ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் வெட்க சிவப்பழகியே _ கதை திரி

Status
Not open for further replies.

T22

Well-known member
Wonderland writer
9(1) சிவப்பழகியே...

"குழலி எந்திரி முதல்ல" அவளது மென்மையான வருடலை தாங்க முடியாமல் தவித்தான் இந்த கிராமத்து நாட்டுக்கட்டை.

"இரண்டு நிமிஷம்... நானே எழுந்திருச்சிடுறேன், கொஞ்சம் பேசனும்" விளையாட்டுத் தனம் முற்றிலும் மறைந்து முகத்தை தீவிரமாக்கி குழலி சொல்ல,

"பேசலாம் அதுக்கு முன்னாடி எழு" எரிந்து விழுந்தான்.

"இல்ல இப்படி தான் பேசுவேன்... ப்ளீஸ் மாமூ" அவள் சொன்ன மாமூவில் உருகினானா? இல்லை கண்கள் கெஞ்சுவதை பொறுக்க முடியாமலேயா அமைதியானானா? அவனுக்கே தெரியவில்லை, அவனது எதிர்ப்பை விட்டு கைகள் தளர்ந்தது.

"ஐ லவ் யூ, இதுக்கு நீ பதில் சொல்லனும்'ன்னு என்னைக்கும் கேட்கமாட்டேன், என் மனதில் காதல் விதைச்சதும் நீ தான். என்னை வேண்டாமென தூக்கி எறிந்தவனும் நீ தான்... தூக்கி எறிஞ்சதுக்கு காரணம் நான் எப்போதும் கேட்கமாட்டேன்.

ஏனோ தெரியலை உன்னை போல தூக்கி எறிஞ்சிட்டு என்னால போக முடியலை... புத்திக்கு நல்லா உறைக்குது, விட்டு போனவனுக்காக எதுக்கு இப்படி தவம் கிடக்கறன்னு, ஆனா இந்த மனசுக்கு புரியலையே. ராகவிமா கலங்கும் போது தாங்க முடியாம கல்யாணத்துத்கு சம்மதம் சொன்னேன்.

எத்தனையோ பேர் காதலில் தோல்வியுற்று கல்யாணம் செஞ்சிக்கலையா, அதை மறந்து சந்தோஷமா வாழலையா? என்னாலையும் மறந்துட்டு கல்யாணம் செய்துக்க முடியும்'ன்னு தைரியமா மூடிவு எடுத்து உன்னை மறக்க நினைச்சேன் ஆனா என்னால சுத்தமா முடியலை. திருமணத்துக்கு ரிங் வாங்கும் போது துவங்கி புடவை வாங்கியது முடிய, ஒரு முறை நீ சொன்ன கதை நினைவு இருக்கா அது தான் ஓடிட்டு இருந்தது.

அன்றொரு நாள் தூக்கம் வராமல் மொட்டை மாடி விளிம்பில் நிலாவை பார்த்து வெறித்தவளை ஜன்னல் வழியாக பார்த்தவன் குழலிக்கு அழைக்க.

"என்னாச்சி இந்த நேரத்துல கால் செஞ்சி இருக்க தூங்கலையா?"

"ஆமா நான் தூங்காத விஷயம் உனக்கு எப்படி தெரியும்?"

"மொட்டைமாடியில நின்னுட்டு இருந்தா தெரியாதா மேடம்"

'டேய் இந்த இருட்டுல உனக்கு எப்படி தெரியும்?' தன்னை சுற்றி சுற்றி பார்த்தாள் தன் மீது வெளிச்சம் இருக்கா என.

"சும்மா கடலை போடனுமேன்னு போன் பண்ணிட்டு என்ன கம்பி கட்டுற கதை எல்லாம் விட்டுட்டு இருக்க? நான் ரூமில் படுத்துட்டு இருக்கேன், எனக்கு தூக்கம் வருது போன் வை"

"உன்னை நானறிவேனடி..."

"என்ன டா தூய தமிழ் எல்லாம் வருது?"

"காதல் வந்து பித்தனாவதை விட கவிஞன் ஆனவர்கள் தான் நம் நாட்டில் அதிகம் பெண்ணே"

"ஓ... அப்படியா? ஹாஹா"

"சரி இருட்டுல எப்படி நான் தான்னு கண்டு பிடிச்ச?"

"தெரியும்... உன் நிழலையும் கண்டுபிடித்து கட்டியணைக்கும் திறமை எனக்கிருக்கிறது பெண்ணே"

"முடிலைடா நடு ராத்திரியில் அருக்காத"

"சரி... ஏன் தூக்கம் வரலையா?"

"ம்ம்... வீட்டு நியாபகம் அதான் நிலாகிட்ட பேசிட்டு இருந்தேன்"

"சரி கதை சொல்லவா? கேட்டுட்டே தூங்குறியா?"

"காதல் கல்யாணம்'ன்னு ஆரம்பிக்காம எது வேணும்னாலும் பேசு"

"சரி தெய்வமே, உன் சேப்ட்டி முக்கியம் விவரம் தான்"

"நான் மக்கா இருந்தாலும் இந்த காதல் சூராவலியில் சிக்கிக்கொள்ள ஆசையில்லை" இப்படி வீரவசனம் பேசுபவளுக்கு தெரியப்போவதில்லை. காதலுக்காக ரத்த பலி எல்லாம் கொடுத்து அவனை தேடி வருவாளென.

"என் வருங்கால வைப்க்கு நான் என்னென்ன செய்யபாபோறேன்னு சொல்லுறேன்"

"டேய் இப்ப தானே சொன்னேன், இந்த டாப்பிக் வராதேன்னு"

"உன்னை பத்தி நானென்ன சொன்னேன், என் வைப்க்கு நான் செய்ய போறதை தானே சொல்லப் போறேன். அப்போ என் வைப் நீன்னு இப்ப நினைச்சியா?"

"இல்லையே, நல்லா லாக் செய்யுற டா சொல்லு கேட்போம்"

"நீ ரூம் போ, படுத்துட்டு கதை கேளு சரியா"

"இரண்டு நிமிடம்" வேகமாக அறைக்கு வந்தவள் போர்வையை கழுத்துவரை போர்த்தி ஹெட் செட் போட்டுக்கொண்டு கதை கேட்க ஆர்வமாக தயாராகினாள்.

கண்கள் மின்ன விக்கி துவங்கினான், "என்னோட முதல் சம்பாதியத்தை அவ கையில் தான் கொடுக்கனும். கல்யாணம் எல்லாம் அவதி அவதியாக நடக்காம, பொறுமையா ரிங் வாங்க கூட போய் கொரஞ்சது ஐந்து கடையாவது ஏறி இறங்கி அவள் கைக்கு பொருத்தமான பிளாட்டினம் ரிங் வாங்கனும்"

"ஏன் உன் பொண்டாட்டி தங்கத்துல போட்டா ஆகாதா?"

"எப்போதும் அவ கையிலையே இருக்கனும் அதான்"

"ஏன் தங்கம் போட்டா கையில் இருக்காதா?"

"அவசரத்துக்கு பேங்க்ல கழற்றி வச்சிட்டான்னா என்ன செய்ய அதான் முன்னேற்பாடு"

"அறிவுடா அப்புறம்"

"புடவை நான் தான் செலக்ட் செய்யனும், அது மட்டுமில்ல திருமணத்துக்கு அவள் உபயோகிக்கும் குண்டூசி முதல் அனைத்தும் நான் சொந்த செலவில் வாங்கி தரனும்"

"அப்பாடா ரசிகன்டா நீ, ரியலி சி இஸ் லக்கி, அவ்வளவு தானா?"

"ஆமா நீ லக்கி தான்"

"டேய் இது தானே வேணாங்குறது" சிறு கோபம் அவளிடம் எட்டி பார்க்க.

"சரி சரி மன்னிச்சிடு"

"போனா போது விடுறேன் இதுவே கடைசியா இருக்கட்டும், மேல சொல்லு"

"கல்யாணத்துக்கு மேடையில் உட்கார்த்து அவள் வரவுக்காக காத்து இருந்து, வந்ததும் பார்வையால் பருகி. அதுவரை இருந்த கூச்சல் சத்தம், முன்னே குண்டத்தில் இருக்கும் புகை அணல் என என் உடல் உணராது, மெய் மறந்து அப்படி ரசிப்பேன்.

தாலியை கட்டி முடிச்ச கையோடு பால் பழம் கொடுத்து சட்ங்கு அனைத்தும் முடித்து ஹனிமூனுக்கு கடத்திட்டு போயிடுவேன்"

அவன் எங்கே பேச்சை அதற்க்கு மேல் தொடங்கி விடுவானோ என பயந்த குழலி, "சரி விக்கி எனக்கு தூக்கம் வருது தூங்கவா?"

"சரி குட்டி தூங்கு, அதுக்கு முன்ன என் கதை எப்படி இருந்தது? சொல்லிட்டு தூங்கு"

"மிக சிறப்பு"

அன்றைய நாள் இருவரையும் ஆக்ரமித்துக் கொள்ள குழலியின் ஒரு துளி கண்ணீர் ராஜாவாக கல்லாகி போன அவனது இதையத்தில் ஓரத்தை சுட்டது.

'வேண்டாமென விலகி போனவளின் மனதை இப்படி கெடுத்து வைத்து தான் மட்டும் நிம்மதியாக இருந்து இருக்கோமே' மனம் வெதும்பியது ராஜாவுக்கு

அவளது கண்ணீரை கூட துடைக்க கை எழவில்லை, அதை துடைக்கும் தகுதி கூட தனக்கில்லை என நினைத்தான். அவனது இதயத்தை போலவே அவனது உடலும் இறுகி இருந்தது.

இவளது காதல் அவனது இருக்கத்தை தகர்த்து எறியுமா? இல்லை அவனது கடுமை கண்டு இவளது காதல் இதையம் வெடித்து சிதறுமா?



 

T22

Well-known member
Wonderland writer
10 சிவப்பழகியே...

குழலி அவனுக்கான கடைசி வாய்ப்பை கொடுக்க நினைத்தாள். அதே சமயம் தன் மன போராட்டத்தை சொல்லிவிட துடித்தது அவளது மனம்.

"குழலி எந்திரி"

"நான் இன்னும் பேசி முடிக்கலை" அவனை அணைத்து படுத்தவள் விரும்பலை கட்டுப்படுத்த படாத பாடு பட்டாள்.

"சீக்கிரம் சொல்லி முடி" எரிச்சல் பட்டான் ராஜா.

