் விதை... பல போராட்டத்துக்கு பின் அந்த காதல் மேலே வந்து வளர்ந்து அவனை கொடியாக சுத்த போவது அவனுக்கு அப்போது தெரியவில்லை.

அதன் பின் வந்த நாட்களில் குழலியோடு சற்றி விலகியே இருந்தான், காதல் என இன்ப அவஸ்தை அவளுக்கு கொடுக்கவில்லை, அவன் விலக விலக அவன் அருகாமையை நாடினாள் பெண்ணவள்,

அவள் காதல் சொல்லும் போது விதிர்வித்தான், என்ன செய்வது என தெரியவில்லை இந்த தேவதைக்கான தேவன் நானில்லை என்று மட்டும் மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. கடைசி பரிட்சை முடிந்ததும் மறைந்து நின்று தன் காதலியை கடைசி முறை பார்த்துவிட்டு சென்றிருந்தான். அவன் பாராமுகத்தை கடக்க முயன்றாலும் அவளால் மணமேடை வரை தான் கடக்க முடிந்தது வாழ்க்கை துணையாக வேந்தனை ஏற்க முடியாமல் செய்த காரியம் அதிகப்படி, அந்த நொடியில் அவளுக்கு வேறு வழியும் தெரியவில்லை.

குழலிக்கு திருமணம் என நண்பர்கள் மூலம் தெரிந்துக்கொண்டவனின் கல் இதையம் விரிசல்விட்டு வெடித்து சிதறியது.

விடியலுக்கு முன் ஆற்றுக்கு சென்றவன் முடிந்த அளவுக்கு நீந்தினான். கண்ணீரை மறைக்க மீனாக நீந்தினானா? இல்லை மனவலியை தண்ணீரில் கரைக்க நீந்தினானா? அவனுக்கே தெரியவில்லை. குழலியை வீட்டு வாசலில் மணகோலத்தில் பார்த்து மனம் பரவசம் அடைந்தது... அதன் பிறகு அதிர்ந்தான் அதையும் நொடி பொழுதில் மாற்றி தெரியாதவர் போல பாவலா காட்ட.

அவளோடு நூறு வருடம் வாழ ஆசை இருக்கிறது தான் அவனுக்கு, ஆனால் அவளுக்கான அங்கீகாரம் ஒரு போதும் கொடுக்க முடியாது, சமீபத்தில் கொடியின் போக்கை பார்த்துக்கொண்டு தானே இருக்கிறான். மனதில் ஆயிரம் குழப்பம், 'குழலி போயிடு மா இந்த இடம் உனக்கான இடமில்லை' மனதால் அவளது காலில் விழுந்து மன்றாடினான் ஆனால் குழலி காதுகளுக்கு அவன் மன குமுரல்கள் எட்டவில்லை என்பது தான் உண்மை.
 

T22

Well-known member
Wonderland writer
22 சிவப்பழகியே...

வந்த அன்றே உணவு கூட கொடுக்காமல் பவளம், கொடி பிரித்து பேசியதை அவனால் ஜீரனிக்கவை முடியவில்லை. அவர்களை எதிர்த்தும் பேசவும் முடியவில்லை, தான் பேச போய் கொடி கோபத்தில் உன்மை சொல்லிவிட்டால் என்ன செய்வது என வாயை இறுக மூடிக்கொண்டான்.

அவளை தன்னுடன் வைத்து கஷ்டபடுத்தவும் மனமில்லாமல் தவித்தான். இதில் பெரிய கொடுமை என்னவென்றால், மனதில் தவிப்பை வைத்துக்கொண்டு வெளியே உணர்வுகளை முகத்தில் காட்டாமல் மறைப்பது தான்.

கர்ணனின் நிலைமை தான் அவனுக்கும், தன்னை வளர்த்தவர்களுக்கு எதிரே ஒரு துரும்பு கூட அவனால் அசைக்க முடியவில்லை.

அனைத்தும் பொறுத்துக்கொண்டவனால் கொடி கொடுத்த கிழிந்த ஆடையை மற்றும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை... அடுத்த நாளே அவளுக்கு ஆடைவாங்க விடியலில் சென்று அவளுக்கு பொருத்தமான அனைத்தும் ரசனையாக தேர்ந்தெடுத்து வாங்கினான்.

ஆரம்பத்தில் அவளை துரத்த நினைத்தவனால் பிறகு அந்த எண்ணம் இல்லாமல் ஆக்கியது அவன் கட்டிய மஞ்சல் தாலி. அவளை ராணியாக வாழவைக்காவிட்டாலும் சாதாரணமாக உரிமையாகவாவது வாழவைக்க நினைத்தான் ராஜா மறைந்து விக்கி வெளியே வர, அதற்க்கான வழி தெரியாமல் திண்டாடிக்கொண்டிருந்த நேரம் சந்திராவிடம் பேசுவது அவனுக்கு பிடிக்கவில்லை.

