ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் வெட்க சிவப்பழகியே _ கதை திரி

Status
Not open for further replies.

T22

Well-known member
Wonderland writer
5 சிவப்பழகியே...

"விக்கி... சாரி" சொல்லி முடிக்கும் முன் போன் வைத்துவிட்டான்.

"சரியான லூசு குழலி நீ... நிலா போல அமைதியா இருப்பவனையே ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லி கோபிக்கவச்சிட்ட. அச்சோ இப்ப என்ன செய்யுறது. ஏன் மனசு இப்படி கிடந்து தவிக்குது. ஒரு வேலை இது காதலா இருக்குமோ? இல்லை இது நட்பு தான்" இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. இந்த பதற்றத்துக்கும் தவிப்புக்கும் பெயர் தான் காதலா? முதல் முறை தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள், அதற்கான பதில் தான் அவளுக்கு தெரியவில்லை.

காலையில் தாமதமாக எழுந்தவள் வேகவேகமாக தயாராகி அவனை சந்திக்க, உணவு கூட உண்ணாமல் கிளம்ப,

கல்லூரியை சுற்றி எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை... கல்லூரிக்கு அவன் வந்திருக்கவில்லை, அதை தொடர்ந்து ஒருவாரம் இப்படியே பல தவிப்போடு குழலி பித்து பிடித்தவளாக திரிந்துகொண்டிருந்தாள்.

அடுத்த வாரம் சோர்ந்த முகத்துடன் வந்திருந்தான் விக்கி, கிரவுண்டில் மரத்தின் அடியில் உட்கார்ந்து தூரத்தில் விளையாட்டை வேடிக்கை பார்க்கத் துவங்கியவன் அருகில் வந்து பதற்றமாக அமர்ந்தாள்.

இருவரிடமும் அமைதி மட்டுமே, கோபத்தால் அவன் அமைதியாக இருந்தான் என்றால், அவள் பயத்தால் அமைதியாக இருந்தாள். அவன் முகத்தில் அப்படி ஒரு சோகம் அப்பியிருந்தது.

"விக்கி..."

"ப்ளீஸ் இங்கே இருந்து போயிடு குழலி" அடக்கப்பட்ட கோபத்தோடு சொல்பவனின் இந்த முகபாவனை பெண்ணவளுக்கு புதிது. அவனது சிரித்த முகம் தான் வேண்டும் இந்த முகம் வேண்டாம் என உள்ளம் தன்னையும் மீறி கலங்கியது.

"சாரி..." அவனது கையை பிடிக்க வரவும் வேகமாக எடுத்துக்கொண்டான். அவனது செயலில் கோபம் கொண்டவள்.

"ஏன்... ஏன்... நா தொடக்கூடாதா"

"ஆமா"

"எதுக்கு இப்படி பண்ற, ஐ ஹேட் யூ" கோபமாக அழுகையை கட்டுப்படுத்தி எழுந்து போக நினைத்தவளை வளைத்து பிடித்திருந்தான்.

"டூ யு லவ் மி" அவளது இந்த தவிப்பில் அவன் புரிந்துகொண்டானோ என்னவோ அவள் முகத்துக்கு நேராக கேட்டே விட்டான்.

"விடு யாராவது வரப்போறாங்க" அவனது தொடுகை குறுகுறுப்பை ஏற்படுத்தியது.நெழித்துக்கொண்டே இருந்தாள்.

"கேட்டத்துக்கு பதில் சொல்லு..." கண்கள் படபடத்தது இல்லை என நா திக்கித் தினறி எழும் முன், விக்கி ஆட்காட்டி விரலை அவள் உதட்டின் குறுக்கே அழுத்தி பிடித்து.

"உன் கண்ணு எனக்கு பதில் சொல்லிடுச்சி, உன் உதட்டின் பொய் எனக்கு தேவையில்லை"

"இல்லை... அது" எப்போதும் ஒரு நிமிர்வு இருக்கும் அவள் மறுக்கும் போது, அதற்க்கு பதிலாக தயக்கம் சூழ்ந்தது அவளது வார்த்தைகளில்.

"நான் இல்லாமல் போனதில் வந்த தவிப்பு, ஒதுக்கத்தில் பாதித்த உனது இதயம். இதை விட காதலை உன் வாயால் சொல்லி இருந்தா கூட இவ்வளவு நல்லா இருந்து இருக்காது... எப்பவும் ஸ்டில் மை லாஸ்ட் செகன்ட் ஆப் மை லைப், நீ என்னவள், எனக்கானவள் என் இதயம் சொல்லிட்டே இருக்கும்"

"விக்கி...!" அவனது காதலை கண்டு நெகிழ்ந்து போனாள் பெண்ணவள்.

"எதும் பேசாத... இன்னும் எவ்வளவு நாளைக்கு பிரண்ட்ன்னு சொல்லிட்டு இருப்ப... அதையும் பார்க்கிறேன். இனி காதல் எல்லாம் சொல்லி உன்னிடம் வந்து நிக்கமாட்டேன். அதே சமயம் என் காதலை வெளிப்படுத்தவும் மறக்கமாட்டேன், தயங்கவும் மாட்டேன்"

"நம்ம... பிரண்ட்ஸ்..." துவங்கும் போதே கை நீட்டி தடுத்தவன்.

"அவ்வளவு தானே இந்த டாப்பிக்கில் நமக்கு இனி சண்டை வேண்டா. நான் லவ் பண்றேன் நீ என்னை எப்பவும் போல உன் பெஸ்டியா பாரு"

"ஆனா..."

"குழம்பிட்டே போய் கிளாஸ் அட்டன் பண்ணு போ" அவன் மேல் இருக்கும் அன்பு காதலா? நட்பா? என ஏற்கனவே குழம்பி தான் போயிருந்தாள். ஏதோ தெளிந்தது போல இருந்த மனதை திரும்ப குழப்பி விட்டான்.

நேற்று இரவு தூக்கம் வராமல் புரண்டவளுக்கு ஒளியாக ஒரு எண்ணம் வந்தது, "ஏன்? ஆண் பெண் நட்பு காதலில் தான் முடியுமா? அப்படி இல்லையே... நண்பன் மீது அளவுக்கு அதிகமாக பாசம் இருப்பதில் என்ன தப்பு. எனக்கு விக்கி மேல் இருப்பது நட்பு தான், அதை புரிந்துகொள்ளாமல் அவன் காதல் கீதல்ன்னு உளறிட்டு அதை முதல்ல அவனை தெளிவு படுத்தனும்' என தெளிந்து வந்த பெண்ணை முற்றிலும் குழப்பி விட்டான் அவனது காதல் வார்த்தைகளால்.

இவர்கள் பேசியதே கடைசி வருடத்தில் தான் நட்பு காதல் என்ற குழப்பத்தில் ஒரு செம் முடித்திருந்தார்கள். இன்னும் சில மாதங்கள் தான் இருந்தது கல்லூரி வாழ்க்கை முடிய.

இந்த நட்பு காதல் குழப்பத்தை ஒதுக்கி வைத்த குழலி முடிந்த அளவுக்கு அவனுடன் நேரம் செலவிடத் துவங்கி இருந்தாள்.

இருவர் தங்கி இருந்த ஹாஸ்டலும் ஒரே தெருவில் என்பதால் இன்னும் வசதியாக போய்விட்டது.

தூங்கும் போது தவிர மற்ற நேரங்களில் அவள் நட்பு வளர்க்க இவன் காதல் வளர்க்க... இருவரும் போட்டிப்போட்டுக்கொண்டு ஆளுக்கு ஒன்றை வளர்த்தார்கள். கடைசியில் தேங்கி இருப்பது நட்பா? காதலா? வெற்றி யாருக்கு விக்கிக்கா? குழலிக்கா?

இருவர்க்கிடையிலும் ஒரு அமைதி யுத்தம் நடந்துகொண்டிருந்தது. முடிவுக்கு வரும் நாளும் இருவரையும் நெருங்கிக்கொண்டிருந்தது.

கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாட்களை எண்ணத் துவங்கி இருந்த சமயம் அது.

விக்கி இயல்பாக தான் திரிந்துகொண்டிருந்தான். முன்பைவிட வித்யாசமாக நடந்துக்கொண்டிருந்தான்.

மிகவும் அமைதியாக, எந்த நேரமும் யோசனையில். அவன் போக்கை கவனித்தாள் ஒரு எல்லைக்கு மேல் பொறுமையை இழந்து.

"ஏன் விக்கி உனக்கு என் மேல பாசமே இல்லையா?"

"இல்லையே..." மெல்லிய சிரிப்போடு பதில் கொடுத்தான் அந்த மாய கண்ணன்.

"ஓ..." அவனிடம் சொல்லாமல் கொள்ளாமல் வேகமாக நடந்தவளை பொறுமையாக பின் தொடர்ந்தான்.

சில தினங்களாக அவனிடத்தில் அதிக மாற்றம், குறிப்பாக சண்டைபின் வீட்டுக்கு சென்று திரும்பி வந்த பிறகு. இரண்டு நாளில் திரும்ப ஊருக்கு சென்றவன் அன்றே திரும்பியிருந்தான். அன்றிலிருந்து அவனிடத்தில் ஒரு ஒதுக்கம் தெரிந்தது.

'என்னவாக இருக்கும்?' யோசித்து பார்த்துவிட்டு நேரிடையாகவும் கேட்டாள். சரியான பதில் அவளுக்கு கிடைக்கவில்லை.

"ஓகே... பாய் நான் கிளம்பறேன்" அவள் கோபித்து கொள்வது எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல நடந்து கொண்டதில் உள்ளுக்குள் முற்றிலும் உடைந்திருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதன் பின் வந்த நாட்களிலும் அதே போலதான் பட்டும் படாமல் சென்றது. கடைசி பரிச்சைக்கு முன் தினம் தனது மனதை ஒரு நிலை படுத்த படாத பாடு பட்டாள் குழலி.

"நட்பு? காதல் இரண்டும் அவளது சிறு மூளைக்குள் வண்டாய் குடைந்தது.

பள்ளியில் நண்பர்களை பிரிந்த போது வருத்தமாக தான் இருந்தது, ஏன் விக்கியை தவிர மற்ற நண்பர்களை பிரிவது கூட கஷ்டமாக தான் இருந்தது. ஆனால், விக்கியை பிரியப் போவதை நினைத்து அவளின் உயிரில் ஒரு வலி ஏற்ப்பட்டது என்னவோ உண்மைதான்.

இது காதலா? என கூட தோன்றத் துவங்கியது, அவன் விலக விலக அவன் அருகாமையை தேடியது குழலியின் மனம், இது தான் காதல் விந்தையா. விலக விலக அதிகரிக்குமா? ஏதோ ஒரு படத்தின் இறுதியில் இரண்டு ஹூரோக்கள் ஹிரோயின் குழப்பத்தோடு இருக்க கண்களை மூடி யார் வருகிறாரோ அவனை தான் நீ காதல் செய்கிறாய் என சிறிய வயதில் பார்த்த படம் சில கோர்வையற்ற சீன் வந்து போக அந்த சிறு மூளைக்குள்.

