ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் போதை தீயே! - கதை திரி

Status
Not open for further replies.

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அத்தியாயம் : 5



"ஏ ஊர்க்காரங்களை விட்டுருங்களேன்..." இதை சொல்லி சொல்லி அவளுக்கு வாய் வலித்ததோ இல்லையோ கேட்டு கேட்டே அவனுக்கு காது வலித்தது. பிரஸ் மீட் முடிந்த நேரத்தில் இருந்து பின்னாலே வந்து நச்சரித்துக் கொண்டிருக்க, "ப்ச்... ஏய் பசிக்குதுடி முதல்ல சாப்பிட விடு" என்று அவன் டைனிங் டேபிளில் சென்று அமர்ந்துக் கொண்டான். அவளும் சேவகியாக பரிமாற ஓடி வந்து நின்றாள்.



சிறை கைதிகளுக்கு நல்லொழுக்க முறையில் சீக்கிரம் விடுதலை அளிக்க படுவது போல தங்களையும் விட்டு விட மாட்டானா? என்ற ஏக்கம். நல்ல மனைவியாக அவன் அருகே நின்று சாப்பாடு பரிமாற, அவள் கரண்டியில் கை வைக்கும் போதே, அவள் கை மீது தன் கையை வைத்து தடுத்தவன், "போய் கை கழுவிட்டு வா" என்று விரட்ட, 'ரொம்ப தான் சுத்தக்காரர். கரண்டில தானே போட போறேன்... அதுக்கு எதுக்கு கையை கழுவனும்?' புலம்பிய படியே அருகே இருந்த வாஷ்பேசனில் கையை கழுவி விட்டு ஓடி வந்து நின்றாள்.



"இட்லி, பூரி, பொங்கல், தோசை... என்ன வேணும்?" ஒவ்வொன்றாக திறந்து பார்த்தவள் ஹோட்டல் சர்வர் ரேஞ்சில் ஆர்டர் கேட்க, "எல்லாம் வேணும்" என்றவன் பார்வை மொத்தமும் மனைவின் உடலை தான் மொய்த்துக் கொண்டிருந்தது.


"ஹ்ம்ம்..." என்று அவன் தேவை அறியாது மண்டையை ஆட்டிக் கொண்டவள், 'இவ்வளவு சாப்பிடுவாரா? அதான் இவ்வளவு பலமா இருக்கார் போல. இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் தான். ச்சீ... ச்சீ... சாப்பாட்டுல கண்ணு வைக்க கூடாது. நல்லா சாப்பிடட்டும்' என்று எண்ணிக் கொண்டவள் இட்லியில் இருந்து ஆரம்பித்தாள்.


ரெண்டு இட்லி, சாம்பார், கலர் கலர் சட்னி என்று எல்லாம் எடுத்து வைத்து சாப்பிடுங்க என்று அவன் முகத்தை பார்க்க, அப்போதும் அவளை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தான் ஜெய்.


இடை வரை நீண்டிருந்த கருங்கூந்தலை ஸ்டிரைட்டன் செய்து காதோர முடிகளை சுருட்டி கிளிப் போட்டு சிறப்பாக தான் சிகை அலங்காரம் செய்திருந்தாள் அழகு கலை பெண். என்ன முகத்தில் தான் வெள்ளை அதிகமாகி, அவன் கோபத்திற்கு ஆளாகி கண்ணீர் மல்க பெட்டி கட்டி செல்ல வேண்டியதாகி போயிற்று.


வேலை செய்ய ஏதுவாக சேலை முந்தானையை இழுத்து இடுப்பில் சொருகி இருக்க, அந்த சொருகளில் இடை சேலை சற்று கீழிறங்கி அவள் வனப்பு இடையை வெளிச்சமிட, வேடன் எண்ணமெல்லாம் இடையில் ஏறி உழுது நடும் காலம் எப்போது என்று தான்.


"சாப்பிடுங்க..." என்றவள் குரலில் ஏக்க பெருமூச்சு அவனிடம். தட்டையும் அவளையும் மாறி மாறி பார்த்தவன், "நான் கை கழுவுனத நீ பார்த்தியா?"


"அய்யோ மறந்துட்டேன். ஒரு பாத்திரத்தில் தண்ணீ எடுத்துட்டு வரவா?" இங்கேயே கை கழுவிக்க என்ற எண்ணத்தில் கேட்டாள்.



அவனோ "நான் என்ன எழுந்து நடக்க முடியாத அளவுக்கு முட்டி செத்து போய் கிடக்கேனா?"


"அப்படி சொல்லல... சரி போய் கை கழுவிட்டு வாங்க."


"என்னையே வேலை ஏவுறியா?"



'அய்யோ ராமா... கை கழுவ சொன்னதெல்லாம் ஒரு வேலையா? என்ன தான் பண்ணனும்? நீங்களே சொல்லி தொலைங்க' பாவமாக அவனை பார்த்தாள்.


"நீயே ஊட்டி விடு"


இதுக்கு தான் இவ்வளவு அலம்பா... முடியல சாமி முடியல சாமி...



நேரடியாக ஊட்டி விட சொன்னால் நிச்சயம் ஏதாவது அலும்பு பண்ணி முறைப்பாள். இப்படி அவள் மண்டையை காய விட்டு அனுபவிப்பதில் அலாதி இன்பம் அவனுக்கு.


சுடரும் அப்பாவியாக இட்லியை பியத்து சைடிஷ்களில் முக்கி விரல் நுனி கூட அவன் உதடுகளில் படாமல் உள்ளே தள்ள, ஓரல் தீண்டலுக்கு திட்டமிட்டவன் ஆசைகள் எல்லாம் நிராசையாக போய்க் கொண்டிருக்க, "பொங்கல் வை" என்று அடுத்ததை கை காட்டினான்.


"ஒன்னு கூட சாப்பிடலயே? சாப்பாட்ட வீணாக்காதீங்க."


"அதெல்லாம் வீணாகாது. நீ சாப்பிடு" என்றதும், "உங்க எச்சிலையா? ச்சீ.... ச்சீ" சட்டென்று முகத்தை சுருக்கிய மனைவியை, அரை கிலோ மீட்டருக்கு தள்ளி நின்னு வாய்க்குள்ள தள்ளின இட்லில எங்கே அவன் எச்சில் பட்டது. கண்களை இடுக்கி அவன் பார்க்க, "ஹி ஹி... நான் அப்புறம் சாப்பிடுறேன்" பல்லை காட்டி கோட்டை சாமியின் கோபத்தை தனித்து வைத்தாள்.


இட்லி தட்டு ஓரம் போக பொங்கல் வந்தது அடுத்த வாய்க்கு, இதழ் தீண்டாமல் தள்ள முடியவில்லை. ஐவிரல்களும் அவன் உதடு தீண்டி நாவில் எச்சில் சுரந்து வெளி வர, இப்போது தான் அது எச்சில் உணவு.


இவ்வளவு நேரம் பச்ச பிள்ளைக்கு உணவூட்டும் எண்ணத்தில் தள்ளிக் கொண்டிருந்தவளுக்கு அவன் எச்சில் ஏதோ செய்ய, அடுத்த வாய் பிசையும் போதே விரல்கள் நடுங்க ஆரம்பித்தது.


அது தானே அவனுக்கும் வேண்டும். அவன் அருகாமையில் அவள் தடுமாற வேண்டும். அவன் தீண்டலில் அவள் இளமை பூக்கள் பூக்க வேண்டும். காற்றாட்டு வெள்ளம் கரை புரல்வதை போல அவள் உணர்வுகளை ஆர்பரிக்க வைக்க வேண்டும் என்றெல்லாம் ஆசை கொண்டு அவன் திட்டம் தீட்ட, அவன் ஆசை மனைவியோ தடம் மாறாதே மனமே என்று இழுத்து பிடித்து, தன் வேலையை தொடர்ந்தாள்.



அவள் எவ்வளவு தான் திடமாக இருந்தாலும் அதை முறியடிக்க வேண்டும் என்பது தானே அவன் திட்டம்.



"நிற்கிற உன்ன நிமிர்ந்து பார்த்து கழுத்து வலிக்குது. உட்கார்ந்து ஊட்டு"


'சாப்பாடு ஊட்ட வாய மட்டும் திறந்தா போதாதா... என் மூஞ்ச எதுக்கு பாக்கணும்' முனங்கி கொண்டே அருகே கிடந்த சேரில் உட்கார போக, அவளை இழுத்து தன் மடியில் அமர்த்தி கொண்டான் ஜெய்.



"அய்யோ! அம்மா!" என்று அலறியபடி அவன் இழு விசையில் பாந்தமாக அவன் மடியில் குடியேறியவள், "என்ன பண்றீங்க யாராவது பார்க்க போறாங்க? விடுங்க" பெண்மைக்கான கூச்சத்தில் நெளிந்து கொண்டே சுற்றும் முற்றும் பார்க்க, அவர்களன்றி யாரும் இல்லை.



அப்படி யாரும் இருந்தாலும் அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவன் விழியசைவில் அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இல்லையேல் கண் காணா தூரம் கலகம் செய்து அனுப்பி விடுவான். டைனிங் ஹாலுக்குள் அவன் மனைவியுடன் நுழைந்த அடுத்த கணமே தங்கள் எஜமானனின் விழியசைவிற்கு கட்டுப்பட்டு அனைத்து டிக்கெட்டும் அங்கிருந்து ஓடி இருந்தது.



இவள் தான் கூச்சதிலும், அவன் தீண்டலிலும் நெளிந்து கொண்டிருந்தாள். நேற்று இரவு அன்னியமாக உணர்ந்தவள் இன்று மற்றவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று எண்ணினாலே தவிர, அவன் தீண்டல்களை அருவருக்கவில்லை. மஞ்சள் கயிற்றின் மகிமையா அது. நேற்று வரை அவன் வில்லன். இன்றும் வில்லன் தான். ஆனால் கூடுதலாக கணவன் என்ற பதவியும் கிடைத்திருக்கிறது அல்லவா. அவளும் அவனை கணவனாக மனதில் பதிந்து கொண்டாள்.



தன்னை நிலைப் படுத்தி கொண்டு அவன் மடியில் இருந்தவாறே அடுத்த வாய் உணவை அவன் வாயருகே கொண்டு செல்ல, ச்சீ எச்சில் என்று முகத்தை சுழித்தவள் வாய்க்குள் தான் பாதை மாற்றி அவன் சுவைத்த விரல்களை அவள் இதழ்கள் சுவைக்க திருப்பி வைத்தான்.



"நீயும் சாப்பிடல தானே சாப்பிடு" என்று அவன் அக்கறை காட்ட, "நான் தனியா சாப்பிட்டுகிறேனே" விழிகளால் கெஞ்சியவள் கெஞ்சல்கள் அனைத்தும் வீணாக, அவள் கைகளே இன்று அவளுக்கு அன்னியமாகி போனது.



எச்சில் சுவைக்கும் அளவுக்கு இருவரும் நெருங்கவில்லையே. சாதா உணவு தான். எந்த சுவை மாற்றமும் இல்லை. ஆனால் நம் எண்ணங்கள் கூட சுவையை தீர்மானிக்கும் அல்லவா. ரசித்து ருசித்து சாப்பிட்ட பாதி உணவில் புழு தென்பட்டால், அடுத்த வாய் உள்ளே இறங்குமா? அப்படி தான் இருந்தது அவளுக்கும். அவன் நா தீண்டிய விரல்கள் என்ற எண்ணமே வயிற்றை பிரட்டியது.



