ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரிலே சடுகுடு ஆடினாய் -‌ கதை திரி

Status
Not open for further replies.

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 18



சசிதரனை பற்றிய யோசனையில் சுபா இருந்ததால் ஆதித்யனை பற்றி மறந்து விட்டாள் தற்காலிகமாக.. அதன் பிறகு அவள் அங்கிருந்து வரும் வரை அருந்ததியிடம் தனியாகப் பேசவும் சந்தர்ப்பம் அமையவே இல்லை. வீட்டிற்கு வந்தவுடன் அருந்ததிக்கு அழைத்து திருமணம் பற்றி பேச பெற்றோரின் விருப்பம் தான் என் விருப்பம் என்று கூறி விட்டாள் ‌.. அதற்கு பிறகு என்ன பேசிவிட முடியும் அவளால்.. தினமும் ஒரு மூலையில் அமர்ந்து என்ன செய்யலாம் என்று யோசனை தான் செய்வாள்.அப்படித்தான் இன்றும் யோசனையில் இருக்கையிலேயே விஷால் வந்து பேசியது ..




சுபா சொல்வதும் சரி என்பதால் விஷால் அமைதியாகி விட்டான்‌‌.. இவர்கள் மூவரையும் தவிர
ஆதித்யனைப் பற்றி யாருக்கும் தெரியாது அல்லவா ..இங்கு அதனைப் பற்றி அருந்ததி எதுவும் பேசாமல் இருக்க இவர்கள் என்ன செய்ய என்று யோசனை செய்கையில் சட்டென விஷாலிற்கு ஒன்று தோன்றியது..




அதை அவளிடம் சொல்லவும்
செய்தான்..
" சுபி நாம் ஏன் இதை பத்தி தேவ் கிட்ட பேசக்கூடாது ..அவன் தானே அவனோட அண்ணனை வச்சே அருந்ததியை கல்யாணத்திற்கு ஓகே சொல்ல வச்சான்.." என்று
அவன் அவன் சொல்ல
கண்கள் மின்னியது சுபாவுக்கு.


"ஆமாங்க இது கூட நல்ல ஐடியாவாத்தான் இருக்கு ..இதுக்கு அவன் தான் சரியான ஆள்.." என்று கவலை மறந்து
சந்தோஷமாக கூறினான் சுபா.
"ஏய் ஐடியா கொடுத்த எனக்கு என்ன தருவ .."என்றான் சுபாவைக் காதலாக பார்த்தபடி ..


"நான் அதெல்லாம் அப்புறமா தாரேன் .. முதல்ல போன் பண்ணுங்க .."என்றாள் அவனை.
" அடியே என்கிட்டே எங்க இருக்கு அவன் நம்பர் ..உன் போன் போன்ல இருந்து கால் பண்ணு.. உன்கிட்ட தானே இருக்கு அவனோட நம்பர்.." என்று விஷால் கூறியதும் தன் தலையில் லேசாக தட்டி விட்டு தேவ்விற்க்கு அழைத்தாள்..



" ஹலோ என்ன அதிசயமா எனக்கு கால் பண்ணி இருக்கீங்க?" என்ற தேவ்வின் கேள்விக்கு பதில் சொல்லாமல் ஆதித்தனை பற்றிய அனைத்தையும் கூறினாள் அவன் அருந்ததியை கடத்தியது உட்பட ..அனைத்தையும் அமைதியாக கேட்டபடி இருந்தவன் கடைசியாக சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போய் விட்டான் ‌.. அருந்ததி ஏன் இதை யாரிடமும் சொல்லவில்லை என்ற கேள்வி அவன் மண்டையை குடைந்தது.. ஆதித்யனின் மீது அப்படி ஒரு கோபம் வந்தது அவனுக்கு.


"ஹலோ தேவ் லைன்ல தான் இருக்கியா?" என்ற சுபாவின் கேள்வியில் தான் சுயம் பெற்றான்.. "ம்.." என்றவன் இங்கே நடந்த அனைத்தையும் கூறினான்.
இவள் போனை ஸ்பீக்கரில் போட்டு பேசியதால் விஷாலும் கேட்டுக் கொண்டுதான் இருந்தான்..


" என்ன சொல்ற நிஜமாகவா ?உங்க அண்ணன் அவளை லவ் பண்றாரா? கல்யாணம் பண்ணிக்க போறாங்களா?" என்று அடுக்கடுக்காக சந்தோஷ மிகுதியில் கேள்வி கேட்டாள் சுபா.

"ஏய்‌ பொறுமை .."என்ற தேவ் அதை அருந்ததியிடம் கூற வேண்டாம் அவளது திருமணத்தன்று இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்று கூறியவன் அழைப்பை துண்டித்தான்.. இப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது சுபாவிற்கு.. தோழியின் வாழ்க்கை சீரான மகிழ்ச்சி அவளது முகத்தில்.

*********************



அந்த இருட்டு அறையில் நாற்காலியில் வைத்து கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தான் ஆதித்தியன். ஆனால் வாய் மட்டும் ஓயாமல் பேசிக் கொண்டே இருந்தது. " டேய் எவன்டா என்னை இப்படி அடைச்சு வச்சிருக்கிறது ..?
தைரியம் இருந்தா முன்னாடி வாங்கடா ..என்னை பத்தி தெரியாம என் மேல கை வைக்காதீங்க.. வெளியே போய் நான் யார்னு காட்டுறேன்.." என்று கத்திக்கொண்டே இருந்தான்..




" ஐயோ இவன் தொல்லை தாங்க முடில ..இந்த பாஸ்
ஏன் இவன் வாயை அடைக்க வேணாம்னு சொன்னாரு.." என்று ஒருவன் அவன் பக்கத்தில் இருந்த மற்றவனிடம் கேட்க தெரியவில்லை எனும் விதமாக அவன் தலையசைத்தான்..



" டேய் நீங்களாவது சொல்லுங்கடா.. எவன்டா என்னை கடத்த சொன்னது.. என்னை உங்க பாஸ்க்கு தெரியாம விட்டுடுங்க.. எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன்." என்று டீல் பேசினான் ஆதித்யன் இப்போது அந்த அடியாட்களிடம் ..அவர்களோ அவனை ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு அவர்களுடைய பாசுக்கு அழைத்தனர்..



"ஹலோ பாஸ் இந்த ஆள் நீங்க சொன்னதை விட கேவலமா இருக்கான்.. எங்க கிட்டயே டீல் பேசுறான்.. இவனை என்ன பண்ண.?" என்று அங்கிருந்த அடியாள் ஒருவன் கேட்க மறுமுனையில் என்ன சொல்லப் பட்டதோ சரி என்றபடி அழைப்பைத் துண்டித்தவன் "கொஞ்ச நேரம் அமைதியாக இரு .. பாஸ் இப்போ வந்துடுவார்.." என்று கூறினான்..



" என்ன விளையாடுறீங்களா? இன்னைக்கு அஞ்சு நாளாச்சு என்ன கடத்தி.. நாளன்னைக்கு எனக்கு கல்யாணம் டா.."என்றான் கடுப்பாக..



அவனும் என்ன தான் செய்வான்.. அவனை கடத்தி 5 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் இந்த அடியாட்கள் சொல்லும் பாஸ் தான் அவன் முன்னால் வரவே இல்லை.. திருமணம் வேறு நெருங்கி விட்டது.. அதனால் தான் முடியாமல் இன்று டீல் கூட பேசிவிட்டான் ..அவர்கள் அசருவதாக தெரியவில்லை.. சாப்பாடு நேரத்திற்கு கிடைக்கும் .ஆனால் தலையில் துப்பாக்கி வைத்தபடி அவர்கள் நிற்க இவன் சாப்பிட வேண்டும்.. இது வரை ஒரு அடி கூட அவனை இவர்கள் அடிக்கவில்லை..



ஏன் கடத்தினர்? யார் கடத்தியது? என்று எதுவுமே தெரியாது அவனுக்கு.


சிறிது நேரத்தில் வாசல் பக்கம் சத்தம் வர நிமிர்ந்து பார்த்தான் ஆதித்தியன். அங்கு ஆறு அடி உயரத்தில் முகத்தில் கடுமையுடன் வந்து கொண்டிருந்தான் சசி தரன். அவனைக் கண்டு கேள்வியாத் தான் பார்த்தான் இவன் .
"என்னடா அப்படி பார்க்கிற? என்னை தெரியலையா?" என்று கேட்க
" உங்களைத் தெரியும். ஆனா..."என்று பேச்சு வராமல் இழுத்தான் ஆதித்தியன்..



" ஆனா என்ன.. ஏன் உன்னை கடத்தினேன்னு உனக்கு தெரியனும்.. அவ்ளோதானே ..சொல்லிட்டா போச்சு.." என்று நிறுத்தி நிதானமாக கூறியவன் ஆதித்தனின் முன்னால் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான்..
" அதைத் தானே நானும் இந்த அஞ்சு நாளா கேட்கிறேன் சொல்லுடா எதுக்கு என்னை கடத்தினே?" என்று இன்னும் குறையாத திமிரோடு கேட்க முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான் சசி தரன்..



அப்போது அங்கே வந்த தேவ்
"இன்னும் நல்லா அடி அவனை.. என்ன தைரியம் அவனுக்கு..?" என்று கூறியபடியே மற்றொரு நாட்காலியில் அமர்ந்தான். அவனே நன்கு தெரிந்து இருந்தது ஆதித்யனுக்கு..




அருந்ததியின் நண்பன் என்று அவன் அறிவான்.." ஆமா நீ அருந்ததியோட ஃப்ரண்ட் தானே .. நீங்க எதுக்கு என்னை கடத்தி வச்சு இருக்கீங்க?" என்று இப்போது சற்று பதட்டமா கேட்டான். ஏனெனில் அருந்ததி அவர்களிடம் விடயத்தைக் கூறி விட்டாளோ என்று பயந்து விட்டான்..




" ச்சு ச்சு பரவாயில்லை கரெக்டா கண்டு புடிச்சுட்டே‌‌.." என்று நக்கலாக தேவ் சொல்ல இப்போது இருவரையும் மாறி மாறி பயத்துடன் பார்த்தான் ஆதித்தியன்.



கால் மேல் கால் போட்டு அமர்ந்த சசிதரன்
"ஏன்டா உனக்கு என்ன பெரிய ஆணழகன்னு நினைப்போ ..ஒரு பொண்ணு புடிக்கலைன்னு சொன்னா அவளைக் கடத்தி உன்னோட ஆசையை தீர்த்துக்இ பார்பியா?
பெரிய இடத்து பொண்ணான அருந்ததியை கடத்தின நீ சாதாரண குடும்பத்து பொண்ணுங்களையும் இதே மாதிரி தான் கடத்தி வாழ்க்கையை நாசம் பண்ணுவ..



