ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் போதை தீயே! - கதை திரி

Status
Not open for further replies.

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
புது மனைவி கிறக்கத்தில் மெது மெதுவாக அவன் கால்கள் அவள் திசை நகர,

அவன் தன்னை நோக்கி தான் வருகிறான் என்பதை அவதானித்தவள், சட்டென்று திரும்பி அவன் கண்களை ஏறிட்டு பார்த்து, “குடிக்க தண்ணீ ஏதாவது வேணுமா?" இதயம் பட படக்க அவசர அவசரமாக கேட்டாள்.

அவன் ஏன் இங்கு இருக்கிறான்? என்ன வேணுமோ எடுத்துட்டு சீக்கிரம் போய் தொல என்ற தவிப்பு அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

“வேணும் தான். தண்ணீ இல்ல, வேற நிறைய வேணும்" என்றவன் மேலும் அவளை நெருங்க, ஏதோ சரியில்லை என்பது மட்டும் தெளிவாக புரிந்தது.

அவனை விட்டு ஓடவும் முடியாது, அவனுக்கு ஒத்துழைக்கவும் முடியாது அவளை தவிக்க விட்டு அவள் இருபுறமும் கேட் போட்டபடி சமையலறை திண்டில் கை வைத்து, தன் கரம் நடுவே சிறை வைத்து தான் அவளுக்கு பின்னால் நின்றிருந்தான்.

தன் ஆடை கூட அவன் மேனி உரசாது சுடர் முன் பக்கமாக சரியா, அவள் முதுகோடு ஒட்டிக் கொண்டே சரிந்த ஜெய், இத்தனை நேரம் தன்னை படாய் படுத்திய அவள் முதுகில் மெல்ல மீசை முடி உரச, உதடுகளால் கோலம் போட,

அடி வயிற்றில் பிரளயமே வெடித்த உணர்வு சுடருக்கு. காதல் இல்லை, மோகம் இல்லை, துளியும் காமன் அவளை ஆட்கொள்ளவில்லை. பயம் பயம் பயம் மட்டும் தான்.

அவன் அருகே வந்தாலே பயம் மட்டும் தான் வந்து தொற்றிக் கொள்கிறது.

மேலும் முன்னால் சரிந்தவள், இடை வழியே கைவிட்டு வயிற்றை அழுத்தி தன்னோடு நெருக்கி கொண்டவன், அழுத்தமாக முத்தமிட்டான் அவன் உதடுகள் கோலமிட்ட முதுகில்.

உடல் மொத்தமும் சிலிர்ந்து அடங்கியது சுடருக்கு.

“வி… விடுங்க…” என்று சத்தமின்றி அவள் முனங்க, அது ஏதோ தாப மொழி போல அவனை தூண்டி தான் விட்டது.

அவள் சொல்லிற்கு மறுபின்றி விட்டு விட்டான். ஆனால் மறு கணமே அவள் இடையை பற்றி முன்னால் திருப்பியவன் கைகள் அவனை பார்த்ததும் அவள் மறைத்த இடை சேலையை தாராளமாக கீழிறக்கி, இடுப்பு சதையை விரல்களால் கிள்ள, கண்ணீரே பெருகி விட்டது அவன் தாரகைக்கு.

வலியிலா என்று கேட்டால், நிச்சயம் இல்லை என்று தான் சொல்வாள். அவனை தடுக்க முடியாத தன் இயலாமையால் பெருகிய நீர் துளிகளை கண்களை விட்டு வெளி வராது தடுக்க போராடிக் கொண்டிருந்தாள்.

“என்னை பார்த்ததும் மறைக்கிற, நான் நினைச்சா இப்பவே இங்கேயே மொத்தமா உரிச்சு பார்ப்பேன். தெரியும் தானே?” என்று மிரட்டும் தொனியில் கேட்க,

இதயத்தில் பாரம் கூடி போன உணர்வு அவளுக்கு. இடை சேலையை சரி செய்வது பெண்களின் ஏதெட்சையான செயல் தானே, அதை கூட தவறு என்பது போல் சொல்கிறான்.

மற்றவனை பார்த்து சரி செய்தால் தவறு அல்ல, உற்றவன் பார்த்திட கூடாது என்று சரி செய்தது தான் பெரும் தவறாக பட்டது அவனுக்கு.

அவள் உடல் நடுங்குவது அவனுக்கும் தெரிகிறது தான். ஆனால் உள்ளே சுரக்கும் மோகத்திற்கு அவள் மட்டும் தானே தீனி.

முழுவதுமாக வயிற்று சேலையை நீக்கி விட்டவன், முழுக்கை சட்டையை முட்டி வரை மடித்து விட்டிருந்த தன் இரும்பு கைகளால் அவள் இடையை உரசி மேலும் தன்னோடு நெருக்கி கொள்ள, தன் உரமேறிய நெஞ்சில் மோதிய பஞ்சு தனங்களின் மென்மையை சுகித்த படி, தன் மீது மோதிய அவள் அங்கத்தை அளந்த படியே அவன் விழிகள் மேலெழுந்து அவள் முகத்தை பார்த்தன. ரத்தபசையின்றி வெளிறிய முகத்துடன் தான் மூச்சை உள்ளிழுத்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் அவன் மனைவி.

இப்போ உன்னால என்ன பண்ண முடியும் என்ற ஆணவ பார்வை அவனிடம், என்னை விட்டுடு என்ற கெஞ்சல் பார்வை அவளிடம். இடது பக்கமாக இதழை வளைத்து சிரித்து கொண்டவன், அவள் இதழ்களை பார்த்துக் கொண்டே தன் இதழ்களை ஈரமாக்கிட, உதறல் எடுத்தது சுடருக்கு. மதியம் கொடுத்த முத்தத்திற்க்கே இப்போது வரை அடிவயிற்றில் அவன் குமட்டுகிறது. மீண்டும் மீண்டுமா என்று தான் அவளுக்கு தோன்றியது.

அவள் முகத்தை நோக்கி அவன் குனிய, அவன் முகத்தை அத்தனை அருகாமையில் காண பயந்தவள், சப்பென்று தன் இதழ்களையும், விழிகளையும் மூடிக் கொண்டாள்.

அவள் செயல்களை கண்டு, தாராளமாக விரித்த அவன் கருத்த இதழ்கள் பிறை நெற்றியில் பூத்திருந்த வியர்வை துளிகளை சுவைத்தபடி அவள் நெற்றியில் தான் அழுந்த பதிந்தது. அவன் முத்தத்தை உணர்ந்தாலும், கண் திறக்கும் மார்க்கமே இல்லை மங்கையிடம்.

அடிப்படியில் நின்றிருந்த போது கூட வியர்க்க வில்லை. அரக்கன் வந்த அரை கணத்தில் உடல் முழுவதும் வியர்வையில் குளித்தாள். உதடுக்கு கொண்டு நெற்றியில் பூத்திருந்த வியர்வை துளிகளை துடைத்தவன், தன் தாடி அடர்ந்த கன்னத்தை அவள் பட்டு கன்னத்தில் உரசி நெற்றியில் இருந்த கன்னம் வடிந்த வியர்வையை துடைத்தான். இறுதியாக அவன் விழிகள் அவள் அதரங்கள் மேல் பள்ளத்தில் பூத்திருந்த வியர்வை மீது பதிய, விழி உயர்த்தி அவள் விழிகளை பார்த்தான்.

ம்ஹிம் நீ கொன்னே போட்டாலும், கண்களை திறக்க மாட்டேன் என்பது போல் சப்பென்று மூடுக் கொண்டு நின்றிருந்தாள்.

இத்தனை நேரம் அவன் இதழ்கள் கொடுத்த முத்தத்தை அவள் இதழ்களிடம் இருந்து வாங்கிக் கொண்டான், தன் வல கை பெரு விரலுக்கு மட்டும். உதட்டு பள்ளத்தில் துளிர்த்து நின்ற வியர்வையை அவன் பெருவிரல் கொண்டு துடைத்திட, சன்மானமாக அவள் இதழ்களை தீண்டி சென்றது அந்த ஒற்றை விரல் மட்டும் தான்.

“கிச்சன்ல ஏசி வைக்கணும் போலவே” என்று மெதுவாக அவள் காதருகே சொல்லிக் கொண்டே அவன் விலகிய பிறகும், பயத்தில் கண்களை மூடிக் கொண்டு, சிற்பம் போல் தன் மேனி அழகை மறைக்க மதியின்றி நின்றிருந்தவளை இதழை சுழித்து சிரித்தப்படி பார்த்துக் கொண்டே பின்னோக்கி அடியெடுத்து வைத்தவன், சிரித்துக் கொண்டே அந்த அறையை விட்டு சென்று விட்டான்.

“அம்மாடி… நான் என்ன சொல்லிட்டு இருந்தேன்” என்று கேட்டுக் கொண்டே வந்த கலாவதி குரலில் தான் இயல்புக்கு திரும்பினாள் சுடர்.

அவசர அவரமாக அவன் விலக்கி விட்டிருந்த சேலையை சரி செய்தவள், வேகமாக துடித்துக் கொண்டிருந்த இதயத்தை அடக்கவே படாத பாடுப்பட்டு போனால்.

“அய்யய்யோ, கரிஞ்சி போச்சா…” என்று அவளுக்கு பின்னால், அடுப்பில் அவள் கவனிப்பு இன்றி தீஞ்சி போய் இருந்த சப்பாத்தியை எடுத்து குப்பையில் போட்டு விட்டு அவர் திரும்ப,

மல மலவென கண்ணீர் சுடர் கன்னத்தில் இறங்கியது.

“இதுக்கு எதுக்கு கண்ணு அழுவுற? வேற போட்டுக்கலாம்” என்றவர் மருமகள் கவன குறைவால் சப்பாத்தி கேட்டதை எண்ணி தான் அழுகிறாள் என்று அவளை சமாதான படுத்த,

அவளோ அவர் மகனின் செயலில் தேங்கிய விழிநீரை வெளியேற்ற சந்தர்ப்பம் தேடி கொட்டிவிட்டாள் என்பதை அறியாமல் தான் போனார் அந்த தாய்.
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அத்தியாயம் : 10

இரவு உணவு சமைத்து முடித்து, கலாவதியை அருகே நிற்க வைத்து அவனுக்கு பரிமாறி அனுப்பியும் வைத்து விட்டாள்.

சில மணி நேரங்கள் ஆபீஸ் அறையில் வேலைகள் எல்லாம் முடித்து விட்டு, கையை நீட்டி நிமிர்த்தி முறுக்கி விட்டபடி படுக்கையறைக்கு வந்தான் ஜெய்.

அவனை தாவி வந்து கட்டிக் கொள்ளும் மனைவியை அவன் மணமுடிக்கவில்லை என்றாலும், அவள் அறையில் இருப்பாள் என்று எண்ணியவனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

அவள் வாசம் கூட அறையை விட்டு நீங்கி இருந்தது. மதியம் அறையில் வைத்து அவன் முத்தமிட்ட பிறகு இந்த அறை பக்கமே வந்திருக்க மாட்டாள் போல, பெண் வாசம் இல்லாது அவன் இரவு எப்படி கழியும், கட கடவென்று கீழே இறங்கி வந்தான்.