"என்னால உன்னை போல தூக்கி போட முடியலை, நீ சொன்னது வெறும் கதை, ஆனா நான் கனவில்... என்னையும் அறியாம வாழ துவங்கிட்டேன். என் வாழ்க்கையோடு சேர்த்து இன்னொருவர் வாழ்க்கையை கொடுக்க மனசு இல்லை, அதான் கை வெட்டிக்கிட்டேனே தவிர, உங்க கூட வாழனும்ன்னு நான் நினைக்கவே இல்லை. சங்கவியின் பிடிவாதத்தால் அம்மா என்னை இங்க வந்து விட்டு போவாங்கன்னு நான் கொஞ்ச கூட எதிர் பார்க்கலை. மனமும் ஒரு நிலையில் இல்லை இருந்திருந்தா இங்க வராம இருக்க தான் முயற்சி செய்திருப்பேன், உனக்கு என் கண்ணீர் பிடிக்காது தெரியும். ஆனா முடியலை, எனக்கு ஒரே நிம்மதி நான் பார்க்கும் தூரத்தில் நீ இருக்க அதுவே போதும்'ன்னு நினைச்சிதான் வந்தேன். ஆனா உனக்கு அவ்வளவு அருவெறுப்பு என் முகம் கொடுக்கும்ன்னு நான் நினைக்கலை" பொறுமையாக அவளது முகத்தை வெறித்து பார்த்தவனுக்கு கடைசியாக அவள் சொன்ன வாக்கியம், மனதை நிறைத்தது, 'எனக்கு ஒரே நிம்மதி நான் பார்க்கும் தூரத்தில் நீ இருக்க அதுவே போதும்' ஆனால் அடுத்து சொன்ன வாக்கியம், 'எனக்கு அருவெறுப்பா இருக்கா?' தீ சுட்டது போல அவளை தள்ளிவிட்டு எழுந்தவன், குழலி முகத்தை கூட பார்க்காமல், வேகமாக கதவை திறந்து வெளியே சென்றிருந்தான், கையோடு வண்டி எடுத்துக்கொண்டு.

"இந்த கல்லை அழுது கறைக்க முடியாதுன்னு தெரியும் காதலால் கறைச்சி காட்டுறேன். ராஜாவை விட்டு என் விக்கியை எப்படியும் மீட்டு எடுத்திடுவேன். இந்த வீட்டில் ஏதோ சரி இல்லை அதையும் கண்டு பிடிக்கிறேன் முதலில்" தலையை உலர்த்தியவாறு சுற்றிலும் தன் பார்வையை செலுத்தினாள்..

அந்த வீட்டை அடுத்து நடக்கும் தொலைவில் சிறு ஓட்டுவீடு தெரிந்தது. "அழகா இருக்கு அந்த வீடு, வெயில் போகட்டும் சுத்தி பார்க்க போலாம்"

அங்க வீட்டுல என்ன ரணகலம் நடக்குதோ தெரியலையே... சங்கவி வேந்தன் அத்தானுக்கும் நல்லா செட் ஆகும், ஆனா இடையில் என்னை வச்சி எதாவது சண்டைவந்து அவங்க வாழ்க்கை கேள்விக்குறியா ஆகக்கூடாது கடவுளே" குழலி வானத்தை பார்த்து வேண்டுதல் வைக்க.

கடவுளின் நுனி காதுக்கு கூட அவளின் வேண்டுதல் சென்றடையவில்லை.

****

மாலை ஐந்து மணி முடிய இன்னும் சில மணித்துளிகளே மிச்சமிருந்தது.

"டேய் சங்கவி எந்திரி வீட்டுக்கு போலாம்" கமலா தன்மையாக கேட்க.

"என்ன இப்ப உங்களுக்கு அதான் நீங்க நினைச்சது நடந்துடிச்சில்ல"

"ஏன் சங்கவிமா இப்படி எல்லாம் அம்மாட்ட பேசுற?" வேந்தன் இயலாமையில் கேட்க.

"வேற எப்படி பேசுறது, சுயநலமா உங்க பையனுக்காக யோசிச்சிங்கயில்ல, எனக்காக பத்தி யேசிச்சிங்களா. இவ்வளவு குட்டி பொண்ணுக்கு இவ்ளோ பெரிய மலைமாட கட்டிவச்சி இருக்கிங்க. என் படிப்பு என்னாகுறது... என் லட்சியம் என்னாகுறது... ச்சை சுயநலம் பிடிச்ச குடும்பம்"

'என்னை பிடிக்கலையா சங்கவி?' மனதால் மட்டுமே வேந்தனால் கேட்க முடிந்தது.

'இந்த அம்மாக்கு நல்லா வேணும் திட்டுவாங்கு என் லட்டுகிட்ட, எவ்வளவு சொன்னேன் இப்ப கல்யாணம் வேண்டாம்ன்னு கேட்டிங்களா? நல்லா அனுபவிங்க' மனைவிக்கு ஆசையாக செல்ல பெயர் வேறு வைதிருந்தான் இந்த ஒரு தலை காதல் கணவன். கன்னத்தில் கை வைத்து அமைதியாக மாமியார் மருமகள் சண்டையை ரசிக்கலானான். ஆனால் காட்சி தான் வேறு, வழக்கமாக மாமியார் அதட்ட மருமகள் தவிப்பாள் இங்கு தலைகீழாக நடந்துகொண்டிருந்தது. குட்டி மருமகள் கண்களை உருட்டி கைக்கு அபினையம் சேர்த்து திட்டிக்கொண்டிருக்இ,

' அப்பப்பா... என்ன அழகு என்னவள். நல்லா வேணும் மாத்தா ஜீ உனக்கு, சொன்ன பேச்சை கேட்டு இருந்தா இன்னும் இரண்டு வருஷத்துல சுமூகமா கல்யாணம் செஞ்சி இருக்கலாம், வாங்கு என் லட்டுகிட்ட.'

என்ன தான் மனைவிக்கு பரிந்து மனம் நியாயப்படி தீர்ப்பு சொன்னாலும் தாயின் முகம் சுருங்குவதை தாங்க முடியாத வேந்தன்.

"சங்கவி தப்பு தான் அம்மா செய்தது. அதுக்கு மரியாதை இல்லாம பேசுவியா" மென்மையாக கடிந்து பேச,

"ஆமா சைல்ட் மேரேஜ் செஞ்சி வச்சி இருக்காங்க இவங்க... ஜெயில்ல தூக்கி போடுறேன் இருங்க. இவங்களுக்கு பரிஞ்சிகிட்டு வரிங்க, நீங்க மட்டும் என்ன யோகியமா அக்காவை நிச்சியம் பண்ணி... சைட் அடிச்சிட்டு தங்கையை கட்டி இருக்கிங்க கொஞ்சம் கூட ஒரு மாதிரி ஆகலையா உங்களுக்கு"

'ஆமா நீ சொன்னது எல்லாம் நடந்துச்சி இப்ப இல்லை, உன் அக்காவை கட்டிக்க சூழ்நிலையில் இருக்கும் போது. என் அம்மாகாக மட்டும் அவளை கட்டிக்க சம்மதிக்கலை, அவ எவ்வளவோ இழந்து இருக்கா வாழ்க்கையில், நானும் நிராகரிச்சா, அவளால தாங்க முடியாதுன்னு தான் கட்டிக்க ஓகே சொன்னேன். லாஜிக் இல்லாம இருக்கலாம் நான் கல்யாணத்துக்கு ஒகே சொன்னதுக்கு ஆனா காரணம் இருக்கு. அம்மா ஒன்னும் விதவை இல்லை என் அப்பா இருக்கார், அதும் இதோ ஊருல தான்.

அவர் என் அம்மாவை பிடிக்காம நிராகரித்த அப்போ அவங்க பட்ட வலியை கூட இருந்து பார்த்து இருக்கேன். அந்த வலியை என்னால இன்னொரு பெண்ணுக்கு கொடுக்க முடியாது' வேந்தன் முகம் மாறுவதை பார்த்த கமலா பொங்கி விட்டார்.

அவர் நல்லவர் தான் மகன் வரும் போது நல்ல குணமெல்லாம் அவரிடத்தில் இருக்காது. மகனை யாராவது எதாவது சொன்னால் குழாயடி சண்டையை விட மோசமாகிவிடும், வேந்தன் தான் கமலாவுக்கு தகப்பனாக மாறி, 'இப்படி எல்லாம் செய்ய கூடாது மா, கோபத்தை குறைங்க' என கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி இருந்தான்.

அவரது கணவன் பிரிந்து சென்றதை தாங்க முடியாதவர் கோபத்தை வேறு வலியில் காட்டத் துவங்கிய நேரமது. சங்கவியின் செயலால் பழைய கமலா வெளியே வந்திருந்தார்.

"ஏய் என்னடி ஓவரா பேசிட்டு போற என் பையனையா மிரட்டுர, அடி வெழுத்துடுவேன். பாவம் சின்ன பொண்ணுன்னு பார்த்து பேசுனா மிஞ்சுற. என்னை சாந்தமான கமலா நினைச்சியா அடிச்சி துவச்சி காயப்போட்டுடுவேன். மரியாதையா நான் சொல்லுறதை கேட்டு வாழு இல்லை நடக்கறது வேற"

"மா..." வேந்தன் துவங்கும் போதே.

"என்ன டா புது பொண்டாட்டிக்கு சப்போர்ட்டா, பிச்சிடுவேன் பிச்சி. போ போய் இரண்டு இலையில் சாப்பாடு போட சொல்லு.

"மா..."

"என்னடா மசமசன்னு நின்னுட்டு இருக்க போ..."

"சாப்பாடு காலி"

"ஆர்டர் போடு" கமலா போனில் வடிவேலு காமெடி போட்டு தீவிரமாக சிரித்துக்கொண்டிருக்க, வேந்தன் சாப்பாடு ஆர்டர் போட்டுவிட்டு சங்கவியை பார்க்க, அவள் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து இருந்தார்.

"ஏய் சங்குமா"

"ஆங்... இவங்க என்ன இப்படி பேசுறாங்க, ஐயோ போச்சி எனக்கு சண்டை வேற போட தெரியாதே. அடிச்சிட்டா வலிக்குமே..." அவளது எண்ண ஓட்டம் அவனுக்கு நன்கு புரிந்தது, அவளது காதோரம் குனிந்த வேந்தன்.

