அத்தியாயம் 14
அன்று விஷால் அலுவலகத்தில் இல்லாததால் வேறு வழியில்லாமல் அருந்ததி அவனை நேருக்கு நேர் சந்தித்து பேசினாள்.
ஆனால் தொழிலைப் பற்றியே இருவரும் பேசினர்.
மறந்தும் கூட தங்களை பற்றி பேசிக் கொள்ளவே இல்லை அவர்கள். அனைத்து தொழில் பேச்சுக்களையும் முடித்து விட்டு வெளியே செல்ல எழுந்தவன் "கல்யாணம்னு கேள்வி பட்டேன்.. வாழ்த்துக்கள் மிஸ்.அருந்ததி" என்று கையை அவளிடம் நீட்டினான்.
அவளும் அவன் அத்துமீறி பேசவில்லை என்பதால் தனது கையை அவன் புறம் நீட்ட அதை பற்றி குலுக்கியவன் முகத்தில் என்ன உணர்வு தான் இருந்தது என்பதை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை ..அவளோ அவனது முகத்தில் தோன்றும் விருப்பமின்மையை பார்க்க காத்துக் கொண்டிருக்க அவனது முகம் உணர்வுகளை தொலைத்து இருந்தது.
"தேங்க்யூ சோ மச் சார் ..."என்று கூறி அவனிடம் இருந்து தனது கையை விலக்கி கொண்டு அவனுக்கு முன்பே அந்த அறையை விட்டு வெளியேறினாள் அவள் ..
அவளுடைய முதுகையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் அவன்.
அவனது புன்னகைக்கு பின்னால் இருக்கும் காரணம் அவன் மட்டுமே அறிவான்..
அதன் பிறகு வேலைகள் துரிதமாக நடந்தன. அதாவது அருந்ததியின் திருமண வேலைகள் தான் ..
அவள் இங்கே இருக்க அங்கு அவளது வீட்டில் வேலைகள் மும்முரமாக நடைபெற்றது. முதலில் நிச்சயதார்த்தம் அதன் பிறகு பதினைந்து நாட்களில் திருமணம் என்று முடிவு செய்து விட்டு அருந்ததிக்கு அழைத்து மகிழ்ச்சியாக கூறினார்கள் இந்த விடயத்தை .
அவளும் சரி என்று கூறியவள் அலுவலகத்தில் உள்ளவர்களையும் திருமணத்திற்கு அழைத்தாள் ..
அமுதாவை மட்டும் நிச்சயத்திற்கு அழைத்திருந்தாள். அமுதா சந்தோசமாய் துள்ளிக் குதித்தாள் இச்செய்தியைக் கேட்டு.. தான் முன்னமே வருவதாக கூறினாள் அவள்.. அவளை பார்த்ததும் சிரிப்பு வந்தது அருந்ததிக்கு.
தன்னை சுற்றி நல்லவர்கள் எத்தனை பேர் இருக்க தான் அவனை இன்னும் ஏன் நினைக்க வேண்டும் என இப்போது தான் அவள் உணர்ந்தாள்.
அவள் அவனை நினைக்க வில்லை மறந்து விட்டேன் என்று கூறினாலும் அவளது ஆழ்மனம் மட்டுமே அறிந்த உண்மை என்னவென்றால் இன்னும் அவனையே நினைத்துக் கொண்டே இருப்பது தான் ..
மறந்து விடு என்று கூறியதும் மறந்து விட அவளது காதல் என்ன வெறும் ஈர்ப்பா.. அல்லது அவளது காதல் இன்று நேற்று உருவானதா..
தனது பருவ வயதில் இருந்தே அவனைக் காதலிக்கிறாள் அவள்.. காதல் என்றால் என்ன என்று அவள் உணரும் முன்னமே அவனை நினைக்கத் தொடங்கி விட்டது அவள் மனம் ..ஆனால் இன்று அவள் அவனை மறந்து விட்டதாக சொல்லிக் கொண்டு தன்னையே ஏமாற்றிக் கொண்டு சுற்றுகிறாள்.