அவன் எண்ணியது போல் அவன் அன்னை கையை பற்றிக் கொண்டு கதையளந்துக் கொண்டிருந்தாள் அவன் மணாளினி.

நேரம் பத்து மணி கடந்து விட்டது. இருந்தாலும் அவனுக்கு பயந்து தான் சிக்கிய புண்ணியவதியையும் தூங்கவிடாமல் பிடித்து வைத்து கதை பேசியே நேரத்தை கடத்திக் கொண்டிருகிறாள்.

அவள் எண்ணம் புரியாதவரும், மணியாவதை கூட கருத்தில் கொள்ளாது மருமகளோடு அமர்ந்து செத்து போன அவர் முப்பாட்டன் வரலாறு வரை சொல்லிக் கொண்டிருந்தார்.

கள்ளி… என்று அவளை செல்லமாக கடிந்துக் கொண்டவன், தரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இருவருக்கும் நடுவே வந்து அமர, அவன் அன்னை நேசமாக புன்னகைத்தார் என்றால், அவன் பாதியோ அவனை விட்டு நான்கு அடி விலகி அமர்ந்துக் கொண்டாள்.

“என்ன ய்யா வேலையெல்லாம் முடிஞ்சதா?” என்று கலாவதி கேட்க, “ஹ்ம்ம்… எல்லாம் முடிஞ்சது, ஒரே ஒரு வேலை மட்டும் தான் முடியாமலேயே இருக்கு” என்று மனைவியை பார்த்து மார்க்கமாக சிரித்துக் கொண்டே சொன்னபடி அன்னை மடியில் தலை வைத்து, எட்டி அமர்ந்திருந்த மனைவி மடியில் கால்களை தூக்கி போட அவளுக்கோ திடுக்கென்று ஆனது.

ஆர்ம் கட்டும், ஹாஃப் ஷார்ட்ஸ்ம் அணிந்து இருந்தவன் வெற்று கால்கள் உரிமையாக மனைவியின் தொடையில் உறவாடி கொண்டிருந்தது.

“ரொம்ப நேரம் கண்ணு முழிச்சி வேலை செய்யாத ய்யா, எதுவா இருந்தாலும் நாளைக்கு காலைல செஞ்சிக்கலாம்” என்று அவன் தலை முடியை கோதி விட்டபடியே அக்கறையாக சொன்னார் கலாவதி.

பாவம் அவர். ஒரு பிள்ளை பெத்தும் விவகாரம் பிடிச்சவன் எதை சொல்கிறான் என்பதை அறியாது போனார். (பாவம் இந்த அம்மா இல்ல, இவங்களை கல்யாணம் பண்ணி ஒன்மேன் ஆர்மியா பிள்ளையை கொடுத்த அந்த மகான் தான் பாவம்.)

“நாளைக்குனு ஒதுக்கி வச்சா சரி வராது ம்மா, எதுவா இருந்தாலும் இன்னைக்கு நைட்டே முடிச்சிடனும்” என்றவன் கண்கள் மூடி இருந்தாலும், கால் விரல்கள் மனைவியின் மடியில் சில்மிஷம் செய்துக் கொண்டு தான் இருந்தது.

அவளும் நெளிந்து கொண்டு சும்மா இல்லாது, தன்னிடம் சில்மிஷம் செய்யும் விரல்களை வளைத்து, நெளித்து சொடுக்கு விட்டுக் கொண்டிருந்தாள்.

ஏதோ அந்த நேரம் அவளால் முடிந்த சிறிய வலியையேனும் அவனுக்கு கொடுக்க வேண்டும் என்று எண்ணி தான் விரல்களுக்கு செடுக்கு விட ஆரம்பித்தாள்.

ஆனால் அவள் செயல்கள் அனைத்தும் அவனுக்கு அல்லவா சாதகமாக மாறுகிறது.

இப்போதும் கூட, அலுவலக வேலையாக அலைந்து, மண்டை காய்ந்து வந்தவனுக்கு இந்த வலி கூட சுகமாக தான் இருந்தது.

கண்களை மூடி அந்த வலியை கூட ரசித்தவன் அப்படியே அன்னை மடியிலேயே தூங்கி விட்டான்.

"அய்யா… தூக்கம் வருதுன மேல ரூம்ல போய் தூங்கு ய்யா" என்று கலாவதி சொல்ல,

ஜெய்யோ விழிகளை திறந்து தன் மனைவியை தான் பார்த்தான்.

அதற்கு பிறகு தான் நேரம் காலமின்றி மருமகளோடு பேசிக் கொண்டிருப்பது அவருக்கு புரிந்தது.

"நீயும் போய் தூங்கு கண்ணு" என்று சுடரையும் அனுப்பி வைக்க முயல,

"இல்ல அத்தை எனக்கு தூக்கம் வரல, நான் உங்க கூட பேசிட்டு இருக்கேன்" என்றவளின் உள் அர்த்தம் புரியாது,

"எனக்கு தூக்கம் வருது கண்ணு. நாளைக்கு பேசிக்கலாம்" என்று இருவரையும் எழுப்பி அறைக்கு அனுப்பி விட்டே, அவரின் அறைக்கு வந்தார்.

ஜெய் குஜாலாக சிரித்துக் கொண்டே முன்னே சென்று விட, பரிதாபமாக கலாவதியை பார்த்துக் கொண்டே தான் அறைக்குள் நுழைந்தாள் சுடர்.

உள்ளே நுழைந்தவள், குனிந்த தலை நிமிராமல், திறந்து வைத்திருந்த கதவோடு ஒட்டிக் கொண்டு நிற்க,

"கதவ யாரும் தூக்கிட்டு போக மாட்டாங்க, அதுக்கு காவலுக்கு ஆள் வேணாம். நீங்க உள்ள வரலாம் பொண்டாட்டி" என்று நக்கலாக அவளை அழைத்தான் ஜெய்.

அவள் சேலையோடு இருப்பதை விழியால் சுட்டிக் காட்டி, "ட்ரஸ் சேஞ் பண்ணிட்டு வா" என்று சொல்ல,

"இல்ல… எனக்கு இதுவே சௌகரியமா தான் இருக்கு" என்றாள் அவளும்.

"ஹ்ம்ம்… எனக்கும் ரொம்ப சௌகரியமா தான் இருக்கும்" என்று அவன் சொன்ன தினுசிலே சமையலறையில் அவன் செய்த அழிச்சாட்டியம் கண் முன் வந்து போக,

ஓடி வந்து அவளுக்கான உடைகள் அடுக்கி வைத்திருந்த கபோர்டை திறந்தாள்.

ஒரே நாளில் அவளுக்கு தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்திருந்தான்.

ஒருநாள் கூத்து என்று அழைத்து வந்தவளுக்காக எதற்கு இதையெல்லாம் செய்கிறோம் என்று இப்போது வரை அவனுக்கு தெரியவில்லை.

கேட்டால் என் மனைவி என்ற அடையாளத்திற்காக மட்டுமே என்று மலுப்பல் பதில் வேறு அவனுக்கு அவனே சொல்லிக் கொள்வாள்.

பிறகு, ஜெய்யிடம் கேள்வி கேட்கும் அளவுக்கு யாருக்கு தைரியம் இருக்கிறது?

அவள் திறந்திருந்த கபோர்ட் முழுவதும் வித விதமான சேலைகள் மட்டுமே இருக்க,

"அடுத்து ஓபன் பண்ணி பாரு" என்று வாசல் கதவை அடைத்த படியே சொன்னான்.

அவளும் அடுத்த கபோர்டை திறந்து பார்க்க, இரவு உடைகள் பல வண்ணங்களில் ஜிகுஜிகுவென அணிவகுத்திருந்தது.

அதில் ஒன்றை எடுத்து தூக்கி பிடித்து பார்த்தாள். அவள் முழங்காலுக்கு சற்று மேலே தான் இருந்தது.

முன் கழுத்து தாராளமாக இறங்கி இருக்க, பின் கழுத்துக்கு துணியையே காணோம். பெயருக்கு கூட கைக்கு துணி வைக்காது, மெல்லிய ஒற்றை கயிறு தான் மொத்த உடையையும் தாங்கி பிடித்து கொண்டிருந்து.

"இதைவிட சின்னதா கிடைக்கலையா?" அதிர்ச்சி என்பதை கடந்து, இதெல்லாம் ஒரு ட்ரஸ்ஸ என்ற ரேஞ்சில் தான் சுடர் கேட்டாள்.

ஜெய்யோ, "நாளைக்கு வாங்கி வைக்கிறேன்" என்று சொல்ல,

"எதெய்?" என்று அசந்து தான் அவனை திரும்பி பார்த்தாள்.

அவன் எப்போதும் பார்க்கும் அதே பார்வையை தான் மனைவி மீது வீசிக் கொண்டிருந்தான்.

"இந்த நைட்டினு சொல்வாங்களே அதெல்லாம் இந்த ஊர்லயே கிடைக்காதா?" என்று அவள் குரலிலும் சற்று நக்கல் எட்டி பார்க்க,

"இது பேரு என்னவாம்?" என்பது தான் அவன் பதிலாக இருந்தது.

"பிட்டு துணி" என்று வாய்க்குள்ளே முனங்கி கொண்டவள் அந்த கபோர்டை அலசிக் கொண்டிருக்க, எல்லாம் இதே போல் தான் இருந்தது.

"கொஞ்சமாச்சும் வெரைட்டியா வாங்க தெரியுதா? வாங்கி வச்சி வச்சிருக்கான் பாரு, இட்லி குண்டானுக்கு போடுற துணி போல" என்று முனங்கி கொண்டிருந்தவள் பின்னே வந்து நின்ற ஜெய்யோ,

"இந்த குண்டாணுக்கு இது போதும் டி. போய் சேன்ஞ் பண்ணிட்டு வா" என்றான் அவளை உரசி கொண்டு நின்றபடி.

அவன் வாசம் தீண்டியதுமே கபோர்டுக்குள்ளே பதுங்கி கொண்ட சுடரோ, "இது எதுவுமே போடுற போல இல்லையே" என்று கெஞ்சல் குரலில் சொல்ல,

"அப்போ எதுவும் போடாத. எனக்கு இன்னும் சௌகரியம்" என்று கண் சிமிட்டியவன், அவள் இடையில் கை வைக்க நெருங்க,

அவன் கை சந்து வழியே நுழைந்து வெளியே வந்தவள்,

"வேணாம் சாமி… நான் இதையே போட்டுகிறேன்" என்று பதட்டமாக உரைத்தவள் குளியலறை நோக்கி ஓடிட, சத்தமாக சிரித்து கொண்டான் ஜெய்.

அவன் விழிகளில் முதல் முறை ஆர்வம், எதிர்பார்ப்பு என கலந்து இருக்க, கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்து தலையை கோதிக் கொண்டான்.

சென்சார் கட் போடும் அளவிற்கு மனைவியை உருபடுத்தி, ஆர்வமாக குளியலறையை பார்த்துக் கொண்டு நிற்க, வந்தாலே அவன் மனைவி, அவன் ஆர்வம், எதிர்பார்ப்புகளுக்கு எல்லாம் பெட்ரோல் ஊத்தி கொளுத்திய படி.

அவன் எதிர்பார்த்த உடுப்பில் தான் வந்து நின்றாள். ஆனால் அப்படி ஒரு அவுட்பிட்டை அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான்.