உன்னை வெளியே விட்டா இன்னும் என்னவெல்லாம் பண்ணுவ நீ.."என்று கேட்டபடியே முகத்தில் இன்னும் ஒரு குத்து விட்டான் ..மூக்கில் இருந்தும் வாயிலிருந்தும் இரத்தம் வந்தது..
"ஐ அம் சாரி.." என்று பொய்யாக மன்னிப்பு வேண்டினான் அவன் தப்பித்துக் கொள்வதற்காக வேண்டி ..


"உனக்கு நடிக்கக் கூட வரலடா.." என்று கட்டையை எடுத்து கட்டப்பட்டு இருந்த அவனுடைய கால்களில் நன்றாக அடித்தான் கோபம் தீரும் வரை.. வலி தாங்க முடியாமல்
"என்னை விட்டுடுங்க ப்ளீஸ் .."
என்று கெஞ்சியும் அடித்தான் தன் கோபம் தீரும் மட்டும்..



அடித்த சசிதரனோ
" இனிமே அருந்ததி பக்கம் உன் மூச்சுக்காத்து கூட படக் கூடாது.. சொல்லிட்டேன் ..இப்போ என்னோட ஆளுங்க உன்னை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணுவாங்க ..நீ உன் அப்பா கிட்ட என்ன சொல்லுவ ..ஆக்சிடென்ட்னு தான் சொல்லனும்..



அப்படி இல்லை மவனே உன்னோட வீடியோ கொஞ்சம் என்கிட்ட இருக்கு..நெட்ல போட்டுடுவேன் ஜாக்கிரதை.." என்று கூறிவிட்டு அடியாட்கள் இருவருக்கும் கண்ணை காட்ட அவனை
அள்ளிக் கொண்டு சென்றனர்..



"ஒரு நிமிஷம்.." என்று அவர்களை நிறுத்தி அவனை பார்த்து
"அப்பறம் நான் தான் அருந்ததியை கல்யாணம் பண்ணிக்க போறேன்.. ரைட்.." என்று கூறி முடிக்க அவர்கள் அவனை அள்ளிக் கொண்டு சென்றனர்..


தேவ் தான் சசிதரனை பார்த்தபடி இருந்தான். அன்று சுபா சொன்ன பிறகு உடனே வந்து சசிதரன் இடம் தான் கூறினான் ..அன்றைய நாளே கோபத்தில் ஆதித்யனை தூக்கி விட்டான் சசிதரன் ..அவன் அருகே சென்ற தேவ்
" இதே அக்கரை ய
அரு மேல் கடைசி வரை இருக்கணும் .."என்ற படி நில்லாமல் சென்று விட்டான்..



" இவன் வேற.." என்று சலித்துக் கொண்ட சசிதரனும் அவன் பின்னால் சென்றான்.. ஆனால் அவன் மனம் அருந்ததியை தான் சுற்றிக் கொண்டு இருந்தது. அவன் நினைவுகள் 2 நாட்களுக்கு முன்பு சென்றது ..திருமணத்திற்கு ஆடை எடுக்க வேண்டி சென்றிருந்தனர் குடும்பத்தினர் ..



அருந்ததியோ கடமைக்காக சென்றாள் அவர்களுடன் .. ஆனால் சசிதரனோ அவளை சீண்டும் நோக்கத்தோடு கிளம்பிச் சென்றான்..
கடையில் அவனைக் கண்டவுடன் இவன் ‌ஏன் இங்கு வந்தான் என்று யோசனை செய்தாள் அவள். அவளோ அவனை மறக்க நினைக்கையில் இவன் என்னவென்றால் அவள் முன் வந்து நிற்கிறான்.


அருந்ததியோ அவளது தாயினதும் சகோதரிகளினதும் சொல்லுக்கு கட்டுப்பட்டு புடவைகளை ஒவ்வொன்றாக எடுத்து பார்த்தபடி இருந்தாள். எதுவும் பிடிக்கவில்லை என்றே தோன்றியது அவளூக்கு .திடீரென தன்னருகே ஏதோ வித்தியாசமாக உணர அருகே திரும்பி பார்த்தாள்.



சசிதரன் தான் போனை காதில் வைத்தபடி புடவைகளை பார்த்துக் கொண்டே இருந்தான். இவளோ என்ன என்பது போல் அவனை கேள்வியாக பார்க்க
"டேய் மச்சி உன்னோட கலருக்கு இந்த புடவை சூப்பராக இருக்கும்டா.." என்றபடி ஒரு அரக்கு நிற பட்டு புடவையை எடுத்து அவள் முன் போட்டான்..



இவளோ திகைத்துப்போய் சுற்றும் முற்றும் பார்த்தாள்.. அவளுக்கு வேர்த்துக் கொட்டியது அந்த ஏசி அறையிலும்..
" ஐயோ என்ன பண்றீங்க ?யாராவது பாத்தா தப்பா நினைப்பாங்க.. ப்ளீஸ் போங்க.." என்று கெஞ்சினாள்..
அவனுக்கு மட்டும் கேட்கும்படி ..




அவன் அதையெல்லாம் கண்டு கொள்ளாதவன் போல் மேலும் சில புடவைகளை எடுத்து போட்டு
"இது எல்லாம் நல்லா இருக்கும் உனக்கு.." என்று கூறி அவளைப் பார்த்து கண் சிமிட்டி விட்டு சென்றான்.




அவனை முறைத்துப் பார்த்தாலும் அமைதியாக அவைகளை எடுத்துக் கொண்டாள் அருந்ததி.. அவளது அக்கா நல்ல தேர்வு என்று அவளை பாராட்டினாள் ..
அன்று முழுவதும் அவளை பார்வையாலேயே தொடந்து கொண்டும் சீண்டிக் கொண்டும் இருந்தான் மீண்டும் சசி தரன் .
அவளைச் சீண்டுவது அவனக்கு மிகவும் பிடித்திருந்தது..

தொடரும்...

 

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 19

அன்று காலை திருமணம் என்ற நிலையில் அலங்காரங்களுடன் தயாராகி அறையில் இருந்தாள் அருந்ததி ..சத்தம் போட்டு அழ வேண்டும் போலிருந்தது அவளுக்கு.. வெளியே சொல்ல முடியாத நிலைதான் அவளது.. ஆனால் மனமோ
"அப்பாகிட்ட சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்தலா"ம் என்று நினைத்தது.. தந்தைக்கு அவமானம் ஏற்பட்டு விடும் என்ற காரணத்தால் அந்த யோசனையும் புறந்தள்ளி விட்டாள் அவள் ..



"பொண்ணே அழைச்சின்டு வாங்கோ" என்ற ஐயரின் குரலில் சுயம் பெற்றாள் அவள் ..சுபா தான் அவளை மணவரை நோக்கி அழைத்துச் சென்றாள். யாரையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் வாடிய முகத்துடன் மணமகன் அருகில் அமர்ந்திருந்தாள் அவள்..




தான் தெரிவு செய்த புடவையில் தேவதையாக இருந்த அவளை ரசிக்க தவறவில்லை சசிதரன்.. கெட்டி மேளம் என்ற சத்தத்தில் அவளது கழுத்தில் பொண் தாலியை போட்டான் அவன்.. அப்போதும் அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை ..குங்குமம் வைக்கும் நேரம் அவள் காதருகே சென்ற சசிதரன் "அதி கொஞ்சம் சிரிச்சுட்டு இருந்தா ரொம்ப அழகா இருப்ப.
"என்று கிசுகிசுப்பாக கூற திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் அவள்..



அவளது பார்வையை சந்தித்தவன் பட்டென்று கண்ணை அடித்து விட்டான் ..ஆனால் அருந்ததி தான் சிலையென அவனைப் பார்த்தபடியே இருந்தாள்.


அவள் காண்பது கனவா என்று ஒரு நொடி தோன்றியது அவளுக்கு. அவளது அருகில் வந்த சுபா "அரு எல்லாரும் உங்களை தான் பார்க்கிறாங்க.. இயல்பாய் இருடி.." என்று சொல்லிய பிறகு சுற்றும் முற்றும் பார்த்தவள் அமைதியாக கீழே பார்த்துக் கொண்டாள். ஆனால் மனம் பலவற்றையும் யோசனை செய்தது.. என்ன இங்கே நடக்கிறது என்று அறிய வில்லை எனில் மண்டை வெடித்துவிடும் போல இருந்தது அவளுக்கு ..



அமைதியாக அனைவரும் கூறியதை செய்தாள்.எல்லா சடங்குகளும் முடிந்து முதலில் சசிதரனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர் மணமக்களை. அங்கும் உள்ள சடங்குகளை முடித்துவிட்டு ஓய்வெடுக்க ஒரு அறைக்குள் அனுப்பி வைத்தனர். அவளுடன் சுபாவும் இருந்தாள். அருந்ததியும் என்னதான் நடக்கின்றது என்று கேட்க சுபாவோ அனைத்தையும் சொல்லி முடித்தாள். இப்போது மொத்த கோபமும் சசிதரன் மற்றும் தேவ்வின் மீது திரும்பியது.. ஆனால் அவள் தேவ்வை மன்னிக்க தயாராகி விட்டாள். ஏனெனில் அவன்தான் இவை எல்லாவற்றிற்கும் காரணம் ஆகவே மன்னித்து விடவும் தயார்.. ஆனால் சசிதரனை தான் எந்நிலையிலும் மன்னிக்க தயாரில்லை அவள்.


தேவ் அவளுக்கு பயந்து அவள் முன் வரவில்லை.. ஆனால் இப்போது அவனுக்கு நிறைவாக இருந்தது.. அவள் ஆசைப்பட்ட வாழ்க்கையை அவளுக்கு அவன் அமைத்துக் கொடுத்து விட்டானே அந்த சந்தோஷமே போதும் அவனுக்கு ..அன்றே இரவு முதல் இரவுக்காக ஏற்பாடு சசிதரனின் வீட்டிலேயே நடைபெற்றது. அருந்ததி நடப்பவற்றை பார்த்து கொண்டு தான் இருந்தாள்.. அவளது அன்னையோ அவளிடத்தில் ஆதித்யன் பற்றி கூறி அதற்கு சசிதரன் மற்றும் தேவ்வின் உதவியையும் கோ
கூரினார். இவளோ ம் என மட்டுமே சொன்னாள் அவரது கூற்றை கேட்டு.


