ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிரிலே சடுகுடு ஆடினாய் -‌ கதை திரி

Status
Not open for further replies.

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 23


தந்தையிடம் போனில் பேசிவிட்டு அவர் கூறியவற்றை செயல்படுத்த ஆரம்பித்தாள் ஹாசினி. அவளுக்கு அவன் கை விட்டு போனது ஒருபுறம் என்றால் அவளை இருவரும் சேர்ந்து அவமானப்படுத்தியதும் அவளுடைய கோபத்தை தூண்டி விட்டது. எனவே தந்தை கூறிய திட்டத்திற்கு அமைய அன்று மதியம் வரை அந்த அறையை விட்டு அவள் வெளியே வரவில்லை.



அருந்ததி எப்போதும்போல் மதிய உணவை தயாரித்தவள் குளித்து விட்டு வரலாம் என உள்ளே செல்ல அவள் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்ட ஹாசினி வேகமாக அருகில் உள்ள கடைக்கு சென்று அவளுக்கு தேவையான பொருளை வாங்கி வந்தவள் சமையலறைக்குள் நுழைந்தாள்.. அவளது கையில் அவள் கடைக்கு சென்றபோது வாங்கி வந்த விஷ போத்தல் இருந்தது.. அக்கம்பக்கம் பார்த்தவாறே சமையல் அறையின் உள்ளே சென்ற ஹாசினி அங்கு சமைத்து வைத்திருந்த உணவில் விஷத்தை கலந்தாள்.



அவளது தந்தை கூறியது இதுதான்.. அருந்ததி இறந்தால்தான் சசி தரன் அவளுக்கு கிடைப்பான் என அவர் கூட உணவில் விஷம் சேர்ந்தாள் அவள்.. அதே உணவைத்தான் சசிதரனும் உண்ணப் போகிறான் என்ற கவலை அவளுக்கு இருந்தாலும் உடனே அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என முடிவு செய்து கொண்டாள் அவள்..



பெண்கள் போல் அல்லாது ஆண்கள் உடல் பலம் கொண்டவர்கள் என்பதால் அருந்ததியைப் போல் அவனுக்கு பெரிதாக எதுவும் நடக்காது என்றும் அவளுடைய தந்தை கூற அதுவே அவளுக்கும் சரி எனப்பட்டது ..
எனவேதான் சிறிதும் யோசிக்காமல் விஷம் கலந்தாள்.
தனது வேலையை முடித்துவிட்டு நல்லபிள்ளை போல் மீண்டும் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.


அருந்ததி குளித்து முடித்து வந்தவள் சசிதரனை உணவு உண்ண அழைக்க சிறிது நேரம் போகட்டும் என்று கூறி விட்டான் அவன் .அவனுக்காகக் காத்துக் கொண்டு இருக்க முடியாத அளவுக்கு அவளுக்கு பசி வயிற்றைக் கிள்ளவே அவனிடம் கூட எதுவும் சொல்லாது உணவு மேசையில் அமர்ந்து உண்ண தொடங்கி விட்டாள்..


குளித்தால் பசி அதிகமாக இருக்கவே உணவை ஒரு பிடி பிடித்தாள் அருந்ததி. இதையெல்லாம் அறைக் கதவை லேசாகத் திறந்து விட்ட படி பார்த்துக் கொண்டு தான் இருந்தாள் ஹாசினி. அவளுக்கு ஒரு சின்ன சந்தோஷம் என்னவென்றால் சசிதரன் இந்த உணவை சாப்பிடாதது தான்.நன்றாக உண்டு முடித்தவள் எழுந்து செல்ல முற்பட அவளால் முடியாமல் போனது..


ஏனோ அவளால் நடக்க முடியாமல் போக இருந்தும் எப்படியோ தட்டுத்தடுமாறி தங்களது அறையை அடைந்து விட்டாள்.. அறையில் இருந்தபடி மடிக்கணினியில் வேலை செய்து கொண்டு இருந்த சசிதரனும் அவளது வருகையை உணர்ந்து ஒரு சிரிப்புடனே அவளை நிமிர்ந்து பார்த்தான்..



அவனது புன்னகை அவளை கண்டதுமே உறைந்து போனது அவனது உதட்டிலேயே.. அப்படி ஒரு தள்ளாட்டம் அவளது நடையில். சந்தேகமாக அவளைப் பார்த்தவன் உடனே எழுந்து நின்று
"அதி என்ன டி ஆச்சு உனக்கு..? இப்படி இருக்க?" என்று கேட்க அவனையே பார்த்தபடி நின்று கொண்டு இருந்தாள் அவள்..




ஆனால் வாய் திறந்து பேச முடியவில்லை அவளால். அவனை தான் பார்த்துகொண்டு இருந்தாள் ..
அவளை கண்டதும் பதறிப்போய் அவளை ஒரே எட்டில் அடைந்து
"அதி உனக்கு என்ன ஆச்சு சொன்னாதானே தெரியும் ..."
என்று அவன் அவளை அழுத்தமாக பற்றியபடி கேட்க அவனையே பார்த்து இருந்தவளின் வாயிலிருந்து ஒரு பக்கமாக இரத்தம் வடிந்தது..