'நான் வேண்டாம் என் பொண்டாட்டி மட்டும் வேணுமோ? எப்படி தான் பெத்த குழந்தையை காசுக்காக தாரைவார்த்து கொடுக்க முடியுதோ இவர்களால்' என்ற சினம் தான் அதிகம் இருந்தது.

இரண்டு வேலை தொடர்ந்து அவள் மேகி செய்து சாப்பிடுவதை பார்க்க கஷ்டமாக இருந்தது, தனக்கான அறுசுவை உணவை சாப்பிட முடியாமல் தவித்தான் விக்கி, அந்த தவிப்புக்கு சந்திரா முடிவு கட்ட கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. சந்திரா மேலிருந்த கோபத்தை பார்த்தால் தன்னவளின் உடல் நிலை என்னாவது, நேரில் போகக்கூடாது என சொன்னாலும் அங்கே சென்று சாப்பிட விட்டு விட்டான், அவளின் உடல் நிலை கருதி.

பவளம் மனவேதனை சந்திராவுக்கு புரியாமலில்லை, எது நடக்கக்கூடாது என நினைத்தாரோ அது நடந்துவிட்டது.

சந்திரா வாசற்படி சாய்ந்து உட்கார்ந்துவிட, அரசி ஆறுதலாக தாயை பிடித்துக்கொள்ள,

பவளம் அழுது அழுது ஓய்ந்தார்... கணவனின் மார்பில் சாய்ந்து படுத்துவிட்டார்.

ராஜாவுக்கு உண்மை தெரிந்ததும் சந்திராவை தான் வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.

தவறாக நினைத்த தன் மடத்தனத்தை நொந்துகொள்ள மட்டுமே முடிந்தது அவனால், பவளத்துக்கு சாப்பாடு எடுத்துவந்து கொடுக்க... "பெரியம்மாக்கு கடைசியா ஊட்டி விடுறியா ராஜா... இல்ல விக்கி" தட்டை வைத்துவிட்டு, அவர் சொல்லி முடிக்கும் முதல் பவளத்தை இறுக்க அணைத்திருந்தான்.

"நீங்க எப்பவும் எனக்கு அம்மா தான், நான் இந்த அம்மாக்கு எப்பவும் மகன் தான். யாராலையும் அதை மாத்த முடியாது" விக்கி வாயில் இருந்து வந்ததை கேட்டு சந்திராவுக்கு ஒரு துளி கூட வருத்தமாகவோ பொறாமையாகவோ இல்லை, அவரும் எதிர்பார்த்தது அதுதான்.

புள்ளையை தூக்கி கொடுத்துவிட்டு அவர் நிம்மதியாக ஒன்றும் இருந்திடவில்லை, தீராத வலி இருக்கதான் செய்தது. இரவில் மகனை நினைத்து கண்ணீர் வடித்தாலும் காலையில் எழுந்ததும் விழிக்கும் முகம் அவனுடையது தான். வேப்பங்குச்சியை உடைத்து பல் துளக்கிக்கொண்டே சித்தி என ஓடி வந்து அவனுக்கு விருப்பமானதை சமைக்க சொல்லிவிட்டு சென்றுவிடுவான். பவளமும் சந்திராவுக்கு தன் மகன் ஆறுதலாக இருப்பது நிம்மதியை கொடுத்தது. ஆனால் பவளத்துக்கு இப்போது தான் தெரிந்தது சந்திராவுக்கு ஆறுதலாக இல்லை தனக்கு ஆறுதலாக அவள் மகன் இத்தனை வருடங்கள் இருந்திருக்கிறான் என்று.

மலர் கொடி திருமணம் வரை சந்திராவும் பவளமும் பேசிக்கொண்டு தான் இருந்தார்கள் இந்த நெருக்கம் பிடிக்காமல் மலர்கொடி பவளமிடம் வந்து சந்திரா அடித்துவிட்டார் என இல்லாதது பொல்லாதது சொல்லி இருவரையும் வெற்றிகரமாக பிரித்துவைத்துவிட்டாள்.

"நிஜமாவா நான் உனக்கு அம்மாவா? பெரியம்மா இல்லையில்ல" பவளத்தின் ஏக்கமான குரலில் உடைந்தது விக்கி மட்டுமில்ல அங்கிருந்த அனைவரும் தான்,

"இல்ல எனக்கு நீங்க அம்மா தா எப்பவும்" பவளத்தின் கண்ணீரை துடைத்துவிட்டு,

விக்கி சாப்பாட்டை ஊட்டி விட, பவளம் சாப்பிட்டுவிட்டு மகன் தோளில் சிறிது நேரம் இழைப்பாற, குழலி மற்றவர்களுக்கு சமைக்க சமையற் கட்டுக்குள் நுழைந்துகொண்டாள். அவளுக்கானதையும் தனியாக சமைக்கும் முடிவோடதான் உள்ளே சென்றிருந்தாள்.