"ஆமா என் அம்மா செம டெரர், அடிச்சா ஜவ்வு கிழிஞ்சிடும் எனக்கு ஒரு டைம் அடிச்சி ஒருவாரம் காது கேட்கலை தெரியுமா? இதுமட்டுமா... பக்கத்து வீட்டு ஆன்டிக்கூட சண்டை வந்து காதை கடிச்சி வச்சிட்டாங்க, பாதி காது அம்மா வையித்துக்குள்ள போயிடுச்சி"

"உவேக்... மனுசன் கறி என்ன நல்லாவா இருக்கும், அதும் பச்சையா கருமம். அத்தான் நீ எதுக்கு இவங்களை அம்மாவா வாங்கின, இவங்க வேண்டா வித்துடு"

"முடியாதே யாரும் வாங்கிக்கமாட்டாங்களே" அவன் சொன்ன செய்தியை கேட்டு அதிர்ச்சியில் அவன் மீதான கோபம் தற்காலிகமாக மறந்திருந்தாள்.

"ஆமா அதும் உண்மைதான்... இந்த ராட்சசிய போய் யாரு வாங்குவா. இரு... இரு நான் தான் உன் மேல கோபமா இருக்கேனே உன்ட எதுக்கு பேசிட்டு இருக்கேன்" வேந்தனை முறைக்க.

"நான் உன் நல்லதுக்கு தான் சொல்லுறேன் பார்த்து இருந்துக்கோ" நான்கு அடி முன் சென்றவன் யூ டர்ன் போட்டு பின் வந்து.

"அவங்க முன்னாடி குரலை உயர்த்திடாத"

"உயர்த்துனா என்ன செய்வாங்க" சங்கவி பயத்தோடு கேட்க.

"கோபம் வந்தா உச்சி முடியை பிடிச்சி ஆஞ்சிடுவாங்க ஆஞ்சி, அவங்களுக்கு நீளமா முடி இருக்கவங்களை பிடிக்காது அதுக்கு தான் உன்னை முதல்ல பிடிச்சும், உன் அக்காவை கேட்டாங்க" அலுங்காமல் குழுங்காமல் வேந்தன் வெடியை போட.

குழலியை விட சங்கவிக்கு முடி அடர்த்தி, அன்று கோவிலில் நடந்தது அறைகுறையாக நினைவுக்கு வர, "ஓ அதான் முதல்ல என்னை கேட்டாங்களா முதல்ல. முடிய பார்த்துட்டு தான் அக்காவை கேட்டாங்களா" தன்னந்தனியாக புலம்பிக்கொண்டிருப்பவளை சுட்டிக்காட்டி அன்னையிடம் எதையோ சமாளிக்க.

கமலாவும் கண்டும் காணாமல் மகனின் தந்திரம் புரிந்து சிரிக்க, இருவரின் வாழ்வும் சீராகும் வரை இந்த அதிரடி மாமியார் தான் இந்த சங்கவிக்கு சரி என முடிவு எடுத்துக்கொண்டார்.

ஆர்டர் போட்ட உணவு வரவும், "ஏய்" ஓரமாக ஒதுங்கி நின்றிருந்தவளை ஒரு விரல் நீட்டி அழைத்தார் கமலா.

"ஐயோ இந்த ரத்தக்காட்டேரி எதுக்கு கூப்பிடுது, காதை கடிக்கவா இல்லை, தலை முடியை பிய்க்கவா?" முணுமுணுத்தது இருவருக்குமே கேட்டது.

வேந்தன் சீரியசாக முகத்தை வைத்துக்கொள்ள, கமலா தான் சிரிப்பை அடக்க முடியாமல் கோபத்தை கடினப்பட்டு முகத்தில் வரவழைத்துக்கொண்டார்.

"என்ன வேணும்"

"சங்கவி மரியாதை... மரியாதை" மனைவிக்கு எடுத்து கொடுக்க.

"ங்க... சொல்லுங்க அத்த..." சங்கவி குரலில் அவ்வளவு பவ்வியமீ இருந்தது.

"வா வந்து சாப்பாடு எடுத்து இரண்டு பேரும் ஒன்னா உட்கார்ந்து சாப்பிடுங்க.

"வேந்தா மாத்தி மாத்தி ஊட்டிக்கோங்க இரண்டு பேரும், நான் வீடியோ எடுக்கிறேன்"

"இல்ல நான்லா ஊட்டி விடமாட்டேன்"

"சங்கவி ப்ளீஸ் அம்மாவை கோவப்படுத்தாத கடிச்சி வச்சிடுவாங்க" வேந்தன் அவளது வீக் பாயின்ட் கையில் ஆயுதமாக்கி அவனது ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டான்.

"போட்டோ ஒழுங்கா எடுக்கலை திரும்ப ஊட்டி விடுங்க" அந்த பார்சல் காலியாகும் வரை கமலா சங்கவியை ஒரு வழி செய்துவிட்டார்.

வேந்தன் குதுகலமாக சாப்பிட்டு முடிக்க களைப்போடு ராகவி வந்து சேர்ந்தார்.

"அண்ணி என்னாச்சி?" கமலா ராகவியிடம் கேட்க

"அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சி"

"நிஜமாவா மா? அவளை நல்லா பார்த்துப்பாங்களா?" அக்காவின் வாழ்க்கை மீது சிறு பயம் சங்கவிக்கு அன்னையிடம் தெளிவு படுத்திக்கொள்ள கேட்க.

"ம்ம்ம்ம் சரி எல்லோரும் கிளம்புங்க"

"சரி அத்த முதல்ல உங்க வீட்டுக்கு தானே"

"ஆமா பா, வீட்டுக்கு போய் பால் பழம் சாப்பிட்டுட்டு உங்கவீட்டுக்கு அனுப்பி கொடுக்கனும், அண்ணி நடந்த கலவரத்துக்கு மன்னிச்சிடுங்க"

"அத விடுங்க ஆகவேண்டியதை பார்க்கலாம்" கமலா பெருந்தன்மையாக சொல்ல, சங்கவிக்கு அவர் நடிப்பது போல தெரிந்தது.

அனைவரும் வீட்டுக்கு போக.... சங்கவிக்கு இந்த திடீர் திருமணத்திலிருந்து எப்படி தப்பிப்பது என காரில் யோசித்தவளுக்கு ஐடியா கிடைக்க தனது வீட்டில் காலடி எடுத்து வைத்ததும் தனது திட்டத்தை துவங்க எண்ணினாள்.

திட்டத்தில் வெற்றி பெறுவாளா? இல்லை திட்டம் தலைகீழாக மாறி அவளையே வைத்து செய்யுமா?


கதை பிடித்திருக்கா அழகிஸ்? 😍😍😍😍

 

T22

Well-known member
Wonderland writer
11 சிவப்பழகியே...

"மா எனக்கு ஏற்கனவே பாய்பிரண்ட் இருக்கு அவனில்லாமல் என்னால வாழ முடியாது மா, நானும் அவன் கூடவே போயிடுறேன்" கிருக்குதனமாக சொன்னது மட்டுமில்லாமல்... வராத கண்ணீரை சங்கவி துடைக்க. பாவம் அவளுக்கு நடிக்க கூட தெரியவில்லை, மனப்பாடம் செய்து ஒப்பித்திருந்தாள்.

இதில் ஒரு வாக்கியத்தை சொல்லி முடிப்பதற்க்குள் ஓராயிரம் முறை... திக்கி இருந்தாள்.

குழலியை இப்படி தெரியாத இடத்தில் விட்டுவந்தது பதைபதைப்போ இன்னும் குறையாமல் இருக்க. சிறிய மகள் பேசியதை கேட்டு கோபம் ஏகத்துக்கு அதிகரித்தது ராகவிக்கு.

நடிப்பு புரியாதா என்ன இந்த தாய்க்கு, "என் மானத்தை அவ வாங்கியது பத்தாதா? நீயும் ஏன் டி நடிச்சி கொள்ளுர, தயவு செய்து இவளை கூட்டி போங்க" சங்கவியின் இந்த நாடகத்தின் காரணம் புரிந்தாலும், அவள் நடவடிக்கை வேந்தனுக்கே ஆத்திரத்தை கிளப்பியது. காலையில் தான் நொந்து போய் வந்தவர்களை இப்படி நோகடித்துவிட்டாளே என, அத்தைக்காக சேர்ந்து வருந்தினான்.

கமலாவுக்கும் இதே எண்ண ஓட்டம் தான், முதலில் அவள் விருப்பத்துக்கு விட்டு பிடிக்கத்தான் நினைத்தார் இவள் செய்து வைத்ததில் கமலா மனமும் மாறி இருந்தது மூன்று பேரும் உயிர்ப்பே இல்லாமல் வீட்டுக்கு வர.

வேந்தன் தான் அடுத்து அவன் வாழ்வில் என்ன? என்ற கேள்விக்கு நடுவில் குழம்பி நின்றான்.

மனதில் காதல் கொண்டு புதைந்தவள் மனைவியாக வந்ததை நினைத்து மகிழவதா இல்லை, அவளை கட்டாய படுத்தி கல்யாணம் செய்ததுக்கு வருந்துவதா? தன்னை தேற்றுவதா இல்லை அவளை தேற்றுவதா? சிறிது நேரத்தில் கார் வாசலில் நின்றது.

கமலா மனதிலும் வேந்தன் மனதிலும் ஓடியது ஒன்று மட்டும்தான், திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருத்தார்கள் இருவரும் மனதோடு.

'அவள் போக்கில் விட கூடாது' இவர்கள் வருவதற்க்கு முன்னதாகவே ஆரத்தி எடுக்க அனைத்தும் தயாராக இருந்தது.

இரவு எட்டு மணி, உறவினர்களும் கிளம்பிவிட, எஞ்சி இருந்தது மூவர்தான், கமலா சமையல் அறைக்குள் நுழைந்து கொண்டார் இரவு உணவை சமைக்க, வேந்தன் அவனது அறையில் அடைந்துகொள்ள.

யாரும் அருகில் இல்லாதது ஒரு வித நிம்மதியை கொடுத்தாலும், தன் வாழ்க்கை இப்படி ஆகிடுச்சே என வருந்தியது, 'கடவுளே என் அக்கா வாழ்க்கையை சரி செஞ்சி விடு'

வேந்தனுக்கு திரும்பதிரும்ப ஒன்றையே நினைத்து தலை எல்லாம் கனமாகி போனது.

குளித்துவிட்டு வந்தவன், தலையை நன்றாக துவட்டிவிட்டு எண்ணையை வைத்து கோதியவன் நின்ற வாக்கிலேயே மெத்தையில் விழுந்தான்.

