ஆதிராக்கு எந்த சூழ்நிலையும் படிப்பை பாதிக்காத மாதிரி அமைச்சுக்கிட்டது சூப்பர் 👏👏👏 இந்த வெளங்காத கவின் பூஜா பின்னாடி சுத்துறேன்னு எல்லாத்தையும் குழப்பிட்டு நிக்கிறானே 🤦♀️🤦♀️🤦♀️ பூஜா உண்மையா நல்லவ தானா இல்லை இவளும் நல்லவ மாதிரி நடிக்கிறாளோ 🤔🤔🤔
சென்னை மாநகரின் மத்தியில் அண்ணா சாலையில் கம்பீரமாக காட்சியளித்தது அந்த பத்து மாடி கட்டிடம், கமலா இண்டஸ்ட்ரீஸின் தலைமை காரியாலயம். அன்று வழமை போல அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க இளைஞன் ஒருவன் கீழ்த்தளத்தில் வந்து நின்று கொண்டு சுற்றிலும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான்.
"ஹலோ மச்சான், எங்கடா இருக்க? லாபில வெயிட் பண்ணிட்டிருக்கேன்டா......." பேசிய இளைஞனின் பெயர் பாலகிருஷ்ணா. பாலா செல்போனில் பேச மறுமுனையில் பேசிய வருண் பாலாவை ஆறாவது தளத்தில் உள்ள அவனது கேபினுக்கு வரச்சொன்னான். வருண், கமலா இண்டஸ்ட்ரீஸ் எம்.டி. அமைச்சர் சக்திவேலுவின் மகன். லிஃப்ட்டில் விரைந்த பாலா வருணின் கேபினை அடையும் முன் சுற்றிலும் நோட்டம் விட்டபடி சென்றான்.
கேபினை திறந்து உள்ளே சென்ற பாலாவை ஆரத்தழுவி வரவேற்றான் வருண்.
"வெல்கம் லண்டன் பாய், சென்னைல்லாம் ஞாபகம் வச்சு வந்திருக்கே...."
"அப்பிடியில்ல மச்சான், வைஃப்,பிள்ளைன்னு ஆனாலே டைம் கிடைக்குதில்ல மச்சான், இந்த ஹாலிடேய்ஸுக்கு எப்பிடியும் இந்தியா வந்துடணும்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டேன். பிஸ்னஸ்க்கு ஹெல்ப்பும் இல்லடா. ரொம்ப கஷ்டம்டா. வீட்ட வந்ததும் முதல் வேலையா உன்ன பார்க்கிறதுக்கு கிளம்பி வந்துட்டேன்."
"அவங்க நல்லா இருக்காங்கடா. உங்கம்மா கையால சாப்பிட குடுத்து வச்சிருக்கணும். நான் இன்னைக்கே வீட்டை வரேன்." என்று சொல்லிவிட்டு பாலா சிரிக்க,
"அம்மாக்கு நீ வந்திருக்கன்னு சொன்னா போதும், தினமும் விருந்துதான்." என்று வருணும் சிரித்துக்கொண்டான்.
பல நாள் கழித்து சந்தித்த உயிர் நண்பர்கள் இருவரும் பழைய ஞாபகங்களை அசை போட்டுக்கொண்டனர்.
கதை அப்படியே வருணின் திருமணம் பற்றி திசை மாறியது.
"என்னடா வருண், இப்பிடியே தனியாவே இருந்து காலத்த ஓட்டிடலாம்னு நினைக்கிறியா? கனவு வாழ்க்கைல இருந்து வெளிய வா......."
"போடா, லைஃப்ப என்ஜாய் பண்ணாம ஜெயிலுக்கு போக சொல்றியா?"
"போன மாசம் உன் சிஸ்டர மீட் பண்ணியிருந்தேன், அவளும் உன்னோட மேரேஜ் பத்திதான் பேசினா, உங்கம்மா சரியா கவலைப்படுறாங்களாம்னு சொன்னாள். ஏன் உனக்கிந்த பாவம் பழியெல்லாம்? உனக்கு என்னடா குறைச்சல்? ரன்பீர் கபூர் மாதிரி இருக்கே.... தமிழ் நாட்டோட டாப் பைவ் தொழிலதிபர்கள்ல நீயும் ஒருத்தன் ஆகிட்டே. இன்னும் என்ன வேணும் உனக்கு? அட் லீஸ்ட் அம்மாவோட ஆசைக்காவது கல்யாணம் பண்ணிக்கலாமே......"