இரவு அவளை தயார்படுத்தி சசிதரனின் அறைக்கு அனுப்பி வைத்தனர். அமைதியாக உள்ளே சென்றவள் சசிதரன் எங்கே என பார்க்க அவனோ ரோஜா இதழ்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த கட்டிலில் அமர்ந்திருந்தான் ‌. அவள் கோமாக அவனை முறைத்து பார்த்து விட்டு கட்டிலின் மற்ற பக்கம் சென்று அமர
"அதி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.." என்று தயக்கமாக ஆரம்பித்தான் சசிதரன் ..



அமைதியாக படுத்துக் கொண்டாள் அவன் பேச்சைக் கேட்காததை போல..
"அதி.." என்று அவனது கையை தொட்டு பேச அவனது கையை உதறியபடி வேகமாக எழுந்து கொண்டவள்
"என்ன வேணும் உங்களுக்கு?" என்று அழுத்தமாக கேட்க அவளையே பார்த்திருந்தான் அவன் ..



"எனக்கு தூக்கம் வருது.. சீக்கிரமா சொன்னா நல்லாயிருக்கும் .." பட்டென வந்தது அவளுடைய வார்த்தைகள் ..அவளது கோவத்தை புரிந்து கொண்டவன்
"நான் என்ன பேச போறேன்னு உனக்கு நல்லா தெரியும்.. அதுக்கு முன்னாடி ஐ அம் ரியலி சாரி டி .."என்று மனதார மன்னிப்பு வேண்டினான்.


"எதுக்காக என் கிட்ட மன்னிப்பு கேக்குறீங்க..?"என்று நிதானமாக கேட்டாள்.
அவளது நிதானம் அவனை யோசிக்க வைத்தது.இருந்தும் இன்றே பேசிட முடிவு செய்தான் அவன்.
"ப்ளீஸ் அதை புரிஞ்சுக்கோ இப்படி பேசாத நான் பண்ணது எல்லாம் தப்பு தான் .என்னைக்குமே சரின்னு சொல்ல மாட்டேன்.. நீ என்னை மன்னிச்சு என் கூட வாழனும் தான் கேட்கிறேன்.." என்று அவன் இறைஞ்சும் குரலில் பேச இப்போது மனது விட்டுப் போனதும் அவளுக்கு..



அவன் அவளை காஞ்சிபுரத்தில் வைத்து சந்தித்தபோது இப்படி பேசியிருக்க வேண்டும் ..எத்தனையோ வலிகளை அவள் அனுபவித்த பிறகு அவன் வந்து மன்னிப்பு வேண்டுகையில் அவளால் உடனே மன்னிக்க தான் முடியவில்லை.


அவனால் தானே அத்தனை வேதனைகளையும் அவள் அனுபவித்தாள்.அவனது காதல் தோற்றுப் போனதற்கு அவனுக்காக வருந்தினாள் தான் இல்லை என்று சொல்லிவிட முடியாது
. ஆனால் அவன் செய்த அனைத்தையும் மறந்து விட்டு இன்று எதுவும் நடக்காதது போல அவள் அவனுடன் வாழ முடியாது.. பெண்கள் மனம் யாராலும் புரிந்து கொள்ள முடியாத புதிர் தான் போலும்.


"அது இப்படி நீங்க செஞ்சதை எல்லாம் மறந்துட்டு உங்க கூட வாழ முடியும் ..நான் ஒவ்வொரு நாளும் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பேன்னு தெரியுமா உங்களுக்கு? ஈசியா சொல்லிட்ட போயிட்டீங்க உன்னை லவ் பண்ற மாதிரி நடிச்சேன்னு சொல்லி.. எனக்கு ஹாசினியைத் தான் புடிச்சிருக்குன்னு. அதை முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல.. ஆனா நீங்க உங்களோட லவ்வர் முன்னாடி என் கூட குளோசா இருந்து அவங்களை உங்க பக்கம் எடுத்து இருக்கீங்க..



உங்களை எந்த அளவு காதலிச்சேனோ அதே அளவு உங்களால கஷ்டப்பட்டும் இருக்கேன்.. என்னோட அப்பா அம்மாவுக்காகவும்.. உங்களோட வீட்டாலுங்களுக்காகவும் மட்டும் தான் உங்க கூட இருக்க போறேன்.. இதுக்கு மேல என்கிட்ட மன்னிப்பு கேட்கிறேன் அது இதுன்னு கிட்டு வரக்கூடாது. எனக்கு தூக்கம் வருது ..குட் நைட் .."என்று முழு மூச்சாக தன் மனதில் உள்ள அனைத்தையும் பேசிவிட்டு படுத்து விட்டாள்.
ஆனால் தூக்கம் வரவில்லை அவளுக்கு.


அவளை விட மோசமாக இருந்தது அவன் நிலை .இவள் தன்னை இவ்வளவு தூரம் வெறுக்கக் கூடும் என்று அவன் நினைக்கவில்லை.. பெண்களெல்லாம் இளகிய மனம் கொண்டவர்கள் என அவன் தப்பாக கணக்கு போட்டு விட்டான்.. அவர்கள் சந்தித்த வலியும் வேதனையும் அவர்களைப் பக்குவப்படுத்தும் என அவன் அறியவில்லை ‌..அவனும் அன்றைய இரவை கஷ்டப்பட்டு தான் கழித்தான் ‌..



மறுநாள் காலை முதல் அவள் அறைக்கு வெளியில் அவனுடன் இயல்பாக மனைவி போல் நடந்து கொண்டாள்‌..அதாவது வெளியே அவர்களை சுற்றி இருப்பவர்களுக்காக அப்படி நடித்தாள்.. அறைக்கு சென்றால் அந்நியன் போல மாறி விடுவாள் ..




அவளுடன் பேசுவது என்ன முகத்தை கூட பார்ப்பதில்லை அவள் ..இப்படியே பட்டும் படாமலும் இவர்களது வாழ்க்கை சென்று கொண்டிருக்க தேவ்வும் அவளுடன் இயல்பாக பேச ஆரம்பித்தான்.. அவளும் அவனிடம் பொய் கோபத்தை அதிக நாள் காட்ட முடியாமல் சிரித்து பேசினாள்..




அவர்கள் இருவரும் பேசி சிரிக்க ஒரு ஓரமாக நின்று இருவரையும் ஏக்கமாக பார்ப்பான் சசிதரன்.. அவன் காஞ்சிபுரத்தில் தொடங்கிய தொழிலை கவனிக்க வேண்டும் என்று அங்கு செல்ல அவனுடன் அவன் அழைக்காமலேயே செல்ல ஆயத்தமானாள் அருந்ததி ..



அறைக்குள் வந்தவன்"அதி..
"என அழைக்க அவள் திரும்பவில்லை.. அவள் திரும்ப மாட்டாள் என உணர்ந்தவன் "அங்க வரதுக்கு உனக்கு இஷ்டமா.. நீ வரமாட்டேன்னு நினைச்சு உன்னை நான் கூப்பிடல்ல.." என்று தயங்கியபடியே சொல்ல "எனக்கு அங்க வரது தான் இஷ்டம்..யாருக்காகவும் நல்லா இருக்குற மாதிரி நடிக்க வேண்டாம் பாருங்க.." என்று முகத்தில் அடித்தாற் போல கூறினாள்.


அவளது பதில் அவனை காயப்படுத்தியது தான். ஆனால் இப்போது அது பழகிப்போன ஒன்று என்பதால் அவனுடைய வேலைகளில் கவனம் செலுத்தினான். அடுத்த நாளே காஞ்சிபுரம் சென்று விட்டனர்.. அவன் காலை சென்றால் இரவு நேரம் தான் வீட்டிற்க்கு வருவான்.. இவளும் சுபா உடன் சென்று பேசிக் கொண்டிருப்பாள். எத்தனை நாட்கள் தன் வாழ்க்கையை இயல்பாக செல்லும்.. விதி என்று ஒன்றும் உள்ளதல்லவா..


அவர்களின் வாழ்வில் மீண்டும் புயலாக வந்தாள் ஹாஷினி ..அவளுக்கு சசிதரன் திருமணம் செய்து கொண்ட விடயம் அவர்களின் நண்பர்கள் மூலமாக தெரிந்தபின் தாமதிக்காமல் அவனை காண சென்னை சென்றாள். ஆனால் அவன் காஞ்சிபுரம் சென்றது தெரிய வர அவர்களின் வாழ்க்கையை கெடுக்கவென்றே அங்கேயும் சென்று விட்டாள் அவள்.. அன்று ஞாயிறு தினம் ஆகையால் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தான் சசிதரன்..அவன் வீட்டில் இருப்பதால் அறையிலிருந்து வெளியே வருவில்லை அருந்ததி..



வீட்டின் அழைப்பு மணி அடிக்கவும் கதவை திறந்த சசிதரன் முன்னால் ஒரு பையுடன் கலைந்த ஓவியம் போல நின்றிருந்தாள் ஹாசினி. அவளை எப்போதும் அலங்காரத்துடன் பார்த்தவனால் அவளது இந்த கோலத்தை கண் கொண்டு பார்க்க முடியவில்லை. என்ன இருந்தாலும் முன்னாள் காதலி அல்லவா.. மனம் பதறத்தான் செய்தது அவள் நிலை கண்டு அவனுக்கு.

அவன் அவளைப் பார்த்தபடி இருக்க "சசி ..." என்று அவள் அவனை அணைத்து அழ தொடங்கி விட்டாள்.. அவன் அவளை அணைக்காமல் விலக்கி நிறுத்தி
"என்ன ஹாசி இது இப்படி வந்து நிற்கிறே.. அதுக்கு முதல்ல என்னோட அட்ரஸ் எப்படி உனக்கு..?" என்றான் அடுக்கடுக்காக..



அவனது கேள்விகளில் மீண்டும் அவள் அழுகை அதிகரித்தது ..இருந்தும் அழுகையை கட்டுப் படுத்திக் கொண்டாள்.
" நான் உன்னை மிஸ் பண்ணிட்டேன் சசி. எல்லாத்துக்கும் காரணம் என்னோட பணத்தாசை பிடித்த பேரன்ட்ஸ் தான் ..அன்னைக்கு என்னை மிரட்டி தான் அப்படி பேச வச்சாங்க.. எனக்கு உன்னோட பணம் வேணாம் சசி..


நீதான் வேணும் ..நீ கல்யாணம் பண்ணிக்கிட்டன்னு கேள்வி பட்டதும் நான் ஆடிப் போய்ட்டேன்.. தாங்க முடியல என்னால..சோ அவங்க கிட்ட சண்டை போட்டேன் எல்லாமே உங்களால தான்னு.. அதனால என்னை வீட்டை விட்டு விரட்டிட்டாங்க சசி...