செய்து பார்க்க துணிந்தாள், இந்த காதல் ஆராயிச்சியில் தன்னையே சோதனை எலியாக மாற்றிக்கொண்டு கண்களை மூடும் முன் ராகவி தான் வருவார் இல்லை சங்கவி வருவாள், அவங்க இரண்டு பேரையும் தான் என்னால பிரிஞ்சி இருக்க முடியாது என எண்ணமே மனதில் சூழ்ந்துகொண்டது.

கண்களை மூடியதும் "என் வாழ்க்கையில் பிரிந்து இருக்க முடியாத நபர் தெரியனும்" மங்களாக தாய் முகமும் தங்கை முகமும் தெரிய, அதனை முந்திக்கொண்டு விக்கியின் சிரித்த முகம் தோன்ற.

மெய் சிலிர்த்தது அவளுக்கு, தாய் தங்கையையே மிஞ்சிவிட்டதா இவனனின் காதல்? வியப்பாக இருக்க. தன் வாழ்க்கைத் துணையாக வேறு ஒருவரை பொருத்தி பார்க்க முயன்றாள். நெஞ்சில் ஊசியை குற்றியது போல ஒரு வலி விக்கியை நினைத்து பார்த்தாள் அதே இடத்தில் அவளது முழுமனதும் ரசிக்கத் துவங்கியது அந்த மன பொருத்தத்தை.

"விக்கி இப்பவே பாக்கனும் வா" என இடத்தை குறிப்பிட்டு குறுஞ்செய்தி அனுப்பிய கையோடு முகத்தை கழுவிவிட்டு பார்க்கில் வழக்கமாக அமரும் இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தவள் ஒரு முடிவோடு தான் வந்திருந்தாள்.

வரும் முன் தன் தாய் ராகவியிடமும் அனுமதி கேட்க அவர் மறுக்கவில்லை. பிள்ளை சந்தோஷத்துக்காக வாழும் அவருக்கு முதலில் நெருடலாக இருந்தது. அவன் நல்லவனா? பெண்ணை பத்திரமாக பாத்துப்பானா? என குழம்பி நின்றவரின் மனநிலையை புரிந்துகொண்ட குழலி.

விக்கி பத்தி, ஆதி முதல் அந்தம் வரை சொல்லி முடித்திருந்தாள்.

"நீ சந்தோஷமா இருந்தா அது போதும் குழலி" என்றார். தாய் மன சுனக்கத்தை போக்கி சம்மதம் பெற்றிருந்தாள்.

மூடிய கண்கள் தலைசாய்த்து அமர்ந்திருந்தவளை பார்த்துக்கொண்டே வந்து தலையில் தட்டினான்.

"தலையில் அடிக்காத டா விக்கி"

"சரி... சரி, எதுக்கு வர சொன்னா சீக்கிரம் சொல்லு எனக்கு படிக்க நிறைய இருக்கு. என்னால திரும்ப எல்லாம் படிச்சி அரியர் எழுத முடியாது பா" அவள் முன் நின்று கை அசைத்து பேசியது குழலிக்கு கதை சொல்வது போல இருந்தது. அவன் மேல் இருந்த காதல் புரிந்ததால் என்னவோ... அவனது நுனி நகம் துவங்கி உச்சியில் பறக்கும் முடிவரை ரசிக்க தோன்றியது.

"குட்டி என்னாச்சி? புதுசா பாக்குற போல இப்படி பார்குற?" குழலியின் தோளை பிடித்து உழுக்க.

"அது வந்து... எப்படி சொல்லுறது தெரியலை" அவன் முன் எழுந்து நின்றவளின் கால் தரையிலையே இல்லை... மாற்றி மாற்றி தவித்துக்கொண்டு இருந்தது.

பதற்றம் அதை எப்படி அவனிடம் சொல்வது, ஆட்டமாடிக்கொண்டு இருந்த குழலியின் கையை பிடித்து நிறுத்திய விக்கி.

"ஆடாம என்ன விஷயம் சொல்லு" அவளது சோல்டரில் கை வைத்து அவளது ஆட்டத்துக்கு தடா போட்டான்,

"அது... வந்து, அது அது... நானும் உன்னை போல..." வார்த்தைகள் குழலிக்கு தந்தி அடித்தது.

"திக்காம சொல்லு டா குட்டி" ஒரு கையை சோல்டரில் இருந்து எடுத்தவன், அவளது கன்னத்தை கிள்ளினான்.

"அது வந்து, ல்வ் யூ விக்கி, வேலைக்கு போயிட்டு... கல்யாணம் செஞ்சிக்கலாமா? ராகவியும் ஓகே சொல்லியாச்சி" அவன் கன்னத்தை பிடித்து சிறுமியாக குதித்தாள்.

"வாட்" அவளது கையை தனது கன்னத்தில் இருந்து குழலி கையை தட்டிவிட்டான்.

"விக்கி" அவனது செயலை பார்த்து விக்கித்து நின்றாள் குழலி.
 

T22

Well-known member
Wonderland writer
6 சிவப்பழகியே...

"விக்கி... உனக்கு, உனக்கு நான் சொன்னது புரியலையா? நான் சொன்னது... புரி...யலையா? ஆர் யூ நாட் ஹாப்பி" அவனது இந்த ஒதுக்கம் ஏன் என்று புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது இவன் பழைய விக்கி இல்லை. இவனுக்கு ஏதோ ஆகிடுச்சி குழலியின் உள்மனதில் அவளிடம் சல்லிக்கொண்டு இருக்க.

"ஏன் வித்யாசமா நடந்துக்குற? இதை தானே ஒரு வருஷமா கேட்டுட்டு இருந்த? இப்ப என்னாச்சி"

அவனது முகத்தில் ஒரு துளி கூட மகிழ்ச்சியின் சுவடே இல்லை. முதலில் அதிர்ந்தவன் தலையை அழுத்தி கோதி, "இங்க பாரு குழலி இது சரிபட்டு வராது, அதான் நான் கிரவுண்டில் வச்சி பேசியதில் இருந்து எனக்கு புரிஞ்சது, நம்மக்குள்ள இருக்கறது பிரண்டுன்னு இருக்க நெருக்கம் தான். நான் தான் சரியா புரிஞ்சிக்கலை, இப்ப புரிஞ்சிக்கிட்டு பிரண்டா இருக்க பார்த்தா இப்படி வந்து சொல்லுற, பழசை போட்டு குழப்பிக்காம போ. இது காதல் எல்லாமில்ல"

"நீ பொ... பொய் சொல்லுற விக்கி"

மனதால் தன்னவளுக்கு மன்னிப்புக்கேட்டு தன் மனதை கடினப்படுத்தி இருந்தான் விக்கி.

"உண்மை தான் குழலி... எனக்கு முன்ன இருந்த இன்ட்ரஸ்ட் இப்ப உன்கிட்ட இல்லை, மனசை போட்டு குழப்பிக்காத. நான் நாளைக்கு ஊருக்கு போக போறேன்... நீ சொன்னது தான் சரி நண்பர்களாவே இருந்துக்கலாம். இதை விட்டுடு" இதை சொல்லி முடிக்கும் முன் உயிர் விக்கியை விட்டு பிரிந்தது போல உணர்வு ஏற்பட்டது.

"நோ... இல்லை நீ இப்படி என்னை சீட் செய்ய பாக்குற, எதுக்கு பொய் சொல்லுற. நடிக்காத விக்கி அழுகை வரும் போல இருக்கு" அவன் விளையாடுகிறான் என மனதுக்கு சமாதானம் சொல்லி அவளது கையை எட்டி பிடிக்க, கையை உதறி, இரண்டடி தள்ளி நின்றான் தீயை தொட்டது போல.

"விக்கி... "

"குட்டி உட்காரு முதல்ல, பொருமையா பேசலாம்" குழலிக்கு என்ன நடக்குது இவன் முகத்தை பார்த்தாலும் விளையாடுவது போல தெரியவில்லை. வாய் சொல்லும் பொய் என அவன் கண்கள் காட்டிகொடுத்தது.

அமைதியாக அமர்ந்தவள் கண்ணில் அப்படி ஒரு சோகம், பதற்றம் என பிரித்தறிய முடியாத எண்ணங்கள் தென்பட்டது.

தனது தலையை அழுத்தி கோதி விட்டவன்... ஆழ்ந்த மூச்செடுத்துவிட்டு.

"குழலி புரிஞ்சிக்கோ... உன்மேல இருந்தது வெறும் அட்ராக்சன்னு நான் இப்ப தான் புரிஞ்சிக்கிட்டேன். நான் தான் தப்பா புரிஞ்சிட்டேன் இது காதல்ன்னு"

"பொய் சொல்லாத விக்கி, எனக்கு தெரியும் இது லவ் தான்னு..."

"இல்லை குட்டி புரிஞ்சிக்கோ"

"நீ சொல்லுற குட்டிலையே தெரியுது நீ பொய் சொல்லுறன்னு, லவ் இருக்கு. நடிக்கற எனக்கு தெரியும். உன் கண்ணு காதல் தான் என்ட சொல்லுது"

"இல்லைன்னு சொல்றேன்ல..." விக்கி பொறுமை சிறிது சிறிதாக கறைந்துகொண்டிருந்தது.

"ப்ளீஸ் விளையாட்டு போதும் விக்கி" கண்களில் கண்ணீர் தேங்கி நிற்க விடாபிடியாக பிடித்துவைத்திருந்தாள் இமை தான்டாது.

"இப்ப எதுக்கு அழுதுட்டு இருக்க" அவன் முகத்தில் அப்படி ஒரு ஒவ்வாமை.

"விக்கி... ஏன் புதுசா நடந்துக்கற"

"இந்த அழுகுற மூஞ்சை பார்த்தா குமட்டுது"

"குமட்டுதா?" அழுகை இன்னும் அதிகரித்தது.

"நீ அழுதுட்டே இரு நான் போறேன்"

"இல்ல... இல்ல... இனி அழுகலை" கண்களை எவ்வளவு அழுத்தி துடைத்தும், இந்த கண்ணீர் நிக்கமாட்டேன் என அடம்பிடித்தே வந்துகொண்டே இருந்தது.

"ச்சை..."

"விக்கி... நீ ஏன் இப்படி நடந்துக்குற?"

"எனக்கு யாராவது அழுதா சுத்தமா பிடிக்காது"

"பொய்..."

"என்ன பொய்..."

"இது நீ இல்ல விக்கி..." அவனது சட்டையை பிடித்து உழுக்கினாள்.

"உன்னோட தொல்லையா போச்சி" ஆழ்ந்து மூச்சி எடுத்துவிட்டவன்.

"சரி... இப்ப சொல்லு என்னை பத்தி உனக்கு என்ன தெரியும்"

" எல்லாமே தெரியும்...என் மேல அதிக பாசம் அன்பு வச்சி இருக்க. அதை விட காதல் நிறைய இருக்கு"

"சப்பா... முடிலை உனக்கு என்னைபத்தி ஒன்னும் தெரியாது?"

"எனக்கு எல்லாம் தெரியும்"

"சரி என் பர்த்டே எப்போ"

"போனில் சேவ் செஞ்சி இருக்கு இரு பார்த்து சொல்லுறேன்"

"கிளிஞ்சது... சரி அதை விடு எனக்கு எந்த புட் ஐடம் என்ன பிடிக்கும்?"

