ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் வெட்க சிவப்பழகியே _ கதை திரி

Status
Not open for further replies.

T22

Well-known member
Wonderland writer
14 சிவப்பழகியே...

"என்ன வீடே மனக்குது... பிரியாணி வாசம் வருது" சங்கவி தலையை திருப்பி முகர்ந்து பார்க்க... சங்கவி மெய்மறந்து தன்னையும் மீறி கண்களை மூடி மோப்பம் பிடித்துக்கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்திருந்தாள்... கண்கள் மூடி அழகாய் வந்தவளை பார்த்த வேந்தன் சங்கவியின் சிறுப்பிள்ளை தனத்தை ரசித்தான் என்றும் போல் இன்றும் சொக்கித்தான் போனான் தன்னவளின் முகத்தை பார்த்து.

டிசைனர் புடவையில் பெரியவளாக தெரிந்தாள், 'இனி புடவை கட்டவேண்டாம்' ன்னு சொல்லனும் தாறுமாறா பார்வை போகுது அவகிட்ட' தன் மனம் போகும் திசையை அடக்கினான் இந்த நல்லவன்.

கண்களை திறந்து, "பரவாயில்லையே செமையா வாசத்தோட சமையல் செஞ்சிட்டிங்க போல"

"சமையல் சூப்பரா செய்வேன் தெரியுமா?"

"பாருடா பரவால்ல... நீ எனக்கு இதுக்காச்சி யூஸ் ஆவ"

"என்ன சவுண்ட் ஜாஸ்தியா இருக்கு? அம்மா இல்லாததாலா"

"ஆமா அதுக்கென்ன, ரொம்ப செய்யுற இனி உன்ட பேசலை போ" கோபித்து போக இருந்தவளை கையை பிடித்து நிறுத்தி இருந்தான்.

"கொஞ்சம் போசலாமா?"

"எனக்கு உன்ட பேச பிடிக்கலை விடு" கையை பிரித்தெடுக்க போராடினாள்.

"பேசி தான் ஆகனும்... அம்மாக்கு போன் போடவா?" அவளது வீக் பாயின்டில் கைவக்க,

"ஐயோ... வேண்டா ப்ளீஸ்" கமலா பெயரை கேட்டாலே மனதில் பதற்றம் தொற்றிக்கொள்கிறது சங்கவிக்கு.

"சரிவா சாப்பிடடலாம்"

"இல்ல எனக்கு ஒன்னும் வேண்டாம்" சங்கவி முகத்தை திருப்பி வேந்தன் அவள் முகத்தில் ஏற்படும் சிறுசிறு அசைவுகளை கூட கூர்ந்து பார்த்தான்.

'சாரி மா உன்னை இவகிட்ட வில்லி மாறி காமிச்சிட்டு இருக்கேன். என் காதலை அவ புரிஞ்சிக்கிட்ட அப்புறம் முதல் வேலையா இந்த நாடகத்தை தான் சொல்லி இரண்டு பேரையும் சேர்த்து வைக்கனும்' யோசித்துக்கொண்டே சமையலை முடித்து திரும்பும் போது சங்கவியின் வாயெல்லாம் பல்லாக கையில் தட்டோடு நின்றிருந்தாள்.

"யாரோ நான் சமைச்சதை எல்லாம் சாப்பிட மாட்டேன்னு சொன்னாங்க.. நீ பாத்தியா சங்கவி அவங்களை"

"ஹா... ஹா அப்படி யாருமில்லை இங்க இல்லை பா" வேந்தன் முன் தட்டை நீட்ட.

"என் செல்ல அழிகி" கன்னம் கொஞ்சினான்.

"ஏய் கன்னம் கிள்ளாதே வலிக்கும்" வேந்தன் கையை தட்டிவிட.

"அழகிமா"

"பேசிட்டே இருக்காத சாப்பாடு போடு... ரொம்ப பசி"

"சரிடா... தங்கம் இன்னொரு ப்ளேட் எடு"

"எதுக்கு" சாப்பாடு போட்டுக்கொண்டவனது கை தானாக நின்றது, திரும்பி பார்க்க.

"அடிப்பாவி! எனக்கு சாப்பாடு வேண்டாமா?"

"ரொம்ப நடிக்காத ஒன்னா தானே சாப்பிடனும் அத்த சொல்லி இருக்காங்க"

"ஆமால்ல மறந்துட்டேன்" சங்கவி முன் தட்டோடு நடந்து போக,

வேந்தன் தன்னவளை ரசித்துக்கொண்டே தண்ணீரை எடுத்துகொண்டு பின் நடந்துவர.

"ஹாலில் மியூசிக் சேனலை பேட்டுவிட்டு தட்டின் கால்வாசி பகுதியில் ஒரு கோடு போட்டுக்கொண்டு இருந்தாள்.

"அழகிமா... என்ன செஞ்சிட்டு இருக்க?"

"இந்த கோட்டை தான் டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்"

"இதென்ன போங்கா இருக்கு எனக்கு மட்டும் கொஞ்சமா இருக்கு"

"உனக்கென்ன நீ மலைமாடு போல வளர்ந்து இருக்க. நான் தான் பாவம் கோழி குட்டி போல இருக்கேன்"

"மா ரொம்ப குட்டியா இருக்க நீ பெருசா எப்போ ஆவ என் சிரிப்பழகியே" கன்னத்தில் விழும் குழியை பார்த்துக்கொண்டே சாப்பிட துவங்கி இருந்தான், "என்ன அழகிமா வா? சங்கு பெயர்க்கு இது பரவாயில்லை" முத்துப்பல் தெரிய சிரித்தாள்.

"நீ இப்படி சிரிச்சிட்டே இரு தங்கம்... அழகா இருக்க" வேந்தன் சொல்லி முடிக்கும் முன் அவளது முகம் இறுகியது.

"சங்கவி என்னாச்சி? எதாவது ஹர்ட் செஞ்சிட்டேனா" சங்கவி அவனிடம் பேசாமல் சாப்பிட்டு முடித்தவள் அமைதியாக தோட்டத்தின் ஒரு மூலையில் இருந்த ரோஜா செடியை வெறித்து பார்த்துக்கொண்டிருக்க.

"சங்கவி என்னாச்சி டா"

"எனக்கு உன்னை பிடிக்கலை, உங்க அம்மாவை சுத்தமா பிடிக்கலை... இந்த தாலி பாரமா இருக்கு" கழுத்தில் இருந்த தாலியை உயர்த்தி பிடித்து காட்டினாள்.

வேந்தன் முற்றிலும் உடைந்துபோனான் அவளது வார்த்தைகளின் தாக்கத்தால்.

"நான் கட்டின தாலி உனக்கு பாரமா இருக்கா அழகிமா" குரலில் அத்துணை வலி தெரிந்தது,

"ப்ளீஸ் இந்த செல்ல பெயர் எல்லாம் சொல்லிக் கூப்பிடாதிங்க... எனக்கு அறுவெறுப்பா இருக்கு"

'அறுவெறுப்பாவா!' வேந்தன் கண்களை மூடி தன்னை சமன் செய்துகொண்டு.

"சரி கூப்பிடலை போதுமா... நீயா வந்து பேசும் வரை... இனி நான் பேசமாட்டேன். இப்படி பேசியதுக்கு நீ கதறி அழும் நாள் ரொம்ப தூரமில்லை மிஸ்சஸ் வேத்தன்"

"செத்தாலும் கவலைபடமாட்டேன் உனக்காக ஒரு சொட்டு கண்ணீரும் வராது, என் கண்ணிலிருந்து"

"அதையும் பார்க்கலாம்... இன்னொன்னு நீ வேற ரூம் போயிடு"

"எனக்கு மட்டுமென்ன உன் கூட இருக்க ஆசையா? உங்க அம்மாகிட்ட அதை சொல்லு"

"சொல்லுறேன்" போன் போட்டு உடனே கமலாவை வரவைத்திருந்தான்.

வேந்தன் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்க, சங்கவிக்கு வேந்தன் இப்படி அமர்ந்திருப்பது ஒரு சிறு வலியை ஏற்படுத்தி இருந்தாலும், அவனை சமாதானப் படுத்த வந்த வார்த்தைகளை விழுங்கிக்கொண்டு கல்போல ஒருபக்கம் அமர்ந்திருந்தாள் சங்கவி.

கமலா அவதிஅவதியாக வீட்டிற்க்குள் நுழைந்தார்.

"இங்கே என்ன நடந்துட்டு இருக்கு" கமலா குரல் கேட்டதும் வேந்தன் தலையை நிமிர்ந்து பார்க்க.

"ஏன்டா உடனே வரசொன்ன உடம்பு சரியில்லையா, மகனின் தலையிலும் கழுத்திலும் தொட்டு பார்த்து காய்ச்சல் இல்லை என தெரிந்ததும் தான் உயிரே வந்தது.

"அவ எதாவது சொன்னாலா, எதுக்கு சங்கவி இப்படி செஞ்சிட்டு இருக்க? என் பையன் நிம்மதியா இருக்க கூடாதுன்னு நினைக்கிறியா?" கமலா கோபமாக சங்கவி அருகில் நெருங்கி போக வேந்தன் கமலா கையை பிடித்து தடுத்திருந்தான்.

"என்னடா இது..." வேந்தன் பதில் பேசாது, இல்லை என்பது போல வேந்தன் தலை அசைத்தான்.

****

என்ன இந்த துணியை காணோம்...

"அத்த..." கூவிக்கொண்டே குழலி வெளியே இருந்து கூப்பிட. உள்ளிருந்து ஓரு இளம்பெண் எட்டி பார்த்தாள்.

"யாரு நீங்க" அவளது பதுங்கிய குரலை கேட்டதும் குழலிக்கு சங்கவி நியாபகம் வந்தது.

"யார் கா நீங்க?"

"அக்கா இல்ல அண்ணி"

"அண்ணியா... ஓஓஓ நீங்க தான் ராஜா அண்ணா வைப்பா? அழகா இருக்கீங்க கா"

"அட இப்ப தானே சொன்னேன்.. அக்கா இல்ல அண்ணி..." குழலி சிரித்த முகத்தோடு அழுத்தி சொல்ல.

"சரி அண்ணி... உங்களுத்கு எப்படி தெரியும்?"

"அத்த சொன்னாங்க... உன் போட்டோ பார்த்து கேட்கும் போது"

" நீங்களாவது ஒழுங்கா பேசுறீங்களே சந்தோஷம்... அண்ணா உங்கிட்ட பேசுவாங்களா?" அவளது குரலில் அப்படி ஒரு ஏக்கம் வெளிபட்டது.

"முன்ன எல்லாம் சூப்பரா பேசுவாங்க, இப்ப எல்லா பார்த்தா கூட பார்க்காதது போல போயிடுறாங்க"

"ஓ... எப்ப இருந்து இப்படி இருக்காங்க உங்கண்ணன்?"