வாந்தி எடுத்தால் அவனை அவமதித்ததாக ஆகி விடுமே. அவன் கோபப் பட்டால் பலியாவது ஊர் மக்கள் தான் என்று எண்ணி முகத்தை இறுக்கி பாறையை முழுங்குவது போல் கஷ்டபட்டு மென்றுக் கொண்டே தன்னை துளைத்தெடுக்கும் பார்வை உணர்ந்து அவன் புறம் திரும்ப, அவனோ ஒற்றை புருவத்தை உயர்த்தி துயிலுரிக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.



அவ்வளவு தான் பயத்தில் பட்டென்று சாப்பாட்டை உள்ளே முழுங்கி விட்டு அடுத்த வாய் அவனுக்கு ஊட்ட ஆரம்பித்தாள். அவள் ஊட்டிய உணவை விட, இடை விலகிய சேலை ஊடே கை விட்டு தன்னோடு நெருக்கி, மீசை முடியால் முதுகில் குறுகுறுப்பு செய்து, அவள் விரலை தான் சப்பி சுவைத்து சாப்பிட்டான் கேடி. நடு நடுவே அவள் வயிற்றையும் நிரப்பினான்.



கணவன் மனைவியின் இந்த பாசத்தை ஊட்டும் காட்சியை அறை வாசலில் நின்று மன நிறைவாக பார்த்துக் கொண்டிருந்தார் கலாவதி. மனிஷா மீது பிடித்தம் இல்லை என்றாலும், மகன் விரும்பிய பெண் என்று அவளை ஏற்றுக் கொண்ட அந்த தாய்க்கு நேற்றையை நிகழ்வு எதுவும் நலமாக இல்லை. கலவரம் பண்ணி மகன் வாழ்வில் நுழைந்த பெண்ணால் அவன் இன்பம் கெட்டு விடுமோ என்று அவர் கவலை எல்லாம் மகன் மீது மட்டும் தான்.



ஆனால் இன்று அவளை மடியில் வைத்து இருவரும் உணவூட்டி கொண்டதை பார்த்த பிறகு இதயம் லேசானது.



இன்முகமாக உள்ளே அவர் நுழைய, அம்மா வாசம் உணர்ந்த ஜெய்யோ மடியில் இருந்தவளை சட்டென்று எழுப்பி விட்டிருந்தான். யாருக்கும் வணங்காத தலை கூட அன்னை அன்புக்கு கட்டுப்படுமே. அவளும் அவன் திடீர் விலக்களில் சற்று தடுமாறியவள், உள்ளே நுழைந்திருந்த கலாவதியை பார்த்து இதயம் பட படக்க நின்றிருந்தாள்.




"வாங்க ம்மா சாப்பிடுங்க" என்ற ஜெய் மனைவியை பார்க்க, அவன் எண்ணம் புரிந்துக் கொண்ட சுடரும் "சாப்பிடுங்க அத்தை" என்று வேகமாக அவருக்கும் சாப்பாடு எடுத்து வைக்க போக, "நான் சாப்பிட்டேன் மா" என்று தடுத்த கலாவதி அவள் மீது நேச பார்வை வீசினார்.



ஜெய் இதழ்களோ திருப்திகரமாக வளைந்து கொண்டது. அவன் மணக்க விரும்பியது இப்படி ஒரு பெண்ணை தானே. தனக்கு அடிமையாக சேவகம் செய்ய வேண்டும். தன் அன்னையை அன்பாக பார்த்துக் கொள்ள வேண்டும்.



அவருக்காக மட்டுமே மனிஷாவை மணம் முடிக்க தயாரானான். மனிஷா பார்வை கலாவதி மீது இளக்காரமாக பதிவதை அவனும் பார்த்திருக்கிறான் தான். அன்னையிடம் கேட்டால் அவனுக்காக அவர் பொறுத்து போக, உலக நடப்பு, உயர் தர மக்களின் பழக்க வழக்கம் எல்லாம் நில் என்ற நிலையில் இருக்கும் அன்னையோடு மனிஷா சிறிதும் ஒத்து போக மாட்டாள் என்பது நன்றாகவே புரிந்தது.



சுடரை பார்த்த நொடியில் அவன் மனம் ஆராய்ந்தது தனக்கு பொருத்தமான மனைவியாக அவள் இருப்பாளா என்பதை விட, தன் அன்னையுடன் ஒத்து போகும் நல்ல மருமகளாக இருப்பாள் என்பதை தான்.



அவன் முடிவு என்றும் அவனுக்கு பாதகமாக அமைவதில்லை என்பதை அவன் மனைவி நிரூபித்து கொண்டிருக்க, திருப்தி புன்னகை அவன் இதழ்களில் இழையோடியது.



உலகமே அவன் தான் என்று வாழ்ந்து வரும் கலாவதிக்கு கூட மனிஷாவை விட இந்த கிராமத்து பட்டாபூச்சியை பிடித்து போனது. கலவர கல்யாணம் என்ற அசப்பே இல்லாது அத்தனை மனநிறைவு அவருக்கும்.



ஆசை தீர தன் மருமகளை கண்களில் நிரப்பிக் கொண்டவர், ஜெய் புறம் திரும்பி "ஐயா அவங்க எல்லாம் வந்துட்டாக... நான் பேசிட்டு இருக்கேன். நீ சாப்பிட்டு வெரசா வா" என்று சுடருக்கும் சிறு தலையசைப்பை வழங்கி விட்டு சென்றார்.



அவர் சென்றதும் ஏதோ யோசனையில் ஆவென வாயை திறந்து பார்த்துக் கொண்டிருந்த தன் மனைவியை மீண்டும் மடிக்கு இழுத்து, விட்ட லீலைகளை தொடர்ந்து வயிறு நிறைய சாப்பிட்ட பிறகே அவளோடு அங்கிருந்து வெளியேறினான்.



ஜெய் பின்னால் மன்னருக்கு குடை பிடிக்கும் பெண்போல குடை இல்லாமல் வந்துக் கொண்டிருந்தவளை "அறிவுஊஊஊஊ ..." என்று ஓடி வந்து கட்டிக் கொண்டாள் இளமதி.
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அத்தியாயம் : 6




அவளை பார்த்ததும் இனம் புரியா நிம்மதி மனதில் பரவ, "இளா எப்படி இருக்க? நீ இங்க எப்படி வந்த?" என்று கேட்டுக் கொண்டே அவள் பின்னால் பார்வையை திருப்ப, அவள் மொத்த கிராமமும் கையில் ஜூஸ் கிளாசுடன் ஹாலில் அமர்ந்து இருந்தது.



அத்தனை பேரையும் முழுதாக பார்த்த பிறகே அறிவு சுடருக்கு நிம்மதி. அந்த கூட்டத்தில் தன்னுயிர் உறவை கண்கள் தேடி இத்தனை நேரம் கேள்விக் கேட்டவளிடம் பதிலை கூட எதிர்பாராது "ஏலாஆஆஆ" (பாட்டையை இப்படியும் அழைக்கலாம்) என்று அவள் பாட்டியை நோக்கி ஓடி வந்து அணைத்துக் கொண்டவள் இத்தனை நேரம் நெஞ்சை அழுத்திய உணர்வுகளை எல்லாம் சத்தமின்றி அழுது தீர்த்தாள்.



அவரிடம் சொல்ல ஓராயிரம் விசயம் இருக்க, வார்த்தைகள் தான் தொண்டைகுழி தாண்டி வெளி வராது விம்மியது. அவள் வலியை அவள் கண்களிலிருந்து வெளியேறிய உவர் நீர் உணர்த்த, அவரன்றி வேறு எவரால் அவள் தவிப்பை புரிந்துக் கொள்ள முடியும்.



ஏதோ பயந்து போய் இருக்கிறாள் என்று மட்டும் அவள் உடல் நடுக்கம் வைத்தே புரிந்துக் கொண்டவர், "ஒன்னுமில்ல த்தா" என்று அவள் முதுகை வருடி விட, அவளும் சிறிது சாந்தமானாள்.



பாட்டியுடன் ஒன்றி நின்றவளை வேகமாக இழுத்து கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தது உழைத்து காய்ப்பு பிடித்த வலிய கரம் ஒன்று. அவள் அதிர்ந்து கண்ணீர் மல்க கன்னத்தை பொத்திக் கொண்டு அவரை பார்க்க, இன்னும் நாலு கைகள் அவள் முதுகில் பொத்து பொத்தென்று விழுந்தது.



"பாஸ்... அண்ணிய அடிக்கிறாங்க" என்று ஷர்ட் கையை முட்டி வரை மடித்து விட்டு சீறி பாய இருந்த தினேஷ் ஷர்ட் காலரை பிடித்து பின்னால் இழுத்த ஜெய் அவன் தோளில் கை போட்டபடி, "கொஞ்சம் பொறு. இத்தனை நாள் அவ்வளவு பாசமா வளர்த்தவங்க கண்ணுல மண்ண தூவிட்டு, பிள்ளையை சுமந்துட்டு கல்யாணம் பண்ணா? கோபம் வரும் தானே. அது அவங்க குடும்ப பிரச்சனை நாம போய் மூக்க நுழைக்க கூடாது. கொஞ்ச நேரம் வேடிக்கை மட்டும் பாப்போம்" என்று ஹாயாக நின்று வேடிக்கை பார்க்க, அவனை ஒரு மார்க்கமாக பார்த்த தினேஷும் கையை கட்டிக் கொண்டு வேடிக்கை மட்டும் பார்த்தான்.



"ஐயோ அண்ணே விடுங்க, அக்காச்சி விடுங்க. மாசமா இருக்க புள்ளையை போட்டு அடிச்சுட்டு" என்று அவளுக்காக பதறி துடித்தது எல்லாம் கலாவதி தான். "ஏதோ சின்னஞ்சிறுசுக கண்ணாலம் கட்ட முன்ன தப்பு பண்ணிடுச்சு. அதுக்கு புள்ளைய அடிச்ச சரியா போச்சா? விடுங்க" என்று அனைவரிடமும் இருந்து காத்து தன் கைவளைவில் அவளை பொத்தி வைத்துக் கொண்டார்.


"இல்ல மா தங்கச்சி, இன்னார தான் பிடிச்சுருக்குனு எங்ககிட்ட ஒரு வார்த்த சொல்லியிருந்தா மண்ணோட சேர்த்து பொண்ணையும் கொடுத்து இருப்போமே. இம்புட்டு நாள் நாங்க வச்ச பாசத்துக்கு மதிப்பில்லாம பண்ணிட்டாளே" அவர்கள் தூக்கி வளர்த்த பெண் தங்களை மதிக்காமல் இப்படி காரியத்தை செய்து விட்டாளே என்ற கோபம் தான் அவர்களுக்கு.



"ஏன் ஆத்தா.... அப்பன் ஆத்தா இல்லா பொண்ணுனு எங்கூட்டு பொண்ணு மாதிரி தானே உன்ன பார்த்துகிட்டோம். ஒரு வார்த்தை எங்க கிட்ட சொல்லியிருக்கலாமே. ஊர் சனத்தோட சேர்ந்து அவகளுக்கு எதிரா போராட்டம் பண்ணியே ஆத்தா, அதெல்லாம் என்ன?" அவர்களின் கேள்விகள் அனைத்திற்கும் அவளிடம் உண்மையான பதில் இருக்கிறது தான், ஆனால் பதில் சொல்ல தான் பயம்.