அதில் மேலும் பயந்தவன்
"எ.. என் .. என்னடி.
"
என்று அவளது கன்னத்தை தட்டிக் கேட்க அவனைப் பார்த்தபடியே ஒரு பக்கமாக சாய்ந்து விழுந்து இருந்தாள் நிலத்தில்.. அவள் வாயிலிருந்து இரத்தம் வடிந்த படியே தான் இருந்தது.


தான்பிடித்து இருந்தவள் திடீரென வாயில் இரத்தம் வழிந்து கொண்டிருக்க கீழே விழுந்ததும் அவனால் அதற்கு மேல் யோசிக்கவே முடியவில்லை.. அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன்
"இங்க பாருடி உனக்கு என்ன ஆச்சு.. என்கிட்ட பேசுடி ..."என அவளது கண்ணம் தட்டி அவளிடம் பேசினான் அவன். அவனது கண்ணிலிருந்து நிற்காமல் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது..




அவனுக்கு இந்த நிலையில் என்ன செய்வது என்று கூட தெரியவில்லை. வேறு யாராவது இப்படி ஒரு நிலையில் இருந்தால் நிதானமாக அவர்களுக்கு உதவி செய்திருப்பான். ஆனால் அவனிடம் இப்போது நிதானம் இல்லை .ஏனெனில் இப்படி ஆபத்தில் இருப்பது அவனது உயிர்... காதல் மனைவி அல்லவா. அடுத்து அவன் என்ன செய்ய வேண்டும் என்பது கூட அவனுக்கு நினைவுக்கு வரவில்லை.. அவள் மட்டுமே அவனது எண்ணத்தில் இருந்தாள்..
அவளது கன்னத்தை தட்டியபடியே அழுது கொண்டு இருந்தான் அவன்.


இங்கே பக்கத்தில் ஒரு வேலையாக வந்த தேவ் அப்படியே சசிதரனையும் அருந்ததியையும் பார்த்துவிட்டு செல்லலாம் என முடிவு செய்தவன் அங்கு வந்து இருந்தான். காரை நிறுத்திவிட்டு உள்ளே வர வீட்டின் முன் கதவு திறந்தே இருந்தது.. யோசனையாக உள்ளே வந்தவனை கண்டு இவ்வளவு நேரமும் சசிதரனின் அறை வாசலில் இருந்து நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஹாசினி அவனின் கண்களுக்கு படாமல் மறைந்து நின்று கொண்டாள்..



ஆனால் மனதில் அவனை திட்டித் தீர்த்தாள்..இவன் ஏன் இந்த நேரத்தில் இங்கு வந்தான் என அவள் மனதில் எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது.. அவனால் அவளது திட்டம் பாலாகிவிடும் அல்லவா.


தேவ் வீட்டில் இருவரையும் தேட அவன் கண்களுக்கு யாருமே தென்படவில்லை. எனவே இப்போது
"அரு ...அண்ணா .."என சத்தமாக அழைத்து பார்த்தான். அழுதுகொண்டு இருந்த சசிதரனின் காதில் இவனின் சத்தம் கேட்கவே இல்லை.. எந்த சத்தமும் இல்லாத காரணத்தால் மாடியேறி அவர்களின் திறந்து இருந்த அறைக்கதவை நோக்கி சென்றான்.


அறையின் உள்ளே கண்டவன் அதிர்ந்து தான் போனான் வாயில் இரத்தம் வழிய அருந்ததி தரையில் விழுந்து கிடக்க பைத்தியம் போல் அவளது இரு கன்னங்களையும் மாறி மாறி தட்டியபடி அழுது கொண்டிருந்தான் சசி தரன்.




பதறிப் போய் உள்ளே ஓடி "என்னடா ஆச்சு ..ஹே அரு இங்க பாரு.."என அவளை உலுக்க அவளிடம் பதில்தான் இல்லை.. இந்த நேரம் தம்பியை இங்கே கண்டதும் அவனுக்கு ஒரு புதிய தெம்பு வந்தது போல் இருந்தது..


திரும்பி சசிதரனை பார்த்து
"என்னாச்சு இவளுக்கு.. ஏன் இப்படி பார்த்துட்டே இருக்க ..
சீக்கிரமா அவளை தூக்கு ஹாஸ்பிடல் கொண்டு போகலாம் ..."என அவன் பதிலைக் கூட எதிர்பாராமல் முன் நோக்கி ஓடினான்.. அவன் சொன்ன பிறகே வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நினைவே வந்தது சசிதரனுக்கு...



எனவே ஒரு நொடியும் தாமதிக்காது அவளை தனது கைகளில் ஏந்தியபடி தேவ்வின் பின்னால் ஓடினான். மறைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஹாசினியோ தரையில் தனது காலால் உதைத்தாள் கோபத்தின் காரணமாக.


இங்கு மருத்துவமனை வரும் வரை அவளை தனது மடியில் வைத்து புலம்பியபடியே வந்தான் சசி தரன் .
மருத்துவமனை நோக்கி காரை செலுத்தியபடியே
"அவளுக்கு என்ன ஆச்சு?" என்று தமையனிடம் கேட்டான் தேவ். அவனுக்கு என்ன நடந்தது என்று தெரிய வேண்டி இருந்தது .