"ஒன்றறை வருஷம் இருக்கும்"

'கணக்கு சரியா இருக்கே, அப்ப அந்த பிரேக் அப் நாடகத்துக்கும் இதுக்கும் கண்டிப்பா ஏதோ சம்மந்தம் இருக்கு. முதல்ல என் டார்கெட் இந்த தியாகு அண்ணா, அடுத்து ஒரு ஒருத்தரையா பார்த்துக்கலாம்' மனதில் திட்டம் போட துவங்கி இருந்தாள் குழலி.

"அண்ணி... என்ன யோசனை அண்ணாவை நினைத்தா" குறும்பாக சிறியவள் கேட்டு சிரிக்க...

"ஆமா அப்படியே நினைச்சிட்டாலும் கடைக்கு போகனும் அதான் அத்தையை கூட்டிப்போக வந்தேன். என் டிரஸ் நேத்து துவைக்க ஊரவச்சி மறந்து போயிட்டேன்"

"தெரியலையே நான் இன்னைக்கு காலையில தான் வந்தேன்..."

"அம்மா எங்கே போய் இருக்காங்க"

"அம்மா வேலைக்கு போய் இருக்காங்க அண்ணி... கொஞ்ச நேரத்தில் வந்திடுவாங்க"

"என்ன வேலை?"

"அம்மா சின்ன சின்ன விஷேசத்துக்கு சமைக்க போவாங்க, சூப்பரா சமைப்பாங்க தெரியுமா"

"தெரியும்... அன்னைக்கு தக்காளி சாதம் அவ்வளவு டேஸ்டா இருந்தது. உன் அண்ணன் தான் முழுசா சாப்பிடவிடலை, வாயில இருந்ததை எல்லாம் துப்ப வச்சிட்டான்"

"அண்ணா வா இப்படி எல்லாமா செய்தாரா!"

"ஆமா, சரி வா இப்படி உட்காரு பேசலாம்"

"உன் பேர் என்ன?"

"அரசி"

"பொருத்தமா பேர் வச்சி இருக்காங்க உனக்கு"

"போங்க நீங்களும் அண்ணி கிண்டல் செஞ்சிட்டு, ஏன்டா இந்த பேர் வச்சாங்கனானு வருத்தமா இருக்கு தெரியுமா"

"ஏன் இந்த பேருக்கு என்ன நல்லா தான இருக்கு"

"எல்லாம் அரிசி மூட்டன்னு கிண்டல் செய்யுறாங்க தனது பருத்த உடலை சுட்டிக்காட்டி அரசி சொல்ல.

"பிசிக்கல் அப்பியரன்ஸ்க்கு இம்பார்டன் கொடுக்காத, அதே சமையம் ஹெல்த்துக்கு இம்பார்டன்ட் கொடுக்கனும் சரியா... கொஞ்சம் குறைச்சா போதும் சூப்பரா ஆகிடுவ"

"சரி அண்ணி... ஆனா எனக்கு சாப்பிடுறதுன்னா அவ்வளவு இஷ்டம்"

"வேற என்னென்ன பிடிக்கும் உனக்கு"

"எனக்கு முதல் அம்மா பிடிக்கும் அப்புறம் அண்ணா பிடிக்குமா"

"அப்பா..."

"நான் தான் பார்த்ததே இல்லையே ஆனா..." வேலை முடித்துக்கொண்டு சந்திரா அப்போது தான் வந்தார்.

"அடடே மருமகளே வந்துட்டியா"

"அத்த வந்துட்டிங்களா, ரெம்ப டயார்டா இருக்கிங்க இருங்க காபி போட்டு கொண்டு வரேன்"

"எனக்கு காபி பிடிக்காது வுவேக்... டீ தான் இஷ்டம்"

"இதோ இரண்டு நிமிஷம் அத்த..." வீட்டை சுற்றி பார்த்துக்கொண்டே சமையல் கட்டில் நுழைந்துகொண்டு, அரசியை அழைத்தாள் சர்க்கரை எங்கே என கேட்க.

சமையல் கட்டை எட்டி பார்த்த சந்திரா கையில் இருந்த பையில் எதையோ மறைத்து உள்ளே எடுத்து சென்றார்.
 

T22

Well-known member
Wonderland writer
15 சிவப்பழகியே...

"நல்லவேலை எடுத்து வச்சிட்டேன்..." நிம்மதியாக சந்திரா திரும்பியபோது குழலி முன் நின்றிருந்தாள்.

எதிர்பாராமல் அவளை பார்த்ததும் சந்திராவுக்கு வேர்த்து கொட்டியது.

"என்னாச்சி உடம்புக்கு ரொம்ப முடியலையா அத்த"

"அது எல்லாம் இல்ல மா கொஞ்சம் அசதியா இருக்கு" என தட்டுத் தடுமாறி சொல்லி முடிக்க,

"சரி டீ குடிங்க... உங்க டயார்ட் எல்லாம் ஓடி போயிடும்" குழலி கையோடு பேன் போட்டுவிட்டு மெத்தையில் சந்திரா பக்கம் உட்கார, சந்திராவுக்கோ பதற்றம் நின்றபாடில்லை.

"அத்த உங்ககிட்ட ஒன்னு கேட்கனும்"

"என்ன மா" பதற்றத்தை மறைத்துக்கொண்டு கேட்டார் சந்திரா.

"அது வந்து... என் டிரஸ் ஊர வச்சது காணோம்"

"நான் துவச்சிட்டேன் நேத்தே, இரு எடுத்துவரேன்"

"அட அத்த டீ குடிச்சிட்டு எடுத்துக்கலாம், நான் போய் குளிச்சிட்டு வரேன். இங்க கடை எங்க இருக்கு? கூட்டி போறீங்களா?"

"என் கூட வந்தா ராஜா எதாவது சொல்லுவானே" குழலிக்கு முகம் கருத்தது.

"ஆமால்ல மறந்தே போயிட்டேன், சரி ரூட் சொல்லுங்க நான் போயிட்டு வரேன்"

"அரசியை கூட்டி போ, அவளை எதும் சொல்லமாட்டான்"

"ஏன்! அவர் உங்கிட்ட பேசரதில்லை?"

"தெரிலைமா என்ட... எப்பவும் பாசமா தான் இருப்பான், அவன் அம்மாகிட்ட இருந்ததை விட என்கிட்ட தான் இருந்தது தான் அதிகம். நிறைய நாள் வீட்டை கூட மறந்து இங்கவே தூங்கிடுவான். அரசினா அவனுக்கு அவ்வளவு இஷ்டம், ஆனா இப்போ அவகிட்ட கூட பேசரதில்லை"

"என்னையும் இப்படி தான் பாதில விட்டு வந்துட்டான், எவ்வளவு கஷ்டப்படுத்திட்டான் தெரியுமா அத்த" சந்திராவை அணைத்துக்கொண்டு கதறி அழுதுவிட்டாள், அடக்கி வைத்திருந்த அனைத்து வலியும் கண்ணீராக வெளிவந்தது இருவருக்கும்.

வீட்டில் கொடி ஆடிய ஆட்டத்துக்கு கோபமாக குழலியை தேடி வந்த ராஜாவுக்கு இருவரும் கதருவதை கேட்டு உயிர் ஒரு முறை அதிர்ந்து நின்றது.

உள்ளே இருவர் அழுதுகொண்டிருக்க.,
வெளியே வாசலில் நின்றிருந்த அண்ணனை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள் அரசி.

அவளது கண்களில் கண்ணீரில்லை, அரசியின் பாசத்துக்காக தவிக்கும் விழிகள் அவனை கொன்று புதைத்தது.

திசை மாறி சென்ற எண்ணங்களை தடுக்க முடியாமல் தலையை குழுக்கியவன், "குழலி வெளியே வா" அடி தொண்டையில் இருந்து கர்ஜிக்க, குழலியும் சந்திராவின் உடலும் குழுங்கியது.

"இந்தா மா டிரஸ் எடுத்துட்டு போ" கையில் துணியோடு குழலி வெளியே வர.

"நேத்து சொன்னது காது கேக்கலையா குழலி"

அவனது கோபமான முகத்தை கண்கொண்டு பார்க்கமுடியவில்லை. அவ்வளவு தாண்டவம் ஆடி இருந்தான்.

"இனி இங்கே வரும் வேலை வச்சிக்காத" குழலி கையில் இருந்த ஆடையை பிடித்து தூக்கி போட அது சந்திரா காலடியில் ஆதறவற்ற அனாதையாக வந்து விழுந்தது.

"என் டிரஸ்"

"அவங்க தொட்டது உனக்கு வேண்டாம்... வா" சந்திராவின் மனதில் பெரிய கத்தியை இறக்கி சென்றிருந்தான் ராஜா. கையை பிடித்து இழுத்து வர, இங்கே பெரிய கலவரம் நடக்க,

வீட்டில் வில்லங்கமாக மலர்கொடி தாய்க்கு சிறப்பு வகுப்பு எடுத்துக்கொண்டு இருந்தாள்.

"மா ஒரு நாளில் நீ என்ன செஞ்சி வச்சிருக்க லூசில் விட்டுட்டியா, அவகிட்ட கொஞ்சம் கடுமையா நடந்துக்க சொன்னா, என்ன செஞ்சிட்டு இருக்க?" பவளத்தை வார்த்தையால் வதக்கினாள்.

"நான் அவகிட்ட எல்லாம் பேசலைடி, நேத்து அவ துணி பவுடர் எடுக்கும் போது கூட திட்டினேன், அதே என்னால முடியலை, நல்ல பெண்ணு போல. அமைதியா இருந்தா, பாவமா இருக்கு கொடி விட்டுடலாம்... அவன் வாழ்க்கை அவன் முடிவு எடுக்கட்டும்"

"இப்படியே செஞ்சிட்டு இருந்தா... அவ உன் பையனை கைக்குள்ள போட்டுட்டு தனியா கூட்டிட்டு போயிடுவா அப்போ என்ன செய்வ சொல்லு" பவளத்தை எங்கு அடித்தால் வழிக்கு வருவார் என தெரிந்து இந்த விஷ கொடி குறி பார்த்து அடிக்க, பவளம் மனதில் ஒரு பதற்றம் சூழ்ந்துகொண்டது,

"இனி நான் அவகிட்ட பேசலை போதுமா"

"சரி மா... இனி நான் பாத்துக்கிறேன், அவளை சீக்கிரம் வீட்டைவிட்டு விரட்டிடுறேன்" தம்பி வருவது தெரிந்ததும் மலர்கொடியும் பவளமும் ஒருசேர அமைதியாகிவிட.

"என்ன சொன்ன தியாகு அத்தான்கிட்ட?"