முழங்கால் வரை நைட் ட்ரஸ், அதுக்கு கீழே கணுக்கால் வரை மறைத்து இருந்தது இன்னர் ஸ்கர்ட்.

தாராளமாக அங்கம் காட்டிய கழுத்து பகுதியில் ஜாக்கெட்டும் இடம் பிடித்து இருக்க, போதா குறைக்கு, அந்த உடைக்கான மெல்லிய ஓவர் கோர்ட் வேறு போட்டு தன்னை முழுதாக மறைத்து கொண்டே வெளியே வந்தாள் அவன் ஆசைகளுக்கு எல்லாம் ஆப்பு வைக்கும் அவன் ஆசை மனைவி.

அவள் வந்த கோலத்தை பார்த்ததும் சிரிப்பு தான் வந்தது ஜெய்யுக்கு. சத்தமாகவே சிரித்து விட்டான்.

"என்ன டி இது?"

இவளை எல்லாம் எந்த கிரகத்தில் இருந்து இம்போர்ட் பண்ணாங்க என்பது போல் இருந்தது அவன் பார்வை.

"என்ன?" என்று கேட்டபடியே ஒரு கை மேல் அங்கம் மறைத்திருக்க, மறு கை முட்டி வரை இருந்த துணியை கீழே இழுத்து விட்டு கொண்டிருந்தாள்.

ஹா… ஹா… என்று சத்தமாக சிரித்தவன், "கோமாளி மாதிரி இருக்க, ஒழுங்கா இந்த எக்ஸ்ட்ரா பிட்டிங் எல்லாம் கழட்டி போட்டு வா" என்றவனை ஏறெடுத்தும் அவள் பார்க்கவில்லை.

'கோமாளி யா இருந்தாலும், மானத்தோட இருந்துகிறேன்' என்று வாய்க்குள் முனங்கி கொண்டே, "இல்ல… நான் இப்படி தான் இருப்பேன்."

என்று அவளும் தன் மானம் காக்கும் போராட்டத்தில் பிடிவாதமாக இருக்க, வீணா பேசியே நேரத்தை கடத்த அவனுக்கு விருப்பமில்லை.

"சரி விடு… கொஞ்ச நேரத்துல மொத்தமா நானே கழட்டிடுறேன்" என்றவன், "தூங்கலாமா?" என்று அழைக்க,

வறண்ட தொண்டைக்கு எச்சில் விழுங்கி ஈரப்படுத்தி கொண்டவள், கைகள் இரண்டையும் தூக்கி கும்பிடுவது போல், அவனையும், கட்டிலையும் சுட்டிக் காட்டி, நீங்க கட்டில்ல படுத்துக்கங்க என்பது போல் சொன்னவள், தன்னையும், கட்டிலை விட்டு தள்ளி மறுமுனை சுவர் ஓரத்தையும் சுட்டிக்காட்டி, நான் ஒரு ஓரமா படுத்துகிறேன் என்று சைகையில் சொல்ல,

'வாய்ப்பே இல்ல' என்று தான் தலையை இடவலமாக குறும்பு கொப்பளிக்கும் விழிகளுடன் ஆட்டினான்.

ம்கும்… மெல்லிய சிணுங்கல் அவளிடம்.

"தூங்கலாமா?" மீண்டும் கேட்டபடியே அவளை அள்ளிக் கொள்ள அருகே வர, அவன் கைகளுக்குள் சிக்காமல் ஓடி வந்து கட்டிலின் ஒரு முனையில் ஒடுங்கி கொண்டவள், போர்வையை எடுத்து தன்னை முழுதாக போர்த்தியும் கொண்டாள்.

அவள் செயல்கள் யாவும் அவன் இயல்பை மீறி அவனை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தது.

அவனும் கட்டிலில் அவள் அருகே சென்று முதுகோடு அவளை அணைத்தபடி படுக்க, மெதுவாக தலையை மட்டும் திருப்பி அவனை பார்த்தவள், "அங்க தான் அவ்வளவு இடம் இருக்கே" என்றால், அட்டை போல் ஒட்டிக் கொண்டிருக்கும் அவன் நெருக்கம் பீதியை கிளப்பியது.

"இது தான் எனக்கு பிடிச்சு இருக்கு" என்றவன் அவள் போர்வைக்குள் தன் ஆறடி உடலையும் நுழைத்து அவளோடு ஒன்றி கொண்டான்.

ஒரு கரம் அவள் வயிற்றோடு பதிந்து தன்னோடு நெருக்கி இருக்க, அவன் எதிர்பார்த்த நெருக்கத்திற்கு அவள் ஆடை தடையாக தான் இருந்தது.

"ஜாக்கெட்டாது கழட்டு டி" என்றான் மோகம் கலந்த குரலில்.

"இல்ல… எங்க ஊர்லலாம் ஜாக்கெட் மேல நைட்டி போடுறது தான் வழக்கம்" என்று கண்களை மூடிக் கொண்டே பதில் சொன்னாள்.

"விளங்கிடும்…" என்று சொல்லிக் கொண்டவன், ஒரு காலை அவள் இடையில் போட்டு, தனக்குள் கோழி குஞ்சாக பதுக்க போராடிய படி அவள் வயிற்றில் விரல்கள் கோலம் போட ஆரம்பித்திருந்தது.

முந்தைய நாள் இரவில் இருந்தே அவன் விரல்களுக்கு பழக்கப் பட்டு போனதாலோ என்னவோ, அவன் அணைப்பிற்கு உடல் முரண்டு பிடிக்கவில்லை. பேதை உள்ளம் தான் அவன் கெட்டவன் என்று இசைய மறுக்கிறது.

வயிற்றில் பதிந்திருந்த விரல்கள் கோடாக மேல் நோக்கி நகர, சட்டென்று அவன் கையை பிடித்துக் கொண்டவள், மெதுவாக தலையை திருப்பி, "பிளீஸ் வேணாமே" என்று ஈன குரலில் கெஞ்ச,

அவள் விழிகளை அழுத்தமாக பார்த்துக் கொண்டே, சரி வேணாம்" என்று அவள் கைக்குள் இருந்து தன் கையை விடுவித்து கொண்டவன், மீண்டும் அவள் வயிற்றிலேயே பதித்தான்.

"நான் முன்னாடியே சொன்னது தான், என் தொடுகைக்கு நீ உருகாத வரை உன்னை முழுசா எடுத்துக்க மாட்டேன். என் தொடுகைக்கு நீ உருக ஆரம்பிச்சா, கண்டிப்பா உன்னால என்னை ஸ்டாப் பண்ண முடியாது" என்று அழுத்தமான குரலில் சொன்னபடி, அவளை கட்டிக் கொண்டே தூங்கி போக,

'அது இந்த ஜென்மத்தில நடக்காது' என்று தனக்கு தானே உறுதியாக சொல்லிக் கொண்டவள், கண்களை மூடிக் கொண்டாலும், தூக்கம் காண தூரம் தான் போனது.
 
Last edited:

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 11


விடியும் வரை அவன் அணைப்பில் இருந்தவள், கீழ் வானம் சற்று செம்மை பூச ஆரம்பித்ததுமே எழுந்து, குளித்து விட்டு சாதாரண ஒரு சேலையை கட்டிக் கொண்டு கீழே ஓடியே வந்துவிட்டாள்.

அவன் வீட்டில் வேலைக்காரியாக இருந்து அனைத்து வேலைகளையும் கூட ஒண்டியாக செய்து விடலாம். அவன் வீட்டுக்காரி வேலை தான் பைங்கிளிக்கு வரவில்லை.

இல்லாத வேலைகளை கூட தலைமேல் தூக்கி வைத்து செய்து கொண்டிருந்தவளை அவனும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். முக்கியமான வேலை இருக்கவே பொறியில் சிக்கிய சுண்டெலியை எப்போது வேண்டுமானாலும் கசாப் போடலாம் என்று தன் வேலையை பார்க்க சென்று விட்டான்.

அவன் சென்ற பிறகே நிம்மதியாக மூச்சு விட்டாள் சுடர்.

இங்கே அலுவலகம் வந்தவன், அடுத்த இரண்டு நாட்களில் கைப்பற்ற வேண்டிய டெண்டர் ஒன்றை பற்றி தினேஷிடம் கலந்துரையாடி கொண்டிருக்க,

அனுமதியின்றி அந்த அறைக்குள் நுழைந்து இருந்தாள் காரிகை ஒருத்தி.

எப்படியும் முப்பது வயதை கடந்து இருக்கும். ஆனால் பார்த்தாள் என்றும் பதினாறு வயது மங்கை போல் அத்தனை நேர்த்தியாக தன் உடலை பேணி வைத்திருந்தாள்.

அளவான உடல்வாகு, காலோடு ஒட்டி இருந்த ஜீன்ஸ், இடை அழகை மட்டுமல்ல, மொத்த அழகையும் கச்சிதமாக வெளிச்சம் போட்டு காட்டிய வெண்ணிற டாப், இடைவரை இருந்த கூந்தல் அலையலையாக காற்றில் அசைந்தாட, இயற்கை கொடுத்த நிறத்தை விட இன்னும் தன் நிறத்தை பளிச்சென்று காட்டிக் கொள்ள, பல வண்ண கலவைகள் முகத்தில்.

கருமை நிற காஜல் பட்டையாக விழியழகை தூக்கி காட்டிட, கடித்து தின்ன தூண்டும் அளவுக்கு சிவப்பு நிற உதட்டு சாயம் என்று மொத்தமாகவே அவனை மயக்கும் மார்க்கத்துடன் தான் உள்ளே நுழைந்தாள் நிஹாரிகா.

"ஹாய் ஜெய்" என்று சொல்லிக் கொண்டே ஜெய்க்கு எதிரே கிடந்த இருக்கையில் கால் மேல் கால் போட்டு அவள் சாய்ந்து அமர,

அவளை பார்த்து அருவருப்பாக முகத்தை திருப்பிக் கொண்டான் அவள் அருகே அமர்ந்திருந்த தினேஷ்.

"உங்ககிட்ட முக்கியமான விசயம் பேசணும்" என்று அருகே இருந்த தினேஷை கண்ணால் காட்டி ' போக சொல்லு' என்று சொல்ல,

ஜெய் பதிலை கூட எதிர்பார்க்காது, தினேஷும் எதுவும் பேசாமல் நாகரீகமாக தலையை குனிந்து கொண்டே வெளியே சென்று விட்டான்.

அவன் சென்றதும் மலர்ந்த முகத்துடன், வாயெல்லாம் புன்னகையுடன் எழுந்து ஜெய் அருகே வந்தவள், தன் கை பையில் இருந்து சில காகிதங்களை எடுத்து அவன் முன் வைத்தாள்.

அத்தனை நேரம் அவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்த அவன் விழிகள் கூட இப்போது மகிழ்ச்சியாக அந்த காகிதங்களை பார்த்தது.

அவன் ஓநாய் மூளையோ நொடியில் ஏதோ கணக்கிட்ட படி கோணல் சிரிப்பு சிரிக்க, தீர்க்கமாக காகிதத்தில் நிலைத்தது அவன் விழிகள் இரண்டும்.