அரக்கனுக்கு எதிராக வாயை திறக்க கூட பயம். மலை இறங்கிய பேய் மீண்டும் மண்டைக்குள் புகுந்து இரத்த பலி கேட்டால்? அய்யய்யோ! நான் பொய்க்காரியாவே இருந்துட்டு போறேன் என்று அவள் வாயை மூடி விம்மி கொண்டு நிற்க,



அங்கே அவள் அரக்கனோ, தன்னவள் இன்னல் நேரத்தில் ஏன் என்னை தேடவில்லை என்று அவள் மீது தான் கோபம் கொண்டான். ஆபத்து என்றால் அவள் தேடும் முதல் நபராக அவன் இருக்க வேண்டும் என்பது அவன் ஆசை. அவன் கட்டிய தாலி கயிறு அவள் கழுத்தில் உறவாடிய நொடியில் இருந்து தோன்றிய ஆசை. அவன் தானே அவளுக்கு இனி எல்லாமுமாக இருக்க வேண்டும். அவன் ஆசை ஒன்றும் தவறில்லையே.



அவனும் அவள் பார்வை இப்போது தன் மீது விழும், அப்போது விழும், என்று காத்திருக்க, ம்ஹூம் அவன் நின்ற திசை கூட அவள் தலையை திருப்பவில்லை என்றதும் கோபம் தான் வந்தது.



(பொண்டாட்டி அடி வாங்கும் போது ஓரமா நின்னு வேடிக்கை பார்த்தது மட்டுமில்லாம அவ கூப்பிடலனு கோபம் வேற...)



அவளை பொறுத்தவரை அவளுக்கு ஆபத்து என்றால் அது அவனால் மட்டும் தான் நிகழும். நேர்முகமாகவோ மறைமுகமாகவோ அதில் அவன் பங்கீடு நிச்சயம் இருக்கும். அப்படி இருக்கையில் அவனை எப்படி நாடுவாள். அவனிடம் இருந்து யாராவது காப்பாற்றுங்கள் என்று தான் மற்றவர்களை நாடுவாள்.



வாய்க்க வரப்பு சண்டைகள் வாயிதா வாங்காமல் வாய் பேச்சிலே முடிவுக்கு வந்தது. சுத்தி சுத்தி கிராம மக்கள் அனைவரும் ஏதோ வகையில் ஒருவருக்கு ஒருவர் சொந்தம் தான். அந்த வகையில் சுடரை அடுத்த முதல் நபர் அவளுக்கு பெரியப்பா முறை, தினகரனின் தந்தையும் கூட.



"சரி நடந்தது நடந்து போச்சு. இப்போ கல்யாணமும் ஆகியாச்சு. இன்னும் எதுக்கு சண்டையை வளர்த்துட்டு. நம்ம வீட்டு பொண்ணு வாழ வந்த வீடு இது. இன்னும் எதுக்கு வீட்டு மாப்பிள்ள கூட சண்டை போட்டு உறவ கெடுத்துட்டு. அவர் கேட்ட மாதிரி அந்த நிலத்த எல்லாம் அவருக்கே கொடுத்துடுவோம்" என்று ஊர் பஞ்சாயத்து தலைவர் என்ற முறையில் இளமதி தந்தை தீர்ப்பு சொல்ல,



யோவ் நாட்டாமை என்ன யா தீர்ப்பு சொல்ற, என்னும் வகையில் "மாமா இதை நான் ஒருகாலும் ஏத்துக்க மாட்டேன். சோறு போடுற நிலத்தை கொடுத்துட்டு எல்லாரும் போய் பிச்சை எடுக்க போறீங்களா?" என்று அவன் ஆவேசமாக கேட்டான் தினகரன்.



வேடிக்கை பார்த்தது போதும் கோதாவுல இறங்குற நேரம் வந்துடுச்சு என்று தினேஸுடன் அங்கே வந்த ஜெய், "மச்சான் கரெக்டா தானே சொல்றான். இந்த கல்யாணத்தை காரணம் காட்டி நான் எதையும் அடைய நினைக்கல, எனக்கு உங்க பொண்ணு மட்டும் போதும். நீங்க எல்லாம் சுடருக்கு சொந்தங்கிற போது எனக்கும் சொந்தம் தான். குடும்பம் வேற, தொழில் வேற. நான் ரெண்டையும் எப்பவும் இணைக்க மாட்டேன். நம்ம உறவு எப்பவும் ஸ்ட்ராங் ஆஹ் இருக்கும். அதே போல உங்க உரிமைக்கான போராட்டத்தை நீங்க விடனும்னு எந்த அவசியமும் இல்லை. தொழில் முறை தர்க்கம் எப்பவும் நம்ம உறவு முறையை பாதிக்காது" என்றவன் கூற்றில் பெண்கள் மற்றும் பெரிய டிக்கெட் எல்லாம் க்ளோஸ்.



இளைய பட்டாளம் தான் "என்னா நடிப்பு டா சாமி. இவன் அவ்வளவு நல்லவனா?" என்று நேற்று வாங்கிய அடி உடலை அசைக்க கூட முடியாத அளவிற்கு எல்லாம் ஊமை அடியாக இருக்க, வெளியே சொன்னால் அசிங்கம் என்று வீட்டார்களுக்கு சொல்லாமல் அவர்கள் அடக்கி வாசிக்க, அது எல்லாம் சாதகமாகி போனது கேடிக்கு.


அவர்கள் மனநிலை தான் சுடருக்கும். வில்லன் அடுத்த திட்டம் புரியாமல் விழி பிதுங்கி அமைதியாக நின்றுக் கொண்டிருந்தாள்.



மண்டப வாசலில் இருந்து தூக்கிய கூட்டத்தை மூன்றாக பிரித்து அடைத்து வைத்திருந்தான் ஜெய். வயதானவர்கள் ஒரு அறையில், பெண்கள் ஒரு அறையில் இறுதியாக ஜெய் கோட்டைக்குள்ளேயே திருட்டு தனமாக நுழைய திட்டம் போட்ட இளைஞர் பட்டாளம் ஒரு அறை என்று மூன்றாக பிரித்து, தினகரன் குருப்பிற்கு மட்டும் தான் சாம கால பூஜைகள் சிறப்பாக நடந்தது.



காலைல அடிச்சுக்களாம் நைட்டு கொஞ்சிக்கலம் என்று அவன் சொன்ன தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொண்டு உறவு கொண்டாட தயாராக, தன் இன மக்கள் மீது இயல்பாகவே பாசம் கரை புரண்டு ஓடியது கலாவதிக்கு.



மதிய உணவு தட புடலாக ஏற்பாடு செய்து, உற்சாகமாக பரிமாறி, விழுந்து விழுந்து கவனித்து கொண்டார். ஜெய்யுடன் அவர்களுக்கு என்ன வழக்கு என்ற விளக்கம் எல்லாம் அவருக்கு தேவையே இல்லை. இவர்கள் என் மருமகள் வீட்டுக்காரர்கள் அவர்களை கவனித்து கொள்வது என் பொறுப்பு என்று விருந்துக்கு வந்த பெண் வீட்டாராக எண்ணி அத்தனை உபசரிப்பு அவர்களுக்கு



அவர்களும் கூட, அடிதடி போராட்டங்களை மறந்து விட்டு உறவு கொண்டாட, அதில் ஒன்ற முடியாமல் மிகுந்த கோபத்தில் இருந்தது தீனா தான்.



அவ்வளவு எளிதில் ஜெய் செய்தவைகளை மறந்து விட முடியுமா?



அவனோ நெருப்பில் விழுந்த சருகாக உள்ளுக்குள் கருகிக் கொண்டிருக்க, "தீனா ண்ணே!" என்று அவன் எதிரே வந்து நின்றாள் சுடர். அவளை அனல் தெறிக்க பார்த்தவன், "நீ என்ன சொல்ல போற, உன் புருஷனுக்கு சப்போட்டுக்கு வந்தியா? அடக்கப் பட்ட கோபத்தில் கேட்க,



"இல்ல நான் சொல்றத கேளுங்க" என்று கெஞ்சியவள் கெஞ்சல் எல்லாம் அவன் மூளையில் பதிவாக நேரம் எடுத்தது.




"என்ன டி பத்தினி வேசம் போடுறியா?" என்று பல்லை கடித்து விஷ வார்த்தைகளை அவள் மீது தெளிக்க, "நீங்க சொன்னதால தானே கல்யாணத்துல பிரச்சனை பண்ணினேன்" நியாயம் கேட்டாள் பெண்ணவள்.



"பிரச்சனை பண்ணவளை எதுக்கு டி இப்படி சீவி சிங்காரிச்சு, என் பொண்டாட்டி என் பொண்டாட்டினு தம்பட்டம் அடிக்கணும். போதும் அறிவு, இன்னும் நடிக்க வேண்டிய அவசியமில்லை. அதான் காலைல அவ்வளவு தெளிவாக இன்டர்வியூல எல்லாம் சொல்லிட்டியே"



"அது எதுவும் உண்மை இல்ல"



"இன்னும் எங்களை கேனன்னு நினைச்சிட்டு இருக்கியா?"



அவள் சூழ்நிலையை விளக்க அவகாசம் கொடுக்காது பழி போட, தன் நிலையை சொல்ல முடியாமல் "நான் எந்த தப்பும் பண்ணல... என்னை நம்புங்க" என்று கதறி அழ மட்டும் தான் முடிந்தது அறிவால்.



"சரி நான் நம்புறேன். ஆனா மத்தவங்க மாதிரி உன் புருஷன்னு எல்லாத்தையும் தூக்கி அவன் கையில கொடுக்க முடியாது. இத்தனை வருஷ போராட்டத்துக்கும், அத்தனை பேர் இறப்புக்கும் நியாயம் வாங்கியே தீருவேன். இவ்வளவு நாள் எங்க கூட இருந்த. இனி....." என்றவன் பார்வை அவள் மீது தீர்க்கமாக பதிய,



கண்களை அழுந்த துடைத்துக் கொண்டவள் "எனக்கு நம்ம ஊர் தான் முக்கியம்" என்று சொன்னாள்.



"உன்ன எப்படி நம்புறது?" கேட்டவன் மூளையோ அடுத்த திட்டம் போட, கணவனுக்கும் கடமைக்கும் இடையில் சிக்கி கொண்ட பலி ஆடோ "நீங்க என்ன சொன்னாலும் இதுவரை செய்தது போல இனியும் செய்வேன்" என்று சொல்ல குரூர புன்னகை தீனா இதழ்களில்.



வல்லவன் வெல்லும் காலமும் ஒருநாள் முடிவுக்கு வருமோ?


இழைத்தவன் தானே என்று எண்ணி ஆட்டி படைத்த நிலை மாறுமோ?
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
போதை : 7


“அரக்கனே! அராஜகனே!
மண்ணை அழிக்கும் அசுரனே!

அடிக்காதே! அடிக்காதே!
விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே!

பறிக்காதே! பறிக்காதே!
ஏழைகள் வாழ்வாதாரத்தை பறிக்காதே!

மூடிவிடு! மூடிவிடு!
இரசாயன பேக்டரியை மூடிவிடு!

ஓடி விடு! ஓடி விடு!
எங்கள் மண்ணை விட்டு ஓடி விடு!

ஓய மாட்டோம்! ஒதுங்க மாட்டோம்!
நீ வீழும் வரை தாளா மாட்டோம்!!!”

என்ற கோஷங்கள் ஜெய் மாளிகையை அதிர வைத்துக் கொண்டிருந்தது.