"நா... நான் எதும் சொல்லலை" குழலி அந்த இடத்தை விட்டு போக பார்க்க.

"எங்க டி போற, இனி தியாகு மாமாகிட்ட எதாவது சொல்ல நினைச்ச கொண்ணு புதச்சிடுவேன்... இனி நீ என்னோட கண்ட்ரோல். இனி நீ மூச்சி விடுறதா இருந்தா கூட என்கிட்ட கேட்டு தான் விடனும்"

"ம்ம்ம்ம்..." குழலி மிரண்டு போனாள் ராஜாவின் கர்ஜனையில்.

"போ போய் பேக் எடுத்துட்டுவா"

"எ... எதுக்கு"

"இனி நீ தனியா சமைச்சிக்கனும், என் அம்மாவை என் அக்காவை டென்ஷன் படுத்த கூடாது, அதுக்கு தான்"

"போய் சீக்கிரம் பை எடுத்துவா"

"இதே...." அருகில் இருந்த பையை எடுத்துக்கொண்டு பின் செல்ல, வண்டியை எடுத்து அவள் முன் வந்து நின்றான்.

"ஏய் சீக்கிரம் ஏறு... வெத்தலை பாக்கு வச்சி அழைக்கனுமா"

"பயத்தோடு ஏறி உட்கார்ந்தாள்" பேலன்ஸ்க்கு அவன் சோல்டரில் கைவைக்க.

"கையை எடு டி கம்பியை பிடி" எரிந்து விழுந்தான்.

'ப்பா... என்னா சத்தம்... காது கிளிஞ்சிடும் போல, என்ன இவ்வளவு கோபம் வருது. சாக்லேட் பாய் போல இருந்து ஏமாத்திட்டான்' வழி முழுவதும் பயந்துகொண்டே உட்கார்ந்திருந்தாள் குழலி அவளுக்கு வண்டியில் சென்று பழக்கமில்லை. எம்போதும் பஸ், சீக்கிரமாக போகவேண்டுமென்றால் ஆட்டோ.

தனது முதல் வண்டி பயணம் மறக்கமுடியாதது போல இருக்கனும் என பல கனவு உண்டு குழலிக்கு. கனவனின் தோளில் கைவைத்து ஆளில்லா சாலையில் பல கதை பேசி செல்லவேண்டுமென...

அவள் நினைத்த அனைத்து சூழலும் பொருந்திப்போனது. ஆளில்லா பாதை, இயற்க்கை பொங்க, வழியில் பூக்கள் பூத்துக்குழுங்க. ஆனால் பல கதை போசதான் அந்த இடத்தில் ஆளில்லாமல் போனது.

கடைவந்ததும் மெதுவாக இறங்கினாள். ச்சை வண்டியை பாரு குதிரை போல இவ்வளவு உயரமா இருக்கு, எப்படி தான் உட்காரதாம்"

"போ உள்ள போய் தேவையானதை வாங்கிட்டு வா" அடி குரலில் சொல்ல,

"என்ட காசு இல்லை"

"அதான் இரண்டாயிரம்... வச்சி இருந்தையே போய் வாங்கிட்டு வா"

"நீங்க மிரட்டுனதுல பயந்து எடுத்து வர மறந்துட்டேன், இப்ப கொடுத்திடுங்க... நான் வீட்டுக்கு போய் கொடுக்கிறேன்"

"இம்சை... சரி உள்ள போய் வாங்கி முடிச்சிட்டு கூப்பிடு"

"இல்ல... புது இடம் இன்னைக்கு மட்டும் கூட வரிங்களா? கொஞ்சம் பயமா இருக்கு"

"இடியட்... வா" உள்ளே வேக எட்டுகள் வைத்து சென்றவனை பிடிக்க குழலி ஓடி தான் ராஜாவை பின் தொடர முடிந்தது.

குழலி ஒரு கூடை எடுத்துக்கொண்டு தேடி முடித்து மேகி இருக்கும் செக்சனுக்கு சென்றவள், அனைத்து பிளேவர்களிலும் ஒரு ஒரு பேமிலி பேக் எடுத்து போட்டுக்கொண்டிருக்க.

குழலியை வினோதமாக பார்த்த ராஜா, "இது மட்டும் போதுமா?"

"போதும் சரியா சமைக்க தெரியாது" என்றவள் பேசிக்கான மசாலா, சில பொருட்கள், சப்பாத்தி மாவு டைரி மில்க் பெரிதாக ஒன்று எடுத்து கூடையில் போட்டுக்கொண்டாள்.
ஒரு மாதத்துக்கு தேவையானது போல குத்துமதிப்பாக எடுத்து போட்டுக்கொண்டு பில் போட இரண்டாயிரம் தாண்டி சென்றது.

"வீட்டுக்கு போனதும் காசு கொடுத்திடனும்... பில் உன்ட இருக்கிறதை விட தாண்டிடுச்சி" அவள் அருகில் குனிந்து ராஜா சொல்ல,

"ச்சை... ரொம்ப மோசம் நீங்க" பெரிய டைரி மில்க்கை பில்லில் இருந்து நீக்க சொல்லிவிட்டு வெளியே போய் கோபமாக நின்று கொண்டாள்.

அவள் எடுத்துவைத்த டைரிமில்கை தனியாக வாங்கி எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.

"என்ன பார்த்தா உனக்கு என்ன வேலைக்காரன் போல தெரியுதா பிடி" கையில் இருந்த பையை அவளிடம் தினித்துவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு இருவரும் கிளம்பினார்கள்.

"ராஜா..."

"ம்ம் என்ன நசநசன்னு கடுப்படிக்கற"

"எனக்கு டிரஸ் வேனும்" வண்டியை ஒரு துணி கடை முன் நிறுத்தி.

"போய் வாங்கிக்கோ..." குழலி கையில் தூக்க முடியாத வெயிட்டை தூக்கி தயங்கி நின்றாள்.

"என்ன வேணும்"

"காசு..."

"அதெல்லாம் இல்லை"

"சாமி எனக்கு துணியே வேண்டா" கோவமாக வண்டியில் ஏறி வண்டி குழுங்க வேகமாக ஏறி உட்கார்ந்தாள். அந்த நாள் அப்படியே நகர.

விடிந்ததும் குழலி குளித்து முடித்து ராஜாவின் டி சர்ட் சாட்ஸ் போட்டுக்கொண்டு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்க.

கீழே பவளமும் மலர்கொடியும், "இனி நம்ம எந்த பிளானும் போட போவதில்லை. ராஜாவே பார்த்துப்பான்"

"எப்படி டி சொல்லுற?"

"காலையில வேலைக்கு போகலையா'ன்னு கேட்டேன். அதுக்கு அவன் ஒரு மாசம் லீவு போட்டு இவளை துரத்திட்டு தான் போகனும்ன்னு சொன்னான்"

"அப்புறம்... வேறென்ன சொன்னான் எதாவது பிளான் வச்சி இருக்கானா?"

"காட்டுல வேலை செய்யவைக்க போறானாம், அவ இதுக்கு முன்னாடி செஞ்சது இல்லைபோல"

"நான் கூட பெரிய பிளான் போடனும்'ன்னு நினைச்சேன் நல்ல வேலை நான் பொண்ணு கூட ஜாலியா விளையாடிட்டு இருப்பேன்" மலர்கொடி போனில் மூழ்கிவிட.

அதை எல்லாம் கேட்ட குழலிக்கு ராஜாவை முற்றிலும் வெறுத்திருந்தாள்.

'இது எல்லாம் ஒரு குடும்பம்... நாட்டுக்கு நாலு குடும்பம் இது போல இருந்தா உருப்பட்டுடும். ஊருக்கு பெரிய மனுஷன்... வீடு வீடா போய் நியாயம் சொல்லி சமூகத்தை திருத்துவாராம். வீட்டில் இரண்டு விஷ கொடி படர்ந்திருப்பதே களை எடுக்காமல் கண்டுக்காம இருக்கார். இவன் என்னான்னா கத்தி கத்தி... சாகுறான் ச்சை... முணு முணுத்துக்கொண்டே இரண்டு நிமிடத்தில் மேகி செய்து முடித்தவள் தண்ணீர் எடுத்துக்கொண்டு மேலே போக.

ராஜா அக்கா மகளுக்கு சாக்லேட் கொடுக்காமல் விளையாட்டு காட்டிக்கொண்டு இருந்தான்.

ராஜாவின் முகத்தை கூர்ந்து பார்க்க, எதற்ச்சையாக அவனும் பார்க்க நேர்கோட்டில் இருவரின் பார்வையும் சந்தித்து நகர்ந்தது.

குழலி மேல சென்று ஊஞ்சலில் உட்கார்ந்து... நிலாவுடன் இரவு உணவு சாப்பிட்டு முடித்தவள் மனதில் எவ்வளவு கட்டுப் படுத்தியும் அந்த சாக்லேட் மேல் எண்ணம் போனது.

'உனக்கென்ன அவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கும்... எனக்கு நேரம் வரும் அப்ப பாத்துக்கிறேன்' அப்படியே தூங்கிப்போனாள்.
 

T22

Well-known member
Wonderland writer
16 சிவப்பழகியே...

அடுத்த நாள் குயில்களின் சத்தத்தில் கண்விழித்தாள் குழலி... ராஜாவின் பார்வை அமைதியாக குழலியை பின் தொடர்ந்தது. அவளும் வழக்கம் போல எழுந்து குளிக்கலாமா? வேண்டாவா? குளிச்சா எந்த டிரஸ் போடுறதாம்... அவன் டிரஸ் போடலாமா? திட்டிட்டா என்ன செய்யுறது, திட்டுனா திட்டிட்டு போகட்டும்... பல வகை யோசனையில் இருந்தாள்.

குழலி யோசனையில் மூழ்க, ராஜா அக்கா மகளுடன் விளையாட சென்று திரும்பி வந்த ராஜா...

"சரி கிளம்பு வேலை செய்ய"

"இப்படியே எப்படி வரது"

"உனக்கென்ன..." ராஜா இப்போது தான் அவளை பார்த்தான், அவனது உடை விட்டாள் நலுவி விடும்போல இருந்தது அவளுக்கு.

"ஏய் எதுக்கு என் டிரஸ் போட்டு இருக்க?"

"என்ட டிரஸ் இல்லை, அதுக்குதான் நேத்து கேட்டேன் நீ வாங்கித்தரலை"

"சரி இரு அக்காகிட்ட எதாவது டிரஸ் வாங்கிட்டு வரேன்"

"இல்ல அவங்களுது எனக்கு வேண்டா... நான் அரசியோட டிரஸ் வாங்கி போட்டுவரேன்" கிளம்ப தயாராக இருந்தவளை தடுத்தான்.