"சிக்கன்" என்றாள் தெளிந்த முகத்தோடு.

"இல்லை மட்டன்" என்றான், அவனது பதிலில் அதிர்ந்தவள் தன்னை சமன் செய்துகொண்டு.

"சொல்லி இருக்கலாமே விக்கி, எதுக்கு பிடிக்காததை இவ்வளவு நாள் சாப்பிட்ட"

"தானா புரிஞ்சிக்கனும்'ன்னு எதிர் பார்த்தேன் ஆனா அது நடக்கலை" அவனது குரலில் சோகமோ வருத்தமோ சிறிது கூட இல்லை. வெறுபபு அப்பட்டமாக தெரிந்தது.

"இது எல்லாம் ஒரு காரணமா?இனி புரிஞ்சிக்கிறேன் விக்கி, இப்படி பேசாதே"

"இப்ப கூட என்னை புரிஞ்சிக்காம தான் பேசிட்டு இருக்க நீ. இது வாழ்க்கை விளையாட்டு இல்ல. எனக்கு ஜஸ்ட் இன்பேக்சுவேசன் கூட சொல்ல முடியாது, உன் சிரிப்பு பார்த்து வந்த ஒரு சாதாரண ஈர்ப்பை நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன். அதுக்கு ரியலி சாரி பிரண்டா எப்பவும் இருப்பேன். இதை இதோட விட்டுடு இரண்டு பேருக்கும் நல்லது" வேகமாக அந்த இடத்தைவிட்டு சென்றவன், அடுத்த நாள் தேர்வு எழுதி முடித்ததும் அவனை சந்திக்க நினைத்தவளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது சொல்லாமல் கொள்ளாமல் சென்றிருந்தான்.

மனதில் உள்ளதை மாற்ற முடியாமல் தவித்த குழலி இப்படி இருந்தாள் வேலைக்கு ஆகாது தன்னோடு சேர்ந்து ராகவி வருந்துவதை தாங்க முடியாதவள். தனக்கென ஒரு வேலையை பார்த்துக்கொண்டு பிசியாக வருடங்களை கடத்தி இருந்தாள். காதல் இல்லை என பிரிந்து சென்றாலும், அவளால் அவனை மறக்க முடியவில்லை. தனிமையில் தலையனை துனையோடு மட்டுமே அவளது சோகத்தை காட்ட முடிந்தது.

ராகவி தான் பெண் நிலையை நினைத்து வருந்தாத நாளில்லை.

ஓவர் டைம் வேலை பார்த்துவிட்டு வந்தவள் கிட்சனில் நுழைந்து வாட்டர் பாட்டலில் தண்ணீர் குடித்துக்கொண்டு வரவேற்ப்பறையை கடக்கும் போது.

ராகவி புலம்புவதை கேட்டு ரத்தமே உறைந்தது குழலிக்கு.

***

கோவிலுக்கு போய் வரும் வழியில் அக்காவின் குடும்பத்தினரை சந்திக்க நேர்ந்தது. அவர்கள் மீது ராகவிக்கு எல்லையில்லாத கோபம், அக்கா மகளை தனியா நட்டாத்தில் விட்டுவிட்டார்களே. நான் இல்லாமல் போயிருந்தால் அந்த தளிரின் நிலை என்ன? அவர்களை கோபமாக முறைத்துக்கொண்டு வந்தவர் நாவை அடக்கிக்கொண்டு, ஒதுங்கி வந்தவளை வழி மறித்தது அந்த கும்பலில் ஒரு பெரிய தலை. சும்மா போன பாம்பை சுரண்ட ஆரம்பித்தால் அது சும்மாவா இருக்கும் சிலிர்த்துக்கொண்டு சிறுத்தையாக சீறத்தானே செய்யும்.

"இன்னும் அந்த ஏழரையை உன் கூட தான் வச்சி இருக்கியா?" என அந்த கூட்டத்தில் மூத்த பெண்மணி பேச, இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த கோபம் மொத்தமும் வெளி வந்திருந்தது ராகவிக்கு.

"வாயை அடக்கி பேசுங்க. அவ ஏழரைன்னா... சின்ன குழந்தையை விட்டு சென்ற நீங்க எல்லாம் அதுக்கும் மேல. குடும்பத்தில் மூத்ததே இப்படி இருந்தா அடுத்த சந்ததியினரை சொல்லவா வேண்டும் நாடு விளங்கும்... ச்சை" அந்த வயதான பெண்மணியிடம் ராகவி சண்டையிட துவங்க தாயின் சத்தம் அதிகம் கேட்கவும பார்வையை தாய் சென்ற திசையை நோக்கி பார்த்தாள் சங்கவி. இயல்பாகவே பயந்த சுபாவம் அவளுக்கு. அவளுக்கு தைரியம் வரும். அதன் ஆயுசு நொடி போழுது கூட தாங்காது. பயம் அவளது தைரியத்தை மொத்தமாக விழுங்கிவிடும்.

அருகில் குங்குமம் வாங்க சென்ற சங்கவி கலவரத்தை பார்த்து மிரண்டு, வரும் வழியில் புதிய பட்டுபாவாடை சரியாக தடுக்கி சதி செய்தது, குங்கும பிரசாதத்துடன் அமர்ந்து சாமியை வேண்டிக்கொண்டிருந்தவன் தலையில் அபிஷேகம் செய்துவிட்டாள்.

அவனது முன் நெத்தியில் தொடங்கி வெள்ளை சட்டையில் அங்காங்கே சிதறியது அந்த சிவப்பு குங்குமம்.

"ஏய்..." தலையை நிமிர்த்தி பார்க்க.

'என் வெட்க சிவப்பழகியே...’ முதல் பார்வையிலையே அவனது மனதை கொள்ளையிட்டுவிட்டாள் அந்த சிறிய பெண்.

"அச்சோ சாரி சார் தெரியாம கொட்டிட்டேன், மன்னிச்சிக்கோங்க" அவதியாக அவனது சட்டையில் படிந்திருந்த குங்குமத்தை துடைக்கிறேன் என அதிக படுத்திவிட்டு ஓடி இருந்தாள் அந்த கலவரத்தை நோக்கி.

'ப்பா... என்னா கண்ணுடா!' மறு நொடி பார்வையில் ஒரு ஏமாற்றம, 'பார்க்க தான் சின்ன பொண்ணா இருக்கா ச்சே... கொஞ்ச பெரிய பொண்ணா இருந்து இருக்கலாம்' அவனோ முப்பதை நெருங்கிக்கொண்டிருக்கும் அழகன். இவளோ பள்ளி படிக்கும் பெண்போல தெரிய சற்றுமுன் தோன்றிய உற்ச்சாகம் வடிந்திருந்தது.

அவளது கண்ணின் படபடப்பை அவனது இதயம் அவனது அனுமதியின்றி பதிவு செய்து கொண்டது.

தாய் அருகில் வந்து நின்றது கூட தெரியவில்லை வேந்தனுக்கு.

"டேய் பார்த்தியா குங்குமம் வச்சிக்கமாட்டேன்னு நார்த்திகம் பேசிட்டு இருந்த. இப்ப பாரு கடவுளே இப்படி அபிஷேகம் செய்ய வச்சிட்டாங்க"

"உன்ன கமலா இந்த ரணகலத்திலும் குதுகலமா?"

"ஆமா டா, நான் செய்ய முடியாததை ஒரு பொண்ணு செஞ்சிட்டு போயிருக்கே, அந்த பொண்ணு தீர்காசியா பிடிச்ச போல கணவனோடு நல்லா வாழனும்" கமலா மனதார வாழ்த்தினார்.

"மா... ஆரம்பிக்காத வா கிளம்பலாம்" கமலா கையை பிடிக்க, பின்னிருந்து ஒரு குரல் இருவரையும் தடுத்தது.

மங்களகரமாக ஒரு பெண் கமலாவை அழைத்தார், "சொல்லுங்க மா"

"இந்தாங்கமா எங்க வீட்டில் கல்யாணம் புடவை பத்து பேருக்கு கொடுக்குறோம் வாங்கிக்கோங்க"

"அது...." கமலா தயங்கி நிற்க வேந்தன் அரனாக அன்னை முன் வந்து, "அப்பா இல்ல அதான் அம்மா தயங்குராங்க"

"அதனால என்னப்பா, வாங்கிக்கோங்க மா"

"என் பையன்கிட்ட கொடுத்திடுங்க மா" கமலா விலகிக்கொள்ள.

"சரிபா வாங்கிக்கோ, கல்யாணம் ஆகிடுச்சா?"

"இல்ல மா"

"சீக்கிரம் மனசுக்கு பிடிச்ச பெண்ண பார்த்து கல்யாணம் கட்டிக்க வாழ்த்துக்கள்" என வாழ்த்திச் சென்றவரை பார்த்துவிட்டு, 'மனசுக்கு பிடிச்சவளை பார்த்துட்டேன். ஆனா கல்யாணம் கொஞ்ச லேட் ஆகும். அவ கொஞ்சம் வளரனுமே' துரத்தில் போகும் அவளை பார்க்க. எப்போதும் ஒருமுகமாக இருக்கும் அவனது மனம் தாறுமாறாக அந்த சிவப்பழகி பின் ஓடியது.

"வேந்தா போலாமா" கனவில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் மகனை கமலா உசுப்பிவிட.

"போலாம் மா. நல்லா பார்த்துக்கோ நீ தான் என்னை வாழ்த்தலைனாலும் அவங்க வாழ்த்துறாங்க"

"டேய் பொறாமையில் பொங்காத அந்த பொண்ணை வாழ்த்துனதுக்கு தானே இந்த அக்கப்போர் செய்ற, நான் அந்த பொண்ணுக்கு வாழ்த்தியது தான் திரும்ப உனக்கு வந்து இருக்கு. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தான் பிள்ளை தானா வளருமாம். அது போல தான் இந்த ஆசீர்வாதமும்" கமலா இல்லாத காலரை எடுத்து விட்டு சொல்ல.

"அதுக்கு மீனிங்கே தெரியாம பேசாத கமலா"

"நான் சரியா தான் சொல்லுறேன்"

"இல்லை, மனைவி மாசமா இருக்கும் போது ஊட்டி ஊட்டி வளர்க்கனும். மனைவி ஊரான்பிள்ளை. அவள் வயிற்றில் இருப்பது அவன் பிள்ளை. அப்போ தான் அவன் பிள்ளை அவள் வயிற்றில் நல்லா வளரும். அந்த பழமொழிக்கு இது தான் மீனிங் புரியுதா?"

"ஓ... இதுக்கு பின்னாடி இவ்வளவு இருக்கா அது தெரியாம நம்ம தப்பு தப்பா உபயோகிக்கிறோமா சுத்தம், சரி வா கோவில் சுத்திட்டு கிளம்பலாம்"

பதற்றத்தோடு ஓடி வந்த சங்கவி "மா... வா மா போயிடலாம் எதுக்கு சண்டை போட்டுட்டு இருக்க" சங்கவி தாயை தடுக்க. எதிர் புறத்தில் இருந்த ஒரு பெண்மணி அந்த வயதான பெண்மணியை தடுத்துத்கொண்டிருத்க, யார் தடுத்தும் இருவரும் தன்னிலையில் இருந்து இறங்கவில்லை. நொடிக்கு நொடி வாய் சண்டை அதிகரித்துத்கொண்டே தான் போனது.