சுடரின் கிராம மக்கள் ஊருக்கு கிளம்பும் முன், தாலி பிரித்து கோர்க்கும் சடங்கை முடித்து விடலாம் என்று காலாவதி கேட்டுக் கொள்ள, அவர்களும் சரி என்று அந்நிகழ்வையும் சிறப்பாக முடித்து விட்டு கிளம்ப எத்தனிக்க, "அண்ணே இப்போ கெளம்பி எத்தனை இடத்துல வண்டியை நிறுத்தி போறது. பேசாம ராவு கெளம்புங்க, விடிய காத்தால போய் சேர்த்திடலாம். இம்புட்டு பேரும் வழில நிறுத்தி கடையில சாப்பிட்டா எம்புட்டு செலவாகும்" என்று சொல்லி தடுத்த கலாவதியோ, தடபுடலாக மதிய விருந்துக்கு பறப்பது, ஓடுவது என அனைத்தையும் சமைத்து அசத்தி விட்டார்.

அவன் வீட்டிலே மூக்கு மூட்ட சாப்பிட்டு, இதோ அவனுக்கு எதிராகவே கோஷமிட்டு கொண்டிருக்கின்றனர் தீனா அண்ட் கோஸ்.

வாங்கிய அடிக்கு அசைவ உணவு தெம்பு தர, எழுந்து நின்று கையை தூக்க திறன் வந்ததுமே தன் வேலையை துவங்கி விட்டான் தீனா.

'தலை சாயும் வரை ஓய மாட்டோம்' என்று இள ரத்தங்கள் மட்டும் தான் கோஷமிட்டது. (அடிவாங்கியது அவங்க தானே… மறக்குமா அது?)

அவர்களுக்கு முன் நின்று வழி நடத்திக் கொண்டிருந்த தீனா அருகில் பட்டு சேலை பளபளக்க, தங்கமும் வைரமும் ஜொலி ஜொலிக்க, தாலி கட்டிய கணவனுக்கு எதிராகவே கத்திக் கொண்டிருந்தாள் ஜெய்யின் அவசர கால மனைவி அறிவு சுடர்.

இவர்கள் கூச்சல் கேட்டு நடு ஹாலில் கட்டைய சாய்த்து மல்லாக்க படுத்திருந்த பெரிய தலை துவக்கம், கலாவதியிடம் தங்கள் அருமை பெருமைகளை எல்லாம் அளந்து விட்டு நேரம் போக்கி கொண்டிருந்த பெண்கள் வரை எல்லாம் வெளியே ஓடி வந்து பார்க்க, எரிச்சல் தான் அவர்களுக்கு.

முடிந்த கதை என்று விட்டு கொடுக்கும் மன நிலைக்கு வந்த பிறகு, மீண்டும் தன்னிச்சையாக தங்கள் பிள்ளைகள் கத்திக் கொண்டிருக்க, சலிப்பு தான் தோன்றியது.

"டேய் தீனா, வேலே (வேலு)… என்ன இது அசிங்கமா மாப்ள வீட்டு வாசல்ல நின்னு கத்திக்கிட்டு" என்று தீனா தந்தை அவனை அதட்ட,

"இதுக்காக தானே ஊரு சனம் எல்லாம் வண்டி கட்டி வந்தோம். வந்த வேலையை தான் செய்றோம்" என்று எதிர்த்து நிற்கும் மகனை சலிப்பாக பார்த்தார்.

"அட என்னலே நீ… மறுபடியும் அதையே பிடிச்சி தொங்கிட்டு… உனக்கு ஒரு தங்கச்சி இருந்திருந்தா அவளுக்கு சீர் செய்ய சொத்து கொடுக்கிறது இல்லையா, அது போல நினைச்சிக்க, மாப்ள தான் வேற இடத்தில நிலம் தாரேன் சொல்லி இருக்காரே அப்புறம் என்ன?" என்று ஒரே நாளில் கட்சி தாவியை தந்தையை வெறுப்பாக பார்த்த தீனாவோ,

"எப்போய்… உனக்கு எப்போ இந்த ஞானோதயம் வந்துச்சு? இன்னைக்கா உன் மாப்ள வேற இடம் தரேன் சொன்னான். அவன் அஞ்சு வருசமா அத தான் சொல்றான். சோறு போட்ட பூமியா அழிய விடுறது பாவம்னு என்னை முறுக்கி வுட்டுட்டு, இப்போ அவன் கால்ல போய் விழுற உனக்கு அசிங்கமா இல்ல."

என்று நியாயம் கேட்ட மகனின் சரியான கேள்வி அவரை குற்றம் சாட்டியதும் முகம் கருத்தது அவருக்கு.

"என்னலே எதிர்த்து பேசிட்டு இருக்க?" என்று கெடா மீசை தீனா மீது கையை ஓங்கி விட்டார்.

"அண்ணே… என்ன இது தோளுக்கு மேல வளர்ந்த புள்ளையை கைய ஓங்கிகிட்டு" என்று கலாவதி தான் ஓடி வந்து தடுத்தார்.

"பின்ன என்ன த்தா… உறவுனு கூட பார்க்கமா மட்டு மருவாத இல்லாம நடந்துட்டு இருக்கான்…" என்றவர் மகனை முறைக்க,

அவனோ அசராது நெஞ்சை நிமிர்த்தி கொண்டு நின்றவன்,

"உங்க அருமை மாப்ள தானே சொன்னாரு, உறவு வேற… அவர் தொழில் வேறனு. அறிவ அவன் கல்யாணம் பண்ணி இருக்கலாம். அதுக்காக எங்க உரிமையை நாங்க விட்டு கொடுக்கிறதா இல்ல. நான் சொல்றது சரி தானே மாப்பிள்ள" என்றவன் பார்வையோ அவருக்கு பின்னால் சற்று தள்ளி நின்றிருந்த ஜெய் மீது நக்கலாக பதிந்தது.

ஜெய் பார்வையோ தீனா தாண்டி, அவனுக்கு பின்னால் நின்றிருந்த தன் மனையாள் மீது தான் அழுத்தமாக நிலைக்குத்தி நின்றது.

கொலை நடுங்க செய்யும் அவன் பார்வையே அவளை கதி கலங்க செய்ய, எடுத்த காரியத்தை பாதியில் விட்டு, பாவத்தை கட்டி உருள அவளுக்கும் சிறிதும் மனம் இல்லை. அதான் தன் இனத்தோடு சேர்ந்து கொடி பிடிக்க தயாராகி விட்டாள்.

அவனை பார்க்க பயம் தான். பார்வையை திருப்பிக் கொண்டாலே தவிர நின்ற இடம் விட்டு நகரவில்லை.


அவனின் அடுத்த செயல் என்னவாக இருக்கும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. சொந்த மண்ணிலேயே அவனுக்கு எதிராக போர் கொடி தூக்கிய போது ஆளை விட்டு நாயை போல் அடித்து துரத்தினான். இது அவன் ஊர், அவன் கோட்டை, அதுவும் அவன் வீட்டு வாசலில் நின்று கூவிக் கொண்டிருந்தால், வயிற்றில் பய பந்து உருண்டது சுடருக்கு. அதுவும் அவன் கூர் விழிகள் இரண்டும் அவளை கூறாக்க, தீனா பின் மறைந்து கொண்டவளை,

அவள் உறவுக்கார பெண் ஒருவர் முன்னால் இழுத்து, "அவனுகளுக்கு தான் அறிவில்லை, கட்டின பொண்டாட்டி நீயும் இப்படி நின்னு கத்திட்டு இருக்கது நல்லாவா இருக்கு" என்று கேட்டு, அவள் முதுகில் நாலு அடிப்போட்டு இழுத்து சென்றவர்,

'கல்லானாலும் கணவன், புல்லா குடிச்சிட்டு தூக்கி போட்டு மிதிச்சாலும் புருஷன்' என்று பாடம் எடுக்க ஆரம்பித்து விட்டார்.

தலை குனிந்த படி தன்னை கடந்து சென்ற மனைவியை பார்த்துக் கொண்டே தீனா அருகே வந்தான் ஜெய்.

தீனா தந்தையோ ஜெய்யை எதிர் கொள்ள முடியாது மகன் செயலில் சங்கடமாக நெளிந்துக் கொண்டு நிற்க,

தீனாவை பார்த்து கோணல் சிரிப்பு ஒன்றை சிந்தியவன், "மச்சான் கரெக்டா தானே சொல்றான். இது எங்களுக்கு நடுவுல நடக்கிற யுத்தம். நான் பார்த்துக்கிறேன் நீங்க போங்க மாமா" என்று உறவு முறை வேறு சொல்லி அழைக்க, உச்சி குளிர்ந்து விட்டது அவருக்கு.


எவ்வளவு பாசக்கார புள்ளை என்பது போல் ஜெய்யை பூரிப்பாக பார்த்தவர், எனக்கும் வந்து பொறந்து இருக்கே ஒரு தொல்லை என்று தீனாவை முறைத்தபடி அங்கிருந்து சென்றார்.

பெரியவர்கள், பெண்கள் என ஆர்ப்பாட்டம் செய்யாத ஆட்கள் வீட்டுக்குள் நடையைக் கட்ட, தன் எதிரே நின்ற இளம் காளைகளை எள்ளலாக கடந்து தீனா மீது பதிந்தது ஜெய்யின் கூர் விழிகள்.

"அப்புறம் மச்சான்… கொஞ்சம் தேறிட்ட போல?" என்று நக்கலாக கேட்டபடி தீனா புஷங்களை பிடித்து அழுத்த, உள்காயம் உஷ்ண காயமாக எரிந்தது அவன் கைப்பட்டதில்.

வலியில் சட்டென்று முகத்தை சுருக்கியவன், அதே ஏளன புன்னகையுடன், "நீ பலசாலி தான் நான் ஒத்துக்கிறேன். கொஞ்சம் கையை எடுக்குறியா" என்று அவன் கையை பிடித்து தன் மீது இருந்து விலக்கி விட்டவன்,

"இவ்வளவு நாள் நாங்க தோத்துட்டு தான் இருந்தோம். ஆனா இனி தான் எங்க ஆட்டத்தையே நீ… ச்சே.. இப்போ எங்க வீட்டு மாப்பிள்ளை ஆகிட்டீங்களே… நீங்க பார்க்க போறீங்க மாப்பிள்ள.

எல்லாம் இருக்க நீங்களே அந்த இடத்தை விட்டு தர தயாரா இல்லாத போது, அது மட்டும் தான் எங்க வாழ்வாதாரம். நாங்க எப்படி விட்டு கொடுப்போம். எங்க இடத்தை, எங்க மண்ணை, எங்க உயிரை காப்பாத்திக்க எந்த எல்லை வரைக்கும் போக தயாராகிட்டோம்" என்றவன் பார்வை மட்டுமல்ல பேச்சும் உறுதியாகவும் தீர்க்கமாகவும் இருக்க, ஒரு நொடி ஜெய் விழிகள் கூட 'அப்படி என்ன செய்ய போகிறான்?' என்று அவனை அசந்து தான் பார்த்தது.

"அப்புறம் மாப்பிள்ளை… கோஷ வசனமெல்லாம் எப்படி இருந்தது. உங்க அன்பு பொண்டாட்டி தான் எழுதி கொடுத்தாங்க" என்று எள்ளல் மிகையோட சொன்னவன், "எப்படியும் எங்க அப்பனும், ஆத்தாலும் கண்ணீர் வடிச்சு, நாடகம் போட்டு, இப்போ எங்க எல்லாரையும் ஊருக்கு இழுத்துட்டு போய்டுவாங்க. ஆனா நான் வச்சிருக்க கன்னி வெடி உங்க வீட்டுக்குள்ள ஸ்டரங்கா இருக்கு. பார்த்து காலை வைங்க, ஒரேயடியா தூக்கி வீசிடும்" என்றவன் பார்வை வீட்டிற்குள் இருந்த சுடர் மீது பதிய,

அவன் பார்வை போன திசையை திரும்பி பார்த்த ஜெய்யோ ஹா ஹா என்று சத்தமாக தான் சிரித்தான்.