"ஒரு தூக்கம் போட்டாதான் வேலைக்கு ஆகும்" கண்களை மூட, கனவில் புதுமனைவியின் சிரித்த முகம் தோன்றியது, இதமாக அந்த நினைவுகளில் தூங்கி போனான்.

கமலா இரவு உணவு சமைத்து முடித்ததும்... சங்கவியோ தூக்கத்தில் தூங்கி தூங்கி விழுந்தாள்.

'பார்க்க பாவமா இருக்கே, ரொம்ப டயார்டா இருக்கா போல, கமலா இதை எல்லாம் நினைக்காத, நீ மாமியார் கொடுமையை செய்வது போல நடிச்சி தான் ஆகனும்'

"சங்கவி எந்திரி..." குரலை கொஞ்சம் கடினப் படுத்தி, குரலை உயர்த்து... சங்கவி பதறி அடித்துக்கொண்டு பயத்தோடு எழுந்து நின்றாள்.

"இதை பிடி உன் புருஷனை எழுப்பி கொடு"

"இல்லை நான் கொடுக்க மாட்டேன் நீங்களே கொடுங்க" புடவை முந்தானையை கசக்கிக்கொண்டு நின்றவள் மேல் பறிதாபமாக இருந்தாலும் அதனை ஒதுக்கி வைத்த கமலா, கோபமாக முறைக்க,

"கடிச்சி கிடுச்சி வச்சிடாதிங்க, இதோ எடுத்து போறேன்" கமலா கையிலிருந்த சாப்பாட்டு தட்டை வாங்கிக்கொண்டு வேந்தன் அறைக்குள் நுழைந்துகொண்டாள்.

சங்கவி பயந்து ஓடுவதை பார்த்து கமலா சங்கவி தலை மறையும் வரை சிரிப்பை அடக்கி இருக்க, தலை மறைந்ததும் வாய்விட்டே சிரித்துவிட்டார்,

சங்கவி உள்ளே நுழைந்த நேரம், வேந்தனோ கனவில் தன் புது மனைவியோடு எதையோ ரகசியம் பேசிக்கொண்டு இருந்தான். தூரம் நின்றிருந்ததால் பெரியதாக எதுவும் கேட்கவில்லை சங்கவிக்கு. தட்டை டேபில் மேல் வைத்துவிட்டு அவன் அருகில் வந்து அமர்ந்து குனிந்து அவன் சினுங்குவதை கேட்கத் துவங்கினாள்.

"ஏய்... கிச்சிகிச்சி மூட்டாத டி" தலையணையை போட்டு இறுக்க அணைத்துக்கொண்டான்.

"புடவையில செம்மையா இருந்த தெரியுமா... நீ நடந்து வரும்போது அந்த இடுப்பு இருக்கே இடுப்பு... போதையை ஏத்துது, எப்படி எழுமிச்சை கலர்ல இருக்கு, மயக்குறியே டி அழகி" சங்கவிக்கு சம்பந்தமே இல்லாமல் கோபம் அதிகரித்தது. தாலி வாங்கியதும் தன்னவன் என மனதில் பதிந்தது போல பொறாமை மேலோங்கியது.

'எப்படி அக்காவை நினைக்கலாம் இவன், எவ்வளவு திமீர் இருந்தா எனக்கு தாலி கட்டிட்டு என் அக்காவ நினைச்சி இந்த தலையணையை கட்டி பிடிச்சி இருப்பான்' அவன் கையில் சிறைபட்டிருந்த தலையணையை பறித்து வீசியிருந்தாள் சங்கவி.

கோபத்தில் ஒன்றை யோசிக்க மறந்திருந்தாள் சங்கவி, அவள் அக்கா கலர் வேறு இவள் கலர் வேறு அவன் சொன்ன மஞ்சள் நிற இடுப்பு சரியாக சங்கவிக்கு தான் பொருந்தும். அவன் பேசியதை பொறுமையாக கேட்டிருந்தால் விடை தெரிந்திருக்கும். கோபத்தில் கவனிக்காது அவனையும் வதைத்து தானும் வருந்தி போகிறாள்.

"புடவையில் செமையா இருந்த ராட்சசி"

"இருக்கும் இருக்கும்... செமையா இருக்காலாமில்ல, இனி அக்காவ நினைக்கட்டும் இருக்கு இவனுக்கு'

"டேய் மனுசா எந்திரிடா"

"பொண்டாட்டி தூங்கவிடு டி" சங்கவியின் கழுத்தை போட்டு இழுத்து தன்னுடன் படுக்கவைத்துக் கொண்டான்.

"வேந்தன் விடுங்க..." அவள் திமிரல் எல்லாம் இந்த வலியவனிடம் எடுபடவில்லை, இன்னும் தன்னுள் புதைத்துக்கொண்டான்.

"என்ன அம்மு பேர் லா சொல்லி கூப்பிடுற புதுசா, உனக்கு பிடிச்சிருக்கா? பிடிச்சிருந்தா அப்படியே கூப்பிடு. ஆனா எனக்கு நீ அத்தான் கூப்பிடுறது தான் இனிக்குது"

"இனிக்கும் இனிக்கும்" அவனது மீசையை பிடித்து நன்கு வலிக்கும்படி பிடித்து இழுத்தாள்.

"ஆ... வலிக்குதே" வேந்தன் அலரிக்கொண்டு எந்திரிக்க.

"சங்கவி நீ என்ன இங்க படுத்திருக்க"

"ஆமா உன்மேல இருக்க ஆசையில வந்து படுத்திருக்கேன். கையை எடுடா முதல்ல சும்மா இருந்தவளை இழுத்து பிடிச்சிட்டு நான் படுத்தனாமில்ல"

"என்னாது டா வா!" வேந்தன் வாயை பிளக்க.

"ஆமா டா மடையா... அப்படி தான் டா கூப்பிடுவேன் இப்ப என்னா டா அதுக்கு"

"ங்..." என விழித்தான் அவள் வாயாடும் திறமையை கண்டு, வேந்தன் அவளது இதழையே வெறித்து பார்த்திருந்தான் அவள் சொன்ன போடா அவனை ஏதோ செய்தது.

"இங்க பாருங்க கொஞ்சம் கொஞ்சம் மறக்க பாருங்க அக்காவை"

'போசசிவ் எட்டி பாக்குதுடா என் பொண்டாட்டிக்கு' அவளது சிறு பொறாமையை இடுப்பில் கைவைத்து ரசித்து பார்க்க.

"என்ன பீளிங்கா? கொஞ்சம் ஓவரா இருக்கு, அவ வேற ஒருத்தங்க மனைவி நினைக்குறதே பாவம் புரிஞ்சதா" விரல் நீட்டி அறம்... நெறி கிளாஸ் எடுத்துக்கொண்டிருந்தாள் இந்த குட்டி பெண்.

'இவளுக்கு ரசிக்கிறதுக்கும் பீளிங்கும் வித்யாசம் தெரியாத மக்கா இருக்கா, ஆளு தான் வளரலைன்னா அறிவும் வளரலையே, மோசம் ரொம்ப குட்டியா இருக்கா. இவ எப்போ வளர்ந்து நான் இவளுக்கு என் காதலை புரியவச்சி, என் குழந்தையை ஸ்கூல்க்கு அனுப்பறதுக்குள்ள என் வாழ்க்கையில் பாதி முடிஞ்சிடும் போல, கடவுளே காப்பாத்துப்பா என்னை'

"போதும் தொடையை காட்டிட்டு போஸ் கொடுத்தது, இனி இந்த குட்டி ஜட்டி எல்லாம் என் முன்னாடி போடாதிங்க"

"எது ஜட்டியா!"

"ஏய் இது ஷார்ட்ஸ்"

"என்னா கருமமோ, எல்லாம் தெரியுது டிரஸ்சை மாத்துங்க. பொண்ணு முன்னாடி எப்படி டிரஸ் போடுறது கூட தெரியலை. சாப்பிடுங்க அங்க சாப்பாடு இருக்கு"

'பெருசா தானே இருக்கு' தன் உடையை ஆராய்ந்துக் கொண்டிருந்தான்.

"சரி இனி பெருசா போடுறேன்"

"அப்புறம் சட்டை போடாம திரியக் கூடாது"

"சரிங்க மேம், இன்னும் என்னென்ன இருக்கு லிஸ்ட் கொடுங்க மாத்திக்கிறேன்" வேந்தன் பணிவாக கேட்க.

"அது தோனும் போது சொல்லுறேன் நோட் போட்டு எழுதி வச்சிக்கோ..சரி சாப்பிடுங்க"

"நீ சாப்பிட்டியா?"

"இல்ல உங்க அம்மா ஒரு ப்ளேட் தான் தந்தாங்க"

"இரு நான் வேற வாங்கிட்டு வரேன்" தாயை தேடி சென்றான்.

"மா சாப்பாடு தட்டில் போட்டு கொடு மா"

"எதுக்குடா"

"சங்கவிக்கு மா"

"இனி இரண்டு பேருக்கும் ஒரே தட்டில் தான் சாப்பாடு"

"மா... அவ கோச்சிப்பாமா"

"ஏமா சங்கவி"

"அத்த" கொஞ்சம் வேகமாவே ஓடி வந்து நின்றவளை கண்டு சிரிப்பு தான் வந்தது இருவருக்கும்.

இருவரும் அடக்கி வாசிக்க, "இனி இரண்டு பேரும் ஒரே தட்டில் தான் சாப்பிடனும்"

"சரி அத்த" ஒரே வார்த்தைதான் மந்திரத்துக்கு கட்டுபட்டவள் போல நடந்து வேகமாக அறையில் புகுந்துகொண்டாள்.

"மா எப்படிமா? சமாளிச்ச என்னை வறுத்து எடுத்துட்டா"

"அதுவா... கொஞ்சம் மிரட்டி வச்சிட்டேன் டா"

"என்ன சொல்லி மிரட்டுனிங்க?"

"பெருசா ஒன்னுமில்லை அம்மாவை பார்க்க விடமாட்டேன்னு சொன்னேன் சரியா, பயந்துட்டா"

"பாவம் மா என் பொண்டாட்டி"

"ஆமா அவளை அவ போக்கில் விட்டா நம்ம தான் பாவம்"

"அதும் சரிதான், ஆனா அவளை ரொம்ப மிரட்டாதே மா"

"அது எல்லாம் எனக்கு தெரியும் நீ போ சாப்பிட்டு தூங்கவை பாவம் ரொம்ப அலைச்சல் அவளுக்கு"

"மா உன் கூட படுக்க வச்சிக்கோ மா படிப்பு முடிக்கும் வரை"

"டேய் புரியாம பேசாத, தனித்தனியா இருந்தா உன் லவ் எப்படி அவளுக்கு புரிய வைப்ப சொல்லு?"