ஆனால் பாவம் சசிதரனுக்கு கூட தெரியாது அல்லவா..
"தெ... தெரியல திடீர்னு தான் இப்படி ...அவ ஒரு வார்த்தை கூட பேசலை.." என்று தனது கண்ணம் தொட்ட கண்ணீரைத் துடைத்தபடியே பேசினான் சசி தரன்..



" என்னதான் நடந்திருக்கும்" என்று சிந்தித்தபடியே மருத்துவமனையை அடைந்திருந்திருந்தான் தேவ். "அண்ணா ஹாஸ்பிடல் வந்தாச்சு.." என்று அண்ணனிடம் கூறியவன் நில்லாமல் முன்பு சென்று விட்டான் ரிசப்ஷன் நோக்கி.




அடுத்த சில நிமிடங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருந்ததிக்கு சிகிச்சைகள் வேகமாக நடந்தன. சுற்றமும் மறந்த நிலையில் தலையை தொங்க போட்டு அமர்ந்து இருந்தான் சசிதரன்..


சுபா உட்பட அனைவருக்கும் அழைத்து கூறியிருந்தான் தேவ் .. அவர்கள் சென்ற பிறகு வீட்டை விட்டு வெளியேறி ஒரு ஹோட்டலில் தங்கி விட்டாள் ஹாசினி.
அவளுக்கு அருந்ததி என்ன ஆனாள் என்று பார்க்க வேண்டியிருந்தது.


விடயம் கேள்விப்பட்டவுடன் சுபாவும் வந்து சேர்ந்தாள் மருத்துவமனைக்கு.சில மணி நேரங்களுக்குப் பிறகு அவள் அனுமதிக்கப்பட்டு இருந்த அறையில் இருந்து வெளியே வந்த மருத்துவர் கூறியதைக் கேட்டு அங்கு இருந்தவர்கள் அதிர்ந்து விட்டனர். காரணம் அருந்ததி விஷம் கலந்த உணவை உண்டு இருக்கிறாள் என்றுதான் அவர் கூறினார். அவருக்கு தற்கொலைக்கு முயன்று இருப்பாளே என்ற சந்தேகம் வேறு ..அதை இவர்கள் ஒருவாறு பேசி சமாளித்து விட்டனர்.. அவளுக்கு அப்படி எந்த பிரச்சினையும் இல்லை ...ஒருவேளை தெரியாமல் உண்டு இருக்கலாம் என பேசி சமாளித்தனர் மருத்துவரை.


அவரும் எதற்கு வம்பு என்று இவர்கள் கூறியதை நம்பி விட்டார்.. அவர் சென்ற பிறகு உள்ளே சென்று அருந்ததியைப் பார்த்து விட்டு வந்தான் சசிதரன்.. அதன் பிறகுதான் மற்றவர்கள் சசிதரனின் முகம் நோக்கினர் கேள்வியாக. ஆனால் அவனோ தீவிர யோசனையில் இருந்தான்.. அவனை கண்டு கோபம் கொண்ட தேவ்
" என்னடா இது எல்லாம் ..நிஜமாகவே அவ தற்கொலைக்கு முயன்று இருப்பாளா?" என தன் சந்தேகத்தை அவனிடம் கேட்டான்.. ஆனால் அவன் இதை முழுதாக நம்ப வில்லை..


அருந்ததியை பற்றி அவனுக்கு நன்கு தெரியுமே.. அப்படி தற்கொலை செய்யும் அளவுக்கு எல்லாம் அவள் கோலை இல்லை.
அவளை சசிதரன் இப்போது உண்மையில் காதலிக்கிறான்.. அவனும் எதுவும் செய்திருக்க வாய்ப்பு இல்லை..


எனவே அழுத்தமாக சசிதரனை பார்த்தவன்
" வீட்டில என்ன நடந்தது ?"என்று கேட்க அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல்
"இது அவ வேலையாக தான் இருக்கும்.. அவளை..." என்றபடி கோபமாக எழுந்து செல்ல முற்பட்ட அவன் கையை பிடித்து தடுத்து
" யார்?" என்று கேட்டான் ஒரே வரியில் ..



அவன் கேட்டதும் ஒன்று விடாமல் அனைத்தையும் சொன்னான் சசி தரன்‌‌. இதை கேட்ட விஷால் .. தேவ்..சசிதரன் மூவருக்குமே கோபம் வந்தது‌‌..
" அவளை சும்மா விடவே கூடாது சசி.." என விஷால் சொல்ல அதை அனைவரும் ஆமோதித்தனர்..


" நான் அவளை இன்னைக்கே ஒரு வழி பண்ணி இருப்பேன்.. எல்லாம் இந்த அதியால வந்தது ..அவளால ஒன்னும் பண்ண முடியாது விட்டுடுங்கன்னு சொல்லிட்டா...ஷிட்.." என்று கோபத்தில் பல்லைக் கடித்தான் சசிதரன். அப்போது அங்கு வந்து சேர்ந்தனர் மொத்த குடும்பமும்..