எனக்கு போக இடம் இல்ல. உன் கூடவே என்னை வச்சுக்குவியா?" கேவலுடன் கூறி முடித்தாள். அவளைப் பார்த்தால் அவனுக்கு பாவமாயிருந்தது..
" கொஞ்ச நாள் இந்த வீட்டிலேயே இருக்கட்டுமா?" என்று கேட்க அவள் இப்படி அழுது பார்த்திராத காரணத்தால் சரி என்று சொல்லி விட்டான் சசி தரன் எதையும் யோசிக்காமல் ..





சந்தோச மிகுதியில் அவனை அணைத்தாள் ஹாசினி கண்ணீருடன் ..அவனும் அவளை அணைத்து ஆறுதல் படுத்தினான். பிறகு ஒரு அறையைக் காட்டி அதில் தங்கிக் கொள்ள கூறினான். அவளும் அவன் காட்டிய அறையினுள் சென்று அடைந்து கொண்டாள்‌‌..



இங்கு சசிதரனின் மனம் தான் கனத்துப் போனது.. அவனின் முன்னாள் காதலி இன்னும் அவனைக் காதலிக்கிறாள்.. இவன் தான் மனம் மாறிவிட்டான். சூழ்நிலை காரணமாகத் தான் அன்று அப்படி பேசியிருக்கிறாள் ஹாசினி பாவம் என அவளை எண்ணிக் கவலை கொண்டான் அவன்.

தொடரும்..

 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 20

வீட்டின் அழைப்பு மணியின் ஓசை யில் யாரென்று பார்க்க அறையில் இருந்து வெளியே வந்தாள் அருந்ததி‌. அவள் மேலே இருந்து வரும் முன்னே அவளுடைய கணவனே கதவை திறக்க இவளும் கீழே வராமல் அறை வாசலிலேயே நின்று கொண்டாள். சத்தியமாக அவள் இங்கு இந்த ஹாசினியை எதிர்பார்க்கவில்லை..
" இவள் எதற்காக மீண்டும் எங்களுடைய வாழ்க்கைக்குள் வந்து இருக்கிறாள் ?"
என்று பார்க்கவே மேலே அறை வாசலிலேயே நின்று கொண்டாள் அவள்..




ஹாசினி நடத்திய நாடகத்தை அருந்ததி பார்த்தபடி தான் இருந்தாள். சசிதரன் அவளை அணைத்து ஆறுதல் படுத்தும் போது காதல் மனம் வலிக்கத்தான் செய்தது.. எவ்வளவு தான் அவனைப் வெருப்பது போல் காட்டிக் கொண்டாலும் அவன் மீது அவள் கொண்ட நேசம் இல்லை என்று ஆகிவிடுமா என்ன.. ஆனாலும் உள்ளுக்குள் அவனை திட்டி தீர்த்தாள் பெண்ணவள்.


"இவள் நடிக்கிறாள் என்பதை கூட அவனால் கண்டுபிடிக்க முடியாது?" என அவன் மீதே கடுமையான கோபம் வந்தது அவளுக்கு ..அவன் அவளை தங்கள் வீட்டிலேயே தங்கிக் கொள்ளும் படி கூறியதும் மனம் வெறுத்துப் போனது. இதற்கு முன்பு என்றால் அவன் வெறும் காதலன் மட்டும் தான். ஆனால் இன்று கணவன் ஆயிற்றே.. அவளால் அவனை விட்டுக் கொடுத்து விட முடியுமா என்றால் இல்லை என்றே சொல்வாள்..



இந்த நாடகம் எத்தனை நாள் தொடரப் போகிறது என்று பார்க்க அவளும் ஆர்வமாக இருந்தாள்.‌அவளுடைய நோக்கம் என்ன என்பதை அவள் போக்கிலேயே சென்று தான் கண்டுபிடிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டவள் வந்த சுவடே தெரியாமல் மீண்டும் அறைக்கு சென்று அடைந்து கொண்டாள்.


இங்கு சசிதரன் காட்டிய அறைக்குள் வந்த ஹாசினி தனது திட்டத்தின் முதல் படியில் வெற்றி கொண்டதை தன்னுடைய பெற்றோருக்கு அழைத்துக் கூறினாள். இதன் பிறகு நடக்க வேண்டிய அனைத்தையும் தானே பார்த்துக் கொள்வதாகவும் கூறி அழைப்பை துண்டித்தவள் அதற்குப் பிறகு என்ன என்ன செய்யலாம் என தீவிரமாக யோசிக்கலானாள்.


அவளுக்கு ஒன்றும் சசிதரன் மீது தெய்வீகக் காதல் எல்லாம் இல்லை .அவன் பணத்தின் மீது மோகம் ...அவனது அழகின் மீது மோகம் ..அவ்வளவே. அதற்கு காதல் என்று அவளே
பெயரும் வைத்துக் கொண்டாள். அவளும் ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்தவள் தான்..



எப்போதுமே அவளுக்கும் அவளுடைய பெற்றோருக்கும் பணத்தின் மீது அத்தனை ஆசை ..இருப்பதை விட மேலும் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற நினைப்பு.. அவளது சிறு வயதில் அவள் ஏதாவது பெரிதாக கேட்டால்
"நீ பணக்காரனை திருமணம் செய்து கொண்டால் கேட்டவை எல்லாம் உன் காலடிக்கு வரும்.." என்று அவளது அன்னை அவளிடம் கூற அது அவளின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது ..எனவே அழகு பணம் என இரண்டுமே கொண்ட சசிதரனை கண்டதும் காதல் வந்து விட்டது ஹாசினிக்கு.



அவன் அவளுடன் சண்டையிட்டால் சிறிது காலத்தில் பிறகு இவளே வலிய சென்று சமாதானம் ஆகி விடுவாள். அப்படித்தான் இந்த சண்டையையும் அவள் சாதாரணமாக எண்ணி விட்டாள்.


எனவே அவனிடம் சில பொய்களை கூறி சிறிது நாட்களுக்குப் பிறகு அவன் கோபம் தணிந்த பிறகு பேசிக் கொள்ளலாம் என அவள் அங்கு இருக்க இவன் திடீரென்று இப்படி திருமணம் செய்து கொண்டால் அவளும் என்னதான் செய்வாள். எனவே மீண்டும் இருவரின் வாழ்க்கைக்குள்ளும் வந்து விட்டாள் அவள்.



அன்று மதிய உணவை தங்கள் இருவருக்கும் மட்டுமே சமைத்தாள் அருந்ததி. அவள் கிச்சனில் வேலை செய்வதை அடிக்கடி ஓரக் கண்ணால் பார்த்தபடியே இருந்தான் சசி தரன் ஹாலிருந்து ..ஆனால் ஹாசினி இருப்பதை அவன் அவளிடம் சொல்லவில்லை.
அவன் சொல்லும் வரை தனக்கு தெரியாததை போல தான் காட்டிக் கொண்டாள் அவள்.



" சாப்பாடு ரெடி.." என்று எப்போதும் போல பட்டும் படாமலும் கூறிவிட்டு உணவு மேசையில் அமர்ந்து உன்ன ஆரம்பித்தாள்.
அவளை அவளை பெருமூச்சுடன் பார்த்தவன் எழுந்துசென்று ஹாசினி தங்கியிருக்கும் அறைக்கதவைத் தட்டினான்.


அவளும் அதற்காகவே காத்திருந்ததைப் போல வெளியே வந்தாள் .. அருந்ததியோ அவர்களுக்கே தெரியாமல் நோட்டம் விட்டுக் கொண்டுதான் இருந்தாள்.. உணவு மேசை அருகே அழைத்து வந்தவன் "உட்கார் ஹாசினி"என்று கூற அருந்ததியை நக்கலாக பார்த்துக் கொண்டே அமர்ந்து கொண்டாள்.


அப்போது தான் அவளை கண்டவள் போல்
"ஹே ஹாஷினி நீங்க எப்போ வந்தீங்க.. என்கிட்ட சொல்லி இருக்கலாமே தரு உங்க முன்னாள் காதலி வந்து இருக்காங்கன்னு.. நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் தான் சமைச்சு இருக்கேன்.. இப்போ என்ன பண்றது?" என்ன வேண்டும் என்று அந்த முன்னாள் காதலி என்றதில் அழுத்தம் கொடுத்து நக்கலாகவே கூறினாள்..



அவளது கூற்றில் அங்கிருந்த மற்ற இருவரின் முகமும் கருத்துப் போனது என்னவோ உண்மைதான்.. அன்று வழமையை விட அதிகமாக உண்ட அருந்ததி இருவருக்கும் குறைவான அளவு உணவையே மீதம் வைத்தாள்.


அவளையே அழுத்தமாக பார்த்த சசி தரன்
"எனக்கு சாப்பாடு வேண்டாம்.. நீ சாப்பிடு ஹாசி.." என அவளுக்கே அனைத்து உணவையும் பரிமாறினான்.ஹாசினியோ இப்போது ஏதோ சாதித்ததை போல தனது முகத்தை வைத்துக் கொண்டு அந்த உணவை உண்டாள்..



"இது எல்லாம் திருந்தாத கேஸ்.."என்று அவர்களுக்கு கேட்கும்படி முணுமுணுத்து விட்டு எழுந்து சென்று விட்டாள் அருந்ததி.
அவள் பின்னாலேயே சசிதரனும் கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு சென்றான். அவன் கோபமாக செல்வதை கண்டு உள்ளுக்குள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள் ஹாசினி.



கோவமாக சென்ற சசிதரன் அருந்ததியின் கையை பிடித்து இழுக்க பேலன்ஸ் தவறினாலும் அவன் மீது மோதாமல் கால்களை நிலத்தில் ஊன்றி நின்று கொண்டாள்.அழுத்தமாக அவளைப் பார்த்தவன் மீண்டும் வேண்டும் என்றே அவளை பலமாக தன்னை நோக்கி இழுத்தான். அதில் என்ன முயன்றும் முடியாமல் போக அவன் மீது வந்து விழுந்தாள் அவள்..



அவளோ அவனை முறைத்துப் பார்க்க அவனும் அவளை முறைத்து பார்த்தபடி
"நீ இன்னிக்குப் பண்ணினது ரொம்ப தப்பு அதி.." என்று நிதானமாக கூற


"நான் என்ன பண்ணேன் ..எனக்குத் தான் அந்த ஹாசினி வந்தது தெரியாதே .இப்படியா பொண்டாட்டிக்கு தெரியாம வீட்டுக்குள்ள வேற பொண்ணுங்கள கூட்டிட்டு வர்றது.. அதுவும் முன்னாள் காதலி..." என்று அவள் கூறி முடிக்கும் முன்னே அவளது இதழ்களை சிறை செய்து இருந்தான் சசிதரன்..