தாய் மகன் பாசத்தை பார்த்து சந்திராவுக்கு பொறாமை எல்லாமில்லை, தன் மகன் தனக்கும் இப்படி ஊட்டிவிட மாட்டானா என ஏக்கம் இருக்கத்தான் செய்தது. இதை எல்லாம் முன்பே தெரிந்து தான் அனுப்பி வைத்தோம் என மனதை சமன் செய்த சந்திரா,

"அக்கா, மாமா நாங்க எங்க வீட்டுக்கு போறோம்" அரசியை அழைத்துக்கொண்டு சந்திரா கிளம்ப,

விக்கி தான் சந்திராவையும் பவளத்தையும் மாறி மாறி பார்த்தான், சந்திராவிடம் மன்னிப்பு வேற கேட்கவேண்டும் என துடித்தான் அதே நேரத்தில் சந்திராவிடம் சென்றால் பவளம் மனதையும் உடலையும் பாதிக்க விரும்பாமல் இருமனநிலையை சுமந்து நின்றிருந்தான் விக்கி என்கிற ராஜா.

"ராஜா..."

"சொல்லுங்க மா..."

"போய் அம்மாவை கூட்டிவந்து சாப்பிட வை"

"நிஜமாவா மா!" ராஜா ஆச்சரியத்தில் கேட்க.

"நான் பேருக்கு தான் அம்மா, அவ அம்மாக்கும் மேல, இத்தனை வருஷம் அவ விட்டுக்கொடுத்தது போதும் அவ இழந்ததை மொத்தமா கொடுக்கனும்" என பவளம் ஆணையிட.

"கண்டிப்பாமா... தேங்க் யூ" ஆசையாக பவளம் கன்னத்தில் முத்தமிட்டு சந்திரா அருகில் சிறுவனாக ஓடி சென்றான்.

"அம்மா..." ராஜா கூப்பிட, சந்திராவுக்கு மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை தான் இருந்தும் பவளம் முகத்தை தயக்கத்தோடு பார்க்க.

"இன்னும் பழசையே நினைச்சிட்டு இருக்கியா சந்திரா, மன்னிச்சிடு நான் தேவையில்லாம உன் கிட்ட சண்டை போட்டு இருக்க கூடாது, கொடியை நீ அடிச்சிட்ட சொன்னதும் கோபம் வந்துடுச்சி அதான். ஆனா எனக்கு இப்போ தான் புரியுது கொடி பொய் சொல்லி இருக்கான்னு. அவ வரட்டும் நாலு அடி விட்டாதான் என் மனசு ஆறும்"

"அக்கா... பாவம் சின்ன பொண்ணு தம்பி இடத்தில் வேறு ஒருத்தனை வச்சி அவளால பார்க்க முடியலை அதான் அப்படி செஞ்சிட்டா இனி அப்படி செய்ய மாட்டா, மாப்பிள்ளை அவளை மாத்திடுவார்"

"ம்ம்ம்ம்... எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு, அவள் சாதாரணமா சொன்னா எல்லாம் கேட்க மாட்டா. தியாகு அதிரடி தான் இனி எடுபடும் சரி உள்ள வா"

சந்திரா உள்ளே வர, சுட சுட இட்டிலியோடு குழலி அனைவருக்கும் பரிமாற, விக்கிக்கு மனதில் பல வருடம் கழித்து நிம்மதியாக இருந்தது.

"குட்டி... நீயும் சாப்பிடேன்" விக்கி மெதுவாக குழலியிடம் சற்று தயக்கத்தோடு கேட்க. குழலி காது கேட்காதது போல அமர்ந்து அனைவரையும் வயிறார சாப்பிட வைத்தாள்.

குழலி கோபமாக இருப்பதை கண்டுகொண்ட பவளம் வாய் வரை சாப்பிடு சொல்ல வந்துவிட்டு பாதியில் நிறுத்திக்கொண்டார். அவர் பெரியதாக கொடுமை படுத்தவில்லை தான், செய்த அனைத்தும் கொடியின் தூண்டுதல் பெயரில் தான் நடந்தது இருந்தும் வீட்டுக்கு வந்த அன்றே தனியாக சமைத்துக்கொள் என சொன்னது தவறு, ஒரே வீட்டில் பேசாமல், பேசும்போது குத்தல் பேச்சோடு பேசியது எவ்வளவு பெரிய தவறு, தனியாக விட்டுவிட்டு குடும்பத்தோடு படம் பார்க்க சென்ற போது அவள் மனது எப்படி துடித்து இருக்கும்.

பவளம் அமைதியாக குழலியை பார்க்க அனைவரும் சாப்பிட்டு முடிக்க தட்டையும் எடுத்து வைத்துவிட்டு. தனக்காக செய்து வைத்த நூடுல்ஸ் போட்டு சாப்பிட துவங்கி இருந்தாள்.

அரசி விக்கியை விட்டு ஒரு இன்ச் கூட நகரவில்லை, அவளுக்கு பேச வேண்டியது நிறைய இருந்தது. பேசிக்கொண்டே இருந்தாள்.