எப்படியானது என்ற கேள்விக்கு ஏதேதோ சொல்லி அவர்களை சமாளித்தவர்கள்
ஹாசினியை தேடிப் புறப்பட்டனர். சசிதரனுடன் விஷாலும்.. தேவ்வும் முதலில் சென்றது அவனது வீட்டுக்கே ..அங்கே அவளை தேட எங்கும் அவள் இல்லை.. உடனே கிச்சனுக்குள் சென்று பார்க்க அங்கு கீழே விழுந்து கிடந்து இருந்தது விஷ போத்தல்..




கோபம் எல்லையை கடந்தது சசிதரனுக்கு.. ஆனால் இப்போது எங்கு சென்று ஹாசினியை தேட.. அதனால் அவனை அமைதிப்படுத்திய தேவ் சற்று யோசிக்கலானான்..


எப்படியும் அவள் அருந்திருக்கு என்னவானது என்று தெரியாமல் இங்கிருந்து செல்ல மாட்டாள்..என உறுதியாக நம்பினான் அவன்.. அதை மற்ற இருவரிடமும் சொல்லவும் செய்தான்.


" ஒருவேளை அவ வரலேன்னா என்ன பண்றது.. எனக்கு என்னவோ இந்த ஐடியா சரிவரும்னு தோனல..
என்னோட பிரெண்ட் ஒருத்தன் போலீசா இருக்கான்.. அவன்கிட்ட சொல்லி ஹெல்ப் கேட்கலாம் .."என விஷால் கூற மற்ற இருவரும் சரி என ஒத்துக் கொண்டனர் ...



அவ்வாறே விஷால் அவனுடைய நண்பனுக்கு அழைத்து கூற அவனோ ஹாசினியின் தொலைபேசி எண்ணை வாங்கி கொண்டான்.. சில நிமிடங்களிலேயே விஷாலின் நண்பன் அழைத்து அவள் இருக்கும் ஹோட்டலின் பெயரைக் கூற நொடி நேரம் கூட தாமதிக்காமல் மூவரும் அங்கு சென்றனர் .


மற்ற இருவரும் வெளியே இருக்க அவளது அறை கதவை தட்டி உள்ளே சென்றான் சசிதரன்.. அவனைக் கண்டவள் முதலில் பயந்தாலும் அவனுக்கு விடயம் தெரியாது என நினைத்து தானே வாயை கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று அப்பாவி போல் முகத்தை வைத்தவாறு அவனைப் பார்த்தாள்.


தொடரும்...


 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 24

அவள் அப்பாவி போல் அவனைப் பார்த்து நிற்கையில் உள்ளுக்குள் அவளைக் கொன்று போடும் வெறியே வந்தது சசிதரனுக்கு .
ஒரு காலத்தில் அவளை தான் காதலித்கதை நினைத்து இப்போது வெட்க்கி போனான் அவன் உள்ளுக்குள்.. இருந்தும் இந்த இடத்திலிருந்து அவளை எப்படியாவது வெளியே கூட்டிச்செல்ல வேண்டும் என அமைதியாக நின்றான்..



" என்னாச்சு சசி இங்கே என்னை தேடி வந்துட்டு பேசாம இருக்க?"என்று அவனிடம் தேன் தடவிய குரலில் வினவ அவனோ
"எதுக்காக நீ இங்க இருக்க.. உன் வீட்டுக்கு போகலையா ?"
என கோபத்தை உள்ளுக்குள் வைத்து வெளியே அமைதியாக கேட்டான் அவளிடம் ...உடனே அவனை நம்ப வைக்க வேண்டி தாரைதாரையாக கண்ணீர் விட்டவள்


"என்ன சசி நீ.... நான் சொத்து இல்லாமல் போன எங்க அப்பா என்னை என்ன பண்ணுவாரோன்னு பயத்துல இருக்கேன்.. உன்னோட காதலும் இல்லாம போச்சு... பணமும் இல்லாம போச்சு.. எனக்கு இது எல்லாம் தேவை தான்.." என திருந்தியது போல் பேசினாள் அவள் ..


அப்போது தான் அருந்ததியின் விடயத்தில் அவளை அவன் சந்தேகப்பட மாட்டான். அவளுக்கு மட்டுமா நடிக்க வரும் அவனுக்கு அவளை விட நன்றாக நடிக்க வருமே..
" சரி வா நான் உன்னை வேற இடத்துல தங்க வைக்கிறேன்.இந்த இடம் அவ்வளவு சேஃப் இல்லை.." என்று அவன் அவளை அழைக்க எப்படியாவது அவனுடன் சென்று மேலும் ஏதாவது திட்டம் தீட்டி சொத்தை மட்டுமாவது அவனிடமிருந்து பறிக்கலாம் என அவனுடன் சென்று விட்டாள் அவள்.


அவர்கள் வெளியே வருவதைக் கண்ட தேவ் மற்றும் விஷால் இருவருமே அவர்களின் பின்னால் சென்று அவர்கள் அமர்ந்து கொண்ட அதே காரின் பின் சீட்டில் அமர்ந்தனர் ..
சசிதரனின் பக்கத்தில் முன் இருக்கையில் அமர்ந்து இருந்தவள் அவர்களை கண்டதும் பயத்தில் கத்த போக பின்னால் இருந்த படியே அவளது வாயில் துணியை வைத்து கட்டினான் தேவ்..