அன்று அவளது நிச்சயதார்த்தத்திற்காக சென்னை சென்று கொண்டு இருந்தாள் அருந்ததி ..மறு நாள் நிச்சயம் என்ற நிலையில் இன்று தான் அவள் வீட்டிற்கு செல்கிறாள். சில மாதங்களுக்குப் பிறகு இன்று சென்னை செல்லும் போது தான் அவளுக்கு ஆதித்யனின் நினைவே வந்தது.. இப்போது அவன் கையில் சிக்கினால் அவளுடைய நிலைமை என்ன என்று நினைக்கும் போதே அவளுக்கு திக்கென்றானது.. ஆனால் இந்த முறை தந்தையிடம் அனைத்தையும் சொல்ல வேண்டும் என நினைத்தும் கொண்டாள் அவள் ..
வீட்டிற்கு சென்று இறங்கிய அருந்ததிக்கு பலத்த வரவேற்பு..பாச மழையில் குளித்தாள் என்றே கூறலாம்.. சுபா , விஷாலும் அவர்களுடன் அமுதாவும் நாளை காலை வருவதாக கூறிவிட தனியாக வந்து இருந்தாள் அவள் ..அவள் அருகில் வந்த அவளுடைய மூத்த அக்கா பாமினி
"அரு மாப்பிள்ளை போட்டோ பாக்குறியா? சும்மா சொல்லக் கூடாது மாப்பிள்ளை சூப்பர்.." என்று சொல்ல சிரித்து வைத்தாள் அருந்ததி .
அதனை வெட்கம் என நினைத்து அவளது இரண்டாவது அக்கா பானுமதி
"ஏய் மாப்பிள்ளை பற்றி பேசும் போது பொண்ணுக்கு வெட்கத்தைப் பாருங்க.." என்று கிண்டல் செய்தாள் ..எல்லாவற்றிற்கும் ஒரு சிறிய புன்னகை மாத்திரமே அருந்ததியிடம் பதிலாக கிடைத்தது..
வீட்டினர் உடன் பேசினாலும் அவளது கண்கள் எங்காவது தேவ் தென்படுகிறானா என்று தேடியது ..அவனிடம் இப்போதாவது பேசி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றே அவள் அவனை தேடினாள்.. ஆனால் அவனது தாய் மட்டுமே இவளது வீட்டில் நிச்சய வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக்க அவரிடம் சென்று சம்ரதாயமாக பேசியவர் தேவ்வை பற்றி இயல்பாக கேற்ப்பது போல் கேட்க....
அவன் தங்கள் கம்பெனியை பார்த்துக் கொள்வதாகவும் இப்போது அதில் ஒரு வேலை விஷயமாக வெளியூர் சென்றிருப்பதாகவும் நாளை காலை வந்து விடுவதாகவும் கூறினார்.. அவளும் நாளை அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டவள் அறைக்குள் சென்று தூங்கிப் போனாள்..அடுத்த நாள் காலை அவளது தாய் வந்து எழுப்பிய பின் தான் கண் விழித்தாள்..நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது அறையில், தனது கட்டிலில் படுத்து தூங்கவும் அவளை அறியாமலே ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று விட்டாள் அவள்.
நிச்சயம் மாலை நேரம் என்பதால் வேலைகள் மும்முரமாக நடந்த வண்ணம் இருந்தன..காலையில் எழுந்தவள் குளித்து விட்டு கீழே வர தேவ்வும் அவளுடைய குடும்பத்தினருடன் வேலை செய்வதை கண்டவன் முகம் புன்னகையில் பூவாய் மலர்ந்தது.. ஆனால் தேவ்வோ ஒரு நொடி அவளை அழுத்தமாக பார்த்து விட்டு வேலைகளில் கவனமானான்.