"டேய் எல்லாமே ஈஸியா கிடைச்சுட்டா கிக் இல்லடா, பூஜா லவ் பண்ணினாள், கவினும் லவ் பண்ணினான், மேரேஜ் பண்ணி செட்டில் ஆகிட்டாங்க. போரிங் லவ், போரிங் லைஃப். எனக்கு அதெல்லாம் செட் ஆகாதுன்னு உனக்கே தெரியும்தானே....."
"டேய் எல்லா பொண்ணுங்களுக்கும் உன்ன பிடிக்கும்டா, உன்ன பிடிக்காத பொண்ணு யாராவது இருப்பாங்களா? அப்பிடி இருந்தாதானே நீ முன்னாடில்லாம் சொல்ற போல அவளை துரத்தி துரத்தி காதலிக்கலாம். அதுவுமில்லாம உன்கிட்ட இருக்கிற பணத்துக்கு மயங்காதவள் யாராச்சும் இருப்பாளா? பி பிராக்டிகல்டா...."
"உன்ன போலதான் நானும் நம்பிக்கிட்டிருந்தன்.............." என்று சொல்லும்போதே வருணின் கேபினுக்குள் நுழைந்துவிட்டாள் அவள்.
"சாரி சார், நீங்க அவசரமா இந்த டாக்குமெண்ட் கேட்டதா மேனேஜர் சார் சொன்னார், அதான்........" என்று சொன்னவளை தான் பிறகு அழைப்பதாக கூறி அனுப்பினான் வருண்.
"நான் வந்திருக்கும் போதுதான் உனக்கு முக்கியமான டாக்குமெண்ட் பார்க்கணுமா?"
"டேய் அதான் போக சொல்லிட்டேன்ல, ஓவரா ஸீன் போடாத....."
"சரி, ஏதோ சொல்லிக்கிட்டிருந்தியே....... நான் சொன்னதுல என்ன தப்பு? நான் லண்டன் போறதுக்கு முன்னாடி உனக்கு ஒரு பொண்ண பார்த்து மேரேஜ் பண்ணி வச்சிட்டுத்தான் போறன்.டாட்....."
"ஆ......அப்புறம்?......"
"என்ன மச்சான் என்னால முடியாதுன்னு சொல்றியா? அப்போ எப்பிடி பொண்ணு வேணும்னாலும் சொல்லு. நான் தேடி பிடிக்கிறன்."
"என்னடா பூஜாகிட்ட ஏதாவது வாக்கு கொடுத்துட்டு வந்தியா? இல்ல அம்மாகிட்ட பேசிட்டு வந்தியா?"
"டேய் மச்சான், நீ எப்பிடிப்பட்ட இடத்துல இருக்கிறான்னு எனக்கு நல்லாவே தெரியும். இங்க உன்ன பத்தி யோசிக்க யாருமில்லன்னும் தெரியும். என்னோட ஒரே பிரெண்ட் நீதான். உன்னில இருக்கிற உண்மையான அக்கறைலதான் கேட்கிறேன் மச்சான்....."
"என்னடா..... ஓவரா நெஞ்ச நக்குற? சரி...... உனக்கு எப்பிடி பொண்ணுன்னுதானே கேட்ட? இப்போ கேபினுக்கு வந்து போச்சே பொண்ணு, அந்த பொண்ணு போல...... இல்ல இல்ல அந்த பொண்ணுதான் வேணும். உன்னால முடியுமா?" என்று பாலா எதிர்பார்க்காத ஒரு பதிலை கொடுத்தான் வருண்.
"மச்சான் யாருடா அவ? நான் அவளை நிமிர்ந்து பார்க்கவும் இல்லையே.... இத முன்னமே சொல்றதில்லயா?" ஆச்சர்யத்தில் துடித்தான் பாலா.
"உனக்கென்ன.... இப்ப அவளை பார்க்கணும். அவ்வளவுதானே." என்று சொல்லிவிட்டு அருகிலிருந்த இன்டர்காம்மை எடுத்து காதில் வைத்தவன் "என்னோட கேபினுக்கு வாங்க." என்று விட்டு பாலாவையும் அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினான்.
அடுத்த கணமே வருணினது கேபினை திறந்து கொண்டுவந்தவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் பாலா.
அழகிற்கு கவிஞர்கள் சொன்ன இலக்கணத்திற்கெல்லாம் சான்றாக அங்கு நின்றிருந்தாள் அவள். சாந்தமான முகம், அமைதியும் நிதானமுமான உடல்மொழி, பயந்த சுபாவம், வசீகரிக்கும் காந்தக்கண்கள், பார்வையில் இருக்கும் தெளிவு என்று முரண்களின் தொகுப்பாக நின்றிருந்தவள் பாலாவின் பெண்கள் பற்றிய கூற்றை பொய்யாக்கியிருந்தாள். அது பாலாவுக்கும் நன்கே விளங்கிற்று. பணத்திற்கும் ஆடம்பரத்திற்கும் மயங்காத பெண்கள் இல்லையென எண்ணியிருந்தவனை ஒரு நொடியில் தலைகீழாக மாற்றியிருந்தது அவளின் தோற்றம்.
