அத்தியாயம் 8 - பானுவின் வாக்கு
"உனக்கெல்லாத்திலயும் விளையாட்டுத்தான்....."
"நான் விளையாடல்ல கவின், நிஜமாத்தான் சொல்றன்."
"திரா.... எதுல விளையாடுறன்னு இல்லையா..... என்ன கலாய்க்கிறியா?"
"டேய் இது என்னோட ஆசை, இதில நான் எதுக்குடா விளையாடப்போறன். உன்கிட்ட முன்னமே சொல்லிருப்பன், உன் மனசில யாரோ இருக்காங்க, அது நான்தான்னு நினைச்சிட்டு நீயா சொல்லுவான்னு இருந்தன். அப்புறமாத்தான் அது பூஜான்னு புரிஞ்சிது. அதுக்கப்புறம் இப்பிடி பேசுறது தப்புன்னு சொல்லாமலே இருந்திட்டேன்டா......."
கவினுக்கு வேர்த்துக்கொட்டியது.
"என்னடி சொல்ற? அப்புறம் இப்போ எதுக்கு சொல்ற?"
"நான் எதுவும் தப்பு பண்ணல, என்னோட ஆசைய உன்கிட்ட சொல்றதுக்கு எனக்கு எல்லா தகுதியும் இருக்குன்னு யோசிச்சேன், சொல்லிட்டேன். ஆனா இன்னைக்கு சொல்லணும்னெல்லாம் பிளான் பண்ணல."
"சீரியஸாத்தான் பேசுறியா திரா? நான் உன்னோட பிரெண்ட் டி......."
"என்னோட பெஸ்ஸ்ஸ்ட்ட்ட் பிரெண்ட். அதனாடிதான் உன்ன எனக்கு அவ்வளவு பிடிச்சிருக்குடா......"
"எனக்கு உன்மேல அப்பிடி ஏதும் பீல் ஆகலயே திரா?"
"அதுக்கு நான் என்ன பண்ண முடியும். நான் உன்கிட்ட கெஞ்சல்ல கவின் நீ என்னத்தான் லவ் பண்ணணுமுன்னு....உன்ன பிடிச்சிருக்கு. லைஃப் லோங் நீ என்கூட இருந்தா நல்லா இருக்குமுன்னு தோணுது. அத உன்கிட்ட சொல்லிட்டேன். உனக்கு என்ன பிடிக்கலையேன்னு ஒரு மூலைல இருந்து அழுத்திட்டிருக்கமாட்டேன். உனக்கு என்ன பத்தி தெரியும்தானே.....எதுன்னாலும் வெளிப்படையா சொல்லிடுவேன். அதே போல நீயும் எதுவும் கில்ட்டியா பீல் பண்ண தேவையில்லை. உன்னோட மனசு என்ன சொல்லுதோ அது சொல்றத கேட்டு நடந்துக்கோ."
"என்னென்னமோ சொல்ற... நான் இப்ப என்ன பண்ணனும்? உன்ன லவ் பண்ணனுமா திரா?" வெகுளியாக கேட்ட கவினை பார்க்கையில் பாவமாக இருந்தது ஆதிராவுக்கு.
"டேய் ஒண்ணும் குழப்பிக்காதடா, அப்புறமா ஆறுதலா யோசிச்சு பாரு. உனக்கு யார புடிச்சிருக்குன்னு. அத விட இன்னொரு பெஸ்ட் ஐடியா ஒண்ணு இருக்கு."
"என்ன ஐடியா திரா?"
"இன்னும் ஆறு மாசத்துல பப்ளிக் எக்ஸாம் இருக்கு. அதுக்கப்புறம் இத பத்தி பேசலாம்."
"சும்மா இருந்த என்ன இப்பிடி சீண்டிவிட்டுட்டு ஆறு மாசம்னு ஏதேதோ சொல்ற..... நான் கொஞ்சம் யோசிக்கணும். அப்புறம் நானே சொல்றன்."
"சரி உன் இஷ்டம்." என்று கூறிவிட்டு கவினை அழைத்துக்கொண்டு பூஜை நடக்கும் இடத்திற்கு சென்றாள் ஆதிரா.