அவளோ அவனை தள்ளிவிட முத்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தவன் பிடி சற்று தளர்ந்து இருக்க அவள் தள்ளிவிட்டதில் அவளை விட்டு விலகினான் அவன்.


கோபத்தில் இதழ்களை துடைத்தவள்
"இடியட்..." என்று அவனை திட்டினாள்..
" நான் ஒன்னும் ‌உன் மேல் இருக்குற ஆசையில முத்தம் கொடுக்கல.. நீ பண்ண வேலைக்கு உனக்கான தண்டனை இதுதான்.." என்று அவனை முறைத்தபடியே கூறி அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றாள்..




இருவரும் கோபமாக கிச்சனிலிருந்து வெளியே வருவதை பார்த்த ஹாசினி இந்தத் திட்டம் கூடிய சீக்கிரமே நிறைவேறி விடும் என்ற இறுமாப்புடன் அமைதியாக உணவை உண்பதில் கவனம் ஆனாள்.



அவனுடன் சண்டை போட்டாலும் அவன் உண்ணாமல் பசியுடன் இருப்பது அருந்ததி யின் மனதை வாட்ட அவனுக்காக வேண்டி மீண்டும் உணவை அவசர அவசரமாக சமைத்தாள். சமைத்த உணவை எடுத்துக் கொண்டு அவனைத் தேட எங்கும் அவனைக் காணவில்லை.. அறையில் தான் இருப்பான் என யூகித்தவள் ததங்களது அறைக்கு உணவை எடுத்துக் கொண்டு சென்றாள்..



அவள் நினைத்ததைப் போல அங்கு தான் யோசனை செய்த வண்ணம் இருந்தான் அவன். எதுவும் பேசாமல் அவன் முன்னால் இருந்த சிறிய மேசையில் உணவுத் தட்டை வைத்தாள் ‌‌... அவன் அவளை கேள்வியாக பார்த்தான் உணவை கையில் எடுக்காமல்..


தான் சொல்லாமல் அவன் உண்ண மாட்டான் என அறிந்தவள்
" சாப்பாடு சூடு ஆறிடும் இப்பவே சாப்பிட்டா நல்லா இருக்கும்.." என்று ஏதோ அறிவித்தல் போல் கூறினாள்.


அவள் பேசுவதையும் அவளுடைய முக பாவனையும் கண்டவனுக்கு சிரிப்பு வந்தாலும் ஏதும் பேசாமல் உணவை எடுத்து உண்ண ஆரம்பித்தான். அவளும் அவனையே பார்த்து இருந்தாள். உண்டு முடித்த பின்பு தான் அங்கிருந்து நகர்ந்தாள்..




இவ்வாறாக நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்து சென்றது .அவ்வாறுதான் தோன்றியது அருந்ததிக்கு ..ஹாசினி ஏதோ அந்த வீட்டு முதலாளி போல் வீட்டினுள் சுற்றிக் கொண்டே இருந்தாள். சுபாவிடம் மற்றும் எல்லாவற்றையும் கூறினாள் அருந்ததி. அவள் சசிதனிடம் பேசுவதாக கூற வேண்டாம் என மறுத்த போதிலும் தேவ்விடம் கூட கூற வேண்டாம் என்றும் சுபாவிடம் கூறினாள் ‌.



எப்போதும் போல் அழாமல் அவள் உறுதியாக கூறுவதை கண்டவள் இதை அவளே பார்த்துக் கொள்ளட்டும் என விட்டு விட்டாள். சசிதரன் இருக்கும் நேரத்தில் அவனுடனேயே தான் ஹாசினி சுற்றிக் கொண்டே இருப்பாள். சில நேரம் அவனை மறக்க முடியவில்லை என்றும் கண்ணீர் வடித்தது உண்டு.. இதை எல்லாம் மறைந்து நின்று கேட்பாள் அருந்ததி.



அவனோ அவளை ஆறுதல் படுத்துவான். அதற்கு மேல் ஒன்றும் பேசுவது இல்லை.. அவன் அலுவலகம் சென்றதும் தான் அவளது உண்மை முகத்தை அருந்ததியிடம் காட்டுவாள் ஹாசினி.



அன்றும் அப்படித்தான் மாலை நேரம் போல அருந்தது ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருக்க அவள் அருகில் வந்து அமர்ந்தாள் ஹாசினி. அருந்ததியோ டிவியை விட்டு கண்களை அகற்றவே இல்லை..


"ஏன் அருந்ததி உனக்கு மானம், ரோசம் அப்படி எதுவுமே இல்லையா?" என்று பட்டென்று கேட்டாள் அவள் ..அதை கேட்டு கோபம் கொள்ளாமல் நிதானமாக அவளை ஏறிட்டுப் பார்த்தாள் அருந்ததி..


அவளுடைய நிதானம் ஹாசினியின் கோபத்தை மேலும் தூண்டியது..
" சசி என்ன இந்த வீட்டில தங்க வச்சதுலயே உனக்கு தெரிய வேணாம் அவன் மனசுல நான் தான் இருக்கேன்னு ..முன்னாடியும் அப்படித்தான் உன் கூட குளோசா இருக்கற மாதிரி என்கிட்ட நடிச்சான்‌. அப்ப கூட நீ அவனை மன்னிச்சு ஏத்துக்கிட்டு இருக்க பாரு.. நீ என்ன பழையகால பொண்ணுங்க மாதிரி கல்லானாலும் கணவன் புள்ளானாலும் புருஷன்னு வாழுற.."



நக்கலாக சொல்லியபடி ஓரக்கண்ணால் அருந்ததியின் முகம் பார்க்க அதற்கெல்லாம் அசராமல் அருந்ததி
"அடுத்தவ புருஷன மயக்க வெட்கமே இல்லாம அவ வீட்டுக்குள்ள வந்து அவ கையாலே மூணு நேரம் மூக்கு பிடிக்க சாப்பிடுர உனக்கே மானம் ரோஷம் இல்லைன்ற போது எனக்கு எப்படிம்மா இருக்கும்?"


என்று அவள் பதிலடி கொடுக்க அருந்ததியின் முகத்தில் கோபத்தை வரவழைக்க செய்த செயலில் இப்போது அவளது முகமே கோபத்தை தத்தெடுத்தது..


"அப்புறம் என்ன சொன்ன கல்லானாலும் கணவன் புள்ளானாலும் புருஷனா.. அந்த மாதிரி பொண்ணு நான் இல்லை.. என் புருஷனுக்கு நீதான் வேணும்னா நீங்க ரெண்டு பேரும் சாப்பிடற சாப்பாட்டுல விஷத்தை வச்சி உங்க ரெண்டு பேரையும் மேல அனுப்பிடுவேன்..



அதுக்கு அப்புறம் என்ன ரெண்டு பேரும் மேல்லோகத்துல போய் யாருடைய தொந்தரவும் இல்லாம ஜாலியா டூயட் பாடலாம்.. ஏன்னா பாரு உனக்கு சசி மட்டும் தான் முக்கியம்.. காசு.. பணம் எதையும் பார்க்காத தெய்வீகக் காதலாச்சே உன்னோடது..


என்னோட இடையீடு
இல்லாம உங்களால நிம்மதியா வாழ முடியும் ..என்ன ஓகேவா ?"
என்று சிரிப்பைக் கட்டுப்படுத்திய படி அருந்ததி கேட்க
கோவத்தில் அங்கு இருந்த பூச்சாடியை தூக்கி போடப் போனாள்.



அதனை பிடித்த அருந்ததி
"ஐயோ என் வீட்டுக்காரரோட உழைப்பும்மா அதெல்லாம்..உடைச்சிடாத..‌." என மீண்டும் நக்கல் செய்ய வேகமாக உள்ளே சென்றாள்
அவள்.

தொடரும்..

 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 21



அவள் கோபத்தில் எழுந்து செல்வதைக் கண்ட அருந்ததிக்கு என்ன முயன்றும் தனது சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.. இவளை வெறுப்பேற்ற வேண்டும் என்று அவள் வந்திருக்க அவளையே வெறுப்பேற்றி துரத்தி விட்டாள் அருந்ததி..



அப்போது வீட்டின் உள்ளே நுழைந்தான் சசி தரன். இவள் தனியாக சிரித்துக் கொண்டு இருப்பதைக் கண்டு அவள் அருகே சென்று அமர்ந்தான் .. அவனைக் கண்டதும் சிரிப்பை நிறுத்தி விட்டு டிவி யை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
" என்ன இப்படி நடு வீட்டில் உட்கார்ந்து தனியா சிரிக்கிற?" என அவளிடம் பேச்சுக் கொடுக்க
" பைத்தியம் ஆயிட்டேனா இருக்கும்." என்றாள் நக்கலாக பதில் வந்தது அவளிடமிருந்து...


"இருக்கலாம்.."என்று அவனும் நக்கலாகவே கூறிவிட்டு எழுந்து செல்ல முற்பட
" ஹாய் சசி வந்துட்டீங்களா? இருங்க தண்ணி கொண்டு வரேன்..." என்று கூறிவிட்டு சென்றவள் ஒரு குவளையில் நீருடன் வந்தாள். அவளையும் அருந்ததியையும் மாறி மாறிப் பார்த்தவன் அவளிடம் இருந்து நீரை வாங்கிப் பருகினான். அதில் அருந்ததியின் முகம் லாடினாலும் உடனே இயல்பாக வைத்துக் கொண்டாள் முகத்தை.


"தேங்க்யூ சோ மச் ..ரொம்பத் தாகமாக இருந்தது. இப்படியே ஒரு காபி கிடைச்சா நல்லா இருக்கும்.."என்று கூற
"அவ்ளோ தானே இதோ எடுத்துட்டு வரேன்" என்றபடி அங்கிருந்து சென்று சில நிமிடங்களிலேயே திரும்ப வந்து அவன் முன் காபி கப்பை நீட்டினாள்.


அதனை வாங்கி பருகியவன் "உட்க்கார் ஹாசி அப்புறம் என்ன ஐடியா வச்சிருக்கே?' என்று அவளிடம் கேட்க
"புரியல சசி என்ன ஐடியான்னா?" என்று அவனிடமே கேள்வி கேட்டாள்..
" எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க முடியும் வீட்டுக்கு போற ஐடியாவே இல்லையா உனக்கு?" என்று அவன் கேட்க மீண்டும் தனது நடிப்பை தொடங்கி விட்டாள் அவள் ..