வருணும் ஏதோ ஒரு பைலை கொடுத்து ஏதோ சொல்லி அனுப்பிவிட்டு பாலாவை பார்த்தான்.
அவள் அழகில் மெய் மறந்திருந்தவன் தன் தோழனின் அழகிற்கும் அந்தஸ்த்திற்கும் ஏற்ற ஜோடி அவள்தான் என்பதை புரிந்துகொண்டான்.
"என்னடா ஒண்ணுமே பேசாம இருக்க? பொண்ண பார்த்தியா?"
"மச்சான்.... என்ன பொண்ணுடா? உனக்கேத்த ஜோடிதான். யார்டா இவ?"
"பேரு ஆதிரா. வயசு இருபத்தஞ்சு. மதுரைப்பொண்ணு. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிட்டு இப்போ நம்ம ஆபிஸ்ல சிஸ்டம் அனலாசிஸ்டா வேலைக்கு ஜாயின் பண்ணி ஆறு மாசமாகுது. நான் சரியா தூங்கியும் ஆறு மாசமாச்சு......" வெட்கத்தோடு சொல்லி முடித்தான் வருண்.
"அட்றா சக்க....... அப்பிடி போடு....... இன்னும் ஏன் மச்சான் வெயிட் பண்ற? உங்க ஊரு பொண்ணு, பார்க்க நல்ல பொண்ணா தெரியுது. உன்னோட விருப்பத்த சொல்லிட்டியாடா? இல்ல, இதயம் முரளி போல வெயிட் பண்ணிட்டு இருக்கியா?"
"டேய் அவள பார்த்ததுமே நான் என் மனசையே பறிகொடுத்திட்டன், என்னோட காதலையும் சொல்லிட்டேன். ஆனா அவ சைடுல இருந்து எந்த பதிலும் கிடைக்கலடா. காத்திட்டு இருக்கேன்."
"போடாங்..... என்னடா இன்னும் காத்திட்டு இருக்கேன்னு சொல்ற? உன்ன கட்டிக்கிறதுல என்ன பிரச்சனையாம்? அவ அப்பா, அம்மா எங்க இருக்காங்க? வா போய் பேசி பார்த்திடுவோம்...."
"அதில ஒரு சிக்கல்டா......"
"என்ன சிக்கல் மச்சான்?"
"அவளோட அப்பா, அம்மா ரெண்டு பேரும் ஒரு வருசத்துக்கு முன்னாடி கார் ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்க. இப்போ ஹாஸ்டல்ல தான் தங்கியிருக்காள். அவளுக்குன்னு சொல்லிக்க யாருமில்லை."
"ஓ.... அப்பிடியா? சரி, உங்கம்மாட்ட சொல்லி பேசி பார்க்க சொல்லலாமே?"
"டேய் என்ன கட்டிக்க போறவளுக்கு என்ன புடிக்கணும், அது தெரியாம எப்பிடி அம்மாவ பேச வைக்கிற? அதனாடிதான் நான் பூஜாகிட்ட கூட எதுவும் சொல்லல. உனக்கு மட்டும்தான் சொல்லியிருக்கன்."
"அவளோட சம்மதத்தோடதான் கல்யாணம் பண்ணிப்பேன். எனக்கு நம்பிக்கையும் இருக்கு, நேரமும் இருக்கு."
"நானும் ஏதாவது ஹெல்ப் பண்ணலாமான்னு பார்க்கிறன் மச்சான்."
"டேய் ஹெல்ப் பண்றன்னு போயி ஏதாவது சொல்லி குட்டைய குழப்பி விட்றாதடா...."
"டோன்ட் ஒர்ரி மான், பேசிட்டிருந்தா டைம் போறதும் தெரியாது. நான் போகணும். இனித்தான் விஜிட வீட்ட அவள கூட்டி போகணும்."
"என்னடா இப்பிடி பயப்படுற?"
"டேய், நீயும் கட்டுவல்ல. அப்போ தெரியும். சிட்டி டான் வீட்டில எப்பிடி இருப்பார்னு..... நானும் பார்க்கத்தானே போறன்......" என்று சிரித்துக்கொண்டே விடை பெற்றான் பாலா.
பாலா போனதும் தான் ஆதிராவிடம் காதலை கூறியதும் அதற்கு பதிலெதுவும் கூறாமல் அவள் சென்றதும் வருணுக்கு நினைவு வந்தது.