"இது என்னனு எனக்கு தெரியல, ஆன உங்களுக்கு தேவைப்படும்னு தோணுச்சு" என்று தன் முன்னழகை கடை பரப்பும் வகையில் அவன் முன் வளைந்து, மேஜை மேல் சற்று சாய்ந்து நின்றபடி சொன்னாள் அவள்.

அவள் சொன்னது சரியே. அவனுக்கு தேவையானது தான் அது. சற்று முன் அவன் யோசித்துக் கொண்டிருந்த டெண்டருக்கான, அப்போசைட் நிறுவனத்தின் பண மதிப்பீடு குவட்டேஷன் தான் அவைகள்.

அதையும் கொண்டு வந்து கொடுத்து இருப்பது, அந்த நிறுவனத்திற்கு சொந்தக்காரரின் ஆசை மனைவி.

ஏன்? எதற்கு? என்று கேட்டால், எல்லாம் ஜெய் மீது இருக்கும் மோகம் தான் காரணம்.

சொந்த நிறுவனத்துக்கு எதிராக அவள் செயல்படுவது இது முதல் முறையும் இல்லை.

அவளை வைத்தே அவனும் பல வெற்றி வாகைகள் சூடி இருக்கிறான்.

வெற்றி மட்டுமே அவன் குறிக்கோள், அதை அடையும் வழிகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது அவன் கொள்கை.

அப்படி உருவானது தான் நிஹாரிகாவுடனான பழக்கம்.

இருவருக்கும் பொதுவான வியாபார நண்பரின் பார்டி ஒன்றில் தான் அவளை சந்தித்தான். அவள் பார்வை தன் மீது ரசனையாக அடிக்கடி பதிவதையும், தன்னிடம் அவள் பேச முயல்வதையும் அவதானித்தவன், நொடியில் அவள் ஜாதகத்தையே தெரிந்து கொண்டான்.

அவன் நிறுவனத்துக்கு எதிராக, எப்போதும் அவனுக்கு போட்டியாக ஒரு அடி முன்னால் நிற்கும் ஆர் எம் நிறுவனத்தின் இயக்குனரின் மனைவி என்ற பதவியே அவளிடம் அவனை பேச தூண்டியது.

இருவரின் தேவைகளையும் தீர்த்துக் கொள்ளும் நட்பாக வளர்ந்தது. அவள் தேவை அவனாக இருக்க, அவன் தேவையோ அவர்கள் கம்பெனியை புறம் தள்ளி வெற்றி வாகை சூடுவதே. அதையும் நிகழ்த்தி கொண்டானே.

அவனுக்கு லாபம் இருந்தால் மட்டும் தான் அவளுக்கு அவனுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்து கொண்ட நிஹாரிகாவும் கணவருக்கு தெரியாமல் இது போல் பல ரகசியங்களை அவனுக்கு கொடுத்து இருக்கிறாள்.

"ஆர் யூ ஹேப்பி?" கண்களில் அடுத்த இணைபிற்கான ஆர்வம் பொங்க கேட்டவள், தன் கைகளை எடுத்து அவன் கை மீது தான் வைத்திருப்பாள், ஷாக் அடித்தது போல் தூக்கி வீசப்பட்டு பறந்து வந்து தரையில் கிடந்தாள் கன்னத்தை பொத்திக் கொண்டு.

அவன் அறையில் மேஜைக்கு அடியில ஷாக் வைத்திருக்க போகிறான். எல்லாம் அந்த வீணா போனவன் தான் அடித்து பறக்க விட்டது.

ஏன்? எதற்கு அடித்தான்? ஒரு நொடி உலகமே ஸ்தம்பித்த நிலையில் தான் தரையில் கிடந்தாள் நிஹாரிகா.

கன்னத்தை பொத்திய படியே ஏறெடுத்து அவனை பார்க்க, தன் முழு உயரத்துக்கு எழுந்து நின்ற ஜெய்யோ, நான் "அனுமதிக்காம என்னை தொடுற உரிமை உனக்கு இல்ல" என்று சத்தமின்றி மிரட்டல் தொனியில் சொன்னவனை அவள் மருண்டு தான் விழித்தாள்.

அவனோடு அந்தரங்க தேடல் பழகியவளுக்கு அவன் போடும் புது புது ரூல்ஸ் தலையை சுற்ற வைத்தது.

"ஜெய் என்னாச்சு உங்களுக்கு?" என்று கேட்டுக் கொண்டே எழுந்தவள், மீண்டும் அவனை நெருங்க,

"தட்ஸ் யுவர் லிமிட். இனி நீ எனக்கு தேவையில்லை" என்று அவள் கொண்டு வந்த பேப்பர்களை அவள் முகத்தில் விட்டு எரிந்தவன், "அவுட்" என்று கத்தி கொண்டே தினேஷ்… என்று அவனை அழைத்தான்.

தினேஷோ, "இத்தனை நாள் முன்ன பின்ன இருந்தார் சரி, கல்யாணத்துக்கு அப்புறமும் இது தொடருதே" என்று தன் முதலாளியை எண்ணி நொந்து கொண்டே அப்போது தான் தன் இருக்கையில் வந்து அமர போனவனை, ஜெய்யின் கத்தல் திடுக்கிட வைத்தது.

தன் பாஸின் கத்தலில் எழுந்து ஓடி தான் வந்தான்.

நிஹாரிகாவோ கண்கள் சிவந்து, வீங்கிய கன்னத்துடன் புரியாமல் ஜெய்யை பார்த்துக் கொண்டிருக்க, இடுப்பில் கையை குற்றியபடி, அவளை தான் ஒற்றை புருவத்தை உயர்த்தி முறைத்து கொண்டிருந்தான் ஜெய்.

உள்ளே மெதுவாக தலையை நுழைத்து எட்டி பார்த்துக் கொண்டே வந்த தினேஷை பார்த்து பல்லை கடித்த ஜெய்யோ, "இனிமேல் என் அனுமதி இல்லாம என் ரூம்குள்ள யாராவது வந்தாங்க நீ இங்க இருக்க மாட்ட" என்று அவன் மீது சாட,

இப்போது தினேஷுக்கும் ஜெய் நடவடிக்கை குழப்பத்தை தான் ஏற்படுத்தியது.

"ஜெய்… உங்களுக்கு என்னாச்சு? ஏன் யாரோ போல பேசுறீங்க?" என்று நிஹாரிகா எதுவும் புரியா குரலில் கேட்க,

"நீ யாரோ தானே" என்றவன் வார்த்தையில் நொறுங்கி தான் போனாள்.

ஜெய்யின் இந்த புது அவதாரம் கூட ஏக மகிழ்ச்சி தினேஷுக்கு.

தன் பாஸின் மற்றைய அராஜகங்களுக்கு ஒத்து ஊதிய அவனுக்கும் கூட ஜெய் பெண்கள் விஷயத்தில் நடந்து கொள்வது பிடிக்காது தான்.

ஆனால் அதை தடுக்கும் உரிமை அவனுக்கு இல்லையே. கண்ணை மூடிக் கொண்டு அவனே ரூம் போட்டு கொடுத்து இருக்கிறான்.

அப்படி பட்டவன் தன்னிடம் முறைகேடாக வந்து ஒட்டி கொண்ட பெண்ணை அடித்து விரட்டுகிறான் என்பதில் பூரண சந்தோசம் அவனுக்கு.

"இனி எல்லாம் அப்படி தான் மேடம். அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சு. வீட்ல பொண்டாட்டி இருக்கு. இனியும் கண்ட கண்ட கழிசடைகளை எல்லாம் கூட வச்சிக்க முடியுமா?" என்று தினேஷ் அவளை கீழ் தரமாக சொன்னது கூட அவளுக்கு பெரிதாக பாதிக்கவில்லை.

ஜெய்யின் கோபத்திற்கான காரணம் தெரிந்து விட்டது என்ற சிறு சந்தோசம் தான் அவள் இதழ்களில் விரிந்தது.

"ப்பூ… இது தான் ரீசனா? நான் கூட என்னவோ? ஏதோனு? நினைச்சி பயந்துட்டேன். பொண்டாட்டியெல்லாம் ஒரு மேட்டரா? அவளுக்கு துளியும் உங்கமேல சந்தேகம் வராம அவளை எப்படி மேனேஜ் பண்றதுன்னு நான் உங்களுக்கு சொல்லி தரேன்." என்று மீண்டும் அவனை நெருங்க, விட்டான் மற்றொரு அறை, அடுத்த கன்னம் கிழிந்து ரத்தம் வரும் அளவிற்கு.

"ஏய் ***** அலையுற நாய் நீ, எனக்கு சொல்லித்தரியா? வெளிய போடி… நீ என்ன டா நின்னு அவ வாயை பார்த்திட்டு இருக்க, இந்த ***** கழுத்த புடிச்சு வெளிய தள்ளு" என்று அவளை பரத்தை பெண்களை விட கேவலமாக பேசி துரத்த,

அவன் அடித்ததை விட அதிகம் வலித்தது அவன் வார்த்தைகள்.

கணவன் இருக்கும் போதே முறைகேடாக மற்ற ஆண்களுடன் பழகினால் இது தான் கதி. கட்டிலில் மானே, தேனே என்று கொஞ்சியவன் கூட, வேசி என்று இழிவு படுத்துவான். தன் ஆசை தான் பெரிது என்று தடுமாறினாள் இதை விடவும் பல சொற்கள் கேட்க நேரிடுமே.

விழிகளில் வழிந்த நீரை புறங்கையால் துடைத்துக் கொண்டவள், நிமிர்ந்து துணிவாக அவன் கண்களை பார்த்து,

"மிஸ்டர். ஜெய் கிருஷ்ணா…" என்று அழுத்தமாக அழைக்க, அலட்சியமாக அவளை பார்த்தான் அவன்.

"கல்யாணம் ஆகிடிச்சுனு புது பெண்டாட்டி மோகத்துல என்னை அடிக்கிறல்ல, அவளுக்கு நல்லவனா இருக்க நினைக்கிறீ்யா? அது இந்த ஜென்மத்தில் உன்னால முடியாது. அவளுக்கு முன்னமே கல்யாணம் ஆன பொண்ணு கூட உன் படுக்கையை ஷேர் பண்ணினது அவளுக்கு தெரிஞ்சா என்ன பண்ணுவானு யோசி? ச்சீ போ னு இப்போ நீ என்னை சொன்னியே அதே வார்த்தையை சொல்லி, உன் மூஞ்சிலயே காரி துப்பிட்டு போவா. நான் ஒத்துகிறேன் நான் வேசி தான். கட்டின புருஷனை விட்டுட்டு உன்மேல மயங்கி வந்த பாரு நான் வேசி தான்" என்றவள் நிதானமாக அவனை பார்த்து,

"உன்கூட வந்த நான் வேசினா, என்னை தொட்ட நீ யாரு? என்னை விட கேவலமானவன் நீ தான்" என்று அவன் அறைந்து தன்னை இழிவு படுத்திய கோபத்தில் ஏதேதோ திட்டி விட்டே அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

அவள் சென்றதும் ஜெய் அருகே வந்த தினேஷ், "என்ன பாஸ் இந்த பொம்பள இப்படி சொல்லிட்டு போகுது? நேரா போய் அண்ணிக்கிட்ட ஏதாவது வத்தி வச்சிடுமா?" என்று பதறியது எல்லாம் தினேஷ் மட்டும் தான்.