சந்திரா பவளம் ரங்கன் பொதுவாக பேசிக்கொண்டிருக்க, ரங்கனுக்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது. பவளம் முகம் சிரித்தாலும் கவலையில் தேங்கி இருப்பது நன்கு தெரிந்தது. தனியாக பேசிக்கொள்ளலாம் என விட்டுவிட்டார்.

"அரசி இரு அண்ணிகிட்ட பேசிட்டு வரேன்"

"சரி அண்ணா..." அரசி குடும்பத்துடன் பேசிக்கொண்டிருக்க.

"குழலி இது வேண்டா இட்லி வைக்கிறேன் சாப்பிடு" அவன் சொல்வது எல்லாம் கேட்காதது போல வயிற்றை நிரப்பிக்கொண்டிருந்தாள்.

"குட்டிமா" அவன் அழைத்ததில் ஒரு முறை சாப்பிடுவதை நிறுத்தியவள் மீண்டும் சாப்பிட துவங்கி இருந்தாள்.

"ப்ளீஸ் சாரி... எனக்கு என்ன செய்யுறதுனே தெரியலை" விக்கி பேச துவங்கியதை பார்த்து ஆளுக்கு ஒரு பக்கம் கழன்றுகொள்ள, எஞ்சி இருந்தது இருவர் மட்டுமே.

"கையை விடுங்க ராஜா பசிக்குது சாப்பிடனும்" குழலி குரலில் அத்தனை அழுத்தம் இருந்தது.

"சாரி டி, எனக்கு நிதானமா இருக்க முடியலை டா தங்கம், என்ன செய்யுறதுன்னே தெரியலை, ப்ளீஸ் என்னை புரிஞ்சிக்கோ" அவள் கையை பிடிக்க,

"இஷ்...." வலியில் முகம் சுருங்க, பிடித்திருந்த கையை தளர்த்தி திருப்பி பார்க்க சமையல் செய்யும் போது சுட்டுக்கொண்டாள் போல.

"குழலி என்ன இது மருந்து போடாம இப்படி வச்சி இருக்க, இனி நீ ஒன்னும் சமைக்க தேவையில்லை, நானே இனி பார்த்துக்கிறேன்"

"இவ்வளவு நாள் அது தெரியலையா ராஜா விடுங்க கையை" எஞ்சி இருந்த நூடுல்ஸ் வேகமாக விழுங்கிக்கொண்டு சந்திரா வீட்டுக்கு போய்விட்டாள்.

அவள் வருகைக்காக விக்கி காத்துக்கொண்டிருக்க, பத்து மணி தாண்டியும் குழலி வந்த பாடில்லை சந்திரா மடியில் படுத்துக்கொண்டு அரசியிடம் கடலை வருத்துக் கொண்டிருந்தாள். ராஜா தான் நிலாவை பார்த்துக்கொண்டு தலைவி வருகைக்காக வானிலா போல காய்ந்து கொண்டிருந்தான்.

****

டேய் சொந்த ஊர் இருக்குல நீயும் சங்கவியும் ஹனிமூன் போயிட்டு வந்திடுங்க,

'இதென்ன இந்த அத்தை பிக்னிக் போயிட்டு வந்திடுங்க போல சாதாரணமா சொல்லுறாங்க. சங்கவி படிப்பு முடியாம போக கூடாதுன்னு சொல்லிடு. இவங்க இன்னும் நீ யூ ஜி தான் முடிச்சி இருக்கன்னு நினைச்சி இருக்காங்க வச்சி செய்' என மனதில் திட்டம் தீட்ட.

"நான் அவர் கூட போகமாட்டேன், யூ ஜி முடிக்கர வரை"

'எதே யூ ஜி யா? என்னாமா நடிக்கரா குட்ட வாத்து' வேந்தன் மாட்டிவிடல்லாம் நினைக்கவில்லை, அவள் நடிப்பை ரசித்துக் கொண்டிருந்தான்.

"யாரு யூ ஜி படிக்கிற?" கமலா கேள்வி கேட்க.

"வேற யாரு அத்தை நான் தான், பெண்பிள்ளைக்கு படிப்பு முக்கியம் இல்லைமா இது எல்லாம் வேண்டாமே" வீரமாக பேச துவங்கி பம்பியபடி முடிக்க.

"ஓ... அப்ப நீ யூ ஜி தான் படிக்கிற இல்லையா"

"ஆமா..." வாய் கூசாம பொய் சொன்னாள் சங்கவி.

"அப்போ நீ பி. ஜி கடைசி வருஷம் படிக்கல இப்ப அப்படி தானே" கமலா ஒரு மார்க்கமாக சொல்ல, சங்கவிக்கு மட்டுமல்ல, வேந்தனுக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது, 'அம்மாக்கு எப்படி தெரிஞ்சது அத்த சொல்லி இருப்பாங்களா?' யோசனையில் வேந்தன் சங்கவியை பார்க்க அவளோ திருட்டு முழி முழித்துக்கொண்டு இருந்தாள்.

"அது வந்து..."