'ஆதிரா ஏன் தன்னுடைய காதலை ஏற்கவில்லை?'
'ஒருவேளை பாலா சொல்வது போல அவளுக்கு வேறு ஏதாவது காதல் இருக்குமோ?'
'ஆதிராவுக்கும் என்னை பிடிக்குமா? ஒருவேளை கூச்சத்தில்தான் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறாளா?'
'உள்துறை அமைச்சரின் பையன். அப்பா ஜெயிலுக்கெல்லாம் சென்றிருக்கிறார். அப்பாவை பார்த்து பயப்படாதவர்களே மதுரையில் இல்லை. தமிழ் நாட்டின் முக்கிய புள்ளிகள் என்றெல்லாம் பயப்படுகிறாளா?'
'லிஃப்ட் ஐந்து நிமிடம் நின்று போனதற்கு மயக்கம் போட்டு விழுந்தவள், கரப்பான் பூச்சியை கண்டு வீரிட்டு கத்தியவள் என்னை பார்த்து பயப்படத்தானே செய்வாள்.'
இன்று ஆதிராவின் மனதில் இருப்பதை அறிந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தவனாய் ஆதிராவை அழைப்பதற்கு முயற்சித்தவனுக்கு ஆதிரா அன்று அரை நேர விடுமுறை எடுத்திருந்தது ஞாபகத்திற்கு வந்தது.
முடிவெடுத்த பின்பு பொறுமை கொள்ளத்தெரியாத வருண் ஆதிராவின் செல்போனிற்கு அழைப்பை மேற்கொண்டான்.
மூன்று முறை முயற்சி செய்தும் பதிலெதுவுமில்லை. தன் செல்லை கீழே வைத்தவனின் செல்லிற்கு அழைப்பு வர ஆர்வமாக மீண்டும் செல்லை தூக்கியவன் அது அப்பாவிடமிருந்து வந்த அழைப்பு என்று தெரிந்ததும் களையிழந்தான்.
"ஹலோ சொல்லுங்க அப்பா...."
"வருண் எங்க இருக்கே?"
"ஆபிஸ்ல தான்ப்பா. ஏன் ஏதாவது பேசணுமா? நான் வரட்டுமா?"
ஆதிராக்கு எந்த சூழ்நிலையும் படிப்பை பாதிக்காத மாதிரி அமைச்சுக்கிட்டது சூப்பர் 👏👏👏 இந்த வெளங்காத கவின் பூஜா பின்னாடி சுத்துறேன்னு எல்லாத்தையும் குழப்பிட்டு நிக்கிறானே 🤦♀️🤦♀️🤦♀️ பூஜா உண்மையா நல்லவ தானா இல்லை இவளும் நல்லவ மாதிரி நடிக்கிறாளோ 🤔🤔🤔
அத்தியாயம் 12 - பயம்
அன்றைய இரவு முழுவதும் தூங்காமல் பதற்றத்துடன் அங்குமிங்கும் பால்கனியில் நடந்துகொண்டிருந்தான் வருண். ஏதோ ஒரு தொலைபேசி அழைப்பை எதிர்பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு அந்த அழைப்பு வரும்போது நேரம் சரியாக அதிகாலை மூன்று மணி.
"மூர்த்தி அண்ணே என்ன ஆச்சு?"
"இப்போதான் தம்பி எல்லாம் முடிஞ்சுது. ஒரு பிரச்னையும் இல்ல, நீங்க வரலாம் தம்பி."
"சரிண்ணே நான் அங்க வரேன்." என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தவன் உடனடியாக ஜே நகர் கடற்கரை பங்களாவிற்கு தன்னுடைய ஜாக்குவாரில் விரைந்தான்.
பங்களா வாசலில் அங்கு வேலைக்காரர்களாக பணியாற்றும் மூர்த்தியும் சேதுவும் வருணை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
வருண் வந்து இறங்கியதும் மரியாதையுடனும் பயத்துடனும் தலை குனிந்து நின்றான் சேது. வருணை நோக்கி வந்த மூர்த்தியை அழைத்தவாறே உள்ளே சென்றான் வருண்.
"சரக்கு ஒண்ணும் இல்லையே?"
"அதெல்லாம் நீங்க சொன்னதுமே கிளியர் பண்ணிட்டேன் தம்பி. டாக்குமெண்ட்ஸ் செக் பண்ணினாங்க. அது எல்லாமே நம்மகிட்ட சரியா இருந்திச்சு. யாரையும் உள்ள விடல. என்னையும் சேதுவையும் இந்த ரூம்ல அடைச்சு போனையும் புடுங்கிட்டாங்க. அவங்க உள்ள வந்து கேட்டதுக்கு மாத்திரம் பதில் சொன்னோம்."