அதற்கு பின் இருவரும் அன்று பேசிக்கொள்ளவில்லை. ஆதிரா கவினை தொந்தரவு செய்ய விரும்பவில்லை, கவின் ஆதிராவுடன் பேச விரும்பவில்லை.
பூஜாவின் அழகில் ஈர்க்கப்பட்டிருந்த கவினின் முடிவு என்னவாக இருக்கும் என்பது ஆதிராவுக்கு தெரிந்திருந்தது. அதுகுறித்த கவலையையும் மறக்க படிப்பில் இன்னும் கூடுதல் கவனத்தை செலுத்த தொடங்கினாள் ஆதிரா.
மறுபுறம் கவினுக்கு எப்படி யோசித்துப்பார்த்தாலும் கண்முன்னே பூஜாதான் வந்து நின்றாள்.
'ஒரு வேளை திராவுக்கு என் மேல ஆசை இருந்ததாலதான் பூஜாட பேமிலி சரியில்ல, அது, இதுன்னு ஏதேதோ சொன்னாளோ?' என்றெல்லாம் கவினின் உள்மனம் சொல்லத்தொடங்கியது.
அடுத்தநாள் ஸ்கூலுக்கு அழைத்து செல்வதற்கு கவின் வரவில்லை. ஆதிராவுக்கு சிறிது சந்தேகம் ஏற்பட்டாலும் 'கிரிக்கெட் ப்ராக்டிஸா இருக்கும்' என்று நினைத்து கொண்டாள். ஸ்கூலிலும் அன்று ஆதிராவின் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை கவின்.
கவினும் ஆதிராவும் பல தடவைகள் சிறு சிறு பிரச்சனைகளுக்காக பேசாமல் இருந்துள்ளனர். ஆனால் அப்போதெல்லாம் உண்டாகாத மன வேதனை ஆதிராவை வாட்டி வதைக்க தொடங்கியது. ஆறுதல் தேட பானுவிடம் முழுவதையும் கொட்டினாள் ஆதிரா.
"ஆதி உனக்குத்தான் கவினுக்கு பூஜாவத்தான் புடிச்சிருக்குன்னு தெரியும்ல, அப்புறம் எதுக்கு உன்னோட லவ்வ சொன்னடி?" கோபத்துடன் கேட்டாள் பானு.
எதிரே கண்கள் கலங்கியபடி உட்கார்ந்திருந்த ஆதிரா " சொல்ல வேணாம்னுதாண்டி இருந்தேன், ஆனா கவின்கிட்ட என்னோட லவ்வ சொல்லல, அதனாடிதான் அவன் எனக்கு கிடைக்காம போனான்னு இருந்திடக்கூடாது. நான் உண்மையா நேசிச்சேன், அதத்தான் அவன்கிட்ட சொன்னேன். சொன்ன நேரம் வேணும்னா தப்பா இருக்கலாம்."
"சொல்லி கிழிச்சே.... அவன் வந்து பூஜாவுக்கும் தனக்கும் மாமா வேலை பாருடின்னு உன்கிட்ட கேட்கிறான். அந்த நேரத்துல நீயும் 'சரி நான் மாமா வேல பார்க்குறேன், ஆனா எனக்கும் உன்ன பிடிச்சிருக்கு. டீல் ஓகேயா'ன்னு கேட்டிருக்க. உனக்கு ரெண்டு அறை அறைஞ்சாத்தான் என்ன?"
பானு கோபமாக திட்டினாலும் அவள் திட்டிய விதம் இருவருக்குமே சிரிப்பை உண்டாக்கிவிட்டது.
"புரிஞ்சுக்கோடி....."
"ஆமாடி.... இப்ப எதுக்கு கண்ணை கசக்கிட்டு உட்கார்ந்திருக்க?"
"கவின் ரெண்டு நாளா என்ன திரும்பி கூட பார்கிறானில்லடி."
"மறுபடியும் பார்ர்ரா......."