வேந்தன் முகத்தில் ஒரு பிரகாசம் சுடர்விட்டு எறிந்தது.



கதை பற்றி சொல்லுங்கள் அழகிஸ்...

 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
7 சிவப்பழகியே...

அந்த வழியாக கோவிலை சுற்றிக்கொண்டு வந்த வேந்தன் கண்ணில் மறுமுறை சங்கவி பட. சிறிது நேரத்துக்கு முன் தன்மேல் குங்குமம் அபிஷேகம் செய்த்தே கோலிகுண்டு கண்களுக்கு சொந்தக்காரி. பார்க்க சிறுமி போல தெரிந்தாலும் விவரமாக தாயை தாஜா செய்துகொண்டிருந்தாள்.

பார்வை பக்கத்தில் இருந்த ராகவிமேல பட.

"சின்னத்தை..." ராகவியின் தூரத்து உறவினரின் பையன் அவன், பல வருடம் கழித்து பார்த்ததும், வேகமாக வந்து சண்டையை விலக்கியவன்.

"எதுக்கு சும்மா என் அத்தைக்கிட்ட சண்டைக்கு வரிங்க, ஏற்கனவே தேவையில்லாம அவமானப் படுத்தியது போதாதா, கிளம்புறீங்களா? இல்லை போலீசை கூப்பிடுவா" வேந்தன் மிரட்டலில் தான் அந்த ஐயோக்கிய பணத்தாசை பிடித்த கூட்டம் விலகிச் சென்றதது. ஏற்கனவே குழலிக்காக நியாயம் கேட்க... கனவன் இழந்த சிறுபெண்ணை அசிங்கமாக பேசிய வக்கிரம் பிடித்தவர்கள் தான் வேந்தன் அன்னை கமலா தான் ஒரு அளவுக்கு துணையாக இருந்தது. இதை எல்லாம் சிறுவயதில் பார்த்தவன் பல முறை வருந்தி இருக்கிறான், 'நான்மட்டும் பெரியவனா இருந்திருந்தா எல்லோரையும் அடிச்சி துவச்சி இருப்பேன்' வளர்ந்த பின் அவர்களையே இப்படி மிரட்டுவான் என சிறிதும் நினைக்கவில்லை வேந்தன். அதில் அவனுக்கு பெரும் திருப்தி.

'யாரிந்த பையன் அத்தன்னு சொல்லுறான்' ராகவி உத்து பார்க்க... யாரென நினைவு அலைகளில் அலசி தேட பிடிப்படவில்லை ராகவிக்கு.

"அண்ணி... இந்த ஊர்லையா இருக்கிங்க"

"அண்ணி நல்லா இருக்கிங்களா? ஆமா அண்ணி இங்கயே செட்டில் ஆகிட்டோம். ஒரு நிமிஷம் இருங்க அண்ணி இந்த தம்பிக்கு நன்றி சொல்லிட்டு வரேன்" வேந்தனை ராகவி திரும்பி பார்க்க.

"அண்ணி இவனை தெரியலையா ? என் பையன் வேந்தன், சின்னவயசுல சங்கவியை தூக்கிட்டே சுத்துவானே குழலி கூட விளையாட"

ராகவி இப்போது தான் வேந்தனை உத்து பார்க்க, "அட ஆமா நெடு நெடுன்னு வளர்ந்துட்டான் அடையாளமே தெரியலை" சங்கவி வேந்தனை தான் பார்த்துக்கொண்டு இருந்தாள், 'அடியாத்தி எவ்வளவு உயரம். அழகா ஹீரோ போல இருக்கார். நம்ம பெருசாகி இவரை போல ஒருத்தரை தான் கட்டிக்கனும்' வானத்தில் சென்றுக்கொண்டிருந்த தேவதைகள், 'அப்படியே ஆகட்டும்' என வரம் கொடுத்துவிட்டு சென்றார்கள்.

"இவ தான் குழலியா அண்ணி"

"இல்ல அண்ணி சின்னவ சங்கவி"

"அழகா இருக்கா... என்ன மா படிக்கற?"

"காலேஜ் பர்ஸ்ட் இயர்" பி.ஜி பர்ஸ்ட் இயரை தான் மேடம் பொத்தாம் பொதுவா பர்ஸ்ட் இயர் சொல்லி இருக்க. அது தெரியாத வேந்தன் மனம் அடித்துக் கொண்டது. 'கொஞ்சம் அவ முன்ன பிறந்திருந்தா நல்லா இருந்திருக்கும். இல்ல நான் பின்னாடி பொறந்து இருக்கனும். கடவுளே இப்படி சதி செஞ்சிட்டியே. இது நல்லா இருக்கா உனக்கு' மீண்டும் மீண்டும் அந்த வாக்கியமே அவனது மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.

'ச்சே இரண்டு வருஷம் காத்துட்டு இருக்கனுமா?' அவனையும் மீறி அவனது மனது ஒரு கணக்கு போட்டது. வேந்தன் ஒரு கணக்கு போட விதி வேறு கணக்கு போட்டது.

சங்கவியும் வேந்தனும் அருகருகே அமர்ந்தனர், ராகவியும் கமலாவும் அமர்ந்து பத்து வருட கதையை பேசத் துவங்க குழலி பக்கம் பேச்சி திரும்பியது, "என் பொண்ணு நினைச்சி எல்லாம் எனக்கு கவலை இல்லை அண்ணி. குழலிக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சா போதும்"

"இன்னும் கல்யாணம் செய்யலையா, நான் கூட கல்யாணம் முடிச்சி இருப்பிங்க வேந்தனுக்கு சங்கவிய கேட்கலாம்ன்னு நினைச்சேன். இப்ப மட்டுமென்ன குழலியை கட்டி கொடுங்க?" என கமலா உரிமையோடு கேட்க, ராகவியால் மறுப்பு சொல்ல முடியாமல் போனது.

தாய் முதலில் சொன்னதில் மனம் குளிர்ந்தது வேந்தனுக்கு, அவனது முதல் தாய் சொன்னதை கேட்டு நொடிப் பொழுதில் காதல் பூ மலர்ந்து பூத்துகுழுங்க. சங்கவியை ரசனையாக பார்க்க துவங்கும் முன், கமலாவின் அடுத்த வாக்கியம் சற்று முன் முளைத்த காதல் செடியை கருக்கி இருந்தது. தனது பார்வையை கடினப்பட்டு திருப்பிக்கொண்டான் வேந்தன்.

கோவிலிலேயே வைத்து நிச்சயத்தை முடித்து இருந்தனர் இரண்டு பெண்மணியும்.

வேந்தனுக்கு வெறுமை சூழ்ந்துகொண்டது. அவனுக்கு தான் மறுப்பதற்க்கு தாய் வாயிப்பே கொடுக்கவில்லையே. அவர்கள் சென்றதும் சங்கவி தாயிடம் சண்டையிடத் துவங்கி இருந்தாள்.

"ஏன் மா உன் பாரம் குறையுனும்னா அக்காகிட்ட கேட்காம கூட நிச்சியம் பண்ணுவியா உன்னை எல்லாம்..." சங்கவி திட்டிவிட்டு, கோபமாக ஸ்கூட்டி எடுத்துக்கொண்டு சென்றிருந்தாள். கோவிலில் இருந்து வேகமாக வந்த ராகவி சாமி அறையே கெதி என அன்று நடந்ததை சொல்லி அழுகத் துவங்கி இருப்பதை கேட்டு நெஞ்சம் வலித்தது.

"மா..." பெருங்கூவலோடு சாமி அறையில் இருந்த ராகவியை இறுக்க அணைத்துக்கொண்டாள்.

"சாரி மா, இனி உங்களை யாரும் எதும் சொல்ல மாட்டாங்க. உங்களுக்கு பிடிச்ச பையனை பாருங்க கட்டிக்கிறேன். ஆனா என் விஷயம் முன்னவே சொல்லிடுவேன் மா" ராகவிக்கு மகள் கல்யாணத்துத்கு சம்மதம் சொல்லியதே பெரிய விஷயமாக பட உடனே வேந்தனுக்கும் குழலிக்கும் சிம்பிலாக நெருங்கி உறவினர்களின் முன்னிலையில் இனிமையாக திருமண வைபோகம் துவங்கியது.

வேந்தன் தான் சிறிது திண்டாடி போனான், துணி எடுக்கும் போதும் சரி நகை எடுக்கும் போதும் சரி. சங்கவி மாமா அத்தான், "இது நல்லா இருக்கா? அது நல்லா இருக்கா?" என உரிமையாக கேட்க சிறிது தடுமாற்றத்தோடு சுற்றிக்கொண்டு இருந்தான்.

குழலியிடம் தன் மனபோராட்டத்தை சொல்ல பல முறை முயற்ச்சி செய்யவும் விதி அவனையும் விடவில்லை.

வேந்தன் தாயிடம் பல முறை சொல்ல நினைத்தான் ஆனால் முன்பே திருமணம் உங்க விருப்பம் என சொல்லும் போது அவர் நெகிழ்ந்து மகிழ்ந்தது நினைவுகள் கண் முன் வந்து வேந்தனை தடுத்தது.

'எல்லோரும் என்ன பிடித்தவரோடா வாழ்க்கை வாழுறாங்க பார்த்துக்கலாம் காலம் அனைத்தையும் மாற்றும்' என தனக்குத்தானே சமாதானப் படுத்திக்கொண்டு இருக்கும் போது, குழலியிடமிருந்து முதல் அழைப்பு வந்திருந்தது.

அவன் ஹலோ சொல்லும் முன், "உங்கிட்ட பேசனும் வீட்டுக்கு வாங்க" சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்து இருந்தாள்.

ராகவி ஹாலில் உட்கார வைத்து மாப்பிள்ளையை கவனிக்க.

"அத்தான் நல்லா இருக்கிங்களா?"

"நல்லா இருக்கேன் குழலி வேலை எல்லாம் எப்படி போது"

"இன்னும் ஒரு வாரத்தில் நிற்க போறேன் அத்தான்"

"நீங்க இரண்டு பேரும் பேசிட்டு இருங்க நா வந்திடுறேன்" என இருவருக்கும் தனிமை கொடுத்துவிட்டு ராகவி படபடப்போடு கோவிலுக்கு சென்றிருந்தார்.

குழலி என்ன பேச போகிறாள் என யூகித்திருந்தார் ராகவி, 'அவள் வாழ்க்கை அவள் தான் முடிவு எடுக்கனும்'

ராகவி சென்றதும் வேந்தன் குழலியை உத்து பார்த்தவன், எதையோ மனதில் போட்டு குழப்பி தூங்காமல் இருந்ததற்க்கான அடையாளம் தெரிந்தது.