அவளோ அவனது புறக்கணிப்பை கண்டு கொள்ளாது அவனிடம் வந்து நின்றாள். அப்போது தான் அவளைப் பார்ப்பது போல் " ஹாய் அரு.." என்றான் அங்கிருந்த தனது கூட்டத்தினரின் முன்னால் எதையும் காட்டிக் கொள்ளாது.. அவளும் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு
" ஹாய் உன் கூட கொஞ்சம் பேசணும்.. உன்னோட பேசி ரொம்ப நாள் ஆச்சுடா.."என்று இயல்பாகவே அவனுடன் பேசினாள்..
" ஐ அம் சாரி அரு..கொஞ்சம் வேலை இருக்கு. அப்புறமா பேசலாம்..." என்று வேலையை காரணம் காட்டி அவளிடம் பேசாமல் அவன் நழுவப் பார்க்க "தேவ் ப்ளீஸ்.." என்று அருந்ததி கூறவே அங்குக் இவற்றையெல்லாம் பார்த்தபடி இருந்த தேவின் அம்மாவிற்கு தேவ் மீது கோபம் வந்து விட்டது.
" தேவ் என்னடா இது அவ தான் உன்கிட்ட பேசனும்னு சொல்றாளே.. கொஞ்சம் போய் அவ கூட பேசினா என்னடா உனக்கு.. பாவம் புள்ள ரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்கு... போடா போய் பேசு.. வேலை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் ..."
என்று தேவ்வை அதட்ட தாயின் முன் எதுவும் செய்ய முடியாமல்
"சரி வா" என்று தோட்டப் பக்கம் அவளை அழைத்துச் சென்றான்.
அவளும் அவனது அன்னைக்கு நன்றி சொல்லி விட்டு அவன் பின்னே சென்றாள்.தோட்டத்தில் போடப் பட்டு இருந்த ஊஞ்சலில் அமர்ந்து அருந்ததியை பார்க்க அவளும் அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.
"ம்.. என்ன பேசணும் சொல்லுங்க அருந்ததி.."என்று அவளுக்கு அவன் மரியாதை கொடுத்து பேச அவனது விலகளில் அவள் கண்கள் கலங்கி விட்டது ..அவனுக்கு அதை பார்க்க பாவமாக இருந்தாலும் மனதை கல்லாக்கிக் கொண்டு
" சொல்லுங்க எனக்கு நிறைய வேலை இருக்கு.." என்றான்.
இதற்கு மேலும் என்னால் முடியாது என்பதைப் போல அவளது கண்களில் இருந்து கண்ணீர் உருண்டு ஓடியது..
" இப்ப எதுக்கு அழறே?" என்றான் தேவ் சற்று கடுப்பாகி..
" ஐ அம் சாரி டா நீ என் மேல கோவமா இருக்கேன்னு எனக்கு தெரியும் ..நான் உன்கிட்ட சொல்லாம போனது தப்பு தான் எனக்கு வேற வழி தெரியல டா.. இங்க இருந்து அந்த கல்யாணத்தை என்னால பார்க்க முடியல.. என்னை என்னடா பண்ண சொல்ற.. அந்த கடிதத்தில் தான் எல்லாத்தையும் எழுதி இருந்தேனே.. அப்ப கூடவா உனக்கு என் மேல இரக்கம் வரலை" என்று கண்ணீருடன் அவள் கேட்க..
" ஆமா கடிதத்தை முழுசா படிச்சேன். ஆனா அதுக்கு முன்னாடியே உங்க விஷயம் எல்லாம் எனக்கு தெரியும்.. என் அண்ணன் கூட நான் பேசுறது இல்லை தெரியுமா உனக்கு.." என்று அவன் அவளிடம் சொல்ல விழி விரித்து அவனை பார்த்தாள் அருந்ததி.. அவளுக்கு இந்த செய்தி புதிதல்லவா..தேவ்விற்கு தனது காதல் முன்பே தெரியும் என்பது அதிர்ச்சியாக இருக்க அவனைப் பார்த்தாள் அவள்.