ஜெய்யோ சர்வ சாதாரணமாக இருக்கையில் அமர்ந்து ஃபைல்களை புரட்டிக் கொண்டிருந்தவன்,

"அவ எவகிட்ட சொன்னாலும் இந்த ஜெய்கிட்ட எதையும் புடுங்க முடியாது. உன் அண்ணியையே வேலை முடிஞ்சதும் துரத்தி விட தான் போறேன். அவளை வச்சி என்ன மிரட்ட நினைக்கிறாளா இவ? முட்டா கூ" என்று கோணல் சிரிப்பு சிரித்தவனை பார்த்து அதிர்ந்து நின்றது என்னவோ தினேஷ் தான்.

'மனுஷனாட நீ? திருந்திட்டியோனு நினைச்சேன்… நீயெல்லாம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திருந்த மாட்ட போல' என்பது போல் பார்வை தினேஷிடம்.

ஜெய் மீது மரியாதை இருக்கிறது தான். ஆனாலும் தாலி உறவை கூட அவன் வியாபாரமாக, தன் சுயநலத்திற்காக பயன்படுத்துவது தினேஷால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

எல்லாம் தெரிந்தும் வாயை மூடிக் கொண்டு அவன் ஏவும் வேலைகளை சிரம் மேல் தூக்கி செய்ய தயாராக அவனோடு இணைந்து கொண்டான் ஜெய்யின் ஆக சிறந்த விஸ்வாசி.

அடுத்த இரண்டு நாட்களில் அவன் எதிர்பார்த்திருந்த டெண்டரும் அவனுக்கு கிடைத்திருக்க, அது சம்பந்தமாக ஒரு வாரம் வெளிநாட்டு பயணத்திற்காக அவன் பறந்து சென்ற அந்த இடைவெளியில், கணவன் தொந்தரவு இல்லாது சுடர் நிம்மதி கொண்டாள் என்றால், அவர்கள் இருவர் வாழ்க்கையையும் சிதைக்க மூவர் கூட்டணி ஒன்று கூடி விட்டது.

வேறு யார், ஜெய்யால் அடித்து துரத்த பட்ட நிஹாரிகா. கல்யாண மேடை வரை அழைத்து வந்து பேசும் பொருளாக மாற்றி ஓரம் தள்ளிய மனிஷா, அவர்களோடு பணத்திற்காக இணைந்து கொண்ட ரூபா.

இந்த கூட்டணியை உருவாக்கியது நிஹாரிகா தான்.

"எனக்கு ஜெய் வேணும். அதுக்கு உங்க ரெண்டு பேரோட உதவி வேணும்" என்று முதல் முறை மற்ற இருவரிடமும் சொன்ன போது,

அதிர்ச்சி தான் இருவருக்கும்.

"மேடம் உங்களுக்கு தான் கல்யாணம் ஆகிடிச்சே, அதுவும் ஊர்லையே பெரிய பணக்காரர் கூட. பிறகு எதுக்கு ஜெய்?" என்று கேட்ட ரூபாவை பார்த்து முறைத்தவள்,

"எனக்கு கல்யாணம் ஆகிடிச்சுனு எனக்கு தெரியாது?" என்று அவளிடம் கோபப்பட்டவள், அவளால் காரியம் ஆக வேண்டும் என்பதற்காகவே தன் கோபத்தை புறம் தள்ளி இயல்பாக பேச ஆரம்பித்தாள்.

"என்னோட ஆடம்பர செலவுக்காக தான் அந்த ஐம்பது வயசு கிழவனுக்கு பொண்டாட்டியா இருக்கேன். எப்பவும் அவன் தான் என் புருஷன். என் பணதேவையை நிவர்த்தி பண்றதுக்கு மட்டும். என் ஆசைக்கு ஜெய் வேணும்." என்றவள் மனிஷாவை பார்க்க,

"எனக்கு ஜெய் வேணாம். அவன் பணம் வேணும், சொத்து வேணும், சமுதாயத்தில தி கிரேட் பிசினஸ் மேன் ஜெய் கிருஷ்ணாவோட மனைவி என்கிற பெயர் வேணும்" என்றால் மனிஷா.

அவளை பார்த்து சிரித்து கொண்டாள் நிஹாரிகா.

"இப்போ பொண்டாட்டினு அவன் கூட ஒட்டிட்டு இருக்கவள துரத்தி விட்டு ஜெய்ய நீ கல்யாணம் பண்ணிக்க, இதுக்கு முன்னாடி அவன் என்கூட இருந்த போல இருந்தா மட்டும் போதும்" என்று சொன்ன நிஹாரிகா வார்த்தைகளை ஏற்று கொள்ளும் விதமாக மனிஷாவும் புன்னகைக்க,

'இதுங்க ரெண்டும் என்ன ஜென்மங்கள்? கல்யாணத்த நீ பண்ணிக்க, குடும்பத்த நான் நடத்துறேனு பேசிட்டு இருக்குதுங்க' என்று மனதில் எண்ணியபடி தான் இருவரையும் கேவலமாக பார்த்துக் கொண்டிருந்தாள் ரூபா.

இருவர் பார்வையும் இப்போது அவள் மீது பதிய,

"என்ன பாக்குறீங்க? ஒருநாள் ஆசைக்கு அவரோட இருந்துட்டேன். அதுக்கு அவர் நிறையவே பணம் கொடுத்துட்டார். அதை தாண்டி எனக்கு ஜெய்யும் வேணாம், அவர் மனைவி என்கிற அந்தஸ்தும் வேணாம். அவரை எதிர்த்து உயிரை விட நான் தயாரா இல்ல, நான் கிளம்புறேன்" என்று ஜகா வாங்கியவளை வழி மறித்து நின்றார்கள் இருவரும்.

"எனக்கு தெரியும், ஜெய் கிட்ட உனக்கு எதுவும் தேவை இல்ல தான். ஆனா உனக்கு தேவையானதெல்லாம் இந்த நிஹாரிகாவால கொடுக்க முடியும்." என்று சொல்லிக் கொண்டே தன் கையில் கிடந்த டைமண்ட் ரிங்கை அவள் கையை பிடித்து போட்டு விட்டாள் நிஹாரிகா.

அதை பார்த்து ரூபா கண்களும் பளிச்சிட, வெற்றி புன்னகை மற்ற இருவர் இதழ்களில்.

வாழ்க்கை துவங்கும் முன்னமே அதை சிதைக்க இங்கே சதி நடக்க,

விருந்துக்கு காத்திருப்பவன் நிலை என்னவோ.

செய்த வினை சேட்லைட் போல் தீமையை பரப்ப தயாராக இருக்கும் போது, சிக்கி சின்னாபின்னமாக போவது கெட்டவன் மட்டுமா? அவன் கட்டியவளும் அல்லவா!
 
Last edited:

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 12


ஒரு வாரம் ஜெய் வாசம் கூட இல்லாத அவன் வீட்டில் நிம்மதியாக தான் சுற்றி திருந்தாள் அறிவு சுடர். அவனும் வேலை என்று அலைந்தவன், இவளை பெரிதாக நினைவுக் கொள்ளவில்லை.

எங்கு சென்றான்? எப்போது வருவான்? எதுவும் அறியாத அவன் மனைவியோ, அவன் இல்லாது, பயப்பட அவசியமும் இல்லாது நலமாக தான் இருந்தாள். கலாவதியுடன் முன்பை விட அதிகமாகவே ஒட்டிக் கொண்டாள்.

தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்லும் அவசியம் எதுவும் இல்லா நிலையில், அங்கே சதி திட்டம் போட்டு காத்துக் கொண்டிருந்தவர்கள் நிலையோ, அவளை பார்க்க கூட முடியாது கவலைக்கிடமாக தான் இருந்தது.

ஒரேயடியாக வீட்டிற்குள்ளேயே சிறைவாசம் என்றெல்லாம் சொல்லிட முடியாது. ஓரிரு முறைகள் தனக்கான சிலபொருட்கள் வாங்க கலாவதியுடன் வெளியே சென்றிருக்கிறாள் தான். அதை அவர்கள் சரிவர பயன்படுத்தி கொள்ளவில்லை என்பதே நிஜம். அப்படி எதுவும் திட்டம் போட்டு அவளிடம் வத்தி வைத்தாள் கூட என்னவாகிட போகிறது?

எப்போதும் அவனை திட்டுபவள் இன்னும் நாலு வார்த்தைகள் அதிகமாக திட்டுவாளே தவிர, அவனை பெரிதாக எந்த வகையிலும் பதித்திருக்க மாட்டாள். பாவம் அவளே அவனிடம் மாட்டிக் கொண்டு தவிக்கிறாள். இதில் அவள் எங்கே பூலாந்தேவி ரேஞ்சுக்கு இறங்கி சண்டை போடுவது? கணவனாக முழுதாக ஏற்று கொள்ளா ஒருவனிடம் உரிமையும், கோபமும் வராதே.

ஒருவாரம் கடந்த நிலையில், வழமை போல் கலாவதியுடன் பொழுதை கழித்தவள், இரவு தான் தன் அறைக்குள் நுழைந்தாள்.

லைட்டை போட்டு விட்டு குளியலறை சென்றவள், கலாவதியை அழைத்து சென்று வாங்கி வந்த காட்டன் நைட்டி ஒன்றை அணிந்து கொண்டு வெளியே வர, அறை முழுவதும் இருளில் மூழ்கி தான் கிடந்தது.

'லைட் போட்டுட்டு தானே போனேன்' என்று யோசித்துக் கொண்டே, வெளியே வந்த சுடரோ இருளில் ஏதோ இரும்பு கம்பியில் நங்கென்று மோதி நின்றாள்.

"அய்யோ! என் மண்ட போச்சு" என்று நெற்றியை நீவிக் கொண்டே, எதிரே அவளை விட உயரமாக திடீரென முளைத்த கம்பியை குழப்பமாக தடவி பார்த்தவள்,

"எந்த முட்டா பய நடு ரூம்ல இதை கொண்டு வந்து வச்சது?" என்று அவள் அதை பார்த்துக் கொண்டிருக்கும் போதே,

"நான்தான் செல்லம் வைக்க சொன்னேன்" என்று அவள் பின்னால் கேட்ட ஆண்குரலில் திடுகிட்டு திரும்பினாள்.

அந்த உருவமோ கையிலிருந்த லைட்டரை பற்ற வைக்க, அந்த மெல்லிய மஞ்சள் ஒளியில் அவள் முகம் அழகோவியமாக தெரிய, அவள் விழித்திரையில் அவள் கண்ட உருவத்தை பார்த்து பயந்தவள் சட்டென்று பின்னால் நகர,

முன் நெற்றியை பதம் பார்த்த இரும்பு கம்பி, பின் மண்டையையும் பதம் பார்த்தது.

"அம்மா ஆ ஆ ஆ" என்று முனங்கிக் கொண்டே தன் கையால் பின் மண்டையை அவள் தடவும் முன், அவன் கைகள் அவள் பின் தலையில் பதிந்து மெதுவாக தேய்த்து விட்டது, "முட்டாள் கவனிக்க மாட்டியா?" என்ற மெல்லிய கண்டிப்பில்.