"சொல்லு குழலி என்ன பேசனும்"

"அது வந்து... நான் ஒருத்தரை லவ் செஞ்சேன்" வேந்தனின் முகத்தில் எந்த அதிர்ச்சியுமில்லை. அதை பார்த்ததும் குழலிக்கு நிம்மதியாக இருந்தது என்று தான் சொல்லவேண்டும். எங்கே மனைவியாக வரப்போரவளிடம் அதிகம் எதிர்பார்ப்பு இருந்து ஏமாற்றம் கொடுத்துவிடுவோமே என பயந்தாள்.

நடந்ததை சொல்லி முடிக்க, "சரி குழலி நா என்ன செய்யனும் அவனோடு சேர்த்து வைக்கனுமா?"

"இல்லை சேர்க்க முடியாது எப்பவும், சரி எதுக்கு இதை என்ட சொன்ன சொல்லாம இருந்து இருக்கலாமே"

"எனக்கு மனசு உருத்துச்சி அதான்"

"எனக்கு காதல் இருந்தது ஒன் சைட் தான் உன்னைபோல எல்லாம் தீவிரமாக இல்லை எனக்கும் அதிலிருந்து வெளியே வர சிறிது காலம் ஆகும்"

"ம்ம்ம்" ஒருவருக்கும் ஒரு நிம்மதி மனதில் இருப்பதை வாழ்க்கைத் துணையாக வரவிருப்பவரிடம் சொல்லிவிட்டோமே என.

சிறிது சிறிதாக அந்த காதலில் இருந்து வெளிவர முயற்சி செய்ய துவங்கிய போது தான் குழலி இன்னும் இன்னும் ஆழமாக அதில் சிக்க துவங்கினாள்.

வேறோடு அவனது நினைவுகளை பிடுங்கி எடுக்க முயன்ற போது. அந்த காதல் இன்னும் ஆழமாக வேறுன்றி நின்றது விக்கியின் நினைவுகள்.

திருமணத்துக்கு முன் தினம் வேந்தன் முகூர்த்த பட்டு கொண்டு வந்து கொடுக்க வரும் போது ராகவிக்கும் சேர்த்தே ஒரு புடவை எடுத்து வந்திருந்தான்.

வேந்தனின் வரவை எதிர்பார்த்ததிருந்த குழலி வாசலில் நின்றிருக்க, வேந்தன் வந்ததும் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றாள்.

"அத்தான் முடியலை அத்தான் அவரை மறந்துட்டு உங்க கூட என்னால வாழ முடியாது அத்தான். ப்ளீஸ் எதாவது சொல்லுங்க"

"சரி நான் பார்த்துக்கிறேன் குழலி நிம்மதியா போ" அவள் கையிலிருந்த ஒரு கவரை குழலியிடமிருந்து வாங்கிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்த போது சங்கவிக்கு மெகந்தி வைத்திருந்த பெண் காதில் எதோ சொல்ல அவரும் தலை அசைத்து விட்டு மெகந்தி போடும் வேலையை தொடர்ந்தார்.

முன்பு தடுமாறிய அவனது விழிகள் அழகோவியமாக அமர்ந்திருந்த சங்கவி முன்பை விட இப்போது தாவணியில் பெரிய பெண்ணாக தெரிந்தாள்.

"விழியோரம் மை கிறுக்கு

என்னை கிழித்தெரிந்து...

இதழோர புன்னகையில்

என்னை புதைத்து...

இடையோர சிவப்பில்...

என்னை கட்டிப்போட்ட

என் ராட்சசியே..."

தன்னவளை பார்த்து மையலிட்டு இருக்கும் போதும் அவனை வெளிக்கொண்டுவந்தது அவளின் சிரிப்பு,

"சங்கவி உனக்கான டிரஸ் ஜிவீல்ஸ் நாளைக்கு இதுதான் போட்டுக்கணும்"

"தேங்க் யூ மாமா, இங்க பாருங்களேன் மருதாணி நல்லா இருக்கா? அத்தான்"

"உன்னை போலவே ரொம்ப அழகா இருக்கு சங்கு"

"எது சங்கா... உங்களுக்கு பட்ட பெயர் கூட வைக்க தெரியலை மாமா, என் அக்கா பாவம்"

'அக்கா பாவமில்லை நீ தான் பாவமா' மனதோடு செல்லம் கொஞ்சினான்.

"உனக்கு சேட்டை கூடி போச்சி" சங்கவி காதை திருக, அவனிடமிருந்து விடுபட்டு சிட்டாக ஓடி இருந்தாள். இந்த சிரிப்பழகி.

வேந்தன் ஒரு கணக்கு போட... குழலி ஒரு கணக்கு போட்டு விபரித முடிவை எடுத்திருந்தாள்.

கதை பற்றி சொல்லுங்கள் அழகிஸ்


 

T22

Well-known member
Wonderland writer
8 சிவப்பழகியே...

வேந்தன் தானாக நிறுத்த நினைத்தான், அதில் குழலிக்கும் கெட்ட பெயர் வரக்கூடாதுஅதே சமயத்தில் தன் வாழ்க்கையும் இக்கட்டில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க இரவு முழுவதும் வெறிக்க வெறிக்க பால் நிலவை பார்த்து தனியாக பேசிக்கொண்டு இருந்தான்.

"இந்த காதல் நன்றாக இருப்பவர்களை பைத்தியமாகவும்... பைத்தியம் பிடித்தவர்களை தெளிய வைத்து விடும் போல,

ஆனால் ஒன்று இயல்பாக இருக்கவிடவே விடாது போல, அப்படி இயல்பாக இருப்பவர்களை சேரவும் விடாது அப்படியே சேர துடித்தாலும் சுற்றம் சூழல், காசு, பணம்,உயர்ந்தவன், தாழ்ந்தவன் என எதோ ஒரு வகையில் பிரிக்க துடிக்கும். அவ்வளவு ஏன் இந்த இயற்க்கை கூட பிரிக்கதான் துடிக்குது.

காதலுக்கு இயற்க்கையே துணை, விதி வசம் என கதைகளில் மட்டுமே படித்து இன்புற முடிகிறது நிஜத்தில் அனைத்தும் எதிராக தான் செயல்படுகிறது.

அப்பப்பா... இத்தனை சிக்கலிருக்கிறது என தெரிந்தும் விரும்பியே மாட்டிக்கொள்கிறது இந்த பாலா போன மனம். காதலின் விந்தைகளை நினைத்து பெருமூச்சி விட்டவனுக்கு நன்கு தெரியும் தன்னவளை கைப்பிடிக்க கிட்டத்தட்ட முனிவன் போல தவமிருக்கவேண்டி வரும் என நினைக்கும் போதே மூச்சிவாங்கியது வேந்தனுக்கு..

சட்டென ஒரு யோசனை வந்தது, 'நல்ல யோசனை தான், இதை செயல் படுத்திட வேண்டியது தான். அப்போ தான் கல்யாணம் நிக்கும். யாருக்கும் பிரச்சனையில்லை. எடுத்து சொன்னாள் ராகவி அத்தை புரிஞ்சிப்பாங்க. அதுக்கு அப்புறம் இரண்டு வருடம் கழித்து சங்கவியை கட்டிக்கலாம்' திட்டத்தை சரியாக வகுத்த வேந்தனுக்கு உற்ச்சாகம் பிறந்தது.

அந்த உற்ச்சாகத்தோடு நிம்மதியாக தூங்கி மறுநாள்எழுந்தவன் மணமேடைக்கு போகும் முன் தன்னவள், தான் கொடுத்த முகூர்த்த பட்டைதான் அணிந்திருக்கிறாளா? என
உறுதி செய்துகொண்டு நண்பனை அனுப்பி தன் அன்னையை வரவைத்து இருந்தான், வேநதன் தன் திட்டத்தை சொல்ல துவங்க துவங்க கமலாவுக்கு தான் பதற்றம் தொற்றிக்கொண்டது.

"டேய் என்னா டா நீ இப்படி செஞ்சிட்ட, முன்னவே சொல்லி தொலைக்கிறது தானே, குழலி பாவம் டா"

"அவளுக்கும் இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை மா"

"சரிவா அண்ணிக்கிட்ட பேசிட்டு ஒரு முடிவு எடுக்கலாம்"

"அத்தைகிட்ட சொன்னா எதும் புரோஜனமில்லை, ஊருல நாலுவிதமா பேசுவாங்க"

"டேய் கடுப்பை கிளப்பாம, அடுத்து என்ன செய்யுறதுன்னு சொல்லு"

"உனக்கு ஹாட் அட்டாக் வரனும் வேற வழியே இல்லை" வேந்தன் சாதாரணமாக சொல்ல.

"எதே டேய் என்னை சாக சொல்லுறியா. மனசாட்சி கெட்டவனே..."

"அட லூசு அம்மா நடிக்கதானே சொன்னேன்"

"டேய் மடையா... இப்ப தான்டா குழலிய தப்பா பேசுவாங்க அதிர்ஷ்டம் இல்ல அது இதுன்னு"

"அமா இல்ல" கமலா தான் பெற்ற அறிவு ஜீவியை முறைக்க.

"ரொம்ப சந்தோஷத்துல வந்திடுச்சின்னு சொல்லி சமாளிச்சிக்கலாம், நீ நடிப்ப துவங்கு"

"எது நடிப்பையா... டேய் அது எல்லாம் வராது டா" கமலா பதறினார்.

"உன்னை என்ன டைலாக்கா பேச சொன்னேன்... மா மயங்கி விழுமா மத்ததை நான் பார்த்துக்கிறேன்"

வேந்தன் தனது அன்னையை கூட்டு சேர்த்து நாடகத்தை துவங்கும் முன் சங்கவியின் குரல் "அக்கா..." என ஓங்கி ஒலித்தது, அந்த மண்டபம் அதிரும் வகையில்.

நடந்திருப்பதை ஒரு அளவுக்கு யூகித்தவன், "ச்சோ... அவசர பட்டுட்டா" விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனை அழைத்து சமையல் கட்டுக்குள் வேலை பார்த்திருக்கும் தனது டாக்டர் நண்பனை வரவழைத்துவிட, அவன் முதல் உதவி செய்து முடித்திருந்தான்.

"ரத்தம் அதிகம் போல, வேகமா ரத்தம் வரதை பார்த்து மயக்கம் போட்டு இருக்காங்க" கமலாவுக்கு தான் மனம் அடித்துக் கொண்டது குழலி நிலை பார்க்க பரிதாபமாக இருந்தாலும்.

மகனின் வாழ்க்கையை வேறு சரி செய்யனும், 'இந்த முகூர்த்தம் போனா கல்யாணம் ஆக பல வருஷம் ஆகும்'ன்னு ஜோசியர் சொன்னார்ன்னு சொல்லி சங்கவிய எப்படியாவது கட்டி வச்சிடனும். இப்ப விட்ட இவங்க கல்யாணம் நடக்காம போயிடும்' மனதில் கமலா கணக்கு போட.

ஆனால் கமலாக்கு சங்கவியின் வயது ஒரு தடையாக பட்டது, எப்படி பாரத்தாலும் கட்டாயம் செய்வது போல வருமே, என்ன செய்ய வேந்தனின் வாழ்க்கையா இந்த வயது தடையா என பார்க்கும் போது வயது தடை எல்லாம் கமலாவுக்கு பெரியதாக படவில்லை.