"ஆமால்ல, செம லவ் ஐடியா கொடுக்குற மம்மி நீ"

"டேய் அம்மா அந்த காலத்திலையே லவ் மேரேஜ் செஞ்சவடா"

"ஆமால்ல மறந்தே போயிட்டேன்"

"மறப்ப மறப்ப போ... அவளை சாப்பிட வை முதல்ல, நீ அப்புறம் சாப்பிடு புரியுதா சரி மா"

"அவ கிட்ட போய் இன்னும் சமாளிக்கனுமா, மா முடிலைமா"

"இதுக்கே எப்படி டா இன்னும் அவ காலேஜ் முடிக்கிற வரை அனுபவிக்கனும் டா நீ"

"ஏமா நீ வேற... ஏன் திரும்ப அதை நியாபகப் படுத்திட்டு இருக்க"

வேந்தன் சளித்துக்கொண்டு போனாலும் அவனுக்கும் இந்த குட்டி ராட்சசியை சமாளிக்க பிடித்துதான் இருந்தது.

***

கோபமாக வெளியே சென்ற ராஜா மீண்டும் வீட்டுக்குள் அதை விட பல மடங்கு கோபத்தோடு நுழைந்தான்.

மகனின் கோபம் பதிந்த முகத்தை பார்த்த பவளமோ மகனிடம் விசாரிப்பதற்க்குள் அவன் படிக்கட்டில் ஏறத் தொடங்கி இருந்தான், பின் வந்த ரங்கனை பார்த்து, "மாமா என்னாச்சி ராஜா கோபமா போறான்"

"அது... அவசர கல்யாணத்தைபத்தி தான், எவனோ தம்பியை காதுபட தப்பா பேசி இருப்பான் போல, கோபத்துல அடி வெளுத்துட்டான்"

"தம்பிக்கு எதுமில்லையில்லங்க"

"அவனுக்கு எதுமில்லை அந்த பையனுக்கு தான் கை உடஞ்சிடுச்சி ஹாஸ்பிட்டல்ல சேர்த்து பில் கட்டிட்டு வந்து இருக்கோம்"

"எதுக்குதான் இவனுக்கு இப்படி கோபம் வருதோ எல்லாம் அந்த பொண்ணு வந்த நேரம் சரியில்லை" பவளம் மருமகளை குறை சொல்ல.

"நீ என்ன சம்பந்தமில்லாம அந்த பெண்ணை இழுக்குற, உன் பையன் பேரிலும் தப்பு இருக்கு. காதலிப்பானாம் அப்புறம் ஆசை வளர்த்துட்டு விட்டு வந்தா சும்மா இருப்பாங்களா? உன் பொண்ணுக்கு அந்த நிலையை ஏற்பட்டா இப்படி தான் பேசுவியா பவளம்" ரங்கன் மனைவியிடம் சண்டைக்கு நிற்க.

"அப்படி இல்ல மாமா எதோ கோபத்துல..."

"இனி இப்படி பேசாத பவளம், அந்த பொண்ணு நம்மை நம்பி வந்து இருக்கு நீதான் பாத்துக்கனும்"

"சரிங்க" பவளம் நாளா புறமும் கணவனுத்கு பயந்து தலையாட்ட.

"அது" ரங்கன் வெளியே சென்றதும் தான் பவளத்துக்கு மூச்சே வந்தது.

"என்னைக்கும் அதட்டி பேசாதவர் இப்படி பேசிட்டு போறார். எல்லாம் இவளாலை" கணவன் திட்டியதற்க்கும் சேர்த்து குழலியை திட்டிக்கொண்டிருந்தாள் பவளம்.

ராஜா கோபமாக வந்ததும் மண்படிந்த சட்டையை கழற்றி வீசிவிட்டு மெத்தையில் சரிந்தான்.

"அச்சோ மாமூ என்னாச்சி" அவனது தோளில் கைவைக்க, தட்டிவிட்டவன் ருத்ரமூர்த்தியாக மாறி இருந்தான்

"எல்லாம் உன்னால தான், என் நிம்மதியை கெடுக்கவே வந்திருக்க டி நீ"

"நா... நான் என்ன செஞ்சேன்!" அதிர்ந்து நின்றவளின் வதனம் ராஜாவை ஏதோ செய்தது போல.

கதை எப்படி போகுது அழகிஸ்😍😍😍

 

T22

Well-known member
Wonderland writer
12 சிவப்பழகியே...

"ப்ளீஸ் இப்படி கண் முன்னாடி வந்து நிற்காத குழலி" அவனது கோபத்தை பொறுத்துக்கொண்ட குழலியால் அவனது சோர்வான குரலை ஏற்க முடியாமல் அந்த அறையை விட்டு அருகில் இருந்த பால்கனிக்குள் தன்னை மறைத்துக்கொண்டாள். தென்றல் காற்று முகத்தில் அடிக்க சற்று முன் இருந்த கலக்கம் மறைந்திருந்தது.

ஊஞ்சலில் வைத்திருந்த பேகிலிருந்து மெசேஜ் டோன் கேட்டது, மனதில் ஒரு உற்ச்சாகம் பிறத்தது, வேக எட்டுக்கள் வைத்து வந்து காணாத பொக்கிஷத்தை கண்டது போல எடுத்துக்கொண்டாள்.

"அம்மா மெசேஜ் செய்து இருப்பாங்களா? இல்லை சங்கவியா?" யோசனையில் போனை எடுக்க.

இருவருமே மெசேஜ் செய்திருக்கவில்லை, இன்னும் இரண்டு தினங்களில் பேலன்ஸ் காலாவதியாக உள்ளது அறிவுப்பே செய்தி அது, மெசேஜை பார்த்து இன்னும் சோர்ந்து போனாள். "மா எப்ப மா கோபம் குறையும் நானா கேட்டேன்? இங்க கூட்டிவந்து விடுங்கன்னு, கடைசி வரை உங்க கூட இருக்க தான்மா இந்த முடிவு எடுத்தேன் வேண்டாம் சொல்லுறவன் கூட இப்படி வந்து வாழ நினைக்கலைமா, எல்லாம் இந்த சங்கவி செஞ்ச வேலை ச்சை" தங்கையை திட்டவும் மறக்கவில்லை குழலி.

இங்கு வந்த அடுத்த நாளில் இருந்து மணிக்கு இரண்டு மெசேஜ் செய்து குழலி ஓய்ந்து இருந்தாள்.

"சாரி சாரி என வாய்ஸ் மெசேஜ் போட்டு அவளது குரல் மாறியது தான் மிச்சம், போன் செய்து பேச நினைத்தால் அது சென்றால் தானே ராகவி விவரமாக குழலி போன் நெம்பருக்கு தடா போட்டு இருந்தார்.

ராகவி மெசேஜை பார்த்த போதும் மகளிடம் பேசவில்லை, கோபம் முன்பை விட குறைந்து இருக்கிறதுதான்... ஆனால் அவளை கை அறுபட்ட நிலையில் பார்த்ததிலிருந்து ஏனோ குழலியோடு இனக்கமாக பேச முடியவில்லை.

ராகவி மனதில், 'இப்படி ஒரு கோழையாக வளர்த்துவிட்டேனே' மனம் கிடந்து தவித்தது.

ராகவிக்கு குழலி திருமணத்தை நிறுத்தியது எல்லாம் பெரிய கோபமில்லை. நேரடியாக சொல்லி இருந்தால் எதாவது செய்து திருமணத்தை நிறுத்தி இருப்பார். திருமணத்தை நிறுத்த அவள் செய்ல காரியத்தை ராகவியால் ஏற்க முடியவில்லை. அதற்க்கும் மேலாக அன்று எதாவது ஆகி இருந்தால் என்ன ஆவது, அந்த கோபம் தான் ராகவி மகளிடம் பேச தடையாக இருந்தது.

"சாரி மா... மன்னிச்சிடு மா ப்ளீஸ், தனியா இருக்க போல இருக்குமா" பார்த்தும் பதில் ஏதும் வராததை கண்டு சோர்வாக போனை பேகில் வைத்துவிட்டு தன்னவனை பார்க்க, அவனே சீரான மூச்சி விட்டு தூங்கிக் கொண்டிருந்தான்.

ஊஞ்சலில் சாய்ந்து படுத்திருந்த போது தான் மூலையில் போட்டுவைத்திருந்த அழுக்கு துணி கண்ணில் பட.

"அச்சோ... அழுக்கு துணி வேற சேர்ந்திடுச்சே நாளைக்கு போட்டுக்க கூட துணி இல்லையே, முதல்ல டிரஸ் துவைக்கனும்" அழுக்கு துணியை அள்ளிக்கொண்டு மெதுவாக கதவை திறந்தாள் அவனுக்கு தொந்தரவு கொடுக்காமல் கதவை மெல்ல அடைத்துவிட்டு வாசிங் மெசினை தேடிப்பிடித்து துணியை ஊரவைக்க பவுடர் தேட.

"ஏய் நீ இங்கே என்ன செஞ்சிட்டு இருக்க"

"அத்த துணி துவைக்கனும் பவுடர்"

"முதல்ல அத்த கூப்பிடுறதை நிறுத்து... எனக்கு நாராசமா இருக்கு, அது எல்லாமில்ல, இங்கே துணி எல்லாம் துவைக்க கூடாது"

'சப்பா... என்ன இது வித்யாசமான குடும்பமா இருக்கு, நீ செய்யுறது எல்லாம் லாபம் தான் உனக்கு, திரும்ப திருப்பி கொடுக்காம போகமாட்டேன்'

"அப்ப துணி எப்படி துவைக்கிறதாம்?" குழலிக்கு சலிப்பாக இருந்தது.

"பின்னாடி தோட்டத்துல தொட்டி இருக்கும் அங்க துவச்சிக்கோ"

"ம்ம்... பவுடர்?"

"அங்க இருக்கு எடுத்துக்கோ, ஓசில இருக்குன்னு தாராளமா செலவு செஞ்சிடாத" பவளம் சொன்னது இதயத்தில் முள் தெய்த்தது.

அன்னை துணி துவைக்கும் போது தங்கையுடன் சோப்பு நுரையால் விளையாடியது நினைவுக்கு வந்தது. இந்த காதல் கத்திரிக்காய் எதுவும் இல்லாமல்... அந்த அழகிய நாட்களுக்கு டைம் ட்ராவல் செய்து சென்றுவிட மாட்டோமா என மனம் ஏங்கியது.