"அவன் யார லவ் பண்ணினாலும் எனக்கு என்னைக்குமே பிரெண்ட் தான், அத நான் விட்டு கொடுக்க மாட்டேண்டி...."
"யேசப்பா....இவளுக்கு நல்ல புத்திய கொடுத்திடு..... உனக்கு தெரியாத இன்னொரு விஷயம் சொல்லவா?"
"என்ன பானு? என்ன விஷயம்?"
"இன்னைக்கு காலைல கவினும் பூஜாவும் கிரௌண்ட்ல மீட் பண்ணியிருக்காங்க."
"உனக்கு யாரு சொன்னா?"
"கீர்த்தி பார்த்ததா சொன்னாள்."
"...................................."
"நீதான் அவங்களோட இந்த சந்திப்பிற்கே காரணம் புரியுதா?"
"நான் ஏன் காரணம்?"
"ஆமா. கவினுக்கு பூஜா தன்ன விரும்புவாளான்னு ஒரு டவுட் இருந்திச்சு. நீதான் பூஜா கண்ணிலேயே தெரிஞ்சிச்சு, மூக்கிலயே வடிஞ்சிச்சுன்னு அவன்கிட்ட சொன்ன. அந்த தைரியத்துல இன்னைக்கு போயி பேசியிருப்பான். நான் கூட கவினுக்கு எங்க இருந்து இவ்வளவு தைரியம் வந்துச்சுன்னு யோசிச்சேன். உன்னோட கதையை கேட்டப்புறம் தான் நீதான் அந்த கலப்ரிட்ன்னே தெரியுது."
பானுவின் நையாண்டி கலந்த பேச்சு இன்னும் மன வேதனையை ஆதிராவுக்கு கொடுத்தாலும் எதையும் வெளிக்காட்டாமல் மறைத்துக்கொண்டாள்.
"ஆதி அடுத்து என்ன நடக்குமுன்னு தெரியுமா?"
"என்ன?"
"காதல் ஜோடிகள் அந்நியொன்னியமானதும் கவின் நீ அவ பேமிலி பத்தி சொன்னது நீ அவனை விரும்பினது எல்லாத்தையும் ஒண்ணு விடாம கக்கிடுவான். அப்புறம் இருக்கு உனக்கு கச்சேரி...."
"பானு அவன் அப்பிடி என்ன பத்தியெல்லாம் பேசமாட்டான்...."
"போக போக புரியும் ஆதி.... அப்ப சொல்லு..... ஏய் கொஞ்சம் பொறு.... நான்தான் பூஜா பேமிலி பத்தி விசாரிச்சு சொன்னேன்னு கவினுக்கு தெரியுமா?"
"ஆங்.... தெரியும்..." சாதாரணமாக ஆதிரா பதிலை சொல்ல தலையில் காய் வைத்தபடி உட்கார்ந்தாள் பானு.
"நாசமா போச்சு, ஏண்டி உங்க பிரச்சனையில என்ன உள்ள இழுத்துவிட்டு.... அவங்கப்பன் எம்.எல்.ஏ டி.......பானு உனக்கு சங்குதான்....."
"பயந்து சாகாதடி, உன் பேர நான் சொல்லல. சும்மா பயப்படுறியான்னு செக் பண்ணினேன்."
"நல்லா செக் பண்ணின போ... ஒரு நிமிஷம் உசுரே போயிடுச்சு....." என்றவாறே பானுவின் வீட்டை வந்தடைந்திருந்தனர் இருவரும்....
பானுவிடம் விடைபெற்ற ஆதிரா தனியே நடக்கத்தொடங்கினாள். அன்று பானுவிடம் பேச இருந்த பல விடயங்களை அவள் பேசாவிடினும் பானுவின் நையாண்டி பேச்சுக்கள் ஆதிராவின் மனதை இலகுபடுத்தியிருந்தன.