ராகவி தோளில் சாயிந்து அமர்ந்திருக்கு சங்கவி கண்ணில் பட, புடவையில் வளர்ந்த குமரியாக தான் தெரிந்தாள், சிறு பெண்ணின் சாயல் சிறிதும் இருக்கவில்லை. ஆனால் கமலாவுக்கு தயக்கம் எப்படி நேரடியாக கேட்பது கொஞ்சம் கலவரம் ஆகி கேட்டா தான் சரியா இருக்கும் என மனக்கணக்கு போட்டுக்கொண்டிருந்தார்.

குழலி விழிக்கும் வரை பொறுத்திருந்த கமலா ஆரம்பிக்க, "என் பையன் வாழ்க்கைக்கு என்ன பதில் அண்ணி?" ராகவி கையை பிசைந்துக்கொண்டு நின்றிருக்க.

"மா நான் என்ன சொன்னா நீ என்ன செஞ்சிட்டு இருக்க" வேந்தன் காதை கடித்தான்.

"நி அமைதியா இருடா... இதுல நீ தலையிடாத. நான் உன் நல்லதுக்கு தான் செய்வேன்"

கமலாவை பேசவிடாது, "மா கிளம்பலாம் வா" என கை பிடித்து இழுக்க.

'அடப்பாவி மகனே இப்படி தெறிச்சி ஓடுற, ஆனா இன்னைக்கு உனக்கு கல்யாணம் நடத்திவச்சே தீருவேன்டா' கமலா உறுதியாக தனியாக கலத்தில் இறங்கினார்.

தியாகி போல அந்த இடத்தைவிட்டு போவதிலேயே குறியாக இருந்தான் வேந்தன்.

நேற்று இரவு பல கனவுகளோடு தான் புடவையை கொடுத்தான், திருமண கோலத்தில் பார்க்க இரண்டு வருடம் ஆகும் அதுவரை இந்த கோலத்திலாவது பார்க்க தான் புடவை கொடுத்திருந்தான்.

இங்கு நடக்கும் கலவரத்தை பார்த்து சங்கவி இன்னும் அதிகம் அழுக. அவளது அழுத முகத்தை பார்த்து, அன்னையின் திட்டமும் அவனுக்கு புரிந்து போனது. மீண்டும் அவள் மனதை வதைக்க விரும்பாதவன் கமலாவை அழைத்துக்கொண்டு போவதிலையே குறியாக இருந்தான்.

வேந்தனுக்கு இவ்வளவு பிடிவாதமாக இருந்தால் வேந்தனை பெற்ற தாய் அல்லவா எவ்வளவு பிடிவாதம் இருக்கும்.

"உங்க இரண்டாவது பெண்ணை கட்டி கொடுங்க" நேரடையாக கமலா கேட்க.

"அவ..." சங்கவியை ராகவி பார்க்க.

அக்காவையும் அம்மாவையும் பரிதாபமாக சிறியவள் பார்க்க. சில நிமிடங்களில் குழலி இடத்தில் சங்கவியை அமர வைத்திருந்தார் ராகவி. சங்கவியின் குழப்பமுடைய முகத்தை பார்த்து,

வேகமாக மேடை ஏறிய ராகவி சங்கவி காதுக்கருகில், "என்னை மன்னிச்சிடுமா, இப்படி நடக்கும்'ன்னு எதிர் பார்க்கலை" கலங்கிய தாயை உத்து பார்த்தாலே தவிர எதும் பேசவில்லை சங்கவி. அவளது மனம் முழுவதும் அக்கா வாழ்க்கை பற்றிய நினைப்புதான் ஓடிக்கொண்டிருந்தது.

சங்கவி அடாவடியான பெண்ணாக இருந்தாலும், இளகிய மனம் படைத்தவள். உறவாக வரவிருக்கும் வேந்தன் முகம் அக்கா செயலால் முகம் வெளுத்ததை பார்த்தபோதே கலங்கியவளுக்கு பெற்ற தாய் கலங்குவதை தாங்க முடியுமா. என்ன தான் ராகவிக்காக மேடை ஏறி அமர்ந்தாலும் அக்கா வாழ்க்கை இப்படி ஆகிடுச்சே நேற்றுவரை அக்காவின் கணவன் இவர், வரப்போகும் புது மாமா... புது உறவாக வரப்போகிறான் என நினைத்து குதூகலமாக இருந்தவள் மனம் வெறுமையை தத்தெடுத்துக்கொண்டது.

அத்தான் மாமா என உரிமையோடு விதவிதமாக அழைத்தவளால் வேந்தன் அருகில் துணைவியாக அமரவும் முடியாமல், புழுவாக துடித்தாள் சங்கவி, அவளது தவிப்பை பார்த்து வேந்தன் அவளை விட அதிகம் துடித்தான்.

அவனை கணவனாக நினைக்கவே நாராசமாக இருந்தது, மனதில் ஆழமாக பதிந்து போயிருந்த அக்கா கணவன்.. இருவருக்கும் இடையில் பெரிய பாலமாக எழுந்து நின்றது.

நிஜம் அவளது புத்திக்கு புரிகிறது, அக்கா மனதில் வேறு ஒருவன் இருக்கிறான், அக்காவை எண்ணுகையில் நிம்மதி, 'ஆனால் வேந்தன் மனதில் அக்கா தானே இருக்கா' பல மனக்குழப்பத்தில் இருந்தவளை பார்த்து வேந்தனால் பொறுக்க முடியவில்லை.

"சங்கவி, விருப்பமில்லாமல் இது எல்லாம் வேண்டா" என எழ போனவனை கை பிடித்து நிறுத்தினாள்.

"வேண்டா எங்க அம்மா பாவம்... அழுவாங்க" சங்கவியின் உடைந்த குரல் கேட்டதில் அவனது உடல் தளர்ந்து அப்படியே அருகில் அமர.

அவசர திருமணம் போலில்லாமல், திருமண வைபோகம் பொறுமையாக துவங்கியது. முதலில் பெண் மாறியது சலசலப்பு ஏற்பட்டாலும் தாலி கட்டும் போது மங்கள இசையோடு சேர்ந்து அந்த சலசலப்பும் அடங்கிப் போனது.

அனைத்து சடங்குகளும் முடிய விருந்தினர்களை சாப்பிட அனுப்பிவிட்டு இரண்டு குடும்பம் மட்டும் மனமகள் அறையில் அமர்ந்திருந்தனர்.

ராகவி முகத்தில் திருமணம் முடிந்து கூட பதற்றம் நிக்கவில்லை. ஆனால் குழலிக்கு தன் வாழ்க்கை தனியாக இருப்பது நிம்மதி தந்தாலும். தன்னால் தங்கை வாழ்க்கை இக்கட்டில் சிக்கிவிட்டதே என வருந்தியது. இனி அம்மாக்கு துணையா, தங்கைக்கு தேவையானதை செய்து வாழ்க்கை ஓட்டிடனும் என எதிர்கால திட்டத்தை பெரியதாக தீட்டினாள்.

ஆனால் இவளின் தங்கை வேறு திட்டம் போட்டிருந்தாள்.

"அண்ணி பொண்ணு மாப்பிள்ளை கூட்டிட்டு போகலாம்" குழலியும் அவர்கள் கூடவே எழுந்துகொள்ள.

"நீ எங்க வர?" ராகவி குழலியை தடுத்தி நிறுத்தினார்.

"மா" குழலி அதிர.

"உன்னை தூக்கி வந்து வளர்த்ததுக்கு நல்ல பேர் வாங்கி கொடுத்துட்ட. போதும் இந்த போரே எனக்கு மனசு நிறைஞ்சிடுச்சி. இனி என் மூஞ்சில் முழிக்காதே"

"மா என்ன பேசிட்டு இருக்க, அக்கா எப்படி தனியா இருப்பா"

"நீ அமைதியா போ டி, அவ வேலைக்கு போரா அவளை பார்த்துக்கொள்ள அவளுக்கு தெரியும். அதான் பெரியமனுஷி பெரிய பெரிய காரியம் எல்லாம் தனியா எடுக்கறாங்களே" ராகவி குழலி வெட்டுபட்ட கையை பார்த்து கோபமாக சொல்ல.

"வேந்தன், சங்கவியை கிளம்பு போலாம்"

"நான் வரலை மா" சங்கவி குரல் ராகவியை தடுத்தது.

"சங்கவி பைத்தியம் போல பேசிட்டு இருக்காத"

"அக்காவை அவளுக்கு பிடிச்ச மாமா கூட சேர்த்து வைக்கனும், அப்போ தான் வருவேன் இல்ல, நானும் அக்கா கூடவே தனியா போறேன்" விடாப்பிடியாக நின்றாள் தங்கை அக்காக்காக அறவழி போராட்டத்துக்கு தயாராக.

ராகவி மிரட்டி, கெஞ்சி, அழுது என விதவிதமாக சின்ன மகளை கிளம்ப வைக்க வெவ்வேறு அவதாரம் எடுக்க. அவளோ வாயை இறுக்க மூடி நின்றாள், நான் சொன்னது தான் இறுதி முடிவு என.

சோர்ந்து போன ராகவி, "சங்கவி உனக்கு இப்ப என்ன தான் வேணும்?"

"அக்காவ அவ விருப்ப பட்டவங்க கூட வாழவைக்கனும், அவ வாழ்க்கை சரி செஞ்சிட்டு வாங்க, அப்போ தான் நான் அத்...தை வீட்டுக்கு போவேன்" அத்தான் என துவங்கி அத்தை என முடிக்க வேந்தனுக்கு மனதில் அடிவாங்கியது போல இருந்தது.

இன்று தான் அவளை திருமணம் செய்யவேண்டும் என அவன் அவசர பட விரும்பவில்லை, குழலி செய்த செயலா? இல்ல விதி செய்த விஷமமா? ஏதோ ஒன்று வேந்தனின் வரவிருக்கும் நாட்களை புரட்டி போட காத்துக்கொண்டிருந்தது.

ராகவியும் சங்கவியின் பிடிவாதத்தில் இறங்க வேண்டிய நிலை, கமலா பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

குழலியை அழைத்துக்கொண்டு விக்கி ஊருக்கு புறப்பட்டு விட

கமலா மகனுக்கு பிடித்தவளோடு திருமணம் ஆனதே திருப்தி தான் அவருக்கு, அதன் பிறகு பார்வையாளராக நின்றுவிட்டார். சங்கவியை எப்படி சமாளிப்பது என்றுதான் யோசனையோடு இருந்தார். வேந்தன் நொடிக்கு ஒரு முறை சங்கவியை பார்த்தவாறு இருக்க. சங்கவி மனமேடையை வெறித்து பார்த்துவிட்டு மணமகள் அறையில் நுழைந்துக்கொண்டாள்.

"மா..சங்கவி தனியா இருக்கா வா உள்ளபோலாம்"

"பாருடா மனைவிமேல பாசத்தை"

"நான் பாசம் வைக்காம யார் வைப்பாங்களாம் அவ மேல" இருவரும் சங்கவியை தொந்தரது செய்யது உட்கார்ந்துக் கொண்டார்கள்.