"வந்து போயின்னு மழுப்பாத உன் அம்மா சொல்லிட்டாங்க"

'அடியே லூசு மதர் மம்மி இப்படி கவுத்துவிட்டுட்டியே' மனதில் ராகவியை திட்டித் தீர்த்தாள்.

"நீ மனசுல உன் அம்மாவை திட்டியது போதும் முதல்ல கிளம்பு"இருவரையும் கையோடு துரத்திவிட்டார் கமலா.

வழி முழுவதும் ராகவி கமலாவை திட்டிக்கொண்டும் இடையில் வேந்தனை முறைத்துக்கொண்டும் வந்தாள்.

"நான் என்ன செஞ்சேன், என்னை எதுக்கு முறைக்குற?"

"நான் எவ்வளவு கஷ்டப்பட்டு மறைச்சி மறைச்சி வச்சேன்"

"கிழிச்ச, அப்படி என்ன மேடம் செஞ்சீங்க"

"உங்க கண்ணுல பட கூடாதுன்னு யூ ஜி புக் எல்லாம் தேடி பிடிச்சி, செட் பண்ணி கிழிச்சி ஒட்ட வச்சேன் தெரியுமா" செய்தது எல்லாம் வீனா போயிடுச்சே என சலித்துக்கொள்ள வேந்தன் அமைதியாக சிரித்து வைத்தான் இந்த மாயவன்.
 

T22

Well-known member
Wonderland writer
23 சிவப்பழகியே...

வேந்தன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு குழுங்கி குழுங்கி சிரித்தான், "இப்ப எதுக்கு பைத்தியம் போல கேக்க பேக்ன்னு சிரிக்கிறிங்க?" கோபமாக அவனது சட்டை காலரை தாவி பிடிக்க, அவளது மெல்லிய கரங்களை தன் சர்ட்டோடு சேர்த்து பிடித்துக்கொண்டு.

"நானும் முதல்ல ஏமாந்துட்டேன் அன்னைக்கு, தண்ணீ குடிக்க போயிருந்த நினைவு இருக்கா?அன்னைக்கு தான் கண்டுபிடிச்சேன் "

"லூசாயா நீ தினமும் தான் தண்ணீ குடிக்கிறேன்..." சங்கவி வேந்தனை அனல் தெறிக்க முறைக்க.

அவள் தூங்க பொய் சொல்லி வந்ததை சொல்லி சிரிக்க,

"உங்களோட தலைவலியா இருக்கு, தெளிவா சொல்லுங்க அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?"

"அட்டையை மாத்த தெரிஞ்ச உனக்கு, முதல் பக்கத்தில் எழுதுனதை மறைக்க தெரியலை பாரேன்... இதுல ஒட்டிய அழகு அட்டை கையோட வந்திடுச்சி"

"ச்சோ... சோதப்பிட்டேன்" சங்கவி தலையில் அடித்துக்கொள்ள.

"எனக்கு பஸ்ட் டே சொல்லித்தந்தது அப்பவே டவுட் இருந்தது என்னா டா இது இவ்ளோ ஹெவி சிலபஸ்சா இருக்கேன்னு... சரியான பிராடு பயபுள்ள"

"ரொம்பதான்.." சங்கவி கழுத்தை நெடித்துக்கொண்டு ஜன்னல் புறம் திரும்பியதுதான் கிராமத்து வீடு வரும் வரை வேந்தனை திரும்பிக்கூட பார்க்கவில்லை. ஆனால் அவனது பார்வை சாலையிலும் மனைவி புறமும் மாறி மாறி பயணித்துக்கொண்டே தான் வந்தது வழி முழுவதும். அவன் மனதிலோ, 'இன்னைக்கு விஷயத்தை சொல்லி விடனும்... இந்த பீப்பாவை சமாளிக்க முடியலை,

இவளை இங்க இருந்து கூட்டிப்போகும் போது எல்லாம் சரி செஞ்சிடனும், இதுக்கு மேல முடியாது டா சாமி" இவர்கள் வந்ததும் சாவி கொடுத்தார் அந்த ஊரில் வசிக்கும் ஒருவர்.

"தம்பி எல்லாம் சுத்தம் செஞ்சாச்சி"

"அச்சோ... உங்களுக்கு எதுக்கு சிரமம்" வேந்தன் சொல்ல.

"நீங்களே தேன் நிலவு கொண்டாட வந்து இருக்கிங்க சுத்தம் செஞ்சிட்டா இருக்க முடியும்" அடக்கபட்ட புன்னகையோடு அந்த அண்ணா சென்றுவிட.

"உங்க அம்மா தான் இப்படி சொல்லி இருப்பாங்க, உங்களுக்கும் அறிவு இல்ல அவங்களுக்கும் அறிவு இல்ல" வேந்தன் கதவை திறந்துவிட்டு சங்கவியை முறைத்தவாறு நின்றிருந்தான்.

"என்ன முறைப்பு லக்கேஜ் எடுத்துவாங்க"

"சங்கவி உனக்கு அவ்வளவு தான் லிமிட், சும்மா... சும்மா எங்க இரண்டு பேரையும் திட்டிட்டு இருக்காம கொஞ்சமாவது இயல்பா வாழப்பாரு" வேந்தன் முகம் சாதாரணமாக இருந்தாலும் அழுத்தமாக வார்த்தை வெளிவந்தது.