"குழலி அவங்கிட்ட போக கூடாதுன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன், என்னை மிருகமா மாத்திடாத"

"இப்ப மட்டுமென்ன மனுசனாவா இருக்க, சரி அவங்களுது வாங்கலை, என் டிரஸ் இருக்கு அதையாவது வாங்கிட்டுவரேன்"

"அது உனக்கு வேண்டா"

"புரியல ராஜா... என்ன எதிர் பார்க்குறீங்க, அத்தியாவசிய தேவைக்குகூட எனக்கு கிடைக்கூடாதுன்னு நினைக்கிறீங்களா? நானும் ரொம்ப கண்ட்ரோல் செஞ்சி பார்த்துட்டன்... நீ செய்யுறது கொஞ்சம் கூட நல்லா இல்ல" குழலி பேசுவது எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல நடந்துகொண்டான்.

அவள் பேசுவதற்க்கு சம்பந்தம் இல்லாமல், "நான் அக்காகிட்ட டிரஸ் வாங்கிட்டு வரேன், அதை போட்டுக்கோ"

வேகமாக கீழே சென்ற ராஜா கொடியிடம் உடை கேட்க, "என்ன டா பொண்டாட்டி மேல பாசமா"

"அக்கா தேவையில்லாம என்ன பேச்சி, அவ வேணும்னா இப்படி நான் எதுக்கு வெறுக்க போறேன் உன்மையிலையே எனக்கு அவளை பிடிக்கலை முதல்ல அதை புரிஞ்சிக்கோ"

"சரி சரி நம்புறேன்..." கொடி அவளது பழைய தாவணிபாவாடை எடுத்து கொடுக்கும் முன் தாவணியின் மூலையில் அங்கங்கே பழம் வெட்டும் கத்தியை கொண்டு கிழித்து அந்த உடையை ராஜாவிடம் கொடுத்தாள்.

வாங்கி வந்தவன், "இதை போட்டுக்கோ"

"எனக்கு தாவணி எல்லாம் கட்ட தெரியாது" முகத்தை சுழிக்க, அவனது உடையோடு... இந்த பாவனைகள் அவனை ஏதோ செய்தது, கட்டி அணைக்க கைகள் துடித்தது, தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தவன்,

"எனக்கும் கட்ட தெரியாது அக்காவ கூப்பிடுறேன் இரு"

"ஒன்னும் வேண்டாம் போன் கொடுங்க... வீடியோ பாத்து கட்டிக்கிறேன்" ராஜா போன் கொடுத்துவிட்டு வெளியே நின்று கொண்டான்.

தாவணி இருந்த நிலையை பார்த்து குழலிக்கு மலர் கொடியை கொல்லும் ஆத்திரம் வந்தது. " எனக்கு இது வேண்டாம்" உள்ளிருந்து குழலி குரல் கொடுக்க,

"இதை கட்டிட்டுவரலை நான் சுத்தமா பேசமாட்டேன்"

"இப்ப மட்டும் பேசிட்டு இருக்கறதா நினைப்பு...ச்சை எல்லாம் விதி... இதுக்கு எல்லாம் சேர்த்து வச்சி இருக்கு இவளுக்கு"

பேகில் இருந்த சேப்டி பின் வைத்து மேட்ச் செய்தவள் அழகாக கட்டிக்கொண்டு வெளியே வந்தாள்.

முதன்முதல் அவளை தாவணியில் பார்த்து சொக்கித்தான் போனான் ராஜா, "குட்டி அழகா இருக்க டா. இனி தாவணியே கட்டுடா" அவளை இந்த உடையில் பார்த்து மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல தன் கடின தன்மை எல்லாம் விட்டுவிட்டு அவள் முன் வந்து கன்னம் கிள்ளி சொல்ல,

'உன் முகமுடி கொஞ்சம் கொஞ்சமா தானா மறையுது மிஸ்டர் ராஜா இது தான் எனக்கு வேணும்'

ராஜாவின் மூச்சிக்காத்து அவள் முன் நெற்றியில் விழுக, அவனது மூச்சிக்காத்து சொன்னது அவள் மேலே வைத்திருந்த காதலை, அவ்வளவு கனிவு அவனது பார்வையில், காதல் தேங்கி இருந்தது.

"எதுக்கு விக்கி இப்படி ஆகிட்ட... உன் குடும்பத்தில் ஏதோ நடந்திருக்குன்னு தெரியுது. அதை என்கிட்ட சொல்லி இருந்தா சேர்ந்து பேஸ் செஞ்சி இருக்கலாம் டா. இந்த ராஜா வேசம் வேணா டா மா" எக்கி முன் நெற்றியில் முத்தமிட.

கண்களை மூடி அவளது இதழின் ஈரத்தை உள்வாங்கியவன்... தன்னவளின் முத்தத்தில் ஒரு நொடி உருகிய உடல் பாராங்கல்லாக இறுகியது.

தோள்பட்டையை பிடித்து நகர்த்திவிட்டவன்.

"இனி நெருங்க நினைக்காத உன் மாயாஜால ஆட்டம் என்கிட்ட வச்சிக்காத" அவன் வார்த்தைகள் குழலியை பாதிக்கவில்லை.

குழலியை அழைத்துக்கொண்டு நிலத்துக்கு சென்றான்.

வழியில் அத்தை அரசியை பார்த்து மெதுவாக, "ஹாய் அத்தை.. அரசி" சந்திரா வேலைக்கு கிளம்பிகொண்டிருந்தார், அரசி தாயை வழி அனுப்ப நின்றிருந்தார்.

அவள் என்ன ஹீக் போட்டு என்ன தான் மேட்ச் செய்திருந்தாலும் வேலை செஞ்ச கொஞ்ச நேரத்தில் தெரிய துவங்கி இருந்தது.

தண்ணீர் எடுக்க வந்த அரசி கண்ணில் கிழிந்த உடை பட, குழலியை பார்க்க ஒருபோல ஆனது. ராஜா மேல் சொல்ல முடியாத கோபம் ஏற்பட்டது.

உச்சி வெயிலில்... வேர்க்க விறுவிறுக்க வேலை செய்து கொண்டிருக்க.

மலர்கொடி தன் சிறு மகளை தூக்கிக்கொண்டு கலை பிடுங்கும் இடத்துக்கு வந்தாள்.

வேகாத வெயிலில் குழலி கலை பரித்துக்கொண்டிருக்க, ஒருமணிநேரம் கூட குழலியால் முடியவில்லை. இருந்தும் கத்துக்க ஆர்வம் அவளை சோர்வடைய விடவில்லை.

"ராஜா முடியலை கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு வரேன்"

"இன்னும் அரைமணி நேரம் வேலை செஞ்சிட்டு போ" ராஜா அப்படி சொன்னதும்... இந்த சூழ்நிலையில் குழலிக்கு ராஜா அரக்கனாக தெரிந்தான்.

"வேறு எங்காவது வேலைக்கு போய் சமாளிச்சிக்கலாம், இது பொட்டல் காடா இருக்கு படிச்சதுக்கும் வேலை கிடைக்காது சை..."

மலர்கொடி கையிலிருந்த குழந்தை ராஜாவை கை நீட்டி, "மாமா..." என கத்தி அழைக்க.

"அடே தங்கம் வந்துட்டிங்களா..." கை கழுவிக்கொண்டு அக்கா மகளை அள்ளி அணைத்துக்கொண்டான்.

"ஆமா மாமா" குழந்தையை தூக்கிக்கொண்டு அழகாக கொஞ்சினான்.

தாகத்தில் மயக்கம் வருவது போல இருந்தது குழலிக்கு. அதையும் மீறி ராஜாவின் முகத்தில் பழைய சிரிப்பை பார்த்ததும் மனம் நிறைவாக இருந்தது, "நீ இப்படியே இருந்தா இன்னும் நல்லா இருப்ப"

"ராஜா..."

"சொல்லு" அக்கா மகளை கொஞ்சிக்கொண்டே கேட்க,

'பார்த்து பேச கூட வலிக்குது இவனுக்கு'

"தண்ணீர் வேணும்"

"ம்ம்ம்" அருகில் வந்துகொண்டிருந்த டேபில் தண்ணீர் குடித்து சோர்வாக உட்கார்ந்து மூவரையும் பார்த்துக்கொண்டிருக்க.

மலர்கொடி தனது அணிந்திருந்த உடையை பார்த்து கொடியை பார்க்க அவ்வளவு ஆத்திரம் வந்தது.

"முதல்ல டிரஸ் வாங்கனும் ச்சை... என்ன பிரவியோ, நல்லவேலை எட்ஜில தான் கிழித்துவைத்திருந்தாள் அதுவரை பரவாயில்லை. முதல்ல இவளுக்கு முடிவு கட்டனும், சுதாகர் அண்ணாக்கு போய் இப்படி ஒரு மனைவி கொடுமை, கடவுளே உனக்கு கண்ணே இல்லையா?"

அவளது மனசாட்சியோ... குழலியை நக்கலடிக்க, "உன் நிலைமையே இங்க மோசமா இருக்கு நீ சுதாகர்க்கு பாவப்படுற"

ராஜா இளநீர் வெட்டி கொடுத்துக்கொண்டிருக்க, "உனக்கு இங்க உழைச்சி இருக்கவளுக்கு இளநீர் கேட்குதா. ஷப்பா ரொம்ப கொடுறமா மாறிட்ட விக்கி நீ"

அரசி சந்திராவை வீட்டுக்கு வரவைக்க ஒரு சிறுவனை அனுப்பி இருந்தாள். வரும்வரை வீட்டின் முற்றத்திலே காத்திருந்தவள், வந்ததும் விஷயம் சொல்ல, சந்திராக்கு வந்ததே கோபம்... வேகமாக வந்து குழலி கையை பிடித்து இழுத்து போக.

"அத்த என்னாச்சி... கை வலிக்குது"

"மூச்... விட கூடாது"

சந்திரா இழுத்து சென்றதை பார்த்த ராஜா இடையில் புகுந்து, குழலியின் மறுகையை பிடித்து இழுக்க.

"ஆ.... ராஜா வலிக்குது"

"டேய் கையே விடுடா"

"முடியாது நீங்க விடுங்க... என் பொண்டாட்டியை"

"முடியாது" சந்திரா குழலியை வேகமாக இழுத்து போக.

"அவ என் பொண்டாட்டி. அவளை எதுக்கு கூட்டி போறீங்க" சந்திரா திரும்பி முறைத்துவிட்டு அமைதியாக குழலியை இழுத்து போக. அவள் கையில் அவளது ஆடையை தினித்துவிட்டு.

"இது போட்டுட்டு வா" வந்ததும் கழற்றிய அந்த தாவணியை மட்டும் எடுத்து வந்த சந்திரா ராஜா முகத்தில் விட்டெறிந்தார்.