அவன் சிரிக்க, இவன் முகம் கருக்க, அனலாக எரித்தான் ஜெய்யை.

"மச்சான்… உன்னை பெரிய வில்லன் இல்லைனாலும் கொஞ்சமாவது எனக்கு டப் கொடுப்பனு நினைச்சேன். ஆனா உன் பிளான் எல்லாம் இவ்வளவு மொக்கையா இருக்கு.

சுடர் நான் தாலி கட்டின பொண்டாட்டி தான். அவளை வச்சி என்னை மடக்க நினைச்சியா. அது இந்த ஜெய்கிட்ட நடக்காது. உன் தங்கச்சி எத்தனை நாளைக்கு என் பொண்டாட்டியா இருக்கணும், எத்தனை மணி நேரம் என் பொண்டாட்டியா இருக்கணும்ன்கிறத நான் தான் முடிவு பண்ணனும். நீ எனக்கு வச்சிருக்கது கன்னி வெடி, நான் கால வச்சா தான் வெடிக்கும். ஆனா நான் உனக்கு வச்சிருக்கது நாட்டு வெடி, நீ எதிர் பார்க்காத நேரம் மொத்தமா சிதைச்சிடும்.

ஒண்ணுக்கும் வக்கு இல்லாத நீயே இவ்வளவு திமிரா நிற்கும் போது, ஒரு சாம்ராஜ்யத்தையே கைக்குள்ள அடக்கி ஆளுற எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும். என் கால்ல விழுந்து கேட்டிருந்தா கூட அந்த இடத்தை பத்தி யோசிச்சு இருப்பேன். எனக்கு எதிரா கூட்டம் கூட்டி என்னை அடக்க நினைச்ச உன்ன அடியோட அழிக்காம விட மாட்டேன்." என்றவன் விழிகள் உஷணத்தை அவன் மீது கக்க, குரலோ அத்தனை வன்மையாக அவனை நடுங்க செய்தது.

அரை அடி தொலைவில் எதிரே நிற்கும் அரக்கன் குணம் அறிந்து தானே தீனா கொடி பிடிக்க துவங்கினான். அவன் குரலே தீனாவை நடுங்க செய்தது. இருந்தும் தன் பயத்தை மறைத்து ஏளனமாக சிரித்தபடி கேட்டது பண்ற உனக்கே அவ்வளவு அதுப்பு இருக்கும் போது, ஊருக்கு நல்லது நினைக்கிற எனக்கு எவ்வளவு இருக்கும். பார்க்கலாம் டா நீதி ஜெயிக்குதா, அநீதி ஜெய்க்குதானு?

நீதி அநீதி எல்லாம் தெரியாது, இந்த ஜெய் தான் ஜெய்ப்பான் என்று அத்தனை ஆணவமாக சொன்னவன், அத்தனை பேரையும் துச்சமாக பார்த்துக் கொண்டே உள்ளே செல்ல,

அடுத்து என்ன தீனா பண்ண போறோம் என்று அவன் சகாக்களில் ஒருவன் கேட்க, கோணலாக சிரித்துக் கொண்டவன்,

இவ்வளவு நல்ல வழில போராடி நாம என்ன சாதிச்சோம்? நாமளும் இனி குறுக்கு வழில போய் தான் நம்ம உரிமையை உயிரை காப்பாத்தி க்கணும் என்றவன் பார்வை மொத்தமும் ஜெய் மீது தான் வஞ்சகமாக பதுந்து இருந்தது.
 
Last edited:

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அத்தியாயம் : 8

“ஏய் கூறு கெட்டவளே இப்படியா கட்டுன புருஷனை மதிக்காம நடந்துக்கது?” என்று சுடரின் பெரியம்மா அவள் கன்னத்தை இடிக்க,

இடது பக்கம் அமர்ந்திருந்த இன்னொரு பெண்மணியோ “இங்க பாரு அறிவு? நீ நம்ம ஊருக்காக யோசிக்கிறது எல்லாம் சரி தான். வேகத்தை விட விவேகம் முக்கியம். சண்டை போட்டு காரியம் சாதிச்சவனை விட சாமர்த்தியத்தால சாதிக்கிறவன் தான் புத்திசாலி” என்றவர் அவள் கழுத்தில் நேர்த்தியாக இல்லாது திரிந்து கிடந்த தங்க மாலைகளை சரி செய்த படி,

"நீ முன்ன மாதிரி ஒண்ணுமில்லாதவ இல்ல, இடத்துக்கு தகுந்த போல பக்குவமா நடந்துக்கணும். எப்பவும் நிமிர்வா இருக்கணும். அழகா உடுத்திக்க, அம்சமா அலங்காரம் பண்ணிக்க, புருஷனை எப்பவும் உன் கைக்குள்ள வச்சிக்கணும். நீ அவனை முறைச்சிட்டு சுத்தினா… வேற யார் பின்னாடியும் போயிடுவான். அதுக்கு என்னைக்கும் விட்டுற கூடாது.

உனக்கு ஊர் மேல அக்கறை இருந்தா, நம்ம சனம் மேல பாசம் இருந்தா? இப்படி நின்னு சண்டை போடமா, சூதானம அவன் கிட்ட பேசி காரியத்த சாதி. உன் மடியில மயங்கி கிடைக்கும் போது பக்குவமா பேசி கேளு” என்று அவளை சுற்றி நாலு பேர் இருந்து ஓத,

சுடருக்கோ, அவர்கள் அறிவுரைகள் எல்லாம் உடலை விற்று நிலத்தை காப்பாத்தி கொடு என்பது போல் தான் இருந்தது.

இதையே தான் தினகரனும் சொன்னான்.

"கல்யாணாம் ஆகிடுச்சு, இவ்வளவு நாள் தள்ளி இருந்து அவனை எதுவும் பண்ண முடியல, இப்போ நிறையவே பண்ணலாம். கண்டிப்பா அவன் உன் மேல உரிமை எடுத்துக்க முயற்சி பண்ணுவான். அப்போ பிடிச்சிக்கா, அந்த பாக்டரிய மூட சொல்லி கேளு. முடியாது சொன்னா நீயும் எதுவும் முடியாது சொல்லு”

தீனாவின் குரலையும் மனதில் ஓட்டி பார்த்தவள் இதழ்கள் விரக்தியாக விரிய, கசப்பான புன்னகை ஒன்றை சிந்தியது.

ஆகா மொத்தம் நம்மளோட உரிமையை நியாயமா கேட்க முடியாது. தலையணை மந்திரம் தான் போடணும். என்ற வெறுப்பில் அமர்ந்திருந்தவள் மட்டும் தானே அறிவால், அவளுக்கும் ஜெய்க்குமான உறவை.

ஊராரை பொறுத்தவரை அவள் விரும்பி மணமுடித்துக் கொண்ட ஜெய்யின் மனைவி, மனைவியான உரிமையில் கோரிக்கை வைப்பது ஒன்றும் தவறில்லையே.

ஆனால் அவளுக்கோ காதல் இன்றி கட்டில் பாடம் கசக்க தான் செய்தது.

சுடரின் பாட்டியோ, நடப்பது எதுவும் தெளிவில்லா மனநிலையில் அமைதியாக தான் அவளை பார்த்துக் கொண்டிருந்தார்.

அழுத்தமான காலடிகளுடன் உள்ளே வந்துக் கொண்டிருந்த ஜெய்யை பார்த்தவர்கள் சங்கோஷத்துடன் எழுந்து, "மாப்பிள்ள… ஏதோ சின்ன புள்ள புத்திக் கெட்ட தனமா இப்படி பண்ணிடிச்சு. எதையும் மனசில வச்சிக்காதீக" என்று கெஞ்சுதலாக சொல்ல,

அத்தனை நேரம் இருந்த கடின தன்மையை மறைத்து, இதழ்களில் புன்னகையை கொண்டு வந்தவன், “சுடர் என் மனைவி. மோதல்ல ஆரம்பிச்சு தானே அவளை மொத்தமா என்கிட்ட கொடுத்தா… இதெல்லாம் எதுவும் நான் பெரிசா எடுத்துக்க மாட்டேன். என் மனைவிய பத்திரமா பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு" என்றவன் வார்த்தைகள் தேனொழுக இருந்தாலும், சிரித்த இதழ்களுடனும், எரிக்கும் விழிகளுடனும் அவளை அவன் பார்த்த பார்வையில் தொண்டை தண்ணீ வற்றி போனது சுடருக்கு.

உள்ளம் நடுங்க நின்றிருந்தவளை தவிர்த்து, அவள் பாட்டி அருகே வந்தவன், தோல் சுருங்கி எலும்புகள் ஓடிய அவர் கைகளை தன் வலிய கரத்தில் பற்றிட, பதறி அவர்கள் அருகே ஓடி வந்தாள் அறிவு சுடர்.

அரக்கன், தன் மீது உள்ள கோபத்தில் அவரை ஏதும் வதைத்து விடுவானோ என்ற பயம் தான் அவளுக்கு.

அரக்க பறக்க ஓடி வந்து நின்றவளை, "கூல்… நம்ம பாட்டி தானே" என்று அவன் கேட்க, கொலை நடுங்க ஆம் என்று தலையை மட்டும் ஆட்டியவள் விழிகளோ 'என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள், அந்த வயானவரை விட்டுவிடு' என்று கெஞ்சியது.

கட்டிலில் உடல் மொழிகள் பயின்றவன், உமையவளின் விழி மொழிகள் அறியாது போவானா?

"ஜஸ்ட் பேச தான் போறேன்" என்று மெதுவாக அவள் காதருகே குனிந்து சொன்னவன், தன்னுயரத்திற்கு நிமிர்ந்து நிற்க, அந்த வயோதிக பெண் மணியோ அவன் இடை அளவு தான் இருந்தார். வயது மூப்பு முதுகெலும்பு வேறு பலமிழக்க ஆரம்பித்திருக்க, சற்று குறுகி தான் இருந்தார்.

"இங்க நடக்கிற பிரச்சனையெல்லாம் பார்த்து நீங்க பயப்படாதீங்க. உங்க பேத்தி என் பொண்டாட்டியா இருக்க வரை அவ ரொம்ப ரொம்ப நல்லா இருப்பா" என்று சொன்னவன் விழிகள் ரத்தபசையின்று உறைந்து நின்றிருந்த சுடரை பார்த்து மெதுவாக தலையசைக்க,

வற்றிய தொண்டை குழிக்கு எச்சில் விழுங்கி நீர் பசை சேர்த்தவள் தலை தானாக அவனுக்கு சாதகமாக ஆடியது.

ஊருக்காக போராட இறங்கினாலும், அவனை பார்த்தாலே பயம் தானாக வந்து தொற்றிக் கொள்கிறதே!

பேயடித்தாற் போல் அவனை பார்த்து அரண்டு நின்றுக் கொண்டிருந்தவள் கரத்தை அழுந்த பற்றியவன், "நீங்க பேசிட்டு இருங்க" என்று அன்னையை பார்த்து சொல்லிவிட்டு, மனைவியை இழுத்துக் கொண்டு செல்ல,

அவளும் கடினப்பட்டு தான் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டே அவன் இழுப்பிற்கு சென்றாள்.

காலாவதிக்கோ மகனை நினைத்து பெருமையோ பெருமை. எவ்வளவு கனிவாக நடந்துக் கொள்கிறான் என்று.