"நான் ஒன்னும் இல்லாததை ஒன்னும் சொல்லலையே" சங்கவி சண்டை கோழி கணக்காக தலையை சிலுப்பிக்கொண்டு நிற்க.

"வேண்டா சங்கவி போதும்"

"நான் அப்படி தான் பேசுவேன் நீ ஒரு லூசூ... உன் அம்மா...." வாக்கியத்தை முடிக்கும் முன் வேந்தன் சற்று குனிந்து சங்கவி நெற்றியில் அழுத்தி முத்தம் பதிக்க.

அதிர்தந்தவள் அவன் கண்களை பார்த்திருக்க, 'என்ன இவ சிலை ஆகிட்டாளா?' சங்கவி காதுக்கருகில் குனிந்து.

"இன்னும் என் அம்மாவை திட்டினா இது தான் தண்டனை. இந்த முறை நெத்தியில் அடுத்த முறை" சங்கவி இதழை பார்வையால் சுட்டிக்காட்ட.

"ரொம்ப மோசம் நீங்க... பிடிக்கலைனா விட வேண்டியது தானே" மனதுக்கு அவன் செயல் புரிந்து இருந்தாலும் சலித்துக்கொண்டாள்.

"ஓ... மேடம்க்கு இந்த வேந்தனை பிடிக்கலை அப்படி தானே"

"ஆமா... ஆமா... ஆமா பிடிக்கலை" கண்களை மூடி கத்திக்கொண்டிருந்தாள். மெல்லிய புன்னகையோடு வேந்தன் அவளை ஊடுருவும் பார்வை பார்த்துக்கொண்டிருந்தான்.

"என்ன பார்வை வழியை விடுங்க... பிடிக்காத புள்ளை பின்னாடி சுத்திட்டு"

"ஓ.. உனக்கு பிடிக்கலையா டி"

"இந்தா பாருயா... இந்தா டி சொல்லுற வேலை எல்லாம் வச்சிக்காத" சங்கவி விரல் நீட்டி எச்சரிக்க, அவளது விரலை தட்டிவிட்டவன், "நானும் கோபப்பட கூடாது சின்ன பொண்ணுன்னு பார்த்தா ரொம்ப ஆடுறடி நீ" பிடிக்காதவன் போட்டோவை எதுக்கு சேட் பேக்கிரவுன்ட் ஸ்கிரினா வச்சி இருக்க நீ?"

'இவருக்கு எப்படி தெரியும்' திருடி போல முழித்தாள்.

"என்ன விஷயம் தெரிஞ்சதுன்னு சாக்ல இருக்கியா? நீ பண்ண கேடி தனத்தை எல்லாம் சொல்லட்டா. இரு அதுக்கு முன்னாடி கதவை சாத்திட்டு வரேன், உன் கூட பேச நிறைய விஷயம் இருக்கு"

லக்கேஜ் எடுத்து உள்ளே வைத்துவிட்டு விவரமாக கதவை சாத்திவிட்டு வேந்தன் ஒரு முடிவோடு இருப்பது தெரிந்து சங்கவிதான் நடுநடுங்கி போனாள். கையை பிடித்து படுக்கை அறையை தேடி கண்டுபிடித்து சங்கவியை பிடித்து இழுத்து சென்றான்.

"வெளியேவே பேசலாம் அதுக்கு எதுக்கு படுக்கை அறை" வேந்தன் கையிலிருந்து தனது கையை விடுவிக்க பெரிய போராட்டம் செய்தாள். வேந்தன் விடாப்பிடியாக அழைத்து சென்றவன் அவளை மெத்தையில் உட்கார வைத்துவிட்டு தானும் அருகில் அவளை உரசியது போல உட்கார்ந்துகொண்டான்.

"அவ்வளவு இடம் இருக்கில்ல, தள்ளி உட்காருங்க"

"பாருடா இந்த குட்டி வண்டுக்கு மரியாதையா எல்லாம் பேச தெரியுமா?" நக்கலாக சொன்னவன் இதழில் ஒட்டியிருந்த புன்னகையை ஒரு நொடி தன்னையும் மறந்து சங்கவி ரசிக்க.

"அழகி..." அவனது அழைப்பின் மாற்றத்தை புரிந்துகொண்டவள், அவனது கை சிறையில் இருந்து விடுபட போராட, அவனிடமிருந்து ஒரு இன்ச் கூட நகரமுடியவில்லை.

அவளது கன்னத்தை வருடிவிட்டவன், "டேய் மாமா நீ வெள்ளையா இருக்கறதுக்கு இந்த தாடி மீசை செம்ம அழகா இருக்குடா தங்கம்.. எப்படி வளர்ந்து இருக்கான் பாரு நெட்ட கொக்கு... இரு நானும் பூஸ்ட் குடிச்சி உன் ஹைட்டுக்கு வரப்போறேன்.... எப்படா இந்த காலேஜ் முடியும்ன்னு இருக்கு" அவளை போல சொன்னவனை பார்த்து இன்னும் அதிர்ந்து நின்றாள், 'இவருக்கு எப்படி நம்ம பேசியது தெரிஞ்சது!'