"மனசாட்சி இல்லைல்ல ராஜா உனக்கு, உன்னை இந்த கையால வளர்த்ததை நினைச்சி அசிங்கமா இருக்கு"

"என்ன ஓவரா பேசிட்டு இருக்கீங்க?"

"அந்த தாவணியை பிரிச்சிபாரு... யார் ஓவரா செய்யுறாங்கன்னு தெரியும்" ராஜாவுக்கே தன் அக்காவை நினைத்து ஒருமாதிரி ஆகி போனது.

"அக்கா என்ன இது" மலர் கொடி கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளவில்லை.

"அச்சோ... கிழிஞ்சி இருக்கா? சாரி ராஜா சரியா பார்க்கலை, இது எல்லாம் யூஸ் செஞ்சி பல வருஷமாச்சி அதனால தெரியலை"

"அக்கா இது போல இனி செய்யாததீங்க, நம்ம குடும்பத்துக்குன்னு கொஞ்சம் மறியாதை இருக்கு. வெளியே தெரிஞ்சா என்னா ஆகுறது, சரி நீ பாப்பா தூக்கிட்டு வீட்டுக்குபோ" அக்காவை இடத்தைவிட்டு அனுப்பினான்.

"ஏய் நீ வா இன்னும் ஒரு மணி நேரம் வேலை செஞ்சிட்டு போ" ராஜா அவளுக்கு கட்டளையிட சந்திராக்கு மனதில் திகுதிகுன்னு எறிந்தது.

வேலையை முடித்து ராஜா தலை வீட்டுக்குள் நுழைந்ததும்.

"சந்திராவிடம் பேசியே ஆகனும் முடிவோடு போனாள், அரசி ஹாஸ்டல் கிளம்ப பேகை பேக் செய்துக்கொண்டிருக்க, "அத்த..."

"வா மா" கசந்த புன்னகையோடு வரவேற்க்க.

"நான் கேட்டதுக்கு உண்மை சொல்லுங்க"

"ம்ம்ம்ம் நீ கேட்டதுக்கு நான் வாயால பதில் சொல்ல மாட்டேன்"

"சொல்லி தான் ஆகனும்" மறுப்பாக தலை அசைக்க எழுந்த சந்திரா அவள் கையில் ஒரு சிறு பேகை தினித்துவிட்டு வேலைக்கு கிளம்பி போக.

குழலி அரசியை காலேஜ்க்கு வலி அனுப்ப காத்திருந்தாள், "அண்ணி கிளம்பவா"

"பத்திரமா போயிட்டு வா திரும்ப எப்போ வருவ?"

"செம் முடிச்சி வருவேன்"

"நல்லா எக்சாம் எழுது, ஆல் தி பெஸ்ட்"
குழலி அந்த பேகை எடுத்துக்கொண்டு அறைக்குள் போக.

ராஜா தூக்கிக்கொண்டிருந்தான், பேகை ஆர்வமாக பிரித்து பார்த்தவளுக்கு குழம்பிக்கொண்டிருந்த அனைத்தும் குழலிக்கு புரிந்து போனது.

கையில் ஒன்றுமில்லாமலையே... இங்கு நடக்கும் குழப்பங்களை சரி செய்ய முழு முயற்சியாக குழலி இறங்க தயாராக இருந்தாள்.

உடலெல்லாம் அவ்வளவு அசதி முதன் முறையாக வேலை செய்த கலைப்பு வேறு, ஆனால் உண்மை தெரிந்துகொண்டதற்க்கு நிம்மதியாக இருநத்து. ராஜா அருகில் படுத்து நிம்மதியாக தூங்கினாள் கணவன் அணைப்பில்.

***

"மா போதும்... இனி இது எதும் வேண்டா, அவ அவ இஷ்டத்துக்கு இருக்கட்டும் விடு மா, தனி ரூம் கொடுத்திடலாம்"

"வேந்தா என்னாச்சி"

"வேணாமா... எதும் கேட்காதிங்க ப்ளீஸ், எனக்கு நீங்கமட்டும் போதும்" வேந்தன் அறையில் நுழைந்து அவளது பொருட்களை எடுத்துக்கொண்டு பக்கத்து அறையில் மாற்றி இருந்தான்.

இருவரும் சங்கவியிடம் மறந்து கூட பேசுவதில்லை, 'சங்கவி தப்பு செஞ்சிட்ட நீ... வேந்தன் மாமா நல்லாதானே நடந்துக்கிட்டாங்க, அவரை கஷ்டப்படுத்தி இருக்க கூடாது. சங்கவி கமலாவிடம் பேச முயற்சி செய்த போதும் அமைதி தான் பதிலாக வந்தது.

வேந்தன் சங்கவி இருக்கும் திசை தெரிந்தால் போதும் எதிர் திசையில் தன்னை மறைத்துக்கொள்வான்.

இந்த ஒதுக்கம் தனிமை அவளை வாட்டியது, ஒரு நாள் கடக்கவே ஒரு யுகம் போல இருந்தது சங்கவிக்கு.
 

T22

Well-known member
Wonderland writer
17 சிவப்பழகியே...

இரவு வேந்தனும் கமலாவும் சாப்பிட உட்கார... சங்கவியும் தட்டை எடுத்துக்கொண்டு வந்து உட்கார்ந்தாள்.

தாயும் மகனும் சங்கவியை திரும்பி கூட பார்க்கவில்லை. அவ்வளவு ஏன் அப்படி ஒரு ஜீவன் இருப்பது போல கூட கண்டுக்கொள்ளவில்லை.

'எனக்கு ஏன் வேந்தன் அத்தான் பேசாதது ஒரு போல இருக்கு, தப்பு அவங்க பேரில் தானே? கோபப்பட்டதுக்கு இப்படி கோச்சிக்கிட்டாங்க வெறும் தட்டை வைத்துக்கொண்டு இருவரையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள் சங்கவி.

வேந்தன் தாயின் தட்டில் குழம்பு இல்லாததை கவனித்து, குழம்பு ஊத்த.

'தினமும் இவர்தானே சாப்பாடு போடுவார், இன்னைக்கு என்ன எனக்கு மட்டும் போடலை' வந்த சில நாட்களாக மூன்று நேரமும் சங்கவியை அவன் அப்படி கவனித்துக்கொண்டான். இன்று நேர் மாறாக நடந்துகொள்வதை பார்த்து சங்கவி முகம் சுருங்கியது.

தன்னையும் மீறி அவன் தன்னை கவனித்துக்கொள்வது அவளுக்கு பிடித்து இருப்பது இப்போது தான், அந்த குட்டி மண்டைக்கு உரைத்தது.

"அத்தான்" வேந்தனின் உடம்பு சிலிர்த்தது, சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சிலைபோல அமர்ந்திருந்தான்.

"அத்தான்... உங்களைத்தான்"

"என்ன" என்று கேட்டுவிட்டு சாப்பாட்டை விழுங்குவதிலேயே குறியாக இருந்தான் வேந்தன்.

"பசிக்குது"

"இங்கே யாரும் உன்னை தடுக்கலை, நீயே போட்டு சாப்பிடலாம்" வேந்தன் கடைசி வாய் உணவை வாயில் போட்டு கைகழுவிவிட்டு எந்திரித்தான். கமலாவும் எழுந்து போக, அந்த அறையை போலவே அவளது மனதும் வெறுமையாகிற்று.

கிட்சனில் தட்டை கழுவிக்கொண்டிருக்கும் மகனை நோக்கி வேகமாக வந்த கமலா, "பாவமா இருக்குடா, அவளை பார்க்க"

"நீ அமைதியா இருமா, எல்லாம் உன்னால தான், எப்படி பேசிட்டா பாரு"

"அம்மா பயத்துல இப்படி செஞ்சிட்டேன் டா மன்னிச்சிடு"

"சரி விடு எதுக்கு பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு இருக்க... போய் நிம்மதியா தூங்கு" தாயை விரட்டுவதிலையே இருக்க,

"என்னால தானே இப்ப இப்படி ஆகிடுச்சி... கஷ்டமா இருக்கு"

"நடந்தது எதும் மாத்த முடியாது அவ அடுத்த வருஷம் படிச்சி முடிக்கட்டும் மெதுவா பார்த்துக்கலாம். நீ எங்காவது வெளியே போயிட்டு வாயேன், இங்க இருந்தா சும்மா புலம்பிட்டே இருப்ப"

"ராகவி வீட்டுக்கு போயிடவா?"

"சூப்பர் ஐடியா மா, பாவம் அத்த தனியா இருக்காங்க, சங்கவி சரி ஆகட்டும் அத்தையையும் நம்ம கூட வர சொல்லிடலாம்"

சங்கவிக்கு சாப்பிடவே பிடிக்கலை, வெறுமையான தட்டை வெறித்து பார்த்தவள், எழுந்து கிட்சனுக்கு வர.

கமலா ராகவியை பார்க்க வீட்டுக்கு செல்ல இருப்பது கேட்கவும் பகிறென ஆனது.. ஏற்கனவே தாயின் கோபத்தை பார்த்து நடுங்கியவளுக்கு, இது தூக்கிவாரிப் போட்டது.

அதற்க்கு நேர்மாறாக வேந்தன் சொன்னதை கேட்டு இனிமையான அதிர்வாகியது.

'அம்மாவ கூட்டி கூட வச்சிக்க போக போறாங்களா?' வேந்தனின் கன்னம் கிள்ளி கொஞ்சம் சங்கவி கைகள் பரபரத்தது.

"சாப்பிடலையா நீ?"

"இல்ல பசிக்கலை"

"சரி கிளம்பி உன் வீட்டுக்கு போலாம்"

"ஆங்... எதுக்கு, என்னை விட போறீங்களா?"

"இல்ல அம்மாக்கு போர் அடிக்குதாம் அதான் உன் அம்மாகிட்ட நீ செஞ்சதை போட்டுகொடுக்க போறாங்களாம்"

'வேந்தன் அத்தான் நல்லவங்க, இந்த அத்த தான் மோசம்'

"இல்ல அத்த இனி இப்படி எதும் செய்யமாட்டேன், அம்மா இது தெரிஞ்சா வருத்த படுவாங்க"

"நான் போக போறது உறுதி, நான் சொல்லுறதும் சொல்லாததும் உன் கையில் தான் இருக்கு" கமலா கிடைக்கும் கோப்பில் எல்லாம் பெரிய கிடாய் வெட்டி இருந்தார். சங்கவியை பயம் காட்ட, இரண்டு வினாடி முன் வந்திருந்தால் கமலாவும் வேந்தன் போல பால் மனம் கொண்டவர் என தெரிந்திருக்கும் ஆனால் இந்த இடத்தில் விதி சதி செய்துவிட்டது.

கமலாவையும் சங்கவியையும் அழைத்துக்கொண்டு ராகவியை பார்க்க போக.