"யாரு வந்திருந்தாங்க? எத்தனை பேரு?
"இன்கம் டாக்ஸ் ஆபிசரும் இருந்தாங்க. சிபிஐ ஆபிசரும் இருந்தாங்க. வந்ததுமே எங்களை உள்ள போக சொல்லிட்டாங்க. ஒரு ஏழு எட்டு பேராவது வந்திருப்பாங்க தம்பி."
"இது வழமையா நடக்குற ரைடு தானா? ஏதாவது வித்தியாசமா இருந்திச்சா?"
"இது வழமையான ரைடுதான் தம்பி. நீங்க குழப்பிக்காதீங்க. ஐயாக்கு எல்லா இடத்துலயும் செல்வாக்கிருக்கு. யாராலயும் எதுவும் பண்ண முடியாது. நீங்க போய் அப்பாவ பாருங்க தம்பி."
"சரிண்ணே சேது எப்பிடி? நம்பலாமா?"
"ரங்கசாமியோட பையன், தாராளமா நம்பலாம். நம்பலன்னா அவன் மேல ஒரு கண் வைக்கிறன்."
"எனக்கென்னமோ இன்னைக்கு நடந்த ரைடுல நம்ம ஆள் யாரோ தகவல் சொல்லியிருப்பானோன்னு தோணுது. சூதானமா இருந்துக்குங்க."
"நான் பார்த்துக்கிறேன் தம்பி." என்று மூர்த்தி சொல்ல அங்கிருந்து விடைபெற்ற வருண் அவனது அப்பாவை சந்திக்க காமராஜர் நகரிலுள்ள அவரது கட்சி அலுவலகத்துக்கு விரைந்தான்.
காலை ஆறு மணியாயிருக்க ஆதவனும் தன் ஆட்சியை தொடங்கும் காட்சியை கடற்கரையில் பார்த்தவாறே வண்டி ஓட்டிக்கொண்டிருந்தான் வருண். கடலலையில் ஆதிராவின் முகம் தெரிவது போல ஏற்பட்ட பிரம்மை அவனை அறியாமல் அவன் உதட்டில் புன்னகையை கொடுத்தது.
அப்போது அவனது செல்போனும் சிணுங்க எடுத்து முகப்பை பார்த்தவனுக்கு ஆதிராவின் பெயர் மேலும் அதிர்ச்சியை கொடுத்தது. தான் முந்தைய நாள் ஆதிராவுக்கு கால் எடுத்தது கூட வருணுக்கு அப்போதுதான் நியாபகத்துக்கு வந்தது.
"ஹலோ"
"ஹலோ சார், நான் ஆதிரா பேசுறேன்."
எதிரே ஆதிராவின் குரல் கேட்டு சொக்கிப்போனான் வருண்.
"சார் நேற்று சாயங்காலமா கால் எடுத்திருக்கீங்க. நான் என் பிரெண்ட் ரிசெப்சனுக்கு போய்ட்டேன். வரும் போது லேட் ஆகிட்டுது. அப்பிடியே வந்து தூங்கிட்டேன். சாரி சார். எதுக்கு சார் கால் பண்ணியிருந்தீங்க?"
ஆதிரா பேச பேச மறுமுனையில் ஐஸ்கிரீம் போல உருகிக்கொண்டிருந்தான் வருண்.
"அதுவந்து நேற்று ஏதோ ஆபிஸ் விஷயமா பேசத்தான் கால் பண்ணியிருந்தன். இப்போ மறந்திடுச்சு."
"ஓகே சார்."
"ஆதிரா முதல்ல இந்த சார்ங்கிறத நிறுத்துங்க. கால் மீ வருண். இன்னைக்கு நான் உங்கள மீட் பண்ணியாகணும்."
சிறிது நேர மௌனத்திற்கு பின்னர் மெல்லிய குரலில் "எங்க மீட் பண்ணனும்?" என்று பயம் கலந்த மரியாதையுடன் பதில் கிடைத்தது.
"நான் இன்னைக்கு ஆபிஸ் வரமாட்டன். லஞ்ச் டைம்ல ஆபிசுக்கு எதிரே இருக்கிற காபி ஷாப்ல மீட் பண்ணுவம்." என்று சொல்லிவிட்டு சட்டென போனை வைத்தான் வருண்.
'எங்க மீட் பண்ணனும்?' என்று பயத்துடன் ஆதிரா கூறியது வருணுக்கு பிடித்திருந்தது.