'ஏன் விக்கி சும்மா இருந்தவளை சீண்டிவிட்டு என் வாழ்க்கையை கெடுத்துட்ட இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகனும் டா. என் அம்மா எவ்வளவு ஆசையா கல்யாண ஏற்பாடு செஞ்சாங்க தெரியுமா? நிம்மதியா பொண்ணு கல்யாணம் கூட பார்க்க முடியாதபடி செஞ்சிட்டியே.

அந்த காதல் ஜெயிக்காவிட்டாலும் இந்த திருமணத்தை தோற்க்கவிடமாட்டேன் விக்கி. ஒரு மாசம் லீவா போடுற என்னை துரத்தி அடிக்க. இந்த மறைமுகமான சேலஞ்ச்க்கு நான் ரெடி. இந்த ராஜா முகத்திறையை கிழிக்காம விடமாட்டேன்.அந்த விக்கி எனக்கு வேணும்' பலவற்றை யோசித்துக்கொண்டே கையில் அழுக்கு துணியை பக்கெட்டில் போட்டுக்கொண்டு வெளியே வர,

குழலி வருவதை பார்த்து காளை பெரிய சைஸ் மான் போல துள்ளி குதித்தது. துணியை ஒரு ஓரம் வைத்துவிட்டு அவனிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தாள்.

"டேய் உனக்காவது தெரியுமா? அவன் எதுக்கு மூஞ்சில மாஸ்க் போட்டு இருக்கான்னு?"

அவள் பேசுவதை புரிந்துகொண்ட காளை, "தெரியும்" என்பது போல தலையை ஆட்ட.

"தெரியும் சொல்றியா தெரியாது சொல்லுறியா? உன் பாஷை எனக்கு ஒன்னும் புரியலைடா, சரி நான் துணி துவச்சிட்டுவரேன். தண்ணீ எங்கே வரும்" காளை திசையை தலையாட்டி காட்ட.

"பாருடா தங்கத்துக்கு பேசுரது எல்லாம் புரியுது" காளையின் நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு.

"என் நிலமையை பாத்தியா... உனக்கு தான் முத்தம் கொடுக்க முடியுது. அவனுக்கு இருக்கு ஒரு நாள் நீயும் நானும் துரத்தி துரத்தி அடிக்கலாம் சரியா?"

"காளை தலையாட்டி சம்மதம் சொல்ல"

"சமத்து பாப்பா... நான் போயிட்டுவரேன்டா, அப்புறமா நிதானமா பேசலாம்" மாடியில் கம்பியில் கையை வைத்ததைப் பார்த்ததில் இருந்து ராஜாவின் கைகள் இறுகியது.

"மாயக்காரி.."அவள் செல்லும் திசையை பார்த்து முணுமுணுத்தான்.

துணியை தூக்கிக்கொண்டு தொட்டி பக்கத்தில் வந்ததும் ஒரு குரல் பின் இருந்து வந்தது, "நீ தான் வீட்டுக்கு வந்திருக்குற புது மருமகளா மா?"

"ஆமா நீங்க?" பார்க்க பவளம் போலவே முக ஜாடை இருக்க.

"நான் ராஜா ஓட சித்தி"

"நிஜமாவா?"

"ஏன் மா ஆச்சரியமா கேட்கிற?"

"அவங்க ரொம்ப டெரர், ஆனா நீங்க சாப்ட்டா பேசுறீங்களே" சொல்லி முடித்ததும் தான் குழலி மண்டைக்கு உறைத்தது, தனது நாக்கை கடித்துக்கொண்டாள்.

"அவ என்னைவிட சாப்ட் மா இப்ப தான் மாறிட்டா"

"ஓ..."

"இங்கே என்னமா செய்யுற?"

"துணி துவைக்கிறங்க"

"என்ன ங்க எல்லாம் போட்டு பேசுற? அத்தை கூப்பிடுமா உரிமையா"

"நிஜமா வா கூப்பிடவா" குதூகலமாக பேசியவளைக் கண்டு எதிரே இருந்த சந்திரா குழப்பமாக பார்க்க.

"என்னாச்சி இப்படி பார்க்குறீங்க?"

"ஏன் இவ்வளவு எக்சைட்மென்ட் ஆகுற?"

"எனக்கு அத்தையே இல்லை, அத்தை கூப்பிட பிடிக்கும் உங்க அக்காவை கூப்பிட்டேன் அவங்க திட்டிட்டாங்க. இப்ப கூப்பிட ஆள் கிடச்சதும் சந்தோஷமாகிட்டேன்"

"அக்காக்கு பொண்ணுங்களை எல்லாம் அப்படி திட்டமாட்டாங்களே... ரொம்ப கோபமா இருக்கா போல"

"பாருடா உங்க அக்காவை சொன்னதுக்கு நம்பலை பாத்திங்களா?"

"நம்புறேன் மா... அவளுக்கு பையன்னா உசுரு இந்த பிரச்சனை வந்ததும் உன் மேல கோபம் போல"

"ஓ... ஆனாலும் உங்க அக்கா சரியான அக்மார்க் மாமியார், சோறு கூட போடமாட்டாங்க. இப்ப கூட பாரு துணி என்னை மிசின்ல கூட போட விடலை" குழலியை பார்க்க சந்திராவுக்கு பரிதாபமாக இருந்தது.

"அச்சோ... கொடு நான் துவைத்து கொடுக்கிறேன்" சந்திராவுக்கே குழலியை பார்க்க பாவமாக இருந்தது.

"அட இல்லை அத்த பரவாயில்ல" குழலி பவுடர் போட்டு ஊரவைத்துவிட்டு அந்த ஓட்டுவீட்டின் முன் இருந்த இடத்தில் அமர்ந்துகொண்டாள்.

"சாப்பிடுறீயா? தக்காளி சாதம் செஞ்சி இருக்கேன்"

"இதை எல்லாம் கேட்க கூடாது அத்த கொண்டுவாங்க செம பசி" வயிற்றை தடவினாள். தூரமிருந்து ராஜா கோபமாக குழலியை பார்த்துக்கொண்டிருந்தான்,

"இவளுக்கு அறிவே இல்லை. எதுக்கு அங்க போயிருக்கா"

குழலி சாப்பிட்டு முடிக்கும் போது வந்த ராஜா அவளது கையிலிருந்த தட்டை தட்டிவிட்டான், "ஏய் உனக்கு அறிவு இருக்கா டி, எதுக்கு இவங்ககிட்ட சாப்பாடு வாங்கி சாப்பிடுற"

"ராஜா இது எல்லாம் சரி இல்லை, எதுக்கு சாப்பாட்டை தட்டிவிட்ட, எவ்வளவு வேஸ்டா ஆகிடுச்சி பாரு" கையில் மீதி சாப்பாட்டை வைத்துக்கொண்டு நின்றிருந்தாள்.

"அதிகம் பேசாத டி, வீட்டுக்கு வா"

"நான் வரலை அத்தைக்கிட்டவே இருக்கேன்"

"யாரு டி அத்தை வாயை ஒடச்சிடுவேன். இனி ஒரு முறை சொன்னா"

"அப்படி தான் சொல்லுவேன் போடா" அவனது கையை தட்டிவிட்டவள், தட்டிலிருந்த சாப்பாட்டை எடுத்து வாயில் தினித்தாள்.

"ஏய் துப்பு டி" வாயிலிருந்த சாப்பாட்டை வாயில் கையை விட்டு எடுக்காத குறையாக துப்ப வைத்தான்.

"ராஜா என்ன செய்யுற விடு பா"

"நீங்க பேசாதீங்க..." ராஜா அழைத்தது மனதை வாட்டிவிட்டது சந்திராவுக்கு.

"ராஜா அவங்களுங்கு மரியாதை கொடு" குழலிக்கு ராஜாவின் செயல் வெறுப்பை வரவைத்தது.

"முடியாது... என்னாடி செய்வ, இனி இங்க வந்து பாரு காலு உடைச்சி மூலையில் போட்டுடுறேன்"

"உடச்சி போட்டுறதுக்கு பதிலா என்னை கொண்ணுடுடா... சாப்பாடு உங்க வீட்டில் போட மாட்டிங்க. இவங்க தான் பாசமா போட்டாங்க அதும் பொறுக்கலை உனக்கு. நான் பசியில் சாகனும் அதுதானே உனக்கும் உன் அம்மா அக்காக்கு வேணும்" இழுத்து சென்றவனின் கையை உதறிவிட்டாள்.

"ஏன் விக்கி... ராஜா இப்படி செய்யுற, நான் சாகனும் நினைக்கிறியா? நான் சாப்பிட்டு இரண்டு வேலையாச்சி தெரியுமா" கண்ணில் குளம் கட்ட. அதனை உள்ளிலுக்க போராடி அதில் வெற்றியும் கண்டாள். ஆனால் சோகத்தை அவ்வளவு எளிதில் முகத்தில் இருந்து துடைத்தெறிய அவளால் முடியவில்லை.

அவளது வேதனையை பார்த்து பொறுக்க முடியாதவன் இழுத்து அணைத்துக்கொண்டான்.

"ராஜா பப்ளிக் விடு"

"இங்கே யாருமில்லை டி பொண்டாட்டி" அப்போது தான் மலர்கொடி புருஷனோடு இரண்டு தினங்கள் எஞ்சாய் செய்துவிட்டு வந்திருந்தாள்.

இந்த காட்சியை கண்டதும் சுதாகர் ஸ்தப்பித்து நின்றான், மலர்கொடி வயிறு பத்தி எறிந்தது.

"கொடி என்ன இது எல்லாம்"

"அதுவந்துங்க... அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு..." தயக்கத்தோடு சொல்ல சுதாகர் எரித்துவிடுவது போல பார்த்தான்.

"எது கல்யாணமா?" அன்று நடந்ததை அனைத்தும் சொல்லி முடித்தவளின் மீது அதிருப்தி ஏற்பட்டது சுதாகருக்கு.

'ஏன் கொடி நீ இப்படி இருக்க? எவ்வளவு பெரிய விஷயம் நடந்து இருக்கு என்கிட்ட ஏன் சொல்லலை. நான் அவ்வளவு வேண்டாதவனா உனக்கு, உனக்காக நீ கஷ்டப்படக் கூடாதுன்னு தானே நான் இவ்வளவு செஞ்சேன்'

"ராஜா..." கொடியின் குரல் கேட்டு இருவரும் பிரிந்து நின்றார்கள். ராஜா தலையை கோதிக்கொண்டே கொடி அருகில் வந்தான் குழலி கையை பிடித்துக்கொண்டு.