டூவிலரை எடுத்து வந்து இருந்தவனை புரியாமல் பார்க்க, "சங்கவி ஏறு..."

"கார் என்னாச்சி?"

"அது சர்வீஸ்க்கு விட்டு இருக்கு"

"இடம் பத்தாதே நீங்க வண்டியில் போங்க... ஆட்டோவில் போறேன்"

"ஏய் சங்கவி என்ன பேசிட்டு இருக்க... நான் குண்டு பூசனின்னு சொல்லிட்டு இருக்கியா?" கமலா எகிறிக்கொண்டு வர,

"ஐயோ! அத்த அது.... இல்ல"

"என்ன அது இதுன்னு, வண்டில ஏறு" கமலா அதட்ட அடித்துபிடித்து சங்கவி ஏறி உட்கார்ந்துகொண்டாள்.

'இந்த அத்தைக்கு அறிவே இல்ல'

"ஏய் இரண்டு பக்கம் கால்போட்டு உட்காரு"

"அத்த நான் இப்படியே உட்கார்ந்துக்கிறேன்"

"இரண்டு பேரும்... ஒரு பக்கம் கால் போட்டு உட்காருவது சிரமம்"

'இவங்களை வச்சிட்டு சாமி... இந்த காசி ராமேஸ்வரம் எல்லாம் போகவேண்டியது தானே உயிரை வாங்கிட்டு' மனதோடு முணுமுணுத்துக்கொண்டே இறங்கியவள்,' ச்சோ... தெரியாம சுடிதர் போட்டுட்டேன்' இரு புறம் கால் போட்டு உட்கார.

இந்த புது மாப்பிள்ளைக்கு ஒரே ஜாலியாகி போயிவிட்டது. இப்படியே ரம்மியமாக மூவரின் பயணமும் தொடர்ந்தது. பிடிமானம் இல்லாமல் கணவனின் வயிற்றை பிடித்துக்கொள்ள, அவனுக்கோ மனதில் லா...லா பாட்டு தான் ஓடியது.

அங்கு வீட்டில்....

ராகவி கையில் போனை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தார்.

மகளின் கடைசி மெசேஜ் மனதை கொஞ்சம் சமாதானப் படுத்தி இருந்தது.

"இது தான் ராகவி வளர்ப்பு" மெச்சிக்கொண்டார் பதில் அனுப்ப தான் நினைத்தார். அவள் வாழ்க்கை தனியா போராடட்டும் என பதில் அனுப்பாம இருந்துவிட. கோபமடைந்த குழலி கடைசியாக அனுப்பிய மெசேஜை பார்த்து சிரிப்பு தான் வந்தது தாய்க்கு. குழந்தையின் கோபம் எவ்வளவு நிமிடத்துக்கு நீடிக்க போகுது, அனைத்து கோபமும் தாயின் முகம் பார்க்கும் வரை தான்.

ஒரு பெண் வாழ்க்கையில் எதிர்கொள்ள போராளியாக மாறி தயாரானது நிம்மதியை கொடுக்க.

சிறுமகளின் நினைவு வந்தது, "விளையாட்டு பிள்ளை அண்ணியையும் வேந்தனையும் என்ன பாடு படுத்தி இருப்பாளோ. நாளைக்கு போய் பார்த்துட்டு வரனும்" நிம்மதியாக சோபாவில் தலை சாயித்து கண் மூட.

வீட்டின் அழைப்பு மணி காதை கிழித்தது, சங்கவி தான் விடாது அடித்துக்கொண்டு இருந்தாள்.

"சங்கவி..." ராகவி வாய் தானாக முணுமுணுத்தது, இன்னும் சிறுப்பிள்ளை போல செஞ்சிட்டு இருக்கா" ஓடி வந்து ராகவி கதவை திறக்க.

"அம்மா..." தாயை பல வருடம் பிரிந்து இருப்பது போல அப்படி ஒரு பாசமழை அவர்கள் மட்டும் நனையாமல்,.

"எப்படி டி இருக்க"

"நான் நல்லா இருக்கேன் டா தங்கம், நானே நாளைக்கு வரலாம்னு இருந்தேன். உன் காலேஜ் புக் டிரஸ் எல்லாம் எடுத்து வர"

"அதானே பார்த்தேன் நான் கூட பிரிஞ்சி இருக்க முடியாதுன்னு நினைச்சேன்... எப்பப்பாரு படி படின்னு" தாயை செல்லமாக முறைக்க.

"இன்னும் ஒரு வருஷம் நல்லா படி அதுக்கு அப்புறம் உன்னை யார் தடுக்க போறா"

ராகவி சங்கவியின் உடை புத்தகம் எல்லாம் பேக் செய்து வேந்தனோடு அனுப்பி வைக்க கமலா ராகவி கூட தங்கிவிட்டார்.

போகும் போது கமலா விசமமாக சங்கவியை பார்க்க, "வரேன் அத்த"

"வேந்தனை நல்லா பாத்துக்கோ புரியுதா?" கண்டிப்புடன் சொல்ல,

"சரி அத்த" வேந்தன் அதன் பின் வந்த நாட்களில் பெரியதாக பேசவில்லை. சமைத்து வைத்துவிடுவான், காலேஜ்க்கு அழைத்து செல்வான் காலேஜ் முடிஞ்சதும் கூட்டி வருவான். அவளுக்கு பிடித்த பதார்த்தங்கள் வீட்டில் இருப்பது போல பார்த்துக் கொள்வான். விடுமுறை தினங்களில் மனைவி அம்மா அத்தையை எங்காவது வெளியே கூட்டி போவான்.

அவன் இயல்பாக செய்யும் ஒவ்வொன்றையும் பார்த்து செய்வதில் சங்கவி மொத்தமாக விழுந்திருந்தாள்.

ஒரு கட்டத்துக்கு மேல்... வேந்தன் பேசவேண்டும் என தவமிருக்க துவங்கி இருந்தாள், ஆனால் அவனோ வழக்கம் போல சமைப்பது கூட்டி போவது வருவது என இயந்திரம் போல நடந்துகொண்டான்.

வீட்டுக்கு வந்ததும் அறையில் நுழைந்து கொண்டுவிடுவான். சமைக்க வருவான், முடித்ததும் அவளை சாப்பிட அழைப்பான், அதே போல இன்றும் அழைக்க.

"எனக்கு வேண்டாம்"

"ஏன்?"

"சாப்பிட தோனலை"

"சரி" சாதாரணமாக வேந்தன் விட்டு சென்றதை காதல் கொண்ட மனம் தாங்க முடியவில்லை.

"அவ்வளவு தானா அத்தான்"

"என்ன... அவ்வளவு தானா?" புரியாமல் திரும்பி பார்க்க,

'டேய் மாங்கா மாமா, உன் கையால சாப்பாடு போடுடா ஊட்டி விட சொல்லுறேன் புரியலையா?'

"புரியாதது போல பேசிட்டு கேள்வி கேட்டா அமைதியா ஆகிட்ட"

"அது வந்து இனி லோயர் போட வேண்டாம்"

"அப்ப சார்ட்ஸ் போட்டுக்கவா?" வேந்தன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.

"அப்பாடா... இந்த லேயர் சர்ட் போட்டு ஒரே ரோதனை தேங்க் காட்"

"நான் சொன்னேன் தான் இப்படி பிடிக்காததை போட்டு இருந்தீங்களா"

வேகமாக வேந்தன் திரும்பி நின்று, "இல்லையே..." வேகமாக கதவை தாண்டும் போது.

"அத்தான்"

"அப்படி கூப்பிடாத சங்கவி"

"ஏன் அத்தான்" வேந்தன் பின் நெருங்கி வந்து நின்று கேட்க, சங்கவி குரல் அருகில் கேட்கவும் வேந்தன் உடலில் ஒரு குறுகுறுப்பு ஏற்பட.

"சாரி... நான் கோபமா பேசிட்டேன் சாரி அத்தான். இனி இப்படி நடந்துக்கமாட்டேன். என்ட பேசுங்க...ப்ளீஸ்" அவளது சோக குரலில் கோபம் பனிபோல மறைந்தது விந்தையிலும் விந்தை.

"சரி அதை விடு, அத்தான் வேணாம் வேந்தன் கூப்பிடு" சங்கவி முகம் சுருங்கியது, 'பேசுவதே பெருசு சங்கவி கொஞ்சம் பொறுத்து போ'

"சரி ஆனா இனி இதுபோல நடந்துக்ககூடாது..." வேந்தன் விவரமாக கோரிக்கை வைக்க.

"ஓகே" சங்கவி கையை நீட்ட.

"ஓகே" வேந்தன் விரைப்பாக சொல்ல.

"கொஞ்சம் சிரிச்சிட்டு சொல்லுங்க வேந்தன்" குறும்போடு அவனை பார்க்க,

"எனக்கு சிரிக்க தெரியாது" வேந்தன் முகத்தை கடுமையோடு வைத்து சொல்ல.

"ஹா... ஹா... உங்களை சிரிக்க வைக்க எனக்கு தெரியும்" வேந்தன் வயிற்றில் கிச்சிக்கிச்சி மூட்ட வர, "சங்கவி வேண்டா சொன்னா கேளு எனக்கு பிடிக்காது"

"எனக்கு உனக்கு பிடிக்காதது தான் வேணும்" வேந்தனை துரத்தி துரத்தி ஓட விட்டு வேந்தனை சிரிக்க வைக்க.

"என்ன சின்ன பொண்ணுன்னு விட்டா சேட்டையா செய்யுற" வேந்தன் திரும்ப சங்கவிக்கு கிச்சிகிச்சி மூட்ட சிறுவர்களாக மாறி ஓடி பிடித்து விளையாடினார்கள் இருவரும்...யாருமில்லா வீட்டில். சோர்ந்து போய் சோபாவில் விழுக.

"சாரி வேந்தன்..."

"நானும் சாரி சங்கவி... சின்ன பொண்ணுன்னு விட்டுக்கொடுக்காம உன்னை கொடுமை படுத்திட்டேன்"

"தெரிஞ்சா சரி..." சங்கவி வேந்தனுக்கு கை கொடுத்து எழுப்பி விட.

"சாப்பிடனும் பசிக்குது"

"சரி வா சாப்பிட போலாம்.." சங்கவியை அழைத்துக்கொண்டு போக சங்கவி தட்டில் சாப்பாடு போட எடுக்க.

"இரு மா நான் போட்டு தரேன்"

"பாருடா சார் பழைய பார்ம்க்கு வந்துட்டிங்க போல"

"அது எல்லாம் அப்படி தான் தலையை சங்கவி தலையில் செல்லமாக முட்ட.