ஜெய் அறைக்குள் வரும் அளவிற்கு யாருக்கு தைரியம் இருக்கிறது?

அவனே தான்… ஒருவாரம் அவளுக்கு விடுப்பு விட்டு சென்றவன், மீண்டும் வதைக்க வந்து விட்டான்.

அவன் இல்லை என்று சுதந்திரமாக சுற்றி திரிந்தவள் திடீரென்று அவனை பார்த்ததும் பதறி தான் போனாள்.

'இவர் எப்போ வந்தார்?' என்பதை தாண்டி 'ஏன் வந்து தொலைச்சார்?' என்ற அதிர்ச்சி தான் அவளிடம்.

அவனோ கீழிருந்து மேல் விழியால் அவளை அலசியபடி அறையின் மின்விளக்கை ஒளிர செய்தான்.

கண்கள் கூச அவனையும், தன் பின்னால் இருந்த கம்பியையும் பார்த்தவள்,

"எப்போ வந்தீங்க?" என்று உள்ளே சென்ற குரலில் கேட்டாள்.

"நான் வர்றது இருக்கட்டும்… இது என்ன ட்ரஸ்? ரோட்டோரமா பிச்சை எடுக்க போல" என்று அவள் அணிந்திருந்த நைட்டியை இழுத்து காட்டி கேட்க,

'நீங்க வாங்கி கொடுத்த பிட்டுதுணிக்கு இது எவ்வளவோ தேவலாம்' என்று எண்ணி கொண்டவளோ உடை பிரச்சனையை ஓரம் தள்ள, பின்னால் திடீரென முளைத்து நின்ற கம்பியை காட்டி, "இது எதுக்கு இப்போ நடு ரூம்ல" என்று கேட்டாள்.

"ஓ இதுவா?" என்று கேட்டவன், "இன்னைக்கு இதுல தான் உனக்கு வேலை" என்றான் அவளை தாண்டி அந்த கம்பியை வருட படி.

'இதுல என்ன வேலை?' என்ற யோசனையில் கண்களை விரித்து அல்லலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அவன் கருப்பழகி.

"இதுல என்னை ஏத்தி விட்டு வித்த காட்ட போறீங்களா? கீழ விழுந்தா என்ன ஆகுறது?" என்று அவள் பதற,

"அ…..துக்கு யூஸ் ஆகாம உன்னை சும்மா வச்சிருக்கதுக்கு நீ போய் சேருறதே மேல்" என்றவனை,

'சண்டாள பாவி என்னை கொல்ல தான் இந்த திட்டமா?' என்று வாயில் கை வைத்து திகைத்து தான் பார்த்தாள் அவன் மணாளினி.

அவள் முக பாவனைகளை கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டே பார்த்தவன், "அவ்வளவு சீக்கிரம் உன்ன சாகடிக்க மாட்டேன். ரிலாக்ஸ்" என்று சொல்லி விட்டு,

"தாய்லாந்து போயிருந்தேன். அங்க ஒரு நைட் கிளப்ல சில பொண்ணுங்க போல் டான்ஸ் ஆடினாங்க. அந்த பொண்ணுங்கள பார்த்ததும் எனக்கு உன் நியாபகம் தான் வந்துச்சு. அதான் உன்ன ஆட விடலாம்னு ஃபுல் செட்டப்" என்று அவன் மந்தகாச புன்னகையில் சொல்ல,

அவன் புன்னகையே இவள் நெஞ்சில் நீரை வற்ற வைத்தது.

"எனக்கு டான்ஸே ஆட தெரியாதே! இந்த லட்சணத்தில ஏதோ போல் டான்ஸ் சொல்றீங்க?" என்று பாவமாக சொன்னவள் மனமோ, 'கிராதகன் இன்னைக்கு என்ன பண்ணி என் உயிரை எடுக்க காத்திருக்கான் தெரிலயே?' என்ற மரண பீதியில் அரற்றி கொண்டிருந்தது.

அதை சரியாக கவனித்துக் கொண்டவன், "அதுக்கு தானே நான் இருக்கேன். உனக்கு எல்லாம் சொல்லி தரேன்" என்று சொல்லிக் கொண்டே அவளிடம் ஒரு கவரை நீட்டி, "முதல்ல இந்த ட்ரெஸ் போட்டுட்டு வா அப்போ தான் பக்கா போல் எஃபெக்ட் கொடுக்கும்" என்று அதீத ஆர்வத்தில் கொடுக்க,

அவன் திட்டம் அறியா கிராமத்து பைங்கிளியோ உடை மாற்று தடுப்பு பின்னால் சென்று மாற்ற போனவள்,

"அய்யோ! சார்" என்று அலறியடித்து ஓடி வந்தாள்.

அவள் அலறலில் "ஏன் டி கத்துற? ஜாக்கெட்டுக்குள்ள பூரன் போயிடுச்சா?" என்று நக்கலாக கேட்டவனை அவள் முறைக்க, மீண்டுமொரு மந்தகாச புன்னகை அவன் இதழ்களில்.

"எதுக்கு இப்போ அலறி அடிச்சு ஓடி வந்த?" என கேட்க,

அவளோ சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டே "சார் உங்களை அந்த கடைகாரான் நல்லா எமாத்திட்டான்" என்று அவள் சொன்ன தொனியில் அவனே ஒரு நிமிடம் குழம்பி தான் "என்ன?" என்று கேட்டான்.

விரல்களால் அவனை அருகே அழைத்தவள், அவன் காதருகே எம்பி நின்று "வெறும் பிகினி மட்டும் தான் வச்சிருக்கான் ட்ரெஸ்ஸ காணோம்" என்று முகத்தை சுழித்து மெல்லிய குரலில் சொல்ல,

"ஓ…" என்று அவளை போலவே அதிர்ந்தது போல் ஓ போட்டவன், தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்று "அடிங்…" என்று அவள் தலையில் நாலு குட்டு வைத்து, "இவ்வளவு தான் ட்ரெஸ் போய் போட்டு வா" என்று சொல்ல,

"சா ஆ ஆ ஆ ஆ ஆ ர்…" நெஞ்சு வலியே வந்து விட்டது சுடருக்கு.


"என்னால இதெல்லாம் போட முடியாது"

"சரி எதுவும் வேணாம் எல்லாம் கழட்டிடு" என்று அவன் அவளை நெருங்க,

"எதே?" என்று கையில் இருந்த கவரை மார்போடு அழுத்தி பிடித்தபடி பின்னால் நகர்ந்தாள்.

'நீயில்லாம ஒரு வாரம் நல்லா தானே போச்சு. எங்க இருந்தோ குதிச்சு என் உயிரை வாங்கிறீங்களே!' என்று மனதில் அரற்றிக் கொண்டே,

"இதெல்லாம் நல்லதுக்கு இல்ல. என் விருப்பம் இல்லாம அது கிடையாது சொன்னீங்களே" என்று அவனுக்கு நியாபக படுத்தினாள்.

"ஹ்ம்ம்… அது கிடையாது சொன்னேன். இது பண்ண மாட்டேனு சொல்லலையே" என்றவனை கோபமாக தான் பார்க்க முயன்றாள். ஆனால் அவனிடம் வாங்கிய தண்டனைகள் அவள் கோபத்தை எல்லாம் மூட்டை கட்டி பிளைட்டில் நாடு கடத்தி விட்டிருந்தது.

"இதுக்கு நீங்க என்னை கொன்னே போட்டுருங்க" என்று பாவமாக சொல்ல,

"சரி உன் ஆசை படியே செஞ்சிடலாம். ஆல்பபெட் ஆர்டர் படி வரலாம். ஃபர்ஸ்ட் டி ஃபார் தினகரன்" என்று போனை எடுக்க,

முதல்ல ஏ தானே வரும். ஏ ஃபார் அறிவுசுடர் என்னை கொல்லுங்க என்றாள்.

மானங்கெட்டு வாழ்வதற்கு சாவதே மேல் என்று முதல் நாளே சொன்னவள், இப்போதும் அதையே சொல்ல, அவன் காரியம் முடியாது, அவள் கதை முடியாதே…

"ஜெய்யோட அகராதில முதல்ல டி தான் வரும்" என்று விட்டு போனில் எண்ணை அழுத்த, எட்டி அவன் கையில் இருந்த போனை பிடிங்கியவள், கண்கள் கலங்க பாவமாக அவனை பார்த்தாள்.

அவனோ இந்த நடிப்பெல்லம் என்கிட்ட செல்லாது என்னும் ரேஞ்சில் பெருமூச்சு ஒன்று விட்டு, அடுத்த பாக்கெட்டில் இருந்து வேறு போனை எடுக்க,

"சரி போட்டு தொலையிறேன்" என்று சொன்னவள் அவன் முகத்தை கூட பார்க்காது சென்று விட்டாள்.

"சண்டாள பாவி நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட டா, உனக்கெல்லாம் நல்ல சாவே வராது. நரகத்துக்கு தான் போவ" என்று அவனை திட்டிக் கொண்டே உடை மாற்றி வெளியே வந்தாள்.

ஆணவத்தின் உச்சத்தில் அவளை பார்த்து இகழ்ச்சியாக புன்னகைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தான் ஜெய்.

மொத்தமாக சேலையை சுற்றி கொண்டு தயங்கியபடி தலையை குனிந்து கொண்டே சுடர் வெளியே வந்து நிற்க,

ஆதிக்க புன்னகையுடன் அவளை நோக்கி அவன் கால்கள் நகர, மங்கையவள் இதயமோ வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

அவன் மூச்சு காற்று அவள் நெற்றியில் மோதி அவளை தீக்குளிக்க செய்ய, கண்களை இறுக மூடிக் கொண்டவள், கரங்கள் தன் மானம் காக்கும் உடையை அழுந்த பிடித்து கொண்டது.

சிறிதேனும் பாவம் பார்க்க மாட்டானா? என்ற பேராசை பொறியில் சிக்கிய சுண்டெலிக்கு.

"ஏய் திருட்டு பூனை… நீ பண்றதெல்லாம் பார்க்கும் போது அவ்வளவு கோபம் வருது. ஆனா அந்த கோபத்துலையும் வேற மாதிரி போதை ஏத்துற. இப்போ கூட…" என்று அவள் முழுதாக மூடி கொண்டு நிற்கும் உடையை விழிகளால் சுட்டிக் காட்டி, "ரிமூவ் இட்" என்று சொல்ல,

"பிளீஸ் விட்டுருங்களேன்… அந்த கம்பிலயே என்னை கட்டி வச்சு அடிக்க கூட செய்ங்க. இதெல்லாம் வேணாமே" என்றால் கெஞ்சுதலாக.

கல்லுண்ட போதை கொடுக்கும் பேதையின் செயல்கள் யாவையும் ரசிப்பவன், இப்போதும் நர்த்தனம் ஆடும் அவள் விழிகளை ரசிக்க தான் செய்தான்.

விழிகளால் அவள் கற்பை சூறையாடும் கயவன் அவனோ, "ஆஹான்… கட்டி வச்சு தானே, தாராளமா அடிச்சிடலாம்" என்று கிறக்கமாக சொல்லிக் கொண்டே, அவள் சுதாரிக்கும் முன்னமே, அவள் சேலையை பிடித்து இழுக்க,

ஆறடி திடமான ஆண்மகன் வலிமையான கரத்தில் சிக்கியது நூல் சேலை மட்டுமல்ல, அவன் சிறையெடுத்து அடிமையாக்கி வைத்திருக்கும் அவன் சீதையும் தான்.