தனது வீட்டுக்கே அவளை அழைத்து வந்து அவளை மிரட்டி அவளது வாயாலேயே உண்மையை வரவைத்தான் சசிதரன். அவள் உண்மையை ஒத்துக் கொண்ட பிறகு தேவ் அவளை அடிக்க கையை ஓங்கிய நேரம் அவனை தடுத்து நிறுத்திய சசிதரன்
"அவளை விடு போகட்டும்.." என அவனிடம் கூறியவன்
"போ.."
என அவளை அங்கிருந்து அனுப்ப தப்பித்தால் போதும் என அங்கிருந்து ஓடியே விட்டாள் அவள்...




அவனை முறைத்துக் கொண்டிருந்த இருவரிடமும் தனது திட்டத்தை கூறியவன் அதை செயல்படுத்த ஏற்படுத்தியிருந்த ஆட்களுக்கு அழைத்து பேசியவன் முகத்தில் இப்போது தான் திருப்தியான ஒரு புன்னகை தோன்றியது..


****************


அருந்ததியை மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்து இன்றோடு பத்து நாட்கள் கடந்து விட்டன. அவளது அனைத்து வேலைகளையும் அவனே தான் பார்த்துக் கொண்டான் ..அவளது பெற்றோரும் சரி அவனது பெற்றோரும் சரி அவளை சென்னைக்கு அழைத்து செல்வதாகக் கூற அவன் விடவில்லை.. தானே பார்த்துக் கொள்வதாகக் கூறினான். துணைக்கு பக்கத்திலேயே சுபா இருப்பதால் தேவை ஏற்படும் போது அவளை அழைத்துக் கொள்கிறேன் என கூறவும் அவர்களும் சரி எனக் கூறி விட்டனர்.. ஆனால் அருந்ததியின் தாயும் , சசிதரனின் தாயும் மேலும் சில நாட்கள் தங்கிவிட்டு தான் சென்றனர்..



இவன் என்ன தான் அவளை ராணி போல் பார்த்து கொண்டாலும் அவள் அவனிடம் சரியாக முகம் கொடுத்து பேசுவதில்லை. அது அவனை வாட்டிய போதும் முகம் சுளிக்காமல் அவளுக்கான பணிவிடைகள் அத்தனையையும் செய்வான் ..
இப்போது முழுதாகவே குணமடைந்து விட்டாள் அருந்ததி.


"என்ன வீட்டிலேயே தான் இருக்கீங்க எப்ப பார்த்தாலும்.. வேலைக்கு போற ஐடியாவே இல்லையா?" என அவனிடம் அவள் கேட்க
"உன்னை கவனிச்சுக்க யார் இருக்கா நான் வேலைக்கு போயிட்டா ...அதனால இப்போதைக்கு நான் வேலைக்குப் போறதா இல்லை.." என உறுதியாகவே கூறினான் ..



"நான் நல்லாத்தான் இருக்கேன்.. நீங்க தாராளமா வேலைக்கு போகலாம்.." எனக் கூறி விட்டு அவள் செல்ல முற்படும் போது அவளது கையை பிடித்து தடுத்து நிறுத்தினான் அவன்..
" என்ன வேணும் உங்களுக்கு விடுங்க என் கையை..." அவனிடமிருந்து கையை விடுவிக்க போராடினாள் அருந்ததி.. அவளது கையை விடாமல் தன்னை நோக்கி வேகமாக அவளை இழுத்தவன் அவளை சிறை செய்தான்.. திகைப்பில் விழி விரித்து அவனை பார்த்துக் கொண்டே இருக்க அவளது கண்களில் மெல்லிய முத்தமொன்றை பதித்து விட்டு அவளையே பார்த்தபடி இருந்தான் அவன்..



அவனது பார்வை அவளை ஏதோ செய்ய
"வி..விடுங்க ..தரு.." என தன்னை மறந்து அவனுக்கு தான் வைத்திருக்கும் செல்ல பெயரையும் கூறி விட்டாள் அவள்.
" இது.. இதுதான் என்னோட அதி.. உனக்கு நடிக்க வராதுடி.." என அவன் அவளது மூக்கை பிடித்து திருகியபடி கூற அவன் கையை தட்டி விட்டவள்
" நான் எப்போ நடிச்சேன்.. என்ன உளர்றீங்க ?" என கோபமாக முகத்தை வைத்தபடி அவனிடம் கேட்டாள்.


அவள் கேட்டதும் கல கலவென சிரித்தவன் "அதி நீ என்னை கல்யாணம் பண்ணின நாள்ல இருந்தே நடிச்சுட்டு தான் இருக்க.. ஏய் நான் பேசி முடிச்ச அப்புறம் நீ பேசு.." என இடையில் பேச வந்தவளை தடுத்து நிறுத்தி தானே பேசினான் ..
"என் மேல உனக்கு கோபம் இருந்தது தான் ..இல்லைன்னு சொல்ல முடியாது ..ஆனால் அதைவிட என் மேல உனக்கு நிறைய லவ் இருக்கு.. அது என்றைக்குமே மாறாது.. உன்னோட கோபம் நீ போடுற வேஷம்.. எங்க உன்னை அறியாம நீயே என் கிட்ட நெருங்கிடுவேன்னு பயந்துதான் கோவத்தை காட்டிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்க . ..கேடி டி நீ.."