போலியாக கண்களை கசக்கியபடி
"நான் அவங்க கிட்ட போகவே மாட்டேன் சசி.. அவங்களால தான் இன்னைக்கு உன்னை மிஸ் பண்ணிட்டு நிற்கிறேன் ..எனக்கு உன் கூடவே இருக்கனும் ப்ளீஸ் என்னை இப்போ போக மட்டும் சொல்லிடாத .."என்று கூற அவனுக்கு பாவமாகி விட்டது
....



ஆனால் இவற்றையெல்லாம் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த அருந்ததிக்கு "என்ன நடிப்புடா சாமி "
என்றுதான் தோன்றியது..


அவன் தனக்காக கவலைப்படுகிறான் என்பதை அறிந்தவள்
"என்ன சசி யோசிக்கிற?
நீயும் என்னை போக சொன்னா யாரு இருக்கா எனக்கு..' என்று மேலும் மேலும் அவனை பேசியே கரைத்தாள்.

அதில் "சரி கொஞ்ச நாள் இங்கேயே இரு அப்புறம் வேற வீடு பார்க்கலாம்" என்று அவன் கூற உள்ளுக்குள் மகிழ்ந்தவள்
"வேற வீடா.. எனக்கு தனியாக இருக்கிறதுன்னா பயம்.. நீயும் என் கூட இருப்பியா?" என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க அவனோ சட்டென்று அருந்ததியை தான் பார்த்தான்.


அவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த அருந்ததியும்
"அதுக்கு என்ன ஹாசினி.. அவர் அங்கேயே தங்கிக்கட்டுமே.. எனக்கு அப்படி எந்த பயமும் இல்லை நான் தனியே இருந்துப்பேன்.. ஆனா பாருங்க உங்க ரெண்டு பேரையும் தான் ஊர் தப்பா பேசும் .. நான் வேணா ஒரு ஐடியா தரட்டா?" என்று கூறி இருவரையும் பார்த்தாள்.



அவர்களோ இவளது பதிலுக்காக இவளையே தான் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
"பேசாம என்னை டிவோர்ஸ் பண்ணிட்டு நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கோங்க.."என்று நிறுத்தி நிதானமா கூறினாள்.. சசிதரன் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இருக்க ஹாசினியின் முகம் மலர்ந்தது.


"ஓ..ஓக்கே யோசிச்சு சொல்லுங்க.. முதல்ல ரெண்டு பேரும் வாங்க சாப்பிடலாம்.."என்று பாசமான அழைக்க ஹாசினிக்கு ந சாப்பாடு என்றதும் திக்கென்றானது
.. அவள் சிறிது நேரத்திற்கு முன்பு கூறியது நினைவு வரவே அவசரமாக
"அது வந்து எனக்கு இப்ப பசிக்கல.. நான் அப்புறமா சாப்பிடறேன்.." என்று கூறியவள் நில்லாமல் சென்று விட்டாள்..



போகும் அவளையே இகழ்ச்சி புன்னகையுடன் பார்த்து கொண்டு இருந்தவள்
" நீங்களாவது சாப்பிடுறீங்களா?"
என அவனை பார்த்து கேட்க தலையை மட்டும் ஆட்டி வைத்தான்..




அன்று இரவு தோட்டத்தில் வைத்து தனியே அமர்ந்து மது கோப்பையை வெறித்தபடி இருந்தாள் ஹாசினி. அவளுக்கு படிக்கும் போது சில நேரங்களில் மது அருந்தும் பழக்கம் உண்டு.. தூரத்தில் சசிதரன் யாருடனோ அலைபேசியில் பேசிக் கொண்டே இருப்பதை கண்டு வேண்டுமென்றே தான் அவ்வாறு அமர்ந்திருந்தாள் ...



அவள் எதிர்பார்த்தது போல் அங்கு சசிதரனும் வந்து சேர்ந்தான்.
" என்ன இந்த டைம்ல தனியா உட்கார்ந்து யோசிச்சுட்டு இருக்க.. என்ன இது குடிக்க போறியா?" என்றான் அப்போது தான் மது கோப்பையை கண்டவனாக .."ஆமா சசி எனக்கு மனசு சரியில்ல கொஞ்சமா குடிச்சா எல்லாத்தையும் மறந்துட்டு தூங்குவேன் .."சோகமாக சொன்னவள் இரண்டு கோப்பை மதுவை அவன் முன்னாலேயே உள்ளே தள்ளினாள்.



"நீயும் கொஞ்சம் குடிக்கிறியா உனக்கும் மன கஷ்டம் குறையும்.." என்று அவன் முன் மது கோப்பையை நீட்டினாள்.
"வேண்டாம்.. நீ வா உள்ளே போகலாம் ரொம்ப டைம் ஆச்சு .."
என்று அவளை கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் சென்றான்.


அவர்கள் இருவரும் தள்ளாடியபடி உள்ளே வருவதை கண்ட அருந்ததி அதற்கு மேல் அங்கு நிற்காமல் அறைக்குள் சென்று விட்டாள் .சசிதரன் ஹாசினியை அவளுடைய அறையில் விட்டு விட்டு வெளியே வர எத்தனிக்க அவனை இழுத்து அணைத்துவள்
" எங்க போற இன்னைக்கு என் கூட இந்த ரூமிலே தங்கிக்கோ.. எனக்கு நீ வேணும்.." என்று குறைவாக கூறினாள்..



அவளை தன்னில் இருந்து பிரித்தவன் அவளை அங்கேயே விட்டு விட்டு அறையை விட்டு வெளியே வந்தான். ஏதும் பேசாமல் வெளியே வந்தவன் மறக்காமல் அறையில் வெளிப்பக்கமாக பூட்டி விட்டே சென்றான் .. அறைக்குள் சென்றவன் அங்கு அருந்ததியை தேட இடுப்பில் கைவைத்தபடி அவனை தான் முறைத்துக் கொண்டிருந்தாள் அவள்‌..



இவன் எதுவுமே பேசாமல் கேள்வியாக அவளையே பார்த்தான். அவன் அவளிடம் பேசாமல் இருந்தது வேறு கோபத்தைக் கூட்ட
"என்ன குடிச்சிட்டு வந்து இருக்கீங்களா அவ கூட சேர்ந்து. இங்க எதுக்கு வந்தீங்க அவளோடயே இருக்க வேண்டியது தானே ..முதல்ல அந்த ஹாசினியை அடிச்சு தொரத்தனும்.." என்று அவனுடன் சேர்த்து ஹாசினியையும் திட்டினாள் ..



அப்போது தான் அவனுக்கு புரிந்தது அருந்ததி அவனும் குடித்து இருக்கிறான் என நினைத்துக் கொண்டு இருப்பது. அதை அவனும் பின்பற்றினான்.
தள்ளாடியபடியே வேண்டுமென்றே அவள் அருகில் வந்தான்.. அவனிடம் இருந்து வந்த மது வாடையில் மூக்கை சுருக்கினாள் அருந்ததி .



ஹாசினி அவன் மீது முழுமையான சாய்ந்ததால் அவளிடமிருந்த மது வாடை அவனிடமும் ஒட்டிக் கொண்டது ..அது அவனுக்கு சாதகமாகித்தான் போனது இப்போது..



"என்கிட்ட வர நீங்க போங்க போய் தூங்குங்க .."என அவனை அப்புறப்படுத்த பார்க்க அதை கண்டு கொள்ளாதவன் அவளை நெருங்கி நின்று
"அதி.."என்று மோகம் கலந்த குரலில் அவளை அழைத்தான்..



அவனது குரலில் இருந்த வேறுபாட்டை உணர்ந்தவள் அவன் போக மாட்டான் என்பதை உணர்ந்து அவள் அங்கிருந்து செல்லப் போக அவளை தாவி அணைத்திருந்தான் சசிதரன் .அவள் எவ்வளவு திமிரிய போதும் அவன் விடுவதாக இல்லை .
"அதி ப்ளீஸ் டி கொஞ்ச நேரம் இப்படியே இரேன்." என்றபடி அவன் நின்றிருக்க அருந்ததியால் தான் அவனுடைய அணைப்பில் இருக்க முடியவில்லை..



அமைதியாக இருந்த அவனது கைகள் இப்போது அவளது உடலில் பயணிக்க ஆரம்பித்தது. அவனது கை பட்டதும் உருகும் உடலையும் மனதையும் கட்டுப்படுத்த முடியாமல் அவனுடன் ஒன்றினாள் அருந்ததி ..அவளது செயலை உணர்ந்து கொண்டவன் சந்தோசமாகவே மேலும் மேலும் முன்னேறினான்.இருவரின் சம்மதத்துடனே தான் அவர்களின் முதல் கூடல் நடைபெற்றது ..விடியும் நேரம் தான் அவன் அவளை விட்டு விலகினான்..



களைத்துப் போனவள் அவன் அனைப்பிலேயே தூங்கிப் போனாள். அடுத்த நாள் காலை சசிதரனின் அலைபேசியின் சத்தத்திலேயே தான் இருவரும் கண் விழித்தனர்.தான் இருக்கும் நிலையைக் கண்டு அதிர்ந்து தான் போனாள் அருந்ததி ..அவளுடைய சம்மதத்துடன் தான் இது நடந்தாலும் அவன் தன்னை இவ்வாறு உணர்வுகளுக்கு அடிமையாக்கி விட்டான் என அவன் மீது கோபம் வந்தது அவளுக்கு..


"யூ.. யூ இடியட் ..எல்லாம் உங்களால வந்தது.. என்னை என்னமோ பண்ணிட்டீங்க. ஐ ஹேட் யூ..." என்று கோபத்தில் அவனை திட்டினாள்."ஆஹான் ஐ ஹேட் யூ வா... நேத்து நைட்டு மூனு தடவை ஐ லவ் யூ சொன்னே.." என்றான் அவன் நக்கலாக..


"அது ரொம்ப முக்கியம் பாருங்க இதுக்குக் காரணம் நீங்க தான் குடிச்சிட்டு வந்து என்னை இப்படி பண்ணிட்டீங்க .."என்று அதே கோபத்துடன் அவனை திட்டினாள்.
"ஏய் நீ லூசாடி.. நான் எங்க குடிச்சேன்.. ஒருத்தன் குடிச்சு இருக்கானா இல்லையான்னு கூடவா தெரியாது ‌‌..அவளோட உடம்புல இருந்த ஸ்மெல் தான் என்கிட்ட வந்தது.. ஜஸ்ட் அவ்ளோ தான்.."என்றபடி அவன் சிரிக்க



"என்ன நீங்க குடிக்கவே இல்லையா.. ஐயோ நான் மோசம் போய்ட்டேனே.."என அவள் கத்தி பேச அவளது வாயை தனது கைக்கொண்டு முடியவன்
" கத்தாதடி ஏதோ ரேப் பண்ண மாதிரி சத்தம் போடுற.. நாம புருஷன் பொண்டாட்டி தானே அப்புறம் என்ன.." என்று கூறியபடியே தனது கையை அவளது வாயில் இருந்து எடுத்தான்..