சிறிது நேரத்தில் உள்த்துறை அமைச்சர் சக்திவேலின் கட்சி அலுவலகத்திற்கு முன்னால் நின்றது வருணின் ஜாக்குவார்.
வருணை கண்டதும் அமைச்சரின் எடுபுடிகள் அனைவரும் பயம் கலந்த மரியாதையுடன் பம்மிக்கொண்டு நிற்க வருணோ நேராக சக்திவேலுவின் ஓய்வறையை நோக்கி நகர்ந்தான்.
அங்கு தனயனை எதிர்பார்த்து காத்திருந்த சக்திவேலு, வருணை ஆரத்தழுவி வரவேற்றார்.
"வருண் நீ இங்க வருவன்னு எனக்கு தெரியும். ஆனா இப்போ இங்க வந்தது அவ்வளவு புத்திசாலித்தனம் இல்லடா."
"ஏன்ப்பா அப்பிடி சொல்றீங்க? நான் வர்றதில என்ன இருக்கு?"
"எனக்கு இருக்கிற கேட்ட பெயரோ வெளில இருக்கிற பகையோ உன்ன பாதிச்சிட கூடாதுங்கிறதுக்காகத்தான் நான் உங்க எல்லாரையும் விட்டு விலகி இருக்கிறேன். ஊரு உலகத்த பொறுத்தவரைக்கும் சக்திவேலுக்கும் அவரோட பையனுக்கும் ஆகாதுன்னுதான் இருக்கணும். ரவுடியிசதால இனி அரசியல் பண்ண முடியாது. கார்ப்பரேட் உலகத்தை உனக்கு கீழ வச்சிருக்கணும். அதுக்கு உன்னோட ரூட்தான் கரெக்ட்."
"அதுல நான் கிளியரா இருக்கேன். நேற்று உங்க குரல்ல ஒரு வித்தியாசம் இருந்திச்சு. அதனாடிதான் உங்கள நேர்ல பார்த்து பேசிடுவோம்னு வந்தேன். எனி ப்ரோப்ளம்?"
"சரியா தெரியல வருண். நேற்றைய ரைடுல ஏதோ ஒண்ணு உறுத்திட்டே இருக்கு. ஆனா அது என்னன்னு புரியுதில்ல....."
"எதுக்கு இப்போ நீங்களும் குழம்பி என்னையும் குழப்புறீங்க? இது சாதாரணமா நடக்குற ரைடு போலதான் இருந்திச்சின்னு மூர்த்தி அண்ணா சொன்னாரே!!!!!!"
"ஆனா எனக்கு அப்பிடி தோணல வருண், இதுக்கு முன்னாடில்லாம் ரைடு நடக்குறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னமே இன்போர்மேசன் கிடைச்சுடும். ஆனா இது முதல் நாள் ராத்திரிதான் நம்மாளுக்கு விஷயமே தெரிஞ்சிருக்கு. எல்லாமே ரொம்ப சீக்ரெட்டா பிளான் பண்ணியிருக்காங்க. அதவிட முக்கியமான விஷயம் ரைடு பீச் பங்களால மாத்திரம்தான் நடந்திருக்கு."
"அதுவும் சரிதான், இது சாதாரண ரைடா கூட இருக்கலாம். ஆனா எதையும் சாதாரணமா எடுத்துக்காத."
"ஓகேப்பா. நான் பார்த்துக்கிறேன்."
"அசிஸ்டன்ட் கமிஷனர் சுரேந்தர்கிட்ட எல்லா விஷயமும் பேசிட்டேன். அவர் உன்ன வந்து மீட் பண்ணுவார். அவர நம்பலாம். நம்மாள் தான். அவர் உனக்கு ஹெல்ப் பண்ணுவார்."
"சரிப்பா, நீங்க ஒர்ரி பண்ணாதீங்க. நான் பார்த்துக்கிறேன்."
"அப்பா..... அம்மாக்கு எப்பவும் இதே பேச்சுத்தான்....... விடுங்க......"
"அம்மா பேசினாலும் பேசலாட்டியும் உனக்கும் வயசாகிட்டே போகுது. தனியாளா இருக்கிறதவிட குடும்பஸ்தனா இருந்தா ஊர் உலகத்துல மரியாதையும் இருக்கும். புரியும்னு நினைக்கிறன்."
"புரியுதுப்பா. சீக்கிரமே நல்ல சேதியா சொல்றேன்." அவ்வளவு நேரம் இருந்த இறுக்கமான உரையாடலை மறந்து மெல்ல சிரித்தான் வருண்.
"சந்தோசம், பொண்ணு எப்பேர்ப்பட்ட மகாராணியா இருந்தாலும் பயப்படாம சொல்லுடா. பேசி முடிச்சிடலாம். அது சரி வரலாட்டி தூக்கிடலாம்."