என செல்லமாக அவளது நெற்றியை முட்டினான்.
"அப்படி எல்லாம் இல்லை ..இன்னுமே நான் உங்க மேல கோவமா தான் இருக்கேன் ..விடுங்க என்னை.." அவனை விட்டுச் செல்வதில் தான் குறியாக இருந்தாள் பெண்ணவள்.. அவளை விலக விடாமல் மேலும் இறுக்கிக் கொண்டவன்


"அப்படியா இன்னும் என் மேல நீ கோவமா இருக்க.. அதை நான் நம்பணும்... ஏண்டி கோவமா இருக்குற நீ என்னை ஹாசினி கூட வச்சு சந்தேகப்பட்டியா இல்லை தானே.. அவளை துரத்தி விடனும்னு தான் நெனச்ச.. அப்புறம்.. அப்புறம் அன்னைக்கு நைட் நமக்குள்ள நடந்ததே .. அப்போ என்னை நீ தடுக்கவே இல்லையே.. கோவமா இருக்குறவளா அன்னைக்கு அத்தனை தடவை லவ் யூ சொன்ன.." என அவன் பேச பேச கண்ணங்கள் இரண்டும் சிவந்து போனது வெட்கத்தால் அவளுக்கு.


அதை மறைக்க பெரும் பாடுபட்டு போனாள் அவள்.. "அது..அது.." என அவள் இழுக்க...
"அது இதெல்லாம் ஒன்னுமில்லை மரியாதையா நடிக்காம என் கூட சேர்ந்து வாழற வழியை பாரு டி .."என்று செல்லமாக அவளை மிரட்டின்ன் அவளின் தரு..

"ம்ஹூம்.."
என்று தலையாட்டியவளின் கண்கள் இரண்டும் கலங்கிப் கலங்கிப் போனது பழையதை நினைத்து.. அவளை பார்த்து இருந்தவன் அவளுடைய நிலைமையை புரிந்து கொண்டான் போலும்..
" இங்க வா .."என அவளை அங்கே இருந்த சோபாவில் அமர வைத்து தானும் அருகில் அமர்ந்து கொண்டான்..



" அதி ஐ அம் சாரி.. நான் முன்னாடி பண்ணுனது பெரிய தப்பு தான்.. சாதாரணமா உன்கிட்ட மன்னிப்பு கேட்டா சரிய்காதுன்னு எனக்கு தெரியும்.. நீ இன்னும் என்னை உயிர்ரா தான் நேசிக்கிற.. ஆனா என் கூட உன்னை வாழ விடாமல் பழைய நினைவுகள்தான் தடுக்குது இல்ல.. நானும் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன் டி.. அன்னைக்கு நீ என் முன்னாடி மயங்கி சரியும் போது என் உயிரே போயிடுச்சு.. இப்ப சொல்லு நான் என்ன பண்ணா என்னோட காதல் உண்மை என நம்புவே..?" என அவன் கேட்க பாய்ந்து வந்து அவனை அணைத்து இருந்தாள் அவள்.



"நீங்க.. நீங்க எதுவுமே பண்ண வேணா... உங்க காதலை நான் புரிஞ்சுகிட்டேன்.. அன்னைக்கு நடந்ததெல்லாம் தேவ் சொன்னான். நீங்க ரொம்பவே துடிச்சு போயிட்டீங்கன்னும் சொன்னான். எனக்கு உங்க மேல எந்த கோபமும் இல்லை. ஆனா பழையது ஞாபகம் வரும் போதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு..ஆனா... ஆனா ..அதை குறைசசுக்குவேன் உங்களுக்காக.. ஐ லவ் யூ தரு.." என அவனை மேலும் தனக்குள் கொண்டு வந்தாள் அவள்..




"நீ தரு னு சொல்லும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு ..."என்றவன் அவளது நெற்றியில் முத்தம் வைத்தான். இப்போது தான் நினைவு வந்தவள் போல்
"ஆமா அந்த ஹாசினுக்கு என்ன ஆச்சு?" என்று கேட்டாள் ..



அவனை பார்த்து
புன்னகைத்தவாறே
"ஏதோ ஆக்சிடென்ட்டாம்.. ஒரு கால் இல்லாம ரொம்ப கஷ்டப்படுறா போல பாவம்.." என உச்சு கொட்டினான் அவன்
... அவன் தான் இதற்கு காரணம் என அறிந்தவள்
" ஐயோ பாவம் அவ கால் இல்லாமல் என்ன பண்ணுவா?ஏன் இப்படி பண்ணீங்க... அதுசரி அவளோட அப்பா ?"என அவனை முறைத்தபடியே கேட்க..