கிராமத்து மக்களுக்கும் கூட, உறவு என்று வந்த பிறகு அவன் நடந்து கொள்ளும் விதம் பிரமிப்பாக தான் இருந்தது.

பழக நல்லாதான் இருக்கார். அந்த பேக்டரி விசயத்துல தான் கொஞ்சம் குணம் குறைவா இருக்கார் என்று ஆளாளுக்கு தங்களுக்குள் பேச ஆரம்பித்து விட்டனர்.

மேலே தங்கள் அறைக்குள் அவளை தள்ளி, கதவை பூட்டியவன், முகமோ தன் போலி தன்மையை நீக்கி, பாறையாக இறுக,

பயத்திலே உறைந்து விடுவது போல் தான் மிரண்டு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் அறிவுசுடர்.

கோணலாக இதழை வளைத்து சிரித்தபடி, ஒவ்வொரு அடியாக அவளை நோக்கி வைக்க,

பின்னால் நகர மூளை உத்தரவிட்டால் தானே கால்கள் செயல்படும். அது வேலை நிறுத்தம் செய்தே பல நாழிகை ஆகிறதே.

இப்போதோ அப்போதோ என்று கண்களை விட்டு வெளியேற துடித்த கண்ணீர் துளிகளை கடின பட்டு கட்டுப்படுத்திய படி தான் நின்றுக் கொண்டிருந்தாள்.

அரக்கன் முன் இப்படி நிற்கும் ஒவ்வொரு நொடியும் யாக தீயில் வெந்து சாகும் உணர்வு தான் சுடருக்கு. தினம் தினம் இப்படி பயந்து சாவதற்கு ஒரேயடியாக அவன் கொன்றால் கூட நலம் என்று தான் தோன்றியது.

"பரவாயில்லையே மறுபடியும் என்னை எதிர்க்க தைரியம் வந்துருக்கு." என்று சிரித்துக் கொண்டே கேட்டவன், "யாரு அந்த தீனா கொடுத்த தைரியமா?" சட்டென்று குரல் இறுகி ஒலிக்க,

சுடருக்கோ அவனை சமாளிக்கும் வழிகள் தெரியாது அரண்டு தான் நின்றிருந்தாள்.

"இவ்வளவு தைரியம் ஆகாதே" என்றவன் பார்வையே அவளை உயிருடன் எரிக்க,

அவன் கோபத்திற்கு தான் மட்டுமே இரையாக வேண்டும் என்று பொதுநலமாக எண்ணிய பெண் மனமோ,

"எவ்வளவு கோபம் இருந்தாலும் என் மேல மட்டும் காட்டுங்க, எனக்கு என்ன தண்டனை வேணா கொடுங்க… என் ஊர் காரங்களை விட்டிருங்க" என்று கைகூப்பி கெஞ்ச,

"தண்டனை தானே தாராளமா கொடுத்திடலாம்" என்று சொல்லிக் கொண்டே இடுப்பில் இருந்த பெல்டை கழட்ட, சுடரும் தயாராக தான் பல்லை கடித்துக் கொண்டு, கண்களையும், கைகளையும் அழுந்த மூடிக் கொண்டு நின்றிருந்தாள்.

அவள் நின்ற தோரணையை பார்த்து கோணலாக சிரித்து கொண்டவன், அவளை நெருங்கி, விரல் கூட அவள் தேகம் தீண்டாது பெல்ட்டால் அவள் இடையை கொக்கி போட்டு தன்னருகே இழுத்தவன்,

அவள் காதருகே குனிய, அவன் வாசமே பயப்பத்தை நெஞ்சில் உருட்டியது பெண்ணவளுக்கு.

"அடி உதையெல்லாம் அவங்களுக்கு. என் பொண்டாட்டிக்கு வேற தண்டனை இருக்கு" என்றவன் அவள் காதில் ஏதோ கூற,

நாலு இல்ல நாற்பது அடியை கூட வாங்கி கொள்கிறேன். நீ சொல்வதை செய்ய முடியாது என்று மறுக்க தான் நினைத்தால்.

ஆனால் அவனிடம் மறுத்து பேசினால் அடுத்த நொடி அவன் கோபத்திற்கு இரையாவது தன் சொந்தங்கள் என்பதை நன்கு புரிந்து கொண்ட பெண் மனமோ ஊமையாக கண்ணீர் வடித்தபடி, இயலாமையாக அவனை ஏறிட்டு பார்த்தாள்.

ஜெய் இதழ்களிலோ ஏளன புன்னகை… அவளை விட்டு இரண்டடி நகர்ந்து நின்று அவளை தான் ஆணவத்துடன், சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

தாலி ஏறினால் கணவனுக்கு வேசி வேலையும் பார்க்க வேண்டும் தான்.

அவனாக புசித்து கொண்டால் கூட கடமையே என்று கண்ணை மூடி கொண்டு சிற்பமாக அவள் தாயார் தான்.

ஆனால் அரக்கன் அனுபவிக்க நினைப்பது காமம் தாண்டி பெண் போதையை அல்லவா, அவளாக அந்தரங்கம் துறக்க பேரவா அவனுக்கு.

காதலின்றி வெறும் உடலை மட்டும் பகிர்ந்து கொள்ள பெரும் தயக்கம் அவளுக்கு.

இதுவும் ஒருவகை கற்பழிப்பு தானே. உரிமை என்ற பெயரில் கணவன் கேட்கும் அத்துமீறல்களை எண்ணி தடை போட்டு வைத்திருந்த கண்ணீர் துளிகள் கரைபுரண்டு ஓட,

கூச்சலின்று, விசும்பலின்றி கன்னங்களை நனைக்கும் உவர் நீரை துடைக்க வேண்டிய கரங்களோ, தலையை குனிந்தபடி முந்தானை சேலை பின்களை அப்புற படுத்த,

செடுக்கிட்டு அவளை அழைத்தவன், "லுக் அட் மீ" என்று அதிகாரமாக கட்டளையிட,

கண்களை அழுந்த மூடி திறந்த சுடரும், தன்னை எண்ணியே நொந்துக் கொண்ட படி ஜெய் விழிகளை ஏறிட்டு பார்த்தாள்.

அவள் விழிகளில் வலிகள் மட்டுமே இழையோட, அவன் விழிகலோ அவளை துட்சமாக வேட்டையாடி கொண்டிருந்தது.

அவன் பார்வையே மூச்சடைத்தது சுடருக்கு.

கடவுளே எங்கயெல்லாமோ பூகம்பம், சுனாமி வருது. இவன் தலையில எதுவும் வந்து விழ மாட்டேங்குதே என்று தான் உள்ளூர திட்டிக் கொண்டே அவனை பார்த்த படி தன் சேலை முந்தானையை கழட்டி விட,

சேலை முந்தானையோடு சொட் சொட்டென்று அவள் கண்ணீர் துளிகளும் தரையை நனைத்தது.

"ப்ச்… அழுதா எனக்கு பிடிக்காதுனு சொல்லி இருக்கேன்" என்று அவன் பல்லை கடித்து உறும,

"பிளீஸ்… பிளீஸ்… மெதுவா பேசுங்க…" என்றவள் கவலை எல்லாம் வெளியே இருக்கும் அவள் சொந்தங்கள் பற்றி மட்டும் தான்.

"நான் தான் நீங்க சொல்ற எல்லாம் செய்றேன் சொல்றேனே ரெண்டு சொட்டு கண்ணீர் தானே அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்களேன்" என்று கெஞ்ச,

அவனோ "லுக்… எனக்கு நீயா உன்னை தரணும். இப்படி அழுது வடிஞ்சி வேணாம்" என்று முறுக்கி கொண்டு திரும்பியவன் கைகளை பிடித்து தடுத்தவள், அவசர அவசரமாக கண்ணீரை துடைத்து கொண்டே, கண்களை அழுந்த மூடியபடி, அவன் கரத்தினை தன் மார்பை நோக்கி கொண்டு வர,

நூலளவு இடைவெளியில் அவள் அங்கம் தீண்டாது தன் கரத்தில் பலம் கொண்டு தடுத்து கொண்டான் ஜெய்.

நகட்ட முடியாத அவன் கரத்தின் பலம் உணர்ந்தவள், மெல்ல கண்களை திறந்து அவனை பார்க்க,

அவள் பிடித்திருந்த தன் கரம் கொண்டே நொடியில் அவள் கரம் பற்றி பின்னால் வளைத்தவன், மறுகரத்தால் அவள் தாடையை பிடித்து தன்னை நோக்கி நிமிர்த்தியவன், மறுநொடியே அவள் அதரங்களை தன் இதழ் கொண்டு சிறை செய்ய,

திடுகிட்டு போனால் பெண்பாவை. சித்தம் செயலிழந்து போனது. எதிர்வினையும் அவளிடம் இல்லை, சுயவினையும் இல்லை.

அவனின் அதிரடியில் சுயநினைவு இழந்து, உடலில் திறன் வடிந்து துவண்டு போனவளை கீழே விழாமல் ஒரு கையில் பிடித்துக் கொண்டவன்,

இதழ்களை அகற்றி அவள் விழிகளை நோக்க, எங்கே அது திறக்கும் மார்க்கம் அறியாது மொத்த சக்தியும் ஒற்றை முத்தத்தில் பறிபோனது போல் துவண்ட கொடியாக தான் அவன் கைகளில் கிடந்தாள்.

மெல்லிய புன்னகை ஜெய் இதழ்களில், வஞ்சம் நீங்கி மோகம் ஆளும் புன்னகை. மீண்டும் நிதானமாக அவள் இதழ்களை முற்றுகை இட,

நான் இன்னும் சாகலையா? என்று தான் திடுகிட்டு கண் முழித்த மனைவியின் கருமணியில் தன் விழிகளை பார்த்தப்படி அவன் விழிகள் மூடிட, தடுக்க துணியாதவளும் தன் விழிகளை மூடிக் கொண்டாள், மோகத்தால் அல்ல அருவருப்பில் மட்டுமே.

மோகம் வந்தால் பெண்ணுடலை மொத்தமாக ஆண்டு விட்டு போகும் வேடன் அவனுக்கோ சிறிதும் ஒத்துழைப்பு நல்காது தாபம் கூட்டி போதை ஏற்றி ஒற்றை முத்தத்தில் பித்தம் கொள்ள வைத்தாள் அவன் சண்டைக்காரி.

விட மனமில்லை என்றாலும், அடுத்த கட்டத்திற்கு தேகம் அழைப்பாய அடக்கி கொண்டே அவளை மெதுவாக தன் சிறையில் இருந்து விடுத்தான்.

சுயம் பெற்றவளும், கால்களை தரையில் அழுந்த ஊன்றி கொண்டே விழாமல் நின்று கொண்டாள்.

மறந்தும் ஏறிட்டு அவன் முகத்தை பார்க்கவில்லை. ஆனால் அரக்கன் பார்வை மொத்தமும் பெண் பாவை மீது தான்.

அவனோ அவளுடனான முதல் இதழ் பரிமாற்றத்தை ரசித்து, அதில் திளைத்த படி அவளை பார்க்க,

அவன் மனைவியோ, முகத்தை சுருக்கிக் கொண்டே நாவில் ஒட்டியிருந்த அவன் மீசை முடிகளை தான் கையால் எடுத்துக் கொண்டிருந்தாள்.

அதை பார்த்தவனுக்கு கோபத்துக்கு பதில் சிரிப்பு தான் வந்தது.