"என்ன அதிர்ச்சியா இருக்கா? நான் தூங்கிட்டேன்னு நினைச்சி பேசிட்டு இருந்த ஆனா நான் தூங்காம மொத்தமா கேட்டுட்டேன்"

"எது கேட்டுட்டிங்களா?" சங்கவி அவனால் ஏற்பட்ட சங்கடத்தை மறைக்க அவனது மார்பிலே குடி ஏற.

"நான் நீங்க தூங்கிட்டிங்கன்னு நினைச்சேன்"

"தூங்கிட்டுதான் இருந்தேன்... உன் வாய்ஸ் என்னை எழுப்பிடுச்சி"

"ஓ..."

"சங்கவி... எனக்கு ஒரு ஆசை"

"என்ன ஆசை?" இன்னும் இறுக்க அணைத்திருந்தாள்.

செல்லமாக, "எனக்கு கூச்சமா இருக்கு விடு டா"

"ச்சி போங்க..." வேந்தனை விட்டு வேகமாக விலகி தரையை அளந்துகொண்டு இருந்தாள்.

"இவ்வளவு தூரம் வேண்டாம் இன்னும் பக்கமாக இருக்கலாம் அவளது இடைவெளியை சுட்டிக்காட்டி வேந்தன் சொல்ல.

"பக்கம் வந்தா கூச்சமா இருக்குன்னு சொல்லவேண்டியது, தூரம் போனா ஏன் இந்த தூரம்ன்னு சொல்ல வேண்டியது"

"ஆமா பஸ்ட் டைம் பொண்ணு ஹக் செய்யுறது ஒரு மாறி இருக்கு"

"இருக்கும் இருக்கும்" சங்கவி கழுத்தை நெடித்துக்கொள்ள.

"சரி பேச்சை மாத்தாத டி.. எப்படி எப்படி தூங்கும் போது மாமா அத்தான்னு கொஞ்ச வேண்டியது. நாள் முழுக்க என்னையையும் என் அம்மாவையும் டைம் டேபில் போட்டு திட்ட வேண்டியது"

"ஆமா அம்மான்னா வரிஞ்சி கட்டிட்டு என்கிட்ட சண்டைக்கு வந்திடுவீங்களே" அந்த நேரம் சரியாக கமலாவிடம் இருந்து கால் வர.

"பாருங்க உங்க அம்மாக்கு மூக்கு வேர்த்துடுச்சி, நான் சிரிச்சி பேசுறது எப்படி தான் அவங்களுக்கு தெரியுதோ தெரியலை"

"சங்கவி அடி விழும்.." அவளை அடிப்பது போல கை ஓங்கியவன் அவளது தாடையை பிடித்து திருப்பி கன்னத்தில் அழுத்தி முத்தம் பதித்து அன்னை கால் அட்டன் செய்து லவுட் ஸ்பீக்கரில் போட்டவன் சங்கவி தோளில் கை போட்டு தன்னோடு நெருக்கிக் கொண்டான்.

"நீங்க உங்க அம்மாகிட்ட பேசிட்டு இருங்க நான் போறேன்" வேந்தன் காதில் மெதுவாக சொல்ல.

"இன்னும் கொஞ்சம் நேரம் இரு டி.. அம்மா எப்படி இருக்கிங்க, நான் ராகவி வீட்டுக்கு வந்துட்டேன் டா, அவ ஓகே ஆகிட்டாளா, பக்கமா இருக்கா?" இல்லைன்னு சொல்ல சொல்லி சங்கவி சைகை காண்பிக்க, வேந்தன் மெல்லிய சிரிப்போடு,

"இல்ல மா வெளியே இருக்கா சொல்லுங்க"

"இன்னும் கோபமா இருக்காளா டா என் மேல?"

"இல்ல மா இப்பே ஓகே ஆகிட்டா"

"எங்க ஓகே ஆனா என்னை பார்த்தா கோபம் தான் பட்டுட்டு இருக்கா"

"நீ செஞ்ச ஓவர் பர்பார்மன்ஸ் அப்படி, கட்டாயப்படுத்தி கல்யாணம் செஞ்சா அப்படிதான் நடந்துப்பா என் பொண்டாட்டி" கமலாவின் சோக குரல் கேட்ட சங்கவிக்கு குழப்பமாக இருந்தது.

"பார்த்துக்கோ டா... நீங்க திரும்பி வந்ததும் ராகவியை நம்ம கூட கூட்டிட்டு போயிடலாம். அதுக்கு அப்புறம் ஒரு செம் தான அவளுக்கும் மெதுவா புரியும் இந்த அத்தை பத்தி" சங்கவிக்கு அதிர்ச்சியாக இருந்தது கமலாவா இப்படி பேசியது? அப்போ நம்ம நினைச்சது போல இவங்க கெட்டவங்க இல்லையா? மனதில் ஆயிரம் குழப்பம் அவளை சூழ்ந்துகொண்டது.