' ஹே கூல்...ஒரு கால் இல்லன்னா காலை எடுத்துட்டாங்கன்னு அர்த்தமில்லை.. கால் எலும்பு முறிவு.. ஒரு ஆறு மாசத்துல சரியாயிடும் போல.. கவலைப்படாதே... அப்புறம் முக்கியமான விஷயம் இனிமே நம்ம விஷயத்தில தலையிட மாட்டா.. உனக்காகத்தான் பாவம் பார்த்து அவ கால எடுக்காம இதோட விட்டுட்டேன்..



அப்புறம் அவளோட அப்பாக்கு நான் எதுவுமே பண்ணல.. அவரோட பிசினஸை மடக்கி இருந்த கொஞ்ச நஞ்ச பணத்தையும் புடிங்கிட்டேன்.. பணத்துக்காக தானே இதெல்லாம் இப்படி பண்ணாங்க.. அந்தப் பணமே இல்லாமல் இருக்கட்டும்". என கூறி விட்டு அவளை ஆழமாக பார்த்தான் அவன் ‌.


" என்ன இருந்தாலும் இப்படி பண்ணி இருக்க வேண்டாம்.. அவ இப்படி ஆனதுக்கு காரணமே அவளோட பேரட்ன்ஸ் தான் ..அவளுக்கு அவங்க நல்லது சொல்லிக் கொடுத்து இருக்கலாம் ..அவளுக்கு பணம் தான் முக்கியம்னு சின்ன வயசுல அவங்க சொன்னதால் தானே அவ இப்படி ஆனா..அவளோட பேரன்ட்ஸ்னால தான் அவளோட வாழ்க்கையை இழந்து நிற்க்கிறா ..நாம நம்ம பசங்களை நல்லது சொல்லிக் கொடுத்து வளர்க்கனும்..இல்லைன்னா இவளப் போல தான் வருவாங்க அவங்க... "


என இந்த நிலையிலும் அவளுக்காக கவலைப் பட்டாள் அருந்ததி.. அதில் கோபம் வரவே
"லூசாடி நீ ..அன்னைக்கு அவ விஷம் வச்சப்பவே போட்டு இருக்கணும்.. சின்னதா ஒரு ஆக்ஔஇடன்ட் தான் பண்ண சொன்னேன்.. உனக்காக.." என்று கத்தி விட்டு அவன் எழுந்து செல்ல பின்னால் இருந்து அவனை அணைத்தாள் அருந்ததி..



அவள் அணைப்பில் அவனின் கோபத்தை குறைத்தது எனலாம்..
" ஐயோ சாரி இனிமே அவளை பற்றி பேசவே மாட்டேன்.. அப்போ நம்மளை பத்தி பேசலாமா?" என கேட்க அவளது பேச்சில் மொத்த கோபமும் போய் விட்டது அவனுக்கு..


" என்ன பேசணும் நம்மளை பத்தி?" அவளைப் போலவே அவனும் கேட்டு வைத்தான். "அதுவா எத்தனை குழந்தைங்க.. அவங்களை எப்படி வளர்கிறது.. இப்படி ஆயிரம் இருக்கு.." என அவள் சொன்னது தான் தாமதம் அவளது கைகளை பற்றி முன்னால் இழுத்தான் அவன்..



ஒரு வேகத்தில் பேசி விட்டாள் தான் ..இப்போது அவன் முகம் பார்க்க வெட்கமாக இருந்தது அவளுக்கு..
" அப்போ நாம நம்ம வேலையை ஆரம்பிக்கலாமா?" என கேட்க என்ன என்பது போல் அவனை பார்த்தாள்..
" அது தான் மா குழந்தை.." என கூறியவன் அவளது இதழை சிறை செய்து இருந்தான்.


.. முற்றும்....
 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
எபிலாக்...

"அம்மா... அம்மா.."நடு வீட்டில் அமர்ந்து கத்திக் கொண்டு இருந்தாள் சசிதரன் மற்றும் அருந்ததியின் செல்ல மகள் ஆத்விகா.. அதில் மேடிட்ட வயிற்றுடன் வேகமாக நடக்க முடியாமல் மெல்ல மெல்ல நடந்தபடி வந்தாள் அருந்ததி.. "சீக்கிரம் வாம்மா.." என அன்னையை துரிதப் படுத்தினாள் ஆத்விகா..


" சரி வந்துட்டேன் சொல்லு.." என கூறியபடி அங்கு இருந்த சோபாவில் அமர்ந்தாள் அவள்.. "அம்மா இந்த ராஜ் என்னை அடிச்சுட்டான்.. அவன் கிட்ட என்னனு கேளுங்க.." என்றாள் சிணுங்கலாக.. ராஜ் வேறு யாரும் இல்லை விஷால் சுபாவின் அருமைப் புதல்வன் தான் ..ஆத்மாவிற்கு ஐந்து வயது ம் அவனுக்கு ஆறு வயது ம் தான் ஆகிறது ..ஆனால் இருவரும் சேர்ந்து விட்டால் வீடே போர்க்களம் போல் ஆகிவிடும்.. இருவருக்கும் எப்போதுமே சண்டை தான்.. அதை தீர்த்து வைத்தே பெண்கள் இருவருக்கும் நாள் சென்று விடும் ..