"அய்யோ!" என்று பதறியவள், சேலையை பற்றி பிடிக்கும் முன்னமே சேலை மட்டுமல்ல அவளும் அவன் கைகளில் தான் இருந்தாள், அவன் ஆசை படி அவன் வாங்கிய உடையில்.
 
Last edited:

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 13

ஜெய் கை சிறைக்குள் அறை குறை ஆடையுடன், கண்ணீருடன் நின்றிருந்தாள் அறிவுசுடர்.

அவள் சொன்னது போல் பிகினி எல்லாம் இல்லை தான். முழுதாக உடலை மறைத்து ஆடை போடும் அவளுக்கு, இடைக்கு மேலிருந்த ஸ்லீவ்லெஸ் ஸ்லிம் டாப்பும், தொடை தெரிய குட்டியாக இருந்த ஷார்ட்ஸும் உள்ளாடை போல் தான் தெரிந்தது.

சுடிதாருக்கே இரண்டு பக்கமும் பின் குத்தி துப்பட்டா போடும் அவளுக்கு இந்த உடை அருவருப்பாக தானே இருக்கும். அதுவும் ஆடவன் முன் நிற்கவே உடல் கூசியது.

புரிதலுடன், கட்டில் பழகிய கணவனாக இருந்தால் கூட பெண்களின் நாணமும், கூச்சமும் இயல்பு எனும் பட்சத்தில்,

தான் சுயமில்லா நிலையில் தாலியை கட்டி, இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி, பிணைய கைதி போல் வைத்திருக்கும் அவன் முன் இப்படி ஒரு கோலத்தில் நிற்கும் பேதையின் மனநிலையை சொல்லவும் வேண்டுமா?

மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி வீதி வழி அழைத்து சென்ற அந்த அரக்கர்களுக்கும் இவனுக்கும் துளியும் வேற்றுமை இல்லை என்று தான் அந்த நொடி அவள் இதயம் படபடத்தது.

ஜெய்யின் இரும்பு கரங்கள் பெண்ணவள் வெற்று இடையை சுற்றி பதிந்திருக்க, அவன் அருகாமையில் அக்னியில் வெந்துக் கொண்டிருந்தவளோ, தன் இருகரங்களையும் மார்புக்கு குறுக்காக மறைத்த படி கண்ணீருடன் தான் கண்களை மூடி நின்றிருந்தாள்.

அரக்கன் அத்தனை நிதானமாக கையில் மாட்டியிருந்த காரிகையை ரசித்துக் கொண்டிருந்தான்.

தினம் ஒரு பெண் என்று கழித்தவனுக்கு, அவன் ஆண்மைக்கு மசியாத இந்த கிராமத்து பைங்கிளியை ருசிக்காது வேறு பதார்த்தம் சுவைக்கவும் மனம் செல்லவில்லை.

அவள் அறியாது அவனையே வாட்டி வதைத்து கொண்டிருக்கிறாளே.

அவன் வாசம் அவளுக்கு ஒவ்வாமையை கொடுக்க, அவள் வாசமோ அவனுக்கு ஜின்னில் குளித்த போதையை தான் கொடுத்து கொண்டிருந்தது.

ஒரே ஒருமுறை அவள் விழிகள் தபமாக அவனை பார்த்தாள் போதும், ஆதவனே வெட்கத்தில் சிவக்கும் அளவிற்கு அவளுள் மூழ்கி திளைக்க கொள்ளை ஆசைகள் நெஞ்சில் முட்டுகிறது.

இமைகளை கூட அவனுக்கு சாதகமாக அசைக்க மறுக்கிறாளே!

இப்போதும் அவள் நின்றிருக்கும் கோலம் இத்தனை நாட்கள் கத்துக் கொண்ட வித்தைகளை எல்லாம் அவளிடம் காட்டி விடு என்று மூளை முரண்டு பிடிக்க, மேலும் மேலும் அவன் இரத்தத்தை சூடேற்றியது அவள் தேகம் தீண்டிடும் கைகளின் வெம்மை.

ஆயிரம் பெண்ணுடல் கண்டவன், அவளை மட்டும் தான் ஆராய முற்படுகிறான். அவள் கைகள் மறைத்திருந்த பாகத்தில் சில நொடிகள் விழிகள் குறு குறுத்த படி அவள் மதி முகத்தை பார்த்தவன் விழிகளில் சிறு சலிப்பு தோன்றி தான் மறைந்தது அவள் கண்ணீரை பார்த்து.

சத்தமின்றி அவள் கண்ணீர் வடிக்க, “ப்ச்” என்று சலித்தபடி, முடிந்து வைத்திருந்த அவள் கூந்தலை அவிழ்த்து விட்டு கொண்டே, கூந்தலில் வாசம் பிடித்தவன், “ஷாம்பூ யூஸ் பண்ண மாட்டியா?” என்று கேட்க,

அவளோ, “நீங்க மோப்பம் பிடிப்பீங்கனு தெரிஞ்சிருந்தா குளிச்சிருக்கவே மாட்டேன்” என்றாள்.

(எவ்வளவு பட்டாலும் இந்த எகதாள பேச்சு மட்டும் குறையல, இந்த வாய்க்கே அவன்கிட்ட வாங்கி கட்டிக்க போகுது.)

அவள் பதிலுக்கு சாதாரண நேரமாக இருந்திருந்தால் அவன் வினை நிச்சயம் வேறு விதமாக தான் இருந்திருக்கும்.

மனைவி குட்டி உடையில் அவன் மனதை மயக்கி கொண்டிருக்கும் போது அவள் மீது கோபம் வரவில்லை. மாறாக இதழ்களில் மெல்லிய புன்னகை தான் வந்தது.

“நீ ஒரு மாசம் குளிக்காம இருந்தா கூட, உன்னை கட்டிக்கிட்டே சுத்த நான் ரெடி தான் டி என் கேடி பொண்டாட்டி” என்றவன் மனைவியின் வெற்று தோள்களில் இதழ் பதிக்க,

அவள் கன்னம் தாண்டி சர்ரென்று சில கண்ணீர் துளிகள் அவன் கன்னத்தையும் நனைத்து விட்டது.

“எனக்கு அழுதா பிடிக்காதுனு முதல் நாளே சொல்லி இருக்கேன்” அவள் மீது கண்டிப்பை காட்ட முடியாது, மோகம் கலந்த குரலில் சொன்னவனின் முழு அவதாரத்தை அவள் இன்னும் காணவில்லை என்பதே நிஜம்.

"எனக்கும் தான் நீங்க இப்படியெல்லாம் பண்றது பிடிக்கல? நான் பல்லை கடிச்சிட்டு உங்களை சகிச்சிக்கலயா, நீங்களும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி வேலையை முடிச்சிட்டு விடுங்க" என்று நிலவேம்பு கசாயத்தை குடிப்பது போல் முகத்தை வைத்து கொண்டு சொன்னவளை நிமிர்ந்து நின்று அழுத்தமாக பார்த்தான் ஜெய்.

"என்னை சகிச்சிட்டி உன்னை நான் இங்க இருக்க சொல்லலையே… நீ இப்பவே கூட இங்க இருந்து போகலாம்" என்றவனை விழிகளை துடைத்துக் கொண்டே பார்த்தவள்,

"என்னை முன்னாடி போக விட்டுட்டு, மொத்த ஊரையும் சுட்டு தள்ளுவீங்க… அதானே உங்க திட்டம், எதுவா இருந்தாலும் என்னோட முடியட்டும்" என்று இயலாமை தேங்கிய குரலில் சொன்னவள்,

"ஏழை பொண்ணுனா என்னவென பண்ணலாம், விவசாயிங்கனா எவ்வளவு வேணா அடிக்கலாம்ங்கிற ஆணவம் தானே உங்களுக்கு. சரி நாங்க தோத்துட்டோம். சொல்லுங்க இப்போ நான் என்ன பண்ணனும்? இப்படியே ஓகேவா இல்ல இதையும் கழட்டிடவா?" என்று கேட்டவள் செவுலிலே ஒன்று விட தான் தோன்றியது ஜெய்க்கு.

ஒற்றை புருவத்தை உயர்த்தி அனலாக அவளை எரித்தவன், அடுத்த நொடியே சத்தமாக சிரிக்க, அவன் முறைத்தால் கூட கடந்து விடலாம், சிரித்தால் எதிர்கொள்ள முடியாது அரண்டு தான் நின்றிருந்தாள் ஜெய்யின் மனைவி.

அவளை பார்த்துக் கொண்டே பின்னால் எட்டு வைத்து சென்றவன், அலமாரியில் இருந்து சரக்கை எடுத்து அப்படியே வாயில் சரித்து கொள்ள, அதையும் அஞ்சன விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மதுவை தொண்டைக்குள் சரித்து அவனுக்கு போதை ஏற்றினானோ இல்லையோ! அவளுக்கு பயத்தை நன்றாகவே ஏற்றினான்.

"என்ன நினைச்சிட்டு இருக்க? நீ இப்படியெல்லாம் பேசினா? ஈகோ வந்து உன்னை விட்டுடுவேன்னா? நீ என் பொண்டாட்டி மா. அதுவும் நான் காதலிச்சு, கசமுசா பண்ணி கர்ப்பம் ஆக்கின ஆச பொண்டாட்டி. எவ்வளவு ரிஸ்க் எடுத்து என்னை கல்யாணம் பண்ணியிருக்க… அவ்வளவு சீக்கிரம் விட முடியுமா?” என்று கோணல் சிரிப்பு சிரித்துக் கொண்டே சுடரை நோக்கி அடியெடுத்து வைக்க, பின்னால் நகர்ந்தது அவள் கால்கள்.

மீண்டும் இல்லாத தலைக்கு ஜடைபின்னி பூ வைக்க சொல்வானே! என்ற பயத்தில், அவனிடம் இருந்து தப்பிக்க எண்ணி குளியலறை பக்கம் ஓட்டம் பிடித்தவளை ஒரே எட்டில் பாய்ந்து பின்பக்கமாக தூக்கி கொண்டான்.

அவளோ தன் வயிற்றில் பதிந்து இருந்த அவன் கரத்தை விலக்க போராடிய படி கால்களை உதைத்து கொண்டிருந்தாள்.

"ரொமாண்டிக்கா போல் டான்ஸ் ஆடலாம்னு நினைச்சேன். உனக்கு தான் ரொமான்ஸ் பிடிக்காதே! அட்வெஞ்சரசாவே டான்ஸ் பண்ணலாம்" என்று அவன் குறுந்தாடிகள் அவள் கன்னத்தில் அழுத்தமாக பதிய, கன்னதோடு கன்னம் வைத்து உரசி சொன்னவன்,

கம்பு சுத்துவது போல் தன் கைகளை சுழற்றி தூக்கி வைத்திருந்தவளை தலைகீழாக தொங்க விட, உடலின் மொத்த பாரமும், தலைக்கு இறங்கியது போலிருந்தது சுடருக்கு.