அடுத்த நாளே எதுவும் நடவாதது போல காலையிலேயே ஆதிரா வீட்டிற்கு வந்துவிட்டான் கவின். கவின் தன்னை தேடிவந்தது ஆதிராவுக்கும் மகிழ்ச்சியையும் மன ஆறுதலையும் கொடுத்தது. ஆதிராவை அழைத்துக்கொண்டு சீக்கிரமே கிளம்பிய கவின் முகத்தில் என்றுமில்லாத அளவுக்கு சந்தோசம் குடிகொண்டிருந்தது. ஆதிராவின் இறுதி நேர பிரார்த்தனைகளும் வீணாக கவினே தான் அதற்கு முந்தைய நாள் பூஜாவிடம் மனம் விட்டு பேசிவிட்டதாகவும் அவளுக்கும் தன்னை பிடித்துவிட்டதாகவும் கூறினான்.
"நீ என்னோட உயிர்த்தோழி திரா, எங்கம்மாவ எனக்கு எந்தளவுக்கு புடிக்குமோ அந்த அளவுக்கு உன்னையும் புடிக்கும். உன்ன என்னால காதலியா யோசிக்கவே முடியல. அதுமட்டுமில்ல உன்ன காதலிக்கிறதுக்கு எனக்கு தகுதியும் இல்ல ஆதிரா."
கவினின் வார்த்தைகள் ஆதிராவுக்கு வலியை கொடுத்தாலும் இப்பதிலை அவள் ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததாலும் கவினுக்கு முன்னால் தன்னுடைய உணர்ச்சிகளை இனி வெளிப்படுத்தக்கூடாது என்று தனக்குத்தானே சபதம் எடுத்துக்கொண்டதாலும் மௌனத்தை மாத்திரம் பதிலாக கொடுத்தாள் ஆதிரா.
ஆதிராவின் மௌனம் கவினை குற்றவுணர்ச்சிக்குள்ளாக்க "திரா உனக்கு ஏத்த பையன் உன்ன தேடி வருவான்டி....." என்று கவினும் ஆதிராவை சமாதானப்படுத்துவதற்கு ஏதேதோ உளறினான். இதை புரிந்து கொண்ட ஆதிரா "ப்ளீஸ் கவின், இத பத்தி இனி நீ பேசவும் வேணாம், யோசிக்கவும் வேணாம். ப்றீயா விடுடா. நான் எப்பவும் உன்னோட பிரெண்ட் திராதான்." என்று கூற,
"தேங்க்ஸ்டி, இப்பதான் மைண்ட் ரிலாக்ஸ்சா இருக்கு."
"சரி எப்போ உன்னோட ஆள எனக்கு அறிமுகப்படுத்த போற?"
"ஏதோ புதுசா தெரியாத ஆள் மாதிரி பேசுற? உனக்குத்தான் அவள முன்னமே தெரியுமே...."
"ஆமா, அவள பிரெண்டா தெரியும். கவினோட காதலியா தெரியாதே. ப்ரோப்பரா இண்ட்ரடியூஸ் பண்ணி வைமா, அப்புறம் உன்னோட ரகசியமெல்லாம் அவகிட்ட சொல்லிடுவேன்."
"நீ சொன்னாலும் சொல்ல கூடிய ஆள்தான். நாளைக்கே இண்ட்ரடியூஸ் பண்ணிடுறேன்."
"ஏன் நாளைக்கு? இன்னைக்கு நாள் நல்லா இல்லையோ?"
"இன்னைக்கு அவ லீவுடி, அவளோட அண்ணனோட பொறந்த நாளாம்."
"அதான் விஷயமா? எனக்கு ட்ரீட் எப்போ?"
"என்ன ட்ரீட் வேணும்டி?"
"பரோட்டாவும் சால்னாவும் வேணும்டா...."
"திரா... நாளைக்கு பூஜாகூட காபி ஷாப் போவம்."
"அடப்பாவி நேற்று வரைக்கும் கையேந்திபவன்ல பராட்டவும் சால்னாவும் புல் கட்டு கட்டுவா, இன்னைக்கு என்னடான்னா காபி ஷாப்...... நீ புழைச்சுக்குவடா....."
கவின் வெட்கத்தில் தலை குனிய இருவரும் அரட்டை அடித்தபடியே பள்ளியை வந்தடைந்தனர்.