"என்னடா இது அவனும் உன்னை மாதிரி சின்ன பையன் தானே விடுடா குட்டி .."என அன்னை சமாதானம் செய்ய ஒருவாறு சமாதானம் ஆகி விட்டாள் ஆத்வி..


"அம்மா சித்தா என்கிட்ட பேசவே இல்ல.. சித்தி மட்டும்தான் பேசினாங்க.." என்று தேவ் பேசாததில் கவலை கொண்டவள் அன்னையிடம் முறையிட்டாள்...


தேவ் ஒரு பெண்ணை காதலித்து 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டான். தினமும் மாலை நேரம் அழைத்து அவர்களுடன் பேசி விடுவான் அவன்.. நேற்று மட்டும் ஏதோ வேலை இருக்கவே அவனால் பேச முடியவில்லை.. அது தான் கோபம் ஆத்விகாவிற்கு..


" சரி டா இன்னைக்கு பேசலாம்.. நீங்க போய் விளையாடுங்க .."
என மகளை அனுப்பி
வைத்தவள் அறைக்கு சென்றாள்.. அறையில் உள்ள கட்டிலில் நன்கு உறங்கிக் கொண்டு இருந்தான் சசிதரன்.. இரவு நீண்ட நேரம் வேலை செய்ததால் இன்னும் தூங்கி கொண்டு இருந்தான் அவன் ..



அவன் அருகில் அமர்ந்தவாறு தூங்கிக் கொண்டு இருந்த அவனின் தலையை வருடிக் கொடுத்து நெற்றியில் இதழ் பதித்தாள்..
" என்னடி இது நெத்தியில மட்டும் முத்தம் கொடுக்கிறே.. பாவம் இந்த கண்ணம் அப்புறம் இந்த உதடு எல்லாம் என்ன பாவம் பண்ணிச்சு.. அங்கேயும் கொடுடி.." என பாவமாக அவன் கேட்க..


" பிராடு தூங்கலையா நீங்க ..?"
என்று லேசாக அவனது கன்னத்தில் அடி வைத்தாள். "தூங்கிட்டு தான் இருந்தேன்.. நீ ரூமுக்கு வரும்போது தான் முழிச்சேன் ..சரி நீ என்ன பன்றேன்னு பாக்கத்தான் தூங்குற மாதிரி ஆக்ட் பண்ணேன். ஆனா நீ வேஸ்ட்டி புருஷன் தூங்கிட்டு இருந்தா லிப்ல கிஸ் பண்ணாம நெத்தியில பண்ற.." என அவளை மெல்ல இழுத்து தன்னுடன் அணைத்தவாறு பேசினான்..



அப்போது அவள் வயிற்றில் அசைவு தெரிய
"இங்க பாருடி நம்ம பையன் கூட அதைத்தான் சொல்றான் போல.." என கூறி அவளிடம் இருந்து அதற்கு பரிசாக ஒரு அடியையும் பெற்றான்..
" கண்ணா நீ எப்போ இந்த அப்பாவை பார்க்க வருவ?" என்று அவளது வயிற்றில் கையை வைத்து அவன் பேச அவனது கைகளில் உதைத்தான் அவன் மகன்..



அப்போது "அப்பா..." என்றபடி ஓடி வந்து தந்தையை அணைத்தாள் ஆத்விகா .
அவர்களை அருந்ததி ஏக்கமாகப் பார்த்தபடி இருக்க "அடியே இது நம்ம பொண்ணுடி ..சரி நீயும் வா .."என அடுத்த கையால் அவளையும் அணைத்து கொண்டான் அவன்
.. அவனுடைய இரு தேவதைகளின் நெற்றியிலும் இதழ் பதித்தான் புன்னகையோடு.. அவனது வாழ்க்கை அருந்ததி என்ற தேவதையால் அழகாக மாறியதை அவனால் என்றுமே மறுக்க முடியாது... அவனது தவறை மன்னித்து அவனை ஏற்றுக் கொண்டாள் அல்லவா அவள்.. உண்மையில் அவள் தேவதை தான் அவனுக்கு..


சுபம்...


 
Last edited:

T22

Well-known member
Wonderland writer
ஹாய் நண்பர்களே..🤗🤗🤗

எப்படியோ என்னோட இந்த கதையை நான் முடிச்சிட்டேன்.
கதைக்கு கதைக்கு லைக் அண்ட் கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி..🥰🥰🥰😘


அப்புறம் கதை எழுத எனக்கு வாய்ப்பு தந்த பொம்மு அக்காவிற்கு ரொம்ப ரொம்ப நன்றி..😘😘

மேலும் கதையில் சில தவறுகள் இருக்கக்கூடும்..
அதையும் நீங்கள் சுட்டிக் காட்டினால் நன்றாக இருக்கும்.. ஏனெனில் எனது அடுத்த கதைகளில் இந்த பிழை வராமல் தடுத்துக் கொள்வேன்.

இதுவரை எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தேங்க்யூ சோ மச்..

லவ் யூ..❤️❤️❤️🥰💞.
 

T22

Well-known member
Wonderland writer
வணக்கம் நண்பர்களே..
கதையை முடிச்சுட்டேன்..
படிச்சிட்டு எப்படி இருக்குன்னு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..🥰🥰
 
Status
Not open for further replies.
Top