இருவரும் சண்டை மறந்து சாப்பாடு சாப்பிட்டு முடிக்க நண்பர்களாக மாறி, நாட்களை அழகாக நினைவு பெட்டகங்களை இருவரும் காதலை சொல்லாமல் தனித்தனியே சேமித்துக்கொண்டிருந்தார்கள்.

இந்த ஜோடி நட்பால் இணைந்திருக்க...

அங்கே ஒரு உள்ளம் தூக்கமில்லாமல் தவித்தது.

மலர்கொடி கிளிந்த ஆடை தெரிந்து கொடுத்தாளோ இல்லை தெரியாமல் கொடுத்தாளோ அதனை ஏறக்கவே முடியவில்லை.

"ராணி மாதிரி வாழ வேண்டியவ எதுக்கு இங்க வந்து கஷ்டப்படனும்" கோபமாக வந்தது குழலி நினைத்து. அவளே அரை நாள் உழைத்ததற்க்கே மலையை போர்த்து எடுத்தது போல சோர்வாக தூங்கி இருந்தாள்.

மெதுவாக குழலி அருகில் வந்து உட்கார்ந்தான், "எதுக்கு டி இங்கே வந்த"

"மாமு... கிஸ் மீ"

ராஜா குழலி விழித்து விட்டாலா நான் சொன்னதை கேட்டுட்டாலா அய்யோ வெளியே போக வைக்க முடியாதே என தவித்தான். அவளை ஏற்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் தவித்தான்.

இந்த கண்ணாமூச்சி ஆட்டம் மூடிவது எப்போது.
 

T22

Well-known member
Wonderland writer
18 சிவப்பழகியே...

குழலி ராஜாவின் கையை தூக்கத்தில் தடவி பார்த்தே கண்டுகொண்டாள்.

"டேய் எவ்வளவு ஸ்ட்ராங்கா அழகா ஆகிட்ட..." தூக்கத்தில் அவனது கையை இறுக்க நெஞ்சோடு அணைத்து படுத்தவளை கண்டு தவித்தான், வியந்தான் அவளது காதலை கண்டு. ஒரு காலத்தில் அவனிடம் அளவுக்கு அதிகமாக கர்வமிருந்தது அவனது எல்லை இல்லாத காதலை நினைத்து அனைத்தையும் இருக்குமிடம் தெரியாமல் சிதறி மறைந்தது. வெறுமையாக உணர்ந்தான்.

'தூக்கத்தில் கூட தன்னை கண்டுகொண்டு பேசும் அவள் காதலைக் கண்டு வியந்தான். அவனால் குழலியை ஏற்கவும் முடியவில்லை விளக்கவும் முடியவில்லை... தனது கையை அவளின் சிறையில் இருந்து மெதுவாக மனமே இல்லாமல் கையை பிரித்து எடுத்துக்கொண்டவன், குழலியை பார்த்து படுத்துக்கொண்டான்.

தூக்கம் வராமல் குழலியை பார்த்துக்கொண்டிருந்த ராஜா எப்போது தூங்கினான் என அவனுக்கே தெரியவில்லை. காலையில் எழுந்ததும் குழலியை பார்க்க, நேற்று வேலை செய்த சோர்வில் பயங்கரமாக தூங்கிக்கொண்டிருந்தாள்.

திரும்பி திரும்பி படுத்தவளை உற்று நோக்க, அவளை சுற்றி கொசு பறந்துகொண்டிருந்தது.

"ச்சே... ஜன்னல் சாத்த மறந்துட்டேன் போல" மேலே மடித்துவைத்திருந்த மெத்தையை எடுத்து விரித்து கையில் குழலியை குழந்தை போல ஏந்தி வந்து படுக்கவைத்து போர்வையை போற்றிவிட்டு தயாராகி வெளியே கிளம்பி இருந்தான்.

குழலி மெதுவாக எழு மணிக்கு எழுந்தவளால் எழுந்திரிக்கவே முடியவில்லை, "அச்சோ... சமைக்கனும், குளிக்கனும்... களை வேற பிடுங்கனும்" புலம்பிக்கொண்டே எழுந்து அமர்ந்தவருக்கு குளிச்சிட்டு எந்த உடையை அணிவது யோசனையில் இருக்க "விக்கி டிரஸ் போட்டுக்க வேண்டியது தான்" அவன் அலமாரியை திறக்க கை வைக்க.

"ஏய் என்ன திருட இங்க வந்து நின்னுட்டு இருக்க?" ஆரம்பிச்சிட்டான் பைத்தியம் மனதில் நினைத்துத்கொண்டே திரும்பினாள்.

"குளிக்கனும்"

"அதுக்கு..."

"டிரஸ் வேணும்"

"ம்ம்ம்ம்... இதை போட்டுக்கோ" நனக்காக உடை வாங்கி வந்தவனை காதலோடு குழலி பார்க்க,

"இரண்டாயிரத்து இருநூற்று ஐம்பது ரூபா" ராஜா குழலி கையில் சில கனமான பைகளை கொடுக்க.

"என்ன இது? எதுக்கு சம்பந்தமில்லாம விலை சொல்லிட்டு இருக்கீங்க"

"அது டிரஸ் எடுத்ததுக்கு காசு... மறக்காம கொடுத்துடு"

"ரொம்பத்தான்... நான் சம்பாதிக்கிறதை நீயே வச்சிக்கோ"

"ஆமா பத்து நிமிஷம் வேலை செஞ்சிட்டு அலட்டலை பாரு"

'மனசுல காதலை வச்சிட்டு மறைக்கும்... மூஞ்சை பாரு, எப்படி வெறப்பா வச்சி இருக்கான், இடியட்... உனக்கு இருக்கு டா' ராஜா குளித்து வெளியே வருவதற்க்குள் அவன் வாங்கி வந்த தாவணி பாவாடை, புடவை சுடிதர் என அனைத்தையும் எடுத்து தன் மேல் வைத்து பார்த்துக்கொண்டு இருந்தாள்.

"எப்படி பார்த்தாலும் இருக்குற அழகு தான் இருக்கும்... போயி ரெடி ஆகிட்டு வா, வேலை செய்ய போனும்"

"நீங்க போங்க நான் சாப்பிட்டு வரேன்"

"சீக்கிரம் எழுந்திரிக்க தெரியாதா, நீ எப்ப எழுந்து எப்ப சமைச்சி சாப்பிட்டு போறது?"

"நான் என் அத்த வீட்டுல சாப்பிட்டு வரேன் நீங்க போங்க"

"எதுக்கு என் அம்மாவை டென்ஷன் செஞ்சிட்டே இருப்பியா? நீயே தனியா சமைச்சி சாப்பிடு" கடுகடுத்தான்...

"இல்ல உங்க அம்மா இல்ல சார் சந்திரா அத்த"

"ஏய் அவங்க கூட பேச கூடாது சொல்லிட்டு இருக்கேனில்ல"

"இல்ல நான் போவேன்... நீ தடுக்க முடியாது" பழைய குழலி வெளி வந்திருப்பதை பார்த்து மகிழ்வதா ? வருந்துவதா? என புரியாமல் விழித்தவனின் சட்டையின் காலரை பிடித்து இழுத்தவள் ராஜா கன்னத்தில் முத்தமிட்டு" ஓடிவிட்டாள்.

"ஏய் திமிரு பிடித்தவளே என்ன டி செஞ்சி வச்சிருக்க?" கன்னத்தை துடைத்து நின்றிருந்தான்.

"முத்தா... மாமா இது கூட தெரியலை? உன்னை எல்லாம் கரெக்ட் செஞ்சி. நான் பிள்ளை பெக்கறத்துக்குள்ள வயசாகிடும்..." குழலி பாத்ரூம் கதவை பிடித்துக்கொண்டு சொல்லி பழிப்பு காட்ட, சொல்லிய தோரணையில் பார்த்து, "அடிங்..." ராஜா கையை ஓங்கிக்கொண்டு வர.

அவனுக்கு பழிப்பு காட்டிவிட்டு கதவை சாத்திக்கொள்ள.

விக்கி முழுவதும் வெளியே வந்து வாயிவிட்டு சிரிக்க, நல்லவேலை குழலிக்கு காது கேட்கவில்லை.

"ஏன்டி இப்படி இம்சை செய்யுற... இன்னைக்கு உனக்கு வைக்கிற வேலையில் ஓடி போக போற பாரு" முணுமுணுத்துக்கொண்டே சாப்பாடு போட்டு சாப்பிட்டுக்கொண்டிருக்க.

கொடி அவளது குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டே தம்பி அருகில் வந்து.

"என்ன ராஜா முகம் எல்லாம் பிரகாசமா இருக்கு..."

"ஒன்னுமில்லை இல்லைங்க..." என வாய் முணுமுணுத்தாலும் அவள் கொடுத்த குட்டி முத்தம் மனதை தித்திப்பாக்கியது.

"அவ எப்ப இங்கே இருந்து கிளம்புவா?" பேச்சை துவங்க.

"அதுக்கு தான் முயற்ச்சி செஞ்சிட்டு இருக்கேன்" படி அருகில் வந்து நின்ற குழலி காதில் இருவர் பேசியது நன்றாக கேட்டது.

"ஆமா தம்பி அந்த பெண் பார்த்தா நல்ல பெண் போல தெரியலை, அவ அம்மா கஷ்டப்பட்டு ஏற்பாடு செஞ்ச கல்யாணத்தையை விட்டு வந்து இருக்கா, உன்னை விட்டு போக எவ்வளவு நேரம் ஆகும்..."

"நீங்க கவலை படாதிங்க மா நான் பாத்துக்கிறேன்"

"பார்த்து டா ராஜா அப்பாக்கு இந்த விஷயம் கடுகளவு கூட கசிய கூடாது, அப்புறம் எல்லாம் சரியா நடக்காது" அக்கா விவரமாக அடுத்த அடி எடுத்துவைக்க ஐடியா கொடுக்க.

"சரி மா, நான் வேலை செய்ய போறேன்" பாதி சாப்பாட்டிலையே எழுந்துகொண்டான்.

குழலி வேகமாக கீழே இறங்கி வந்தவள், "என்ன அண்ணி, ரொம்ப ஜாலியா இருக்கிங்க போல தியாகு அண்ணா வராங்களா என்ன?"

"ஏய்... உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் கிட்டையே பேசுவ" கொடி சண்டைக்கு எகிறிக்கொண்டு வர, அவள் பேசுவது எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல,

"என் வாய் நான் பேசுறேன், பிடிக்கலைனா நீங்க பேசாதீங்க"

"என்ன அத்த... ரொம்ப ஜாலியா இருக்கிங்க போல" நக்கலாக பவளத்தை பார்த்து கேட்டுவிட்டு.

"சரி அத்த நான் போறேன், உங்க பையன் லவுஸ் பண்ண எனக்காக காத்து இருப்பார்" இருவரையும் வெறுப்பேற்றிவிட்டு பட்டாம்பூச்சியாக பறந்து போனாள்.