" இருந்தாலும் எனக்கு பிடிக்கல.."என்றாள்
இன்னும் சமாதானம் ஆகாமல்..
"பார்த்தா அப்படி தெரியலையே..இவ்வளோ பேசினாலும் என்னை விட்டு ஒரு இன்ச் கூட நீ நகரல பார்த்தியா..?" என இருவரும் இருக்கும் நிலையை காட்டினான்..




அப்போதுதான் அவனுடனேயே தான் இருப்பது தெரிந்ததும் தன்னையே நொந்துகொண்டவள் அவனை முறைத்துப் பார்க்க அவன் அவளைக் கண்டு கண் சிமிட்டினான். அதில் மேலும் அவனை முறைத்து விட்டு குளியலறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.. அவளை நினைத்து சிரித்துக் கொண்டவன் மீண்டும் அவனது அலைபேசி ஓசை எழுப்ப அதை எடுத்து பேசளானான்.


குளியல் அறையில் இருந்த அருந்ததிக்கு தான் வெட்கம் ஒரு பக்கம் கோபம் ஒரு பக்கம் என்ற கலவையான உணர்வு .அவன் மீது கோபம் வந்தாலும் அதை அவனிடம் காட்டவும் முடியாத நிலை‌.. அவள் வெளியில் வாய்விட்டு சொல்லாவிடினும் நேற்று நடந்த விடயம் அவளுக்கும் பிடித்திருக்கிறது..
" மானம் கெட்ட மனம் "என அவளே அவளைத் திட்டிக் கொண்டாள்.. அவளுக்கு இப்போது சசிதரனின் அன்பு புரிகிறது தான் ..ஆனால் இடையில் இந்த ஹாசினி வேறு..அது தான் அவளை உறுத்துகிறது..




இதை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு குளித்து முடித்து வெளியே வர இன்னும் சசிதரன் போன் பேசிக்கொண்டு இருந்ததால் மெல்ல சத்தம் வராமல் அறையை விட்டு கீழிறங்கி வந்து காலை உணவை தயாரித்தாள். அவளது முகம் என்றையும் விட இன்று பிரகாசமாக இருந்தது..



அவளை பார்த்தபடியே மாடியிலிருந்து இறங்கி வந்தவன் முதலில் ஹாசினியின் அறைக் கதவை திறந்தான். அவள் இன்னும் உறக்கத்தின் பிடியில் தான் இருந்தாள் போலும் ..சத்தமே இல்லை ..



அருந்ததி இப்போது சசிதரனை தயக்கமாக பார்த்து இருந்தாள். அவனிடம் எப்படி பேசுவது என்று தெரியாமல் இருக்க "ஏன்டி சாப்பிட வாங்கன்னு வாயை திறந்து கூப்பிடவே மாட்டியா.." என்றபடி வந்து உணவை உண்டான்..



அவனை கூச்சத்துடன் பார்த்தபடி இருந்தாள் அவள்.. அவனை பார்த்து என்ன என கண்களால் கேட்க அவனது கழுத்துக் கீழே கையை சுட்டிக் காட்டினாள் சிவந்த முகத்தோடு..



அவள் காட்டிய இடத்தை அவளது முகத்தைப் பார்த்தபடியே பார்த்தவன் "எல்லாம் நைட் நீ கடிச்சு வச்சது தான்..." என்று அவளை பார்த்துக் கண் சிமிட்டி கூற அவனை பார்க்க முடியாமல் சமையல் அறையில் புகுந்து கொண்டாள் அவள்.


... தொடரும்.‌‌..


 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 22

சசிதரனும் அருந்ததியும் சற்று நேரம் கூட சந்தோஷமாக இருந்தது பிடிக்கவில்லை போலும் ..உடனே மூக்கு வேர்த்தது போல வந்து விட்டாள் அவ்விடத்திற்கு ஹாசினி.
"சசி.."என்று கொஞ்சளோடு அங்கு வந்து அவன் அருகில் அமர கிச்சனிலிருந்து வெளியே வந்த அருந்ததியும் அங்கே அமர்ந்து கொண்டாள்.. அருந்ததியோ ஹாசினியை பார்த்து
"கொஞ்சம் சாப்பிடுங்க ஹாசினி.." என்றும் நக்கலோடு கூற அவசரமாகவே
"வேணாம் ..வேணாம்.." என்று மறுத்தாள் அவள்..



அதில் சிரிப்பு வர
" அப்படின்னா சரி.." என்றபடி அவள் உண்ண ஆரம்பித்து விட்டாள். ஆனால் அருந்ததி உண்பதை கண்டு பசி வந்தாலும் அன்று அருந்ததி சொன்னதில் இருந்து அவளுக்கு உண்பதற்கே பயம்.. வாயில் எச்சில் ஊறினாலும் அதை வெளியில் காட்டாமல் சுற்றி வேடிக்கை பார்ப்பது போல் பாவனை செய்தாள்.


அந்நேரம் சசிதரனின் கழுத்தில் இருந்த பற்தடத்தை பார்த்து விட்டாள் ஹாசினி.
நேற்று குடித்த பிறகு அவன் அவளை அணைத்தபடி அறைக்குள் அழைத்து சென்றது அவளுக்கு லேசாக நினைவில் இருந்தது.. எனவே அந்தப் பற்தடம் தன்னால் தான் ஏற்பட்டது என நினைத்தும் கொண்டாள் அவள்..



அவள் அப்படி நினைக்க காரணமும் இருக்கிறது. ஏனெனில் அவள் இங்கு வந்த நாளிலிருந்தே பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாள்.. இவர்கள் இருவரும் இயல்பான கணவன் மனைவி போல் நடந்து கொள்வதே இல்லையே. எனவே அவள் தப்பு கணக்கு போட்டு விட்டாள்.
.


சசிதரனை கடைக் கண்ணால் பார்த்தபடி வெட்கப்படுவது போல் பாவனை செய்ய அதை சசிதரன் அருந்ததி இருவருமே கண் டுவிட்டனர். ஆகவே பொறுமை இழந்தவனாக "என்ன அப்படி பாக்குற.." எனக் கேட்டே விட்டான்.
" அது ..அது வந்து ஐ அம் சாரி எனக்கு தெரியாம நான்... நான் கடிச்சு வெச்சுட்டேன். இப்போ எப்படி ஆபீஸ் போவீங்க.." என்று வெட்கப்பட்டு தடுமாறிய படி கேட்க புறையேறி விட்டது சசிதரனுக்கு..



அருந்ததியோ திருதிருவென விழித்தபடி இருவரையும் பார்த்தாள். இருவரையும் கண்டவள் மேலும் பேசினாள்.
"இங்க பாரு அருந்ததி.. நான் உன்கிட்ட முன்னமே சொன்னேனே அப்போ நீ நம்பல.. சசிதரன் இன்னும் என்ன தான் லவ் பண்றான்.. நேற்று நடந்ததுக்கு இதுதான் சாட்சி.. இப்பவாவது எங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு போயிடு.. உனக்கு எவ்ளோ பணம் வேணும்னாலும் தரோம்.."



என்று அவள் கூறி முடித்த அடுத்த நொடியே அவளது கன்னத்தில் பளாரென்று இறங்கியது சசிதரனின் கை. அவன் அடித்த வேகத்தில் இருக்கையுடன் சேர்ந்து கீழே விழுந்து இருந்தாள்.
"ஏய் என்னடி நினைச்சுட்டு இருக்க.. போனா போகுதுனு விட்டா பேசிக்கிட்டே போற.. கொன்னுடுவேன் பார்த்துக்க.."விரல் நீட்டி எச்சரித்தான்..


அவனது கோபத்தைக் கண்டு அருந்ததியும் பயந்து விட்டாள்.
அப்படி ஒரு ரௌத்திரம் அவனது முகத்தில் தென்பட்டது.. கீழே விழுந்து கிடந்தவளை கைப்பற்றி எழுப்பி விட்டவன் "உட்கார்.."என்று கர்ஜிசிக்க பயந்தபடியே வந்து ஒரு இருக்கையில் அமர்ந்தாள் அவள்.

"நீ எதுக்கு வந்து இருக்கேன்னு கூட தெரியாத அளவுக்கு நான் என்ன முட்டாளா.. அன்னைக்கே நான் உன்னை வெளியே அனுப்பி இருந்தால் வெளியே போய் பெருசா ஏதாவது பிளான் பண்ணி இருப்பே.. நீ என் கண் பார்வையிலேயே இருந்தா தான் உன்னோட பிளான் எல்லாம் என்னன்னு எனக்கு தெரிய வரும்.. அதனாலதான் உன்னை உள்ளே விட்டேன்.. சும்மா சொல்லக்கூடாது ரொம்ப நல்லா நடிக்கிற நீ.." என்று அவளைப் பார்த்து கூறியவன் திரும்பி அருந்ததியைப் பார்த்து கண் சிமிட்டி சிரித்துக் கொண்டே


"ஆனா உன்னால ஒரு நல்லதும் நடந்து இருக்கு.. அதுக்கு நான் உனக்கு தாங்ஸ் சொல்லனும்.."என்றான் அவனுடைய கழுத்தில் இருந்த தலும்பை வருடியபடி.. அருந்ததிக்கு இரண்டு கன்னங்களும் வெட்கத்தில் சிவந்து போனது..


" இந்த நேரத்திலும் இப்படி வெட்கமில்லாமல் பேசுகிறானே.." அவனை செல்லமாக கடிந்து கொண்டது அவள் மனம். ஆனால் வெளியே அவனை முறைத்து வைத்தாள். இருவரையும் பார்த்து அந்த நேரத்திலும் ஹாசியின் வயிறு எரிந்தது. ஆனால் சசிதரனின் கோபத்தைத் கண்டு அமைதி காத்தாள் அவள்..

சில நொடிகள் அருந்ததியின் வெட்கத்தையும்.. கோபத்தையும் ரசித்து விட்டு மீண்டும் ஹாசினியின் புறம் திரும்பியவன்
"எதுக்குடி பணம் பணம்னு அழையுற.. நீ பணம் தான் வேணும்னு கேட்டு இருந்தாலே நான் வேணுமுன்ற மட்டும் கொடுத்து இருப்பேனே.. அதுக்காக காதல் என்ற பேர்ல என்கிட்டே நடிச்சு இருக்க.."என்று கோபமாகக் கூறினான்.