அத்தனை நேரம் திடமாக நின்றிருந்தவள், திடமெல்லாம் திரவமாக உருகி தான் போனது.

"ஆ ஆ ஆ… பயமா இருக்கு, இறக்கி விடுங்க சார்…" என்று அலறவே ஆரம்பித்து விட்டாள்.

"விட்டுடவா?" என்று கேட்டு கொண்டே அவன் பிடியை தளர்த்த…

"இல்ல வேணா பிடிங்க" என்று அதற்கும் அலறினாள்.

"இனிமேல் வாயே திறக்க மாட்டேன். மெதுவா என்னை கீழ இறக்கி விடுங்க… பிளீஸ் சார்" என்று கெஞ்சவே ஆரம்பித்து விட்டாள்.

அவனும் மனம் இறங்கினான் போல,

மறுபடியும் கைகளை சுழற்றி அவளை நேராக கொண்டு வர, மூளை வெளியே வந்து விழுந்தது போல் பயத்தில் வெட வெடத்து போனவள், யாரின் தொடுகையை வெறுத்தாளோ அவன் இடையிலேயே கால்கள் இரண்டையும் சுற்றி போட்டு கொண்டு, குரங்கு குட்டியாக கட்டிக் கொண்டாள்.

அவன் இதயத்தை அழுத்திய அவள் இதய துடிப்பு அவனுக்கே கேட்கும் அளவுக்கு அல்லி ராணியாக வசனம் பேசியவளுக்கு உதறல் எடுக்க, அவன் தேகம் உரசும் தன் மேனியை கூட உணர முடியாத நிலையில் சித்தம் கலங்கி தான் அவனை பிடிமானமாக இறுக்கி கொண்டிருந்தாள்.

அவள் ஒட்டுதல் அவன் கோபத்தை தணித்திருக்க, ஆறுதலாக அவள் முதுகை வருடி விட்டான் ஜெய்.

(இது ஒன்னு தான் குறை. விட்டா வாய் வழியே குடலே வெளியே வந்துருக்கும் அந்த புள்ளைக்கு.)

தன் மனைவியை இடுப்பில் சுமந்து கொண்டே கட்டில் அருகே வந்தவன், அவளை இறக்கி விட முயல, அவள் இறங்கினாள் தானே.

இன்னும் எக்கி அழுத்தமாக அவனை பற்றி கொண்டாள்.

அவள் இறுக்கம் அவனுக்கு மூச்சு முட்ட, "இது என்ன அடுத்த முயற்சியா? கொல்ல பார்க்கிற இறங்கு டி" என்று அவளை விலக்க போராட,

ம்ஹூம்… இறங்கவே மாட்டேன் என்று தான் அடம்பிடித்து அட்டை போல் ஒட்டி கொண்டிருந்தாள்.

"நீ இப்படி அட்டை போல ஓட்டிட்டு இருக்கது எனக்கு சுகம் தான். பயம் தெளிஞ்சா நீ தான் வருத்தப்படுவ”

என்றவன் பேச்சு எதுவும் அவள் காதில் விழவில்லை என்பதே நிஜம். பயத்தில் உறைந்திருந்தவள், சில்லிட்ட கால்கள் இரண்டையும் தன் இடையில் இருந்து அகற்றி அவனே அவளை கட்டிலில் அமர வைத்தான்.

உடல் முழுவதும் ஐஸில் வைத்தது போல் குளிர்ந்து, உதடுகள் நடுங்க அமர்ந்திருந்தவள், கைகள் இரண்டையும் மாற்றி மாற்றி சூடு பறக்க தேய்த்து விட, அவளும் சற்று இயல்பு நிலைக்கு திரும்பினாள்.

"என்னை கோபப்படுத்தி பார்க்காத, அது எப்பவும் உனக்கு நல்லது இல்ல" என்ற ஜெய்யின் வார்த்தைகளுக்கு தலையை மட்டும் ஆட்டிக் கொண்டாள்.

'இனிமேல் வாயையே திறக்க மாட்டேனே… கொஞ்ச நேரத்தில பூமியே தலைகீழா சுத்த வச்சிட்டான்… ராட்சசன்' என்று அவனை மனதில் மட்டுமே திட்டிக் கொண்டிருந்தாள்.

அவள் அமைதியாக இருந்தால் அவன் விட்டு விடுவானா என்ன?

அடுத்த நொடியே அவள் மெளனவிரதத்தை கலைத்து மண்ட காய விட்டான்.

"எப்படியும் நாம லவ் பண்ணும் போது, நமக்குள்ள நிறைய சண்டை வந்திருக்கும்ல்ல?" என்று அவள் தோளை சுற்றி கை போட்டுக் கொண்டே அவன் கேட்க,

மீண்டும் மீண்டுமா என்ற மனநிலை தான் சுடருக்கு.

பாவமாக அவன் முகத்தை ஏறிட்டவளை, கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டே பார்த்தவன், "நான் கோபமா இருக்கும் போது எப்படி என்னை சமாதான படுத்துவ?" என்று கேட்க,

'என்னை பைத்தியமாக்கி மெண்டல் ஹாஸ்பிட்டல்ல சேர்க்காம விட மாட்டியா நீ' என்பது போல் பார்த்து வைத்தவள்,

"அய்யா சாமி… இதுக்கு மேல இன்னைக்கு இந்த வண்டி தாங்காது. என்னை விட்டுடுங்க" என்று தலைக்கு மேல் கைகளை தூக்கி பெரிய கும்பிடாக போட,

ஹா ஹா… என்று சத்தமாக சிரித்தவன், தான் போட்டிருக்கும் உடையை மறந்து கைகளை தூக்கியவள் அக்குளில் கிச்சு கிச்சு மூட்டி விட்டபடி, அவள் மூக்கை பிடித்து ஆட்டி, "கியுட் டி நீ" என்று சொல்லிக் கொண்டே அவள் நெற்றியில் முட்டியவன், கன்னத்தில் எச்சில் முத்தம் மட்டும் வைத்து விலகினான்.

அவன் கிச்சு கிச்சு மூட்டியதுமே கைகளை இறக்கி கொண்டவள், அவன் மூக்கை பிடித்து ஆட்டி நெற்றியில் முட்ட, இரண்டையும் கைகளால் தேய்த்து கொண்டாள்.

கடைசியில் அவன் எச்சில் பதிந்த கன்னத்தை துடைக்க போனவள் கைகளை பற்றி தடுத்தவன், அவள் கன்னத்தில் பற்கள் பதிய கடித்து மீண்டும் அழுத்தமாக முத்தம் வைத்தான்.

"துடைச்சா? இன்னும் அழுத்தமா வேறு விதமாக முத்தம் வரும்" என்று சொன்னவனை,

'ஆத்தி… வேறு விதமாவா? ஏதாவது ஏடாகூடமாக யோசிச்சிட போறான். எதுக்கு வம்பு ' என்று எண்ணி அவள் கைகளை தடுத்துக் கொண்டாலும், அவன் எச்சிலும், பற்கள் பதிந்த இடமும் குறு குறுப்பாக தான் இருந்தது.

துடைத்து விட்டால் தேவலாம், இப்போது அவன் உதடுகள் இன்னமும் கன்னத்தில் உறைந்து இருக்கும் உணர்வில் கைகளை பிசைந்து கொண்டு இருந்தவளை பார்த்துக் கொண்டே ஜெய் ஷர்ட்டை கழட்ட,

அய்யயோ இன்னும் முடியலையா? என்பது போல் கண்களை விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் அவனை பார்க்கும் பார்வையே அவனுக்கு அடிவயிற்றில் அமிலத்தை சுரக்க வைக்க,

அவளுக்கோ மேலாடை நீங்கிய அவன் படிக்கட்டு தேகமும் எதிர் பாலின ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை, அவன் காந்த பார்வையும் எந்த அமிலத்தையும் வயிற்றில் சுரக்க வைக்கவில்லை.

மற்றவர்களை அழிக்கும் அராஜககாரன் தான். ஆனால் கட்டிலில் அராஜகம் அவனுக்கு பிடிக்காத ஒன்று.

காசுக்கு வரும் பெண்களிடமே கலைநயம் தேடுபவன், கட்டிய மனைவியிடம் கடுங்கோல் ஆட்சி புரிவானா?

அவளாக அவனிடம் மயங்கி தன்னை தரவேண்டும் என்பது அவன் குறிக்கோளாகவே மாறிப் போனது.

ஆசை வந்தால் ஆடி விட்டு செல்பவன், அவளிடம் மட்டுமே அனுமதி கேட்டு தவிக்கிறான்.

அவளை அனுபவிக்க நினைத்தவன், முதல் முறை அதற்கான வழியை தேட நினைத்தான்.

இப்போது பயத்தை மட்டுமே கக்கும் அவள் விழிகள் காமத்தை நாடும் நாளை அவனே வகுத்திட முயன்றான்.

பரமசுகம் அனுபவிக்க எண்ணியவன் இப்போதைக்கு விலகி இருக்க முடிவு செய்து, "ரொம்ப நாள் என்னை காக்க வைக்காத குட்டிமா" என்று உருகிய குரலில் சொல்லி விட்டு கட்டிலில் படுத்துக் கொள்ள,

அவளுக்கோ அந்த அழைப்பும், அவனின் ஏக்க குரலும் முதல் முறை மனதில் சலனத்தை ஏற்படுத்தியது.

அவன் ஆணவதிற்கு அசையாத பெண் மனமோ, கணவனின் ஏக்கத்தில் சற்று ஆடி தான் போனது.

சற்று நேரம் ஏதோ சிந்தனையில் தன்னை மறந்திருந்தவள், மெதுவாக திரும்பி ஜெய் முகத்தை பார்த்தாள்.

சேட்டை பிடித்தவன், சமத்து குழந்தையாக தூங்கிக் கொண்டிருந்தான்.

அவள் விழிகள் அவனை அந்த நொடி ரசித்ததா? அவளுக்கே அது தெரியவில்லை. ஆனால் எப்போதும் இருக்கும் பயமில்லை, கோபமில்லை.

சில நொடிகள் அவன் முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தவள், அறையின் ஏசி தன் ஆடை குறைந்த உடலை நினைவு படுத்த அதன் பிறகே எழுந்து சென்று உடை மாற்றி வந்தாள்.

அவன் முன் வெட்கம் நீங்கி போனாலோ, இவ்வளவு நேரம் இந்த உடையில் இருந்திருக்கிறாள்?

உடை மாற்றி மீண்டும் வந்தவள் இதே கேள்வியை தனக்கு தானே கேட்டுக் கொண்டே விடையறிய விருப்பமின்றி சோபாவில் படுத்து கொள்ள, காலை கண் விழித்தது என்னவோ ஜெய் மார்பில் தான்.

"சோபாவில தானே தூங்கினேன். இங்க எப்போ வந்தேன்?' என்றவள் கேள்விக்கு அவன் இறுகிய அணைப்பு பதிலாக, அவளை அறியாது மெல்லிய புன்னகை அவள் இதழ்களில் குடி புகுந்தது.

காலம் நிச்சயம் மாற்றத்தை கொண்டுவரும்…
ஆனால் அது சாதகமான மாற்றமா?
பாதகமான மாற்றமா?
 
Status
Not open for further replies.
Top