ஹா… ஹா… என்று திடீரென சத்தமாக சிரித்தவனை அவள் பயந்து பார்க்க,

அவள் இரண்டு தோள்களிலும் கைகளை போட்டு தன்னோடு நெருக்கி கொண்டவன், "நீ பண்றதெல்லம் கொலை வெறியாக்குது என்னை. ஆனா அடுத்த நிமிஷமே ஒருமாதிரி கிறுக்கு பிடிக்க வைக்கிது. உன்கிட்ட சம்திங் ஏதோ ஒன்னு என்னை உன் பக்கம் இழுக்குது.

அதை அறியாமல் விட மாட்டேன்
அதுவரை உன்னை தொட மாட்டேன்" என்று உற்சாகமாக பாடியவன்,

கிரேக்க சிற்பமாக முந்தானை சேலையின்றி நின்றிருந்த மனைவியை அந்தரங்க அலசல் தேடி அலைபாய்ந்த விழிகளை மூடி சிரித்துக் கொண்டே வெளியே சென்று விட்டான்.
 
Last edited:

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 9

அறையை விட்டு ஜெய் சென்றதும், குளியலறை சென்று அவன் நா தீண்டிய இதழ்களை பலமுறை கழுவிய சுடரோ, “கடவுளே எதுவா இருந்தாலும் சமாளிக்கிற தைரியம் மட்டும் கொடு” என்று வேண்டுதல் ஒன்றை கடவுளிடம் வைத்த விட்டே, உடையை சரி செய்து கொண்டு கீழே இறங்கி வந்தாள்.

அவள் கிராம மக்கள் அனைவரும் ஊருக்கு கிளம்ப தயாராக நின்றிருந்தனர். “சரி மா… பாத்து சூதானமா இருந்துக்க நாங்க வாரோம்” என்று இளமதி உட்பட ஒவ்வொருவராக விடை பெற்று செல்ல,

இறுதியாக செல்ல இருந்த சில பெண்கள், அவளையே தவிப்பாக பார்த்துக் கொண்டிருந்த அவள் பாட்டி காமாட்சியை பாத்து, "ஆத்தா… உனக்கு இருந்த ஒரே கவலையும் தீர்ந்துச்சு. பேத்தியை பெரிய இடத்துல கட்டி குடுத்தாச்சி, ஒரு நாலு நாள் பேரன் வீட்ல இருந்துட்டு வா. அங்கன வந்து நீ என்ன வெட்டி முறிக்க போறா" என்று எள்ளலாக அவரை இங்கே தங்கி வரும்படி சொல்ல, அவர் பதில் ஏதும் சொல்லும் முன் அவசர அவசரமாக "இல்ல வேணாம்" என்று தடுத்திருந்தாள் சுடர்.

அவள் மறுத்தது அவள் ஊர் பெண்கள் அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்த, "ஏன் அறிவு… இத்தனை வருஷம் உன்ன தூக்கி வளர்த்த மனுஷிய ஒரு ரெண்டு நாள் உன்னால பார்த்துக்க முடியாதா? ஒரு வாய் சோறு போட ரொம்ப தான் அலட்டிக்கிற" என்று சொன்னதும் சட்டென்று கண்கள் கலங்கி விட்டது சுடருக்கு.

அவள் அந்த அர்த்தத்தில் மறுக்கவில்லையே. இங்கே தன் நிலை என்னவென்றே அவளுக்கு தெரியா நிலையில், அந்த வயதானவரையும் இக்கட்டில் மாட்டி விட அவள் மனம் ஒப்பவில்லை. ஆனால் மற்றவர்களுக்கு அவள் மறுப்பு வெறுப்பை தானே அள்ளி வீசும்.

கலாவதி “ஆமா கண்ணு நம்ம கூடவே இருந்துட்டு போகட்டும். அங்கன போய் ஒத்தையா என்ன செய்ய போகுது" என்று சிபாரிசுக்கு வர, அவளுக்கு தான் என்ன செய்வதென்று தெரியா நிலையில் பரிதவித்து போனாள்.

கலாவதி நல்லவர் தான். ஆனால் அவர் பெத்து வச்சிருக்க கடப்பாரை எப்போது குத்தி கிழிக்கும் என்றே தெரியாதே! பயத்தை விழுங்கி கொண்டு சாதாரணமாக முகத்தை வைக்கவே படாத பாடுப்பட்டு கொண்டிருந்தாள்..

ஜெய் கூட "நம்ம பாட்டி தானே இருக்கட்டுமே" என்று அவள் உத்தரவின்றி துரும்பையும் அசைப்பது இல்லை ரேஞ்சில் கேட்க, அவன் மேல் இருந்த கோபத்தில் சட்டெற்று அவனை முறைத்து விட்டாள்.

மனைவியின் இக்கட்டான நிலையை கொடுப்புக்குள் சிரித்தபடி, அவள் முறைப்பை கூட ரசித்தான் ராட்சசன்.

பேத்தியின் பரிதவிப்பை புரிந்துக் கொண்ட காமாட்சி பாட்டியோ, "இல்ல அது சரிபட்டு வராது. பொண்ணு வாழ வந்த வீட்ல நானும் வந்து இருக்கது முறையில்ல" என்று சொன்னவரை கண்களில் தேங்கி நின்ற கண்ணீரோடு அவள் பார்க்க, அவள் கன்னத்தை தன் சுருக்கு விழுந்த கைகளால் வருடியவர், "சந்தோசமா இரு. உனக்கு நான் இருக்கேன். எதுவா இருந்தாலும் சொல்லு" என்று அத்தனை வயோதிகத்திலும் அவளுக்கு துணையாக நின்றார். எப்போதும் இருப்பேன் என்று உணர்த்தவும் செய்தார்.

"ஏலா" என்று தாவி அவரை கட்டிக் கொண்டு அழுதே விட்டாள் சுடர்.

'தங்களிடம் ஒருவார்த்தை கூட சொல்லாது அவள் திருமனம் செய்துக் கொண்டாள், ஊரே அவனுக்கு எதிராக நின்று போர் கொடி தூக்கும் போது கூடவே இருந்தவள், அவனுடன் கொஞ்சி குலாவி அவன் பிள்ளையை வேறு சுமந்து கொண்டு நிற்கிறாள்.' என்றெல்லாம் ஓராயிரம் குற்றசாட்டுகள் சுடர் மீது வைத்தாலும்,

இந்த நொடிவரை காமாட்சி பாட்டி ஒருவார்த்தை 'ஏன் அப்படி செய்தாய்?' என்று கேட்கவில்லையே. தன் வளர்ப்பு மீது அளவு கடந்த நம்பிக்கை கொண்டாரே. அவள் பகட்டு மட்டும் தான் ஊரார் கண்களுக்கு தெரிந்தது. கோழி குஞ்சாய் அடைகாத்து வளர்த்தவருக்கு தானே அவள் பதட்டமும், தவிப்பும் தெரியும்.

தன் சனங்கள் முன் எதுவும் பேசா மடந்தையாகி போனது சுடர் மட்டுமல்ல, என்ன? ஏது? என்று எதுவும் விளங்கா நிலையில் இருக்கும் அவரும் தான்.

"சூதானமா இரு தாயி" என்று விட்டு அவர் பாரமான மனதுடன் விடை பெற்று செல்ல, "ஏலா…" என்று உள்ளுக்குள் கண்ணீரோடு கதறியவள் வார்த்தைகள் கூட மெலிந்து தான் ஒலித்தது.

காமாட்சி பாட்டியை தொடர்ந்து மற்ற பெண்களும், "கல்யாணம் ஆனா பொம்மள பிள்ளைங்க பொறந்த வீட்ட மறக்கும் தான். இவ என்ன இப்படி ஒரே நாள்ல புருஷன் வேட்டிய பிடிச்சிட்டு இத்தன வருஷம் சீராட்டி வளர்த்த ஆத்தால கூட பக்கத்துல அண்ட விடாம விரட்டுறா” என்று அங்கலத்துக்கு கொண்டே செல்ல,

அவர்கள் வார்த்தைகள் செவியில் விழுந்து இன்னும் சுடரை கவலையில் ஆழ்த்தியது.

கெட்டவன் கெட்ட கேட்டுக்கு அவன் வேட்டியை பிடித்து பின்னாடி வேற சுத்தனுமா? சிந்தை முழுவதும் அத்தனை கோபம் நிரம்பி வழிந்தாலும், எதுவும் செய்ய இயலா கையறு நிலையில் கண்ணீரோடு நின்றிருந்தவளை, ஆறுதலாக தோளோடு அணைத்துக் கொண்டது என்னவோ கலாவதி தான்.

"அழுவாத கண்ணு… நீ எப்போ நினைக்கிறியோ அப்ப ஒரு எட்டி போய் பார்த்திட்டு வந்துடலாம்" என்று அவர் ஆதரவாக நிற்க, மேலும் அழுகை தான்.

நிற்கதியாக அன்னை அணைப்பில் சாய்ந்து கிடந்த மனைவியை வஞ்சகமாக பார்த்துக் கொண்டே மேலும் தன் நாடகத்தை தொடர சென்று விட்டான் ஜெய்.

இரவு பயணத்தின் போது குடிக்க, கொரிக்க என்று ஆள் உயர இரண்டு டப்பாகளை நிறைத்து தான் அனுப்பி வைத்தார் கலாவதி. போதா குறைக்கு இரவு சாப்பாடு எல்லாருக்கும் பார்சல் கட்டி வேறு அனுப்பியுள்ளார்.

ஆர்ப்பாட்டம் செய்த பிறகு இளைஞர்கள் யாரும் மீண்டும் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கவில்லை.

வெளியே தான் நின்றிருந்தார்கள். ‘மாப்பிள்ள வீட்டுல வந்து இப்படியெல்லாம் பண்றது நல்லாவா இருக்கு?’ என்று ஊர் வந்து சேரும் வரை மண்டையில் கொட்டியே அழைத்து வந்தார்கள் பெரியவர்கள்.

அதிலும் ஜெய்யின் ஏளன புன்னகை வேறு உள்ளே இருக்கும் கோப தீக்கு பெட்ரோல் ஊற்ற,

“அவனை ஏதாவது பண்ணியே ஆகனும் தீனா" என்று மேலும் மேலும் வஞ்சகம் கொண்டார்கள்.

இங்கே சுடரின் அழுகை ஓரளவு மட்டுபட்டு இருந்தாலும், தன் ஜனங்களை எண்ணி கவலையே அவளை ஆட்க் கொண்டிருந்தது.

சோர்வாக வாசலையே வெறித்தபடி சோபாவில் அமர்ந்திருந்த சுடர் அருகே வந்தமர்ந்த கலாவதியோ, “ஒன்னுமில்ல கண்ணு… கண்ணாலம் கட்டி போற எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்கிற கவலை தான். ரெண்டு நாள்ல சரியாகிடும். வெசன படாத. சூசு குடிக்கிறியா?" என்று அவர் அக்கறையாக கேட்க,

அவளோ வெறுமையான முகத்துடன் இல்லை என்று மட்டும் தலையாட்டினாள். அவரிடமும் எதுவும் பேச பிடிக்கவில்லை.

"ஏதாவது சாப்பிட எடுத்துட்டு வரட்டுமா. நல்லா சாப்பிட்டு தெம்பா இருந்தா தானே என் பேர பிள்ளையும் நல்ல ஆரோக்கியமா பொறப்பான்" என்று அவர் அத்தனை அக்கறையுடனும், ஆசையுடனும் சொல்ல,

சுடருக்கோ அவரை ஏமாற்றுவது மேலும் குற்றவுணர்வாகி போனது.

வெள்ளந்தியாக, மெய் அன்பு காட்டும் அவரிடம் பொய்யுறைக்க மனமில்லாது, உண்மையை கூறிவிட்டாள்.