அடுத்த நாள் சொன்னது போல கவின்,பூஜா, ஆதிரா மூவரும் காபி ஷாப்பிற்கு சென்றனர். பூஜாவும் கவினின் காதலியாக அறிமுகம் ஆகிக்கொண்டாள். மூவரும் சிரித்துப்பேசி மகிழ்ந்தனர்.
நாட்கள் ஓடத்தொடங்கின. பூஜா ஸ்கூலுக்கு லீவ் என்றால் ஆதிராவினை காலையில் அழைத்துச்செல்ல கவின் வருவான். மாலையிலும் ஆதிரா கவினை எதிர்பார்ப்பதில்லை. தனியே நடக்க பழகிக்கொண்டாள்.
அந்த வயதிற்கே உண்டான வெறுப்பினை ஆதிரா எங்கேயும் காட்டவில்லை, மாறாக படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கியிருந்தாள். அதுவரை அவள் படித்த பள்ளியில் முதல் மாணவியாக வருவாள் என்று எதிர்பார்த்த ஆசிரியர்கள் எல்லோரும் மாவட்டத்தில் முதலிடம், மாநிலத்தில் முதலிடம் என்றெல்லாம் எண்ணத்தொடங்கியிருந்தனர்.
இன்னொரு பக்கம் கவினுக்கோ வாழ்க்கையும் படிப்பும் தலை கீழாக மாறிக்கொண்டிருந்தது. பூஜாவுடன் செல்போனில் பேசுதல், மெசேஜ் பண்ணுதல், கிளாஸ் கட் அடித்துவிட்டு பூஜாவுடன் ஊர் சுற்றுதல் போன்றவை முழு நேர தொழிலாக மாறியிருந்தது. சிறுவயது முதல் ஆதிராவுடனே எங்கேயும் சென்று வந்ததால் யாருக்கும் கவின் புதிதாக ஒரு பெண்ணுடன் கதைப்பது, சிரிப்பது புதிதாக தெரியவில்லை.
இப்பொழுதெல்லாம் ஆதிராவின் சொல்லிற்கு மதிப்பும் குறைந்திருந்தது. எத்தனையோ முறை ஆதிரா 'இந்த வயசில லவ் பண்றான்னு யாருக்கும் தெரிய வந்தா பிரச்சனையாகிடும், எக்ஸாம் முடியும் மட்டும் படிப்பில கான்சென்ரேட் பண்ணுடா' என்று எச்சரித்தும் கவின் கேட்டபாடில்லை. பூஜாவுக்கும் ஆதிரா கவினுக்கு அட்வைஸ் பண்ணுவது பிடிப்பதில்லை. காதலியென்றால் தன்னவன் மீது வேறோர் பெண் உரிமை பாராட்ட விட்டுவிடுவாளா என்ன? கவினும் பூஜா எனும் மயக்கத்திலிருந்து மீள்வதாக இல்லை. பானுவின் வாக்கும் பலிக்கத்தொடங்கியிருந்தது. ஓரிரு மாதங்களில் ஆதிராவின் எண்ணம், ஆசை என்று எல்லாமே அவள் எதிர்பார்த்திராவண்ணம் மாறியிருந்தது. ஆனால் சிறுவயதில் அப்பாவிடம் அவள் கூறிய லட்சியம் மாறவில்லை.
பப்ளிக் எக்ஸாமிற்கு இன்னும் ஒரு மாதமே இருந்தது. ஆதிரா கவினையோ பூஜாவையோ சிந்தனையில்லாமல் படிப்பதில் மாத்திரம் கவனமாக இருந்தாள். கவினும் அப்போதுதான் பித்து பிடித்தவன் போலாகி புத்தகத்தை பிரட்ட தொடங்கியிருந்தான்.
நேர்மையாக உண்மையாக இருப்பவர்களை கலியுகத்தில் இறைவன் பந்தாடுவான் என்பது எழுதப்படாத விதி. அவ்விதி அன்று ஆதிராவையும் பந்தாட காத்திருந்தது.

-ஆதிராவின் விதி தொடரும்..