"என்ன பார்க்குற எனக்கு தெரியாதுனு நினைச்சியா? எனக்கு எல்லாமே தெரியும்.. ஆனா உனக்கு தெரியாத ஒரு விஷயம் இருக்கு..." என்று அவன் நிறுத்தி அவளைப் பார்க்க என்ன என்பது போல் அவனை பார்த்தாள்..
பின் அவன் குரலை செருமிக் கொண்டு
"அவங்க கல்யாணம் அன்னிக்கு நடக்கல ..நின்னு போச்சு.." எனக் கூறவே ஒரே நாளில் எத்தனை அதிர்ச்சி என்பது போல் தான் அவனைப் பார்த்து இருந்தாள் அவள்..
" ஏன் ?"என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே அவளிடம் இருந்து வந்தது. "அந்த பேமிலி பணத்தை மட்டும் தான் பாக்குறாங்க ..கல்யாணத்துக்கு முதல் நாள் நைட் அவன் கிட்ட போய் சொத்தை பிரித்து எடுத்துட்டு அவனையும் அந்த ஹாசினியையும் லண்டன் போக சொன்னாங்களாம் அவ பேரன்ட்ஸ்.. அவளும் அதற்கு உடந்தை போல.. லவ் பண்றது தான் பண்ணான் ஒரு நல்ல பொண்ணா அவனுக்கு கிடைக்கல ..
அவனுக்கு அது தேவைதான்.. கெட்டதிலும் ஒரு நல்லது போல கல்யாணத்துக்கு முன்னாடியே இத பத்தி பேசினாங்கலே அதுவே போதும் என்று அம்மா சொல்லி சொல்லி சந்தோஷப்படுவாங்க.." என்று அனைத்தையும் கூறி முடித்தான் அருந்ததி இடம்.
அப்போது தான் சசிதரன் காஞ்சிபுரத்தில் வைத்து அவர்களிடம் நடந்து கொண்ட முறை அவளுக்கு நினைவு வந்தது ..ஆனால் அவள் சொன்ன போது எல்லாம் ஏன் அவன் திருமணம் ஆகவில்லை என்று கூறவில்லை என இப்போது யோசனை செய்தாள் பெண்ணவள்.. ஆனாலும் இப்போது அதை நினைத்து என்ன நடக்கப் போகிறது.. அவளுடைய காதலை போல் அவனுடைய காதலும் தோற்று விட்டது ...பாவம் அவன் என அவளது இளகிய மனம் அவனுக்காக கவலை கொண்டது.
"என்ன யோசிக்கிற அரு.. எனக்கு உன் மேல கோபம் இருக்குத் தான்.. ஆனால் அதைவிட நீ என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லலனு கவலையா இருக்கு.." என்று இடைநிறுத்தியவன் மீண்டும் "உனக்கு அவன் வேணாம்.. அவன் ஒரு சுயநலவாதி.. உனக்காக உன் அப்பா பாத்துருக்க மாப்பிள்ளை ரொம்ப நல்லவரு.. அவர் கூட சந்தோஷமா நீ வாழ்ந்தா எனக்கு அதுவே போதும்
." என்று கூறியவன் அவளுடைய தலையை வருடி விட்டு அங்கிருந்து சென்றான்..
எப்போதும் அவளுடன் விளையாடிக் கொண்டே இருப்பவன் இப்படி சொல்லிச் சென்றது உண்மைதான் என தோன்றியது அருந்ததிக்கு.. அவனே அவனுடைய அண்ணனை பற்றி இப்படி பேசுகையில் தான் என்ன செய்ய என யோசனை செய்தபடி அமர்ந்து இருந்தாள் அவள்.
தொடரும்....

உயிரிலே சடுகுடு ஆடினாய் - கருத்து திரி
கருத்துகளை இங்கே பதிவிடவும் நண்பர்களே...
pommutamilnovels.com