"ஓ... அப்படியா மா" வேந்தன் நக்கலாக கேட்க,

"டேய் என்ன நக்கலா, நீ ஒழுங்கு மாதிரி பேசாத டா.. கல்யாணத்தை ஐஞ்சி நிமிடம் முன் வந்து சங்கவியை காதலிக்கரதா சொன்ன டாக் தானே நீ"

"எது... காதலிச்சிங்களா?" சங்கவி அதிர்ச்சியில் வாயை பிளக்க.

"மா... அப்புறம் கூப்பிடுறேன் வை" போனை கட் செய்தவன் சங்கவியை உலுக்க.

"என்னாச்சி"

"அது கல்யாணத்துக்கு முன்னாடி... என்ன... லவ்"

"ம்ம்ம்ம்... ஆமா பஸ்ட் சைட்... நீ குங்குமம் என் மேல கொட்டிட்ட இல்ல அப்போ இருந்து. இரு ஒரு நிமிஷம்" பையில் பொக்கிஷமாக வைத்திருந்த சட்டையை எடுத்து காண்பிக்க.

"ஓ.... ஆமா நினைவு வந்திடுச்சி .. " அந்த சட்டையை கையில் வாங்கி வருடிக்கொண்டிருந்தாள். காதலிப்பது மட்டுமல்ல காதலிக்க படுவதும் ஒரு சுகம் தானே...

"அம்மா உன்னை கேட்டா அப்ப அவ்வளவு சந்தோஷமா இருந்தது, ஆனா குழலிக்கு மாறியதும் எவ்வளவு கஷ்டமா இருந்தது. அம்மா லைப் தெரியுமில்ல, அப்பா விட்டு போயிட்டார் ரிஜக்சன் ஓட வலி எனக்கு தெரியும் அதான் உன் அக்காவ கட்டிக்க ஓகே சொல்லிட்டேன். ஆனா புல் போகஷ் உன்கிட்ட தான் இருந்தது. உன் அக்கா அவளோட லவ் சொல்லும் போது... ஒரே ஹாப்பி எப்படியாவது அந்த பையன் கூட சேர்த்து வைக்க பிளான் போட்டேன். பட் என் பிளான் நீ நிறைவேத்திட்ட" வேந்தன் காதலை கேட்டு பிரம்மிப்பாக இருந்தது.

"அத்தான் லவ் யூ" அவனது கண்களை பார்த்து காதல் வழிய சொல்ல.

"நானும் தான் லவ் யூ" வேந்தன் சங்கவியை அணைத்துக்கொள்ள.

"நோ... மாமா இன்னும் காலேஜ் முடிக்கலை" அவனது பார்வை மாற்றத்தை பார்த்து ஒதுங்க.

"நோ...நோ அதெல்லாம் இல்லை டா இன்னைக்கு நமக்கு பஸ்ட் நைட்" வேந்தன் கூச்சமே இல்லாமல் சொல்ல.

"வேணா அத்தான் இது நல்லதுக்கில்ல..." சங்கவி கதவை திறந்துகொண்டு வெளியே ஓட, அவளை பின் துரத்தி வேகமாக ஓடி வர, இருட்டத் துவங்கி இருந்த மாலை நேரமது, இருவரின் மகிழ்ச்சியை கண்டு வானமும் மெல்லிய தூரல் தூவ... இருவரும் ஓடி பிடித்து விளையாட ஆட்டம் போட்டு வரும் போது நன்கு இருட்டத் துவங்கி இருந்தது.

"ஏங்க மழை நல்லா இருந்ததில்ல"

"ஆமா, ஜாலியா இருந்தது"

"நான் ஒன்னு கேட்கட்டாங்க"

"நீங்க பொய் தானே சொன்னிங்க, அத்த கடிச்சி வச்சிடுவாங்கன்னு"

"ஹா... ஹா ஆமா ஆமா எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிச்சிட்ட"

"சும்மா கிண்டல் செய்யாதீங்க மாமா.. அத்தைக்கிட்ட முதல்ல சாரி கேட்கனும்" சங்கவி கமலாவுக்கு போன் போட்ட, "அத்த சாரி அத்த உங்களை தப்பா புரிஞ்சிக்கிட்டேன்"

"என்ன வேந்தன் எல்லாம் சொல்லிட்டானா, அது எல்லாம் ஒன்னுமில்ல நீங்க ஜாலியா இருந்துட்டு வாங்க வச்சிடுறேன்" கமலா சாதாரணமாக சொல்ல. சங்கவிக்கு தான் சங்கடமாக போயிடுச்சி.

வேந்தன் பின்னிருந்து சங்கவியை கட்டி அணைத்திருக்க அவளது கண்ணீர் அவனது கரங்களை நனைத்திருந்தது.
 
Status
Not open for further replies.
Top