"அப்பா, இப்போவாச்சும் அப்பா மாதிரி பேசுங்க. அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். கொஞ்சம் டைம் குடுங்க."
"ஹாஹாஹா...... என் புத்தி எங்க போகுது பார்த்தியா?" என்று சொன்னபடி சிரித்துக்கொண்டே வருணுக்கு விடை கொடுத்தார் சக்திவேலு.
வெளியே சென்ற வருணை திடீரென்று ஏதோ தோன்றியவராக அழைத்தவர் "வருண்....... அந்த பாலா பையன் யார்கூடல்லாம் இப்போ தொடர்புல இருக்காங்கிறதையும் விசாரிச்சுக்கோ." என்று சொல்லிவிட்டு அனுப்பி வைத்தார்.
அரேபிக் காபி ஷாப் இளம் ஜோடிகளினால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. கைகளில் ரோஜாப்பூவை வைத்துக்கொண்டு தான் ரிசெர்வ் செய்து வைத்திருந்த பிரத்தியேக கேபினில் ஆதிராவின் வருகைக்காக காத்திருந்தான் வருண். வாழ்க்கையில் எதற்கும் காத்திருக்காதவன் தன் முதல் காத்திருப்பு அனுபவத்தை ரசித்துக்கொண்டிருந்தான். ஆதிராவுடன் பேசுவதற்கு பலதடவை ஒத்திகை செய்தவன் கடைசியில் தஞ்சமடைந்தது ஒரு ரோஜாப்பூவிடம். தான் சொல்ல வந்ததை அந்த பூ ஆதிராவுக்கு உணர்த்திவிடும் என்றும் ஒரு பூவை சந்திக்கும் போது வேறு என்ன கொடுத்துவிட முடியும் என்றெல்லாம் எண்ணியிருந்தான் வருண்.
வருணுக்கு காத்திருக்கும் அனுபவத்தை அதிக நேரம் அனுபவிக்கவிடாமல் அங்கு வந்து சேர்ந்தாள் ஆதிரா. வெள்ளை நிற சல்வாரில் ஒப்பின் ஹேர்ஸ்டைலுடன் அழகு தேவதையாக அங்குவந்தவள் வருணை காணாது காபி ஷாப் முழுவதும் தேடிக்கொண்டிருந்தாள். தூரத்திலிருந்து ஆதிராவின் அழகை மெய் மறந்து ரசித்துக்கொண்டிருந்தவனுக்கு இன்னும் கொஞ்ச நேரம் அவளின் தேடலை ரசிக்கலாம் போல இருந்தது. ஆதிரா எங்கும் தேடியும் வருனைக்காணாது கண்களில் மிரட்சியுடன் செய்வதறியாது நிற்க இனியும் ஆதிராவை சங்கடத்துக்குள்ளாக்க விரும்பாத வருண் கேபினில் இருந்து வெளியே வந்து பின்னாலிருந்து ஆதிராவின் கைகளை பற்றினான்.
சட்டென கையை உதறியவள் பின்னாலே வருண் நின்றதை பார்த்ததும் வந்த கோபத்தை அடக்கிக்கொண்டாள்.
"அப்பிடியில்ல...... என்ன சார் இப்பிடி கேட்டா என்ன சொல்றது?"
"ஓகே ஓகே, இங்க நின்னு மத்தவங்கள டிஸ்டர்ப் பண்ண வேணாம், ரிசெர்வ் பண்ணின இடம் வெயிட் பண்ணிட்டு இருக்கு. அதுக்கு முன்னாடி ஒரு கண்டிஷன். என்ன வருண்னு பேர் சொல்லி கூப்பிடுறதா இருந்தா மாத்திரம் அங்க வாங்க மிஸ் ஆதிரா......" என்று புன்னகையுடன் வருண் முன்னே செல்ல வெட்கத்தில் சிரித்தவாறே ஆதிராவும் அவனை தொடர்ந்து சென்றாள்.
"ஆதிரா உன்னோட முடிவுக்காக தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன். இன்னும் எவ்வளவு நாள் எனக்கு இந்த தண்டனை?" ஆதிரா முன்னால் அமர்ந்ததும் வருண் இப்படி கேட்பான் என்று கொஞ்சமும் அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
ஆதிராவும் ஏதோ சொல்ல முயன்று சொல்ல முடியாதவள் போல வார்த்தைகள் இல்லாது தத்தளித்தாள் .