"கையை எடு ராஜா"

"முடியாது டி"

"இடியட் இனி பக்கம் வராதே கடிச்சி வச்சிடுவேன்"

"என்னை என் பொண்டாட்டி கடிக்காம யார் கடிப்பா" மயக்கும் குரலில் சொன்ன ராஜாவை விசித்திரமாக பார்த்தாள் குழலி.

"என்ன புதுசா நடந்துக்குது எல்லாம்... முதல்ல விடுங்க"

"இனி அப்படி தான் டி ராட்சசி"

"அட வாங்க மாமா, டிரிப் எப்படி போச்சி" சுதாகர் ராஜாவிடம் எதும் பேசாமல் தூங்கிக்கொண்டிருக்கும் மகளை தூக்கிக்கொண்டு ஹாலில் போய் உட்கார.

"மாமா... என்னாச்சி கொடி எதாவது சண்டை போட்டாளா?"

"எதுக்கு கல்யாணம் விஷயம் என்கிட்ட சொல்லலை?" சுதாகர் நேரடியாக விஷயத்துக்கு வர.

"மலர் கொடி சொல்லிட்டான்னு நினைச்சேன் மாமா... சொல்லலையா சாரி மாமா"

"அவளுக்கு என்ட சொல்ல இதுவரை எதும் இருந்ததில்லை, இதை மட்டும் சொல்லவா போறா"

"சுதாகர்" கொடி கணவனின் பேச்சில் அதிர்ந்து கத்திவிட,

"இனி பேர் சொல்லி கூப்பிடாத மலர்கொடி"

"என்னங்க இது... இது எல்லாம் ஒரு விஷயமா? விடுங்க" சமாதானப் படுத்த அவன் கையை பிடிக்க, சுதாகர் லாவகமாக கையை அவளிடமிருந்து மீட்டுக்கொண்டான்.

"ஓ... உன் தம்பி கல்யாணம் ஒரு விஷயம் இல்லையா உனக்கு"

"அது அப்படி இல்லைங்க"

"எது எப்படி இல்லை, உனக்கு உன் சுதந்திரம் உன் சந்தோஷம் தானே முக்கியம் எப்பவும் என்னைபத்தியே நினைச்சதில்லை இதுல..." பேச வந்ததை சுதாகர் பாதியிலையே விழுங்கிக்கொண்டான் பிரச்சனை வேண்டாமென.

"மாமா சாரி அது அவசரத்துல எதோ நடந்திடுச்சி" இருவரும் சண்டை போடுவதை தடுக்க ராஜா இடையில் புகுந்துகொள்ள.

"எங்க இரண்டு பேருக்கு நடுவில் நீ வராத ராஜா" சுதாகர் முதல்முறையாக முகத்தில் அடித்தார் போல பேசிவிட்டான்.

கதை பற்றி சொல்லுங்க அழகிஸ்😍😍😍

 

T22

Well-known member
Wonderland writer
13 சிவப்பழகியே...

சத்தம் கேட்டு வெளியே ஓடிவந்த பவளம்... மாப்பிள்ளையை சமாதானப் படுத்த துவங்கி இருந்தார்.

"மாப்பிள்ள கோபப்படாதிங்க எங்க தப்புதான், கோபப்படாதிங்க .. இனி இப்படி நடக்காம பாத்துக்கறோம்"

"வேணா அத்தை எதாவது பேசிட போறேன்" இவர்கள் போட்ட சத்தத்தில் குழந்தை தன் செவ்விதலை பிதுக்கி அழுக துவங்க.

"பா..." தியாகு கழுத்தை பயத்தோடு கட்டிக்கொள்ள. தியாகு கோபம் எல்லாம் அந்த நொடி நிறுத்திவிட்டு மகளை தூக்கி சற்று தொலைவில் சென்று சமாதானம் செய்தான்.

வெளியே பதற்றமாக நின்றிருந்த குழலியை பார்த்த தியாகு மெல்லிய புன்னகை வீச.
குழலி முகத்தில் சிறிது கலக்கம் குறைந்தது, "உன் பேர் என்ன மா"

"குழலி அண்ணா"

"என்ன செஞ்சிட்டு இருக்க? வேலைக்கு போறியா"

"போயிட்டு இருந்தேன் இப்ப நின்னுட்டேன்"

"திருமண வாழ்த்துக்கள் மா" கணவன் தன்னிடம் பொறிந்து தள்ளிவிட்டு குழலியிடம் பேசுவது இந்த விஷ கொடிக்கு சிறிதும் பிடிக்கவில்லை.

"ஏன்டி உன்ட அன்னைக்கே சொல்ல சொன்னேனில்ல"

"மா நாங்களே எப்பவாவது தான் வெளியே போறோம் மூட் ஸ்பாயில் செய்ய வேண்டாம்ன்னு சொல்லலை மா"

"போ... போய் மாப்பிள்ளையை சமாதானப் படுத்தி சாப்பிட கூட்டிட்டு வா"

"சரி மா..." கொடி குழலியை முறைத்துக்கொண்டே தியாகு பக்கம் போய் நின்றாள்.

"தியாகு... சாரி"

"பேர் சொல்லி கூப்பிடாதன்னு சொன்னேன்"

"சரி சரி இனி கூப்பிடலை போதுமா"

"சாரி இனி இப்படி செய்ய மாட்டேன் மாமா"

"ம்ம்"

"சரி கொஞ்சம் சிரிங்களேன்" இப்படி மனைவி வந்து பாவமாக முகத்தை வைத்து கொஞ்சினாள் எந்த கணவனுக்கு தான் மனம் இறங்காது.

"சரி தாஜா செஞ்சது போதும் போ... சாப்பாடு எடுத்துவை" மனைவியை அனுப்பிவிட்டு மகளை கையிலேந்தி சாப்பாடு சாப்பிட உட்கார. சண்டையிட மனம் துடித்தாலும் அம்மாக்கு செய்துகொடுத்த சத்தியம் தடுத்து, அவனது மனமே, 'ஏன் மா என்னை இந்த நிலைக்கு தள்ளிட்ட'

வெளியே சென்றிருந்த ரங்கராஜனும் சாப்பிடும் நேரத்துக்கு வந்து சேர்ந்தார்.

வெளியே வரும் போது மருமகளை பார்த்து, "ஏன் மா வெளியே நின்னு இருக்க உள்ளே வா சாப்பிடலாம்..."

"நீங்க சாப்பிடுங்க மாமா, நான் வரேன்" வானத்தை வெறித்து பார்த்து இருந்தவளின் பின் வந்து நின்றான் ராஜா.

"மாமாக்கிட்ட எப்படி விஷயம் சொல்ல'ன்னு தெரியலை அதுக்கு தான் ஹக் செஞ்சேன், மனசுல பெரிய கோட்டை கட்டிக்காத புரியுதா"

'அடப்பாவி என்னாமா சமாளிக்கிறான், பச்ச குழந்தை கூட இதை நம்பாது, நீ எவ்வளவு தூரம் போரன்னு நானும் பார்க்கிறேன்'

"தெரியும் மிஸ்டர் ராஜா, இங்க வந்து விம் போட்டு விளக்க தேவையில்லை... கிளம்புங்க" ராஜாவை கடந்து உள்ளே நுழைய.

"கிளம்பு வெளியே போலாம்"

"என்ன திடீர்ன்னு?"

"உனக்கு தேவையான திங்க்ஸ் வாங்கனுமில்ல"

"என்கிட்ட இருக்குறதே போதும்"

"ஹலோ உனக்கு தேவையானதில்லை, சமைக்க தேவையானது வாங்க போறதா சொன்னேன்"

"தேவையில்லை தனியா எல்லாம் என்னால சமைக்க முடியாது"

"வான்னு சொன்னேன் குழலி கோபப்பட வைக்காத"

"இல்ல என்னால தனியா சமைக்க முடியாது" ராஜா சொல்வது எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல நடந்தவள் திரும்ப வந்து.

"இப்ப போய் நான் அங்க உட்கார்ந்து சாப்பிட போறேன் முடிஞ்சா... தடுத்து பாரு" வேக எட்டுக்களோடு அனைவரும் உள்ளே சாப்பிடும் இடத்துக்கு போக.

அவர்களை குழலி நெருங்கும் முன் ராஜாவின் கரங்கள் குழலியின் மணிக்கட்டை பிடித்து தடுத்து இருந்தான்.

"குடும்பத்துல கலவரம் ஆக்காத குழலி... சொன்னா கேளு"

"ஏன் ராஜா சாப்பிடுறதுல கூட கலவரம் வருமா? சூப்பர் குடும்பம், ஏன் சோறுக்கு பஞ்சமா என்ன" குழலி நக்கலாக கேட்க.

"குழலி அதிகம் பேசாத ரூம்க்கு போ"

"இப்ப என் சோறு சாப்பிட கூடாது பட்டினியா சாகனும்ல உனக்கு சரி அப்படியே ஆகட்டும், விடு நான் போறேன்"

படிக்கட்டில் ஏற இருந்தவளை பார்த்த தியாகு, "வா மா சாப்பிடுவ"

"இல்ல ணா அப்புறம் சாப்பிடுறேன்" மொட்டை மாடி ஓரத்தில் அமர்ந்துகொண்டாள் ச்சே என்ன என் வாழ்க்கை இப்படி போது.

"ஒரு நாள் நிம்மதியா இருந்தேன் அந்த விஷ கொடி இல்லாம இப்ப வந்ததும் ஆரம்பிச்சிட்டா" தலையை சுவற்றில் சாய்த்து அமர்ந்தவளுக்கு கோபம் திகுதிகுவென பத்தி எறிந்தது.

போனை எடுத்து அன்னைக்கு அழைக்க ராகவி எடுக்கவில்லை.

"நானாமா கூட்டி வந்து விட சொன்னேன், உன் பொண்ணு வாழ்க்கை கெட கூடாதுன்னு கூட்டிவந்து விட்டுட்டு போயிட்டு இப்ப என் மேல கோபமா இருக்கியா நீ. இதுநாள் வரை ஒருநாளும் அம்மா அப்பா இல்லைன்னு வருந்த்தபடலை இன்னைக்கு வருந்துறேன். இனி எனக்கு யாருமில்லை அனாதை தானே நான்" ராகவிக்கு மெசேஜ் தட்டிவிட்டுவிட்டு. போனை சுவற்றில் விட்டெறிந்தாள்.

கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை. பசி ஒருபக்கம், "ச்சே... செத்தாலும் இவங்க காசுல உட்கார்ந்து சாப்பிட கூடாது" அந்த இடத்திலேயே கடைக்கண்ணில் கண்ணீர் வழிய படுத்துக்கொண்டாள்.

சிறிது நேரத்தில் மேலே வந்த ராஜாவுக்கு பாவமாக இருந்தது குழலியை நினைத்தால், இருந்தும் ஏதோ ஒன்று அவளை நெருங்கவிடாமல் தடுத்தது.

"குழலி எந்திரி சாப்பிடு"

"எனக்குவேணா..." திரும்பி படுத்துக்கொண்டாள் கோபமாக. நேத்து வாயில் போட்ட சாப்பாடை துப்ப வைத்தான், இப்ப வந்துட்டான். நாளைக்கு முதல் வேலையா அந்த அத்தையை கூட்டிட்டு கடை எங்க இருக்குன்னு பார்க்கனும்"

கோபம் சிறிதும் மட்டுபடவில்லை, தென்றல் காற்று அவளை தாளாட்டி தூங்க வைத்திருந்தது.

விடிந்து பார்த்தால் மெத்தையில் படுத்திருந்தாள், "நான் எப்படி இங்கே வந்தேன். அவன் தூக்கி வந்து இருப்பானா? கிழிச்சி இருப்பான்" தயாராக பேகை பார்க்கும் போது தான் தெரிந்தது நேற்று துணியை ஊரவச்சிட்டு அங்கவே விட்டது.

"ஐயோ ஊரே நாரி போயிருக்குமா" கிழே இறங்கி வரும் போது சுதாகர் குழலிக்காக காத்திருந்தான்.

"வா மா உனக்காக தான் காத்திருக்கேன்"

"எனக்காகவா? எதுக்கு"

"நான் கிளம்பறேன் அதான் சொல்லிட்டு போக"

"பாத்து பத்திரமா போயிட்டு வாங்க, ஆனா நீங்க கிரேட் அண்ணா குழந்தையை பிரிச்சி எப்படி தான் இருக்க முடியுதோ" சாதாரணமாக சொல்வது போல தியாகு மனதை தாக்கவேண்டுமெனதான் சொல்லி சொன்றாள்.

ஆம் தியாகு தவிக்காத நாளில்லை, அன்னைக்காக ஒரு புறம் குழந்தைக்காக ஒரு புறம் தவித்துக்கொண்டு இருந்தான்.

அம்மாவிடம் தான் போர் அடிக்கும் என்றால் தன்னுடன் இருக்க அழைத்தபோதும் சமத்தாக வந்தாள் இரண்டு நாள் கூட தாக்குப்பிடிக்கவில்லை அம்மா வீட்டுக்கு வந்து உட்கார்ந்துகொண்டாள்.

பேசி பிரச்சனையை தவிர்க்க நினைத்து தியாகு நிறைய தியாகம் செய்திருந்தான். தனியாக அம்மாவை சென்று பார்த்து ஒருநாள் தங்கிவிட்டு தான் வருவான். அவருக்கு ஏக்கம் தான், பேத்தியை தூக்கிக்கொண்டு ஊரெல்லாம் சுற்றி வந்து "இவள் என் பேத்தி என அனைவருக்கும் அறிமுகப்படுத்திவைக்க ஆசை", ஆனால் அவளும் வரமாட்டாள் மகளையும் கொடுக்கமாட்டாள் மலர்கொடி.

வற்புறுத்தி ஒருநாள் மனைவி மகளை தன் வீட்டிற்க்கு அழைத்து சென்ற போது, குட்டி நல்லா சாந்தமாக பாட்டியிடம் ஒட்டிக்கொண்டாள். தியாகு நண்பனை பார்க்க வெளியே சென்றிருந்த நேரம் பார்த்து உப்பு சப்பு இல்லாத ஒரு விஷயத்துக்கு சண்டையிட்டு அந்த தாயின் மனதை புண்படுத்தி இருந்தாள்.

அந்த தெய்வதாயே மகனிடம் ஒன்றும் சொல்லாமல் அமைதியாகிவிட்டார்.

இருவரும் கிளம்பும் போது, "தியாகு... இனி இவங்களை அழைச்சிட்டு வராதேபா என்னால முடியலை" கண்ணீர் மல்க பேசும் தாயை பார்த்து இதையத்தில் கத்தி இறங்கியது போல வலித்தது.

"என்னாச்சிமா..." பதறிப்போய் தியாகு தாய் மூன் வருவதற்க்குள்.

"அங்கவே நில்லு பக்கம் வராதே... போ நீ‍, வந்தா நீ மட்டும் வா" கதவை அடைத்துக்கொண்டார் அந்த சாந்தமான தாய். குழலி சொன்னது கடைசியாக நடந்த நிகழ்வுகள் எல்லாம் ஒன்று சேர தியாகு முகம் மாறி இருந்தது,

ஒரு பெருமூச்சோடு மகளை பார்த்த சுதாகர் மலர்கொடியிடம் கிளம்புவதை சொல்லாமலையே கிளம்பியாகிற்று.

தியாகு கைபிடியில் இருந்து நழுவுவது வெளிப்படையாகவே தெரிந்தது மலர்கொடிக்கு. சும்மா இருந்தவரின் மனதை கெடுத்து சென்ற கொடி மீது கோபம் மூன்டது. தியாகு ரங்கன் இருவரும் கிளம்பும் வரை பொறுமையாக இருந்த கொடி தனது ஆட்டத்தை ஆரம்பித்திருந்தாள் இது தெரியாத குழலி துணியின் நிலையை நினைத்துக்கொண்டே சந்திரா வீட்டுக்கு அருகில் இருக்கும் தொட்டியை நோக்கி சென்றிருந்தாள்.

"அவர் என் கிட்ட சொல்லிக்காம கொள்ளாம போயிட்டார். உன் பொண்டாட்டி தான் எதோ சொல்லிக் கொடுத்துட்டா. அவர் முகமே சரியில்லை, என் வாழ்க்கையை கெடுக்கபார்க்குறா உன் மனைவி"

"என்ன டி சொல்லுற? என்ன சொன்னா அந்த பொண்ணு" பவளம் பதறிக்கொண்டு வர.

"தெரியலையே மா" அம்மாவும் மகளும் ஒப்பாரி வைக்க.

ராஜாக்கு அடக்க மூடியாத கோபம் ஏற்பட்டது.

குழலி திரும்பி வரும் போது அவள் நிலை என்னவோ?

***

கல்யாணம் கலைப்பில் வேந்தன் தரையிலும், சங்கவி மெத்தையிலும் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருக்க.

மறுநாள் அழகாக விடிந்தது, சங்கவி எழுந்து தூக்க கலக்கத்திலையே எழுந்தவள், "இந்த வீட்டுல பாத்ரூம் எங்கே இருக்கு?" கண்களை சுழற்றி பார்த்தவள் கண்டுபிடித்துவிட்டாள். குளியல் அறையை நோக்கி தூக்க கலக்கத்தில் எட்டு எடுத்து வைக்க, வேந்தன் வயிற்றில் கால் வைத்துவிட்டால் நிலை தடுமாறி எசக்கு பிசக்காக அவன் மீதே விழுந்துவைக்க.

"ஆ... கொலை கொலை"

"எதே கொலையா எங்க எங்க..." அவனோடு சேர்ந்த சங்கவியும் அலர.

"நீதான் என்னை கொலை செய்ய பார்க்குற, என் வயிறு போச்சி, எதுக்கு சங்கு மெதிச்ச"

"உன்னை யாரு வழிலை படுக்க சொன்னது படுத்தது உன் தப்பு, தேவையில்லாம என்னை திட்டுறியா?" வேந்தன் தலையில் நங்கென ஒரு கொட்டு வைத்தாள்.

"சரி சரி எழுந்திரு நீ" எழ முயற்சி செய்து தடுமாறி கழுத்தில் முழங்கையை ஊன்றிவிட்டாள்.

தட்டுத் தடுமாறி இருவரும் எந்திரிக்க, வேந்தனின் நிலைதான் பாவமாகி போனது.

அவள் காலின் பிராப்தத்தால் வயிறும் கையின் பிராப்தத்தால் கழுத்தும் செம டேமேஜ்.

தண்ணீ தண்ணீ என தவித்தவனுக்கு பக்கத்தில் தண்ணீர் இருக்கா என சங்கவி தேட அது இல்லாமல் போகவும் நேற்று வைத்திருந்த பாலை எட்டி... சொம்பை எடுத்து நீட்ட.

வேந்தன் குடித்த மறு நொடி துப்பிவிட்டான்" பால் கெட்டுபோயிடுச்சி போல, போ தண்ணீ எடுத்துவா"

சங்கவி வேகமாக சென்று தண்ணீர் எடுத்துவந்து குடித்த பின்பு தான் வேந்தனுக்கு மூச்சே வந்தது.

"எத்தனை நாள் கோபம் சங்கவி உனக்கு, இப்படி மெதிச்சி வச்சிருக்க"

"ஒரு நாள் கோபம் தான்" அலட்டாமல் குளியல் அறைக்குள் மாற்று உடையோடு புகுந்துகொண்டாள்.

வேந்தன் சிந்திய பாலை எல்லாம் சுத்தப் படுத்தி முடித்திருக்க.

"வேந்தா... வேந்தா, கொஞ்சம் உன் பொண்டாட்டிய கூட்டிட்டு வெளியே வா பா"

"வரேன் மா" சங்கவி குளித்து முடித்து வெளியே வரவும் இருவரும் தாய் முன் ஆஜர் ஆனார்கள்.

"இரண்டு பேரும் பத்திரமா இருங்க, ஏய் ஒழுங்கா சமச்சி போடு என் பையனுக்கு புரியுதா?"

"சரி... அத்த"

"சரி சரி... நான் இல்லைன்னு என் பையனை மிரட்டிட்டு இருக்காத புரியுதா"

"ஆமா சின்ன பாப்பா மிரட்டிட்டாலும்" முணுமுணுத்தது வேந்தனுக்கு நன்றாக கேட்க.

'பார்க்க சைலன்ட் போல இருந்துட்டு சரியான ஊசி பட்டாசு போல இவ' கமலாவை அனுப்பி வைத்துவிட்டு, சங்கவி நிம்மதியாக டிவி முன் அமர்ந்துவிட.

வேந்தன் தயாராகி வந்து சமைக்க துவங்கி இருந்தான்.


கதை எப்படி போது டியர்ஸ்

 
Last edited:
Status
Not open for further replies.
Top