"நா.. நான் நடிக்கல சசி எனக்கு உன்னையும் பிடிக்கும்.." என்று அவனைப் பார்த்து பயந்தவாரே கூறினாள்..
" ஹா..ஹா...ஹா.." அவளது பதிலைக் கேட்டு சிரித்தவன் "ஆனா நான் உன்னை லவ் பண்ணேன் டி.. உன்னால‌தான் இதோ நிற்கிறாளே என்னோட அதி..அவளோட உண்மையான காதலைக் கூட நான் புரிஞ்சுக்கல.. இவளோட காதலாலேயோ என்னவோ உன்னை மாதிரி ஒருத்தி கிட்ட இருந்து கடைசி நிமிஷத்துலயாவது தப்பிச்சுட்டேன்..



நீ பண்ணது எல்லாத்தையும் தான் அன்னைக்கே மன்னிச்சு விட்டேனே.. மறுபடி ஏன் டி என்னோட அழகான காதல் வாழ்க்கை பிரிக்க வந்த.." என்று முதலில் உணர்ச்சிபூர்வமாக கூறியவன் அதன் பிறகு கோபம் கொண்டவனாக அவளது தலை முடியை இறுகப் பற்றியிருந்தான்.. ஹாசினிக்கு வலி உயிர் போனது...




இவற்றையெல்லாம் தள்ளி நின்றே பார்த்தபடியே இருந்தாள் அருந்ததி. அவனுக்கு சசிதரன் பேசுவது எல்லாம் புதிதாக இருந்தது. அன்று அவன் ஹாசினியை வீட்டுக்குள் சேர்த்தது பரிதாபத்தால் என நினைத்து இருந்தாள் அவள்.‌ அருந்ததி அந்நிலையில் கூட சசிதரனை சந்தேகப்படவில்லை.. அவளுக்கான காதல்தான் சசிதரனின் கண்ணிலேயே தெரிகிறதே ..



எனவே அவனை அவள் சந்தேகப்படவில்லை. அதனால் தான் 'இவளை ஏன் வீட்டிற்குள் சேர்த்தாய்' என்று அவனிடம் சண்டை போடவில்லை அவள் ..ஆனால் அவள் மேல் இப்போது அவனுக்கு பரிதாபம் இருக்கிறது என்று தான் நினைத்துக் கொண்டிருந்தாள் அருந்ததி.. ஆகவேதான் இடையிடையே ஜாடைமாடையாக அவனிடம் இதைப் பற்றி பேசினாள்.


இவள் இப்படி நினைத்து இருக்க அவளவனோ அந்த ஹாசினியை பற்றி தெரிந்து தான் வீட்டிற்குள் விட்டு இருக்கிறான்.. என்ன தான் இங்கு நடக்கிறது என ஒரு ஓரமாக நின்று பார்த்தபடி இருக்க அவன் ஹாசினியின் முடியை பிடித்ததும் பதறிப் போய் அவர்களிடம் சென்றாள்.. "தரு விடுங்க அவளை. என்ன இது ஒரு பொண்ணு மேல கை வைக்குற பழக்கம்.." என அவனை கடிந்து கொண்டவள் அவனது கையை ஹாசினியின் முடியில் இருந்து எடுத்து விட்டாள் ..



அவள் சொன்னதற்காக மட்டுமே கையை எடுத்தவன் இப்போது அருந்ததியையும் சேர்த்து முறைத்தான்.. அவனது முறைப்புக்கு எல்லாம் பயப்படாதவள்
" இங்க பாருங்க தரு அவளை விட்டுடுங்க ..என்ன பண்ண முடியும் இவளால?" என அவனை பார்த்து கூற
" என்னடி நீ அவளுக்கு சப்போர்ட் பண்ற.. அவ இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன பேசினான்னு பார்த்துட்டு தானே இருந்த ..



பொண்ணா அவ.. ச்சீ.. ஒருவேளை நமக்குள்ள அது நடந்து..அது வந்து நீ .. நீ என்ன தப்பா நினைச்சிட்டேன்னா.." அவனது தயக்கமான வார்த்தைகளை கேட்டவள்
" அப்படியெல்லாம் சந்தேகப்பட மாட்டேன் ..சந்தேகம் வாழ்க்கையே அழிச்சிடும்.. விட்டுடுங்க அவளை.‌" அவனது கையை தனது கைக்குள் வைத்த படி கூறினாள்.


அவளது பேச்சு மனதுக்கு இதம் அளித்தாலும் அவனது மனது ஆறவில்லை.. ஏதோ தப்பா நடக்க போவதை போல் தோன்றிக் கொண்டே இருந்தது அவனுக்கு..
ஹாசினியை இப்போது சாதாரணமாக நினைக்கத் தோன்றவில்லை ..ஆனாலும் மனைவி சொல்வதால் "உனக்காக மட்டுமே இவளை மன்னிச்சு விடுறேன் ..இனிமே என் கண் முன்னாடி வந்துடாத..நான் மனுசனா இருக்க மாட்டேன்.. போ போய் உங்க அப்பன்கிட்ட சொல்லு பணத்துக்காக பொண்ணை விக்குற வேலையைத்தான் அவன் செய்யறான்னு.." என்று சொல்லி விட்டு படியேறியவன் மீண்டும் திரும்பி வந்து "இன்னைக்கு ஈவினிங்குள்ள நீ இங்க இருந்து போயிடனும்.." என்று கூறி விட்டு சென்றான்..




அவன் அங்கிருந்து சென்ற பிறகு ஹாசினியின் அருகில் வந்த அருந்ததி
" இங்க பாருங்க ஹாசினி பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை ..உங்களோட வாழ்க்கை உண்மையா நேசிக்கிற ஒருத்தரோட அன்புக்காக வாழ்ந்து பாருங்க சந்தோஷமா இருக்கும் ..உண்மையை சொல்லனும்னா தரு மாதிரி ஒருத்தரை நீங்க மிஸ் பண்ணிட்டீங்க.. எனவே இதுக்கப்புறமாவது நல்லபடியாக வாழ பாருங்க.." என கூறி விட்டு கணவனின் பின்னால் மாடி ஏறி சென்றாள் ..



அவள் அறைக்குள் நுழைந்த அடுத்த கணமே அவனது அணைப்புக்குள் அடங்கி இருந்தாள்‌‌.. அவள் திகைத்துப் போய் அவனை விலக்க நினைக்க அவனது பிடி இறுகித் தான் போனது.." ப்ளீஸ் கொஞ்ச நேரம் அப்படியே இருந்துக்கோ.." என தழுதழுத்த குரலில் அவன் கூற அமைதியாகி விட்டாள் அவன் அணைப்பிலேயே...



"நீ என்னை சந்தேகப்பட்டு இருந்தா நான் செத்து இருப்பேன் டி.. அவளை இந்த வீட்டுக்குள்ள அனுமதிக்க முக்கிய காரணமே உன்னை என் கிட்ட வர வைக்க தான் .அவ இங்கு வந்தபோவே நான் கண்டு பிடிச்சிட்டேன் ஏதோ காரணத்தோடு தான் வந்து இருக்கானு.. அதே போல அவளும் பொய் சொல்லி என் கிட்ட நடிச்சா. அவ முதல்ல என்னை கட்டிபிடிச்சப்போ அவளை விலக்கி நிறுத்தினேன் ..அப்புறம் தான் நீ மேல இருந்து எங்களையே பார்த்துக்கிட்டு இருந்தது தெரிஞ்சது..



அதுக்கு அப்புறம் தான் அவளை அணைச்சு ஆறுதல் படுத்தினேன்.. அப்புறம் அவளை டீப்பா வாட்ச் பண்ணும் போதுதான் தெரிஞ்சது அவ அப்பாவும் இதுக்கு உடந்தை என்று ..."என கூறியவன் மேலும் அவளை பார்த்து
"நீ அன்னைக்கு சாப்பாட்டுல விஷம் வைப்பேன்னு சொன்னதை கேட்டு எனக்கு சிரிப்பை அடக்க முடியல தெரியுமா.. அதுக்கு அப்புறமா அவ பயந்துகிட்டே சாப்பிடாம இருந்தா பாரு"
இப்போதும் அதை நினைத்து சிரிப்பு வந்தது அவனுக்கு...



இவ்வளவு நேரமும் அவன் அடைப்பை தளர்த்தவே இல்லை.. அவளும் அவனிடம் இருந்து விலக வில்லை..



அவளை விட்டு விலகியவன்
"ஐ அம் சாரி டா.." என்று மன்னிப்பு வேண்டினான் தனது எல்லா தவறிற்கும் சேர்த்து.. அருந்ததியும் எதுவும் பேசாமல் அவனையே பார்த்தாள்..


"உன்னோட கோபம் புரியுது நான் என்ன பண்ணா என்னை மன்னிப்ப?" என்று அவளிடம் கேட்க அவளோ இல்லை என்று தலையை ஆட்டினாள்.. அவன் கேள்வியாக அவளைப் பார்க்க "வெளியிலிருந்து பார்க்கிறவங்களுக்கு நீங்க பண்ணது ஒரு சாதாரண விஷயம் தான் ..ஆனா என்னை பொறுத்தவரை அது பெரிய வலி..



பொண்ணா பொறந்தா மட்டும்தான் இந்த வலியை புரிஞ்சிக்க முடியும் தரு.."என்று கூறிவிட்டு அவள் நடக்க அவளது கையை இறுகப் பற்றி நிறுத்தியவன்
""ஹேய் நீ என்னை என்ன சொல்லிக் கூப்பிட்டே தரு...இ
தருன்னு தானே.."என்றான் அவன் கண்கள் மின்ன.


அவள் அவனை சில தடவைகள் அப்படி அழைத்து இருந்தாலும் அவன் கருத்தில் அது பதியவில்லை..அவளது வித்தியாசமான அழைப்பு அவனுக்கு பிடித்திருந்தது..
அவளோஅவளோ அவனை முறைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள்..இவள் இங்கு அவனுடன் உணர்வு பூர்வமாகப் பேச அவன் இப்போது போய் பெயர் ஆராய்ச்சியில் ஈடுபட அவளுக்கு கோவம் வந்து விட்டது..


அவர்கள் அப்படி இருக்க இங்கு அறைக்குள் வந்த ஹாசினி நடந்த அனைத்தையும் தந்தைக்கு அழைத்து கூறிவிட்டாள். மறுமுனையில் ஏதோ சொல்லப்பட அதைக் கவனமாகக் கேட்டவளின் இதழில் புன்னகை ஒன்று உதயமானது.


தொடரும்..



..


 
Last edited:
Status
Not open for further replies.
Top