ஆதிராவின் தவிப்பு புரிந்தவனாக வருண் "உனக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு தெரியும் ஆதிரா, அத உன்னோட வாயால சொல்லி கேட்கணும்னுதான் வெயிட் பண்ணிட்டிருக்கன். இன்னமும் வெயிட் பண்றதுன்னாலும் எனக்கு ஓகே. ஆனா எதுக்காக நீ தயங்குறேன்னு புரியல. எதுவா இருந்தாலும் என்கிட்டே சொல்லு. நான் ஏத்துக்குவன்." கனிவான வார்த்தைகளை உதிர்த்தான்.
சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் ஆதிரா வருணுக்கு வரம் கொடுக்க இதழ் மலர்ந்தாள்.
"வருண்...... உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் வருண். இத நான் முன்னமே சொல்லியிருக்கணும். ஆனா.........." என்றபடி இழுத்தாள் ஆதிரா.
"ஆனா என்ன ஆதிரா?" சந்தோஷத்துடனும் சந்தேகத்துடனும் கேட்டான் வருண்.
"நிறைய இருக்கு வருண்........" என்றபடி விழியோரம் நீர் சிந்தினாள் ஆதிரா.
"எதென்னாலும் என்கிட்ட சொல்லு ஆதிரா......"
"உங்கள மாதிரி கோடீஸ்வரங்க என்ன மாதிரி அநாதை பொண்ண எதுக்காக விரும்பணும்? கல்யாணம் பண்ணிக்கவா? அப்பிடி கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நான் உங்க வீட்டு வேலைக்காரியா தானே இருக்கணும். உங்கம்மா கூட அப்பிடித்தானே. உங்கப்பா உங்கம்மாவ ஒரு சம்பளம் கொடுக்காத வேலைக்காரியாத்தானே நினைக்கிறார். அப்பிடித்தானே பெரிய பணக்காரங்க வீட்டில நடக்குது. நானும் அப்பிடி ஆகிடுவனோன்னு பயம் இருக்கு......."
"அப்புறம் வேறென்ன பயம்?" மெல்லிய சிரிப்புடன் கேட்டான் வருண்.
"எனக்கு வாழ்க்கையில நான் ஆசைப்பட்டது எதுவுமே நிரந்தரமா கிடைச்சது இல்ல, அப்பா, அம்மாவோட பாசமும்தான். அத உங்களால கொடுக்க முடியுமான்னு பயமும் இருக்கு......." என்று தலைகுனிந்தபடி சொன்னாள் ஆதிரா.
"இவ்வளவும் தானா? நானும் ஏதோ பெரிசா யோசிச்சிட்டேன்." என்றபடி வாய்விட்டு சிரித்தான் வருண்.
தான் சிரிப்பது ஆதிராவுக்கு பிடிக்கவில்லை என்பதை உணர்ந்த வருண் சிரிப்பை நிறுத்திவிட்டு பேச தொடங்கினான்.
"ஆதிரா நீ எங்கம்மா பத்தி சொன்னது உண்மைதான். எங்கப்பாவால அம்மாவோட லைஃப் ஸ்பாயில் ஆகிட்டிங்கிறதுதான் உண்மை. அத நினைச்சு அதிகமா கவலைப்படுறது நான்தான். என்னோட மனைவிங்கிறவ என்னோட எல்லா விஷயத்திலயும் சரிசமமா இருக்கணும்கிறதில நான் உறுதியா இருக்கேன். அண்ட் என்னோட வாழ்க்கை பூராவுமே எனக்கு எல்லாருமே பாசத்தையும் பணத்தையும் அள்ளி கொடுத்திருக்காங்க. நான் யாருக்கும் கொடுக்கல. என்னோட லவ், லைஃப் ரெண்டையும் நான் சாகிறவரைக்கும் ஒருத்தங்களுக்கு கொடுக்கணும்னு ஆசை படுறன். அது நீதான் ஆதிரா. நான் உனக்கு உங்கப்பா, அம்மா கொடுத்ததை விட அதிகமா எல்லாத்தையும் கொடுப்பன். இது சத்தியம்." என்று உணர்ச்சி பூர்வமாக கூற வருணின் கையை பற்றியபடி கண்ணீர் விட்டாள் ஆதிரா.
வருணும் புன்னகையுடன் ஆதிராவின் தலை கோதி விட அனைத்தையும் மறந்து குழந்தை போலாகியிருந்தாள் அவள்.
அப்ப வருண் தான் ஹீரோ வா ஜீ🤔🤔🤔 இந்த கவின் & பூஜா கல்யாணமே பண்ணிட்டாங்கலா😳😳😳😳 இப்ப கவின் அப்பா அம்மா என்ன சொல்றாங்க🙄🙄🙄🙄 ஐயோ ஆதி பாவம்😥😥😥 வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