"நான் கர்ப்பம் இல்ல" என்று தலையை குனிந்து கொண்டே அவள் சொல்ல, அவருக்கு பெரிய ஏமாற்றம் தான் என்பது அவரின் மெளனமே சொன்னது.

பெரும் தயக்கத்துடன் சுடர் நிமிர்ந்து அவர் முகத்தை பார்க்க, வெளறிய முகத்துடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தவர், தன் ஏமாற்றத்தை புறம் தள்ளி, மருமகளை பார்த்து சிரித்தார்.

அவர் கோபப்பட்டிருந்தால் கூட சுடர் மனம் சாந்த பட்டிருக்கும், ஆனால் அவரோ துளியும் அவள் மீது கோபத்தை காட்டாது அதே நேச புன்னகை வீச, மொத்தமாக குற்றவுணர்வில் மூழ்கி போனது என்னவோ சுடர் தான்.

"உங்களுக்கு என்மேல கோபம் இல்லையா?" என்று அவள் கேட்க,

"இந்த விசயம் என் மகனுக்கு தெரியுமா?" என்று தான் அவர் திருப்பி கேட்டார்.

சுடரோ "தெரியும்" என்று தலையை ஆட்ட,

"அவன் உம்மேல கோபப்பட்டானா?"

"ம்ஹிம்" என்று தலையை இடவலமாக ஆட்டினாள்.

"அப்புறம் எதுக்கு நான் கோபப்படனும்? இங்க பாரு கண்ணு, அவனுக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கிங்றது அவன் உன்ன பார்க்கிற பார்வையிலேயே தெரியுது. என்னைக்கா இருந்தாலும் எனக்கு பேரனையோ, பேத்தியையோ பெத்து கொடுக்க போறது நீ தானே. பொறவு எதுக்கு உன் மேல கோபப்படனும்? இன்னொரு உண்மையை சொல்லட்டா?" என்று ரகசியம் போல் மெதுவாய் கேட்டவர்,

மருமகளை தன் அருகே அழைத்து அவள் காதருகே குனிந்து,

"எனக்கு அந்த மேனாமினிக்கிய சுத்தமா பிடிக்காது. ஆளும் மண்டையும், மருவாதை தெரியாதவ. என் பையன் ஆசை பட்டுட்டானேனு பொறுத்து போனேன். அவன் ஆசை பட்டது அவளை இல்லனு தெரிஞ்சதும் சந்தோசப்பட்ட முதல் ஆள் நான் தான்? அதுவும் உன்னை கண்ணாலம் கட்டிக்கிட்டது இன்னும் எனக்கு சந்தோசம். நீ நம்ம ஊரு பொண்ணு, உங்கிட்ட வர்ற இந்த பிணைப்பு எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவகிட்ட வராது" என்று மனம் நிறைய சொல்லிக்கொண்டே கையால் மருமகளுக்கு திருஷ்டி கழித்து கொண்டார்.

அவர் பேச பேச சுடரும் ஓரளவு பாரம் நீங்கி இயல்பு நிலைக்கு திரும்பினாள்.

இரவு வரை நீண்டு கொண்டே தான் இருந்தது மாமியார் மருமகளின் உரையாடல்கள்.

சுடரின் வீட்டாட்களை ஊருக்கு அனுப்பி வைத்த கையோடு அலுவலக விசயமாக வெளியே சென்றிருந்த ஜெய்யோ அப்போது தான் வீடு வந்து சேர்ந்தான்.

கார் சத்தம் கேட்டதும் மனைவி ஆசையாக ஓடி வந்து வரவேற்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் அவனுக்கு இல்லை. அதற்கான ஆளும் அவள் இல்லை என்று அறிந்தவன் அதையெல்லாம் எதிர்பார்க்கவும் இல்லை.

அவன் வீட்டிற்குள் நுழைந்த சமயம் மாமியாரும், மருமகளும் கிச்சனில் நின்று பேசி சிரித்த படியே சமைத்துக் கொண்டிருதார்கள்.

சமையலுக்கு என்று எத்தனை வேலையாட்கள் இருந்தாலும், தன் கையால் சமைத்து மகனுக்கு ஊட்டுவதில் அத்தனை இன்பம் கலாவதிக்கு.

அவனுக்கும் நஞ்சு என்றால் கூட அன்னை கொடுத்தால் அமிர்தம் தான்.

மாமியார், மருமகள் சத்தம் கிச்சன் தாண்டி வாசல் வரை கேட்க, ஒலி கேட்ட திசையில் ஒளி கீற்றாக வந்து விட்டான்.

அவன் ஆசை மனைவி, தூக்கி போட்டா கொண்டை, ஏத்தி சொருகிய சேலை, இடைவெளியில் வஞ்சமின்றி வள வளவென மின்னிய இடுப்பு சதை என கணவன் கண்ணுக்கு விருந்தாக நின்றபடி, தோசைக்கல்லில் சப்பாத்தியை சுட்டு எடுத்துக் கொண்டிருக்க,

தரையில் அமர்ந்து ஒற்றை காலை நீட்டி, இன்னொரு காலை மடக்கி அமர்ந்திருந்தபடி கலாவதி மாவை தேய்ந்து கொண்டிருந்தார்.

மூடிய தேசத்திலே முத்து குளிக்கும் வழி தேடுபவனுக்கு, அவள் நின்றிருக்கும் கோலம் ரயில் பாலம் அமைத்து மோக தீக்கு யாகம் வளர்க்க, ஆசைகளையும், தேவைகளையும் அடக்கி அவனுக்கு பழக்கம் இல்லையே.

கிச்சன் வாசலில் கால்களை பின்னியபடி, கைகளை கட்டிக் கொண்டு அவன் தாலி கட்டிய குத்து விளக்கை தான் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி கொண்டிருந்தான்.

பிரம்மன் படைத்த பேரழகு கட்டுடல் சிலை அல்ல தான் அவள்.

மோகம் கொண்டு, மிச்சமின்றி சிறந்த சிற்பி செதுக்கிய அழகு சிலை தான் அவள்.

அள்ளி முடிந்த கூந்தல் தயவில், பின் கழுத்தடியில் மறைந்து கிடக்கும் குட்டி முடிகள் கூட அவன் கவனத்தை ஈர்த்தது. கழுத்து வளைவில் மோகம் துவங்கும் முத்தமிட்டு, அம்முடிகளை விரல்களில் சுருட்டு விளையாட ஆசை வந்தது ஆறடி அசுரனுக்கு.

பறந்து விரிந்த முதுகு, காலையில் அவன் ஏற்பாடு செய்த ஆடை வடிவமைப்பாளினி கை வண்ணத்தில் கச்சிதமாக அவள் மேனி அழகை காட்டிட, குட்டி குட்டி முத்தங்கள் ஜாக்கெட் மறைக்காத பாகம் எங்கும் பதித்திட இப்போதே உதடுகள் துடித்தது.

முந்தானை சேலையை சுருட்டி இடுப்பில் சொருகி வைத்திருக்க, ஜெய் வாங்கி கொடுத்த சேலையாக அவன் மாறும் நாளை எண்ணி சூடான ரத்தம் நரம்பு மண்டலத்தில் பாய்ந்தது.

மேடு பள்ளம் வழியே கண்கள் அலைப்பாய, உஷ்ன பெருமூச்சு தான் ஜெய்யிடம்.

யாரையும் இவ்வளவு நிதானமாக, அணுவணுவாக அவன் விழிகளும் ரசித்ததில்லை, மனமும் ரசிக்க அனுமதித்தில்லை. இவளிடம் மட்டும் மனம் தடுமாற காரணம் என்ன? விடையறிய அவனுக்கு நேரமில்லை.

‘அய்யோ கொல்றாளே! ரெண்டு நாள் தீனி போடாத தவிப்பா இருக்கும்’ என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டவன்,

அவளை மொத்தமாக ஆட்கொள்ளும் வழியை தான் யோசித்து கொண்டிருந்தான்.

அவளிடம் மயங்கிய மனம் அவளை அணைக்காது அடங்காது என்று அடம்பிடித்தது.

மற்ற பெண்களை போல் ஒருமுறை ஆசை தீர சுகித்து விட்டால், இவள் மீது இருக்கும் மோகம் தீர்ந்து விடும் என்று தான் அப்போது எண்ணினான்.

பிடிக்காத மனைவி என்றாலும், பிரச்சனை இல்லாது பல இரவுகள் அவள் மடியில் கடந்துவிடும் என்பது அந்த ஏத்தம் பிடிச்ச எரிமலைக்கு தெரியாமல் போனது.

வெகு நேரம் கால்கடுக்க நின்று கட்டிய மனைவியை அவன் ரசித்துக் கொண்டிருக்க, மாமியார் மருமகளில் முதலில் அவனை கவனித்தது கலாவதி தான்.

“எய்யா… எப்போயா வந்த? ஒரு வார்த்தை கூப்பிட்டு இருக்கலாம்ல, இந்தா பத்து நிமிஷத்துல சாப்பாடு ரெடி ஆகிடும்” என்ற அவர் குரலில் தான் அறிவுசுடரும் திரும்பி வாசலை பார்த்தாள்.

அவனை பார்த்த கணம் இடுப்பில் சொருகி இருந்த முந்தானை தூக்கில் தொங்கிட, இடை தெரிய இறங்கி இருந்த சேலையை மேலே இழுத்து விட்டுக் கொண்டாள்.

அவள் செயலை அவதானித்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது. மொத்தமாக அவளை உரித்து பார்க்கும் உரிமை உள்ளவன் அவன், அவனிடம் அவள் மறைக்கும் விசயங்கள் அனைத்தும் அவன் ஆர்வத்தை தான் அதிகரித்தது.

“ஒன்னும் அவசரமில்லை, மெதுவாகவே சமையல் முடிங்க” என்று அன்னை கேள்விக்கு உதடுகள் பதில் சொன்னாலும், பார்வை என்னவோ தன்னை பார்த்து நடுங்கி கொண்டிருந்த மனைவியிடம் தான் இருந்தது.

மனைவியை பார்வையால் விழுங்கிக் கொண்டே கிச்சனுள் வந்தவன், தன் கையில் இருந்த சூட்கேஸை அன்னையிடம் கொடுத்து, "இதுல பணம் இருக்கு ம்மா, லாக்கர்ல வச்சிட்டு வாங்க" என்று சொல்ல, அவரும் "சரிய்யா" என்று சொல்லி கொண்டே பாதுகாப்பாக அதை வைக்க சென்று விட்டார்.

பொதுவாக ஜெய் தன் தொழில் சம்மந்தமான கோப்புகள், பணம் எதையும் கலாவதி பொறுப்பில் விடுவதில்லை. எதையாவது கொடுத்து விட்டு திருப்பி எடுத்து வர சொன்னால், ‘எங்கிட்ட தந்தியா ய்யா? இடது கை வாக்குல எங்கன வச்சேனு மறந்து தொலைச்சி ட்டேனே!’ என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு சொல்லு அன்னையை என்ன தான் செய்ய முடியும்.

இந்த பணம் கூட நாளை ஒரு டெண்டருக்கு கொடுக்க வேண்டியது. மனைவியோடு தனிமையை எதிர் நோக்கியவன், அன்னையை அவ்விடம் விட்டு நகட்டவே கொடுத்து அனுப்பி விட்டான்.

அந்தம்மா ‘பணத்தை லாக்கர்ல தான் வச்சேன், சாவியை எங்கயோ வச்சிட்டேனு’ நாளைக்கு மகன் மண்டைய காய விட போகுது.
 
Last edited:
Status
Not open for further replies.
Top