பழைய நினைவுகளில் இருந்து வெளிவந்த குழலி வருத்தமான நிகழ்காலத்தில் சிக்கிக்கொண்டாள் விரும்பியே.

'தங்கை வாழ்க்கையை வேறு கொடுத்துவிட்டோமே, படிக்கும் பெண்' , வேந்தன் பார்த்துக்கொள்வார் என நம்பிக்கையும் சேர்ந்துகொள்ள. ராகவியை வருத்திவிட்டோமே தாய்க்கு தாயாய் தந்தைக்கு தந்தையாக இருந்தவரை இப்படி கஷ்டபடுத்தி அவமானம் தேடி கொடுத்துட்டோமே என மனம் வருந்தியது. நிம்மதியாக அடுத்த விடியலுக்காக காத்திருந்தாள். நிலவை பார்த்துத்கொண்டே தூங்கி இருந்தாள்.

வெயில் முகத்தில் படும் போது தான் எந்திரித்தாள், "இங்கவே படுத்துட்டோமா?"

இதுவரை நடந்ததை எல்லாம் நினைத்து பார்த்தவளுக்கு தன் மீதே அளவுக்கடந்த கோபம் ஏற்பட்டது. இந்த மூன்று எழுத்து காதல் தம்மை இப்படி பலவீனமாக மாற்றிவிட்டதே. கையிலிருந்த கட்டை வருடிக்கொண்டே,

"இல்ல இனி இந்த பலவீனம் நமக்கு இருக்க கூடாது. வெட்டுப்பட்ட கையை பார்த்து. கட்டை பிரித்து பார்த்தவளுக்கு ஒன்று தான் தோன்றியது.

கோலையாகிவிட்டேனே? இனி இதுபோல நடக்காது, இனி என் சுயத்தை இழக்கமாட்டேன். என் தன்மானத்தை விட்டுக் கொடுக்கமாட்டேன். தேவையில்லாமல் அடங்கி போகமாட்டேன். இனி நான் நானாக இருப்பேன் என் இறுதி மூச்சிவரை" உறுதி எடுத்தவள் நேற்று நடந்ததை அசைபோட்டாள். இவர்கள் செய்தது எல்லாம் அதிகப்படியாக இருந்தது. நேற்று இருந்த மனநிலையில் சுத்தமாக உணரவில்லை குழலிக்கு.

"என்னை ஒதுக்க, என்னை அதிகாரம் செய்ய இவர்கள் யார்? ஒரு நாள் இவர்கள் ஆட்டிவித்தது போதும் இனி என் ஆட்டம் துவங்கும்...

தவறு செய்தது அவன். நான் ஏன் பணிஞ்சி போகனும்? காதலித்து ஆசை வளர்த்தது விட்டுசென்றது அவன் குற்றம். இங்கு கோபம் கொள்ள வேண்டியவள் நான். அவனில்லை...

நிறைய விளையாடிட்டிங்க மிஸ்டர ராஜா இனி. என் ஆட்டம் பார்க்க தயாரா இருங்க. தனது இந்த மாற்றத்தை ராகவிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பிவிட்டு. இந்த விடியலை தன்வசமாக்கிக்கொண்டாள் இந்த புது பெண்.

கதை பற்றி சொல்லுங்கள் அழகிஸ்😍

 

T22

Well-known member
Wonderland writer
9 சிவப்பழகியே...

குழலி எழுந்து அவனது அறையை எட்டிப்பார்க்க அது வெறுமையாக இருந்தது. மெல்ல நடந்துவந்தவள் குளியலறைக்குள் நுழைந்த போது தான் நினைவுக்கு வந்தது பேஸ்ட் பிரஸ் எல்லாம் பேகில் தானே இருக்கு, ஹாலிலுள்ள சோபாவின் சந்தில் வைத்தது நினைவுக்கு வர.

'நல்லவேலை கல்யாணத்துக்கு தேவையானதை எடுத்துவைத்தது எல்லாம் அந்த பேகில் தான் இருக்கு'

"சே... இப்ப எடுக்க போன ஓவரா பண்ணுவாங்க" நினைக்கும் போதே சோர்ந்து போனாள் குழலி. "இவங்களுக்கு எதுக்கு பயப்படனும். இரண்டுல ஒன்னு பார்த்துட வேண்டியது தான். நேற்று போல இவங்களுக்கு அடங்கி இனி எப்பவும் இருக்க கூடாது" புதுமை பெண்ணாக முடிவு எடுத்தாள்.

கதவில் கை வைக்க, அது திறக்குவேனா என அடம் பிடித்தது.

"ச்சே... நான் இருக்கிறது மறந்து வெளியே சாத்திட்டு போயிட்டான் போல" கதவை தட்ட துவங்கினாள், 'ஆள் பக்கமில்லை போல' என நினைத்துக்கொண்டு யாரின் தலையாவது தெரிகிறதா என பால்கனி வழியாக எட்டி பார்க்க,

மலர்கொடியும் அவளது கணவன் தியாகு குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு காரில் ஏற தயாரானார்கள். விக்கி அக்கா மகளிடம் ஏதோ பேசி கொஞ்சிக் கொண்டிருந்தான்.

இவனது சிரித்த முகத்தை ரசித்துத்கொண்டே நின்றிந்தவளுக்கு சுற்றி நடந்தது அனைத்தும் மறந்தது, 'இதுதான் காதல் பித்தா? என்னை பித்துப்பிடிக்க வைத்துவிட்டு சந்தோஷமா இருப்பதை பார்' மனதோடு திட்டினாள். இனி உன்னை நிம்மதியா இருக்கவே விடமாட்டேன் டா' மனதில் விஷமமாக சிரித்துக்கொண்டே தன்னவனை பார்க்க.

குழலி கண்ணில் மலர்கொடியின் செயல் ஒருவித நெருடலை தந்தது, 'இவ எதுக்கு அத்தையை தனியாக தள்ளிட்டு போறா?' மேலே நின்றிருப்பவளை யாரும் பார்க்கவில்லை.

பவளத்தை அழைத்துக்கொண்டு ஓரமாக நின்று ரகசியம் பேச துவங்கினாள் மலர்கொடி.

"மா சொன்னது நியாபகம் இருக்கட்டும், அவகிட்ட பேசி வச்சிடாத புரியுதா தலைமேல ஏறி உட்காந்துப்பா. அப்புறம் உன் மகன் உனக்கில்லை" முடிந்த அளவுக்கு தாயின் மனதை சலவை செய்த திருப்தியோடு கணவனோடு சந்தோஷமாக செலவிட கிளம்பியாச்சி.

இவள் மட்டும் குடும்பத்தோடு குதூகளிக்கனுமாம், தம்பி மட்டும் தனியா இருக்கனுமாம் நல்ல எண்ணம் இந்த மலர்கொடிக்கு.

அந்த கார் கிளம்பியதும் அப்படி ஒரு நிம்மதி குழலிக்கு, 'முதல்ல இந்த அத்தையை சரி கட்டுவோம். என்னாமா சவுண்டு விடுது. தானா விடலை இந்த விஷ கொடி மின் இருந்து கீ கொடுக்குது' என்னதான் தைரியமாக குழலி முடிவு எடுத்தாலும். இந்த தனிமை அவளை பாதிக்கத்தான் செய்தது. மனம் வருந்தியது பேச ஆளில்லை என.

'ரொம்ப சந்தோஷப் படாதே இரண்டு நாள்ல வந்து திரும்ப ஆரம்பிப்பா குத்தல் பேச்சை' அவளது மனசாட்சி விஷ கொடியை பத்தி சொல்ல.

'அவளுக்கு மட்டும் தான் குத்தி பேச தெரியுமா? நான் கண்ணாடி போல அப்படியே எதிரொளிப்பேன்'

விக்கி எதர்ச்சையாக திரும்ப மேல் பார்க்க, இருந்தவளை பார்த்த அவனது விழிகள் பார்த்த வேகத்தில் வேறு பக்கம் திரும்பியது. அவனது இந்த செயலில் மிகவும் அடிவாங்கியது காதல் கொண்ட மனம். 'குழலி ஸ்ட்ராங்' மனதை தேத்தினாள் , அவளையும் மீறி பழைய நினைவுக்கு அடித்து சென்றது அவளது எண்ண அலைகள்.

வகுப்பறையில் ஆசிரியர் இருக்கும் போதுகூட ரசனையாக தொடரும் அவனது பார்வையில், இப்போது ஏன்? இந்த மாற்றம் இதற்க்கு பின் பெரிய காரணம் இருப்பது மட்டும் நன்றாக புரிந்தது குழலிக்கு. அதுமட்டுமில்லாமல் பவளம் பேச்சுக்கும் அவர் குணத்திற்க்கும் ஏணி வைத்தாள் கூட எட்டவில்லை, 'ஏதோ இருக்கு, முதலில் கண்டு பிடிக்கறேன்'

'மூஞ்சவா திருப்புற இரு டா மாமூ உனக்கு இருக்கு'

"விக்கி..." தலையை உயர்த்தலாமா வேண்டாமா என யோசித்துவிட்டு வேண்டா வெறுப்பாக அவளை பார்க்க.

"விக்கி சொல்லாத ராஜா" என அழுத்தி சொன்னான்.

"சாரி ராஜா போதுமா, கதவு தெரியாம சாத்திட்டிங்க போல..."

"தெரிஞ்சி தான் சாத்தினேன்" என்றவன் சாவகாசமாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு காலம் தாழ்த்தி வந்து கதவை திறக்க.

'டேய் ஓவரா போயிட்டு இருக்க. இரு போயிட்டு வந்து கவனிச்சிக்கறேன். உனக்கு கடைசி வாய்ப்பு கொடுக்கறேன். இதுல என் வழிக்கு வந்தா சரி இல்லை. என் வழி மிக கொடுறமா இருக்க போகுது'

வெளியே சென்று பேகை எடுக்கும் போது, "காலையிலையே இந்த மூஞ்சிலையா முழிக்கனும்" பவளத்தின் குத்தல் பேச்சில் கேட்க, அமைதியாக பேகை எடுத்துக்கொண்டு ராஜா அறைக்குள் நுழைய.

'ஏய் கிழவி பேசு பேசு உன்னை வச்சி செய்யுறேன்' அமைதியாக அங்கு நடப்பதை கவனிக்க துவங்கினாள்.

பேகை திறந்து தேவையானது அனைத்தும் இருக்கா என பார்க்க, "நல்லவேலையாக இரண்டு செட் உடை இருந்தது எப்படியும் சமாளிச்சிக்கலாம்" விக்கி மெத்தையில் கவிழ்ந்து படுத்து பாட்டுகேட்டுக்கொண்டிருக்க.

"விக்கி..."

"ராஜா" என அழுத்தி சொன்னான்.

'சரியான லூசு ஏழு பேர் வச்சிகிட்டு நம்ம உசிரை வாங்குது'

"சரி... ராஜா...போதுமா... சோப்பு வேணும்"

"அது எல்லாம் தர முடியாது அமர்த்தலாக சொல்ல.