"ஏய்... ஒழுங்கா நீயே வீட்டைவிட்டு ஓடிடு இல்லை... என்னோட இன்னொரு முகத்தை பார்த்தா தாங்கமாட்ட" மலர் கொடி விரல் நீட்டி எச்சரிக்க.

"இந்த மூஞ்சே இவ்வளவு அசிங்கமா இருக்கு அது மட்டும் நல்லாவா இருக்க போகுது"

"ஏய் உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா என் பெண்ணை அப்படி சொல்லுவ.." பவளம் அருகில் வர.

"நான் அப்படி தான் பேசுவேன் என்னா இப்ப... பிடிக்காத கல்யாணத்தை விட்டுவந்தவ தான், பிடிச்ச அவரை விட்டு போவது கனவுல கூட நடக்காது. இரண்டு பேரும் சேர்ந்துட்டு அவரை எமோசனல் ப்ளாக்மெயில்லா செஞ்சிட்டு இருக்கிங்க, இதுக்கு முதல்ல என்ட் கார்ட் போடுறேன்"

"அதிகம் பேசுற நீ" கொடி குழந்தையை கீழே விட்டுவிட்டு சண்டைக்குவர.

"என்ன அடிக்கறது போல வர... தைரியம் இருந்தா அடிச்சி பாரு நான் யாருன்னு அப்ப தெரியும்" வாய்சண்டை நீண்டுகொண்டே போக, கொடி கையை நீட்ட வர, தடுத்து நிறுத்தி அவள் தரவந்த அடியை திருப்பி குழலி கொடுத்துவிட்டு சந்திரா வீட்டை நோக்கி போனாள். குழலி செயலில் கொடியும் பவளமும் விக்கித்து நின்றிருக்க.

"யாருகிட்ட பௌனா போதுன்னு விட்டா என்னையவே அடிக்க வரா பிசாசு" திட்டிக்கொண்டே சந்திரா வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

"வேலைக்கு போலையா அத்த?" பாசமாக கேட்ட குழலி தலையை வருடி விட்டார்.

"இல்ல மா உடம்புக்கு முடியலை"

"என்னாச்சி அத்த..." குழலி பதறினாள்.

"ரொம்ப சளி மா"

"டீ வச்சி தரவா"

"ம்ம்ம்" டீ வைத்து எழுப்பிய சந்திராவை குடிக்கவைத்துவிட்டு வேலை செய்ய கிளம்பினாள்.

"சாப்பிட்டு போமா"

"நான் சாப்பிடலைன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?"

"முகம் தான் வாடி போயிருக்கே"

"இல்ல அத்த நான் சாப்பிட்டேன்"

"எது அந்த இத்து போன நூடுல்ஸ்சா... இனி அது எல்லாம் சாப்பிட கூடாது உடம்பு என்னாத்துக்கு ஆகுறது, சாப்பிட மட்டும் இங்க வந்திடு புரியுதா"

"எப்படி அத்த கண்டு பிடிச்சிங்க, இன்னைக்கு எழுந்திரிக்கவே லேட் ஆகிடுச்சி, அதான் சமைக்கலை"

"இனி இங்கே தான் வரனும் சாப்பிட" கண்டிப்பாக சந்திரா சொல்ல.

"வேலை முடிச்சிட்டு வாமா தனியா இருக்க ஒரு மாதிரி இருக்கு"

"சரி அத்த" குழலி வயிறு நிறைய சாப்பிட்டே நேற்று பாதியில் விட்டுச் சென்ற வேலையை தொடர்ந்தாள். ராஜா சட்டையை கழற்றிவிட்டு வேட்டியை மடித்துக்கட்டி செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருக்க, கை தனது வேலையைப் பார்த்துக்கொண்டிருக்க கண்கள் தன்னவனை மெச்சிதலாக பார்த்துக்கொண்டிருந்தது, ராஜா குறுகுறுப்பு ஏற்படுவது போல ஒரு உணர்வு, வேகமாக திரும்பி பார்க்க.

"கண்ணை நோண்டிடுவேன்" வாய் அசைக்க.

"பரவால்ல நாட்டுக்கட்ட..." அவனை போலவே வாய் அசைத்து சொல்ல. அவளது செவ்விதழ்களின் அசைவுகளை பார்க்க பார்க்க பித்து பிடித்தது. அதனின் சுவையை உணர வண்டாக மாற துடித்த இதயத்தை அடக்கிக்கொண்டு மறுபுறம் திரும்பிக்கொண்டான்.

குழலிக்கு வேலை செய்ய செய்ய எளிமையாக தெரிந்தது, ஆனால் வெயில் தான் தாங்க முடியவில்லை.

பவளமும் கொடியும் குழலி பேசியதையும் அடித்ததையும் திரும்ப திரும்ப நினைத்து பார்த்து புகைந்து கொண்டிருந்தார்கள்.

இந்த புகை தீயாக பற்றி யார் வாழ்க்கையை அழிக்கபோகுதோ," நீ கவலை படாத கொடி, அவள் வீட்டுக்கு வரட்டும் இருக்கு, ராஜா கிட்ட சொல்லி வாயை கிழிக்க வைக்கலாம்"

"அதுக்குதான் மா காத்துட்டு இருக்கேன்" சொல்லும் போது கொடி முகத்தில் அத்தனை வன்மம் நிறைந்திருந்தது.

****

சங்கவிக்கு இரண்டாம் ஆண்டு முதல் தேர்வு நெருங்கிய சமையமது.

இருவரும் நண்பர்களாக வலம் வந்தார்கள்... சங்கவியும் படிப்பு முடித்துவிட்டு மனதில் இருப்பதை சொல்ல காத்திருந்தாள். அவனது அக்கறையில் கறைந்துதான் போய்விட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அவளே தேர்வுக்கு படித்துத்கொண்டிருக்க, வேந்தன் குழந்தையை போல பார்த்துக்கொண்டான். அவன் படித்த மேஜர் தான் சங்கவி எடுத்திருந்தாள் சொல்லவா வேண்டும்... அவளது சந்தேகத்தை தெளிவு படுத்தி, தேர்வு நாட்கள் அவசரமாக நகர்ந்தது.

வழக்கம் போல இருவரும் புத்தகத்தோடு உட்கார்ந்திருக்க, "வேந்தன் இது புரியலை பார்த்து வைங்க எனக்கு தண்ணீ வேணும்" வேந்தன் கையில் புத்தகத்தை தினித்துவிட்டு சென்றிருந்தாள் சங்கவி,

எதர்ச்சையாக புத்தகத்தின் முன் பக்கத்தை வேந்தன் திருப்பி பார்க்க அவனது கண்கள் விரிந்துகொண்டது, "அடிப்பாவி... நீ பி. ஜி இரண்டாம் வருஷமா படிக்கிற! இடையில் அவள் முதுகலை மாணவி என தொரிந்ததும் எல்லையில்லா ஆனந்தம், "சரியான ராங்கி எப்படி ஏமாத்தி இருக்கா... 'குழந்தை திருமணம் செஞ்ச உங்களை ஜேயில்ல போடனும்' எப்படி எல்லாம் சொல்லி மிரட்டி இருக்கா பாரு.

எப்படி ஏமாத்தி வச்சி இருக்கா பாரு... இரு இரு உன்னை பார்த்துக்கிறேன். எனக்கும் நேரம் வரும்... என்ன, தண்ணீ குடிக்க போனவ ஆளையே காணோம்" வேந்தன் அறையை விட்டு வெளியே வந்து எட்டிப்பார்க்க, சங்கவி சோபாவில் படுத்து நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தாள்.

"படிக்கறதுன்னா இவளுக்கு பாவக்கா போல கசக்குது... கடவுளே குழந்தைக்கு அ, ஆ, இ, ஈ சொல்லித்தற வயசுல பொண்டாட்டிக்கு சொல்லித்தற வச்சிட்டியே உனக்கே நல்லா இருக்கா" சங்கவி தூக்கம் கலையாதவாறு தூக்கிக்கொண்டு மெத்தையில் படுக்க வைத்தான்.

கடைசி தேர்வுக்கு முன் தினம் கமலா வந்திருந்தார்.

என்ன தான் வேந்தன் கூட இனக்கமாக ஆனாலும் கமலாவிடம் சங்கவியால் ஒன்ற முடியவில்லை.

சோர்வாக வந்த கமலா சங்கவியிடம் காபி போட்டு தரசொல்ல, திருத்திருவென முழித்தவளை பார்த்து, "காபி போட தெரியாதா?"

"இல்ல அத்த" சங்கவி பம்பிக்கொண்டு சொல்ல," அப்போ... இவ்வளவு நாள் வேந்தன் தான் சமைச்சானா?"

"ஆமா... சரி காபி கூடவா கத்துக்கலை" என வியப்பில் கேட்க, "இனி கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கோ" கமலா என்னவோ சாதாரணமாக தான் சொன்னார். சங்கவித்கு கோபம் வந்துவிட்டது, அமைதியாக அறையில் புத்தகத்தோடு முழுகிவிட்டாள்.

என்றுமில்லாமல் அன்று தாமதமாக வந்தான் வேந்தன், வந்ததும் சாப்பிட்டு முடித்து அறைக்குள் வர.

இவ்வளவு நேரம் மனதில் புதைத்துவைத்திருந்த எரிமலை வெடிக்க துவங்கியது.

"உங்க அம்மா... ரொம்ப பண்ணுறாங்க"

"அப்படி என்னா செஞ்சாங்க" அவளிடம் பேசிக்கொண்டே உடையை மாற்றி முடித்தவனுக்கு ஆர்மேன்கள் தாறுமாறாக தாண்டவம் ஆடியது அவளது இதழ்களை பார்த்து...

அவனது பொறுமையை அதிகம் சோதிப்பது போல சங்கவி அவனை நெருங்கி வந்து நின்று நியாயத்தை கேட்க.

"சங்கவி சாரி" தவறு செய்யும் முன் மன்னிப்பு கேட்டுவிட்டு, தன்னவளை இழுத்து முகம் முழுவதும் முத்தம் கொடுக்க ஆரம்பித்திருந்தான். முதலில் அதிர்ந்தவள், அவனிடமிருந்து விடுபட போறாடினாள். அவளது இதழை நெருங்கும் நேரம் சங்கவியின்
தளிர் கரங்கள் அவனது கன்னத்தை பதம் பார்த்தது.

கன்னத்தில் வைத்ததை தாங்கிக்கொண்டே, "என்னை எதுக்கு அடிச்ச சங்கவி" கோபத்தில் கண்கள் எல்லாம் சிவந்திருந்தது வேந்தனுக்கு.

கருத்து

 
Status
Not open for further replies.
Top