'ஆரம்பமே அமர்கலமா இருக்கே, சோப்பு கூட வா தரமாட்டான் சரியான கஞ்சப்பையன். நீ நடத்து ராசா எல்லாம் நன்மைக்கே' மனதில் அவனை வதக்க துவங்கி இருந்தாள்.

"மனசில் திட்டுறதா நினைச்சி வெளியே திட்டுற"

"கேட்கனும்'ன்னு தான் சத்தமா சொன்னதே"

"அடிங்கு..." தலையை சண்டை சேவல் கணக்காக சிலுப்பிக்கொண்டு எழுந்தான்.

அவன் எழுந்த வேகத்தில் மிரண்டவள் குளியல் அறையில் தஞ்சம் புகுந்துகொண்டாள்.

அவள் ஓடிய வேகத்தை பார்த்து ராஜா என இருக்கமான முகமுடியையும் மீறி விக்கி வெளியே வந்து இதழ்களை அழுத்தமாக பிரித்து சிரித்தான்.

மெத்தையில் படுத்திருந்தவன் எட்டி கண்ணாடியில் தன்னை பார்த்தான்.

அவளில்லாத நேரத்தில் உடலில் நிறைய மாற்றம் ஏற்பட்ட போதும், அதை எல்லாம் விரும்பாத அவனின் கண்கள் அவளால் ஏற்பட்ட சிறு புன்னகையை ரசித்தான்.

"கிறுக்கு ராட்சசி எப்படி வாயாடுறா பாரு நாட்டுகட்டையாம்ல" அவனது உடலும் அதுபோல தான் இருந்தது. அவனது இனிமையான புன்னகை நொடிப் பொழுதில் பழையதை நினைத்து இறுகியது.

'விக்கி... அவ முன்னாடி சிரிச்சி வைக்காத, அவ இங்க இருக்கக் கூடாது, முதல்ல கிளப்பனும் நானே நரகத்தில் இருக்கேன், அவ தேவதை சொர்கத்தில் இருப்பவள். இந்த வாழ்க்கை வேண்டாம் அவளுக்கு, பெரிய இவ மாதிரி வந்துட்டா ச்சை... அறிவு கெட்டவள்" எப்படி இவளை துரத்துரது என வரிசையாக திட்டம் தீட்டத் துவங்கினான்.

போன் போட்டு அலுவலகத்துக்கு ஒரு மாதம் எமர்ஜன்சி லீவ் கையோடு போட்டுவிட்டான்.

"உனக்கு ஒரு மாதம் எல்லாம் அதிகம், இன்னும் பத்து நாளில் ஓட ஓட துரத்துறேன் இருடி" என மனதில் குறித்துக்கொண்டு, அன்றாட வேலையை பார்க்கத் துவங்கி இருந்தான்.

"மா பசிக்குது"

"வா பா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்" அப்போது தான் குளித்து முடித்து அவனது அலமாறியில் இருந்த துண்டை தலைக்கு கட்டிக்கொண்டு கீழிறங்கியவள் காதுக்கு நன்றாக கேட்டது.

'நேத்து இவரா தானே போட்டு சாப்பிட்டார் அதுமில்லாம. துள்ளல் சவுண்ட் எல்லாம் அதிகமா இருக்கு, ஏதோ நெருடலாக இருக்கே' கணவனை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே வந்தாள்.

'உன் வாழ்க்கையே அந்தரத்தில் இருக்கு பக்கி, இதுல இவனை பத்தி யோசிக்கிற. நேத்து நம்ம மூஞ்சை பார்த்து கடுப்புல இருந்து இருப்பான்' யோசனையோடு கீழே வந்தவள், அவன் அருகில் வந்து நிற்க.

"ஏய் எதுக்கு டி என் பையன் சாப்பிடுறதை பார்த்துட்டு இருக்க?"

"பசிக்குதுங்க" பவளம் கேட்டதுக்கு தன்னவனை பார்த்து பதில் சொன்னாள்.

"மா நீங்க எதுக்கு டென்ஷன் ஆகுரிங்க விடுங்க, ஏய் நீ ரூம்க்கு போ, தேவையில்லாம என் அம்மாவை கடுப்பு அடிக்காத"

'இவ்வளவு பெரிய வீடு காட்டுல வந்து கட்டி வச்சி இருக்காங்க சரியான காட்டுவாசி குடும்பம் ஒரு சோறாவது போடுறாங்களா கல் நெஞ்சக் காரங்க. ரூமிலாவது தங்க இடம் கொடுத்தாங்களே அதை நினைச்சி சந்தோஷப்படு குழலி' ஈரத்தலையை உலர்த்த கூட மறந்து அவனது மெத்தையில் உட்கார.

சாப்பிட்டு முடிச்சி நேராக வந்தவன் வல்லென குறைத்தான், "அசிங்கமா இல்ல உனக்கு. இப்படி தான் சாப்பிடும் போது வந்து கண்ணு வைப்பியா? எனக்கு லைட்டா வயிறு வலிக்குது"

'அடப்பாவி... சும்மா ஒரே பார்வை... பார்த்ததுக்கு வலிக்கும்டா வலிக்கும், வயிறு நிரம்ப தின்னா இப்படி தான் வலிக்கும்... கிராதகா'

"என்ன மூஞ்சில படம் ஓடுதா? கேட்டதுக்கு பதில் சொல்லுடி"

"எனக்கு பசிச்சது அதான் வந்தேன், இனி வரலை போதுமா" தலையை திருப்பிக் கொண்டாள் என்னதான் சுமுகமாக போக நினைத்தாலும் லூசு போல இவன் செய்வது கடுப்பை கிளப்பியது.

"ஏய் தலையில என்ன"

"என்ன ஒன்னுமில்லை" தலையை தொட்டு பார்த்து,

"என்ன இருக்கு, ஒன்னுமில்லையே" கண்ணாடியில் தன்னை ஆராய.

"இது என் துண்டு எதுக்கு டி எடுத்த, கொடு டி, என் பொருளில் கைவைக்க நீ யாரு?" கையை நீட்டினான்.

"எது? அட கஞ்சப் பயலே"

"ஆமா டி நான் கஞ்சன் தான், முதல்ல கொடு டி எனக்கு சொந்தமான எதும் நீ எடுக்கக் கூடாது" விரல் நீட்டி எச்சரிக்க, அவனது ஆள் காட்டி விரலுக்கு ஒரு குட்டி முத்தம் கொடுக்க, "ங்கே..." என கம்பிரமாக இருந்த ராஜா அதிர்ச்சியில் கண்கள் விரிந்துகொள்ள.

'மாமோய்... உன் வீக்னெஸ் கண்டு பிடிச்சிட்டேன் டா, இனி இருக்கு உனக்கு, சும்மா தொட்டாவே உருகுற. காதல் அப்ப இருந்து இப்ப இல்லைன்னு டைலாக்கா விடுற இருடா இருக்கு உனக்கு'

"இனி சத்தமா பேசாத டா இப்படி தான் பனிஸ்மென்ட் கொடுப்பேன்" அதிர்ச்சியில் இருந்து வெளி வந்தவன்.

"என்கிட்ட உன் வாலு தனத்தை காட்டாத டி"

"நீ டி சொன்னா ஜில்லுனு இருக்கு ராஜா மாமோய்" ஒற்றைகண் சிமிட்ட,

"ஏய் யாருக்கு யாரு டி மாமா, வாயை கிழித்து சுன்னாம்பு வச்சிடுவேன். நேத்து பிள்ளை பிடிக்கறவ மாதிரி இருந்துட்டு இன்னைக்கு குரல் உயருது அடக்கி வாசி டி"

"அடக்கி தானே வாசிச்சிட்டா போச்சி" கை கட்டி வாய் பொத்தி நின்று நக்கலாக ராஜாவை பார்த்து சிரிக்க.

"என்ன நக்கலா விளையாடுறியா, இந்த ராஜா பத்தி முழுசா தெரியலை டி உனக்கு"

"ஆமா எனக்கு என் விக்கி பத்தி தான் தெரியும், இந்த முகமூடி போட்ட ராஜா பத்தி தெரியலை சீக்கிரம் தெரிஞ்சிப்பேன். தெரிஞ்சிக்கிட்டு ரோட் ரோடா உன்னை என் பின்னாடி சுத்த விடல நான் குழலி இல்லை"

"அடச்சி... டைலாக் விட்டுட்டு துண்டை கழற்றி கொடு டி"

"முடியாது டா மாமூ" மயக்கும் குரலோடு மயக்கும் கண்களால் அவனுக்கு காதல் அம்பு விட, அதுக்கெல்லாம் மயங்குபவனா இவன்?

"ச்சை மாமூ கீமூன்னு, வாயை கிளிச்சிடுவேன்" அவள் தலையில் இருந்த துண்டை வலுக்கட்டாயமாக பிடித்து இழுக்க.

"ஆ... கிளிச்சிக்கோ மாமூ" நொடி பொழுதில் இருவரும் தடுமாறி மெத்தையில் சரிய.

இவனிடம் பேச இதை விட்டா வாய்ப்பு கிடைக்காது என தன் மேலிருந்தவனை மெத்தையில் தள்ளிவிட்டு மேலே வந்தவள் அவன் அசையாது போல கிடுக்கு பிடி போட்டாள்.

'இது உனக்கான கடசி சான்ஸ் டா விக்கி'

"ஏய் அசிங்கமா இல்லை... இப்படி பையன் மேல ஏறி இப்படி படுத்து இருக்க"

"இல்லையே ராசா... என் புருஷன் மேல விழுந்து கிடக்குறேன் உனக்கென்ன டா நாட்டுக்கட்டை, பரவால்லை ஒன்னரை வருஷத்துல ஆளே மாறிட்ட. என்னை பாரு நீ இல்லாத வெறுமையில சோகத்துல இருந்து இருந்து கொஞ்ச சதையும் கரஞ்சி, மெலிஞ்சி போயிட்டேன், ஆனா நீ செம நாட்டு கட்டை போல ஆகி இருக்க விக்கி... இல்ல உனக்கு தான் விக்கி சொன்னா பிடிக்காதில்லை ராஜா..." அவனது தோள் பட்டையில் இருந்து முழங்கை வரை அழுத்தி தேய்த்து அவனது கடினமான புஜங்களை அளவெடுத்துக் கொண்டிருந்தாள்.

தன்னவனின் வலிமையை கை கொண்டு குழலி சோதிக்க, ராஜாவின் கண்களோ அவளது உடலை கண்களால் சோதித்தது, ஆம் முன்பு கொழுகொழுவென இருக்கும் கன்னம் இப்போதில்லை.

குழலி முகத்தில் அவனுக்கு பிடித்தது அவளது வசிகர கண்கள், தனியாக தெரியும், சில நேரங்களில் அவள் கண்களை உருட்டி கதை பேசும் போது செல்லமாக முட்டக்கண்ணி என கொஞ்சி இருக்கிறான், கழுத்தின் விலா எழும்பு நன்கு தெரிந்தது.

இவளின் இந்த நிலைக்கு நான் தான் காரணம் அதே போல இனி வரும் துன்பத்துக்கும் நான் தான் காரணமாக போறேன்.


 
Status
Not open for further replies.
Top